தமிழ் அரங்கம்

Saturday, November 14, 2009

மீண்டும் வட்டுக்கோட்டை நோக்கி….


தமிழ்த் தேசியத்தின் மிதவாத வலதுசாரியத் தலைவர்களில ஒருவரான் காலம் சென்ற என்.Nஐ.வி. செல்வநாயகம் அவர்களே, வட்டுக்கோட்டை மாநாட்டின் பிரதான தீர்மானமான தமிழ் ஈழக் கோரிக்கையை அன்றே ஏற்றுக்கொள்ளவில்லை. இதை அவரின் மைந்தர்களே ஒப்புக்கொணடுள்ளனர். வட்டுகோடடை மாநாட்டில் அமிர்தலிங்கம் உட்பட உணரச்சிவசப்பட்ட இளைஞர்களின் நிர்ப்பந்தத்தின் நிமிர்த்தமே செல்வநாயகம் அவர்கள் தமிழ் ஈழத்தை மனப்பூர்வமின்றி ஏற்றுக்கொண்டார்!

வட்டுக்கோட்டை "தமிழ் ஈழம்" தமிழர் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒன்று. இது தமிழ்பேசும் மக்களின் முழு அபிலாசைகளையும் பிரதிபலிக்காத ஒன்று! இதை எவ்வித சமூக விஞ்ஞானப் பார்வையோ ஆய்வோ இன்றி இளைஞர் இயக்கங்கள் அன்று கையில் எடுத்தன! இதன் விளைவு பல இயக்கஙகள் துரோகிகள் (புலிகளால்) ஆகி, பின்பு ஐனநாய....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, November 13, 2009

நோர்வே புலித் தேர்தல்கள் பற்றிய, சிறு குறிப்பு..

நோர்வேயில் வெளியாகிய, புலிகளின் 3 பிரிவினரது பிரசுரத்தை (பிரகடனத்தை) - தமிழரங்கம் - வெயியிட்டிருந்தது. நாடுகடந்த தழிழீழ அறிவிப்பு, புலிகளின் அழிவின் பின்னர் சுமார், ஒருமாத காலத்தின் பின்னர் வெளிவந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், வன்னியுத்தத்தின் நெருக்கடி காலகட்டத்தில்: புலிகளால் வெளிநாட்டுப் புலிகளிடத்தில் ஏவப்பட்டது. இது யுத்தநேரத்தில் புலிகளின் இருப்புக்காக -சர்வதேச அழுத்தமாக - இதைத் தேர்தலாக்கி (மே 10-2009) நோர்வே ஊடாகப் பிரயோகித்துப் பயனடைய முன்னெடுக்கப்பட்ட முயற்சியாகும்!


புலிகளின் அழிவுக்குப் பின்..... (நோர்வே)
உள்ளுக்குள் நடக்கும், நடத்தப்படும் நாடகம்:


1- 'நாடுகடந்த தமிழீழ' கோரிக்கையானது, இலங்கை தவிர்ந்த - ஏனைய நாடுகளிலுள்ள அனைத்துப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்களையும்: தம்கீழ் கொண்டுவரும் கோரிக்கையாகும். இது தானே தன்னை தழிழீழத்தின் அதி உயர் பீடமாகப் பிரகடனப்படுத்துகிறது. (புலிகளின் அழிவை அடுத்து தலைமையாக தன்னை காட்டுகிறது)

2- 'வட்டுக்கோட்டை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்.

உளுத்துப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானம், மாபியாத் தனத்துக்கே இறுதியாக உதவுகின்றது

இந்தத் தீர்மானத்தின் பெயரில் தான், தமிழினத்தையே அழித்தனர். தமிழினத்தை பல பத்தாகப் பிளந்தனர். இதுவே எம் கடந்தகால, நிகழ்கால வரலாறாகிக் கிடக்கின்றது.


இன்று புலத்து மாபியாப் புலிகளின் ஒரு பகுதி, மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்கின்றனர். வேடிக்கை என்னவென்னால் கடந்த காலத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்தவர்களை துரோகிகள் என்று கூறி போட்டுத் தள்ளியவர்கள் தான், மீண்டும் வட்டுகோட்டைத் தீர்மானம் என்கின்றனர். சரி இந்த நாடகம் எல்லாம் இன்று எதற்கு?

தமிழ் மக்களை ஏமாற்றி சுருட்டிய பணத்தை தமதாக்கவும், புதிதாக பணத்தை கொள்ளையிடவும், தமிழ்மக்கள் மேல் தங்கள் அதிகாரத்தை தக்கவைக்கவும், உளுத்துப் போன வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள எடுத்து கடை விரிக்கின்றனர்.

