தமிழ் அரங்கம்

Saturday, September 17, 2005

மனித உழைப்பு சீனாவில்...

மனித உழைப்பு சீனாவில் உயர் வீகிதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே அதிர்வுக்குள்ளாக்கின்றது

சீன உற்பத்திகள் உலகமயமாதலில் ஒரு அதிர்வை உருவாகின்றது. ஏகாதிபத்திய மூலதனங்களை அங்குமிங்குமாக ஒடவைக்கின்றது. இன்றைய நவீன தொழில் நுட்பம் சார்ந்த உலகச்சந்தையின் விலையையும், பல நிறுவனங்களின் திவாலையும் தீர்மானிக்கும் நாடாக சீனா மாறிவிட்டது. உலக உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையின் விலைகள் பலவற்றை, சீனா உற்பத்திகளே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டது. சீனா உற்பத்திகள் உலகச் சந்தையில் பல அதிர்வுகளை, தொடர்ச்சியாகவே நாள் தோறும் எற்படுத்துகின்றது. எதிர்மறையில் ஏகாதிபத்திய மூலதனங்கள் அதிக லாபவெறி தலைக்கேற, போட்டி போட்டுக் கொண்டு சீனாவில் தனது மூலதனத்தைக் குவித்தது, குவித்து வருகின்றது. இதன் மூலம் மலிந்த கூலியில் அதிக நவீன உற்பத்தி;யும், உற்பத்திகளில் அராஐகத்தையும் உலகெங்கும் உருவாக்கியுள்ளது. இதனால் உலகச் சந்தை கடுமையான தொடர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. நவீன தொழில்நுட்பமும், நவீன உபகரணங்களும் கூட முழுக்கமுழுக்க சீனா உற்பத்தியாகி வருகின்றது. அதிக லாப வெறிகொண்ட உற்பத்திகள் தவிர்க்க முடியாது, சீனாவில் ஒரு மூலதனத் திரட்சியை உருவாக்கியது, உருவாக்கின்றது. இன்னுமொரு பக்கத்தில் சீனாவின் தேசிய சொத்துகளை விற்பதன் மூலமும் கூட, ஒரு மூலதனத் திரட்சி உருவாகின்றது. மறுபக்கத்தில் சீனா அரசு மக்கள் நலத் திட்டங்களை கைவிட்டுவருவதன் மூலம், ஒரு மூலதனத் திரட்சியை உருவாகின்றது. இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் மூலதனத்தைக் கொண்டு, சீனா ஒரு போட்டி ஏகாதிபத்தியமாக மாறிவருகின்றது. 2003 இல் உலகளாவில் அன்னிய மூலதனத்தை அதிகம் இட்ட நாடாக சீனா மாறியது. அமெரிக்காவில் பெரும் நிதி மூலதனத்தை சீனா முதலீட்டு உள்ளது. அமெரிக்காவின் கடனில் சீனாவின் நிதி மூலதனம் கணிசமானது. சீனா உற்பத்திகள், அமெரிக்காவின் வர்த்தகத்தில் பற்றக்குறையை உருவாக்கியுள்ளது. ஈராக் எண்ணை வயல் முதல் சூடான் எண்ணை வயல் வரை சீனா மூலதனத்தின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இன்று அனைத்து துறையிலும் சீனா மூலதனம் ஊடுருவுகின்றது. இவைகளுக்கு எதிராகவே அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புகள் அரங்கேறும் நிலைக்கு, உலகம் சென்றுவிடுகின்றது. சீனா உலகில் பல துறைகளில், விரிவாக தலையிடத் தொடங்கியுள்ளது. மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் நிலையை எதிர்வுகூறும் அளவுக்கு, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் அங்கலாய்க்கின்றனர். சீனா உலகின் முதன்மையான தேசிய வருவாயைப் பெற்று பலம் பொருந்திய ஒரு நாடாக மாறும் என்ற எச்சரிககையை, முதலாளித்துவ அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் அதிக லாபவெறி, கணிசமாக மூலதனத்தின் இருப்பிடத்தையே இடமாற்றுகின்றது. மேற்கில் சீனப் பொருட்கள் சந்தையை ஆக்கிரமிக்கும் போது, மேற்கின் பணம் கணிசமாக சீனாவுக்குள் சென்றுவிடுகின்றது. இது மலிவான கூலியை உடைய சீனாவில், பெரும் மூலதனமாகி உலங்கெங்கும் தனது காலை அகலவைத்து உலக மூலதனத்தையே தன்னை நோக்கி கவர்ந்திழுகின்றது.

1973 உலக ஏற்றுமதி அளவில் ஒரு சதவீகிதத்தையே சீனா கொண்டு இருந்தது. இது 1987 இல் 1.6 சதவீகிதமாகியது. 2000 இல் கொங்கொங் உள்ளடங்க 2.9 சதவீகிதமாகியது. இது 2002 இல் 4.5 சதவீகிதமாக அதிகரித்தது. இது என்றுமில்லாத வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த அளவீடு டொலரின் பெறுமதியின் அடிப்படையிலானது. உள்நாட்டு பெறுமதியின் அடிப்படையில் இது பிரமாண்டமான ஒன்றாகியது. உண்மையில் இதன் விளைவாக உலகில் கடல் மூலமான எற்றுமதி வர்த்தகத்தையே சீனா கைப்பற்றி முதலீடத்தை வகிக்கின்றது. 2004 இல் 245 கோடி தொன் பொருட்களை சீனா துறைமுகங்கள் உடாக நடத்தியது. இது 1993யை விட 25 சதவீகிதம் அதிகமாகும்;. சீனாவின் 8 துறைமுகங்கள் குறைந்தபட்சம் 10 கோடி தொன்னுக்கு மேலாக பொருட்களை நகர்த்தியுள்ளது. 1999 இல் இப்படி இரண்டு துறைமுகங்களே சீனாவில் இருந்தன. நிலைமை எப்படி அதிரடியாகவே மாறியது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.

சீனாவின் உலக வர்த்தகம் 2003 இல் 7.5 சதவீகிதத்தால் அதிகரித்த போது, உலகளவிய ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 5.85 சதவீகிதமாகியது. 2000 ஆண்டில் சீனா ஏற்றுமதி 4200 கோடி டொலர் மட்டுமே. இது உலகில் 9வது இடத்தில் காணப்பட்டது. 2002 இல் சீனா ஏற்றுமதி 32350 (கொங்கொங் உள்ளடக்கப்படவில்லை) கோடி டொலராக இருந்த அதேநேரம், உலகின் ஐந்தாவது ஏற்றுமதியாளனாக மாறியது. 2003 இல் ஏற்றுமதி 43840 கோடி டொலராக மாறியதுடன், உலகில் நன்காவது மிகப் பெரிய ஏற்றுமதியாளனாகவே சீனா மாறியது. அதாவது சீனா ஏற்றுமதிகள், 2000 ம் ஆண்டுக்கு பிந்திய நான்கு வருடத்தில் பத்து மடங்கு மேலாக அதிகரித்துள்ளது. அத்துடன் உலக ஏற்றுமதி வரிசையில் 9 வது இடத்தில் இருந்து 4 இடத்துக்கு வந்துள்ளது. மறுபக்கம் சீனாவில் அதிக லாபத்தை பெற்றுத்தரும் ஏகாதிபத்திய உற்பத்திகள், அவர்களுக்கு எதிரான வகையில் எதிர்மறையில் வளர்ச்சியுறுகின்றது. மூலதன முரண்பாடுகளின் ஒரு சிறப்பான எடுப்பான வடிவமே இது. உண்மையில் மிகப் பெரிய நாடுகளுக்குள், விதிவிலக்கான ஒன்றாகவே சீனா உள்ளது.

சீனாவில் உற்பத்திக்கான மனிதக் கூலி உலகளவில் மிகக் குறைவானது. இதனால் மலிவு உற்பத்திகள் மூலதனத் திரட்சிக்கான ஒரு சூழலை உருவாக்கிவிடுகின்றது. சீனாவின் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார கட்டமைப்பை முதலாளித்துவமாக மாற்றிய போது, மிகப் பெரிய தேசிய சொத்துகள் அரசின் கையில் குவிந்து கிடந்தது. இந்த நிலையை, உலகில் வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இதை தனியார் மயமாக்கத் தொடங்கிய போது, பெரும் மூலதனங்கள் குவிவது தவிர்க்க முடியாதாகியது. மறுபக்கத்தில் தேசிய வருமானத்தை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பயன்படுத்திய முந்திய நிலையை சீன அரசு கைவிட்டத்தன் மூலமும், முந்திய சமூக நலத் திட்டங்களையும் முழுமையாக வெட்டியது. இதன் மூலம் பெரும் மூலதனங்கள் தீடிரென திரளத் தொடங்கியது. இந்த பெரும் மூலதனத்தைக் கொண்ட ஒரு மக்கள் விரோத கும்பல் உதித்தெழுவதை துரிதமாக்கியது. இதைவிட மிக குறைவான கூலியைக் கொண்ட, பெரும் நவீன தொழில் நுட்பத்தைக் கையாளும் திறனைக் கொண்ட அடிப்படை கல்வி தகுதியுள்ள தொழிலாளி வர்க்கம், அன்னிய மூலதனத்தை உள்ளித்தது இதன் மூலம் ஒரு பகுதியை அரசுக்கு பெற்றுக் கொடுத்தது. உதாரணமாக சீனாவில் முதலீடு செய்யும் ஒவ்வொரு அமெரிக்க கம்பெனியும் 42 சதவீகித இலாபத்தை பெறகின்றது. இந்த லாபவெறியே சீனாவில் மூலதனத்தின் நகர்வை வேகப்படுத்தியது. சீனாவினுள் அன்னிய மூலதனத்தின் பெரும் படையெடுப்பு, சர்வதேச ஏற்றுமதிச் சந்தையில் பெரும் வீச்சில் புகுந்து கொள்வதை துரிதமாக்கியது. இதை ஏகாதிபத்திய மூலதனமே தனது சந்தைக் கட்டமைபில் நின்று ஊக்குவித்தது. சீனப் பொருளதாரம் அன்னிய மூலதனக் கட்டமைப்புக்குள் பெரு வீக்கத்தைக் கண்டது. சீனாவின் மூலதனத்தின் திரட்சி, ஏகாதிபத்திய கனவுகளுடன் எல்லை கடந்து மற்றைய நாடுகளை ஊடுருவிச் செல்லத் தொடங்கியுள்ளது.

சீனா மற்றும் கொங்கொங்கின் மொத்த அன்னிய மூதலீடுகள்

ஆண்டு சீனா கொங்கொங்
1989 300 கோடி டொலர் தெரியாது
1996 4018 கோடி டொலர் தெரியாது
1997 4423 கோடி டொலர் 1 899 கோடி டொலர்
1998 4 375 கோடி டொலர் 2 885 கோடி டொலர்
1999 3 875 கோடி டொலர் 2 459 கோடி டொலர்
2000 4 077 கோடி டொலர் 6 193 கோடி டொலர்
2001 4 800 கோடி டொலர் 2 284 கோடி டொலர்
2002 5 270 கோடி டொலர் தெரியாது
2003 5 350 கோடி டொலர் தெரியாது

சீனாவின் அன்னிய மொத்த முதலீடு 2004 முடிய 55900 கோடி டொராகியுள்ளது. சீனா அரசு அனுமதித்த மொத்த அன்னிய மூதலீடுகள் மூலம் உலகளவில் 512504 உற்பத்தி துறைகளை உருவாக்கியுள்ளது. 2004 இல் 43664 அன்னிய மூதலீட்டுக்கு சீனா அரசு அனுமதி வழங்கியது. இது 2003 இல் 41081 டாக இருந்தது. உண்மையில் சீனாவின் அன்னிய மூதலீடுகள் உலகெங்கும் ஏகாதிபத்தியத்துக்கு நிகராகவே நகரத் தொடங்கியுள்ளது. அன்னிய மூதலீட்டை அதிகம் வெளியில் நகர்த்தும் நாடாக சீனா இருக்கும் அதே நேரம், அன்னிய மூலதனத்தை உள்ளிக்கும் நாடகவும் சீனா உள்ளது. இது உலகின் பல அதிர்வுகள் எற்படுத்துகின்றது. இவற்றை விரிவாக நாம் ஆராய்வோம்.

2002 இல் அன்னிய முதலீட்டை அதிகமிட்ட நாடுகளை எடுத்தால்,
சீனா 5 270 கோடி டொலர்
பிரான்ஸ் 4 820 கோடி டொலர்
ஜெர்மனி 3 810 கோடி டொலர்
அமெரிக்கா 3 010 கோடி டொலர்
நெதர்லாந்து 2 920 கோடி டொலர்
பிரித்தானியா 2 500 கோடி டொலர்

2002 உலகளாவிய அன்னிய மூதலீட்டை அதிகமிட்ட நாடாக சீனா மாறியது. சீனா கம்யூனிசத்தை கைவிட்ட பின்பாக, 2004 நடுப்பகுதியில் அன்னிய நாடுகளில் சீனா இட்டுள்ள மூதலீடு 50000 கோடி டொலரைத் தண்டியுள்ளது. இதைவிட கொங்கொங் மூலதனம் தனியாக உள்ளது. 2004 தை முதல் ஐப்பசி வரையிலான காலத்தில் சீனா அன்னிய மூதலீடு 23.5 சதவீகிதத்தால் அதிகரித்து. இந்த அதிகரிப்பு 5378 கோடி டொராக இருந்தது. 2004 ஐப்பசி முதல் 2005 தை வரையிலான காலத்தில் 35202 கோடி டொலரை அன்னிய மூதலீடாக நடத்தியது. இது சென்ற வருடத்தை விடவும் 7.66 சதவீகிதம் அதிகமாகும்;. வரலாற்று ரீதியாக காலகாலமாக உலக ஆதிக்கத்தை தக்கவைத்து இருந்த ஏகாதிபத்திய உலக ஒழுங்கு மாறாக, சீனா புதிய ஏகாதிபத்திய போட்டியாளனாக வளர்ச்சியுற்று வருவதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. முதலில் சீனாவினுள் அன்னிய மூலதனம் பெருமெடுப்பில் பாய்ந்தது. பின்னால் சீனா மூலதனம் வெளிச் செல்லத் தொடங்கியது.

உண்மையில் அன்னிய மூலதனம் சீனாவினுள் ஊடுருவிப் பாய்ந்த வேகம் மலைக்க வைக்க கூடியவை. 1999-2002 கும் இடையில் மொத்தமாக உலகளாவிய அதிக அன்னீய முதலீடுகள் இடப்பட்ட நாடுகளை எடுத்தால், சீனாவுக்குள் தான் அதிகம் உடுருவிப் பாய்ந்தது.

சீனா 38 400 கோடி டொலர் (1982-2002க்கு இடையில் 44 800 கோடி டொலர்)
பிரேசில் 15 800 கோடி டொலர்
ஆர்ஜெந்தீனா 6 500 கோடி டொலர்
போலந்து 5 100 கோடி டொலர்
ரூசியா 2 600 கோடி டொலர்

ஒப்பிட்டளவில் சீனாவில் குவிந்த அன்னிய மூலதனம் மிகப் பிரமாண்டமானது. 1982-1998 க்கும் இடையில், அதாவது சீனா முதலாளித்துவ மீட்சிக்கு பிந்திய 17 வருடத்தில், அதாவது 1998 வரை சீனாவில் ஊடுருவிய அன்னிய முலதனம் 6400 கோடி டொலர் மட்டும் தான். அதற்கு பிந்திய காலத்தில் அதாவது உலகமயமாதலின் வேகநடை போடத் தொடங்கியதன் பின்பாக 1999 க்கும் 2002 க்கும் இடைப்பட்ட நான்கு வருடத்தில் 38400 கோடி டொலர் அன்னிய மூலதனம் சீனாவில் வெள்ளமாக புகுந்தது. 2003 இல் சீனாவில் வெளிநாட்டு முதலீடு 50000 கோடி டொலரையும் தாண்டியுள்ளது.

அதிக லாபம் பெறும் நனவுடன் சீனாவை விட்டோடிய முன்னைய கம்யூனிச விரோதிகளே முதலில் சீனாவில் மூதலீடத் தொடங்கினர். அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் மூலதனங்களை நகர்த்தினர். ஆரம்பத்தில் இது 4500 கோடி டொலரை சீனாவில் முதலீட்டும் அளவுக்குச் சென்றது. இது சீனாவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவானதாக மாறியது. இது சீனா மூலதனத்தின் சுயேட்சைத் தன்மையை, மற்றைய ஏகாதிபத்தியத்தக்கு எதிராக பறைசாற்றியது. கொங்கொங் சீனாவுடன் இணைந்த போது, அது சீனாவின் பலத்தையே அதிகரிக்க வைத்தது. கொங்கொங் பொருளாதாரம் பலம்பொருந்திய சீனா பொருளாதாரத்துடன் கூடிய நிலையில், மூலதனம் சதிராட்டம் போடத் தொடங்கியது.

