தமிழ் அரங்கம்

Saturday, August 22, 2009

காலச்சுவடு கட்டுரை தொடபர்பான எதிர்வினை மீது

காலச்சுவடு கட்டுரை எழுதியவர் தொடர்பாக, பெட்டையின் பின்னோட்டம் மற்றும் ஒரு பொதுவான உள்சுற்றில் ஒருவிவாதம் தொடர்கின்றமையால் மேலும் சில விளக்கங்கள் அவசியமாகின்றது.
கட்டுரை பொதுவான மூன்று பகுதியைக் கொண்டது.

1.காலச்சுவட்டின் வியாபாரம் தொடர்பானது.

2.சிவத்தம்பி, சேரனின் பிழைப்புவாதம் தொடர்பானது.

3.கட்டுரை எழுதியவர் இலங்கையர் அல்ல என்பது தொடர்பானது.

1. காலச்சுவடு இலக்கிய வியாபாரிகள். எந்த அரசியல் நேர்மையுமற்றவர்கள். எதையும் எப்படியும் தங்கள் இலக்கிய வியாபாரத்துக்காக செய்யக்
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, August 21, 2009

அணுசக்தி (123) ஒப்பந்தம்: பெயரளவிலான சுயசார்புக்கும் குழிபறித்தது அமெரிக்கா!

இத்தாலி நாட்டில் சமீபத்தில் நடந்த பெரும் எட்டு நாடுகள் (ஜி 8) மாநாட்டில், "அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்கப் போவதில்லை'' என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

ஜி 8 மாநாடு இந்த முடிவை எடுப்பதற்கு அமெரிக்காதான் காரணம் என்பதோடு, இம்முடிவு இந்தியாவைக் குறிவைத்துத்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இப்பொழுது அம்பலமாகிவிட்டது.

இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தைச் செறிவூட்டவும், மறுசுழற்சி செய்யவும் தனக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என்பதோடு, அதற்கான தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்க வேண்டும் என வாதாடியது. இதற்குச் சில நிபந்தனைகளோடு சம்மதித்த அமெரிக்கா, அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் குழுமத்தோடு (என்.எஸ்.ஜி.) இந்தியா பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, செறிவூட்டும் மறுசுழற்சி செய்யும் உரிமைகளை இந்தியாவிற்கு அக்குழுமம் வழங்கக் கூடாது என நிர்பந்தம் கொடுத்தது. எனினும், அக்குழுமத்தின் தற்போதைய விதிகளுக்கு....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, August 20, 2009

அரச பாசிசத்தைக் கண்டிக்காமல் இருப்பதும் பாசிசத்தின் ஒரு வகைதானோ?


இந்த மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவற்துறையினரின் இந்த அட்டுழியத்திற்கெதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வஞ்சகத்தனமான பாதாள உலகத்தினருக்கெதிரான போரில் இறுதியாகப் பலியாகியிருந்தனர் இவ்விரு இளைஞர்களும்.

22 வயதுடைய டினேஸ் தரங்க பெர்ணாண்டோ, 24 வயதுடைய தனுஸ்க உதயங்கா அபொன்சு ஆகிய இருவரும் அங்குலான காவற்துறையினரால் கடந்த புதன்கிழமை இரவு பத்து மணியளவில் கைது செய்யப்பட்டனர். பெண்மணி ஒருவர் தன்னை இவ்விரு இளைஞர்களும் கிண்டலடித்ததாக முறைப்பாடு மேற்கொண்டதால் தான் தாhம் அவரைக் கைது செய்ததாகப் காவற்துறையினரர் தெரிவித்தனர்.

