தமிழ் அரங்கம்

Friday, March 14, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...22.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...22.

குல்பர்க் முற்றுகை


ன்றைய தினம் அதிகாலையிலேயே விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளைச் சார்ந்தவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் மேஹனின் நகருக்கு வந்து சேர்ந்ததாக பிரகலாத் ராஜு கூறினான். விஹெச்பி அழைப்பு விடுத்த முழுஅடைப்பு நடைபெறுவதை நிர்பந்திக்கும் வகையில் அவர்கள் அனைவரும் வெளியில் வந்தனர். சுமார் 8:30 மணியளவில் இந்தக் கும்பலில் அவனும் இணைந்ததாகக் கூறினான்.

இந்தக் கும்பலில் உள்ள அதிகமானோர் சூலாயுதத்தைத் தங்கள் இடுப்பு கயிற்றில் கட்டி வைத்திருந்ததாக அவன் கூறினான். இன்னும் வன்முறையாளர்களில் அதிகமானோர் தடிகளையும், கார்களில் எரிபொருள்களையும் கொண்டுச் சென்றதாக மங்கிலால் ஜெயின் என்பவன் மேலும் தெரிவித்தான். வன்முறையாளர்களில் சிலர் கைத்துப்பாக்கிகளைக் கொண்டுச் சென்றதாக மதன் சாவல் தெரிவித்தான். விஹெச்பி.யினர் வந்து சேர்ந்தவுடனேயே முஸ்லிம் ஒருவரின் கடையைத் தீயிட்டுக் கொளுத்தியதாக சாவல் மேலும் கூறினான். பலசரக்கு மளிகை வியாபாரம் செய்யும் சாவல் இந்தத் தருணத்திலேயே தான் வன்முறை கும்பலுடன் இணைந்ததாக கூறினான்.

வன்முறையாளர்களை முன்நடத்திச் சென்றது யார்?

விஹெச்பி தலைவர்களான அதுல் வைத் மற்றும் பாரத் தெலி இன்னும் காங்கிரஸ் உள்ளுர் தலைவரான மேஹ் சிங் ஆகியோர்களே வன்முறை வெறிகூட்டத்தாரை வழி நடத்திச் சென்றதாக சாவல், ஜெயின் மற்றும் ராஜு கூறினார்கள்.

இஃஸான் ஜாப்ரி கொல்லப்பட்டது எப்படி?

வன்முறை கும்பல் வெகுவிரைவாக குல்பர்க் சமூகக் குடியிருப்பை முற்றுகையிட்டது. அங்கு 30 முதல் 35 முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், பக்கத்திலுள்ள சேரி பகுதியிலுள்ள ஏழை முஸ்லிம்களும் இவ்வளாகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். இக் குடியிருப்பு வளாகத்திலுள்ள கதவு மூடப்பட்டிருந்ததாலும், அதன் சுற்று சுவர் மிக உயரமாக இருந்ததாலும்., வன்முறை வெறியர்களில் சிலர் முன் பகுதியிலிருந்தும் பின் பகுதியிலிருந்தும், சுவரைத் தகர்த்தார்கள்.

வன்முறை வெறியர்கள் வாயு உருளைகளை வீடுகளிலிருந்து கொண்டு வந்தனர். சுவரின் பக்கத்தில் வாயு உருளைகள் வைக்கப்பட்டு தீயிட்டு வெடிக்க வைக்கப்பட்டதால், 2 அடி தடிமம் கொண்ட சுவர் உடைக்கப்பட்டது என சாவல் கூறினான். மேலும் அவன் கூறும் போது, வன்முறை வெறியர்களில் சிலர் கயிற்றை கொண்டு 20 அடி உயர சுவரில் ஏறியதாகவும் சொன்னான். வன்முறை வெறியர்கள் குடியிருப்புகளைத் தகர்ப்பதனால் சுதாரித்து கொண்ட ஜாப்ரி பதட்டத்தோடு காவல் துறை அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டார். தனது முயற்சிகள் பலன் எதனையும் தராததை உணர்ந்த ஜாப்ரி வன்முறை வெறியர்களை நோக்கி சுட்டு சிலரை காயமும் படுத்தினார் என்று குற்றம் சாட்டபட்ட ஒருவன் தெஹல்காவிடம் கூறினான். பிறகு வன்முறை வெறியர்கள் தன்னையும், பிற முஸ்லிம் மக்களையும் விட்டுவிடுவதற்காக பணம் தருவதாகவும் வேண்டினார். இந்தச் சமயத்தில், இவ்வெறியர்கள் பணத்துடன் கீழே வருமாறு கூறினார்கள்.

ஜாப்ரி கீழே வந்தவுடன், பணத்தைத் தரையில் போட்டு விட்டு திரும்பி செல்ல விரைந்தார். ஆனால் வன்முறை வெறியகள் அவர் மீது பாய்ந்துத் தாக்கினார்கள் என ஜெயின் கூறினான். ஐந்தாறு பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு ஒருவன் வாளால் தாக்கினான்... அவருடைய கைகள் வெட்டபட்டது; பிறகு கால்களும் வெட்டப்பட்டது... பிறகு மற்றவைகள் எல்லாம்... அவரை துண்டு துண்டாக வெட்டிய பிறகு, அவர்கள் அவரின் உடல் பாகங்களைக் குவித்து வைக்கப்பட்டிருந்தக் கட்டைகள் மீது வைத்து தீயிட்டார்கள்... அவரை உயிரோடு எரித்தார்கள் என கூறி சாவல் அக்கொடிய கொலை நிகழ்வை நினைவு கூர்ந்தான்.

ஜாப்ரியைக் கொன்ற பிறகு, மற்ற முஸ்லிம்களை வன்முறை வெறியர்கள் வெளியே இழுத்து கொண்டு வந்து, அவர்களை வெட்டி வீழ்த்தியதோடு தீயிட்டும் கொளுத்தினார்கள். மாலை சுமார் 4:30 மணியளவில் காவல்துறையினர் இறுதியாக அங்கு வந்து சேர்ந்தனர். வன்முறை வெறியர்களைக் கலைத்தனர். பிறகு உயிரோடு இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

குற்றங்களில் கூட்டாளியாகிய காவல்துறை

காவல்துறையினர் வன்முறையாளர்கள் சுதந்திரமாகத் தங்களது வெறியாட்டதை நிகழ்த்திட வாய்ப்பளித்ததோடு மட்டுமல்லாமல், இக்கயவர்கள் முஸ்லிம்களைக் கொல்வதற்கு ஊக்கமும் உந்துதலும் அளித்ததாக மூன்று குற்றவாளிகளுமே ஒரு சேர உரைத்தார்கள். மேஹனின் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய KG எர்டா என்பவன் வன்முறை வெறியர்கள் முஸ்லிம்களைக் கொல்ல 3 முதல் 4 மணி நேர அவகாச காலம் அளிப்பதாக கூறினான் என மங்கிலால் ஜெயின் தெரிவித்தான். கூடுதலான பாதுகாப்பு படையினர் அன்றைய தினம் மாலையில் அஹ்மதாபாத் வந்திறங்குவதாக எதிர்பார்க்கப்பட்டதால் தான் இக்கால அவகாசத்தை அந்த (அயோக்கிய) ஆய்வாளர் வழங்கினான் என்பதைத் தெஹல்கா கண்டுபிடித்தது.

சிலமணி நேர கால அவகாசத்திற்குள் வன்முறை வெறியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவை அனைத்தையும் செய்திட இசைவு தெரிவிக்கும் வகையில் காவல்துறையினர் முழுமையாய் விலகி இருந்து கொண்டார்கள் என ஜெயின் கூறினான். இத்தகைய நிலைபாடு, இக்கயவர்களின் வெறிக்கு மேலும் எரிபொருள் வார்ப்பதைப் போன்று இருந்ததால் அஹ்மதாபாத் முழுவதும் அதிக எண்ணிகையிலான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட காரணமாய் இருந்தது.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் நகர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் வன்முறையாளர்கள் போய் கொலை செய்வதற்குச் சைகை கூட தந்தார்கள் என ராஜு தெஹல்காவிடம் கூறினான். படுகொலைகள் கிட்டதட்ட நிகழ்த்தி முடிக்கபட்ட பின்பு உயிர் தப்பியவர்களை காப்பாற்றுவற்காக எர்டா வந்திறங்கினான். இந்த நேரத்தில் வன்முறையாளர்கள் எர்டாவிடம் சென்று அவனுடைய செயல்பாடு முறையல்ல, ஏனென்றால் உயிர் தப்பியவர்கள் வன்முறையாளர்களுக்கு எதிராக சாட்சி கூறுவார்கள் என்று முறையிட்டனர். எனவே மிகப் கொடிய திட்டம் எர்டாவின் எண்ணத்தில் உதித்தது. அந்தத் திட்டத்தின் படி, உயிர் தப்பியவர்களை வேனில் ஏற்றி கொண்டு குல்பர்கிலிருந்து வெளியேறும் போது வன்முறை வெறியர்கள் கற்களை வேனின் மீது வீசவேண்டும். அப்போது அவ்வேனில் உள்ள காவலர்கள் அச்சமுற்று ஓடிவிட்டதாக கூறப்படும். அந்த சமயத்தில் வன்முறை வெறியர்கள் அவ்வேனை தீயிட்டு கொளுத்தி விடவேண்டியது. ஆனால் பதான் என்னும் முஸ்லிம் காவல் ஆய்வாளர் சரியான தருணத்தில் தலையிட்டக் காரணத்தால் இக் கொடிய (சதி)திட்டம் செயல்படுத்த முடியாமல் போயிற்று என சாவல் தெரிவித்தான்.

மூடிமறைக்கப்பட்ட உண்மைகள்


அதிகாரப்பூர்வமாக கூறப்பட்ட கொலை செய்யப்பட்டோர்களின் எண்ணிக்கையை விடவும் உண்மையான எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று தெஹல்காவிடம் பேசிய மூன்று குற்றவாளிகளுமே கூறினார்கள். மேலும் அவர்கள் கூறும் போது, இறந்து கிடக்கும் உடல்களை அப்புறப்படுத்தி கொடூரத்தின் தாக்கத்தைக் குறைத்து காண்பிக்க உதவுமாறு வன்முறை வெறியர்களிடம் காவல் துறையினர் கோரினார்களாம். விசாரணைகள் துவக்கப்படும் போது கூட, குற்றங்களை மூடி மறைக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்தது. வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் குற்ற புலனாய்வு அதிகாரிகள் குற்றவாளிகள் அனைவரையும் மிகச் சிறந்த கண்ணியமான முறையில் நடத்தியதாக மூன்று குற்றவாளிகளுமே தெஹல்காவிடம் கூறினார்கள். விசாரணை காவலின் போது காவல்துறையினர் அவர்களில் எவரையும் கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தாததோடு மட்டுமல்லாமல், சிறந்த உபசரிப்போடு நடத்தப்பட்டதாக அவர்கள் அனைவருமே கூறினார்கள். வன்முறை வெறியர்களில் சிலர் விசாரணை காவலில் வைக்கப்பட்டதே, காவல்துறையினர் செய்ய வேண்டிய குறைந்தபட்சச் சம்பிரதாயத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்ற அவசியத்தினாலேயே, தவிர இக்காவலானது உண்மையில் ஒரு வேடிக்கையான நாடகமேயாகும் என இம்மூவரும் கூறினார்கள். அப்போதைய குற்றப்பிரிவு DCPயாக பதவி வகித்த DG வன்வாரா தான் குல்பர்க் படுகொலைகள் பற்றி விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படடிருந்தான். ஆனால் அவன் அவர்கள் (வன்முறை வெறியர்கள்) எவரிடமும் படுகொலைகள் தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்காக எவ்வித கேள்விகளையும் கேட்கவில்லை என சாவல் தெரிவித்தான். தாங்கள் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலங்களில் பொய்யையே கூறியதாகவும், ஆனால் உண்மைகள் கூறும்படி காவல்துறையினரால் தங்களுக்கு எவ்வித நிர்பந்தமோ நெருக்கடியோ தரப்படவில்லை என்றும் இம்மூவரும் மேலும் கூறினார்கள்

காவல்துறையினர் தங்களுடைய வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்ததாக உயிர் பிழைத்தவர்களில் டஜன் எண்ணிக்கையிலானோர் அஹ்மதாபாத் காவல்துறை ஆணையாளரிடம் புகார் எழுதி கொடுத்துள்ளார்கள். முஹம்மது ரஃபீக் பதான் என்பவர் காவல்துறை ஆணையாளருக்குச் சத்திய பிரமாணம் செய்து கொடுத்த வாக்குமூலத்தில், தன்னால் இனம்காட்டப்பட்டு பெயரும் கூறப்பட்ட நான்கு வன்முறை வெறியர்களின் பெயரைத் தனது வாக்குமூலத்தில் காவல்துறையினர் சேர்க்கவில்லை என கூறியுள்ளார். முஹம்மது சயீத் என்னும் மற்றொருவர், தன்னால் இனம்காட்டப்பட்டு பெயரும் கூறப்பட்ட ஒன்பது வன்முறை வெறியர்களின் பெயரைத் தனது வாக்குமூலத்தில் காவல்துறையினர் சேர்க்கவில்லை என கூறியுள்ளார். இது போன்ற டஜன் எண்ணிக்கையிலான புகார்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டும், வெளிப்படையாக தெரியும் இம்முரண்பாடுகளை சரி செய்வதற்குக் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

விஹெச்பி தலைவர்களான பாரத் தெலி மற்றும் அதுல் வைத் ஆகியோரை வன்முறை வெறியர்கள் கும்பலில் கண்டதாக உயிர் பிழைத்தவர்களில் ஏராளமான பேர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்கள். குல்பர்க் படுகொலைகளில் பங்கெடுத்த குற்றவாளிகள் மூவரும் தெஹல்கா இரகசியமாக பதிவு செய்த உளவு படக்கருவியில் இவ்விரு விஹெச்பி தலைவர்களும் வன்முறை வெறியர்கள் கும்பலில் இருந்ததை ஊர்ஜிதம் செய்துள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் இதுவரை இவர்களுடையப் பெயர்களை குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கவில்லை.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

தமிழச்சியின் கோட்பாடு எது .. ?

தமிழச்சியின் கோட்பாடு எது?

பி.இரயாகரன்
14.03.2008

மிழச்சியின் முன்வைக்கும் அரசியல் கோட்பாட்டை ஆராய்வதன் மூலம், அந்தக் கருத்தினை விமர்சிப்பது அவசியமாகின்றது. தமிழச்சிக்கு எதிராக நடத்திய படுபிற்போக்கான வலதுசாரிய செயற்தளம் மீது, நாம் கடந்த காலத்தில் எதிர்வினையாற்றி இருக்கின்றோம். ஆனால் இது தமிழச்சியின் சிந்தனை முறையையும், அது கொண்டுள்ள கோட்பாட்டையும் முற்று முழுதாய் ஆதரித்தல்ல.

எமது இந்த விமர்சனம் என்பது குறிப்பாக அவரின் சிந்தனை முறை மீதானதும், அவரின் கோட்பாட்டின் மேலானதுமாகும். இது அவரும், அவரைப் போன்றோரும், தமது கடந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுவதாகும். மாறாக வலதுசாரி பிற்போக்கு சக்திகள், தமிழச்சி மேல் நடத்துகின்ற எதிர்வினைக்கு எந்தவிதத்திலும் சார்பானதல்ல.

சரி தமிழச்சியின் சிந்தனை முறையும், அதன் கோட்பாடும் எப்படிப்பட்டது? இந்தக் கேள்வியை அவரே தேடிப் பார்க்கும் வகையில் அதை நாம் உடைத்துக் காட்ட முனைகின்றோம்.

சாதாரணமாக குண்டு வைக்கும் தனிநபர் பயங்கரவாதம் கொண்டுள்ள சிந்தனை முறை என்ன? அதன் பிரச்சாரம் எந்த வகைப்பட்டது? இதில் இருந்து தமிழச்சி எப்படி வேறுபடுகின்றார்?

இந்த கேள்விக்கான விடை, தமிழச்சியின் சிந்தனைமுறை இதற்குள் உட்பட்டு நிற்கின்றது.

தனிநபர் பயங்கரவாதி சமூகத்தின் கொடுமைகளுக்கு எதிராகத்தான் குண்டை வைக்கின்றான். இது விடையங்களை தனித்து எதிர் கொள்வதன் விளைவாகும். சமூகக் கொடுமைகளுக்கு எதிராக, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக, தனமனிதனாக தனித்து எதிர்கொள்கின்ற தனிமனித சிந்தனையின் விளைவு தான், தனிநபர் பயங்கரவாதம். சமூகத்தை சமூகக் கொடுமைகளுக்கு எதிராக அணிதிரட்டுவதில், இந்தக் கோட்பாடு நம்பிக்கையற்றது. தனிமனிதர்கள் தனித்து இதற்கு எதிராக புரட்சியை செய்ய முடியும் என்று நம்பிக் கொண்டு, குண்டை வைக்கின்றனர்.

இதன் விளைவால் மேலும் தனிமைவாதம் சூழ்ந்து, சமூக வெறுப்பாக மாறிவிடுகின்றது. படிப்படியாக படுபிற்போக்கான வலதுசாரி நிலை வரை, அது தானாக சீரழிகின்றது. இதனால் தனிநபர் புகழ், விளம்பரம், அதையொட்டிய செயல் என்று, இந்த எல்லைக்குள் சிந்தனை வட்டம், ஏன் செயல்வட்டம் எல்லாம் குறுகிவிடுகின்றது. இவை வெளிப்படையான செயல் சார்ந்த ஒன்றாக, இயல்பில் வெளிப்படுகின்றது.

தமிழச்சியின் சிந்தனை முறையும், அதன் கருத்தியல் தளமும், தனிநபர் பயங்கரவாதம் சார்ந்தது. சொல்லப்போனால் எந்த சமூக இயக்கத்தையும் உருவாக்கும் வகையில், எவ் வகை அரசியல் அடிப்படையுமற்றது. அரசியலையும், அரசியல் சார்பையும், அதன் செயற்பாட்டையும் மறுக்கும் தமிழச்சியின் கருத்துக்கள், இயல்பான தனிநபர் தன்மை கொண்ட தனிநபர் பயங்கரவாத சிந்தனை முறையாகிவிடுகின்றது.

அரசியல் என்பது என்ன? சமூகக் கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் சமூக இயக்கம். இது வெளிப்படுத்தும் போக்கு, அரசியல் வெளிப்பாடாகின்றது. இது மக்களுக்கு எதிரான படுபிற்போக்காகவும், மக்களுக்கு சார்பான முற்போக்காகவும், இரண்டு தளத்தில் வெளிப்படுகின்றது.
முற்போக்குத் தளத்தில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒன்றிணையும் போது அது அரசியலாக, அரசியல் இயக்கமாக மாறுகின்றது. தமிழச்சியின் சிந்தனை முறையில் இது கிடையாது. மாறாக சமூகக் கொடுமைகளை தனிநபர் தீர்க்க முடியும் என்ற கண்ணோட்டம், இது தனிநபர் சிந்தனையாக பயங்கரவாதமாக வெளிப்படுகின்றது. உதாரணமாக (வெறும் உதாரணம் தான்) கோணேஸ்வரி பற்றிய கலாவின் கவிதையை மறுத்த தமிழச்சியின் கருத்தைப் பாhப்போம்.

'வெறிகொண்டு அலையும் வீரர்களின்ஆண்குறியில் குண்டு கட்டி சிதறடிப்போம்"

'பத்து ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, நாசப்படுத்தி யோனிக்குள் குண்டு வைத்து சிதைக்கும் போது, தமிழிச்சிகளே நீங்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு ஆணின் ஆண்குறிக்கு ஏன் குண்டு கட்ட முடியவில்லை"

பழிக்குப்பழி? அதே வகைப்பட்ட சிந்தனை முறை. இது எந்த வகையான சிந்தனை முறை? ஆணாதிக்க சமூக அமைப்பை இதன் மூலம் ஒழித்துக்கட்ட முடியுமா? இருக்கின்ற சட்டங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் இதற்கு தண்டனைகளை வழங்கவில்லையா? வழங்குகின்றது. ஏன் சில நூற்றாண்டுகளுக்கு முன் இதற்கு விதவிதமான மரண தண்டனைகள் கூட வழங்கினவே. குண்டை வைத்து சிதறடித்தால், இது ஒழிந்து விடுமா? எப்படி?
இதற்கு எதிரான உங்கள் சிந்தனை உணர்வு போல், இதைச் செய்யும் உணர்வு எங்கிருந்து எப்படி ஏன் வருகின்றது. எந்தச் சமூக அமைப்பில் இருந்து இது வருகின்றது. பிரச்சனையே சமூகத்தின் உள்ளேயல்லவா இருக்கின்றது. சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்ற இந்த விடையத்தை, வெறும் குண்டு வைத்து இல்லாததாக்கி விட முடியுமா?

இந்த மாதிரியான சிந்தனை முறை, சினிமாவில் வருகின்ற கதாநாய(கன்)கி வைக்கின்ற தீர்வை ஒத்தது. உள்ளடக்க ரீதியான தனிநபர் புரட்சி பற்றிய கனவை அடிப்படையாகக் கொண்டது. செயல்தளத்தில் தனிநபர் பயங்கரவாதம். சிந்தனையில் அதைப் பிரச்சாரம் செய்கின்றது.
கலாவினை மறுத்த தமிழச்சியின் கருத்து தனிநபர் பயங்கரவாத பிரச்சாரமாகும். பெண்விடுதலை என்பது இதுவா! எப்படி? பெண்களும், ஆண்களும் ஒரு சமூகமாக வாழ, இதையே இதற்கு எதிரான சமூகக் தீர்வாக கருதுகின்றது. சமூகத்தில் இந்தக் கொடுமை எதனால் எப்படி நடக்கின்;றது. பெண்ணின் உடல் பலவீனத்தாலா, நிச்சயமாக இல்லை. ஆண் உடல் பலம் பெண்ணின் உடல் பலவீனம் இதற்கு காரணமல்ல.

இந்த சமூகம் சுரண்டலால் உருவான ஆணாதிக்க அமைப்பு. இந்த சுரண்டல் ஆணாதிக்க சமூக அமைப்பில், தனிமனிதர்கள் அந்த சிந்தனை முறைக்குள் இயங்குகின்றனர். இது அத்துமீறலாக, சில வேளை இயல்பாகக் கூட நடக்கின்றது.

மனித சிந்தனை முறையே ஆணாதிக்கமாக இருக்கும் போது, எங்கே எப்படித் தான் குண்டு வைப்பது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை, முஸ்லீம் பெண்ணை கும்பலாக ஆண்கள் கற்பழிக்க முடியும். இதை ஒரு இந்துவின் அறமாக, ஆணாதிக்கம் அங்கீரிக்கின்றது. பெண்களும் கூடி நின்று கூத்தடிக்க, கற்பழிப்பை நடத்துகின்றது. இந்த நிகழ்வுகள் இந்தியாவில் சாதாரணமாகவே அரங்கேறுகின்றது. இங்கு எப்படி எங்கே யாருக்கு குண்டு வைப்பது. இதை செய்வதை பெண்கள் நியாயப்படுத்தவில்லையா? எப்படி எதனால்?

