தமிழ் அரங்கம்

Saturday, December 26, 2009

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள்! : மாவீரன் ஜிரோநிமா!!

சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது என் வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க நாயகர்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்தது எனக்கு தெரியவந்தது.

நான் வாசித்த கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா? என்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)

இனியொரு மற்றும் தேசம்நெற் மூலமே, மீண்டும் திடீர் மார்க்சிய அரசியலில் பிரவேசிக்கின்றார் நாவலன். தான் எப்படியாவது ஒரு அரசியல் பிரமுகராக வந்துவிட வேண்டும் என்ற அவாவுடன், அரசியலில் காய்நகர்த்தலைச் செய்கின்றார். முதலில் திடீர் மார்க்சிய அரசியலை சந்தைப்படுத்த, அ.மார்க்ஸ்சை நாடுகின்றார். அவரின் முன்னுரையுடன், நாவலனுக்கு ஏற்ற ஒரு "மார்க்சியத்தை" முன்வைத்து, மீண்டும் தன்னை அறிமுகம் செய்கின்றார்.


அதேநேரம் இந்திய அரசியல் பிரமுகர்களை சந்திக்கின்றார். அவர்களுக்கு தனது மார்க்சிய அரசியல் அறிவைக் காட்ட முனைகின்றார். அதேநேரம் மற்றவர்களை பற்றி இல்லாத பொல்லாததை போட்டுக் கொடுக்கின்றார்.

தான் அரசியலில் இல்லாத காலத்தைப் பற்றி, தனது திடீர் அரசியல் பிரமுகத்தனத்துக்கு ஏற்ப திரித்துக் காட்டுகின்றார். இக்காலத்தில் எப்படியெல்லாம் மற்றவனை ஏமாற்றி, என்னனென்ன சுத்துமாத்து தொழில்களை செய்தார் என்பதை பற்றி அவர் பேசவில்லை. அதை "மார்க்சிய" அறிவு மூலம் எதுவுமற்றதாக்கி, தன்னை திடீர் "மார்க்சிய" பிரமுகராக முன்னிலைப்படுத்தி நிலைநிறுத்த முனைகின்றார்.

அதற்கிசைவாக அரசியலைத் துறந்த தனது கடந்தகாலத்தை மூடிமறைப்பதுடன், அக்காலத்தில் நடந்த போராட்டத்தையும் மறுத்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, December 25, 2009

புலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்?

கடந்தகால புலியெதிர்ப்பு அரசியலோ, இன்று மகிந்த சார்பாக துதிபாடும் அரசியலாகி நிற்கின்றது. அது சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாகியுள்ளது. சரத்பொன்சேகாவை ஆளத் தகுதியற்றவராக, புலியெதிர்ப்பு இணையங்கள் இன்று கூப்பாடு போடுகின்றது. தேனீ இணையமே, இந்தப் பிரச்சாரத்தில் மையமாக திகழ்கின்றது.


இவர்களுக்கு பின் இரண்டு பிரதான சுயநலன்களை இனம் காணமுடியும்.

1.புலியெதிர்ப்பு அரசியல் செய்ய, மகிந்தா கும்பல் புலியெதிர்ப்புக்கு கொடுத்து வந்த ஆதரவு மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய கவலை. சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால், அன்று அது நின்று விடும் என்ற அங்கலாய்ப்புகள்.

2.தமிழ்மக்கள் இயல்பாகவே மகிந்தாவுக்கு எதிராக கொண்டுள்ள எதிர்ப்பு, தங்களுக்கு எதிரான அரசியலாக இருப்பதால் அதையும் எதிர்க்கின்றனர். அரசியல் ரீதியாக தமிழ்மக்களை எதிர்த்து அரசியல் செய்து வந்த இந்தக் கூட்டத்தின் இருப்பு அரசியல், இயல்பான எதிர்ப்பு அரசியலாக மாறுகின்றது.

