தமிழ் அரங்கம்

Showing posts with label இந்திய. Show all posts
Showing posts with label இந்திய. Show all posts

Sunday, August 24, 2008

ஆப்கான்: அஞ்சி நடுங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் பலிகடாவாகும் இந்தியர்கள்

காரிருள் சூழ்ந்தாற்போல எங்கும் புகை மூட்டம்; இந்தியத் தூதரகக் கட்டிடம் சுக்கலாக நொறுங்கியது; தாலிபான்களின் மனிதவெடிகுண்டுத் தாக்குதலால் காபூல் நகரமே அதிர்ந்தது. தெருவெங்கும் சதைக் கோளங்களாக மனித உடல்கள் சிதறிக் கிடந்தன். வாகனங்கள் அப்பளமாக நொறுங்கிச் சிதறின. இதுவரை கண்டிராத மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் என்று அலறியது இந்திய அரசு. அமெரிக்காவில் செப்.11., 2001இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று பத்திரிகைகள் வர்ணித்தன.

கடந்த ஜூலை 7ஆம் நாளன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாலிபான் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டு 170 பேர் படுகாயமடைந்துள்ளனர். முதன்மைச் செயலர் உள்ளிட்டு நான்கு இந்தியத் தூதரக உயரதிகாரிகளும், 6 ஆப்கான் போலீசு உயரதிகாரிகளும், இந்தியாவுக்கு வருவதற்காகக் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த ஆப்கானியர்களும் இக்கோரத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இக்கொடிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ள தாலிபான் தீவிரவாதிகள், இதற்குமுன் 2005ஆம் ஆண்டின் இறுதியில், ஆப்கானில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியரான, கேரளத்தைச் சேர்ந்த ராமன்குட்டி மணியப்பன் என்பவரைக் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். அதன்பிறகு சில இந்தியப் பொறியாளர்களும் தொழிலாளிகளும் தாலிபான்களால் கடத்திச் செல்லப்பட்டு எச்சரித்து விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்தியர்கள் அனைவரும் ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியத் தூதரகத்தின் மீதான தாலிபான்களின் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதலுக்கும்...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, June 25, 2008

திடீரென இலங்கையில் அதிகரிக்கும் இந்திய தலையீடும், அதன் அரசியல் நோக்கமும்

இலங்கை அரசின் விருப்பத்துக்கு மாறாகவே, இந்தியா மீண்டும் நிர்ப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தலையீட்டைத் தொடங்கியுள்ளது. யூன் 16ம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஆளும் வர்க்கத்தைச் சந்தித்த பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் 'இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது" என்ற நம்பிக்கையை பகிரங்கமாக வெளியிட்டார். இதன் மூலம் இலங்கை விரும்பாத ஒரு இந்தியத் தலையீடு இருப்பது, இப்படி வெளிப்பட்டது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு என்பது, பேரினவாத அரசின் துணையுடன் தொடருகின்ற ஒரு நிலையில் தான், இலங்கை விரும்பாத வகையில் ஒரு தலையீடு இருப்பது வெளிப்பட்டது. இதையடுத்து முன் கூட்டியே திட்டமிடாத வகையில், இந்தியாவின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் இலங்கைத் திடீர் வருகையும் அரங்கேறியது. அத்துடன் அவர்களின் சந்திப்புக்கள், கருத்துக்கள், இலங்கையுடனான முரண்பாட்டை வெளிப்படையாக்கியது. மக்களுக்கு எதிரான மிகக் கூர்மையான எதிர்கால மாற்றங்கள், மிக வேகமாக நிகழ்வதற்கான சூழல் காணப்படுகின்றது.

புலிக்கு எதிரான ஒரு அழித்தொழிப்பு யுத்தத்தை, இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியா ஓருபுறம் நடத்திக்கொண்டு இருக்கின்றது. மறுபக்கத்தில் இலங்கை அரசுடன் ஓரு நிழல் யுத்தத்தை நடத்தி வந்தது. அது தற்போது உச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் இரண்டும் ஒரு புள்ளியில், ஒரு நோக்கில்தான் இயங்குகின்றது.

ஆனால் நிழல் யுத்தத்ததின் சாரப்பொருள் வெளித்தெரியாத வண்ணம், அது உருத்திரிந்து காணப்படுகின்றது. அது திரிந்து வெளிப்படும் விதமோ, தமிழ் மக்கள் சார்பு வேஷம் போடுகின்றது.

1.புலியொழிப்பு யுத்தம் மூலம் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது என்றும்
2.தமிழ் மக்களி;ன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றது.

இப்படித் தான் இந்தியா இலங்கையுடன் முரண்படுவதாக இட்டுக் கட்டப்படுகின்றது. அப்படித் தான் இந்த முரண்பாடு இருப்பதாக இந்தியா தரப்பும், மறுபக்கத்தில் புலி மற்றும் புலியெதிர்ப்பும் கூறிக்கொள்கின்றது. ஆனால் உண்மையான முரண்பாடோ இதுவல்ல.

மாறாக ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்