கோணஸ்வரிக்கு நடந்ததை ஒட்டி கலாவின் கவிதை, சமுதாய விழிப்புணர்ச்சியைக் கோருகின்றது. இது புலிக்கு சார்பான தனிநபர் பயங்கரவாதத்தைக் கோரவில்லை. ஒரு இனத்து பெண்ணுக்கு எதிராக இது நடந்தபோதும், அனைத்து பெண்களையும் இனம் கடந்து இந்த கொடுமை பெண்ணிய நோக்கில் நின்று இதைப் பார் என்று கோருகின்து. இது ஒப்பாரியல்ல. சமுதாய விழிப்புணர்ச்சி மட்டும் தான், இதை தடுத்த நிறுத்த முடியும். ஆண் குறிக்கு குண்டு வைப்பதால் இதை தடுத்த நிறுத்த முடியாது.
பத்து பெண்கள் உங்கள் சிந்தனையை ஏற்று, குண்டைக் கட்டி ஆண் குறிகளை வெடிக்க வைத்தால் என்ன நடக்கும். அது குறுகிய பயங்கரவாதமாக மாறிவிடும். இதனால் இந்த கொடுமை நிறுத்தப்பட்டு விடுமா? எப்படி? இதுதான் தீர்வென்றால், அனைத்து சமூக கொடுமைகளுக்கும் எதிராக பத்துப்பேர் குண்டை வைத்தே சமூகத்தை மாற்றிவிடலாமல்லவா?
இஸ்லாமிய தனிநபர் பயங்கரவாதத்தைப் பாருங்கள். அவர்கள் வைக்கும் குண்டுகள், மேற்கின் கொடூரங்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதா? இல்லையே! மாறாக இதைப் பயன்படுத்தி, மேலும் கொடூரமான இழிவான வன்முறையை செய்யத் தான் அவை உதவுகின்றது.

கோணேஸ்வரி சம்பவம் என்பது ஆணாதிக்கம் தான். ஆனால் அதற்கு பல முகம் உண்டு. இனவாத சிங்கள மேலாதிக்க அடிப்படை உண்டு. யுத்த சூழலை பயன்படுத்தி, தமிழ் பெண் என்ற குறியீட்டு அடையாளம் மீது அது நடத்தப்பட்டது. அந்த அடையாளத்தை அழிக்க, பெண் உறுப்பில் குண்டு வைக்கப்பட்டது.

இங்கு இந்த இடத்தில் ஒரு சிங்களப்பெண் என்றால், இது தவிர்க்கப்பட்டு இருக்கும். சூழல் இதற்கு எதிரானது. ஜே.வி.பி காலத்தில், சிங்களப் பெண்கள் இப்படிக் குதறப்பட்டனர். இந்தியாவில் சாதி வெறியர்களும், இந்து வெறியர்களும, தமது அல்லாத பெண்ணை குதறவில்லையா!
இவற்றை வெறும் ஆணாதிக்கமாக மட்டும் பார்க்க முடியாது. அதை வெறும் உடல் உறுப்பின் ஊடாக பார்க்க முடியாது. இப்படி பார்த்து குண்டு வைத்தால் தீர்வு என்பதே அபத்தம். பாதிக்கப்பட்ட ஒரு பெண், பழிவாங்குவது இதில் இருந்து முற்றிலும் வேறானது.

சமூக சிந்தனை என்பது இதைக் கடந்தது. இந்த கொடுமைக்கான காரண காரியங்களை சமூக ஓட்டத்தின் ஊடாக புரியவைத்தல் அவசியமானது. பத்துப் பெண்கள் குண்டு வைப்பது சரியென்றால், நீங்கள் வாழும் பிரான்சில் பெண் மீதான பாலியல் வன்முறைக்கு என்ன தான் தீர்வு. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு என்ன தான் தீர்வு. இங்கும் குண்டு வைக்கலாம் தானே. ஏன் நீங்கள் அதைச் செய்வதில்லை. ஏன் செய்ய முடிவதில்லை.
பாரிஸ் பிள்ளையார் ஊர்வலம் அன்று மட்டும் துண்டுப்பிரசுரம் கொடுப்பதும் இப்படிப்பட்டது. சமுதாயத்தை தொடர்ச்சியான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன் ஊடாகத் தான், எதையும் அந்த மக்களால் சாதிக்க முடியும். எதையும் கதாநா(யகர்களால்)யகியால் சாதிக்க முடியாது. ஏன் இந்த பிள்ளையார் ஊர்வலத்தில் குண்டு வைப்பது போன்ற தீர்வை, சொல்ல முடிவதில்லை. உண்மையில் செய்ய முடியாது. ஏனென்றால் அது பயங்கரவாதமாகி விடுகின்றது. சமூகத்தை மாற்ற சமூகம் போராடுவது அவசியம். எதையும் குண்டுகளால் மாற்ற முடியாது.

இலங்கையில் நடந்த இந்தக் கொடுமையை எப்படி எதிர்கொள்;வது. புலிகள் பாணி தற்கொலைத் தாக்குதல் மூலம், எந்த மக்கள் விடுதலையையும் மக்கள் பெற முடியாது. மாறாக அடிமைத்தனம் தான் கிடைக்கும்.

கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்பட்ட ஒரு நாட்டில், அதுவும் சிறிது காலமே தப்பிப்பிழைத்த சரிநிகரில், அப்பத்திரிகையில் எழுதுவதற்கே அஞ்சுகின்ற ஒரு நாட்டில், மூச்சு விட்டாலே மரணம் என்ற நிலையில், இந்தக் கவிதை சமுதாயத்தை நோக்கி அறை கூவுகின்றது. தமிழ் பெண்களை நோக்கியும், சிங்களப் பெண்ணை நோக்கியும் கூட, இது கை நீட்டி நிற்கின்றது. சமுதாயத்தின் உறக்கம் மீதான குற்ற உணர்வை அது வெளிக்கொண்டு வருகின்றது.

ஆணாதிக்கக் கொடுமைக்கு எதிராக, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக, அதிகார வெறிக்கு எதிராக, உனது எனது மௌனம் எம்மை பலியிடுவதா என்று சிந்திக்கத் தூண்டுகின்றது. மாறாக புலியைப் போல் குண்டு வைத்தல், அது தனிநபர் பயங்கரவாதமாகி போராட்டம் சிதைவது போல், இந்த விடையமும் குண்டு வைப்பதால் தீர்க்கப்படுவதில்லை.

இந்தக் கோணேஸ்வரி சம்பவம் தொடர்பாக அன்றைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, என்ன சொன்னார் தெரியுமா? கூரையை பிய்த்துக்கொண்டு வந்த குண்டு தானாம், யோனியில் விழுந்ததால், யோனி சிதறுண்டதாம். ஒரு பெண்ணான சந்திரிக்காவுக்கு எங்கே குண்டு வைப்பது? தனிநபர் பயங்கரவாத வழிகளில், இதற்கான காரண காரியங்களை தீர்க்க முடியாது.

தமிழ் மணத்தில் தொடர்ச்சியான சர்ச்சைக்கு உள்ளாகும் தமிழச்சியின் கருத்துகள், தனிநபர் முனைப்பு கொண்ட அரசியல் அடிப்படை பற்றியதே இந்த விமர்சனம். இது எந்த விதத்திலும் தமிழச்சியுடன் முரண்படும் ஆணாதிக்க மற்றும் சாதியவாதிகளுக்கு எதிரான தமிழச்சியின் கருத்துக்கு எதிரானதல்ல.

தமிழச்சி எடுத்துள்ள விடையம் சமூகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகப்பிரிவுகளின் மீதானது. அதை எப்படி எந்த வகையில் சொல்ல முனைகின்றார் என்பதும், இதை தீர்க்க வைக்கும் தீர்வுகள் மீதானதே எமது விமர்சனம்.

நடைமுறையிலான செயற்பாட்டு அடிப்படை அல்லாத, கருத்துத்தளத்திலான தமிழச்சியின் சிந்தனை முறை, அது சொல்லுகின்ற வழிமுறை தனிநபர் பயங்கரவாத அடிப்படையைக் கொண்டது. அதாவது அராஜக (அனார்க்கிஸ்ட்) வழிப்பட்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

இது சமூக இயக்கத்தில் இருந்து அன்னியமானது. சமூகத்தை அவர்களின் சொந்த அரசியல் புரட்சிக்கு தயார் படுத்துகின்ற அரசியல் பணிக்கு மாறானது. தனிநபர்கள், சிலர் புரட்சி செய்துவிட முடியும் என்பதை அடிப்படையாக கொண்ட புரட்சிவாதம்.

இதற்கு மாறாக சமுதாயத்தை புரட்சி செய்ய கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும் அவசியம். தமிழச்சி இதைக் கற்றுக்கொள்வது அவசியமானது. பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்வதும், சொல்ல வருவதை தெளிவாக, மற்றவர்கள் மேலும் சமுதாயத்துக்காக சிந்திக்கும் வண்ணமும் கூறுவது அவசியம்.

Thursday, March 13, 2008

"எவனோ ஒருவன்" - ஒழிக்கப்படவேண்டியவன்

"எவனோ ஒருவன்" - ஒழிக்கப்படவேண்டியவன்

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த நடுத்தர பார்ப்பன குடும்பத்தை சேர்ந்தவன் ஸ்ரீதர் வாசுதேவன் (மாதவன்). அவனூடன் மனைவி (சங்கீதா) மற்றும் ஒரு குழந்தை. இதில் சின்ன சின்ன பிரச்சினையில் மாதவன் கேள்வி கேட்கிறார். திடீரென இரு நாட்கள் மட்டும் சமூகத்தை மாற்றுவதற்காக ஆயுதம் ஏந்துகிறார். பிறகு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வாசுதேவனை மனதால் வாசுதேவனின் தாசனாகவும் உடலால் காவல் ஏவலனாகவும் வேலைப்பார்க்கும் வெற்றிமாறன் (சீமான்) சுட்டுகொல்கிறார். புளித்துப்போன கதை என்றாலும், வெளியிடப்பட்ட விளம்பரங்களாலும், பத்திரிக்கைகளின் ஊகத்தாலும், மானமிகு சீமானின் பங்களிப்பாலும், ஏகத்துக்கும் வீங்கிப் போயிருக்கிறது படத்தின் மதிப்பு.

"இந்த சமூகத்தின் உயர்நிலைப் பிரிவான பார்ப்பன சமூகம் அதில் அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. மிகப்பொதுமையாக அனைத்தையும் எதிர்கொள்கிறது. தவிர்க்க முடியாத பிரச்சினைகளில் ஆயுதம் ஏந்துகிறது. அது சரியாகவே இருக்கும், இருக்க வேண்டும். அந்த பார்ப்பனனை ஆயுதம் ஏந்தவைத்தது இச்சமூகமே. அதனை திருத்துவதற்காகவே அவன் ஆயுதம் ஏந்துகிறான். அதை இந்த சமூகம் அங்கீகரிக்க வேண்டும்" இது போன்ற பார்ப்பன கழிவுகளை மீண்டும் எடுத்து மறுசுழற்சி செய்து அதன் மணம் மற்றும் சுவை மாறாமல் தந்திருக்கிறார், பார்ப்பனீயத்தின் தாசனாகிய மாண்புமிகு சீமான். அதற்காக, சமூக ரீதியான பிரச்சினைகளை தனிப்பட்ட மனிதனுடைய பிரச்சினைகளாக மாற்றி போலியான தீர்வுகளை திரைப்படம் முழுவதும் கூறப்பட்டுள்ளது.

மேடைக்கு மேடை (பெரியார் தி.க மேடையில்) "டேய் பார்ப்பானுங்களா! ஆர்.எஸ்.எஸ் காரனுங்களா! எங்க ஊர் பக்கம் (பரமக்குடி) வாங்கடா - வெட்டுறேன்." என ஆசன வாய் கிழிய பேசும் சீமான், பார்ப்பனனின் ஆசைக் கிணங்க, பார்ப்பனனின் வரலாற்றை வசன மேற்பார்வை பார்த்த சீமானுக்காக பெரியார் தி.க.வினர் வக்காலத்து வாங்குவார்களோ?. 'தம்பியை' பெரியாருக்கு அர்ப்பணம் செய்த சீமான், இப்படத்தை இந்த நாட்டுக்காகவே வாழ்ந்து, உழைக்கும் மக்களுக்காக அன்றாடம் கண்ணீர் மல்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் அம்பிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் -ன் பிரச்சாரப்படம் என்ற முறையில் சாவர்க்கருக்கும் அர்ப்பணம் செய்திருக்கிறார். அவரின் பெரியார் சிந்தனை பொதிந்த, ஈழப்பார்வை கனிந்த, 'சே'வின் கொள்கையுடைய படத்தின் எழுத்துக்களை சற்று அலசுவோம்......காலையில் மணி அடிக்கிறது, மனைவியின் சமையல், குளியல், ரயில் நிலையம், அலுவலகம், சாப்பாடு, மீண்டும் வேலை, ரயில், குழந்தையிடம் கொஞ்சல் "நன்னா கடிச்சு சாப்பாடு" என்ற பார்ப்பன மொழியோடு தொடர்கிறது திரைப்படம். இந்த இயல்பு வாழ்க்கையையே 2.30 மணி நேரம் காட்டினால் சலிப்பு ஏற்படும் என்பதால் இயல்பான அந்த பார்ப்பனன் ஆயுதம் ஏந்தப்படுகிறான்.
..

ஸ்கூலில் கல்வி கத்து கொடுப்பதுதான் வாத்தியார் வேலை எதுக்கு டியூசன்? என்று கேள்வி கேட்பவனால் அரசு பள்ளிகளை செயல்படா நிலைக்கு கொண்டு சென்றது குறித்து வருத்தம் இல்லை. தெருவில் இறங்கி தண்ணீர் பிடிக்கப்போகிறான். லஞ்சம் கேட்கும் பணியாளிடம் நான் மரியாதையா வாங்கோ போங்கோன்னு பேசறேன். நீங்களும் மரியாதையா பேசுங்க என சட்டத்திற்கு உட்பட்டு லஞ்சத்தின் மீது கோபம் கொள்கிறான். பேங்க-ல லோனுக்காக மலையாளியிடம் அட்ஜஸ்ட் செய்ய மறுக்கிறான். "எனக்கி கிடைக்கிற சம்பளத்தில் எப்படி வாழறதுன்னு எனக்குத் தெரியும். உங்க காசு பெருமை யெல்லாம் என்கிட்ட காட்டாதேள்" என வெடிக்கிறான். ஓயாமல் இருமும் ஏழைச்சிறுவனுக்கு பணம் கொடுத்து உதவுகிறான். தன்னுடைய உடலுறவுத்தேவைக்காக மனைவியை எழுப்புகிறான். அவள் என்ன, என்ன ? நாளைக்கு இண்டர்வூ போகனும் ஞாபகம் இருக்குல்ல என்கிறாள். அவனுடைய கவலை (உடற்தேவை) சமூகத்தின் கவலையாக காட்டப்படுகிறது.

தனியார் பள்ளியில் குழந்தைக்கு நேர்காணல் நடக்கிறது. தூயதமிழில் அதுவும் 0-வைக் கூட சுழியம் என்கிறது. தலைமையாசிரியர் மிகவும் மகிழ்கிறார், சிரிக்கிறார். நாமும் சிரிக்கதான் வேண்டும் எந்தப்பார்ப்பன குழந்தை தூய தமிழில் பேசுகிறது. அதை சுழியம் எனப்பேச வைத்தாரே கருஞ்சட்டை சீமான் அதற்காக. தலைமையாசிரியரோ 3 டோனேசன் சீட் உள்ளது என்றும் விலை 35,000 ரூபாய் என கடையை விரிக்கிறார், தன்னிடம் பணம் இல்லாததால் கல்வி வியாபாரம் ஆகிவிட்டதென புலம்புகிறான். இந்தப்பார்ப்பானுக்கு கல்வியின் விலை 35,000 என்பதுதான் அதிகமாகப்படுகிறதே ஒழிய கல்வியும் சந்தைப்பொருளாகிவிட்டது குறித்து கவலை இல்லை. அந்தப்பொருளை நம்மால் விலை கொடுத்து வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் எழுகிறது.

தன்னுடைய பெண்ணின் வாழ்க்கையில் கான்வெண்ட்லிருந்து கார்ப்ரேசன் பள்ளிக்கு மாற்றலாகப் போகிறது என மனைவியோடு ஒப்பாரி வைக்கிறான். (வழிமுறைதான் வேறு கோபமாக). அன்றிறவு நடக்கும் சண்டையில் மனைவி "திருட்டு போயிடுச்சு திருட்டு போயிடுச்சுன்னு சொல்றது சாதாரண விஷயம் அவனை ஓடிப்போய் பிடிக்கிறவன் தான் ஆம்பளை" என்கிறாள். இங்கே புத்தருக்கு போதிமரம் போல அவளின் வார்த்தை முக்தியை தருகிறது. தன் ஆணுறிப்பில் சுரக்கும் விந்தணுக்களின் மீது சந்தேகம் கொண்டுவிட்டாளோ எனற எண்ணம் எழ தன் ஆணுறுப்பிலிருந்து மன்னிக்க வேண்டும் மனைவியின் கேள்வியிலிருந்து சமூகத்தை பார்க்கிறான் ஸ்ரீதர் வாசுதேவன். இதுவரை கோபத்தை கேள்வியாக மட்டுமே வெளிப்படுத்தியவனால் இனியும் அப்படி இருக்க முடியாது. ஏனெனில் தங்கை கற்பழிப்பு, தாய்கொலை, மனைவியின் கள்ளக்காதல் போல ஆண்மை குறித்த சந்தேகமும் சமூக சிந்தனையாக பார்க்கப்படுகிறது. (தனக்கு உதவி செய்யாததிலிருந்து பார்ப்பனின் கொடுங்கோன்மையைக் கண்ட பரதேசி பாரதியைப் போல)
எப்படி மலையாளிக்கு document இல்லாமல் loan sanction செய்ய முடிந்தது என மேலாளிரிடம் உறுமுகிறான். அவனை சமாதானப்படுத்த நண்பன் குளிர்பானக் கடைக்கு அழைத்து வருகிறான், கூலிங்கிற்காக ஒரு ரூபாய் அதிகமாக coca-cola விற்கும் கடைவியாபாரி மீது கோபம் கொள்கிறான். "நான் ஏன் அமைதியாக இருக்கனும், எதுக்கு திருட்டுதம்? நியாயமான வியாபாரின்னா 2 ரூபாய் திருப்பிக்கொடு, எல்லாரும் அமைதியா இருந்தா நானும் அமைதியா இருக்கனுமா" என்கிறான். மறுக்கும் வியாபாரியின் கடையை அடித்து நொறுக்குகிறான் கிரிக்கெட் மட்டையால் (வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாம்!" பிறகு என்ன வேண்டும் என கடைக்காரன் கேட்க "2 ரூபாய் கொடு" என்கிறான் வாசுதேவன். முகமோ க்ளோசப்பில் பார்ப்பன அரங்கமே அதிர்கிறது "இவா நம்மாளுதான்" என மெச்சுகிறது.

பிளச்சிமடா உள்பட தான் கால்பதித்த இடத்திலெல்லாம் நிலத்தடி நீரை சுரண்டி கொழுக்கும் "Coca-cola, Pepsi" யின் மீது வராத கோபம், பூச்சிகொல்லியின் அளவை பாட்டிலின் மீது குறிக்க முடியாது ஆணவமாய் நீதிமன்றத்தில் அறிவித்த பன்னாட்டு நிறுவனத்தின் மீது வராத கோபம், மற்றொரு பெண்னை joint account-ல் போட்ட பொறுக்கி நண்பனின் மீது வராத கோபம், அடிக்கடி மின்கட்டணத்தை ஏற்றும் அரசாங்கத்தின் மீது வராத கோபம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்ட நேர்மையாக தொழில் நடத்தும் சிறு வியாபாரிகள் மீது வருகிறது.

நாட்டில் நடக்காததையா வாசுதேவன் சொன்னான் என சீமான் சப்பைக்கட்டு கட்டலாம். இதைச் சொன்ன வாசுதேவனால் திண்ணியத்தின் தீண்டாமையையோ, சங்கராச்சாரியாரின் விபச்சாரத்தையோ, ஏகாதிபத்தியத்தின் மறுகாலனியாதிக்க சுரண்டலையோ ஏன் சொல்ல முடியவில்லை. சொல்லமுடியவில்லை என்பதல்ல காரணம் வாசுதேவன் என்ற பெயரில் மறைந்திருக்கும் பார்ப்பன பரதேசி சொல்லமாட்டான் என்பதுதான் உண்மை.

எவனோ ஒருவன் உங்களில் ஒருவன் என சொல்கிறார்கள். யதார்த்தமாக நம்மளில் ஒருவனாக இருந்தால், எப்படியும் எமது தோழர்கள் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் விற்பனை செய்வதை பார்க்காமல் கேட்காமல் இருந்திருக்க முடியாது. அப்போது இன்றைய பிரச்சனைகளுக்கு காரணம் மறுகாலனியாக்கமும், பார்ப்பனீய பயங்கரவாதமும் தான் அடிப்படை என தெரிந்து இருக்கும். மற்றபடி இந்த எவனோ ஒருவன் தோழர்களை சந்தித்திருந்தால் உடலில் புண் ஏற்படாமல் போயிருக்க முடியாது என்பதே உண்மை. மீண்டும் வசனத்திற்குள் நுழைவோம்.

கையில் மட்டையோடு திரியும் வாசுதேவன் No parking யில் உள்ள வண்டியை அடித்து நொறுக்குகிறான். மருத்துவமனை அருகில் தள்ளு வண்டி கடையைப் பார்க்கிறான், முட்டை புரோட்டாவுக்காக அலையும் காவலனைப் பார்த்து கேள்வி கேட்கிறான். "பாருங்க சார் ஹாஸ்பிட்டல் பக்கத்தில் முட்டை கிட்டைன்னு கலீச்சா இருக்கு தப்பு நடக்கிறது நீங்க தடுக்க முடியாதா; கேவலம் 5 ரூ புரோட்டாவுக்கு நாக்கை தொங்க போடாதீங்கோ" இங்கே வாசுதேனுக்கு கோபம் வரவில்லை ஆதங்கம் வரவில்லை. சிறு வியாபாரியின் கடையை நொறுக்கிய அந்த மட்டை காவலனை பார்த்து ஏன் உயரவில்லை. என்ன ஸ்ரீதர் வாசுதேவன் உன் கோபம் அதிகாரவர்க்கம் மீது மட்டும் எழாதா? உழைக்கும் மக்கள் உண்ணும் உணவை கலீச்சு ஆக பார்ப்பனன் வாசுதேவன் நினைக்கலாம். சீமானே நீ எப்படி நினைத்தீர்கள். எப்போது காஞ்சி சென்று பார்பனனின் காலைக்கழுவி குடித்தீர்கள்.
சிறைக்குள்ளிருக்கும் போது கூட தூங்கும் காவலர் மீது ஆதங்கம் வருகிறது (கோபம் வரவில்லை) "ஏன் தூக்குகிறீர்கள்" கேள்வி கேட்கிறான். வெளியே வருகிறான். மீண்டும் குடிதண்ணீர் விடும் பணியாள் 100 ரூ லஞ்சம் கேட்கும் போது அடித்து நொறுக்குகிறான். இதற்கு யார் காரணம் என யோசித்து ஏரியா கவுன்சிலரை கொலை செய்ய முயன்று காயம் ஏற்படுத்துகிறான். வெக்கமாயில்ல என்றபடியே கத்தியில் குத்துகிறான். இதற்கிடையில் ஏரியா இன்ஸ்பென்டர் வெற்றிமாறன் (சீமான்) வருகிறார். சப்- இன்ஸ்பெக்டரிடம் நடந்த சம்பவங்களை விசாரிக்கிறார். "ஏன்யா அந்தாள விட்டிங்க. 'ஸ்ரீதர் வாசுதேவன்'ங்கற பேரில் எத்தனை கேஸ் ரிஜிஸ்டர் ஆயிருக்கு. ஒயிட் காலர் ஆளுங்க தப்பு செய்ய ஆரம்பித்துவிட்டால் உலகமேதிரும்பி பார்க்கும்" என்கிறார். வாசுதேவன் Junior சங்கராச்சாரி எனில் வெற்றிமாறன் சீனியர் சங்கராச்சாரி தத்துவம் : நடுத்தர வர்க்கம்,பணக்கார வர்க்கம் சீக்கிரம் போராடாது களத்திலிறங்கினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். ( உழைக்கும் மக்கள் போராட்டத்தை கேவலப்படுத்து திமிர்)
வாசுதேவன் கஞ்சா விற்கும் குடிசைகளைப் பார்க்கிறான் ; சுமோவில் வரும் இளைஞன் போதையடிப்பதை பார்த்து கோபம் கொள்கிறான். குடிசைகளுக்கு தீவைத்து போதைப்பொருள் விற்போரிடமிருந்து (குடிசையில் வசிப்போரிடமிருந்து) இளைஞர்களை ( சுமோ வைத்திருத்தல் அவசியம்) காப்பாற்றுகிறான். இந்நிலையில் சீனியர் சங்கராச்சாரி (வெற்றிமாறன்) சக போலீசிடன் சொல்கிறான். "அவன் என்ன தப்பு செய்தான்; யார் குற்றவாளி; குற்றம் எந்த சூழலில் எதற்கு செய்யப்பட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தோட்டாக்களால் தீர்வு காணமுடியாது" நான் அவனுக்கு மாலையே போடுவேன் என வாசுதேவன் மீது காதல் கொள்கிறார்.

