தமிழ் அரங்கம்

Saturday, March 8, 2008

பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

ரிநிகர் 112 113 இல், ராதிகா குமாரசாமியின் "பெண்புலிகளும் பெண்விடுதலைப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தகருத்துக்களை மறுதலித்துக் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.

ராதிகா குமாரசாமியின் அடிப்படை அரசியலைக் கேள்விக்குட்படுத்தி விமர்சித்து அம்பலப்படுத்துவதற்குப் பதில் பல குறைபாட்டுடன், தமிழ் மக்களின் போராடும் உரிமையின் பெயரால் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் பல வெளிவந்தன. நான் இக்கட்டுரை மீது, தொடர்ச்சியாக இரு கட்டுரைகள் எழுதியிருந்தபோதும், சரிநிகர் அவற்றை இருட்டடிப்புச் செய்திருந்தது. ராதிகா குமாரசாமியின் அடிப்படை அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் நாம் இன்றுள்ள பூர்சுவாப் பெண்ணிலைவாத பிரமிப்புக்களை உடைத்தெறிய முடியும்.

"எந்த வடிவத்திலான முரண்பாட்டையும் தீர்ப்பதற்குப் பதிலாக பலாத்காரத்தை வழி முறையாகப் பயன்படுத்துவதற்கு நான் உடன்பாடில்லை" என ராதிகா குமாரசாமி திட்டவட்டமாக தனது அரசியல் எது என்பதைத் தெளிவாக்குகின்றார். "துயரம் மலையளவு தான் ஆனால் மௌனத்தைக் காத்தல் சாத்தியமில்லை" எனப் பதில் அளித்த கட்டுரை வரிகள் முந்திய கூற்றுக்கு எதிராக அமைகின்ற போதே, வர்க்க முரண்பாட்டில் ஒரு பிரிவுக்காக வாதிடுவதை, பாதுகாப்பதை காட்டுகின்றது. இன்றைய உலகமயமாதல் சார்ந்த ஆணாதிக்க இனவாதத்தை வன்முறை மூலம் தகர்ப்பதை எதிர்த்து நிற்கும் அதே நேரம், இதை அம்பலப்படுத்தி போராடும் போது மௌனத்தை காத்தல் முடியாது உள்ளது என மீள் வன்முறையை பிரகடனம் செய்கின்றார். முதலாளித்துவ எல்லா பாராளுமன்ற ஜனநாயகவாதிகளும், எதை தமது அரசியல் அகராதியில் செய்கின்றனரோ, அதையே இவரும் அசகுபிசகாது வெளிப்படுத்துகின்றார். போராட்டம் அற்ற ஜனநாயகத்தை பாதுகாக்க, சுரண்டும் வர்க்க அமைதி, சமாதானம், வன்முறையற்ற பிரகடனம் எல்லாம் பேசுகின்றனர். ஆனால் சுரண்டல் வடிவம் கேள்விக்குள்ளாகும் போது சமாதானம், ஜனநாயகம், வன்முறை என எல்லா பிரகடனத்தையும் மறுத்து, எதிர் நிலையில் வன்முறையை பரிசளிக்கின்றனர். இது மனித வரலாற்றின் வர்க்க வரலாறாகும.

ஏனோ தெரியாது, இவர் ஜக்கியநாடுகள் சபையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விஷேச அறிக்கையாளராக இருப்பதோ என்னவோ, அனைத்து வன்முறைக்கும் எதிராக, குறிப்பாக பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைக்கு உலகளவில் தலைமை தாங்கும் ஜக்கியநாடுகள் சபையைப் பாதுகாக்கத்தான் வன்முறையை நிராகரிக்கின்றார். ஈராக்குக்கு எதிரான மனிதப்படுகொலை வன்முறையில் ஜ.நா ஈடுபட்டதன் மூலம், 15 இலட்சத்துக்கு மேற்பட்ட ஏழை மக்கள் இன்று வரை இறந்துள்ளதுடன், தொடர்ந்தும் இறந்து வருகின்றனர். சேர்பியாவில் குண்டு மழையில் மக்கள் குடியிருப்புகள் மற்றும் அனைத்து பொருளாதார அடிப்படைகளையும் தகர்த்த போதும், அது பற்றி மௌனம் சாதித்து அங்கீகரித்தபடி, அதே ஜ.நாவின் கைக்கூலியாக, கூலிக்கு மாரடித்து அவ் வன்முறைக்கு பாதுகாக்க வெட்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறை, தனிச்சொத்துரிமை வடிவில் சுரண்டல் அமைப்பின் விளைவாகும். ஜக்கிய நாட்டுச்சபை சுரண்டல் அமைப்பின் ஜனநாயக காவல்நாயாக திகழும் எல்லா நிலையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறையின் காவலனாக இருப்பது நிர்வாணமானது. வன்முறை பற்றிய அறிக்கைகள் சுரண்டல் அமைப்பை பாதுகாக்க, தனிமனிதனை குற்றவாளியாக்கும், இந்த சுரண்டல் அமைப்பினை நியாயப்படுத்த, எடுக்கும் புள்ளிவிபரத் தொகுப்புக்கே பயன்படுகின்றது.

ஆணாதிக்கம், சாதி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, நிற ஒடுக்குமுறை சுரண்டல் என அனைத்தும் வன்முறைசார்ந்ததே. உலகத்தின் அனைத்து இயக்கமும் வன்முறைக்கு ஊடாக கட்டியமைக்கப்பட்டுள்ளது. பொதுவில் அமைதி என்பது இருக்கும் வன்முறையைப் பாதுகாக்கும் நியாயப்படுத்தும் கோட்பாடுகளாகும்.. சமுதாயத்தில் இருக்கும் முரண்பாடுகளை தீர்க்க வன்முறை அரசியல் அவசியமில்லை என அடித்துக் கூறும் ராதிகா வர்க்க வன்முறையாளனின் காலில் விழுந்து கெஞ்சக் கோருகிறார்.

ஒரு முதலாளியிடம் கூலியைக் கெஞ்சியும் காலைப்பிடித்தும் கோரக் கோருகின்றார். சிங்கள இனவாதிகளிடம் தமிழீழ மக்கள் பணிந்து நின்று கேட்கக் கோருகின்றார். ஆண்களிடம் பெண்கள் அமைதியாகத் தலைகுனிந்தபடி கெஞ்சக் கோருகின்றார். இதுதான் ஜக்கிய நாட்டுச்சபை அவருக்கூடாக வழிகாட்டும் பெண்ணிய வழியாகும். அதாவது ஒரு பெண்ணை ஆண் பாலியல் வன்முறைக்குட்படுத்தும் போது எதிர்த்துப் போராடாது அமைதியாக வன்முறையை ஏற்று, பின் பேரம் பேசி, அதே ஆணைத் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார். இதுதான் பலாத்காரத்திற்கு உடன்பாடு இல்லை என்று கூறியபடி செய்ய நினைப்பதாகும்.

இன்று நடைபெறும் உலகமயமாதல் சூறையாடலை கைக்கு விலங்கிட்டபடி மௌனமாக அமைதியாக ஏற்றபடி, மூன்றாம் உலக நாடுகளுக்கு அதிக பிச்சையாக நிதி உதவி வழங்க கோரி இரங்கி கோரவேண்டும். இதுதான் ராதிகாவின் அரசியல் அகராதி. ஏகாதிபத்திய நவகாலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்த்து வன்முறை வேண்டாம் என்கிறார். மாறாக, மாற்று வழி பொலிசாக நின்று சேவை செய்ய கோருகின்றார். இவர்களின் நோக்கமும் பூர்சுவாப் பெண்ணிலைவாதம் பற்றி புதிய உலகமயமாதலைப்பற்றியும் புரிந்து, அதற்கு இவர்கள் சார்பாகக் கதைக்கப் பழகவேண்டும் என்கிறார். அது சரி பெண்கள் காலம் காலமாக ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்பது, ஆணாதிக்கம் மட்டுமின்றி மதக்கோட்பாடுகளின் தொடர்ச்சியும் ஆகும். மனித சமுகம் காட்டுமிராண்டிச் சமுகமாக இருந்த போது, பெண்கள் தமது உணவுக்கும் தமது குழுவைப் பாதுகாப்பதற்கும் ஆயுதம் ஏந்தி ஆண்களைப்போல் போராடினார்கள் என்பது உண்மையானது என, எல்லாப் பெண்ணிலைவாதிகளுக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்கு அவை கசப்பானவை.

சங்க இலக்கியத்தில் ஆதாராமாய் கேட்பதும் பார்ப்பனிய இந்து மதத் தலைவர்களிடம் கேட்பதும் ஒன்றே. ஆணுக்குப் பெண் அடிமையான பின் தான் சங்க இலக்கியம் உருவானது. சங்க இலக்கியத்துக்கு முந்திய தொல்காப்பியத்தில் வெட்சித் திணையில் துறைகளில் ஒன்று கொற்றவை நிலை (தொல்: நூ.59) இல் மன்னன் போருக்குப் போகும் முன், பெண் தெய்வமான கொற்றவைக்கு முன் வாள், வேல் முதலியவற்றை வைத்து வணங்கிச் செல்வதன் மூலம், பெண்ணைத் தலைவியாக கொண்டு மதித்து வழிபடும் முறை பழைய சமுதாயத்தின் எச்சமாகும். ரிக் வேதத்தில் "இரவிலே நடந்த போரிலே கேலனுடைய மனைவியான விச்பலையின் கால், பறவையின் சிறகைப்போல் துண்டிக்கப்பட்டது. உடனே நீங்கள் அவள் நடந்து செல்ல அவளுக்கு இரும்புக் காலை தந்தீர்கள். அந்தப் போர் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைப் பற்றுவதற்காக நடந்தது."122 பெண் யுத்தத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, அதன் நோக்கம் மற்றும் பெண் தன்னை எப்படி பாதுகாத்தாள் என்பதை எல்லாம் இது காட்டுகின்றது. "சந்திரகுப்த மவுரியரின் காலத்தில் (கி.மு 323-300) பெண்கள் படையிலும் பணியாற்றி வந்தனர். அவர் வேட்டைக்குப் போகின்றபோது பெண்கள் குழு ஒன்று அவருடைய மெய்க்காப்பாளராக"133 தேர்களிலும், குதிரைகளிலும், யானைகளிலும் ஆயுதம் ஏந்திச் சென்றனர். அன்றைய பாண்டிய நாட்டை பெண்கள் ஆண்டனர். வன்னிப்பகுதியில் நடைபெறும் "நாச்சிமார் கோயில் வழிபாடுகள்,"132 பெண்கள் தலைமையில் ஒல்லாந்தரோடு போராடி மடிந்த ஏழு பெண்களின் நினைவாக நடப்பது, பெண்களின் போராட்ட வரலாற்றையும், மக்களின் பங்குபற்றலையும் காட்டுகின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யப் புறப்பட்ட கைக்கூலிகள் வரலாற்று ஆதாரம் இல்லை என்று கூறி, பெண்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்துவது பெண்ணியமாகின்ற போதே, ஆணாதிக்கத்தின் ஆழமான பெண்ணிய திரிபுகளையும் புரிந்து கொள்ளமுடியும்.

சங்க இலக்கியத்திற்கு சற்று முன் சென்றால், பெண் ஆயுதம் ஏந்திப் போராடியதும் தலைமை தாங்கியதும் ஆவணமாகவுள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பெண் யுத்தத்தில் ஈடுபட்டதை உள்ளடக்கிய செங்கலை நூல் திரட்டு பெண்ணின் நிலையைத் தெளிவாக்கியுள்ளது. இந்தச் செங்கல் கல் வெட்டை இப்படியே தொகுத்த நூல் தான் "சிந்துமுதல் கங்கைவரை" என்ற ராகுல்ஜி நூலைப் படித்தால் ஓரளவுக்கு உண்மையான விபரங்களைப் பெறலாம். இது போல் அல்லியின் கதை போன்ற பல பெண்களின் வீரவரலாறுகள் எமக்கு முன்னுள்ளது.

பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்ததும் தனது சமுகத்தை பாதுகாக்கப் போராடிய மனித வரலாற்றை, ஆதாரங்களின்றி பெண்விடுதலையை நோக்கிச் சிந்திப்பவர்களுக்கு கூட இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில், மனித வரலாற்றுத் தொடக்கம் ஆண் பெண்ணை அடக்கியதல்ல. ஆண் சமுதாயத்தில் பெண் அடங்கி அவன் தயவில் வாழ்ந்தவளும் அல்ல. இருவரும் சமுகமாக பெண் உள்ளிட்ட வாழ்வுப் போராட்டமாகவே இருந்துள்ளது. ஏன் மனிதகுல வரலாற்றில் பெண்கள் தான் போராட்டத்திற்கு தலைமைதாங்கி போராடிய வரலாறும், ஒரு சரியான பெண்ணிலைவாதிக்கு தெரிந்துதான் இருக்கும். ஆனால், ராதிகா போன்றோருக்கு தமது ஆணாதிக்க தலைமையைப் பாதுகாக்க, பெண்ணின் உரிமையை பறித்ததைக் கோட்பாட்டுத்தளத்தில் கொச்சைப்படுத்துவது அவசியமாகவுள்ளது.

"இரண்டாவதாக புலிகளின் ஆண் பெண், ஒருமை நிலைத்தன்மையைக் குறிப்பிடலாம். அதாவது ஆணையும் பெண்ணையும் ஒரே விதமாக செயலாற்றுவித்தல். இது பெண்மைக்கான சாவுமணி என்று கூறலாம்'' என ராதிகா கூறுகின்றார். ஆண் பெண் சமத்துவத்தை மறுக்கும் போது புலிகளின் மீதான செயற்தளத்தில் மட்டுமல்ல, எல்லாத் தளத்திலும் இது கருக்கொள்கிறது. நாம் புலியின் அரசியல் போராட்டவடிவம், ஒழுங்கமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். ஆனால், பெண் ஆண் இடையில் உள்ள இடைவெளி குறைக்கப்படும் போது, முரணற்ற ஜனநாயக நிலையில் நின்று அதை நாம் வரவேற்போம். அதன் அடிப்படையில் பெண்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை பாதுகாப்போம். பெண்கள் இன்று ஆண்களைப்போல் உள்ளனர் எனில் (ஆணாதிக்கத்தை அல்ல, அறிவு, வீரம், உடை ... என்று பல துறையில்) நாம் பெருமைப்படவேண்டும். அதற்காக ஒப்பாரி வைக்கக் கூடாது. ஒரு பெண் தலைமயிரை வெட்டி நகையின்றி உள்ளபோது பெண்மைக்கு சாவுமணி அடிக்கின்றது எனக்கூறுவது நகைப்புக்குரியது. ஏன் ஆண்கள் கூட முன்பு தலைவளர்த்தும் நகையணிந்தும் இருந்தனர். ஆண் பெண்ணுக்கிடையில் இது ஒர் அடிப்படை வேறுபாடாக முன்னைய சமுகத்தில் இருந்தது இல்லை. ஆனால், இன்று பெண்ணைக் கல்லாக்கியபோதும், அழகியல் பதுமையாக்கும் போதும் தான், இதைப் பெண்மை என்ற பெயரில் தொடரும் உண்மையான நோக்கம் என்ன என்று பார்ப்பதற்கு முன், இம் மாற்றம் விடுதலையாகிவிடாது. ஏனெனின், பெண்ணின் விடுதலை என்பது, பெண் ஆண் நிலைக்கு வருவதில்லை, மாறாக ஆண் பெண் இருவரும் மூன்றாவது நிலையை அதாவது, ஆணாதிக்கமும் பெண்ணடிமையுமற்ற நிலையை வந்தடைவதாகும். நகையணிதல், தலை வளர்த்தல் பெண்மை என்ற பெயரில், பெண்ணை ஏகாதிபத்தியம் எப்படி அழகிய கவர்ச்சி பதுமையாக்கி சந்தையை விரிவாக்குகின்றதோ, அதில் இதை மறுக்கும் போது ஏற்படுத்தும் சிதைவை எதிர்த்தே இது எழுகின்றது. பெண் இந்த பெண்ணின் அணிகலன்களை கைவிடுவது யாருக்கு நட்டம். ஆணாதிக்க அமைப்புக்கு அதிலும் தனிச் சொத்துரிமை பொருளாதார அமைப்புக்கு பாரிய சிதைவைக் கொடுக்கும். அதாவது சந்தையை பெண்ணின் அங்கம் மீது, பெண்ணின் பண்பாட்டு வடிவங்கள் மீது, அழகுபடுத்திக் காட்டி, கட்டமைக்க முடியாது. அழகு சாதன வர்த்தகம் முற்றாக சிதைந்து போகும். இதனால் ஆணாதிக்கம் பெண்ணை மரபாக அடையாளப்படுத்திய வடிவம் சிதைகின்ற போது, அது ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் அங்கமாகி, உலக ஏகாதிபத்தியமும், அதன் தொங்கு சதையான ஜ.நாவும் தகர்ந்து போகும்.

பெண் முடிவளர்த்து, காதல் உணர்வு ததும்ப ஆண்களுடன் கூடியுள்ளவரை, இந்த உலக ஒழுங்கு மாறாது என்பது தான் ராதிகா முதல் ஏகாதிபத்தியத்தினதும் கொள்கை. அதுதான் பெண்களுக்கு அழகியல் சாதனங்களை உற்பத்தி செய்தும், விளம்பரம் செய்தும் பெண்கள் அதைப்பற்றிச் சிந்திக்கவும் கோருகின்றனர். பண்பாட்டு கலாச்சார தளத்தில் பெண்ணின் வருணனைகள் எல்லாம் பாலியலில் பதுமையாக்கும் அல்லது வக்கிரத்தை கொட்டும் வகையில் எல்லா உறுப்புகளும் காட்டப்படுகின்றது, அழகுபடுத்தப்படுகின்றது.

பெண்மைக்கான ராதிகாவின் இன்னுமொரு விளக்கம் தருவதைப் பார்ப்போம். "இரக்க சுபாவம், சகிப்புத் தன்மை, சமூக உறவு பேணல், சாந்தம் இது போன்ற குணங்கள் எல்லாம் மனிதர்களுடன் இணைந்து செயற்படும் போது அவர்கள் பாவித்திருக்கிறார்கள். இந்தப் பண்புகள் குணங்கள் எல்லாம் நீண்ட காலமாக பெண்களின் நற்பண்புகளாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டவை. இவை எல்லா நிலைமைகளிலும் மாறுபடாமையாகத் திகழவேண்டிய முக்கிய பண்புகளாகும்."

இவைக்கு வர்க்கம் கிடையாதா? ஏன் இந்தப் பெண்கள் இரக்கம், சகிப்பு, சமுகஉறவு, சாந்தம் போன்றவற்றை பொதுவில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, உயர்சாதிப் பெண்கள் வழங்கவில்லை. தமிழ் பெண்களுக்குள் உயர்சாதிப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? தமிழ் பெண்களுக்கு சிங்களப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? கறுப்பு பெண்களுக்கு வெள்ளையினப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? மூன்றாம் உலக நாட்டுப் பெண்களுக்கு மேற்கு நாட்டுப்பெண்கள் ஏன் வழங்கவில்லை? ஏன் சொந்த மருமகளுக்கு மாமி ஏன் வழங்கவில்லை? இப்படி எத்தனையோ உண்டு.