இப்படி சீனாவை நோக்கி ஒடிவந்த, ஒடிவரும் அன்னிய மூலதனங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை எனப் பார்ப்போம். சீனாவில் உள்ள அன்னிய முதலீட்டுகள் 2002 செப்டம்பரில்

கொங்கொங் 19 984 கோடி டொலர் 45.96 சதவீகிதம்
அமெரிக்கா 3 842 கோடி டொலர் 8.84 சதவீகிதம்
யப்பான் 3 535 கோடி டொலர் 8.13 சதவீகிதம்
தாய்வான் 3 197 கோடி டொலர் 7.35 சதவீகிதம்
வேர்ஜிதீவுகள் 2 276 கோடி டொலர் 5.23 சதவீகிதம்
சிங்கப்பூர் 2 097 கோடி டொலர் 4.82 சதவீகிதம்
பிரான்ஸ் 545 கோடி டொலர் 1.25 சதவீகிதம்
மற்றவை 8 009 கோடி டொலர் 18.42 சதவீகிதம்
மொத்தம் 43 478 கோடி டொலர் 100 சதவீகிதம்

சீனாவில் முதலில் அதிக ஊடுருவியது கொங்கொங் மூலதனமே. கொங்கொங் உள்ளே உள்ள பெருமளவிலான மூலதனங்;கள் அன்னிய மூலதனம் தான். அன்னிய மூலதனம் கொங்கொங் வழியாகவே அதிகளவில் சீனாவில் ஊடுருவியுள்ளது. இன்று கொங்கொங் சீனாவுடன் இணைந்த ஒரே நாடாகவும் உள்ளது. (ஒருநாடு இரண்டு அமைப்பு முறை எனக் கூறிக் கொள்கின்றது) இதற்கு வெளியில் நேரடியாக ஏகாதிபத்தியம் முதல் அயல்நாடுகளும் அதிக அன்னிய மூதலீட்டை நடத்தியுள்ளனர். தாய்வானின் 80 சதவீகிதமான உற்பத்தி வெளிநாட்டில் செய்யப்படுகின்றது. உதாரணமாக சீனாவுடான இணைவு சம்பந்தமாக மக்களை ஏமாற்றி பிழைக்கும் தாய்வான் அரசியல் விளையாட்டைத் தாண்டி, சீனாவில் 30000 தாய்வான் நிறுவனங்கள் மூதலீட்டுள்ளன. 5 முதல் 10 லட்சம் தாய்வான் மக்கள் சீனாவில் வேலை செய்கின்றனர். தாய்வான் உள்ளடக்க ரீதியாக சீனாப் பொருளாதாரக் கூறில் இணைக்கப்பட்டுவிட்டது. அரசியல் ரீதியாக முரண்பட்ட கட்சிகள், குறுகிய நலனுக்காக மட்டும் தான் சீனாவுக்கு எதிராக பூச்சாண்டி காட்டுகின்றனர். இங்கு தாய்வான் வழியாகவும் கூட ஏகாதிபத்தியம் கணிசமாக புகுந்துள்ளது.

உண்மையில் இந்த மூதலீடுகள் சீனாவுக்குள் ஒடிவரும் காரணங்கள் பற்பலவாக இருந்தாலும், உற்பத்திக்கான குறைந்த கூலி விகிதம் ஒரு முக்கியமான அம்சமாகும். 1995 இல் ஒரு தொழிலாளியின் ஒரு மணி நேரக்கூலி nஐர்மனியில் 32 டொலராகவும், ஐப்பானில் 24 டொலராகவும், அமெரிக்காவில் 17 டொலராகவும்; இருந்தது. இதற்கு மாறாக இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு மணி நேரக் கூலி 0.25 டொலராகும். nஐர்மனியில் ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியைக் கொண்டு 128 இந்தியரையோ, சீனரையோ கூலிக்கு அமர்த்தமுடியும். இது லாப வீகிதத்தின் உயர்ந்தபட்ச எல்லையை பெற்றுத் தருவனவாக உள்ளது. ஒரு இந்தியரை விட சீனரை ஏகாதிபத்திய மூலதனம் காதலிப்பதற்கு பற்பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானதும் அடிப்படையானதும் பரந்த கல்வியின் உயர்ந்த தரமாகும்.
நவீனத் தொழில் நுட்பத்தை இயக்கவல்ல, மிக மலிவான கூலிகளை பெற முடியும் என்பது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. அத்துடன் மூலதனத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின் போராட்ட பலத்தை போலி கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத்தால் நலமடித்த நிலையில், மூலதனம் சுயாதீனமாக உயாந்தபட்ச சூறையாடலுக்குள் இயங்க முடிகின்றது. இதைவிட மேற்கில் சுற்றுச்சூழல் போன்ற பல தடைகள், சீனாவில் உள்ள முதலீட்டுக்கு எதுவும் கிடையாது. அத்துடன் எல்லாவற்றையும் கையாளக் கூடிய மாபிய அமைப்பு முறை, அரசின் ஆதாரவுடன் கொடிகட்டிப் பறக்கின்றது.

மலிந்த கூலியில் பெறப்படும் உயர்ந்த லாப வீதங்கள்

எதிர்மறையில் சீனாச் சந்தை ஒரு மணி கூலி அடிப்படையில், ஜெர்மனியில் 128 பேரின் வேலையின்மையை உருவாக்கின்றது. சம்பள விகிதங்களின் அடிப்படையில் வேலை இன்மை உற்பத்தி செய்கின்றது. 128 பேரின் வேலைக்குரிய ஒரு ஜெர்மனிய தொழில்துறை தனது வேலை ஆட்களை நீக்கிவிட்டு சீனாவுக்குள் ஒடிவிடுவதையே விரும்பும். ஒரு ஜெர்மனியரின் கூலியைக் கொண்டு, சீனாவில் 128 பேரை வேலைக்கு அமர்த்த முடியும். அதாவது ஜெர்மனியில் 128 தொழிலாளிக்கு கொடுத்த கூலி மூலம் 16384 சீனத் தொழிலாளியை கூலிக்கு அமர்த்த முடியும். இங்கு உற்பதியாகும் பொருட்கள் மேற்கில் அதியுயர் லாபவீகிதத்தில் சந்தைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் ஒரு கூலியினால் கிடைக்கும் மேலதிக லாபம் 128 மடங்காக இருக்கும். அதாவது 128 பேரில் கூலி ஒரு மணித்தியாலத்துக்கு ஒப்பிட்டளவில் 4070 டொலருக்கு மேலதிகமாக லாபத்தை ஜெர்மனியில் செய்வதைவிட பெற்றுத் தருகின்றது. இது மாதம் 7.8 லட்சம் டொலரையும், வருடம் 94 லட்சம் டொலரையும் மீதமாக பெற்றுத் தருகின்றது. இது ஒரு ஜெர்மனிய தொழிலாளிக்கு பதிலாக அமர்த்தும் 128 சீனாத் தொழிலாளியால் கிடைக்கின்றது. 128 ஜெர்மனிய தொழிலாளியின் கூலியைக் கொண்ட கூலிக்கு அமர்த்தக் கூடிய 16384 சீனாத் தொழிலாளியின் உற்பத்திக்கு வித்திடப்படின் லாப விகிதம் ஜெர்மனிய உற்பத்தியை விட மணிக்கு 5.24 லட்சம் டொலர் அதிகமாக கிடைக்கும். இது மாதத்துக்கு 10 கோடி டொலராக இருக்கும். இது வருடம் 120 கோடி டொலர்ராகும். (இவை 8 மணிநேரம் வேலையை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டது) இதைவிட இதே போல் மலிவான மூலப் பொருட்கள், வரிச் சலுகைகள் என்று மூலதனம் குதுகலிக்கும் வகையில், உலகமயமாதல் நவீன அற்புதமான கொடையாக உள்ளது.

சீனா உற்பத்திகள் சீனாவில் பெருமளவில் சந்தைப்படுத்தப்படுவதில்லை. மாறாக அவை பெருமளவில் ஏகாதிபத்தியத்திலும், பிரதானமாக மூன்றாம் உலக நகரம் சார்ந்த சந்தைகளில் குவிகின்றது. 2003 இல் சீனாவின் சர்வதேச வர்த்தகம் 37 சதவீகித்தால் அதிகரித்தது. சீனாவில் உள்ள அன்னிய நாட்டுக் கம்பனிகளின் உற்பத்தியில் 56 சதவீகிதத்தை ஏற்றுமதியாகியது. சீனாவில் அன்னிய நாடுகளின் உற்பத்திகள் அதிகரிக்கும் அதேநேரம், அவை பெருமளவில் ஏற்றுமதியாகிச் செல்லுகின்றது. இதில் முக்கியமானதாக இருப்பது நவீன தொழில் நுட்ப உற்பத்திகளே. நவீன தொழில் நுட்பம் சார்ந்த உற்பத்திகள், பெருமளவில் சீனா உற்பத்தியாகியுள்ளது. உதாரணமாக உலகளவிய நவீன உற்பத்தியில் சிலவற்றில் சீனாவின் பங்கைப்பார்ப்போம்.

உழவுயந்திரம் 83 சதவிகிதம்
மணிக்கூடு, மோட்டர் 75 சதவிகிதம்
விளையாட்டுச் சமான்கள் 70 சதவிகிதம்
புகைப்படக்கருவி 55 சதவிகிதம்
தொலைபேசி 50 சதவிகிதம்
தொலைக்காட்சி பெட்டி 40 சதவிகிதம்
உடுப்பு தோய்கும் மெசின் 25 சதவிகிதம்
வீட்டு தளபாடங்கள் 16 சதவிகிதம்
உருக்கு 15 சதவிகிதம்

உலக உற்பத்தில் சீனா உற்பத்திகளே பெருமளவில் சில பெரும் வர்த்தக துறைகளை ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் சீனா ஒரே வருடத்தில் இலத்திரனியல்; (எலற்றோனிக்) உற்பத்தியை 30000 கோடி டொலரால் அதிகரித்தது. நவீன இலத்திரனியல் மேலான மூதலீடும், உற்பத்தியும் மிகப் பிரமாண்டமானது. நவீன தொழில்துறை சார்ந்து 2002 இல் யப்பான் மற்றும் தாய்வான் சீனாவிலீட்ட முதலீடு 5200 கோடி டொராகும். 1980க்கு பிந்திய 20 வருடத்தில் தொழில்துறையை நவீனப்படுத்த இட்ட முதலீடு 60000 கோடி டொலராகும். மிக வேடிக்கை என்னவென்றால், 1985 இல் சீனாவில் இருந்த அன்னியநாட்டுக் கம்பனிகளின் ஏற்றுமதி 30 கோடி டொலராக மட்டுமே இருந்தது. இது 2001 இல் 13300 கோடி டொராகியது. அதாவது 16 வருடத்தில் 443 மடங்கு மேலானதாக அதிகரித்தது. அமெரிக்காவுக்கான தொலைகாட்சி பெட்டி மற்றும் ரேடியோ ஏற்றுமதியை, 1998க்கும் 2001க்கும் இடையில் சீனா இரட்டிப்பாக்கியது. இதன் மொத்த பெறுமானம் 600 கோடி டொலராகியது. உலகமயமாதல் உருவாக்கிய நவீன உற்பத்திகளின் உற்பத்தி மையமாக, சீனா மாறிக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் துணி உற்பத்தியை எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக மாறிவருகின்றது. பல எழை நாடுகளின் திவாலை மட்டுமல்ல, ஏகாதிபத்திய துணி உற்பதியின் திவாலையும் கூட இது எற்படுத்துகின்றது.

எற்றுமதி இறக்குமதி
1999 4127 கோடி டொலர் 1392 கோடி டொலர்
2000 4938 கோடி டொலர் 1656 கோடி டொலர்
2001 4983 கோடி டொலர் 1626 கோடி டொலர்
2002 5785 கோடி டொலர் 1699 கோடி டொலர்
2003 7335 கோடி டொலர் 1929 கோடி டொலர்

உலகளவில் ஐந்து வருடங்களில் சீனாவின் துணி எற்றுமதி அண்ணளவாக இரண்டு மடங்காகியுள்ளது. இதேநேரம் இந்தியா துணி எற்றுமதி 1086 கோடி டொலர் மட்டுமே. துணி எற்றுமதி செய்த பல நாடுகள், தமது சொந்த எற்றுமதியை சீனாவினால் இழந்து வருகின்றன. இது எப்படி எற்படுகின்றது எனப் பார்ப்போம்.

மேற்கு நோக்கிய உலகளவிய துணி வர்த்தகம்

ஐரோப்பா 2002 ஐரோப்பா 2004 அமெரிக்கா 2002 அமெரிக்கா 2004
சீனா 18 சதவீகிதம் 26 சதவீகிதம் 16 சதவீகிதம் 50 சதவீகிதம்
இந்தியா 6 சதவீகிதம் 9 சதவீகிதம் 4 சதவீகிதம் 15 சதவீகிதம்
கொங்கொங் 6 சதவீகிதம் 6 சதவீகிதம் 9 சதவீகிதம் 6 சதவீகிதம்
அமெரிக்க நாடுகள் - - 16 சதவீகிதம் 5 சதவீகிதம்
மெக்சிக்கோ - - 10 சதவீகிதம் 3 சதவீகிதம்
தாய்லாந்து - - - 3 சதவீகிதம்
பிலிப்பைன்ஸ் - - 4 சதவீகிதம் 2 சதவீகிதம்
இந்தோனேசிய 3 சதவீகிதம் 3 சதவீகிதம் 4 சதவீகிதம் 2 சதவீகிதம்
பங்களதேசம் 3 சதவீகிதம் 4 சதவீகிதம் 4 சதவீகிதம் 2 சதவீகிதம்
இலங்கை - - - 2 சதவீகிதம்
ஐரோப்பா 9 சதவீகிதம் 6 சதவீகிதம் 5 சதவீகிதம் 0 சதவீகிதம்
தாய்வான் - - 4 சதவீகிதம் -

துணி வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் மற்றயை நாடுகளையே திவாலாக்கி வருகின்றது. இதில் சீனா மிகப் மிரமாண்டமான வகையில் காணப்படுகின்றது. இது இந்தியாவைக் கூட சந்தையில் இருந்து அகற்றினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆடத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கத் தொழிலாளிக்கு கூலியாக 9.56 டொலரே ஒரு மணிநேரத்துக்கு வழங்கப்படுகின்றது. தென் அமெரிக்க எல்-சால்வடோரில் அதே தொழிலாளி பெறும் கூலி 1.65 டொலர். சீனத் தொழிலாளி பெறுவதோ 0.68 டொலர் மட்டுமே. மூலதனம் சீனாவை நோக்கி ஒடுவதும், சீனா உற்பத்திகள் உலகச் சந்தையை ஆக்கிரமிக்கும் உலக எதார்த்தம், சீனாவின் மிகக் குறைந்த கூலி வீகிதம் மிக முக்கிய காரணங்களில் ஒன்று.
இதனால் உலகச் சந்தை தீடிர் அதிர்வுகளைச் சந்திக்கின்றது.

உலகமயமாதலில் வளர்ந்துவரும் சீனாவின் ஆதிக்கம், மேற்கின் சந்தைகளையே திடிர் தீடிரென திவாக்கின்றது. உதாரணமாக 2005 தை முதல் சித்திரை வரையான காலத்தில் சீனக் காலனி (சாப்பத்து) எற்றுமதி ஐரோபாவுக்கு 681 சதவீகிதத்தால் அதிகரித்துள்ளது. முதல் 4 மாதத்தில் 16.1 கோடி காலனிகளை ஐரோப்பாவுக்கு சீனா ஏற்றுமதி செய்தது. இது 2004 இல் 2.37 கோடியாக மட்டுமே இருந்தது. இதனால் காலனிகளின் விலை 28 சதவீகிதத்தால் தீடிர் வீழ்ச்சி கண்டது. இதனால் ஐரோப்பிய காலனி உற்பத்தியாளர்கள் நெருக்கடியை சந்தித்ததுடன், தமது உற்பதிகளை நிறுத்தி, தமது தொழில்சாலைகளையே சீனா போன்ற நாடுகளை நோக்கி நகர்த்துகின்றனர். இது பொதுவாகவே அனைத்து துறையிலும் நடக்கின்றது.
பெருமளவில் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் மூலதனத்தை ஈடுவதுடன் உற்பத்தியை குவிக்கின்றது. இது பல்துறை சார்ந்தது. அமெரிக்காவில் மட்டும் இன்று ஏறக்குறய 40,000 சீன உணவகங்கள் உள்ளன. இது மெக்டொனால்ட், பர்கர் கிங், கே.எஃப்.சி போன்ற பிரபல அமெரிக்க பன்னாட்டு உணவங்களின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகமானதாக உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்ற நடத்தும் போட்டி, சீனா உற்பத்தியால் உலகளவில் நெருக்கடிக்குள்ளாக்கின்றது. பொருட்களின் தேக்கம் மட்டுமின்றி, உற்பத்தியாகும் பொருளின் உள்ளடகத்தை மாற்றிய புதியதொழில் நுட்பத்தைப் புகுத்துவதால் முன்னைய உற்பத்திகள் தீடிரென தனது பயன்பாட்டுத் தன்மையை இழக்கின்றது. மிககுறுகிய காலத்தில், உற்பத்திகள் உற்பத்தி மையங்களை வீட்டு சந்தைக்கு செல்ல முன்பே, அதற்கு எதிராக மற்றயை புதிய உற்பத்திகள் போட்டியாக வருகின்றது. இதனால் உற்பத்தி தனது பயன்பாட்டுத் தன்மை இழந்து கழிவாவது உலகமயமாதலி;ல் அன்றாட நிகழ்வாகிவிட்டது. உலகம் கழிவுகளின் கூடாராமாகும் அதேநேரம், இயற்கை நாசமாக்கப்படுகின்றது. பொருட்களின் தேக்கம், பொருட்களின் உயர் தொழில்நுட்ப அன்றாடம் புகுத்தல், உற்பத்திகான மிகக் குறைந்த கூலி, பொருட்களின் விலைகளில் கடுமையான சரிவை ஏற்படுத்துகின்றது. சீனா உற்பத்திகளால் உலக பொருட்களின் விலை 1998க்கும் 2001க்கும் இடையில் வருடத்துக்கு 15 சதவீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. மிகவும் ஆடம்பரமானதும், அடிப்படை தேவைக்குள் உள்ளடங்காத பொருட்களில் சந்தை கவர்ச்சி காட்டுவதால், மக்களின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்வது குறைந்து வருகின்றது. கவர்ச்சியான ஆடம்பரமான வக்கிரம் மூலம், மக்களின் ஆரோக்கியமான வாழ்வு பந்தப்படுகின்றது. நுகர்வுவெறி பொதுவான சமூகப் பண்பாடாக கட்டமைக்கப்படுகின்றது. இது ஏகாதிபத்திய நாடுகளின் திவாலையே பறைசாற்றிவிடுகின்றது. உதாரணமாக உலகின் மிகப் பெரிய பொருளாதார பலம் கொண்ட அமெரிக்காவின் குரல்வளைவிலேயே இது கையை வைக்கின்றது.