நடுரோட்டில் புலம்புகிறான் வாசுதேவன் - எல்லா பிரச்சினைக்கும் மனிதனின் பேராசைதான் காரணம், சம்பளம் ஏற்றுவதற்காக ஸ்டிரைக், போராட்டமும், லாபத்தை ஏற்ற திருட்டுத்தனமும் செய்கிறார்கள் என அரிய உண்மையை கண்டறிகிறான். விவசாயம் அழிந்ததற்கோ, தொழிலாளி தெருவில் வீசப்படுவதற்கோ, நீர், காற்று, உணவு, மருத்துவம், கல்வி என அனைத்தும் பறிக்கப்பட்டதற்கோ காரணம் மறுகாலனியாதிக்கமோ, உலகவங்கியோ இல்லையாம். மனிதனின் பேராசை தான் காரணமாம். முதலாளியின் திருட்டுத்தனமும் தொழிலாளியின் போராட்டமும் சீமானின் தராசில் சமபங்கு வகிக்கிறதாம். தன் குழந்தைக்கு தூய தமிழை கற்றுக் கொடுத்த வாசுதேவன் கடவுளிடம் மூச்சுவிடாமல் ஆங்கிலத்தில் முறையிடுகிறான்.

மறுகாலனியாக்கச் சூழலில் தேவபாசை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலமாக மாறி விட்டதோ என்னமோ? அழகான பேமிலியை சாக்கடையில் தள்ளி விட்டார்கள் சனியன் என அலுத்துக் கொள்கிறான். எதுவும் எனக்கு பிடிக்கவில்லை எல்லாம் கடவுள் விளையாட்டு என்கிறான்.
அவ்வப்போது இடையிடையே சீனியர் வெற்றிமாறன் போலீசின் வேதனையை உதிர்க்கிறார். "நிம்மதியா வாழ எவ்வளவு காசு தேவைப்படும், chennai போலீசுக்கும் எவ்வளவு மன அழுத்தம், மன ரீதியான பிரச்சினைகள் தெரியுமா? கொடுக்கிற சம்பளத்தை வைச்சு குடும்பம் நடத்த முடியுமா ? லஞ்சம் வாங்கும் நிலைக்கு இச்சமூகம் காவலர் களை தள்ளிவிட்டதாம்" சீமான் கவலைப்படுகிறார்.

மீண்டும் இருமல் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட அவனைத்தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்கிறான் அங்கு பார்ப்பன கிழதம்பதிகளுக்காக மருத்தவனின் தலையில் துப்பாக்கி வைக்கிறான். வன்முறையால் எதற்கும் தீர்வுகாண முடியாது என்ற பார்ப்பன கிழவனின் தத்துவம் வாசுதேவனின் ஞானத்தேடலை முடித்து வைக்கிறது.

வாசுதேவனின் ஞானத்தேடல் பெரிய பிரச்சினையாகி விட அவனை என்கவுண்ட்-ல் முடிக்கும் பொறுப்பு வெற்றி மாறனிடம் ஒப்படைக்கப்படுகின்றது. "சட்டத்தை காப்பாற்ற சென்ற ஒருவனை சட்டத்தின் பேரைச்சொல்லி கொல்லவேண்டி உள்ளதே? உண்மை எப்போதும் சுடும் அதற்கு முன்னரே உண்மையை சுட வேண்டி உள்ளது" கேள்விகளை மனத்தில் புதைத்துக்கொண்டு வாசுதேவனிடம் சொல்கிறார்." Mr.ஸ்ரீதர் வாசுதேவன் நீங்கள் காவல் நிலையத்துக்கு வரவேண்டும்". ஆனால் அவன் மறுக்கவே "மன்னிக்கனும் u are under arrest" என்கிறான். வாசுதேவனோ "என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லை நான் வரேன்னுதான் சொல்லறேன்" என சொல்ல; வெற்றிமாறன் "நான் என்ன கேணப்பயல" என கத்த; வாசுதேவன் "புரிஞ்சுக்கோங்க ! புரிஞ்சுக்கோங்க ! வீட்டுக்கு போயிட்டு வரேன் என்றபடி துப்பாக்கியை தூக்கி; வெற்றிமாறனால் சுடப்பட்டு சாகிறான்.

ஸ்ரீதர் வாசுதேவனை பற்றி அவனது பக்கத்து வீட்டு பார்ப்பன குடுமிகளிடம் போலீசார் விசாரிக்கும்போது அவர்கள், "வாசுதேவன் அப்பா ஷாகாவில் இருந்தவர், பெரிய தேசப்பற்றாளர்" என்கின்றனர். 'ஷாகா' என்ற ஆர்.எஸ்.எஸ்-யின் இந்து பயங்கரவாதத்திற்கான ஆயுதப்பயிற்சியினை தேசப்பற்றாக சித்தரிக்கும் இந்தவொரு வசனமே சீமானின் யோக்கியதையினை தோலுரித்து காட்டுகிறது.

சட்டத்திற்குட்பட்டு இன்ஸ்பெக்டரின் அனுமதியோடு சன்னலருகில் உட்கார்ந்து உயிரை விடுகிறான் வாசுதேவன். வெற்றிமாறனின் மனைவி "கொன்னுட்டீங்களா" எனக்கேட்க அவனோ "கொல்லவேண்டிய கட்டாயம், வாசுதேவனும், அரசும் சோகமான முடிவை தேடிக்கொண்டார்கள். தலைகுனிந்து நடக்கும் மக்களில் எவனோ ஒருவன் நமக்காக போராடினான்னு இல்லாம உணர்ச்சிகளற்ற ஜடமாய், சூடு சொரனையில்லாமல் மக்கள் போகிறார்கள்" என முடிக்கிறார்.
மக்களைவிட்டு அந்நியப்பட்டு நிற்கும் வாசுதேவன்களை கொண்டு உழைக்கும் மக்க்ள் மீது பழிபோடுகிறார் சீமான்.இப்படத்தில் எவனோ ஒருவன் மாதவன் அல்ல சீமான் தான் எனபது வெள்ளிடைமலை. மக்களிடமிருந்து சிந்திக்காத இப்படிப்பட்ட எவனோ ஒருவன்களால் மக்கள் விடுதலையினை சாதிக்க முடியாது. மக்களிடமிருந்து கற்று மக்களை அணிதிரட்டி மக்கள் பாதையில் போராடும் ஒருவனால் தான் விடுதலைக்கு துணை நிற்க முடியும், சாதிக்க முடியும். அதற்கு முன் தேவையாக இதுபோன்ற பார்ப்பனீயத்தின் எச்சங்களான எவனோ ஒருவன்கள் ஒழிக்கப்படவேண்டியது அவசியம்.

நன்றி அசுரன்

Wednesday, March 12, 2008

"பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்" ஆணாதிக்கமும் "தலித் ஆணாதிக்கத்தை" எதிர்க்காத பெண்ணியமும்

"பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்" ஆணாதிக்கமும் "தலித் ஆணாதிக்கத்தை" எதிர்க்காத பெண்ணியமும்

ழைய சரக்குகள் மக்கள் முன், பெறுமானம் இழந்து அம்பலமாகிப் போக புதிய சரக்குகளை தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல அ.மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு விவாதத்தின் முன்னுரை"64 என்ற கட்டுரையை "இருள்வெளி" என்ற இருண்ட மக்கள் விரோத, மார்க்சிய விரோத பாரீஸ் மலரில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் சாந்தால் மொஃபேயின் மேற்கோள்களை, தலைப்புக்குக் கீழ் தடித்த எழுத்தில் போட்டே தனது ஆணாதிக்க கட்டுரையைத் தொடங்குகின்றார்.

நாம் அந்த மேற்கோள்களைப் பார்ப்போம். "பெண்ணியங்களில் பலவகை என்பது தவிர்க்க முடியாதது. இவற்றில் "உண்மையான" பெண்ணியத்தை தேடுவதென்பது கேலிக்குரியது."4 என்று கூறுவதன் மூலம் ஆணாதிக்கத்திற்கு எதிரான ஓரே ஒரு பெண் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்துகின்றார். அதாவது, பெண்ணியத்தை வரையறுக்க முடியாது என்கின்றார். இதைப்போல் வறுமையை ஒழிக்கக் கோரும் உண்மையான போக்கை தேடுவது கேலிக்குரியது என்கின்றார்.

வறுமை ஒழிப்புப் பலவகை என்பதால் உண்மையான வறுமை ஒழிப்பை தேடுவது என்பது கேலிக்குரியது என்கின்றார். இது சாதிக்குள், மதத்திற்குள் உண்மையான விடுதலையைத் தேடும் போது, உண்மை கேலிக்குரியது என்கின்றார்.

வறுமைக்குக் காரணம் அதிக பிள்ளை பெறுவதே என்பதால் கருத்தடையை முன்வைக்கின்றனர் ஒருசாரார், மறுசாரார் தொழிலாளர்களின் உழைப்புப் போதாது என்கின்றனர். இன்னும் ஒரு பிரிவு முதலாளிக்கு வரி கூடியதால் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்கின்றனர் இதனால் வறுமை என்கின்றனர் ஏகாதிபத்தியம் சொத்தை உலகமயமாக்கி குவிப்பதால் வறுமை ஒழியும் என்கின்றனர் தலித்துகள் சாதி ரீதியாக அணிதிரளுவதால் வறுமை ஒழியும் என்கின்றனர் சிலர் சந்தையில்லை எனவே சந்தை பிடிக்க யுத்தத்தை நடத்தி சந்தையைப் பிடித்து வேலை கொடுத்து ஏழ்மையை ஒழிப்போம் என்கின்றனர் நாசிகள் வெளிநாட்டவரை துரத்தினால் மக்களின் வறுமை ஒழியும் என்கின்றனர் சிங்கள அரசு தமிழனை ஒடுக்கினால் சிங்களவர் வறுமை ஒழியும் என்கின்றனர் இந்திய இந்துகள் முஸ்லீமையும், தாழ்த்தப்பட்டோரையும் அடக்கி ஒடுக்கி தாழ்த்தினால், இந்துகளின் வறுமை ஒழியும் என்கின்றனர் இப்படி வண்ண வண்ண கலரில் பல வறுமை ஒழிப்புகள் முன்வைக்கப்படுகின்றது. எனவே இவைகளில் உண்மையான வறுமை ஒழிப்பை, உண்மையான பெண்விடுதலையைத் தேடுவது கேலிக்குரியது என சாந்தால் மொஃபே போல் அ.மார்க்ஸ் முன் வைத்து, இதைப் பிரயோகிக்க எல்லாச் சுரண்டல் பேர்வழிகளின் வழியில் கைகோர்த்தபடி வெட்கம் இன்றி, சுரண்டும் மக்களின் போராட்டங்களை கேலிசெய்கின்றார்.

வறுமை ஒழிப்பு என்பது ஒரே ஒரு வழியில் சுரண்டலை ஒழிப்பதில் தொடங்கி தேவைக்கு ஏற்ப பகிர்வதால் மட்டும் சாதிக்க முடியும். இதற்கு வெளியில் எந்த ஒழிப்புக் கோசமும் வறுமையை பாதுகாக்கும் செயல் தந்திரங்களே. உண்மையான வறுமை ஒழிப்பு என்பது வர்க்கப் போராட்டத்தில் மையப்படுகின்றது. இதுபோல் பெண் விடுதலை என்பது உண்மையான பெண் ஒடுக்கு முறைக்கான சமுதாயக் காரணத்தில் இருந்து தான், உண்மையான பெண்ணியம் கண்டு கொள்ளப்படுகின்றது. பெண் ஏன் ஒடுக்கப்பட்டாள் என்ற அடிப்படைக் காரணத்தை கண்டு எதிர்த்துப் போராடாத அனைத்து வகை வண்ணப் பெண்ணியச் செயற்பாடுகளும், ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் செயல் தளத்தில் அ.மார்க்ஸ் வைப்பது போல் முன்வைப்பவை தான்.

உலகில் உள்ள எல்லாவற்றையும் மனிதன் பகுத்தாய்வு செய்யவும், அதன் மூலம் தனக்கு இசைவாக பயன் படுத்தவும் முடியும். இதன் அடிப்படையில் மட்டும் தான் நாம் பயன் படுத்தும் பொருள் முதல், அனைத்து நோய்களைத் தீர்ப்பது வரை, வான் வெளிப் பயணங்கள் என அனைத்தும் பொது உண்மைகள் மீது தான் (உண்மையை அறியாத மனிதர்கள் இருக்கும் வரை, கருத்துமுதல்வாதம் இந்த அமைப்பை பாதுகாக்கும். மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட போதும் சரி, இன்று தொலைக்காட்சி முதல் அணைத்து தனிச்சொத்துரிமை சமூக இலக்கியம் ஈறாக இதையே செய்கின்றது. இதைத் தான் கோட்பாட்டில் அ.மார்க்ஸ் நியாயப்பத்துகின்றார்.) மனித உயிர் வாழ்க்கை செயற்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை சமூக இயக்க முரண்பாடுகள் மீதும் விதிவிலக்கின்றி பொருந்தி உள்ளன. அ.மார்க்ஸ் சரி அவரின் எடுகோள் சரி உண்மையை மறுப்பின், அது பொய்கள் மீது கட்டியமைப்பவையாகவே இருக்கும். உண்மையை மறுத்த செயற் தளம் சமூக இயக்கத்தைத் தடுக்கவும், ஆணாதிக்க செயல் தளத்தைப் பாதுகாக்கவும் (இது ஏகாதிபத்திய அமைப்பை தவிர்க்க முடியாது தக்க வைக்கிறது), நமது வாழ்வியல் பயன்பாட்டு செயல் தளத்திற்கு முரணாக கோட்பாட்டை முன் தள்ளுகின்றனர். இது மக்களின் அறியாமை மீது சவாரி செய்வதாகவும், அறியாமையை மேலும் அதிகரிக்க வைக்க, இச்சமூக அமைப்பின் நனவுகளின் பிரதிபலிப்பாக உள்ளது.

கட்டுரையை மேலும் ஆராய்வோம். "பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் முதலிய சிந்தனைகள் "சாராம்சம்" என்பதைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன."64 அதாவது ஒன்றுக்கும் சாராம்சம் இல்லை என்ற அ.மார்க்சின் கண்டுபிடிப்பு நகைப்பிற்குரியது. இது பொருளை மறுத்து கருத்தை முதன்மைப் படுத்துகின்றது. ஏன் "தலித் பெண்ணியம்" கட்டுரை ஒரு சாராம்சத்தைக் கொண்டுள்ளது. அது தலித் பெண்ணியத்தை பேசுவதாக பாசாங்கு செய்கிறது. இது உண்மைக்கு வெளியில் பொய்யை அடிப்படையாக கொண்ட சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது. சாராம்சம் இன்றி ஒரு படைப்பு படைப்பாக இருக்க முடியாது. இது அ.மார்க்சுக்கும் விதிவிலக்குக் கிடையாது.

ஓவ்வொரு பொருளும் தனக்கிடையில் வேறுபட்ட சாராம்சத்தை கொண்டுள்ளது. ஒரே பொருளில் பலவகையில் பொதுவான சாராம்சம் உள்ளது. இதுபோல் ஒரு பொருளின் வேறுபட்ட சராம்சமும் உள்ளது. இவை இடைவெளியில் வேறுபட்டு ஏற்றத் தாழ்வுக்கான காலம், சூழல்,--- என அனைத்துடன் தொடர்புடையதாக உள்ளது. (உ-ம்)மாக பெண்ணியத்தை எடுத்தால் நாட்டுக்கு நாடு, நகரத்துக்கு நகரம், கிராமத்துக்கு கிராமம், வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் மீதான ஒடுக்கு முறை வடிவங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றது. இது பொருளாதாரம், கலாச்சாரம், சூழல்,-- --புறச் சூழல் சார்ந்த சிந்தனை என அனைத்துடனும் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இதனால் ஆணாதிக்கப் பொதுச் சாராம்சம் இல்லாமல் போய்விடுகின்றதா? இல்லை மாறாக ஆணாதிக்க ஒடுக்கு முறை உலகில் பொதுவானதாக, பொதுவான சாராம்சம் கொண்டதாகக் காணப்படுகிறது. எனவே ஒரு பொருள் ஒரு நிகழ்ச்சியை ஆராய்வது என்பது சாராம்சத்திற்கு உட்பட்டது. இதற்கு வெளியில் பொருள் பொருளாகவே இருக்க முடியாது. பொருள் இருப்பதாயின் பொது உண்மையும் அதற்குள் நீடிக்கின்றது. பொருள் என்ற உண்மை இல்லை எனின் பொருள் இல்லை. அதேபோல் சிந்தனையும் இல்லை. இருக்கு என்றால் அது கருத்து முதல்வாதமாக உள்ளது.

வாழைப்பழத்தை எடுத்தால், வேறுபட்ட பல இனங்கள் இருந்த போதும், வாழைப்பழம் என்பது பொதுவான சாராம்சத்தை நிர்ணயிக்கின்றது. அது ஒரு பொது உண்மையைக் கொண்டுள்ளதால் தான் அது வாழைப்பழமாக இருக்கின்றது. இது போல் ஆணாதிக்கம் பொதுவான சாராம்சத்தை அடையாளப்படுத்துகின்றது. இதனால் இது ஒரு பொது உண்மையை பிரதிபலிக்கின்றது. ஏகாதிபத்தியமும் அதன் நிறுவன அமைப்புகள், கோட்பாடுகள் தான் மனிதன் என்ற பொதுச் சாராம்சத்தை நிராகரிக்கின்றன. இதன் மூலம் மனிதன் என்ற பொது உண்மையை மறுத்து இனம், நிறம், சாதி, பெண், வர்க்கம்--- என பல தளத்தில் பல சாராம்சத்தில் பொதுவை மறுத்து ஒடுக்குகின்றன. இதன் மூலம் இயற்கையிலும் செயற்கையிலும் மனிதன் உயிர் வாழும் நியதியையும் சாராம்சத்தையும் மறுத்து, அதன் உண்மையை பொய்யாகக் காட்டி, கேலி செய்து, ஒட்டுமொத்தமாக சாராம்சத்தை தமது நலனுக்கு பயன்படுத்தி அழிக்கின்றனர்.

ஒரு பிரச்சினையின் அடிப்படையான சாராம்ச உண்மையை மறுத்து, பிரச்சினைக்கு ஆயிரம் காரணம் கூறி திசை திருப்பும் பொய்கள் தான், இன்றைய ஏகாதிபத்திய அமைப்பின் நீடிப்பிற்கான ஒரே ஒரு நிர்ணயமான பாதுகாப்பை வழங்குகிறது.

வறுமைக்குக் காரணம் மனித உழைப்பைச் சுரண்டி, பொருட்களை தேவைக்கு ஏற்ப பகிரப்படாது சுரண்டுவதுதான் பொதுவான உண்மையும் பொதுவான சாராம்சமாகும். ஆனால் இதை மறுத்து "ஒருமித்த அடையாளத்துடன் நாம் வாழ்வதில்லை"64 என்று கூறிக் கொண்டு வறுமைக்குக் காரணம் அதிக இனப்பெருக்கம், போன பிறப்பில் செய்த பலன் விதி, உழைப்பு போதாது, சந்தை இல்லை ---- என அடுக்கடுக்காக அடுக்கி வைக்கும் பல காரணகாரியங்களை கூறி, பொதுவான சாராம்சம் இல்லை எனக் கூறிய படி, உண்மைகளை மறுத்து பொய்களை முதன்மைப் படுத்தி ஏகாதிபத்திய நலனைத் தக்க வைக்க, அச்சமூக அமைப்பைப் பாதுகாக்கும் கடுமையான இடைவிடாத முயற்சியின் விளைவு தான், சாராம்சம் இல்லை என்றும் உண்மை கிடையாது என்று கதையளப்பதாகும்.

இந்த நோக்கத்திற்காக அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் அடுத்த வாதத்தைப் பார்ப்போம். "---- தொழிலாளியில் சாராம்ச முற்போக்குத் தன்மை ஆட்டம் காண்கிறது--- சாராம்ச அடையாளங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட அரசியல் சமூகங்களில் பிடிக்குள் அகப்படாமல் அழுத்திக் கொண்டு வெளியே நிற்கும் எச்ச சொச்சங்கள், மிச்சம், மீதிகள் (சுநஅயin னநசள) தங்கள் குரலை இன்று மேலெழுப்பத் தெடங்கியுள்ளனர்."64 என்று மேலெழுப்புவதை ஆராய்வோம்.

சாராம்சம் இல்லை என்ற மோசடிக்கு வெளியில் இலங்கையில் இன ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பு, சாராம்சத்தில் ஜனநாயகத்துக்கு சார்பானது தான். இந்தியாவில் இந்துப் பார்ப்பனிய பாரதீய ஜனதாவிற்கு எதிரான போராட்டம், ஜனநாயகத்தை சாராம்சமாக கொண்டது. 2ம் உலக யுத்தத்தில் நாசிகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம், மனித குல விடுதலையை சாராம்சமாகக் கொண்டது. யப்பான் சீனாவை ஆக்கிரமித்த போதோ, வியட்நாம் மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த அனைத்து போராட்டத்திலும், ஒரு மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு சாராம்சத்தை கொண்டு இருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட சாராம்சம் என்பது முற்போக்கு என எங்கும் எதிலும் உண்டு. ஒடுக்கும் பிரிவுகள் மக்கள் மீதான அடக்குமுறையில் எங்கும் எப்போதும் பிற்போக்கு சாராம்சம் இருக்கும். இன்றிருக்கும் அதிகார பிற்போக்கு சாராம்சத்தை பாதுகாக்க மட்டும் தான், சாராம்சம் இல்லை என்று கதையளத்து முன்தள்ளுகின்றனர். இது உண்மையை மறுத்து பொய்யை உண்மையாகக் காட்ட முனைகிறது. இன்று சாராம்சம் இரு தளத்தில் கட்டி அமைக்கப்படுகின்றது. இங்கு இரு தளத்தில் சாராம்சம் உள்ளதுடன், அது செயல்படும் செயல் தளத்தில் முற்போக்கு, பிற்போக்கையும், உண்மையையும், பொய்யையும் கோடு பிரிக்கின்றது.

ஏன் தலித்திய ஒன்றிணைப்பு என்பது ஒரு பொது சாராம்சத்தில் நின்று கோரும் தன்மையையும், பின் அ.மார்க்ஸ் அதையே மறுத்து சாராம்சம் இல்லை என மறுக்கும் பொய்மையுடன் கூடிய ஏமாற்றும், ஒரு மோசடிக்காரனின் கைவந்த குத்துக்கரணம் தான்.

