தமிழ் அரங்கம்

Saturday, July 25, 2009

கருணா என்ற எடுபிடிக் கும்பல், மகிந்த பாசிசம் மூலம் விடுத்த மிரட்டல் (ஒலி வடிவம் இணைப்பு – பாசிசம் கையாளும் "தேசிய" மொழியிலானது. கவனம்)

மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட வாகனத்தை, கருணா என்ற எடுபிடி பாசிசக் கும்பல் எப்படி அபகரித்தது என்ற செய்தியை அண்மையில் அதிரடி இணையமும், இலங்கைநெற்றும் வெளியிட்டது. இது தான், இந்த உடனடியான பாசிச மிரட்டலுக்கான காரணம். தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசியவர்கள், புலிப்பாசிசம் மட்டும் பேசியவர்கள், இந்த நிகழ்வையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை.

அதிரடியின் செய்தியால் மகிந்தாவின் எடுபிடியான இந்த மக்கள் விரோதிகள் அம்பலப்பட்டனர். இதனால் இந்த செய்தியை வெளியிட்ட இணைய...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 24, 2009

இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகின்றது?

லங்கா நியூஸ் வெப் இணையம் தங்கள் ஊடகவியல் தில்லுமுல்லுகளை ஒத்துக்கொள்ள மறுக்கும் போது, அதன் பின்னணியும் அதன் நோக்கமும் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

மூன்று மொழியில் வெளிவரும் லங்கா நியூஸ் வெப் இணையம், மகிந்த புதல்வர் நாமல் தாக்கப்பட்டதாக கூறிய ஒரு செய்தியை முதலில் வெளியிட்டது. இதன் போது, தனது தில்லுமுல்லுகளுடன் கூடிய ஒரு போலிப்படத்தை தயாரித்து செய்தியை வெளியிட்டது. தில்லுமுல்லை அடிப்படையாக கொண்டு அந்தப் படத்தின் மூலம், இந்தப் படம் போலியானது என்பதை அம்பலப்படுத்;தினோம். பின் அதன் மூலப்படத்தையும் வெளியிட்டோம். (இதில் வெளியிட்ட படத்தை தங்கள் ......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

திருட்டு முழி

"ஏ! சரோசா... என்ன, பாக்காத மாதிரி போய்ட்ருக்க?''

"ஓ! ராணி, வா, வா, தப்பா எடுக்காதே, மாப்புள கார்ல வந்து இறங்கிட்டாரு, ஆலம் கரைக்கச் சொன்னாங்க. அதான் ஒன்ன கூடப் பாக்குல.''

"ஆமாம்! வீட்லதான் மாடு கன்ன வச்சிட்டு பொழுதுக்கும் லோல்படுற. இங்கவேற ஆடுறியா, ஆலம் கரைக்குறாளாம், அதுக்குத்தான நம்பள கூப்புடுவாளுவ, வீடியோ எடுக்குறப்ப பாரு நம்மள கண்ணு தெரியாம போய்டும். போறியா, வா கெடக்கு!''

"ஹி... ஹி... தே மெதுவா பேசு.. நீ வேற!'' சிரித்துக் கொண்டே ராணியை அடக்கினாள் சரோசா.

"சரி! மவள கடலூர்ல கட்டிக்...
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 23, 2009

தோழர்களுடனான ஒரு உரையாடல் : 20 வருடமாக தனி மனிதனாக தனித்து நின்று போராடியது என் தவறா!?

இது என் மீதான அரசியல் அழுத்தங்களாகின்றது. இதன் மீதான எதிர்வினை, இறுதியான 20 வருடத்தில், தனித்து நிற்கும் அரசியல் சூழல் எனக்கு எற்படுத்தியது. மக்கள் அரசியல், மக்களின் விடுதலை, இதை முன்னிறுத்தி இதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நான் தனித்து எதிர்கொண்டது என்பது இயல்பில் என்னை தனிமைப்படுத்தியது.

அரசியல் ரீதியாக எம் சரியான கருத்தை, யாராலும் முறியடிக்க முடியவில்லை. இதில் இருந்து தப்ப எனக்கு எதிரான முத்திரை குத்தும் பிரச்சாரத்தை இவர்கள், இலங்கை இந்தியா புலம் என்று எங்கும் செய்தனர். இது எம் தோழர்கள் மத்தியிலும் கூட, உடன்பாடான எம் அரசியலுக்கு வெளியில் இதன் செல்வாக்கு கணிசமாக காணப்படுகின்றது.

நாம் எம்மைப் பற்றி, என் நிலை பற்றி தனிப்பட்ட ரீதியில் எதையும் பிரச்சாரம் செய்வது கிடையாது. எமது கட்டுரைகளை தொடர்ச்சி.......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 22, 2009

தனக்கு எதிரான இணையங்களையே படுகொலை செய்யும் பாசிசம்

புகலி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூலம், அவ்விணையத்தை பாசிட்டுகள் படுகொலை செய்துள்ளனர். ஆளைப் போடு அல்லது கருத்தை முடக்கு என்பது, பாசிச சிந்தாந்தத்தின் அரசியல் மொழியாகும். "ஜனநாயகம், சுதந்திரம்" பேசுகின்றவர்கள், மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வதை விரும்புவதில்லை.