2004 இல் அமெரிக்காவின் இறக்குமதி 18 சதவீகித்தால் அதிகரித்து இது 176400 கோடி டொராக இருந்தது. எற்றுமதி 13 சதவீத்தால் அதிகரிதது 114600 கோடி டொராக மாறியது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றக்குறை 2004 இல் 61770 கோடி டொராகியது. இதில் யாப்பனுக்கு 7520 கோடி டொலரும், ஐரோப்பாவுக்கு 11000 கோடி டொலரும், சீனாவுக்கு 16200 கோடி டொலரும். கனடாவுக்கு 6600 கோடி டொலரும், எண்ணை வள நாடுகளுக்கு 7200 கோடி டொலருமாகும்; 2003 இல் அமெரிக்காவின் பற்றக்குறை 49650 கோடி டொலர் மட்டுமே.
உதாரணமாக அமெரிக்கா சீனா வர்த்தகத்தில், அமெரிக்காவுக்கு எற்படும் பற்றக்குறையால் உருவாகும் நெருக்கடியைப் பார்ப்போம்.

1985 60 கோடி டொலர்
1990 1 043 கோடி டொலர்
1993 2 277 கோடி டொலர்
1995 3 378 கோடி டொலர்
1997 4 968 கோடி டொலர்
1999 6 867 கோடி டொலர்
2000 8 383 கோடி டொலர்
2001 8 309 கோடி டொலர்
2002 10 306 கோடி டொலர்
2003 12 370 கோடி டொலர்
2004 16 200 கோடி டொலர்

வருடாந்தம் இறக்குமதிக்கான சீனா நிலுவைகளை செலுத்தமுடியாது, அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் காண்கின்றது. அமெரிக்கா சீனாவுக்கு செலுத்த வேண்டிய இறக்குமதிக்கான நிலுவை, அமெரிக்காவின் பொருளாதார கட்டமைபுக்குள் உட்புகுந்துவிடுகின்றது. இது அமெரிக்காவின் கடனில் ஒரு பகுதியாகவும், அமெரிக்கப் பங்குச் சந்தையிலும், பங்கு பத்திரத்திலும் உட்புகுந்து நிதி மூலதனமாக மாறிவிடுகின்றது. அமெரிக்க கடனில் சீனாவின் பங்கு கணிசமானதாக மாறிவிட்டது. கடனுக்கான வட்டியை அமெரிக்காவிடம் பெறும் நிலைக்கு, சீனா நிதி மூலதனம் பெருமெடுப்பில் உட்புகுகின்றது. அதேநேரம் தொடர்ந்தும் சீனாவின் ஏற்றுமதியில் பெரும்பகுதி, அமெரிக்காவுக்குள் செல்லுகின்றது.

அமெரிகாவுக்குள் உட்புகும் நிதி மூலதனத்தில் யப்பானுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. அதாவது அமெரிக்காவின் நிதி மூலதனத்தில் 8.8 சதவிகிதத்தை சீனா கைப்பற்றியுள்ளது. இதே போல் அமெரிக்காவின் பங்கு பத்திரத்திலும் சீனாவே அதிக நிதி மூலதனத்தை முதலீட்டுள்ளது. இது 2001 இல் 8200 கோடி டொலராக இருந்தது. 2002 இல் 11900 கோடி டொலராக அதிகரித்ததுள்ளது. இதே போன்று அமெரிக்கா முதலீட்டிலும் சீனா புகுந்துள்ளது. சீனாவின் உட்புகுந்த அன்னிய மூலதனத்தின் அளவுக்கு, சீனா அன்னிய நாடுகளில் மூதலீட்டை நடத்தி உள்ளது. இது ஒரு வியக்கத்தக்க மூலதனத்தின் முரண்பண்பையே காட்டுகின்றது. மறுபக்கம் பெரும் திதி பரிமாற்றத்தை சீனாப் பொருளாதார உள்ளிக்கின்றது. 2003 சீனாவின் நிதிப் பரிமாற்றம்

ஐரோப்பா 13430 கோடி டொலர்
அமெரிக்கா 12660 கோடி டொலர்
ரூசியா மற்றும் ஸ்கன்டினேவிய நாடுகள் 3060 கோடி டொலர்
லத்தீன் அமெரிக்கா 2660 கோடி டொலர்
தென்கொரியா 6320 கோடி டொலர்
யப்பான் 13360 கோடி டொலர்
தாய்வான் 5840 கோடி டொலர்
ஆபிரிக்கா 1850 கோடி டொலர்
மத்தியகிழக்கு 2770 கோடி டொலர்
ஆசியா 10920 கோடி டொலர்
மிகுதி 2510 கோடி டொலர்

பல கோடி பெறுமதியான நிதிப்பரிமாற்றம் சீனாப் பொருளாதாரத்தின் ஊடாக நடக்கத் தொடங்கியுள்ளது. இது நிதியின் இருப்பிடத்தை மாற்றியமைக்கின்றது. சீனாவை நோக்கி நிதிகள் கூட நகரவதை துரிதமாக்கின்றது. நிதி மூலதனத்தின் தங்குமிடமாக சீனா மாறத் தொடங்கிவிடுகின்றது. இது வழமையான மேற்கு சார்ந்த வங்கிகள் என்ற உலகளவிய கட்டமைப்பில் ஒரு வெடிப்பாகவே இது மாறுகின்றது.
சில மற்றங்கள் மிகப் பிரமண்டமான அளவில் நடக்கின்றது. 2004 இல் சீனா வர்த்தக உபரி 3200 கோடி டொலராகியது. இது 2003யை விட 25.6 சதவிகிதம் அதிகமாகும். அத்துடன் நிதிப் பணமாற்றம் 30 சதவீகிதத்தால் அதிகரித்துள்ளது. இது மொத்தமாக 100000 கோடி டொலராகியது. இதில் அதிகமானவை வர்த்தக பேரங்களாகவே இருந்தது. 2003 இல் உள்நாட்டு வருமானம் 9.1 சதவீகிததால் அதிகரித்த அதேநேரம், 2004 இல் இது 9 சதவீகிதத்தால் மேலும் அதிகரித்தது. 2004 இல் ஏற்றுமதி 35.4 சதவிகிதத்தால் அதாவது 59340 கோடி டொலராக அதிகரித்து. அதேநேரம் இறக்குமதி 36 சதவீகிதத்தால் அதிகரித்தது. அதாவது 56140 கோடி டொலரால் அதிகரித்தது. இதன் மூலம் மேலதிகமாக 3200 கோடி டொலரை வர்த்தக மீதமாக பெற்றனர். இது 2003 இல் 2092 கோடி டொலராக இருந்தது. சீனாவின் உள்நாட்டு வரி வரத்து 25 சதவீகிதத்தால் அதிகரித்து. இது 31080 கோடி டொலராகியது. உள்நாட்டு மூதலீடு 2003 யை விட 25 சதவீகிதத்தால் அதிகரித்து. உலகில் எந்தப் பகுதியிலும் இப்படி நடக்கவில்லை. உலகமயமாதலின் ஏகாதிபத்திய முரண்பாடு சீனாவுடாகவே அரங்கு வரத் துடிக்கின்றது. இதை நிதி கையிருப்பே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. உலகளவில் 2003 இல் நிதிக் கையிருப்பு

யாப்பான் 65280 கோடி டொலர்
சீனா 40330 கோடி டொலர்
தாய்வான் 20630 கோடி டொலர்
ஈரோ நாடுகள் 18800 கோடி டொலர்
தென்கொரிய 15450 கோடி டொலர்
கொங்கொங் 11860 கோடி டொலர்
இந்தியா 9760 கோடி டொலர்
மெச்சிக் 5770 கோடி டொலர்
பிரேசில் 4910 கோடி டொலர்

நிதிக் கையிருப்பு யாப்பானுக்கு அடுத்து நிலையை சீனா எட்டியுள்ளது. எந்த மேற்கு நாடுகளிமும் கூட இந்தளவு நிதி கையிருப்பு கிடையாது. 2004 இல் சீனாவின் நிதிக் கையிருப்பு 60900 கோடி டொலராகியது. உலகத்தின் ஆதிகத்தை நோக்கி சீனாப் பொருளாதாரம் வெகு வேகமாகவே நகருகின்றது. உலகளவில் இது மிகப் பெரிய அதிர்வுகளை உருவாக்கவுள்ளது. கடந்த 200 வருடா மேற்கத்தைய ஆதிக்கத்தையும், மேற்கின் பொருளாதார வல்லாமைக்கு எதிரான கடும் சவாலை இது எற்படுத்த உள்ளது.

சீனா ஏகாதிபத்தியமயமாதல் என்பது அனைத்து துறைகளிலும் வேகமாக படர்ந்து வருகின்றது. 2007 இல் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி 200000 கோடி டொலராக மாறிவிடும்; என்ற எதிர்வு கூறல்களை, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களே அதிர்வுடன் அறிவித்துள்ளனர். இது உலக வர்த்தகத்தில் 13.7 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்; என்றும் அறிவித்துள்ளனர். எங்கும் சீன றகனனின் ஆக்கிரமிப்பு தொடங்கியுள்ளது.
சந்தையும், வர்த்தகமும் மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் தான் உயிர் வாழ்கின்றது. மக்களை முட்டாளக்கி அதில் தான் நவீனத்துவம் வக்கரிக்கின்றது. இன்று விளம்பரத்துக்காக உலகில் மூன்றுவதாக அதிகம் செலவளிக்கும் நாடாக சீனா மாறியுள்ளது. இது 2003 இல் 1980 கோடி டொலராகியது. இக்காலத்தில் அமெரிக்கா 14700 கோடி டொலரையும், யப்பான் 3540 கோடி டொலரையும் விளம்பரத்துக்காக செலவு செய்தது. உலகில் மக்களை ஏமாற்ற செய்யும் விளம்பரத்துக்கான மொத்தச் செலவு 33100 கோடி டொலராகும்;. இதில் சீனாவின் பங்கு 5.98 சதவீகிதமாகும். இது 2000 இல் 3.58 சதவீகிதமாக இருந்தது. 2003க்கும் 2004க்கும் இடையில் சீனா விளம்பரத்துக்கான செலவை 11.11 சதவீகிதத்தால் அதிகரித்தது. ஆனால் உலகளவிலான அதிகரிப்பு 4.8 சதவீகிதம் மட்டுமே. சீனாவின் விளம்பரச் செலவு 2000கு பிந்திய மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியது. உண்மையில் 2000 இல் 1100 கோடி டொலராக மட்டும் இருந்தது. இது 2004 இல் 2200 கோடி டொலராகியது. உண்மையில் சீனாவின் விற்பனை பிரான்ஸ், பிரிட்டன், 5 350 கோடி ஜெர்மனியின் மொத்த வர்த்தகத்தையும் கூட தாண்டியுள்ளது. உலகில் சீனா எற்படுத்தும் தாக்கம் பிரமாண்டமானது. இதனால் உலகில் புதிய பதற்றங்கள் அதிகரிக்கின்றது. இதை ஈடுகட்ட சீனா இராணுவ ரீதியாகவும் தன்னைப் பலப்படுத்துகின்றது. உலகில் மூன்றாவது அதிகம் இராணுவச் செலவு செய்யும் நாடாக 2001 இல் சீனா மாறியது. 2005 இல் தேசிய வருமானத்தில் உலகிலேயே அதிகம் இராணுவத்துக்கு செலவு செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. இது 4.3 சதவீகிதமாகியுள்ளது. அதாவது 2004 யை விட 2005 இல் 12.6 சதவீகிதத்தால் இது அதிகரித்துள்ளது. மொத்த இராணுவ செலவு 2950 கோடி டொராகியுள்ளது. இதே நேரம் அமெரிக்கா தனது தேசிய வருமானத்தில் 3.3 சதவீகிதத்தையே இராணுவத்துகு ஒதுக்கியுள்ளது.

2001 இல் உலகில் அதிகூடிய இராணுவச் செலவு

அமெரிக்கா 39 610 கோடி டொலர்
ரூசியா 6 000 கோடி டொலர்
சீனா 4 200 கோடி டொலர்
யப்பான் 4 040 கோடி டொலர்
பிரித்தானியா 3 400 கோடி டொலர்
சவூதியரபியா 2 720 கோடி டொலர்
பிரான்ஸ் 2 530 கோடி டொலர்
ஜெர்மனி 2 100 கோடி டொலர்
பிரேசில் 1 790 கோடி டொலர்
இந்தியா 1 560 கோடி டொலர்

சீனா ஒரு ஏகாதிபத்தியமாக மாறும் போது, உலகை மீளவும் பங்கீடுவதால் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைகின்றது. இந்த வகையில் தான் சூடான், ஈராக் எண்ணை வயல்களை கைப்பற்றும் சீனா மூலதனத்தை தடுக்கவும், அமெரிக்கா நேரடியாகவே இராணுவரீதியாக தலையிட்டது. இவைகளை எதிர்கொள்ள, இராணுவ ரீதியாகவே சீனா தன்னைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. உலகின் முன்னணி இராணுவமாகவும், பலம் பொருந்திய ஒன்றாகவும், சீனா தனது இராணுவத்தை மாறியமைக்கின்றது. இதன் மூலம் ஏகாதிபத்திய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறனை பெற முயல்கின்றது. இதுபோன்று சீனா பல துறைகளில் தன்னை திட்டமிட்டே பலப்படுத்துகின்றது. நவீன தொழில் நுட்பம் ஆட்சி செய்யும் உலகில், அதுவே மூலதனத்தின் நெம்புகோலாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் சீனா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பெரும் தொகை நிதியை ஒதுக்குகின்றது. இது 2001 இல் 3070 கோடி டொலராக மாறியது. இதே காலத்தில் அமெரிக்கா 25290 கோடி டொலரையும், யப்பான் 9650 கோடி டொலரையும் ஒதுக்கியிருந்தது.

இப்படி சீனாவின் ஏகாதிபத்தியமயமாதல் என்பது பல்வேறு துறைகளில் நகர்ச்சியுறுகின்றது. மறுபக்கத்தில் இது சொந்த நாட்டில் ஏற்றத் தாழ்வை வீங்கி வெம்பவைக்கின்றது. கிராமப்புறத்தில் தனிநபர் சராசரி வருமானம் 263 ஈரோவாக இருக்க, நகரங்களில் அது 864 ஈரோவாகியுள்ளது. சீனாவில் ஒரு பணக்காரக் கும்பல் வளர்ச்சியுறுகின்றது. ஏழைகள் பெருக்கெடுப்பது சீனாவின் உள்நாட்டு விதியாகிவிட்டது. பணக்காரக் கும்பலின் நலன்கள் சீனா அரசின் நலன்களாகிவிட்டது. இதை நாம் சீனா வீதிகளில் ஒடும் தனியார் வாகனங்களில் காணமுடியும்.

சீனாவின் போக்குவரத்து

சைக்கிள் அரசுதுறை கார் வடகைக்கார் மற்றவை
1986 58 சதவீகிதம் 32 சதவீகிதம் 5 சதவீகிதம் 1 சதவீகிதம் 4 சதவீகிதம்
2000 38 சதவீகிதம் 27 சதவீகிதம் 23 சதவீகிதம் 9 சதவீகிதம் 3 சதவீகிதம்

சீனாவில் போக்குவரத்து எப்படி தனியார் சொத்துரிமையுடன் மாறிவருகின்றது என்பதைக் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இயற்கை சார்ந்த சுற்றுசூழல் முதல் அனைத்தும் எப்படி சிதைக்கப்படுகின்றது என்பதையே இது அம்லப்படுத்துகின்றது. 2020 இல் 14 கோடி தனியார் கார் சீனாவில் ஒடுமாம். 2025 இல் வகானச் சந்தை அமெரிக்காவை விட சீனாவில் மிகப் பெரிதாக இருக்கும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் கூறுகின்றது. அதாவது 7.5 கோடி சீனார்கள் கார் வாங்கும் வசதியை பெற்றிருப்பர் என்றகின்றது. இதை நோக்கி எகாதிபத்திய கார் கம்பனிகள் அங்கு அலைபாய்கின்றனர். மக்கள் பலாக்காரமாகவே குடியெழுப்பப்பட்டு வீதிகள் அகன்ற போடப்படுகின்றன. இன்று சீனாவின் 640 வீதிவிபத்தில் நாளொன்றுக்கு கொல்லப்படுகின்றனர். இவையெல்லாம் முதலாளித்துவ மீட்சின் விளைவு. சீனா வீதிகளில் தனியார் வாகனங்களின் அதிகரிப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது, சீனாவில் 25 மடங்கு அதிகமாகும். இதனால் சீனா பெற்றோல் இறக்குமதியை ஒரு வருடத்தில் 30 சதவீகிதத்தால் அதிகரிக்க வைத்தது. சீனா பெற்றோல் வாங்கு வீகிதம் 2003-2004 இல் 14.3 சதவீகிதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு வட அமெரிக்காவில் 2.1 யாக அதிகரித்த போது, ஐரோப்பாவில் 1.5 சதவீகிதமே அதிகரித்தது. ஆனால் ஆசியாவில் 5 சதவீகிதத்தால் அதிகரித்தது. சீனாவில் பணக்காரக் கும்பலின் தனிமனித நலன்கள் அதிகரித்து செல்வதையே, இது தெளிவாக உறுதி செய்கின்றது. இது உலகில் எண்ணை வர்த்தகம் மீதான நெருக்கடியை அதிகரிக்க வைக்கின்றது. என்றமில்லாத எண்ணை தேவையை உலகம் கோருகின்றது. உலகின் எந்த நிலையையும் எதிர்கொள்ள, 2004 இல் சீனா உலகில் அதிகளவில் பெற்றோலை சேகரிக்க தொடங்கியுள்ளது. மொத்தமாக இது 280 கோடி தொன் பெற்றோலை சேகரித்துள்ளது. இவை எல்லாம் சீனா மக்களுக்கு எதிராக, அவர்களின் வாழ்வை அழித்து உருவாக்கும் பணக்காரக் கும்பலின் நலனே சீனா அரசின் நலனாகிவிட்டது.


