Saturday, June 5, 2010

வினவுவை எதிர்ப்பவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்ன?


இந்த எதிர்ப்பு என்பது பொதுவானது. குறிப்பாக இந்த விடையத்தில் ஆணாதிக்கம் அம்பலமாவதைத் தடுத்து, ஆணாதிக்கத்துக்குள்ளேயே தீர்வைக் காட்ட முனைகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை, தமது வலைக்குள் கட்டி வைக்க முனைகின்றனர். இந்த வகையில் வினவுவை நோண்டி, இந்தா இதைப் பார் என்று தங்கள் ஆணாதிக்க வக்கிரத்தை மூடி மறைத்துக்கொண்டு காட்ட முனைகின்றனர். வினவு தளத்தைக் கடந்து, அதன் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். இந்த வகையில் வினவு தளம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்பதால், ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலமானதாக உள்ளது. இதனால் வினவுக்கான எதிர்ப்பு, பலமாக பல முனையில் வெளிப்படுகின்றது.

வினவின் அரசியல் என்ன? சாதியை எதிர்க்கின்றது. பார்ப்பனியத்தை எதிர்க்கின்றது. ஆணாதிக்கத்தை எதிர்க்கின்றது. சுரண்டலை எதிர்க்கின்றது. இனவெறியை எதிர்க்கின்றது. மதவாதத்தை எதிர்க்கின்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்றது. இதன் அடிப்படையில் ஒரு சமூக மாற்றத்தைக் கோருகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் குரலாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக வினவுவின் அரசியல் இருக்கின்றது. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான, எம் அனைவரினதும் குரலாகவும் அது இருக்கின்றது. அதுதான் எமது அரசியல்.


மேலதிகமாக இதைப் புரிந்துகொள்ள
1.ஆணாதிக்கமும் பெண்ணியமும்

2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!

வருடம் தோறும் ஒரு இலட்சம் தமிழ்தாய் நாட்காட்டி அச்சிடுவதும் அதன் வருமானம் சுளையாக அனைத்துலக பிரிவினரிடம் கைமாறுவதும் தெரிந்ததே. ஒரு நாட்காட்டி 10யூரோ படி விற்கப்படுவதுண்டு. இதன் செலவு தவிர்ந்து முழு இலாபமாக 10இலட்சம் யூரோக்கள் கையில காசு.

இவ்வளவு காலமும் போராட்டத்தை சாட்டி கைமாறிய பணம். இம்முறை 2010 கலண்டர் வருமானம் எங்கு சென்றது? யாரின் கையில் இந்த ஒட்டுமொத்த பணமும் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் கஸ்ரோ இளவரசர்களுக்கு மட்டும் இது தெரியும்.

கடந்த மே 18க்கு முதல் சுவிசில் எல்லா கன்ரோன்களிலும் அவசர நிதியென கேட்ட போது போராட்டத்தை காப்பாற்ற சுவிசில் பல ஆயிரம் பேர் சுவிஸ் வங்கிகளில் கடனாக எடுத்து கொடுத்த பல இலட்சம் பிராங்குகள் மாதம் மாதம் மீளளிக்க முடியாத சோகம் ஒவ்வொரு கன்ரோன்களிலும் கறையாக உள்ளது. இந்த கடன்களை திருப்பிக்கேட்டோர் அனைத்துலக மக்குகளால் துரோகிகளாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9மாதங்களாக போராட்ட அமைப்பின் பல்வேறு வருவாய் தரும் நிதி மூலங்களின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாமல் முடக்கப்பட்டுள்ளது.

மறுஆய்வு முதல் கட்டமாக ஒவ்வொரு தமிழ் தேசியத்தை மானசீகமாக ஆதரிக்கும் ஒவ்வொருவரின் வீடுகளிலும் தொங்கும் தமிழ்தாய் நாட்காட்டியின் கணக்கு கேட்பதுடன் ஆரம்பிக்கின்றோம். அனைத்துல..........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்றைய இலங்கையின் அரசியல் நிலவரம் - தாயகன் ரவி

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் தமிழ் மக்களை உண்மையாகவே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என எழுதியவர்கள் இருந்தனர்@ தற்கொலைத் தாக்குதலிலிருந்து தற்செயலாகத் தப்பிப்பிழைத்த சரத் மரண விளிம்பைத் தொட்டு மீண்டவர், இதன் வன்மத்தைத் தமிழர்மீது காட்டத்தயங்காத குணமுடையவர் என்று கூறப்பட்டது.


