தமிழ் அரங்கம்
Saturday, May 23, 2009
Monday, May 11, 2009
பேரினவாத பாசிட்டுகள் தமிழ்மக்களை கொல்வதுடன், அப்பாவி சிங்கள இளைஞர்களையும் பலி கொடுக்கின்றனர்
Monday, June 23, 2008
முந்தானை விரிக்கும் புலம்பெயர் 'ஜனநாயகம்"
இதனால் தான் இது அரசுடன் அல்லது புலியுடன் தஞ்சமடைகின்றது. இதற்கு வெளியில் இந்த புலம்பெயர் 'ஜனநாயகம்" என எதுவும் சுயமாக கிடையாது. இந்த வெட்டை வெளியில் தான், தேசம் (நெற்) பவ்வியமாக மிதக்க முனைகின்றது. இரண்டையும் பயன்படுத்தி பிழைக்கும் 'தொழில் நேர்மை" ஊடாக, இது ஒரு அலியாக பிறப்பெடுத்துள்ளது. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு அரச பாசிட்டுகள் துணை இன்றி எப்படி இன்று இயங்க முடியாதோ, அப்படித் தான் தேசமும். புலி புலியெதிர்ப்பு பாசிட்டுகளை சார்ந்தும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளிடையே முரண்பாடுகளையும் தனது பங்குக்கு உருவாக்கித் தான், தேசம் உயிர் வாழ முடிகின்றது. இதைத் தான் தேசம் பொறுக்கிகள் தமது 'தொழில்நேர்மை" என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான அரசியலையோ, மக்களின் அவலங்களையோ மையமாக வைத்து, செய்திகளையோ கட்டுரைகளையோ கொண்டு வருவது கிடையாது. இதனால் தொழில் விரிவடையாது என்பது இந்த பொறுக்கிகளின் கணிப்பீடு. அதாவது புலிகள் மக்கள் போராட்டம் சரிவராது என்று ...கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Tuesday, June 3, 2008
பாசிசத்துக்கு தத்துவம் கொடுக்கும் புலம்பெயர் மாமாக்கள்
மக்கள் தான் புரட்சி செய்ய வேண்டும் என்பதை ஏற்காத அனைவரும், அதற்காக போராடாத அனைவரும், இந்த பாசிசத்தின் ஏக பிரதிநிதிகள் தான். இது புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியலுக்குள் புழுத்துக் காணப்படுகின்றது.
இன்று தமிழர் மத்தியில் புரையோடியுள்ள பாசிசத்தை, வெறுமனே புலிகள் மட்டும் பிரதிபலிக்கவில்லை. இலங்கை - இந்திய அரச ஆதரவு குழுக்களும் கூட, பாசிசத்தை பிரதிபலிக்கின்றது.
சமூகத்தின் உயிர்த்துடிப்பான செயல்பாடுகளை எல்லாம் முடக்கி, அதன் இயல்பான இயங்கியல் வாழ்வியலை சிதைத்து, மனிதனின் அடிப்படை உரிமைகளை எல்லாம் பறித்துவிட்டு, 'தேசியம்" 'ஜனநாயகம்" என்பதை, தமது பாசிச வித்தையாக்கினர். இதை மனித முகம் கொண்ட ஒன்றாக காட்டுகின்றனர். தமது இந்த சொந்த செயலுக்கு ஏற்ப மக்களை தலையாட்டும் பொம்மைகளாக்கி, அவர்களை எல்லாம் ஊமையாக்கி விடுகின்றனர் இந்தப் பாசிட்டுகள்.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்