தமிழ் அரங்கம்

Saturday, November 22, 2008

ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன

தனிமனித செல்வக் குவிப்பு, அமெரிக்காவில் உயர்ந்த கட்டத்தை அடைந்துள்ளது. 2004இல் அமெரிக்காவின் முதல் 500 மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வருடாந்தரம் குறைந்தபட்சம் ஒரு கோடி டாலருக்கு மேல் சம்பளமாக பெற்றனர். மிகப் பெரிய 25 நிறுவனங்களின் தலைவர்கள் குறைந்த பட்சம் 3.5 கோடி டாலரை சம்பளமாக பெற்றனர். இதை எங்கிருந்து எப்படி பெறுகின்றனர் என்றால் மக்களின் அன்றாட உழைப்பு தான்.

1979இல் அமெரிக்கா லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாகும். மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதமாகும். 1996இல் 13 லட்சம் பேர் லட்சாதிபதிகளாக இருந்தனர். இவர்கள் அமெரிக்கச் சனத் தொகையில் ஒரு சதவீதம் பேராவர். இவர்கள் அமெரிக்க நிலத்தில் 22 சதவீதத்ததை வைத்திருந்தனர். படிப்படியாக மக்களை சூறையாடுவதன் மூலம், கோடீஸ்வரர்கள் பெருக்கெடுக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு கோடி டாலருக்கு மேல் சொத்துடைய சமூக விரோதிகள் எண்ணிக்கை 1995இல் 1.19 லட்சமாகியது. இது 1998இல் 2.75 லட்சமாகியது. இந்த மூன்று வருடத்தில் கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடையோர், இரண்டு மடங்கையும் தாண்டிக் கொழுத்துள்ளனர். இதே மூன்று வருடத்தில் அமெரிக்காவில் வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் 10 லட்சம் பெறுமதியுடைய மாடமாளிகைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தால் அதிகரித்தது. மேல் இருக்கும் உயர் வர்க்கத்தின் படிநிலைக் கட்டமைப்பு செல்வக் குவிப்பு மேல் நோக்கி நகர்த்துகின்றது. கீழ் உள்ள சமூகக் கட்டமைப்பின் படிநிலையில் செல்வம் படிப்படியாக அகன்று விடுகின்றது. செல்வம் மேலும் கீழுமாக, நேர்எதிர்வீதத்தில் நாள் தோறும் மறுபங்கீட்டைச் செய்கின்றது.

இதன் விளைவு மேல்நோக்கி கொழுக்க, கீழ்நோக்கி ஏழைகளின் புதைகுழிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள 14 ஆயிரம் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், அமெரிக்காவில் அடிநிலையில் உள்ள 2 கோடி குடும்பங்களின் மொத்த வருமானத்துக்குச் சமமானதாகும். இது சமூகப் பிளவின் வீச்சையே எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் 1999இல் அமெரிக்காவில் இருந்த முதல் 400 பணக்காரரின் சொத்தின் பெறுமானம் ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

முசுலீம்கள் மீது மோடி வாரியிறைத்த அவதூறுகளையே திர்ப்பாகத் தந்துள்ளது.)

குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில், சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து போனதை விசாரித்து வந்த நானாவதி கமிசன், இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் எந்தப் பொய்யைப் பிரச்சாரம் செய்து வருகிறார்களோ, அந்தப் பொய்யையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.

"இச்சம்பவம் உள்ளூர் (கோத்ரா) முசுலீம்கள் திட்டம் போட்டு நடத்திய சதிச் செயல்; குஜராத் முதல்வர், அவரது அமைச்சர்கள், அம்மாநில போலீசு அதிகாரிகளுக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது; குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும், மறுவாழ்வும் அளிப்பதில் குஜராத் மாநில அரசு எவ்விதச் சுணக்கமும் பாரபட்சமும் காட்டவில்லை'' என நானாவதி கமிசன், தனது தீர்ப்பின் முதல் பாகத்தில் அறிவித்திருக்கிறது. ""இச்சம்பவம், உள்ளூர் முசுலீம்களின் சதிச் செயல் என்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் சதிச் செயல்'' என நானாவதி கமிசன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தால், நரேந்திர மோடி இன்னும் மகிழ்ந்திருக்கக் கூடும்!

