தமிழ் அரங்கம்

Saturday, May 30, 2009

புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும்

மேடைக்கு ஏற்ப ஆட்டம். ஆட்களுக்கு ஏற்ப அரசியல். போலிக் கம்யூனிசத்தின் புதுவிசைக்கு ஏற்ப பேட்டி. அரசு – புலிக்கு எதிராக, அரசியல் நீக்கம் செய்த விமர்சனங்கள். ஏகாதிபத்திய நிலைக்கு ஏற்ப தாளம். இதுவே சுசீந்திரன் முதல் பலரின் இன்றைய அரசியல் கூட. மக்கள் அரசியலை முன்னிறுத்தி, அதற்காக எந்த முன்முயற்சியும் பொதுவில் கிடையாது. இதற்கு எதிராகத்தான் பயணிக்கின்றனர்.

உதாரணமாக சுசீந்திரன் ஆசிரியராக உள்ள உயிர்நிழல் சஞ்சிகையின் மற்றொரு ஆசிரியரான லக்சுமி 'தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணல்" என்ற தலைப்பிலான பேட்டியை மொழி பெயர்ப்பு செய்கின்றார். உயிர்நிழல் மற்றொரு ஆசியரான பிரதீபன் முன்னின்று நடத்தும், புகலி இணையத்தில் இது வெளிவருகின்றது.

வரதராஜப்பெருமாள் கடைந்தெடுத்த இந்தியக் கைக்கூலி. இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பின் போது, கூலிப்படை தலைவனாக இ.........
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன?


ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை.
ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான து...................முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, May 29, 2009

ஈழவியாபாரம்–விலைபோகும் சதைப்பிண்டங்கள்

ஆர்குட்டில் பலரும் விஜய் டிவியில் நடந்த அடுத்த பிரபு தேவா யார் என்ற போட்டியின் வீடியோ காட்சியை தங்களுக்கு பிடித்த வீடியோவாக இணைத்திருந்தார்கள். அதிகம் டிவி பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் தன் திறமையை வெளிப்படுத்தும் சாக்கில் தன்னை விளம்பரப்பொருளாக அறிவித்துக்கொள்ளும் எந்த நிகழ்ச்சியையும் பார்த்ததில்லை.
என்னடா எல்லோரும் (அதுவும் ஆர்குட்டில் தமிழீழ ஆதரவாளர்கள் ) பார்க்கிறார்களே என அந்த லின்க்கை கிளிக் செய்தேன்.

படுகொலையை விளக்கும் புதிய படம் (பழைய கட்டுரையில் இணைப்பு)


புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.

இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம். அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய .........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

முடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.

1. புலிகள் இதை ம..........

Thursday, May 28, 2009

நம்பிக்கையூட்ட முடியாத சீரழிவுவாதி, புதுவிசை இதழில் புலம்பியது என்ன?

எங்கும் பொம்மலாட்டம் ஆடிகாட்டும் சீராழிவுவாதியான சுசீந்திரன் 'இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை" என்கின்றான். சரி அங்கு நடந்தது என்ன? அரசு சொல்வது போல் புலி அழிப்பா!?

ஏகாதிபத்திய பணத்தில் எப்போதும் லாடம் கட்டி ஆடும் பொம்மலாட்டங்கள், இனவழிப்பை இல்லையென்று சொல்வது தான் அதன் அரசியல் அடிப்படையாகும். 60 வருட காலமாக சிங்களப் பேரினவாதம் நடத்தும் இனவொடுக்குமுறையோ இனவழிப்புத் தான். அதன் ஒரு அங்கமாக நடந்ததுதான், இந்த யுத்தம்.

இதை மறுத்து புதுவிசை என்ற சஞ்சிகைக்கு சுசீந்திரன் என்ற கூத்தாடி வழங்கிய பேட்டியின் சாரம் இதுதான். இதைத் தொடர்ந்து பேரினவாதத்தை ஆதரிக்கின்ற ஈழத்து இணையங்கள் வரை, இதை மறுபிரசுரம் செய்தது. அந்தளவுக்கு இந்த கூத்........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, May 27, 2009

பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.
புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும். இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.

இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம். அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப் படுத்துகின்றது.
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நேபாளம், ஒரு நம்பிக்கையூட்டும் புரட்சிகரமான முன்னெடுப்பு. : சமிர் அமின்

உண்மையான புரட்சிகர முன்னேற்றம். விவசாயிகளின் பொதுவான புரட்சியை ஆதரித்து வரும் ஒரு விடுதலை இராணுவம் தலைநகரத்தின் வாயிலை எட்டுவதாகவும், நகர்ப்புற மக்கள் தம்பங்கிற்கு கிளர்ந்தெழுந்து மன்னராட்சியை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, தமது மீட்பர்களாக இந்த புரட்சிகர இராணுவத்தை வரவேற்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினரின் இந்த வெற்றியானது நேபாளத்தில் தேசிய மற்றும் மக்கள் ஜனநாயக புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதுடன், நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி வரையறுத்திருப்பது போல, இந்த புரட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு பண்புகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நகர்ப்புறத்தின் இந்த பொது எழுச்சியானது, வறிய வர்க்கங்களை நடுத்தர வர்கங்களுடன் இணைத்ததானது, ஏனைய நேபாள அரசியற் கட்சிகளை, தம்மைத்தாமே “குடியரசுப் புரட்சியாளர்கள்” என்று பிரகடனப்படுத்திக் கொள்ள .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, May 25, 2009

துரோகத்தையே மூடிமறைக்கும் புதிய துரோகம்!

