நேர்மையாக சமூத்ததை நேசிப்பவனால் தான் உண்மையாக இருக்க முடியும்.
உண்மைத் தன்மை என்பதே சமூக இருத்தலின் அதிவாரமாகும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. எதையும் எமது சார்பு நிலையில் நின்று அறிதல் என்பது, உண்மையை ஒரு நாளும் தரிக்கவே முடியாது. உண்மையாக இருத்தல் என்பது, நேர்மையாக சமூகத்தை நேசித்தால் என்பதாகும். இதையே நாம் தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம்.
''ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையிலும், சமூகம் காட்டும் மௌனங்கள் பித்தலாட்ட அரசியலாகிவிடுன்றது'' என்ற எனது கட்டுரையைத் தொடாந்து, அதற்கு கருத்தக் கூறியவர்களின் சில கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றறொரு கட்டுரையாகிவிடும். அதை தவிர்த்து ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
அதற்கு முன்பாக உண்மையில் நான் இந்த விடையம் பற்றி எழுதுவதில்லை என்றே இருந்தேன். வழமைபோல் உண்மையை குழிதோண்டி புதைக்கும் புலி எதிர்ப்பு, புலி சார்பு நிலைக்குள் விடையங்கள் சுருங்கி, அர்த்தமற்ற வகையில் விதாண்ட வாதங்களாகவே பொதுவாக தமிழ்மணம் விவாதங்கள் அமைந்துவிடுகின்றன. பொதுவாக சரியான கருத்தை தூற்றிவிடுகின்ற சூழலில், தூசணத்தால் சமூகத்தை புணர்ந்துவிடுகின்ற நிலையில், உண்மை என்பது புதைகுழியில் போடப்பட்டே வந்தன. இதில் தூசணத்தால் புணர்தல் என்பது எப்போதும் வக்கிரமாக அமைகின்றது. இது தொடர்பாக நான் ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதியிருந்தேன்.
கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்றவர்களின் நடைமுறை தொடர்பாக
http://tamilcircle.net/news/badwords.html
இந்த விவாதம் கூட இந்த எல்லைக்கு அப்பால் நகர்ந்துவிடவில்லை. விடையத்தை திசை திருப்பவும், ஒர தலைபட்சமாக தூற்றிக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் விடையத்தை அனைவரும் மறந்து வம்பளந்து கொண்டிருந்தனர். இது ஆணாதிக்க சமூகப் பிரச்சனை என்பதை புரிந்துகொள்ளமால், ஆணாதிகத்துக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இதை சமூக உணர்வின் பால் உண்மையின் பால் விடையத்தை திருப்பவும், ஆணாதிக்க அமைப்பின் மேல் திருப்பவும் இந்த விவாதத்தை நான் தற்செயலாகவே நேரம் இருந்தமையால் எழுதமுடிந்தது.
உண்மையில் சமூகத்தில் நடக்கும் தொடரான பல மனித விரோத விடையங்கள் இப்படி அன்றாடம் பலமுறை சிதைக்கப்படுகின்றன அல்லது அவை பூசி மொழுகப்படுகின்றன. அண்மையில் ஊடாகவியல் மீதான தாக்குதல், வடமாரச்சியில் பல வீடுகள் எரிக்கப்பட்ட நிகழ்சிகள், புலிகள் போதைவஸ்தே கடத்தவில்லை என்ற தகவல் உட்பட பற்பல விடையங்கள் அன்றாடம் திரிக்கப்பட்டு, அவை திட்மிட்டு கைவிடப்பட்டு அவை பூசிமொழுகப்படுகின்றன. அதற்கு கவர்ச்சியாக அலங்கரித்து சிங்கரித்து நிறுத்துகின்றனர். அனைத்தையும் உண்மையின் பால் திருப்ப முயல்வது முடியாது. இவை பெரும்பாலும் அர்த்தமற்றவையாக மாறிவிடுகின்றன. நேர்மையான, சமூக பொறுப்யுள்ள ஒரு சமூகம் இல்லாத ஒரு நிலையில், உண்மையை குழிதோண்டிப் புதைக்க முனையும் ஊடாகவியலும் விவாதத் தளங்களுமே அறிவியல் துறையாகிவிட்ட நிலையில், நாம் தனிமனிதனாக சமூகத்தை சரியாக திருத்திவிடமுடியாது. தமிழ் மக்களின் சவக்குழி இப்படி தோண்டப்பட்டே உள்ளது. அதைச் சுற்றிநின்று கூச்சலீடும் பேய்களின் ஊளைச்சத்தம் தான், இன்று தமிழ் மக்களின் தகவலாகிவிட்டது.
