தமிழ் அரங்கம்

Saturday, September 19, 2009

நேபாளக்குண்டு வெடிப்பு : இந்துமதவெறி பயங்கரவாதிகளின் சதிகள்!


ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் வழிபாட்டுக்குத் திரண்டிருந்தனர். தலைமைப் பாதிரியார் பைபிளை மேற்கோள் காட்டிப் பிரசங்கம் செய்தபொழுது, திடீரென பேரொலியுடன் குண்டுகள் வெடித்தன.எங்கும் புகைமூட்டம்; தேவாலயத்தின் கண்ணாடி சன்னல்களும் மேசை நாற்காலிகளும் நொறுங்கிச் சிதறின; "யேசுவே! ஆண்டவரே!'' என எங்கும் மரண ஓலம். கடந்த மே 23ஆம் தேதியன்று நடந்த இக்குண்டு வெடிப்பில் தீபாபாட்ரிக், செலஸ்டி எனும் இரு இளம்பெண்கள் கொல்லப்பட்டு இரத்தவெள்ளத்தில் மிதந்து கிடந்தனர். பாதிரியார்கள் உள்ளிட்டு 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் குற்றுயிராகக் கிடத்தப்பட்டனர்.

தீபா பாட்ரிக்கும், செலஸ்டியும் இந்தியாவின் பாட்னாவைச் சேர்ந்த மாணவிகள். அவர்கள் நேபாளத்தின் லலித்பூரிலுள்ள தமது உறவினரைச் சந்திக்கச் சென்றிருந்தனர். அந்தச் சிறுநகரம் அமைதியாகவும் அழகாகவும் உள்ளதென்று தீபா....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 18, 2009

மக்களுக்கு சுதந்திரமான பேச்சுரிமையை மறுக்கும் வரை, போர்க் குற்றத்தை நிறுவமுடியாது


இன்று வன்னியில் என்ன நடந்தது என்பதை மக்கள் சுதந்திரமாக சொல்ல முடியாத வண்ணம் மக்களை அடைத்து வைத்துள்ளது பேரினவாத குற்றக் கும்பல். பேரினவாத பாசிச அரசு தாங்கள் செய்த யுத்தக் குற்றங்களை இல்லாததாக்க, மக்களை வதைத்து உளவியல் ரீதியாக சிதைக்க முனைகின்றது.

இதில் இருந்து தப்பி வெளிநாடு வந்தவர்களை சுதந்திரமாக பேசமுடியாத வண்ணம், புலத்து புலிகள் உண்மையின் ஒரு பகுதியை மூடிமறைத்து வைக்க நிர்ப்பந்திக்கின்றனர். இதன் மூலம் சாட்சிகளும், தகவல்களும் நம்பிக்கை இழந்து போகின்றது.
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, September 15, 2009

பாசிசமும் வரட்டுவாதமும் குறித்து…

பாசிசம் குறித்து மேற்கு நாடுகளுக்கும் எமது நாடுகளுக்கும் இடையில், அதன் வளர்ச்சி வடிவத்தில் குறிப்பான வேறுபாடுகள் உண்டு. ஆட்சிக்கு வரத் துடிக்கின்ற பாசிசம், எங்கும் தேசிய என்ற மையக் கோசத்தில் தான் தன்னை நிலைநிறுத்துகின்றது. இந்தப் பாசிச தேசியம், பல்வேறு சமூகக் கூறுகள் சார்ந்து தன்னை நிலை நாட்டுகின்றது. மதம், தூய்மைக் கூறு, சாதி, இனம், நிறம், மரபு என வௌ;வெறு வழிகளில், பாசிச தேசியத்தை கட்டமைக்கின்றது.

இது குட்டிபூர்சுவா வர்க்கத்தின் நலன்களை பூர்த்தி செய்வதாக பாசங்கு செய்தபடி, தன்னை நேர்மையானவனாக தூய்மையானவனாக காட்டிய படி அரங்குக்கு வருகின்றது. ஆனால் இந்தப் பிரிவு ஆட்சிக்கு எறுகின்ற போது, அந்த ஆட்சி; குட்டிபூர்சுவா வர்க்க நலன்களை பிரதிபலிப்பதில்லை. இது அந்த நாட்டில் எந்த பொருளாதார சமூக கட்டமைப்பு காணப்படுகின்றதோ, அதற்கு இசைவான பொருளாதார ஆதிக்க பிரிவை பலப்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்குகின்றது. உண்மையில் பாசிசம் உழைக்கும் மக்களை தொடர்ந்தும் சுரண்டும் வழியை நவீனப்படுத்தும், ஒரு வர்க்க சர்வாதிகாரமே. இருக்கும் சுரண்டும் வர்க்க நலன்களை தக்கவைக்கவும், அதை பாதுகாக்கவும், இருக்கின்ற சமூக அமைப்பால் முடியாத அளவுக்கு வர்க்கப் போராட்டம் நடக்கின்ற ஒரு நிலையில், பாசிசம் அதிகாரத்துக்கு வந்து சுரண்டு வர்க்கத்தைப் பாதுகாக்கின்றது. பாசிசம் எப்போதும் அதிகாரத்துக்கு மூலதனத்தின் துணையுடன் வருகின்றது.