இவ்விரு இளைஞர்களும் அழைத்து வரப்பட்ட போது நான் எனது செல்லில் இருந்தேன். ஐந்துக்கு மேற்பட்ட காவற்துறையினர் அவர்களைத் தாக்கிக்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இலக்கிய வியாபாரம் செய்யும் காலச்சுவடும், விபச்சார அரசியல் செய்யும் சேரன் அன்ட் கோக்களும்

வன்னி மக்கள் பெயரில் வியாபாரமும்;, அரசியல் விபச்சாரமும், இந்தியாவின் பிழைப்புவாத இலக்கிய உலகு ஊடாகவும் கூட நுழைகின்றது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. சந்தர்ப்பவாத ஈழத்து புத்திஜீவிகள் சிலர் தங்கள் பிழைப்புவாத அரசியல் இருப்பு சார்ந்து புனைவு ஒன்றுடன், காலச்சுவட்டின் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சேரன் அன் கோவும், சிவத்தம்பியும் புலிக்கு பின் நின்று துதிபாடி அரோகரா போட்டத்தை, இன்று மறைக்க வேண்டிய அரசியல் அவலம். காலச்சுவடு கண்ணனுக்கு கல்லாப் பெட்டியை மேலும் நிரப்பும் இலக்கிய கவலை.

ஜீனியர்விகடன் பத்திரிகை விற்பனை அதிகரிக்க பிரபாகரன் இருப்பதாக காட்ட, படத்தில் ஒரு மோசடி செய்தனர். இதுபோல் காலச்சுவடு ஈழத்து மக்களின் பெயரில் பணம் சம்பாதிக்க, அகதிகளின் பெயரில் தாமே ஒரு புனைவை எழுதி வெளியிட்டுள்ளனர். இது இலங்கையரால் எழுதப்படவில்லை. அதற்கு சில எடுத்துக்காட்டை நாம் எடுத்துக் காட்டிவிட்டு மற்றைய பிழைப்புவாத மோசடிக்குள் செல்வோம்.

இந்தப் புனைவு வன்னியில் இல்லாத ஒன்றையும், வழக்கில் இல்லாத சொற்களும் கொண்டது. இந்தியாவில் உள்ளதை, வன்னியில் இருப்பதாக எமக்கு காட்ட முனைகின்றனர். வன்னியில் ஆறில்லை. காலனியில்லை. பட்டினங்கள் இல்........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இலக்கிய வியாபாரம் செய்யும் காலச்சுவடும்;, விபச்சார அரசியல் செய்யும் சேரன் அன்ட் கோக்களும்

வன்னி மக்கள் பெயரில் வியாபாரமும்;, அரசியல் விபச்சாரமும், இந்தியாவின் பிழைப்புவாத இலக்கிய உலகு ஊடாகவும் கூட நுழைகின்றது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. சந்தர்ப்பவாத ஈழத்து புத்திஜீவிகள் சிலர் தங்கள் பிழைப்புவாத அரசியல் இருப்பு சார்ந்து புனைவு ஒன்றுடன், காலச்சுவட்டின் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சேரன் அன் கோவும், சிவத்தம்பியும் புலிக்கு பின் நின்று துதிபாடி அரோகரா போட்டத்தை, இன்று மறைக்க வேண்டிய அரசியல் அவலம். காலச்சுவடு கண்ணனுக்கு கல்லாப் பெட்டியை மேலும் நிரப்பும் இலக்கிய கவலை.

ஜீனியர்விகடன் பத்திரிகை விற்பனை அதிகரிக்க பிரபாகரன் இருப்பதாக காட்ட, படத்தில் ஒரு மோசடி செய்தனர். இதுபோல் காலச்சுவடு ஈழத்து மக்களின் பெயரில் பணம் சம்பாதிக்க...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, August 19, 2009

மணியரசன் கும்பலின் தமிழ்த் தேசிய சிறப்பு மாநாடு, பித்தலாட்டத்தின் அவதாரம்!


தமிழனை இளிச்சவாயனாகக் கருதிக் கொண்டு, வெற்றுச் சவடால் அடித்து, திருச்சியில் கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று ஒரு மாநாட்டையும் அது நடத்தியுள்ளது.

