தமிழ் அரங்கம்

Showing posts with label இனவெறி. Show all posts
Showing posts with label இனவெறி. Show all posts

Monday, May 11, 2009

பேரினவாத பாசிட்டுகள் தமிழ்மக்களை கொல்வதுடன், அப்பாவி சிங்கள இளைஞர்களையும் பலி கொடுக்கின்றனர்

வெளிவராத, கண்டுகொள்ளாத, மற்றொரு மனித அவலம். ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களின் மரணம், மூடிமறைக்கப்படுகின்றது. சிங்கள் சமூகத்துக்கு இனவெறியூட்டி, அதை சிங்கள தேசியமாக புணர்ந்து காட்டி, ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை வெறும் கூலி இராணுவமாக்கி, அதையே தன் பாசிச அரச இயந்திரத்தின் அச்சாக கொண்டுள்ளது

சிங்கள அரசு. இதன் மூலம்தான் புலிக்கு எதிரான யுத்த முனையில், ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களை பேரினவாத பாசிட்டுகள் பலியிடுகின்றனர். இப்படி இன்று இறந்து போன ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் மரணத்தை, தான் இனவெறியூட்டிய தன் சமூகத்தின் முன் முற்றாகவே இருட்டடிப்பு செய்து வருகின்றது. கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு, இந்த பாசிச பலியிடலை முற்றாக மூடி மறைத்து வருகின்றது. இதற்கு அமையவே, படுகொலைகள் மூலம் சிங்கள ஊடகவியலின் வாயையே மூடிவைத்துள்ளது.

இதன் மூலம் பாசிச யுத்தத்தை, தன் இனச் சமூகம் மீது கூட அது மறைமுகமாக நடத்துகின்றது. ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்க.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 14, 2009

உண்மையை எழுதினால் உயிர் இருக்காது

இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்கும், கொலைவெறித் தாக்குதலுக்கும் பத்திரிகையாளர்கள் கூடத் தப்பவில்லை. அரசின் இனவெறியையும், பாசிச நடவடிக்கைகளையும் எதிர்த்து எழுதும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், கடத்திக் கொல்லப்படுவதும் அங்கு தொடர்கதையாகியுள்ளது.

கிளிநொச்சியைப் பிடிப்பதற்கான போர் தொடங்கியதிலிருந்து இதுவரை முக்கியமான பத்திரிகையாளர்கள் பதினாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. பலர் எவ்விதக் குற்றச்சாட்டுகளுமின்றி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ""சண்டே லீடர்'' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசாந்தா விக்கிரமதுங்கா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது எழுத்துக்கள், உலக அரங்கில் இலங்கை அரசைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தன. லசாந்தா கொல்லப்படுவதற்கு முன்பு எழுதி வைத்திருந்த ஒரு கட்டுரையில், தான் இலங்கை அரசால் கொல்லப்படப் போவது நிச்சயம் என்றும், ஏற்கெனவே தான் இருமுறை தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவர...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்