தமிழ் அரங்கம்
Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts
Tuesday, August 26, 2008
விவசாயக் கடன் தள்ளுபடி : காகித கவர்ச்சித் திட்டம் : விவாசயக் கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கும் நிபந்தனைகள் நயவஞ்சகமானவை
Saturday, July 12, 2008
அறியப்படாத அமெரிக்கா
கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது. .... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Labels:
அமெரிக்கா,
கடன்,
சொர்க்கபுரி,
பஞ்சம்
Saturday, June 7, 2008
விவசாயக் கடன் தள்ளுபடி: புண்ணுக்குப் புனுகு
மைய
அரசு 60,000/ கோடி ரூபாய் பெறுமான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது; தமிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான வட்டி 4 சதவீதமாகக் குறைப்பு; 1,500 கோடி ரூபாய் பெறுமான புதிய விவசாயக் கடன்; பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு எனச் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஐந்து ஏக்கர் வரை விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள சிறு / குறு விவசாயிகள், 31.3.2007 முடிய பொதுத்துறை வங்கிகள் / கிராமப்புற வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளிடம் வாங்கிய கடன்கள் அல்லது அந்த தேதி வரை நிலுவையாக இருக்கும் அவர்களின் கடன்களை ரத்து செய்ய ரூ.50,000 கோடியும்; ஐந்து ஏக்கருக்கு மேல் நில உடைமை வைத்திருக்கும் விவசாயிகள், தாங்கள் மேற்படி வங்கிகளில் 31.3.2007க்குள் வாங்கிய அல்லது தங்களின் பெயரில் நிலுவையில் உள்ள கடன்களில் 75 சதவீதத்தை ஒரே தவணையில் அடைத்து விட்டால், மீதமுள்ள 25 சதவீதக் கடனை ரத்து செய்ய ரூ. 10,000 கோடியும் ஒதுக்கப் போவதாக மைய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த அளவுகோலுக்குள் வரும் விவசாயக் கடன்கள் அனைத்தையும் 30.06.2008க்குள் ரத்து செய்துவிடுவோம் என்றும் மைய அரசு உறுதியளித்திருக்கிறது.
விவசாயத்தில் உலகமயம் புகுத்தப்பட்ட பிறகுதான் இந்தியாவெங்கும் விவசாயிகள், மீளவே முடியாத கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டார்கள். அக்கொள்கைப்படி விவசாயிகளுக்கு மானியம்கூடத் தரக்கூடாது என வாதிட்டு வரும் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் மான்டேக் சிங் அலுவாலியா கும்பலிடமிருந்து இந்தக் கடன் தள்ளுபடியைப் பெறுவதற்கு, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருந்தது.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா எனப் பரவிய விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் என்ற சூறாவளி கடந்த மூன்று ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில்தான் மையம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், விதர்பாவைச் சேர்ந்த 1,242 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் (மார்ச் 22 முடிய) 220 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பருத்தி விவசாயிகளின் இந்தக் "கலகம்''தான், கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.
.
Subscribe to:
Posts (Atom)
