தமிழ் அரங்கம்

Saturday, October 22, 2005

அமெரிக்க மாயைக்

கலைத்த கத்ரீன்

கடந்த ஆகஸ்டு 29 அன்று கடுமையான ஐந்தாம் ரக, தீவிரச் சூறாவளி புயல் கத்ரீனா தென்கிழக்கு லூசியானா நியூ ஆர்லீன்ஸ், தெற்கு மிஸிஸிபி ஆகிய இரண்டு அமெரிக்க மாகாணப் பகுதிகளை மோதித் தாக்கியது. கடந்த ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவு இயற்கைச் சீற்றம் கடுமையாக இருந்திருக்கிறது.
புயலின்போது கடலின் அலைகள் இருபது அடி உயரம் எழும்பி ஆர்ப்பரித்தது; கரையோரம் பழமையில் எழுப்பப்பட்ட அரண்கள் தவிடு பொடியாக்கப்பட்டன் நியூ ஆர்லீன்சின் எண்ணெய்க் கிணறுகள் ஸ்தம்பித்தன் இரண்டு அணு உலைகள் முடங்கின. ஊருக்குள் பாய்ந்த கடலலை வீடுகளை மூழ்கடித்தது; நகரத்தை நாலாபுறமும் சூறையாடியது.

சூறாவளிக்கு முன்னால் பொது எச்சரிக்கை வந்தவுடன் கார் வசதி இருந்த வெள்ளை அமெரிக்கர்கள் வெளியேறிவிட்டார்கள். சூறாவளி தாக்கி உயிர்ப் பலி ஆனவர்கள் சுமார் 20,000 பேர் ஏழ்மையினால் வெளியேறுவதற்குச் செலவு செய்ய முடியாமல் தங்கி சிக்கியவர்கள் 1,00,000 பேர் பெரும்பான்மை ஆப்பிரிக்கா வம்சா வழி அமெரிக்கர்கள் அதாவது, கருப்பர்கள். இவர்கள் மூன்று நாள் சோறு, தண்ணீர், சுகாதார வசதிகள் இல்லாமல் நோய்க் கிருமிகள் நடுவே, அழுகிய பிணங்களின் நடுவே மயக்கமாகவே கிடந்தார்கள்.

டெக்ஸாஸுக்குப் புகலிடம் தேடிப் போனவர்களை அம்மாகாணம் ஏற்க மறுத்தது. சொந்த நாட்டிலேயே அவர்கள் இன்று அகதிகள். எண்ணெய்ப் பணக்காரர்கள் நிறைந்த டெக்ஸாஸ் மாகாணத்தில் பொதுச் சேவை செய்ய ஏற்பாடுகளே கிடையாது என்று சொல்லி அம்மாகாண நிர்வாகம் கை கழுவி விட்டது மைய அரசைக் கை காட்டி விட்டது. அங்கு எல்லாம் தனியார் உலகம்.

--------

புயல் எச்சரிக்கை வந்த நாள் ஆகஸ்டு 25. புஷ் பெயரால் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நாள் ஆகஸ்டு 27. அதன் பிறகும் கூட நியூ ஆர்லீன்சுக்கு கூடுதல் படையோ, தண்ணீர் உணவு உதவிகளோ அனுப்பப்படவில்லை.
சூறாவளிப் புயல் கத்ரீனா தாக்கியநாள் ஆகஸ்டு 29. செப்டம்பர் 1 அன்று உள்ளூர் அதிகாரிகள் ஐக்கிய (மைய) அரசிடம் உதவி கேட்டுக் கெஞ்சுகிறார்கள். நாகரீக நிலை கைவிட்டு ஆர்லீன்ஸில் மக்கள் உணவுக்காக அலைந்தார்கள். அதையே அமெரிக்கப் பத்திரிக்கைகள் 'வெள்ளை அமெரிக்கர்கள் உணவு தேடிக் கண்டெடுத்து திரும்புகிறார்கள்' என்றும், 'கறுப்பர்கள் கொள்ளை அடித்தார்கள்' என்றும் எழுதி இனவெறி நஞ்சைக் கக்கின.

