தமிழ் அரங்கம்

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Saturday, August 23, 2008

சட்டபூர்வமாகி வரும் கட்டணக் கொள்ளை


கல்வி வியாபாரிகளோ இந்தக் கட்டண உயர்வு தாங்கள் எதிர்பார்த்ததை விட 25,000 ருபாய் குறைவானது என்று ஒப்பாரி வைக்கின்றனர். கட்டண உயர்வு குறித்து ஆராய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் கமிட்டி, கட்டணத்தை உயர்த்துவது குறித்து கல்வியாளர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்டு, அதன்படி நடந்ததாகக் கூறுகிறார் பொன்முடி. இந்தக் கமிட்டியிடம் எந்தப் பொதுமக்கள், கல்வியாளர்கள் கட்டணத்தை உயர்த்தக் கோரினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

கடந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ரூ.32,500 கட்டணமாகப் பெற்று பெற்று கல்வி வியாபாரிகள் சம்பாதித்தது மட்டும் 180 கோடி ரூபாய் என்கிறார்கள். இது வெறுமனே கணக்குக் காட்ட மட்டுமே. ஆனால் உண்மையில் ஒரு சீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டாய நன்கொடையாகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை கல்விக் கட்டணமாகவும் வசூலிக்கிறார்கள்.

கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகக் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கூச்சலிடவே, சென்ற ஆண்டு 18 கல்லூரிகளிலும் அதன் நிர்வாகிகளின் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசு. தனது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளிடம், ''என்ன, இப்போது வந்திருக்கிறீர்கள், அட்மிசன் டயத்தில் வந்திருந்தால் இன்னும் அதிகமாகக் கிடைத்திருக்குமே!'' என்று ஜேப்பியார் நக்கலாகக் கூறினாராம். அந்தச் சோதனைக்குப் பின்னர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

Sunday, August 17, 2008

குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?


அதாவது குழந்தை பணம் சம்பாதிப்பதை வழிகாட்டுவதா, பெற்றோரின் கடமை? இப்படித்தான் பல பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆகவே ஆட்டுக் கிடாயை வளர்க்கும் மனநிலையில் தான், குழந்தையை வளர்க்கின்றனர். மொழி மற்றும் உடல் வன்முறை மூலம் இதைச் செய்யமுனைகின்றனர். இப்படி இணக்கமற்ற குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர்.

குழந்தையை இணக்கமான வகையில், அறிவியல் பூர்வமாக இணங்கி நிற்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும், என்று பெற்றோர் கற்பனை கூட செய்வதில்லை. ஆனால் அதையே, குழந்தை தம்முடனான சமூக உறவில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். முரணிலையான அணுகுமுறையுடன் கூடிய பெற்றோரின் செயல்பாடுகள். அதாவது சமூகமாக குழந்தை தம்முடன் வாழவேண்டும் என்று விரும்பும் சுயநலம், தாம் அல்லாத மற்றவருடன் சமூகத்துக்கு எதிராக சுயநலத்துடன் வாழத்தூண்டும் நடைமுறையைக் கையாளுகின்றனர்.

பெற்றோர் குழந்தை வளர்ப்பில் சரி, குழந்தை பெற்றோர் பராமரிப்பில் சரி, பரஸ்பரம் இணங்கிய அணுகுமுறை தான், சுயநலமல்லாத சரியான சமூக மனித ....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்