தமிழ் அரங்கம்

Saturday, June 2, 2007

மறையாது மடியாது நக்சல்பாரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!

நக்சல்பாரி பேரெழுச்சியின் 40-ஆம் ஆண்டு :

மறையாது மடியாது நக்சல்பாரி!
மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!



க்சல்பாரி — அது இமயமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் பெயர். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்திலுள்ளது அந்தக் கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல் ஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் நாற்பதாண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமம் இருந்தது.

1967ஆம் ஆண்டு மே 23ஆம் தேதிக்குப் பின்னரோ, அது கோடானுகோடி உழைக்கும் மக்களின் இலட்சியக் கனவு. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் நிலம் கிடைக்குமென்று அரசு அதிகார வர்க்கத்தை அண்டிக் காத்துக் கிடப்பதா, அல்லது ஆயுதம் ஏந்திப் போராடி நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்வதா என்ற கேள்விக்கு விவசாயிகள் அங்கே விடை கண்டனர்.


அதுதான் நக்சல்பாரி உழவர்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி. சி.பி.எம். கட்சிக்குள்ளிருந்த கம்யூனிசப் புரட்சியாளர்களால் வழிநடத்தப்பட்ட எழுச்சி. மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்த மாபெரும் எழுச்சி. ""துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது'' என்று முழங்கிய எழுச்சி.


சிலிகுரி வட்டத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கிராமக் கமிட்டிகளை நிறுவி ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தங்கள் கூலிக்காக மட்டும் போராடும் தொழிற்சங்கவாதத்தைக் கைவிட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களோடு இணைந்து ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.


நிலப்பிரபுக்களின் பட்டாக்களும் கடன் பத்திரங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. வில்லும் அம்பும் துப்பாக்கியும் ஏந்திய விவசாயிகள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். மக்கள் நீதிமன்றம் அமைத்து, எதிரிகளைக் கூண்டிலேற்றி விசாரித்துத் தண்டனை வழங்கினர். சாட்டைகள் முதன்முறையாகக் கொழுத்த சதைகளைச் சுவைத்தன. கொடிய நிலப்பிரபுக்களுக்கு அங்கே மரணதண்டனை விதிக்கப்பட்டது.


அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் போகவேண்டிய இடத்திற்கு கூலி, ஏழை உழவர்களின் குடிசைக்கு முதன்முறையாகப் போய்ச் சேர்ந்தன. குத்தகை விவசாயிகளின் அனுபோக உரிமை நிலைநாட்டப்பட்டது. வயல்களெங்கும் படபடத்துக் கொண்டிருந்த செங்கொடிகள் நிலப்பிரபுக்களை எள்ளி நகையாடின.


1967 மார்ச் மாதத்திலிருந்து படிப்படியாக முன்னேறிய நக்சல்பாரி எழுச்சியைக் கண்டு ""ஐயோ, பயங்கரவாதம்!'' என்று ஆளும் வர்க்கங்கள் அலறின. மே 23ஆம் நாளன்று தங்களது தலைவர்களைக் கைது செய்ய வந்த போலீசு படையை நக்சல்பாரி விவசாயிகள் திருப்பித் தாக்கி விரட்டினர். பின்னர் பெரும்படையுடன் வந்து நரவேட்டையாடியது போலீசு. இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட போதும் நக்சல்பாரி தன் நிறத்தை மாற்றிக் கொள்ளவில்லை.


நக்சல்பாரி வெறுமனே நிலத்திற்கான போராட்டமல்ல; அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம். ""உழுபவனுக்கே நிலம்; உழைப்பவருக்கே அதிகாரம்!'' நக்சல்பாரி எழுப்பிய இந்த மந்திரச் சொற்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்தன. முஷாகரி, கோபிவல்லபூர், லக்கிம்பூர்கேரி, சிறீகாகுளம், தெலிங்கானா, கேரளா, தமிழ்நாடு... என நாடெங்கிலும் வர்க்கப் போராட்டம் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்தது.


""வேலை நிறுத்தம் செய்தால் ஆலையை மூடிக் கதவடைப்பு செய்வோம்'' என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை அவர்களது அறைக்குள்ளேயே கதவடைப்பு செய்து முற்றுகையிட்டார்கள் தொழிலாளர்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க போராட்ட வடிவமாக ""கெரோ'' எனும் முற்றுகைப் போராட்டம் நாடெங்கும் பரவியது. நாடெங்கும் மாணவர்கள் கல்வியை கல்லூரியைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அரசியல் உணர்வூட்டி அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.


போராட்டங்களைக் கட்டியமைத்து வழிநடத்திய "குற்றத்திற்காக' கைது செய்யப்பட்ட புரட்சியாளர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். ""ஆம்! நாங்கள்தான் பண்ணையாளர்களைக் கொன்றோம். மக்கள் எதிரிகளை அழித்தொழித்தோம். தூக்கு தண்டனையா, அதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தீர்ப்பை எழுதிவிட்டு ஏன் விசாரணை நாடகமாடுகிறாய்?'' என்று கலகக் குரல் எழுப்பினார்கள். நீதிமன்றங்களின் புனிதம், நாடாளுமன்ற சட்டமன்றங்களின் மீதான மாயை, போலீசின் மீதான அச்சம் அனைத்தையும் ஒரே அடியில் தகர்த்தெறிந்தது நக்சல்பாரி.


தகர்ந்தவை ஆளும் வர்க்க நிறுவனங்கள் மட்டுமல்ல; நாற்காலி புரட்சி செய்யும் இடது, வலது போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும்தான். நக்சல்பாரி பேரெழுச்சியை ஆதரித்தும், அதை ஒடுக்கி அவதூறு செய்த சி.பி.எம். கட்சியின் துரோகத்தையும் புரட்டல்வாதத்தையும் நிராகரித்தும் நாடெங்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைந்தனர். மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையே எங்களின் சித்தாந்தம்; தரகு அதிகார முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் ஆகியவற்றைத் தகர்த்தெறிந்து புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதே எங்களது உடனடி இலட்சியம்; போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்; ஆயுதப் போராட்டப் பாதையில் மக்கள் யுத்தத்திற்கு அணிதிரள்வோம் எனத் தமது கொள்கைகளைப் பிரகடனம் செய்த புரட்சியாளர்கள், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற புரட்சிகரக் கட்சியை லெனினது நூற்றாண்டு தினத்தில் 1969 ஏப்ரல் 22ஆம் நாளில் தோற்றுவித்தனர். அது, நக்சல்பாரி பேரெழுச்சி ஈன்றெடுத்த போராளி.


2007 நக்சல்பாரி எழுச்சியின் நாற்பதாம் ஆண்டு. கடந்த 40 ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம் கற்றுக் கொண்டதும் சாதித்திருப்பதும் ஏராளம். அளவில் மட்டுமல்ல, அதன் முதிர்ச்சியும் அரசியல் செல்வாக்கும் பெருகியிருக்கிறது. நக்சல்பாரி என்ற சொல் இனி மே.வங்கத்திலுள்ள சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை. அது, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. அது, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது; ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது; நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் அரசியல் மையமாகத் திகழ்கிறது; அதிகாரவர்க்க இராணுவ அரசியலமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது; உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாக விளங்குகிறது.


1970களில் கல்கத்தா வீதிகளில் ஆயிரக்கணக்கான புரட்சிகர இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற சித்தார்த்த சங்கர் ரே; அதன் பிறகு, கிராமங்கள் நகரங்கள்சிறைச்சாலைகளிலும் புரட்சியாளர்களின் ரத்தம் குடித்த பாசிசக்காளி இந்திரா, 80களில் தருமபுரி வடஆற்காடு மாவட்டங்களில் புரட்சியாளர்களை நரவேட்டையாடிய பாசிச எம்.ஜி.ஆர். தேவாரம் கும்பல், ஆந்திராவில் வெங்கல்ராவ், சென்னாரெட்டி, என்.டி.ஆர்., சந்திராபாபு நாயுடு என கொலைவெறியாட்டம் போட்ட ஆட்சியாளர்கள்... ""ஒழித்து விட்டோம்'' என எதிரிகள் ஒவ்வொருமுறை மார்தட்டும் போதும், ""எழுந்து விட்டோம்'' என அவர்களது நெற்றிப் பொட்டில் தன் துப்பாக்கியை அழுத்துகிறது நக்சல்பாரி.


இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனத் தொடரும் மறுகாலனியாக்கத்துக்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஓரணியில் நின்று தமது எசமானர்களான ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்கின்றன. 70களில் நிலவிய கொள்கை வேறுபாடுகளோ அரசியல் குழப்பங்களோ இப்போது இல்லை. இடது, வலது போலி கம்யூனிஸ்டுகளும் தங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு அம்மணமாக நிற்கிறார்கள். இருப்பது இரண்டே முகாம்கள்தான். ஒன்று, ஆளும் வர்க்கங்கள்ஓட்டுக் கட்சிகளின் விரிந்த ஐக்கிய முன்னணி; மற்றொன்று, நக்சல்பாரி புரட்சியாளர்களின் தலைமையிலான உழைக்கும் மக்களின் புரட்சிப் போரணி.


அளப்பரிய தியாகத்தால் சிவந்து ஒளிரும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தைத் தோற்கடிக்கவோ மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவோ ஒருக்காலும் முடியாது. நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, ஆக்கப்பூர்வமான அரசியல்பொருளாதாரத் தீர்வை முன்வைத்து, நாட்டையும் மக்களையும் விடுதலை செய்யும் மாபெரும் புரட்சிக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் தெளிவும் துணிவும் வேறெந்த அரசியல் இயக்கத்திற்கும் கிடையாது.

மறையாது மடியாது நக்சல்பாரி!


மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!


— ஆசிரியர் குழு

Friday, June 1, 2007

கார்ப்பரெட் சிபிஐ(எம்) பார்ட்டி ஆஃப் இந்தியா (டாட்டாயிஸ்ட்)

கார்ப்பரெட் சிபிஐ(எம்) பார்ட்டி ஆஃப் இந்தியா (டாட்டாயிஸ்ட்)


சொல்லில் கம்யூனிசம், செயலில் முதலாளித்துவம் என்ற நடைமுறையைக் கொண்டிருப்போரை போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைப்பதில் நமக்கு தயக்கமிருந்ததில்லை. ஆனால், சொல்லிலும் செயலிலும் முரண்பாடு ஏதுமின்றி ""சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்'' என்று கொள்கைக் குன்றுகளாக வலம் வரும் "மார்க்சிஸ்டு'களை இனிமேலும் போலி கம்யூனிஸ்டுகள் என்றே அழைத்துக் கொண்டிருப்பது பொருத்தம் தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.



""முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு கம்யூனிசச் சொற்களால் விளக்கமளிக்க வேண்டும்; அத்தகைய விளக்கம் முதலாளி வர்க்கத்தின் கோபத்தைத் தூண்டிவிடும்படி இருக்கக் கூடாது; அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் அதிருப்தியையும் தோற்றுவித்து விடக்கூடாது.'' — இப்படியாக, கம்பி மேல் நடப்பதையும், கடுகைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவதையும் விடக் கடினமானதும் அபாரமான மொழி வல்லமையையும், ராஜதந்திரத்தையும், கலைத்திறனையும் கோருவதுமான இந்தச் சாகசத்தைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து சிங்குர் பிரச்சினை "மார்க்சிஸ்டு'களை விடுவித்திருக்கிறது. தங்களுடைய உண்மையான சிந்தனையை இயல்பாகப் பேசுவதற்கான சுதந்திரத்தையே ஒரு நிர்ப்பந்தமாக "மார்க்சிஸ்டு'களின் மீது திணித்திருக்கிறது சிங்குர்.



எனவே, ""விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி, டாடாவுக்கும் ஜின்டாலுக்கும் ரூயாவுக்கும் மலேசியாவின் சலீம் குழுமத்திற்கும் வழங்குவது நியாயம்தானா'' என்று மார்க்சிஸ்டுகளிடம் இனிமேலும் கேட்டுக் கொண்டிருப்பது அசட்டுத்தனம். "மார்க்சிஸ்டு'களின் இந்தப் புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையைப் புரிந்து கொள்ளவேண்டுமானால், இந்தக் கொள்கை பிறப்பெடுக்கும் மூளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கூற்றுகள் வழியாகவே அதனைப் புரிந்து கொள்வோம்.



