தமிழ் அரங்கம்

Saturday, January 5, 2008

இனவாத யுத்தம் மூலம் அமைதியும் சமாதானமும் தோன்றுமா?

பி.இரயாகரன்
16.08.2006 முன்னைய கட்டுரைக்கு தொடர்பான கட்டுரை

றுதி யுத்தத்துக்கான நாலாவது ஈழப்போர் தொடங்கிவிட்டது என்று, அடிக்கடி புலித்தரப்பாலும் புலிப் பினாமிகளாலும் மகிழ்ச்சியாகவே பரபரப்பூட்டப்படுகின்றது. ஆனால் யுத்த முனைப்புகள் அனைத்தும், அவர்கள் விரும்பும் கோரமான யுத்தமின்றி சப்பென்று பிசுபிசுத்து போகின்றது. இருந்தபோதும் பரந்த தளத்தில் பாரிய தாக்குதல்கள், யுத்தப்பிரகடனமின்றி அடிக்கடி இரு தரப்பாலும் நடத்தப்படுகின்றது. யுத்தத்தை நோக்கி முழுமையாக அவர்கள் சென்றுவிட முடியாத நிலையில், இதில் இருந்து மீளமுடியாத வகையிலும், அன்னிய தலையீடுகள் பலமாக உள்ளதையே நிலைமைகள் தெளிவுபடுத்துகின்றது. யுத்தம் வேண்டும் என்ற புலித்தரப்பின் பொதுவான வெறியூட்டும் கருத்துகளுள், பேரினவாதிகளின் ஒரு பகுதியினரின் யுத்த வெறியூட்டலும், அடிப்படையில் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. மக்களையிட்டு ஒரு துளி தன்னும் அக்கறைப்படாத, அவர்களை ஏறிமிதித்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்வோரின் யுத்த கோசமாகவே இவை உள்ளது. யுத்தத்தில் ஈடுபடுவோரின் வெற்றி தோல்விகளையிட்டும், மக்களை நிராகரித்தபடி வெளியிடும் யுத்தக் கூச்சலையிட்டும், அவர்களின் கற்பனை பினாற்றல்களையிட்டும், நாம் அதன் போக்கில் அலட்டிக் கொள்ளமுடியாது. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.

யுத்தம் ஒன்றைச் செய்யக் கூடிய அளவுக்கு, இருதரப்பும் பல ஆயிரம் பேர் கொண்ட படைகளை தமது நோக்கத்துக்காகவே வைத்துள்ளனர். மக்களின் உழைப்பை ஏமாற்றி அபகரித்ததன் மூலம், நவீன ஆயுதங்களால் தம்மை அலங்கரித்தபடி, கொலைவெறியுடன் கொன்றுக் குவிப்பதற்காக கூச்சலிடுகின்றனர். இந்தக் கொலைவெறி யுத்தம் பல ஆயிரம் ஏழை எளிய பெற்றாரின் குழந்தைகளை பலியெடுக்கும் வகையில், இனவெறியூட்டப்பட்டுள்ளது. சுயசிந்தனையற்ற ஒரு கூலிப்பட்டாளமாக, தமது மரணத்துக்கான தூக்குக்கயிறை தாமே திரித்தபடி, கொலைக்களத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு தலைமை தாங்குவோரின் பிள்ளைகளோ தமிழ் சிங்கள வேறுபாடின்றி, மக்களிடம் திருடிய பணத்தில் ஆடம்பரமாக வாழ்கின்றனர். இப்படி யுத்தத்தல் ஈடுபடுத்தப்படும் பிள்ளைகளின் தாய்மை கருப்பையுடன் சூறையாடப்பட, சொந்தக் குழந்தைகள் அதன் மேல் சொகுசாக தமக்குத் தாமே மகுடத்தை சூடுகின்றனர். இந்த நிலையில் பரஸ்பரம் கொன்று, குவிக்கும் இரண்டு இராணுவங்கள், மோதிக் கொள்ளும் போது கிடைக்கும் வெற்றிகள் தோல்விகள் அனைத்தும், மக்களுக்கு எதிரானதாகவே இருப்பதை யாரும் தடுக்கமுடியாது. யுத்தத்தை பற்றிய, அதன் வெற்றி தோல்விகள் பற்றிய எமது நிலை இதுதான்.

யுத்தம் ஏற்படுத்தும் வாழ்வியல் இழப்புகள், மனித இழப்புகள் அனைத்தும் மக்களின் வாழ்வை சூறையாடி அழிப்பதில் தான் மையங் கொள்கின்றது. மீட்சியற்ற மனித வாழ்வை உருவாக்கி, சூனியமாக்குகின்ற மனித அவலத்தை கொலைகார யுத்தம் ஏற்படுத்துகின்றது. அப்பாவி ஏழை எளிய குழந்தைகளை பலியிட்டு, மனித நாகரிகத்துக்கு எதிரான வக்கிரத்தைப் புகுத்தி, மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுத்தராத யுத்தத்தை மனித இனத்தின் மீது திணிப்பதை நாம் அங்கீகரிக்க முடியாது. தமிழ்பேசும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வுக்காக நியாயமான யுத்தத்தை புலிகள் ஒருநாளுமே நடத்தவே முடியாது. மாபியாத்தனத்தையும், அராஜகத்தையும் கொண்டு தமிழ்மக்களை அடக்கியொடுக்க, ஒரு யுத்தம் புலிகளுக்கு அவசியமாகி நிற்கின்றது. மனித இழிவைப் புகுத்தி, மனித அடிமைத்தனத்தை ஏற்படுத்தி, தமது சொந்த நலன்களை அடையவே, தமிழ் மக்களைப் பலியிடப்படுவதையே இந்த யுத்த முனைப்பின் மூலம் நாம் காண்கின்றோம்.

பாசிசப் புலிகள் நடத்தமுனையும் யுத்தம், பேரினவாதிகளின் இன வெறியாட்டத்துக்கு தீனி போடுகின்றதே ஒழிய அதை ஒழித்துக்கட்ட முடியாது. புலிகளின் இருப்பு பேரினவாதத்தின் இருப்பில் எப்படி தங்கியுள்ளதோ, அதுவே தலைகீழாகவும் பொருந்துகின்றது. நியாயமான மக்கள் யுத்தத்தை புலிகள் நடத்த முடியாது, அனைத்து சமூக அடிப்படையும் இழந்து மாபியா பாசிட்டுகளாகவே மாறிநிற்கின்றனர். புலிகளின் ஆதரவுத் தளம் மாபியாத்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், பொறுக்கி வாழும் கும்பல் அதன் பின்னால் யுத்தவெறியுடன் கூச்சலிடுகின்றது.

யுத்தத்தின் மூலம் தீர்வு என்றும், இறுதி யுத்தம் என்றும், தலைவரின் முடிவுக்காக தவம் கிடந்து காத்திருப்பதாக கூறும் இவர்களின் யுத்த வெறிக் கூச்சல் ஒருபுறம், மறுபக்கத்தில் இறுதி யுத்தம் இன்னமும் பிரகடனப்படுத்தப்படவில்லை. இறுதி யுத்தம் மூலமான தீர்வு என்கின்றார்களே! அந்த தீர்வு என்ன? அது எப்படி சாத்தியம்? பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியாதவர்கள், அதில் பேரினவாத அரசை வெல்ல முடியாதவர்கள், எப்படி யுத்தம் மூலம் தீர்வைப் பெறுவார்கள்? பேச்சுவார்த்தை மேசையைவிட்டு ஒருதலைப்பட்சமாக ஓடிவந்தவர்கள், யுத்தத்தின் பின்னணியில் எப்படி எந்த வழியில் வெல்வார்கள். அரசியல் ரீதியான தோல்வி கண்மூடித்தனமான யுத்தவெறியாகுமே ஒழிய, ஒரு அரசியல் தீர்வைத் தராது. இந்த நிலையில் தான், முட்டாள்தனமாக யுத்தம் மூலம் தீர்வு காணமுடியும் என்கின்றனர். இப்படி யுத்தம் பற்றி கற்பனையில் கனவுலகில் புலித்தேசியத்தை நகர்த்த முனைகின்றனர்.

மீண்டும் யுத்தத்தை நோக்கி செல்வதில் போட்டி போடுகின்றனர். யார் முதலில் யுத்தத்தைத் தொடங்கியது என்பதை சொல்லாத வகையில், யுத்தத்தை தொடங்கி நடத்துவதில் தான் கவனம் கொள்கின்றனர். அங்கு கூட தார்மீக நேர்மை கிடையாது. இரகசியமான முழுமையற்ற ஒரு மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தை முன் கூட்டியே தொடங்கிவிட்டனர். வெளியில் தத்தம் நேர்மையற்ற போலித்தனத்தை மூடிமறைக்க அமைதி சமாதானம் பற்றி புல்லரிக்கும் வகையில், மயிர்பிளக்கும் பினாமி வாதங்கள். யுத்தநிறுத்தம் தொடர்வதாக கூறிக் கொண்டு, யுத்த முனைப்பை தூண்டுகின்றனர். யுத்த நிறுத்தம் தொடர்வதாக கூறிக்கொண்டு, இரண்டுதரப்பு தத்தம் அரசியல் நேர்மையையும் அம்மணமாகவே மானவெட்கமின்றி தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

நோர்வேயும், உலகமும் யுத்தநிறுத்த ஒப்பந்த பேப்பரை கையில் தூக்கி காட்டியபடி தம் பங்குக்கு புலம்பி அழுகின்றனர். அவர்களாகவே வலிந்து கையெழுத்திட்ட ஒப்பந்த விதிகளை நேர்மையாக கடைப்பிடிப்பார்கள் என்று எம்மை நம்புமாறு கூறமுனைகின்றனர். அதைக் காட்டி சிணுங்குகின்றனர். இரண்டு பாசிச அமைப்புகள், தாம் செய்த ஒப்பந்தத்தை நேர்மையாக எப்படித் தான் கடைபிடிக்க முடியும்? ஒரு தரப்பு மக்களின் விடுதலைக்காக நேர்மையாக செயல்படுவதாக இருந்தால், அது வேறுவிதமாக அமையும். நியாயமான யுத்தத்துக்கு கூட பாசிசம் வலிந்துதள்ளும். ஆனால் இரண்டு பாசிட்டுகள் சூழ்ச்சிகளும், சதிகளும், நியாயமற்ற கோரிக்கையினுள்ளும், யுத்த நிறுத்த மீறலையே ஆணையில் வைக்கும். இதுவே நிகழ்ந்தது. மக்களை இடையில் நிறுத்தி பந்தாடுவதன் மூலம் அவர்களை கொன்று குவிப்பதே நிகழ்கின்றது.

தாமாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவர்களே தான் கையெழுத்திட்டனர் என்ற வகையில், அவர்களே சந்தேகிக்க வண்ணம் அதை அவர்களே மறுத்தளித்தனர். பாசிச அமைப்புகள் என்ற வகையில், அதை நடைமுறைப்படுத்துவதில் தமக்கேயுரிய ஜனநாயகவிரோத உணர்வுடன் அதை மறுதளித்தனர். இந்த ஒப்பந்தம் மக்களுக்காக, மக்களின் நலனை அடைப்படையாக கொண்டு உருவானவையல்ல. தத்தம் குறுகிய நலகைன அடிப்படையாகக் கொண்டு, குறுகிய நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில், மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. மக்களை நலனை அடிப்படையாக கொண்டு ஒப்பந்தம் உருவாக்கப்பாடத நிலையில், மக்களுக்கு எதிராகவே அது இருந்தபோதும் கூட, அவர்கள் செய்து கொண்ட அவர்களின் ஒப்பந்தத்தை அவர்களே மீறுவது மன்னிக்க முடியாத மனிதவிரோதக் குற்றமாகும்.

யுத்தநிறுத்த மீறல் என்பது, ஆரம்ப முதலே அதன் அத்திவாரமாக இருந்தது. தமிழ்பேசும் மக்களின் ஜனநாயகத்தை அங்கீகரிக்க மறுத்த அரசும் புலிகளும், இதற்காக ஒருங்கே கடிவாளமிட்டனர். சாதாரண மனிதன் தன் கருத்தை சொல்ல முடியாத பாசிச சூழலில், இந்த ஒப்பந்தம் இலகுவாக மீறப்படுவது ஒரு நிகழ்சியாக உலகம் அங்கிகரித்தது. பேச்சுவார்த்தையின் உள்ளடக்கமும், கோரிக்கைகளும் மக்களுக்கு தெரியாத வகையில் இரகசியமாக்கப்பட்டன. அந்தளவுக்கு அவை மக்கள் விரோதத் தன்மை வாய்ந்தவையாக, அதுவே பேரம் பேசலுக்குள்ளாகியது. மனிதனின் அடிப்படை உரிமைகளை அங்கிகரிக்காத, அதை நடைமுறைப்படுத்தாத ஒப்பந்தம், அதைப்பற்றி பேச மறுப்பவர்கள், இயல்பாகவே ஒப்பந்தத்தை மீறுவதை அடிப்படையாக கொண்டு கொலைவெறியாட்டமாடினர். இதற்கு உலக நாடுகள் ஒத்தூதியது.

பாசிசக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட பேரினவாதம் ஒரு அரசாக இருந்தமையால், இயல்பாகவே ஓப்பந்த மீறல்களை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி மிதமாக நடந்து கொண்டது. அதாவது ஓப்பந்தத்தை கடைப்பிடிப்பதன் மூலம், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியது. மாறாக மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட பாசிசப் புலிகள், அரசு அல்லாத ஒரு அராஜகக் கும்பலாக இருந்தால், ஆரம்ப முதலே ஒப்பந்தமீறலையே சதா தமது அரசியலாகக் கொண்டிருந்தனர். அமைதி சமாதானம் நிலவிய ஒவ்வொரு நாளும், சராசரியாக ஒருவரைப் புலிகள் கொன்றனர். இதுபோன்று பலவற்றை பலதளத்தில் மக்களுக்கு எதிராகவே புலிகள் செய்தனர். பணத்தை திரட்டுவதில் மாபியா வழிமுறையை ஆணையில் வைத்து, கோடிகோடியாக மக்களின் உழைப்பைத் திருடினர். மக்கள் மூச்சக்கு கூட வரிவிதித்தனர். இந்தத் திருட்டைத் தான் அவர்கள் அரசியல் வேலையென்றனர்.

சுனாமியை உருவாக்கிய மனித பிணங்களைக் காட்டி, அவர்களுக்கு உதவ என்று கூறி, அந்த மக்களுக்கு என்று மக்கள் கொடுத்த பல நூறு கோடி பணத்தை திருடி ஏப்பமிட்டனர். அதில் ஒருபகுதி யுத்தவெறி கூச்சல் ஊடாகவே, மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது.

இப்படியான மக்கள் விரோதிகள் தாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையே மறுத்தனர். கடத்தல், சித்திரவதை, கொலை, கொள்ளை, கப்பம், வரி என்று எண்ணில் அடங்காத மனித அவலத்தையே, தமிழ் மக்கள் மீது திணித்தனர். இதையே அவர்கள் அரசியல் என்றனர். மாற்றுக் கருத்து, அவர்களுடன் முரண்பாடாக கதைத்தல், பணம் தரமறுத்தல் என அனைத்துக்கும் அவர்கள் கொடுத்த பரிசோ, கைதும் சித்திரவதையும் கொலையுமாகும். இதை அனுபவித்தது எதிரிகள் அல்ல, தமிழ் மக்களே. இப்படி யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல் நடந்தபோது, மக்கள் வாயே திறக்கமுடியாத மந்தைக் கூட்டமாக அடிபணியும் இழிந்தவராக்கப்பட்டனர். இப்படி ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமாக புலிகளால் பந்தாடப்பட்டது. மறுபக்கத்தில் இராணுவம் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை போன்றவற்றில் ஈடுபடுவதை முற்றாக நிறுத்தியிருந்தது. புலிகள் மட்டும் இதை குத்தகைக்கு எடுத்து, அதையே அரசியல் என்றனர்.

பேரினவாதம் புலிகளின் இந்த மக்கள் விரோத வக்கிரத்தை ஊக்குவித்து, தமிழ் மக்களிடம் இராணுவம் நல்ல பிள்ளையாகவே தன்னைக் காட்டிக் கொண்டது. சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டு, புலிகளின் அரசியலற்ற இராணுவ பேரங்களுக்குள் வெற்றிகரமாகவே புலிகளை தொடர்ச்சியாக தனிமைப்படுத்தினர். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை புலிகள் பேசமறுத்து, புலிப்பிரச்சனைiயை மட்டும் புலிகள் பேச, இதுவே பேரினவாதத்தின் வெற்றிகரமான பேரினவாத அரசியலாகியது. புலிகள் கண்மண் தெரியாத வேகத்தில் தோல்விகளைச் சந்தித்தனர். ஆனால் அதை நியாயமாக மக்கள் முன் முன்வைக்க முடியாத வகையில், புலிப் பேரங்களுக்குள் முடங்கிப் போனார்கள். புலியே தமிழ் மக்கள் என்ற புலிப் பாசிசத்தை, பேரினவாதம் தனக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. புலியின் பாசிசத்தைக் காட்டி, அதை உலகளாவில் தனிமைப்படுத்தியதன் மூலம், தமிழ் மக்களையே குறிவைத்து தனிமைப்படுத்தினர்.

இதன் மூலம் பேரினவாதம் தமிழ் மக்களின் உரிமையை மறுத்தனர். புலியையும் மக்களையும் ஒன்றாக காட்டி, புலிகளின் பாசிசத்தின் மூலம் தமிழ் மக்களையே இழிவுபடுத்தியது. தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை மறுத்தனர். அனைத்தையும் புலியாக காட்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்துக்கு தீனி போட்டனர். இந்த இனவாதத் தீ, தீக்கொழுந்தாக மாறி தமிழ் பிரதேசத்திலும், தமிழர் அல்லாத பிரதேசத்திலும் இனப்பிளவுகளை ஆழமாக்கியது. இருந்தபோதும் மிகக் கவனமாகவே இராணுவ ரீதியாக இதை கையாளாத வகையில் செயற்பட்டது. புலிகள் அளவுக்கு பாரிய யுத்த நிறுத்த மீறலை பேரினவாத அரசு செய்யவில்லை. வழமையான கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வன்முறைகள் நடைபெறுவதை முற்றாக நிறுத்தியது. இது அறவே இல்லாத பொதுச் சூழலே, பொதுவாக தமிழ் பிரதேசத்தில் நிலவியது. அரசியலற்ற இராணுவ நடத்தைகளை அடிப்படையாக கொண்ட புலித் தேசியம் அரசியலில், தொடர்ந்தும் இந்தநிலை நீடித்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் அதுவே கிலியாக மாறியது.

அரசியல் ரீதியாக இனவாத அரசுடன் பேரம் பேசும் அரசியல் ஆற்றலை இழந்த புலிகள், அதில் இருந்து ஒருதலைப்பட்சமாக தாமாக விலகிக் கொண்டனர். பேசுவதையும், கோருவதையும் பகிரங்கமாக முன்வைத்து தம்பக்க நியாயத்தை பேசமுடியாத அளவுக்கு, குறுகிய நலன் கொண்ட மக்கள் விரோதக் கோரிக்கையாகவே புலிகளின் அரசியல் கோரிக்கைகள் சிதைந்துபோனது. பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகவே இது நடந்தேறியது. பேரினவாதம் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கையை பேசுவதற்கு பதில், குறுகிய புலிக்கோரிக்கையை பேசியதன் மூலம் அரசியல் இலாபம் அடைந்தனர். இதன் மூலம் அரசு, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகவே பலம் பெற்றது. அமைதி சமாதானத்தை கடைப்பிடிப்பதாக உலகுக்கு காட்டிக் கொள்வதிலும் வெற்றிபெற்றது. புலிகளின் அரசியல் ரீதியான இருப்பே கேள்விக்குள்ளாகியது. இதில் இருந்து தப்பிப்பிழைக்க இராணுவத்தை சீண்டுவது அவசியமாகியது. இராணுவத்தை உசுப்பிவிட்டு, அதன் கோரமுகம் தம்மை விட கோரமானதாக காட்டவிரும்பி இராணுவத்தை சதா கிண்டிக்கிளறினர். தம்மை இராணுவத்தைவிட மேன்மையானவராக காட்டிக் கொள்வது புலிக்கு முன் நிபந்தனையாகியது. இராணுவம் மீதான சீண்டுதலை புலிகள் வலிந்து தொடங்கினர். சதா இராணுவத்துடன் மோதல் நடப்பதாக காட்டுவதும், இராணுவம் மக்களை துன்புறுத்துவதாக காட்டுவது புலியின் இராணுவ அரசியலுக்கு அவசியமாகியது.

