Saturday, December 19, 2009

ஜனாதிபதி தேர்தல் கூத்தில், புதிய ஜனநாயகக் கட்சி முன்வைக்கும் "மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை"!

"தேர்தலை நிராகரி" என்கின்றது இலங்கை பு.ஜ கட்சி. அட!, இலங்கை பு.ஜ கட்சி வர்க்கப் போராட்டத்தை முன் வைக்கின்றது என்ற ஆச்சரியத்துடன், என்ன எது என்று பார்த்தால் "50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும்" என்று நம்பி தேர்தலில் பங்கு பற்றக் கோரிய ஒரு "வர்க்கக்" கட்சி, அந்த காரணத்தைச் சொல்லியே மீண்டும் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றது.

இப்படி இலங்கையில் ஒரு "மா.லெ.மா சிந்தனையை" முன்னிறுத்தும் ஒரு கட்சியாக, தன்னை அடையாளப்படுத்துகின்றது. இந்த புதிய ஜனநாயகக் கட்சி, வர்க்கப் போராட்டத்தையா இப்படி முன்னெடுக்கின்றது!? சண் தலைமையிலான மா.லெ.மா கட்சியில் இருந்து 1970 களில் பிரிந்தவர்கள் தான் இந்த புதிய ஜனநாயகக் கட்சி. இதற்கு பிந்தைய மிகக் கொந்தளிப்பான இலங்கை வரலாற்றில், இக்கட்சி மா.லெ.மா சிந்னையை என்றும் முன்னிறுத்தியதில்லை. இது வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து, சமூகத்தை புரட்சிகரமான ஒரு அரசியல் வழியில் மக்களை வர்க்கங்களாக அணிதிரட்டவில்லை.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய அதன் அரசியல் நிலைப்பாடு, மா.லெ.மா சிந்தனைக்கு முரணான சந்தர்ப்பவாதமாகும். அக்கட்சி.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிண எண் 1084 இன் அம்மா

"நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு. அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலமைகள், இந்தச்
சமூகம் எல்லாவற்றையும்... அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம், பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு உலகமாக இருக்கும்."
..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, December 18, 2009

பிரபாகரனின் பின்னான 75 நாட்களும் சதிகளும் – பகுதி -1

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் மே -18ம் திகதி சுட்டுக் கொன்றிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரும், தனது ஆருயிர் நண்பனுமான பிரபாகரன் மே -17ம் திகதி மதியவேளை இராணுவத்துடனான நேரடிச் சமரில் வீரமரணம் அடைந்ததாக, புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும் அவரின் நண்பருமான கே.பி அறிவித்திருக்கிறார். ஏறத்தாழ 7 வாரங்கள் கழிந்து போகும் நிலையில் இந்தியாவுக்குத் தப்பி வந்த எழுத்தாளர் மு.திருநாவுக்கரசின் பேட்டியோடு, பிரபாகரன் மே -15 பின்னிரவு அல்லது மே -16 அதிகாலை தப்பிப் போய்விட்டதாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறும் அணியினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாள் வித்தியாசத்திலும் இம் மூன்று பகுதியினரும் தத்தமது நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.

யோர்தானில் இருந்த ராஜபக்சாவுக்கு மே -18 ம் திகதிதான் பொருத்தமாக இருப்பது போலத் தெரிகிறது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாக முதலில் கூறிய கே.பி க்கு, ‘நாடுகடந்த தமிழீழத்துக்கு’ வசதியாக மே -17 தான் இருந்துவிடும் போல் தெரிகிறது. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சொல்கிற வைகோ, நெடுமாறன், மு.திருகாவுக்கரசு …. மற்றும் ‘வட்டுக்கோட்டை தீர்மானக்காரருக்கு’,.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிற்போக்குத் தேசியத்துக்கு அங்கீகாரம் வேண்டுமாம் அதுவும் மார்க்ஸியத்தின் பெயரால்

உயிர்ப்பு இதழ் மூன்று தனது அரசியல் வழியை தெளிவாக இனம் காட்டி வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தலையங்கம் உட்பட மற்றைய மூன்று கட்டுரையும் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்துவிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ஆசிரியர் தலையங்கத்திற்கு சமர் 9 இல் பதிலளித்தோம். பெண்ணும் புரட்சியும் என்ற கட்டுரை வேறுபலரின் கட்டுரைகள் இன்மையால் விமர்சிக்க முடியாதுள்ளது. இக்கட்டுரை மார்க்சியத்தை குழிதோண்டிப் புதைப்பதாகவே உள்ளது. அதை ஒரு(உ-ம்) ஊடாகப் பார்க்கலாம்.