···



"மார்க்சிஸ்டு' கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசி, வார இதழில் (செப்.11, 2006) அவர்களது கட்சியைச் சார்ந்த பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். "வக்கிரப் பொருளாதாரத்தின் தாக்குதல்' (கூடஞு அண்ண்ச்தடூt ணிஞூ ஙதடூஞ்ச்ணூ உஞிணிணணிட்தூ) என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை, ""தேசிய உற்பத்தி வளர்ந்தால் வறுமை ஒழிந்து விடும், செல்வம் பெருகினால் வறுமை ஒழிந்து விடும்'' என்று கூறும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பொய்களை அம்பலப்படுத்துகிறது.



எந்த அறிவியல்பூர்வமான அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத இந்தப் பொருளாதாரக் கொள்கையை வக்கிரப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் அழைத்ததை அக்கட்டுரையில் விளக்கும் பட்நாயக், இது ஒரு முதலாளித்துவப் பித்தலாட்டம் என்று ஆணியடித்தாற் போலக் கூறி முடிக்கிறார்.

பட்நாயக் அடித்த ஆணியை இரண்டே வரிகளில் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடுங்கி எறிகிறார் யெச்சூரி. ""கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதில்லை என்பது ஒரு தவறான அபிப்ராயம், உண்மை அதுவல்ல. ஏனென்றால் செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனை என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கல்கத்தா முதலாளிகள் சங்கக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. (இந்து, ஜன. 5, 2007)



செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனையாம்!



இதையே கொஞ்சம் எளிமையாக ரஜினிகாந்த் படத்தின் வசன மொழியில் சொல்வதென்றால், முதலாளி நல்லா இருந்தாத்தானே தொழிலாளி நல்லா இருக்க முடியும் என்று சொல்லலாம். அதாவது, பணக்காரர்கள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஏழ்மை ஒழியும் என்கிறார் யெச்சூரி.



···



மார்க்ஸ் இதைப் பற்றி என்ன சொல்கிறார்? ""ஒரு முனையில் செல்வம் குவிவது என்பதன் பொருள், அதே நேரத்தில், அவ்வாறு செல்வம் குவிவதன் விளைவாக வறுமையும் உழைப்பின் துயரமும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடூரமும் சிந்தனைச் சீரழிவும் இன்னொரு முனையில் அதிகரிப்பது என்பதுதான்'' என்று கூறும் மார்க்ஸ், வறுமை என்பதே ஒரு குறிப்பிட்ட சமூக உறவின் வெளிப்பாடுதான் என்பதை நிலைநாட்டுகிறார். தொழிலாளிகள் எந்த அளவுக்கு செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அந்த அளவுக்கு வறியவர்கள் ஆக்கப்படுவார்கள். உற்பத்திச் சாதனங்களைத் தம் உடைமையாக வைத்திருக்கக் கூடிய முதலாளிகள் ஒருபுறம், உழைப்பை விற்று வயிற்றைக் கழுவும் தொழிலாளிகள் மறுபுறம் என்று இருக்கும் முதலாளித்துவச் சமூக அமைப்பில் செல்வம் உருவாவது என்பதன் உடனடி விளைவு வறுமைதான் என்பதே மார்க்சியப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி.



உலகத்தைக் கண்திறந்து பார்ப்பவன் எவனும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். அல்லது, தங்கள் கட்சியின் மத்தியக் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள தீர்மானத்தைப் படித்துப் பார்த்தும்கூட மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.



""தேசிய நிகர உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ந்து வருவதாக மைய அரசு பெருமை கொள்கிறது. ஆனால் இது உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை... இந்த வளர்ச்சியின் விளைவாக பணக்காரர்கள்தான் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, 40 பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் 61 பில்லியன் டாலரிலிருந்து 106 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அரசாங்கப் புள்ளிவிவரப்படியே கூட 30 கோடி மக்கள் நாளொன்றுக்கு 45 ரூபாய் கூட வருமானமின்றி வறுமையில் உழல்கிறார்கள்'' என்று கூறுகிறது மத்தியக் குழு தீர்மானம்.



மக்கள் மென்மேலும் வறுமையில் தள்ளப்படுவதுதான் முதலாளித்துவச் சமூகத்தில் செல்வம் உருவாவதற்குரிய முன்நிபந்தனை. ஆனால் யெச்சூரியோ, செல்வம் உருவாவதுதான் மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான முன்நிபந்தனை என்று ப.சிதம்பரத்தின் சித்தாந்தத்தை அப்படியே வழிமொழிகிறார்.



""வக்கிரப் பொருளாதாரத்தை முன்மொழிபவர் நம்முடைய ஆதரவு பெற்ற பிரதமர் என்பதால் நாம் சும்மா இருந்து விட முடியாது'' என்று கொதிக்கிறார் பட்நாயக். அவரே நம்முடைய தோழர் புத்ததேவ் பட்டாசார்யாவாக இருக்கும்போது என்ன செய்வதாம்?



சிங்குர், நந்திக்கிராமம் பிரச்சினைகளில் மார்க்சிஸ்டு அரசின் அணுகுமுறையைக் கண்டித்து இடதுசாரி வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், அருந்ததி ராய், ராஜேந்திர சச்சார் உள்ளிட்ட அறிவுத்துறையினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்குப் பதிலளிக்கு முகமாக பகிரங்கக் கடிதமொன்றை அவர்களுக்கு எழுதியிருக்கிறார் முதல்வர் புத்ததேவ். (பைனா. எக்ஸ். ஜன.19, 2007.) விவசாயிகளிடமிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பிடுங்கி டாடாவுக்கு வழங்க நேர்ந்ததற்கான பொருளாதார நியாயத்தை அக்கடிதத்தில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:



""சிங்குரில் இருக்கும் அந்தச் சில துண்டு நிலங்களில் விவசாயம் செய்து கிடைக்கக்கூடிய வருவாயைக் காட்டிலும் மிகப் பன்மடங்கு அதிகமான பொருளாதார ஆதாயத்தை இந்தத் தொழிற்சாலை வழங்கும்'' என்கிறார் புத்ததேவ்.



உண்மைதான். 250 ஏக்கர் நிலத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் கார்களை டாடா அறுவடை செய்வார்; பல கோடி ரூபாய்களை மூட்டை கட்டுவார். விவசாயிகள் மிஞ்சிப் போனால் எத்தனை கலம் நெல்லை அறுத்துவிடுவார்கள்? எத்தனை ரூபாயை மூட்டை கட்டிவிடுவார்கள்?



புத்ததேவின் இந்தக் கூற்றைத்தான் ""வக்கிரப் பொருளாதாரத்தின் உச்சகட்டம்'' என்று சாடுகிறார் பட்நாயக். ""கேக் எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது எல்லாருக்கும் நல்லது என்று கூறுவது, வறுமையென்பது குறிப்பிட்ட சமூக உறவின் விளைவுதான் என்ற உண்மையையே இருட்டடிப்பு செய்வதாகும்'' என்கிறார்.



""தொழிலாளர்கள் எந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்கிறார்களோ அது தேசிய உழைப்பின் முழு உற்பத்தியாலும் நிரம்பியிருக்கையில், அதிலிருந்து அவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தடுப்பது பாத்திரத்தின் அளவுக் குறைவோ அல்லது அதிலுள்ள பண்டங்களின் போதாமையோ அல்ல; தொழிலாளர்களுடைய கரண்டிகள் சிறிதாக இருப்பதுதான்'' என்றார் மார்க்ஸ்.



டாடா தொழிற்சாலை வழங்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தை அறுவடை செய்யப் போவது யார்?



சிங்குரின் நேற்றைய விவசாயிகளா, அல்லது நாளை அங்கே வேலைக்குச் சேரவிருக்கும் தொழிலாளிகளா?



சிங்குரின் 1000 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பவர்கள் 1320 குத்தகை விவசாயிகள், சுமார் 3000 நிலமற்ற கூலி விவசாயிகள், காய்கனி வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற துணைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் 4475 பேர், வெளியூர்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் சுமார் 5000 தொழிலாளர்கள். இந்த 12,000 பேருக்கு டாடா ஆலை வழங்கப் போவது என்ன?



ஆலையைச் சுற்றி அமையவிருக்கும் அபார்ட்மென்டுகளில் விவசாயிகள் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம். சிறு வியாபாரிகள் அயர்ன் வண்டி தள்ளலாம், நாற்று நட்ட பெண்கள் அபார்ட்மென்டு அம்மணிகளுக்குத் துணி துவைத்துப் போடலாம். இவ்வாறாக மேட்டுக்குடி வர்க்கத்துக்குப் பலவிதமாகச் சேவை செய்து அவர்கள் வழங்கும் மிச்சம் மீதியை வாங்கித் தின்னலாம். இதுதான் டாடா ஆலை உருவாக்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தில் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கப் போகும் பங்கு.



···



""ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி அலைகிறார்கள், அவர்களை நாம் கைவிட்டு விட முடியுமா?'' என்று தன் கடிதத்தில் உணர்ச்சி பொங்கக் கேள்வி எழுப்புகிறார் புத்ததேவ். தன்னுடைய சுரண்டலுக்காகவும் லாப நோக்கத்துக்காகவும் அன்றி வேறு எந்தச் சமூக நோக்கத்துக்காகவும் ஒரு முதலாளி தொழிற்சாலையைத் தொடங்குவதில்லை. மார்க்சியம் தெரியாத பாமரத் தொழிலாளிக்குக் கூடத் தெரிந்திருக்கும் இந்த உண்மை புத்ததேவுக்கு மறந்துவிட்டது போலும்! முதலாளி வர்க்கத்தின் ஆவி புத்ததேவுக்குள் புகுந்து கொண்டு அவரைச் சாமியாட வைக்கிறது.



12,000 பேரை வேலையைவிட்டு விரட்டிய இந்த ஆலை எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்? கிட்டத்தட்ட இதே அளவு மூலதனத்துடன் சென்னையில் இயங்கிவரும் ஃபோர்டு, ஹூண்டாய் ஆலைகள் ஆயிரத்துக்கும் குறைவான தொழிலாளர்களுக்குத்தான் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. தினக்கூலிகளையும் துணைத்தொழில்களில் ஈடுபட்டிருப்போரையும் சேர்த்தால் கூட வேலை வாய்ப்பு ஓரிரு ஆயிரங்களைத் தாண்டாது.



பல்லாயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு சிங்குரில் அமையவிருப்பது சைக்கிள் தொழிற்சாலை அல்ல. கார் உற்பத்தி என்பதே உயர் தொழில்நுட்பம் சார்ந்தது. டாடாவோ குறைந்த விலையில் (ஒரு லட்சம் ரூபாயில்) கார் தயாரிக்கவிருக்கிறார். அதி உயர் தொழில் நுட்பம் இல்லாமல் இந்த விலைக் குறைப்பு சாத்தியமில்லை. உயர் தொழில் நுட்பம் இருந்தாலோ வேலை வாய்ப்பு சாத்தியமில்லை. உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் தொழிலாளிகள் கசக்கிப் பிழியப்படாமல் குறைந்த விலையிலான கார் சாத்தியமே இல்லை. இவையனைத்தும் மிக எளிய பொருளாதார உண்மைகள்.



ஆனால் உண்மைகள் யாருக்கு வேண்டும்? ""ஒரு கருத்தாக்கம் அறிவியல் பூர்வமாகச் சரியாக இருக்கிறதா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. சர்வதேச நிதிமூலதனத்துக்கும், அதன் கூட்டாளிகளான இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் அந்தக் கருத்தாக்கம் உகந்ததாக இருக்கிறதா இல்லையா என்பதுதான் வக்கிரப் பொருளாதாரம் நிர்ணயிக்கும் அளவுகோல்'' என்று தனது கட்டுரையில் சாடுகிறார் பட்நாயக்.



சிங்குர் பிரச்சினை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு நியாயமாகவோ, அறிவியல் பூர்வமாகவோ பதிலளிக்க முடியாத புத்ததேவ், சென்டிமென்டுக்குத் தாவுகிறார். ""ரத்தன் டாடாவை நான் அரும்பாடு பட்டு அழைத்து வந்தேன். சிங்குர் நிலம் இல்லை என்று நான் டாடாவிடம் எப்படிச் சொல்ல முடியும்? இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறாவிட்டால் நான் தலைநிமிர்ந்து நடக்கவே முடியாது,'' (இந்து, டிச.27, 2006) என்று கூறி டாடா என்ற முதலாளியின் வியாபாரப் பிரச்சினையை, தன்னுடைய மானப் பிரச்சினையாக மாற்றுகிறார்.