பிணங்கள் அழுக ஆரம்பித்தன. கொண்டு சென்று புதைக்கப் பாதுகாவல்படை இல்லை. 16,000 காவல் படைவீரர்கள் ஈராக்கில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். பிணங்கள் வைக்க இடமும் இல்லை.

நியூ ஆர்லீன்ஸ் போலீசு கண்காணிப்பாளர் உணவு தண்ணீர் வந்துவிட்டதாகப் புளுகினார்; மைய அரசின் அவசரநிலை அதிகாரி மைக்கேல் பிரவுன், தான் நியூ ஆர்லீன்ஸ் முகாமில் சோறு போட்டதாகப் புளுகினார் இவர்தான் முந்திய நாள் முகாமில் மக்கள் இருப்பதே தெரியாது என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தார். இந்த அதிகாரியின் வினோதமான திறமையைப் பார்த்து அனைத்து அöமரிக்க மக்களுமே கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

ஆர்லீன்ஸ் மூழ்கிக் கொண்டிருந்தபோது ஆட்சித் தலைவர்கள் ஓய்வில் உல்லாசமாக இருந்தார்கள். (பார்க்க: பெட்டிச் செய்தி). அதேநேரம் உலகம் முழுவதும் 'டி.வி.' சேனல்கள் சாவுச் செய்திகளைக் காட்டின. அமர்ந்த நிலையில், சுவரோடு மோதி நிற்கும் ஸ்டிரெச்சரில் சரிந்த நிலையில் பிணங்கள்; இனவெறியால் ஒதுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கோபம் கொந்தளிக்கும் பேட்டிகள்.

------------

நியூ ஆர்லீன்ஸ் கடல்நீரில் மூழ்கக் காரணம், கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த கடலோரப் பாதுகாப்புத் தடை அரண்கள் சூறாவளி தாக்கி உடைந்து விட்டன. இதனால் 3 இடங்களில் மொத்தம் 1000 அடிநீள உடைப்புகள் ஏற்பட்டு, அதன் வழியாகத்தான் கடல்நீர் புகுந்து நகரைச் சூறையாடி விட்டது.

இந்த நகரத்தையே 'சாத்தியமில்லாத' நகரம் என்பார்கள். அதாவது, கடல்மட்டத்திற்கு 10 அடி கீழே நிரந்தர அபாயத்தில் உள்ள நகரம். மிகப் பெரிய சுற்றளவு கொண்ட சதுப்புநிலங்களும், வெள்ளநீர் பரவிக் கிடக்க வெட்டவெளிகளும் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தன. மெல்ல மெல்ல அந்த இடங்களைத் தூர்த்துக் கட்டிடங்களை எழுப்பினார்கள், பணக்காரர்கள். நம் நாட்டில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை கிழக்குக் கடற்கரையோரம் கடலை ஆக்கிரமித்ததைப் போலவே.

1927இல் இராணுவப் பொறியாளரின் அரிய முயற்சியால் தடுப்பரண்கள் முதன்முதலில் எழுப்பப்பட்டன. எழுபதே ஆண்டுகளுக்குள் உலகமயத்தைக் காரணம் காட்டி மாகாணச் செலவை மைய அரசு வெட்டிவிட்டது; தடையரண் பாதுகாப்பை, பராமரிப்பை ரத்து செய்தது.

இத்தனைக்கும் கடந்த 10 ஆண்டுகளில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வரிக் குறைப்பில் பல லட்சம் கோடிகளும், ஈராக் போர்ச் செலவு சுமார் எட்டரை லட்சம் கோடியும், தனியார் விவசாய வர்த்தக மானியமாக சுமார் 9 லட்சம் கோடியும் ஆக, மொத்தம் 20 லட்சம் கோடி ரூபாய் அரசு நிதி விரயம். அதையே காரணமாக்கி, நியூ ஆர்லீன்ஸ் நகரப் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் தேவைப்பட்ட சில்லறைச் செலவு 50 கோடி ரூபாயைச் செலவு செய்ய மறுத்து நிறுத்திவிட்டது, அரசு.