மனிதன் ஒன்றை நினைக்க கடவுள் வேறென்றை நினைக்குமாம். இன்று தமிழ் மக்களை மட்டுமன்றி சரத்தையும், ஏன் – வெற்றிபெற்ற மகிந்த உட்பட இலங்கைமக்கள் அனைவரையுமே உண்மையிலும் கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற கட்டத்தில் இலங்கை நிலவரம் உள்ளாக்கப்பட்டுள்ளது.


“தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்பது எழுபதாம் ஆண்டுத் தேர்தல் முடிவை அறிந்தவுடன் தந்தை செல்வா அருளிச்சொன்னது. எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ, நாற்பது ஆண்டுகளின் போக்கில் இப்படி முழுநாட்டையும் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலை ஆட்டிப்படைக்கிறது.


பிரித்தானிய அரசின் பிரித்தாளும் சதியுடன் கைமாற்றப்பட்ட ஆட்சியதிகாரத்தைக் கையேற்ற இலங்கையின் அதிகார வர்க்கப் பிரதிநிதிகள் இலங்கையை இந்த நிலைக்கு வளர்த்துள்ளார்கள். முதல் ஆட்சியாளர்க........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, February 21, 2010

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது!

இலங்கை மக்கள் இன்னொருமுறை வாக்களித்து விட்டால், இன்னொரு ஐந்தாண்டுகள் அரசியல்பற்றி சிந்திக்கத் தேவையில்லை! வாக்கு வாங்கியவர்கள் உங்களின் அரசியல் வாழ்வை கொண்டோடி விடுவார்கள்!

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பாராளுமன்ற அரசியலுக்கு, மக்களும், மக்களுக்கு இவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள்!
அரசியல் கட்சிகள் பலவற்றை செய்வதில்லை, நடைமுறைப்படுத்துவதில்லை, என்ற ஏமாற்று நோக்கில் இருந்தே, மக்களை நோக்கி தேர்தல் வாக்குறுதிகளை வைக்கின்றார்கள். ஆனால் நடைமுறைப்படுத்தும் விதத்தில், உத்திகளை, சாகசங்களை கையாண்டு மக்களை மயக்கி, மக்கள் பிரதிநிதிகள் ஆகிவிடுகின்றார்கள். இதுதான் முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பாசாங்கு அரசியல்!

இலங்கையில் மட்டுமல்ல, சர்வ உலகிலும் பாராளுமன்றத்திற்கு ஊடான அரசியல் ஏகப்பெரும்பான்மையான மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதில்லை. பாராளுமன்றமும், பாராளுமன்ற ஜனநாயக அரசிய.....

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, February 19, 2010

லசந்த – ‘நாயகன்’ விருது

லசந்த விக்கிரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பின்உலக பத்திரிகைசுதந்திரத்தின் நாயகன்விருது!!!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பு, ‘உலக பத்திரிகை சுதந்திரத்தின் நாயகன்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐந்து தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கல்கிசை பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையில் 11-01-2009 வெளியாக வேண்டிய.......

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, February 18, 2010

வோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி

இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.


மா.லெ.மாவோ சிந்தனையை உருத்திராட்சைக் கொட்டையாக்கி, புரட்சிக்கு வழிகாட்டும் கூட்டத்தின் பி;;த்தலாட்டம் தான் இது. புரட்சியை காயடித்து, அரசியல் செய்வது தான், இந்த எதிர்ப்புரட்சி அரசியலாகும்;. ம.க.இ.க.வுக்கு புரட்சியை, பம்மிக் காட்டியவர்கள். அவர்கள் ஆதரவாளர்கள் வரலாற்று ரீதியான எதார்த்தத்தை நிராகரித்தபடி அவர்களை அணுகி, எம்மை விமர்சித்தனர். புதிய ஜனநாயகக் கட்சி பற்றிய எம் நிலைப்பாடு மிகமிகச் சரியானது என்பது, இன்று துல்லியமாகியுள்ளது.