சீன மக்களின் சொத்தை தனியார் கைப்பற்றல்

சீனாவில் இவை எதிர்மறையில் வறுமையை பன்மடங்காக்கின்றது. இது உள்ளுர் உற்பத்தியில் நடக்கும் மற்றத்தில் இருந்தே பிரதிபலிக்கின்றது. மூலதனத்தின் ஜனநாயகம் மக்களின் வறுமையில் பிறப்பதையே, சீனாவில் நாம் தெளிவாக காணமுடியும.

சீன தனியார் மயமாக்கல்

தனியார் மயமாக்கல் 1994 1998 2001
தனியார்மயமான நிறுவனங்கள் 4 லட்சம் 12 லட்சம் 20 லட்சம்
இதில் தொழில் புரிவோர் 56 லட்சம் 145 லட்சம் 225 லட்சம்
மூதலீடு 1 730 கோடி டொலர் 8 700 கோடி டொலர் 22 000 கோடி டொலர்
தனியார் முதலீட்டாளர் எண்ணிக்கை 9 லட்சம் 26 லட்சம் 46 லடசம்

சீனாவில் என்ன நடக்கின்றது என்பதை இந்த அட்டவணை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தேசியமயமாக்கப்பட்ட அரசு துறைகளில் இருந்து உழைக்கும் மக்கள் துரத்தப்படுகின்றனர். தேசியமயமான மக்கள் சொத்துகள், தனியார் மயமாதல் என்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. 1990க்கு பின்பாக அரசுதுறையில் நான்கு கோடி உழைப்பாளிகளை, அவர்களின் வேலையை விட்டே சீனா அரசு துரத்தியுள்ளது. தொடர்ந்து அரசு துறைகளில் இருந்து வருடம் 30 லட்சம் பேர் வேலையை இழந்து வருகின்றனர். இந்த வெட்டு முகத்தை நாம் உண்மையில் எதார்த்தத்தில்; காண வேண்டுமாயின், ஒரு புள்ளிவிபர தரவு மட்டும் போதுமானது. சீனாவில் 1997 இல் 262000 அரசு நிறுவனங்கள் இருந்தன. இது 2002 இல் 159000 மாக குறைக்கப்பட்டது. அதாவது ஐந்து வருடங்களில் 103000 நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டது. இப்படி லட்சக்கான அரசு சொத்துகள் மக்களிடம் இருந்து பறித்து (புடுங்கி) தனியாருக்கு விற்கப்படுகின்றன. அதாவது சுதந்திரம், ஜனநாயகத்தின் பெயரில் அவை தனியார் மயமாக்கப்படுகின்றது. சீனா புரட்சியை அடுத்து நடந்தப்பட்ட வர்க்கப் போராட்டங்களின் போது, தனியார் சொத்துகள் ஒழிக்கப்பட்டு இருந்தன. ஆனால் இவை இன்று தனியார் மயமாதல் என்ற பெயரில் அரசு சொத்துகளை, சிலர் திருடிச் செல்லுகின்றனர்.

மக்களின் உழைப்பு உருவாக்கிய தேசிய சொத்துகள், அன்றாடம் தனிப்பட்ட நபர்களால் சூறையடப்படுகின்றன. மக்கள் வேலையை இழந்து வறுமையில் அங்கு இங்குமாக வீதிகளில் அலைகின்றனர். அரசுதுறையில் வேலை வாய்புகள் இல்லாது ஒழிக்கப்பட்டது. தனியார் துறையில் மட்டுமே வேலை என்ற நிலையில், எந்த சமூக பாதுகாப்பு அற்ற நிலையில் சட்டப் பாதுகாப்பு அற்ற நிலையில் உழைப்பு கசக்கிப்புளியப்படுகின்றது. இப்படி சுதந்திரமாக, ஜனநாயகமாக வரைமுறையின்றி சூறையாடும் சுதந்திரத்தை அனுபவிக்கவே, சீனாவில் மேல் காதல் கொண்ட அன்னிய மூலதனம் குதூகலத்துடன் உட்சென்று புணருகின்றது. இதன் நேரடி வினைவை என்ன எனப் பாhப்போம்;
சீனாவில் தனியார் மயமாதலால் 1990-1999 இடைப்பட்ட காலத்தில் வேலைவாய்ப்பும், வேலை இழப்பும் எப்படி நடக்கின்றது எனப் பார்ப்போம்.

அரசு துறை 2.06 சதவீகிதத்தில் குறைந்துள்ளது
கூட்டுறவுத்துறை 7.78 சதவீகிதத்தில் குறைந்துள்ளது
தனிப்பட்ட உற்பத்தி 12.84 சதவீகிதத்தில் அதிகரித்துள்ளது.
கூட்டுத் தனியார் உற்பத்தி 27.07 சதவீகிதத்தில் அதிகரித்துள்ளது.
தனியார் துறை 31.46 சதவீகிதத்தில் அதிகரித்துள்ளது.

தனியார்துறை முதன்மை பெற்ற ஒரு சமூக அமைப்பாக, சீனா மாறி வருவதைக் காட்டுகின்றது. தனியார் அமைப்பில் கிடைக்கும் உயர்ந்த லாபம், அன்னிய மூலதனத்தின் ஆன்மாவை குளிர்மைப்படுத்தியது. சீனா மக்களின் வாழ்வு சூறையாடப்படும் வீகிதம் எவ்வளவுக்கு உயர்வான நிலையை அடைகின்றதோ, அந்தளவுக்கு எதிர்மறையில் தனியார் மூலதனம் கொழுப்பேற குதூகலத்தில் ஆழ்கின்றது. மக்களின் அடிப்படையான சமூகத் தேவைகளையே அரசு கைவிட்டுவிட்டது. உதாரணமாக பொது சேவையை தனியார் மயமாக்கியதால் 2 கோடி குழந்தைகள் கல்வியை இழந்துள்ளனர். 2004 இல் மட்டும் 12000 சிறுவர் பூங்காக்களை உள்ளடக்கிய வகையில் இயங்கிய பாடசாலைகளை சீனா அரச முடியுள்ளது. எங்கும் சமூக அவலங்கள் விதைக்கப்படுகின்றன. மருந்துகளின் விலை அதிகரிப்பாலும், வைத்தியசாலை கட்டணம் செல்லுத்தும் நிலை மாறியுள்ளதாலும், சீனா மக்களில் பாதிப் பேர் வைத்தியசாலை செல்ல முடியாத நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளனர். மனித அவலத்தில் தான் சீனாப் பொருளாதாரம் முன்னேறுகின்றது.

சீனாவின் உணவு உற்பத்தி அந்த மக்களுக்கானதாக தேவை சார்ந்தாக 1949 முதல் திட்டமிடப்பட்டது. உலக வர்த்தக கழகம் சீனாவில் புகுந்தைத் தொடாந்து 60 கோடி விவசாயிகளின் உணவு உற்பத்தி, வர்த்தகம் சார்ந்தாகவும், ஏற்றுமதிக்கானதாக மாற்றியமைத்தது. இதன் அடிப்படையில் 15 முதல் 22 சதவீகித உணவு உற்பத்தியை முற்றாக வர்த்தக அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. அத்துடன் பழம், மரக்கறி மற்றும் இறைச்சி உற்பத்தியை ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் வகையில், உலக வர்த்தக கழகம் மாற்றியமைத்துள்ளது. இதன் அடிப்படையில் 20 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இது எதிர்மறையில் பல கோடி விவசாயிகள் விவசாயத்தை கைவிடவைத்தது. தொழிலை இழந்த விவசாயிகளை, வேலை தேடி நகரங்களை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது. சீனா நகரங்கள் வேலைதேடித் திரியும் மக்கள் கூட்டத்தால் பிதுங்குகின்றது. சீனாவில் கிராமங்களில் இருந்து மக்கள், நகரங்களை நோக்கி ஒடுவது தொடர்ந்த அதிகரிக்கின்றது.

நகரங்கள் கிராமங்கள்
1980 19.7 சதவீகிதம் 80.3 சதவீகிதம்
1990 27.4 சதவீகிதம் 72.6 சதவீகிதம்
2000 35.8 சதவீகிதம் 64.2 சதவீகிதம்
2003 38.6 சதவீகிதம் 61.4 சதவீகிதம்

சீனாக் கிராமங்களில் மக்கள் வாழமுடியாத வகையில் கடுமையான ஈவிரக்கமற்ற சுரண்டல், அந்த மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றது. இது 2010 இல் 80 சதவீகிதமான மக்கள் நகரங்களை வந்தடைந்து விடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கிராமங்கள் வறுமையில் சிக்கியுள்ளது. சீனா அரசு அறிக்கை ஒன்றே ஒன்பது கோடி சீனார்கள் ஒரு டொலருக்கு குறைவான வருமானத்தை பெற்று வறுமையில் இருப்பதாக ஒப்புக் கொள்கின்றது. சீனா மக்கள் தொகையில் கிராமத்தில் 69 சதவீமானவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 50 சதவீகிதமானவர்கள் விவாசயத்தையே உழைப்பாக கொண்டுள்ளனர். அதேநேரம், 19 சதவீகிதமானவாகள் வேறு கிராமத் தொழிகளை சார்ந்து வாழ்கின்றனர். 50 சதவீகித விவசாயிகள் தேசிய வருமானத்தில் பெறுவது 16 சதவீகித்தை மட்டுமே. இதற்கே வேட்டு வைக்கப்படுகின்றது. 1980 முதலே இந்த நிலை வளர்ச்சி பெற்று, இன்று நிலைமை மோசமாகி ஏழைகளை உற்பத்தி செய்கின்றது. சீனா விவசாயிகள் உண்ட உணவு ஏற்றுமதியாவதால், பசியும் பட்டினியும் சீனாவின் புதிய தலைவிதியாகியுள்ளது. அதேநேரம் சீனா உலகில் நாலவது மிகப் பெரிய உணவு ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது.

2001 இல் அதிக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்த நாடுகள்

ஐரோப்பிய ஒன்றியம் 23 551 கோடி டொலரில்
அமெரிக்கா 6 840 கோடி டொலரில்
யப்பான் 5 694 கோடி டொலரில்
சீனா 2 012 கோடி டொலரில் (கொங்கொங் உள்ளடக்கவில்லை)
கனடா 1 555 கோடி டொலரில்
மெக்சிக்கோ 1 279 கோடி டொலரில்
தென்கொரியா 1 250 கோடி டொலரில்
ரூசியா 1 140 கோடி டொலரில்
கொங்கொங் 1 106 கோடி டொலரில்
தாய்வான் 699 கோடி டொலரில்

உலகில் மிகப் பெரிய உணவு ஏற்றுமதி நாடக மாறும் சீனாவினுள், மக்கள் உணவுக்காக கையேந்தி பிச்சை எடுக்கின்றனர். ஒரு நேரக் கஞ்சி குடிக்க முடியாது வீதிகளில் அலைகின்றனர். ஆனால் சீனா பொருளாதார ரீதியாக ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் நிலைக்கு தன்னை மாற்றிவருகின்றது. பணக்காரக் கும்பல்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே சகலவையும் ஒழுங்கமைக்கப்படுகின்றது. சீனாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனத்தின் சொத்தின் பெறுமதி 220 கோடி டொலராகியுள்ளது. முதல் 5 மிகப் பெரிய நிறுவனங்களின் சொத்து 365 கோடி டொலராகியுள்ளது.

2003 இல் சீனாவின் மிகப் பெரிய 11 பணகாரனையே, சீனாவின் ஜனாதிபதியின் மகள் திருமணம் செய்து கொண்டார். அவரிடம் 3.5 கோடி டொலர் சொத்துகள் உண்டு. அரசு இயந்திரமும் மூலதனமும் இணைந்து நடத்தும் சுரண்டல், சூறையாடலாகியவுடன் திருமணமாக வெளிப்படுகின்றது. மறுபக்கத்தில் 9.4 கோடி விவசாயிகள் நிலங்களை இழந்ததுடன், நகரங்களை நோக்கி நகர்ந்துள்ளனர். இப்படி வரும் கூலி தொழிலாளர்களுக்கு அன்றாட கூலிகளைக் கூட கொடுக்க முடியாத நிலையில், 1200 கோடி டொலர் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது ஒரு சமூக நெருக்கடியாக கொந்தளிப்பாக பரிணமிக்கின்றது. சீனா மக்களின் துயரங்கள் பலவாக மாறிவருகின்றது. உதாரணமாக சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் கூட, சீனா உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கின்றது. 2003 இல் அமெரிக்கா சீனாவின் துணி மற்றும் ஆடைகளுக்கு விதித்த தடை, 1.5 கோடி புடைவை உற்பத்தியாளர்களையும், அதற்கு தேவையான மூலவளங்களை உற்பத்தி செய்த 10 கோடி விவசாயிகளின் வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கியது. உலகில் மேற்கு அல்லாத நாடுகளில் உயர் கடன் கொண்ட, இரண்டாவது மிகப் பெரிய நாடாக சீனா உள்ளது. 2001 இல் 17000 கோடி டொலர் கடனை சீனா கொண்டிருந்தது. அதாவது சீனாவின் மொத்த கடன் 1103821 கோடி இந்தியா ரூபாவாகும். சீனாவில் 2001-2002 வருடப் பற்றாக்குறை 182868 கோடி இந்திய ரூபாவாகியுள்ளது.
சீனா பொருளாதாரம் என்பது மக்களுக்கு எதிரானதாக, அவர்களை ஏதுவுமற்ற ஒன்றாகிவிட்டது. அதேநேரம் உலகளவில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் உழைப்பின் ஆற்றலை அழித்து, அவர்களின் வாழ்வை சூறையாடுகின்றது. குறிப்பாக ஏகாதிபத்திய நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வை அழித்து வருகின்றது. சீனா பொருளதாரம் சீனா உள்ளிட்ட உலகப் பணக்காரக் கும்பலின் நலன்களை மட்டும் அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. அதேநேரம் சீனா மூலதனம் உலகளவில் ஏகாதிபத்தியதுக்கு போட்டியாகவும் களத்தில் குதித்துள்ளது. அதேநேரம் ஏகாதிபத்திய உற்பத்திகளை உள்ளித்து, உலகளாவிய ஒரு புதிய சர்வதேச நெருக்கடிக்குள் உலகை நகர்த்தி வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நெருக்கடிகளில் கூட, சீனாவின் பங்கு முதன்மையான ஒன்றாக மாறிவிட்டது. உலகமயமாதலில் சீனாவின் நிலைப்பாடு, உலகளவிய பல நெருக்கடிக்கு ஊன்றுகோளாகிவிட்டது. இவற்றை நாம் மேலே விரிவாக கண்டோம். தொடர்ந்த விரிவாக கணவுள்ளோம்.

Thursday, September 15, 2005

மக்களை குடிகராராக்கும் ...

மக்களை குடிகராராக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது

1997ஆம் ஆண்டுக்கும் 2002ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,096 பாடசாலைகளை உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க மூடிய அரசு, 2000க்கும் 2003 க்கும் இடைப்பட்ட காலத்தில் புதிதாக 9882 மதுபான விற்பனையகங்களைத் திறந்துள்ளது.

புதிதாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கல்
2000 2684
2001 3200
2003 3998
மக்களை மந்தைகளாக்கி, அவர்களை குடிகராக்குவது தேசிய கொள்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. மக்களின் அடிப்படை தேவையை நிராகரிப்பதும், அவர்களை மந்தைகளாக்குவது, குடிகாராக்குவது, வக்கிரம் பிடித்தவனாக உருவாக்குவது இலங்கையின் தேசிய அரசியலாகியுள்ளது. நவீன டிஸ்கோக்கள், நிர்வண நடனச் சாலைகள், மசாஷ் மையங்கள், சூதாட்ட விடுதிகள், மதுபான மையங்கள், ஆபாச சினிமா மையங்கள் என்று இலங்கை பூரவும் பல்கிப் பெருகுகின்றது. இதை மறுத்த நிர்ப்பவர்களை தற்கொலை செய்யக் கோருகின்றது. மறுதளத்தில் வைத்தியசாலைகளையும், பாடசாலைகளையும், போக்குவரத்து வசதிகளையும் மறுக்கின்றது. அதாவது மக்களின் அடிப்படையான சேவைத்துறைகள் இழுத்து மூடப்படுகின்றது. இவை லாபம் தராத ஒன்றாக இருப்பதால் இவைகள் இழுத்து மூடப்படும் அதே நேரம், இத்துறைகள் தனியார் மயமாக்கின்றனர்.

இலங்கையில் மது பயன்பாட்டை ஆராய்ந்தால் அதிhச்சிதான் எற்படும். 2002 ம் ஆண்டு மதுபானத் திணைக்களம் அரசங்கத்துக்கு வரியாக செலுத்தியது 900 கோடி ரூபா. இது மக்களின் வாழ்வை போதையில் மயக்கி, அவர்கள் அறியாமல் புடுங்கும் தேசிய வருமானமாகிவிட்டது. இந்த வரி அறவிட்டைக் கடந்து, மதுபானத் திணைக்களம் திரட்டிய நிகரலாபம் 51.7 கோடி ரூபாவாகும். 2002ம் ஆண்டு இலங்கை மக்களையே தேசிய குடிகராக்கும் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்ட அரசு, 6.24 லட்சம் லீற்றரால் உற்பத்தி அதிகரிக்கவைத்து குடிகராரின் எண்ணிக்கை உயர்த்தினர். இதன் விளைவு என்ன? மதுபாவனை தொடர்பான வைத்திய அறிக்கை ஒன்று இதை தெளிவுபடுத்தியுள்ளது. 25 முதல் 44 வயதுடையவர்களில் இறப்பில், பிரதமானது மதுவை அடைப்படையாக கொண்டே நிகழ்கின்றது என்ற அறிக்கையும் வெளியாகியுள்ளது. மதுவினால் எற்படும் சிரோசிஸ் நோய், இலங்கையில் வருடாந்தம் 10069 பேரை பதிக்கும் அதே நேரம், 10000 க்கு 55 போ இதன் பதிப்புக்கு உள்ளாகின்றனர். உலகமயமாக்கும் சமூக வக்கிரம் இலங்கையில் சில பகுதிகளில் பெண்களையும் குடிக்கு அடிமையாகியுள்ளது. சிறுவர் சிறுமிகளையும் கூட பண்பாட்டு சமூச் சீராழிவின் ஒரு அங்கமாக, குடி நவீன கலாச்சர நுகர்வாக மாறிநிற்கின்றது.