ஏன் இவைகளை வழங்க மறுத்தபடி, கோட்பாட்டளவிலும் நடைமுறையில் வன்முறை எனக் கூறி ஒப்பாரி வைக்கும் போது, மற்றைய பெண்ணுக்கு இந்தப் பண்புகளை மறுத்து வன்முறையை கையாளும் போது கேள்வியே இல்லையா?

இவை ஆணாதிக்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்டவை. ஆணின் தேவையைப் பூர்த்தி செய்ய பெண் அடங்கிப் போகவும், பெண்கள் மூலம் சமுக ஒழுங்கை ஏற்படுத்த திணிக்கப்பட்டவையே. இது பெண்ணின் இயல்பான குணமல்ல. மாறாக வீரம், செயல், ஆற்றல், பரஸ்பர மதிப்பு என்பனவற்றை ஆண்பெண் சமத்துவ நிலையில் தேடவேண்டும்.

இவைகளை எல்லா நிலைமைகளிலும் மானுட ஆளுமையாகக் காணவேண்டும் என்பது, வர்க்கப் போர் நடக்கும் போது, ஒரு முதலாளியை இரக்கம், சகிப்பு, சமூகஉறவு, சாந்தப்படி பாதுகாத்து, வர்க்கப்போருக்கு எதிராக இருக்கக் கோரும் ராதிகாவின் அரசியல், இன்றைய உலக ஒழுங்கைத் தொடர்வது எப்படி என்பதை மையமிட்டுள்ளது.

மேலும் அவர் "பெண்கள் இராணுவ மயப்படுகின்ற நிலைமை முன்பைவிட அதிக அச்சுறுத்தலான ஒன்றாகும்." எனக் கூறும் போது சிங்கள இனவாதத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாதலையும் பாதுகாக்க முனைகின்றார். இராணுவவாதம் மட்டுமல்ல பெண்கள் அரசியல் முதல் சகலதுறையிலும் முன்வருவது அச்சுறுத்தல் எனின், அது ஆணாதிக்கத்துக்கே என்பது தெளிவானது. இது அடிப்படையில் சுரண்டல் அமைப்புக்கு அச்சுறுத்தல் ஆகின்றது. புலிகளின் அரசியல் மக்கள் போராட்டத்திற்குப் பதில் இனப் பிரிவுகளின், இனப் போராட்டமாக சீரழிந்தபோது, அது இனவாத சிங்கள அடிப்படைவாதத்துக்குச் சாதகமாக இருந்தது, இருக்கின்றது. இந்நிலையில் புதிய படைப்பிரிவுகளை உருவாக்கி பெண்களை வீட்டுக்கு வெளியில் புலிகள் கொண்டு வந்தபோது, பெண்கள் படைப்பிரிவுகள் சிங்கள இனவாதத்திற்கு சவால் விடுகின்றன. இந்தப் பெண்கள் அணிதிரள்வது என்பது, இந்திய துணைக் கண்டத்தின் சமூகக் கட்டமைப்பின் பெண்ணின் அடங்கிப் போகும் போக்கை, அதன் அடிப்படை உரிமையை (ஆணாதிக்க) கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இது எதிர்காலத்தில் இந்திய சமூகப் பெண்ணின் விழிப்புணர்வுக்கு ஊன்று கோலாகியுள்ளது. இது எதிர்காலத்தில் ஏகாதிபத்தியத்திற்கும், அது சார்ந்த தரகு அமைப்புகளுக்கும் விடப்படும் ஒரு சவாலாக எழுந்துள்ளது. சனத்தொகையில் பாதிப்பிரிவு அடங்கியுள்ளவரை (இது சுரண்டும் வர்க்க ஆதிக்கத்தில் அமைதி காத்தலாகும்), சுரண்டும் வர்க்கம் தனது நிலையை இட்டு அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அதை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் அணிதிரண்ட பெண்கள், (புலிகளின் நடவடிக்கை பிழையாக இருந்த போதிலும்) இந்திய துணைக் கண்டத்தின் பண்பாட்டுக்கு சவாலாக உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இதன் விளைவுகள் தெளிவாகப் பிரதிபலிக்கும்.

இதையிட்டு அச்சுறுத்துவதாக கூறும் ராதிகா சரி, சிங்கள இனவாத அரசு சரி, சுரண்டல்பிரிவு சரி சொல்ல வருவது பெண்ணே நீ மீளவும் அடுப்படிக்குப் போ என்றுதான். பெண் வீதிக்கு வந்தால் பயப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் ஆணாதிக்கவாதிகளும் அதைச் சார்பவர்களுமே ஆவர்.

ஆண் பெண் வேறுபாடு இன்றி பெண் போராடவும், ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யவும் கோருவது, ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையாகும். சமூகம் வன்முறையில் உள்ளவரை, வன்முறை திணிக்கப்படும் வரை அதற்கு எதிராக வன்முறையைக் கையாளும் உரிமை பெண்களுக்கு அவசியமும் அடிப்படையுமான உரிமையாகும்.

ஓர் இனம், ஒருமதம், ஒரு தேசியம், ஒரு சாதி மீது வன்முறையை ஒரு பிரிவு கட்டவிழ்த்து விடுமாயின், அதை எதிர்த்துப் போராடுவதும், சொந்த சனநாயகத்தை மனித உரிமையை மீட்கப்போராடுவதும் பெண்ணின் அடிப்படையுரிமையாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் பெண்களின் உரிமை நிலை நாட்டப்படுதல், பெண்விடுதலையை அடிப்படையாகக் கொள்ளாமை என்பன, அரசியல் ரீதியில் விமர்சனத்திற்குரியவையே தவிர, போராடும் உரிமையை மறுப்பதில் மையப்படவில்லை.

ஒரு பெண் ஆணைப்போல் போராடும் சமூக கடமையின் மீது நின்றபடி தான் தனது விடுதலை நோக்கியும் போராட வேண்டும். அதற்கு வெளியில் ஒருபோதும் சாத்தியமில்லை. பெண் தனது உரிமையை மீள வென்றெடுக்க போராட சகிப்பு, அமைதி, சாந்தம், சமுகஉறவுகளைபை பின்பற்றுவதால் ஒருபோதும் பெறமுடியாது. பெண் தனக்காகப் போராடவும், இதற்கு வன்முறை பரிசாக கிடைப்பின், தற்பாதுகாப்புக்காக வன்முறையை முன்னெடுக்கும் உரிமையை தனதாக கொண்டு தான் பெண்விடுதலையை அடையமுடியும். ஏகாதிபத்திய பெண்கள் அமைப்புக்கள் தமது பூர்சுவா கண்டுபிடித்தல்களில் நின்று அமைதி, சாந்தம் பற்றி கூறும் போது எல்லாவிதமான சொற்பதங்களும் உண்மையில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சார்பானவை என்பதில் சந்தேகமில்லை.

ராதிகா மேலும் "இலங்கையை நோக்கினாலும் சரி, முழு உலகை நோக்கினாலும் சரி முழு உலகையும் எடுத்துக் கொண்டாலும் சரி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனிதஉரிமைகளை ஈட்டிக் கொள்வதற்கு எதிராகப் பெருந் தடைக்கற்களாகவுள்ளவை, மத இன மற்றும் தேசியவாதத் தத்துவார்த்தங்களுமே. இந்த யதார்த்தநிலையை... எதிர்நோக்க விரும்பவில்லை" என ராதிகா தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்துகிறார்.

உலக மனித உரிமைகளுக்கு சவால் விடுபவைகள் இவையா, அல்லது வேறு ஒன்றா எனப் பார்ப்போம். இன்று மனித உரிமைக்கு சவால் விடுபவை ஏகாதிபத்தியமும், சுரண்டல் அமைப்புமே. அப்படியிருக்க மத, இன தேசியவாதம் எப்படி சவாலாக இருக்கமுடியும். மத, இன தேசியவாத எழுச்சி என்பது மனித உரிமைகள் மறுக்கப்படுதல் என்பதிலிருந்தே தோற்றம் பெறுகிறது. மனிதர்களை அடிமைப்படுத்தும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள்தான், மத, தேசிய மற்றும் இனவாதமாக வெளிப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்வன்முறையை நிராகரிப்பதன் மூலம் அந்த மக்கள் ஒடுக்கப்பட்டபடி வாழும் அமைதிதான், மனித உரிமையின் சனநாயகம் என வாதிட முனைகின்றார். அதாவது, இன்றைய உலகப் பொருளாதார சூறையாடும் அமைப்பு வடிவை குலைக்க முனையும் போராட்டங்களை தான், மனித உரிமைக்குச் சவால விடுகின்றது என்கிறார். அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் உரிமைதான் ஜனநாயகம் என்கின்றார். ஒரு முதலாளி சுரண்டும் உரிமையையும், ஒரு தொழிலாளி சுரண்டப்படும் உரிமையையும் ஏற்றுக் கொள்ளும் மனித உரிமைதான் உன்னதமான ஜனநாயகத்தின் சின்னம் என்கிறார்.

இன்று சிங்கள இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதுதான் இலங்கையில் மனித உரிமைக்கு சவாலாக இருக்கிறது என்கிறார். சிங்கள இனவாதத்துடன் இணைந்து சலுகைகோரிப் பெறுவது தான் தமிழ்பிரிவின் கடமையே ஒழிய, எதிர்த்துப் போராடுவது அல்ல என்கிறார். பெரும்பான்மை இனத்தின் இன வன்முறை அரசு ஆதிக்கத்தை எதிர்க்காத, தமிழின அமைதி தான் இலங்கையில் மனித உரிமையைப் பேண அடிப்படையாகும் என்கிறார். அதுதான் தமிழ் மக்களுக்கு "சமஷ்டித் தீர்வு" தான் சரி எனக் கூறுவதன் மூலம், சிங்கள இனவாதத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் அடக்குமுறையின் கோட்பாட்டை அப்படியே எடுத்து, தமிழ் மக்களுக்கான ஜனநாயகமாக சமாதானத்தின் பெயரால் திணிக்க முனைகின்றார்.

தமிழ்மக்களுக்கு உண்மையான சமாதானம், ஜனநாயகம் மனித உரிமை என்பது சுயநிர்ணய உரிமையில் தங்கியுள்ளது. சுயநிர்ணயத்தை நிராகரித்த சமஷ்டி என்பது சிங்கள இனவாதத்திற்குட்பட்ட இனவாதத் தீர்வுகளே எம்மீது திணிக்க முயல்வதாகும்.

"சங்ககால இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற இராகவன் (விமர்சகர்) அவர்கள் கன்னிப் பெண்கள் எதிரியுடன் போர் புரிவதற்கென உண்மையில் ஒருமுறை ரீதியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு முன் நிகழ்வைக் கூறமுடியுமா?" என வினா எழுப்பும்போது, இவர் ஒரு பெண்ணிலைவாதியா? என்ற கேள்வியே எஞ்சிநிற்கிறது. தொப்பிக்கு ஏற்ற தலையை செய்ய எண்ணிய இவர் உலக மற்றும் தமிழ் மரபை விபச்சாரம் செய்து ஆணாதிக்கத்துக்கு முண்டு கொடுக்கின்றார்.

தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

RSS ன் கொழுப்பெடுத்த அயோக்கியத்தனத்தை தனது பத்திரிக்கையில் வாந்தியெடுத்தது தினமணி எனும் பார்ப்பனமணி பத்திரிகை. இந்து மக்கள் கட்சி எனும் RSS பயங்கரவாதிகளின் அல்லக்கை கட்சி ஒன்றின் அடியாள் படை தாதா நாயான அர்ஜூன் சம்பத என்பவன் பெயரில் வெளி வந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை(ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால், Friday March 7 2008 00:00 IST, தினமணி).

சிதம்பரத்தில் சமீபத்தில் தமிழில் பாடுவதற்க்கு தடையாக இருந்த தீட்சிதர்களை பின் வாங்க வைத்து பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் ரொம்ப நல்லவன் போல எழுதுகிறான் இந்த கோயம்புத்துர் கொலைகார பொறுக்கி. ²தோ தீட்சிதர்கள் அங்கு தமிழை எதிர்க்கவில்லை என்பது போலும். இன்னாள் வரை தீட்சிதர்கள் அங்கு வேறு சாதியினரையும் தமிழையும் வளர்த்தே வந்துள்ளனர் என்பது போலும் மாறாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட திராவிட கம்யுனிஸ்டு கட்சியினர் தான் பிரச்சினை உண்டு பண்ணுவதாகவும் கொழுப்பெடுத்து பேசுகிறான் ஒரு பார்ப்பன பயங்கரவாதி. ஆயினும் தீட்சிதர்கள் வரலாறும் சரி இன்றைய நடப்பும் சரி மக்களை அவமதிப்பதாகவே உள்ளது.

ஏதோ இந்துக்கள் எல்லாருக்கும் நான் தான் ஹோல்சேல் பாதுகாப்பு குத்தகை எடுத்துள்ளேன் என்பது போல கதறும் இந்த வெறியர்கள் நேற்று அதாவது 6 மார்ச் 2008 ல் சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடியததற்க்Ì தீட்டு கழித்து தீட்சிதர்கள் நடத்திய பரிகார பூசையை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?

தீட்சிதர்களின் வரலாறும் ஆக அயோக்கியத்தனமானதுதான். இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களை அவமானப்படுத்தி எழுதியுள்ள இந்த தினமணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவார தமிழ் ஓலைகள் ராஜ ராஜ சோழனால் பூட்டியிருந்த அறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவமே கூட தீட்சிதர்கள் தமிழை எந்தளவுக்கு அவமானப்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு ஒரு சான்றாகும். லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் பாடல்களை ஒரு அறையில் பூட்டி நாசம் செய்ததுடன் இல்லாமல். ராஜ ராஜ சோழன் வந்து அந்த அறையை திறக்க சொன்ன போது திறக்க மாட்டேன் என்று அடாவடித்தனமும் செய்தனர் (இன்று தமிழில் பாடுவதற்க்கு செய்வது போலவே). இதில் பாதிக்கும் மேற்ப்பட்ட தேவாரப் பாடல்கள் தீட்சிதர்களின் அயோக்கியத்தனத்தால் அழிந்து போய் மீதியுள்ளவைதான் கிடைத்தன. வரலாறு இப்படியிருக்க அர்ஜூன் சம்பத அல்லது அவன் பெயரில் எழுதிய அல்லக்கை வரலாற்றை திரித்து எழுதுகிறது. அன்றாட சம்பவங்களையே திரித்து எழுதுபவர்களுக்கு வரலாற்றை திரிப்பது பெரிய விசயமில்லைதான்.

இது அன்று வரலாறு என்றால் இன்று கடந்த சில வருடங்களில் மட்டும் சிதம்பரம் கோயிலில் வளாகத்திலேயே சில கொலைகளும், பாலியல் வன்புணர்வு குற்றம் ஒன்றும் நடந்துள்ளது. இவற்றில் எல்லாம் தீட்சிதர்கள் தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்படி சிதம்பரம் கோயிலின் புனிதத்தை தமது சொந்த அரிப்புக்காக கெடுத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆதரிக்கிறது இந்த RSS கும்பல்.

சாளுக்கிய மன்னனுக்கும், சோழப்பேரரசின் இளவரசிக்கும் பிறந்த குலோத்துங்க சோழனுக்கு முடியுரிமை வழங்குவதா கூடாதா என்ற சர்ச்சை எழுந்தபோது, தில்லை தீட்சிதர்கள் சாளுக்கிய வாரிசினை ஆதரித்துப் பட்டம் சூட்டத் துணை நின்றதாகவும், அதன்பேரில் தீட்சிதர்கள் குலோத்துங்கனிடமிருந்து பல உரிமைகளையும் தில்லைக் கோவில் சொத்துக்களையும் பெற்றதாகவும் வரலாறு சொல்கிறது. அதில் இருந்து தீட்சிதர்கள் சாளுக்கிய வம்சத்தில் இருந்து சோழனாக மாறிக்கொண்ட குலோத்துங்கன் காலத்தில் செப்பேடுகளில் மட்டும் தேவாரம் இருக்கட்டும். தினமும் பாடத்தான் வேண்டுமா? என்று தந்திரமாக தமிழை நடராசனிடம் இருந்து அகற்றி விட்டனர். இந்த சதியினை நக்கீரன் பத்திரிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் தினமணியோ வரலாற்றையே புரட்டிப்போடுகிறது.

பார்ப்பன பயங்கரவாத அமைப்பான RSS என்றைக்கும் பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கைய மதித்ததே கிடையாது. நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் மாமிசம் உண்ணும் கடவுளர்களையும், சிறு தெய்வங்களையும் அவமரியாதையாக கருதி அவற்றை புனிதப்படுத்தி பார்ப்பனமயமாக்குவதுடன் இது போல ஏற்கனவே பார்ப்பனியமயமாக்க்கப்பட்ட கோயில்களில் சாதாரண மக்களை அவமரியாதை செய்வதையும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைவதாகட்டும், தேர் இழுப்பதில் உரிமை கேட்பதாகட்டும் இவர்கள் ஆதிக்க சாதியினர் பக்கமிருந்தே குரல் கொடுப்பர். அது போலவேதான் இப்பொழுதும் கூட பார்ப்பனியத்தின் பக்கமிருந்து குரல் கொடுக்கிறார்கள்.

10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத் தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.

'அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.

இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.

ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.

இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)

இன்று இத்தனை வக்கணையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்?

அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?

கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும்.

இத்தனை வக்கணையாக பேசும் RSS மக்கள் விரோத கும்பல் நீதிபதியிடம் ஆறுமுகச்சாமியை விடமுடியாது என்பதற்கு மறுப்பாக தீட்சிதருக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் பாரம்பரிய உரிமைகள் இருப்பதாகவும், பிறரை அந்த மண்டபம் வரை அனுமதிப்பது நகைகளுக்கு ஆபத்து என்றும் கூறி வாதாடியதை எதிர்த்து எதேனும் செய்வார்களா?

அதாவது தீட்சிதர் தவிர்த்து, சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்கும் கோயிலில் உரிமையில்லை என்பதுதான் அவர்களின் வாதமெனில் இந்துக்களின் நலனுக்கு போராடும் RSS கும்பல் இன்னேரம் தீட்சிதர்களின் மண்டையில் தட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா?

அதாவது தீட்சிதர் தவிர்த்தும், சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்கும் உரிமையில்லை என்பது சாதிவெறியில்லையா? மொழி வெறியில்லையா?

தீட்சிதர் தவிர்த்து மற்றயவர்களை கோயிலில் விட்டால் திருட்டு போய்விடும் என்று சூத்திரன் அத்தனை பேரும் திருடன் என்று சொல்வது RSS வெறியர்களுக்கு தேனாக இனிக்கிறது போலும்.

இவையெல்லாம் சாதி வெறி, மொழி வெறி பிடித்து பெரும்பான்மை மக்களை அவமதிப்பவர்கள் RSS உள்ளிட்ட பார்ப்பன வெறி கும்பலா அல்லது வேறு யாருமா என்பதை தெளிவாக காட்டுகின்றன.

இவற்றையெல்லாம் பிரசுரிப்பதற்க்கு தினமணியின் கழுத்தில் பாய்ந்து வயிற்றில் ஊரும் பூனூல் அனுமதிக்காது.