மக்களின் அரசியல் உரிமை என்ற அரசியல் எல்லைக்குள் போராடுவதை தவிர்த்து, குறுகிய இராணுவ வாத்துக்குள் இராணுவத்தைச் சீண்டினர். தொடர்ச்சியான சீண்டுதல்கள் மூலம், இராணுவத்துடன் வலிந்து பல மோதல்களை மக்களின் பெயரில் உருவாக்கினார்கள். இராணுவம் செய்தது போன்று சம்பவங்கைள புலிகளே செய்து, அதைத் திரித்து இராணுவத்துக்கு எதிரானதாக மாற்றினர். இப்படி இராணுவத்துடான மோதல்கள், சீண்டல்கள் மூலமான எதிர்வினைகளைக் கொண்டே, தம்மை அரசியல் ரீதியாக தக்கவைக்க முனைந்தனர். ஆனால் இதிலும் அவர்கள் வெற்றி பெறமுடியவில்லை. இராணுவம் அரசு என்ற வடிவில் கொண்டிருந்த கட்டுப்பாட்டை, அரசாக அல்லாத அராஜகவாத குழுவின் செயற்பாட்டால் வெற்றி கொள்ளமுடியவில்லை.

இதனால் இராணுவத்தைக் கொல்லுதல், இராணுவத்தை தாக்குதல் என்ற வடிவிற்கு புலிகள் நிலைமையை மாற்றினர். அனைத்தையும் தமிழ் மக்கள் செய்வதாகவே பசப்பினர். திடீர் தாக்குதலை நடத்தினர். அதையும் மக்களின் மேல் அபாண்டமாகவே போட்டனர். இப்படி இராணுவம் மீதான ஒரு தலைப்பட்சமான தாக்குதல்கள், கொலைகள் ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியது. கிளைமோர், கைக்குண்டு வெடிப்பு அன்றாட அரசியல் நிகழ்ச்சியாக மாறியது. இராணுவம் எதிர் வன்முறையின்றி அமைதிகாத்தது. இருந்தபோதும் கூட, இதிலும் இராணுவம் ஒரு நெகிழ்ச்சிப் போக்கைக் கையாண்டது. புலிகள் இதன் மூலம் கூட, தம்மையும் தமது கட்டமைப்பையும் பெரியளவில் தக்கவைக்க முடியவில்லை. புலிப் பினாமிகளுக்கு மட்டும், இது உற்சாகம் தருவதாக இருந்தது. மக்கள் இதில் இருந்து விலகி அமைதியை விரும்பினர். புலியின் தாக்குதலுககு எதிரான அபிப்பிராயத்துடன் மௌனமாகவே வாழவேண்டிய அளவுக்கு அவர்கள் மேல் படுகொலைகளை புலிகள் தீவிரமாக்கினர்.

புலிகள் தாக்குதலை படிப்படியாக இராணுவம் மீது விரிவுபடுத்தினர். இராணுவமும் புலிப்பாணியில் செயற்படத் தொடங்கியது. இனம் தெரியாத படுகொலைகளை, இனம் தெரியாத கடத்தலை புலியின் வழியில் தொடங்கினர். புலிகளைப் போல் ஊடுருவித் தாக்குதல் என்ற வடிவத்தைத் தொடங்கினர். இதில் இராணுவமும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றது. இதற்கு முன்னை நாள் துரோகக் குழுக்களையும், கருணா குழுவின் ஒருபகுதியையும் கூட பயன்படுத்திக் கொண்டது. இதைவிட கருணா குழு மட்டும் தனது தனித்துவமான புலிகள் மேலான தாக்குதலை மட்டும் உரிமை கோரியது. மற்றவைகளை இனம் தெரியாத தாக்குதலாகவே, புலிகளின் பதிலில் பதிலளித்தனர். புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலியின் சுதந்திரமான நடமாட்டத்தை இதன் மூலம் சிதைத்து வருகின்றனர். இப்படி ஒரு இரகசியமான யுத்தத்துக்கு புலிகள் பாணியில் இராணுவம் முன்னேறியது.

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தொடர்ச்சியான கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று புலிகள் கூறியதன் மூலம், அதன் பாதுகாப்புக்கு இராணுவமே பொறுப்பு என்று கூறியதன் மூலம், புலிகள் அல்லாத பிரதேச கண்காணிப்பை அதிகரிக்கவைத்தனர். கடத்தல், காணாமல் போதல், கொலைகள் அன்றாட நிகழ்ச்சியாக்கினர். யார் ஏன் கொல்லப்பட்டனர், கடத்தப்பட்டனர் என்ற தகவல்கள் அனைத்தையும், குறித்து குற்றம்சாட்ட முடியாத வகையில் அனைத்தையும் புலிகள் மாற்றி அமைத்தனர். அதற்கு தாமும் இரையாகினர். மக்கள் படைகள், பெயர் பலகையற்ற துண்டுப்பிரசுரப் பேர்வழிகளின் அறிக்கைகள் கூட படிப்படியாக காணாமல் போனது.

உண்மையில் புலிகள் பாணியில் இராணுவமும் தன் வழியை தீர்மானித்துக் கொண்டு செயலாற்றியது. யுத்த நிறுத்த மீறல்கள் இனம் தெரியாதவையாகி அதுவே நாற்றமெடுக்கும் வண்ணம் பெருகியது. யுத்த நிறுத்தம், அமைதி, சமாதானம் புலிகள் மற்றும் இராணுவத்துக்கு இடையில் சிக்கிக் கொண்டது.

புலிகளின் தாம் இருந்த நிலையில் இராணுவத்தை சீண்ட எடுத்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெறமுடியவில்லை. எல்லாம் கமுக்கமாக அடங்கிப் போனநிலையில் தான், யுத்தத்தை தூண்டும் வகையில் பாரிய தாக்குதல்கள் இராணுவ முகாங்களை நோக்கி முடுக்கிவிடப்பட்டது. இதையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இராணுவம் கையாண்டது. மாவீரர் செய்தியில் பிரபாகரன் கூறியது போல், ஒரு இராணுவத் தாக்குதலை தொடங்க புலிகள் எடுத்துவந்த பல முயற்சிகள், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ எதிர்வினை மூலம் புலிகளை அதற்குள் முடக்கினர்.

யுத்தத்தை நோக்கிய நகர்வுகளைக் கூட, எதிர்வினையாக காட்டி இராணுவம் மட்டுப்படுத்தியது. புலிகளின் தாக்குதல் எல்லைக்குள், இரணுவத்தின் எதிர்வினைகள் விரிவானதாக நடத்தி மட்டுப்படுத்துகின்றனர். இப்படி ஒரு முன்முயற்சி கொண்ட புலிகளின் இராணுவ நடவடிக்கை முன்னேற முடியாது தேங்கி விடுகின்றது. இன்று நடந்து கொண்டிருப்பது இதுதான். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் இப்படி இராணுவவாதத்துக்குள் காணாமல் போய்விடுகின்றது. எல்லாம் புலி மயமாகி அதற்குள் அஸ்தமாகி வருகின்றது. இதில் மீட்சி என்பது தமிழ்மக்கள் தமது விடுதலைக்காக தாமே போராடுவதில் மட்டுமே அமைதியையும் சமாதானத்தையும் அடையமுடியும். இதற்கு மாற்று வழி கிடையவே கிடையாது.


ஒப்பந்தங்களும் பேரினவாதிகளும்

பி.இரயாகரன்
05.01.2007

ப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள் முதல் அரசுடன் கூட்டு முன்னணி அமைப்பவர்கள் வரை, இந்த பேரினவாத எல்லைக்குள் தான் தம்மையும் குறுக்கி வைத்துள்ளனர்.

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் எதையும், இவர்கள் யாரும் கண்டுகொள்வதே கிடையாது. மக்களின் துன்ப துயரங்களை உருவாக்குவதன் மூலம், தாம் வாழ்வதே அவர்களின் அரசியல் கொள்கையாகிவிட்டது.

இதற்குள்ளாகத் தான் யுத்தநிறுத்த ஒப்பந்தமும், அதை கிழித்தெறிவது வரையும் நடைபெற்றது. சிரான் ஒப்பந்தம், சுனாமி மீள்கட்டுமான ஒப்பந்தம் என பற்பல. எல்லாம் கிழிக்கப்பட்டது. இது ஒருபுறம். மறுபுறம் உருவாக்கிய ஒப்பந்தம் புதியதாக மனித துயரங்களை உருவாக்கியது என்றால், அதை கிழிப்பதும் மற்றொரு மனித துயரத்தை தொடங்குவது என்று அர்த்தம். மக்களின் நன்மைக்காக யாரும் கையெழுத்திடவில்லை, அது போல் கிழித்தெறிவதுமில்லை. எல்லாம் சுயநலம் கொண்ட கும்பல்களின் குறுகிய அற்பத்தனங்கள் தான் இவை.

எல்லா அரசியல் கட்சிகளும் இதற்குள் தான், தமது இலாப நட்ட கணக்குகளுடன் பினாற்றுகின்றனர். செய்து கொண்ட ஒப்பந்த்ததை கிழிப்பதால், உண்மையில் யார் இலாபம் அடைகின்றனர். பேரினவாதிகள், யுத்த வெறியர்கள், இதை ஆதரிக்கும் அரசியல் வாதிகள், யுத்தம் மூலம் சம்பாதிப்பவர்கள், அரசின் தயவில் இயங்கும் தமிழ் கூலிக் குழுக்கள் தான், யுத்தம் மூலம் நிறைவான இலாபத்தை அடைகின்றனர். தமிழ் சிங்கள மக்களோ, இதைக் கிழித்தெறிவதால் எந்த இலாபத்தையும் அடையப்போதில்லை. அவர்கள் யுத்தத்தின் சுமையிலான துயரங்களையும் துன்பத்தையும் இதன் மூலம் அடைவர். மக்களின் தலைக்கு மேல் இதை சுமத்திவிடத் தான், ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம் அiவு அரங்கேறுகின்றது.

எப்படி மக்கள் யுத்தத்தை விரும்பவில்லையோ, அப்படி ஒப்பந்தத்தைக் கிழிப்பதையும் மக்கள் விரும்பவில்லை. இப்படி மக்களின் விருப்புக்கு எதிரானதே, அரசியல் கட்சிகளின் முடிவுகள். அகிம்சைக்கு பரிசு பெற்ற ஆனந்தசங்கரி கூட, ஓப்பந்தத்தை கிழிப்பதை ஆதரிக்கும் ஒரு பாசிச யுத்த வெறியனாக வெளிவந்துள்ளான்.

செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் சரத்துகளின் சரி பிழைகளைக் கடந்து, அதைக் கையெழுத்திட்டவர்களை கடைபிடிக்கக் கோருவது மட்டும் தான், குறைந்தபட்சம் மக்கள் அரசியலாகும். இதை யாரும் செய்ததில்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் யாரும் அரசியல் செய்வது கிடையாது.

தாம் தேர்ந்தெடுத்த சுயநலமான சொந்த விதிகளுடன் தான், இந்த ஒப்பந்தம் உருவானது. இப்படி புலிகளும் அரசும் மக்களின் பெயரில் செய்து கொண்ட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தமோ, தனது உயிருக்காக போராடியபடி படுக்கையில் கிடந்து நாறியது. இறுதியில் அதை திருகிக் கொல்வது என்று அரசு முடிவு எடுத்து, அதைக் கொன்றுள்ளது. இதைக் கருணைக்கொலை என்று யுத்த விரும்பிகளும், இதனால் இலாபமடையும் கும்பல்களும் கருத்துரைத்துள்ளது. தமிழ் கூலிக் குழுக்கள் முதல் ஜே.வி.பி வரை இதையே, தமது ஒப்பாரியாக பாடுகின்றனர். அரசு விரும்பும் யுத்தம் தான், தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றனர். இதற்கு வெளியில் எந்த மாற்றும் அவர்களிடம் கிடையாது. தம்மிடம் ஒரு பொம்மை ஆட்சியை தரும்படி கோருகின்றனர். எப்படி அவர்கள் இருப்பு பேரினவாத அரசு சாhந்து உள்ளதோ, அப்படியான ஒரு ஆட்சி தான், தமிழ் மக்களின் தீர்வும் என்கின்றனர். வளர்ப்பு நாய்கள் அப்படித்தான் வாலாட்டியும், குலைத்தும் கேட்கின்றது.

புலிகளும் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தம் மக்களுக்கானதல்ல என்பதை, நாம் ஆரம்பம் முதலே கூறிவந்துள்ளோம். மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ஒரு ஒப்பந்தம் ஒன்றைத் தான், இரண்டு மக்கள் விரோதிகளும் செய்திருந்தனர். தமது குறுகிய நலனை அடையும் வகையிலான இந்த ஒப்பந்தம், கூனிக்குறுகி சேடம் இழுத்தபடியே நடமாடியது. சர்வதேச தலையீட்டால் ஒப்பந்தத்தின் உயிர் பிரிய மறுத்தது. பாவம் தமிழ் மக்கள். அமைதி சமாதானம் என்ற பெயரில், மக்களை வேட்டையாடியது ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தம் ஒரு பக்கத்தில் பொதுவான யுத்த வன்முறையைக் குறைத்தது. அதே நேரம் இந்த ஒப்பந்தம் புதிய வன்முறையை உருவாக்கியது. புலிகள் தமது குறுகிய நலனுக்கு ஏற்ப, தமக்கு சாதகமாகத் தான் செய்தனர். தமது குறுகிய நோக்கில், முழு தமிழ் மக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மக்கள் ஒவ்வொருவரையும் தமது கண்காணிப்பு முறைக்குள் கொண்டு வந்தனர். புலிகளின் வழமையான உருட்டல் மிரட்டல்கள் முதல் படுகொலை வரையான பாசிச சூழலுக்குள் மக்களைச் சிக்கிக் வைத்தது. இங்கு வரி, கப்பம் முதல் அனைத்தும் மாபியா வழியில் அரங்கேறியது. மக்கள் அச்சம், திகில், மிரட்சி என பாரிய மனநோய்க்கு உள்ளானார்கள்.

மறுபக்கத்தில் பேரினவாதமும் புலிகளும் தாம் மோதிக்கொள்ளும் யுத்தத்தை நிறுத்தியது. இதனால் இந்த ஒப்பந்தம் மூலம், மனித இழப்புகள் குறைவடைந்தது. யுத்தச் சுமை குறைந்தது. ஆனால் மக்களை நிமிர விடாது, புலிகள் தேர்ந்தெடுத்த கொலைகளை தொடங்கினர். கடத்தல்கள், காணாமல் போவதையும் தமது அரசியலாக்கினர். இப்படி மகிந்த அரசு பதவிக்கு வரமுன்பாக 1000 பேர் வரை புலிகள் கொன்றனர். இப்படித்தான் அமைதி சமாதான காலத்தில் புலிகள் செயல்பட்டனர்.

இப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது புலிகளைப் பொறுத்த வரையில், கொல்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான ஒன்றாக மாறியது. அதேநேரம் மக்கள் யுத்தக் கெடுபிடியில் இருந்த விடுபட்டு சிறிது மூச்சுவிட்டனர்.

மறுபக்கத்தில் புலிகளின் இந்த விருப்புடன் இணங்கிச் சென்ற அரசு, ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதில்லை என்பதில் வெற்றி பெற்றது. புலிகள் அதைக் கோரவில்லை. அரசும் அதை முன் வைக்கவில்லை. சமாதானம் அமைதி என்ற பெயரில் அவர்கள் மக்களுக்கு எதிராக இப்படித் தான் நாடகமாடினர். மக்களுக்கு எதிராகவே இருப்பதில், எதிரிகளாக கருதிக்கொள்ளும் இவர்களிடையே என்ன அதிசயிக்கத்தக்க ஒற்றுமை.

அமைதியை, சமாதானத்தை அடையும் பாதையில் இருதரப்பும், எந்த அக்கறையும் எடுக்கவில்லை. புலிகள் அதைக் கோரவுமில்லை, அரசு அதைக் கொடுக்கவுமில்லை.

விளைவு அரசியல் நெருக்கடியாக மாறியது. அரசியல் பேச்சு வார்த்தை என்பதில், புலிகள் கோட்டை விட்டனர். அரசியல் தீர்வுக்குப் பதில், தமது குறுகிய நலன் சார்ந்த விடையங்களையே புலிகள் அரசியலாக பேசினர். இதனால் அரசு அரசியல் ரீதியாக பேச்சு வார்த்தையில் வெற்றி பெற்றது. பேரினவாத அரசின் நெருக்கடி என்பது, தமிழ் மக்களுக்கு வழங்கும் அரசியல் தீர்வில் தான் அடங்கியுள்ளது.

புலிகள் வரி, கப்பம், கொலைக்குள் மூழ்கியபடி, அனைத்தையும் கோட்டைவிட்டனர். தமிழ் பேசும் மக்களின் தீர்வு என்ன என்ற கேள்வியை, அரசை நோக்கி புலிகள் எழுப்பவேயில்லை. இடைக்கால அதிகாரம் பற்றி பேசியவர்கள், தமது குறுகிய நலனில் தான். அரசோ குறுகிய நலனின் பின்புலத்தைச் சுட்டிக்காட்டியே, இலகுவாக புலிகளை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்துவதில் வெற்றிபெற்றது.

அரசியல் ரீதியாக தோற்றுப் போன புலிகள், யுத்தத்ததை தொடங்குவதன் மூலம் வெல்லமுடியும் என்ற நம்பிக்கையையும், அனுமானத்தையும் பேச்சுவார்த்தைக்கு மாற்றாக நம்பத் தொடங்கினர். யுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக தொடங்க விரும்பினர். ஆனால் சுனாமி இலங்கையை தாக்கியதால், புலிகள் விரும்பிய வலிந்த யுத்தம் பின் போடப்பட்டது. சுனாமியின் கோரமோ மனிதப் பிணமாக, புலிக்கு அது பண மழையாகியது. இதை யுத்த வெறிக்கு ஏற்ப, ஆயுதக் கொள்வனவில் திருப்பிவிட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களோ, அனாதைகளாக கேட்பாரின்றி நாதியற்று இழிந்து போனார்கள்.

நவீன ஆயுதம் மூலம், யுத்தத்தை வெல்ல முடியும் என்று மேலும் பலமாக புலிகள் நம்பினர். இப்படியான உணர்வுகள், அரசியல் பேச்சுவார்த்தையை செய்யும் அரசியல் இன்மை, ஆளுமையின்மை, போன்றவற்றின் தாக்கத்தினால் அரசியல் பேச்சுவார்த்தையை முற்றாகவே நிறுத்தியது. புலிகளின் அரசியல் நெருக்கடியோ முத்தி முதிர்ந்து வந்தது. ஆயுதத்தை சதா வழிபட்டுக் கொண்டு இருக்க, உள் முரண்பாடுகள் அதிகரித்தது. கருணாவின் பிளவு, இதை மேலும் அகலமாக்கியது. தொடர்ச்சியான நெருக்கடியில் இருந்து மீள, யுத்தமே ஒரேயொரு மாற்று வழியாகியது. இது புலிகள் முன் இருந்த இலகுவான தீர்வாகியது.

யுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக புலிகள் தொடங்கினர். யாழ்குடாவில் மக்கள் படை என்ற பெயரில் பரவலான தாக்குதலைத் தொடங்கினர். ஆங்காங்கே உதிரியாக, அடுத்தடுத்த பல தாக்குதலை நடத்தினர். ஆனால் அவைகள் திட்டமிட்ட இரகசிய அழித்தொழிப்பு மூலம், முற்றாக முடக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் மீள முடியாத நெருக்கடி.

புலிகள் வலிந்து யுத்தத்தை திணிக்க முனைந்தனர். கிழக்கில் மணலாறு பிரச்சனை, மூதூர் மீதான தாக்குதலை புலிகள் வலிந்து நடத்தினர். விளைவு இதிலும் தோல்வி பெற்றனர். அரசு புலிகளை இப்படியும் அம்பலப்படுத்தினர். அரசு அமைதியாக இருக்க, புலிகள் வலிந்து தாக்குவதாக காட்ட முடிந்தது. அதைக்காட்டியே புலிகளை அழிக்கத்தொடங்கியது. பல பிரதேசத்தை முற்றாகக் கைப்பற்றியது. இப்படி புலிகள் விரும்பிய யுத்தம், புலிகளின் நெருக்கடியை குறைக்கவில்லை, அதிகரிக்க வைத்தது. புலிகளின் இராணுவம் பற்றி அமைப்புக்குள்ளும், வெளியிலும் இருந்த மிகை நம்பிக்கைகள், படிப்படியாக தகரத் தொடங்கியது.