புலித்தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார், இல்லையில்லை அவர் உயிருடன் உள்ளார் என்று கூறி, புலித் தலைவர்களை சரணடைய வைத்துக்கொன்ற தமது சொந்தத் துரோகத்தை மூடிமறைகின்றனர்.

புலிகளின் வெளிநாட்டு தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாதன், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த உண்மையைச் சொன்னதற்காக, அவரை துரோகியாக்கி வைகோ மற்றும் நெடுமாறன் போன்ற பிழைப்புவாதிகளின் அறிக்கை வெளிவந்துள்ளது. புலிக்குள் இப்படி ஒரு பிளவு உருவாகியுள்ளது. பிரபாகரனின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்ற ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில், பிரபாகரன் விசுவாசிகள் திணறுகின்றனர்.

இங்கு பத்மநாதன் பிரபாகரனின் மரணத்தை சண்டையில் ஏற்பட்ட வீரமரணம் என்ற ஒரு பொய்யை இதற்கூடாக உமிழ்கின்றார். வீரமரணமான தலைவனுக்கு அஞ்சலி என்று இதற்கு ஊடாக, அவர் முன்னின்று காட்டிக்கொடுத்து கழுத்தறுத்த அந்த சரணடைவு என்ற அந்த உண்மையை புதைத்து விடுகின்றார். தமது காட்டிக்கொடுப்பை மூடிமறைக்க, மரணம் என்ற ஓரு உண்மையைப் பயன்படுத்துகின்றார்
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, May 24, 2009

புலி சாகும் அலுவலக நாளொன்றில் News alert கள் வருகின்றன

ஒவ்வொரு செல்பேசிச் செய்திச்சிணுங்களைஅடுத்தும் கொட்டுகிறது கைதட்டல் மழை
சிரிப்பின் இடி
எம்மீது விழும் ஓரப்பார்வையின் குரூரமின்னல்


மின்னஞ்சல்களாகவும் Instant Messenger களின் ஒற்றை வரிகளூடாகவும் நண்பர்கள் கண்ணீர் தெறிக்கிறது.

செல்பேசிகளின், இணையத்தொடர்புகளின் முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத்தேடி அலைகிறது
வெடிக்காமல் பொத்திவச்ச விம்மும் மனசு.

ஒட்டுக்கேட்கப்படக்கூடிய தொலைப்பேச்சுக்களின்
திக்கித்திணறிய குறியீட்டு வார்த்தைகளாயும் இடைவெளிகளாயும்
வெடித்து உடைந்து நொறுங்கிச்சரிகின்றது...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும்

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

புலித் தலைமை சரணடைந்ததும், அவர்கள் கொல்லப்பட்டதும் உண்மை. புலித்தலைமை தன்னை பாதுகாத்துக்கொள்ள, இறுதியாக அது தேர்ந்தெடுத்தது சரணடைவை. அதற்கு அமையவே, இதில் மூன்றாம் தரப்பும் சம்பந்தப்பட்டது உண்மை. இந்தப் பின்னணியில் தான், இந்தப் படுகொலை அரங்கேறியது.

இவை அனைத்தும் நடந்திருந்தும், ஏன், எதற்காக இதை மக்களுக்கு தெரியாத வண்ணம் அனைவரும் திட்டமிட்டே மூடிமறைக்கின்றனர்? அங்கு...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மடிந்த மக்களுக்கும், மக்களுக்காக மடிந்து போன அனைவருக்கும் அஞ்சலி

எம் மக்களின் பொது எதிரிக்கு எதிராக மரணித்துப் போன பல்வேறு வர்க்கங்களுக்கும், சமூகங்களுக்குமான இந்த அஞ்சலி அரசியல் ரீதியானவை. எம் மக்களின் பொது எதிரி, தன்னை தனிமைப்படுத்தி பலம்பெற்று நிற்கின்ற இன்றையநிலை. மக்களின் இரண்டாம் மூன்றாம் எதிரிகள் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து மரணிக்கும் இன்றைய நிலை. இந்த நிலையில் பிரதான எதிரிக்கு எதிராக மரணித்த அனைவருக்கும், நாம் அஞ்சலியை செலுத்தக் கோருகின்றோம்.

பொது எதிரிக்கு எதிராக, எம் வர்க்கத்தின் சார்பாக இதைக் கோருகின்றோம். பொது எதிரிக்கு எதிராக, இவர்கள் பெயரால் போராடக் கோருகின்றோம். இந்த யுத்தத்தில் இறந்த அனைத்து மக்களுக்கும் இதைக் காணிக்கையாக்கின்றோம்.

எதிரிக்கு எதிரான நட்பு சக்திகளை கடந்த காலத்தில் எதிரியாக்கி அழித்த தவறுகளை இனம் காண்பதும், அதேநேரம் எதிரிக்கு எதிரா.........
..முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்