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாரால் முன்வைக்கப்பட்டது. தமிழ் மக்களை ஓடுக்கிய, மேலாதிக்க சமூகப் பிரிவுகளால், சொந்த சுயநலத்;துடன் தமிழனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. யாழ்மேலாதிக்க வலதுசாரியக் கும்பலால் தான், இடதுசாரிய......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!

தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 16 அன்று கோவா மாநிலத்திலுள்ள முக்கியமான வர்த்தக நகரான மார்காவோவின் மையப் பகுதியில் இரு சக்கர வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்புக்குக் காரணமான சதிகாரர்கள் யார் என்பது இந்நேரம் தெரியாமல் போயிருந்தால், முசுலீம் தீவிரவாதிகளைக் குற்றஞ்சுமத்தி போலீசும்,தேசியப் பத்திரிகைகளும் "புலனாய்வு' நடத்தியிருப்பார்கள். கோவா சுற்றுலா மையம் என்பதால், இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பாகிஸ்தானின் சதி இது என மைய அரசும் சாமியாடியிருக்கும்.

எனினும், இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் ""விதி'' வேறு மாதிரி விளையாடிவிட்டது. அந்தக் குண்டு திடீரென வெடித்துவிட்டதால், அந்தக் குண்டைத் தமது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கடத்தி வந்த மால் குண்டா பாட்டீல், யோகேஷ் நாயக் என்ற இரு இளைஞர்களும் சம்பவம் நடந்த இடத்திலேயே படுகாயமடைந்து போலீசிடம் மாட்டிக் கொண்டனர். அந்த இரு இளைஞர்களும் சிகிச்சைப் பலனின்றி இறந்து போய்விட்டாலும், அவர்கள் இருவரும் ""சனாதன் சன்ஸ்தா'' என்ற இந்து மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியிருக்கிறது.

அந்த இளைஞர்கள் எதற்காகக் குண்டு வைக்க வந்தார்கள் என்பது குறித்துப் பல ஊகங்கள் கூறப்படுகின்றன. எனினும், இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதா
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 12, 2009

ஈழம்‍ : தமிழ‌கம் முழுவதும் ஆர்ப்பாட்டம். நண்பர்களே கலந்து கொள்ளுங்கள்..

சிங்கள அரசே!
ஈழத்தமிழ் மக்களை அடைத்து வைத்திருக்கும் வதை முகாம்களை நீக்கு!
மக்களை தத்தம் வசிப்பிடங்களில் குடியமர்த்து!
அவர்களின் விவசாயம், தொழில்களை புணரமைத்துக்கொள்ள நிதி உத‌வி செய்!
ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள குடியேற்றங்களை அகற்று!

இந்திய அரசே!

சிங்கள அரசின்.....
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலத்து புலிக்குள் நடக்கும் சொத்து மோதல்கள் (நோர்வேயைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு குழுக்களின் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.)

தமிழீழத்தின் பெயரில் தமிழினத்தையே கடந்த காலத்தில் அழித்தவர்கள், இன்று அதன் பெயரில் உள்ள பினாமி சொத்துக்களுக்காக மோதுகின்றனர். இப்படி புலத்து புலிக்குள் நடக்கும் மோதல்கள், நோர்வேயில் குறைந்த பட்சம் மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்த மோதல்களின் பின்னணி, எந்த மக்கள் நலன் சார்ந்ததுமல்ல.

மாறாக புலிகளின் பின் உள்ள பினாமிச் சொத்துக்கள், அதன் மேல் பொறுக்கித் தின்ன கட்டமைக்கும் அதிகாரம் சார்ந்த குழு மோதல்கள், எதிர்மறையான போட்டிக் குழுக்களை உருவாக்கி வருகின்றது.

ஊர் உலகத்தை ஏமாற்ற, ஒரு பிரிவு வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், மற்றைய பிரிவு நாடு கடந்த தமிழீழத்தையும் முன்னிறுத்தி மோதுகின்றது. இவை இரண்டிலும் தாமில்லை என்று கூறி, மூன்றாவது அணியாக இருந்து தின்ன, ஒரு காரணத்தை மூன்றாவது குழு முன்வைக்கின்றது.