இப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருக்கவே, யுத்தம் தொடங்கியிருந்தது. ஒருவிதத்தில் யுத்தம் என்பது ஒரு மோதலாக தொடங்கி, முழுநிறைவான யுத்தமாக நடக்கின்றது. நாள் ஒன்றுக்கு ஒருவர் இருவர் பலியானது என்பது படிப்படியாக, இன்று 10 பேர் பலியாகுமளவுக்கு யுத்தம் நடக்கின்றது.

இப்படி பிரகடனப்படுத்தாத முழு நிறைவு யுத்தம் நடக்கின்றது. சந்தேகம் கொண்ட அனைவரையும் கொல்லுகின்றது அல்லது அவர்கள் காணாமல் போகுமளவுக்கு சூழல் மாறிவிட்டது. அரசு திட்டமிட்ட ஒரு இரகசியமான அழித்தொழிப்பை நடத்துகின்றது. இதில் பலியானவர் எண்ணிக்கை என்பது, ஆயிரமாயிரமாக தாண்டிச்செல்லுகின்றது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறல்களை, இனம் தெரியாத கடத்தல், காணாமல் போதல் என்றே சுய வக்கிரத்துடன் பதிவிடுகின்றது. அதேநேரம் யுத்த நிறுத்த ஒப்பந்தம், முழுநிறைவான யுத்தத்தை நடத்துவதில் சில நடைமுறைச் சிக்கலை உருவாக்கி வந்தது.

அரசின் கை மேலோங்கியுள்ள நிலையில், யுத்த நிறுத்த ஒப்பந்தம் அரசுக்கு பாதகமாகவே காணப்பட்டது. இது புலிக்கு சார்பானதாக கருதுமளவுக்கு, அரசின் வெற்றிகள் மதிப்பிட்டன. யுத்தத்தை வலிந்து தொடங்கிய புலிக்கு, எதிர்பாராத வகையில் இந்த ஒப்பந்தம் தற்காப்பை வழங்கியது. அரசு இதைக் கிழித்தெறிவது தனது யுத்தத்துக்கு, யுத்த நோக்கத்துக்கு அவசியமாக கருதியது. இதனால் ஒப்பந்தத்தை தடையாக கருதியது.

இந்த வகையில்

1. இந்த ஒப்பந்தம் மூலம் யுத்தக் குற்றங்களும், யுத்த நிறுத்த மீறல்களும் சர்வதேச மட்டத்துக்குச் சென்றது. இதன் மீதான விசாரணைகள், கண்டனங்கள் அதிகரித்து வந்தது. இலங்கையில் அதை அவதானிப்பதை தடுப்பன் மூலம், மனித உரிமை மீறல்களை அதிகரித்த அளவில் சுதந்திரமாக செய்ய முடியவில்லை. இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவது அரசுக்கு அவசியமாகியது. இதன் மூலம் சர்வதேச கண்காணிப்பை அகற்ற முடிவு எடுத்துள்ளனர். எந்தக் கண்காணிப்புமின்றி, சுதந்திரமாக மனித உரிமை மீறல்களை செய்ய இதன் மூலம் இனி முடியும் என்ற நிலை.

2. இதைக் கிழிப்பதன் மூலம் யுத்தத்தை விரும்பும் சக்திகளை முழுமையாக யுத்தத்தின் போக்கில், அரசியல் ரீதியாக அணிதிரட்ட முடியும். தீவிரமான இனவாதிகளையும், யுத்த ஆதரவாளர்களையும் திரட்டி, மேலும் ஆழமான முழு நிறைவான அழித்தொழிப்பு யுத்தத்தை நடத்த அரச முனைகின்றது.

3. அரசின் பெரும்பான்மையின்மையை நிவர்த்தி செய்ய, பேரினவாத சக்திகள் வைக்கும் அடிப்படை நிபந்தனையின் அடிப்படையில், இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவது அவசியமானதாகியுள்ளது. இதன் மூலம் அரசு சந்தித்த, பெரும்பான்மையின்மை என்ற அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க முடியும். இப்படி யுத்தத்தை விரும்பும் இனவாதிகளின் ஆதரவைப் பெற்று, யுத்தத்தை முழு நிறைவாக நடத்த முனைகின்றது.

இப்படி ஒப்பந்தத்தைக் கிழித்தன் மூலம், மனித அழிவுக்குரிய யுத்தம் மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது. பேரினவாத சக்திகள் பலம்பெற்று, அதுவே இலங்கை அரசியலாகிவிடுகின்றது. தமிழ் மக்கள் மூச்சுக் கூட விடக் கூடாது என்பதையே, இந்த கிழிப்பு மூலம் அறுதியிட்டு பேரினவாதம் உரைக்கின்றது.

இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவதால் எந்த மாற்றமும், பாதிப்புமில்லை என்று அரசியல் பிரமுகர்கள், தமிழ் கூலித்தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இவை அப்பட்டமான மக்கள் விரோதத் தன்மையாகும். இதன் விளைவு பயங்கரமானது.

1. யுத்தத்தில் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை, குறைந்த பட்சம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

2. அரசின் மனித உரிமை மீறல்கள் என்பது சுதந்திரமானதாகவும், அதிபயங்கரமானதாகவும் மாறும். நீதிமன்ற சட்டங்களைக் கூட இதற்காக திருத்தும் அபாயம் உள்ளது.

3. கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள் முழு நிறைவாக நடைபெறும்.

4. கைதுகள், மக்களை வெளியேற்றுதல் என்பன தங்கு தடையின்றி நடக்கும்.

5. தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை, எதிர்தரப்பின்றி மலினப்படுத்தியும், பொம்மைகளைக் கொண்டும், தமிழ் மக்களை ஏமாற்ற முடியும்.

5. புலிகளை ஒரு மூர்க்கமான யுத்தத்தில் ஈடுபட வைப்பதன் மூலம், புலிகளின் கட்டாயப் பயிற்சிக்குள்ளாக்கப்பட்ட மக்கள் மீதான பாரிய மனித அழித்தொழிப்பை பேரினவாதிகள் நடத்துவர்.

இப்படி ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம் மக்களுக்கு பாதகமாக பல தொடர்ச்சியான அம்சங்கள் மட்டும் தான் உண்டு. இந்த ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம், பேரினவாத அரசின் கை மேலும் ஒங்கும். இதனால் தான் ஆனந்தசங்கரி முதல் எல்லா புலியெதிர்ப்பு கூலிக் குழுக்களும், ஒப்பந்தத்தைக் கிழித்ததை வரவேற்கின்றனர். இந்த ஒப்பந்தம் கிழித்தெறிவதன் மூலம், தமிழ் கூலிக் கும்பல்கள் ஆயுதமேந்தி சுதந்திரமாக நடமாடவும், மக்களை அடக்கியாளவும், மனித உரிமை மீறலை செய்யவும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். புலிகள் ஒப்பந்தம் மூலம் இதைக் கோரிய போது, புலிகளின் சுயநலம் இருந்தது. ஆனால் மற்றொரு தளத்தில் மக்கள் இந்தக் கொலைகார மக்கள் விரோத கும்பலிடமிருந்து தப்பி மூச்சுவிட இந்த ஒப்பந்தத்தால் முடிந்தது. ஒப்பந்தம் கிழிந்ததன் மூலம், இவர்கள் ஆயுதம் ஏந்துவதால் மக்களின் வதைகள் பல முனையாகிவிடுகின்றது. இதை ஆதரிக்கின்ற தமிழ் கூலிக்குழுக்களின் உள்நோக்கம் இப்படித் தெளிவானது.

தமிழ் மக்களின் அக்கறையின் பால், இவர்கள் யாரும் எந்த அரசியலையும் செய்யவில்லை. அப்படி எதையும் இவர்கள் கொண்டிருப்பதில்லை என்பதே உண்மை. இவை இந்திய, இலங்கைக் கூலிக் குழுக்கள் தான். வேறு எதையும் இதற்கு வெளியில் செய்ய வக்கற்றவர்கள்.

தமிழ் மக்கள் விழுங்கவும் முடியாது, மெல்லவும் முடியாது என்ற நிலையில், யுத்தம் அனைவராலும் கூட்டாகத் திணிக்கப்படுகின்றது. மக்கள் யுத்தத்தின் பெயரில் கொல்லப்படும் நிலைக்குள், யுத்த நிறுத்த ஒப்பந்தம் கிழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமது இனம் சார்ந்த சகல சுயநிர்ணய உரிமையையும் இழந்து, சீரழிந்து சின்னாபின்னமாகி அழிவதை துரிதமாக்கியுள்ளது.


Friday, January 4, 2008

ஆயிரம் காலம் அடிமையென்றாயே அரிஜன் என்று பேரு வைக்க யாரடா நாயே


ஆயிரம் காலம் அடிமையென்றாயே அரிஜன் என்று பேரு வைக்க யாரடா நாயே

Thursday, January 3, 2008

இது ஒரு முழுநிறை யுத்தம்!!!

"தெகல்கா' ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அலட்சியப் படுத்தப் படும் சூழலில், நக்சல்பாரிகளுடைய ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அங்கீகரிக்கிறார் ராய்.

அதே நேரத்தில், மாவோயிஸ்டுகளும் அடக்குமுறையில் ஈடுபடுவதாகவும், ஸ்டாலின்,மாவோ ஆகியோரது ஆட்சியில் லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட தாகவும் சாடுகிறார். ஸ்டாலின் மாவோ மீது ஏகாதிபத்தியங்கள் பரப்பியுள்ள அவதூறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி நாம் ஏற்கெனவே எழுதியிருக்கிறோம். நீளம் கருதியும், மேற்கூறிய விமரிசனங்கள் இந்தப் பேட்டியின் மையக் கருத்துக்கு நேரடியாகத் தொடர்பற்றவை என்பதனாலும் பேட்டியின் அப்பகுதியை வெளியிடவில்லை.

நிலவும் ஏகாதிபத்தியக் கொடுங்கோன்மையையும் ஜனநாயக மோசடியையும் சகித்துக் கொள்ள முடியாமலும், அதே நேரத்தில் கம்யூனிச அமைப்புகளுடன் இணங்கிப் போகமுடியாமலும் இருக்கும் ஒரு அறிவுஜீவி, இன்றைய சூழலில் நடுநிலை வகிக்க முடியுமா என்பதே அவருடைய பேட்டி எழுப்பும் கேள்வி.

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த அறிகுறிகளைத் தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? இதனை எப்பொருளில் நாம் காண வேண்டும்?

இந்த அறிகுறிகளைக் காண நீங்களொன்றும் பிறவி மேதையாக இருக்க வேண்டியதில்லை. நம்மிடையே பேராசையும், நுகர்வு வெறியும் கருக்கொண்ட ஒரு நடுத்தர வர்க்கம் வளர்ந்து வருகிறது. தொழில் வளம் மிக்க மேற்கத்திய நாடுகளைப் போல வளங்களைக் கொள்ளையிடவும், அடிமைப்படுத்திக் கொள்ளவும் நம்மிடம் காலனி நாடுகள் இல்லை. எனவே, நாம் நம்மையே அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நமது உறுப்புக்களையே நாம் தின்னத் தொடங்கி விட்டோம். பலவீனமான மக்களிடமிருந்து நிலம், நீர், வளங்களைப் பறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே, அடங்கக் கூடிய இந்தப் பேராசை வெறியே தேசிய உணர்வாகவும் நல்லொழுக்கமாகவும் சித்தரிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் தொடுக்கப்பட்ட பிரிவினைவாதப் போர்களிலேயே பெரு வெற்றியடைந்த ஒரு போரை இதோ நாம் நம் கண் முன்னால் காண்கிறோம். ஆம், நம் நாட்டின் மேட்டுக்குடி வர்க்கங்களும் நடுத்தர வர்க்கங்களும் ஏனைய இந்திய மக்களிடமிருந்து பிரிந்து தனி நாடாகவே ஆகிவிட்டனர் ............. இப்பொழுது இந்தப் புதிய வல்லரசின் மேன்மை தங்கிய பிரஜைகளுக்கு, தங்களது பிரம்மாண்ட விளையாட்டுப் பொருட்களான கார்கள், வெடிகுண்டுகள், கண்ணி வெடிகளை மென்மேலும் உற்பத்தி செய்வதற்கு நிலமும் தேவைப்படுகிறது. எனவே இது ஒரு முழுநிறை யுத்தம். இரண்டு தரப்பினரும் தத்தம் ஆயுதங்களைத் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.அரசாங்கமும் தொழிற்குழுமங்களும் கண்டுபிடித்திருக்கும் ஆயுதத்தின் பெயர் கட்டுமான மறு சீரமைப்பு. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, அன்னிய நேரடி மூலதனம், அவர்களுக்கு இணக்கமாக நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகள், இணக்கமான அரசியல் வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்களின் இணக்கமான உதவி, இறுதியாக போலீஸ் படை ............. இவற்றின் துணையுடன் இந்தச் "சீரமைப்பு' மக்களின் தொண்டைக் குழிக்குள் மூர்க்கமாகக் குத்தித் திணிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிப் போக்கை எதிர்த்துப் போராட விரும்புவோர் இதுநாள் வரை, தர்ணாக்களையும், சத்தியாக்கிரகங்களையும், நீதிமன்றங்களையும், நேச சக்திகள் என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்த ஊடகங்களையும்தான் தங்கள் ஆயுதங்கள் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றோ துப்பாக்கிகளை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வன்முறை வளருமா? ஆம், வளரத்தான் செய்யும். மக்கள் நலனையும் முன்னேற்றத்தையும் அளவிடுவதற்கு "தேசிய வளர்ச்சி விகிதத்தையும்' பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களையும் அளவுகோல்களாக அரசு பயன்படுத்தும் வரை இந்த வன்முறையும் அதிகரிக்கத்தான் செய்யும். நான் இந்த அறிகுறிகளை எவ்வாறு காண்கிறேன்? அதுதான் கண் எதிரே கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறதே.தலைக்கு மேலே சுற்றும் மின்விசிறியில் பட்டுத் தெறித்து நாற்புறமும் வீசிக் கொண்டிருக்கிறது மலம்.
இதைப் புரிந்து கொள்வது அத்தனைக் கடினமா என்ன?""நான் வன்முறையில் இறங்க மாட்டேன், ஆனால் அதேவேளையில் நாட்டின் இன்று நிலவும் சூழலில், வன்முறையைக் கண்டனம் செய்யவும் மாட்டேன். அவ்வாறு கண்டனம் செய்வது நெறியற்றது'' என முன்பொரு முறை நீங்கள் கூறியிருந்தீர்கள். அதனை விளக்க முடியுமா?நான் ஒரு கொரில்லாப் போராளியானால் மற்றவர்களுக்குச் சுமையாகத்தான் இருப்பேன். மற்றப்படி "நெறியற்றது' என்ற சொல்லை நான் பயன்படுத்தினேனா எனச் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், அறம், நெறி என்பவையெல்லாம் மிகவும் நெகிழ்ச்சியான, புதிரான சொற்கள். அவை தட்பவெட்ப நிலைகளைப் போல மாறக்கூடியவை.

நான் உணர்வது இதுதான்; சாத்வீக இயக்கங்கள் நம்முடைய ஜனநாயக அமைப்பின் எல்லாக் கதவுகளையும் ஆண்டுக்கணக்கில் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு தட்டித் தட்டி அவர்கள் கண்டதென்ன? அலட்சியமாக நிராகரிக்கப்பட்டதையும், அவமானப்படுத்தப்பட்டதையும் தவிர!
போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்டோரையும், நர்மதை பாதுகாப்பு இயக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்நாட்டில் வெறெந்த மக்கள் இயக்கத்திற்கும் இல்லாத அளவில் நர்மதை பாதுகாப்பு இயக்கத்திற்கு பிரபலமான தலைமை, போதிய சக்திகள், ஊடகங்களின் ஆதரவு என எல்லாம் இருந்தது. ஆனால் ஏன் அது வெற்றி பெற முடியவில்லை? அந்த மக்கள் தமது போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள்.
இத்தகைய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் போய் (உலக முதலாளிகள் கூட்டத்தில் மொர்) சத்தியாக்கிரகத்தின் மேன்மையைப் பற்றி சோனியா காந்தி பேசுகிறார் என்றால், அப்போதாவது நாம் யோசிக்க வேண்டாமா?

உதாரணமாக, ஒரு ஜனநாயக நாட்டில் பெருந்திரளான மக்களின் சட்ட மறுப்பு அல்லது ஒத்துழையாமை சாத்தியமா? அதுவும் பொய்களையும் புனைச் சுருட்டுக்களையும் பரப்பும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஊடகங்களின் யுகமான இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமா? பிரபலமானவராக இல்லாத ஒருவர் உண்ணாவிரதம் இருந்து என்ன பயன்? ............. நங்லாமச்சி சேரி மக்களோ அல்லது பட்டி சுரங்கத்தின் தொழிலாளர்களோ உண்ணாவிரதமிருந்தால், யாரேனும் கண்டு கொள்வார்களா? ஐரோம் சர்மிளா கடந்து ஆறாண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். இதிலிருந்தெல்லாம் நம்மில் பலர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். .............

நாம் இப்பொழுது ஒரு முற்றிலும் மாறுபட்ட கால கட்டத்தில், மாறுபட்ட இடத்தில் இருக்கிறோம். ............. மக்கள் போராட்டம் என்பதையே துரோகத்தனமான வியாபாரமாக மாற்றி விட்ட அரசு சாரா நிறுவனங்களின், தன்னார்வக் குழுக்களின் அல்லது வேடதாரிகளின் யுகத்தில் நுழைந்திருக்கிறோம். பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் "ஸ்பான்சர்' செய்யப்படுகின்றன. மாபெரும் போராளிகளைப் போல சண்டப் பிரசண்டம் செய்து விட்டு, பின்னர் தனது பிரச்சாரத்தின் ஒரு சிறு அம்சத்தைக் கூட தொடராமல் கை கழுவும் சமூக மன்றங்களைக் காண்கிறோம். போராட்டங்கள் போலவே தம்மைக் காட்டிக் கொள்ளும் தோற்றப் போலிகள் (திடிணூtதச்டூ) எங்கும் நிறைந்திருக்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்கும் கூட்டங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை முன்னிறுத்துபவர்களாலேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. ............. நேரடியாகவும், மறைமுகமாகவும் டாடாவின் இரு அறக்கட்டளைகள், நாடு முழுவதுமுள்ள செயல்வீரர்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும் நிதியளித்து வருகின்றன. இதன் காரணமாகத்தான் நந்திகிராமை விடவும் சிங்கூரில் எதிர்ப்பு ஆரவாரம் குறைவாக இருந்தது போலும். டாடாக்களும், பிர்லாக்களும் காந்திக்கே படியளந்தவர்கள். நமது முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனமே காந்திதான் என்றும் சொல்லலாம்.

இப்பொழுதுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மிகுதியாகக் கூச்சலிடுகின்றன. கற்றை கற்றையாக அறிக்கைகள் தயாரிக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுடன் சந்தோஷமாகச் சகவாழ்வு நடத்துகிறது. இவற்றிலிருந்தெல்லாம் நாம் என்ன விளங்கிக் கொள்வது? எங்கும் புழுத்து நெளியும் தொழில்முறை சீர்குலைப்பாளர்களால் உண்மையான அரசியல் போராட்டங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. .............

நீதிமன்றங்களில் மக்கள் இயக்கங்கள் நியாயம் வேண்டி நின்ற காலம் ஒன்று இருந்தது. நீதிமன்றங்கள் அநீதியான தீர்ப்புக்களைப் பொழிகின்றன. வறிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் நீதிமன்றம் பயன்படுத்தும் மொழியைக் கேட்கும்போது அதிர்ச்சியால் நமது மூச்சே நின்றுவிடும் போலிருக்கிறது. ............. இந்த நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனத்தின் சித்தாந்த இதயத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களோடு சேர்ந்து நீதிமன்றங்களும் நவீன காலனியாதிக்கத்தின் அச்சாணிகளில் ஒன்றாக மாறி விட்டதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன.