நேற்றுவரை தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பாடு போட்ட இக்கும்பல், ஈழத் தமிழின அழிப்புப் போருக்குப் பிறகு, இப்போது தமிழ்த் தேசியம்தான் ஒரே தீர்வு என்று கூப்பாடு போட்டுக் கொண்டு தமிழர்களைப் புல்லரிக்க வைக்கிறது.

இந்தியா, தமிழனை நம்பத் தயாராக இல்லையாம்! நட்புக்க ரம் நீட்டிய ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்ப முடியாது என டெல்லி ஏகாதிபத்திய ஆட்சியாளர் கள் கணக்கு போடுகிறார்களாம்; ஆரிய திராவிட வரலாற்றுப்.......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, August 18, 2009

தொ.நு. கல்லூரி மாணவன் நிப்புன தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 11 பொலிஸாருக்கும்....

வினவு தளத்தில் ரதி கீர்த்தனா - சில கூற்றுகளும் தெளிவான மறுப்புகளும்

வினவு தளத்தில் ரதி என்பவர் தொடராய் எழுதும் ”ஈழத்தின் நினைவுகள்” கட்டுரையின் அங்கம் ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! இக் கட்டுரையில் வெளியானவற்றுக்கும் அங்கு விவாதமாய் வரும் கருத்துக்களுக்கும் பதில் தரும் வகையில் நானும் சில நினைவுகளை பதியும் முயற்சியாய் அவர்களது கூற்றுக்களுக்கு பதில் தரும் வகையில் அமைந்த இச்சிறு கட்டுரையின் ஊடாக எனது கருத்துக்களையும் பதிவு செய்து கொள்ளுகின்றேன்.
கூற்று (Keerthana) 1.

போர் மாணவர்களைப் பாதித்த இன்னொரு விடயம், மின்சாரம் இல்லாமை. 90 களின் பின் யாழ் மாவட்டத்தில் மின்சாரம் முற்றாக இல்லாமல் போனது. மண்ணெண்ணெய், தேங்காயெண்ணை விளக்குகள்தாம், இரவுகளில் எம்மை ஒளியை நோக்கி நடக்க உதவின........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிக்கு "கரையார்" தலைமை தாங்கியதால், அது சாதியற்ற தேசியமாம்

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மறுப்பவர்கள், சமூகத்தின் சமூகக் கூறுகளை பிரித்து அதை மோதவிட்டே கையாள்வார்கள். இங்கு யமுனா புலி அரசியலை தேசிய விடுதலைக்குரிய வழிகாட்டும் தத்துவமாக காட்ட, "கரையார்" தலைமை பற்றி கூறி, வெள்ளாளர் தலைமையை வேர் அறுத்தது பற்றியும் கதை விடுகின்றார். வேறு எப்படித்தான் வரலாற்றை இவரால் திரிக்க முடியும்.

எப்போதும் சம்பந்தமில்லாது புலம்பி புளுத்தெழுதும் யமுனா, இங்கும் அதையே செய்கின்றார். புலியை நியாயப்படுத்த ஸ்ராலின் வரை சென்று, புலியை போற்ற ஸ்ராலின் மீது காறி உமிழும் இந்தப் பன்னாடை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தன் சொந்த அரசியல் காழ்ப்பை அள்ளித்தெளித்துள்ளது.

இதற்கு 'கரையார்' தலைமை பற்றி கூறி, புலிப் பாசிசத்தை வெள்ளையாக வெளுத்து அதை தமிழ்மக்களுக்கு கட்டவைக்க முனைகின்றார். அப்படி.....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 17, 2009

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்.


புவியியல் ரீதியாக இராணுவ, பொருளாதார முக்கியத்துவமுடையதாக இலங்கை இருப்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குப் போட்டியாக உருவெடுத்து வரும் சீனாவும் அங்கு தமது மேலாதிக்கத்தை நிறுவும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசும் தன் பங்கிற்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழப்பிரதேசத்தில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. போரின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு 'வடக்கின் வசந்தம்' எனக் கவர்ச்சியான பெயரைச் சூட்டி இருக்கும் இலங்கை இனவாத அரசு, தனக்கு உதவிகள் சீனாவிலிருந்து வந்தாலும் இந்தியாவிலிருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டு அந்நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் உள்ளது.