காங். கூட்டணி மைய அரசைக் கைப்பற்றிய பிறகு, ரயில்வே அமைச்சகம் கோத்ரா சம்பவம் பற்றி விசாரிக்க யு.சி. பானர்ஜி என்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு கமிசன் அமைத்ததும்; அக்கமிசன் ""கோத்ரா சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து'' எனத் தீர்ப்பளித்திருப்பதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு சம்பவம், நேரெதிரான இரண்டு தீர்ப்புகள் சுவாரசியமான முரண்பாடுதான்.

இந்து மதவெறிக் கும்பலின் ஊதுகுழலான துக்ளக் ""சோ'', ""பானர்ஜி கமிசனின் அறிக்கை, பீகார் சட்டசபை தேர்தலுக்காக லல்லு பிரசாத் யாதவ்வால் அரங்கேற்றப்பட்ட நாடகம்'' என ஒதுக்கித் தள்ளுகிறார். சோவின் தர்க்கவாதம் உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனாலும், நானாவதி கமிசனின் அறிக்கையை நீதிநெறி பிறழாதத் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, November 21, 2008

பேரினவாதத்தின் வெற்றியை தடுத்து நிறுத்துவது எப்படி?

தமிழ் மக்களாகிய எம் கையில் அது உள்ளது. ஆனால் நாம் அடிமைகளாக்கப் பட்டுள்ளோம். செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, நாம் நடைப்பிணமாகியுள்ளோம். தமிழ் மக்களையே அழித்தொழிக்கும் பேரினவாத யுத்தத்தை ஒட்டி, தமிழ் மக்களாகிய நாம் எந்தக் கருத்தையும் சுதந்திரமாக கூற முடியாத அவலம். தமிழ் மக்களாகிய நாம், எம் சொந்தத் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாத வகையில் எமக்கு எதிராக பல துப்பாக்கிகள்.

ஒன்றலல் இரண்டல்ல. பல. புலிகள், துரோகக் குழுக்கள் முதல் பேரினவாதம் வரை, தமிழ் மக்கள் மேல் தம் துப்பாக்கியை நீட்டி வைத்து, இது தான் உங்கள் தலைவிதி என்கின்றன. சாதாரணமான மனித உரிமை முதல் இனத்தின் சுயநிர்ணயவுரிமை வரை மறுத்து, இது தான் தீர்வுகள் என்கின்றனர். இதைத்தான் இன்று தமிழ் மக்களாகிய நாம் அனுபவிக்கின்றோம்.

இதை மூடிமறைக்க, இவர்கள் மக்களுக்கு வித்தைகள் காட்டமுனைகின்றனர். சலுகைள், தீர்வுகள், தேர்தல்கள், பதவிகள், பந்தாக்கள், பிரதேசவாதங்கள், முதல் ஒரு வெற்றிகரமான ஒரு இராணுவத் தாக்குதல், இதன் மூலம் தமிழ் மக்களையே மீள மீள ஏமாற்றி விடவே முனைகின்றனர். இதுவே தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதை என்று சொல்லமுனைகின்றனர். ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அம்பானியின் கனவைத் தகர்த்த விவசாயிகள் எமுச்சி!

மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த கயர்லாஞ்சியில் ஏழை தலித் பூட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு சாதி இந்துக்களால் கொடூரமாக வேட்டையாடப்பட்ட கதையை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.

இந்தக் கிராமத்தில் பூட்மாங்கே குடும்பத்தினருக்கு வறண்டு போன ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தங்களுக்குத் தேவைப்படும் வசதியோடு ஒரு வீடு கட்ட அந்த தலித் குடும்பம் விரும்புகிறது. ஒரு தலித் படோபமாக வீடு கட்டுவதா என்று சாதி இந்துக்கள் அதை வன்மத்துடன் எதிர்க்கின்றனர். மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தை கிராமத்தின் பொதுப்பாதைக்கு தேவை என்று வஞ்சகமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்த அநீதியை அந்தக் குடும்பத்தின் தாயான சுலேகாவின் உறவினர், அருகாமை கிராமத்தில் இருப்பவர், போலீசிடம் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறார். ஆனால் போலீசு இந்தப் புகார் எதையும் பதிவு செய்ய மறுக்கிறது.