""இத்தனைப் பிரச்சினைகள் இருக்கும்போது ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியதுதானே'' என்று கேள்வி எழுப்பியபோது, ""டாடா நிறுவனத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே ஒரு உணர்ச்சிபூர்வமான உறவு இருக்கிறது'' (இந்து, நவ. 26, 2006) என்று பதிலளித்திருக்கிறார் டாடா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ரவி காந்த்.



இலாப உணர்ச்சி தவிர வேறெந்த உணர்ச்சியையும் அறியாத முதலாளி வர்க்கம் இந்த அளவுக்கு உணர்ச்சி வயப்படுவதிலிருந்தே, காப்பியச் சிறப்பு மிக்க இந்த உணர்ச்சிப் போராட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.



""நாங்கள் 6 இடங்களைக் காட்டினோம். சிங்குர் தான் வேண்டும் என்று டாடா நிறுவனம் கூறிவிட்டது'' என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் "மார்க்சிஸ்டு' எம்.பி.நீலோத்பல் பாசு. அவர்கள் விரும்பிய சிங்குர் நிலம் 120 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைக் கொடுத்து வாங்கப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார் தொழிற்சாலைக்கு 250 ஏக்கருக்கு மேல் தேவையில்லை எனும்போது 1000 ஏக்கர் எதற்கு என்ற கேள்விக்கும் பதில் இல்லை. தண்ணீர், மின்சாரம், சாலைகள் முதலானவற்றில் இன்னும் என்னென்ன சலுகைகள் டாடாவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்துவது நட்புக்கு இலக்கணமாகாது என்று புத்ததேவ் கருதுகிறார் போலும்!



தகவல் அறியும் உரிமையின் கீழ் விவரம் கேட்டவர்களுக்கு ""வணிக இரகசியம்'' என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டது "மார்க்சிஸ்டு' அரசு. அனில் அம்பானியுடனான பாசப்பிணைப்புக்காக 10,000 ஏக்கர் விளைநிலத்தை வழங்கியிருக்கும் முலாயம் சிங்கும் கூட ""வணிக இரகசியம்'' என்று கூறித்தான் விவரம் தர மறுக்கிறார்.



எல்லா உறவுகளும் அவற்றுக்குரிய உணர்ச்சிகளை இழந்து, விற்கவும் வாங்கவுமான பண்டங்களாக மாறிவரும் இந்தக் காலத்தில் உணர்ச்சிமயமான உறவுகளை உருவாக்கும் வல்லமை வணிகத்துக்கு மட்டும்தான் இருக்கிறது போலும்! புத்ததேவுக்கும் டாடாவுக்கும் இடையிலான இந்த கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் உறவைத் தாங்கி நிற்பவை எத்தனை சைபர்கள் என்ற உண்மை வெளிவராமலேயே போய்விடுமா என்ன?



···



சிங்குர் நிலத்தை டாடாவுக்கு வழங்க முடியாமல் போய்விடுமா என்ற கேள்வி எழுந்தாலே உணர்ச்சி வயப்படுகிறார் புத்ததேவ். ஆனால் அவர் கண்களிலிருந்து நிலத்தை இழந்த விவசாயிகளுக்காக ஒரு துளி கண்ணீர் கூடக் கசியவில்லை. ""பொருளாதார வளர்ச்சியின் நிகழ்ச்சிப் போக்கு என்பது விவசாயத்திலிருந்து தொழில்துறையை நோக்கித்தான் சென்றாக வேண்டும். இது மார்க்சிஸ்டுகளுக்கு மட்டும் பொருந்தாதா என்ன?'' என்று சுமித் சர்க்காருக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்புகிறார் புத்ததேவ். ""தொழில்மயமாகும் போது விவசாய நிலங்களை இழப்பதென்பது ஒரு இயற்கையான நிகழ்ச்சிப் போக்குதான்'' என்று நமக்கு அறிவொளி ஊட்டுகிறார் யெச்சூரி.



எப்பேர்ப்பட்ட இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு! "இயற்கையான' சந்தை விதிகளுக்கு மாறாக அரசாங்கம் தலையிட்டு நிலத்துக்கு விலை நிர்ணயம் செய்து சட்டமியற்றி, அதைத் தரகுமுதலாளிக்குச் சொந்தமாக்கும் இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு! அந்த ஊருக்குள்ளேயே யாரும் நுழையக்கூடாது என்று 144 போட்டும் அடியாள் படையை ஏவியும் குண்டுவீசியும் விவசாயத்தைத் தொழில்மயமாக்கும் இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு!



""சிங்குரின் 997 ஏக்கர் நிலத்திற்கு 17,000 சிறு உடைமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் ஒப்புதல் கேட்டு ஒரு தனியார் முதலாளி (டாடா) நிலத்தை வாங்கவேண்டுமென்றால் அதற்கு இன்னொரு யுகமே ஆகிவிடும்'' என்று இந்த நிலப்பறிமுதலை நியாயப்படுத்துகிறார் மேற்கு வங்க அரசின் வணிகத்துறைச் செயலர். (பைனா. எக்ஸ், ஜன.18, 2007.)



எனவேதான், 1894இல் வெள்ளைக்காரனால் போடப்பட்ட நிலப்பறிமுதல் சட்டத்தை வைத்து சிங்குர் நிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது "மார்க்சிஸ்டு' அரசு. இது இயற்கையான நிகழ்ச்சிப் போக்கென்றால்,ஈராக் ஆக்கிரமிப்பும் கூட இயற்கையான நிகழ்ச்சிப் போக்குதான். இதன்படி, கலிங்க நகர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பழங்குடி மக்களும், நர்மதா அணையின் அகதிகளும்கூட இயற்கைக் கொடுமைகளுக்குப் பலியானவர்கள்தான் போலும்!



சின்னமீனைப் பெரியமீன் விழுங்கும் இந்த இயற்கையான நிகழ்ச்சிப் போக்கை அனுமதிக்கும்படிதான் வால் மார்ட்டும் கூடக் கோருகிறது. வளர்ந்துவிட்ட உற்பத்திச் சக்திகளுக்குத் தீனி போட உலகச் சந்தையைத் திறந்துவிடச் சொல்லும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கையும் அதை நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் காட் ஒப்பந்தமும் கூட இயற்கையான நிகழ்ச்சிப் போக்குகள்தாம்.



இந்த இயற்கையான நிகழ்ச்சிப் போக்கின் அடிப்படையில், சிங்குர், நந்திக்கிராமம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, விவசாயத்திற்கே ஒரு இரங்கற்பா பாடி முடித்துக் கொள்ளலாம் என்கிறார் புத்ததேவ்.



""நிலைமையை நாம் எதார்த்தமாக மதிப்பீடு செய்ய வேண்டும். வாரிசுகளிடையே சொத்து பிரிக்கப்படுவதால் நிலம் துண்டுதுண்டாக ஆகிவருகிறது. விவசாய உள்ளீடு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அமோக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. தற்போதைய சூழ்நிலையில் நாம் பழைய திட்டத்தையே பின்பற்றினால் விவசாயத்துறையில் நாம் பெற்றிருக்கும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது'' என்று சுமித் சர்க்காருக்கு எழுதுகிறார்.



விவசாய உற்பத்தி விழுந்துவிட்டது என்பதை அலுவாலியாவே ஒப்புக் கொள்கிறார்; சிதம்பரமும் மறுக்க முடியாமல் மண்டையை ஆட்டுகிறார். விவசாய உற்பத்தி 2 சதவீதம் கூட வளரவில்லை என்று மன்மோகன் சிங் அரசைச் சாடுகிறது "மார்க்சிஸ்டு'களின் மத்தியக் குழுத் தீர்மானம். புத்ததேவோ, அபரிமிதமான விளைச்சல்தான் விவசாயப் பொருட்களின் விலைவீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்.



விதை உரம் பூச்சிமருந்து போன்ற உள்ளீடு பொருட்களின் விலையேற்றத்துக்குக் காரணமான பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளைப் பற்றி புத்ததேவ் மூச்சு விடவில்லை. விவசாயிகளுக்கு விலை நிர்ணய உரிமை வழங்கப்படாதது குறித்து வாய்திறக்கவில்லை. கூட்டுறவுக் கடன் விநியோகத்தில் இந்தியாவிலேயே மே.வங்கம் கடைசி இடத்தில் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை இல்லை. தரகு முதலாளிகளுக்கு மானியங்கள் வாரி இறைக்கப்படுவதையும், விவசாயிகளின் மானியம் வெட்டப்படுவதையும், பாசனப்பராமரிப்பிலிருந்து அரசு விலகிக் கொண்டதையும் பற்றிப் பேச்சில்லை. தானியக் கொள்முதலிலிருந்து அரசு விலகிக் கொண்டுவிட்டதைப் பற்றியோ, அவை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட்டிருப்பதைப் பற்றியோ, தானியச் சந்தையில் தலைவிரித்தாடும் ஊகவணிகச் சூதாட்டம் பற்றியோ ஒரு வார்த்தை இல்லை.



அதாவது, விவசாயத்தை தற்போதைய சூழ்நிலைக்குச் சீரழித்த ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவக் கொள்ளைகள் பற்றியும், கொள்ளைகள் பற்றியும் ஒரு வார்த்தை கூட இல்லை. ""இந்தச் சூழ்நிலையில் விவசாயத்தைக் கட்டி அழ முடியாது. அதன் மரணமும் தவிர்க்க இயலாதது. எனவே கருணைக் கொலை செய்து விடலாம்'' என்பதுதான் புத்ததேவ் தரும் விளக்கத்தின் பொருள். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற கேள்விக்கு விடைதேடி அலைபவர்கள் புத்ததேவின் இந்த விளக்கத்தைக் கேட்டு ஞானம் பெறலாம்.



""மூலதனத்தின் தாக்குதல் காரணமாக சிறுவீத விவசாய உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை அதற்கு நேரெதிரான முறையில் சித்தரித்து, விவசாய நெருக்கடிக்குத் தீர்வு சிறு விவசாயிகளை ஒழிப்பதே'' என்று பேசுபவர்களையும் வக்கிரப் பொருளாதாரவாதிகள் பட்டியலில் சேர்க்கிறார், பட்நாயக்.



···



உண்மையிலேயே சமூகத்துக்கு எந்த வகையிலும் தேவையில்லாததாகவும் உடனே ஒழித்துக் கட்டப்பட வேண்டியதாகவும் இருக்கும் வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கமும் அதன் கூட்டாளியான தரகு முதலாளி வர்க்கமும்தான்.



""உற்பத்தி சார்ந்த தொழில்களில் மூலதனமிடுவது என்ற ஒரேயொரு நடவடிக்கைக்காகத்தான் தனது இருத்தலுக்கான சமூக நியாயத்தை முதலாளி வர்க்கம் பெறுகிறது. மூலதனமிட்டுத் தொழில் தொடங்குவதென்பது முதலாளிகளின் கருணைச் செயல் அல்ல. வளரவேண்டும் அல்லது அழிய வேண்டும் என்ற விதியின் காரணமாக, தான் உயிரோடு இருப்பதற்கே மூலதனம் விரிடைய வேண்டியிருக்கிறது'' என்று முதலாளித்துவத்தின் சமூகப் பாத்திரத்தை விளக்கி னார் மார்க்ஸ்.



இன்றைய புதிய தாராளவாத சகாப்தத்தில் மூலதனமிடுதல் என்ற தனக்குரிய சமூகப் பாத்திரத்தை ஆற்றுவதோடு சமூகத்திடமிருந்து லஞ்சம் கேட்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள். முதலாளித்துவத்தின் இந்தத் திமிரைச் சாடுகிறார் பட்நாயக். இலவச நிலம், கடன், முழு வரிவிலக்கு, ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்தும் வாய்ப்பு, தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு, வருமான வரி விலக்கு, லாப உத்திரவாதம் ஆகிய அனைத்தையும் வழங்கி பன்னாட்டு முதலாளிகளையும் அவர்களுடைய இந்நாட்டுக் கூட்டாளிகளையும் கவர்ந்திழுப்பதற்கு மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போடும் வெட்கக்கேட்டையும் விவரிக்கிறார்.



""இம்முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளின் காரணமாக, அரசின் மீது நிதிச்சுமை கூடுகிறது... உலக வங்கியிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டு அதன் நிபந்தனைகளுக்குப் பணிந்து கல்வி, மருத்துவம் போன்ற அனைத்துக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் நிலை உருவாகிறது. மொத்தத்தில் சமூகத்திடமிருந்து முதலாளிகள் கறந்தெடுக்கும் இந்த லஞ்சத்தின் சுமை, ஏழை உழைக்கும் மக்களின் தலைமீது தான் இறங்குகிறது'' என்ற உண்மையை அம்பலமாக்குகிறார். (புதிய தாராளவாதத்தின் பரிமாணம், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, டிச. 24, 2006.)