விவசாய நிபுணரு....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்


புவியியல் ரீதியாக இராணுவ, பொருளாதார முக்கியத்துவமுடையதாக இலங்கை இருப்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குப் போட்டியாக உருவெடுத்து வரும் சீனாவும் அங்கு தமது மேலாதிக்கத்தை நிறுவும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசும் தன் பங்கிற்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழப்பிரதேசத்தில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. போரின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு 'வடக்கின் வசந்தம்' எனக் கவர்ச்சியான பெயரைச் சூட்டி இருக்கும் இலங்கை இனவாத அரசு, தனக்கு உதவிகள் சீனாவிலிருந்து வந்தாலும் இந்தியாவிலிருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டு அந்நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் உள்ளது.

விவசாய நிபுணரும், "பசுமைப் புரட்சி' மூலம் இந்திய விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்கியவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஈழத்தமிழர் சிந்திய ரத்தம் உலரும் முன்னரே இலங்கைக்குப் பறந்து சென்று வன்னி, யாழ்ப்பாணம்,....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தமிழ்மக்களை கேனயனர்களாக காட்டும் புளாட் சித்தார்த்தனும், பேரினவாத மகிந்த கும்பலும்

புலி இல்லாது நடந்து முடிந்த தேர்தல் மூலம், தமிழ்மக்கள் ஒரு செய்தியை முகத்தில் அறைந்து கூறியுள்ளனர். எல்லாம் புலியினால் வந்த வினை, புலிகள் அழிந்தால் எல்லாம் சரி என்று கூறி வந்த, எல்லா புலியெதிர்ப்பு பன்னாடைகளுக்கும் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர்.

மக்களாகிய தாங்கள் என்ன நினைக்கின்றோம் என்பதை மட்டுமின்றி, ஏன் புலியின் பின் கடந்தகாலத்தில் நின்றோம் என்பதையும், மண்டையில் கொத்தி பதிலளித்துள்ளனர். மக்கள் கோரியது அரசியல் உரி;மையையே. இந்த உண்மையை மறுத்து வந்தவர்களை, பிரபாகரனின் மரணம் போல் அனாதையாகவே மக்கள் சாகடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில்...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 16, 2009

யமுனாவின் புலித் "தேசியமோ" சாதியை .....

இப்படி தனக்கேற்ற ஒரு "மார்க்சிய" கோட்பாட்டை யமுனா உருவாக்கி, அதைக்கொண்டு புலியைச் சாதி பார்க்காத ஒரு இயக்கமாக காட்டிவிட முனைகின்றார். சமூகத்தின் நலனை முதன்மைப்படுத்தி எழுதாது, பணத்துக்கு எழுதுபவர்கள் இவர்கள். சமூகத்தில் இருந்து அன்னியமான தனிமனிதனையோ குழுவையோ, சமூகத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை.

இப்படி சமூகத்துக்கு வெளியில் தனிமனிதனையும், குழுவையும் முதன்மைப்படுத்தி, தம் வசதிக்கு ஏற்ப அதை சமூகத்துக்கு பொருத்தி விடுகின்றனர். இதற்கு யமுனா புலிகள் ஊடாக அவர் தனக்கேற்ப எடுத்துக்கொண்ட கருதுகோள் 1. கரையார் அதிகாரம். 2. புலிகள் தங்கள் திருமணங்களில் சாதியம் பார்ப்பதில்லை.

இப்படி இதைக் கொண்டு 30 வருட புலிப்பாசிச சாதிய வரலாற்றையே திரித்துக் காட்டிவிட முனைகின்றார். இப்படி வேடிக்கையானதும் லூசுத்தனமானதுமான வாதங்கள்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்