ஒரு நேர்மையான சமூகப் பொறுப்புள்ள விவாதங்கள் நடப்பதில்லை. சார்பு நிலை சார்ந்து உண்மையை மூடிமறைக்கும் வகையில் வக்கிரமாகவே சமூகம் புணரப்படுகின்றது. எப்படி தமிழ் ஊடாகவியல் இயங்குகின்றதோ, அப்படியே தான் தமிழ்மணம் விவாதத்தளங்கள் இயங்குகின்றன. இதை யாரும் மறுக்க முடியாது.
இந்த நிலiயில் நாம் சிறுபொறிகளை எற்படுத்தி, உண்மைகளை தேடுபவர்களை நோக்கி சிறயளவில் நாம் பயணிக்க முனைப்பு கொள்கின்றோம். ஆனால் இதில் கூட தத்தம் சார்புநிலையை கடந்து சிந்திக்க துண்டுவது என்பது, மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. இனி குறித்த விவாதத்துக்குள் சிலவற்றை பார்ப்போம்.
1.மயூரன் தனது கருத்தில் எனது ஆய்வை செயற்கையாக உள்ளது என்கின்றார். அது எப்படி செயற்கையாக உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் அதை புரியவைக்கவுமில்லை. அவர் ''அந்த 18 வயதுக்கு குறைந்த பெண் 'கற்பழிக்கப்பாட்டாள்' என்கிற சொல்லை உண்மையாகவே நீங்கள் பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக்கொள்கிறீர்களா?'' என்ற அவரின் கேள்வி எனக்கு ஆச்சரியப்படக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்கின்றாரா?
இந்தச் செய்தி முதலில் தகவலாகவே வெளிவந்தது புலிசார்பு செய்தி நிறுவனங்களான புதினம் மற்றும் நிதர்சனம் இணையத்தில் தான். வைத்தியசாலை தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த தகவலை வெளியிட்டு இருந்தனர். இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு இயங்கும், புலம்பெயர் ஊடாகவியல் இதை அன்றே தமது செய்தியாக ஒளிபரப்பியிருந்தன. இந்த செய்தியில் பலமுறை கற்பழிக்கப்பட்டது முதல், சிறுமி (வயது உட்பட) என்ற தகவல் முதல், எந்த நேரத்தில் எப்படி திட்மிட்ட முறையில் (மணைவி இல்லாத நேரத்தில்) நடந்தது என முழுத் தகவலையும் கொண்டிருந்தது. இதில் சம்பந்தப்பட்டவர் பல்கலைக்கழக பேராசியர் என்ற தகவலையும், அந்தச் சிறுமி இந்த கொடுமை தாங்காது தற்கொலை செய்ய முயன்ற நிலையில், காப்பற்றபட்ட ஒரு நிலையில் வழங்கிய செய்தியையே வெளியிட்டு இருந்தனர். செய்தி என்ற வகையில், இது எந்தக் கலப்புமற்றதாக வெளிவந்தது. இந்த உண்மைத் தன்மை மிகுதியாக இருந்தது. இது பாதிகப்பட்ட சிறுமி உயிர் காப்பற்றப்பட்ட நிலையில் வழங்கிய முதல் வாக்குமூலமாகும்.
இந்தச் செய்தி உதையனிலும் வந்தாக ஞபாகம். அன்று மாலைதான் புலியெதிர்ப்பு இணையத்திலும் ஒரு செய்தியாக மட்டும் வெளிவந்தது. பேராசியார் யார் என்று தெரிந்த பின்பு, இச் செய்தி பலவாக திரிபடையத் தொடங்கியது. இதில் சந்தேகத்தை மயூரன் எழுப்புகின்றார். இதை செயற்கையான கற்பனை என்ற கூற முனைந்தால், இது உண்மையாக இல்லாத வரை சரி. உண்மையானால் இதுவே அபத்தம் தானே.
இரண்டாவது இச்சம்பவம் உண்மையல்ல என்றாலும், விவாத அரசியல் உள்ளடக்கம் எந்தவிதத்திலும் தவறானதாகது. எனெனின் எனது விவாதம் ஆணாதிக்க அமைப்பின் செயல்பாடு மீதானதே.