இப்படியெல்லாம் பேசினால் உடனே இஸ்லாமில் வேற்று மொழியில் இருக்கிறதே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் இவர்கள். மசூதிகளில் அராபியில் ஓதுகிறார்கள்தான். அங்கு தாய்மொழிக்காகக் குரல் எழும்பி, அதற்கு இமாம்கள் தடைபோட்டால் அதற்கும் குரல்கொடுப்போம். ஆனால் கிறித்தவமோ, இசுலாமோ தமிழ் மொழியை நீச பாசை என்றோ, தமிழ்மக்களை-சூத்திரர்களை 'வேசிமக்கள்' என்றோ சொல்வது இல்லை அதுவும் நீதிமன்றம் முதல் இதோ தினமணியில் அறிக்கை வடிவில் வரை தமிழை அவமானப்படுத்திவிட்டு தைரியமாக வலம் வருவதில்லை அவர்கள் என்பதும் உண்மை.

பிறமதத்துக் காரர்களிடம் தமிழில் வழிபாடு நடத்து என்று வலியுறுத்துவார்களா என்று வக்கணையாக கேட்கும் இவர்கள் இங்கு கிறித்துவ வழிபாட்டு இடங்களில் தமிழில்தான் வழிபாடு நடக்கிறது. மேலும் பைபிளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து அதனை வாசிக்கக் கல்வியை அவர்கள் தந்ததால்தான் கல்வியும் கிறித்தவமும் ஒடுக்கப்பட்டமக்களிடையே பரவிற்று. முதலில் இந்துமத வேதங்களையும், உபநிசத்துக்களையும், அப்படியே சங்கரர் எழுதிய சரோஜாதேவி புத்தகத்தையும், சவுந்தர்ய லகரியையும் மொழிபெயர்த்துவிட்டு இதைப் பத்திப் பேசலாம்.

இதே முற்போக்கு புரட்சிகர அமைப்பினர்தான் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களுக்கு, பெண்ணடிமைத்தனங்களையும், தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அமைதியாக அயோக்கியத்தனம் செய்யும் போதெல்லாம் ஏதோ பார்ப்பனிய மதத்தில் ஆக சிறப்பாக பல்வேறு விசயங்கள் இருக்கிறது என்று பூ சுற்றுவதும். அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் உடனே இஸ்லாமில் இல்லையா, கிருத்துவத்தில் இல்லையா என்றோ அல்லது பாகிஸ்தானில் இல்லாததா, பங்களாதேசில் இல்லாததா என்றும் வேறு மாதிரி பேசுவதும் என்பதாக இரட்டை நாக்கு கொண்டவர்கள் இவர்கள். ஏதோ நாம் இஸ்லாம், கிருத்துவம், பாகிஸ்தான், பங்களாதேஸ் எல்லாம் மிக முற்போக்கானவை என்று சொன்னது போல.

இன்று நாத்திகனுக்கு அங்கென்ன வேலை என்று கேட்கும் கோயம்புத்தூர் கொலைகாரன் அர்ஜூன் சம்பத என்ற மனிதகுல விரோதி, ஆத்திகரான ஆறுமுகசாமி தனது உயிருக்கு நாத்திகர்களான மக இகவினர் துணையின்றி தீட்சிதர்களால் ஆபத்து என்று கோர்ட்டில் ஒப்படைத்து சிறை புகுந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கலாமே? தஸ்லீம நஸ்ரீனுக்கு ஆதரவளிக்க முன் வந்த வாய்களுக்கு ஏன் ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிக்க முடியவில்லை?

அதாவது சர்ச்சையின் நோக்கம் ஆன்மிகமாக இல்லாததுதான் இவர்களுக்கு கவலையளிக்கிறதாம். உண்மையில் இவர்களுக்கு கவலையளிப்பது இவர்களின் பார்ப்பனிய ஆன்மிக ஆதிக்கத்திற்கு ஆபத்து உருவாகியுள்ளது என்பதே ஆகும். ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கெதிராக தமிழுக்கெதிராக வரலாறு நெடுகிலும் தீட்சிதர்கள் சதி செய்த பொழுதெல்லாம் கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பற்ற அடிமை கும்பல் தலைவான அர்ஜூன் சம்பத் இன்று தமிழர்களின் உரிமைக்கு போராடும் போது ரொம்ப நல்லவன் போல சதி செய்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பதின் பின்னால் உள்ள சதியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

என்றைக்கு பெரும்பான்மை மக்களின் பண்பாட்டை அவமதிப்பது என்றும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவமதித்து மறுப்பதும் என்றும், பிற்போக்குத்தனத்தால் மக்களை முட்டாள் ஆக்குவது என்றும் ஆகிவிட்டதோ அன்றே அங்கு ஆத்திகம் நாத்திகம் என்பதெல்லாம் இல்லை மாறாக மக்களின் உரிமை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. அதனால் அதற்கான போராட்டத்தின் நியாயத்தைத்தான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் பேச வேண்டுமேயொழிய அதை விடுத்து அப்பொழுது வந்து ஆத்திகம் நாத்திகம் என்று பேசினால் உண்மையில் அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்றுதான் அர்த்தம். அர்ஜூன் சம்பத்தும் சரி அவருக்கு இந்த கட்டுரையை எழுதி கொடுத்த கும்பலும் சரி சூழ்ச்சிகள் செய்வதில் விற்பன்னர்கள் என்பது சமீபத்தில் தென்காசி இந்து முன்னணியினர் குண்டு வைத்து கைதான சம்பவத்திலும், கோவையில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி அப்பாவிகளை மாட்டி விட்ட வழக்கிலும் சரி தெளிவாகவே அம்பலமாகியுள்ளது.

ஆறுமுகசாமி சிவபக்தர்தான். அவரின் பக்தியை இந்துமக்கள் கட்சியும் தீட்சிதர்களும் மதிக்கிறார்கள். அவர்களே அவரின் பக்தியை மெச்சி, நாத்திகம் பேசுறவாளிடம் இருந்து தனியாகித் தன்னந்தனியனாகி ஆறுமுகசாமி வந்தால் அவரை அரவணைப்போம் என்கிறார்கள். இதை நாம் நம்புவதற்கு நாம் ஒன்றும் நந்தனார் மாதிரி அப்பாவிகள் இல்லை. ஏனெனில் நேற்று போலிஸ் பாதுகாப்புடனும், மனித உரிமை கழகம், மக இக உள்ளிட்ட தோழமை அமைப்பினரின் பாதுகாப்புடன் சென்ற பொழுதே தீட்சிதர்கள் போலிசையும் தாக்கி போராடியவர்களையும் தாக்கினர் எனும் போது தனியாக வந்தால் இவர்களின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அரவணைப்பையும், பின்னர் சோதியில் கலக்கவைக்கும் பித்தலாட்டத்தையும். தில்லைக்கோவிலின் தென்வாயிலே சொல்கிறது. அன்று நந்தன்காலத்தில் ம.க.இ.க. தோழர்கள் இல்லை. நீதிமன்றம் (அநீதியே சொன்னாலும் அதன் பெயரிலாவது) இல்லை. இருந்திருந்தால். நந்தன் கதையை இன்று இருப்பது போல படித்திருக்க நியாயமில்லை.

பார்ப்பனியம் அதுவும் குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் வேற்று சாதியினரையும், மாற்று கருத்துள்ளவர்களையும் அரவணைக்கும் வரலாறு நந்தன், வள்ளலார் முதல் இன்று ஆறுமுகச்சாமி வரை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நாத்திகர்களான மக இக, மனித உரிமை கழகம் போன்ற அமைப்புகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருந்தால் ஆத்திகர்களான நந்தனையும், வள்ளலாரையும் இன்னும் சில பல பார்ப்பனிய எதிர்ப்பு தியாகிகளின் உயிரையும் பாதுகாத்திருக்கலாம்.

இந்தியாவெங்கும் பொய்யையும் புனைசுருட்டையும் ஆயுதமாக கொண்டு வரலாற்று அவமரியாதை துடைக்க கட்டிடங்களை இடித்து தள்ள புறப்பட்ட வானர கும்பலின் தலைமை கொலைகார தறுதலையான அர்ஜூன் சம்பத். சிதம்பரத்தின் தெற்கு வாயில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் அவமரியாதைச் சின்னமாக நிற்கிறதே. இந்து மக்கள் முன்னணி அந்த சுவரை இடிக்க கரசேவை ஆரம்பித்துவிட்டு நியாயவான் போல பேசட்டும்.

இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது. நக்சல்பாரிகள்தான் தமிழைக் காப்பாற்றினர். பார்ப்பனியத்தின் கொலைவெறிச் சதியை முறியடித்தனர். ஏனென்றால், எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,எங்கெல்லாம் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வசந்தத்தின் இடி முழக்கமாய் மக்களுக்கு வெற்றியை கொடுக்க களமிறங்கும் நக்சல்பாரி. அதுதான் சிதம்பரம் தமிழ் வழிபாடு விசயத்திலும் நடந்துள்ளது.

இன்று தமிழ், ஆத்திகம் என்று பேசும் இன்று பார்ப்பன அடியாளும், அவனது கட்டுரையை பிரசுரித்த பார்ப்பன பத்திரிகையும் இது வரை தமிழர் என்ற சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பிரச்சினைக்கும் சரி, இந்துக்கள் எனப்படுபவர்கள் இந்து என்ற பெயரிலேயே அவமரியாதை செய்யப்படும் பிரச்சினையிலும் சரி குரல் கொடுத்ததேயில்லை. அங்கெல்லாம் நாம் தான் கொடுத்துள்ளோம். அதே போலத்தான் ஆறுமுகச்சாமி விசயத்திலும்.

சுயமரியாதையுள்ள ஓவ்வொருத்தனும் அர்ஜூன் சம்பத் போன்ற ரவுடிகளின் திமிர்பிடித்த பேச்சுக்களை பிரசுரிக்கும் பார்ப்பன கொழுப்பெடுத்த தினமணியை கடுமையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

இதனை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

அசுரன்

நன்றி அசுரன்

Friday, March 7, 2008

ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதிகளே ஒழிய, சர்வதேசியத்தை முன்னெடுக்கும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியல்ல

ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதிகளே ஒழிய, சர்வதேசியத்தை முன்னெடுக்கும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியல்ல

ஜே.வி.பி. கட்சி ஒரு இனவாதக் கட்சியா? இல்லையா? என்ற அடிப்படையில் 12.5.2005 அன்று ரி.பி.சி. வானொலியில் ஒரு குதர்க்கமான விவாதத்தையே நடத்தினர். புலிகள் ஆதரவு நபர் ஒருவர் ஜே.வி.பி.யை இனவாதிகள் என்று கூற, ரி.பி.சி.யின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் இனவாதிகள் இல்லவே இல்லை என்றார். இதற்கு ஆதரவாகத் தேனீ இணையத்தள ஆசிரியரும் களமிறங்கி பக்கப்பாட்டு பாடினார். இதைத் தொடர்ந்து இந்தக் கூத்தரங்கம் தொடருகின்றது.

புலி அல்லாதவர்களுக்குப் புலிக் காய்ச்சல் பிடித்த பின்பாக, எல்லாவற்றையும் புலிப் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதன் மொத்த விளைவுகளே இது. இவர்கள் உலகத்தையே புலிக் கண்ணாடி கொண்டு பார்ப்பதன் மூலம், உலகத்தின் பொதுப்போக்கையே புலிக்குச் சாதகமா? பாதகமா? என்ற அடிப்படையில் அனைத்தையும் திரித்து விடுகின்றனர். புலிகள் அல்லாத மாற்று இதுவே என்ற ஒரு கண்ணோட்டத்தை, வானொலி மற்றும் இணையங்கள் ஊடாகத் தவறாகப் புனைந்து விடுகின்றனர்.

இவர்கள் யாருக்கும் மக்களைப் பற்றி ஒரு துளியும் அக்கறை கிடையாது. ஜனநாயகம், சுதந்திரம் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மிகக் கேவலமாகக் கொச்சைப்படுத்தி, அனைத்தையும் புலிகளுக்கூடாகவே விளக்கும் எல்லை வரை சென்றுள்ளனர். புலியல்லாத கருத்துக்களில் இவை ஊடுருவி புரையோடிக் காணப்படுகின்றது.

புலிகள் ஜே.வி.யை.யை இனவாதிகள் என்ற சொல்லுகின்றார்கள் என்றால், அவர்கள் தங்கள் சொந்தக் குழு நலனுக்கு ஜே.வி.பி.யால் ஏற்படும் குறித்த பாதிப்பில் இருந்து தான் எதிரொலிக்கின்றனர். அரசியல் ரீதியாக ஜே.வி.பி.யின் பெரும் தேசிய இனவாதத்தை அம்பலப்படுத்த முடியாத நிலையில், புலிகள் தமது சொந்த குழு நலன் சார்ந்தே இனவாதிகள் என்கின்றனர். தமது அதிகாரத்தைத் தமிழ் மக்கள் மேல் மேலும் ஆழமாக நிறுவி ஒட்டச் சுரண்ட, அவர்களுக்குத் தேவையான ஒரு கட்டமைப்புக்கான தடையைத் தான் அவர்கள் இனவாதம் என்கின்றனர். இதற்கு அரசியல் சட்ட அமைப்பு ரீதியாக ஜே.வி.பி. கொடுக்கும் எதிர்ப்பினையே இனவாதமாகப் புலிகளும், நக்கித் திரியும் புலிப் பினாமிகளும் காட்டுகின்றனர்.

இதை அரசியல் ரீதியாக ரி.பி.சி.யும், புலி எதிர்ப்பு இணையங்களும் எதிர்கொள்ள வக்கற்றுப் போகின்றன. இதனால் புலிகளின் முடிவுக்கு மாற்றாக எதிர்மறையில் அனைத்தையும் முடிவெடுக்கும் அரசியல் இழிநிலைக்கு, கண்ணை மூடிக் கொண்டு குதர்க்க வாதத்தைச் செய்கின்றனர். மறுபக்கத்தில் புலிகளின் மக்கள் விரோதப் பாசிசப் போக்கு, இவர்களின் அரசியல் மேலாண்மையைத் தக்க வைக்கின்றது. தமது அரசியல் நிலைப்பாட்டைத் தூய்மையானதாக இதன் மூலம் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் சிலருக்கு ஒளிவட்டம் போடுகின்றனர்.

இதன் ஒரு அங்கமாகவே ஜே.வி.பி.யை இனவாதிகள் அல்ல என்கின்றனர். இதற்கு ரி.பி.சி. அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் படிப்படியாக ஜே.வி.பி.யின் கொள்கை வகுப்பாளராக மாறி, அவர்களைச் சிங்கள இனவாதிகள் அல்ல என்கின்றனர். நக்கித் திரியும் புலிப் பினாமிகளைப் போல், ஜே.வி.பி. பினாமிகள் பலர் புலியெதிர்ப்பின் ஊடாக வளர்ச்சியுறுகின்றனர்.

ஜே.வி.பி.யைக் காப்பாற்ற சிவலிங்கம் கொடுத்த விளக்கமே ஆச்சரியமானது. ஜே.வி.பி. பொருளாதார ரீதியாக இனப்பிரச்சினையை அணுகுவதாகவும், பொருளாதாரக் காரணங்களால் தான் தீர்க்கப்பட முடியும் என்ற அடிப்படையில் சிந்திப்பதால், அவர்களை இனவாதிகள் அல்ல என்கின்றார். இதைப் பார்த்தால் போகிறபோக்கில் புலிக்குப் பாலசிங்கம் போல், ஜே.வி.பி.க்கு ரி.பி.சி. சிவலிங்கம் உத்தியோகபூர்வமான கொள்கை வகுப்பாளராக மாறினாலும் ஆச்சரியமானதல்ல. புலிகள் துப்பாக்கியால் அனைத்தையும் தீர்வு காண முனைவது போல், இவர்கள் புலிகளின் வக்கற்றத் தன்மையைப் பயன்படுத்தி உருவாகும் மேலாண்மையைக் கொண்டு, அனைத்தையும் புரட்டிவிடுகின்றனர்.

ஜே.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாத அரசியல் கட்சி தான். அவ்வளவு ஏன் ஜே.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாதக் கட்சியே என்று அடித்தே கூறுகின்றோம். இதற்கான அடிப்படையான காரணம் என்ன? நாங்கள் அவர்களின் வரலாற்றில் பல தொடர்ச்சியான பேரினவாதப் போக்கையும், சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியலையும் காட்ட முடியும். ஆனால் அதற்குள் இக்கட்டுரை செல்ல போதிய அவகாசமில்லை. சமகாலப் போக்கில் எதார்த்தத்தில் எப்படி சிங்கள பேரினவாதிகளாக உள்ளனர் என்பதை, தெளிவாக அம்பலப்படுத்த முனைகின்றோம்.

முதலில் ஜே.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாதக் கட்சி அல்ல என்றால், அவர்கள் யார் என்பதைத் தெளிவாக ஒவ்வொருவரும் விளக்கவேண்டும்.

அவர்கள் முரணற்ற ஒரு முதலாளித்துவ கட்சியா? அல்லது சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியா? அல்லது பல கலவைகளைக் கொண்டு நாடகமாடும் சிங்களப் பேரினவாதக் கட்சியா? எது என்பதை முதலில் ஜே.வி.பி.க்காக வாலாட்டி நிற்பவர்கள் தெளிவாக்க வேண்டும். புலிக்குக் குதர்க்கமாகத் தமது அரசியல் மேலாண்மையைக் கொண்டு பதிலளிப்பதல்ல, மக்கள் நலன் சார்ந்த அரசியல். தமிழ் சிங்கள மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிரான வகையில் ஜே.வி.பி. பற்றி புனைந்து காட்டும் புலியெதிர்ப்பு பிரிவினரின் அரசியல் இழிநிலையை இனம் காணவேண்டியது அவசியமாகின்றது.

நாம் தெளிவாக ஜே.வி.பி. ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி அல்ல என்கின்றோம். திட்டவட்டமாகவே அவர்கள் சிங்களப் பேரினவாதக் கட்சியே என்கின்றோம். ரி.பி.சி. ஆய்வாளர் சிவலிங்கம் தமது அரசியல் ஆய்வில், ஜே.வி.பி. பொருளாதார ரீதியாகவே இனப்பிரச்சினையைப் பார்ப்பதால் அது இனவாதக் கட்சி அல்ல என்கின்றார். நகைக்காதீர்கள் நல்லதொரு வரலாற்று ரீதியான அரசியல் ஆய்வு. யாரும் இதுபோல் இதுவரை, ஜே.வி.பி.க்கு இந்தளவுக்குப் பினாமியாகவில்லை தான். தமிழ் மக்களின் சாபக்கேடு என்னவோ, பினாமியத்தில் தான் உருப்போடுகின்றதோ?

அனைத்து இனவாதக் கட்சிகளும் பொருளாதாரக் காரணங்களுக்கு ஊடாகவே இனப்பிரச்சினையைப் பார்க்கின்றன, அணுகுகின்றன. இதில் புலிகள் கூட விதிவிலக்கல்ல. பொருளாதாரக் காரணங்களால் தான் இனப்பிரச்சினை உருவாக்கப்பட்டது. அதேபோல் இதற்குள் சம்பந்தப்பட்ட அனைவரும், பொருளாதாரக் காரணங்களுடன் தான் இதை அணுகுகின்றனர். இது ஜே.வி.பி.க்கு விசேட விதிவிலக்கல்ல. இனப்பிரச்சினையில் சம்பந்தப்படும் அனைவரும் பொருளாதாரக் காரணங்களுடன் தான் அணுகுகின்றனர். சிலர் அதைப் பகிரங்கமாகக் கூறுகின்றனர். சிலர் அதைக் கூறுவதில்லை அவ்வளவே. இதை யாரும் மறுக்க முடியாது.

