முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
Tuesday, February 23, 2010
2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, February 22, 2010
இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை
இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை
குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்
படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்
தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;….
வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்
சேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…
வறுமையும் வயிறெரியும் நினைவுக்கொதிப்பும்
வெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்
பொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, February 21, 2010
தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்
Thursday, February 18, 2010
வோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி
இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.
இப்படி முன்பும் தேர்தலில்............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, February 17, 2010
அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்! - செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்
Tuesday, February 16, 2010
தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையும், அதை மூடிமறைக்கும் சந்தர்ப்பவாதிகளின் காரியவாத அரசியலும்
புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது. மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.
இவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
வாக்குப் சீட்டை இனிப் பயன்பயன்படுத்துவதெப்படி
எவரிற்குப் போடுவதென்று குளம்பவேண்டாம்
எப்படிச் செல்லுபடியாக்குவதென்றும் குளப்பவேண்டாம்
எல்லாவற்றிற்குமான வழிதிறக்கிறது
நாங்களே வருகிறோம்......
உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி
விழித்துப்பாருங்கள் விடியல் அருகிருக்கு...
இரத்தத் திலகமிட தேவையினியில்லை-எம்
இலட்சினையே செங்கொடிதான்........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, February 15, 2010
செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 14.02.2010
Thursday, February 11, 2010
ரணங்கள் மறந்திட – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி
தமிழ் மக்கள் விட்ட கண்ணீரும், சரத்பொன்சேகாவின் மனைவி அநோமா விட்ட கண்ணீரும்
இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்தி அணுகுவதல்ல மக்கள் அரசியல்.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, February 10, 2010
யாழ் குண்டு வெடிப்பில் குளிர்காயும் புதிய ஜனநாயகக் கட்சி அரசியல்
மார்க்சியத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கினால், பாசிச நடத்தைகளையும் அது சார்ந்த வக்கிரங்களையும் தொழத் தொடங்கிவிடுகின்றனர். பாசிசத்தைக் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, மார்க்சிய சொற்களைக் கொண்டு உளறத் தொடங்குகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி நடந்து முடிந்த தேர்தல் பற்றி வெளியிட்ட அறிக்கையோ கேவலமானதும், கேலிக்குரியதுமாகும்.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, February 9, 2010
சரத் பொன்சேகரவின் கைது : போர் குற்றச் சட்சியங்களை அழிக்கும் மற்றொரு போர் குற்றம்
மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரனையில் வெளிபடுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகர. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகரவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர் குற்றம் மிகப் பாரியது.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்..
தேர்தலின் மறுநாள் அதிகாலையானது மனித வேட்டையோடுதான் விடிந்தும் இருக்கிறது!
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, February 8, 2010
ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய சிறப்பு வரிச் சலுகை தடையும், அரசியல் விளைவுகளும்
வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தேர்தல் ஆணையாளர் குடும்பம்?…. செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்
அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்?
இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே!
எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, தேர்தல் ஆணையாளரையும், மனைவியையும் சிறைக்கைதிகளாக்கி, அவர் சுதந்திரமாக சொன்ன எல்லாவற்றையும் பொய்யாக்கி, நான் இப்போது சொல்வதே மெய்யென சொல்லவைத்த "கணனி மாயாஜால மன்னராகிய" நீங்கள் இலங்கை வரலாற்றில் ஓர் அதிஸ்டசாலியான ஜனாதிபதிதான்.
சுதந்திரதினத்திற்கு ஓர் வாரத்திற்கு முன்பாக, தோதல் ஆணையாளர் சுதந்திரமாக பலவற்றை சொன்னார். நடைபெற்ற தேர்தல் சுதந்திரதான தேர்தலல்ல. மக்கள் வாக்காளிக்காத பெட்டிகளையே எண்ணினோம், வெற்றியாக்கினோம். இவ்வெற்றிக்கனி இலங்கை வரலாறில் யாருக்குமே கிடைக்காத அதிஸ்ட வெற்றிதான். இவ்வகையில் மகிந்தா ஓர் பாக்கியசாலியும்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்