இதுதான் நாம் காணும் சூழல். தாங்கள் நசுக்கித் தரைமட்டமாக்கப்படுவதை உணரும் மக்கள், முடிவில்லாத "ஜனநாயக' வழிமுறைகளில் போராடி இறுதியில் இழிவுபடுத்தப்படும் மக்கள் வேறென்ன செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்?

ஆனால் இதனுடைய பொருள் வன்முறை அல்லது சாத்வீகம் என்ற இரண்டு முரண்பட்ட வழிமுறைகள்தான் உள்ளன என்பதல்ல. ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கையோடும், அதேவேளையில் தங்களது ஒட்டுமொத்த அரசியல் வழிமுறைகளில் அதனை ஒரு பகுதியாகவும் மட்டுமே கருதிச் செயல்படும் அரசியல் கட்சிகள் உள்ளன. இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் ஊழியர்கள் சிறை, சித்திரவதை, பொய்வழக்குகள் என மிகக் கொடூரமாக ஒடுக்கப்படுகின்றனர். .............

மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில், மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, நாம் அவர்களைக் கண்டிக்க முடியுமா? நந்திகிராம் மக்கள் தர்ணா நடத்தி பாட்டு பாடிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசு பணிந்திருக்குமா? அப்படி யாராவது நம்புகிறீர்களா?

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாறுபட்ட காலத்தில், நிலவும் அமைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பது பிரயோசனமற்றது. (சந்தேகமின்றி, நம்மில் பலர் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்) பிரயோசனமாக ஏதேனும் செய்ய விரும்புகிறவர்கள் அதற்கு மிகக் கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய விலையைக் கொடுக்க தயாராயிருப்பவர்களை என்னால் கண்டிக்க இயலாது.
நீங்கள் மிக அதிகமான இடங்களுக்கு பயணித்து வருகிறீர்கள்.

பிரச்சினைக்குரிய பகுதிகள் குறித்தும், அங்கே நிலவும் சூழல், போராடும் தரப்புகள் குறித்தும் சொல்ல இயலுமா?

மிகப் பெரிய கேள்வி எப்படிச் சொல்வது? காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம், குஜராத்தில் நிலவும் நவீன பாசிசம், சத்தீஸ்கரில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போர், ஒரிசாவைக் கற்பழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், மூழ்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான நர்மதை பள்ளத்தாக்கு கிராமங்கள், முழுப் பட்டினியின் நுனியில் விளிம்பில் தவித்து நிற்கும் மக்கள், சூறையாடப்படும் காடுகள், டௌ கெமிக்கல்ஸ் என்ற பெயரில் நந்திகிராமில் நுழையும் யூனியன் கார்பைடு நிறுவனத்தை உச்சி மோந்து வரவேற்கும் மேற்கு வங்க அரசு, இதனைக் காண்பதற்கு இன்னும் உயிரோடிருக்கும் போபால் விஷ வாயுவினால் தாக்கப்பட்ட மக்கள். .............
இவை மட்டுமல்ல, மறைந்து கொண்டு நஞ்சைப் பரப்பும், மீண்டும் வெடிக்கக் காத்திருக்கும் இந்துத்துவாவை எப்படிக் குறிப்பிடாமல் இருக்க முடியும்? இவையனைத்தையும் விட மிகக் கேவலமானது என்னவெனில், இன்னமும் தீண்டாமையைப் போற்றிப் பாதுகாத்து வரும் ஒரு பண்பாடாக, சமூகமாக, நாடாக நாம் வாழ்கிறோம். நமது பொருளாதார வல்லுனர்கள் கோடிகளைக் கணக்கிட்டு, வளர்ச்சி விகிதத்தைக் குறித்து பீற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலட்சக்கணக்கான மலம் அள்ளும் தொழிலாளர்கள் தம் வயிற்றைக் கழுவுவதற்காக கிலோக்கணக்கில் பிறரது மலத்தைத் தலையில் சுமக்கிறார்கள். அடுத்தவன் மலத்தைத் தலையில் சுமக்க மறுத்தால் அவர்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும். அடேயப்பா, இது பெரிய்ய புடுங்கி வல்லரசுதான்!சமீபத்தில் வங்கத்தில் நிகழ்ந்த அரசு, போலீசு வன்முறையை நாம் எப்படிப் பார்ப்பது?

மற்ற இடங்களில் நடக்கும் போலீசு, அரச வன்முறையிலிருந்து எந்த வகையிலும் இது வேறுபட்டதல்ல. பொய், பம்மாத்து, இரட்டைவேடம் ஆகியனவற்றில் தேர்ந்த மற்ற அரசியல் கட்சிகளுக்கு பொது நீரோட்ட இடதுசாரிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. ............. எங்கும் விசித்திரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவில் பனி பொழிகிறது. பகலில் ஆந்தைகள் ஓலமிடுகின்றன. சீன அரசு தனிச் சொத்துடைமைக்காக மசோதா நிறைவேற்றுகிறது. ............. சீனத்தின் கம்யூனிஸ்டுகள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் முதலாளிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கும்போது நமது நாட்டு பாராளுமன்றக் கம்யூனிஸ்டுகளிடம் நாம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? நந்திகிராமும், சிங்கூரும் மிகத் தெளிவான அபாயச் சின்னங்கள்.

போயும் போயும் நவீன முதலாளித்துவத்தில்தான் எல்லாப் புரட்சிகளும் முடிவடைய வேண்டுமோ, வியப்பாகத்தான் இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சி, ரசியப் புரட்சி, சீனப் புரட்சி, வியத்நாம் யுத்தம், நிறவெறிக்கு எதிரான போராட்டம், சொல்லிக் கொள்ளப்படும் காந்திய சுதந்திரப் போராட்டம் ............. இவையனைத்தும் எங்கு போய் நின்று கொள்கின்றன? முதலாளித்துவம் என்பதுதான் நம் கற்பனையின் முடிவா?

பிஜாப்பூரில் 55 போலீசுக்காரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகளை அரசின் மற்றொரு முகம் எனச் சொல்வது சரியாக இருக்குமா?

போராளிகள் எவ்வாறு அரசின் மறு முகமாக இருக்க முடியும்? நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களை, அவர்களுடைய வழிமுறைகள் எவ்வளவுதான் கொடூரமானவையாக இருந்த போதிலும், அவர்களை அரசின் இன்னொரு முகம் என யாரேனும் அழைக்க இயலுமா? அப்படியானால் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அல்ஜீரியர்கள், அல்லது நாஜிக்களை எதிர்த்துப் போராடியவர்கள், அல்லது காலனிய அரசுகளை எதிர்த்துப் போராடியவர்கள், அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கெதிராக ஈராக்கில் போராடிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் அனைவரையும் அரசின் இன்னொரு முகம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அறிக்கைகளால் உருவாக்கப்படும் மேம்போக்கான இத்தகைய "மனித உரிமை'ச் சொல்லாடல்களும், எல்லா வன்முறைகளையும் கண்டிப்பதாகக் கூறிக் கொள்ளும் இந்தப் பழி போடும் விளையாட்டும் ............. இப்பிரச்சினைகள் அனைத்திலும் உறையும் உண்மையான அரசியலைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. நாம் எவ்வளவுதான் தூய்மையாக இருக்க விரும்பினாலும், நமது ஒளிவட்டங்களுக்கு நாமே எவ்வளவுதான் மெருகேற்றிக் கொண்டாலும், வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் அத்தகைய தூய்மையான வாய்ப்புகளோ மாற்றுகளோ நம்முன் இல்லை.

சத்தீஸ்கரில் அரசினால் நிகழ்த்தப்படும் உள்நாட்டுப் போர், புஷ்ஷினுடைய சித்தாந்தத்தை வெளிப்படையாக நடைமுறைப்படுத்துகிறது. ""நீ எங்களோடு இல்லையென்றால், நீ தீவிரவாதிகளோடு இருக்கிறாய்!'' என்று கூறுகிறது.
அரசின் பாதுகாப்புப் படைகள் ஒருபுறமிருக்க, இப்போரின் அச்சாணியே சல்வாஜுடும் என்ற படைதான். இது அரசின் நிர்ப்பந்தத்தினால் ஆயுதமேந்தியிருக்கின்ற சாதாரண மக்களைக் கொண்ட படை. ............. இந்திய அரசு ஏற்கெனவே காஷ்மீரிலும், மணிப்பூரிலும், நாகாலாந்திலும் இத்தகைய படையை உருவாக்க முயன்றிருக்கிறது. அதன் விளைவாக, பத்தாயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். .............
தோற்றுப்போன இத்தந்திரங்களை இப்பொழுது இந்தியாவின் இதயப் பகுதியிலேயே இறக்குமதி செய்ய அரசு முயன்று வருகிறது. தமது கனிமவளம்மிக்க நிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் போலீசு முகாம்களுக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் பலவந்தமாகக் காலி செய்யப்பட்டிருக்கின்றன. இரும்புத் தாது வளம் மிக்க அவர்களது நிலங்கள் மீது டாடா, எஸ்ஸார் போன்ற முதலாளிகள் கண் வைத்து விட்டனர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
ஆனால் அவற்றின் ஷரத்துக்கள் யாருக்கும் தெரிவதில்லை. நிலக் கையகப்படுத்தல் தொடங்கி விட்டது. ............. எல்லோருடைய பார்வையும், அரசின் கூலிப் படைகளுக்கும், கொரில்லாக் குழுக்களுக்குமிடையிலான வன்முறையில் பதிந்திருக்க, பன்னாட்டுக் குழுமங்கள் சத்தமின்றிக் கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டு வரும் நாடகத்தின் ஒரு சிறு பகுதி இது.

55 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டது பயங்கரமானதே. ஆனால் அவர்களும் மற்றவர்களைப் போல அரசின் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களே. வெறும் பீரங்கித் தீனியாகத்தான் (இச்ணணணிண ஞூணிஞீஞீஞுணூ) அப்போலீசுக்காரர்களை அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கருதுகின்றன. அந்தப் போலீசுக்காரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை ஆராயப் புகுந்தால் அதில் சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது.

செத்துப் போன போலீசுக்காரர்களுக்காகச் சில நாட்களுக்கு முதலைக் கண்ணீர் வடிக்கப்படும். தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நம் மீது ஏறி சவாரி செய்வார்கள், பின்னர் மேலும் கூடுதலான பீரங்கித் தீனி சப்ளை செய்யப்பட்டு விடும். மாவோயிஸ்ட் கொரில்லாக்களைப் பொருத்தவரை அவர்களால் கொல்லப்படும் போலீசுக்காரர்களும் சல்வா ஜுடும் சிப்பாய்களும் இந்திய அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தின் கையாட்கள்; சித்திரவதை, காவல் நிலைய சாவுகள், போலி மோதல்களை நடத்தும் ஆயுதப்படையினர்; அவர்கள் அப்பாவிக் குடிமக்கள் அல்லர்.

மாவோயிஸ்டுகளும் பலவந்தத்திலும், பயங்கரத்திலும் ஈடுபடக் கூடியவர்களே என்பதிலும், சொல்ல இயலாத அடக்குமுறைகளைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும், உள்ளூர் மக்களிடம் தங்களுக்கு விதிவிலக்கற்ற பேராதரவு இருப்பதாக அவர்கள் உரிமை கொண்டாட முடியாதென்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவ்வாறு யார்தான் உரிமை கொண்டாட முடியும்? எனினும், உள்ளூர் மக்களின் ஆதரவின்றி எந்தக் கொரில்லாப் படையும் இயங்க முடியாது. அது நடைமுறைச் சாத்தியமற்றது. மேலும், மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு பெருகிக் கொண்டுதான் வருகிறதேயொழிய குறையவில்லை. .............

ஆனால், கணக்கிடலங்கா அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு இயக்கத்தை, அத்தகைய அநீதிகளைத் திணிக்கும் அரசோடு ஒப்பிடுவது அபத்தமானது.வன்முறையற்ற எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியையும் அரசு முகத்திலறைந்தாற்போலக் கதவை மூடியிருக்கிறது. மக்கள் ஆயுதம் ஏந்தும்போது எல்லாவிதமான, வன்முறைகளும் இருக்கத்தான் செய்யும். புரட்சிகரமானது, உதிரித்தனமானது, கடைந்தெடுத்த கிரிமினல்தனமானது என எல்லா வன்முறைகளும் வரத்தான் செய்யும். தானே உருவாக்கிய இத்தகைய பயங்கரமான சூழலுக்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்."நக்சல்கள்', "மாவோயிஸ்டுகள்', "வெளியாட்கள்': இப்பதங்கள் தற்பொழுது வரையறையற்றுப் பயன்படுத்தப்படுகின்றனவே...

தனது சுயவிளம்பரத்தில் தானே மயங்கிவிட்டதால், தனது சொந்த மக்கள் தனக்கெதிராகக் கிளர்ந்தெழக் கூடும் என்பதை நம்ப இயலாத அரசுகள், அடக்குமுறையின் துவக்க காலகட்டங்களில் பயன்படுத்தும் மிகப் பொதுவான குற்றச்சாட்டுதான் "வெளியாட்கள்' என்பது ............. "வெளியாள்' என்றால் என்ன? யார் எல்லைகளைத் தீர்மானிப்பது? அவை கிராமத்தின் எல்லைக்கோடுகளா? தாலுகாவினதா? மாவட்டமா அல்லது மாநிலமா? குறுகிய பிரதேச வாதமும் இனவாதமும்தான் கம்யூனிசத்தின் புதிய தாரக மந்திரமோ?

நக்சல்கள், மாவோயிஸ்டுகள் ............. யார்? இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. தற்போதைய அரசியல் நடப்புகளை ஏற்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, தாங்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படும் அபாயத்தை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். ............. நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படலாம். மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்றே தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத நபர்களால் நமது கதை முடித்து வைக்கப்படலாம். அத்தகைய காலம் வெகு தொலைவில் இல்லை.......

தமிழாக்கம்: பால்ராஜ்

Wednesday, January 2, 2008

ஒப்பற்ற மாவீரன் திப்பு

ஒப்பற்ற மாவீரன் திப்பு



Tuesday, January 1, 2008

முதலாளிக்கிடையிலான முரண்பாடுகள் கொலைகளாக...


ப. வி. ஸ்ரீரங்கன்
01. 01. 2008


மகேஸ்வரனின் படுகொலையைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளோடு முடிச்சிட்டு இவர்போன்ற மக்கள் விரோதிகளைத் தியாகியாக்கும் அரசியலை நாம் மறுப்போம். பிறந்த புத்தாண்டில் இப்படி ஒரு கொலையைச் சொல்லி எழுதுவது ஆரம்பமாகிறது!கொலைகள் தொடர்வதற்கான சூழலைத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமையோடு போட்டுப் பிணைத்துக் கருத்தாடுவதற்கு அப்பால் இத்தகைய கொலைகளின் பின்னாலுள்ள முரண்பாடுகளை நாம் கண்டாக வேண்டும்.

மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு

மகேஸ்வரன் போன்றோர்

ஆற்றிய போராட்டப்பாதை-தியாகம் என்ன?


இவர்களின் மேற்தட்டு

வாழ்வுப் பொருளாதார வளம்

இத்தகைய சிறுவயதில் எங்ஙனம் திரண்டது?


நாம் அறியக் காரைநகரில்

கப்பல் விடும் தமிழ்த் தரகு முதலாளி

இருந்ததற்கான அறிகுறியில்லை!

நான் அறிய, என் கிராமத்துச் சண்முகம்-யோகம்மாக் குஞ்சி போன்ற தரகு முதலாளிகளைத் தவிர்த்து எவருமே தமிழ்ச் சமுதாயத்தில் கப்பல்கள் வைத்து வர்த்தகஞ் செய்த தரகு முதலாளிகள் இருக்கவில்லை. இங்கே, மகேஸ்வரன் புதிய தமிழ்த் தரகு முதலாளி!கவனியுங்கள், தமிழ் பேசும் மக்களின் சமூக சீவியம் போர்களால் சிதைந்து சின்னாபின்னமாகிய போர்ச்சூழலில் உருவான புதிய பணக்காரன். 42 வயதில் பல்லாயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரன்.

எனினும், யாருக்காக இந்த அழிவுகள்?

மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னாலுள்ள அரசியல்தாம் என்ன?





மகேஸ்வரன் வெறும் பாராளுமன்ற உறுப்பினன் மட்டுமென்றால் நிச்சியம் இக்கொலை அரசியல் சார்ந்ததே!ஆனால், அவரோ ஒரு புதுப்பணக்காரன். நானறிய கொழும்பில் மகேஸ்வரனின் விலாசம் 90 களுக்குப் பின்பே அறிமுகமாகியிருக்கிறது.

சுருவில்-கரம்பொன் மாணிக்கம் சகோதரர்களுக்கும் அவர்களது தமக்கை யோகம்மாக் குஞ்சிக்குத்தாம் முன்பு நான்கு கப்பல்கள் தமிழர்கள் பெயரால் ஓடியது. இவர்களுக்கு, பின்பு அரசியல் பிரமுகர்களுக்கூடான வர்த்தக உறவு முறைகளால் காமினி திசநாயக்காவின் நேரடிப் பணிப்பின் விளைவாகக் கொலையே நேர்ந்தது. சண்முகமும், மாணிகமும் அரசியல்ரீதியான தமிழர் பிரச்சனையால் கொல்லப்பட்டவர்கள் அல்ல!மாறாகப் பங்கு-காட்டிக் கொடுப்பு மற்றும் வெளிநாட்டுக் கப்பற்காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் நெருக்குதல் கொலைகளைச் செய்வித்தது.

இப்போது, மகேஸ்வரனின் கொலைக்கு நிச்சியமாக அரசியற்காரணங்கள்தாண்டிய வர்த்தக முரண்பாடுகளே காரணமாக முடியும். 42 வயது மனிதர் இலங்கையின் இன்றைய நிலவரப்படி 50. 000. கோடி சொத்துக்கு அதிபதியானதென்ற வரலாறு-நாம் திடுக்கிடும்படியான உண்மைகள் மறைக்கப்பட்ட வரலாறாகும்.

தீவுப்பகுதியில் இவ்வளவு திடீர்ப் பணக்காரர்கள் உருவாகுவதற்கான பின் தேட்டம் வி. மாணிக்கம்-சண்மகம், யோகம்மாவுக்கே இருந்திருக்கிறது. இவர்கள் கொல்லப்பட்டபின் அவர்களின் சொத்துக்களை அறாவிலைக்கு விற்று வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த அவர்களின் பிள்ளை குட்டிகள், இலங்கையில் கப்பல்விடும் நிலையைத் தமிழர்கள் எவருமே செய்யமுடியாதென்பதற்கான காரணங்களையும், அநுபவத்தையும் தமது வாழ்வுப் பயணத்துக்கூடாக நமக்குப் புரிய வைத்தவர்கள்-அவ்வளவுக்குக் கொழும்பு மாபியாக்கூட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டது-புறக்கோட்டை வர்த்தகத்தை சிங்கள அரசியல் மாபியாக்களின் கட்டுப்பாட்டிலிருந்து எவருமே பறித்தெடுக்க முடியாது!

ஆனால், மகேஸ்வரன் எம். பி. இவ்வளவு கோடிக் கணக்காக முதலிட்டு முதலாளியானதன்பின்பு நிலைகொண்ட அவரது பகமை நிச்சியமாக வர்த்தக முரண்பாடாகவே இருக்கிறது. கொழும்பு வர்த்தக நிலைவரமானது பெரும் மாபியாக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்பு இத்தகைய முரண்பாடுகள் மிக நேர்த்தியாகக் கொலைகளைச் சர்வசாதாரணமாகச் செய்தபடி தமது இருப்பை நிலைப்படுத்துகிறது.

இத்தகைவொரு சூழலில் படுகொலையான மகேஸ்வரனின் கொலைக்கு அரசியல் சாயம் பூசித் தமிழர்களின்மீதான அரசியல் சரிவாக எவரும் கருதத் தேவையில்லை!

கொழும்பு வாழ் வர்த்தகப் பெருங்குடிகளின் வர்த்தக முன்னெடுப்பானது மிகம் துரோகங்கள் நிறைந்தவை. அவை பெரும் குழி பறிப்புகளுக்கிடையில் மக்கள் சொத்தை வேட்டையாடும் நோக்கைக் கொண்டவை.