இந்தக் கட்டுரை வெளிவந்த நாட்களில்தான் சிங்குர் பற்றியெரிந்து கொண்டிருந்தது. இந்தக் கட்டுரையின் விமரிசனத்தை மே.வங்க அரசின் நடைமுறையுடன் தம் கட்சி அணிகள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று தலைமைக்கு அவ்வளவு நம்பிக்கை!



""சிங்குர் ஆலையை எதிர்ப்பவர்கள் விவசாயிகளே அல்ல, பதிவு செய்துகொள்ளாத சில குத்தகை விவசாயிகளும் நிலமில்லாத கூலி விவசாயிகளும்தான் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.'' (இந்து, டிச.1, 2006.) என்கிறார் புத்ததேவ். அதாவது, நிலவுடைமை இல்லாதவன் விவசாயியே அல்ல என்று பிரகடனம் செய்கிறார் புத்ததேவ். "நான் கம்யூனிஸ்டு அல்ல' என்பதை ஒரு மனிதன் இதைவிடத் தெளிவாக வேறு எப்படித்தான் கூற முடியும்?



···



ஏக்கருக்கு 8.6 இலட்சம் முதல் 12.76 இலட்சம் வரை விலை நிர்ணயம் செய்து 120 கோடி ரூபாயை 17,000 பேருக்குப் பிய்த்துப் போட்டிருக்கிறது "மார்க்சிஸ்டு' அரசு. நிலத்திற்கு அரசு வழங்கும் தொகையில், முக்கால் பங்கு நிலச் சொந்தக்காரருக்கு, கால் பங்குதான் குத்தகை விவசாயிக்காம்! கூலி விவசாயிகளுக்கு எதுவும் கிடையாதாம். அவர்கள் மாற்று வேலைவாய்ப்புக்குப் பயிற்றுவிக்கப்படுவார்களாம்.



"சிங்குரில் நாங்கள் வழங்கியிருக்கும் நிவாரணம்தான் தலைசிறந்தது. இதன் மூலம் நிவாரணத்தொகை குறித்த பிரச்சினையை நாங்கள் தேசிய விவாதத்துக்குக் கொண்டு வந்துவிட்டோம்'' என்று மார்தட்டுகிறார் யெச்சூரி. (இந்து, ஜன.1, 2007) அப்படியானால் வாச்சாத்தி பிரச்சினை மூலம் கற்பழிப்புக்கான நிவாரணத் தொகை எவ்வளவு என்பதை தேசிய விவாதத்துக்குக் கொண்டு வந்ததற்காக திருவாளர் தேவாரமும் மார்தட்டிக் கொள்ளலாம்.



சிங்குர் நந்திக் கிராமம் விவசாயிகளை ஆதரிப்பவர்கள் பழமைவாதிகள் என்று கேலி செய்கிறார் புத்ததேவ். நரோத்னிக்குகளின் புதிய அவதாரங்கள் என்று சாடுகிறார் பிரகாஷ் காரத். சரி, இந்த போல்ஷ்விக்குகள் என்ன சொல்கிறார்கள்?



""மக்கள் ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதற்கான தொழிலாளர் விவசாயிகள் கூட்டணியை உருவாக்கப் பாடுபட்டு வருகிறோம். இந்த போர்த்தந்திர நோக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் எதையும் "மார்க்சிஸ்டு கட்சி' அரசு செய்யாது'' என்கிறார் காரத். அடேயப்பா! சிங்குர், நந்திக் கிராமத்தில் இந்தப் பக்கம் விவசாயிகள் நிற்கிறார்கள்; எதிர்ப்பக்கம் நிற்கும் தொழிலாளி வர்க்கம் யார்? டாடாவா, சலீமா, ஜின்டாலா? அங்கே தொழிலாளி விவசாயி கூட்டணிக்கு என்ன ஆபத்து வந்தது? விவசாயிகளின் நிலத்தை எந்தத் தொழிலாளி அபகரித்துக் கொண்டான்? மக்கள் ஜனநாயகப் புரட்சியை "டாடாவின் மக்கள் காரில்' ஏற்றி விரைவுபடுத்தக் கோரிய தொழிலாளி வர்க்கம் எது?



விவசாயிகள் இருக்கட்டும். குறைந்தபட்சக் கூலி, வேலை நேரம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்ற எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து வரும் தொழிலாளி வர்க்கத்துக்கு டாடா ஆலையும், "மார்க்சிஸ்டு'கள் அமைக்கவிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வழங்க இருப்பது என்ன?



அந்த இரகசியத்தை கொல்கத்தா முதலாளிகளிடம் தெரிவித்திருக்கிறார் யெச்சூரி: ""தொழிலாளிகளுக்குத் தற்போதுள்ள உரிமைகளைக் கரைப்பது (ஞீடிடூதtடிணிண) என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமானால் அவற்றை (ஞூடிணஞு tதணடிணஞ்) ராவுவது பற்றி நாம் விவாதிக்கலாம். அதேநேரத்தில் (வெளியேற்றப்படும்) தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலைகள் (ண்ச்ஞூஞுtதூ ணஞுt) பற்றி முதலாளிகளும் யோசிக்க வேண்டும்.''



வேலைநிறுத்த உரிமையைக் கரைப்பதற்கும் ராவுவதற்கும் இடையில் நடைமுறையில் என்ன வேறுபாடு? தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலைகளுக்கும் விவசாயிகளுக்கான நிவாரணத்துக்கும் என்ன வேறுபாடு? டாடாவுக்கும் புத்ததேவுக்கும் என்ன வேறுபாடோ, அதே வேறுபாடுதான்.



மேற்கு வங்க அரசு என்பது ஒரு தொழிற்கழகம்; அதன் தலைமை நிர்வாக அதிகாரியான (இஉO) புத்ததேவ் தன்னை முதல்வர் என்று அழைத்துக் கொள்கிறார். இந்தத் தொழிற்கழகத்தின் நிர்வாகிகள் குழுவோ (ஆணிச்ணூஞீ ணிஞூ ஈடிணூஞுஞிtணிணூண்) தன்னை மத்தியக் குழு என்று கூறிக் கொள்கிறது.



கார்ப்பரேட் பார்ட்டியாகிய அந்தக் கட்சி தன்னை கம்யூனிஸ்டு பார்ட்டி என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறது. ""விளம்பரத்தில் என்ன இருக்கிறது? ஹமாம் சோப்பில் "நேர்மை' எவ்வளவு இருக்கிறது என்று யாராவது சுரண்டிப் பார்க்கிறார்களா என்ன? சிவப்பு என்றால் கம்யூனிசம் என்று ஒரு ஃபீலிங். அவ்வளவுதான்'' என்று நீங்கள் எண்ணலாம்.



நந்திக்கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்த அதே நாளில் ஐ.ஐ.எம். மாணவர்களிடையே புத்ததேவ் ஆற்றிய உரையைக் கீழ்கண்டவாறு பாராட்டினாராம் ஒரு மாணவர்: ""அவர் அப்படியே எங்களுடைய மொழியைப் பேசினார். ஒரு கம்யூனிஸ்டு பேசுகிறார் என்ற உணர்வு எந்தத் தருணத்திலும் எங்களுக்கு ஏற்படவில்லை.'' (டெலிகிராப், ஜன.7, 2007)



போலச் செய்தல் என்பதுதான் போலிகள் என்று அழைக்கப்படுவதற்கான முன் நிபந்தனை. அவ்வாறாயின், கம்யூனிஸ்டுகள் போல பேசக்கூடத் தெரியாத இவர்களை இனிமேலும் "போலி கம்யூனிஸ்டுகள்' என்று அழைப்பது எப்படி நியாயமாக இருக்கும்?



· மருதையன்

Wednesday, May 30, 2007

யாழ்குடாவை புலிகள் கைப்பற்றினால்!

யாழ்குடாவை புலிகள் கைப்பற்றினால்!

பி.இரயாகரன்
30.05.2007


ரசியல் ரீதியான தோல்வியை இராணுவ வெற்றியாக்கிவிட முடியாது. புலிகள் மீள யாழ்ப்பாணத்தை கைப்பற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் முதல் ஊதிப்பெருக்கும் செய்திகளுமே அண்மைய செய்திகளாகின்றன. அதற்கான தயாரிப்புகள் பற்றிய செய்திகளும், மிக பெரிய மனித அழிவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற புலியிஸ்சமும் சார்ந்த செய்திகளும் வெளிவருகின்றது.


பல பத்தாயிரம் மக்கள் எக்கேடு கெட்டு மடிந்தாலும் பரவாயில்லை, சண்டையை பிடியுங்கள் என்கின்றனர் புலம்பெயர் லூசுகள். நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு அலையும் இந்த லூசுகள், ஆகா இந்த அற்புதம் நிகழாதா என்று விசர் பிடித்து அலைகிறார்கள். யாருக்காக என்றால் தமிழ் மக்களுக்காக என்று கூறிக்கொள்கின்றனர். தமது அரிப்புக்காக தமிழ் மக்களை கொன்று குவித்தபடி நடத்த முனையும் இந்த இராணுவ நடவடிக்கையை ஆதரித்து நிற்கும் இவர்கள், மக்களை வாயை மூடிக்கொண்டு ஓரம்போ என்கின்றனர்.


நடக்கும், நடக்கவுள்ள இந்த மனித அவலத்தின் அரசியல் பின்புலம் என்ன? ஆம் புலிகள் அரசியல் ரீதியாக தோற்றவர்கள், இராணுவ ரீதியாகவும் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வருகின்றனார். அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற அரசியல் அரங்கில் அதை சரியாக வெற்றிகரமாக கையாளத் தெரியாது, தமது சொந்த பாசிச வழியில் தோற்றவர்கள். அதிலிருந்து மீள்வதற்காக மறுபடியும் இராணுவ நடவடிக்கையை தொடங்கினர். மக்கள் படை என்ற பெயரில் தொடங்கிய இந்த தவறான போராட்ட வழி, அது தொடங்கிய இடத்திலேயே முடிந்து காணாமல் போய்விட்டது. இதன் பின்பாக அண்ணளவாக 5000 பேர் கொல்லப்பட்டதைத் தவிர, வேறு எதையும் இந்த உத்தி சாதிக்கவில்லை.


மக்கள் படையின் தோல்வியும், அதன் அழிவும் இராணுவ ரீதியான முதல் தோல்வியாகியது. இதில் இருந்து மீள புதிய வழிகளில், இராணுவ ரீதியான பல தாக்குதல் உத்திகளை கையாள முனைந்தனர். இப்படி பல. ஆனால் அவை அவ்வவ் இடங்களிலேயே அழிக்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கை முற்றாக பறிகொடுத்த நிலையில் சேடம் இழுக்கின்றது. இப்படி இராணுவ வழியும் தோற்கடிக்கப்பட்டே வந்தது.


இந்த நிலையில் திடீர் விமானத் தாக்குதலை புலிகள் நடத்தினர். மட்டுப்படுத்திய, எதிர்பாராத விமானத்தாக்குதல் மட்டுமே இன்னமும் தோற்கடிக்கப்படாத இராணுவ உத்தியாக எஞ்சியுள்ளது. இராணுவத்தின் எதிர்தயாரிப்பு அற்ற எல்லைக்குள் மட்டுமே, இவை தாக்குப்பிடிக்கக் கூடிய வெற்றியாக உள்ளது. வெற்றிகரமான தொடர்ச்சியான வலிந்த தாக்குதலை நடத்த முடியாதநிலை. அதே நேரம் இராணுவ ரீதியாக எல்லையோர சிறு தாக்குதல்கள், திடீர் தாக்குதல்கள் கூட வெற்றி அளிக்கவில்லை. ஒரு சில சிறியளவிலான வெற்றி தவிர, பலத்த சேதங்களையும் தோல்வியையும் புலிக்கு ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியான வழியிலும் கூட தோல்வி மேல் தோல்விகள் கண்டனர். புலிகள் வரலாற்றில் இப்படி நிகழ்ந்தது கிடையாது. இதில் இருந்து மீள்வதற்கு அவர்களுக்கு தெரிந்ததும், எஞ்சியுள்ள அவர்களின் வழி என்பதும், மிகப்பெரிய படை நகர்வு ஒன்றை நடத்துவது மட்டும் தான். புலிகளின் இராணுவ ரீதியான உத்தியில் எஞ்சி இருப்பது இதுமட்டும் தான். தற்கொலைக்கு ஒப்பான ஒன்றை நடத்துவதைத் தவிர, அவர்களுக்குத் தெரிந்த வேறுவழி கிடையாது. அதைச் சொல்லித்தான் புலி அரசியலே இன்று நடக்கின்றது.