சோசலிசத்தை உருவாக்குவதற்கான போராட்டம் வேறுவேறான நலன்கள் கொண்ட குழுக்கள் அணிச்சேர்க்கை உருவாக்கும் அடிப்படையில் ......... இருக்கவேண்டும் என்கின்றார். மார்க்சியம், பெண்கள் இரு வௌ;வேறு நலன்களை பிரதிபலிப்பதாக கோருவதன் ஊடாக நலன்கள்(வர்க்க) வேறுபாட்டையும் அதன் இருப்பையும் கோருகிறார் இதன் ஊடாக முதலாளித்துவ இருப்பை காப்பாற்றுகின்றார். எல்லாவகை முரண்பாடுகளும் அதன் உள்ளடக்கமும் வர்க்க போராட்டத்துடன் ஒன்று கலந்தவையே.

நாம் ஆய்வுக் கட்டுரையையோ, புதிய கட்டுரைகளையோ இவர்களுக்குப் பதிலாக வைப்பதை விட இக்கட்டுரைகளின் ஒவ்வொரு வரியின் மீதும் விமர்சிப்பதையே கைக்கொள்கிறோம். பொதுவான ஒரு கட்டுரையின் போக்கில் வாசகர்களை தெளிவாகப் பார்க்கமுடியாது என்பதாலும், ஒவ்வொரு வரி மீதுமான விமர்சனம் மூலம் வாசகர்களை தெளிவாக ஆராய வைக்கமுடியும் என்பதாலும் இதையே கைக்கொள்கிறோம்.

மார்க்சியத்துக்கு எதிராக மார்க்சியத்தை.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, December 17, 2009

என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி "வியூகம்" படம்

இதன் மூலம் "மே 18" இயக்கத்தையே நடுச் சந்திக்கு கொண்டு வருகின்றனர். தேசம்நெற் அசோக்கின் துணையுடன், என்பெயரில் தயாரித்து எனக்கு எதிராக முன்வைத்த ஈமெயில் மூலம் "மே 18" இயக்கத்துக்கு அரசியலை செய்கின்றனர். இவர்கள் தயாரித்த ஈமெயில் உள்ள அரசியலை, இங்கு குறிப்பாக கேள்விக்குள்ளாக்குவது அவசியமாகின்றது.

”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.” என்கின்றது, இவர்கள் என் பெயரில் வெளியிட்ட ஈமெயில். இதை யார் எழுதியது? கடந்தகாலத்தில்; இயக்க அரசியலில், இது போன்று அரசியல் செய்தவர்கள்தான்.

நான் அசோக்கை அம்பலம் செய்து எழுதும் கட்டுரையில், கற்றன நசனல் வங்கிப் பணம் பற்றி பதிலளிக்கப்படும் என்று எழுதியவுடன் என் பெயரில், ஜான் மேல் இந்த அவதூறு கட்டமைக்கப்பட்டது. கடந்தகாலத்தில் இதை வைத்து எனக்கு எதிராக அரசியல் செய்யும் இந்த "மாற்றுக் கருத்து" பேர்வழிகள் விழித்துக்கொண்டனர். கற்றன் நசனல் வங்கிப் பணத்துக்கு........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


உயிர்ப்பின் திசை மாற்றம்

எமது போராட்டத்தின் தேக்க நிலையை களையப் புறப்பட்டு திசை மாறிய உயிர்ப்பு தேக்கநிலையை காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர். சமர் மீதும் பெயர் குறிப்பிடாத, கருத்து அற்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அதே இதழில் மார்க்சிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை வெளியிட்டு அது தொடர்பாக தமது கருத்தை முன்வைக்காது ஜரோப்பாவில் வரும் பத்தோடு பதினொன்றாக தாமும் மாற முயன்றுள்ளனர்.

மார்க்கிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை நாம் அடுத்த சமர் 10 விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். அடிப்படை மார்க்சியத்தை உயத்துவதை வரட்டுவாதம் எனவும், நாம் வைத்த திட்டம் தன்னியல்பானது எனவும், சீரழிந்த பிரமுகர் புத்திஜீவிகளுக்காக வக்காலத்து வாங்கியும், திரிபுவாதத்துக்கு வக்காலத்து வாங்கியும், தமது விமர்சனத்தை செய்தவர்கள் இவைகளை கருத்தியல் ரீதியில் புரியவைக்க முடியாது தமது முகங்களை இனங்காட்டியுள்ளனர்.

