தமிழ் அரங்கம்

Showing posts with label மகிந்தா. Show all posts
Showing posts with label மகிந்தா. Show all posts

Friday, April 3, 2009

யுத்தத்தை முன்னெடுக்க முடியாமல் சிங்கள அரசும் மக்களிடம் தோற்றுப் போன புலிகளும்...

யுத்தத்தை வெல்ல முடியாமல் சிங்களப் பேரினவாத அரசு முழி பிதுங்கிய நிலையில் நிற்கின்றது. மகிந்தாவின் வாலைப் பிடித்து பிழைப்பு அரசியல் நடாத்திவரும் பீரிஸ் உலகநாடுகளின் அழுத்தத்தை காரணமாக காட்டி இன்னும் மூன்று வாரங்களில் போரை முடிவுக்கு கொண்டுவரப் போவதாக சொல்லி தங்கள் இயலாமையை மறைக்க முற்படுகின்றார். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று இனவெறியன் மகிந்தா தன் இலட்சியத்தில் நின்று விலகப் போவதில்லை என்று மேடைக்கு மேடை வீரம் பேசி உளறிக் கொண்டு திரிகின்றான். இத்தனை ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களையும், அப்பாவி சிங்கள இளைஞர்களையும் சாகடித்த பழி இவர்களை நிம்மதியாக தூங்க விடப் போவதில்லை. இன்னொரு வெள்ளை வேட்டிக் கூட்டம் சோனியாவின் வால்பிடிகள், எல்லா அழிவுகளையும் பின்னால் நின்று செய்து முடித்துவிட்டு இன்று ஒன்றும் தெரியாத சமாதான விரும்பிகளாக காட்டிக் கொண்டு இலங்கை அரசின் போர் நிறுத்தத்தை தாம் வரவேற்பதாகக் கூறிக் கொண்டு தங்கள் சொந்த அரசியலுக்கு இலாபம் தேட முனைகின்றார்கள்.

இன்னொருபுறம் தங்கள் பாசிசத்தாலேயே தங்கள் தோல்வியையும், இழப்புகளையும் அழிவுகளையும் தேடிக் கொண்ட புலித்தலைமைகள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 1, 2009

தமிழ்மக்களின்; விடுதலைக்கு, மூன்றாவது பாதைபற்றியே சிந்திக்கவேண்டும்!

வன்னிநில மக்களின் பேரவலம் பற்றி எழுத்தில் எழுதவோ, ஓவியத்தில் வடிக்கவோ முடியாது. அம்மக்களின் வாழ்வு நீண்ட துயராகவே உள்ளது.

வன்னிநில மக்களின் பேரவலத்திற்கு உலகில் குரல் கொடுக்காதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். மகிந்தா-கோத்தபாயா முதல் சர்வதேச சமூகம் வரை மனித அவலம் பற்றி நாளாந்தம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஓபாமாவின் அமெரிக்கா கூட 'தாங்கொனாத் துயரில்" போர்ப் பொறிக்குள் அகப்பட்ட மக்களை வான் ஊர்திகள் கொண்டு அழைத்துச் செல்லலாமா என சிந்தித்தது!

தமிழகத்தில் திராவிடக் கழகங்கள், - ஏனைய அரசியல்; தலைவர்கள் 'தம் உயிரினும் மேலான உடன்பிறப்பபுக்களை இரத்தத்தின் இரத்தங்களை" தொப்புள் கொடி உறவுகளுக்காக (தேர்தல்) போர்க்கோலம் பூண வைத்துள்ளனர்! nஐயலலிதா கூட உண்ணாவிரதம் முதல், (தீக்குளிக்க முற்படாத குறை) உண்டியல் குலுக்கல் வரை போயுள்ளார்! தமிழ்மக்களைக் கொன்றொழிக்கும் மத்திய அரசும் தன்னால் காயப்பட்டவர்களுக்கு, அங்கவீனமானவர்களுக்கும்; மருத்துவத்திற்காக வைத்தியர் குழுவையும் அனுப்பியுள்ளது. பாரதிய ஐனதாக்கட்சியின் தலைவர் அத்வானி எல்லோரையும்விட மே.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, March 20, 2009

மகிந்தாவின் பாசிசத்துக்கு முண்டு கொடுக்கும் புலியிசம்

மகிந்தாவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதே புலிதான். அமைதியும் சமாதானமும் வந்து தம்மை கருவறுத்துவிடும் என்று அஞ்சிய புலிகள், யுத்தத்தை விரும்பியதால் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். தமிழ்மக்கள் விரும்பியதோ, சமாதானத்தையும் அமைதியையும். புலிகள் விரும்பியதோ யுத்தத்தை.

மக்கள் சமாதானத்துக்காகவும் அமைதிக்காகவும் ரணிலுக்கு வாக்களிப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட புலிகள், தமிழ்மக்களின் இந்த விருப்பத்தை குழிபறிக்கவே, மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றனர். இப்படி புலிகள் யுத்தத்தை விரும்பித்தான், தம்மை தூக்கில் போடும் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். முந்திக்கொண்டே யாழ்குடாவில் கிளைமோர் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தினர். இப்படி புலிகளே யுத்தத்தை தொடங்கினர். மறுபக்கத்தில் மகிந்த அரசை தேர்ந்தெடுக்கவும், மக்களை வாக்களிக்கவிடாது தடுக்கவும், மகிந்த புலிகளுக்கு கையூட்டும் வழங்கினார். இப்படித்தான் தமிழ் மக்களைக் கொல்லும் கொலைகார பாசிட்டுக்கள், புலிகளின் துணையுடன் அதிகாரத்துக்கு வந்தனர்.

தான் இந்த அதிகாரத்துக்கு வர, மகிந்த போட்ட வேடமோ அப்பாவி வேஷம். கையெடுத்து கும்பிட்டும், இரந்தும், நடித்தும், இந்த பாசிட் அதிகாரத்தை கைப்பற்றினான். இதற்கு முன் பிரதமர் பதவியில் இருந்த போது, சாதுவைப் போல் வேஷம் போட்டு, அதிகாரத்தை கைப்பற்றவே தன்னை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டான். இந்த அதிகாரத்துக்கு வர ஜே.வி.பியின் உதவி.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.