ஒரு தலித் குடும்பத்தினருக்கு இவ்வளவு திமிரா என்று சினமடைந்த சாதிவெறிக் கும்பல் அந்த உறவினரைப் போட்டு அடித்ததோடு சுலேகாவையும் அவளது இளவயது மகளான பிரியங்காவையும் நிர்வாணமாக்கி கும்பலாக பாலியல் வன்முறை செய்து அருகாமை ஓடையில் கொன்று போடுகிறது. மேலும் சுலேகாவின் இருமகன்களான ரோஷனும், சுதீரும் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். குடும்பத் தலைவரான பையாலால் பூட்மாங்கே மட்டும் இந்தக் கொடூரத் தாக்குதலிருந்து தப்பிக்கிறார்.

Thursday, November 20, 2008

புலிகளின் தோல்வியுடன், இனம் காணவேண்டிய பச்சோந்திகள்


புலிகள் மற்றும் புலியெதிர்புக் கும்பலால் மட்டும் இது நிகழவில்லை. இவர்களோ முழு அரசியலையும் தம் கையில் எடுத்து, தமிழ்மக்களை தம் அரசியல் நடத்தைகள் மூலம் தோற்கடித்தனர். இதில் முதன்மையாக புலிகள் இருந்தனர். புலிகள் தமிழ் மக்களை தம் சொந்த எதிரியாகவே பார்த்தனர். தமிழ் மக்களின் ஜனநாயகமும், தமிழ் மக்களின் உரிமைகளும் தமக்கு எதிரானதாக புலிகள் கருதினர். இதனடிப்படையில் முழு தமிழ் மக்களையும் கருவறுத்தனர். இந்த புலிகளின் பாசிசத்துக்கு முகம் கொடுக்க முடியாது போனவர்கள் தான், பெரும்பாலான புலியெதிர்ப்பு நிலையெடுத்தவர்கள். இவர்கள் கொண்டிருந்த மக்கள் விரோதக் கருத்துகள், பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கும் இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கும் நேரடியாக துணை போகத் தூண்டியது. இதன் மூலம் அவர்கள் புலிகளைப் போல், தமிழ் மக்களை அடக்கியொடுக்கினர்.

இப்படி தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்ட இரு பிரதான போக்குகள், எம்முன் வெளிப்படையாக உள்ளது. இதை விட உள்ள மற்றைய போக்கோ, சந்தர்ப்பவாத அரசியலை அடிப்படையாக கொண்டு இயங்கியது. புலிகளின் தோல்வியும், எதிர்காலத்தில் எழுகின்ற மக்கள் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஏகாதிபத்தியக் கொள்ளையும் சி.பி.ஐ.-இன் மொன்னைத்தனமும்

Wednesday, November 19, 2008

புலி ஒழிப்பையா பேரினவாதம் நடத்துகின்றது?

இல்லை. மாறாக தமிழ் மக்களை ஒழித்துக்கட்டுகின்றனர். தமிழ் மக்களின் ஒவ்வொரு உணர்வையும், புலிப் பாசிசத்தை மூலதனமானக் கொண்டு பேரினவாதம் வேட்டையாடுகின்றது. தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.

புலிகளின் பாசிச பயங்கரவாதத்தை உலகுக்கு காட்டியபடி, அழிப்பது தமிழ் மக்களின் அடிப்படையான வாழ்வியலைத்தான. இந்த அடிப்படையான உண்மையை புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி மறுதலிக்கின்றது. இந்த வகையில் புலிகளும், புலி எதிர்ப்பும் பேரினவாதத்துக்கு தத்தம் அரசியல் வழிகளில் உதவுகின்றனர்.

ஒருபுறம் பேரினவாதம் தமிழ் மக்களையல்ல புலிகளையே அழிப்பதாக புலியெதிர்ப்பு கூச்சல் போடுகின்றது. மறுபுறம் தமிழ் மக்களுக்காகவே தாம் மரணித்துக்கொண்டிருப்பதாக புலிகள் ஓப்புக்கு ஒப்பாரி வைக்கின்றனர்.

பேரினவாதம் வழமைபோல் தனது பேரினவாத வழிகளில் புலிகளின் பெயரில் யுத்தத்தை செய்கின்றது. தமிழ்பேசும் மக்களின் எந்த பிரச்சனையும், இவர்களாக தீர்க்கப்படப் போவதில்லை. தமிழ் மக்களை புலிகளின் பெயரில் அழித்தொழிக்க, காலத்தை இழுத்தடிப்பதைத் தாண்டி,.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிகளின் தோல்வியை நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம்?