பொருளாதாரக் காரணங்களால் தான் இனப்பிரச்சினை உருவானது என்று கூறும் போது, அதற்கான தீர்வு தான் என்ன? இதற்குத் தீர்வு இனவாதமாக இருப்பதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான வரலாறாக உள்ளது. இதில் ஜே.வி.பி. விதிவிலக்கல்ல. முதலில் ஜே.வி.பி. இலங்கையில் குறைந்தபட்சம் இரண்டு தேசிய இனங்கள் உண்டு என்பதையே ஏற்றுக் கொள்வதில்லை. இதைவிட இரண்டு சிறுபான்மை இனங்கள் உண்டு என்பதைக் கூட கொள்கையளவில் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இனப்பிரச்சினையில் இந்த நிலைப்பாட்டை எடுக்க மறுக்கும் அனைவரும், பேரினவாதிகளாகவோ அல்லது குறுந்தேசிய இனவாதிகளாகவோ இருக்கின்றனர். இதற்கு யாரும் விளக்கு பிடித்து ஒளி காட்டத் தேவையில்லை.

இரண்டு தேசிய இனங்களும், இரண்டு சிறுபான்மை இனங்களும் இருக்கின்றன என்றால், குறித்த நாட்டில் அவர்களின் அரசியல் அதிகாரம் உறுதி செய்யப்பட வேண்டும். எந்த விசேட சலுகையையும் எந்த இனமும் அனுபவிக்காத சட்டத்திட்டங்களின் மூலம், இனங்களின் ஐக்கியப்பட்ட ஆட்சி அமைப்புக்கு ஏற்ற ஒரு அரசு இருக்கவேண்டும். இது சுயநிர்ணய அடிப்படையில் அமைய வேண்டும். அப்படி இல்லாத நிலையில் அதை முன்வைத்து குறைந்த பட்சம் போராட வேண்டும். இதை ஜே.வி.பி. செய்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. இதை யாரும் மறுத்து நிறுவ முடியாது.

இரண்டு தேசிய இனங்கள் ஒன்றுபட்ட நாட்டில் ஐக்கியப்பட்டு வாழ வேண்டுமென்றால், குறைந்தபட்சம் எந்த அரசியலை முன்னிறுத்தி கிளர்ச்சி செய்யவேண்டும். இதை மட்டும் யாரும் முன்வைப்பதில்லை. மாறாக மார்க்சிய தலைவர்களின் படங்களைத் தூக்கிக் காட்டியபடி, சிவப்புச் சட்டையைப் போட்டபடி கவர்ச்சிகரமான விளம்பரங்களால் தான் தம்மைப் புரட்சியாளராகக் காட்டுகின்றனர். இல்லை என்று மறுத்து யாரும் எதையும் நிறுவிக் காட்ட முடியாது. தமிழ்ச்செல்வன் பல்லைக் காட்டுவது போல் ஜே.வி.பி. புரட்சி வேசம் போட்டே மக்களை ஏமாற்றுகின்றது. இங்கு விளம்பர உத்திதான் அனைத்துக்குமான அரசியல் அடிப்படையாக உள்ளது.

மார்க்சிய அடிப்படையில் இருந்து இவர்கள் எதையும் மக்களுக்காகக் கற்றுக் கொடுப்பதில்லை. அவர்கள் விளம்பரத்துக்காகக் கொண்டு செல்லும் மார்க்சியத் தலைவர்களின் முரணற்ற அரசியலை, ஆணையில் வைக்க வேண்டும். ஆனால் ஜே.வி.பி. பச்சை இனவாதத்தையே அதற்குப் பதிலாக முன்வைக்கின்றனர். எப்படி என்று நாம் தெரிந்து கொள்ள, அவர்கள் படமாக மட்டும் விளம்பரம் செய்யும் லெனின், என்ன சொன்னார் என்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

""ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறிய ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையுமாகும்'' என்று லெனின் கூறிய கருத்து தெளிவாகவே ஜே.வி.பி.க்கு எதிராக உள்ளது.

ஜே.வி.பி.க்கு எந்தவிதத்திலும் இது விதிவிலக்கல்ல. ஜே.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாதிகள் தான் என்பதையும், அவர்கள் ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோகும் கயவர்கள்தான் என்பதையும் லெனினின் கருத்தே தெளிவாக்கி விடுகின்றது. அதாவது இவர்கள் சிறுபான்மை இனத்தை ஒடுக்கும் கயவர்கள்தான். ஏகாதிபத்திய நோக்கத்துக்கு துணை போகின்றவர்கள்தான். இதற்கு யாரும் ஒளிவட்டம் கட்டி கொச்சையாக விளக்கம் தரமுடியாது.

1993களில் ஜே.வி.பி.யின் இன்றைய தலைவரை நான் பிரான்சில் சந்தித்த போது, தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையையே மறுதலித்தார். அவர் லெனினின் தேசிய இன சுயநிர்ணயக் கோட்பாடு இலங்கைக்குப் பொருந்தாது என்றார். ஏன் பொருந்தாது என்று கேட்டால், அதற்கு இந்த மார்க்சியப் பொருளாதாரக் கோட்பாட்டாளரிடம் எந்தப் பதிலும் இல்லை. இதையே தமது அரசியல் கோட்பாடாக வரிந்ததுடன், இனவாதிகளாகவே தம்மை அரசியல்மயப்படுத்தினார்கள்.

இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரானது என்ற பெயரில், மலையகத் தமிழ் மக்களை ஒடுக்குவோம் என்ற பெயரில் ஜே.வி.பி.யின் அரசியல் வகுப்புகள் அன்று எடுக்கப்பட்டது. இது அப்படியே இன்று இடம் பெயர்ந்துள்ளது அவ்வளவே. அக்காலத்தில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு அனுசரணையாகவே ஜே.வி.பி.யின் சந்தர்ப்பவாத, இனவாத வேலைத்திட்டம் இருந்தது. ஏன் ஜே.வி.பி. தொடங்கிய வரலாறே சண்முகதாசன் என்ற தமிழனின் தலைமையில் புரட்சியா? என்ற அடிப்படையிலான காரணமும் முக்கியமாக பங்கு வகித்தது. சண்முகதாசனின் சரியான சர்வதேசிய வழிக்கு எதிராகவே ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதக் கட்சி உருவானது. ஆரம்பம் முதலே புரட்சிக்கு எதிராகத்தான், இனவாத அடிப்படையில் தனிநபர் பயங்கரவாத வழிகளில் தான் தன்னைத் தகவமைத்தது.

சிறுபான்மை தேசிய இனத்தின் பெரும் தேசிய இனவெறிக்கு எதிரான போராட்டம், பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையில் இல்லாத, படுபிற்போக்கான வலதுசாரி தலைமையில் நடைபெற்றாலும் கூட, லெனின் நிபந்தனை விதிவிலக்கற்ற ஒன்று. சிறுபான்மை தேசிய இனங்களின் படுபிற்போக்கான அரசியல் போக்குகளை விமர்சிப்பதை இது எந்த விதத்திலும் தடுக்கவில்லை. பெரும் தேசிய பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை விமர்சிக்காது, அதை எதிர்த்து அரசியல் கிளர்ச்சி செய்யாது, சிறுபான்மை இனங்கள் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத அரசியல் அனைத்தும், படுபிற்போக்கான பெரும் தேசிய இனவாதம்தான்.

சிறுபான்மை இனங்கள் தம் மீதான ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் போது, அதையும் லெனின் தெளிவாக முரணற்ற வகையில் விளக்கி விடுகின்றார்.

""சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை... தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம் என்பதை வலியுறுத்த வேண்டும்... அவர் எல்லாச் சமயங்களிலும் குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும்'' என்றார் லெனின்.

இந்த அடிப்படையில் தான், நாம் புலிகளைத் தெளிவாக விமர்சிக்கின்றோம். இந்த அடிப்படையில் தான் முரணற்ற ஜனநாயகத்தை, சிறுபான்மை தேசிய இனங்களின் பால் கையாள முடியும்.

இந்த அடிப்படையில் தான் குறுந்தேசிய இனவாதிகளான புலிகளின் அரசியலை விமர்சன ரீதியாக அணுகி அம்பலப்படுத்துகின்றோம். இதனடிப்படையில் தான் தொடர்ச்சியான வீரமிக்க போராட்டம் மண்ணில் நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக 1990இக்கு முந்திய காலத்தில் உட்படுகொலை மற்றும் வெளிப்படுகொலைகளில் கொல்லப்பட்ட பலர், இந்த அரசியல் நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். அவர்களையே இன்று புலியெதிர்ப்பு அரசியல் கோட்பாட்டு ரீதியாகவே மறுதலித்துள்ளது. மாறாக அவர்களின் கோட்பாட்டுக்கு எதிராகவே, புலிகளைப் போல் மக்களுக்கு எதிராகவே புலியெதிர்ப்பு அரசியலில் ஈடுபடுகின்றனர்.

தேசிய இனங்கள் பால் சுயநிர்ணய அடிப்படையில், அணுக மறுக்கின்ற, அனைத்துப் போக்குகளும் படுபிற்போக்கானவையே. இதனடிப்படையில் விமர்சிக்கவும், போராடவும், கிளர்ச்சி செய்யவும் வேண்டும். இல்லாத அனைத்தும் குறுந்தேசிய இனவாதகமாகவும், பெருந் தேசிய பேரினவாதமுமாகவே எஞ்சுகின்றன. இதனடிப்படையில் தான் சிறுபான்மையைச் சேர்ந்த நாம் புலிகளையும் விமர்சிக்கின்றோம். பெரும்பான்மையைச் சேர்ந்த ஜே.வி.பி.யையும் விமர்சிக்கின்றோம். இதற்கு வெளியில் அல்ல. அதாவது எங்கெல்சு கூறியது போல் ""அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் ஒரேவிதமான நலன்களையும் ஒரேவிதமான எதிரியையும் கொண்டுள்ளனர். மேலும் ஒரேவிதமான போராட்டத்தையே அவர்கள் நடத்த வேண்டியுள்ளது'' என்ற உள்ளடக்கத்தின் அடிப்படையில்தான், நாம் அனைத்தையும் அணுகுகின்றோம்.

புலிகள் போன்ற பாசிச அமைப்புகள் சுயநிர்ணய அடிப்படையில் செயல்படாது குறுந்தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பதால், எந்தவிதத்திலும் சிறுபான்மை தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமையை மறுக்க முடியாது. இது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பெரும்பான்மையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சிறுபான்மை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்க முடியாது. மறுக்கின்ற அனைத்தும் நிச்சயமாக சிங்களப் பேரினவாதம் தான். ஏகாதிபத்திய நலனுக்கு இது துணை போவதுதான். வரலாற்று இயக்கத்தை எப்போதும் எங்கும் தீர்மானிப்பவர்கள் மக்களே ஒழிய, எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அல்ல. ஒரு பிற்போக்கான அதிகாரக் கட்டமைப்பு பிரிந்து சென்றால், அந்தப் பிற்போக்குக்கு எதிரான போராட்டத்தை அந்தத் தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களின் போராட்டங்கள் தான் அதற்கு முடிவு கட்ட வேண்டுமே ஒழிய, பேரினவாதச் சக்திகளோ, ஒடுக்கும் இன மக்களோ அல்ல.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஜே.வி.பி. அடிப்படையில் ஒரு சிங்கள பேரினவாதத்தின் கட்சியாகவே உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் முரணற்ற வகையில் செயல்பட முடியாத ஒரு இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. இந்தக் கட்சி சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை முன்வைத்தும், தமிழ் மக்கள் மத்தியில் ஐக்கியத்தை வலியுறுத்தியும் கிளர்ச்சி மற்றும் பிரச்சாரத்தைச் செய்ய முடியாத கட்சி, ஒரு சர்வதேசியக் கட்சியல்ல. மாறாகப் பேரினவாதத்தினைச் சுற்றிவளைத்து பிரச்சாரம் செய்யும், ஒரு பச்சை இனவாதக் கட்சிதான் ஜே.வி.பி. காலம்காலமாகத் தமிழ் மக்களை ஒடுக்கியே வளர்ச்சியுற்ற பேரினவாத இனவாதக் கட்சியுடன், கூட்டுச் சேர்ந்து இனவாதத்தை ஒழிக்கும் பொருளாதார அரசியலை நடத்துகின்றனராம். நம்புங்கள். இப்படி ரி.பி.சி.யின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் மூச்சிழுக்க அறிவிக்கின்றார். தமிழ் மக்களை ஒடுக்கி உருவான ஒரு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் அரசு இயந்திரத்தில் இருந்தபடி, பொருளாதார விடுதலையைப் பற்றியும், அதனூடாகத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் வழிகாட்டுவதாகக் கூறுவது நகைப்புக்குரிய அரசியல் சூழ்ச்சியாகும்.

ஜே.வி.பி. கூட்டுச் சேர்ந்து உருவாக்கிய இந்த அரசு இயந்திரமே, சிங்களப் பேரினவாதத்திலானது. இந்த அரசு இயந்திரம் சிங்களப் பேரினவாதமாக உள்ள நிலையில், அதன் உறுப்பாக அதன் சூழ்ச்சிமிக்க நடவடிக்கையில் இணைந்து நிற்கின்றது. ஜே.வி.பி. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை பேரினவாத நோக்கில் இருந்தே அணுகுகின்றது. குறைந்தபட்சம் பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து சீரழிந்துள்ள போலி கம்யூனிஸ்ட் கட்சி அளவுக்குக் கூட, முற்போக்காகச் செயல்பட முடியாத அளவுக்கு ஜே.வி.பி. இனவாத அரசியலையே முன்வைக்கின்றனர். இங்கு ஜே.வி.பி. பாட்டாளி வர்க்க கட்சியாகக் கூட இருக்க வேண்டாம், குறைந்தபட்சம் முரணற்ற கட்சியாகக் கூட இல்லை. ஒரு தேசிய பூர்சுவாக் கட்சி எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாட்டைக் கூட ஜே.வி.பி. எடுக்கவில்லை. மாறாக உலகமயமாதல் என்ற கட்டமைப்பின் எல்லைக்குள், தாளம் போடும் ஒரு இனவாதக் கட்சியாகவே ஜே.வி.பி. உள்ளது.

புலிகளை ஒடுக்க இந்தியாவுடன் கூட சேர்ந்து கொள்ளும் சமிக்கைகளைக் கூட அப்பட்டமாகவே விடுகின்றனர். சுனாமியின் பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட படைகள் நாட்டில் இறங்க கம்பளம் விரித்து விட்டவர்களே இவர்கள் தான். அன்று வந்த அமெரிக்கா இராணுவம் மீண்டும் செல்லாது இலங்கையில் தங்கி நிற்பதற்குத் துணையாக இருப்பவர்களும் இவர்கள் தான். புலிக்கு எதிராக யாரெல்லாம் எதைச் செய்கின்றனரோ, அவற்றை விசுவாசமாக வாலாட்டி ஆதரிக்கின்றனர். புலிக்கு ஆதரவான அனைத்தையும் எதிர்க்கின்றனர். இதை யாரும் எவரும் மறுக்க முடியாது. அரசின் பங்காளிகள் என்ற வகையில், தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்தையும் ஆதரிப்பதும், தமிழ் மக்களுக்குச் சாதகமான அனைத்தையும் எதிர்ப்பதும் ஜே.வி.பி.யின் சமகால அரசியல். ஜே.வி.பி.யின் நவீனப் பொருளாதார விளக்கம் இதைத்தான் செய்கின்றது என்றால், புலியெதிர்ப்பு அணியினரும் இதையே செய்கின்றனர். இதனால் தான் ஜே.வி.பி.யின் பினாமியாக நக்கத் தொடங்குகின்றனர்.

புலிகள் கோரும் கட்டமைப்புக்களை எதிர்ப்பதில் ஜே.வி.பி.யும், புலியெதிர்ப்பினரும் கூட்டு சேர்ந்து நிற்கின்றனர். ஐக்கியத்தின் அடிப்படையில், பிரிந்து போகாத ஒரு இணக்கப்பாட்டைப் புலிகள் வந்தடைவார்களாயின், அதற்கான முயற்சியை எதிர்ப்பது பிரிவினையைத் தூண்டுவதாகவே அமையும். இங்கு சுயநிர்ணய உரிமைக்குப் புலிகள் துரோகம் இழைத்தாலும் சரி, படுபிற்போக்கான ஒரு தேசிய இணக்கப்பாடான ஒரு கட்டமைப்பை உருவாக்கினாலும் சரி, மக்களுக்கு எதிரான அனைத்தையும் விமர்சித்து கிளர்ச்சி செய்ய வேண்டுமே ஒழிய, தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு உருவாக்கப்படும் தீர்வை மறுப்பது அப்பட்டமான பெரும் தேசிய இனவாதமாகும். தீர்வு தவறானது என்றால் அதற்கு மாற்றான ஒன்றை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும். மறுதலிப்பு என்பது, மாற்றுத் தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். ஜே.வி.பி.யும் சரி, புலியெதிர்ப்பு அணியினரும் சரி எங்கே அப்படியொரு கிளர்ச்சியைச் செய்கின்றனர். மாறாக இலங்கை பேரினவாத அரசும், ஏகாதிபத்தியமும் புலி தொடர்பாக எடுக்கும் எதிரான நிலைப்பாட்டை ஆதரித்தபடி, சார்பான நிலைப்பாட்டை எதிர்த்தபடி, பெரும் தேசிய இனவாதக் கட்டமைப்பையே தமது சொந்த அரசியல் கிளர்ச்சியாக்குகின்றனர்.

மாறாக லெனின் எப்படி கிளர்ச்சி செய்யக் கோருகின்றார். ""எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமையை ஒப்புக் கொள்வது, பிரிந்து போகின்ற பிரச்சினை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேட உரிமைகளையும் எல்லாத் தனித்துவப் போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகிச் சீர்தூக்கிப் பார்ப்பது.''

இதைத்தான் லெனின் ஆணையில் வைத்து தேசிய இனப்பிரச்சினையில் அணுகக் கோருகின்றாரே ஒழிய, ஜே.வி.பி.யைப் போல் சிங்களப் பேரினவாதத்தையல்ல. ஜே.வி.பி. மேலும் ஒருபடி முன்னே சென்று, பொருளாதார விடுதலைதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ற பகட்டுகின்றனர். அந்தப் பொருளாதாரத் தீர்வை முன் வைத்து அரசியல் திட்டத்தை வைக்கவோ, அதனடிப்படையில் கிளர்ச்சியோ செய்யமாட்டோம் என்கின்றனர். இதைப்போல் தான் புலிகள் தாம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் தான், தமிழ் மக்களுக்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வழங்குவோம் என்கின்றனர். இப்படித்தான் பெரும் தேசிய இனவாதிகளும், குறுந்தேசிய இனவாதிகளும் தத்தம் பங்குக்கு, அனைத்து விடையத்திலும் மக்களின் முதுகில் ஏறி நின்று சவாரி செய்கின்றனர்.

