தமிழ் அரங்கம்

Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Wednesday, October 8, 2008

தி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி!

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல் நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, "வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது. ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான்.

தி.க. மகளிரணியோ "காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மூக்கு, காதுகளில் நகைகளை மாட்டுவதால் அந்தத் துறைக்கான எடுப்பையும் கம்பீரத்தையும் குலைத்துவிடுவதாக, குறைத்து விடுவதாக அமைவதால் அந்த நிலையிலிருந்து அப்பெண்கள் விடுபடவேண்டும்'' எனத் தீர்மானம் போட்டுள்ளது. கூலிகேட்டுப் போராடினாலோ, மறியல் அறப்போரில் ஈடுபட்டாலோ ஆண்போலீசுக்குச் சற்றும் குறையாமல் பெண்போலீசும் வெறிநாய்கள் போல் உழைக்கும் மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றது . இந்தக் கொடூர மிருகத்திடம் "எடுப்பையும்' "கம்பீரத்தையும்' யாராவது ரசிக்க முடியுமா? நகைகளைத் துறந்து வந்து அடித்து உதைத்தால் "எடுப்பாக' இருக்கிறது என்று ரசிக்கத்தான் முடியுமா?

பெரியார் தி.க.வினருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள "தளபதி' வீரமணி, நீதிமன்றத்தில் தன்னை "இந்து' என்று குறிப்பட்டுள்ளார். "இந்து என்றால் .திருட...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 7, 2008

தி.க.வீரமணியின் இலாபவெறி

Monday, August 25, 2008

பெரியார் உரைகள்


உங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.

உங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.

Friday, July 18, 2008

எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்!

பார்ப்பனரல்லாத "மேல்'சாதி இந்துக்கள் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி பெறத் துவங்கிய காலமது. அவர்களிடம் புராணங்களின் மீது ஒருவித விமர்சனமற்ற மரியாதையையும், உதிர்ந்து கொண்டிருந்த கூட்டுக் குடும்பங்களின் மீது ஒரு அனுதாபம் கலந்த கரிசனையையும் இப்படங்கள் தோற்றுவித்தன. கதாநாயகர்களின் சோகத்தில் மாத்திரமே தனது துன்பங்களை இனம் காணப் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களிடம் யதார்த்தத்தை ஈவிரக்கமின்றி முன்வைத்தன ராதாவின் பாத்திரங்கள்.

1942இல் ராதா நடித்த "இழந்த காதல்' எனும் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது. சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த "போர்வாள்' நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமெனக் கோருகிறது. பிரகாசம் அரசாங்கம் இக்கருத்து பிரிட்டிஷாருக்கு எதிரானது என்பதால் நாடகத்தைத் தடை செய்தது. 1947இல் கருணாநிதி எழுதிய "தூக்குமேடை' பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், நேர்மையானவர்களின் காதலைத் தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.