இந்திய பார்ப்பனிய இந்து என்ற பிற்போக்கு சாராம்சத்தை எதிர்த்த பெரியார் இந்துக்கும், மதத்துக்கும், மொழி ஆதிக்கத்துக்கும் எதிரான முற்போக்கு சாராம்சத்தை கட்டியெழுப்பினார். இப்படி அம்பேத்கார் முதல் இன்று வர்க்கப் போராட்டம் வரை உழைக்கும் மக்கள் என்ற பொதுச் சாராம்சத்தில், அனைத்து மனித ஒடுக்கு முறைக்கு எதிரான பொதுச் சாராம்சத்தில், ஒன்று இணைக்கும் களத்தில் போராட்டமும் அணிதிரட்டலையும் செய்கின்றது. இதை மறுக்க மட்டும் தான் சாராம்சம் இல்லை என்று கதைவிட்டு கதையளக்கின்றனர்.

ஓரு தொழிலாளி வேறுபட்ட சாதிகளின் பிரதிநிதியாக இருந்தாலும், இங்கு சாதிக்கு எதிரான போராட்டம் சாதிக்கெதிரான முற்போக்கு சாராம்சத்தில் மட்டும் தான் ஐக்கியத்தை பாட்டாளி வர்க்கம் கோருகின்றது. இங்கு எதிலும் முரண்பாடு இருப்பதில்லை. இது ஆண் பெண் என அனைத்து சமூக முரண்பாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் முன்வைத்து பொது சாராம்சத்தில் போராடுகிறது. பாட்டாளி வர்க்கம் மனிதப் பிளவுகளைக் கடந்த பொதுச் சாராம்சத்தை பண்பாடு, பொருளாதாரம், கலாச்சாரம்,....... என அனைத்திலும் கோருகின்றது. இது உண்மையை அடிப்படையாகக் கொள்கிறது. இதை மறுத்து பொய்யை பிரதிபலித்த படி சாராம்சம் இல்லை என்று கூறுவதன் மூலம் மனிதப் பிளவுகளை நிரந்தரமாக நிலைநிறுத்த, இந்த சமூக அமைப்பைத் தொடர, இருக்கும் ஏகாதிபத்திய நுகத்தடியைப் பற்றிப் பிடிக்க முன்வைப்பதே சாராம்சம் மறுத்த, உண்மையை மறுத்த கோட்பாடு, செயல் தள முயற்சியாக உள்ளது.

சுரண்டலுக்கும், சமூக ஒடுக்கு முறைக்கும் எதிரான முற்போக்கு பொது பெரும்பான்மை சாராம்சத்தை எதிர்த்து, சுரண்டும் பிற்போக்கு சாராம்சத்தை முண்டு கொடுக்க நியாயப்படுத்தி அரும்பாடுபடுவது சுரண்டும் வர்க்க சேவைக்காக தான், சாராம்சம் இல்லை என்பதன் மூலம், சிறுபான்மை தனிநபர் சாராம்சத்தை பாதுகாக்க, தனிநபர் உரிமையின் பெயரில் பொதுவான சாராம்சம் இல்லை என்பதன் மூலம், தனிநபர் சமூக அமைப்பை இது சாராம்சத்தில் ஏகாதிபத்தியமாக உள்ளது என்பதை மூடிமறைக்கின்றனர். உலகமயமாதல் மூலதனக் குவிப்பில் சிறுபான்மை பிரிவின் நலன்களை ஜனநாயகமாக்க முனையும் போக்கில், சிறு தத்துவங்களை சமூகத்தின் முன் தள்ளிவிடுகின்றது. அந்த எலும்பை கவ்விப் பிடித்தபடி தான் நாய்கள் அதற்கு விசுவாசமாக குரைக்கின்றன.

இதற்காக அ.மார்க்ஸ் கூறும் அடுத்த வரிகளை நாம் மேலும் பார்ப்போம். ""பெண்" என்றால் யார்? "பெண்" என்கின்ற சொல்லின் பொருள் என்ன? எந்த ஒரு சொல்லிற்கும் பொருள் என்பது தனித்துவமான பண்பையும் பிரித்து வரையறுத்துக் காட்டுவதல்ல"64 என்பதன் மூலம் பெண் மீது உலகளவில் உள்ள பொதுவான ஆணாதிக்கத்தை மறுக்கும் போதே, இதன் மூலம் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க வெட்கம் இன்றி விபச்சாரம் செய்யக் கோருகிறார்.

உலகளவில் பெண் என்ற அடையாளப்படுத்தல், ஆணுக்கு உட்பட்ட (இனவிருத்தி வேறுபாட்டைத் தவிர்த்து) சுரண்டல் ஆணாதிக்கம் தான். இங்கு ஆணாதிக்க ஒடுக்குமுறை வேறுபாடு சமுதாயப் பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு பண்பியல் வேறுபாடுகள் (ஏற்றத் தாழ்வுகள்), பெண் மீதான ஆணாதிக்க பொது சராம்சம் மீது சீர்திருத்தத்தை, விட்டுக் கொடுப்பை மட்டும் வழங்கி உள்ளது. ஆனால் பெண் எந்த சமுதாயத்திலும் வேறுபாடின்றி அதே ஆணாதிக்க ஒடுக்கு முறைக்குள் மாற்றமின்றி, அதேநிலையில் பண்பியல் மாற்றத்துடன் நீடிக்கின்றனர்.

தனிச்சொத்துரிமையிலான சுரண்டலால் உருவான ஆணாதிக்கம், பெண்ணை ஒடுக்கி சுரண்டும் வழியில் உலகில் எந்த இனமும், சமூகமும் பின் நிற்பதில்லை. இங்கு ஏற்படும் வேறுபாடு சமுதாய ஏற்றத் தாழ்வுகளால் பண்பியல் ரீதியில் மட்டும் மாறி உள்ளது. தொடர்ந்து நிகழும் சமூக எழுச்சிகள் போராட்டங்கள் பெண்களுக்கு சீர்திருத்தத்தை வழங்கி வந்தன என்பதற்கு அப்பால், பெண்விடுதலையைத் தந்து விடவில்லை. அதாவது ஆணியத்தை பெண்ணியமாக்கிவிடவில்லை. பாட்டாளிவர்க்கப் புரட்சிகள் இதை ஒழித்துக் கட்டும் போராட்டப் பாதையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற நிலையில், மீண்டும் அதை ஆணாதிக்க சுரண்டல் சமுதாயத்திடம் போராட்டத்தை இழந்து போனதும் மீண்டும் வர்க்கப் போராட்டப் பாதையை முன்னெடுக்கவும், பாதுகாக்கவும், போராடவும் முனைவதன் மூலம் பெண்கள் மீதான ஆணாதிக்கத்தை ஒரேயடியாக உலகில் ஒழித்துக் கட்ட பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டத்தினூடாக போராடுகின்றது.

இதை மறுத்து அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் கூற்றை நாம் பார்ப்போம். " "சொல்" என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானகரமான உறவைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகிறது என்பதே சரியாகும்."64 என்று, சொல்லையே பொருளின் மீது மறுப்பதன் மூலம் பொதுமையை, கருத்துமுதல்வாத நிலையில் மறுக்கின்றார். நான் கற்பு பற்றிய விவாத்ததில் எடுத்தாண்டவை இங்கும் பொருந்தும்.

இதையே இன்னுமொரு நூலில் அ.மார்க்ஸ்தான் தேசியத்தை கற்பிதம் என்றார். தேசியவிடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகின்றது என்றார். ஆனால் தேசம் முன்கூட்டியே இருப்பதை மறுத்து, அதில் இருந்தே போராட்டம் தொடங்குகின்றது என்பதை மறுப்பது அடிப்படையிலேயே கருத்தமுதல்வாதமாகும். இது இயங்கியலின் வரலாற்று வளர்ச்சி விதிகளை மறுக்கின்றது. பொருள் முன்கூட்டியே தோன்றுவதும் அதில் இருந்தே அடுத்த கட்ட பாய்ச்சல் நிகழ்வது இயங்கியல் ஒழுங்காகும். இதை மீறமுடியாது. இதை மறுத்து தேசியத்தை கற்பிதமாக கூறுவது, ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்து உதிக்கின்றது. பூ வருமுன்பு விதை பெறமுடியாது. கீழ் உள்ளது போல், வசனம், மக்கள் பேச முன் வசனம் மொழியில் வரமுடியாது. ஆனால் இது பின் ஒழுங்கமைக்கப்படுகின்றது. அது முந்திய வடிவிலும், திரிந்த வடிவிலும் கூட மாற முடியும். பூ விதையாக மாறும் போது இயங்கியல் ஒழுங்கிலும், பூவை பித்தெறியும் போது திரிந்த வடிவிலும் மாறுகின்றது, மாற்றப்படுகின்றது. தேசிய விடுதலைப் போராட்டம் இருக்கும் தேசத்தில் இருந்து அரசை உருவாக்குகின்றது. அல்லாது திரிந்த வடிவில் தரகாக துரோகம் செய்யமுடியும். இதுபோல்தான், கற்பு பற்றிய வாதங்களும். பெண் தனது பாலியல் நடத்தை மீதான சொந்த தெரிவை தெரிந்த போதே கற்பு பொருள் வடிவம் பெறுகின்றது. ஆனால் ஆணாதிக்கத்தால் முதிர்ச்சி பெற்ற போது கற்பின் அர்த்தம் திரிவுறுகின்றது. இதனால் பொருளில் திரிபடைந்து மாற்றம் காண்கின்றது. அதே நேரம் பழையது தொடர்ந்து இருப்பதை மறுக்கின்ற போது, பெண்ணின் சுதந்திரத் தெரிவை மறுப்பதை அடிப்படையாக்குகின்றது. கற்பு மொழிக்கு முன்னமே யதார்த்தத்தில் இருக்கின்றது. அதன் பின்புதான் மொழி வருகின்றது. இந்த மொழி திரிபடைவது பின்னால் நிகழ்கின்றது. ஆனால் பலர் இயங்கியலின் உட்கூறைக் கண்டு கொள்ள முடியாத இயங்கியல் மறுப்பாளராக இருக்கின்றனர். எங்கெல்ஸ் இயங்கியல் வளர்ச்சியை மறுப்பது பற்றி கூறிய கருத்துகள் இந்த இடத்தில் சிறப்பாக பொருந்துகின்றது. " "வசனம்" என்ற சொல் தோன்றுவதற்கு நெடுங்கால முன்பே அவர்கள் வசனம் பேசியது போன்று."117 எனக் குறிப்பிட்ட போதே வசனம் முன் கூட்டியே மக்களால் பேசப்பட்டது. வசனம் வந்த பின்பு அதன் அர்த்தம் மாறிவிடுவதில்லை. அது எந்த மொழியில் இருந்தாலும் பொருந்தும். உண்மையில் இந்த சொல் என்பது கற்பனையானதல்ல. சொல் என்பது பொருளைக் குறித்து அடையாளப்படுத்துவதுதான். பொருளை அடையாளப்படுத்துவது என்பது மக்களிடையே இருந்த தூரம், காலம், சூழல்... போன்ற இயற்கையின் விளைவாலும், சேர்க்கையான உழைப்பின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியாலும் ஒரு பொருளைக் குறித்து அடையாளப்படுத்தல், மொழியின் உச்சரிப்பில் வேறுபட்டாலும் அதன் அடையாளப்படுத்தல் ஒன்றையே குறிக்கின்றது. இந்த ஒன்றைக் குறித்த அடையாளப்படுத்தலை வந்தடைந்த பாதை வேறுபட்டு, அதன் விரிவான அர்த்தம் மற்றும் பயன் பாட்டின் தன்மை வேறுபாடுகள் இருந்த போதும் பொருள் குறித்த அடையாளப்படுத்தல் பொது சாராம்சத்தில் ஒன்றையே குறிக்கின்றது. இது உலகில் காணப்படும் பல்வேறு ஒரே பொருளுக்கும் பொருந்தும். உதாரணமாக நெல் இனத்தை எடுத்தால் அதில் பலவகையானவை, பலதன்மையுடன் இருந்த போதும் அது ஒன்றைக் குறித்து நெல்லாகின்றது. இதன் பொதுச் சாராம்சம் இதை தெளிவாக நிர்ணயிக்கின்றது. எங்கெல்ஸ்சின் இந்த வளர்ச்சி விதியை விளக்கும் போது ".. எனவே நிலைமறுப்பு நிலைமறுக்கப்படல் என்பது யாது? மிகவும் பொதுவான, இந்தக் காரணத்தால் மிகவும் பரந்த செயல்விளைவுடைய மற்றும் முக்கியமான இயற்கை, வரலாறு, சிந்தனை ஆகியவற்றினுடைய வளர்ச்சியின் விதியாகும். ... ..இயங்கியல் இயற்கை, மனித சமுதாயம், சிந்தனை ஆகியவற்றினுடைய இயக்கம் மற்றும் வளர்ச்சியின் பொது விதிகளைப் பற்றிய விஞ்ஞானமே தவிர வேறு எதுவுமன்று."117 இதை மறுத்தே பெண் என்ற சொல்லின் பொதுச்சாராம்சத்தை கொச்சைப்படுத்தமுடிகின்றது.

பல சிக்கலான செயல்களின் தொகுப்பில் தான் பொருள் உண்டாகின்றது, நிலைக்கின்றது, நீடிக்கின்றது, மாறுகின்றது, சிதைகின்றது, மீளவும் உருவாகின்றது. ஓரு பொருள் ஒரு இயக்கம் என அனைத்தும் சிக்கலான பல இயக்கங்களின் விளைவுகளாகத் தான் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்து மாறிக் கொண்டுள்ளது. இது பொருளின் பொதுத் தன்மையை எந்த நிலையிலும் (அது வினாடியாக இருந்தாலும் நீடித்த பல கோடி வருடங்கள் ஆனாலும்) கொடுக்கின்றது. வளிமண்டலத்தை எடுத்தால் ழு2இ N2இ ஊழு2 ...... போன்ற வாயுக்கள் ஊடான ஒரு பொது உண்மையை, அது சார்ந்த சாராம்சத்தை பூமி எங்கும் கொண்டு உள்ளது. சுரண்டலை எடுத்தால் உழைப்பைச் சுரண்டும் பொதுச் சாராம்ச உண்மை, உலகெங்கும் பொதுவாக உள்ளது. பெண்ணை எடுத்தால் ஆணாதிக்க சுரண்டல் சாராம்ச உண்மை உலகளவில் பொதுவாக உள்ளது. சாதியை எடுத்தால் சாதி ஒடுக்கு முறையுடன் கூடிய சுரண்டல், சாதி உள்ள நாடுகளில் பொதுவாக உள்ளது. இது எல்லா இயக்கத்திற்கும், பொருளிற்கும், சிந்தனைக்கும் பொதுவான உண்மையானதாக உள்ளது. இது மாற்றத்துடன் புதிய சாராம்சத்தை தொடர்ந்து பிரதிபலிக்கின்றது. தொடர்ந்தும் மாற்றத்துக்குள்ளாகின்றது.

மாறுபட்ட சூழல் பண்பாடு கலாச்சாரம், பொருளாதாரம், மதம், ....... என நீண்ட இடைவெளியில் ஏற்பட்ட பிளவுகள் இடைவெளிகள் வர்க்கப் போராட்ட வரலாற்றின் வழியே கடக்கப்பட முடியும், கடக்கப்படும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் இது சாத்தியமில்லை. இதை லெனின் குறிப்பிடும் போது "ஆடவர் மகளிர் என்றோ, சமயம், வருண இனம், தேசிய இனம் எவ்வித வேறுபாடும் இல்லாத குடிமக்கள் சமவுரிமையை முதலாளித்துவ ஜனநாயகம் எங்கும் எப்போதும் வாக்களித்திருந்த போதிலும் என்றுமே செயல்படுத்தவில்லை, மூலதனத்தின் மேலாதிக்கம் காரணமாக செயல்படுத்தமுடியவில்லை."108 இங்கு இந்த வேறுபட்ட பிளவுகளில் காணப்படும் பொதுத் தன்மையும், குறித்த தன்மையும் ஒன்றிணைந்து செயல் தளத்தில், வர்க்கப் போராட்ட மூலம் எல்லா இடைவெளிகளையும் கடக்க கோரிப் போராடுகிறது. ஆனால் இந்தப் பிளவு முதலாளித்துவத்தில் இருந்து ஏகாதிபத்தியமாக உருவான போது ஆழமாகியது. இதை பாதுகாக்கவே சாராம்சம் இல்லை என்றும், மொழியின் வேறுபாடுபற்றியும், பெண்ணின் ஒடுக்கமுறை ஓரே தன்மையற்றவை என பலவிதமாக கூறவேண்டியுள்ளது.

இதை மறுக்க எடுத்து வைக்கும் அ.மார்க்சின் எடுகோள்களைப் பார்ப்போம். "பெண்ணை ஒரு குறிப்பான பண்புக்குரியவளாகக் காட்டுவதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னல்களாக பார்ப்பதே சரியானதாக இருக்கும். ........ உடற் கூறு அடித்தள வாதத்தின் அடிப்படையில் பெண்ணுறுப்புகள் உள்ளவர்களை எல்லாம் ஒரே மாதிரியாக பெண்கள் எனப் பார்ப்பது அவர்கள் அனைவரின் அனுபவங்களையும் பொதுமைப் படுத்த முடியாது....... அப்படியானால் பொதுமைக் கூறுகளோடு வித்தியாசங்கள் உண்டு எனப் பார்க்கலாமா? அப்படிப் பார்ப்பது என்பது பின் ஏதோ ஒரு வடிவில் உடற் கூறு அடிப்படையிலான பொதுமைகளைப் பிரதானப் படுத்தி வித்தியாசங்களைப் புறக்கணிப்பதில் தான் முடியுமென்றார் ...... எனவே வெள்ளைப் பெண்ணுக்கும் கறுப்பு பெண்ணுக்கு இடையிலான பொதுமைக் கூறுகளைக் காட்டிலும் வித்தியாசங்களே முக்கியம்"64 என்கின்றார்.

பொதுமைகளை விட வித்தியாசங்களே முக்கியம் என்கின்றார். நாசிகள் ஆரிய இனம் எனக் கூறி மக்களின் பொதுமையை மறுத்து வித்தியாசத்தைப் பேண ய+த மற்றும் இனங்களை அழித்ததும், அதே வித்தியாசங்களை பெண்ணுக்கும் வைக்கின்றனர். அதாவது நாசிகள் இன்று கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக எதை வைக்கின்றனரோ அதையே அ.மார்க்ஸ் கறுப்பு இனத்தின் பெயரில் நாசியாக முன்வைக்கின்றார்.

பார்ப்பனிய சதிராட்ட வானரங்கள் தொட்டாலே தீட்டு என்று கூறி, பொதுமையை மறுத்து வித்தியாசங்களை முதன்மைபபடுத்தி எதனால் சாதியமைப்பைப் பாதுகாக்கின்றனரோ, அதையே மறுதளத்தில், பார்ப்பனியதில் தலித் என முன்வைத்து வித்தியாசங்களைப் பேண முயல்வதன் மூலம், பார்ப்பனியத்தை பாதுகாக்க முனைகின்றார். பார்ப்பனியம் மனிதர்களுக்கு இடையில் பொது சாராம்சம் இல்லை, வித்தியாசமே அடிப்படையானது என்று உருவாக்கிய சாதிப் படிநிலையை, பின்பக்க வழியாக அ.மார்க்ஸ் கோட்பாட்டில் புகுத்துகின்றார். பெண்களும், ஆண்களும் பொதுமைப்பட்ட சமூகமாக மாறுவதற்கு பதில், பெண்களின் வித்தியாசங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதன் ஊடாக ஆணாதிக்கத்தை மறைமுகமாக தக்க வைக்கின்றனர். இது எப்பொழுதும் பெண்ணை ஆணிடமிருந்து விலகக் கோருகின்றது. பொதுவாக அராஜகவாத கோட்பாட்டு நடைமுறையாக சீரழிகின்றது. ஏகாதிபத்திய பெண் நுகர்வுக் கண்ணோட்டத்தில் ஆணிடமிருந்து விலகிவிடுவதை பிரதானப்படுத்தி குடும்பம் சிதறுகின்றது.

தலித் பெண்ணியத்தை கூறும் போது, தலித்தியத்தில் உள்ள வித்தியாசங்கள் முதன்மையானவை என்பதால், சாதிக் கட்டமைப்பு தலித்தியத்தினுள் இருப்பது அவசியம் என உயர்த்தி, தலித்தில் சாதிக் கடத்தலை நிராகரிக்க, பின் நவீனத்துவ பார்ப்பனியத்தை கோட்பாடாக முன் தள்ளுகின்றனர்.

வெள்ளை கறுப்பு பெண்களுக்கிடையில் வித்தியாசங்களே முக்கியத்துவம் என்கின்றனர். பொதுமை கிடையவே கிடையாது என்கின்றனர். ஆணாதிக்கம் என்பது பொதுமையாக கிடையாது என்கின்றனர். வெள்ளை நாசிகள் எதைச் சொல்லுகின்றனரோ அதை கறுப்பு நாசிகள் சார்பாக முன்வைப்பதன் மூலம் நாசிச, பாசிச அமைப்பை பாதுகாக்க நாயாகக் குரைக்கின்றனர். கறுப்பு வெள்ளை இணைவும், அதன் பொதுமைக் கூறும், நாசிச பாசிச இனத் தூய்மை வாதத்திற்கு எதிரானது. இது நிறத்தைக் கடந்த பொதுமைத் தன்மையில் வெள்ளையின பாசிச நாசிச சமூக அமைப்பை தகர்க்கின்றது. வித்தியாசங்கள் வெள்ளையினக் கோட்பாட்டின் அதாவது, ஆதிக்க இனக் கோட்பாட்டின் அல்லது பிற்போக்கு வர்க்கத்தின் அடிப்படையான கோரிக்கையாக யதார்த்தத்தில் இருக்கின்றது.

தலித் பெண்கள் மற்றப் பெண்கள் உடன் பொதுவான ஆணாதிக்கத்திற்கும் குறிப்பான ஆணாதிக்கத்துக்கும் எதிராக இணைந்து போராடுவது மட்டும் தான், உலகளவில் ஆணாதிக்கத்தையும் மற்றைய சமூக அவலங்களையும் கடக்க உள்ள ஓரே பாதையாகும். இதை மறுத்து வித்தியாசங்களை முதன்மைப் படுத்தி பின்நவீனத்துவ பார்ப்பனியத்தை முன் வைத்து, ஆணாதிக்க அமைப்பை உலகில் நீடிக்க வைப்பதன் ஊடாக, ஏகாதிபத்திய ஆணாதிக்க அமைப்பை தொடர காணும் கனவுகளின் புலம்பலே இவை.

பெண் மீதான ஆணாதிக்க பொது ஒடுக்குமுறையை மூடிமறைத்த படி பெண்ணின் உறுப்பினூடாக அடையாளம் காண்பதாக கூறமுயல்வது ஏன்? பெண் உறுப்பு பொதுமையான சாராம்சத்தை வெளிப்படுத்திய போதும், அவை முதன்மையானவையல்ல. மாறாக பெண் மீதான ஆணாதிக்கம் முதன்மையானவையாகும். பெண் ஒடுக்குமுறை பாலியல் ரீதியில் மட்டும் கையாளப்படுவதில்லை. அதாவது பெண் உறுப்பில் மட்டும் ஆணின் வன்முறை நிகழ்வதில்லை. மாறாக மனித இயக்கம் முழுவதிலுமே பெண் மீதான ஆணாதிக்க கூறுகள் ஆழமாக வன்முறையைக் கையாளுகின்றது. இதன் பொதுவான பண்பு உலகளவில் விதிவிலக்கின்றி பொதுவாக உள்ளது. பெண் மீதான ஒடுக்குமுறையை பெண்ணுறுப்பில் இருந்து அடையாளம் காண்பது என்பது, பெண்விடுதலையை மறுத்து பாலியலை விபச்சாரமாக்குவதாகும். பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்ற வரலாற்று உண்மையை கவனத்தில் கொள்ளாத ஆய்வுகள், கருத்துகள் அற்பத்தனமான நோக்கம் கொண்டவை. இங்கு ஆணாதிக்க சுயநலமும், ஒருபகுதி பெண்களும் தமது சொந்த வக்கிரத்தை தீர்த்துக் கொள்வதற்க்கான பாதையை உள்ளடக்கிய கோரிக்கையாக உள்ளது.