குடியை எடுத்தால் இலங்கையில் தனிமனித பாவனை 4 லீற்றராக இருக்க, அதுவே ஆணுக்கு 15.2 லீற்றராக உள்ளது. சமூக வறுமையுடன் கூடிய அவல வாழ்க்கையை மறக்க, குடி ஒரு தீர்வாக கையாளப்படுகின்றது. அதிஸ்ட்ட லாபச் சீட்டு வாங்கி சொந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்ற கண்ணோட்டதை ஒத்தவகையில், குடி சமூக பிரச்சனைக்கு வடிகாலாகின்றது. இதன் விளைவாக நகர்புற குடிசைப் பகுதிகளில் 43 சதவீதமானவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். பெருந் தோட்டப் பகுதியில் இது 55 சதவீதமாக உள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இதன் சமூக விளைவு அதிhச்சிகரமானதே. சராசரியாக இலங்கையில் ஒரு ஆண் மதுவுக்கு தனது வருமானத்தில் 30 சதவீதத்தை செலவு செய்யும் நிலை எற்பட்டுள்ளது. இதனால் குடும்பாத்தின் நுகர்வு குறைவதுடன், பெண்களும் குழந்தைகளும் மேலும் ஆழமாக ஆரோக்கியமான வாழ்வை இழக்கின்றனர். குடும்ப தகாரரும், உளவியல் நெருக்கடியும் நிரந்தரமான சமூக விதியாகிவிட்டது. பிளவுகளும், மனநோயாளிகளும், தற்கொலைகளும், குற்றங்களும் தலைவிரித்தாடும் ஒரு சமூகப் போக்கை அங்கிகரிக்கும் பண்பு உருவாகிவிட்டது.

இதன் சில விளைவுகள் அதிர்ச்சிகரமானவையாக இருப்பதில்லை. இலங்கையின் மொத்த குற்றச் செயல்களில்; 38 சதவீதமானவை, மது பாவனையால்; எற்படுகின்றது. அதாவது போதையில் எற்படுகின்றது. 2001 இல் நடந்த மொத்த வாகன விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 2800 ஆகும். இதில் 90 சதவீதமானவை மதுவினால் நடந்துள்ளது. ஒட்டு மொத்ததில் கொலை, பாலியில் வன்முறை, விபச்சாரம் தேசிய பண்பாகி கொடிகட்டிப் பறக்கின்றது. போதையில் மகன் தாயை புணர்ந்த நிகழ்வுகள், தந்தை மகளைப் புணர்ந்த சம்பவங்கள் பல நடந்துள்ளது. மதுப் பாவனையுடன் கூடிய பண்பாடு மனைவி மற்றும் மகள் மேலான பாலியல் சந்தேகத்தை விரிவாக்கியுள்ளது. குடி ஒருபுறம் தலைவிரித்தாட புகைத்தால் அதன் அண்ணாக தலைவிரித்தாடுகின்றது. உலகமயமாதலின் நவீனம் புகைக்கும் அழகில், குழந்தைகளையும், சமூக உளவியலையும் சுண்டி இழுக்கின்றது. இதன் மூலம் புகைக்கும் போதை மெதுவாக உடலில் எற்றிவிடுகின்றது. இதன் விளைவு என்ன?.

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 55 சதவீதம் பேர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளர். வயது வந்தோரில் 33 சதவீதம் பேர் புகைத்தலுக்கு அடிமையாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பீடி போன்றவற்றையே புகைக்கின்றனர். தோட்டப் பகுதியகளில் 64.4 சதவீதம் பேர் புகைக்கின்றனர். நகர்புற குடிசைகளில் இது 85 சதவீதமாக உள்ளது. வறிய சேரிப்புறங்கள், மற்றும் உடல் உழைப்பில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர். வாழ்வின் துயரங்களை எல்லாம் சுமையாக்கி வாழும் இம் மக்கள், கடும் உழைப்பில் சிக்கி மூச்சு விடா முடியாத ஒரு நிலையில் புகைத்தல் இவர்களுக்கு சில கணங்கள் அற்ப இன்பத்தை எற்படுத்திவிடுவதை இது காட்டுகின்றது. அதானல் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். இவர்கள் பெருமளவில் மலிவான புகைக்கும் பொருட்களைச் சார்ந்து உள்ளனர். மறுபுறத்தில் சிறுவர் சிறுமிகளின் முன்னான பண்பாடு, புகைத்தல் என்பது நவீன கவர்ச்சிகரமான ஊடாகமாக அவர்கள் முன் உள்ளது. தன்னைத் தான் அங்கிகரிக்கும் ஒரு சமூகப் பண்பாடாக இது மேலேந்து வருகின்றது. இதன் விளைவு இலங்கையில் புகைக்கும் எண்ணிக்கையை 55 சதவீதமாக உயாத்தியுள்ளது. வயது வந்தோh புகைத்தல் 33 சதவீதமாக இருக்க, சிறுவர்களை உள்ளடக்கிய புகைத்தல் 55 சதவீதமாக இருக்கின்றது. இது 12 வயதுக்கும் 18 வயதுக்கு உட்பட்ட பெரும் பகுதியை புகைத்தலுக்கு அடிமையாக்கியுள்ளது. புகைத்தல், மது, மங்கை (மறு தளத்தில் ஆணுடன் விபச்சாரம் என்ற சிறுமிகளின் பண்பாடும்) இன்று, இலங்கைப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வமற்ற மாற்று கல்வியாகிவிட்டது.

இலங்கையில் 13 லட்சம் பேர் ஒவ்வொரு நாளும் புகைக்கின்றனர். இதன் மூலம் 2500 கோடி ரூபா வரியாக அரசுக்கு புகையிலைக் கம்பனி வழங்குகின்றது. மறு தளத்தில் சட்டவிரோதமான சிகரெட்டுக்கள் நாட்டின் உள் கடத்தப்படுவதால், அரசாங்கம் வருடம் 90 கோடி ரூபாவை இழப்பதாக அறிவிக்கின்றது. இந்த நவீன மூலதனச் சந்தையின் பலம், மக்களின் சுகாதாரக் கேட்டின் படிகற்களாக இருப்பதைக் காட்டுகின்றது. இலங்கை மருத்துவச் செலவான 2600 கோடி ரூபாவில் 10 முதல் 15 சதவீதம் புகைத்தால் எற்படும் நோய்களை குணப்படுத்த செலவு செய்யப்படுகின்றது. அதாவது 260 முதல் 390 கோடி ரூபா புகைத்தல் சார்ந்த நோய்க்காக தரைவார்க்கப்படுகின்றது. மது அருந்தல், புகைத்தல் தேசிய கொள்கையாகிவிட, அதை ஊக்குவிப்பதை அரசு திட்டமிட்டே செய்கின்றது. உலகமயமாதலின் பண்பாடு, கலாச்சார அடித்தளத்தில் இதுவே தேசிய இலட்சியமாகின்றது. மதுபான விற்பனையகங்களை அரசு பெருக்குகின்றது. சட்டவிரோதமாகவும், சட்பூர்வமாகவும் சிகரட் நாட்டின் உள் கட்டமைப்பபையே அரிக்கின்றது. இவை ஊக்கவிக்கப்பட மறுதளத்தில் குழந்தைகளின் கல்வி மறுப்பது அரசின் அடிப்படை கொள்கையாகி வருகின்றது

http://tamilcircle.net/

Tuesday, September 13, 2005

மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே...

மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில், சமூக பண்பாட்டுச் சிதைவை அரசு திட்டமிட்டு செய்கின்றது. அரசுசார நிறுவனம் ஒன்றின் அறிக்கை இலங்கையில் 10000 பாலியல் வன்முறைகள் குடும்பத்தில் நடப்பதாக அறிவித்துள்ளது. இதில் அரைவாசி தந்தைமாரால் நடத்தப்படுகின்றது. இதில் 100 மட்டுமே சட்டத்தின் முன் வருகின்றது. இதில் 54.5 தந்தைமாருக்கு எதிரான புகராகும். இந்த நிலையில் கரு அழிப்பு இலங்கையில் வருடம் 9 லட்சமாகியுள்ளது. இதில் 15 சதவீதம் திருமானமாக கரு அழிப்பாக உள்ளது. பல லட்சம் குடும்பங்கள் பிரிந்த தனிமையில் வரைமுறையின்றி சிதைகின்றது. கணவன் மனைவி பிரிந்து வௌவேறு நாடுகளில் வாழ்வது, நிரந்தரமான சமூக போக்காகியுள்ளது. ஒழுக்கம் மீதான பரஸ்பர சந்தேகங்கள் மன உழைச்சலையும், உளவியல் சிதைவையும் எற்படுத்தியுள்ளது. விவகரத்துகள் பெருக்கெடுக்கின்றது. உழைப்பை பகிர்வதில் எற்படும் முரண்பாடுகள் சமூக உறவக்கத்தையே பிளக்கின்றது. குழந்தைகள் தாய் இன்றி வாழ்தன் மூலம், வக்கிரமடைந்த வருகின்றனர். குழந்தைகள் மேலான பாலியல் ரீதியான வக்கிரங்கள் தலைவிரித்தாடுகின்றது. பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றது. குழந்தைகள் மேலான பாலியல் வன்முறை தேசிய பண்பாகின்றது. குற்றங்களின் தன்மை வக்கிரமடைகின்றது. தற்கொலைகள் என்றுமில்லாத அளவில் அதிகரித்து, ஆசியாவிலேயே முதன்மை நாடாகியுள்ளது. இவற்றை தனித்தனியாக விரிவாக கிழே பார்ப்போம்.

வெளிநாட்டை நோக்கி செல்லும் ஒவ்வொரு பெண்ணும், பாலியல் ரீதியான பாதுகாப்பற்ற ஒரு நிலையில் தள்ளப்படுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா நோக்கி தமிழ் எஜன்சி மூலம் வரும் ஒவ்வொரு பெண்ணின் தலைவிதியும் கூட. தனிப்பட்ட ஆண்கள் திட்டமிட்டு உருவாக்கும் நான்கு சுவர்களைக் கொண்ட சமூகச் சிறைக்குள், பாலியல் மிருகங்களின் வன்முறைக்கு உட்படுகின்றனர். சிலர் தவிhக்க முடியாத வகையில் இணங்கிப் போகின்றனர். எதிர்த்தால் மரணம் அவர்களின் தலைவிதியாகின்றது. இறந்த பெண்களின் பிரதேதங்களை விமானம் மூலம் எற்றி இறக்கப்படுவது அதிகரிக்கின்றது. வீட்டு வேலைக்கு செல்லும் பெரும்பாலன பெண்களின் கதி இது. இந்த வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற பெண்களில், 91 சதவீதம் பேர் வீட்டு வேலைக்கே இலங்கை அரசால் எற்றுமதி செய்யப்படுகின்றனர். 2000 முதல் 2003 ஐப்பசி வரை வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர்களின் 400 இறந்த உடல்கள் கட்டுநாயக்க விமான நிலையில் தரையிறங்கியது. பெரும்பாலவை பெண்களின் சடலங்களாக இருந்தது.

மத்திய கிழக்கில் 37 இலங்கையரின் பிரேதங்கள் 2003 ஜூலை மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்தது. இந்த 37 பேரில் 22 பேர் பெண்களாவர். இந்தப் பெண்கள் அனைவரும் பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாகளுக்குச் சென்றவர்களாவர். இறந்த இந்த 37 பேரில் 16 பேர் சவூதி அரேபியாவில் இருந்து சடலமாக மீள அனுப்பபட்டவர்கள். 9 பேர் லெபனான் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. இவற்றைவிட ஹெங்ஹொங்கில் கொலை செய்யப்பட்ட ஒரு பணிப்பெண்ணின் சடலமும், தற்கொலை செய்துகொண்ட மூன்று பணிப்பெண்களின் சடலமும், திடீர் விபத்துக்களில் இறந்த 8 பேரின் சடலமும் தேசிய சொத்தாக மீண்டன. சடங்களை பெறுவது, அதை எற்றி இறக்குவதும், சடங்கள் அனாதையாகது உறுதி செய்வதும் தமது தேசிய கடமையாக பீற்றி, அவர்கள் மேல் அக்கறை உள்ளதாக அரசு தம்பட்டம் அடிக்கின்றது. ஆனால் சொந்த நாட்டில் சொந்த மக்கள்; உழைக்கவும் வாழவும் வழிகாட்டவும் வக்கற்றவர்கள், அன்னிய நாட்டில் தொழில் புரிவோரின் தொழில் பாதுகாப்பு உட்பட மனித உரிமையை பாதுகாக்க வக்கற்றவர்களின் அரசை தெரிவு செய்வதையே, நாம் ஜனநாயகம் என்று பீற்றுவது இன்றைய சமூக அறிவாகிப் போன உலகத்தில் நாம் மந்தைகளாக வாழ்கின்றோம் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்.

12 லட்சம் பேர் அரபு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தொழில் புரிகின்றனர். இதில் 65 சதவீதம் பேர் வீட்டுப் பணிப் பெண்களாக பெண்கள் வேலை செய்கின்றனர். 2002 இல் வீட்டுப் பணிப் பெண்கள் இலங்கை அரசாங்கத்திடம் தமது நிலை தொடர்பாக 7103 முறைபாடு செய்துள்ளனர். இலங்கை அரசிடம் செய்த முறைப்பாடுகளே இவ்வளவு என்றால், குற்றத்தின் அளவு பல மடங்காகும். இதை மேலும் ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். 2000 ஆண்டு முதல் ஆறு மாதத்தில் நாடு திரும்பிய பெண்களில் 240 பேர் பாலியல் வன்முறை தொடர்பாக, கொழும்பு விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் முறையிட்டுள்ளனர். இந்த முறையீடுகள் 2002 இல் முதல் ஆறு மாதத்தில் 70 சதவீத்தில் அதிகரித்தது. இவை சமூக ஆணாதிக்க ஒழுக்க பண்பாட்டுக் கோவைகளை மீறி முறையிடப்பட்டவை. உண்மையில் குற்றம் பல மடங்காக இருப்பதை நாம் காணவேண்டும். இதற்கு வெளியில் மனித அவலங்கள் பன்மைத் தன்மை வாய்ந்தவை. 2002 இல் 1704 முறைப்பாடுகள் சம்பளம் தரப்படமை பற்றி முறையிட்டுள்ளனர். இது 45 சதவீத்தால் அதிகரித்துள்ளது. அலைகழிய வைத்து தொலை கொடுத்த முறைபாடு 2002 இல் 1041 கிடைத்துள்ளது. இவை அனைத்தம் நாடு திரும்பும் போது, பல தடைகளைத் தாண்டி கொழும்பு விமான நிலைத்தில் முறையிடப்பட்டவை மட்டுமே இவை. 2002 இல் 44 கற்பழிப்பு பற்றி முறைப்பாடு செய்துள்ளனர். 2002 இல் 20 பேர் தந்தைகளற்ற குழந்தைகளுடன் நாடு திரும்பியுள்ளனர். இது 2002 இல் முதல் ஆறு மாதத்தில் 157 சதவீத்தால் அதிகரித்துள்ளது. 2002 இல் கிடைக்ப்பெற்ற 7103 முறைபாட்டில் 3191 முறைபாடு சவுதியில் சென்று திரும்பியோர் செய்துள்ளனர். இதைவிட குவைத்தில் தொழில் புரிந்தோர் 1041யும், லெபனில் தொழில் புரிந்தோர் 800யும், அரபு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் புரிந்தோர் 497யும், Nஐhடனில் தொழில் புரிந்தோர் 467 முறைபாடுகளையம் செய்திருந்தனர். இதைவிட பலவித இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட அண்ணளவாக 1300 பெண்கள் 2003 முதல் 6 மாத கால எல்லைக்குள் திருப்பி வந்தாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வகையில் குவைத் நாட்டிலிருந்து 503 பேரும், சவூதி அரேபியாவிலி ருந்து 406 பேரும் திரும்பி வந்தனர்.

குற்றங்கள், மனித அவலங்கள், பிரேதங்களும் இறக்குமதியாக்கும் அரசு, தொடர்ந்து மனித உழைப்பை எற்றுமதியாக்குவதில் பின் நிற்கவில்லை. இதை மூடிமறைக்க முறைப்பாட்டு மையங்கள், உதவித் திட்டங்கள், தீர்வற்ற விசாரனைகள், காப்புறுதித் திட்டங்கள், பயிற்சிகள் என்று தன்னை அலங்கரிக்கின்றது. இதன் மூலம் மனித உழைப்பின் எற்றுமதியை அதிகரிக்கின்றது. வெளிநாட்டு வெலைவாய்ப்பு நிறுவனம் 2002 இல் பணிப்பெண்களுக்கான பயிற்சி என்ற பெயரில், 29761 பேருக்கு உழைப்பை எப்படி முகம் சுளிக்காது குண்டி கழுவி சம்பாதிப்பது என்ற பயிற்சியை அளித்துள்ளது. உள்ளது. 2002 முதல் ஆறு மாதத்தில் இது 20 சதவீத்தால் அதிகரித்துள்ளது. இந்த மனித எற்றுமதியில் 571 வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர்கள் செயல்படுகின்றனர். இந்த மனித விரோத தொழிலைச் செய்ய, 2002 இல் புதிதாக 50 நிறுவனங்கள் இதற்கான அனுமதியைக் கோரியது.