இப்படி தமிழ்மக்களின் நலன்களை என்றும் அரசியலாக முன்வைக்;காத புலியெதிர்ப்புக் கும்பல், மகிந்தாவுக்கு ஆதரவுக் கும்பலாக மாறி இந்த தேர்தலை சுயநலத்துடன் அணுகுகின்றது. இந்த வகையில் கடந்தகாலத்தில், தமிழினத்தை பேரினவாதிகள் படுகொலை செய்ததை, புலிகளைச் சொல்லியே நியாயம் கற்பித்தவர்கள் தானே இவர்கள்.

இன்று சரத்........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, December 24, 2009

இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும்!

பசுமைப் புரட்சியின்” தந்தை என வர்ணிக்கப்படும் “அம்பி” எம்.எஸ்.சுவாமிநாதனை மகிந்த இலங்கைக்கு அழைத்திருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதாக நடத்தப்பட்ட யுத்தத்தில் புலிகளின் தலைமையை முற்றாக அழித்தொழித்த அரசு வன்னிப் பெரும் நிலப் பரப்பைக் கைப்பற்றியது. மூன்று இலட்சத்துக்கும் மேலான அகதிகளான மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு துரித அபிவிருத்திகளுக்காக “அம்பியை” அவர் அழைத்திருந்தார். விதைப்புக்காலம் தொடங்க இருப்பதால் ஒக்டோபர் மாதத்திற்குமுன் தம் பணிகளைத் தொடங்க ஒரு பெண்கள் குழாமை அவர் அமைக்க முற்படுகிறார். இப்பெண்களைக் கொண்டு அவர் முதற் கட்டப் பணியை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தார்.

உலக அரிசி உற்பத்தியில் 2005ம் ஆண்டு சீனா முதலாவது இடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஏழு மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்தது (1947). அம்பி சுவாமிநாதனின் முன்னெடுப்பின் பின்னர், யப்பான் மற்றும் மெக்ஸிக்கன் நாடுகளில் விளைந்த தானியங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி மெக்ஸிக்கன் விதைத் தானியங்களை இந்தியாவிற் பயிரிடுவதற்கு உகந்ததாக மாற்றினார். 1964ம் ஆண்டில் பதினெட்டாயிரம் தொன் மெக்ஸிக்கன் தானியங்களை இறக்குமதி செய்து காலநிலைக்கு உகந்ததாக மாற்றப்பட்டு பயிரிடப் பட்டது. 1968ல் இந்தியாவின் உற்பத்தி 12மில்லியன் தொன்னில் இருந்து, 17மில்லியன் தொன்னாக உயர்ந்து “நிறைப் புரட்சி”யை உண்டு பண்ணியது. அதற்காக இந்திய அரசு அன்று ஒரு முத்திரையையும் வெ...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


போர்க்களமான புனித பூமி

“இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவாராமே?”
“யாருக்குத் தெரியும்? அவர் ஏற்கனவே வந்திருப்பார். ஆனால் அவர் பிறந்த இடம், யுத்தபூமியாக வருந்துவது கண்டு வெறுத்துப் போய் சொர்க்கத்திற்கே திரும்பிப் போயிருப்பார்.”
இந்த நகைச்சுவை துணுக்கு, மும்மதத்தவராலும் உரிமை கோரப்படும் புனித பூமியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றது.

இன்று உலகில் அனைவரது பார்வையும் மத்திய கிழக்கு பக்கம் திரும்பியுள்ளது. “மத்திய கிழக்கு” என்ற சொற்பதம் கூட இஸ்ரேலிய மையவாத அரசியலில் இருந்து பிறந்தது தான். பைபிள் காலத்தில், இஸ்ரேல் உலகின் மத்தியில் அமைந்திருப்பதாக நம்பப்பட்டது. அதிலிருந்து இஸ்ரேலின் கிழக்குப் பக்கம் “மத்திய கிழக்கு” என அழைக்கப்பட்டது. அவ்வாறு தான் இஸ்ரேலிற்கு மேற்கே இருப்பதால் ஐரோப்பா “மேற்கத்திய நாடுகள்” என அழைக்கப்பட்டது.

பைபிளில் ஆதியாகமம் கூறுவதன்படி நாம் வாழும் பூமி, கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆண்டவரால் படைக்கப்பட்டதாக யூத மத அடிப்படைவாதிகள் நம்புகின்றனர். ஆனால் அதற்கு மாறாக, கி.மு. 9000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலஸ்தீனத்தில் மனிதர் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகள் பல பண்டைக்கால நாகரீகங்களின் விளைநிலங்களாக இருந்தன. பைபிள், மற்றும் வரலாற்றுச் சான்றுகளில் இருந்து அங்கே பல்லின மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். பினீசியர்கள், பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள் ஆகிய இனத்தவர்கள், கி.மு. 3000 ஆண்டுகளிலேயே நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்தனர். இவர்களிடம் இருந்து தான், கிரேக்கர்கள் எழுத்து வடிவங்களை கற்றுக் கொண்டனர். சிறந்த கடலோடிகளான பினீசியர்கள், இன்றைய....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, December 23, 2009

சந்தர்ப்பவாத "மே 18" அரசியலும், பிழைப்புவாத தேசம் நெற்றும்

நேர்மையான அரசியல் பண்பை மறுத்து, அரசியலற்ற கதம்பத்தில் "மே 18" இயக்கத்தை நடத்த, அது இன்று வியூகமாகின்றது. இதன் பின்னுள்ள தனிப்பட்ட நபர்கள் நேர்மையற்றவர்கள். வெளிப்படையாக எதையுமே முன்வைக்க முடியாத, அதை எதிர்கொள்ள முடியாத பச்சையான அரசியல் சந்தர்ப்பவாதிகள். சமரசமும், மூடிமறைப்புடனும் கூடிய அரசியல் நக்குண்ணித்தனம்.

தமிழீழக் கட்சி புலியின் உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக இருந்ததையும் சரி, தீப்பொறி கேசவன் யாரால் எப்படி எந்த நிலையில் காட்டி கொடுக்கப்பட்டார் என்பதைக் கூட சொல்ல வக்கற்றவர்கள் இவர்கள். கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்த மறுக்கும், அரசியல் சந்தர்ப்பவாதம் கொப்பளிக்கின்றது. "மே 18" இயக்கம் கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்தி, அரசியல் செய்ய முடியாத சந்தர்ப்பவாத பிழைப்புவாத பிரமுகர் தனத்தை அரசியலாக்குகின்றனர்.

இன்று இதை இவர்கள் அரசியலாக செய்யும் போது ஜானுக்குரிய அரசியல் அங்கீகாரம் தீப்பொறியுடன் இருந்தவர் என்பதுதான். தேசம்நெற் ஜெயபாலனுக்கு உள்ள அரசியல் தகுதி, இந்த ஜான் ஜெயபாலன் வீட்டில் தலைமறைவாக இருந்தவர் என்பதுதான்.

இதற்கு வெளியில்...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, December 22, 2009

திடீர் அரசியல் சாக்கடையில், மக்களுக்கு எதிரான வரலாறுகள் புதைக்கப்படுகின்றது

தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் மூலம் ஆயிரம் ஆயிரம் கொடுமைகள் நிகழ்ந்த போது, அதற்கு ஆதரவாக "முன்னேறிய பிரிவு" என்று கூறிக்கொள்ளும் கூட்டம் செயல்பட்டது. இதற்கமைய ஆழ்ந்த உறக்கத்தில்; கிடந்தவர்களும், எதிர்ப்புரட்சி அரசியலை அரசியலாக செய்தவர்களும், "திடீர் ஆய்வு", "திடீர் மார்க்சியம்" "திடீர் புரட்சி" என்று இன்று கடைவிரிக்கின்றனர்.


சரணடைந்து புலித் தலைவர் "மே 18" செத்ததாக பேரினவாதிகள் அறிவிக்க, திடீர் அரசியல் பிழைப்புவாதமும் உசுப்பேற்றப்பட்டது. அந்த "மே 18" பெயரில் இயக்கம் முதல் சுயவிமர்சனம் என்றால் என்ன என்று விளக்கும் இலங்கை பு.ஜ கட்சி ஈறாக, அரசியலில் புதுவே~ம் போடுகின்றனர். புலிகள் மே 18 இருந்தவரை, தமிழ்மக்கள் பட்ட துன்பங்களுக்கும் சரி, தேசிய விடுதலையில் பெயரில் புலிப் பாசிட்டுகள் மாபியாத்தனத்துடன் நடத்திய கொடுமைகளையும் கண்டு கொள்ளாத கூட்டம் தான், அன்று தாம் அதற்கு எதிராக போராடியதாக இன்று கூறுகின்றது. திடீர் மார்க்சியம், ஆய்வுகள், அறிக்கைகள், விளக்கங்கள் என்று கடைவிரிக்கின்றனர். இதற்கு அமைவாக கடந்த தங்கள் எதிர்ப்புரட்சிக் காலத்தையும், பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தையும், இருட்டில் வைத்திருக்க தீவிரமாக முனைகின்றனர். அன்று நடந்த போராட்டத்தை எதுவுமற்றதாக காட்ட, தாம் விரும்பியவாறு முத்திரை குத்துகின்றனர். "கம்யூட்டர் புரட்சி" என்றும், "மார்க்சிய கோசங்கள்" என்றும், "தனிநபர் தாக்குதல்கள்" என்றும், "மேல் ப+ச்சு சிவப்பு கோசங்கள்" என்றும், "யாழ் மேட்டுக்குடி" மொழி என்றும், "ஜனநாயகமற்ற எழுத்தென்றும்" தாங்கள் எதிர்ப்புரட்சி அரசியல் பேசிய காலத்தின் எதிர்ப்புப் போராட்டத்தை இட்டுக்காட்ட முனைகின்றனர்.

இதன் மூலம் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


யுத்தவெற்ரியல்ல காட்டுமிராண்டித்தனம் யுத்தவெற்ரியல்ல காட்டுமிராண்டித்தனம்


குருதிக்கறை படிந்தபடியே.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, December 20, 2009

புலியின் உளவு அமைப்பான தமிழீழக் கட்சி தான் இன்று "மே 18" இயக்கமாகும்

தீப்பொறியின் அரசியலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 1990 களில் அந்த அரசியல், புலியிடம் காட்டிக்கொடுக்கப்பட்டது. தீப்பொறியை தமிழீழக்கட்சியாக்கி, புலியின் ஆள்காட்டியாக மாற்றியதுடன், புலிகள் போட்டுத்தள்ளவும் உதவியது. இப்படி புலியின் உளவு அமைப்பாகி இயங்கியவர்கள தான்; மீண்டும் இன்று "மே 18" இயக்கமாக வெளிவருகின்றனர். தீப்பொறி அரசியலை அழித்து, புலி உளவு அமைப்பாக மாற்றிய அதே அரசியல், அதே தர்க்கம்.

புலியின் அழிவின் பின், எதிர்ப்புரட்சி அரசியலே மீளவும் தன்னை மூடிமறைத்துக் கொண்டு மக்களின் முதுகில் குத்த களமிறங்கியுள்ளது. உலகின் உளவு அமைப்புகள் முதல் இலங்கை இந்திய அரசியல் புலனாய்வுப் பிரிவும் கூட இதற்குள் தான் இயங்குகின்றது. கடந்தகால வரலாற்றை மூடிமறைத்தும் திரித்தும், வரலாறு தெரியாத அப்பாவிகளுக்கு வலை வீசுகின்றது.

கடந்த காலத்தில் யாரெல்லாம் மக்களுடன் நிற்கவில்லையோ, அவர்கள் தொடர்ந்தும் மக்களுக்கு எதிராகவே நிற்கின்றனர். கடந்த மக்கள் விரோத வரலாற்றை வரலாற்றில் இருந்து அகற்றி, திரிக்கப்பட்ட ஒரு வரலாற்றை கூற முனைகின்ற..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்