எதார்த்தத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளில் அரசும் புலிகளும் இணங்கிப் போகும் மக்கள் விரோதக் கூறுகளை விமர்சிப்பதன் ஊடாகவே, மக்கள் நலன் சார்ந்த தீர்வை முன்னிறுத்த வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டே பேச்சு வார்த்தை தொடங்கிய போது, ஒரு தனி நூல் மூலம் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களையே வெளிக் கொண்டு வந்தேன். இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும் என்ற நூல் மூலம், தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது முதல், பிரச்சினைக்கான தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவாகவே சுட்டிக் காட்டினேன். பேச்சுவார்த்தை என்ற நாடகம் மூலம் மக்களுக்கு எதிரான அழுங்குப்பிடியான இழிவான சமூக விரோதப் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தும் மனித இழிவுகளை, மற்றொரு நூல் மூலம் அம்பலப்படுத்தி விமர்சித்துள்ளேன். அதாவது பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னரான இரண்டு வருடத்தில் மக்கள் எப்படி மிகக் கேவலமாக அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை என்ற நூல் மூலம் அம்பலம் செய்துள்ளேன். எதையும் மக்கள் நலனில் நின்று சீர்தூக்கிப் பார்க்கவும், மாற்றாக மக்கள் நலன் சார்ந்த தீர்வையும் முன்தள்ளி கிளர்ச்சி செய்வதுமே, மக்கள் நலன் சார்ந்த அரசியல் வழியாகும்.

புலிகளும் அரசும் இணக்கப்பாடான பொதுக் கட்டமைப்பை வந்தடைவதை எதிர்ப்பது கூட பெரும் தேசிய இனவாதம் தான். இதைத்தான் ஜே.வி.பி. செய்கின்றது. பொதுவாக அரசும் புலிகளும் வந்தடையும் இணக்கப்பாட்டில் மக்களுக்கு எதிராக உள்ளனவற்றை மட்டும் அம்பலப்படுத்தி, மாற்றானதொன்றை முன்வைத்து விமர்சித்து கிளர்ச்சி செய்ய வேண்டும். ஜே.வி.பி. பொதுக்கட்டமைப்பு தொடர்பாகக் காட்டும் எதிர்ப்பு, மக்களின் அடிப்படை நலனை முன்னிறுத்தி செய்யப்படவில்லை. மாறாக மக்கள் நலன் சார்ந்த எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை. சிங்களப் பேரினவாதத்தையே ஆணையில் வைத்து வக்கரிக்கின்றனர்.

அரசும் புலிகளும் இணங்கிப் போக முயலும் இணக்கப்பாட்டின் விளைவுகளையும், உள்ளடக்கத்தையும் விமர்சிப்பதை எதுவும் தடுத்துவிடாது. விமர்சனம் மற்றும் கிளர்ச்சியூடாக மக்கள் நலன் சார்ந்த உள்ளடக்கத்தை, பொதுக்கட்டமைப்பில் கொண்டு வரக் கோருவதுமே அவசியமான சரியான அரசியல் வழியாகும். புலிகளே ஒரு பாசிஸ்டாக இருப்பதால், அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வியல் ஆதாரங்களையே அழிக்கின்றனர். இந்தப் பொதுக் கட்டமைப்புகள் மேலும் தமிழ் மக்களின் தொண்டைக் குழியிலேயே கை வைத்து, அவர்களை நெரிக்கும் என்பதே உண்மை. ஆனாலும் கூட இந்தப் பொதுக்கட்டமைப்பை எதிர்க்கவும் முடியாது. ஆதரிக்கவும் முடியாது. ஏன் இப்படி நாம் கூறுகின்றோம்? உண்மையில் மக்கள் நலன்களில் இருந்து இவை உருவாகி விடுவதில்லை. மாறாக நாம் மாற்று ஒன்றையே மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கின்றோம். அதன் அடிப்படையில் இதை விமர்சிக்கின்றோம்.

இனப்பிரச்சனை என்பது வெறும் புலிப் பிரச்சனையல்ல. இலங்கையில் பிரதான எதிரியாக இருப்பது ஏகாதிபத்தியத்துடன் கூடி நின்று, தமிழ் மக்களை ஒடுக்கும் இனவாதச் சிங்கள அரசே, இங்கு புலிகள் அல்ல பிரதானமான எதிரி. இதனால் மட்டும் தான் புலிகள் பாசிசத்தைக் கடந்தும், ஒரு கணிசமான சமூக அடிப்படைகளுடன் நீடிக்கின்றனர். இங்கு வன்முறை மற்றும் அதிகாரங்கள் அனைத்தும் இதன் மேல்தான் இயங்குகின்றன. அமைதிக்கால நீடிப்பில் புலிகள் ஆழமாகத் தனிமைப்பட்ட நிலையிலும் கூட, இலங்கை இனவாத அரசு இயந்திரம் புலிகளுடான ஒப்பீட்டளவில் தமிழ் மக்கள் மேலான வன்முறையைக் கட்டுப்படுத்தியுள்ள நிலையிலும், புலிகளின் நீடிப்புக்கான காரணம் இனவாதக் கட்டமைப்புத்தான். இதில் மாற்றம் இன்றி புலிகள் எந்த விதத்திலும் அரசியல் ரீதியான அஸ்தமனத்தை வந்தடைய மாட்டார்கள். இதற்கு வெளியில் பாசிசக் கட்டமைப்பால் ஏற்படும் உட்சிதைவுகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. அதேபோல் விவாதிக்கவும் முற்படவில்லை. அது மற்றொரு தளத்தில் இயங்குகின்றது.

இலங்கையில் பாட்டாளி வர்க்கம் செயலற்று போயுள்ள நிலையில், இனப் பிரச்சினையாகப் புரையோடிப் போயுள்ள எமது சமூக அமைப்பில் நாம் போராட வேண்டியுள்ளது. இந்த நிலையில் மக்களின் தொடர்ச்சியான துன்பத்தை, அவர்களே உணரும் வகையில் பிரச்சாரம், கிளர்ச்சி, போராட்டம் என்ற வடிவில் முன்னெடுக்க முனைவதே சரியான கிளர்ச்சி வடிவமாகும். இதற்கு வெளியில் அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர்கள் தீர்மானிப்பவர்களாக மாறி, சில முடிவுகளை வந்தடைகின்றார்கள். அது எமது விருப்பத்தையும், எமது நோக்கத்தையும் மீறி இயங்குகின்றது. இங்கு நாம் அதன் உள்ளடக்கத்தின் மீது, அதன் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தி விமர்சித்தே கிளர்ச்சி செய்ய வேண்டும். மக்களுக்கு எதிரான இரண்டு எதிரெதிரான போக்குகள் செய்து கொள்ள முயலும் ஒரு உடன்பாட்டை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது மக்கள் நலனுக்கு எதிரானதாக அமையும். அத்துடன் இந்த உடன்பாடுகள் ஒன்றுக்குச் சார்பானதாகவும் ஒன்றுக்கு எதிரானதாகவும் அல்லது இரண்டுக்கும் சார்பானதாகவும் அல்லது இரண்டுக்கும் எதிரானதாகவும் கூட இருக்கும். ஆனால் அவை மக்களுக்கு எதிராக இருப்பதில் தமக்குள் ஒன்றுபடுகின்றன. இதனடிப்படையில் தான் ஒவ்வொன்றையும் சீர்தூக்கி அணுக வேண்டும்.

எந்தச் சமூகப் பிற்போக்கான போக்கும் கூட, எப்போதும் மக்களின் சில அடிப்படையான சமூகக் கோரிக்கையின் பின்னால் தன்னைத்தான் தகவமைக்கின்றது. இதில் உள்ள முற்போக்கு மற்றும் பிற்போக்கு கூறுகளைப் பிரித்தறிந்து, பிற்போக்கை அம்பலப்படுத்தியே கிளர்ச்சி செய்ய வேண்டும். மக்களின் நியாயமான அனைத்து கோரிக்கையையும் அங்கீகரித்து அதற்காகவும் கிளர்ச்சி செய்ய வேண்டும். தேசிய இனப்பிரச்சினையில் எப்படி அணுக வேண்டும் என்பதை லெனின் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றார்.

""எந்தத் தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எல்லாவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை. தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழுஅளவுக்குச் சுதந்திரமான ஜனநாயக வழியில் தீர்க்கப்படுதல், எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்தவிதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைக்கு ஊறு செய்வதாகவோ'' இருக்கக் கூடாது என்கின்றார். இதனடிப்படையில் தான் பொது இணக்கப்பாடுகளையும், அதன் மக்கள் விரோதக் கூறுகளையும் இனம்கண்டு அணுகவேண்டும். இதை செய்வதில்லை.

இங்கு ஜே.வி.பி. நிரந்தரத் தீர்வின் பின்னாலான, இடைக்கால அமைப்பு சார்ந்த அதிகாரம் என்ற அரசியல் கோசம் கூட, அடிப்படையில் இனவாதம் தான். இதை ஜே.வி.பி. கூறுகின்றபோது ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகின்றது. இதைப் புலிகள் கோருகின்றார்கள் என்று சொல்வதால், இது விதிவிலக்காகிவிடாது. விரும்பியோ விரும்பாமலோ அரசும், புலிகளும்தான் இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க முனைகின்றனர். இந்த எதார்த்தத்தை உடனடியாக யாரும் மாற்ற முடியாத வகையில், இலங்கை பாட்டாளி வர்க்கம் செயலற்று கிடக்கின்றது. இந்த எதார்த்தத்தை யாரும் புரிய மறுத்தாலும் கூட, யுத்தம் ஒரு மாற்றாகின்றது. இதுவும் நிலைமையை எந்தவிதத்திலும் இருப்பதை விட முற்போக்காகப் படைத்துவிடாது. மேலும் மனித அவலத்தை அதிகரிக்கவே வழிசமைக்கும். இது எதார்த்தத்தின் மீதான உண்மையாக உள்ளது.

இந்த நிலையில் ஜே.வி.பி. பொதுக்கட்டமைப்பை எதிர்ப்பதன் ஊடாக, யுத்தத்தையே கோருகின்றனர். பாட்டாளி வர்க்கம் செயலற்ற நிலையில் இருப்பதால், மற்றொரு தளத்தில் முடிவுகள் மக்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்றன. இப்படி உருவாகும் பொதுக்கட்டமைப்பின் பின்னுள்ள மக்கள் விரோதக் கூற்றை அம்பலப்படுத்தி, மக்களுக்குச் சார்பானதை முன்வைத்து கோரி கிளர்ச்சி செய்வதே சரியானது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என எதையும் முன்வைக்காத ஜே.வி.பி. பொதுக்கட்டமைப்பை எப்படி மறுதலிக்க முடியும்? இது முன்பு சிங்கள அரசுகள் காலத்துக்குக் காலம் தமிழ்த் தரப்பினருடன் செய்து கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் எதிர்த்த எதிர்க்கட்சிகள், எதையெல்லாம் விதிவிலக்கின்றி செய்தனரோ, அதையே ஜே.வி.பி. எள்ளளவும் பிசகாது செய்து இனவாத அரசியல் மூலம் அதிகாரத்தைப் பெற முனைகின்றனர் அவ்வளவே. இதனால் இரண்டு தேசிய இனங்கள் இலங்கையில் உண்டு என்பதையே ஏற்க மறுக்கின்றனர். இனங்களுக்கு இடையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இணங்கி வாழும் சமூக அடிப்படையை அங்கீகரிக்க மறுக்கின்றனர். ஜே.வி.பி. இந்த நிலையில் நிரந்தரத் தீர்வின் பின்பான இடைக்கால அரசு என்ற கோசம், சந்தர்ப்பவாத அரசியல் நாடகத்தையே நடத்துகின்றனர்.

இலங்கை அரசியலில் இனப்பிரச்சினையை எதார்த்தத்தில் திடீரென யாரும் கடந்துவிட முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வை முதலில் நேர்மையாக மக்களுக்கு முன்வைத்து கிளர்ச்சி செய்யாத போராட்டம் அப்பட்டமாகவே மக்கள் விரோதத் தன்மை கொண்டது. மக்கள் முன் நேர்மையாக அரசியல் செய்பவர்கள், நிச்சயமாக இரண்டு இனங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இரண்டு தேசங்களும் ஒன்றாக வாழவும், பிரிந்து வாழவும் உள்ள உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதற்காகக் கிளர்ச்சி செய்யவும், போராடவும் வேண்டும்.

இது இல்லாத அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதே. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழும் உரிமை என்பது, பிரிந்து வாழும் உரிமையின் அடிப்படையில் தான் உண்மையான கூட்டான இணைவு சாத்தியமாகின்றது. இது இல்லாத எல்லா நிலையிலும் ஆணாதிக்கமே அந்தக் குடும்ப அமைப்பின் அதிகார வடிவமாக இருக்கின்றது. இது போன்றுதான் தேசிய இனப்பிரச்சினையும், ஆணாதிக்க கொடுமையால் பெண் பிரிந்து செல்வதை அல்லது தற்காலிகமாகத் தன்னும் பிரிந்து செயல்வதை ஆண் மறுத்தால் அதை ஆணாதிக்கமாகத்தான் நாம் காண முடியும். பெண் பிற்போக்கான கூறுகளைக் கொண்டிருந்தாலும் கூட, ஆணாதிக்கப் போக்கின் ஊடாக அதை நியாயப்படுத்த முடியாது. அதுபோல் பெண்ணின் உரிமையை அங்கீகரிக்க முடியாது என்றோ அல்லது எமது பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் பொருந்தாது என்று ஜே.வி.பி.யைப் போல் குதர்க்க வாதமோ செய்யின், அது நிச்சயமாக ஆணாதிக்கம் தான். இங்கு ஆண் ஆணாதிக்கவாதியாக இல்லாவிட்டாலும் கூட, பெண் பிரிந்து செல்வதைத் தடுக்கும் உரிமை கிடையாது. ஆனால் விமர்சிக்கவும், திருத்தவும் முனையலாம். பிரிந்து செல்லும் உரிமை மீதான இணக்கப்பாட்டின் மேல் தான் ஐக்கியம் என்பது உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க முடியும்.

இரண்டு தேசிய இனங்கள் சேர்ந்து வாழ்வதா? அல்லது பிரிந்து செல்வதா? என்ற பிரச்சினை மீது அப்படியே இது பொருந்தும். படுபிற்போக்கான தேசிய பிரிவினையைக் கூட, தடுக்கும் உரிமை ஒடுக்கும் தேசியத்துக்குக் கிடையாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் இதை விமர்சிக்க முடியும். அதேநேரம் தமது சொந்தக் கிளர்ச்சியைப் பெரும் தேசிய இனவெறிக்கு எதிராக நடத்த வேண்டும். இது ஒடுக்கும் தேசியப் பாட்டாளி வர்க்கத்தின் தலையாயக் கடமை. சிறுபான்மை தேசிய இனப்பாட்டாளி வர்க்கம் தான், பிரிந்து செல்லும் பிற்போக்கு கூறுகளுக்கு எதிராகப் போராட வேண்டும். இதற்குப் பெரும் தேசிய சர்வதேசியவாதிகள், சர்வதேசிய எல்லைக்குள் உதவவும், ஆதரவு வழங்கவும் முடியும். ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பெயரில், அந்த இனத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய முடியாது. இது பெரும் தேசியவாதமாகவே அமையும். மாறாகப் பெரும் தேசியத்தின் அனைத்து இனவாதப் போக்கையும் விமர்சித்து கிளர்ச்சி செய்ய வேண்டும்.

குறிப்பாக அமெரிக்க முதல் இந்தியா வரை எமது தேசிய இனப்பிரச்சினையில் தலையிடுவதையும், தமிழ் மக்களுக்கு எதிராகச் செயல்படுவதையும், ஈவிரக்கமின்றி பெரும் தேசிய இனம் விமர்சித்து கிளர்ச்சி செய்ய வேண்டும். ஏகாதிபத்தியம் அழித்தொழிக்கும் சொந்த (ஒடுக்கும் இனத்தின்) தேசிய உரிமைக்காகப் போராடவேண்டும். இதன் மூலம் சிறுபான்மை தேசிய இனத்துக்கு முன்மாதிரியாகவும் சரியாகவும் வழிகாட்ட முடியும். அதேநேரம் சிறுபான்மை இனத்தின் தேசிய உரிமைக்காக, அன்னிய சக்திகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும்படி தூண்டவேண்டும். தேசியம் என்பது வெறும் புலி தொடர்பானவையல்ல.

குறிப்பாகப் பெரும் தேசிய இனத்தின் மேல் உலகமயமாதல் நடத்தும் தேசிய அழிப்பை முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடவேண்டும். இந்த வகையில் சிறுபான்மை இனங்களையும் எதிர்த்துப் போராட கோர வேண்டும். இங்கு ஏகாதிபத்தியத்துக்குத் தேசியத்தின் பெயரில் தேசியத்தைக் காட்டிக் கொடுக்கும் அனைத்தையும், ஈவிரக்கமின்றி விமர்சிக்க வேண்டும். தேசியத்தின் அடிப்படைக் கூறு, ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்தே தொடங்குகின்றது. இதன் ஊடாகப் பிற்போக்குத் தேசியக் கூறுகளைத் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும். உண்மையான முரணற்ற தேசியக் கூறை முதன்மைப்படுத்தி, பெரும்பான்மை இனத்தின் ஒடுக்கும் பிற்போக்குத் தேசியக் கூறுகளையும், சிறுபான்மை இனத்தின் பிற்போக்கு இனவாதத்தையும் அம்பலப்படுத்தி கிளர்ச்சி செய்ய வேண்டும்.

இதை ஒரு நாளுமே ஜே.வி.பி. செய்யவில்லை. மாறாக ஏகாதிபத்தியம் இலங்கையில் தலையிடும்போது, அதைப் புலிக்கு எதிராக மாற்றுவதையே ஜே.வி.பி. அங்கீகரிக்கின்றது. எல்லா பெரும் தேசிய இனவாதிகள் போல் எந்த முரணும் இன்றி இதில் செயல்படுகின்றனர். அதேநேரம் புலிக்கு எதிரான ஏகாதிபத்திய நடத்தைகளை ஆதரிக்கின்றனர். அண்மையில் இந்தியாவின் நலன்கள் பற்றி கூட ஜே.வி.பி. புலம்புகின்றது.

புலிகளை ஒடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கூட ஜே.வி.பி. ஆதரிக்கின்றது. இதைத்தான் சிங்களப் பேரினவாதச் சக்திகள் அனைத்தும் விதிவிலக்கின்றி செய்கின்றன. இதையே தான் ஜே.வி.பி. செய்கின்றது. இதை இல்லை என்று சொல்ல, எந்த விதமான அடிப்படையையும் யாரும் காட்ட முடியாது. இங்கு சில அரசியல் சூனியங்கள் ஜே.வி.பி. சுனாமியைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவியதைப் பற்றி கூக்குரலிடக் கூடும். தமிழர்களுக்கு உதவி செய்த அவர்கள் இனவாதிகளா? என்று கேள்விக் கேட்கக் கூடும். இனவாதிகள் இப்படி உதவ முடியுமா? என்று எம்மைப் பார்த்து ஏளனமாகக் கேள்வி எழுப்ப முனைவர். இப்படி யாராவது கூறின் அவர்களின் அரசியல் கடந்து எதையும் அது பிரதிபலிக்கவில்லை.

இங்கும் நாங்கள் இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. என்று தெளிவாகவே மீண்டும் கூறுகின்றோம். இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள, சர்வதேச சில நடைமுறைகளை எடுத்துக் காட்ட முடியும். ஏகாதிபத்தியம் உலகமயமாதல் ஊடாக உலகின் மூலை முடுக்கெல்லாம் சூறையாடுகின்றது. அதேநேரம் மனிதாபிமான உதவி என்ற பெயரில், தனது கைக்கூலிகளான அரசு சாராத தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக, சுரண்டப்பட்ட மக்கள் மத்தியில் தன்னை மனிதாபிமான நேசன் என்று கவர்ச்சி காட்டுகின்றது. அதாவது சூறையாடியதில் ஒரு பகுதியை மீண்டும் அந்த மக்களிடையே கொண்டு சென்று மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்றனர். அந்த மக்களை ஏமாற்றி உலகமயமாதலுக்கு ஏற்ப, மக்களைப் பக்கவாத்தியம் பாடவைக்கும் ஒரு நிகழ்ச்சியே இந்த மனிதாபிமான உதவி. இதையே இன்று உலகின் மூலை முடுக்கெங்கும் செய்வதை விதிவிலக்கின்றி நாம் காண முடிகின்றது.

இதையே புலிகளும் செய்ய முனைகின்றனர். சுனாமி நிவாரணத்தைத் தமது பெயரில் கொடுப்பதை விரும்புகின்றனர். அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களிடையே புல்லுருவிகளைப் போல் படர்ந்து படமெடுக்கின்றனர். அதையேதான் ஜே.வி.பி. செய்தது. ஆனால் புலிகளை விட இவர்கள் அதைத் திறமையாகவும் நுட்பமாகவும் செய்தனர். ஜே.வி.பி. தன்னைத்தான் தகவமைத்து மூடி மறைக்கப்பட்டுள்ள கலவைக் கோட்பாடுகளே, இதற்குப் பக்கபலமாக அமைந்தது. ஜே.வி.பி.யின் அடிமட்டத்தில் உள்ள தியாக மனப்பான்மையுடன் கூடிய அப்பழுக்கில்லாத சேவை மனப்பாங்கு சார்ந்த உணர்வைப் பயன்படுத்தியே, பாதிக்கப்பட்ட மக்களை அணுகியது. இந்த அடிப்படை புலிக்குக் கிடையவே கிடையாது. ஜே.வி.பி.யின் தலைமை பாதிக்கப்பட்ட மக்களின் சமூக அறியாமை மீது பொருளாதார ரீதியான உதவிகள் ஊடாக வளைத்துப் பிடிக்கும் தந்திரத்தையே கையாண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இழிந்து போன இந்தச் சமூக அமைப்பில், தமது கையாலாகாத்தனத்திலிருந்து பொருளாதார ரீதியாகவும் மனிதாபினமான ரீதியான உதவி சார்ந்தும் அவர்களை நேசிப்பது இயல்பு.

ஜே.வி.பி. பொருளாதார ரீதியாகவே அந்த மக்களை வளைத்துப் பிடிக்க முனைந்தனர். அந்த மக்களின் இனப்பிரச்சினைக்கான முரணற்ற தீர்வின் ஊடாக அணுகவில்லை. இனரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வின் ஊடாக அணுகாது, மந்திரிப் பதவியைக் கொண்டும் பணத்தைக் கொண்டும் தனக்குப் பின்னால் அணிதிரட்டும் நவீன விளம்பர அரசியல் வடிவங்களையே ஜே.வி.பி. கையாளுகின்றது. அரசியல் ரீதியாக ஜே.வி.பி. எதைச் செய்கின்றது என்றால், சிங்களப் பேரினவாத ஆட்சி அமைப்பையே கட்டிப் பாதுகாக்கின்றனர். லெனின் வார்த்தையில் அதைக் கூறின்

""நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமை பற்றிய கோஷத்தை முன்வைத்து ஆதரித்து பேசத் தவறினால் நாம் பூர்சுவாக்களின் நோக்கத்துக்கே உதவுவோம் என்பது மட்டுமல்ல, ஒடுக்கின்ற தேசிய இனத்தின் நிலப்பிரபுகளின், அதன் வரம்பிலா ஆட்சியின் நோக்கத்துக்கே கூட உதவுவோம்''

ஜே.வி.பி. தன்னைத்தான் மூடிமறைத்தபடி இதைத்தான் செய்கின்றது. இனப் பிரச்சினையில் மட்டுமல்ல, உலகமயமாதல் பற்றிய அதன் அடிப்படை நிலைப்பாட்டிலும் கூட இதைத்தான் செய்கின்றது. ஒட்டுமொத்தமாக ஜே.வி.பி. பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்தும் கலையைத்தான் அன்று முதல் இன்று வரை தனது சொந்த அரசியலாக ஆணையில் வைத்துள்ளது.

Thursday, March 6, 2008

சோபாசக்தியின் "ம்" நாவலுக்கான விமர்சனம்

சோபாசக்தியின் "ம்" நாவலுக்கான விமர்சனம்






Wednesday, March 5, 2008

தமிழர் வழிபாட்டுரிமை போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமிக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

தமிழர் வழிபாட்டுரிமை போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமிக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

இன்று காலை சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வெற்றிகரமாக தேவாரத்தை பாடி வழிபட்டிருக்கிறார் சிவனடியார் ஆறுமுகச்சாமி.

( திருத்தம்: இன்று காலை சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது தவறான தகவலாகும் ஆறுமுகச்சாமி காவல் துறையால் கைது செய்யப்பட்ட கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இந்த நிலையில் காலையில் சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வேறு சில சிவனடியார்களே தேவாரம் பாடி வழிபட்டனர், அரசை பகைத்துக் கொள்ள விரும்பாத தீட்சித ரவுடிக் கும்பல் அவர்களை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்தர் பல்டி அடித்தது.)

மூன்று நாட்களுக்கு முன்பாக சிதம்பரம் திருக்கோவிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது, அந்த ஆணையை பெறுவதற்கென, சிவனடியார் ஆறுமுகச்சாமியும் அவருக்கு பக்கத்துணையாக‌ மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நெடியதாகும்.

முன்னொரு சமயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடுவதற்கு முயன்ற பொழுது அவரது கையை முறித்து கோயிலுக்கு வெளியே வீசியெறிந்தது பார்ப்பன தீட்சித ரவுடிக் கும்பல், பார்ப்பன கும்பலின் இந்த‌ அடாவடித்தனத்திற்கு பிறகு, தமிழில் பாட முயன்று தாக்கப்பட்ட அந்த முதியவருக்காக களத்தில் இறங்கியது மனித உரிமை பாதுகாப்பு மையம்., அதன் தோழமை அமைப்பான‌ மக்கள் கலை இலக்கிய கழகமும் தமிழ்நாட்டில் தமிழில் வழிபட உரிமையற்ற இந்த கேவலமான நிலையை மக்களிடம் விளக்கி தெருமுனை கூட்டம், சுவரொட்டி பிரச்சாரம், பேருந்து பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் என்று வீச்சாக இயங்கியது, இந்த பிரச்சார இயக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின, அதே சமயத்தில் (மனு)நீதிமன்றமோ மொக்கையான காரணங்களை கூறி தமிழ் வழிபாட்டுரிமையை மறுத்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்பளித்தது, "உங்கள் மனதுக்குள்ளேயே பாடிக் கொள்ளுங்கள்" என்று திமிர் வழிய பேசியது நீதிமன்றம்."

தொடர்ந்து செய்யப்பட்ட‌ மேல்முறையீடுகளாலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்களின் அயராத உழைப்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமியின் சமரசமில்லாத போராட்டம் இவற்றின் காரணமாகவும் இறுதியில் அரசும் நீதிமன்றமும் அடிபணிந்தன, சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணைய நிறைவேற்றுவதற்காக, சிவனடியார் ஆறுமுகச்சாமியும், மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலின் உள்ளே நுழைந்த பொழுது அவர்களை சுற்றி வளைத்து தாக்கியது தீட்சித பொறுக்கி கும்பல், இந்த தாக்குதலில் சிவனடியாரின் மூக்கு கண்ணாடி உடைந்து சிதறியது, இத்தோடு நிறுத்தாமல் அங்கு 'காவ‌லுக்கு' வ‌ந்திருந்த காவ‌ல்துறையின‌ரையும் சேர்த்து தாக்கியதோடு அவ‌ர்க‌ளை க‌டித்து குத‌றிய‌து தீட்சித‌ வெறிநாய்க‌ள், இருப்பினும் இந்த‌ வெறிநாய்க‌ளை அடித்து உதைகாம‌ல், ப‌வ்ய‌மாக‌ தூக்கி வெளியில்விட்ட‌ போலீசு, போராடிய‌ தோழ‌ர்கள் மீது த‌டிய‌டி ந‌ட‌த்தி தீட்சித‌ர்க‌ளை விட‌ தாங்க‌ள் பெரிய‌ வெறி நாய்க‌ள் என்ப‌தை நிரூபித்த‌து. போலீசு வெறிநாய்க‌ள் ந‌ட‌த்திய‌ இந்த‌ தாக்குத‌லில் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ ஐந்திற்கும் மேற்ப‌ட்ட‌ தோழ‌ர்களின் ம‌ண்டை உடைந்து இர‌த்த‌ம் கொட்டிய‌து, குருதி கொட்ட‌ கொட்ட‌ அவ‌ர்க‌ளை துர‌த்தி துர‌த்தி த‌டியால் தாக்கின‌ போலீசு வெறிநாய‌க‌ள், த‌மிழ்நாட்டில் த‌மிழில் வ‌ழிப‌டும் உரிமை வேண்டி போராடியதற்காக‌ அந்த‌ தோழ‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், தாக்க‌ப்ப‌ட்ட‌தோடு ப‌ல‌ தோழ‌ர்க‌ள் கைதும் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர், ம‌.க‌.இ.க.

ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌த்தை சேர்ந்த‌ 35 தோழ‌ர்க‌ளை கைது செய்து சிறையில‌டைத்த‌து போலீசு.

இந்த‌ அராஜ‌க‌த்தை க‌ண்டித்து சுவ‌ரொட்டி ஒட்டிய‌தோடு, சென்னையில் ஆர்ப்பாட்ட‌மும் ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பினையும் ந‌ட‌த்திய‌து ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம். இந்த‌ செய்திக‌ளையெல்லாம் எந்த‌ ப‌த்திரிக்கையும் வெளியிட‌வில்லை, க‌ட்டுப்பாட்டாக இவற்றை இருட்ட‌டிப்பு செய்த‌ன‌. இருப்பினும் தோழ‌ர்க‌ளின் வீச்சான‌ போராட்ட‌த்தின் விளைவாக, தமிழில் வழிபடுவதை தடுக்கும் பொறுக்கி தீட்சித‌ர்க‌ளை நேற்று எச்ச‌ரித்து அறிக்கை வெளியிட்ட‌து த‌மிழ‌க‌ அர‌சு, இந்த‌ நிலையில்தான் இன்று காலையில் சிவனடியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம் ம‌ற்றும் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ள் சித‌ம்ப‌ரம் கோவிலின் உள்ளே நுழைந்தனர், அப்பொழுது திருச்சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறிய‌ ஆறுமுக‌ச்சாமி நெஞ்சுருக‌ தேவார‌ம் பாடி சிதம்பரம் நடராசனை வ‌ழிப‌ட்டார்.

தீட்சித பார்ப்பன வெறிநாய்களின் சதி வேலைகளையும் தாக்குதல்களையும், அரசியல் செல்வாக்கினையும் மக்கள் துணையோடு எதிர்கொண்டு வீழ்த்தி த‌மிழ‌ர்க‌ளின் வ‌ழிபாட்டுரிமைக்கென‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ போரில் வென்ற‌ சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம், ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம் ம‌ற்றும் அத‌ன் தோழ‌மை அமைப்புக‌ளை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் செவ்வ‌ண‌க்க‌ங்க‌ளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இமெயிலில் நந்தன்

நன்றி அசுரன்

வர்க்க அமைப்பில் ஜனநாயகம்

வர்க்க அமைப்பில் ஜனநாயகம்

மார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும்.

இங்கு ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு. எந்த தனிமனிதனுக்கு விதிவிலக்கல்லாதது. சமூக எல்லைக்கு வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. அப்படி இருப்பதாக கூறுவது சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து விளக்கம் பெறாது. புரட்சியின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வாக்கப் போராட்டத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது.

ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இவை மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இதை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல் டிரொட்ஸ்கிய வாதிகளும் சரி, அனைத்து வகை பினாமிகளும் கூட ஏற்றுக் கொள்வதில்லை. கோட்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை இதில் கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே, அவதூறுகள் கட்டப்படுகின்றன. அவதூறுகள் தேடப்பட்டு முன்வைக்கப்படுகின்றன

ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கம் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக ஒன்றுக்கு மறுக்கப்படுகின்ற வரை தான், மற்றது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. இது வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநாயகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்தை ஏகாதிபத்தியம் மூடிமறைக்கின்றது.

ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே, எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கிலும் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் ஜனநாயகம் சுரண்டல் வர்க்கத்துக்கு மறுக்கப்படுகின்றது. முதலாளித்துவமும், அதிலிருந்து உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் அதன் பண்பியல் கூறுகளை எதார்த்தத்தில் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து, சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை கொண்டிராத எல்லா நிலையிலும், சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம் எப்போதும் நிர்வாணமாக இருப்பதில்லை. தன்னை மூடிமறைத்துக் கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக மற்றய வர்க்கத்துக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை அழகு படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாது, மூடிமறைக்கின்றது. சமுதாயத்தில் இந்த போலித்தனத்தை யார் யாரெல்லாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை தொடர்வதற்காக பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை நிர்வாணப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.

மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாதத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர்தரப்புக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வௌவேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.

ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்தும் வர்க்க எல்லைக்கு அப்பால் நீடிக்க முடியாது. இதை ஏற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகத்தின் மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது அதை எதிர்க்கும் முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம், தனிமனித உரிமை பற்றிய பேச்சு என்பதை அனுமதிப்பதில்லை. இது போல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவு படுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதில் மார்க்சியவாதிகளாகிய நாங்கள் அவற்றை என்றும் புறம் தள்ளியது கிடையாது.

Tuesday, March 4, 2008

ஜனநாயகம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்றால் என்ன?

பி.இரயாகரன்
23.03.2006

டுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும்.

ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக, அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடைப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.

இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.
இந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. தெரிவு செய்யப்படும் இந்த அமைப்பு மூலமே இது நிகழ்கின்றது. தெரிவு செய்யப்படும் உறுப்பு, ஏற்கனவேயுள்ள ஆளும் அதிகார வர்க்கத்துடன் இணங்கி செயற்படும் ஒரு உறுப்பு மட்டும் தான். தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் நாட்டை ஆளுகின்ற அதிகார வர்க்கத்தை மீறி, சுயாதீனமாக செயல்பட முடியாது. மாறாக இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கும், அதேநேரம் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக அதற்குள் தான் சுயமாக செயல்படமுடியும். மக்களின் தேர்வு என்பது போலியானது. மக்கள் தங்களைத் தாங்கள் ஆள்வதற்கு தேர்ந்தெடுகின்றனர் என்பது சூக்குமமான ஒரு ஏமாற்ற மோசடியாகும்.

உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்கு மிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.

இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.

ஆனால் மக்கள் எந்த ஒரு சக மனிதனையும் அடக்கியொடுக்கி தான் வாழ விரும்புவதில்லை. தான் உழைத்து வாழவிரும்பும் சமுதாயத்தின், ஒரு உயிரியாகவே இருகின்றான், இருக்க விரும்புகின்றான். மற்றைய மனிதனை இழிவுபடுத்தி, அவனைத் தாழ்த்தி, இதன் மூலம் அவனின் உழைப்பைப் பிடுங்கி தான் வாழவேண்டும் என்று மக்கள் விரும்புவதில்லை. ஆனால் இதுவே பொதுவான ஆதிக்கம் பெற்ற ஒரு சமுதாய நடைமுறையாக உள்ளது. மக்களின் விரும்பங்களுக்கு அப்பால், இது ஆதிக்கம் பெற்ற ஒன்றாகவே உள்ளது.

இந்த ஜனநாயகம் என்ற சமூக அமைப்பு, தனது இருப்பு சார்ந்து இதை உருவாக்குகின்றது. ஜனநாயகம் என்பது சக மனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக தன்னை விட மற்றவனை அடக்கவே விரும்புகின்றது. மனிதனை அடக்கி அடிமைப்படுத்தி இழிவாடுகின்றது. ஏன் இப்படிச் செய்கின்றது. மற்றைய மனிதனைச் சார்ந்து, தான் வாழ்தல் இதன் மையமான அடிப்படையாகும். மற்றைய மனிதனின் வாழ்வை பறித்து, அதில் தான் வாழ்தல் இதன் மையக் கூறாகும். இதற்கு பெயர் ஜனநாயகம். பறிக்கும் உரிமை தான் ஜனநாயகம். இதுவே மனித சுதந்திரமாகும். இதற்கு வெளியில் வேறு விளக்கம் எதுவும் கிடையாது. இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.

கடந்த 100, 150 வருடங்களுக்கு முன்னம், மனித அமைப்பில் மனிதர்களையே அடிமையாக வைத்திருத்தல் பொதுவாக சில ஜனநாயக நாடுகளின் சட்டங்களில் காணப்பட்டது. இதையே சமூக நாகரிகமாக அன்றைய மேட்டுக்குடி ஜனநாயகவாதிகள் கருதினர். ஆனால் இன்று அதை அநாகரிகமாகவும், மனிதவிரோதமாக கருதும் நாம், எமது இன்றைய நிலையை அன்றைய வாழ்வுடன் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. ஆனால் இன்று எம்மைப் போல், அன்று அதை அவர்கள் இயல்பான ஒன்றாக கருதினர். அன்று அடிமைகளை வாங்கவும் விற்கவும், குடும்பங்களை பிரித்து சிதைத்து விலங்கிட்டு சந்தையில் நிறுத்தவும், பெண்களை புணரவும், ஏன் கொல்லவும் கூட உரிமையிருந்தது. இதை அன்று சமூதாயத்தின் ஒழுக்கமாக சட்டம் அங்கீகரித்து இருந்தது. இதை அனுபவித்தவர்கள் தான், அன்றைய நாகரிகத்தின் உன்னதமான ஜனநாயக மனிதர்களாக சமுதாயத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இன்று அவர்களின் வாரிசுகள் உலகை கொள்ளையிடுகின்றனர். அன்று இதைக் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், தமது சிறந்த பண்பின் பெயரால் நியாயப்படுத்தினர். இதை பாதுகாப்பதும், அதை ஒட்டிய சட்டங்களுமே அன்று ஜனநாயகமாக கருதப்பட்டது. இன்று இதை சுதந்திரத்தின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால் இதைச் செய்கின்றனர்.

இன்று நாம் அன்றைய நிகழ்ச்சிகளை இழிவானதாக எமது பொதுப்புத்தி மட்டத்தில் கருதிய போதும் கூட, நாம் இன்று உண்மையில் நவீன அடிமைகளாக இந்த ஜனநாயக அமைப்பில் உள்ளோம். உண்மையில் எம்மையே நாம் புரிந்து கொள்ளவில்லை. கொஞ்சம் உள்ளே சென்றாலே நாற்றமெடுகின்றது. உலக அமைப்பு எப்படி உள்ளது. மூலதனத்துக்கு அடிமையாக உள்ளது. இயந்திரத்தின் ஒரு உறுப்பாக மனிதன் மாற்றப்பட்டுவிட்டான். தனது உழைப்பை சந்தையில் விற்க கூட முடியாத புதிய நிலையை அடைகின்றான். இது நவீன அடிமைகளின் நிலை. ஒரு வட்டம் கீறப்பட்டுள்ளது, அதற்குள் நின்று உலகை பார்க்கவும், சிந்திக்கவும் நிர்பந்திக்கப்படுகின்றது. இது ஒரு முகம் என்றால், முகத்தின் உள்ளே கொத்தடிமைகள், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அடிமைப்படுத்தப்படும் தாழ்ந்த சாதிகள், இழிவாக கருதப்படும் கறுப்பின மக்கள், இன அடிமைத்தனங்கள், ஆணிண் ஆதிக்கம், மனித உழைப்பைச் சுரண்டும் மூலதனம் என மனித அடிமைத்தனம் பல வடிவில் பலவாக காணப்படுகின்றது. இதையே எமது பொதுப்புத்தி, ஜனநாயகமாக கருதுகின்றது. ஆச்சரியம் தான், ஆனால் இதுவே உண்மை. நாம் இதையே ஜனநாயகம் என்கின்றோம். இதற்கே வாக்களிக்கின்றோம். இதற்கே ஜனநாயக கோசத்தை போடுகின்றோம். நாம் மிகச் சிறந்த ஜனநாயக விரோதிகளாக, நாமாகவே எம்மை அறியாது இருக்கின்றோம். இதை எதிர்த்துப் போராடாத ஒவ்வொருவரும் ஜனநாயக விரோதிதான்.

சற்று விரிவாக போனால், மற்றைய மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை நாம் எப்படி புரிந்து கொள்கின்றோம்;. ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டுவது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்! சுரண்டுவது எப்படி சுதந்திர உரிமையாக இருக்க முடியம்! இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதிலளித்தேயாக வேண்டியுள்ளது. நாம் சுரண்ட முடியாத நிலையிலும் கூட, மற்றவன் சுரண்டப்படுவதை எப்படி நாம் அங்கீகரிக்க முடியும். சரி நாம் அங்கீகரிக்கவில்லை என்று வைப்போம், அந்தக் கொடுமைக்கு எதிராக நாம் போராடவில்லை என்றால், எப்படி நாம் ஜனநாயகத்தின் பிரதிநிதிகளாக எம்மைச் சொல்லிக் கொள்ளமுடியும். முடியாது, உண்மையில் நாம் ஜனநாயக விரோதியாக, ஜனநாயகத்தை சக மனிதனுக்கு மறுக்கும் ஜனநாயக வாதியாக இருகின்றோம். இதுவே உண்மை. ஜனநாயகத்தை பாதுகாப்பவன் தான், ஜனநாயகத்தை மறுப்பவனாகவும் உள்ளான். இதில் இருந்து வேறுபட்டு நாம் எதைக் கோருகின்றோம் என்றால், ஜனநாயகத்தை ஒழிப்பதைக் கோருகின்றோம். அனைவருக்கும் ஜனநாயகத்தை உறுதி செய்வதன் மூலம், அதை இல்லாதொழிக்கும் சமூக அமைப்பைக் கோருகின்றோம்.

நான் ஒரு தனிமனிதன் என்ற வகையில், எனது உழைப்பை சுரண்டலுக்குள்ளாக்க விட்டுவிட்டுகின்றேன் என்று எடுப்போம். இந்த இடத்தில் இதை நாம், ஜனநாயகமாக அங்கீகரித்தால் இது எப்படி ஜனநாயகமாகும். அந்த ஜனநாயக விரோத செயலுக்கு உடந்தையாளனாகிவிடுகின்றேன். இதை எதிர்த்து நிற்காத எவனும் ஜனநாயகவாதியல்ல. ஜனநாயகம் என்பது மறுக்கப்படும் ஜனநாயக உரிமையை கோருவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். அதைப் பாதுகாத்தல் அல்ல. அனைவருக்கும் ஜனநாயகம் என்ற உரிமை பெறுவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். சக மனிதன் மீதான சமூக ஒடுக்குமுறையை இல்லாது ஒழித்தலாகும். இதை நோக்கிய போராட்டம் தான், ஜனநாயகப் போராட்டமாகும்.

இதை மறுத்து, குறித்த காலத்துக்கு காலம் வாக்குப் போடுவதையே ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை மனிதன் சுரண்டுவதையும், சுரண்டும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர். அதேபோல் அறிஜீவிகள் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தையே ஜனநாயகம் என்கின்றனர். இது ஜனநாயகம் என்றால், பரந்துபட்ட மக்களுக்கு இந்த ஜனநாயகத்தால் என்னதான் கிடைக்கின்றது.

இந்த ஜனநாயகத்தால் மக்களின் வறுமையை ஒழிக்க முடிகின்றதா? மனித சமூகம் வாழ்வதற்;கு தேவையான சமூக அடிப்படைகளை இது பூர்த்தி செய்கின்றதா. எனின் இல்லை. இந்த ஜனநாயகம் மக்களுக்கு உதவவில்லை. மக்களை அடிமைப்படுத்தி இதை இல்லாதாக்கின்றது என்பதே உண்மை.


மனித தேவையை இது பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்த ஜனநாயகம் யாருக்கானது? இந்தக் கேள்வி தெளிவாகவே அதற்கு பதிளிக்கின்றது. பணம் உள்ளவனுக்கே இந்த ஜனநாயகம். பணம் உள்ளவன் பட்டினியுடன் வாழவேண்டிய அவசிமில்லை. நோய்க்கு மருந்தின்றி மரணிக்க வேண்டியதில்லை. வாழ வீடின்றி வீதியில் படுத்துறங்குவதில்லை. எது அவனுக்குத் தேவையோ, அதை இந்த உலகில் இருந்து அவன் பெறுகின்றான். அவனின் வாழ்க்கையைப் பாதுகாப்பது தான், இந்த ஜனநாயகம். மிக விசித்திரமான எதார்த்தமான உண்மை இது.

இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கென்று வேறு உண்மைகள் எதுவும் கிடையாது. பணமுள்ளவனின் வாழ்க்கையைத் தான், இந்த ஜனநாயகம் பாதுகாக்கின்றது. அவனின் சொந்தத் தேர்வு தான் இந்த ஜனநாயகம். எப்படி சாதி; பார்ப்பானின் தேர்வோ, அப்படித்தான் இந்த ஜனநாயகம்;. இது எதை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. பணமுள்ளவன் எப்படி இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றான் என்பதைத் தான். பணம் உள்ளவன் அதை எப்படி ஜனநாயக அமைப்பில பெறுகின்றான் என்பதைத் தான்.

இந்த ஜனநாயக சமூக அமைப்பில் மக்கள் நாள் பூராவும், ஏன் வாழ்க்கை பூராவும் உழைக்கின்றனர். ஆனால் அவர்களிடம் பணம் இருப்பதில்லை. ஏன்? இந்த ஜனநாயக அமைப்பில் வாழவழியற்றுப் போகின்றனரே ஏன்? ஆனால் சிலர் மட்டும் இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றனர் என்றால் எப்படி? இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்கள், எப்படி ஜனநாயகத்தை தமது தேர்வு என்று சொல்லமுடியும்! இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்களுக்கும், இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்பவர்களுக்கு இடையில் என்ன வேறுபாடு? எந்த நெருக்கடியுமின்றி வாழ்பவர்களுக்கு, வாழ்வதற்கான பணம் எப்படி அவர்களுக்கு மட்டும் கிடைக்கின்றது. வாழ்க்கை ப+ராவும் உழைப்பவன் வாழமுடியாத வகையில் பணத்தைப் பெறமுடிவதில்லையே என்?. பணம் மரத்தில் காய்ப்பதில்லை. மனித உழைப்பில் தான் காய்க்கின்றது. ஆனால் உழைப்பவன் அதைப் பெறமுடிவதில்லையே. ஏன்?

மனித உழைப்பு பணத்தை உருவாக்குகின்றது என்பது உண்மையாக இருப்பதால் தான், உழைப்பவன் அதை கொண்டு வாழமுடியாத நிலை உருவாகுகின்றது. உழைப்பவன் தனது உழைப்புக்கு சொந்தக்காரனாக இருப்பதில்லை. இதனால் தான் அதை அவன் இழந்து விடுகின்றான். யாரிடம் இழக்கின்றான் என்றால் பணமுள்ளவனிடம். இதனால் பணமுள்ளவன் வாழ்கின்றான். இந்த இழப்பு எப்படி சாத்தியமாகின்றது என்பதே, அனைத்துக்குமான சூக்குமமாகவுள்ளது. மனித உழைப்பு சுரண்டப்படுபவதன் மூலம் தான், மற்றவனால் வாழமுடிகினறது. உழைப்பவன் வாழமுடியாது போகின்றது. இதை பாதுகாக்கும் இந்த அமைப்புத்தான் ஜனநாயக அமைப்பாகவுள்ளது. இவர்கள் ஜனநாயகத்தின் காவலராக உள்ளனர். இந்த ஜனநாயகத்தின் தீவிர காவலர் யார் என்றால் பணமுள்ளவராக உள்ளனர். அவர்களே முதலாளிகளாக, நிலப்பிரபுகளாக உள்ளனர்.

ஜனநாயகம் என்பது, மற்றவனின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், தான் வாழ்வது தான். இதை மூடிமறைக்கவே வாக்களிக்கும் உரிமைப் பிரகடனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீ உனது வாக்கு மூலம், யார் உன்னை ஆள்வது என்பதை தெரிவு செய்யமுடியும் என்று கூறமுனைகின்றனர். விரும்பின் நீயும் ஆள முடியும் என்ற பிரமையும் ஊட்டப்படுகின்றது. இது அதிஸ்ட லாபச் சீட்டுப் போல், கபடமும் சூழ்ச்சியும் நிறைந்த அப்பட்டமான மனித உழைப்பைச் சுரண்டும் அரசியல் சூதாட்டமாகும்.

உனது வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்யும் உனது உரிமை, நீயே ஆளமுடியும் என்ற உரிமை, இதுவே ஜனநாயகம் என்றால் இது எப்படி சக மனிதனை அடிமைப்படுத்துவதை அனுமதிக்கின்றது. சரி இந்த அடிமைத்தனத்தை இது எப்படி ஒழிக்கும்? சக மனிதனையே கேவலப்படுத்தும் சமுதாயத்தை, இது எப்படி மாற்றி அமைக்கும். மனிதர்களை சிறுமைப்படுத்தி கீழ்மைப்படுத்தும் சமூக முரண்பாடுகளை, எப்படி இது இல்லாதாக்கும்? விடை தெரியாத ஜனநாயகப் புதிர்தான் இது. ஜனநாயகத்தின் கடமை இதுவல்ல என்பதே, எதார்த்தம் கூறுகின்ற ஒரு ஜடமான வாழ்வாக உள்ளது.

வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்கின்ற உரிமை, நீ ஆளுகின்ற உரிமை எப்படி எதார்த்தத்தில் உள்ளது. இன்று உலகை ஆளுகின்ற எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக தலைவர்களாக இருந்தாலும் சரி, எந்த சுதந்திரமான எழுத்து பேச்சு சுதந்திரமாக இருந்தாலும் சரி, இழிந்துபோன இந்த அமைப்பின் மனித துயரங்களை தீர்ப்பதில்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த ஜனநாயகம் மனிதர்களுக்கு எந்தவித்திலும் பயன்படவில்லை என்பது உண்மையாகின்றது. அனைத்து ஜனநாயகவாதிகளும், மக்களின் பிரச்சனைக்கு தீர்வு தருவதாகத்தான் கூறுகின்றனர். ஆனால் எதார்த்தத்தில் அதை மறுதலிப்பவராகவே உள்ளனர். வாக்கு போட்டு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சிகள், அதன் உறுப்பினர்கள் எங்கேயாவது மக்களுக்காக அவர்களின் வாழ்வு பிரச்சனைகளுக்காக உண்மையாக நேர்மையாக வாழ்கின்றார்களா? இன்று ஆளும் வர்க்கமாக உள்ள ஆட்சியாளர்கள், மக்களுக்கு தாம் என்ன தான் செய்ய போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா? மக்களுக்கு எதிராக எதைக் கொண்டு வரப் போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா? இல்லை. வெளிப்படையாக மக்களுக்கு எதையும் சொல்வதில்லை. சூக்குமமாக தமது திட்டங்களை, மக்கள் புரிந்து கொள்ளாத மொழிகளில் அரூபமாகவே முன்வைக்கின்றனர். அதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. முழு மக்களையும் பாதிக்கின்ற, சொல்லாத பல விடையங்களையே மூலதனத்துக்கு சார்பாக அமுலுக்கு கொண்டு வருகின்றன. பொதுவாக பார்த்தால் மாற்றமுடியாத ஒரு அமைப்பின் விதிகளுக்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கட்டுப்பட்டு செயற்படுகின்றது.

மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என எதுவும் சொல்வதில்லை. ஒப்பந்தங்கள் முதல் சட்டங்கள் வரை பல இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஒரு மூடுமந்திரமே ஆட்சியின் இயல்பாகின்றது. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இவற்றை புரிந்துகொள்ள சில உதாரணங்களை எடுப்போம்.

1.உலகமயமாதல் என்ற உலக ஒழுங்கு இன்று உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. அது உலகில் உள்ள மக்களின் வாழ்வின் ஆதாரங்களை இல்லாததாக்குகின்றது. மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக, அடிமைகளாக மாற்றுகின்றது. நாடுகளையே இல்லாது ஒழிக்கின்றது. உலக நாடுகளையும் அதன் தலைவிதியையும் அழிக்கின்ற இந்த உலகமயமாதல் ஒப்பந்தங்கள் என்ன? யாருக்காவது தெரியுமா? உலகில் உள்ள மக்களுக்கு இது என்னவென தெரியாது. மக்களை விடுவோம், தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக பிரதிநிதிகளுக்குத் தெரியுமா? தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாடும் இந்த தற்கொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கூட இந்த ஒப்பந்தம் என்னவெனத் தெரியாது. ஆனால் கையெழுத்திட்டுள்ளர். உலகின் சகல மனிதர்களின் வாழ்வும், இதற்குள் தான் இயக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத அநீதியை நியாயப்படுத்துவதே ஜனநாயகமாகிவிட்டது.

இதைக் கொண்டு வந்த விதமே ஜனநாயகவிரோதமானது. கையெழுத்திட்ட வடிவமே ஜனநாயக விரோதமானது. ஆனால் இதை அமுல்படுத்தும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர்.

கைநாட்டிட்ட இந்த ஒப்பந்தத்தை, வாக்குபோட்டு தெரிவு செய்த பிரதிநிதிகள் யாரும் விவாதித்து அங்கீகரிக்கவில்லை. மக்களின் வாக்களிக்கும் உரிமையே இங்கு செல்லுபடியற்றது. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை கேள்வி கேட்க முடியாது. அந்த ஒப்பந்தச் சரத்துகள் என்ன என்பதை அறியும் உரிமையும் கூட அவர்களுக்கு கிடையாது. வாக்கு அளிக்கும் உரிமை, தேர்வின் உரிமை, தேர்ந்தெடுத்த உறுப்பினரின் உரிமையென எதுவும் இந்த அமைப்பில் அர்த்தமற்ற ஒன்றாகவே உள்ளது. சரி உயர் நீதிமன்றங்கள் கூட இதை கேள்வி கேட்கவோ, தடை செய்யவோ முடியாது. ஜனநாயகம் என்பது இங்கு போலியான வெற்றுச் சொற்களாக இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. யார் இதை உருவாக்கினார்கள்? மக்களுக்கு மேலாக உள்ள அவர்கள் யார்? இதுவே இதைப் புரிந்து கொள்வதில் மிக முக்கியமான கேள்வியாக எம்முன் உள்ளது.

2.இது போன்று ஓய்வூதிய வயதெல்லையை (5 வருடமாக) அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலங்கள் பல நாடுகளில் வருகின்றன. இந்தச் சட்டமூலம் பற்றி விவாதத்தை யார் தீர்மானிக்கின்றார்கள். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுபினர்கள் என்றால், அதன் பின்னால் முதலாளிகள் உள்ளனர். சரி இந்த தெரிவு செய்யபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த சட்டமூலத்தை கொண்டு வரப்போவதாக கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்களா எனின் இல்லை. மக்களிடம் இப்படி கூறி வாக்கு கேட்பதில்லை. உண்மையில் மக்கள் தீர்மானிப்பதில்லை. தனது ஓய்வூதிய கால அளவை கூட்டவுள்ளதாக கூறி வாக்கு கேட்டு இருந்தால், மக்கள் அவர்களை நிராகரித்து இருப்பார்கள். மக்களை ஏமாற்றி வாக்கு பெற்ற பின்பு, அதை ஜனநாயகபூர்வமான தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஜனநாயகத் தெரிவு என்பது மொத்த மக்களுக்கும் எதிரான மோசடியாகும். இப்படித்தான் பலவற்றை ஜனநாயக விரோத பாராளுமன்றங்கள் ஜனநாயகத்தின் பெயரில் செய்கின்றன. சில சட்டமூலங்கள் பெரும்பான்மை மக்கள் எதிர்கின்ற நிலையிலும், வீதியில் இறங்கிப் போராடுகின்ற நிலையிலும் கூட, அதை மாற்ற முடியாது என்று மக்களுக்கு எதிராக கொக்கரிப்பதே ஜனநாயகமாக உள்ளது.

3.உலகில் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களை எடுப்போம். வேலை நேர அதிகரிப்பு, குறைந் கூலிகள், வேலைவிட்டு நீக்கும் உரிமைகள் என்று அன்றாடம் பல சட்டங்கள் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படுகின்றது. யார் அவர்களை தெரிவு செய்தனரோ, அவர்களுக்கு எதிராக அவர்களின் விரும்பங்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருகின்றனர். இந்த மக்கள் விரோத முதலாளி சார்புச் சட்டங்களை கொண்டு வரப்போவதாக மக்களுக்கு கூறி வாக்கு கேட்டனரா எனின் இல்லை? தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் விருப்பு வெறுப்புக்கு வெளியில் கொண்டுவரும் சட்டங்கள், அந்த மக்களை உயிருடன் கொல்லுகின்றது. இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். இதையே மக்களின் தேர்வின் உரிமை என்கின்றனர். இது அப்பட்டமான மோசடியாகும்

4.உலகில் பொதுவாக போடப்படும் சட்டங்கள் இயற்கை மீதான மனித உரிமையையே இல்லாததாக்குகின்றது. குடிக்கும் தண்ணீரையே ஜனநாயகம் காசாக்குகின்றது. உயிர்வாழ்வதற்கு தேவையான மருத்துவத்தை மறுத்து, உயிர்வாழும் உரிமையை ஜனநாயகம் காசாக்குகின்றது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை கல்வியின் உரிமையை மறுக்கும் ஜனநாயகம், அதையும் காசாக்குகின்றது.

வாழ்வதற்கு இந்த பூமியில் ஒரு துண்டு நிலத்தைக் கூட பெற முடியாத மனித அவலம். இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். உன்னிடம் பணம் இல்லை என்றால் குடிக்கும் நீரை, நோய் தீர்க்கும் மருந்தை, ஒரு நேர உணவை, வாழ்வதற்கான ஒரு இடத்தைக் கூட, இந்த பூமியில் நீ பெற முடியாது. இந்த உண்மையை பாதுகாப்பது தான் ஜனநாயகம்.