அதீத வேட்கை

பொருள் குவிப்பின் உறுதியோடு

பிணைவுற்ற பொருளாதார வாழ்வில்

மிகக் கடினமான பணி தொடர்ந்து உயிர்த்திருப்பதே!




இதற்குள் மகேஸ்வரன்போன்ற மிகக் குறுகிய காலத்தில் பல்லாயிரம்கோடி சொத்தைச் சேர்த்த புதிய முதலாளிகள் தமது வாழ்வை வளப்படுத்த நமது பிணங்கள்மீது அரசியல் நடாத்தியது வரலாறு. இலங்கையின் இன்றைய முதலாளிய வளர்ச்சியானது கோரி நிற்கும் சமூகப் பொருள் உற்பத்தியானது இலங்கைத் தேசத்தின் தேசிய உற்பத்தியைச் சிதைத்த இறக்குமதிப் பொருளாதாரத் தரகு நிலையே. இந்தத் தெரிவில் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தைத் தகவமைத்த அந்நியச் சக்திகள் மென்மேலும் இலங்கையின் இனப்பிரச்சனையில் தமது ஆர்வங்களைப் பிணைத்துக்கொண்டு, தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து, அவர்களின் சார்பாக எந்தப் பிரச்சனை¨யுயும் அணுகவில்லை. மாறாக, வர்த்தகம், சூது, கப்பல் கட்டுமானம் என்ற தொழில்களில் மூழ்கித் தமது வளங்களைப் பெருக்குவதற்கு அரசியல் பலத்தை நாடியபோது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு பாதுகாப்பாகவும், அரணாகவும் அவர்களுக்கு இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் என்ற போர்வையில் மறைந்திருந்தபடி வர்த்தகஞ் செய்தும், ஊழல்கள் செய்தும் தமது இருப்பைப் பலப்படுத்தியவர்கள் அதன் எதிர் விளைவால் பலியாகிறார்கள்.

இதையும் தமிழ் பேசும் மக்களின் பெயரால்

இறுதியில் கணக்கு வைக்கப்பட்ட கொலையாக்கி விடுவதில்

எமது அரசியல் முந்திக்கொள்கிறது.

இப்படியிருக்குமொரு நிலையில்- இவர்கள்தாம் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய"பெருங் குடிகள்". எந்த அரசியல் வாதியும் மக்களுக்குச் சேவைசெய்ய வருபவர்கள் இல்லை. அவர்கள் தமது அடிவருடிச் சேவையை தமது எஜமானர்களுக்குச் செய்து கூலி பெறும் கைக்கூலிகள். மக்களைக் காட்டிக்கொடுத்துத் தமது வருவாய்யைத் தக்க வைக்கும் பிழைப்புவாதக் கூலிகள். இங்கே, மகேஸ்வரனின் பாத்திரமே அவரை ஒரு மக்கள் விரோதியாகக் காட்டிநிற்கிறது. பொருளாதாரத்தடை மூலமாகவும், மற்றது வலிய யுத்தத்தாலும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இல்லாதாக்கித் தமது ஆர்வங்களுக்கும், பொருளாதார முன்னெடுப்புகளுக்கும் இசைவானவொரு இலங்கையை மெல்லத் தகவமைத்து வருகின்றவர்களோடு இசைவாக இருந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட மஸே;வரன் குருதி சிந்தியது தமிழ் மக்களின் நலனை உயர்த்திப்பிடித்ததற்காவல்ல.

இவர்களுக்கிடையில் நிகழ்ந்து வர்த்தகப்போட்டி புதுப்பணக்கார மகேஸ்வரனின் பினாமியச் சொத்துக்கள் மற்றும் கொழும்பு வாழ் மாபியாக்களின் கடும் "இருப்பு"க்கான போட்டிகள் இவரைத் தொலைத்துக் கட்டியவுடன் நாம் உடனே தமிழர்களுக்குள் இன்னொரு மரணமாகப் பொதுமைப்படுத்துகிறோம்.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெரும் வர்த்தகர்களான வி. மாணிக்கம் சகோதரர்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமிடையில் என்ன தொடர்புண்டோ அதைவிட மிகக் கேவலமான உறவே மகேஸ்வரனுக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமான தொடர்பு. தரகு முதலாளியத்தின் அடிவருடிகளாகக் கிடக்கும் அற்பப் பினாமித் தமிழ் முதலீட்டாளர்களால் தமிழ் மக்களின் சுயநிர்ணயமென்பதை ஒரு போதும் காத்துவிட முடியாது.

மகேஸ்வரனின் தமிழ் மக்கள் மீதான கரிசனையானது தனது வர்த்தகத்துக்கான காப்பரண்-பேரம் மற்றும் தனக்கான பாதுகாப்பை நிலைப்படுத்தும் தந்திரம் மற்றும் தனது வர்த்தகத்திலுள்ள எதிரிகளைச் சரி செய்வதற்கான வியூகத்தோடுதாம் இதுவரை நகர்ந்தது. மக்களின் உயிர்த் தியாகமானது முற்றிலும் தமிழ் மூலதனத்தைக் காப்பதற்கான முதிலீட்டுத் தமிழரின் நலனைக் காப்பதற்கான செயலென்றும் அன்றே கூறிக் கொண்டோம். இன்றோ தமிழ் முதலீட்டாளர்கள் அன்றைய கென்பாம், டொலர் பாம் நீதிராஜாக்களோ அல்லது மஸ்கன், மகாராஜா, குணரெத்தினம், சண்முகமோ இல்லை. மாறாக, மகேஸ்வரன்போன்ற இயக்கப் பினாமிகளே புதிய முதலீட்டாளர்களாக மாறியுள்ளார்கள். இவர்களில், இன்னும் பலர் இத்தகை அரசியலில் கொல்லப்படலாம். எனவே, இவ்வகைக் கொலைகளுக்கும் தமிழ் பேசும் மக்களின்மீதான சிங்கள ஒடுக்குமுறைக்கும் முடிச்சிடுவது மிகக் கொடுமையானது.

இங்கே, புதிய கூட்டுக்கள், தாஜாக்கள், கொடுப்பனவுகள், கண்டிப்புகள், வெருட்டல்கள் ஊடாகச் சலுகைகளப் பெறுவதற்காகப் பாரளுமன்றத்தைப் பயன்படுத்திய மகேஸ்வரன் தான் அமைச்சராக இருந்தபோது ஆற்றிய "மக்கள் நலச் சேவைக்கும்" இன்றைய அவரது பல்லாயிரம் கோடிச் சொத்துக்கும் உள்ள அரசியல் ஒற்றுமை இனம் காணப்படவேண்டும்.

2008 படுகொலைக்கான சிறப்பு வருடம்

பி.இரயாகரன்
01.01.2008

ப்படித்தான் நிலைமை காணப்படுகின்றது. அதைத்தான் மகேஸ்வரன் படுகொலை சொல்லுகின்றது. இந்த ஆண்டு இலங்கையில் என்றுமில்லாத மனித அவலங்கள் ஏற்படவுள்ளது. கடந்து வந்த தொடர்ச்சியான மனித துயரங்களை எல்லாம், இது மிஞ்சும்.

இலங்கையின் முழுப்பகுதியும் பாசிச இராணுவ சர்வாதிகாரத்துக்கு உட்பட்டுள்ளது. பொது அரசியல் தளம் மிகவும் கடுமையான, இறுக்கமான நெருக்கடிக்குள் சென்றுள்ளது. புலிகளை முற்றாக அழித்தொழிக்கும் கடுமையான யுத்தமும், யுத்தப் பிரகடனமும் தொடர்ச்சியாக விடப்படுகின்றது. அந்தவகையில் சகல வளமும், இதற்குள் மையப்படுத்தப்படுகின்றது. இதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலை.

அடுத்த தேர்தலில் இந்த வெற்றியைக் கொண்டு ராஜபக்ச குடும்பம் அரசியல் நடத்த முனைகின்றது. யுத்தம் மிகத் தீவிரமாக, என்றுமில்லாத மூர்க்கமான வகையில் மையப்படுத்தப்படுகின்றது. யுத்தம் மூலமான வெற்றியே, அடுத்த தேர்தலை வெல்வதற்கான வழியாகிவிட்டது. இதை ஜே.வி.பியும் புரிந்து கொண்டு, இந்த வெற்றியில் பங்கு போட்டுக்கொள்ளத் துடிக்கின்றது. இதனால் இனவாதத்தையும், யுத்த கோசத்தையும் அரசியலாக தனது பங்குக்கு முன்வைக்கின்றது. யூ.என்.பி இதற்கு மாறாக நின்று, அரசை யுத்தத்தில் தோற்கடிப்பதன் மூலம் தேர்தலில் வெல்ல முனைகின்றது.

புலிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக யுத்த நெருக்கடி. யுத்தத்தை விரும்பிய புலிகள், அதில் இருந்து தப்பிப்பிழைக்க முனையும் வகையில் இன்று சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தை எதிர்கொண்டு, புலிகள் கடைசித் தற்காப்பை எதிர்கொள்ள தயாராகின்றனர். இதற்கு சாமபேதமின்றி, மோசமான வழிமுறைகளை விட்டால் அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற நிலைக்கு மேலும் கீழிறங்கிவிட்டனர். பாரிய மனித இழப்புக்களை உருவாக்கக் கூடிய, மூர்க்கமான எதிர்த் தாக்குதலை வலிந்து திணிக்கும் நிலைக்குள் புலிகளை அரசியல் நெருக்கடி உருவாக்கியுள்ளது.

இப்படி மனித இழப்புகளை அதிகளவில் சந்திக்கும் ஆண்டு, இந்த ஆண்டாக இருக்கும். புலிகள் மேலான பேரினவாதத்தின் தொடர்ச்சியான வெற்றிகள், அவர்களின் அடாவடித்தனமான செயலுக்கு மேலும் வழிகாட்டியாக அமைந்துவிடுகின்றது. வெற்றிக்கு இவைகள் நிபந்தனை என்று அது காண்கின்றது.

புலிகள் தொடர்ச்சியான உள் மற்றும் வெளி நெருக்கடிகளால், கூனிக் குறுகிச் செல்லுகின்றனர். இவை தமது தொடர்ச்சியான அழித்தொழிப்பால் நடப்பதாக அரசு கருதுகின்றது. இந்த வகையில் அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழிப்பதை நியாயப்படுத்துகின்றது. சில அனுபவங்களும், வெற்றிகளும், அவர்களுக்கு புலி அழிப்புக்குரிய வழியாகியுள்ளது.

யாழ்குடாவில் புலிகள் வலிந்து தாக்குதலை ஒருதலைப்பட்சமாக நடத்திய போது, அதை பாரிய களையெடுப்பு மூலம், அதன் நிழலைக் கூட அழித்தொழிப்பு மூலம் சிதைத்தனர். அவை மனித உரிமை மீறலாக வெளிவந்த போது, அவற்றை மூடிமறைக்க அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர், கையாளுகின்றனர்.

இப்படிப் பேரினவாதம் தனது பாசிச உச்சத்தில் நின்று பேயாக ஆடுகின்றது. அரசின் புலியொழிப்புக்கு எதிரான எந்தக் குரலையும், அது விட்டுவைக்கத் தயாராகவில்லை. தனது இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் நின்று மனித உரிமை மீறலைப் பற்றி ஊளையிடும் எந்தக் குரலையும், அது அனுமதிக்க தயாராக இல்லை. வாயை மூடு, அல்லது மரணித்துப் போ. இதை வெளிப்படையாகவே அரசு சொல்லுகின்றது, செய்கின்றது.

தமிழ் மக்களின் யுத்தத்தைப் பயன்படுத்தியே கோடீஸ்வரனாகிய மண்ணெண்ணை மகேஸ்வரனின் படுகொலையும், இப்படித் தான் இதற்குள் தான் நடத்தப்பட்டது. அரசின் பாசிச செயல்களை அம்பலப்படுத்தி, அதில் பிழைப்புவாத அரசியல் செய்வதைக் கூட புலியொழிப்பு அரசால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. தனது மனித விரோத செயல்கள் அம்பலமாகும் போது, அரசுக்கு சர்வதேச ரீதியாக ஏற்படும் நெருக்கடிகள் கடுமையானது. இதை வெளிக் கொண்டு வரும் தனிமனித உதிரிகளை, தீர்த்துக்கட்டி அதை மூடிமறைக்க விரும்புகின்றது.

புலிசார்பு அரசியல் பிரமுகர்களோ சுயமற்றவர்கள் என்பதால், சுயமாக எதையும் செய்ய முடிவதில்லை. அந்தக் குரலுக்கு பலம் கிடையாது. இவர்கள் கிளிப்பிள்ளைகளாக வைக்கும் ஒப்புவிப்புக்கள், அரசுக்கு எந்தப் பிரச்சனையாகவும் இருப்பதில்லை. அவர்கள் எதைச் சொன்னாலும் உலகில் எடுபடாத வகையில், அவர்கள் ஊரறிந்த புலிப்பினாமிகளாகிப் போனார்கள்.

மறுபக்கத்தில் புலியல்லாத, அரசுக்கு எதிரான தமிழ் பிரமுகர்கள் தான் பிரச்சனைக்குரியவர்களாக உள்ளனர். அரசு செய்கின்ற மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தம் போது ஏற்படும் நெருக்கடியை, அரசால் எதிர்கொள்ள முடிவதில்லை. அரசு அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பை விலக்கி விட்டுவிடுவதன் மூலம், அவர்களை அடிபணிய வைக்கின்றனர் அல்லது கொன்றுவிடுகின்றனர். இதைப் பகிரங்கமாகவே அரசு செய்கின்றது.

இது புலிகளின் வழி. புலிகள் மாற்று அமைப்பு உறுப்பினர்களையும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் கொல்வது தான், தமிழ் தேசியத்தின் அவசியமான பணி என்று கூறி அதையே செய்தனர். செய்கின்றனர். அதையே இன்று அரசும், புலியை ஒழிக்க புலிக்கு சார்பானதாக கருதப்படுவதையும், அதை செய்வதற்கு தடையான மாற்று கருத்துக்களையும் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கின்றது. இந்த வகையில் ஒழித்துக்கட்டப்படுவதன் மூலம், அரசியல் சூனியத்தையும் பயங்கரத்தையும் விதைத்துவிடுகின்றனர்.

எல்லா மனித உரிமை மீறலையும், வாய் திறந்து கதைப்பது இலங்கையில் குற்றமாகியுள்ளது. இதைப் புலிகள் அமுல்படுத்தியுள்ளனர். அதையே இன்று அரசு செய்கின்றது. எங்கும் மனித அவலங்கள். எல்லையற்ற பாசிச வெறியாட்டம். இந்தியா முதல் அமெரிக்கா வரை இதற்கு ஒத்துழைப்பும், வழிகாட்டலும் செய்கின்றது. சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளுக்கும், இதே கதி தான்.

வாய் திறவாதே என்பதே தேசியம் முதல் புலியொழிப்பு வரை சொல்லும் செய்தி. இதைப் பற்றி பேசக் கூட, இந்த சமூகத்தில் யாரும் கிடையாது. ஒன்றில் புலி அல்லது புலியெதிர்ப்பில் கூதல் காய்ந்து கொண்டு, வெறியாட்டம் போடுகின்றனர். சமூகம் நடுங்கும் வண்ணம், படுகொலை அரசியல். இது தேசியத்தின் பெயரிலும் புலி ஒழிப்பின் பெயரிலும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.

1917 இல் உலகைக் குலுக்கிய புரட்சியின் 90 வது வருடத்தில் நாம் அதே புரட்சியைக் கோரி

லகைக் குலுக்கிய அந்தப் புரட்சி நாளை இன்று 90 வருடங்களின் பின் நினைவு கூறும் போது, அதன் முக்கியத்துவம், இன்று ஒரு புரட்சிகர நிலையின் ஊடகமாக மட்டுமே நாம் அணுக வேண்டிய கடமைப்பாட்டை கொண்டுள்ளோம்.

உலகில் பல ஆயிரம் வருடங்களில் பல ஆயிரம் ஆயிரம் புரட்சிகளை மக்கள் முன்னெடுத்தனர். இப்புரட்சிகள் எல்லாம் சமுதாயத்தில் அடிப்படை இயக்கவிதி மாறாது, அதன் மேல் அடுக்குகளில் மட்டுமே புரட்சிகர மாற்றத்தை நடத்தின.

இந்த ஆயிரம் ஆயிரம் புரட்சிகளில் இருந்து முற்றிலும் தெளிவாக வேறுபட்ட புரட்சியாக 1917 இல் பாட்டாளி வர்க்கம் எழுந்து ஆட்சியைப் பிடித்த போது, உலகம் குலுங்கியது மட்டும் இன்றி, அது மீள மீள நடக்கும் ஒரு மக்கள் போராட்ட நிகழ்வாக, உயிர் வீறு கொண்ட எழுச்சியாக உள்ளது.

இந்தப் புரட்சிதான் சமுதாயத்தின் அடிப்படை இயங்கு விதியை கேள்விக்கு உள்ளாக்கி, அதை தலைகீழாக புரட்டிப் போட்டு நொருக்கியது. இதனால் தான் இந்தப் புரட்சி உலகில் நடந்த எல்லாப் புரட்சியையும் விட கடும் எதிர்ப்புக்குள்ளாகியது.

இந்தப் புரட்சியின் உயிர் மூச்சுக்கள் மீது இன்று கூட விடாப் பிடியான தாக்குதலை எதிரி மட்டும் இன்றி, நண்பர் போல் வேடமிட்டவர்களும் விடாப்பிடியாகத் தொடுக்கின்றனர். சமுதாயத்தில் அனத்து இயங்கும் விதியும் சுரண்டல் மேல்தான் கட்டப்பட்டு இருந்தன. இந்தக் கட்டமைப்புச் சுரண்டலைத் தகர்க்காத பல புரட்சியில் இருந்து வேறுபட்ட புரட்சி சுரண்டலைத் தகர்த்து ஒடுக்கிய போது தான், இப்புரட்சியின் ஆயுள் கூட ஊசலாடத் தொடங்கியது.

1871 இல் பாரிசில் நடந்த புரட்சியினை முன் அனுபவமாகக் கொண்டு 1917 இல் நடந்த உலகைக் குலுக்கிய புரட்சி, லெனின் தலைமையில் சுரண்டும் வர்க்கம் மீது தனது வீரம் மிக்க தாக்குதலைத் தொடுத்தது.
இந்தப் புரட்சியின் எதிரிகள் அந்நிய நாட்டுப் படை எடுப்புகளை எல்லாம் உலகை குலுக்கிய புரட்சி துவசம் செய்து முன்னேறியது. இதன் ஊடாக சர்வதேசப் புரட்சிக்கும், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எல்லை இல்லாத உதவிகளை உலகை குலுக்கிய புரட்சி வாரி வழங்கியது.

இந்நிலையில் சுரண்டல் வர்க்கம் வெளியிலும், கட்சிக்குள்ளும் தனது அணிகளைத் தேடியது மட்டும் இன்றி கட்சிக்குள் தனக்கான போராட்டத்தைத் தொடங்கியது. தனக்கான அணிகளை அணிதிரட்டி கட்சிக்குள்ளும் வெளியிலும் போராடத் தொடங்கியது.புரட்சிக்கு முன், பின் ஒரு வர்க்க சமுதாயத்தின் பிரதான எதிரியான சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தில் ஸ்ராலின் மிக நீண்ட போராட்டுத்தை கட்சிக்குள் நடத்த வேண்டி இருந்தது. இப்போராட்டுத்தின் தொடர்ச்சியில் ஸ்ராலினின் மறைவைத் தொடர்ந்து குருசேவ் ஆட்சி ஏறிய உடன், வர்க்க சமுதாயத்தில் வர்க்க முரண்பாடு முடிவுக்கு வந்து விட்டது என அறிவித்து, சுரண்டும் வர்க்கத்திடம் ஆட்சியைப் படிப்படியாகக் கையளித்தான். 1917ம் ஆண்டுப் புரட்சியை மட்டும் இன்றி, உலகப் புரட்சியை கூட காட்டிக் கொடுத்து சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்தான்.