நாம் தவறு இழைக்கும் பட்சத்தில் அதை தத்துவார்த்த விளக்கங்களுடன் புரிய வைக்கவேண்டும் எம் மீதான சொற்களுடன் மட்டும் அமைந்த விமர்சனத்துக்கு பதில் முக்கியமானதும், தீர்க்கமானதுமான தத்துவார்த்த விவாதத்துக்குரிய இவ் விடயத்தை, வெறும் சொற்களுக்கு அப்பால் நகர்த்த முடியாது போயுள்ளனர். இதன் பின் கோட்பாட்டு விவாதம் முக்கியத்துவம் எனக் கோரின் அது நகைப்புக்குரியதே. இது மனிதத்திடமிருந்து வாந்தியெடுத்து தம்மை அவர்கள் உடன் இணைத்ததற்கு அப்பால் ஒரு அடியைக் கூட முன்வைக்கவில்லை.

தேசிய சக்திகள்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, December 16, 2009

தேசம்நெற் மூலம் கிடைத்த அதிர்ச்சி! ஆச்சரியம்!! - அவதூறுக்கு மறுப்பு

நாம் அசோக்குக்கு ஈமெயில் எழுதியதாக எம் பெயரில் கருத்துச் சொல்லி, ஒரு ஈமெயிலை தேசம்நெற் வெளியிட்டுள்ளது. இதை நாம் எழுதியிருக்கவில்லை. இப்படி எழுத வேண்டிய அவசியமும் எமக்கு கிடையாது. ஜான் பற்றி அசோக்கோடு கதைக்க, எமக்கு அப்படி என்ன வேண்டியிருக்கின்றது!? அசோக்குக்கு வேண்டியவர், ஜானை துணைக்கழைக்க இது உதவுகின்றது.

இதை இவர்கள் திட்டமிட்டு தயாரித்தார்களா அல்லது மூன்றாவது நபர்கள் இடையில் புகுந்து விளையாடுகின்றார்களா என்பது எமக்குத் தெரியாது.

ஆனால் தெளிவாக கற்றன் நசனல் வங்கிப் பணத்துக்கும் தீப்பொறிக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புள்ளது என்று நன்கு தெரிந்த நபர், இதை திட்டமிட்டு செய்துள்ளார். இது ஜானுக்கு எதிரான அவதூறை புனைந்துள்ளதுடன், அதை எம்பெயரில் செய்துள்ளனர்......... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது

கொபென்ஹெகேன் நகரில் கலவரத்தீ பற்றிக் கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை, இடதுசாரி இளைஞர்களுக்கும், போலீசுக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

டென்மார்க் தலைநகர் கொபென்ஹெகனில், ஐ.நா.கூட்டிய பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடும் பாதுகாப்புடன் வாரக்கணக்காக நடைபெற்று வருகின்றது. உலகத்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு வெளியே, சாமானியரின் மாநாடு வீதிகளில் கூட்டப்படுகின்றது. உலகம் முழுவதிலும் இருந்து வந்த இடதுசாரி ஆர்வலர்கள் கோபென்ஹெகன் நகரில் குழுமியுள்ளனர். பெரு வணிக நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தையும் லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாற்ற எத்தனிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்தனர். அனைத்து மக்களுக்குமான கருத்தரங்குகளில் Naomi Klein போன்ற தீவிர முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அனேகமாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் யாவும் கோபென்ஹெகன் நகரின் முக்கிய தெருக்களில் இடம்பெற்றுள்ளன.

அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் “கிறிஸ்டியானா” பகுதியில் இடம்பெற்றுள்ளன. இதனால் கோபென்ஹெகன் நகரின் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, December 15, 2009

பேரினவாத போர்க் குற்றம் புதிய ஆதாரங்கள் - பிரபாகரனின் மகள் துவாரகாவின் படம் இணைப்பு

புலிகள் தங்கள் போர்க் குற்றங்களையும், சரணடைய வைத்த அரசியல் துரோகத்தையும் மூடிமறைக்க, அரசு செய்த போர்க் குற்றத்தை திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். சரணடந்தவர்களை கொன்றது உட்பட, யுத்தத்தில் ஈடுபடாத குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்தது, இந்த பேரினவாத அரசு. இப்படித்தான் நடந்தது என்பது, புலத்துப் புலிக்கு நன்கு தெரியும். சரணடைய வைத்தவர்கள் இவர்கள் தான்.