அரச என்பது எப்போதும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகரமே. ஜனநாயகம் என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் ஜனநாயகமே. இது இருக்கின்....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, September 14, 2009

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்

இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து.

எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி.

ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்த ஈழ ஆதரவாளர்களுக்கும் இந்த முடிவுகள் நிச்சயமாக பலத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மத்தியில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை நிறுத்திவிட முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது.

தமிழக மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொய்த்து விட்டது. ஈழத் தமிழர்க்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் ஒ......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகளைக் காட்டி தொடர்ந்து கட்டமைத்து வரும் சர்வாதிகார பாசிச ஆட்சியமைப்பு...

இன யுத்தத்தை பேரினவாதத்தின் வெற்றியாக்க, உலகமயமாக்கல் முரண்பாட்டுக்குள் இலங்கை தன்னை வலிந்து நுழைத்துக் கொண்டது. உலகளவில் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் நடைபெறும் முரண்பாடுகளும், மோதல்களும் இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. செல்வாக்கு மண்டலங்கள், இராணுவ மண்டலங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் உலகளாவிய போட்டியில், இலங்கை தன்னை வலிந்து உட்படுத்திக் கொண்டது.

Sunday, September 13, 2009

பேரினவாத பாசிசம் இலங்கையில் விதைக்கும் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடு, மக்களுக்கு இடையிலான முரண்பாடாகின்றது

இன யுத்தத்தை பேரினவாதத்தின் வெற்றியாக்க, உலகமயமாக்கல் முரண்பாட்டுக்குள் இலங்கை தன்னை வலிந்து நுழைத்துக் கொண்டது. உலகளவில் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் நடைபெறும் முரண்பாடுகளும், மோதல்களும் இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. செல்வாக்கு மண்டலங்கள், இராணுவ மண்டலங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் உலகளாவிய போட்டியில், இலங்கை தன்னை வலிந்து உட்படுத்திக் கொண்டது.

சீனா - இந்தியா – பாகிஸ்தான் என்ற பிராந்திய முரண்பாட்டுக்குள், மேற்கு – சீனா என்ற உலகளாவிய முரண்பாட்டுக்குள், இலங்கை தனது அனைத்துவிதமான பாசிசக் கட்டமைப்பையும் புகுத்தியுள்ளது. இதன் மூலம் தன் வரைமுறையற்ற பாசிச குடும்ப ஆட்சியை நிறுவியது. நாட்டு வளத்தை விற்றது. இனப்படுகொலையைச் செய்தது. இதை இன்றும் தொடருகின்றது. இதற்குள் ஏகாதிபத்திய முரண்பாடு கூர்மையடைந்து வருகின்றது.

பேரினவாத ...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

திட்டமெதுவுமின்றி புலிகள் அன்றாடம் தாம் செய்தவற்றை, நியாயப்படுத்தி தாமே கூறுவதே புலிகள் அரசியலாகியது. திட்டமாக வெளியிடப்பட்டவை எவையும், அவர்கள் தமது சொந்த இயக்க நடைமுறையாக கொண்டது கிடையாது. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும், அவர்களாக வெளியிட்ட சொந்த வேலைத்திட்டம் எதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது.

இந்த வகையில் கட்டுரையில் சில பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளேன். அன்ரன் பாலசிங்கம் எழுதிய "விடுதலை" என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் இந்த வகையில் அமைந்ததே. புலிகள் தாம் செய்ததை நியாயப்படுத்த, தம்மை மறுக்கின்ற முரணை உள்வாங்கியதே இந்த நூல். உண்மையில் புலிகளின் லும்பன் தனமான நடத்தைகளுக்கு, அரசியல் முலாம் ப+சுவதே புலியின் அரசியலாக உள்ளது. பாலசிங்கமே அதன் பிதாமகன். இந்த நூலின் முன்பகுதி மீதான, சுருக்கமான விமர்சனத்தை இக்கட்டுரை அவர்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலம் செய்கின்றது.