Monday, February 2, 2009

தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் போராட்டம்

வன்னி மக்களின் அவலம், அவர்கள் எதிர் கொள்கின்ற உணர்வுகளில் ஒரு சிறு துளியை பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளுடன், பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். புலிகள் தாம் ஏற்படுத்திய மனித அவலத்தை, தம் பாசிச வலையமைப்பு ஊடாகவே, மக்களுக்கு இந்த உணர்வுகளை கொடுத்துள்ளனர். ஆனால் அது அவர்களுக்கு எதிராக மாறிவருகின்றது.

இந்த மனித அவலத்தில் இருந்து வன்னிமக்களை மீட்க முடியாது என்ற தெளிவும், அது சார்ந்த பட்டறிவும், உணர்வாகி மக்களை புலிகள் விடுவிக்க கோரும் உணர்வாக புலிக்கு எதிராக மாறிவருகின்றது.

மக்களின் அவலத்தை பார்த்து போராடச் சென்றவர்கள், புலிகளுமல்ல, புலியிசத்தை ஏற்றுக் கொண்டவர்களுமல்ல. மாறாக புலிகள் தம் பிரச்சாரத்துக்காக உருவாக்கியுள்ள மனித அவலத்தை பார்த்து, அதற்கு எதிரான உணர்வுகளுடன் ஈடுபடுகின்றனர்.

காலகாலமாக சிங்கள பேரினவாதம் கையாண்டு வந்த தமிழின அழித்தொழிப்பு, அது கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறியாட்டங்கள்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment