தமிழ் அரங்கம்

Showing posts with label இயக்கங்கள். Show all posts
Showing posts with label இயக்கங்கள். Show all posts

Wednesday, July 9, 2008

இயக்கங்கள் ஏன் ஆயுதமேந்தின? ஏன் ஆயுதத்தை வைத்துள்ளனர்?

தமிழ் மக்கள் தமக்கிடையிலான சமூக முரண்பாடுகளை களைவதற்கும், தமக்கிடையில் ஐக்கியப்படுவதற்கும் எதிராகத்தான், இயக்கங்;கள் ஆயுதமேந்தின. இதுவே உட்படுகொலைகளில் தொடங்கி இயக்க அழிப்புவரை முன்னேறி, அதுவே துரோகமாகவும், ஒற்றைச் சர்வாதிகாரமுமாகியது. புலிச் சர்வாதிகாரத்தை எதிர்த்தோர், அரச கூலிப் படைகளாகியுள்ளனர். மக்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புரட்சியை நியாயப்படுத்தத் தான், தேசியம் ஜனநாயகம் என்ற வார்த்தைகளை; இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் ஆயுதத்தை வைத்திருப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. இந்த ஆயுதம் ஏந்திய குண்டர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிளவையும், சிதைவையும், அழிப்பையும் தான் மக்களுக்கு பரிசளிக்கின்றனர். இப்படிப் பேரினவாதத்துக்கு துணையாகவே, தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கின்றனர்.
இப்படி இவர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்புரட்சியை மூடிமறைக்கவே, அனைத்துத் தரப்பும் முனைகின்றனர். இதனால் தான் மக்களுக்காக நடந்த போராட்ட வரலாற்றை மறுக்கின்றனர். மக்களுக்காக போராடியவர்களை கொன்று போட்டபடி, தாம் அந்த மக்களுக்காகத் தான் போராடுவதாக கூற முனைகின்றனர். மறுபக்கத்தில் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர். இப்படி விதம் விதமாக படம் காட்டுவது, ஒரு திட்டமிட்ட சதிகார அரசியலாகும்.