தொடர்ந்து தடுப்பரணைப் பாதுகாத்து, செப்பனிட்டு, நவீனப்படுத்தி, வடிகால் பராமரிப்பும் பொறுப்போடு நடத்தியிருந்தால் நகரம் நீரில் மூழ்கியிருக்காது. ரீகன் காலத்திலிருந்தே அரசாங்கச் செலவையும், அரசாங்கத்தையும் வெட்டிக் குறைத்துக் கொண்டே வந்த மைய அரசு, கத்ரீனா சூறாவளி, பிறகு ரீட்டா புயலின்போது நியூ ஆர்லீன்ஸ் நகரையே தண்ணீரில் கவிழ்த்துவிட்டது.
அரசாங்கத்தை விமர்சித்தாலோ, எதிர்த்தாலோ 'வர்க்கப் போராட்டம், கலகம்' என்று பீதியூட்டி ஒடுக்கிவந்த அமெரிக்க அரசை இப்போது மக்கள் 'நிறவெறி, வர்க்க வேறுபாடு, ஏழை பணக்காரன் பாகுபாடு காட்டும் பொறுப்பற்ற கையாலாகாத அரசு' என்று நேரடியாக விமர்சிக்கிறார்கள்; 'ஆமாம், இது வர்க்கப் போர்தான்' என்று துணிச்சலோடு எதிர்க்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது போலவே, இழவு விழுந்த பிறகுதான் புஷ் எட்டிப் பார்க்க வந்தார். எதற்காக? அமெரிக்காவின் 25 சதம் எண்ணெய் உற்பத்தி முடங்கி விட்டதை எப்படிச் சரி செய்வது என்று பரிசீலிப்பதற்காக் புஷ் ஷின் கட்டளையின் பேரில் துணை அதிபர் டிக்செனி ஓடிவந்தார் கணக்கு காட்டுவதற்கும், எதிர்காலத்திற்கான ஒப்பந்த பேரங்கள் பார்ப்பதற்கும்.

இந்த நேரத்தில் கூட புஷ்ஷின் திமிர் குறையவில்லை. பேரழிவு ஏன் நடந்தது, எப்படி நடந்தது, பொறுப்பு யார் என்று கேள்விகளைச் சந்திக்கத் திராணியும், தார்மீக நியாயமும் இழந்துவிட்ட புஷ் வக்கிரமாகப் பேட்டி அளித்தார்: 'மக்கள் எங்களிடம் என்ன கேட்கிறார்கள்? யார் மீதாவது பழிபோடும் விளையாட்டு ஆடச் சொல்கிறார்கள்.' யார் மீதாவது பழிபோடும் அநியாயமான குணம் அமெரிக்க உழைக்கும் மக்களிடம் இல்லை; அவர்கள், நேருக்கு நேராக புஷ் மற்றும் புஷ் கும்பல் மீதுதான் குற்றம் சாட்டுகிறார்கள்.

புஷ்ஷின் வக்கிரப் பொய்களை மக்கள் அறுத்து வெளியே கொண்டு வந்துவிட்டார்கள். முதல் பொய்: 'இப்படி ஒரு அபாயம் நியூ ஆர்லீன்சுக்கு வருமென்று யாருக்குமே தெரியாது.' இரண்டாவது பொய்: 'மக்கள் பழிபோடும் விளையாட்டு ஆட விரும்புகிறார்கள்.'

புஷ்ஷிற்கு ஒருபடி மேலே போய் அவர் அம்மா பார்பரா, 'டெக்ஸாஸுக்கு வந்த அகதிகள் அங்குள்ள உபசரிப்பைக் கண்டு அங்கேயே தங்கிவிட ஆசைப்படுகிறார்கள்' என்று வக்கிரம் ஒழுகப் பேசியிருக்கிறார். இவ்வளவு பேசிய பிறகுதான் காரியக் கோமாளி புஷ் கடைசி 'அஸ்திரமாக' வெள்ளை மாளிகை விசாரணைக் கமிசனை அவிழ்த்து விட்டிருக்கிறார். அமெரிக்கா மட்டுமல்ல, உலகத்துக்கே விசாரணைக் கமிசன்களின் ரகசியம் ஊர் அறிந்த இரகசியமாதலால் யாரும் புஷ்ஷை நம்புவதாக இல்லை.