மக்களின் வரலாற்றில் எது நடக்கக் கூடாதோ, அது இன்று அவர்கள் வரலாறாகி விடுகின்றது. மக்களிள் துயரமும் துன்பமும் விடுதலையின் பெயரில் வாழ்வாகி விடுகின்றது. இதை போராட்டம் என்று கூறி, தன் சொந்த முடிவை தானே தெரிவு செய்து கொண்டது.

இப்படிப் புலிகள் தம் தோல்வியையும், அழிவையும், தாமே தெரிவு செய்து தம் சொந்த வழியில் ஏற்படுத்திக் கொண்டனர். இதை நாம் தீர்மானிக்கும் சக்தியாகவோ, தடுக்கும் சக்தியாகவோ இருந்தது கிடையாது.

மறுபக்கத்தில் புலிகளின் சொந்த அழிவையிட்டு சிலர் மகிழ்வது போல், சிலர் அழுவது போல், இதை நாம் எடுக்கவில்லை. அப்படியானல் நாம் இதை எப்படிப் பார்க்கின்றோம்? மக்கள் இதையிட்டு என்ன நினைக்கின்றனர்? இவையெல்லாம் எம் முன்னுள்ள அடிப்படையான கேள்விகள்.

இந்த கேள்விகள், விருப்பங்கள், பார்வைகள், இதையொட்டிய கருத்துகள் இந்த நிலைமையை மாற்றிவிடாது என்ற உண்மை ஒருபுறம். மறுபுறத்தில் இதை பற்றிய தெளிவு தான், மனித குலத்தை எதிர்காலத்தில் மாற்றி அமைக்கும். இதன் அடிப்படையில் தான், எம் எதிர்வினைகள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, November 18, 2008

ஏகாதிபத்தியக் கொள்ளையும் சி.பி.ஐ.-இன் மொன்னைத்தனமும்


சூதாடி முதலாளித்துவம் அடித்த கொள்ளையின் விளைவாக, உலகம் முழுவதும் கொள்ளைநோய் போலப் பரவி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து உலக முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரமுகர் முன்வைத்திருக்கும் ஆலோசனைகள் இவை. அந்தப் பிரமுகர் யாராயிருக்கும் என்று யூகிக்க முடிகிறதா? மன்மோகன் சிங்? கமல்நாத்? அலுவாலியா? ப.சிதம்பரம்? இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா என்பதுதான் சரியான விடை. நியூயார்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்குழுவின் நிதி மற்றும் பொருளாதாரக் குழுவின் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில் கண்டெடுத்த முத்துக்கள் இவை. (பார்க்க: தினமணி 15.10.08)

Monday, November 17, 2008

புலிகளின் தோல்வியை நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம்?

மக்களின் வரலாற்றில் எது நடக்கக் கூடாதோ, அது இன்று அவர்கள் வரலாறாகி விடுகின்றது. மக்களிள் துயரமும் துன்பமும் விடுதலையின் பெயரில் வாழ்வாகி விடுகின்றது. இதை போராட்டம் என்று கூறி, தன் சொந்த முடிவை தானே தெரிவு செய்து கொண்டது.

இப்படிப் புலிகள் தம் தோல்வியையும், அழிவையும், தாமே தெரிவு செய்து தம் சொந்த வழியில் ஏற்படுத்திக் கொண்டனர். இதை நாம் தீர்மானிக்கும் சக்தியாகவோ, தடுக்கும் சக்தியாகவோ இருந்தது கிடையாது.

மறுபக்கத்தில் புலிகளின் சொந்த அழிவையிட்டு சிலர் மகிழ்வது போல், சிலர் அழுவது போல், இதை நாம் எடுக்கவில்லை. அப்படியானல் நாம் இதை எப்படிப் பார்க்கின்றோம்? மக்கள் இதையிட்டு என்ன நினைக்கின்றனர்? இவையெல்லாம் எம் முன்னுள்ள அடிப்படையான கேள்விகள்.

இந்த கேள்விகள், விருப்பங்கள், பார்வைகள், இதையொட்டிய கருத்துகள் இந்த நிலைமையை மாற்றிவிடாது என்ற உண்மை ஒருபுறம். மறுபுறத்தில் இதை பற்றிய தெளிவு தான், மனித குலத்தை எதிர்காலத்தில் மாற்றி அமைக்கும். இதன் அடிப்படையில் தான், எம் எதிர்வினைகள் அமைகின்றன.