இரண்டதாக மயூரன் புலிகளுடன் எல்லா நேரத்திலும் ''அவ்வாறு அடித்துக்கூறுவது எல்லா நேரங்களிலும் பொருத்தப்பாடுடையதாக நான் நினைக்கவில்லை.'' என்கின்றார். இதையே நானே எனது கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளளேன். எனது கட்டுரையில் ''சமூகத்தின் பொறுப்பான இரு முக்கிய பதவிகளில் இருந்தபடி நடந்த இந்த குற்றத்தை, நாம் சமூக நேர்மையுடன் இதை ஆராய தவறுவது அப்பட்டமாக இதற்கு துணைபோவது தான். இது போன்ற குற்றங்கள் ஒரு பேராசியர், ஒரு போராளி என்பவர்களால் சமூகத்தில் நடக்க முடியாது என்பதல்ல. இதை ஒரு போராளி அமைப்பு, ஒரு பல்கலைகழகம் தமது கொள்கையாக கொண்டு உள்ளனர் என்பதுமல்ல.
இதற்கு வெளியில் இந்த குற்றத்தின் ஊற்று மூலத்தில் இந்த சமூக நிறுவனங்களின் பங்கு என்ன என்பதே எமது சமூக விசாரனை கோருகின்றது.'' என்ற பதிலே இதற்கு தெளிவாக பதிலளித்துள்ளது. நான் பரிசில் முன்பு ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட பின் கொன்ற ஒரு நிகழ்வை ஒட்டி எழுதிய கட்டுரை ஒன்றை இங்கு பார்வைக்கு தர முனைகின்றேன்.
பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?
http://tamilcircle.net/books/book-03/Book%2003-03/Book%2003-03-67.htm
இந்தக் கட்டுரை கூட செயற்;கையாக எழுதப்பட்டவையல்ல. இக்குற்றத்தை செய்தவர்களுக்கு அண்ணளவாக 25 வருட சிறை தண்டனை தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஆணாதிகத்தின் உதிரித்தனமான போக்கே உள்ளது. ஆனால் யாழில் நடந்தது மிகவும் திட்மிட்ட ஒன்று.
2.மற்றொருவர் கற்பழிப்பு என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்துவது தவறு என்கின்றார். இது பற்றி நான் விவாதிக்கத் தயாரகவே உள்ளேன். சொற்களை மாற்றி புரட்சி செய்வாதல் விடையங்கள் மாறிவிடுவதில்லை. இந்த சொற்பிரயேகம் பற்றி நான் எழுதிய கட்டுரையை பார்வைக்கு தருகின்றேன்.
''பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க ''கற்பு'' என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?''
http://tamilcircle.net/books/book-03/Book%2003-02/Book%2003-02-22.htm
இதைப் படித்து இதற்கு பதிலளிப்பின் எனது கருத்துகளை மறுபரிசீனை செய்ய முடியும்.
3.இன்றைய நிலைமையில் மாற்ற என்ன செய்யமுடியும் என்ற மற்றொருவரின் விவாதம். நான் மாற்று என எதையும் வீம்பக்க உங்கள் முன் முன்வைக்கவில்லை. நடைமுறையில் புரட்சியளானாக செயல்பாடத வரை, இதற்குள் வாருங்கள் என்று என்னால் போலியாக கூறமுடியாது. இது விமர்சனத்துக்குரியதாக கூட இருக்கலாம்.
மாறாக நான் உங்களைக் கோரமுடியும், உண்மையை உண்மையாக, நேர்மையாக சமூகத்தை அனுகுவதை நடைமுறையில் செய்யுங்கள் என்;று. இப்படி உள்ளவர்களே மாற்றைப்பற்றி குறைந்தபட்சம் நேர்மையாக சிந்திக்கமுடியும். இதுவே இல்லாத போது, நாம் மாற்று என எதையும் வழிகாட்டமுடியாது. எனது விவாதம் புலிசார்பு புலி எதிர்ப்புக்குள் சிக்கிக் கொள்வதில் இருந்து, வெளியில் சமூக நலனை உயர்த்தி விவாதிக்க முனைகின்றேன். உலகம் தளுவிய அளவில் அனைத்து விடையத்தையும் மனிதன் தானாக புரிந்துகொள்ள வேண்டும்;. இதைத் தான் நான் சுயாதீனமாக செய்ய முனைகின்றேன்.