அரசியல் ரீதியாக எதிரியிடம் தோற்ற புலிகள், கிழக்கை இழந்துள்ளனர். சிறிய தாக்குதல்கள் மூலம் அரசைத் திணறவைக்கும் ஆற்றலை தொடர்ச்சியாக இழந்த புலிகள், இராணுவ ரீதியாக பலமற்றவராக மாறிவிடவில்லை. ஒரு விசித்திரமான உண்மை தான். புலிகள் இன்னமும் பலமான இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு இருப்பதால், கண்மூடித்தனமான ஒரு பாரிய தாக்குதலை அவர்கள் நடத்தும் அளவுக்கு பலம் கொண்டவராகவே உள்ளனர்.


இந்த பலமான இராணுவத்தை தக்கவைக்க, வன்னியின் முழு மக்களையும் பலாத்காரப்படுத்தி ஆயுதமுனையில் பணிய வைக்கின்ற செயல்களே, வன்னிப் பெரும் நிலத்தில் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்கின்றது. அங்கு வாழும் மக்கள் அன்றாடம் புலிகளால் இதற்காக கடத்தப்படுகின்றனர்.


வன்னி மக்களின் வீடுகளில் புகுந்து அவர்களின் குழந்தைகளை புலிகள் இதற்காக களவாடிச் செல்லுகின்றனர். மொத்த சமூகத்தையும் ஆயுத முனையில் நிறுத்தி, சமூகத்தை ஆயுதபாணியாக்குகின்றனர். எதற்காக என்றால், அந்த மக்களின் சொந்த விடுதலைக்காக அவர்களையே கடத்தி சென்று, அவர்களை சண்டையிட வைக்கின்றனர். இப்படி பிரபாகரனின் தலைமையில் நல்லதொரு விடுதலை, நல்லதொரு புரட்சி.


இப்படி கடத்தப்பட்டு ஆயுத பாணியாக்கும் மக்களைக்கொண்டு, யாழ்குடாவை மீட்கும் பாரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த சமூக விளைவுக்கு முன் போராடும் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.


1. வெறும் கூலி இராணுவ மனப்பாங்கு கொண்டதும், பின்னால் திரும்பிப் போகமுடியாத வகையில் துப்பாக்கி முனையில் சண்டையிட வைக்கமுடியும்.


2. விரும்பி இணைந்த படைகள் கூட புலித்தலைமையின் செயலால் அவநம்பிக்கை கொண்ட உறவே பொதுவாக காணப்படுகின்றது. கட்டாய பயிற்சிக்குள்ளாகும் பிரிவின் அவலங்களையும் அது தமக்குள் தாமே சுமந்தபடி போராடும் மன வலிமை இழந்தே நிற்கின்றது.


3. தலைமைக்கும் கீழ் அணிக்கும் இடையிலான இடைவெளியும், வெடிப்பும் என்றுமில்லாத ஒரு முரணிலை கொண்ட ஒரு பலவீனமான இராணுவமாக புலிகள் உள்ளனர்.


4. சமூகத்துடனான உறவு என்றுமில்லாத அளவுக்கு துப்பாக்கி முனையில் தான் பாதுகாக்கப்படுகின்றது.


ஒரு பாரிய யுத்தமுனையில் இவையும், இவை போன்ற பல காரணங்களும் புலிக்கு எதிரானதாகவே உள்ளது. இவை யுத்த முனையில் தீர்மானகரமானதும், அதன் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடியவையுமாகும்.


தோல்விக்கான காரணம் இராணுவத்தின் தோற்கடிக்கும் பலம் என்ற எல்லைக்குள் இருந்து மட்டும் பார்க்கமுடியாது. உள்ளார்ந்த புலியின் பின்னணியிலும், மக்களின் உணர்வு அம்சமே முதன்மையான காரணமாக உள்ளது. இதுதான் பேச்சுவார்த்தைக்கு பிந்தைய புலிகளின் இராணுவ உத்தியை தோற்கடித்தது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் யுத்தத்தைத் விரும்பவில்லை என்ற உண்மை, புலி தோற்கவும் அதனைத் தோற்கடிக்கவும் போதுமான காரணமாகவுள்ளது. இந்த மக்களின் ஒரு பகுதியை பலாத்காரமாக ஆயுதபாணியாக்கி, சில தலைவர்களினதும் புலம்பெயர் லூசுகளினதும் சண்டைக்கான விருப்பத்தை பூர்த்தி செய்து வென்று விட முடியுமா?


புலிகளின் ஒரு வெற்றி நிகழுமாயின், இராணுவத்தின் பலவீனத்தில் மட்டும் அல்லது தற்செயலான சம்பவங்களினால் மட்டுமே தான் சாத்தியம். இப்படி நடந்து புலிகள் யாழ் குடாவை கைப்பற்றினால் அல்லது அதில் தோற்றால் விளைவுகள் என்ன?


1. இத்தாக்குதல் தோல்வி பெற்றால், முழுமையாக இராணுவ ரீதியான புலியின் அழிவுக்குரிய பாதை செப்பனிடப்படும்.


1. பெருமளவிலான புலிகளின் படைப்பிரிவுகள் தானாகவே சரணடையும். தாக்குதலின் போதே கட்டாய இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டவர்கள் பெருமளவில் இராணுவத்தின் முன்னரங்கின் ஊடாகவே தப்பியோடுவர்.


2. புலிகளின் எதிர்காலம் முற்றாக சூனியமாகும்.


3. புலியில் உள் மோதல்களும், உட் குழுக்களும் உருவாகும்.


2. இராணுவ ரீதியாக இத்தாக்குதலில் வெற்றி பெற்றால்


1. பாரிய மனித இழப்பையும், புலிப்படையில் பாரிய இழப்பையும் உருவாக்கும்.


2. யாழ்குடா மக்களின் மேலாக என்றுமில்லாத புலியின் இராணுவ ரீதியான ஒடுக்குமுறை அதிகரிக்கும். பல ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கொல்லப்படுவர்.


3. யாழ்குடாவை கைப்பற்றிய பின், மீண்டும் அரசியல் நெருக்கடி தான் உருவாகும். பொருளாதார தடையை எதிர்கொள்ளும் ஆற்றலை புலிகள் இழப்பர். சமூகத்தை வழிநடத்த அரசியல் அடிப்படை, பொருளாதார அடிப்படை எதுவும் புலிகளிடம் இல்லாது போகும்.


3. மீண்டும் பேச்சுவார்த்தை, பேரம் என்று தொடங்கும். புதிய அரசியல் நெருக்கடி மறுபடி தொடங்கும்.


4. யாழ்குடா மீதான கைப்பற்றல் நிகழுமாயின், இந்திய தலையீடு நடக்காது என்பதை உறுதி செய்யும் எந்த உத்தரவாதமும் புலிகளின் அரசியல் நடத்தையில் கிடையாது. இந்திய தலையீட்டுக்குரிய வகையிலான தயார்நிலை, சந்தர்ப்பங்கள், சூழல்கள் பொதுவில் காணப்படுகின்றது. இதற்குரிய கற்பனை சம்பவங்கள் கூட, நம்பத்தக்க வகையில் உண்மையில் நிகழ்த்தப்படலாம். இந்தியா செய்யாததை இந்தியா செய்ததாக கூறுகின்ற நிலையில், அதன் நம்பகத்தன்மை அம்பலமாகி நிற்கின்ற சூழல், மேலும் இதற்கு வாய்ப்பானது.


4. யாழ்குடாவை கைப்பற்றினால் சர்வதேச தலையீட்டுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். இன்று அதை தடுப்பது சிங்கள மக்கள் தான். சிங்கள மக்களின் எதிர்ப்பை இல்லாததாக்கும். சர்வதேச தலையீடு புலிக்கு எதிரானது தான்.


இப்படி பல, யாழ்குடா தாக்குதலின் பின் விளைவாக இருக்கும். மனித அவலங்களும், அதன் விளைவுகளும் பாரியதாக அமையும். அதேநேரம், அரசியல் ரீதியாக மக்களிடமிருந்து புலிகள் மேலும் அன்னியமாவர். புலம்பெயர் சமூகத்தின் லூசுகளின் அரிப்புக்கு ஏற்ப, அதனிடமிருந்து மட்டும் ஆதரவைப் பெறுவர். உண்மையில் இந்த தாக்குதலுக்கு அவர்கள் மட்டும் தான் ஆதரவளிப்பர். இந்த லூசுளுக்கு ஏற்பட்டு இருக்கும் சுயநலம் சார்ந்த மனநோய், தன்னையும் தனது குடும்பத்தையும் இங்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தான் கொக்கரிக்கின்றது. இது தான் எதார்த்தம். இந்த யுத்தத்தை ஆதரிப்போர் அங்கு வாழும் மக்கள் அல்ல.


இந்த எதார்த்தம் ஒருபுறம். இதை எப்படி எதிர்கொள்வது என்பது மறுபுறம். பேரினவாதம் தமிழ் மக்களை ஏமாற்றி, இராணுவ ரீதியாக தமிழ் மக்களை அடக்கியொடுக்கவே விரும்புகின்றது. அதைத்தான் அது செய்கின்றது. இதில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்க இராணுவ வெற்றிகள் அல்ல. அரசியல் வெற்றிகளே அவசியமானது.


இராணுவ வெற்றி என்பது அரசியல் வெற்றி மீது தான் சாத்தியம். அரசியல் ரீதியான வெற்றி அல்லாத இராணுவ வெற்றி, உள்ளடக்க ரீதியாக மீண்டும் அரசியல் தோல்விதான். தோல்வி சுழற்சி வடிவில் நிகழ்கின்றது.


அரசியல் வெற்றி என்பது


1. பேரினவாதத்தை அரசியல் ரீதியாக தோற்கடித்தல்

2. மக்களை அரசியல் ரீதியாக வென்றல்

3. சர்வதேச ரீதியாக அரசியல் வெற்றியை நிலைப்படுத்தல்


இந்த மூன்றையும் புலிகளால் செய்யமுடியவில்லை. முற்றிலும் தோற்றுள்ளார்கள். இந்த நிலையில் ஒரு இராணுவ வெற்றி அரசியல் வெற்றியாவதில்லை. அதுவே வெற்றியாகிவிடாது. சிலர் மட்டும் தமக்குள் தாமே, வெற்றி பெற்று விட்டதாக நம்பி பீற்றிக்கொள்வதுக்கு அப்பால், அவை வெற்று வேட்டுத்தனம் தான்.


பேரினவாதத்தின் சூழ்ச்சி, அதன் குதர்க்கம், ஏமாற்றுகின்ற வக்கிரம், இதை வெற்றிகரமாக அரசியல் ரீதியாக இன்றும் வெல்லமுடியும். இதை நாம் அறுதியிட்டு கூறமுடியும். இதன் மீது மட்டும் தான், இராணுவ வெற்றிகள் அரசியல் வெற்றியாகும். அரசியல் வெற்றிகள் மீதுதான் இராணுவ வெற்றிகளை சாதிக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகின்றோம்.


அரசியல் ரீதியாக எதிரியிடமும், சொந்த மக்களிடமும் சதா தோற்றுக் கொண்டு பெற முனைகின்ற இராணுவ ரீதியான வெற்றி, மீண்டும் அரசியல் ரீதியான தோல்வியையே தரும். மீண்டும் மீண்டும் வரலாறு இதையே கற்றுக் கொடுக்கின்றது.


எதிரியின் பலவீனம் என்பது இராணுவ மூலோபாயத்தில் அல்ல, எதிரியின் அரசியல் தளத்தில் உள்ளது. எதிரியின் அரசியல் தளத்தின் மீதே போராட்டமே தொடங்கியது என்பதை மறப்பது, மறந்து இராணுவ கூச்சல் இடுவது அரசியலை துறந்து நிற்பதாகும். எதிரியின் பலவீனம் மீதான தாக்குதல் தான், இராணுவ ரீதியான வெற்றியை தீர்மானிக்கின்றது. அரசியல் ரீதியாக எதிரியை தனிமைப்படுத்தி தோற்கடிப்பது அவசியமானது. மாறாக எதிரியை தொடர்ச்சியாக பலப்படுத்துகின்ற செயல்கள், எதிரியின் பலவீனமான அரசியலைக் கூட வெற்றிக்கே இட்டுச்செல்லும்.


எதிரியின் அரசியல் அடிப்படை மனிதவுரிமையையே மறுப்பதாகும். ஆனால் அதை வெற்றியாக நகர்த்துவதே புலிகளின் அரசியல் இராணுவ மூலோபாயமாக இருப்பதே வேடிக்கையான துயரம்தான்.


தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை எதிரி வழங்க மறுக்கின்றான். அதை சிதைக்கின்ற அனைத்து நடவடிக்கையையும் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டிய பணியை, எம்மைத் தவிர வேறு எவராலும் சுட்டிக் கூட காட்டப்படுவதில்லை. எதிரி அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை மறுத்த நிற்கின்ற நிலையும், அதை மறுபுறத்தில் அம்பலப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்து. எதிரியை சுற்றி குலைக்கின்ற கும்பல்கள் கூட, அதைப்பற்றி தமக்குள் முரண்பாடு உள்ளதாக காட்டிக்கொண்டு எதிரியை விசுவாசமாக நக்குகின்றது. உண்மையில் எதிரியின் பின்னால், இவர்கள் நிபந்தனையின்றி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.


வெளியில் இருந்து இதை அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் உரிமையை உயர்த்துவதன் மூலம், சுற்றி நின்று குலைக்கும் நாய்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, எதிரியை மேலும் தனிமைப்படுத்தமுடியம். அரசியல் ரீதியாக செய்யவேண்டிய பணி பல. மக்களின் உரிமையை வழங்கி அதை உயர்த்துவதன் மூலம், இராணுவ ரீதியான வழியை நகர்த்தவேண்டும். இது மட்டும் தான், மக்களின் அரசியல் உரிமைகளுடன் கூடியது.


எதிரி தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கின்ற அடிப்படை உரிமையை, ஒரு அமைப்பு முன்னெடுக்கத் தவறுவது என்பது, அந்த மக்களின் அரசியல் ரீதியான அடிப்படை உரிமையை மறுப்பதன் விளைவாகும். இதை பாதுகாத்துக் கொள்ள, இராணுவ ரீதியான மக்களுக்கு வெளியிலான நடத்தைகள், மற்றொரு அரசியல் தோல்விக்கான சொந்த பாதையை வலிந்து தேர்ந்தெடுப்பது தான்.


பல பத்தாயிரம் மக்களின் இழப்பின் ஊடாக சாதிக்கப் போவது எதை?

யாழ்குடாவை மீட்டால், சாதிக்கப் போவது எதை?

இதன் பின் என்ன நடக்கும்?


புலிகளால், அதன் பின்னுள்ள லூசுக் கூட்டத்தால் பதிலளிக்க முடியாத சூனியமும், தன்னியல்பான போக்கில் அதற்கு விடைகாணும் தலைமைகளாலும், தமிழ் சமூகத்தின் மொத்த அழிவைத் தவிர வேறு எதையும் வழிகாட்டமுடியாது.

திருமாவளவன் - ரவிக்குமார் ரிலையன்ஸின் புதிய பாதந்தாங்கிகள்

திருமாவளவன் - ரவிக்குமார் ரிலையன்ஸின் புதிய பாதந்தாங்கிகள்

ண்பனைப் போல அரிதாரம் பூசிக் கொண்டு திரியும் துரோகிகளின் உண்மை முகம் நெருக்கடிகள் முற்றும்பொழுதுதான் அம்பலத்துக்கு வரும். மளிகை மற்றும் காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஃபிரெஷ், பிக் பஜார் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், கடைச் சிப்பந்திகளும் போராடத் தொடங்கியிருக்கும் நேரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவனும்; அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் ரிலையன்ஸ் என்ற பகற்கொள்ளைக்காரனுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் குதித்துள்ளனர்.


""ரிலையன்ஸ் காய்கறி கடைகளால் சிறு வியாபாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது; பாதிப்பு வரும் என்பது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம்'' என ரவிக்குமார் சட்டமன்றத்திலேயே பேசி, ரிலையன்ஸுக்கு வக்காலத்து வாங்கினார். சென்னைகோயம்பேட்டில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும், ""இது, ரவிக்குமாரின் சொந்தக் கருத்தா இல்லை, கட்சியின் முடிவா?'' எனக் குழம்பிப் போன நேரத்தில், திருமாவளவன், ""ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வியாபாரம் என்ற கொள்கைக்கு நாங்கள் எதிராகத்தான் உள்ளோம்; ஆனாலும், ரிலையன்ஸின் காய்கறிக் கடையால், சில்லறை வியாபாரிகளுக்குப் பாதிப்பு வராது; ரிலையன்ஸ் பெரிய நகரங்களில் மட்டும் கடைகளைத் திறந்தால் எதிர்க்க மாட்டோம்; தமிழகம் தழுவிய அளவில் திறந்தால் எதிர்ப்போம்'' என ""விளக்கமளித்து'', குழம்பிப் போன தோழர்களை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்துவிட்டார். திருமாவளவனின் இந்த விளக்கம், ஆர்.எஸ்.எஸ். இன் சுதேசி மோசடிக்கு நிகரானது.


""தமிழகத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், 75 நகரங்களில் 380 பேரங்காடிகளையும் (சூப்பர் மார்க்கெட்) 85 மீ அங்காடிகளையும் (ஹைபர் மார்க்கெட்) திறக்கப் போவதாக'' ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த 75 நகரங்களில் சென்னை, மதுரை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற கிராமப்புறம் சார்ந்த சிறு நகரங்களும் அடங்கும். உண்மை இவ்வாறு இருக்கும் பொழுது, ""ரிலையன்ஸை இப்பொழுது எதிர்க்க மாட்டோம்; அந்நிறுவனம் தமிழகம் தழுவிய அளவில் கடை திறந்தால் எதிர்ப்போம்'' என திருமாவளவன் ""உதார்'' விடுவது, கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஆகும்.


ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது பிற்பாடு பாய்வதற்காக, திருமாவளவன் இப்பொழுது ""பதுங்கவில்லை''; மாறாக, ரிலையன்ஸின் காலடிகளில் பம்பி படுத்துவிட்டார் என்பதே உண்மை. ""ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் துறைக்குள் வந்த பிறகுதான் அதில் பெரிய புரட்சியே ஏற்பட்டது; கோயம்பேட்டில் சாதாரண மூட்டைத் தூக்கும் தொழிலாளியான தமிழ்மாறனின் கையிலும் செல்போன் உள்ளது'' என அவர் ரிலையன்ஸ் நிறுவனம் பற்றித் துதி பாடியிருப்பதையே அவரின் சரணாகதிக்கு ஆதாரமாகக் காட்டலாம்.


ரிலையன்ஸ் நிறுவனம் தொலைபேசித் துறையில் ""புரட்சி''யைச் செய்வதற்காக அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். மொட்டையடிக்கப்பட்டது ஊரறிந்த உண்மை. அதேபோன்ற புரட்சியை சில்லறை வணிகத்திலும் நடத்த விரும்புகிறது ரிலையன்ஸ். ஆனால், அவர்கள் மொட்டையடிப்பதற்கு இங்கே அரசுத்துறை நிறுவனம் எதுவும் இல்லை. திருமாவளவன் குறிப்பிடும் கோயம்பேட்டை நம்பி வாழும் தமிழ்மாறன் போன்ற தலித் தொழிலாளர்களையும்; ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகளையும், தள்ளுவண்டி வியாபாரிகளையும் தான் ரிலையன்ஸ் மொட்டையடிக்கப் போகிறது.


இந்த ஏழைத் தமிழர்களுக்காக இப்பொழுது போராட முன் வராத திருமாவளவன்ரவிக்குமார் இணை, ""விலை குறைவாக இருக்கிறது; அதனால்தான் மக்கள் செல்கிறார்கள்'' எனக் கூறி, ரிலையன்ஸ் பிரெஷ்ஷில் காய்கறி வாங்கப் போகும் மேட்டுக்குடி தமிழர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கோக்கும், பெப்சியும் ""விலை மலிவு'' என்ற ஆயுதத்தோடுதான் இந்தியச் சந்தைக்குள் இறங்கின. அதன் விளைவு காளிமார்க், வின்சென்ட் போன்ற பெரிய குளிர்பான நிறுவனங்கள் மட்டுமின்றி, குடிசைத் தொழிலாக நடந்துவந்த ஆயிரக்கணக்கான சோடா தயாரிப்பு கம்பெனிகளும் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துவிட்டன. உள்ளூர் போட்டியாளர்கள் ஒழிக்கப்பட்ட பிறகு, கோக்பெப்சியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தக் கழுத்தறுப்பு பாணி போட்டியைத்தான், ரிலையன்ஸ் சில்லறை வியாபாரத்தில் நடத்தி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் 21.07.2006 தேதியிட்ட தினமணி நாளிதழில் ""பிளாஸ்டிக் சாமான்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள் தயாரிப்பதில் ரிலையன்ஸ் ஏகபோகம் வகிப்பதால், மூலப் பொருளின் விலையைத் தன்னிச்சையாக பல மடங்கு உயர்த்தி வருவதாக'' பகிரங்கமாக குற்றஞ் சுமத்தி இருந்தனர். இன்று, ரிலையன்ஸ் பிரெஷ் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளோடு போட்டி போட வேண்டியிருப்பதால்தான், தனது கடைகளில் காய்கறிகளையும், பழங்களையும் ""விலை மலிவாக''க் கொடுக்கிறது. நாளை, ரிலையன்ஸும் மற்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் காய்கறிமளிகை விற்பனையில் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பொழுது, பிளாஸ்டிக் சாமான் உற்பத்தியாளர்களைப் போலவே, நடுத்தர வர்க்க நுகர்வோரும் ரிலையன்ஸுக்கு எதிராகப் புலம்ப வேண்டிய நிலை ஏற்படும்.


""விலை மலிவு'' என்பதன் பின்னே உள்ள, ரிலையன்ஸின் இந்தச் சதியை அம்பலப்படுத்தத் துணியாத ""தலித்'' "அறிஞர்' ரவிக்குமார், ரிலையன்ஸை எதிர்ப்பவர்களை, விவசாயிகளின் எதிரிகளாகவும்; காய்கறி வியாபாரிகளின் ஏஜெண்டாகவும் அவதூறு செய்கிறார். கோயம்பேடு இடைத்தரகர், விவசாயிகளிடமிருந்து வாங்கும் கத்தரிக்காய்க்கும், தக்காளிக்கும் தரும் விலையைவிட, ரிலையன்ஸ் பத்து காசு அதிகம் கொடுத்துவிட்டால், அம்பானி விவசாயிகளின் நண்பன் ஆகி விடுவாரா?


""விதை தருகிறேன்; உரம் தருகிறேன்; காய்கறிகளைப் பயிர் செய்து கொடுத்தால், அதற்கு நல்ல விலையும் தருகின்றேன்'' என்று விவசாயிகளுக்கு வலை விரித்து அவர்களைத் தன்னுடைய குத்தகை விவசாயிகளாக மாற்றும் வேலையைத்தான் ரிலையன்ஸ் தொடங்கியிருக்கிறது. இதற்காகவே, ""ஒப்பந்த விவசாயம்'' (ஞிணிணtணூச்ஞிt ஞூச்ணூட்டிணஞ்), என்ற புதிய பாணி பண்ணையடிமை முறையை விவசாயத்தில் புகுத்தும் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் விரிக்கும் இந்த வலையில் சிக்கிக் கொள்ளும் தமிழகத்து விவசாயிகள் அதிலிருந்து மீள முடியாத கொத்தடிமைகளாக மாட்டிக் கொள்வார்கள். அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகள் போண்டியானதைப் போன்ற நிலையை, தமிழகத்தின் விவசாயிகளும் எதிர் கொள்ள நேரிடும்.


திருமாவளவன்ரவிக்குமார் இணை, சில்லறை வியாபாரத்தில் ரிலையன்ஸ் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் இறங்குவதை மட்டுமல்ல, சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் ஆதரிக்கிறார்கள். ""நிலத்தைச் சார்ந்துள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுமேயானால், அது வேளாண் துறையில் உள்ள சிக்கலையும் தீர்ப்பதாக இருக்கும்'' என ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக நிலங்கள் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதில் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும், பழங்குடி இன மக்களும்தான் முன்னணியில் உள்ளனர் என்பது தெரிந்திருந்தும்; சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது பொருள் உற்பத்தியைவிட ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காகத்தான் அமைக்கப்படுகிறது என்று நிரூபணமான போதிலும்; சிறப்புப் பொருளாதார மண்டலம் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் ஆபத்தானது என்பது அம்பலமான பின்னும், அதற்குப் பட்டுக் குஞ்சம் கட்டிவிட முயலுகிறார், "அறிஞர்' ரவிக்குமார். பட்டுக் குஞ்சம் கட்டிவிட்டால் வெளக்குமாறு சாமரம் ஆகிவிடுமா?