1917ம் ஆண்டு புரட்சி என்பது ஏகாதிபத்தியத்துக்கு குலை நடுக்கத்தை கொடுப்பவையாக இருந்தது. எல்லாக் காலனி ஆட்சிகளிலும் வீறுகொண்ட எழுச்சிகள், காலனியாதிக்கத்தை விட்டு ஓட வைத்தது. உலகப் பாட்டாளி வர்க்கம் தனது புரட்சிகர இரத்தும் சிந்திய வீரமிக்க நீண்ட போராட்டத்தை நடத்த, 1917 புரட்சி முன் கையெடுத்து கொடுத்தது.

ஆம் இன்று உலகைக் குலுக்கும் வர்க்கத்தின் போராட்ட வடிவம் பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே என்பது, எதிரியின் அணுகு முறைதான் நல்ல சான்றாக நடைமுறையில் விளக்கியது. அந்தளவுக்கு 1917 இல் ஏதிரி கிலிப் பிடிக்க பண்ணிய புரட்சி தான் இந்த உலகைக் குலுக்கிய புரட்சியாகும்.

இன்று நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு அடியும் எதிரியின் பிடிக்கு உள்ளாகின்றது. மார்க்சிய விரோதிகளை, திரிபு வாதிகளை, பல வண்ணக் கோட்பாட்டுக் கனவான்களை கதிகலங்க வைக்கின்றது, ஒப்பாரி வைக்க வைக்கிறது. அவதூறு பொழிய வைக்கிறது.

எம் கையில் உள்ள ஆயுதம் 1917 இல் நடந்த உலகைக் குலுக்கிய புரட்சி தான். ஆம் எம்கையில் இப்புரட்சியின் எல்லா ஆழமான போராட்டத்தையும் எடுப்பதன் மூலம் எதிரியை வீழ்த்துவோம் என அறை கூவல் இட்டு, போராடுவோம் வாருங்கள் தோழர்களே.

Monday, December 31, 2007

எது கவிதை?

எது கவிதை?


வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை? விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறுங்கையால் இயற்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கிய காலம் முதல் தாம் வாழ்வதற்கான புதியவகை சாதனங்களை மட்டுமல்ல, புதியவகை உணர்ச்சிகளையும் படைத்தே வந்திருக்கிறது. படைப்புரீதியான இவ்வகை உழைப்புப் போக்கின் மூலம் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதே அறிவியல், கலைக்கான ஆளுமைமிக்க வரலாற்றுப் பாத்திரமாகும்.


அவ்வகை மனித முயற்சி, நாகரிகம் எதுவுமின்றி ""தான் எப்படியாவது பேசப்பட வேண்டும், பார்க்கப்பட வேண்டும்'' என்பதற்காக சமூகத்தின் சரிபாதியான பெண்களின் இடுப்பைக் கிள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில கோடம்பாக்கத்து போக்கிரிகள். காரணம் கேட்டால் இவர்கள் கவிஞர்களாம்! சுற்றிலும் நம் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் சாதி தீண்டாமை அநீதிகள், ஒன்று சேர்ந்து வாழ்வதுபோல் நடிக்கும் இல்லறத்தின் புதிர்கள் இன்னும்பல சமூகக் கொடுமைகள் இவைகளை விண்டு பார்த்து விடைதேட முயன்று பாருங்கள். உங்கள் படைப்புக்கான ஆளுமை அங்கே காத்திருக்கிறது. கூட்டுத்துவ உழைப்பினால் வளர்ந்துவந்த சமூகத்தின் வரலாற்றை உணர்ந்து பாருங்கள், ""தான்'' என்ற அறியாமை வெட்கி விலகும். உயிர்த்துடிப்பான உழைக்கும் மக்களின் ஒருநாள் வாழ்க்கைப் போராட்டத்தை உற்றுப் பாருங்கள், நாம் மனிதர்களாகி விடுவோம். ""லூசுப்பையன்கள்'' திரியும் கோடம்பாக்கத்து ஒட்டுண்ணி இலக்கைவிட்டு வெளியே வாருங்கள். உணர்ச்சியுடனும் சுரணையுடனும் உழைக்கும் மக்கள் திரளினரால் படைக்கப்படும் புதிய சமூகத்திற்கான போராட்ட உணர்ச்சியில் கலந்து பாருங்கள். நாமும் கவிஞர்களாகி விடுவோம்.


அரசியலால் கலைத்தன்மை போய்விடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே ஆளும் வர்க்க அரசியலை நத்திப்பிழைக்கும் இலக்கிய வட்டங்களைத் தாண்டி பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசியலமைப்போடு ஒன்று சேர்ந்து பாருங்கள்! ஒரு புதிய சமூகத்தையே கவிதையாய் வடிக்கும் பேரார்வம் அங்கே உங்களுக்காகக் காத்து நிற்கிறது.


முதல் வணக்கம்- தோழர் துரைசண்முகம்


திசைகளின் கவர்ச்சியை வெறுத்து

தசைகளின் சுகங்களை மறுத்து

வசவுகள் ஆயிரம் பொறுத்து

உழைக்கும் மக்களின் விடுதலை வேருக்கு

பசையென உயிரையே கொடுத்து

மண்ணைக் கிளப்பிய வேர்களே

மார்க்சிய லெனினியப் பூக்களே

மகத்தான தியாகிகளே!

நிலவைக் காட்டிச் சோ×ட்டும்

தாயின் அன்பும் மாறிவிடும்

சமூக உறவைக் காட்டி அரசியலூட்டிய

உங்கள் தோழமை இரத்தம்

தலைமுறை தாண்டியும் ஊறி வரும்!



மொழி வணக்கம்


கவினுறு மலைகள் ஏறிக் களைத்து

எங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்து

காடுகள் சோலைகள் பூத்து

எங்கள் கைகள் வரைக்கும் காய்த்து

ஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்து

சமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து

உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்

ஒன்று கலந்து வளர்ந்த தமிழே! தலைமுறைக் குரலே!

பிழைப்புமொழி பேசாத உழைப்புத் தினவே!

உயிர் உறை கனவே! பரம்பரை உழைப்பே!

பாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே!


(25.7.2006, 26.7.2006 நாட்களில் தஞ்சாவூர், திருச்சியில்

""நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாய் இல்லை!''

எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசித்த கவிதை)



நாங்கள் சும்மா இருந்தாலும்

நாடு விடுவதாயில்லை...


எழுதுவதால் மட்டுமல்ல

கவிதை வாழ்வதாலும் வந்து சேரும்

எல்லோர்க்கும் ஒருசமயம்

கவிதையாய் வாய்க்கும்.



அடிக்கும் அனலும் தணலும்

நொடிக்குள்மாறி கருத்துருவாக்கும் மேகம்

மண்ணைக் கிளப்பி குளிரும், இலைகள் நடுக்கும்.

அந்த இலைகளில் சிக்கிய காற்று உளறும்

அந்தக் காற்றில், கால் இடறி விழும் தூறல்.

சேர்ந்த சிறகினை

அலகினால் கோதிக் கோதி

நிறம்பிரித்து சிலிர்க்கும் பறவைகள்.

நனையும் குட்டிகளை தன் உடற்சூட்டில்

அணையக் கற்றுத்தரும் ஆடுகள்

பார்க்கும் யார்க்கும்

நனைந்த கவிதை அது!



சக்கரத்தைச் சுற்றி

சூடாக்கி, சூடாக்கி

இரும்புக்குள் மறைந்திருக்கும் நீரை

இறுக வைத்து

விரும்பும் அரிவாள்

வெந்து வரும் நெருப்பழகாய்.

எனக்கு வேலையென்ன?

எனும் கேள்விக்குறியாய்.

சிவந்து நிற்கும் வேளை

தீயின் கவிதை அது! உழைப்பின் செய்யுள் அது!



திமிறும் கடலை இரைக்க வைத்து

உப்புக் காற்றை உலர வைத்து

தப்பும் மீன்களை தசைகளில் வளைத்து

களைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி

கட்டுமரங்கள் முன்னேறும்.

பரதவர் உழைப்புக்கு

ஈடுகொடுக்க முடியாமல்

நுரை தள்ளும் கடல்புறத்தைக்

காணும் யார்க்கும்

அது வலைகளில் பின்னிய கவிதைகள்!



தசைகளின் உணர்ச்சியை

வாங்கி, வாங்கி

தறிக்கட்டைகளும் தடக் புடக் எனப்

பேசிப் பார்க்கும்.

நெய்திடும் புடவை மட்டுமா?

செய்திடும் கடுமையில்

கைத்தறிச் சூட்டை வாங்கிக் கண்களும் சிவக்கும்.



நுண்ணிய கனவுகள்

நூற்கும் விரல்கள்

கருவினில் இருக்கும் பிள்ளையும்

கால், கை அசைத்து

உயிர் பின்னிடும் கர்ப்ப வெப்பத்தில்

தோற்கும் நூல்கள்

வேலையின்றி சுற்றி வரும் காற்று

வெட்கப்பட்டு

தன் அம்மணம் மறைக்க

நூல்களிடையே நுழையும்

பார்க்கும் யார்க்கும்

நரம்புகள் பின்னிய கவிதை அது!



கருக்கரிவாளின் சுனை பார்த்து

ஓடி ஒளியும் கருக்கல் நிலவு.

உழவனின் காலில் மிதிபட்டு

தூக்கம் கலையும் வாய்க்கால்.

வீசும் கைகளின் வெப்பத்தில்

விலகிக் கொள்ளும் பின்பனி

அடடா! அறுக்கும் அந்நேரம்

உழவன் படைப்பு அது! கவிதை அறுப்பு அது!



தேடித்துளைக்கும் இரசாயனக் குண்டுகள்

தெருவில் சாவின் நகம் பதிக்கும்

இராணுவ வண்டிகள்.

மணல் மூட்டைகளுக்குப் பின்னே

மறைந்திருக்கும்

நவீன ஆயுதங்கள், காலாவதியான இதயங்கள்.

ராடார் வைத்து வேவு பார்க்கும் சாவு.

வாடா! அமெரிக்க நாயே! என்று

வீதியில் செருப்புடன் நிற்கும்

ஈராக் பிஞ்சுகள்.

அந்தச் செருப்புகள்

உணர்ச்சிக் கவிதைகள்!



வறுமையின் கொடுமை எது?

மனிதன் தன் மனித உணர்வுகளை இழப்பது.

மார்க்சோ, மேலும் மேலும் மனிதரானார்

அகதிவாழ்வில் பிள்ளைகள் இரண்டை பறிகொடுத்தும்

தன் ஆடைகளைக் கூட அடகு வைத்தும்

உயரிய சமூகம் படைப்பதிலேயே

அவர் உயிரின் ஆசை திமிறியது.



முடிவிலாத் துயரின், வலிகளை வாங்கி

மூலதன வீக்கத்தை உலகுக்குக் காட்டினார்.

பதுக்கி வைத்திருக்கும்

முதலாளித்துவத்தின் இரக்கமற்ற ஆன்மாவை

விரட்டிப் பிடித்து நிர்வாணமாக்கியது

மார்க்சின் சுருட்டுப் புகை.

அதனால் ஆவிகள் அம்மணமாகவே அலைகின்றன.

மார்க்சும், ஜென்னியும், ஏங்கெல்சும்

லெனினும், ஸ்டாலினும், மாவோவும்

வாழ்ந்த வாழ்வை

உணரும் யார்க்கும்

அது கவிதையாய் இருக்கும்!



தன்னைப் பற்றியே நினைத்து நினைத்து

தன் நிழலும் இடறும் கால்கள் உண்டு

காதல் சுகமே கடைசியில் கடைசி என

சுயநலம் வியர்க்கும் தோல்கள் உண்டு,

என் நரம்பும், தசையும்

எலும்பும், தோலும்

இரத்தமெல்லாம் அலைந்து

நான் விரும்பும் ஒரு சுகம்

நாட்டு விடுதலை தவிர வேறில்லை

என்று எங்கள் பகத்சிங் போல யாருண்டு?

தொண்டைக் குழியை

தூக்குக் கயிறு நெறித்த போதும்

என் விடுதலைத் தாகம் விடமாட்டேன்!

வெள்ளை அசிங்கமே! உனக்கு

என் விழிகளின் ஈரமும் தரமாட்டேன்!

என சிலிர்த்த முகத்துடன் செத்தானே?!

கண்டு கண்டு

மரணம் பயந்து போன கவிதை அது!



இன்றோ

எங்கள் நீர்நிலை நிறைந்த

கவிதைகள் காணோம்.

எங்கள் வயல்வெளி வரைந்த

ஓவியம் காணோம்.

நதிகள் சொன்ன கதைகள் இல்லை!

காற்றில் தூவிய உணர்வுகள் இல்லை!

எங்கள் தருக்கள் தந்த கருக்கள் காணோம்.

பறிபோனது எங்கள் இயற்கையம், நாடும்

எழுதத் தூண்டும் இயற்கை இன்றி

இயங்கத் தூண்டும் இயக்கம் இன்றி

கவிதை செய்வது கடினம்! கடினம்!



பஞ்சபூதங்களின்

பௌதீக வடிவம் நாம்.

பரிணாமத்தின்

உயிரியல் கவிதை நாம்.

நாம் நீராலானவர்கள்

நம் நீரை உயிர்ப்போம்.

நாம் நிலத்தாலானவர்கள்

நம் நிலத்தை விதைப்போம்.

நாம் நெருப்பாலானவர்கள்

நம் தீயை வளர்ப்போம்!

உயிர் அத்தனையும் உசுப்பி விடும்

காற்றின் உணர்வு

நம் கவிதையில் தொடங்கும்

நாம் சும்மாயிருக்க முடியாது

ஏனெனில்

நாம் காற்றால் ஆனவர்கள்!

எதுவும் சும்மாயில்லை இயற்கையில்



கரைகள் சும்மா இருந்தாலும்

அலைகள் விடுவதாயில்லை

போய் விவாதிக்க அழைக்கிறது.



பூக்கள் மூடிக்கொண்டாலும்

காற்று விடுவதாய் இல்லை

போய் பேசச்சொல்லி அவிழ்க்கிறது



நதிகள் ஒதுங்கிப் போனாலும்

வயல்கள் விடுகிறதா?

போய்வாய்க்கால் வழியே இழுக்கிறது.



தண்ணீர் நாக்கால்

உயிரொலி எழுப்பி

மலைகளின் மவுனம்

அருவிகள் கலைக்கும்.

அசைந்து கொடுக்காத

மண்ணின் பிடிவாதம் எங்கும்

மரங்கள்

தன் வேர்களை இறக்கும்.



நிலம் சும்மா இருந்தாலும்

மழை விடுகிறதா?

வீழும் துளிகளின் விமர்சனத்தால்

மேடு, பள்ளங்கள் காட்டி நிற்கும்.

புல்லின் நுனியிலும் போய் எழுதி

புதிய கவிதைகள் பனித்திருக்கும்.



சாரல் காற்றோ

மறைப்பினை விலக்கி

பதுங்கிய முகங்களை

பரிகசிக்கும்.

காரிருளின் கர்வத்தை

மின்னல் உதடுகள் எச்சரிக்கும்.

ஊரைவிட்டு ஒதுங்கி

தான்மட்டும் தனியே

பத்திரமாய் இருப்பதாய்

கற்பனையில் இருக்கும்

ஒற்றைப் பனையின் தலையில்

வந்து விழும் இடி.



அட! தண்ணீரும் தரையும்

தான் பாட்டுக்கு கிடந்தாலும்

அடியில் சும்மா இருக்குதா

இந்தப் பாறைகள்.

தாங்கொணா அழுத்தத்தில்

தான் நகர்ந்து

நீங்கொணா துயரத்தில்

நிலமெல்லாம் அதிர்வுகள்

சும்மா இருக்குதோ! எதுவும்

சுற்றிலும் பார்க்கிறேன்...



சிறகுகள் விரித்து காற்றினை முறித்து

திசைகளை வளைக்கும் பறவைகள்



கிளைகளை உரசி சிறுபொறி எழுப்பி

தீப்பழம் காய்க்கும் காடுகள்.



நீரைக்கிழிக்க நீளும் கூரிய கற்களை

கூழாங்கற்களாய்க் குலைத்துவிடும்

ஓடைகளின் முன்முயற்சி.



ஊமத்தம் இலைகளைப் பேசவைக்க

போராடும் பருவக்காற்று.



வரப்புகளைத் தாண்டிக் குதித்து

வாழத் துடிக்கும் குரவை. (மீன்)



புவியீர்ப்பு விசைக்குப் பொருத்தமாக

சிறகுகள் நீட்டி

காற்றின் மீது கால்களை ஊன்றி

கதிர்களைக் கொத்தும்

குருவியின் விடாப்பிடி



குளத்தில் விழுந்த நிலவை

இரவு முழுக்க எடுக்கப் பாய்ந்து

மேலும், கீழும்

தவித்துப் போகும் தவளைகள்.



இப்படி இயங்கியபடியே

ஒன்றுடன் ஒன்றாய்

நட்பும், முரணுமாய்

சும்மா இல்லாத சுழலின் அழகை

விலங்குகள் கூட விளங்கிக் கொண்டதாய்

இயற்கைக் காட்சிகள்

எடுத்துக் காட்டும்.

மனிதர்கள் நாம் உணர முடியாதா?



சும்மா இருப்பதே சுகம் என்று சொல்லும்

துறவிகளாவது சும்மா இருந்தானா?

மக்களின் மனங்களை கழிப்பறையாக்கி

முக்கியமானது மதமென்று

மூளைக்கு, மூளை முக்கி வைத்தான்.



ஏட்டு முதல் எஸ்.பி. வரை

ஜெயேந்திரன் முதல் அய்யப்பன் வரை

சும்மா இருக்கிறானா?

அப்பாவி பக்தனுக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஆலயத்தின் தந்திரிக்கோ

விபச்சார விடுதியில் கட்டில், மெத்தை.

அடைக்கலம் தேடிப் போகும் பெண்களின்

உடல் சுகம் பற்றியே

ஒவ்வொருத்தனுக்கும் புலன் ஆய்வு.

சுற்றித் திரியும் ரவுடிகளின்

கும்பலை விடவும் பயங்கரமானது,

பற்றற்றிருப்பதாய்ச் சொல்லும்

துறவிகளின் தனிமை.

வேண்டுமானால்

எட்டிப்பாருங்கள் காஞ்சிபுரத்தை

தோண்டிப் பாருங்கள்

ஆதீனங்களின் மடத்தை.



சும்மா இருந்ததா அகிம்சை?

வெள்ளையனின் ஆயுதங்களை விடவும்

கொடூரமானது

காந்தியின் புன்னகை.

வேண்டுமானால்

உற்றுப் பாருங்கள் அம்பேத்கரின் எழுத்தை

தொட்டுப் பாருங்கள்

பகத்சிங்கின் கழுத்தை.



சும்மா இருக்குதா பார்ப்பன மதம்?

தர்ப்பை புற்கள்தானே

என்று விட்டு வைத்தோம்

அதுவோ! ஆடுகளை மட்டுமல்ல

நிலத்தையும் சேர்த்தே மேய்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றால்

பிராமண வாயு

பிராண வாயுவை பழிக்கிறது.



சுரப்பற்றுப் போன காவிரி

கரப்பற்றுப் போன மாடுகள்

கோவில் நந்திக்குப் பால் அபிசேகம்



வரப்பற்றுப் போன வயல்கள் பசியில்

உறுப்பற்றுப் போன உடல்கள்

கண்டுகொள்ள ஆளின்றி

காய்கிறது தேசம்,

கையில் பாலும் அருகம்புல்லும்

இறைப்பற்று காட்ட

தெருவுக்கு தெரு பிரதோசம்



தாளிக்க எண்ணெயில்லை

சாமிக்கு ஆயில் மசாஜ்.

நம் சுயமரியாதையில் புல் முளைக்க,

சும்மா இருக்குதா பார்ப்பனியம்?



சும்மா இருக்குதா முதலாளித்துவம்?

தக்காளியை அழுகவைத்து

தற்கொலைக்கு விலையை வைத்து

தறியின் தக்களியை நிற்க வைத்து

நெசவாளி கிட்னிகளை விற்க வைத்து

வேலைக்கு ஏங்கும் இதயத்தை

கூலிக்குப் பிழிந்தெடுக்கும்.



வயிற்றுக்குள் வளரும் கருவையும்

வாட்டும் வேலைப்பளுவால்

வழித்தெடுக்கும் மூலதனம்.

சூளைக்குள் செங்கல்லாய்

சுடுகின்ற மனசெடுத்து சொல்லுங்கள்

சும்மா இருக்குதா முதலாளித்துவம்?