------------

'இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இருக்கும் அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும்தான் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் அமெரிக்க சமூகமோ சொக்கத் தங்கம்' என்ற ஒரு பிம்பத்தை, இங்கே படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் முதலாளித்துவ பத்திரிகைகளும்; துக்ளக் 'சோ', சுப்பிரமணிய சுவாமி போன்ற அமெரிக்க எடுபிடிகளும் உருவாக்கி வைத்துள்ளனர். இந்த மாய்மாலத்தை கத்ரீனா சூறாவளி அடித்து நொறுக்கி விட்டது.

அமெரிக்கா அருகே இருக்கும் சின்னஞ்சிறு ஏழை நாடான கியூபா கூட, சூறாவளி தாக்குவதற்கு முன்பே, தனது குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியிருக்கிறது. ஆனால், 'நட்சத்திர போர்' நடத்தும் அளவிற்கு அறிவியல் 'வளர்ச்சி'யில் முன்னேறியிருக்கும் அமெரிக்காவால் நியூ ஆர்லின்ஸ் நகரைச் சேர்ந்த ஏழை கருப்பின மக்களை, ஏன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை?

ஆசிய நாடுகளை 'சுனாமி' தாக்கியபொழுது, தனது கப்பற்படையை உடனடியாக இலங்கைக்கும், தாய்லாந்திற்கும் அனுப்பி தன்னை 'ஆபத்தாண்டவனாக'க் காட்டிக் கொண்ட அமெரிக்கா, தனது குடிமக்களை அமெரிக்க கருப்பர்களை ஏன் கைவிட்டது?

'எங்கும் தனியார்மயம், எதிலும் தனியார்மயம்' எனக் கூப்பாடு போடும் அமெரிக்க அரசியல் தலைவர்கள், ஒரு இயற்கைப் பேரழிவு ஏற்படும்பொழுது மட்டும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதனால்தான், அவரவர் பாதுகாப்பை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஒதுங்கிக் கொண்டு, நியூ ஆர்லின்ஸ் நகர மக்களைக் கைவிட்டு விட்டார்கள்.

ஏழை நாடுகளின் அரசுகள், தங்களின் குடிமக்களுக்கு ரேஷனில் அரிசி கொடுக்கக் கூடாது; விவசாய மானியம் கொடுக்கக் கூடாது; இலவச கல்வி, மருத்துவ வசதி செய்து தரக் கூடாது; மொத்தத்தில் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடாது என உத்தரவு போடும் ஒரு ஏகாதிபத்திய அரசு (அமெரிக்கா) உள்நாட்டில் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளாது.
ஏழை நாடுகள் இயற்கைப் பேரழிவினால் சீரழிந்து நிற்கும்போது கூட, 'உதவி' என்ற போர்வையில் அந்நாடுகளில் தனது சுரண்டலை, ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொள்ளும் ஒரு கந்துவட்டி அரசு (அமெரிக்கா), உள்நாட்டு மக்கள் இயற்கைப் பேரழிவில் சிக்கிக் கொள்ளும்போது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளாது.

'ஜனநாயக' முகமூடிக்குள் மறைந்து இருக்கும் அமெரிக்காவின் இந்தக் கோர முகத்தைத்தான் கத்ரீனா, அமெரிக்க மக்களுக்கும், உலகுக்கும் மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

மு வேலாயுதம்

நன்றி புதியஜனநாயகம்

எங்கே அரசாங்கம்?

எங்கே தலைவர்கள்?

கத்ரீனா, லூசியானா ஆர்லீன்சைச் சூறையாடியபோது தலைவர்கள் எங்கே போனார்கள்?