இதனால் தான் பிரஞ்சு அரசியல் பொலிஸ் கூட எழுதுவதை நிறுத்தக்கோரியது. பிரஞ்சு ஏகாதிபத்திய அரசியல் பொலிஸ் என்னை உத்தியோகபூர்மாக அழைத்து, உத்தியோகபூர்வமற்ற வகையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு சார்பாகவும் எழுதுவதை நிறுத்தும் படி மிரட்டும் ஒரு அரசியல் வன்முறையை எனக்கு விடுத்துள்ளனர். வன்முறை என்பது சமூக இயக்கத்தில் ஊடுருவி காணப்படும் ஒரு சமூக செயல் நெறியாகவே உள்ளது. இதில் சூழழும், சந்தர்ப்பங்களும்;, நிலைமைகளும் வேறுபட்ட போதும், எங்கும் வன்முறைக்கு உள்ளாகியபடி சமூக எதார்த்தம் உள்ளது.
நாம் அனைத்து தளத்திலும் செயல்படுவதன் மூலம் தான் உண்மையை தரிசிக்க முடியும். இன்று எமது பிரச்சனை சரி, எந்தப் பிரச்சனையானலும் உலகத்தைப் புரிந்துகொண்டு விமர்சிப்பதில் தங்கியுள்ளது. மற்றயை விடையங்களில் அக்கறைப்பாடாத வரை, அதன் மீதான உலகப் பார்வை முன்னெடுக்காத வரை, சமூக மாற்று என்பது கிடையாவே கிடையாது.
எம்மை மீறி நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்த வண்ணம் தான் உள்ளது. சமூகம் தயாராகாத எந்த நிலையிலும் அதை தனிமனிதன் மாற்றிவிட முடியாது. இது எதார்த்தம். சமூகத்தை நோக்கி எமது போராட்டத்தை நடத்தவரை, சமூத்தின் விழிப்பை நாம் எற்படுத்த முடியாது. திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்தை எடுப்பின் என்ன தான் நடந்துவிட்டது. அப்படியே அது உள்ளது. அதைக் குண்டு வைத்து தகார்த்தாலும் நிலைமை மாறிவிடாது. அரசியல் ரீதியாக நாம் சரியாக இல்லாதவரை, அது மாறிவிடாது.
மாற்றம் என்பது சிங்கள மக்களையும் உள்ளடக்கியது. இதன்பால் நாம் சரியாக செயல்படவிட்டால், சிறப்பான அரசியல் நடைமுறை உருவாக மாட்டாது. சிங்கள மக்களை வென்று எடுக்கும் யுத்ததந்திரத்தை நாம் ஒருபோதும் கொண்டிராத வரை, பொது சூழல் எதையும் மாற்றாது.
4.துண்டில் பரமுவேலன் கருணாநந்தனுக்கு ஒரு குறிப்பு. நான் உங்களை அறியேன். நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பின், நான் தொடர்புகொள்ள ஆவலாக உள்ளேன். மற்றையது நான்கு நாட்களுக்கு முன் எமது இணையத்தில் இருந்து எடுத்தப்பபோட்ட
''வன்முறை (கொலை) தொடர்பாக புலியெதிர்ப்பு, புலிசார்பு நிலைப்பாட்டின் மீதான சமூக எதிர்வினைகள்'' என்ற கட்டுரையை ஏன் அகற்றி இருந்தீர்கள் என்பதும் புரியவில்லை.
http://tamilcircle.net/news/politicalmurder.htm
இனி நான் உங்களுக்கு சொல்லவரும் விடையத்துக்கு வருகின்றேன்;. விவாதம் என்பது சமூகப் போக்கில் இருந்து இனம் காணப்படவேண்டும். தேனீ இணையம் புலியெதிர்ப்பு என்ற ஒரேயொரு அரசியல் பாதையில் இருந்து அனைத்தையும் வாந்தியெடுப்பவாகள். புலிக்கு எதிராக அமெரிக்கா பேய்களுடளும் கூடிக்கூலாவத் தயாரனவர்கள். இதை அரசியல் ரீதியாக சுயமாக புரிந்துகொள்ளுங்கள்.
குறித்த கட்டுரையின் தலைப்பு கூட ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்குரிய வகையில், இடப்பட்டு இருந்தது. அவர்கள் இதன் ஊடாக புலிகளை தூற்றவே விரும்பினார்களே ஒழிய, இந்த ஆணாதிக்க சமூக அமைப்பின் விளைவாக இதைப் பார்த்து அதற்கு எதிராகப் போராட முனையவில்லை. குறித்த சிறுமியின் நலன் அவர்களின் குறிக்கோலாக இருக்கவில்லை. இது அவர்களின் அரசியல் தெரிவு. குறித்த கட்டுரையை நீங்கள் போட்டதில் நாம் உடன்பட முடியதவராக இருந்தோம். இதைவிட நீங்கள் சுயமாக ஒன்றைப்போட்டு இருக்கலாம்; அது ஆரோக்கியமான, ஆணாதிகத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டதுக்கு சரியாக வழிகாட்ட கூடியதாக இருந்து இருக்கும்.