சிவகாசி சிவனே என்று இருந்தாலும்

ஐ.டி.சி. சும்மா இருக்கிறானா?

இந்திய உற்பத்தியை கருக்கும் வரை

எங்கள் கந்தகவெறி அடங்காதென

பன்னாட்டு தீக்குச்சிகள்

பசியெடுத்து அலைகின்றன.



உள்ளூர் உதடுகளை

விரட்டிப்பிடித்து சுரணை பொசுக்கும்

வெளிநாட்டு சிகரெட்டுகள்.



குடிப்பவன் கோலி சோடா கேட்டாலும்

கொக்கோ கோலா சும்மா இருக்கிறானா?

இந்திய நாக்குகளை நனைக்க

அமெரிக்க மூத்திரத்திற்கே அதிகாரம்.

இந்தியன் தாகத்தைக் குடிக்க

பெப்சிகாரனுக்கே பிரம்மதேயம்.



தறிகெட்ட

அனல்வாதம், புனல்வாதத்தால்

சமணர்களையும், பவுத்தர்களையும்

போட்டுத்தள்ளியது பார்ப்பனியம்.



தாராளமயத்தின் புனல்வாதத்தால்

சகலரையும் போட்டுத் தள்ளுகிறது

உலகமயம்.



சிலிண்டரில் மூச்சுவிட்டு

வெடிக்கும் பாட்டிலில் உதடு கிழிந்து

இரத்தத்தில் எசன்சு கலக்கும்

உழைப்பின் தீவிரத்தை

உங்களால் உணரமுடியுமா?

மிதிவண்டியின் இருக்கை தவிர்த்து

மிச்ச இடமெல்லாம்

திரவ உணர்ச்சிகளால்

கனக்கும் பாட்டில்கள்.

வீசும் எதிர்காற்றில்

விலா எலும்பும் வளையும்,

போக்ஸ் கம்பிகளாவது தப்பிக்கும்

போராடும் கால்களில்

வேரோடு பிடுங்கி வருவதுபோல்

பின் நரம்புகள் வளைந்து நெளியும்

அழுத்தம் தாங்காமல்

அடிவயிற்றிலிருந்து தப்பிக்கும் காற்று

வாயில் அலறும்.

மிதிக்கும் உள்ளூர் சோடா கம்பெனி தொழிலாளியே

கொதிக்கும் உன் குருதி தொட்டுச் சொல்

சும்மா இருக்கிறானா கொக்கோ கோலா?



கடன்காரர்களுக்குப் பயந்து

வழியை மாற்றி நடந்தாலும்

சும்மா இருக்கிறாரா அப்துல்கலாம்?

நிலைமை புரியாமல் வழியை மறித்து

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! என்கிறார்.

பாராளுமன்ற சுள்ளான்கள்

படுத்தும் பாட்டில்

படுத்து தூங்கவே வழியில்லை

கனவுகள் எங்கே காண்பது?

பகலையும் வாங்கலாம்

இரவையும் வாங்கலாம்

வேண்டிய கனவுகளை

விழிகளுக்கு வெளியே காணலாம்.

குஜராத் பிணங்களை கண்களில் புதைக்கலாம்

மண்டை ஓடுகள் கண்டு களிக்கலாம்

அதுக்கெல்லாம் கலாம்.

இரண்டு விழிகளில் இரண்டு கனவு

வர்க்கத்திற்கேற்ப வந்திடும் இரவு.

பிட்சா கார்னரில் நக்கி

மம்மி டாடியில் கக்கி

நைக்கியில் நடந்து கணினியில் விளையாடி

கடைசிவரை

இந்த மண்ணில் கால்படாமலேயே

சாண்ட்ரோவில் ஐ.ஐ.டி நுழைந்து

அப்படியே அமெரிக்க சத்யத்தில் கலந்து

ஏ.சி.யில் உறையும்

காம்ப்ளான் பேபியின் கனவுகள்.



இன்னொன்று:

நீராகõரத்தில் முகம் பார்த்து

நெடுந்தூரப் பள்ளிக்காக

தார்ச்சாலையில் கால் தோல் உரியும்.

வேகவேகமாய்

விறகொடித்துப் பழகிய கைகள்

நிறுத்தி பொறுமையாய்

ஆனா, ஆவன்னா லேசில்

வளைக்க வராமல் அடிவாங்கும்.

வழுக்கும் சிலேட்டை மாற்ற வழியின்றி அது

கறுக்கும் கையாந்தரையாலும், கரித்தூளாலும்.

நடக்கும் களைப்பில் படிக்க விடாமல்

விழிகளை தூக்கம் அரிக்கும்.

குடிக்கலாம் இரத்தமென நம்பி வந்த மூட்டைப்பூச்சி

பையனிடம் கிடைக்காமல் பாயில் கிடந்து துடிக்கும்.

பள்ளிக்குப் போகும் பைபாஸ் சாலையில்

பேருந்து சக்கரத்தில் மாட்டி

பிய்ந்து போன நண்பன்

கழண்டு விழும் காக்கிக் கால்சராயுடன் வந்து

கனவில் வீட்டுப் பாட நோட்டுக் கேட்க

பீதியில் உறைந்து அலறும்

பால்வாடிக் கனவுகள்.



எங்களால் தூங்க முடியவில்லை

கனவிலும் துரத்தும் பிணங்கள்!

எங்களால் விழிக்க முடியவில்லை

நினைவுகள் அறுக்கும் ரணங்கள்!

நாம் ஒதுங்கிப் போனாலும்

நாடு விடுவதாயில்லை

வர்க்கத்தை குறிவைத்து மறுகாலனியாதிக்கம்

வாழ்வை வழி மறிக்கையிலே

வெட்கத்தை விட்டு நாம் விலகி நடக்கலாமா?

இருக்கிறார்கள் சிலர்

சமூகத்தில் இருந்துகொண்டே

இதில் சம்மந்தம் இல்லை என்று.

இவர்கள் தன் வீடு எரிந்தால்

தன்னை மட்டும் அழைக்காமல்

தஞ்சாவூரையே அழைப்பார்கள்.

சாலையில் நகம் பெயர்ந்தால்

தன்னைத் திட்டாமல்

திருச்சியையே திட்டுவார்கள்.

உரைப்பவர்களும் உண்டு!

ஊருக்குப் பிரச்சினை என்றால்

உனக்கேன் வியர்த்து வடிகிறது?

உரைப்பவர்களும் உண்டு.

உண்மைதான்

பிணங்களுக்கு வேர்ப்பதில்லை.

பொதுநலத்திற்காக வாழ்ந்தவர் பிணத்திலும்

புழுக்கள் உணர்ச்சி தேடும்.

சுயநலத்தில் வாழ்ந்தவன் முகத்தை

மலத்தில் மொய்க்கும் ஈக்களும்

வெறுத்து ஓடும்.



சுயநலமா? பொது நலமா?

எந்த முகம்? உங்கள் சொந்த முகம்?

தெரிவு செய்யும் காலமிது!

சொந்த முகம் காண்பதற்கு

உதவி செய்யும் கவிதை இது.



எல்லாத் திசையிலும்

இனப்பெருக்க பாடல்கள்

வழிநெடுக வன்புணர்ச்சிக் கவிஞர்கள்.

படிக்காசுப் புலவர்களை

வழிநடத்தும் காலச்சுவடுகள்.

சீட்டுக்கவிகளுக்கு ரூட்டுக் கொடுக்கும்

உயிர்மைகள்,

குலைக்கும் நாய்களும்

குலை நடுங்கி ஓடும் இப்படி எழுதிப்

பிழைக்கும் நாய்களை

எதிரில் பார்த்தால்.

உணர்ச்சிகளை சுரண்டுவதைவிட

மோசமான சுரண்டல் உண்டா?

இலக்கியத்திலும் இந்த

இழிவான சுரண்டலை எதிர்ப்போம்.

கவிஞர்கள் என்பதால் மட்டுமல்ல

உழைக்கும் மக்களின் உறவுகள் என்பதால்

உங்களுடன் பேச வந்தோம்.



ஏட்டிலடங்காத கருத்துக்கள் நாங்கள்

எழுத்திலடங்காத உணர்ச்சிகள் நாங்கள்

வீட்டுக்கடங்காத சுயநலம் நாங்கள்

சும்மா இருப்போமா?

அம்மாவின் வயிற்றிலும்

சும்மா இல்லாதவர்கள் நாங்கள்,

இரத்தக்கனவினில் மெல்ல வளர்ந்து

இருட்டின் இமைகளை

எட்டி உதைத்து

வெளிச்சம் பார்க்க வெளியே வந்தவர்கள் நாங்கள்

நாடே இருட்டிக் கிடக்கையிலே

நாங்கள் சும்மா இருப்போமா?

பாட வாருங்கள் கவிஞர்களே!

பகலைப் பொழியும் கவிதைகளே



புல்லறுத்துப் பள்ளிக்குப் போய் பின்

நெல்லறுத்துக் கல்லூரிக்குப் போய்

விடுமுறையில்

கல்லறுத்து, மரமறுத்து கல்விப்

பசியறுக்கப் போராடி எங்கள்

பிறப்பறுத்து பின்தள்ளிய சமூகமே

இடம் ஒதுக்கு உயிர் கல்விக்கு

எனக் கேட்டால்?

செருப்புத் தைக்கும் கைகளுக்கு

படிப்பு ஒரு கேடா? என "சூ' துடைத்துக் காட்டி

சொல்லறுக்கும் பார்ப்பனக் கொழுப்பை

கருவறுத்து வீசாமல்

சும்மாயிருக்க முடியுமா?



உங்கள் செருப்பைத் தைத்ததனால்

பிறப்பொதுக்கி வெளியில் வைத்தீர்.

உங்கள் மயிரைச் சிரைத்ததனால்

நாங்கள் மட்டமான சாதியானோம்.

உங்கள் துணிகளை வெளுத்ததனால்

நாங்கள் அழுக்குப்பட்ட வம்சமானோம்

உண்மைதான்

சாதியில் புழுத்த

உங்கள் பிணத்தைத் தொட்டதனால்

தீட்டாய் போனோம்.

எதிர்த்துக் கேட்டவனுக்கு

வாயில் திணிக்கப்பட்டது மலம்

எதிர்க்காதவன் உடம்பிலோ

இரத்தமெல்லாம் மலம்.



மாட்டுத் தோலை உரிப்பவர்

சக்கிலி

மனிதத் தோலை உரிப்பவன்

சங்கராச்சாரியா?

சாதிவெறியன் சங்கமாய் இருக்கையில்

நீதி கேட்பவன் நீ மட்டும் அமைப்பின்றி

சும்மா இருக்க முடியுமா?



சிறீராமன் பெயரால்

எல்லாமும் நடக்கிறது.

இராமன் பிறந்த இடத்துக்காக

இசுலாமியப் பெண்களின்

பிறப்புறுப்புகள் வரை சொந்தம் கொண்டாடின

திரிசூலங்கள்.

அவர்கள் பெண்கள் என்பதற்காக அல்ல

இசுலாமியர்கள் என்பதற்காக

கற்பழிக்கப்பட்டார்கள்.

குழந்தைகளின் சிரிப்பை

உங்களால் கொளுத்த முடியுமா?

மழலைகள் உதடுகளையும்

கிழித்துப்போட்டன இராமஜெயங்கள்.

கருவுக்குள்ளும்

கட்டாரி வீசும் பார்ப்பன மதவெறி

தெருவுக்கு வந்து போராடாமல்

சும்மா இருக்க முடியுமா?



மதம் மாறி காதலித்ததற்காக

ஏழை முசுலீம் பெண்ணை

இழுத்துவைத்து மொட்டையடிக்கும்

முசுலீம் மதவெறி.

எரிக்கிறது பாலஸ்தீனத்தையும், லெபனானையும்.

ஈராக்கியப் பெண்களை இழுத்துவைத்து

சதைவெறியில் கிழிக்கிறது அமெரிக்கா!

அவனுக்கு மதம் மாறி எண்ணெய் விற்று தன்னை விற்று

செழிக்கிறது சேக்குகளின் மணிமுடி.

இனத்துரோக சேக்குகளின்

மயிரைப் புடுங்க மாட்டாமல்

பள்ளிவாசல் கட்ட அவனிடமே

பணம் புடுங்கும் வக்கிரங்கள்.

எல்லாமும் நடக்கிறது

அல்லாவின் திருப்பெயரால்.

ஐந்து வேளை தொழுக

பள்ளிவாசலுக்கு வா!

ஐந்து வட்டிக்கு பணம் வாங்க

பைனான்சுக்கு வா!

ஆயிரமாயிரமாய் சூதாட

பங்குச் சந்தைக்கு வா!

எல்லாமும் நடக்கிறது

அல்லாவின் திருப்பெயரால்

ஏழை வர்க்கத்தை

மதத்தின் பெயரால் ஏறி மிதிப்பதை

எதிர்க்க வர்க்க மார்க்கம் சேராமல்

ஒரு "மார்க்கமாய்' ஒதுங்க முடியுமா?



பல வழிகளிலும் பணம் வருவதால்

பளிங்கு மண்டபத்திலிருக்கும்

அவளுக்கென்ன?

எப்போதும் ஆரோக்ய மாதாதான்.



பருக்கைக்கு வழியின்றி

வாசலில் பிச்சையெடுக்கும்

இவர்கள்தான்

குட்டங்குளி மாதா

டி.பி. மாதா



ஏசுவின் அப்பத்தைத் தவிர

அவர்களுக்கு

எதிலும் பங்கில்லை.



எதிர்த்துக் கேட்டால்

பாவத்தின் சம்பளம்

கட்டாயம் உண்டு.



சிலுவை செய்த செலவையும்

பங்குத் தந்தைகள்

ஏசுவின் கணக்கிலேயே எழுதி விடுவதால்

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஏசு

மூர்ச்சையாகிப் போனார்.

பாருங்கள்! ஆலயத்தில் அவர் கிடக்கும் பாவனையை.

பரிசுத்த ஆவிகளும்

அணி, அணியாய் சேருகையில்

பார்த்துக் கொண்டு தனியுடம்பாய்

நாம் மட்டும் சும்மா இருக்க முடியுமா?



இரண்டாயிரத்தில் ஏசு வரப்போகிறார்

இது கிறிஸ்தவப் பிரச்சாரம்

இரண்டாயிரத்து இருபதில்

இந்தியா வல்லரசாகப் போகிறது

இது கிருத்துருவப் பிரச்சாரம்.

நல்லரிசி கொடுக்கவே வக்கில்லை

இந்தியா வல்லரசாகப் போகுதாம்

சில ஊரில் ரேசன் அரிசியில் வடித்த சோற்றை

நாய்களும் தின்ன மறுக்குது

அதைக் கழனிப் பானையில் போட்டால்

மாடும் மனிதனை வெறுக்குது

எடுத்துக் குப்பையில் போட்டால்

குடும்பத்தையே கோழி முறைக்குது

கோழிகளே கோபித்துக் கொள்ளாதீர்கள்

2020இல் இந்தியா வல்லரசாகிவிடும்.



கிட்டிவைத்து எலிகளைப் பிடிக்கிறான்

கீழத்தஞ்சை விவசாயி

வயல்களைக் காக்க அல்ல

வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள

எலிகளே எங்கள் அரசியலை நோண்டாமல்

இரைப்பையில் காத்திருங்கள்

இந்தியா வல்லரசாகப் போகிறது!



விளைவித்த வெங்காயம்

விலைபோகாமல்

அழுகிப் போகும் அவலம் தாங்காமல்

நிலைகுலைந்து சாகும் சிறுவிவசாயி

அழுகும் பிணங்களே மிச்சமிருங்கள்

2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது!



கம்பி வளைக்க நகரத்துக்கு வந்து

கட்டிட, உச்சியிலிருந்து கீழே விழுந்து

சாக்குமூட்டையில் ஒரு பிணம்.

சாவதற்கு முன் ஏதோ சொல்ல வந்ததாய்

எஞ்சியிருக்கும் அதன் விழிகளில் மட்டும்

ஏதோ ஜாடை தெரியுது

குறிப்பறிந்தவர்களே கொஞ்சம் இருங்கள்!

இந்தியா வல்லரசாகப் போகுது!



பார்க்க முடியாத கொடுமைகளால்

ஏசுவே எட்டி ஓடினாலும்

பாவிகளை இரட்சிக்க

ப.சிதம்பரம் இருக்கிறார்.

நல்லவர்களே உங்களுக்கு

நக்சல்பாரிகளை விட்டால்

வேறு வழியில்லை.



பயங்கரம் எது?

பாட்டி சொன்ன கதைகளில் வரும்

பேய்களின் அலறல்களா?

இல்லை

நாட்டில் நடக்கும் கொடுமைகள் கண்டும்

சும்மா இருப்பவர்களின் மௌனங்களே!



ஆபத்து எது?

அம்மா சொன்ன கதைகளில்

நம் சோற்றைப் புடுங்க வரும்

அஞ்சு கண்ணர்களா?

இல்லை

நம் நாட்டையே புடுங்க வரும்

தனியார்மயம் தாராளமயம் உலகமயம்

எனும்

பன்னாட்டுக் கம்பெனிகளின்

மூன்று கண்ணர்களே!



பார்த்துக் கொண்டு

சும்மாயிருக்க முடியுமா?

மீன்வலையைக் காயப்போட்டால்

கடற்கரைகள் நாறுதாம்

மீனவர்களை விரட்டிவிட்டு

தனது ஆணுறைகளை

அவிழ்த்துப் போடுது தாஜ் ஓட்டல்.

நமது இறையாண்மையின் முகத்தில்

வீசப்படும் ஆணுறைகளை

எதிர்த்துப் போராடாமல்

நாம் கடலின் முகத்தில் முழிக்க முடியுமா?



பல்லுயிர்க்கெல்லாம் தாய்போல

பரிந்து ஓடும் எங்கள் தõமிரவருணி.

பக்கத்தில் தாகம் கொண்டு அலையும்

கங்கைகொண்டான் கழனி.

ஊர்போய்ச் சேர

கரையேரத் துடித்து

தவிக்குது ஆறு

நம் தாய்முகம் தழுவிய ஆறு இது

அதைத் தட்டிப் பறிக்கும் அநியாயம் பாரு!

கூசாமல் குழாயில் உறிஞ்சி

காசுக்கு விற்கும் கொக்கோ கோலா

நம் தாயின் மார்பை உறிஞ்சுபவனை

உதைத்து விரட்ட பதைத்து வராமல்

சும்மாயிருக்க முடியுமா?



எங்களுக்கு கொக்கோ கோலா வேண்டாம்

ஆற்றைக் கொடு!

எங்களுக்கு வலைகள் வேண்டாம்

கடலைக் கொடு!

எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம்

விவசாயத்தை கொடு!

எங்களுக்கு விபூதி வேண்டாம்

கருவறை கொடு!

எங்களுக்கு தரிசனம் வேண்டாம்

தில்லைக் "கோயில்' கொடு!

சொர்க்க வாசல் வேண்டாம்

சிறீரங்கம் கொடு!

எங்களுக்கு சலுகைகள் வேண்டாம்

அதிகாரம் கொடு!



சும்மாயிருக்க மாட்டோம் நாம்!

சுவாசம் நமக்கு உயிர்ப்பழக்கம்

அதுபோல் சும்மாயின்றி

இயக்கம் இருந்தாலே

யார்க்கும் உயிர் இருக்கும்



கலைஞன், விவசாயி, தொழிலாளி

மாணவன், நெசவாளி, அறிவாளி

அனைவர்க்கும் பொது எதிரி

நாடு நமதல்ல எனப்

பழிக்கும் பன்னாட்டுக் கம்பெனி



போராடும் உழைக்கும் மக்கள்

ஏற்கெனவே வீதியிலே

அவர்கள் தோளோடு தோள் நிற்க

முன்செல்வோம் கவிதைகளே!



எத்தனை பேர் நம்மை நம்பி

ஒப்படைத்த கனவு இது

எத்தனை பேர் நம்மை நம்பி

கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது.



கண்கள் உறங்கலாம்

இரத்தம் உறங்குமோ!

அளவுக்கதிகமாகவே சிந்திய இரத்தம்

இனி புரட்சிக்கும் குறைவாக

வேறெதை விரும்பும்?

முன்னோர்கள் கனவுகள்

நம் எல்லோர் கவிதையிலும்

முன்னோர்கள் துடிப்புகள்

நம் எல்லோர் இதயத்திலும்

கவிதை

எழுதிக் காட்டுவது மட்டுமல்ல

இயங்கிக் காட்டுவோம்.





