தமிழ் அரங்கம்

Showing posts with label வரி. Show all posts
Showing posts with label வரி. Show all posts

Tuesday, July 8, 2008

பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்

இந்திய அரசாங்கம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணைக்கு 63% (23 per cent + Rs 7.50 per litre) வரி விதிக்கிறது. அதாவது, ஒரு பேரலின் விலை ரூ 2918 எனில், அதற்கு நமது அரசாங்கம் விதிக்கும் இறக்குமதி வரி ரூ 1839. ஆக இறக்குமதிக்குப்பின் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை ரூ 4757! அத்துடன் விடவில்லை.
எண்ணை நிறுவனம் உற்பத்தி செய்த பெட்ரோல் மற்றும் அதன் கழிவுகளுக்கு, மத்திய அரசு விற்பனை வரி வேறு விதிக்கிறது. அதுவும் சாதரன வரி அல்ல. 25% முதல் 30% வரை! அத்தோடு விட்டதா என்றாலும் இல்லை!

எண்ணை நிறுவனங்கள் படு ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றன. உதாரணதுக்கு - IOCயில் ஒரு கார் ஓட்டுனர் சுமார் ரூ 20,000 சம்பளமாக பெறுகிறார். நம்ம ஊரு கால் Taxi ஓட்டுனர் ரூ 2,000 சம்பளதுக்கு படாத பாடுபடுகிறான். ஒரு IT நிறுவனதின் செலவுகளை மிஞ்சுகிறது இந்த எண்ணை நிறுவனங்களின் செலவுகள்.
உண்மை இப்படி இருக்க, அரசுகள் நமக்கு மானியம் வழங்குவதாகவும், அதனால் அரசுக்கு பளு கூடுவதாகவும் கூசாமல் கூறுகிறார்கள்!
...

Sunday, June 8, 2008

கொள்ளைக் கூட்டத்தின் ஒப்பாரி

இது அவரின் சொந்த கருத்து மட்டுமல்ல. விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த விமர்சனம் என்ற பெயரில் மேட்டுக்குடி கும்பலின் வர்க்க வெறுப்பும், பொச்சரிப்பும் இப்படித்தான் பொங்கி வழிகிறது.

ஒரு 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி (இதுவே ஃபிராடு என்பது தனிக்கதை) குறித்து இப்படி அங்கலாய்த்துக் கொள்ளும் ""சோ'' வகையறாக்கள், ஒவ்வொரு ஆண்டும் வரிச் சலுகை என்ற பெயரில் பல பத்தாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், தரகு முதலாளிகள் மேல்தட்டு வர்க்கத்திற்காகத் தள்ளுபடி செய்யப்பட்டு வருவது குறித்து கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.

கடந்த (200708) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 58,655 கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய ஆண்டு ஏற்பட்ட இழப்பை விட 30 சதவீதம் அதிகமாகும்.

பங்குதாரர் நிறுவனங்கள் உள்ளிட்ட பிற வர்த்தகத் தொழில் நிறுவனங்களுக்கு 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ, 4,000 கோடி.

தனிப்பட்ட நபர்களுக்கு, 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகையால் ஏற்பட்ட இழப்பு 38,000 கோடி ரூபாய்.

தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச் சலுகையால், 200708இல் அரசுக்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 88,000 கோடி ரூபாய்.
.