ஓட்டுப் பொறுக்குவதற்காக பார்ப்பனபாசிச ஜெயாவிடம் கூட்டணிக் கட்டிக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஆன ரவிக்குமாரிடமிருந்து, இந்தப் பொருளாதார சிந்தனையைத் தவிர, வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. நாட்டை மறுகாலனியாக்கி வரும் இப்பொருளாதாரத் திட்டங்களுக்குத் துணை நிற்கும் இவர்கள், எந்தத் தாழ்த்தப்பட்டவனை, எந்தத் தமிழனை விடுதலை செய்யப் போகிறார்கள்? இந்த மறுகாலனியாதிக்க ஆதரவினை ரவிக்குமார்திருமாவளவனின் தனிப்பட்ட சறுக்கலாகப் பார்த்துவிட முடியாது; பின் நவீனத்துவ அறிஞர்களால் போற்றப்படும் தலித் அரசியலின் உண்மை முகமே இதுதான்.


· செல்வம்

Tuesday, May 29, 2007

நரேந்திர மோடி: தேசிய நாயகனா? அரசு பயங்கரவாதகொலைகாரனா?

நரேந்திர மோடி: தேசிய நாயகனா? அரசு பயங்கரவாதகொலைகாரனா?

டந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் சோராபுதீன் ஷேக் என்பவர், போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவர் லஷ்ஹர்இதொய்பா அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதி என்றும், இவர் குஜராத் முதல்வர் மோடியையும், விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர்களையும் கொல்ல வந்த பயங்கரவாதி என்றும் போலீசார் அறிவித்தனர்.


உண்மையில், சோராபுதீன் தீவிரவாதியோ பயங்கரவாதியோ அல்ல; அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சோராபுதீனின் சகோதரரான ரூபாபுதீன், இந்த மோதலில் சோராபுதீன் கொல்லப்பட்டது பற்றியும் அவருடன் சென்ற அவரது மனைவி கௌசர்பானு காணாமல் போனது பற்றியும் மைய புலனாய்வுத் துறை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். குஜராத் மாநில அரசிடம் இதுபற்றி விசாரித்து அறிக்கை தருமாறு உச்சநீதி மன்றம் நிர்பந்தித்ததால், அம்மாநில அரசு கீதாஜோரி என்ற புலனாய்வு அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை நியமித்தது.


2005 நவம்பர் 23ஆம் நாளன்று, ஹைதராபாத் நகரிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் சாங்லி நகருக்குப் பேருந்தில் பயணம் செய்த சோராபுதீன் தம்பதியினரையும், துளசிராஜ் பிரஜாபதி என்பவரையும் சீருடைய அணியாத ராஜ்குமார் பாண்டியன் எனும் பயங்கரவாத எதிர்ப்புப் படைøயச் சேர்ந்த குஜராத் போலீசு உயரதிகாரி தலைமையிலான குழுவினர், நள்ளிரவில் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, அம்மூவரையும் இறக்கி தங்கள் வாகனங்களில் கடத்திச் சென்றனர்.


கடத்திச் செல்லப்பட்ட இம்மூவரில் சோராபுதீன், மூன்று நாட்களுக்குப் பிறகு அகமதாபாத் புறநகர் பகுதியில் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு, மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டார். போலீசு ஆள்காட்டியான துளசிராஜ் பிரஜாபதி, இப்படுகொலையை வெளியே கக்கிவிடுவாரோ என்று சந்தேகித்து அவரையும் போலீசு கொன்றொழித்துத் தடயங்களை அழித்து விட்டது. சோராபுதீனின் மனைவி கௌசர்பானு, சபர்கந்தா காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கும்பல் வன்புணர்ச்சிக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டு, எரித்து சாம்பலாக்கப்பட்டார்.


கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநில அரசிடம் சமர்பித்த இடைக்கால அறிக்கையில், உதிரத்தை உறைய வைக்கும் இந்த உண்மைகளை கீதாஜோரி விசாரணைக் குழு வெளிக்கொணர்ந்தது. தற்போது எல்லா விசயங்களும் அம்பலமாகிப் போனதால், வேறு வழியின்றி மூன்று போலீசு உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோடியைக் கொல்ல முயன்றதாகக் கதைகட்டி நடத்தப்பட்ட இப்போலி மோதல் நாடகத்தைத் தலைமையேற்று வழி நடத்திய வஞ்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ்குமார் ஆகிய மூன்று போலீசு உயரதிகாரிகளும் மோடிக்கு மிக நெருக்கமானவர்கள்; அவரது கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாகச் செயல்பட்டவர்கள்.


இவர்களில் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவின் டி.ஐ.ஜி.யான வஞ்சாரா ""மோதல் கொலை நிபுணர்'' என புகழப்பட்டவர். இதுவரை 9 போலி மோதல்கள், 15 பேர் படுகொலை என விரியும் இவரது பயங்கரவாதக் கொலைப்பட்டியலில், மும்பையின் ஏழை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஸ்ரத் ஜெஹானும் அடக்கம். கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இம்மாணவி, மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதியாகவே சித்தரிக்கப்பட்டார்.


குஜராத்தின் பயங்கரவாத போலீசார், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய போலி மோதல் கொலைகளை நடத்தி, ஒவ்வொரு முறையும் தாவூத் இப்ராஹிமிடமிருந்து பாகிஸ்தான் உளவுத்துறை வரை பழிபோட்டு, மோடியை தேசிய அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அதிமுக்கிய தலைவராகச் சித்தரித்து, இந்துவெறி தேசியவெறியை கிளறிவிட்டு வந்துள்ளனர். கடந்த ஈராண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இத்தகைய போலி மோதல் கொலைகள் போலீசாரால் நடத்தப்பட்டுள்ளன.


இப்போது போலி மோதல் கொலைகள் மூலம் மோடியின் பயங்கரவாதச் சதிகள் அம்பலமான பின்னரும், இக்கொலைகார இந்துவெறி பாசிசத் தளபதியை, இந்திய நாட்டின் சட்டம் தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மதவெறி சக்திகளை வீழ்த்தப் போவதாக சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி அரசு கை கட்டி நிற்கிறது. இடதுவலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளோ, காங்கிரசு கூட்டணி அரசை முட்டுக் கொடுத்து ஆதரித்துக் கொண்டு, மதவெறி சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்கப் போவதாக வீரவசனம் பேசிக் கொண்டிருக்கின்றன.


· தனபால்

Sunday, May 27, 2007

நீல வண்ணம் எந்த வருணம் ?

நீல வண்ணம் எந்த வருணம் ?

சிறி
27.05.06






Jodhpur, the blue city


in Jodhpur, Rājasthān (India)

Photograph by SophiaW

போருக்கு போன தன் மணவாளன் மீளத்திரும்பாதபோது அவன் வாளுக்கு மாலையிடும் வீரத் திருமகள்கள் என்று வீரம் ஊறிப்போன இராஜ புத்திரர் பரம்பரைப் புகழ் பேசும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதன் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 285 கிலோமீற்றர் தெற்காக அமைந்திருக்கும் ஜொத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது பிரதான நகரமாகும். மேலேயுள்ள படங்கள் இந்த ஜொத்பூர் நகரத்தின் மையப்பகுதி.


இந் நகரம் நீல வண்ணத்தில் குளித்தெழுந்திருப்பது தற்செயலானதல்ல. தேர்ந்தே தெரிவு செய்து நீல நிறம் பூசப்பட்ட இந்த நீல வண்ண வீடுகள் எதையோ பறைசாற்றுகின்றன. அது வேறு எதுவுமல்ல பார்ப்பனர் தம்மை மற்றையோரிடமிருந்து பிரித்தறிவிப்பதற்காக பூசிக் கொண்ட சாயம்.


நீல வண்ண வீடா கவனம் ? நீ பார்ப்பான் வீட்டில் காலடி வைக்கின்றாய் என்று கீழ்சாதிக்காரனுக்கு அறைந்து சொல்வதற்காக திமிருடன் பூசிய நீல வண்ணச் சாயம். சாதித்திமிர் தனது இல்லங்களுக்கும் சாதிச்சாயம் பூசிக் கொண்டு தன்னை திமிராய் அடையாளப்படுத்தியதன் மூலம் சாயம் பூசா இல்லவாசிகளை தனக்கு கீழானதாய் இழிவுபடுத்தும் இந்த பார்ப்பனச் சாதிச் சாயக் கொள்கையை சாய்ப்பது எப்படி?


Google Earth இல் படங்கள் தெளிவாக பெறலாம்






உளவு அமைப்புகள் தான் ரீ.பீ.சீயை இயக்குகின்றது

உளவு அமைப்புகள் தான் ரீ.பீ.சீயை இயக்குகின்றது.

பி.இரயாகரன்
27.05.2007


ந்தியாவின் உளவு அமைப்பான றோவினதும், அதன் கூலிக் குழுவாகவுள்ள ஈ.என்.டி.எல்.எவ் இன் வானொலி தான் ரீ.பீ.சீ. இதை வெளிப்படையாக அறிவித்து இயங்குவது தான் குறைந்தபட்ச நேர்மை. அதைவிடுத்து, அதை மக்களுக்கு மூடிமறைத்து நடத்தும் அரசியல் சதி நீண்டகாலத்துக்கு நீடிக்காது. சதிக் கும்பல் தான் ரீ.பீ.சீ.


இதன் பின் ஜனநாயகம், மக்களின் விடுதலை என்பது எல்லாமே, வடிகட்டிய பொய்யும் புரட்டும். இவையெல்லாம் தானாகவே அதற்குள்ளாகவே புளுத்து அம்பலமாகத் தொடங்கியுள்ளது.


இவர்கள் ரீ.பீ.சீ. ஊடாக ஜனநாயகம் மற்றும் மக்களின் விடுதலையின் பெயரில் சேகரிக்கும் பணம், ஊர் உலகத்தை ஏமாற்ற நடத்துகின்ற அரசியல் வித்தை. ஜெகோவா மதக்கும்பல் மக்கள் தரும் பணத்தில் தான், தாம் பத்திரிகை நடத்துவதாக கூறிக்கொண்டு, ஏகாதிபத்திய பணத்தில் மதவித்தை காட்டுவது போல் தான் இதுவும்.


ரீ.பீ.சீக்கு ஜனநாயக விரும்பிகள் பணம் கொடுக்க விட்டாலும் அது இயங்கும். ஜனநாயகத்துக்கு விரும்பிக் கொடுக்கும் பணம், அவர்களின் பொக்கற் செலவுக்குத் தான் உதவுகின்றது. ரீ.பீ.சீ க்கு இந்தியா இலங்கை உளவு அமைப்புகள் தான், காலத்துக் காலம் பணம் வழங்கியது. இதை நாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்து கூறவில்லை. ஜனநாயகத்துக்காக போராடுவதாக நம்பி ரீ.பீ.சீக்குள் நெருங்கி ஒட்டிக்கொண்டு இருந்த பலரால் இன்று வெளிப்படுத்தப்படுகின்றது. கருணா விவகாரத்தை அரசியலாக கொண்டு உருவான ஈ.என்.டி.எல்.எவ் இன் தீப்பொறி (அன்று இதே தீப்பொறி குழுவுக்கு எதிராக இயங்கியவர்களும், படுகொலைகளை நடத்தியவர்களும்), புளுத்துப்போய் கிடக்கும் ரீ.பீ.சீ. விவகாரத்தைக் மட்டும் கொண்டு வராது.


ரீ.பீ.சீ பின்னால் உள்ள சதி மற்றும் சூழ்ச்சியால் அதிருப்தியுற்று வெளியேறுபவர்கள் தான், சம்பவம் சம்பவமாக பலவற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். ராம்ராஜ்சின் சொந்த ஆடம்பர நலன்கள் பூர்த்திசெய்கின்ற வகையில் பணத்தைப் பெறுவதும், உளவு அமைப்புகளின் தேவையை பூhத்திசெய்கின்ற வகையில் செயல்படுவதும் படிப்படியாக அம்பலமாகி வருகின்றது.