நாம் புலிகளின் சொந்தத் தோல்வியை எதிர்மறையில் கற்றுக்கொள்ளக் கோருகின்றோம். பல ஆயிரம் ஆயுதம் ஏந்திய உறுப்பினர்கள் முதல் விமானங்கள் கொண்ட ஒரு இயக்கம்,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, November 16, 2008

ஆப்பை வைக்கும் கருணாவும், ஆப்பிளுக்கும் பிள்ளையானும்

கிழக்கின் ஜனநாயக விடிவெள்ளிகள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளுகின்றனர். ஜனநாயகத்தை அள்ளிக்கொடுத்த பேரினவாதம், அதிகாரத்துக்காக கொலை செய்வதை அங்கீகரிக்கின்றது. தமக்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது என்பதே, புலிகள் முதல் ஜனநாயக பாராளுமன்றம் வரையான பொதுவான நியதி. இப்படி இலங்கையில் இரண்டு பாசிசம் கொடிகட்டிப் பறக்கின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவராக பிரபாகரன் இருக்க, அவருக்காக கொலை செய்து கிழக்கின் தலைவரானவர் தான் இந்தக் கருணா. அதை அவர் என்றும் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இன்று அதே கருணா, தான் தலைவராக இருக்க செய்யும் கொலை தான் ரகுவின் கொலை. திடீர் திடீரென பிள்ளையான் முகாமில் நடக்கும் உட்கொலைகள் முதல் செய்தவர்கள் காணாமல் போதல் அனைத்தும் கருணாவின் ஜனநாயக திருவிளையாடல் தான்.

இப்படி அரசின் துணையுடன் கிழக்கில் ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது. இதை ஆதரித்துக் கும்மியடிக்கும் புலம்பெயர் குஞ்சுகள். பாராளுமன்ற பதவிகள்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய பிறப்பு என்ன?

"இயக்கவாத மாயை உருவாக்கிய "விடுதலைப் போராட்டம்"முடிவுக்கு வருகிறது,அதன் மீட்சியாக இன்னொரு வகையிலான புதிய அரசியல் கோரிக்கை முன்னெழும்.அது,முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக இருக்கும்.தென்கிழக்காசியிவில் நிலவிய புரட்சிகர அபாயத்திலிருந்து கிழக்காசிய ஆளும் வர்க்கங்கள் தற்காலிகமாக விடுபடுகின்றன.இனி நிகழப்போகும் புலிகளின் மீள் உருவாக்கத்திலிருந்து,புதிய தெரிவுகள்-புதிய பாணிலிலானஇயக்க அமைப்பாண்மையைக் கோரிக் கொள்ளும்?."

இன்றைய ஈழப்போராட்டச் சூழலில் களத்தில் போராடுவதாகச் சொல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமகாலத்தினதும்-இன்றையதுமான இராணுவ-அரசியல் தோல்விகள் உண்மையில் தவிர்க்கமுடியாத ஒன்றா?,புலிகளின் கட்டமைப்புச் சிதைந்து,அந்த இயக்கம் உண்மையிலேயே அழிந்துவிடுமா?இவர்கள் எந்த வகையில் இத்தகைய நிலைமைக்கு உள்ளானார்கள்?இத்தகைய கேள்விகள் நமக்குள் தொடர்ந்து எழுகிறது அல்லவா,இவைகள் உண்மையில் நமது மக்களின்மீதான கரிசனையின் வெளிப்பாடுகளால் மட்டுமல்ல எழுகிறது............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன? இது அரசியல் ரீதியானதே ஒழிய இராணுவ ரீதியானதல்ல. ஆனால் இதைக் காண மறுப்பதும், இதை இராணுவ ரீதியாக காண்பதும் புலி மற்றும் புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பின் இன்றைய கண்ணோட்டமாகவே உள்ளது.
ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் தீர்வாக காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகள் என்றுமேயில்லாத அளவுக்கு இராணுவ ரீதியாக தோற்றுக் கொண்டிருக்கின்றனர். பேச்சவார்த்தை என்ற அரசியல் மேசையில் தோற்றவர்கள், அதைத் தொடர்ந்து இன்று இராணுவ அரங்கில் தோற்பது தொடங்கியுள்ளது. அரசியல் மேசையில் தோற்று வந்த ஒரு நிலையில், வெல்வதற்காக அவசரமாகவே ஒரு தலைப்பட்சமாக வலிந்த ஒரு இராணுவ அரங்கைத் தொடங்கினர்.

இப்படி உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்படாத.................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்