மக்கள் தான் புரட்சி செய்ய வேண்டும் என்பதை ஏற்காத அனைவரும், அதற்காக போராடாத அனைவரும், இந்த பாசிசத்தின் ஏக பிரதிநிதிகள் தான். இது புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியலுக்குள் புழுத்துக் காணப்படுகின்றது.
இன்று தமிழர் மத்தியில் புரையோடியுள்ள பாசிசத்தை, வெறுமனே புலிகள் மட்டும் பிரதிபலிக்கவில்லை. இலங்கை - இந்திய அரச ஆதரவு குழுக்களும் கூட, பாசிசத்தை பிரதிபலிக்கின்றது.
சமூகத்தின் உயிர்த்துடிப்பான செயல்பாடுகளை எல்லாம் முடக்கி, அதன் இயல்பான இயங்கியல் வாழ்வியலை சிதைத்து, மனிதனின் அடிப்படை உரிமைகளை எல்லாம் பறித்துவிட்டு, 'தேசியம்" 'ஜனநாயகம்" என்பதை, தமது பாசிச வித்தையாக்கினர். இதை மனித முகம் கொண்ட ஒன்றாக காட்டுகின்றனர். தமது இந்த சொந்த செயலுக்கு ஏற்ப மக்களை தலையாட்டும் பொம்மைகளாக்கி, அவர்களை எல்லாம் ஊமையாக்கி விடுகின்றனர் இந்தப் பாசிட்டுகள்.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.
No comments:
Post a Comment