மக்களுக்கு தங்கள் பற்றி எந்த உண்மைகளும் தெரியக் கூடாது. மக்கள் அரசியல் மயப்படக் கூடாது. மக்கள் மந்தைகளாக, தமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும். இதுவே மக்களை ஆளும் வர்க்கங்களின், அரசியல் இலக்கு மட்டுமின்றி, இலட்சியமுமாகும்...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்


வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவது.............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, July 21, 2009

மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

ஆண்டு பாடசாலை எண்ணிக்கை தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை
1903 43 1765
1949 997 56168
1951 942 60924
1952 935 59554
1955 891 67110
1960 874 78733
1964 859 81695
1966 746 191881


1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலைய......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, July 20, 2009

எம்மைச் சுற்றிய அரசியலில், நாம் எதிர் கொள்ளும் அரசியல் நெருக்கடிகள்

பல விடையங்களை பேசியாக வேண்டும். தோழமையுடனான அரசியல், முட்டி மோதாத அரசியல், இந்தப் போக்குகளுடன் நேரடியாக விவாதிக்க முடியாத தடைகள் இயல்பாக எம்மை பற்றிய எதிர்மறைக் கூறுகளுடன் பயணிக்கின்றது. இன்று இது எமக்கும், எமது அரசியலுக்கும் எதிராக படிப்படியாக மாறுகின்றது.

இன்று இதற்குரிய சூழல். சம காலத்தில் புலிப் பாசிசம் தற்கொலை செய்த நிலையில், அரச பாசிசம் அம்பலமாகும் போதும், பாசிசம் தன்னை மூடிமறைத்துக் கொண்டு எம்மை தம் அரசியலுக்கு எதிராக நிறுத்தி அரசியல் அரங்கில் நுழைய முனைகின்றது. கடந்து 20 வருடமாக நாம் போராடி நிலைநாட்டிய உண்மையை, எதுவுமற்றதாக காட்ட முனைகின்றது. எனது மொழியும், எனது அணுகுமுறையின் குறைபாடுகளும் தான், இதைக் கடக்க, கடந்தகாலத்திலும் இன்றும் தடையாக இருந்தாக, இருப்பதாக காட்ட முனைகின்றது. இதனால் நாம் சந்திக்கும் அரசியல் போராட்டங்கள் பல முனையாகி, அவை கடுமையானதாகின்றது.

ஈழத்து தமிழ் அரசியல் போக்கு என்பது, கடந்த 20 வருடமாக எதிர்ப்புரட்சி அரசியல் ஊடாக நகர்ந்துள்ளது. இது "தேசியத்தின்" பெயரில் ஜனநாயகத்தை மறுத்தது. மறுபக்கத்தில் "ஜனநாயகத்தின்" பெயரில் தேசியத்தை மறுத்தது. இந்தப் போக்கில் புலிப் பாசிசத்தினையும், அரச......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, July 19, 2009

யார் இனித் தலைவர்

போரினி முடிந்ததோ
பாரததேவியின் பாதம் கழுவி
என்தேசத்து தேரது ஓடுமோ
உணவுப்பொட்டலம் போட்டிறங்கிய அமைதிப்புறா
கழுகாகிக் குதறிய காலம் மறப்போம்
போயஸ்தோட்டத்து அம்மாவுக்கு
வாழ்த்தனுப்பிய கரங்களால்
கண்ணிவெடியகற்றும் கருணைப்படைக்கு
;வாழ்த்துப்பா பாடுவ....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்

நாஜிகள் நடத்திய யூதப் படுகொலைக்கு அடுத்து மிகக்கொடிய இனப்படுகொலை 1994இல் ருவாண்டாவில் நடைபெற்ற துட்சி இனப்படுகொலை. ஹூட்டு இனவெறி அரசு மற்றும் இராணுவத்தின் துணையோடு சிறுபான்மையினரான துட்சி இன மக்கள் சுமார் 10 இலட்சம் பேர் படுகொலை செய்யப்படுவதை உலகம் அன்று கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. ஹூட்டு இனவெறி இராணுவத்துக்கு பிரான்சும், துட்சி கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்காவும் ஆதரவாக நின்றன.

பின்னர் துட்சி இனக் கிளர்ச்சிப் படை வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டது. இன்று பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் அருகாமை நாடான காங்கோவின் அகதி முகாம்களில் உழல்கிறார்கள். அமெரிக்காவின் ஆசி பெற்ற ருவாண்டாவின் துட்சி இன அரசு இன்று ஆப்பிரிக்காவின் இஸ்ரேலாக மாறிவருகிறது. அமெரிக்க ஆசியுடன், காங்கோ முதலான அண்டை நாடுகளை மிரட்டும் அமெரிக்க அடியாளாக வளர்ந்து வருகிறது.

ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாத தேசியமும், ஏகாதிபத்தியத்தால் தூண்டி வளர்க்கப்படும் இனவுணர்வும், இனப் பகைமை எனும் மீள முடியா....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்