தங்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 11, 2009

கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும் - 02

இன்று தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாது, தாறுமாறாக தலைகீழாக நடக்கிறார்கள். பாருங்கோ, 76 ல் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' எடுத்தபோது ''சத்துருக்கள்'' என்று கூறியவர்களுடன் இன்று கூட்டும் நடந்து முடிந்துள்ளது. '' அடைந்தால் தமிழீழம்'' என்றவர்கள், நோர்வேயில் 'ஐனநாயகத் தேர்தல்' நடத்துகிறார்களாம்.! என்னமா மிளகாய் அரைக்கிறாங்கள் தலையிலை - தெரியாமல் தான் கேக்கிறன்.
அப்ப, நோர்வேயின் கடைசிப் பாராளுமன்றத் தேர்தல் 'ஐனநாயகமாக' நடக்கவில்லையா? ஏதோ ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் தங்களுடைய பிரச்சனைக்காகத்தான் தேர்தல் நடத்தப்படுவதாக இவங்கள் படம் காட்ட முட்படுகிறாங்கள். இவங்களுக்குத் தெரியுமோ தெரியாது, 'இன்னுமொரு சாதி' (1985) என்ற புத்தகத்தை பெண்களுக்காக எழுதியது - நோர்வே சமூகத்துப் பெண் என்பது. யாழ்ப்பாணத்துக் கருக்குமட்டை வேலி பற்றி நோர்வே சமூகத்திடம் ஆயிரமாயிரம் கதைகளுண்டு. நோர்வேயில் அகதிகள் உள் நுழைவுக்கு முன் 3 மாதத்துக்கு மேல் கடலிலே, கப்பலில் ஏன் வாழவேண்டி வந்தது என்பதற்கு, இவங்களிடம் அரசியல் விளக்கம் ஏதாவது இருக்கிறதா? அரசியலா, அது என்ன மண்ணாங்கட்டி! எங்களுக்கு கண்கட்டி அரசியல் தான் கைவந்த கலையாச்சே!! இதுதானே தழிழரின் கலாச்சாரம்!!! அதை மீறுவது தேச...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தமிழக எம்.பிக்களின் ஈழச்சுற்றுலா: துரோகிகளுக்கு புரியுமா மக்களின் அவலம்?

ஈழப் போருக்குப் பின், முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் மக்களின் நிலைமையை அறியும்முகமாக ஐந்து நாட்கள் பயணமாக தமிழக எம்.பி.க்கள் கடந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்று வந்துள்ளனர். மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள், ஆடல்பாடல்கள் எனத் திருமண விழாவுக்கு வருபவர்களைப் போல, தமிழக தூதுக் குழுவினருக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்தது, சிங்கள அரசு. அவலத்தின் நடுவே இத்தகைய ஆடம்பர வரவேற்பு எதற்காக என்று கேட்டு, தமிழக எம்.பி.க்கள் அதனைத் தவிர்க்கவில்லை. மாறாக, புன்முறுவல் பூத்தபடியே சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந்தார்கள்.


ஈழத்திலுள்ள நலன்புரி மையங்களை அதாவது, வதைமுகாம்களைப் பார்வையிட்டு, மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து, அந்த அவலங்களைப் போக்க ஏதாவது செய்வார்கள் என்று ஈழத்தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஈழத்துக்குச் சுற்றுலா சென்று வந்ததைப் போலவே தமிழகத்தின் பத்து எம்.பி.க்களின் பயணம் அமைந்தது.

யாழ் பொது நூலகத்தில் நடந்த கலந்துரையாடலில் கருத்துக் கூறியவர்களை அதட்டி உட்கார வைத்தும், முகாம்களில் வதைபடும் மக்களின் அவலத்தைப் பற்றிப் பேசுவதைத் திசைதிருப்பியும், நேரமில்லை என்று தட்டிக் கழித்தும் தூதுக்குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு சிடுமூஞ்சித்தனமாக நடந்து கொண்டார். இதை, ""இலங்கைக்கு முன்பு அனுமன் வந்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 10, 2009

போலித்தேர்தல்

Monday, November 9, 2009

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்?

1.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்? : புதிய ஜனநாயகம் வெளியீடு

2.பு.ஜ.வின் விமர்சனங்களும் மாவோயிஸ்டுகளின் வசவுகளும்

3.எதிரிக்கு ஒத்திசைவாக அமைவது மாவோயிஸ்டுகளின் செயலா? பு.ஜ.வின் விமர்சனங்களா?


4.யார் நேர்மையானவர்கள்: பு.ஜ.வா, மாவோயிஸ்டுகளா?இதோ ஆதாரம்!

5.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட "நடிப்பு'

6.முதன்மைத் தவறும் ஆயுதக் குழுக்களும்

7.மாவோயிஸ்ட் இயக்கம்: ஏறுமுகத்திலா, இறங்கு முகத்திலா?