(29.9.2006 அன்று தருமபுரி பெண்ணாகரத்தில் நடைபெற்ற பகத்சிங் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்,

கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)



பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!



எந்தக் கவிதை நாம் பாட?

கண்ணில் தெரியும் பூக்களையா!

காலில் குத்தும் முட்களையா?

எந்த மரபை நாம் தேட?



மாமல்லபுரத்துச் சிற்பங்கள்

தரையில் நிழல்விழா தஞ்சைக் கோவில் அற்புதங்கள்

சூளகிரி இசைத் தூண்கள்.... புடைப்புச் சிற்பங்கள்

இப்படி மூளியாய் கிடக்கும் சிலைகளுக்கும்

முன்கதை ஒன்று இருக்கிறது.

ஆனால் கூலியாய் நிலம் பெயர்ந்து

பெங்களூரிலும், கல் குவாரியிலும்

பிய்த்து எறியப்படும் உழைக்கும் மக்களின்

கல்லாய்ச் சமைந்த வாழ்க்கையை

எழுப்புவதற்கான இலக்கியம் எங்கே?

குண்டு குண்டாய் இருக்கும்

கொழுப்பேறிய இலக்கியமெல்லாம்

சுரண்டுபவனின் நக அழுக்கை அல்லவா

விண்டு வைத்து விருந்து படைக்கிறது

கண்டதுண்டா! நீங்கள் கண்டதுண்டா!

நக்சல்பாரிகளின் துண்டறிக்கைகள் அல்லவா

நமது உழைக்கும் மக்களின் குரலை

உயர்த்திப் பிடிக்கிறது

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அல்லவா

மறுக்கப்பட்ட நம் இலக்கியம் இருக்கிறது!



தருமபுரிக்கு

ஆருயிர் நீட்டிக்கும்

அரும்சுவை நெல்லிக்கனியை

அதியமான் அவ்வையாருக்கு கொடுத்ததா பெருமை?

மக்களின் அரசியல் வாழ்வு நீடிக்க

தம் ஆருயிரையே கொடுத்த

எங்கள் அப்பு, பாலன் தந்த

நக்சல்பாரி பாதையல்லவா பெருமை!



தருமபுரி கரும்புக்கு

சருக்கரை விழுக்காடு அதிகமாம்!

இருக்காதா பின்னே,

கணுக்கணுவாய்

இனிய பாட்டாளி வர்க்கக் கனவுகளை

வேர் இறக்கிய

நக்சல்பாரிகள் மண்ணில்

நட்ட பயிராயிற்றே!



அரசாங்கம் அழகாய் கதைவிடுகிறது

ஈரமற்ற மண்...

சாரமற்ற கலிச்சோறு...

வேலையற்ற மக்கள்...

பின்தங்கிய மாவட்டமாதலால்...

பின்தங்கிய மனநிலையினால்

மக்கள் நக்சல்பாரிகள் ஆகிவிடுகிறார்களாம்!



மடையர்களா!

வேலை இல்லாதவனா புரட்சியாளன்

வெட்டி வேலை செய்பவன் போலீஸ்காரன்.

பின்தங்கிய மனநிலையா புரட்சி?

முன்னேறிய உணர்ச்சி அல்லவா புரட்சி!

முன்னேறிய அறிவு அல்லவா புரட்சி!

முன்னேறிய உழைப்பு அல்லவா நக்சல்பாரி!



கதை முடிக்கப் பார்ப்போரே!

அது முடியாது

நாங்கள் பகத்சிங்கின் தொடர்ச்சி.



சில குழந்தைகளுக்கு

பொம்மைகள் போதும்

அழுகையை நிறுத்திக் கொள்ள

சில குழந்தைகளுக்கோ

அம்மா வேண்டும்!

கிலு கிலுப்பைகளோடு அடங்கிவிடும்

சில குழந்தைகள்.

சில குழந்தைகளுக்கோ தாயின் குரல் வேண்டும்!

வயிறு நிறைந்தால்

தூங்கிவிடும் சில பிள்ளைகள்.

சில பிள்ளைகளுக்கோ அது முடியாது

அடுத்து கதை÷வண்டும்.

அவர்களுக்குச் சொல்லுங்கள்

இந்தக் கதையை...

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏழõம் ஆண்டு

செப்டம்பர் இருபத்தி எட்டாம் நாள்

ஒரு பஞ்சாப் தாயின் பிரசவ வலி

புதிய இந்தியாவையே ஈன்றெடுத்தது.

கருவறையை விடவும் இருண்டு கிடக்கும்

நாட்டின் நிலைமையை

கர்ப்ப வெப்பத்திலேயே கண்டுணர்ந்து,

தன் மேனியில் வழிவது

தாயின் இரத்தம் மட்டுமல்ல

தாய்நாட்டின் இரத்தம் என்பதை

பார்த்து, பார்த்து

அடிமைத்தனத்தின் பனிக்குடம் உடைத்து

தொப்புள் கொடியின் தாமதம் அறுத்து

பிறப்பின் கலகம்

அங்கே பகத்சிங் என்று பெயரெடுத்தது.

அடிமை இந்தியாவின் தாலாட்டில்

அடங்க மறுத்து, அழுது சிவந்து

அவன் கையும் காலும்

எல்லோர் முகத்திலும் எட்டி உதைத்தது.



வெறும் வயிற்றுப் பசிக்காக

வளர்ந்தவனாய் இருந்திருந்தால்

அம்மா... அப்பா என்று மட்டும்

அழைத்திருப்பான்.

வர்க்கப் பசியோடு வளர்ந்த பகத்சிங்

அ... ம்.... மா, அ... ப்... பா... நாடு என

விரிந்த பொருளில்

பேசத் தொடங்கினான்.



பன்னிரெண்டாம் அகவையில்

பள்ளிக்கூடத்திலிருந்து

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்

துள்ளியெழுந்து

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை

பார்க்கப் போனான்.

அங்கே வெள்ளையன் குதறிய

இந்தியப் பிணங்களை

தன் கண்களில் விதைத்தான்.

கருகிய இரத்தம் இதயத்தில் உறைய

தன் காலத்தை வெறுத்தான்.

சிவந்து கிடக்கும் இந்தியக் கனவையும்

சிதறிக் கிடக்கும் இந்தியப் புரட்சியையும்

ஒன்று சேர்க்கும் உறுதியுடன்

கையில் அள்ளிய களத்தின் மண்ணை

தன் (சட்டைப்) பையில் திணித்தான்!



மண்ணைத் தின்று வளர்ந்தவர்களே!

உங்களில் எத்தனை பேருக்கு

இந்த மண்ணைப் பற்றிய அக்கறை உண்டு?

ணூ வெறும் வீட்டுப் பாடம் போதுமா?

பகத்சிங் போல நாட்டுப்பாடம் படித்தாலே

நல்ல புத்தி வந்து சேரும்.

இல்லையேல்

ஜாலியனாவது... பாக்காவது

அமெரிக்காவின்

கூலி என் பாக்கியம் என்று

சட்டைப் பையில் மட்டுமல்ல

சதைக்குள்ளும் அந்நிய நரகலின்

ஆணவம் ஊரும்.



பகத்சிங்கும் தான் படித்தார்!

""புரட்சி ஒன்றே என் விருப்பப் பாடம்

நாட்டுப்பற்றே உயர்நிலைக் கல்வி

கம்யூனிசமே உயிரியல் படிப்பு''

என்ற விடுதலைக் கல்வியின் வீரியத்தை

விளக்கிச் சொல்லுங்கள் பிள்ளைகளிடம்.

சுயநலம் என்ற தோல் வியாதி

உங்கள் பரம்பரைக்கே தொற்றாது.

""இளமைக்கேற்றவேலை வாய்ப்பு

இந்தியப் புரட்சியில் இருக்குது

அந்நியன் ஆதிக்கம் ஒழிப்பதிலேயே

நம் அனைவர் நலனும் பிறக்குது''

என்று பகத்சிங் சொன்ன கருத்துக்களோடு

பழக விடுங்கள் பிள்ளைகளை.

முதலாளித்துவம் எனும் கெட்ட பழக்கம்

உங்கள் வாரிசுகளுக்கே வராது.

எனக்கு மட்டுமே வாழ்வேன் என்று

இதயத்தை இழுத்து நடக்கும்

"வாதம்' அவர்களுக்கு வராது!

போராடத் தூண்டும் பகத்சிங் வாழ்வு!

பொறாமைப்பட வைக்கும் அவன் சாவு!

கரைக்கப்பட்ட பகத்சிங் சாம்பலால்

உணர்ச்சி பெற்ற சட்லெஜ் நதி இன்றோ...

சகலரையும் சந்தேகத்துடனே பார்க்கிறது.

எதுவுமே செய்ய முன்வராத

இவர்களை நம்பியா செத்தோம்

அச்சத்தில் தியாகிகள் கனவு உறைகிறது!

இவர்களை நம்பியா இருக்கிறோம்

பீதியில் இயற்கை நடுங்கித் தவிக்கிறது!



சும்மா பகத்சிங் பற்றி பேசாதே!

அவன் பேசவிரும்பியதைப் பேசு

சும்மா தியாகிகள் இரத்தத்தில் ஒளியாதே!

அவர்கள் தெரிவு செய்த பாதைக்கு

வேலை செய்ய வெளியே வா!

அழைக்கிறது புரட்சி நதி!





1.2.2007 அன்று தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற ""கவிதை முற்றம்'' எனும் நிகழ்ச்சியில் ""உறங்காத கனவுகள்'' எனும் தலைப்பில் தலைமை தாங்கி வாசித்த கவிதை)



உறங்காத கனவுகள்



வாயும், வயிறும் வளர்த்து நிதம்

வலியப் புகழ் தேடித் திரியும் சிலர் முற்றத்திலோ

போயும் போயும் பொழிந்தோம், என

காயும் நிலவின் வான்பழி மட்டுமல்ல?

வெறும் வித்தகக் கவிஞன் என்ற வீண்பழியும்

வாரா வண்ணம்,

விளங்கட்டும் கவிமுற்றம்



நாம் வர்ணித்து காட்டுவோம் என்பதற்காக

வந்து போகவில்லை நிலவு,

விண்மீன்கள்சிணுங்கும் இரவோடு சிற்றினம் சேராமல்

சுயநலத்தில் ஒதுங்கும் போக்கோடு

ஓரிடத்தில் உறையாமல்

பொதுவில் உலகுக்கு முகம் காட்டும்

தன்னைப் போல உன்னையும் எதிர்பார்த்தே

ஒவ்வொரு நாளும் வருகிறது நிலவு!

வர்ணித்துக் காட்டாதே! வாழ்ந்து காட்டு!



கண்களால் காணும் கனவுகளை விடவும்

நீங்கள் கவிதைகளால் கண்ட கனவு தகுதியானது

ஏன் தெரியுமா?

கனவுகளில் நாம் சிந்திப்பதில்லை.

அனுபவிக்கிறோம்,

உங்கள் கவிதைகளில் (அனுபவிக்க மட்டுமல்ல)

சிந்திக்கிறோம்!



உறக்கத்தில் அமைதியாகக் கண்ட கனவையே

பலருக்கு, ஒழுங்காகச் சொல்லத் தெரிவதில்லை.

இதில் உறங்காத கனவுகளை

இந்த ஊரே சொல்லும்படி

என்னமாய்ச் சொன்னீர்கள்! நன்றி கவிஞர்களே!



உறக்கம் கிடக்கட்டும்

சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போதே

எதையும் விளங்கிக் கொள்வதில்லை!

பாக்கி கடன் அடைக்க முடியாமல்

குடும்பத்துடன் விவசாயி

பாலிடால் குடித்து சாவதைப் பார்த்தபிறகும்

நோக்கியா வந்ததனால்

நாடு முன்னேறிவிட்டது, என்று யாராவது சொன்னால்

ஆமாம், ஆமாம் என்று

வேகமாய் தலையாட்டும்

சில விளங்காத ஜென்மங்கள்.

இப்படியொரு சூழ்நிலையில்...

உறங்காத கனவுகளின் உணர்ச்சிகளை

நம் நரம்புகளில் ஊட்டிவிட்ட

மனிதக் கவிதைகளை

மனதாரப் பாராட்டுவோம்!

இது நிலா முற்றம்

குழந்தை தாய்க்கு சோ×ட்டுதல் போல

இங்கே குறைகளும் கூட அழகாகும்.

சிதறிய பருக்கையில் உணர்ச்சியின் பசிகள்

பவுர்ணமி முகத்தில் ஒப்பனை எதற்கு?

பசப்பாத உணர்ச்சிகளுக்கு பஜனை எதற்கு?



பொய்நேர்த்தி காட்டாத

உங்கள் செய்நேர்த்திக் கனவுகளோடு

சேர்ந்து கொள்கிறேன், நானும்...



படுத்தால் கனவு பிடுங்குதென்று

பலர் சொல்லக் கேட்டதுண்டு

படுத்துத் தூங்கினால்

விழுந்து பாம்பு புடுங்குது

விழித்து எழுந்தால்

ப.சிதம்பரம் போட்ட பட்ஜெட் புடுங்குது

பாதை தேடி, பலர் விழிகள் நடுங்குது.



சிலர் விழித்திருந்தாலோ! வில்லங்கம்

கனவு கண்டாலோ விபரீதம்

காந்தி சுதந்திரமாய் விழித்திருந்தபோது

ஆட்டுப் பால் காலியானது

அவர் கனவுகண்ட சுதந்திரத்தால்

சாணிப்பால் நம் வாயில் போனது



அம்பானிகள் கண்ட கனவில்

பி.எஸ்.என்.எல்.லின் விழிகள் பிதுங்குது

களவாடிய அரசுப் பணத்தை

கனவிலேயே கழித்துக் கொள்ளச் சொல்லி

"ரிலையன்சின் ரிங்டோன்'

தேசத்துக்கே பழுப்புக் காட்டுது.



வால்மார்ட்டின் வர்த்தகக் கனவில்

இந்தியச் சில்லறை வணிகம் செத்து மிதக்குது.

கோக்பெப்சியின் கனவு

பல குரல் வளையெங்கும் ஓடுது.

எங்கள் பட்டுப்போன வாய்க்கால் கனவு

எலி செத்து நாறுது!

கனவுகளில் வரும் அபத்தங்களைவிடவும்

சிலர் நினைவுகளில் செய்யும் அபத்தங்கள்

நீடித்த வியப்பளிக்கும்!

இரவு உணவின்றி படுக்கப் போவோர்

இந்தியாவில் இருபது சதவீதம்!

பிறப்பது பெண்பால் என்றால்

கருவினை கருக்கிடும் கள்ளிப்பால்.

மீறிப் பிறந்தாலும் ஊறாது தாய்ப்பால்.

ஊட்டச்சத்தின்றி உயிர்ப்பலிகள்.

உறுப்புகள் விற்று... பொறுப்புகள் சுமக்கும் குடும்பங்கள்.

இவ்வளவு பிணங்களும்... கண்களை மறைக்க

இதோ... இந்தியா வல்லரசாகப் போகிறது என்று

சிலர் பீதியூட்டும் அபத்தங்களை

கனவிலும் யாராவது காண முடியுமா?



கனவான்களே! கலாம்களே!

காலந்தோறும் நீங்கள் கண்ட கனவால்

கடைசியில் எங்கள் கிட்னியும்

கழண்டு போனது.

இதயமும் வறண்டு போனது.



இரவுகள் பொதுவாய் இல்லாத நாட்டில்

கனவுகள் பொதுவாய் எப்படி இருக்கும்?



ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும்

பிட்சா கார்னர்களுக்கும்

இரவு சம்பாதித்துக் கொடுக்கிறது.

நடைபாதை இரவுகளோ

சில்லிடும் பனியின் கொலைக்கரத்தால்

சில ஏழைகளின் உயிரையும்

செலவு செய்து விடுகிறது.



இழவு வீட்டுக்குச் சென்று வரும் வழியில்

குளத்தின் பனிக்குள்

உறையும் நிலவைப் பார்த்து, நீரைத் தொட்டு

நடுக்கும் நடுத்தர வர்க்க இரவு

அறுக்கும் வயலின்

கொதிக்கும் சுனையுடன், உடல் சுடச் சுட

உழவன் குளத்தில் இறங்கும் வேகத்தில்

பனிக்கும் குளிர்விட்டுப் போகும்

நீரைப் பழிக்கும் உழைப்பின் வியர்வை இரவு!



தங்க நாற்கரச் சாலையில்

தடம் குலுங்காமல் விரைகின்றன.

பன்னாட்டுக் கம்பெனிகளின் கனவுகள்

கண்ட்டெய்னர், கண்ட்டெய்னராக...

எங்களூர் கப்பிச் சாலையில் கால் இடறி

தயிர் விற்பவள் தடம் புரண்டு

மண்பானைக் கனவுகள்... மண்ணாய் போகுது!

தரையும் தாரை வார்க்கப்படும் நாட்டில்

புவியீர்ப்பு விசை கூட

பொதுவாய் இருக்குமா என்ன?



இனி கனவுகள் கூட

உனக்கு உரிமை இல்லை.

கண்டமெல்லாம் அமெரிக்காவின் வசம்

வெறும் "காண்டம்' மட்டுமே

இந்திய இளமைக்கு கைவசம்.



நீ ஒரு மாணவனா?

உனது கல்விக்கான மானியத்தை

வெட்டச் சொல்லுது

உலகவங்கியின் கவுச்சிக் கனவு.

அறிவார்ந்த நம் தொழில்நுட்பக் கனவுகளை

தனது காலடியில் போடச் சொல்லி

விழிகளை உருட்டுது அமெரிக்கத் தினவு.

நீ ஒரு விவசாயியா?

உனக்கான இலவச மின்சாரம், நீர்

அனைத்தையும் நிறுத்தச் சொல்லி

உனது கண்களை பறிக்கிறது

உலக வர்த்தகக் கழகத்தின் கனவு!

மண்ணை அகழ்ந்து

நாம் புதைத்து வைத்த இரத்தக் கனவுகளை

அன்னிய டப்பா உணவில்

அடைக்கப் பார்க்குது

இனி நம் அன்னையின் கருவிலும்

அன்னிய மூலதனம்!



பழுப்பு நிலக்கரி கனவுகளுக்காக

பாதாளத்தில் மண் சரிந்து

மூடிய விழிகள் எத்தனை? எத்தனை?

வழுக்கும் கிரானைட் வார்த்து எடுக்க

உயிர் வழுக்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?

பரந்து கிடக்கும் மின்சாரம், தொலைபேசி இழைகளுக்குள்ளே

இறந்து துடிக்கும் தொழிலாளர் உயிரணுக்கள்

ஒன்றா? இரண்டா?

மயங்கி விழும் உனக்கு ஒரு சோடா கொடுக்க

மைல் கணக்கில் இயங்கிடும் மிதிவண்டியே

இரும்புக் குரலில் என்னைவிட்டுவிடு

போதும் எனக் கதற

உயிர் மூச்சுக் கொடுத்து தொழிலாளி

உருவாக்கிய சந்தைகள் எத்தனை?

சத்தமில்லாமல் அத்தனையையும்

தட்டிப் பறிக்க வரும் மறுகாலனி ஆதிக்கத்தை

உங்கள் உறங்காத கனவுகள்

ஒழிக்காமல் விடுமா என்ன?

நீங்கள் மண்ணைக் கிளப்பிடும் காற்று

எதிரிகளின்

கண்ணை உறுத்தட்டும் உங்கள் கனவுகள்!



மாறாக!

இரண்டு ரூபாய் அரிசியில் கிறங்கி...

இலவச டி.வி.யில் மயங்கி...

இழிவுகளோடு உறங்கி..னால்

என்ன கனவு வரும்?

""கூட்டணி வைத்து பல பாம்புகள் துரத்தும்

நாயும் கூட கேவலம் பேசும்

பன்றிகள் பக்கத்தில் நிற்க அருவருத்து ஓடும்,

எதிர்ப்புணர்வே இல்லாததைப் பார்த்து

எறும்புகள் மண்ணை வாரித் தூற்றும்...''

இனியாவது அடிமைக்கனவைக் கலைப்போம்

விடுதலைக் கனவுகள் விதைப்போம்

கனவு காணும் மனிதர்களாக மட்டுமல்ல

கனவுகள் நம்மை காணத் துடிக்கும்...

மனிதர்களாக இருப்போம்!