கட்டுரைகளை தெரியும் போதும், சமூக நோக்கில் அவை எந்தளவுக்கு மக்களுடன் இணங்கி நிற்கின்றன என்பதைப் கூர்ந்து பாருங்கள். எழுந்தமானமாக எடுத்துக் கையாள்வது என்பது, சமூகத்துக்கு எதிரானவர்களைப் பலப்படுத்துவதற்கே உதவுகின்றது. இதை தான் நாம் புலிகளின் போராட்டத்தின் மீது எமது விமர்சனமாக உள்ளது. குறுகிய புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாது, சமூக நோக்கில் விடையங்களை இனம் கண்டு அனுக வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
உண்மையாக இருப்போம். உண்மைக்காக நேர்மையாக போராடவோம். இதுவே குறைந்தபட்சம், எமது உண்மையான சமூக அக்கறையாக எம்முன் உடனடியாக உள்ளது.
1 comment:
முதலில் என் முந்தைய பின்னூட்டத்தால் விளைந்த குழப்பத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
வசனத்தைநான் அமைத்தவிதம் குழப்பத்துக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.
நான் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி கேட்கவில்லை.
"கற்பழிப்பு" என்ற சொல் தொடர்[பாகவேகேட்டேன்.
அந்த சொல்லை பிரக்ஞை பூர்வமாகத்தான் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டேன்.
அதற்கு இப்போது பதிலளித்துவிட்டீர்கள்.
அச்சொல்லை நீங்கபிரக்ஞை பூர்வமாகவே பயன்படுத்துகிறீர்க்ள் என்பதற்கு விளக்கமாக த் தந்த கட்டுரையின் தொடுப்பை புத்தகக்குறியிட்டு வைத்திருக்கிறேன்.
இரவு படித்துவிட்டு அதுபற்றி சொல்கிறேன்.
ஆய்வு செயற்கையானதாக இருக்கிறது என்பதல்ல, சில நியாயங்கள் செயற்கைத்தன்மையுடையதாய் இருக்கிறதாய் உணர்கிறேன் என்று சொன்னேன்.
எடுத்துக்காட்டுக்கு,
"இந்த குற்றத்தை இழைக்க அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தியே இந்த குற்றம் மிக திட்மிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.4.இக் குற்றவாளி தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டே, தமிழ் மக்களுக்கு எதிரான சமூக விரோதச் செயலை திட்மிட்டே செய்துள்ளான்."
இதை மறுக்கும் எனது கருத்தாகவே,
//அனால், அப்பெண்ணை பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தியதென்பது, அதிகாரத்தை, அரசியல் நிலையை, வர்க்கச்சார்பை, புலிச்சார்பை பயன்படுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்றில்லை.
அவ்வாறு அடித்துக்கூறுவது எல்லா நேரங்களிலும் பொருத்தப்பாடுடையதாக நான் நினைக்கவில்லை.
பாலியல் நெருக்குவாரங்களுக்கு மத்தியில், பாலியல் விகார உட்கிடக்ககைகளுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் வரலாற்று, புறக்காரணிகளால் தள்ளப்பட்ட நிலையில்.
வீட்டிலிருக்கும் ஒரு பெண்ணை ஆண் பாலியல் தேவைகளுக்கு பயன்ன்படுத்துவதென்பது காரணமெதுவுமற்றே நிகழக்கூடியது.
அதனை மூடிமறைக்கவும், நியாயப்படுத்தவுமே அதிகாரங்களும் அரசியலும் பயன்படுத்தப்படுகிறது.
//
என்று பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்.
பாலியல் சட்டமீறல்களின் உளவியல் அடிப்படைகளும் பார்க்கப்படவேண்டிய பக்கங்களே.
அது ஆணாதிக்க உளவியல்தான் என்பதில் சந்தேகமெதுவுமில்லை.
என்னுடைய பழைய பதிவொன்று- ( அதிகம் பொருத்தப்பாடுடையதில்லையென்றபோதிலும்) -
http://webtamilan.com/ampalam/mayu_rap01.htm
புலிகளுடன் எல்லா நேரத்திலும.....
என்றவாறாக நான் சொல்லவில்லையே ...
Post a Comment