இன்று நடந்ததை மூடிமறைத்து, இந்த போர்க் குற்றத்தை புலிகள் அரசுடன் சேர்ந்து நின்றே மூடிமறைக்கின்றனர். சரணடைந்த புலித் ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)

நிகழ்காலத்தில் அரசியலில் ஈடுபடுபவர்கள், கடந்தகாலத்தை மிகத் தெளிவாக விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும். இதை மறுப்பவர்கள் யார்? கடந்தகாலத்தின் எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை, நிகழ்காலத்திற்கு மூடிமறைக்க விரும்பும் சந்தர்ப்பவாதிகள் தான். குறிப்பாக மாற்று அரசியலின் பெயரில் நிகழ்ந்த பலமுகம் கொண்ட எதிர்ப்புரட்சி அரசியலை பற்றிப் பேசாத, ஒரு "மார்க்சியத்தை" "முற்போக்கை" இன்று கதைக்கவும் முன்வைக்கவும் முனைகின்றனர். இதைத்தான் சமகால அரசியலாக, புது வேசத்துடன் முன்தள்ளுகின்றனர். கடந்த வரலாற்று இயங்கியல் போக்கை நிராகரித்த "மார்க்சியம்" என்பது, மக்களுக்கு எதிரானதை கடந்தகாலத்தில் இருந்து மீள ஏமாற்றித் திணிப்பதுதான்.

பாசிசத்துக்கு எதிராக கடந்தகாலத்தில் மக்களைச் சார்ந்து நின்று எதிர்வினையாற்றாத சந்தர்ப்பவாதிகள், இன்று "மார்க்சியத்தின்;" பெயரில் கும்மியடிக்க முனைகின்றனர். இவர்களுடன் கடந்தகாலத்தில் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரத்தை ஆற்றியவர்கள் கூடி, மார்க்சியம் பற்றி குசு குசுக்கின்றனர்.

"வட்டுக்கோட்டை தீர்மானம்", "நாடு கடந்த தமிழீழம்", "மே 18 இயக்கம்" .. என்று புலிகள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிரபாகரனின் பின்னான 75 நாட்களும் சதிகளும் – பகுதி -1

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் மே -18ம் திகதி சுட்டுக் கொன்றிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரும், தனது ஆருயிர் நண்பனுமான பிரபாகரன் மே -17ம் திகதி மதியவேளை இராணுவத்துடனான நேரடிச் சமரில் வீரமரணம் அடைந்ததாக, புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும் அவரின் நண்பருமான கே.பி அறிவித்திருக்கிறார். ஏறத்தாழ 7 வாரங்கள் கழிந்து போகும் நிலையில் இந்தியாவுக்குத் தப்பி வந்த எழுத்தாளர் மு.திருநாவுக்கரசின் பேட்டியோடு, பிரபாகரன் மே -15 பின்னிரவு அல்லது மே -16 அதிகாலை தப்பிப் போய்விட்டதாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறும் அணியினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாள் வித்தியாசத்திலும் இம் மூன்று பகுதியினரும் தத்தமது நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.

யோர்தானில் இருந்த ராஜபக்சாவுக்கு மே -18 ம் திகதிதான் பொருத்தமாக இருப்பது போலத் தெரிகிறது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாக முதலில் கூறிய கே.பி க்கு, ‘நாடுகடந்த தமிழீழத்துக்கு’ வசதியாக மே -17 தான் இருந்துவிடும் போல் தெரிகிறது. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சொல்கிற வைகோ, நெடுமாறன், மு.திருகாவுக்கரசு …. மற்றும் ‘வட்டுக்கோட்டை தீர்மானக்காரருக்கு’, இவ் இறப்புத் தேதிகளுக்கு முன்பே தப்பிச்செல்லும் தேதியாக மே – 16 தான் இறுதியாகவும் இருக்கிறது. இது இவ் முக்கூட்டுச் சக்கரத்துக்குள் இருக்கும் முரண்பாட்டின் விளைவாக, இவ் மூன்று தேதிகளுமே இவர்களுக்கு அதி வசதியாகவும் இருந்துவிடுகிறது.