மறு தளத்தில் அரசு மனித எற்றுமதியை செய்ய புதிதாக கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒன்று, 191581 பேருக்கான எற்றுமதியை உறுதி செய்துள்ளது. இதைவிட மலேசிய அரசங்கத்துடன் செய்த ஒப்பந்தம் ஒன்று, வருடம் 20000 கூலித் தொழிலார்களை எற்றுமதி செய்யக் கோருகின்றது. இதில் சிறந்த பயிற்சி பெற்ற தோட்ட தொழிளாகள் முதன்மையாக அனுப்பப்பட உள்ளனர். அத்துடன் தற்பொழுது மலேஸியாவில் தொழில் புரியம் பத்தாயிரம் பேரின் சட்டவிரோதத் தன்மை அகற்ற ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.

மனிதனை எற்றுமதி செய்வதே தேசிய கடமை என்ற கொக்கரிக்கும் அரசின் சட்டபூர்வமான ஜனநாயக பூர்வமான சமூக அமைப்பில், இதை நாம் அங்கிகரிப்பது எமது சுதந்திரம் என்றால், எமது மனிதவிரோத உணர்வு வக்கிரமானதே. இந்த மனித எற்றுமதியை ஊக்குவிக்கும் போது, அதன் மனித விரோத சமூக கட்டமைப்பு நிறுவனமயமாகும் போது, கொழுத்த பணத் திரட்சியே இதன் அடிப்படையாக உள்ளது.

1998 முதல் 2002 வரையான காலத்தில் வீட்டுப் பணி பெண்கள் மற்றும் அரபு நாட்டு தொழில்; செய்யும் பெண்கள் 47800 கோடி ரூபாவை இலங்கைக்காக உழைத்து திரட்டினர். இதில் 1998 இல் 7900 கோடி ரூபா திரட்டிய மனித உழைப்பு, 2002 இல் 12000 கோடியாக அதிகரித்தது. 10 லட்சம் உடல் உழைப்பாளிகளின் அவலமான உழைப்பை சூறையாடிய போது இது கிடைத்துள்ளது. இதில் 4000 கோடி ரூபாவை இலங்கை வங்கிகளில் போட்டனர். மிகுதியில் பெரும் பகுதியை உலகெங்கும் கடைவிரித்துள்ள பன்நாட்டு ஆடம்பர நுகர்வுச் சந்தையில் துலைத்தனர். மறுபுறத்தில் சேமிப்பை உலக வங்கியும், பெரும் முதலீட்டலர்கள் மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் அவற்றை அபகரிப்பதுடன், பணவீக்கம் மூலம் அவற்றை பெறுமதி அற்றதாக்கி செல்லாக் காசக்கின்றனர். மனித ஏற்றமதி மூலம் கிடைக்கும் பணத்தைக் கூட தேசிய உற்பதியில் முதலிடப்படவில்லை. அவை பன்நாட்டு நிறுவனங்களுக்கு சென்று அடைவதை அரசு உறுதி செய்கின்றது. தேசிய சமூகங்களின் மனித அவலங்கள் மூலதனமாக திரட்டப்படுகின்றது. தேசிய பாடசாலைகள் மூடப்படுகின்றன. மக்களை குடிகராராக்கி, பிரச்சனைகளை அதற்குள் முடிவுகட்ட மதுவிற்பனை நிலையங்களை திட்டமிட்டு அரசு திறக்கின்றது.

Monday, September 12, 2005

புலியெதிர்ப்பு அரசியலை ...

புலியெதிர்ப்பு அரசியலை, புலியல்லாத சமூக மாற்றுக் கருத்தாக எற்றுக் கொள்ளமுடியுமா?

எற்றுக் கொள்ளமுடியும் என்ற புலி அல்லாதோரின் அரசியல் நிலைப்பாடுகள் தான், மக்களுக்கான உண்மையான மாற்று உருவாக முடியாமைக்கான சமூக அரசியல் காரணமாகும். இந்த உண்மை புரிந்துகொள்ள முடியாதவரை, தமிழ் மக்களின் உண்மையான மாற்று என்பது கிடையவே கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற எந்த அரசியல் வழிமுறையும், மக்களின் உண்மையான சமூக விடுதலைக்கு வழிகாட்டுவதில்லை. மாறாக மக்களுக்கான புதைகுழியைத் தான் எப்போதும் தோண்டுகின்றனர்.

தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான சமூக பொருளாதார அரசியல் சிதைவுக்கு காரணத்தை, புலிகள் அல்லாத புலியெதிர்பு;பு அரசியல் பேசுவோர் புலிகளே காரணம் என்கின்றனர். இது அரசியல் ரீதியாக உண்மையல்ல. இதற்கு எதிரான போராட்டமே அரசியல் ரீதியானது. புலிகள் இல்லையென்றால் எல்லாம் சரியாக இருந்து இருக்கும் என்று, இவர்களில் பலரும் புலம்ப முனைகின்றனர்.

உண்மையில் இந்த அரசியல் பிழற்சி எங்கே தொடங்குகின்றது. தனிமனிதனாக உள்ள, புலியல்லதோரின் கையேலத்தனத்தில் இருந்தே இவை தொடங்குகின்றது. இதை மூடிமறைக்கவே அதற்கு இசைவான கோட்பாடுகளை முன்தள்ளுகின்றனர். மக்களுடன் அரசியல் ரீதியாக தொடர்பறுந்த ஒரு நிலையில், புலிகளின் வன்முறை கொண்ட பாசிச கட்டமைப்பை எதிர்கொள்ள முடியாத தனிமனிதனிர்கள், புலிக்கு எதிரான அனைத்தையும் கண்மூடி ஆதாரிக்கும்; கொள்கையை அரங்கேறுகின்றது. இது உறைந்து போன இரத்தமும் சதையும் கொண்ட சிதைந்து போன அழுகிய பிணங்களை, அழகுபார்த்து பூச்சூட்டுவதையே செய்கின்றது. போராட முடியாத வங்குரோத்து அரசியலாக வலிந்து சீராழிந்து முடிவுக்கு வந்த நிலையில், மக்கள் தான் தமது சொந்த விடுதலைக்காக போராடவேண்டும் என்று கூறவும் அது சார்ந்த கோட்பாட்டையும் அரசியல் ரீதியாக முன்வைக்கவும் வக்கற்றுப் போய்விட்டனர். இவர்ளே புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினராக சீராழிந்து, அன்னிய சக்திகளில் நம்பிக்கை கொண்ட செயல்பாட்டாளராகிவிட்டனர்.

அரசியல் உள்ளடக்க ரீதியாக இதையே அப்பட்டமாக புலிகள் தரப்பும் செய்கின்றனர். பேரினவாதத்தின் ஒழுக்குமுறையை காட்டி புலிகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதாரிப்போரும், அவர்களின் மனிதவிரோத எல்லா சமூகப் புனைவுகளையும் நியாயப்படுத்துவதும் தொடர்ச்சியாக அரங்கேறுகின்றது.

இவர்களுக்கு இடையில் எங்கும் அரசியல் வேறுபாடுகள் கிடையாது. சமூக இயக்க மீதான நம்பிக்கைகள் தகர்ந்து, தனிமனித முயற்சிகள் மீதான போற்றுதல் துற்றுதல் என்ற சீராழிந்த அரசியல் போக்கே, புலி மற்றும் புலியல்லாதோர் தரப்பின் அரசியல் அடிப்படையாகிவிட்டது.
புலிகள் தமிழ் மக்களின் சமூக பொருளாதார சீராழிவிற்கு புலிகள் அல்லதோரே காரணம் என்கின்றனர். இது ஒரு விசித்திரமான எதிர்நிலைக் குற்றச்சாட்டின் மூலம், தமிழ்பேசும் மக்களின் அடிப்படையான சமூக பொருளாதார உரிமைகளை பரஸ்பரம் மிகவும் திட்டவட்டமான உணர்வுடன் மறுக்கின்றன. தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் கூறுகளை, தாமாகவே தோண்டிய புதைகுழிகளில் அன்றாடம் இட்டு நிரப்புகின்றனர்.
தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் உணர்வுடன் ஒன்றி நிற்காத எந்தச் செயலையும் ஆதாரிக்க மறுப்பது தான், மக்களின் விடுதலைக்கான முதல் நேர்மையான அர்ப்பணிப்பாகும். இதில் புலிசார்பு, புலியெதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்தை எம்மைச் சுற்றி நாமேயிட்டுவிட்டு, அதற்குள் நின்றபடி பாகுபாடு எதையும் காட்டமுடியாது. மக்களுக்காக குரல் கொடுப்பதையே, எப்போதும் நேர்மையான அரசியல் கோருகின்றது. இது அரசியல் ரீதியாக, சமூக நடைமுறை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக நாம் உணர்வுபூர்வமாக கொள்ளாதவரை, எமது நேர்மை மற்றும் எமது நோக்கம் சந்தேகத்துக்குரியதாகவே எப்போதும் அமைந்துவிடும்.

இதை உண்மையில் இனம் காணமுடியாத பலர் அப்பாவிகள். சமூகப் போக்கை புரிந்துகொள்ள முடியாதவர்களாக, சூழ்ச்சிமிக்க அரசியல் நகர்வுகளை இனம் காணமுடியாதவராகவே பலர் சமூக விழிப்பற்ற நிலையிலேயே உள்ளனர். இவர்கள் இந்த இரண்டு பிராதான அரசியல் போக்கின் பின்னால் இழுபடுகின்ற அரசியல் அனாதைகள். அதாவது சொந்தமாக இவை தான் சரியென்று சமூகத்தைச் சார்ந்து நின்ற கருத்து ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் புரிந்து கொண்டு தத்தம் கருத்துகளை முன்வைக்க முடியாதர்கள்;. பலமாக இருப்பதில் ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு கருத்துரைப்பவர்களாக மாறுகின்றனர். இது புலிசார்பு, புலியெதிர்ப்பு அணிகளில் பெருமளவில் nhருமெடுப்பில் காணப்படுகின்றனர்.

சமூக ஆதிக்கம் பெற்றுள்ள இரண்டு மக்கள் விரோத போக்குகளின் எதிர்நிலைகளில் பயணிக்கும் இவர்களை, இனம்கண்டு சரியான வழிக்கு கொண்டுவருவது வேறு. ஆனால் இந்த இரண்டு அணியையும் அரசியல் பொருளாதார ரீதியாக வழிநடத்துபவர்கள் வேறு. இவர்களுக்கு எதிரான போராட்டமின்றி, மக்களுக்கான சமூக மாற்று என எதுவும் கிடையாது. மனிதனுக்கு உண்மையான விடுதலையும் கிடையாது.

இந்த பொதுவான விவாவதத்தை முழுமையாக புரிந்துகொள்ள, நடந்த ஒரு குறிப்பான விவாதத்தின் முழுமையை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. நான் துண்டில் பரமுவேலன் கருணாநந்தனை நோக்கி ஒரு அரசியல் விமர்சனத்தை முதலில் வைத்தேன். அதில்
http://tamilarangam.blogspot.com/2005/09/blog-post_112603534886022101.html
என துண்டில் பரமுவேலன் கருணாநந்தனுக்கு ஒரு அரசியல் வேண்டுகோளை விடுத்திருந்தேன்.

அவர் இதை பற்றி தனது பதில்
http://thoondil.blogspot.com/2005/09/blog-post_05.html
என்கின்றார். இதுவே எமக்கு இடையில் நடந்த ஒரு குறிப்பான விவாத உள்ளடக்கம்.

மனிதத்துவம் என்பதே வற்றிப்போன தமிழ் சமூகத்தில் இருந்து, சமூகமே மீள்வது எப்படி என்று கேள்வியில் இருந்தே, இப்படியான கருத்து வருகின்றது. முன்வைக்கபட்ட இந்த அரசியல் உள்ளடக்கமே மனிதர்களை விடுவிக்காது என்பதை, பரந்துபட்ட பலருக்கும் புரிந்துகொள்ள வைப்பதே எனது பதிலாக அமைகின்றது.

சமூகத்துக்கு இது எதைக் கூறமுனைகின்றது

மனித வரலாற்றை மக்களுக்கு வெளியில் படைப்பதை பற்றி வரையறையில் நின்று இது பேசுகின்றது. இதை அவரும் பலரும் தெரிந்துகொண்டு சொல்லவில்லை என்றே நம்புகின்றேன். ஆனால் இதை முன்வைப்பவர்கள் அப்படியல்ல. தனிப்படட ரீதியில் முதலில் இவர்கள் கூட அப்படி இருந்ததில்லை. இது பிரபாகரனுக்கும் கூட பொருந்தும். உண்மையான மக்கள் விடுதலை என்ற உணர்வுபூர்வமான உணர்வுடன் அனைவரும் போராட வந்தவர்கள். இதுவே பின்னால் சுயநலம் கொண்ட தனது விடுதலையாக சீராழிந்தது. இதை நாம் தெளிவாக அரசியல் ரீதியாக புரிந்துகொண்டு தான், சமூகத்தின் வேறுபட்ட நபர்களின் சமூக பத்திரங்களை வௌ;வேறாக கையாள வேண்டியுள்ளது.

இனி நாம் ஏன் எதற்காக யாருக்காக போடுகின்றோம். இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ளாத வரை, அனைத்துமே தவறான அரசியல் விளக்கமும், அரசியல் நடைமுறையும் இயல்பாக பெற்றுவிடும். நாம் போராடுவது எனக்காகவ அல்லது தமிழ் மக்களுக்காகவ. இரண்டும் வௌ;வேறான போராட்ட வழிகளை பற்றிப் பேசுவனவாக உடன் மாறிவிடுகின்றது.
நாம் போராடுவது மக்களுக்காகவே என்றால், எதற்காக போராடவேண்டும்;. மக்களின் இன்றைய சமூக வாழ்வில் எற்படும் துன்பங்களில் இருந்து, அவர்களின் துயாரத்தை இல்லாது ஒழிப்பதே எமது இலட்சியமாக இருக்கமுடியும்;. இது அவர்களின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வுக்கு வெளியில் இருந்து கற்பனையில் இதைப் பற்றி பேசமுடியாது. அவர்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்த ஒரு போராட்டமாக இருக்கவேண்டும். இதை போராடும் எந்தத் தரப்பும் அடிப்படையாக கொள்ளாத வரை, எதோ ஒரு காரணத்தினால் அதை நாம் ஆதாரிக்க முடியாது. மாறாக சரியான போராட்டத்தை எடுத்துச் சொல்வதே எமது நேர்மையான பணியாக இருக்கமுடியும்.

பொதுவாக தேனீ போன்ற அனைத்தும் தமக்காக மட்டும், தமது சொந்த நலனில் நின்ற போராடுகின்றன. அந்த போராட்டம் இயல்பில் மக்களுக்கு எதிராகவே எப்போதும் உள்ளது. புலியெதிர்ப்பது, புலிக்கு மற்றான கருத்தைக் கொண்டுவருவது மட்டும் மக்களுக்கானதாக மாறிவிடாது. இது எப்படி எந்தவகையில் மக்களுக்கான விடுதலைக்கானதாக அமையும். மாறாக மக்களுக்கு எதிரான மற்றொரு பிற்போக்கு மக்கள் விரோத சக்தியை தான், புலிகளின் இடத்தில் மறுபிரதியீடு செய்யும்.

மக்களுக்கான போராட்டம் என்பது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டது. மக்களின் சமூக பொருளாதார நலனை முதன்மைப்படுத்தி போராடுவதை முன்னிலைப்படுத்துவதாகவே அமையும். இதை தேனீ போன்றவர்கள் திட்டவட்டமாகவே முன்னெடுக்கவில்லை. இதை முன்னெடுக்காத வரை, பொதுவான மக்கள் ஜனநாயகத்தைக் கூட அவர்கள் கோரவில்லை என்பதே தெளிவான அரசியல் முடிவாகும். இப்படியான கருத்துகளைக் கூட அவர்கள் திட்டவட்டமாக பிரசுரிப்பதில்லை.
உண்மையில் தேனீ போன்றவற்றின் பின்னால் கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் அடிப்படையே விசித்திரமானது. ஜனநாயகத்தை உருவாக்கினால் தான், மற்றைய கருத்துகளை விளைச்சலுக்காக விதைக்க முடியும் என்பதே, இதை நியாயப்படுத்த முன்வைக்கும் உயர்ந்தபட்ச அரசியலாக உள்ளது. இந்தக் கருத்தை அவர்கள் உங்களுக்கும் புகட்டியுள்ளனர். அதைத் தான் நீங்கள் "எனது நோக்கமானது சமூகத்தில் ஜனநாயக பூர்வமாக மக்கள் செயற்படக்கூடிய அரசியல் சூழலுருவாக வேண்டும். எதன் பொருட்டும் புலிகளின் அச்சுறுத்தல், ஊடக ஆயுத வன்முறையால் மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்படுவது தவிர்கப்படவேண்டும். இத்தகைய நிலையுருவாகும் போது பாசிசக் கட்டமைவு தகர்வதற்கானவொரு சூழலைத் தமிழ்ச் சமுதாயம் பெற்றுவிடும். அதன் அடுத்த பாச்சலானது பன்மைத்துவப் போராட்டச் சூழலை அந்தச் சமுதாயம் பெறுவதற்கானவொரு 'இடம' உறுதிப்படும். இதுவே முதற்தேவையானது." இதை நீங்கள் எந்தளவுக்கு அரசியல் ரீதியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பத எனக்குத் தெரியாது.

ஆனால் இந்தக் கோட்பாட்டைத் தான் தேனீயும், தேனீ போன்ற பலரும் கொண்டுள்ளனர். இந்த அரசியலின் பின்னால் திரொஸ்கிய அரசியல் வழிகாட்டல் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிலருடன் நான் விவாதித்த சந்தர்ப்பங்களில் கூட, அவர்கள் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் துணையுடன் கூட இதை சாதிக்க தயாராக இருப்பதை நான் நேரடியாக அவர்களுக்கு குற்றம் சாட்டியுள்ளேன்.