அடுத்து இதற்காக அ.மார்க்ஸ் புலம்புவதைப் பார்ப்போம். "மார்க்சியம் பெண்ணியல் பாலியலுக்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை எனத் தீவிர பெண்ணியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்."64 மார்க்சியம் மட்டும் தான் பாலியல் பிரச்சினையை சரியாக ஆய்வு செய்தது, செய்கிறது என்பதை மறுத்து ஏகாதிபத்திய விபச்சாரத்தை அங்கீகரிக்க கோருவதே இந்த விதண்டாவாதமாகும். தீவிரப் பெண்ணியவாதிகள் (யார் இவர்கள் எப்படி ஆணாதிக்கத்தை ஒழிக்க உள்ளனர். மர்மமான இந்த தீவிரப் பெண்ணியல் வாதிகளை யாருக்கும் தெரிவதில்லை) ஏகாதிபத்திய பொருளாதார மாற்றத்திற்கு இசைவாகப் பாலியலை, நுகர்வுப் பண்பாட்டில் அரங்கேற்றுகின்றனர். இதை மார்க்சியம் விமர்சிப்பதால் தான் பாலியலுக்குரிய முக்கியத்துவத்தை மார்க்சியம் மறுப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தீவிர பெண்ணியல் வாதிகள் யாரும், தாம் எப்படி ஏகாதிபத்திய பெண்ணியத்தில் இருந்து வேறுபடுகின்றோம், என்று சொல்லத் தெரியாதவர்கள்.

ஏகாதிபத்திய சந்தைப் படுத்தலுக்கு இசைவாக பெண்ணை விளம்பரப் படுத்தும் நுகர்வுப் பெண்ணியம், ஏகாதிபத்திய ஆணாதிக்க உலகத்திற்கு பெண்களை நிர்வாணமாக்கி, பெண்களை பாலியல் பிண்டங்களாக மாற்றுகின்றது. இந்த பாலியல் பிண்டங்களாக பெண்களை மாற்றுவதையும், அதைக் கோரும் பெண்களையே பெண்ணியத்தின் தீவிரப் பெண்ணியமாக கூறும் ஏகாதிபத்தியம் முதல் அ.மார்க்ஸ் வரை, ஆணாதிக்க வக்கிரங்களை கோரவும் பாதுகாக்க கோருவதுடன், அதை மேலும் பெண்ணிய கோசத்தின் பின்னால் வளர்த்து எடுக்கின்றனர்.

பொதுவில் இந்த தீவிர பெண்ணியல் வாதிகள் ஏகாதிபத்திய பெண்ணிய சீரழிவை அடையாளப்படுத்தி எதிர்ப்பதில்லை. ஏகாதிபத்தியத்தின் மற்றைய கூறுகள் மீது எதிர்ப்பதாக பாசாங்கு செய்வதன் மூலம், சொந்த ஏகாதிபத்திய பெண்ணியத்தில் எதிர்ப்பதற்கு எதுவுமற்றவர்களாகிவிடுகின்றனர். இவர்களின் எதிர்ப்பு என்பது நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ எச்ச சொச்சத்தில் மீது மையப்படுகின்றது. இயற்கையின் பெண் நிலை மீதான வாழ்வியலை காணமறுக்கும் இவர்கள், ஏகாதிபத்திய சீரழிவை பெண்ணியமாக எப்போதும் முன்னெடுக்கின்றனர். இவை பொதுவாக அராஜகவாத பெண்ணிய கோசமாக எழுகின்றது. அராஜகவாதம் தனிநபர் மீதான அதீதமான கற்பனைகளில் எழுகின்ற போது, சமுதாயத்தில் இருந்து அன்னியப்பட்டு விலகி தனிநபர் சுதந்திரமான விடுதலையை நாடுகின்றது. இது சமுதாயத்தில் இருந்து விலகிச் செல்லும் போது சமுதாய எல்லைக்குள்ளான சீரழிவுக்கும், இதன் கற்பனையான மானசீகமான விடுதலைக்கும் இடைவெளி அறவே நீங்கிவிடுகின்றது. ஏகாதிபத்தியப் பெண் தனிநபர் சுதந்திரமான ஜனநாயகத்தில் விபச்சாரத்தை பாலியலாக வந்தடையும் போது, அராஜகவாத பெண்ணியல் சமுதாயத்தில் இருந்து விலகி அராஜகவாத தனிநபர் சுதந்திரத்தில் ஏகாதிபத்திய சீரழிவை தமது நடத்தையாக்கின்றனர். இரண்டு பிரிவும் சாராம்சத்தில் சமூக சுதந்திரத்தை மறுத்து தனிநபர் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். இதனடிப்படையிலேயே இரண்டு பிரிவும் தமது கோட்பாட்டை கட்டமைக்கின்றது.

மேலும் அ.மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம். "வெள்ளை இனத்தவர்கள் மத்தியிலுள்ள ஆண்-பெண் உறவும் கறுப்பர்கள் மத்தியில் உள்ள ஆண்-பெண் உறவும் ஒரே மாதிரியாக இல்லை என்பதால் கறுப்பர்கள் மத்தியில் ஆண்-பெண் உறவை பகுப்பாய்வு செய்வதற்கு தனித்துவமான பெண்ணியப் பகுப்பாய்வுகள் தேவையாகின்றன."64 என்ற கண்டு பிடிப்பை ஆராய்வோம்.

ஆண்-பெண்ணை, வெள்ளை-கறுப்புக்கள் மட்டுமா பிரிகின்றது. இல்லை மாறாக கறுப்பு, வெள்ளை நிறத்துக்குள் பலவேறுபாடுகள் உள்ளன. இது தலித்துக்குள் பலவாக உள்ளது. ஆகவே இந்த வேறுபட்ட உறவு முறைக்கான சமூகக் காரணங்கள் தனித் தனியான ஆய்விற்குரியவை. இதற்கு முன் ஆண்-பெண் இடையில் உள்ள ஆணாதிக்க உறவு என்பது உலகில் விதிவிலக்கின்றி பொதுவான சாராம்சத்தால், அதன் உள்ளடக்கத்தால் கட்டி அமைக்கப்பட்டவை. இயற்கையின் தேர்ச்சியில் உருவான உறவு முறை, ஆரம்பத்தில் ஆபிரிக்காவில் ஒரே இடத்தில் இருந்து மனிதன் உலகெங்கும் சிதறி வாழும் நிலைக்கு மூதாதையர்கள் ஆவர்.

பூமியின் ஒரே நிலத் தொடர்ச்சிகள் பூமியில் மேல் பட்டை மீதான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சியால் கடலால் பிளந்து சென்றது முதல், மனிதனின் உழைப்பு மற்றும் அறிவியல் தேடல் கண்டுபிடிப்புகள் வாழ்க்கைப் போராட்டத்தில் பிரிந்து சென்ற நீண்ட வரலாற்றுக்கிடையில் தான் மொழி, நிறம், பண்பாடு, கலாச்சாரம், பால் ஒடுக்குமுறை........ என அனைத்து இடைவெளிக்கும் அடிப்படையாக அமைந்தது. இருந்த போதும் உலகில் சுரண்டலும், ஆணாதிக்க சமூக அமைப்பும் எங்கும் எல்லா இடமும் ஒரே மாதிரியானதாக, ஒரே காரணியால் கட்டி அமைக்கப்பட்டதை சமூக விஞ்ஞானம் பொருளாதாரம் தெளிவாக இனம் காட்டி நிறுவுகின்றது.

இன்று இடைவெளியைக் கடக்கும் போராட்டம் இரு தளத்தில் மட்டும் நடக்கின்றது. இது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் ஊடாகவும், ஏகாதிபத்திய உலகமயமாதல் ஊடாகவும் (இங்கு ஏகாதிபத்தியம் பிளவுகளை விதைத்த தொடர்ச்சியில்) நேர் எதிர் தன்மைகள் நடந்தவண்ணமுள்ளது. இதை யாரும் இந்த இரு போராட்ட எதிர் தளத்துக்கு வெளியில் தடுக்கவோ மாற்றவோ முடியாது. இதற்கு இடையில் மட்டுமே தான், எப்படி நகர்த்துவது என்பதில் போராட்டம் நடக்கின்றது. இடைவெளியைக் கடக்க முனையும் போக்கில் ஏகாதிபத்தியம் சிலவற்றில் தனது அதிகாரத்துக்காக செய்ய, இதற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய கண்ணோட்டத்தில் உலகில் எல்லா இடைவெளியையும் கடக்கப் போராடுகின்றது.

இன்று ஆண் பெண் உறவில் உலகில் உள்ள எல்லா ஒடுக்குமுறை செயல் தளம் மீதும், குறிப்பாக ஆணாதிக்க செயல் தளமீதான போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் முன்னெடுத்து இதை ஒழித்துக் கட்ட சர்வதேச பாட்டாளிவர்க்கத்திடம் கோருகின்றது, போராடுகின்றது. இதற்கு வெளியில் எந்த பெண்ணியமும் உலகளவில் ஆணாதிக்கத்தை தகர்க்க கோரவில்லை. இது ஆணாதிக்க உலகை தக்க வைக்க பகுதிக் கோரிக்கைக்குள் முடக்கி விடுகின்றது.

இதை மறுத்து அ.மார்க்ஸ் வைக்கும் அடுத்த பொன் மொழியைப் பார்ப்போம். "கறுப்பு பொதுப்புலம், வெள்ளைப் பொதுப் புலத்தின் அளவு ஆண் தன்மையானதாக (அயளஉடெiநெ) இல்லை"64 என்கின்றார். இருக்கும் சமூக அமைப்பில் இதை நேர் எதிராக திசை திருப்புகின்றார். பெண்கள் மீதான ஆணாதிக்க செயற்பாடுகள் வெள்ளைப் பெண்ணை விட கறுப்புப் பெண் மீது அதிகமானது. இதை மறுத்து கறுப்பு பெண்மீது ஆணாதிக்கம் குறைவு என்கின்றார். இதன் பின் கூட ஏகாதிபத்திய நலனும், நஞ்சும் எஞ்சியுள்ளது. ஏன்?

பொதுவாக வெள்ளை பெண்கள் வாழும் நாடுகளின் முதலாளித்துவப் புரட்சிக்குள்ளும், அதன் பின்னான ஏகாதிபத்திய தளத்திற்குள்ளும் தனிமனித நுகர்வுச் சுதந்திரத்திலும் பெண்கள் பெற்ற ஜனநாயக உரிமைகளை, முதலாளித்துவ புரட்சி நடக்காத நிலப்பிரபுத்துவ மதவாத அடிப்படை கொண்ட கறுப்புப் பெண்கள் வாழும் நாடுகளின் ஆணாதிக்கம் கொடூரமானது, காட்டுமிரண்டித்தனமானது. அதை மறுப்பதன் மூலம் குறைந்த பட்சம் முதலாளித்துவ புரட்சியை கோருவதை ஏகாதிபத்தியம் போல், இந்த அ.மார்க்ஸ் கும்பல் விரும்புவதில்லை.

கறுப்புப் பெண் முன் வெள்ளை இனத்தை விட நீ அதிக ஜனநாயகத்தை சலுகைகளை ஆணாதிக்க வாதிகள் இடம் பெற்றுள்ளாய் என்பதன் ஊடாக, வெள்ளை இனப் பெண் பெற்ற ஜனநாயக உரிமைமீது சேறுவீசுவதும், அவர்களின் போராட்ட அனுபவங்கள் கோட்பாடுகளை தூற்றி வீசவும் செய்யும் முயற்சி தான் இந்தமாதிரி புலம்பித் திரிவதாகும்.

பொதுவில் வெள்ளைப் பெண்கள் அனுபவிக்கும் உரிமைகளை கறுப்பு இனப் பெண்கள் அனுபவிக்க முடியாத, ஏகாதிபத்திய தலைமையிலான பொது ஒடுக்கு முறையில் கறுப்பினப் பெண்கள் சிக்கி உள்ளனர். ஏகாதிபத்திய நாட்டுப் பெண் பெற்ற உரிமையில், ஜனநாயக உரிமையும் நுகர்வு ஜனநாயகமும் என இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. ஏகாதிபத்தியம் கறுப்பு பெண்ணிடம் நுகர்வு ஜனநாயகத்தை திணித்தும் (வாங்கும் சக்தியை மறுத்துபடி), ஜனநாயக உரிமையை பறித்தும் தனது அதிகாரத்தை பாதுகாக்கின்றது. கறுப்பு இனப் பெண் வெள்ளை இனப் பெண் அனுபவிக்கும் ஜனநாயக உரிமையை குறைந்த பட்சம் பெறுகின்ற போது, ஏகாதிபத்திய அமைப்பு தகர்ந்து போகும் என்ற உண்மையினால், வெள்ளை இனப் பெண்ணை விட கறுப்பு இனப் பெண் அதிகமாக உரிமை பெற்றுள்ளாள் என்று கதையளக்க வேண்டி உள்ளது. கறுப்பு இனப் பெண்கள் குறைந்த பட்ச ஜனநாயக உரிமையை கோரிப் போராடுவதைத் தடுக்க, ஏகாதிபத்தியத்தில் உள்ள ஆணாதிக்க அமைப்பை தக்க வைக்க, சமூகத்தையே தலைகீழாகக் காட்டுவது அவசியமாகிறது. இதைக் கவ்வி விளக்க நாலு நாய்கள் கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டுள்ளார் அ.மார்க்ஸ்.

வெள்ளை இனப் பெண்களை விட கறுப்பு இனப் பெண்கள் அதிகளவு ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ கட்டுப்பாட்டுக்குள் வாழ்கின்றனர். இதை மறுக்கும் கபடம் நகைப்பிற்குரிய ஆணாதிக்கமாகும். பொதுவாக கறுப்பு வெள்ளை இனத் தொழிலாளர்கள், கூலிகள் எப்போதும் மற்றைய பெண்களை விட அதிகமாக சுயாதீனமாக, ஆண்களுக்கு நிகரானவர்களாக உள்ளனர். ஏனெனில் சொந்த உழைப்பும், போராடும் குணாம்சமும், இயற்கையை சார்ந்து இருத்தலும் இவர்கள் வாழ்கையில் உள்ளதால் இது இயல்பாகவே உள்ளதுடன், மற்றைய பெண்களுக்கு தலைமை தாங்கி விடுகின்றனர். இதை மறுத்து அ.மார்க்ஸ் எடுத்து வைப்பதைப் பார்ப்போம். "கறுப்புப் பெண்கள் தமது விடுதலைக்காக வெள்ளைப் பெண்களை நம்பியிருக்க முடியாது"64 என்கின்றனர். அருமையிலும் அருமையான ஏகாதிபத்திய விசுவாசம். கறுப்பு வெள்ளை என பிளக்கும் நாசிகள், பாசிஸ்டுக்கள், இனவாதிகள், ஆணாதிக்க வாதிகள் போல் பேசுகின்றனர். பெண் விடுதலை என்பது கறுப்பு வெள்ளை இனம் கடந்த போராட்டம் தான், ஆணாதிக்கத்தில் இருந்து பெண்ணை விடுவிக்கும். ஒன்று பட்டு பெண்ணைப் பிளந்து, ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒட்டு மொத்தப் போராட்டத்தை மறுப்பதன் மூலம், மனிதனின் ஒட்டு மொத்த விடுதலைக்கு போராடுவதை மறைமுகமாக மறுத்து, ஆணாதிக்கத்தை தக்க வைக்க முனைவதாகும். ஓரு வெள்ளை இனப் பெண் நிறவாதத்தை காக்கும் எல்லா நிலையிலும் கறுப்பு இனப் பெண் வெள்ளை நிறப் பெண்ணை அங்கீகரிக்க முடியாது. இது போல் கறுப்பு இனப் பெண் நிறத்தைக் காக்கும் போது வெள்ளை இனப் பெண், கறுப்பு நிறப் பெண்ணை அங்கீகரிக்க முடியாது. இதற்கு மாறாக வெள்ளை, கறுப்பு பெண்ணின் இணைவு தமக்குள் உள்ள விசேட ஒடுக்கு முறையையும் எடுத்து இணைத்துப் போராட வேண்டும்.

இது சுரண்டல், இனம், மதம், சாதி,..... கடந்து அதற்கு எதிரான போராட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. இதை மறுப்பது என்பது காலனிய வாதிகள் எதை தமது ஆட்சிக்காக பிளவுகளை ஏற்படுத்தி பிளந்து ஆண்டார்களோ, ஆளுகின்றார்களோ, அதை அ.மார்க்ஸ் உலக மயமாதலுக்கான ஏகாதிபத்திய உலகுக்காக விசுவாசமாக பிரகடனம் செய்கின்றார் அவ்வளவே.

இதற்காக எடுத்து இயம்பும் வரிகளை பார்ப்போம். "கறுப்புப் பெண்களைப் பொறுத்த மட்டில் "பெண்" என்பது அவளது முழு அடையாளமாக இருக்க முடியாது."64 என்கின்றார். நகைப்பிற்குரிய வாதங்கள், எடுகோள்கள். ஆபிரிக்கா, ஆசிய, ....... எங்கும் ஆணாதிக்கமுள்ள கறுப்பு நிறப் பெண்கள் பெண்களாக இல்லையா? அப்படியாயின் அவர்கள் கற்பிதமாகவா உள்ளனர். முதலில் பெண் என்ற பொருளை மறுப்பதன் மூலம், அவன் மீதான் ஒடுக்கு முறையை மறுத்து, கறுப்புப் பெண்ணை கேலி செய்யும் ஏகாதிபத்திய அமைப்புப் போல், வெட்கம் இன்றி பெண் இல்லை எனக் கேலி செய்கின்றனர். இங்கு பெண் என்ற அடையாளமே ஆணாதிக்கம் சார்ந்ததே.

மூன்றாம் உலகில் உள்ள கறுப்பு நிற பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்கு முறையை மறைக்க, அதற்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க முனைவதன் மூலம், இப்போராட்டம் தவிர்க்க முடியாது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இயல்பாக எழும் என்பதால், அதைத் தடுக்க கறுப்புப் பெண்ணை ஆணாதிக்கமுள்ள பெண்கள் அல்ல என்கின்றனர். பின்நவீனத்துவ தமிழ் தலித் சாக்கடைகள் இப்படி ஏகாதிபதியத்துக்காக நாய்வால் ஆட்டி முதுகு முறிய உழைக்கும் கோட்பாடு, அலட்டாமல், புலம்பாமல் ஒடுக்குபவர்களுக்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் கனவுகளின் வெளிப்பாடு தான் இவை.

தலித் பெண்ணை ஆணாதிக்க அமைப்புக்குள் தொடர வைக்க முன்வைக்கும் அ.மார்க்சின் வாதத்தைப் பார்ப்போம். "ஒரு தலித் பெண்ணுக்கு "பெண்" என்ற நிலையைக் காட்டிலும் "தலித் பெண்" என்ற நிலையிலேயே அடையாளம் காட்டப்படுகிறது."64 என்கின்றார். இப்படிப் பார்த்தால் தலித் பெண்ணை பள்பெண், நளப்பெண், சக்கிலியப்பெண், ......... எனப் பிளந்து அல்லவா ஆராய வேண்டும். அதைவிட்டுவிட்டு தலித் பெண் எனப் பொதுமைப்படுத்தும் சதிதான் என்னவோ? தலித் பெண் என்பதைக் காட்டிலும் அவரவர் ஒடுக்கு முறை வேறுபட்டது அல்லவா? ஆனால் ஏகாதிபத்தியத்தின் வெளுத்துப் போன பின்நவீனத்துவ தலித் கோட்பாட்டுக்கு திடீர்ரென இடையில் பிழைப்புக்கு ஏற்றவாறு குத்துக் கரணம் அடிப்பது ஏன் எனக் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்த ஏகாதிபத்திய நோக்கத்தை இனங் கண்டு கொள்ள முடியும். "பெண்" ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கு முறையில் பெண்ணாக அடையாளம் காண்கின்றாள். இப் பெண் தனக்குமேல் உள்ள ஆணாதிக்க ஒடுக்கு முறையை இனம் கண்டு, அதை எதிர்த்து போராட பெண்நிலைவாத நோக்கில் அணிதிரள்கின்றாள். இது சுரண்டல், இனம், மதம், சாதி, மொழி, ......... என அனைத்து ஒடுக்கு முறையையும் எதிர்த்து, பெண்ணாக, பெண்நிலை வாதமாகக் கட்டி அமைத்து ஆணாதிக்கம் மீது ஒட்டு மொத்த வெற்றிக்காக போராடுகின்றனர். இதை மறுத்த அனைத்தும் விதிவிலக்கின்றி தவிர்க்க முடியாது ஆணாதிக்கத்தை கட்டமைக்கின்றது. ஏனெனின் ஒட்டுமொத்த ஆணாதிக்கத்தை எதிர்க்காத அனைத்துக் கோட்பாடும் நடைமுறையும், தமக்குள் தமது நலனுக்குள் சீர்திருத்தத்தைக் கோருகின்றது.

அடுத்து ஆணாதிக்கத் தகவமைப்பை பார்ப்போம். "தலித் பொதுப்புலம் ஆண் சார்பற்றது எனச் சொல்ல முடியாதெனினும் இதிலும் மேற்சாதிப் பொதுப்புலத்தினளவு ஆண் சார்புத் தன்மை இல்லை எனலாம். ....... தலித் பெண்ணியம் சாதியத்தையும் பார்ப்பனியத்தையும் ஆணாதிக்கத்திற்கு இணையான இலக்குகளாகக் கொள்வது தவிர்க்க முடியாது."64 என தலித் ஆண்களின் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க அதனூடாக இச்சமூக அமைப்பை முண்டு கொடுக்க குரல் கொடுக்கின்றார். இதற்குடாக எதைப் பாதுகாக்கின்றார் எனப்பார்ப்போம். ஆந்திராவில் "தொம்மரா", "போகாம்" சாதியைச் சேர்ந்த பெண்களை, (தலித்) அதே சாதியைச் சேர்ந்த ஆண்கள் சந்தை அமைத்து ஏலம்விடுகின்றனர். ஒருவருட ஒப்பந்தில் ஏலம்விடப்பட்ட 10000 இளம் பெண்கள் மும்மை, ஆந்திராவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பின், மீளவும் அச்சமூகத்துக்குள் திரும்பிவிடுகின்றனர். பணமுதலைகளால் நடத்தப்படும் இந்த ஏலம், வறுமையில் வாடும் மக்களின் துயரத்தை விபச்சாரமாக்கிவிடுகின்றனர். இதுபோல் மத்திய பிரதேசத்தில் விற்க்கப்பட்ட பெண்கள் வைப்பாட்டியாகவும், மீளவும் விபச்சாரத்துகாக விறக்கப்படுகின்றனர். (இதழ்-2-4,1999)46 உண்மையான சாதிக்குள்ளான ஆணாதிக்க யதார்த்தம் நிர்வாணமாக பளிச்சிட்டு இருக்கும் போது, தலித் ஆணாதிக்கத்தை அ.மார்க்ஸ் மூடிமறைப்பதன் மூலம், கோட்பாட்டு விபச்சாரத்தை மனவெட்கமின்றி அதே தரகு தனத்தில் செய்கின்றார்.

தலித் ஆணாதிக்கம் இல்லை என்று கூறும் அளவிற்கு, ஒப்பீட்டில் கூறியபடி மோசடி செய்கின்றார். சமுதாயப் பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், சூழல்....... போன்றவற்றில் காணப்படும் ஏற்றத் தாழ்வான ஆணாதிக்க வேறுபாடுகளை ஒப்பீட்டளவில் மறுத்து, ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் முயற்சி உண்மையில் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்க வர்க்கப் போரை மறுத்துரைக்கும், கோட்பாடு உருவாகும் முயற்சியில் முன் வைப்பது தான்.