தீவிரமான உள் முரண்பாட்டுடன் இவை படிப்படியாக மெதுவாக கசிகின்றது. ரீ.பீ.சீயில் இணைந்து இருந்தவர்களில் கணிசமானோர் விலகியிருப்பதும், அவர்கள் மற்றொரு வானொலி (வான்முரசு) ஒன்றைத் தொடங்க இருக்கும் செய்தியும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தகவலின் சரி பிழைக்கு அப்பால், இது போன்றவறை ரீ.பீ.சீ ராம்ராஜ்சும், அவர் சார்ந்துள்ள ஈ.என்.டி.எல்.எவ் நபர்களும் செய்யக் கூடியவர்கள் என்பதை கடந்காலத்தில் நிறுவியவர்கள். அதற்கேற்ற அரசியலையும், நடைமுறையையும் இன்று கொண்டுள்ளார்கள் என்பது அரசியல் ரீதியாக உண்மையானவை என்பதால், இவை இதை நிறுவ போதுமானவை.


விடை காணமுடியாத பல கேள்விகள், ஆனால் நிச்சயமாக காலம் பதில் சொல்லும்.


1. ரீ.பீ.சீ நிதி எங்கேயிருந்து எப்படி வருகின்றது? (10000 பவுன் மாதம் தேவை என்று பாரிஸ் கூட்டத்தில் ராம்ராஜ் அறிவித்தவர்) மக்கள் அல்லாத வழியில் இருந்து பணம் நிச்சயமாக கிடைக்கின்றது.


2. ரீ.பீ.சீ கடந்தகால செயல்பாடுகளுக்கான பணம் தொடர்பான கணக்கு வழக்குகளை பகிரங்கமாக வைக்க முடியுமா? அங்கு அந்த பணத்துக்கு எந்த கணக்கு வழக்கும் கிடையாது. தனிப்பட்ட பணமாக, ஊதாரித்தனமாக மக்களிடம் இருந்து கிடைக்கும் பணம் கையாளப்பட்டது, கையாளப்படுகின்றது.


3. ரீ.பீ.சீ ராம்ராஜின் ஆடம்பரக் கார் உட்பட (சிறையில் இருந்து வந்த பின் வாங்கிய கார்), அவரின் மனைவியின் ஆடம்பரக் கார் வரையிலான வாழ்க்கைக்கு தேவையான பணம் எங்கிருந்து எப்படி கிடைக்கின்றது. ராம்ராஜ் ஊர் உலகத்தைச் சுற்றுவதற்கும் பணம் எங்கே இருந்து எப்படி வருகின்றது. உழைத்து வாழும் உங்களால் முடியுமா? நிச்சயமாக முடியாது.


4. இந்தியாவில் ராஜன் குழு ரீ.பீ.சீ ஈ.என்.டி.எல்.எவ் இன் வானொலி என்று இந்தியாவிடம் உரிமை கோரியதும், வரதராஜன் குழு அதை தமது என்று உரிமை கோரியதன் பின்னனியும் என்ன? குறிப்பாக அண்மையில் வானொலி மீதான தாக்குதலைத் தொடாந்து, தமது வானொலி டெல்லியில் பணம் கேட்ட போது அவர்கள் கூறிய பதில் என்ன?


5. இலண்டனில் றோவைச் சேர்ந்தவர்களுடன் ராமராஜ் உள்ளிட்ட சிவலிங்கம் நடத்திய அரசியல் சதிகள் என்ன?


6. ரீ.பீ.சீ அலுவலகத்தை சூறையாடியதன் பின், அதை பழுது பார்த்தவர்கள் யார்? புலியைச் சேர்ந்தவர்கள் பழுதுபார்க்க வந்த போது, அங்கு இருந்த ரீ.பீ.சீ ஆதரவாளர்களை வெளியேற்றிய மர்மம் தான் என்ன?


7. ராம்ராஜ் சுவிஸ் சிறையில் இருந்தபோது, (அதற்கான காரணத்தை இதுவரை தெரியப்படுத்தாமல்) வன்னியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் என்ன? அதன் பின் புலியை விமர்சிப்பதை மட்டுப்படுத்தக் கோரிய மர்மம் என்ன?


வன்னியுடன் நடந்த உரையாடல், கொழும்பில் வைத்து காணாமல் போன ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர் ஊடாக அல்லவா தொடங்கியது! பின் புலிகளின் முக்கிய நபர்களுடாக அல்லவா நடந்தது! அந்த உரையாடல் என்ன? அதன் பின் ராம்ராஜ்சுக்கு பெரும் தொகையான பணம் கைமாறப்பட்டதாக கூறப்படுகின்றது! ஏன்? எதற்கு? இதன் பின்னணியில் கருணா பற்றிய தகவல் புலிக்கு கைமாறப்பட்டதாக கருதப்படுகின்றது!


8. சுவிஸ் சிறையில் தொலைபேசி உரையாடலுக்கான பெரும் தொகைப்பணம் முதல் அங்கு செலவு செய்த கணக்கை பகிரங்கமாக காட்டமுடியுமா? நீங்கள் உழைத்தாலும் அந்தளவுக்கு செலவு செய்யமுடியாத மிகப்பெரிய தொகை.


9. ஜெயதேவன் உடனான முரண்பாடுகள் என்ன? இதன் அரசியல் சாரம் என்ன? அவரால் தொடங்க உள்ளதாக வெளிவரும் வானொலி (வான்முரசு) பெயர் உட்பட பல தகலல்கள் வெளிவந்துள்ளதே! ஏன் என்ன பிரச்சனை? உங்கள் ஜனநாயகத்தில் என்ன வேறுபாடு?


10. ராம்ராஜ் ஈ.என்.டி.எல்.எவ் இன் உறுப்பினர் என்பதும், அதன் சார்பில் இயங்குவதானே ரீ.பீ.சீ என்பதையும் ஜனநாயகத்தை விரும்புவர்களுக்கு மூடிமறைப்பது ஏன்?


11. அண்மையில் கருணா குழுவுக்குள்ளான முரண்பாட்டில் ஈ.என்.டி.எல்.எவ் க்கு சம்பந்தம் இருந்ததையும், அதை ரீ.பீ.சீ மூடிமறைத்ததும் உண்மையல்வா?. உளவு அமைப்புகளில் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. (பார்க்க தீப்பொறியை)


12 மெதுவாக வெளிவரும், ரீ.பீ.சீ க்கு தூசணத்தினால் வரும் தொலைபேசி உரையாடல் சத்தத்தை வானொலிக்கு நிறுத்திய பின் நீங்கள் அவர்களுடன் என்ன உரையாடுகின்றீர்கள்? ராம்ராஜ் அதை விடக் கேவலமாக தூசணத்தில் அவர்கள் வழியில் தொலைபேசியில் உரையாடுகின்றவர்கள், ஜனநாயகத்தை மீட்கப் போகின்றீர்கள்.! இதை நாம் கூறவிலை அதை நம்பிச்சென்ற ஜனநாயக சக்திகளே ஆச்சரியப்படக் கூடியளவுக்கு இப்படி நடந்த சம்பவங்களை கண்டு அதிருப்தியுடன் வெளிப்படுத்தியுள்ளனர்!


13. சுவிஸ் ஜெயிலில் இருந்து மீண்ட பின், பல புலிக் குடும்பங்களுடன் சேர்ந்து நடத்திய விருந்துகளின் அரசியல் பின்னணி என்ன?


14. ரீ.பீ.சீயுடன் நெருங்கி இருந்தவர்கள் முரண்பட்டவராக மாறிய போது, வழமை போல் பொம்புளை தொடர்பு பற்றி ரீ.பீ.சீயும், ஈ.என்.டி.எல்.எவ் பரப்பும் தொலைபேசி அவதூறுகளின் அரசியல் பின்னணி என்ன?


15. ராம்ராஜ்சுக்கும் இந்தியா உளவு அமைப்பான றோவுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று அவரால் கூறமுடியமா? உங்களால் யாராலும் அதைக் கூறமுடியுமா?


இப்படி பற்பல. ரீ.பீ.சீ உள்ளார்ந்த சதிகள் பற்றியும், உள்ளார்ந்த நிதி மோசடி உட்பட பல தகவல்கள் கசிகின்றது. இந்த தகவல்களின் சரி பிழையை பரிசோதிப்பதற்குரிய அவசியம் கிடையாது. ரீ.பீ.சீ ராம்ராஜ் போன்றவர்கள் அப்படிபட்ட மோசடிக்காரர்கள். அத்துடன் சந்தர்ப்பவாதிகள். பணத்துக்காக யார் காலையும் நக்கும் அரசியல் வியாபாரிகள். கடந்த காலத்தில் இதை பலமுறை நிறுவியவர்கள். நிகழ்காலத்தில் அதை நிறுவி வருபவர்கள். இதை அவர்கள் செய்யமாட்டார்கள் என்பதை சொல்வதற்கு யாருக்கு எந்த துணிச்சலும் கிடையாது.


ஒரு ரவுடியாக வாழ்ந்த ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜன், ரவுடித்தனம் மூலம் தான் புளாட்டில் இணைந்தவன். தொடர்ந்து இயக்கத்திலும் அதையே செய்தவன். இன்றும் அதையே செய்பவன். யாடிக்கு ஏற்ற மூடி தான் ரீ.பீ.சீ ராம்ராஜ். இவர்களிடம் எந்த அரசியல் நேர்மையும், கடந்த காலத்திலம் சரி நிகழ் காலத்திலும் சரி கிடையாது. இல்லை அவர்கள் நேர்மையானவர்கள் என்று சொல்லும் துணிவுள்ள அரசியல் நேர்மை யாரிடமும் எந்தக் கொம்பனிடமும் கிடையாது.


இப்படிப்பட்ட ரீ.பீ.சீ. புலிகளிடம் கணக்கு கேட்கின்றனர். உங்களால் முடியுமா? உங்கள் கணக்கு வழக்கை பகிரங்கமாக முன்வைக்க! ஜனநாயகத்தின் பெயரில் மக்களின் பணத்தை கணக்கின்றி ஊதாரித்தனமாகவே செலவு செய்கின்றனர். இதற்கு பெயர் மக்கள் வானொலி. மக்களால் நடத்தப்படும் வானொலி. புலிகளை விட மோசமான வழியில், மக்கள் ஜனநாயகத்தை நம்பி தரும் பணத்தோடு, உளவு அமைப்புகள் தரப்படும் பணத்தையும் கொண்டு அரசியல் மோசடி செய்வது நிகழ்கின்றது.


ரீ.பீ.சீ யால் தனது கடந்தகால வரவு செலவை வைக்கமுடியாது. படுமோசமான மோசடிகள், நபர்களுக்கு இடையிலான சதிகள், குத்துவெட்டுகள் பல அரங்கேறுகின்றது. ரீ.பீ.சீ வானொலி ஜனநாயகத்தை மீட்பதாக நம்பி சில அப்பாவிகள் கொடுக்கும் பணம் அதற்கு எதிராகவே பயன் படுத்தப்படுகின்றது. இந்தியாவின் உளவு அமைப்பான றோவின் செயல்பாட்டுக்கு ஏற்ப அரசியல் விபச்சாரம் செய்யப்படுகின்றது. காலம் அதை தெளிவாக அம்பலப்படுத்தும்.


ரீ.பீ.சீ பின்னால் ஓடுகாலியாக அரசியலை துறந்து ஓடிச் சென்றவர்களின், அதிருப்திகள், பையப் பைய வெளிவருகின்றன. பல இழிவான மோசடியான நடத்தைகள் மிகவிரைவில் சந்திக்கு வெளிவருவதை யாரும் தடுக்கமுடியாது.


ஜனநாயகம் என்ற பெயரில் பாவம் பல அப்பாவிகள். அரசிலை புரிந்து கொள்ள முடியாத ஏமாளிகள். பாவம் ரீ.பீ.சீக்கு பின்னால் அரோகரா போட்டு காவடி எடுக்கின்றனர்.


மிக விரைவில் வெளிவரவுள்ள 'ஜனநாயகத்துக்கு" கான புதிய வானொலி (வான்முரசு) வருகையை அடுத்து பல விடயங்கள் அம்பலமாகும். கருணாவின் மயக்கத்தில் சொக்கிக் கிடந்த பிரமைகளைக் களைய, பிள்ளையான் தேவைப்பட்டது போல், ரீ.பீ.சீ மயக்கத்தை களைய புதிய வானொலி முதல், அதிருப்தியான பல புலம்பல்கள், புறுபுறுப்புகள் பையப் பைய வெளிவருகின்றது.


புலியெதிர்ப்பு கும்பல் பற்றியும், அதில் குறிப்பாக ரீ.பீ.சீ பற்றியும், அதன் ஜனநாயகம் பற்றியிருந்த பிரமைகளை களைவது தமிழ் மக்களின் விடுதலைக்கு அவசியமான நிபந்தனைகளில் ஒன்று.


குறிப்பு: இந்த ஜனநாயக வேஷதாரிகளின் பின் புலப்படும் தகவல்கள் வரவேற்கப்படுகின்றது.