இந்தவகையில் தான் அண்மையில் நான் லண்டன் சென்ற போது ஒரு கூட்டத்தில் ரி.பி.சி சிவலிங்கத்தை சந்தித்தபோது, 15 நிமிடங்கள் கூட அரசியல் பேசமுடியாத அளவுக்கு அவர்களின் மக்கள்விரோத வங்குரோத்து அரசியல் காணப்பட்டது. தமிழில் விவாதித்துக் கொண்டிருந்த அவருக்கு பதிலளிக்க முடியாத நிலையேற்பட்ட போது, கோபத்தின் உச்சத்தில் ஆங்கிலத்தில் திட்டிதீர்த்தார். எனக்கு சரளமாக ஆங்கிலம் தெரியாத என்பது பற்றி அவருக்கு அக்கறை இருக்கவில்லை. இதைபோல் தான் கலைச்செல்வன் செத்தவீட்டில் நெதர்லாந்தில் இருந்த வந்த பாலசூரியைச் சந்தித்த போது, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையில் உச்சம்தொனியில் கத்தி தொடர்ச்சியாகவே ஆக்ரோசம் செய்தார். இவர்கள் எல்லோரும் தேனீயைப் போல் முதலில் புலியை ஒழிக்கவேண்டும் என்கின்றனர். அதற்காக எந்த அன்னிய சக்தியுடன் கூடத் தயாராக உள்ளனர். மக்கள் தான் அதைச் செய்ய வேண்டும் என்பதை அரசியலாகக் கூட முன்வைக்க முன்வரதாவர்கள்.

புலிகளின் அரசியலை இலகுவாக புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளின் மேல் கேள்விக்கு உட்படுத்தும் இவர்கள், தமது சொந்த மக்கள் விரோத அரசியல் முன்வைக்கப்படும் போது கூத்தாடிக் கத்துகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். முதுக்கு பின்னால் நடத்தும் பிரச்சாரங்கள் எனது காதுக்கு எப்போதும் வந்தடைகின்றன. புலிகள் எப்படி தாம் அல்லாத மற்றவர்கள் பற்றி பிரச்சாரம் செய்கின்றனரோ, அதே போன்றே எனக்கு எதிராக இவர்கள் நடத்துகின்றனர். இந்த கட்டுரை வெளிவந்தவுடன் அதைத்தான் அவர்கள் மீண்டும் செய்வார்கள். அண்மையில் தேனீ இலக்கியச் சந்திப்பு தொடர்பாக பிரசுரித்த கட்டுரைக்கு, பதிலளித்த கட்டுரைகளை கூட பிரசுரிக்க முடியாது என்றுனர். இவர்கள் கூட முரணற்ற ஜனநாயகத்தை மறுதளிக்கும், புலியெதிர்ப்பு அணியின் கருத்தை மட்டும் குறுகிய உள்ளடகத்தில் பிரசுரிப்பவர்கள் தான். ஆயுதம் இல்லாத நிலையிலேயே இப்படி என்றால், ஆயுதம் இருந்தால் என்ன செய்வார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

எனது கருத்தை புலியெதிர்ப்பு அணியினர் புலிக்கு சார்பான புலிக்கருத்து என்கின்றனர். புலிகளோ துரோகியின் கருத்து என்கின்றனர். இது நாம் எதிர்கொள்ளும் அன்றாட அரசியல் பிரச்சாரம். இந்த நிலையில் எமது சரியான நிலையை, புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியில் விமர்சனம் உள்ளது, ஆனால் தவிர்க்கமுடியாது ஆதாரிக்கின்றோம் என்று கூறுபவர்கள் கூட சரியாக அடையாளப்படுத்துவதில்லை.

எமது இணையத்தை புலியெதிர்ப்பு அணியில் தீவிரமாக இயங்கும் இணையங்கள் இணைப்பே கொடுக்கவில்லை. அது போல் புலிகளும் கொடுக்கவில்லை. இதில் ஒரு அரசியல் வேடிக்கை என்னவென்றால், தேனீ முஸ்லீம் மக்கள் பற்றிய எனது ஒரு கட்டுரையை போட்டவர்கள், அதை வேறு ஒருவரின் பெயரில் இட்டுள்ளனர். அதை நான் ஆட்சேபித்த போதும் மற்றவுமில்லை, அதற்கு பதில் தரவுமில்லை. இவர்களிடம் ஆயுதம் இருந்தால், இதை ஆட்சேபித்த எனது கதி என்னவாக இருந்து இருக்கும்.
நாங்கள் இரண்டு தரப்பு பலமான அரசியல் போக்கு வெளியில் தனித்தவமாக தனித்து நிற்கின்றோம். மக்களின் அரசியலை உயர்த்தி அதைப் பிரச்சாரம் செய்கின்றோம். மக்கள் தான் போராட வேண்டும் என்ற நடைமுறை சார்ந்த அவர்களின் அரசியலை முன்வைப்பதால், ஒரு நடைமறை செயல்வாதியாக உள்ளோம். குறித்த மண்ணில் சந்தர்ப்ப சூழல் எற்படுத்திய நிலைமைகளால் நாம் வாழவிட்டாலும், விரும்பியோ விரும்பமால் அந்த மக்களின் நடைமுறையுடன் இணங்கி வாழ்கின்றோம். நாம் வெறும் கோட்பாட்டுவாதிகளாக சமூகத்தில் இருந்து அன்னியமாகல், அந்த மக்களுடன் இரண்டரக் கலந்து நடைமுறைவாதிகளாகவும் இருக்கின்றோம். அதனால் தான் நாம் மக்களுக்காக உயிருடன் கலந்துரையாட முடிகின்றது. எமது கருத்தை இதனால் தான் எதிர்கொள்ள முடியாதவர்களாக அனைவரும் உள்ளனர்.

இந்த நிலையில் பொதுவாக புலியெதிர்ப்பு அணியினர் தமக்கு பரஸ்பரம் தொடர்புடையவராக உள்ளனர். அன்னிய தலையீட்டை நேரடியாக ஆதாரிக்கும் ஒரு சிலரின் கருத்தைக் கூட மற்றவர் மறுப்பதில்லை. இவை அனைத்தும் புலிக்கு எதிரான ஜனநாயகத்தை மீட்பதற்கான ஐக்கியமாக தம்மைக் காட்டிக் கொள்கின்றனர். இந்த அரசியல் எல்லைக்குள்னான அன்னிய தலையிட்டால் தான், புலிகளில் இருந்த மீட்சி பெறமுடியும் என்பது இவர்கள் அரசியல் சித்தாந்த முடிபாகும். இதைத்தாண்டி யாரும் இவர்களின் அரசியலை சுயமாக காட்டமுடியாது.

இந்த அன்னிய தலையீட்டுக்கான அரசியல் வழி அப்பட்டமாகவே மக்களுக்கு எதிரானது. இது புலிகளின் ஜனநாயக மீறல் என்பதை விடவும், அபத்தமான கெடுகெட்ட அரசியல் வழிமுறையாகும்.

உண்மையில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முதலில் நடத்த வேண்டும் என்பது கடைந்தெடுத்த அரசியல் சுத்துமாத்தாகும். இது புலிகள் தேசியவிடுதலையின் பின் ஜனநாயகம், பெண்விடுதலை, சாதி ஒழிப்பு .. என்ற கூறும் அதே அரசியலாகும்.

ஜனநாயகத்துக்கான போராட்டத்தையும், பன்மைத்துவ போராட்டத்தையும் பிரித்து பார்க்கின்ற, ஒன்றன் பின் ஒன்றான நிகழ்வாக கருதுவதில் இருந்தே இந்த அரசியல் சூழ்ச்சி முன்வைக்கப்படுகின்றது. இது புலிகளில் இருந்து திரொக்கியத்தின் நவீன கண்டுபிடிப்பு. அதாவது ஜனநாயகத்தை மீட்டால் தான், மற்றைய போராட்டங்கள் தொடங்கமுடியும் என்பது, போராடுவதையே மறுப்பதாகும். இதனால் முதலில் ஜனநாயகத்தை மீட்க, புலிகள் அல்லாத எல்லாவிதமான சக்திகளுடனும் இணங்கிப் போகும் ஐக்கியத்தின் அடிப்படையில், ஒரு அரசியல் விபச்சாரத்தை பரஸ்பரம் உள்ளடக்கமாக கொள்கின்றனர். இதைத் தாண்டி இதற்குள் வேறு அரசியல் கிடையாது.

புலியெதிர்ப்பு அரசியலின் முழுமையும் இதில் காணப்படுகின்றது. அதாவது ஈராக் மக்களின் ஜனநாயகத்தை மறுத்த சாதம்குசைனை வீழ்த்தி, அதற்கு பதிலாக கொலைக்கார அமெரிக்கா கைக்கூலிக் கும்பல் ஈராக் மக்களை கொன்று குவிப்பதைத் தான் இன்று புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் கோருகின்றது. அன்னிய தலையீட்டில் இந்த கூலிக் கும்பலாக இருக்க தயாரான ஒரு அரசியல் நிலையில் தான், இலங்கையில் அன்னிய தலையீடுக்கான எதார்த்தமான ஒரு சூழலில் அதை ஆதாரித்த கொக்கரிக்கின்றனர். நாங்கள் இதை எதிர்த்து நிற்கின்றோம். தமிழ் மக்களின் பிரதான எதிரி சிங்கள பேரினவாத அரசும், ஏகாதிபத்தியமுமே என்கின்றோம். இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையிலான இணக்கம் காணப்படவே முடியாத அரசியல் வேறுபாட்டில் ஒன்று.

நான் புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பிவந்த பின்னாக, பல்கலைக்கழக மாணவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக புலிகள் எனது உயிருக்கு பல்கலைக்கழக மேடையில் வைத்து உத்தரவாதம் வழங்கவேண்டி நிhப்பந்தம் எற்பட்டது. அப்போது நான் தீடிரென மேடையில் எறி பேச முற்பட்ட போது, அவர்கள் வெளியேறிச் சென்றனர். அந்த மேடைப் பேச்சே முதலாவது எனது கன்னிப் பேச்சாக இருந்தபோதும், அதில் நான் எதிரியாக புலிகளை குற்றம் சாட்டவில்லை. மாறாக அரசையும், நான் தப்பிய பின்பாக இலங்கையை ஆக்கிரமித்து இருந்த இந்திய இரணுவத்தையுமே எதிரியாக காட்டி உரையாற்றினேன். பார்க்க உரை.

http://tamilcircle.net/general/general-34.htm

இதன் பின்னபாக இந்திய புலிகள் மோதல் நிகழ்ந்த பின்பாக இந்தியா ஆக்கிரமிப்பளனுக்கு எதிராக பலர் தயங்கி நிற்க, 6.6.1988 இல் முதலாவது மக்கள் போராட்டத்தை யாழ் நகர் நோக்கி தலைமை தாங்கி பல்கலைக் கழகம் ஊடாக நடத்தியிருந்தேன். இந்த போராட்டம் நடத்தப்பட வேண்டும் என, பல்கலைக்கழக மேடையில் துணிச்சலாக பலர் தயங்கி பின்வாங்கிய நிலையில், அறைகூவல் விடுத்து தலைiதாங்கினேன். நாங்கள் மக்களின் நலனுடன் எப்போதும் இணைந்து நிற்கமுடிந்தது. இது மட்டும்தான் மாற்று அரசியல் மட்டுமின்றி மாற்றுப் பாதையுமாகும்.

நாங்கள் போராட்டங்களை தனத்தனியாக பிரிக்கவில்லை. போராட்டங்கள் அப்படி பிரிவதில்லை. ஜனநாயகத்துகான போராட்டம் என்பது பன்மைத்துவத்தை உள்ளடக்கிய போராட்டம் என்றே பார்க்கின்றோம். இதை அந்த மக்கள் மட்டும் தான் செய்யமுடியும் என்ற பார்க்கின்றோம். எந்தப் பெரிய பாசிச கட்டமைப்பாக இருந்தாலும், அந்த மக்கள் தான் தமது பன்மைத்துவ விடுதலையை உள்ளடக்கிய ஜனநாயகத்தை கோரி போராடமுடியும். இதுவே எமது இனப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட 25க்கு மேற்பட்ட அரசியல் போராட்ட குழுக்களின் மையமான அரசியல் வழிமுறையாக இருந்தது. இதைத் தான் புலிகளும் கொண்டிருந்தனர்.

"தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு ... அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றனர் "தேசிய விடுதலை எனும் பொழுது ....ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மானத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் மேலும் விளக்கம் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வாகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடன், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்... " ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கம் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமழீழ சமூக வடிவமானது ஒரு முதிhச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. ... வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு... பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் உடுரூவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்கமுறைகளையும் ஒழித்தக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" இப்படி புலிகளின் அரசியல் அறிக்கை நீண்டு செல்லுகின்றது.

இப்படித் தான் அனைத்து இயக்கமும் சொன்னது. நாங்கள் இதைத் தான் கோருகின்றோம். இப்படி சொன்னவர்கள், இதை நடைமுறைப்படுத்தக் கோரியவர்களை தேடித்தேடிக் கொன்றனர். ஆயுதம் எந்தியிராத இவர்களை படுகொலை செய்து, தமது சொந்த இலட்சியங்களையே முதலில் புதைகுழிக்கு அனுப்பினர். இப்படித் தான் இந்த இலட்சியங்கள் சமூகத்தில் இருந்தே ஒழித்துக் கட்டப்பட்டது. இதை புலிகள் பெருமளவில் செய்தனர் என்றால், மற்றைய இயக்கங்களும் இதைத் தான் போட்டிபோட்ட செய்தன. இவர்களை இலங்கை இராணுவம் கொல்லவில்லை. இது ஒரு விசித்திரமான அரசியல் உண்மை. இந்த அடிப்படையில் தான் இன்று புலியெதிர்ப்பு அணியினரும் இயங்குகின்றனர். புதைகுழிக்கு மக்கள் சார்பு கோட்பாடுகளை அனுப்பிய பின் இன்று வக்கரிக்கின்றனர். மக்கள் தமக்கான விடுதலையை தாமே பெறமுடியுமே ஒழிய, மற்றவர்களால் ஒரு நாளும் அதைப் பெற்றுத் தரமுடியாது. இதை அவர்கள் மறுதலிக்கின்றனர்.

இன்று புலிகள் ஜனநாயகத்தின் விரோதிகளாக, பாசிசத்தின் கூறுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைத்துள்ள சர்வாதிகார முறைமை என்பது எதார்த்தத்தில் காணப்படுகின்றது. இதை அவர்கள் உருவாக்கிய முறைமையின் பின்னால் ஒரு அரசியல் உள்ளது. இந்த அரசியல் என்பது மக்களின் சில அடிப்படையான ஜனநாயக போராட்டத்துடன் பின்னிப் பிணைந்தாக காணப்படுகின்றது. இதை புலியெதிர்ப்பு அணியினர் மறுதலிக்கின்றனர். மக்களின் போராட்டத்தின் அரசியல் உள்ளடகத்தை புலிகள் எப்படி தமது சொந்த நலனுக்கு இசைவாக பயன்படுத்தி, இன்றைய நிலையை தமக்கு சார்பாக கட்டமைத்துள்ளனர். இதை சரியான சக்திகள் அரசியல் ரீதியாக புரிந்து பயன்படுத்த முணையாத வரை, புலிகளுக்கு மாற்றாக மக்களின் அதிகாரம் என்பது சாத்தியமற்றது.

மக்கள் மட்டும் தான் தமக்கு தேவையான மாற்று அரசியல் வழியை தேர்ந்தெடுக்க முடியும். இதை நாம் நிராகரித்தால், மக்களின் அடிப்படையான நியாயமான அரசியல் போராட்டத்தை மறுப்பவர்களாகிவிடுவோம். அப்படி மறுத்த அரசியல் வழிமுறைகள் எப்படி தலைகுத்துகரணமாக நின்று ஆடினாலும், அது மக்களுக்கான ஜனநாயகத்தை பெற்றுத்தராது. புலிகள் பூதம் என்றால், அதைவிட மிகப் பெரிய பூதம் அன்னியன் கைக்கூலி வழிகளில் வந்து புகுந்துகொள்ளும். மக்கள் தான் தமது சொந்த ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கவும், அதற்கான அரசியல் போராடத்தையும் முன்னெடுக்க முடியும். இதற்கு வெளியில் நாம் தனித்துவமாக செயல்படமுடியாது.

இது ஒரு அரசியல் வழிமுறை. இதையே நாங்கள் கோருகின்றோம். எமது கருத்துகள் எப்போதும் இந்த எல்லையில் நின்று, மக்களின் சரியான போராட்டத்தை உயர்த்தி நிற்கின்றது. இதை எப்படி புலிகள் தவறான தமது சொந்த நலனில் நின்று சிதைக்கின்றனர் என்று அடிப்படையில் புலிகளை விமர்சிக்கின்றோம். இதை அடிப்படையில் புலியெதிர்ப்பு அணியினரையும் விமர்சிக்கின்றோம். இதனால் தான் எமக்கு பதிலளிக்க ஒருவராலும் முடிவதில்லை. மக்களின் நலன் தான், அனைத்து செயலையும் விட முதன்மையானது. மக்களின் உயிருள்ள நலன்களுடன் பின்னிப்பினைந்து நிற்கும் வரை, எமது சரியான கருத்தை யாராலும் மறுதலிக்கமுடியாது. இது ஒரு அரசியல் உண்மை. இந்த போராட்டத்தில் உறுதியாக நிற்பதன் மூலம், கருத்தியல் ரீதியாக வெற்றி பெற்றுவருகின்றோம். கருத்தியல் ரீதியான வெற்றி என்பது, அவர்களை எமது கருத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளனர் என்பதல்ல. மாறாக கருத்தின் நியாயத் தன்மையை எற்றுக்கொள்ளும் பொது சூழல் உருவாகியுள்ளது.

மறுதளத்தில் நடைமுறை ரீதியாக வெற்றி பெறமுடியாமல் உள்ளோம். அதாவது கருத்தியல் ரீதியாக எமது சரியான நிலையை அங்கீகரிக்க நிர்பந்தித்தவர்கள் கூட, அதை அவாகள் ஒரு சமூகக் கோட்பாடாக தேர்ந்தெடுக்கவில்லை. பல்வேறு கதம்ப கொள்கைகளையே கொண்டுள்ளனர். இது ஒரு சிக்கலான மற்றறொரு தனி விவாதம்.