ஆணாதிக்கம் என்பதும் அதன் அச்சாணி என்பதும் பெண்களை சுரண்டுவதில் அதாவது தனிச் சொத்துரிமையில் இருந்து தொடர்கிறது. இது பெண்களை அடிமையாக்கியதுடன், பாலியலை நுகர்வுக்குரிய பண்டமாக மாற்றியதும் என்பது உலகளவில் பொதுத்தளத்தில் பொது உண்மையாக, பெண் மீதான ஒடுக்கு முறையாக உள்ளது. ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பில் உள்ள மாறுபட்ட குறிப்பான ஆணாதிக்க ஒடுக்கு முறையைக் கொண்டு, பொதுவான ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை மறுப்பது என்பது, ஏற்றத் தாழ்வுக்குள் குளிர் காய்ந்து அதில் பிழைக்க முனையும் கோட்பாடுகள், செயல் தளங்கள் உண்மையில் மக்களை ஏமாற்றி அதில் ஆணாதிக்கத்தை தக்க வைத்து பாதுகாப்பது தான்.

தலித் பெண்கள் சாதியையும், பார்ப்பனியத்தையும் ஆணாதிக்கத்திற்கு இணையாகக் கொள்வது என்பது, தலித் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடுவதை மறுப்பதாகும். தலித் பெண்களின் ஆணாதிக்க ஒடுக்கு முறையை சாதியத்திற்குள்ளும், பார்ப்பனியத்திற்குள்ளும் மூடி மறைத்து ஆணாதிக்க அமைப்பை பாதுகாக்க கோருவதன் மூலம், உண்மையில் இச் சமூக அமைப்பை பாதுகாப்பதன் மூலம் நனவாக பார்ப்பனியத்தையும், சாதியையும் பாதுகாக்க முனைவதாகும்.

இதில் சாதியத்தை, பார்ப்பனியத்தை ஆணாதிக்கத்துடன் ஒப்பிடுவது என்பதும் ஒரு பூர்சுவா குடும்பத்தில் ஆண் பெண் போராடுவது போல் ஆணாதிக்கத்துடன் சமரசம் கண்டு போராடத் தூண்டுவதும், ஆணாதிக்க எதிரியாக பிரகடனம் செய்யாத வகையில் காணக் கோருவதன் மூலம், சாதி என்ற கட்டமைப்பை பார்ப்பனியம் வரையறுத்த வகையில் சமூகத்தை வாழக் கோருவதாக உள்ளது. ஆணாதிக்கத்துக்கு மாற்றாக சாதியை வைப்பது என்பது இருக்கும் ஆணாதிக்க உலகைத் தக்க வைப்பதுமாகும். ஆணாதிக்கம் தகராத வரை சாதியமும் தகராது.

அடுத்து ஆணாதிக்க அமைப்பை பாதுகாக்க வைக்கும் வரிகளைப் பார்ப்போம். "இந்திய மரபுத்துவத்திற்கு உரிய பெண்ணியம் என்ற கருத்தை இன்று இந்துத்துவத்திற்கு உயர்த்திப் பிடிப்போர் முன்வைக்கின்றனர் பாரதீய ஜனதாக் கட்சியின் பெண்கள் பிரிவாகிய "மகினமோர்ச்சா" சேர்த்து மிருதுனா சின்கா சொல்லுது, "இந்தியப் பாரம்பரியம் முன் வைத்து ஏற்றுக் கொண்ட பாலியல் சமத்துவத்தை மீட்டுத் தருவதென பாரதீய ஜனதாக் கட்சி சபதமேற்கிறது ...... மேற்கில் வளர்ந்து வரும் பெண் விடுதலை இயக்கங்களில் இருந்து நாங்கள் கோட்பாட்டளவில் வேறு படுகின்றோம், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு வகையான மறுசீரமைப்பை நாங்கள் கோருகின்றோம்."64 என்கின்றார் அ.மார்க்ஸ். மேற்கு நாட்டு பெண் விடுதலையில் இருந்து கோட்பாட்டளவில் வேறுபடுவதாக (அதை என்ன எனச் சொல்ல வக்கில்லாமல் போகிறது) கூறிக் கொண்டு பாரதீய ஜனதா பெண்விடுதலைக்கு மேள தாளத்துடன் அங்கீகாரம் வழங்குகின்றார் அ.மார்க்ஸ். வாழ்க பார்ப்பனியப் பெண்ணியம். இந்த ஆணாதிக்க பார்ப்பனியம் பெண்ணியத்தை மறுப்பது என்பதும், வரையறுப்பது என்பதும் கேலிக்குறியது எனக் கூறி ஆணாதிக்க ஏகாதிபத்தியத்திற்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை முன்வைக்கும் மிருதுளா சின்காவின் கோரிக்கையை எப்படி விமர்சிக்க முடியும். ஏனெனின் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது, எனவே நாம் அதை பாதுகாக்க வேண்டும் என்கின்றார், பார்ப்பனிய கோட்பாட்டாளர் அ.மார்க்ஸ்.

பாரதிய ஜனதா வைத்தாலும், அமெரிக்கா ஜனாதிபதி கிலிங்ரனின் மனைவி வைத்தாலும் கோட்பாட்டளவில் வேறுபாடு உண்டு. ஆனால் அந்த ஆணாதிக்கத்தை மறுத்து, எதிர்த்து பெண்ணியத்தை நிலை நிறுத்த மாட்டோம் என்கின்றார். ஏனெனின் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது அல்லவா? உச்சரித்தால் போதும் அங்கீகரிப்போம் வாருங்கள் என அழைக்கின்றார் துரோகத்தை அரங்கேற்றி ஏகாதிபத்தியத்தை வாழவைப்பதற்கு.

தலித் பெண்ணியம் தலித் போன்ற கோசங்களின் பின் இவர்கள் "பொருளாதாரத்தில் ஒருவகையான மறுசீரமைப்பைக் கோருகிறோம்"64 என்பதன் ஊடாக பராதிய ஜனதாக் கட்சி வைக்கும் பெண்ணிய கோசத்தை அச்சொட்டாகவே முன்வைக்கின்றார். இந்த ஏகாதிபத்திய ஆணாதிக்க பார்ப்பனியச் சாதிய சமூகத்தில் மாற்றம் இன்றி பொருளாதாரத்தில் சலுகைகளை பார்ப்பனியத்திடம் கேட்டு பெறுவதை கோருவது, கறுப்பு வெள்ளை தலித் கோசங்களின் பின் முன்வைக்கும் அருவருக்கத் தக்க ஏகாதிபத்திய அருவருடித்தனமாகும்.

இந்த மாதிரி சுரண்டும் பன்றித் தனத்தை தெளிவாகக் காட்டியபின், மார்க்சியத்தை எதிர்ப்பதில் வியப்பேதும் இல்லை. மார்க்சியம் மட்டும் தான் உண்மையில் மக்களின் பிரச்சினையை பொருளாதாரச் சலுகைக்குப் பின் தேடாது, அவர்கள் விடுவிக்கும் போராட்டத்தில் தியாகத்தின் ஊடாகப் போராடுகின்றது.

இருக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்க பார்ப்பனிய சாதிய அமைப்பை தலைகீழாக்க சமூகத்தை மார்க்சியம் கோரும் போது, அதை சேறடித்து சலுகைக்காக, பிழைப்புக்காக போராட விளையும் கூட்டம், பாட்டாளி வர்க்கம் போராடுவதை அங்கீகரிக்க மறுத்தும், மார்க்சியத்தை அந்த மக்களுக்கு எதிரானதாகக் காட்ட எல்லா வண்ணக் கோட்பாடுகளையும் மீள மீள முன்வைக்க முயல்வதைத் தான், மேற்கூறிய கோரிக்கைகள் தலித்தியத்தின் பின் எழுவதைக் காணமுடியும். அந்த வகையில் சில பொருளாதார சலுகைக்காக பார்ப்பனிய மந்திரி சபைகளிலும், கட்சிக் கூட்டுகளிலும் சொந்த சலுகைகளை முன்நிறுத்தி நாய் பிழைப்பு பிழைக்கும் நபர்கள் இந்த தலித் கோட்பாட்டின் தனிச்சொத்துரிமையின் உற்பத்தியே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.

இதற்காக எடுத்து வைக்கும் அடுத்த வரிகளை ஆராய்வோம். "தலித் பெண்ணியம் இத்தகைய இந்துத்துவப் பெண்ணியத்தில் இருந்து விலகி நிற்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அயோத்தி தாசரும் அம்பேத்காரும் முயற்சித்ததைப் போல தலித் பெண்ணியமும் இந்திய மரபு என்பதை வைதீக வேர்களிலிருந்து அல்லாமல் பவுத்த, சைவ வைதீக மரபில் தேட முயலும், அம்பேத்கார், பெரியார், ப+லே வழியில் நின்று சாதியம் பார்ப்பனியம், ஆணாதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கும், தலித் ஆணை அது தன் எதிரியாக நிறுத்தாமல் உயர்சாதி ஆணாதிக்க சமூகத்தை அது தனது இலக்காகக் கொள்ளும்"64 என தலித் ஆணாதிக்கத்தைத் தக்க வைக்க பெண்ணியப் போராட்டங்களை தடுத்து நிறுத்த, தலித் ஆணாதிக்கமும் கிடையாது போராட்டமும் கிடையாது என்கின்றார்.

தலித் ஆணிய சலுகைகளை விட்டுக்கொடுத்து, உயர்சாதி ஆணியத்தை எதிர்த்துப் போராடக் கோரும் ஜனநாயக விரோத அரசியல், உண்மையில் ஒட்டு மொத்த ஆணாதிக்கத்தை தக்க வைக்கத்தான். அ.மார்க்ஸ் தலித் ஆணாதிக்கத்துடன் சமரசம் கண்டு, தலித் பெண்களை எட்டி உதைக்கும் ஆணாதிக்க சுரண்டல் தலித்தியம் அந்த மக்களுக்கே எதிரானது. ஏனெனில் தலித் தனக்குள் உள்ள சுரண்டும் வர்க்கத்தை எதிர்ப்பதில்லை. தனக்குள் உள்ள சாதி ஒடுக்கு முறையை எதிர்ப்பதில்லை. தனக்குள் உள்ள ஆணாதிக்கத்தை எதிர்ப்பதில்லை. இப்படி தலித்துக்குள் உள்ள சுரண்டும் வர்க்க, ஆளும் வர்க்க ஆணாதிக்க சாதிப் பிரிவுகளின் சலுகையில் எழும் கோட்பாடு, போராட்டம் எப்படி அந்த மக்களை விடுவிக்கும். என கொஞ்சம் யோசித்தால் இதன் நோக்கம், இந்த உலகை களங்கம் இன்றி சலுகைக்குள் பாதுகாப்பது தான் கோருகின்றது.

தலித் பெண்ணியம் தனக்கு மேல் உள்ள தலித் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதில் தான் எழமுடியும். இது தனக்குள் உள்ள சுரண்டல், சாதி ஒடுக்கு முறை என அனைத்தையும் எதிர்த்து, மற்றைய பிரிவு ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தான் எழமுடியும்.

தலித்துக்குள் ஒரு பார்ப்பனியப் பிரிவும், பிழைக்கும்சுரண்டல் பிரிவும், தமது சலுகைகளை தனித்துவமாகப் பெற எழும் கோட்பாடுகள் இயக்கங்கள் அற்ப சலுகைகளை வீசி எறிந்து, ஒட்டுமொத்தமாக சூறையாடுவதே எஞ்சம்.

கோட்பாட்டுச் செம்மல் அ.மார்க்ஸ் சலுகைக்காக என வைக்கும் கோட்பாடு, தலித் ஆணாதிக்கத்தை எதிர்த்து அல்ல, சுரண்டலை எதிர்த்து அல்ல, உள் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்து அல்ல என்ற ரீதியில், இதற்கு வெளியில் எந்த தலித் பிரிவும், எந்தப் போராட்டக் கோட்பாட்டையோ, வழியையோ, நடைமுறையையோ வைக்க முடியாது.

தலித்துக்குள் தலித் முதலாளிக்கு சலுகை, தரகு முதலாளிக்கு சலுகை, ஆணாதிகத்துக்கு சலுகை, நிலப்பிரபுத்துவச் சலுகை, உயர்சாதிச் சலுகை என்று நீளும் கோட்பாட்டு வரையறைகள் உண்மையில் பாட்டாளி வர்க்கம் எதை மறுத்துப் போராடுகின்றதோ, அதன் மீது அதற்கு நேர் எதிராக முன்வைத்து நிலை நிற்கிறது. பாட்டாளி வர்க்கம் தலித்துக்குள் இச் சலுகைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று மறுக்கின்றது.

இதை மறுத்து அம்பேத்கார் வழியில் போராடக் கோருகின்றார். இந்திய மரபை வைதீக மரபில் இருந்தல்ல பௌத்த, சைவ, வைதீக மரபில் தேட வேண்டும் எனக் கூறி, மற்றொரு வைதீக மரபில் மக்களை மீளவும் மூடிப் போட்டு வைக்க விரும்புகின்றார். இதற்கு பெரியாரைக் கொண்டு வரும் முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டியது இல்லை என நம்புகின்றார். பெரியாரின் போராட்டம் மொத்த சமயக் கருத்து முதல் வாதத்திற்கு எதிரானது. அம்பேத்கார் கருத்து இதற்கு நேர் எதிரானது.

இப்படி முரண்பாட்டை முன்வைக்கும் கோட்பாடு இடியப்பச் சிக்கலை மாறிமாறிப் பேசுவதால் யாருக்கும் புரிவதில்லை, விளங்குவதுமில்லை என நம்புகிறார். பெயர்களை உச்சரிப்பது நாய்ப்பிழைப்பிற்கு அவசியமாகிறது. இதன் மூலம் தலித், தலித் பெண்ணிய மோசடிகளை அரங்கேற்ற முடியும் என்ற கனவுகள் பெயர்களால் நனவாக்க முனைகின்றார்.

இதேயே மேலும் முரண்பாட்டின் சிக்கலில் முன்வைப்பதை ஆராய்வோம். " "தலித்" என்றும் உரிமையைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண், தலித் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அது ஏற்றுக் கொள்ளாது ........ "தீண்டாமை" என்கின்ற சொல்லாடலைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண், தலித் பெண்ணுக்கு எதிரான சலுகையைக் கோர முடியாது."64 இது யாராவது கேள்வி கேட்டாலும் இல்லை எனச் சொல்ல, விரும்பியவாறு, மறுவாசிப்பு, மறுவிளக்கம் சொல்ல முன்வைத்த மோசடியாகும்.

வெள்ளையில் இருந்து கறுப்பைப் பிளந்து, கறுப்பில் தலித்தைப் பிளந்து அங்கு படிப்படியாக ஒடுக்கு முறையில்லை எனக் கூறிய ஆய்வுரைகள், பின் போராட்டம் உள்ளே இல்லை எனப் பிரகடனம் செய்து, பின் சலுகை கோர முடியாது என கதையளக்கிறார்.

தலித் ஆண் தலித் பெண் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது எனக் கூறும் அ.மார்க்சின் கோட்பாடு தலித் ஆணை தனது எதிரியாக நிறுத்தாது எனக் கூறினார். இது எப்படிப் பொருந்தும் என விளக்க வேண்டியது இல்லை என நம்புகின்றார். இதைச் சொல்லிப் பிழைத்தால் போதும் என்பதே அரசியல் நிலை.

குழப்பம், இடியப்பச் சிக்கல், இதன் இறுதி முடிவு இருக்கும் அமைப்பை அசையாது பாதுகாக்கும் மறு வாசிப்பு செய்து ஒரு நாய்க் கூட்டத்திற்கு வழிகாட்டுவது தான் இதன் செயற்களம்.

மார்க்கியம் ஆணாதிக்கத்தை எதிர்த்து மறுத்து, ஆணாதிக்கத்தைப் புரட்டிப் போடுகின்றது. இதை மறுத்து மறுசீரமைப்பை நாங்கள் (தலித்-தலித் பெண்ணியம்) பொருளாதாரத்தில் கோருகின்றோம் என்பது, நாம் இனி எதை எனக் கூறத் தேவை இல்லை. இது இருக்கும் சமூக அமைப்பை, சலுகை பெற்று பாதுகாப்பதே.

தலித் பெண்ணியம், தலித்தியம், மற்றும் அனைத்துக் கோட்பாடுகளும், இதைத் தூக்கிப் பிடிக்கும் எல்லோரும் இதற்குள் தான் தமது அரசியல் பிழைப்பை தொடர்கின்றனர். இதை நாம் வேரறுக்க வேண்டும் இது தான் எம்முன் எஞ்சியுள்ளது.


கோணேஸ்வரிகள்

கோணேஸ்வரிகள்

12.03.2008

கோணேஸ்வரி ஈழத்தில் தமிழ் பெண்ணாய் இருந்ததால் சிங்கள இனவெறி இராணுவத்தால் குதறப்பட்ட ஒரு தாய். இதே அரச இயந்திரத்தின் இராணுவம் மன்னெம்பரியை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக ஊர்வலம் கொண்டு சென்று பல வெறியர்களால் பாலியல் வதைக்குட்படுத்தி கொலை செய்த சரித்திரம் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் உச்சமான அக்கிரமம். சிங்கள இராணுவம் தனது சொந்த இனத்தைச் சேர்ந்த கதிர்காம பேரழகி எனப்பட்ட ஒரு பெண் போராளி ”மன்னம்பெரிக்கு ” வழங்கிய அக்கிரமமான கொடிய தண்டனை இதுவாகும்.

An eye witness recounts the Kataragama Beauty Queen Murder

அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் ஈராக் பெண்களை குதறியெறிவது எவ்வாறு என்பதை நீங்கள் கீழே நிதரிசனமாகக் கண்டு கொள்ளலாம்.

















காஷ்மீர் பெண்களின் கதியை இத்தொடுப்பில் காணுங்கள்

http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2006/june2006/07_06_11u.html

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தில் பெண்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இன்னும் மேலே போனால் தழிழர் ”விடுதலை" இயக்கங்களுக்குள் புதையுண்டு போன பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் இருண்ட சம்பவங்களாகவே இன்னும் இருக்கின்றன. புதைகுழிகள் பேசுவது எப்போது?

மொத்தத்தில் அதிகார வர்க்க ஆக்கிரமிப்பு அடக்குமுறை இராணுவ வெறிநாய்கள் எப்போதுமே இழிவாய் பெண்கள் மேல் பாய்ந்து குதறுவது இனம் மொழி நாடு வயது நிற பேதம் எதுவும் கடந்த ஒரு அக்கிரமம்.

எல்லாக் கோணேஸ்வரிகளுக்குமாய் இரத்தம் கொதிக்கட்டும்.

இந்த வதை கொடுமைகளோ இனம் மொழி நாடு வயது நிறம் எல்லாம் தாண்டி நியாயம் கேட்கின்றது.


- சிறி-

Tuesday, March 11, 2008

எதிர்ப்பதும் எமது மரபு! - ஷோபாசக்தி

எதிர்ப்பதும் எமது மரபு!- ஷோபாசக்தி

யமுனா ராஜேந்திரன் தேசம் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் ஒரு பகிரங்க கருத்தாடலுக்கு என்னை அழைத்துள்ளார். நான் மிக்க மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கும் யமுனாவுக்கும் இனி நடக்கவிருக்கும் கருத்தாடலில் என் தரப்பிலிருந்து வெளியாகும் முதலாவது கட்டுரையிது.

பத்து வருடங்களாகத் தன்னை நான் தொடர்ந்து தாக்கிவருவதாகக் குறைப்படும் யமுனா தாக்குதலிற்கான காரணங்களாக என்னில் பொறாமை, தந்திரோபாயம், சதி செய்தல், அவதூறு செய்தல், போன்ற பண்புகள் குவிந்திருப்பதாகவும் இப் பண்புகளுடைய ஒருவரைக் குமிஞ்சானெத் தங்கள் ஊரில் அழைப்பார்கள் என்றும் சொல்கிறார்.

1995ல் யமுனா ஈழமுரசில் எழுதிவந்த சினிமா குறித்த கட்டுரைகளின் மீதான எதிர்வினையாக ஈழமுரசில் "சோவியத் யூனியனின் சினிமாவும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்" என்றொரு கட்டுரையை எழுதியிருந்தேன். இதன் பின்னாக அம்மா இதழில் யமுனா எழுதிய "பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்" என்ற கட்டுரையின் மீதான விமர்சனமாக அம்மா - 9 இதழில் "சிங்குச்சா சிங்குச்சா சிவப்புக்கலரு சிங்கிச்சா" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினேன். இதையொட்டி நடந்த விவாதங்களின் நீட்சியாக எக்ஸிலில் எழுதிய ஒரு சிறுகதையில் யமுனாவின் மேலோட்டமான விமர்சன முறைகளைக் கிண்டல் செய்து கதையின் ஒரு பகுதியை எழுதினேன். சில மாதங்களிற்கு முன்பு எஸ்.வி. ராஜதுரையின் நூலொன்றுக்கு எழுதிய மதிப்புரையில் "ஒரு மண்ணும் விளங்காமல் வெறும் மலிவான அரசியல் சொற்தொடர்களை அள்ளிவீசிப் பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் போன்றவற்றை மட்டுமல்லாமல் மார்க்ஸியத்தையும் கொச்சைப்படுத்தி இலக்கியச் சூழலில் தகிடுதத்தம் செய்பவர் யமுனா ராஜேந்திரன்" என்றெழுதினேன். புதுவிசை இதழுக்கு வழங்கிய நேர்காணலில் "அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற புதிய சிந்தனை முறைமைகளும் அவை சார்ந்த கலை இலக்கிய வெளிப்பாடுகளும் விமர்சன மரபுகளும் ஒரு பேரலையெனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து அதுவரையிருந்த இலக்கிய பீடங்களையும் ரசிகமணி விமர்சகர்களையும் கவிழ்த்துப் போட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

‘கண்டதையும் தின்றுவிட்ட வாலைத் தூக்கிக் கழிக்கும் மிருகங்கள்’ என்றார் சுந்தர ராமசாமி. ‘சமூக விரோத எழுத்துக்கள்’ என்றார் யமுனா ராஜேந்திரன்" எனச் சொன்னேன். இதைத் தவிர வேறெங்கும் நான் யமுனாவை விமர்சித்திருப்பதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படியான வேறு தருணங்களை யமுனாவும் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கவில்லை.

நான் யமுனாவின் எழுத்துகள் மீது வைத்தவையெல்லாம் மிக வெளிப்படையான விமர்சனங்கள். தன்னுடைய எழுத்துகள் மீது எதிர் விமர்சனங்களே இருக்கக்கூடாது என யமுனா எதிர்பார்க்கக்கூடாது. "மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில், காக்கை யுகக்கும் பிணம்" என்பார் ஒளவைப் பிராட்டி.

நான் விமர்சனம் என்ற பெயரில் தன்மீது தனிநபர் தாக்குதலைத் தொடுக்கிறேன், விஷத்தைக் கக்குகிறேன் என்பது யமுனாவின் கட்சி. யமுனா குறித்து நான் எழுதிய விமர்சனங்களில் முன்னவை இரண்டையும் தோழர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுத் தேடினால் ஈழமுரசு பத்திரிகையிலும், அம்மா – 9 இதழிலும் படிக்கலாம். பின்னைய இரு ஒற்றைவரிக் குறிப்புகளையும் நான் மேலே கொடுத்துள்ளேன். இவற்றைப் படித்த பின்பு நான் யமுனாவின் மீது நிகழ்த்தியது நியாயமான விமர்சனமா அல்லது தனிநபர் தாக்குதலா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ள முடியும். அப்படி நான் யமுனா மீது அவரின் பிறப்பின் அடிப்படையில் சாதிரீதியான விமர்சனமோ அல்லது அவரின் தனிப்பட்ட வாழ்க்கைமுறைமீது விமர்சனங்களை வைத்ததாகவோ யமுனா கருதுவாராயின் அந்தக் குறிப்பிட்ட வரிகளையோ பகுதிகளையோ யமுனா மேற்கோளாகச் சுட்டிக்காட்டுவதுதான் நேர்மையான செயல். யமுனா அப்படி எதையும் தனது கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கவில்லை. இனிமேலாவது அந்தப் பகுதிகளை யமுனா சுட்டிக்காட்ட வேண்டும். அதை விடுத்து விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியற்று "ஷோபாசக்தி தனிநபர் தாக்குதல் நிகழ்த்துகிறான்" என யமுனா மூக்காலே அழுவது யோக்கியமாகாது.

