தமிழ் அரங்கம்

Showing posts with label மேலாதிக்கம். Show all posts

Sunday, August 31, 2008

யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்

கிழக்கு மேலாதிக்கம் கையாளும் அரசியல் உத்தி, புலியை மட்டும் எதிரியாக சித்தரித்தபடி, பேரினவாதத்தின் வாலில் தொங்குவது தான். பேரினவாதம் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்திய, நடத்தி வருகின்ற கொடூரமான தொடாச்சியான அனைத்து இனவழிப்பு பக்கங்களை மூடிமறைப்பது தான், இவர்களின் உள்ளார்ந்தமான அரசியலாக உள்ளது. இவர்களின் கிழக்கு மேலாதிக்க பிரதேசவாத குறுகிய உணர்வுடன், மற்றயை பிரதேச மக்களை இழிவாடுவதன் மூலம், சொந்த பாசிச முகத்தை துணியைப் போட்டே மறைத்துக் கொள்ள முனைகின்றனர்.

தமிழ் மக்கள் என்ற அடையாளத்தின் கீழ் ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்தப்படுவதை, சிங்கள பேரினவாதம் ஒடுக்கவே எப்போதும் விரும்புகின்றது. அதன் அடிப்படையில் தான், கிழக்கு மேலாதிக்கம் சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றது. இதன் எடுபிடிகள் தான் கருணா முதல் அனைத்து எடுபிடி பினாமிகளும்.

யாழ் மேலாதிக்கத்தின் சமூக பொருளாதார அரசியல் கூறுகளை, வடக்கு மக்களின் கூறுகளாக திரித்து இழிவாடுவது இதன் முக்கிய கூறாகும். இதன் மூலம் மக்களை பிளந்து விடுவதன் மூலம் தான், சிங்களப் பேரினவாதம் கிழக்கையும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாதொழிக்க முனைகின்றது. இந்த வகையில் தான் கிழக்கில் நடக்கின்ற அனைத்து அரசியல் கூத்துகளும் அரங்கேற்றப்படுகின்றது.

கிழக்கில் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று, யாழ் மேலாதிக்க அரசியல் சமூக பொருளாதார கூறுகளை ஒழித்துக்கட்ட முனையவில்லை. அதாவது யாழ் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றுபட்டு செயல்படும் அரசியல் கூறுகள் எதுவும், கிழக்கு என்ற மேலாதிக்க கூச்சலின் பின் கிடையாது.கிழக்கு மேலாதிக்கம் சிங்கள பேரினவாதத்தினதும் கோவணமாகவும் இருக்க விரும்புகின்றது.