புதிய ஜனநாயக கட்சி ஜனாதிபதி தேர்தலை நிராகரிப்பதை மறுத்தது. மாறாக தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரினர். தேர்தலை பகிஸ்கரி என்ற அரசியல் பித்தலாட்டத்தை, அதன் உள்ளடக்கத்தையும் நாம் அம்பலப்படுத்தினோம். வாக்குச்சீட்டை எப்படி பகிஸ்கரிப்பில் பயன்படுத்துவது என்று கூறி, புரட்சியை வாக்குச்சீட்டில் ஒளித்து வைத்தனர். இன்று பகிஸ்கரிப்பை கைவிட்டு, தேர்தலில் நிற்பதுடன் வாக்குச்சீட்டை தமக்கு எப்படி போட்டு புரட்சியை நடத்துவது என்று உளறுகின்றனர்.

இப்படி முன்பும் தேர்தலில்............

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, February 17, 2010

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்! - செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!

இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!

முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளார்;. பொன்சேகாவை கைது செய்தவர், முன்னர் பொன்சேகாவினால் தண்டனை வழங்கப்பட்ட- தற்போதைய கொழும்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி. தேர்தல் தினத்தன்றும் பொன்சேகா தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கியவரும் இவரே!

இக்கைதின் ஊடாக, மகிந்தா தானும் இன்னொரு பிரபாகரப் புலியே என ஊர் உலகிற்கு காட்டியுள்ளார், நிறுவியுள்ளார்;. இலங்கையின் எதிர்காலம், இம்சை, பழிவாங்கல், கொலைகளுடன் கூடிய “மாமிச விலங்காட்சியே”தான். அதன் தொழிற்பாடுதான், கற்கால........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையும், அதை மூடிமறைக்கும் சந்தர்ப்பவாதிகளின் காரியவாத அரசியலும்

புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது. மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.

இன்று தேசம்நெற் "ஊடகவியல்" முன்தள்ளும் மகிந்த அரசியலை மூடிமறைத்தபடிதான், மே 18 முதல் இனியொரு வரை இயங்குகின்றது. இதன் மூலம் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் கூடிய, தங்கள் காரியவாத அரசியலை முன் நகர்த்துகின்றனர். இதன் மூலம் இதன் முன்னணிப் பிரமுகர்கள், தம் பின்னால் மந்தைகளை உருவாக்கியபடி அவர்களை தமது காரியவாததுக்கு ஏற்ப மேய்க்க விரும்புகின்றனர்.

இவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.

இதில் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல். இதைச் செய்தலே தமிழ்மக்கள் நலன் என்று காட்டுகின்றனர். தன்னார்வ நிதி பற்றி மெய்சிலிர்க்க குதிப்பவர்கள், மகிந்த சிந்தனையின் பின் உருவாகும் இந்த எதிர்ப்புரட்சியை, தங்கள் காரியவாத அரசியல் மூலம்...........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, February 15, 2010

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 14.02.2010

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!

இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!

முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளார்;. பொன்சேகாவை கைது செய்தவர், முன்னர் பொன்சேகாவினால் தண்டனை வழங்கப்பட்ட- தற்போதைய கொழும்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி. தேர்தல் தினத்தன்றும் பொன்சேகா தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கியவரும் இவரே!

இக்கைதின் ஊடாக, மகிந்தா தானும் இன்னொரு பிரபாகரப் புலியே என ஊர் உலகிற்கு காட்டியுள்ளார், நிறுவியுள்ளார்;. இலங்கையின் எதிர்காலம், இம்சை, பழிவாங்கல், கொலைகளுடன் கூடிய “மாமிச விலங்காட்சியே”தான். அதன் தொழிற்பாடுதான், கற்கால மனிதர்களை கல்லால் எறிய தை;துள்ளார். அப்படியாயின் பொன்சேகா?

மகிந்தா- பொன்சேகா ஜனாதிபதியாக- இராணுவத்தளபதியாக யுத்தத்தை ஆரம்பித்தபோது மனிதப் படுகொலையில், பாசிச சர்வாதிகாரத்தில் இருவரும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்களே! ஜனநாயக-மக்கள்விரோதப் பொன்சேகாவை ஜனநாயகவாதியாக்கியதும், ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கியதும் மகிந்த—கோத்தபாயா சகோதரர்களின் பாமரத்தன அரசியலே……சரத்தின் கைது இன்று மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத-சர்வாதிகார அரசியல் .....

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்