2

எனது 'ஈழமுரசு' எதிர்வினையில் வெறுமனே பொறாமை மட்டுமே பொங்கி வழிகிறதென்பது யமுனாவின் குற்றச்சாட்டு. ஷோபாசக்திக்கு தமிழ் தவிர வேறுமொழிகள் தெரியாது என்றொரு பழிப்பு வேறு. எனக்குப் பிறமொழிகளோ அல்லது பிறமொழித் திரைப்படங்கள் குறித்தோ அதிகமாகத் தெரியாது என்று சொல்லித்தான் நான் அந்தக் கட்டுரையையே ஆரம்பித்திருப்பேன். இரண்டு நாட்களில் எட்டுத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்ததாகக் கூறி அந்த எட்டுப்படங்களுக்கும் தவளைப் பாய்ச்சல் நடையில் யமுனா சூட்டோடு சூடாக விமர்சனங்களையும் எழுதியிருந்தார். "இது எப்படிச் சாத்தியம்? இது நுனிப்புல் மேய்தலாகாதா?" என நான் சந்தேகத்தை எழுப்பியிருந்தேன். எனது இந்தச் சந்தேகத்திற்கு யமுனா பொறாமையெனப் பெயரிட்டால் அதற்கு நானென்ன செய்ய முடியும்.

தவிர தமிழ்ப் பெண் இயக்குனர்கள் குறித்து யமுனா கொடுத்த பட்டியலிலுள்ள விடுபடல்களையும், பாலுமகேந்திராவின் சினிமாக்கள் குறித்தும் மாற்றுச் சினிமா இயக்குனர்கள் குறித்தும் அவர் வழங்கியிருந்த பட்டியல்களிலுள்ள விடுபடல்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஒரே நாளில் நான்கு படங்கள் பார்த்து விமர்சனம் எழுதப்போனால் இப்படியான விடுபடல்களும் நுனிப்புல் தின்பதும் தவிர்க்கமுடியாது, ஆகையால் தலைவரே கொஞ்சம் நிதானியுங்கள் என்றேன். இதற்குப் பொறாமையென்றா பெயர்?

எனது எதிர்வினையின் மையம் யமுனா, மணிரத்தினத்தைக் குறித்தம் கமல்ஹாஸனைக் குறித்தும் கட்டியெழுப்பிய பிரமைகளின் மீதான விமர்சனமாகவேயிருந்தது. “மாற்றுச் சினிமாக் கூறுகளை வெகுஜன சினிமாத் தளத்துக்குள் உள்ளேயேயிருந்து கமல்ஹாஸன் உருவாக்க முனைகிறார்” என்றெழுதினார் யமுனா. இதென்ன பேய்க்கதை என்று சாடிய நான் “ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் பொலிஸ் நாய்களுக்குக் குருதிப்புனலில் பாராட்டு, நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களைப் பாதுகாக்க ஒரு தேவர் மகன், மகளிர் மட்டும் படத்தில் 'காளைமாடு ஒண்ணு கறவைமாடு மூணு', இவருக்கெல்லாம் ஒரு சினிமா அதற்குச் சிவப்பக்கம்பளம் விரிக்க ஒரு யமுனா” என்றெழுதினேன். அந்த 'மாற்றுச் சினிமா' கமல்ஹாசன் இந்துத்துவா மனோபாவத்துடன் இயங்குபவர் என்பதை 'ஹேராம்' மூலமும் அவர் தலித் மக்களின் விரோதி என்பதை 'தேவர் மகன்' மூலமும் 'சண்டியர் என்ற விருமாண்டி' மூலமும் திருநங்கைகள் மீதான அவரின் வக்கிரத்தை 'வேட்டையாடு விளையாடு' மூலமும் காலம் இன்று நிரூபித்துத்தானுள்ளது.

அக்காலத்தில் யமுனா இயக்குனர் மணிரத்தினத்தை வெகுவாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார். 'ரோஜா', 'பம்பாய்' போன்ற இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகவும் இந்துக் கதாநாயகர்களைத் தேசபக்தர்களாகவும் சித்திரிக்கும் படங்களையெல்லாம் அவர் வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார். 'மணிரத்தினத்தின் சினிமா' என்று ஒரு தனிப் புத்தகமே தலைவர் போட்டிருக்கிறார். என் எதிர்வினையில் மணிரத்தினம் குறித்த யமுனாவின் மதிப்பீட்டை நான் கண்டித்தேன்.

"காஷ்மீரிகள் காலம் காலமாய் இந்திய இராணுவத்தால் எரியுண்டு கிடப்பவர்கள். பதிலுக்கு அவர்கள் இந்தியத் தேசியக் கொடியை எரிக்கிறார்கள். எரியும் கொடியில் விழுந்து புரண்டு அரவிந்தசாமி இந்திய அய்க்கியத்தைக் காப்பாற்றுகிறாராம். இந்தியாவின் ரம்போவைக் கண்டு விசிலடிக்காத குறையாக உச்சி குளிர்ந்துகிடக்கிறார் யமுனா" என்றும் "உழைக்கும் வர்க்கத்துக்குக் குந்தியிருக்க நிலம் கிடைக்க வழி கூறுபவன் மாற்றுச் சினிமாக்காரன். குச்சி குச்சி ராக்கம்மா சொல்லிக்கொடுத்த மணிரத்தினம் மோசடிக்காரன்" என்றும் நான் எழுதியிருந்தேன். மணிரத்னத்தின் அப்பட்டமான இந்துத்துவச் சாய்வையும் திராவிட இயக்க எதிர்ப்பையும் வலதுசாரித்தனத்தையும் அவரின் பிற்காலத்திய படங்களும் -குறிப்பாக 'இருவர்', 'குரு' - உறுதி செய்துள்ளன.

நான் காலையில் 'புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகத்தின்' அரசியல் வகுப்புகளிற்கும் மாலையில் 'தொழிலாளர் பாதை' பத்திரிகை விற்பதுமாகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்தான் இந்த எதிர்வினையை எழுதியிருந்தேன். எனவே அந்த எதிர்வினையில் கொஞ்சம் தூக்கலாகவே 'வர்க்கம்', 'புரட்சி' போன்ற சொற்கள் விரவிக்கிடக்கும். எனது இந்த எதிர்வினையில் யமுனாவுக்கு உடன்பாடில்லாமலிருப்பது வேறு விசயம். அது அவரின் உரிமை. ஆனால் எனது எதிர்வினை மொத்தத்தையும் பொறாமை, சதி, சூழ்ச்சி, ஷோபாசக்திக்கு ஆங்கிலம் தெரியாது போன்ற சொல்லாடல்களால் மிஸ்டர் யமுனா ராஜேந்திரன் எதிர் கொள்வது என்ன நியாயம்? எவ்வகையான அறம்?

இதற்குப் பின்பு அம்மா (1998) இதழ்களில் "பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்" என்ற தலைப்பில் யமுனா ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையிலுள்ள பிரச்சினைகளையும் அபத்தங்களையும் குளறுபடிகளையும் குறித்து அ.மார்க்ஸ், சேனன், வின்சன்ட் மற்றும் நான் 'அம்மா' இதழ்களில் நான்கு தனித்தனிக் கட்டுரைகளை எழுதினோம். வளர்மதி 'எக்ஸில்' ஏழாவது இதழில் 'வாதம்னா வாதம்' என்றொரு கட்டுரையை எழுதினார். ஆனால் நாங்கள் அய்ந்துபேர் சேர்ந்தும் கூட எங்களால் யமுனாவின் கட்டுரையிலுள்ள அபத்தங்களை முழுவதுமாகக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மறிய வீட்டுச் சோற்றில் கற்களைப் பொறுக்குவது போலப் பொறுக்கப் பொறுக்க யமுனாவின் பிரதியில் அபத்தங்கள் பெருகிக்கொண்டேயிருந்தன. பொறுக்கிய அய்வரிலும் என்னைத் தவிர மற்றைய நால்வரும் பின்நவீனத்துவத்தை மூலமொழிகளிலேயே படிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். யமுனா சார்! ப்ளீஸ் நோட் த பாயின்ட்.

அந்தக் கட்டுரையில் "தலித்தியம் ஒரு குறுங்குழுவாதப் போக்கு" என்றார் யமுனா. தலித் அரசியலாளர்கள் சந்தர்ப்பவாதக் கூட்டுகளை ஏற்படுத்துகிறார்கள் என்ற யமுனா "ராமதாஸ், பிஜேபி, வைகோ, ஜெயலலிதா கூட்டு அத்தகையது என்றெழுதினார். அய்யா உங்களுக்கு தலித் என்றாலே என்னவென்று புரியவில்லை. இந்த நான்கு கட்சிகளில் எந்தக் கட்சி தலித் கட்சி? என்று நான் கேட்டெழுதினேன். "புகலிடத்தில் தலித்தியத்திற்கான நியாயங்கள் விவாதத்துக்குரியவை" என்பது யமுனாவின் இன்னொரு மானுடவியல் கண்டுபிடிப்பு. எனக்கு வந்த விசருக்கு "பத்மநாப அய்யரின் தொகுப்புகளில் படுகிடையாய் கிடந்து ஆசிரியப் பணியாற்றினால் யமுனாவுக்கு இந்தச் சந்தேகமும் வரும் இதற்கு மேலேயும் வரும்" என்ற பொருள்பட எழுதினேன்.

"பக்தி இயக்கம் பரந்துபட்ட மக்கள் நலன்களை இணைத்தது என்று வரலாறு இருக்கிறது" என்றார் யமுனா. "அப்படியெல்லாம் ஒரு புண்ணாக்கும் கிடையாது. சமணப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுளமே என்று சம்மந்தர் தேவாரம் பாடியதும், பக்தி இயக்க காலங்களிலே சமணர்களும் பவுத்தர்களும் கூண்டோடு கழுவிலேற்றப்பட்டதும்தான் வரலாறு" என்றேன் நான். தனது கட்டுரையில் 'கற்பழிப்பு', 'தேவடியாள்' போன்ற ஆணாதிக்கச் சொற்களை யமுனா உபயோகித்திருப்பதைச் சுட்டிக்காட்டி யமுனா திருத்திக்கொள்ள வேண்டுமென்றேன். தோழியர் ஓவியாவைத் தலித் கோட்பாட்டாளாராக யமுனா சொல்வது தவறென்றேன்.

"பின்நவீனத்துவம் அராஜகமும் வன்முறையும் நிறைந்த நம்பிக்கையின்மைக் கோட்பாடு" என்றெழுதிய யமுனா அடுத்த வரிகளில் "நல்ல கூறுகளை பின்நவீனத்துவத்திலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்" என்றெழுதினார். அராஜகமும் வன்முறையும் நிறைந்த கோட்பாட்டிலிருந்து என்ன நல்ல புடலங்காயை யமுனா பிரித்தெடுக்கப்போகிறார் என்று நான் கேட்டேன். தத்துவங்களையும் கோட்பாடையும் கடுமையாக விமர்சிக்கும் பின்நவீனத்துவத்தையே யமுனா ஒரு கோட்பாடு எனச் சுட்டிக்காட்டுவது சரியா எனக்கேட்டேன். (அதெல்லாம் ரொம்பத் தப்பு என்று வளர்மதியும் அ.மார்க்சும் சேனனும் தங்கள் கட்டுரைகளில் யமுனாவைப் பவுடர் செய்தார்கள்.) இப்படியாக யமுனாவின் கட்டுரையிலுள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். வாய்ப்புள்ள தோழர்கள் எனது கட்டுரை வெளியாகிய அம்மா – 9 இதழைப் படித்துப் பார்க்க வேண்டும். அந்தக் கட்டுரையில் பின்நவீனத்துவம் குறித்து மட்டுமல்ல மார்க்ஸியம், தலித்தியம், இலக்கியம் குறித்த்தெல்லாம் யமுனா எழுதியவை வெற்று அலம்பல்களும் புலம்பல்களுமே என்பது எனது நிலைப்பாடு. ஆக யமுனாவின் கட்டுரையை நான் நேராக எதிர்கொண்டு எனது விமர்சனங்களைப் பகிரங்கமாக வைத்தேன். என் விமர்சனத்தில் அவருக்கு உடன்பாடில்லாமலிருக்கலாம். என்னைப் பொருட்படுத்திப் பதில் தராதிருப்பதும் அவருடைய உரிமை. ஆனால் இவ்வாறாகக் கேள்விகளை எழுப்புவதும் விமர்சிப்பதும் குமிஞ்சான்தனம் என அவர் கொடுக்கிழுத்துக் கட்டிக்கொண்டு என்னோடு மல்லுக்கு நிற்பது அழிவழக்காடுதல் அல்லவா. இவ்வளவு நடந்த பின்பும் விவாதங்கள் எழுந்தபோது நாங்கள் எந்த நேர்மையான எதிர்வினைகளும் செய்யவில்லை என்று யமுனா புளிப்புக் காட்டுவதை எப்படிப் புரிந்துகொள்வதுது?

ஒரு மண்ணும் விளங்காமல் யமுனா பின்நவீனத்துவம் பற்றிப் பேசிக்கொண்டிக்கிறார் என்ற என்னுடைய விமர்சனம் கபடத்தனம் என்பார் யமுனா. தேசத்தில் வெளியாகிய தன்னுடைய கடைசிக் கட்டுரையில் கூட "நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன்: காலனிய எதிர்ப்பு இந்துத்துவமும், மேற்கத்திய மற்றும் மார்க்சிய எதிர்ப்பு அரசியல் இஸ்லாமும், நரேந்திர மோடியும் பின்லாடனும் ‘பின்நவீனத்துவ’ உற்பத்திகள்தான்" என்கிறார் யமுனா. கோத்ரா ரயில் எரிப்பும், அதைத் தொடர்ந்து 2000 இஸ்லாமியர்கள் மோடியால் படுகொலை செய்யப்பட்டதையும், இன்று குஜராத்தில் இஸ்லாமியர்கள் கடுமையாக மோடியின் அரசால் ஒடுக்கப்படுவதையும் இந்துப் பாஸிசச் செயற்பாடாகத்தான் நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். அருந்ததிராய் முதற்கொண்டு நமது தமிழகத்துச் சிறுபத்திரிகையாளர்கள் வரைக்கும் இப்படியாகத்தான் சொல்கின்றார்கள். ஆனால் யமுனாவோ இந்துப் பாஸிசத்தின் குற்றங்களை பின்நவீனத்துவத்தின் மீது தூக்கிப்போடுகிறார். இது ஒரு ஆர். எஸ் .எஸ்.காரர் செய்யும் வேலையல்லவா? இந்தத் தருக்கத்தின் அடிப்படையில் சங்கரராமனைக் கொலைசெய்த சங்கராச்சாரியும் பின்நவீனத்துவாதிதான் என்ற முடிவுக்கு யமுனாவால் மட்டுமே வந்துசேர முடியும். பின்லேடனுக்கும் பின்நவீனத்துவத்திற்கும் “பின்” என்ற எழுத்துக்களைத் தவிர வேறென்னய்யா சம்மந்தம்? ஒரு புறத்தில் மேற்கிலேயே பின்நவீனத்துவம் செல்வாக்கிழந்து விட்டது என்று சொல்லிக்கொண்டே மறுபுறத்தில் இன்றைய உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த போக்குகளான மேற்கத்திய மார்க்ஸிய எதிர்ப்பு அரசியல் போக்குகளும் இந்தியாவையே ஆட்சி செய்த மோடியின் பிஜேபியும் அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் நம்ம பின்லேடனும் பின்நவீனத்துவ உற்பத்திகள்தான் என்று சுய நினைவுள்ள எவராவது எழுதுவார்களா? தனது கட்டுரை நெடுகிலும் குடிகாரன் என்றெழுதி என்னைக் கௌரவப்படுத்தியதற்கு யமுனாவுக்கு நன்றி. நான் குடித்தால் சலம்புவேன், பாட்டுப் பாடுவேன், ஆனால் கட்டுரையெல்லாம் எழுதமாட்டேன்.

ஆக, பின்நவீனத்துவத்திற்கும் பிஜேபிக்கும் பின்லேடனுக்கும் உள்ள தொடர்பை யமுனா நிறுவும் வரை பின்நவீனத்துவம் குறித்து யமுனாவுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

"அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்ற எழுத்துகளை சமூக விரோத எழுத்துகள் என்கிறார் யமுனா" என்று 'புதுவிசை' இதழின் நேர்காணலில் நான் சொன்னேன். "இது அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு, நான் அப்படிச் சொல்லவேயில்லை" என்கிறார் யமுனா. இல்லை அப்படித்தான் சொன்னார் என்கிறேன் நான். இப்போது விஷயத்துக்கு வருவோம்.

நமது நண்பர் சாருநிவேதிதா இன்று பாபாவின் பக்தராகிப்போனதையும் அவர் நல்லி குப்புசாமியின் நிழலில் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளைச் செய்வதையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது குறித்து நாங்கள் வெளியிட்ட 'அநிச்ச' பத்திரிகையிலும் எழுதியிருக்கிறோம். இந்த மோதல்களின் தொடர்ச்சியில் 'தீராநதி' இதழ் நேர்காணலில் சாரு என்னைத் தும்பு தும்பாய்க் கிழித்துத் தோரணம் கட்டியதையும் தோழர்கள் படித்திருக்கக்கூடும்.

ஆனால் சாருவின் இன்றைய குத்துக்கரணங்களால் சாரு என்ற புனைகதை எழுத்தாளன் தமிழ் இலக்கியத்தில் செய்த பாய்ச்சல்களையும் சாதனைகளையும் என்னால் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. சாருவின் கடைசி நாவலான 'ராசலீலா' வையும் அவர் வாரமலர்களில் எழுதிய சிறுகதைகளையும் தவிர்த்து அவரின் ஒட்டுமொத்த புனைகதை எழுத்துகளுக்கும் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நிரந்தரனமான இடமிருக்கிறது என்பதைத் தமிழின் அத்தனை முக்கியமான இலக்கிய விமர்சகர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இப்பொழுது மலையாளத்திலும் சாருவின் கொடி பறக்கிறது. பின்நவீனத்துவம் சார்ந்த புனைகதை முயற்சிகளைத் தமிழில் ஆரம்பித்து வைத்தவர்களில் சாருவே முதன்மையானவர். 'எக்ஸிஸ்டென்ஸியலிசமும் பான்ஸி பனியனும்', 'ஸீரோ டிகிரி', 'நேநோ' போன்ற நூற்கள் சாருவின் புதுவகை எழுத்துகளிற்குச் சாட்சி.

பண்பாடு, மொழி, சமூக ஒழுங்குகள், தேசியப் பெருமிதங்கள் எல்லாவற்றையும் தனது எழுத்தால் மீறிப் பார்த்தவர் சாரு. பின்நவீனத்துவ அறிதல் முறைகளால் உந்தப்பட்டு எழுதும் சாருவின் எழுத்தையோ, சுகனின் எழுத்தையோ ஆபாச எழுத்துகள், சமூகவிரோத எழுத்துகள் என்ற வகைக்குள் அடக்கிவிடுவது யமுனாவின் விமர்சன உரிமையென்றால் இத்தகையை எழுத்துகளை சீரணிக்க முடியாதவர்களும், கலாச்சாரப் பொலிஸ்காரர்களும், வெள்ளை வேட்டிக் கள்ளர்களும் இவ்வகை எழுத்துகளை சமூகவிரோத எழுத்துகள் என்று சொல்லி எதிர்க்கிறார்கள் எனச் சொல்வது என் உரிமை.

ஆனால் யமுனா வெறும் விமர்சனத்தோடு நின்றுவிடவில்லை. அவர் சாருநிவேதிதா 'உன்னத சங்கீதம்' என்ற கதையை எழுதியதற்காக தண்டனையையும் சிபாரிசு செய்தார். 'உயிர்நிழல்' மார்ச்- ஏப்ரல் 2001 இதழில் பக்: 25ல் யமுனா என்ற கலாச்சாரப் பொலிஸ் இப்படி எழுதினார்:

"மனித உரிமை குறித்து அதி அக்கறைகொண்ட மேற்கத்திய நாடுகளில் சாநியின் இம்மாதிரியான போர்னோகிராபி எழுத்துகள் குற்றப்பிரிவின் கீழ் வரும் என்பதை நாம் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. மின்கம்பங்கள் அதீதமானவை என்பதில் சந்தேகமில்லை. நாகரீக சமூகங்களில் சிறைச்சாலைகளையும் பெரும்பாலான வேளைகளில் மனோசிகிச்சைக் காப்பகங்களையும் சிலரைப் பொறுத்துப் பாவிக்கத்தான் வேண்டியிருக்கிறது."

முதலில் மேற்கு நாடுகளின் அதி அக்கறையான மனித உரிமைகள் குறித்த யமுனாவின் போதனைக்கு நன்றி. வியட்நாமிலும் அல்ஜீரியாவிலும் ஈராக்கிலும் இலங்கையிலும் அவர்களின் மனிதாபிமானத்தைக் கண்டு நாம் வியந்திருக்கிறோம் என்பது நிற்க, ஒருவரின் எழுத்துக்காக அவரைச் சிறையிலடைக்கலாம் என்று சிபாரிசு செய்யும் ஒருவருக்குக் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதையிருக்கிறது. "நீ சொல்லும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதைச் சொல்லும் உனது உரிமைக்காக நான் உயிரைக் கொடுத்தும் போராடுவேன்" என்று வால்டேயர் சொன்னதை முகப்பில் போட்டுத் தங்கள் கட்டுரைகளையோ பின்னூட்டங்களையோ எழுதினால் மட்டும் போதாது. அதைக் கடைப்பிடிக்கவும் தோழர்கள் முயற்சி செய்ய வேண்டும். நாளையே அடூர் கோபாலகிருஷ்ணன், சேகர் கபூர் மாதிரியாகச் சினிமாவை நன்கு தெரிந்த ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் யமுனா ராஜேந்திரன் எழுதும் மோசமான சினிமாக் கட்டுரைகளுக்காகவே யமுனாவைத் தூக்கி உள்ளே போடுவார் என்பது சர்வ நிச்சயம். ஆனால் அப்போதும் நாங்கள் எழுதுவதற்காக ஒருவரைச் சிறையிலடைப்பது அராஜகம் என்று குரல் கொடுக்க வேண்டுமே தவிர யமுனாவைப்போல 'சாருவைச் சட்டப்படி சிறையிலடைக்க வேண்டும்' என்று அகராதி பேசக் கூடாது.

"மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப்போக்கு இருத்தலியல்" என்று நான் எழுதியதைப் படிக்கும்போது யமுனாவுக்குக் குண்டியில் தட்டிச் சிரிக்கத் தோன்றுகிறதாம். யமுனா எதால் எங்கே தட்டிச் சிரிப்பார் என்பது என்னுடைய பிரச்சினையல்ல. என்னுடைய பிரச்சினையெல்லாம் இருத்தலியல் மார்க்ஸியத்துக்குப் பிந்திய சிந்தனையல்ல என்று 'தேசம்' கட்டுரையில் மறுக்கும் யமுனா அந்த மறுப்பிற்கான காரணங்கள் எதையும் வைக்கவில்லை. அப்படியானால் இருத்தலியல் மார்க்ஸியத்திற்கு முந்திய சிந்தனைப் போக்கு என்கிறாரா யமுனா? இங்கே ஒரு தத்துவார்த்தச் சிக்கலும் கிடையாது. வெறும் காலம் குறித்த கேள்விதான் இது. எனக்குத் தெரிந்து மார்க்ஸியம் என்றவொரு தத்துவம் பருமட்டாக உருவாகி அரைநூற்றாண்டுக்குப் பின்புதான் இருத்தலியல் என்ற சிந்தனை அறிவுப் புலங்களில் கோட்பாட்டுருவாக்கம் கொள்கிறது. இல்லையென்கிறாரா யமுனா? யமுனா குண்டியில் தட்டிச் சிரிப்பதை நிறுத்திவிட்டு முதலில் இதை விளக்க வேண்டும்.

நான் கடந்த பத்துவருடங்களாக யமுனாவின் மீது வைத்த விமர்சனங்களின் சாரங்களையும் தருணங்களையும் மேலே முழுவதுமாக விளக்கியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். என் பதிலில் யமுனா போதாமைகளை உணருவாரானால் அவற்றை அவர் தெரிவிக்கும் பட்சத்தில் மேலும் விளக்கங்களைத் தர நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி, யமுனா என் எழுத்துகளுக்கு அப்பால் என் 'தகிடுதத்தங்களை' அம்பலப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பார்க்கலாம். "தண்ணியும் பாரின் கரன்சியும் ஓடவிட்டு, நீங்கள் குமுதத்திலும் ஆனந்த விகடனிலும், இந்தியா டுடேயிலும் நேர்முகம் தருகிறீர்கள்" என்கிறார் யமுனா. நல்லது. என்னை 'ஆனந்தவிகடனுக்காக' நேர்காணல் செய்தவர் டி. அருள்எழிலன். அவர் ராஜாங்கத்தின் முடிவு என்ற குறும்படத்தின் இயக்குனர், நடிகர். 'இந்தியா டுடே'க்காக என்னை நேர்கண்டவர் பீர் முகமது. சிறந்த கட்டுரையாளர். எங்களது கறுப்புத் தொகுப்பிற் கூட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். 'குமுதத்திற்காக' நேர்கண்டவர் கடற்கரய். கடற்கரய் ஒரு கவிஞர். 'தீராநதி'க்காக என்னை நேர்கண்டவர் தளவாய் சுந்தரம். தளவாய் சுந்தரம் சிறுபத்திரிகைகளில் நீண்டகாலமாகக் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர். இவர்கள் நால்வருமே எனது வாசகர்கள். என்னை நேர்காணலிற்காக விகடன் நிர்வாகமோ குமுதம், இந்தியா டுடே நிர்வாகமோ தொடர்புகொள்ளவில்லை. இந்தத் தோழர்களே என்னை அணுகி நேர்காணல்களைப் பெற்றுச் சென்றார்கள். இப்போது சொல்லுங்கள் யமுனா! இந்த நால்வரில் எவர் என்னிடம் பணமும் தண்ணியும் வாங்கிக்கொண்டு எனது நேர்காணலை வெளியிட்டார்கள்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படியொரு கேவலமான குற்றச்சாட்டைச் சுமத்துகிறீர்கள்? என் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு இந்த அவதூறுகளையா துணைக்கழைக்கிறீர்கள். நீங்கள் என்னை மட்டுமல்ல, அந்த நான்கு இளந் தோழர்களையும் சேர்த்தே அவதூறு செய்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். "தனிநபர் தாக்குதலைத் தவிர்த்து புதிய விமர்சனக் கலாச்சாரம் ஒன்றைத் தொடக்கி வைத்துள்ளீர்கள்" என்று உங்களை வாயார வாழ்த்தினார் பாருங்கள் நாவலன். அவரின் வாயில் சக்கரையைப் போடுவதா! இல்லைச் சயனைட்டைப் போடுவதா!!

இன்னுமொன்று, இந்த வெகுசன இதழ்களில் என்னைக்காட்டிலும் கவிஞர்கள் சேரனும், வ.ஐ.ச ஜெயபாலனும் அதிகமான பேட்டிகளை நிச்சயமாகக் கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்களை நோக்கி ஒருபோதும் இந்தப் பாரின் கரன்ஸி, தண்ணிக் குற்றச்சாட்டுகள் கிளம்புவதில்லை. அவர்கள் ஓடி ஓடிப் பேட்டி கொடுக்கிறார்கள் என்றும் ஒருவரும் பழிப்பதில்லை. ஆனால் என்னை நோக்கி மட்டும் பரவலாக ஏன் இப்படியான குற்றச்சாட்டுகள்? ஒரு வேளை பேட்டி கொடுப்பதற்குப் பல்கலைக்கழகப் பட்டம், ஆங்கிலப் புலமை, நாகரீகமான நடையுடை பாவனை போன்றவை இன்றியமையதாதது என்று தமிழ் கூறும் நல்லுலகம் கருதுகிறதோ தெரியவில்லை. தோழர்களே! வரலாற்றில் அறிவுஜீவிகளுக்கு மட்டுமல்ல தற்குறிகளிற்கும் ஒரு பாத்திரமிருக்கத்தான் செய்கிறது.

பிறர் ஏற்பாடு செய்கின்ற கூட்டங்களில் நான் குடித்துவிட்டுத் தகராறு செய்கிறேன் என்பது யமுனாவின் இன்னொரு குற்றச்சாட்டு. நான் இதுவரை புகலிடத்தில் ஆகக் குறைந்தது இருநூறு கூட்டங்களில் கலந்துகொண்டிருப்பேன். சொல்லுங்கள் யமுனா! நான் எந்தக் கூட்டத்தில் குடித்துவிட்டுத் தகராறு செய்தேன்? எந்தக் கூட்டத்தின் அமைப்பாளர் உங்களிடம் இவ்வாறு முறைப்பாடு செய்தார்? நான் குடித்துவிட்டுத் தகராறு செய்த செய்தி எந்தச் சிறுபத்திரிகையில் வெளியானது. கூட்டங்களில் கேள்வி கேட்டிருப்பேன், கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டு மேலே பேசுங்கள் என்று சொல்லியிருப்பேன். நான் சற்று 'சபை நாகரிகம்' மீறியது பாரிஸில் நடந்த தோழர். கே. ஏ. குணசேகரனுடைய கூட்டத்தில் மட்டும்தான். அவர் புலிகளின் இந்துக்கோயிலில் போய் உரைநிகழ்த்தியது என்ன நியாயம் என்று கேட்டு அவர் சரியான சமாதானம் சொல்லும்வரை அவரைப் பேசவிடாமல் இடையூறு செய்தேன். கே.ஏ.ஜி.க்கும் எனக்குமுள்ள நெருங்கிய நட்பினால் அவரை உரிமையுடன் கோபித்துக்கொண்டேன். யமுனா சொன்னதுபோல நான் தகராறு செய்து எந்தக் கூட்டத்தையும் இதுவரை குழப்பியதில்லை. யமுனா நீங்கள் சொல்வது பச்சைப் பொய். ஆதாரம் தர முடியுமா? ஆதாரமில்லாமல் அயோக்கியத்தனமாய் எழுதுவது நீங்கள். ஆனால் அயோக்கியன் என்ற பட்டம் மட்டும் எனக்கு. இது நல்ல யாவாரந்தான்.

'கொரில்லா' மற்றும் 'ம்' நாவல்கள் குறித்து யமுனா வைத்த விமர்சனங்களுக்கு நன்றி. நான் இதுவரை என்னுடைய சிறுகதைகள் குறித்தோ என் நாவல்கள் குறித்ததோ வைக்கப்பட்ட எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொன்னது கிடையாது. விமர்சனக் கூட்டங்களில் ஏற்புரை நிகழ்த்தியதும் கிடையாது. ஜெயகாந்தனை அடியொற்றிச் சொன்னால் என்னுடைய நாவல் சொல்லாத எதையும் நாவலுக்கு வெளியே என்னாற் சொல்லிவிட முடியாது.

ஆனால் விமர்சனம் என்ற எடுப்பில் யமுனா உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கசிய விடும்போது அது குறித்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது.

'கொரில்லா'வை விமர்சிக்கும்போது 'தேசம்' இணையத்தில் "கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட நிலையில் மரணமுற்ற சீனர்களைக் கடத்தியவர்கள் நான்காம் அகிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரு தகவல் ‘ஷோ’வின் நாவலில் வருகிறது. ஆனால், அந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் தொழில்முறையிலான ஆள் கடத்தல்காரர்கள் என நீருபிக்கப்பட்டிருக்கிறது. ‘ஷோ’ இங்கு செய்திருப்பது பின்நவீனத்துவப் புனைவு அல்ல, அதிர்ச்சி மதிப்புக்காக மார்க்சியர்களைக் கொச்சைப் படுத்தும் ஒரு விவரணை" என்றெழுதுகிறார் யமுனா. நான்காம் அகிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆள் கடத்தல் செய்தார்கள் என்று நான் எழுதவேயில்லை. "ஒரு ட்ரொஸ்கியக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒருவன், சில காலங்களிற்குப் பின்பு சீனர்களை லண்டனுக்குக் கடத்தியதில் சம்மந்தப்பட்டான் என்ற செய்தி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது" என்றுதான் எழுதியிருப்பேன்.

இடதுசாரிக் கட்சிகளிலிருந்து வெளியேறியவர்களை விடுங்கள், இடதுசாரிக் கட்சிக்குள்ளிருந்தே இப்படியான வேலைகளைச் செய்பவர்கள் குறித்து நாம் அறிந்ததில்லையா? அண்மையில் இந்தியாவையே உலுக்கிய நந்திகிராமச் சம்பவம் இவ்வகைப்பட்டது தானே. இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பின்பு பேர்போன சர்வாதிகாரிகளாய் உருவாகிய சம்பவங்களே வரலாற்றில் நிகழ்ந்திருக்கும்போது கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒருவன் இப்படியான தொழில்முறைக் கடத்தல்காரனாவதற்கு வாய்ப்பில்லையா? நான் கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒருவனைப் பற்றி எழுதும் போது, நான் நான்காம் அகிலத்தின்மீது பழிசுமத்தினேன் என்று அடாத்து வாசிப்புச் செய்யும் யமுனாவின் இலக்கிய நுண்ணுணர்வை நான் எந்த வார்த்தைகளால் அழைக்க? தலைவரே! நீங்கள் உங்களைச் சர்வதேச வாசகரென்று குறிப்பிட்டுள்ளீர்கள். சர்வதேச வாசகராயிருப்பதற்கு முன்னால் தமிழைச் சரிவர வாசிக்கும் வாசகராயிருக்க முயற்சி செய்யுங்கள்.

'ம்' நாவல் குறித்து "ஈழத்தின் வன்முறையினால் மனப்பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற குழந்தையை கர்ப்பமாக்கியதனை, அப் பெண் குழந்தையின் கண்களில் காதல் தெரிவதை எழுதுகின்ற ஷோவின் "ம்" நாவலது சித்திரிப்பும் குழந்தைகள் மீதான காதல் எனும் அளவில் சமூக விரோதமானதுதான். அதைச் சித்தரிக்கும் ஷோபாசக்தியும் சமூகவிரோதிதான்" எனத் தீர்ப்பிடுகிறார் யமுனா.

யமுனாவோடு இலக்கியம் பேசிப் புண்ணியமில்லை. யமுனாவுக்குப் புரிந்த மொழியிலேயே இதை விளக்க முயற்சிக்கிறேன். பிரதாப் போத்தனும் ஷோபாவும் நடித்த 'மூடுபனி' என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். அத் திரைப்படத்தின் நாயகன், பாலியல் தொழிலாளர்களைத் தொடர்ச்சியாகக் கொலை செய்வான். அப்படிக் கொலை செய்வதை அவன் நியாயம் என்றும் நம்புவான். அவன் கொலைகாரனாவதற்குரிய புறச் சூழல்களையும் அவனின் ஆழ்மனச் சிக்கல்களையும் இயக்குநர் திரைப்படத்தின் அடிநாதமாகச் சித்திரித்தும் காட்டியிருப்பார். அதற்காகப் படத்தை உருவாக்கிய பாலு மகேந்திரா பாலியல் தொழிலாளர்களைக் கொலை செய்வதை நியாயப்படுத்துகிறார் என்றோ பாலு மகேந்திரா ஒரு சமூகவிரோதியென்றோ எந்த முட்டாளாவது சொல்வானா.

நல்லவன் x கெட்டவன், நன்மை x தீமை, தியாகம் x துரோகம் போன்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைத்துத் தட்டையாக இலக்கியப் பிரதிகளை உருவாக்கும் இலக்கியமுறைமை விக்டர் ஹியுகோ, பால்சாக் காலத்தைச் சேர்ந்தவை. இன்றைய இலக்கியம் பல்வேறு அடுக்குகளையும் சிடுக்குகளையும் கலைத்துப்போட்டு இந்த இருமை எதிர்வுகளைக் கடந்து வாசகர்களோடு பேச முயல்வது. எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் திரைப்பட அரங்கினுள் நம்பியாரைத் தும்பு பறக்கத் திட்டுவதுண்டு. அந்த இரசிக மனோநிலையில் யமுனா நவீன இலக்கியப் பிரதிகளை அணுகினால் இப்படியான பாரதூரமான விமர்சன விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. குமிஞ்சான் என்பது யமுனாவின் ஊர் வழக்காம். "தனக்கெடாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்பது எங்கள் ஊர் வழக்கு.

'தேசம்' இணையத்தளத்தின் பின்னூட்டப் பகுதியில் "நான் மட்டுமா ஈழமுரசில் எழுதினேன். ஷோபாவும்தானே எழுதியிருக்கிறார்" என்று யமுனா இன்னொரு அழிவழக்கும் ஆடியிருப்பார்.

ஈழமுரசில் வெளியாகிய யமுனாவின் கட்டுரைக்கு 1995ம் வருடம், ஈழமுரசில் முதலும் இறுதியுமாக எனது எதிர்வினையை எழுதியிருந்தேன். இந்தவொரு எதிர்வினையை எழுதியதினாலேயே ஈழமுரசோடு எனக்கும் யமுனாவுக்குமுள்ள தொடர்புகள் ஒருபடித்தானவையா? 'சத்தியக் கடதாசி'யில் எப்போதோ ஒருமுறை தோழர். அழகலிங்கத்தினுடைய கட்டுரையொன்றிற்குப் பின்னூட்டம் எழுதிய ஆனந்தலிங்கத்துக்கும் சத்தியக்கடதாசியில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த அழகலிங்கத்துக்கும் 'சத்தியக் கடதாசி'யோடுள்ள தொடர்பும் பங்களிப்பும் ஒருபடித்தானவையா?

கேள்வியெல்லாம் பாஸிசப் புலிகளின் பத்திரிகையான ஈழமுரசிலும் அவர்களின் வானொலியான IBC யிலும், தன்னை வார்த்தைக்கு வார்த்தை மார்க்ஸிஸ்ட் என அழைத்துக்கொள்ளும் யமுனா, புலிகள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் சில்லறையும் பெற்றுக்கொண்டு வருடக்கணக்காக எப்படிப் பங்களிப்புச் செய்ய முடிந்தது என்பதுதான். அவர் வரித்துக்கொண்ட மார்க்ஸியம் குறிப்பிட்ட உடன்பாடுகளுடனும் நிபந்தனைகளுடனும் பாஸிஸ்டுகளின் ஊடகங்களில் பங்களிப்புச் செய்வதையும் சில்லறை பொறுக்குவதையும் அனுமதிக்குமெனில் அதென்ன மண்ணாங்கட்டி மார்க்ஸியம்? ஈழமுரசிலும் IBCயிலும் தான் பங்களித்ததை நியாயப்படுத்துகிறார் பாருங்கள் யமுனா, இதைவிட எத்துவாளித்தனம் ஒன்றுண்டா? இதைவிட அரசியல் பொறுக்கித்தனம் ஒன்றுண்டா? இதற்கு யமுனா மட்டுமல்ல, யமுனாவின் 'தேசம்' கட்டுரையை உச்சிமுகரும் நமது மாற்றுக் கருத்துத் தோழர்களும் பதிலளிக்கலாம். பதில்கள் வரவேற்கப்படுகின்றன.

இறுதியாக ஒன்று,

"ஷோபா சக்தி, போதும், உமது கபடத்தனங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளும்" என்கிறார் யமுனா. வாத்தியரே! உங்களை விடப் பெரிய பெரிய கைகளெல்லாம் என்னை நிறுத்தச் சொல்லி மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள். என்னவொரு வித்தியாசம் நீங்கள் 'கபடத்தனம்' என்கிறீர்கள், அவர்கள் 'துரோகத்தனம்' என்பார்கள். I Oppose: Therefore I Exist என்பது உங்கள் ஞாபகத்திலிருக்கட்டும்!

3

தேசம் இணையத்தளத்தில் யமுனாவின் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து பின்னூட்ட மன்னர்கள் 175க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை எழுதி இணைய உலகில் ஒரு ரெக்கோர்ட் ப்ரேக்கையே ஏற்படுத்திவிட்டார்கள். முகத்தை மறைத்துக்கொண்டு என்மீது மட்டுமல்லாமல் யமுனா மீதும் மற்றவர்கள் மீதும் ஆதாரங்களற்ற பின்னூட்டக் கற்களை எறிபவர்களுக்கு ஒரு வார்த்தை:

ஊரில் சினிமாத் தியேட்டர் மற்றும் பஸ்நிலைய கழிப்பறைச் சுவர்களில் 'கலாவுக்கும் கோபுவுக்கும் கள்ளக் காதல்', 'ஒண்டுக்கிருந்துவிட்டு ஒருமுறை சுண்டாவிடில் நிண்டொழுகுமாம் சலம்', ' அமிர் எங்கள் உயிர்; நவம் எங்கள் மயிர்' என்றெல்லாம் சொற்களை எழுதுவதில் இன்பமடையும் கூட்டமொன்று உண்டு. இது ஓர் வகையான மனப் பிறழ்வும் கூட. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பொதுக் கழிவறைகளில் இவ்வாறெல்லாம் எழுதி இன்பமுற வாய்ப்பில்லாததால் நீங்கள் இணையத்தளங்களில் பின்னூட்டம் எழுதி மகிழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களையிட்டுக் கோபப்படுவதைக் காட்டிலும் உங்கள் மீது இரக்கம் கொள்வதே சரியாயிருக்கும்.

அடையாளங்களுடன் வந்து பின்னூட்டமிட்ட தோழர்களுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகள்: என்னோடு முரண்படும் இலக்கியவாதிகளை நான் ஒழித்துக்கட்டுவதில் முனைப்புடன் செயற்படுவேன் என்ற தொனியில் சிலர் எழுதியிருக்கிறீர்கள். கருத்து மோதல்களை 'ஒழித்துக்கட்டல்' என்று புரிந்துகொள்ளும் உங்களை எப்படிச் சமாதானப்படுத்துவது என்றே எனக்குப் புரியவில்லை. நட்பு முரண்பாட்டிற்கும் பகை முரண்பாட்டிற்கும் உள்ள இடைவெளியை நான் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதாகவே நம்புகிறேன். என் புகலிட வாழ்க்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அரசியலிலிருந்து 'அம்மா', 'எக்ஸில்', 'NON குழு', ஊடாக இன்றைய தலித் மாநாடுகள் வரைக்கும் நான் கூட்டுச் செயற்பாடுகளில் நம்பிக்கைகொண்டுதான் இயங்கிவருகிறேன். எனவே நான் அமைப்புகளை உடைப்பவன், பத்திரிகைகளை உடைப்பவன் என்றெல்லாம் நீங்கள் குற்றம் சுமத்துவது சரியாகாது. நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவனும் கிடையாது.

'எக்ஸில்' இதழில் நானும் ஞானமும் சேர்ந்து லஷ்மியைக் குறித்து நச்சுத்தனமாகத் தலையங்கம் எழுதிவிட்டோம் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு. 'எக்ஸில்' இதழில் தலையங்கம் எழுதுமளவிற்கு எனக்கு என்றைக்கும் அதிகாரமிருந்ததில்லை. அந்தத் தலையங்கத்தை விஜி, கற்சுறா, ஜெபா, எம்.ஆர். ஸ்டாலின் அடங்கலான ஆசிரியர் குழுவே எழுதியிருந்துது. அந்தத் தலையங்கத்தில் அவர்கள் "லஷ்மி பேசும் பெண்ணியம் மேட்டுக்குடிசார் பெண்ணியம்" என்று எழுதியிருப்பார்கள். இது லஷ்மி குறித்த அவர்களது அரசியல் விமர்சனம். இந்த விமர்சனத்தின் பொருத்தப்பாடுகள் பொருத்தப்பாடின்மைகள் வேறு விடயம். ஆனால் இதை நச்சுத்தனமான விமர்சனம், தரக்குறைவான விமர்சனம் என்று சொல்வது என்ன நியாயம். ஆனானப்பட்ட லெனினே ஒரு முறை ட்ரொஸ்கியைக் 'கந்தலாண்டி' என எள்ளலாய் விளித்து எழுதியிருப்பார்.

ஷோபாசக்தி பாரிசுக்கு வந்ததிலிருந்ததான் பாரிஸ் இலக்கிய உலகமே கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டது என்பது இன்னொரு தோழரின் நிலைப்பாடு. தோழரே நாங்கள் (இந்த நாங்கள் என்பது என்னையும், சுகனையும், சேனனையும், வின்சன்ட் போலையும் குறிக்கும்) பாரிஸின் இலக்கிய பீடங்களையும் பிதாமகர்களையும் எதிர்த்து விமர்சனரீதியாகப் போராடினோம் என்பது உண்மைதான். ஆனால் எங்களது விமர்சனங்கள் அவ்வளவும் வெளிப்படையானவை. அளவுநாடா நோட்டிஸோ, கல்வெட்டோ, சுவரொட்டிகளோ, துண்டுப்பிரசுரங்களோ, கட்டுரைகளோ, நாட்டாமைத் தொகுப்போ எல்லாவற்றையும் முகத்தை மறைக்காமல் நேருக்கு நேர் நின்றுதான் செய்தோம். எங்களின் எல்லா விமர்சனங்களும் எல்லா நடவடிக்கைளும் சரியானவைதான் என்று நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை. நான்கு வருடங்களிற்கு முன்பு 'தீராநதி' நேர்காணலில் கூட "சில சின்ன விடயங்களிற்குப் பெரிதாகச் சண்டை போட்டுவிட்டோம். இப்போது நினைத்தால் வெட்கமாயிருக்கிறது" என்று பகிரங்கமாகவே சொல்லியிருக்கிறேன்.

இப்படி வெளிப்படையாகத் தங்களது விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கருத்துகளையும் பொது வெளிகளில் வைப்பவர்கள் சதிகாரர்களா அல்லது மரியசீலன், கருணைதாசன் என்ற பெயர்களில் ஒளிந்திருந்து சக மாற்றுக்கருத்தாளர்கள் மீது 'தேனி'யில் புலிகளின் உளவாளியென்றும், 'தீப்பொறி'யில் கருணாவின் முகவர்களென்றும், தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் உறுப்பினர்கள் இலங்கை அரசின் உளவாளிகளென்றும் அவதூறுக் கோட்டைகளைக் கட்டியெழுப்புவர்கள் சதிகாரர்களா? தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாற்றுக் கருத்துத் தோழர்களே! நூறு பூக்கள் மலரட்டும் என்ற வாக்கில் நீங்கள் தீராத நம்பிக்கையுடையவர்கள் என நான் அறிவேன். ஆனால் நூறு பூக்களும் ஒரே விருட்சத்தில்தான் மலர வேண்டுமென்று தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள்.

11.03.2008

நன்றி ஷோபாசக்தியின் பக்கங்களுக்கு