8.தர்மபுரி அனுபவம் என்ன? மீளாய்வு எங்கே?

9.கர்நாடகா அனுபவமும் இதுதான்!

10.ஒப்பாரி வைக்கமாட்டார்கள்! புரட்சி சவடால் அடிப்பார்கள்!

11.உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் மாவோயிஸ்டுகளின் சாணக்கியத்தனம்

12.குதர்க்கவாதமே கோட்பாடாக!

13.புரட்சிப் பாதை: பு.ஜ.வின் நிலையும் மாவோயிஸ்டுகளின் புளுகும்

14.அரசியலுக்காகத்தான் ஆயுதமா? ஆயுதத்துக்காக அரசியலா?

15.இணைப்பு: நக்சல்பாரி "அபாயம்': அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?(புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2007இல் வெளியான கட்டுரை)

போலி மோதல் கொலைகள் அரசு பயங்கரவாதமே!


""அந்த நான்கு பேரும் லஷ்கர் இதொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் திட்டத்துடன் வந்த அவர்களை வழிமறித்தபொழுது, நெடுஞ்சாலையில் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு இம்"மோதல்' பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது.

இந்த "மோதல்' கொலை பற்றி அப்பொழுதே பல்வேறு சந்தேகங்களும் விமர்சனங்களும் மனித உரிமை அமைப்புகளாலும் முசுலீம் மக்களாலும் எழுப்பப்பட்டன. "மோதலில்' கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹனின் தாயாரும், ஜாவேத் ஷேக்கின் தந்தையும் இம்"மோதல்' கொலை பற்றி விசாரிக்கக் கோரி குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். குஜராத் அரசும் தன்னை நியாயவானாகக் காட்டிக்கொள்ள இம்"மோதல்' கொலை பற்றி போலீசு விசாரணையும், துணை கோட்ட நடுவர் விசாரணையும் நடத்த உத்தரவிட்டது.

தனது அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் போலீசும், துணைக் கோட்ட நடுவரும் (Sub divisional magistrate) தனக்கு எதிராகத் தீர்ப்பெழுத மாட்டார்கள்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, November 8, 2009

புலத்துப் புலிகள் போடும் "ஜனநாயகம்", மக்களை ஏமாற்றித் தின்னும் போக்கிலி அரசியலாகும்


இதன் பின் இருப்பவர்களோ, கடந்தகாலத்தில் தமிழ் மக்களை மந்தைகளாக அடிமைப்படுத்தி தின்றவர்கள். இவர்கள் யார் என்றால் புலிகளின் பின் சொத்தைக் குவித்தவர்கள், புலிகளின் சொத்தை இன்று அனுபவிப்பவர்கள், மக்கள் மேல் அதிகாரத்தைக் கையாண்டவர்கள், உழையாது போராட்டத்தின் பெயரில் தின்று திரிந்தவர்கள் தான், இன்று மீண்டும் தமிழ் மக்களின் பின் தம்மை தக்கவைக்க முனைகின்றனர்.

இதற்காக ஜனநாயக வேசம் போடுவது முதல் தமிழ் மக்களிடம் வாக்கைக் கேட்பது வரை, பற்பல நாடகங்கள். ஆனால் ஜனநாயக விரோத நடைமுறை ஊடாகவே, மீண்டும் தம்மைத் தக்கவைக்க முனைகின்றனர். பாரிஸ்சில் சுயமாக செயல்படுகின்ற பொது அமைப்புகளின் உள்ள ஒரு சில ஜனநாயக விரோதிகளைக் கொண்டு, அமைப்பின் பெயரால் புலத்து புலிப் பினாமிகள் பொது அமைப்பை உருவாக்குவது முதல் நோர்வேயில் சுயமான அமைப்பின் பெயரில் போட்டி புதிய அமைப்பை....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: கூலித் தொழிலாளர்களைப் பலியிட்டுக் கொண்டாட்டமா?


இச்சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம், அதே கட்டிடத்தில் நடந்தது. அச்சம்பவத்தில் பொருட்களைக் கட்டிடத்தில் ஏற்ற உதவும் கி÷ரன் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரது உடலைப் பார்க்கக்கூட மற்றதொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசயாரும் முன்வராததால்þ அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார், தொழிலாளர்களை அடித்து விரட்டியதால் அந்தப் பகுதி முழுவதுமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

இந்நிலையில் ஜூலை சம்பவத்திற்கு இரு வாரங்களுக்கு முன்புதான்þ தெற்கு தில்லியின் ஜம்ருத்பூர் பகுதியில் புதிதாகக்கட்டப்பட்டு
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்