தேனீ பற்றி குறிப்பில் ".. ஷபுலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புகுகெதிரான போரைச் செய்யும் ஒரு ஊடகமாகவும், புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கான போரை உடைத்து மாற்றுக் கருத்தாளர்களை, அவர்களின் கருத்துக்களைத் தேனீயே கடந்த பல வருடமாக வெளிக்கொணரச் செய்ததுண்மை." என்ற வாதம் மிகவும் தவாறனது.

முந்தைய தேனீ சஞ்சிகையும், இலக்கியச் சந்திப்பும், பின்னால் இணையமும் முன்வைத்த கருத்துகள் தான், இன்றைய மாற்றுக் கருத்து தளத்தை உருவாக்கியது என்ற அரசியல் முடிவே தவறானவை. இலக்கியச் சந்திப்புக்கு எதிரான எனது தொடாச்சியான போராட்டம், எப்போதும் அது மறுத்து வந்த கருத்துச் சுதந்திரத்தின் மறுப்புக்கு எதிரானதாகவே இருந்தது. சில பிரமுகர்களைச் சார்ந்தும், சில அதிகார உதிரிகளைச் சார்ந்தும், இலக்கியச் சந்திப்பு சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் எற்ப துதிபாடியே செயல்பட்டது.
இலக்கியச் சந்திப்பு தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டக் கோரிக்கைகளை எதையும் அரசியல் ரீதியாக முன்வைக்கவில்லை. இலக்கியச் சந்திப்பை உருவாக்கியவர்களே, அதன் போக்கில் அதிர்த்தியுற்று விலகிச் சென்றனர். அரசியல் ரீதியாக துதிபாடி, சில உதிரி அதிகாரம் வார்க்கத்தின் சதிகள் உள்ளடங்கிய ஆளுமையில், பிரமுகர்களின் தயவில் சீரழிந்த அந்த புதைகுழியில் அது இன்று புதைந்து போனது. இங்கு மாற்று அரசியல் என்ற பெயரில் பெண்கைளைக் கூட பாலியல் ரீதியாக பயன்படுத்தினர். தற்போது யாழ் விரிவரையாளர் எதை தனது அதிகாரம் மற்றும் பணம் போன்றவற்றைக் கொண்ட செய்தாரோ, அதையே தமது குறுகிய அரசியல் மேலான்மையைக் கொண்டு பெண்களை கூட சித்தாந்த ரீதியாக வசப்படுத்தி தமது ஆணாதிக்க பாலியல் தேவைக்கு கூட பயன்படுத்தினர். ஆனால் இதைப்பற்றி இந்த அரசியல் கனவான்கள் வாய்திறப்பதில்லை. இதில் தேனீ போன்றவர்கள் கூட விதிவிலக்கல்ல.

உண்மையில் புலிகள் தமிழ் மக்களின் வாழ்வின் உயிர்துடிப்புள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தது போன்றே, இவர்களும் அதையே வௌ;வேறு துறையில் செய்தனர். இரண்டு பகுதியும் எதிர்எதிர் அணியில் இருந்து செய்தெல்லாம் ஒன்றே. தமிழ் மக்களின் அரசியல் பொரளாதார நலனுக்கு எதிராக, கோட்பாட்டு தளத்தில், நடைமுறை தளத்தில் இயங்கியதே.
இதன் பின் தேனீ தீடிரென காணமல் போய் இருந்தது. பின்னால் இணையமாக வருகின்றனர். இணைத்தின் வருகையும், அதன் விரிவான வீச்சான பயன்பாடும் மிக குறுகிய காலத்துக்கு உட்பட்டதே. இங்கு கருத்துகளை முன்வைக்கும் இலகுவான தொழில் நுட்பத்தை பயன்படுத்திய ஒரு அறிவியல் தளம், பரந்த தளத்தில் இட்டுச் சென்றது. இதை தேனீ போன்றவாகள் எடுத்துக் கொண்டது என்பதால், தமிழ்மக்கள் மத்தியில் மாற்றுக் கருத்துத் தளத்தை வெற்றிபெறச் செய்தாக கூறுவதே அரசியல் அபத்தம். இங்கு இரண்டு கேள்வி இதில் இதற்கு பதிலளிக்கும்.

1.அவர்கள் முன்வைத்த மாற்றுக் கருத்து என்ன?
2.தேனீ போன்றவர்கள் மாற்றுக் கருத்து தளத்தை உருவாக்கியது என்பது. அதாவது இதை மாற்று அரசியலாக பார்ப்பது.

மாற்றுக் கருத்துத் தளத்தை தேனீ போன்றவர்கள் உருவாக்கியது என்றால், அந்த மாற்றுக் கருத்துகள் தான் என்ன? அந்த அரசியல் தான் என்ன? அதன் நோக்கம் தான் என்ன? இதை அடைய முன்வைக்கும் வழிமுறைகள் தான் என்ன?

இவ் இணையம் சிறுசஞ்சிகையில் எழுதிய சிலரின் கட்டுரைகளைப் போட்டது. அதுவே அரசியல் கதம்பமானதாக இருந்தது. அரசியல் கட்டுரைகள் பெரும்பாலனவை மக்களின் சமூக பொருளாதார நலனுடன் தொடர்பற்றதாக, புலிக்கு எதிரானதாக மட்டும் தேர்ந்தெடுத்தாக இருந்தது. உண்மையில் இதன் மூலம் மக்கள் சார்ந்த கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வந்தனர். அவர்கள் செய்ததெல்லாம்

1.புலிகளுக்கு எதிரான கட்டுரைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டது. 2.புலிகளின் உரிமைகோர செய்திகளை வெளிக் கொண்டு வந்தது.
3.புலிகள் பற்றி ஆதாரமற்ற துற்றுதல்களை உள்ளடங்கிய செய்தி மற்றும் கட்டுரைகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. மஞ்சள் பத்திரிகைகள் போன்று தலைப்பிட்டு செயல்படுகின்றது.
4.புலிக்கு எதிரான சர்வதேச அறிக்கைகளையும், செய்திகளையும் தேடியெடுத்த வெளியிட்டது.

தேனீ போன்றவர்கள் எதைச் செய்யவில்லை என்றால், மக்கள் நலன் சார்ந்த கருத்துகளை தேடி எடுத்து போடுவதை திட்டவட்டமாக மறுத்துவந்தது. இது ஒரு ஆச்சரியமான சூக்குமான அரசியல் உண்மை.

இதுவே தேனீ போன்றவர்களின் அரசியல் இலக்காக இருந்தது. இதைத் தான் தேனீ இயைத்தளம் செய்கின்றது. இதையே இன்று பலரும் செய்கின்றனர். இதை நீங்கள் நுட்பமாக பார்த்தால் புளாட் இணையத்தளம், ஈ.பி.டி.பி இணையத்தளம், மற்றும் அவர்களின் பத்திரிகையான தினமுரசு எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே செய்கின்றனர். சில வேறுபாடு மட்டும் உண்டு.

ஈ.பி.டி.பி அப்பட்டமாகவே அரசு மற்றும் ஏகாதிபத்தியத்துடன் கூடிக்குலாவியபடி இதைச் செய்கின்றது. தேனீ இதை சூக்குமமாக ஒளித்துவைத்தபடி கோட்பாட்டாளவிலும்;, நடைமுறையிலும் செய்கின்றனர். அடுத்து ஆதாரமற்ற செய்திகளை வெளியீடும் அளவு தேனீயை விட ஈ.பி.டி.பி இணையத்தில் குறைவு. தேனீ ஆதாரமற்ற செய்திகளை, அவதுற்றையும் கூட அரசியலாக மஞ்சள் பத்திரிகையின் போக்கில் முன்வைக்கின்றனர்.
புலிகள் பற்றி செய்திகளைத் தாண்டி, அதன் உண்மைத் தன்மை மற்றும் பொய் தன்மைகள் என்ற இரு தளத்தில் இயங்குகின்றனர். இது எந்த விதத்திலும் மாற்றுக் கருத்துகள் அல்ல. மாற்று என்பது திட்டவட்டமாக வேறு. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற அனைத்தும் மாற்று அல்ல. இவை புலிகளின் கருத்தை ஒத்த மற்றொன்றேயாகும்.

இந்த இணையத் தளங்களின் செயல்பாடுதான் மாற்று அரசியலாக காண்பது. பல புலிகள் அல்லாத தளங்களை இதற்குள் வரையறுப்பது. எப்படி சில பத்து இயக்கங்கள் தோன்றியதோ, அதைப் போல் சில பத்து சிறு சஞ்சிகைகள் கூட எமது சமூகத்தில் காணப்பட்டது. இவை எவையும் புலிகளுடன் உடன்பட்டவையல்ல. இணையத்தளம் உலகளவிய ஒரு ஊடாகமாக மாறிய போது, அதிலும் இது காணப்படுவது இயல்பாகவே எழுந்தது. இதன் ஒரு அங்கம் தான் இன்றைய இணையங்கள்;. இந்த தொழில் நுட்பம் கருத்துகளை பரந்த தளத்துக்கு எடுத்துச்சென்றது. கண்ணுக்கு தெரியாத பார்வையாளனின் எல்லையை விரிவாக்கியது. இனம் தெரியாத நபர்கள் இதை நடத்தும் வாய்ப்பையும் வழங்கியது. இதனால் இது பெருகியது.

ஆனால் தமிழ் சமூகத்தின் மாற்றுக் கருத்துத்தளம், முந்தைய வரலாற்றுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சி கண்டுள்ளது. சமூக அக்கறையுள்ள வெளிப்படுத்தல், இணையத்தில் மிக மோசமாகவே அரசியல் ரீதியாகவே தரம் தாழ்ந்துபோனது. முன்பு பல விமர்சனங்கள் இருந்தபோது, சஞ்சிகைகள் சமூகத்தைப் பற்றி கொண்டிருந்த கருத்துகள் படிப்படியாக சீராழிந்து வந்தன. இது இணையத்தில் முற்றாக சிதைந்து, சமூகநலன் அல்லாத கருத்துகளை முன்தள்ளி வருகின்றது. இதில் புலி அல்லாதோரின் தளங்கள், புலியெதிர்ப்பு கருத்துகளாக மட்டும் சிராழிந்து, இறுதியாக அதன் கோட்பாடு மிக மோசமானதாக சீராழிந்து, அன்னியனை வரவலைக்கும் அரசியலாக வெளிவருகின்றது.

உலகளாவில் இணையம் ஒரு ஊடாகமாக வளர்ச்சியுற்ற காலத்தில் தான், அமைதி சமாதானம் என்ற ஒரு அரசியல் நாடகம் அரங்கேறுகின்றது. யுத்தமற்ற இந்தச் சூழல் புலியெதிhப்பு இணையத்தின் உள்ளடக்கத்தை மெருகூட்டியது. யுத்தம் நடந்தால் இன்றைய பல செய்திகள் செய்தியாகவே வெளிவரமுடியாத வகையில் அவை யுத்த உள்ளடக்கமாகிவிடும்;.
சூழலும், சந்தர்ப்பங்களும், காலத்தின் போக்கும் புலியெதிர்ப்பு இணையத்தை வளப்படுத்தின. இதில் கண்ணுக்கு தெரியாத இணையமும், எழுத்தாளர்களும் உள்ளவரை, புலிக்கு எதிரான செய்திகள் வலுப்பெற்றன அவ்வளவே.

இந்த நிலையில் புலிக்கு எதிரான மாற்றுக் கருத்துத் தளத்தையும், மாற்று செய்தியை புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் தந்துவிடவில்லை. இது சிறப்பாக செய்திக்கும் பொருந்தும். செய்தி என்பது வெறும் செய்தியாக மட்டும் இருந்தால் அது ஒருவகை. இது குறித்த சூழலின் ஒரு எதிர்வினையாக தொகுத்தபோது, வெளிப்படுத்திய அரசியல் கூட மக்களின் மாற்றுச் செய்தியாக அமையவில்லை. புலிகளைப் போன்று மாற்று ஊதுகுழலாக, மக்களை முட்டளாக்கும் மலட்டுச் செய்திகளை திட்மிட்டே உற்பத்தி செய்தனர்.

தேனீ போன்ற இணையங்கள் முதல் புலியெதிர்ப்பு தளங்களிடம் ஒரு அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்பின் அவர்கள் சொந்தமாகவே நிர்வாணமாகிவிடுவர். புலியின் இன்றைய நிலைக்கு மாற்றாக, எப்படி ஒரு மாற்று சக்தியை உருவாக்கப் போகின்றீhகள் என்று கேட்டால், அனைத்தும் சந்திக்கு வந்துவிடுகின்றது. மக்கள் மட்டும்தான் மாற்று சக்தியை உருவாக்கும் வரலாற்றைக் கொண்டவர்கள். மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை எற்க இவர்கள் மறுக்கின்றனர். அவர்கள் தமது குருட்டுக் கண்ணால் இதை புலிக் கோரிக்கை என்கின்றனர். மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை, புலிக் கோரிக்கையாக முத்திரை குத்தி துற்றுகின்றனர். அல்லது இதை புலிகளை அழித்த பின் தாம் பெற்றுத்தரும் ஜனநாயகத்தில் பெற வேண்டியவை என்கின்றனர்.

புலிக்கு மாற்றை அவர்கள் மக்கள் அல்லாத அன்னிய சக்திகளிடம் கோருகின்றனர். இதை நேரடியாகவும், மறைமுகமாவும் சூக்குமாகவும் முன்வைக்கின்றனர். இதை முன்வைக்கும் பலரிடையே ஒரு விமர்சனமற்ற ஒரு வழிப்பாதை கொண்ட நகர்கின்றனர். அன்னிய சக்திகளை நம்பும் புலியெதிர்ப்பு அரசியல், எப்படி மக்களுக்கான மாற்றாக இருக்கமுடியும்.
புலிகளின் அடாவடித்தனங்கள், மற்றும் மக்களுக்கு எதிரான கணிசமான சம்பவங்களை புலியெதிர்ப்பு இணையத் தளங்கள் கொண்டு வருகின்றன என்பதால் நாம் அவற்றைப் போற்ற முடியாது. இவை உள்நோக்குடன் மட்டும் வெளியிடுகின்றன. இதில் மக்கள் நலன் எப்படி வெளியிப்படும். இதைக் கொண்டு இதை மக்கள் நலன் சார்ந்தாக கூறுவது மக்களை மந்தைகளாக, மற்றறொரு மக்கள் விரோத சக்தியின் பின் வழிகாட்டுவதே நிகழும்.
புலிகள் பற்றி பலவேறு சம்பவங்களை செஞ்சிலுவைச் சங்கம் முதல் சில பத்து சர்வதேச அமைப்புகள் வரை வெளியிடுகின்றன. இதை போன்று இலங்கை அரசு கூடத் தான் கொண்டு வருகின்றன. புலிகளைப் பற்றி செய்திகளை கொண்டுவருவதால், இவற்றை நாம் அரசியல் ரீதியாக ஆதாரிக்க முடியாது. இவர்களின்; தகவல்களை நாம் உண்மை மற்றும் பொமைக்குள் பகுத்துதராய்ந்தது எடுப்பது வேறு. அரசியல் ரீதியாக போற்துவது வேறு. அமெரிக்கா சி.ஐ.ஏ கூட புலிக்கு எதிரான வகையில் அம்பலப்படுத்துகின்றது. ஐரோப்பியயூனியன் கூட இதைச் செய்கின்றது. இந்தியா பிராந்திய விஸ்தரிப்புவாதிகள் கூட இதைச் செய்கின்றது. இதைத் தான் தேனீ போன்ற புலியெதிர்ப்பு இணையங்களும் செய்கின்றன. ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசுவரை புலி பற்றி வெளியீடும் அறிக்கைளை, செய்திகளை முதன்மை கொடுத்து புலியெதிர்ப்பு இணையங்கள் பிரசுரிக்கின்றன. அவர்கள் புதிய பூதமாக மாறுகின்றனர் என்பதை மூடிமறைக்கின்றனர்.

இந்த உள்ளடக்கத்துக்குள் இவர்களுக்கு இடையில் வேறுபாடு இல்லை. அதை அவர்களும் மறுப்பதில்லை. அதையே அவர்கள் மாற்று சக்தியாக நம்புகின்றனர். இதைத் தான் மக்களுக்கு மாற்றுப் பாதையாக காட்டமுனைகின்றனர். மக்களுக்காக நேர்மையாக குரல் கொடுக்கும் யாரும் இதை அங்கிகரிக்கமுடியாது.

பூதத்தின் மாமி உடன் உறவு கொள்வதை லெனின் கூறியதாக கூறினீர்கள். இது எந்தச் சந்தர்ப்பத்தில், யாரைப் பூதமாகவும், யாரை மாமியாகவும் கொண்டார் என்பது வரலாற்று சம்பவத்துடன் தான் சரியாக பார்க்கமுடியும். இதுபற்றி எனக்கு குறிப்பாக தெரியாது என்பதால், துல்லியமாக இதைபற்றி எடுத்து பேசமுடியாதுள்ளளேன். ஆனால் அவர் நீங்கள் ஒப்பிட்டதுடன் நிச்சயமாக ஒப்பீட்டு இருக்கவே மாட்டார். ஏகாதிபத்தியங்கள் சோவியத்தை முதலாம் உலக யுத்தமுடிவில் கூட்டாக சில பத்து நாடுகள் ஆக்கிரமித்த போது, ஜெர்மனியுடன் அவர் கூடவில்லை. பல இழப்புடன் ஒரு வெற்றிகரமான சமாதானம் தான் செய்தார். நாங்கள் முதலில் மக்களுடன் கூடி நிற்காதவரை, எமது மாமியாருடன் கூட்டு என்பது அர்த்தமற்றது. லெனின் மக்களுடன் நின்று பேசினார். நாங்கள் அப்படியா இல்லையே. நீங்கள் கூறும் மாமியார் ஏகாதிபத்திய தலையீட்டு கோட்பாட்டில் தாலாட்டு பெற்றுவரும் மற்றொரு மாபெரும் பூதமாகும். இது வரலாற்றால் சரியாகவே உறுதி செய்யப்படும்.