யூலை மாதம் 2ம் வாரத்தில்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, December 14, 2009

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.

புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்கமுடியாத முடிவுகள் வந்துள்ளன! என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.

அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.

இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு,இறகுகள்,கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக ...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிரான்ஸ் மாபியாக்கள் நடத்திய "வட்டுக்கோட்டை" தேர்தல் : சமூகப் பொறுப்பற்ற மந்தைகள் வாக்குப் போடுவதும், மொய் எழுதுவதும் ஒன்றுதான்

எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது. ஆறாவது அறிவை இழந்த மந்தைகளாக, ஒருவரை ஒருவர் கண்காணித்து சாய்க்க, ஒரு தேர்தல் திருவிழா அரசியல் கூத்தாகின்றது.

அவரவரின் அறியாமைக்குள் கிணற்றுத் தவளையாக நின்று பெருமை பேச, வம்பளக்க, பொழுதுபோக்க வட்டுக்கோட்டை மாபியாத் தேர்தல் உதவுகின்றது. இவர்களைத் தலைமை தாங்கும் மாபியாக் கும்பல், மக்களின் பொது நிதியை சூறையாடியதையிட்டு வாய்திறக்க முடியாதவர்களைக் கொண்டு, அவர்கள் தமக்கு வாக்குப் போடவைக்கின்றனர்.

புலி மாபியாத்தனம் மூலம் கட்டமைத்த மாபியா வடிவங்கள் முதல் சடங்குத்தனமான மொய் எழுதும் சமூக வடிவங்கள் மூலம் தமக்கு வாக்கு போடவைக்கப்பட்டது.

புலிகளின் தலைமையைக் கொன்றவர்கள், பினாமிச் சொத்துகளை அபகரித்தவர்கள், நடத்தும் அரசியல் சடங்குகள் இவை. உள்ளுர் சொத்துக்களை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தளபதி மன்னராகின்றார்!? தளபதி மன்னராகின்றார்!?

வரலாற்று முக்கியத்துவம் இனவழிப்பு யுத்தம் ஒன்றிற்கு தலைமை தாங்கிய இருவர், இரு துருவங்கள் ஆகியுள்ளனர். மகிந்த ராஐபக்ச தன் அண்மைக்கால அரசியலில் விட்ட மிகப்பெரிய தவறொன்று, சரத் பொன்சேகாவை ஓரம்கட்ட நினைத்தது. இதனால் அந்நிலைமை (எதிர்வரும் தேர்தலில்) தனக்கும் வந்துவிட்டதோ என தத்தளிக்கின்றார்.

இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவை அப்பதவியிலில் இருந்து நீக்கி, கூட்டுப்படைப் பிரதானியாக்கினார்;. ஆனால் பிரதானி என்ற வகையில் முப்படைகளுக்கும் ஆணையிடும் அதிகாரத்தை கொடுக்கவில்லை. அதைக் கேட்டு கொடுக்காததன் விளைவு, ராஐpனாமாவில் போய் முடிந்தது.

ராஐpனாமா செய்த தளபதி பொன்சேகாவை, அவரின் தேசிய-சர்வதேசிய கூட்டாளிகள் குறுகிய காலத்தில் ஓர் அரசியல்வாதியாக்கி, ஐனாதிபதித் தேர்தலில் மகிந்தாவிற்கு சமமான நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.

ஐனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் முக்கிய தேர்தல் பிரகடனம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையை இல்லாதாக்குதல், மகிந்தாவின் குடும்ப ஆட்சியை – அரசியலை ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, December 13, 2009

போராளி என்பவன் யார்? – நன்றி விடுதலைப் புலிகள்

புலிகளின் தோல்விக்கு புலிகளே தான் காரணம் என்பதற்கு அவர்களின் வாயாலேயே அவர்கள் கூறிய தத்துவ விளக்கம். இதை 1985ம் ஆண்டு புலிகளே தமது விடுதலைப் புலிகளின் குரல் 7 இதழில் கூறினார்கள். எதைச் செய்தால் அது போராட்டமல்ல என்று அன்று சொன்னார்களோ, அதை தாமே கடைப்பிடிக்காமல் மரணித்துப் போனார்கள்.

அன்று மற்றவனை கொல்லவும், ஒடுக்கவும் இதைச் சொன்னார்கள். அதை அன்றிலிருந்து தாங்களே இன்றுவரை செய்து இறுதியில் தற்கொலை செய்து மரணித்துப் ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்