பணத்தை பெறும் உனது உழைப்பை நீ எவ்வளவுக்கு விற்பது என்பதை நீ தீர்மானிக்க முடியாது. இதைத்தான் பாராளுமன்ற ஜனநாயக சட்டங்கள் அன்றாடம் உனக்கு எதிராக உருவாக்குகின்றனர். இதைத் தான் உனது உரிமை என்றும், உனது ஜனநாயகம் என்றும் உனக்கு புகட்டுகின்றனர்.

மக்கள் இந்த பூமியில் வாழவழியற்ற நிலையை உறுதிசெய்யும் சட்டங்களை இயற்றுவதே ஜனநாயகத்தின் ஒரே கடமையாக உள்ளது. தெரிவு செய்யப்பட்ட எந்த உறுப்பினராவது அல்லது கட்சியாவது, இதைத் தமது கொள்கையாக கூறி வாக்குக் கேட்டார்களா? எனின் இல்லை. மக்கள் அவர்களை இதற்காகவா தெரிவு செய்தார்கள் எனின் அதுவும் இல்லையே!

இப்படி பற்பல உதாரணங்களை நாம் காட்டமுடியும். மக்கள் முன் முன்கூட்டியே திணிக்கப்பட்ட ஒரு அமைப்பில் தெரிவு செய்யப்படுபவர்கள், தாங்கள் செய்யப் போவதை கூடச் சொன்னதில்லை. அதேபோல் சொன்னதைச் செய்வதில்லை. உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு மக்கள் விரோத கும்பலாகத்தான் உருவாகுகின்றனர். இந்தக் கும்பலின் மக்கள் விரோதச் செயலைத்தான் ஜனநாயகம் என்கின்றனர்? மக்களின் ஜனநாயக உரிமை, தேர்ந்த உரிமை என அனைத்தும், மிக மோசமான வழியில் ஒரு பணக்கார கும்பலுக்கு சார்பாக பயன்படுத்தப்படுகின்றது. மாறிமாறி ஆட்சிக்கு வரும் ஜனநாயகவாதிகள், மக்கள் விரோத சட்டங்களை மீளப் பெறுவதில்லை. அது அடுத்த ஆட்சியிலும் தொடருகின்றது. எப்போதாவது மீளப் பெறப்படுகின்றது எனின், மக்கள் வீதியில் இறங்கி இந்த ஜனநாயக ஆட்சிக்கு சவால்விடும் போது மட்டும் தான் நிகழ்கின்றது. மக்கள் இனியும் இந்த ஜனநாயகத்தை சகித்துக் கொண்டு வாழமுடியாத என்ற நிலையில், வீதியில் இறங்கி ஜனநாயகத்துக்கு சவால் விடுகின்றனர்.

மக்கள் விதியில் இறங்கி புனிதமான ஜனநாயக அமைப்பையே தகர்த்துவிடும் அச்சுறுத்தலைவிடும் போது மட்டும்தான், மக்கள் விரோத ஜனநாயகச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றது. அதாவது மக்கள் விரோத ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டம் மீளப்பெறப்படுகின்றது. உண்மையில் இந்த ஜனநாயக அமைப்பின் எதிர்மறையான அம்சமே இங்கும் செயலாற்றுகின்றது. மக்கள் இந்த ஜனநாயக அமைப்பை ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் அன்றாடம் நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவை, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் தான்;. இந்த ஜனநாயகம் மக்களுக்கு எதிராக இருப்பதால் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இப் போராட்டத்தில் மக்கள் ஜனநாயகத்தை முன்னிறுத்தினாலும் கூட, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான போராட்டமாகவே அவையுள்ளது. இது நிகழாத போது, மக்களின் அன்றாட வாழ்க்கையே கண்ணீர் ஆறாக, இந்த ஜனநாயகத்துக்கு எதிராக பெருக்கெடுகின்றது. இதுவும் அன்றாட மனித வாழ்க்கையில் நடந்தேறுகின்றது.

மக்களுக்கு எதிரான சட்டங்கள், ஒப்பந்தங்கள் ஏன், யாருக்காக உருவாக்கப்படுகின்றன? முழு மக்கள் கூட்டத்துக்கு எதிராக, ஏன் இந்த ஜனநாயகவாதிகள் இயங்குகின்றனர். மூலதனத்தின் நலன் என்பதே, இதன் மையமான அரசியல். ஜனநாயகம் என்பது மூலதனத்தை விரிவுபடுத்துவது தான். பணக்காரனை பணக்காரனாக்குவது தான்.ஏழையை மேலும் ஏழையாக்குவது தான். இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கு என்று வேறு விளக்கம் கிடையாது. பரந்துபட்ட மக்களின் வாழ்வை அழித்து, மூலதனத்தை பெருக்குவது தான் ஜனநாயகம். இந்த உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர். மூலதனம் வாழவேண்டும் என்றால், மக்கள் சுரண்டப்பட வேண்டும். இந்த முரண்நிலையான கூறு எதார்த்தத்தில் ஜனநாயகமாக உள்ளவரை, இந்த ஜனநாயக அமைப்பு ஒரு சார்பு நிலையை எடுத்தேயாக வேண்டியுள்ளது. மனித உழைப்பை சுரண்டுவது அல்லது சுரண்டலை எதிர்ப்பது என்ற எதிர்நிலைப் போக்கு, தெளிவாக துல்லியமாக இதிலொன்றை தெரிவு செய்கின்றது.

இந்த ஜனநாயகம் என்பது மூலதனத்தைப் பாதுகாக்கும் அமைப்பாகவே உள்ளது. இது தவிர்க்க முடியாது மூலதனத்தை பெருக்க, மக்களின் உழைப்பை அதிகளவில் சுரண்டுவதை கோருகின்றது. மக்களிடம் உள்ளவற்றை புடுங்குவதை சட்டமாக்குவது தான் ஜனநாயகமாகி விடுகின்றது. ஆளும் வர்க்கத்தின் மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும், மக்கள் விரோத சட்டங்களை இந்த ஜனநாயக அமைப்பு உருவாக்குகின்றது. ஜனநாயகத்தின் பெயரில் தேர்வு செய்யும் உறுப்பு, அப்படித்தான் உள்ளது. இது தவிர்க்க முடியாது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது.

நிலவும் ஜனநாயகம் என்பது மக்களுக்கு அல்ல, மூலதனத்துக்குத் தான். மூலதனத்தின் வாழ்வுக்கு உட்பட்ட சட்டத் திட்டங்களைத் தான், இந்த அமைப்பின் சமூக ஒழுக்கமாக்குகின்றனர். இதற்கு வெளியில் சுயாதீனமாக சுயேட்சையான சட்டதிட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. ஜனநாயகத்தின் எல்லைப்பாடு, இதற்கு வெளியில் எதுவும் கிடையாது.

இந்த ஜனநாயகத்தில் மக்களை மந்தைத் தனத்தில் வைத்திருப்பதன் மூலம் தான், தமது சொந்த இருப்பையே தக்கவைக்க முடிகின்றது. ஜனநாயகத்தின் உறுப்பாக காட்டப்படுகின்ற கருத்து தளங்கள் மிகப்பெரிய ஒரு மூலதன நிறுவனமாக மாறிவிட்டது. மக்களிடம் கருத்தை பெருமளவில் எடுத்துச் செல்லுகின்ற ஊடகவியலில், மக்கள் தமது கருத்தை விரும்பியவாறு சொல்லமுடியாது. ஏன் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற ஒரு கருத்தைக் கூட பிரதிபலிக்க முடியாது. இதில் மூலதனத்தின் நலனுக்கு எதிராக கருத்துரைக்கவே முடியாது. ஊடகமே ஒரு மூலதனத்தின் மேல் வீற்றிருக்கின்றது. ஊடகமே ஒரு மூலதனமாகிவிட்டதால், அதற்கு உட்பட்ட வகையில் செயலாற்றுவதையே அது அனுமதிக்கின்றது. இதற்குள் தான் மாறுபட்ட கருத்தை பிரதிபலிக்க முடியும்.

ஊடகத்துறை மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையைப் பற்றி பேசுவதில்லை. மக்களுக்கு எதிரான சட்டதிட்டங்களையும், ஒப்பந்தங்களையும் பற்றி பேசுவதில்லை. வாக்கு போட்டு தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் எப்படி ஏன் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதைப் பற்றியோ, அவர்களின் ஜனநாயக விரோத செயல்பாட்டைப் பற்றியோ பேசுவதில்லை. ஜனநாயகத்தின் பெயரில் ஜனநாயக விரோதமாகவே செயல்படும் அமைப்பைப் பாதுகாப்பதில், மக்களுக்கு எதிராக செயல்படுவதை பாதுகாக்கின்ற வகையில் கருத்தை எடுத்துச் செல்லுகின்றன. மக்களுக்கு கருத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்கள் தனிப்பட்ட முதலாளிகளுடையதாக அல்லது ஆளும் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக உள்ளது. இது பரந்துபட்ட மக்களின் வாழ்வுக்கு எதிராக திட்டவட்டமாக செயலாற்றுகின்றது.

இது இப்படி என்றால் ஆளும் கட்சிகளை எடுத்தால் அல்லது எதிர்க்கட்சியை எடுத்தால் இதே நிலைதான். கட்சிகளே பெரும் பண நிறுவனங்களாகவே மாறிவிட்டன. பண முதலைகளின் நிறுவனங்களாகவும், அதை பொறுக்கித் தின்னும் ஒரு அடிபாள்படைகளைக் கொண்ட ஒரு மக்கள் விரோத நிறுவனமாக கட்சிகள் மாறிவிட்டன. மக்களுக்கு முன்னால் தாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று சொல்லி, நேர்மையாக வாக்கு கேட்பதில்லை. மாறாக எதையும் சொல்வதில்லை. எதையும் மக்களுக்கு தருவதாக கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அதை மக்களுக்கு கொடுப்பதில்லை. மக்களிடம் இருப்பதை புடுங்கும் அரசியல் தான், கட்சிகளின் ஜனநாயகமாக உள்ளது. இது மக்களின் வாக்குத் தொடங்கி உழைப்புவரை விரிந்து அகன்று செல்லுகின்றது. உலகமெங்கும் வீதி தோறும் போராடும் மக்கள் இந்த உண்மையைத் தான், அன்றாடம் உலகுக்கு புகட்டுகின்றனர்.

அமெரிக்கா முதல் இந்தியா வரை மிகப் பெரிய பணக்காரக் கட்சிகள் மட்டும் தான் ஆட்சிக்கு வரமுடியும். கட்சிகளே மிகப் பெரிய (பணம்) நிறுவனமாகிவிட்டது. அந்தளவுக்கு பணம் முதல் அடியாட்படைகள் வரை கொண்ட ஒரு ஆளும் நிறுவனமாகிவிட்டது. மக்கள் வாக்களித்தாலும் சரி, வாக்களிக்கவிட்டாலும் சரி, ஆளும் நிறுவனங்களில் ஒன்று ஆட்சிக்கு வந்தேயாகின்றது. மக்களுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் அன்றாடம் இயற்றுகின்றனர். இதில் இடது வலது வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஜனநாயக அமைப்புக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி கேள்விக்குள்ளாக்கும் போது, அதை பாதுகாக்க சீர்திருத்தம் செய்கின்றனர். இதற்கு மேல் இந்த ஜனநாயக அமைப்பில் மாற்றம் எதையும், இந்த சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் செய்வதில்லை.

வாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர்.

அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வாக்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.

இந்த ஜனநாயகம் இப்படித் தான் நிர்வாணமாகியுள்ளது. இந்த ஜனநாயகம் மனிதனின் வாழ்வை குழிபறிப்பதில் தான் உயிர்வாழ்கின்றது. இது இப்படி என்றால், கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரத்தையே ஜனநாயகமாக கொண்டாடும் சிலர் ஜனநாயகத்தை எப்படி விளக்கி வாழ முற்படுகின்றனர் எனப்பார்ப்போம்.

இவர்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்கின்றது என்பது பற்றி அக்கறையில்லை. தனக்கு எப்படி இந்த உலகம் இசைவானதாக இருக்க வேண்டும் என்பது பற்றித்தான், அவனின் கவலை. தன்னையொத்த சகமனிதன் சிந்திக்கவே நேரமின்றி, உழைத்தபடி வாழ்கின்றானே என்ற கவலை இவர்களுக்கு கிடையாது. சகமனிதன் கருத்தைக் கூட சொல்ல முடியாத நிலையில், கல்வியறிவு இந்த ஜனநாயக அமைப்பால் மறுக்கப்பட்ட நிலையில் பட்டினியுடன் வாழ்வதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை. சக மனிதனுக்கு அவை இல்லாது இருப்பது தான், தனது உரிமை என்கின்றான். இதை அவன் நேரடியாக சொல்வதில்லை. அதை நாகரிகமாக வெளிப்படுத்துகின்றான். அந்த மக்களின் வாழ்வைப்பற்றியும், அதற்கான காரணமாக உள்ள இந்த ஜனநாயகத்தை, தனது ஜனநாயகத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதையே அவன் ஜனநாயகம் என்கின்றான். இதன் மூலம் தன்னை சமூகத்தின் மேலே உயரத்தில் தக்கவைக்க முனைகின்றான்.

முரணற்ற ஜனநாயகத்தை ஒரு ஜனநாயகவாதி கோருவானாகின், நிச்சயமாக இந்த ஜனநாயகத்தை நுகர முடியாத மனித வாழ்வையும் அந்த ஜனநாயக விரோத அமைப்பையும் எதிர்த்து போராடுவான். ஜனநாயகம் மறுக்கப்பட்டு அதை நுகர முடியாத உலகம் மிகப் பெரியது. ஜனநாயகம் சிலருக்கானதாக (பணம் உள்ளவனுக்காக) உள்ள போது, ஜனநாயகம் என்னவென தெரியவே முடியாத நிலையில் கோடானுகோடி மக்களை மந்தைகளாக வாழவைப்பதே இந்த ஜனநாயக அமைப்புத்தான்.

இதை மூடிமறைப்பதும், இதை வேறொன்றாக காட்டுவதும் இந்த ஜனநாயகத்தின் கேடுகெட்ட செயலாகின்றது. அதாவது மனிதனை மனிதன் அடிமையாக்குகின்ற உழைப்புச் சுரண்டலை மூடிமறைக்கின்ற வகையில், சமூகங்களையே சுரண்டும் வடிவங்களாக மாற்றிவிடுகின்றனர். இயற்கையில் உடல் மற்றும் கால விசும்பலுக்கும் உட்பட்ட சமூக வேறுபாடுகளையும், பண்பாட்டு வேறுபாடுகளையும் மோதவிடுவது இதன் ஒரு அங்கமாகும். பெண்ணை ஆணைவிட கீழ்நிலைக்கு இட்டுச் சென்றதால், ஆண் மேலாண்மை பெண்ணை இழிவாக்குகின்றது. ஆணின் உழைப்பு சுரண்டப்படுவதை இது மூடிமறைகின்றது. அதேநேரம் பெண்ணை ஆண் சுரண்டவும் முடிகின்றது.

சாதியத்தின் படிநிலைப்பட்ட சமூக அமைப்பில், உயர்சாதி தாழ்ந்த சாதியை இழிவுபடுத்துவதன் மூலம் தாழ்ந்த சாதியை உயர்ந்த சாதி சுரண்டுகின்றது. இங்கு சுரண்டல் என்பது பண்பாட்டுத் தளத்தில் தொடங்கி உழைப்பு வரை விரிந்த ஒரு தளத்தில் காணப்படுகின்றது.

இதே போல் தான் நிற முரண்பாடுகள். வெள்ளையினத்தை உயர்ந்த இனமாக காட்டுகின்றது. இது மற்றைய நிறங்களை இழிவாக பார்ப்பதன் மூலம், மற்றயை நிறங்கள் மீதான் சுரண்டலை நடத்துகின்றது. இதுபோல் இனமுரண்பாடு ஒரு இனத்தை மேன்மை இனமாக காட்டுவதன் மூலம், மற்றயை இனம் சுரண்டப்படுகின்றது. இப்படி சமூக முரண்பாடுகளை முன்தள்ளி சுரண்டுவதன் மூலம், சுரண்டல் வடிவங்கள் இடம்மாறி சுரண்டப்படுபவர்களை மோதவிடுகின்றது. அதேநேரம் மேனிலையில் உள்ளவன், சுரண்டுவதன் மூலம் அதிக லாபங்களை அடைகின்றான். கீழ்நிலையில் உள்ளவன் நியாயமாக தனக்கு மேலான ஒடுக்குமுறைக்கு எதிராக போராட, மேனிலையில் உள்ளவன் அதை பயன்படுத்தி கொழுக்கின்றான். மூலதனம் தனக்கு இசைவாகவே இதைப் பயன்படுத்துகின்றது. இப்படி எங்கும் எதிலும் மூலதனத்தின் லாபங்களே குறிக்கோளாகிவிடுகின்றது.

இதன் மூலம் சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. சகமனிதனையும், சக சமூகங்களை இழிவாடி கொள்ளையிடுவதற்கு இந்த ஜனநாயகம் உரிமையளிக்கின்றது. கிட்லரும் கூட ஜனநாயகத்தின் ஊடாகவே யூதரை இழிவுபடுத்தியே, ஆரிய மேன்மை பேசி ஆட்சிக்கு வரமுடிந்தது. இன்று உலகை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா ஆட்சி முதல், உலகை அடக்கியாள்வதற்கு கூட இந்த ஜனநாயகம் இடம்விட்டு கொடுக்கின்றது. மக்கள் விரோத அனைத்துச் செயலையும், ஜனநாயகம் வழிகாட்டுகின்றது.

இந்த நிலையில் ஜனநாயகத்தை நாம் எதிர்நிலையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது ஜனநாயகத்தில் உள்ள முரணற்ற கூறுகளை பயன்படுத்தி, ஜனநாயக விரோதத்தை ஒழிப்பதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமற்றதாக்க வேண்டும். அனைத்து மக்களின் ஜனநாயகம், ஜனநாயகத்தை இல்லாது ஒழித்துவிடுகின்றது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு நாம் போராட வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் பெயரில் சொல்லுகின்ற பொய்யையும் புரட்டையும், ஏன் அந்த வர்க்க சர்வாதிகாரத்தையும், அது உருவாக்கும் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தைப் பெறுவதே ஜனநாயகமாகும். மற்றவனுக்கு ஜனநாயகத்தை மறுப்பதை ஜனநாயகம் என்று சொல்வதன் மேல், மக்கள் தமது சர்வாதிகாரத்தை நிறுவவேண்டும். அதாவது பெண் என்றும், தாழ்ந்த இனமென்றும், தாழ்ந்த நிறம் என்றும், தாழ்ந்த சாதி என்று பேசும் ஜனநாயக உரிமை மீதும், சகமனிதனின் உழைப்பைச் சுரண்டும் ஜனநாயக உரிமை மீதும் மக்கள் சர்வாதிகாரத்தை நிறுவி அதை மறுக்க வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம். மக்கள் சர்வாதிகாரம் தான், அனைவருக்கமான ஜனநாயகத்தை வழங்கும. இது ஜனநாயகத்தின் பெயரில் உள்ள மனித இடைவெளியை அகற்றி, அதை இல்லாதாகும்.