° புஷ் ஓய்வில் இருந்தார் அரபு நாட்டுக் குதிரைச் சவாரி, கோல்ஃப், படகுச் சவாரி. ஆர்லீன்ஸ் மூழ்கிவிட்டதே என்று நிரூபர்கள் கேட்டபோது, 'இப்படி ஆகுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது' என்று திமிராகச் சொன்னார் புஷ். ஆனால், பொறுப்பை எப்படிக் கை கழுவலாம் என்று அவர் உள்ளுக்குள்ளே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும் பேயறைந்த முகம் போல அவர் முகம் இருந்தது.

° டிக் செனி துணை அதிபர் எங்கே? வையோமிங் என்ற இடத்தில் சாராயத்தில் கிடந்தது அந்த விசித்திர மிருகம். சுமார் 15 கோடி மதிப்புள்ள, நீர் முத்தாய்ச் சொரியும் அருவி கொண்ட பண்ணையை வாங்கும் பேர விருந்தில் 'பிசி'யாக இருந்தாராம். ஜனாதிபதி புஷ் செல்லமாக அழைத்து ஆர்லீன்சுக்கு ஓடச் சொன்னாராம். ஏன் தெரியுமா? ஆர்லீன்ஸ் நகரை மறுநிர்மாணம் செய்யும் ஒப்பந்தத்தை முன்பு, தான் நிர்வாகம் செய்த ஹாலிபர்டன் கம்பெனிக்கே கிடைக்குமாறு உறுதி செய்யவே அந்தக் கடைசி நிமிட நாடகம்.

° வெளியுறவுச் செயலர் காண்டலீசா ரைஸ் அவர் எங்கே? மன்ஹாட்டன் நகரிலே ஊரே கூடி வேடிக்கை பார்க்க, ஒரு ஜோடி ஷீ (Shoe) மூன்றரை லட்சம் எனப் பேரம் பேசி வாங்க ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். பிலிப்பைன்சின் திருமதி மார்க்கோஸ், தமிழகத்தின் செல்வி.ஜெயலலிதா வரிசையில் இப்போது ஒரு காண்டலீசா ரைஸ்.

நன்றி புதியஜனநாயகம்

Friday, October 21, 2005

வாழ வழியற்ற சமூக அவலம்

இனங்களுக்கு இடையிலான மோதல் சமூக அவலத்தில் இருந்து திட்மிடப்பட்டது. அதை பூசி மொழுக குறுந்தேசிய உணர்வு இனம் கடந்து உருவாக்கியதன் மூலம் இனயுத்தம் வித்திடப்பட்டது. அன்று இந்த சமூக அவலத்தின் அடிப்படை என்ன? 1971 இல் வேலை செய்யக் கூடியவர்களில் வேலை இன்மை 19 சதவீதமாக இருந்தது. இது 1974 இல் 24 சதவீதமாக உயர்ந்தது. இதில் இருந்து மீள யுத்தம், யுத்த பொருளாதார, பாசிசச் சட்டங்கள் ஒன்று இனைந்து அவை ஜனநாயமாகி இந்த அமைப்பின் நீடிப்புக்கு கைகொடுத்தது. இந்த யுத்த பொருளாதாரம் உடாக ஏகாதிபத்திய ஊடுருவல் என்று இல்லாத அளவுக்கு இலங்கையில் கால் உன்றியதுடன் அது மேலும் ஆழமாகவே வேகம் பெறுகின்றது. தேசிய அடிப்படைகள், தேசிய பொருளாதாரங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி கற்பழிக்கப்படுகின்றது.

இந்த கற்பழிப்பு புதிய சமூகப் பண்பாட்டை அராஜக வழிகளில் கவர்ச்சி காட்டி திணிக்கின்றது. கற்பழிப்பை எற்க மறுப்பது, அதை எதிர்த்து நிற்பது ஜனநாயக விரோமானதாக விளக்கம் பெற்று உள்ளது. ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிராக நடக்கும் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாத ஒரு சமூக நெருக்கடி உருவாகிவிட்டது. உயர்வாழ்க்கைத் தரம் கொண்ட ஒரு தீடீர் பணக்கார கும்பலும், அடிபாதளத்தில் எதற்கும் வழியற்ற பரந்துபட்ட மக்கள் என்ற ஒரு கட்டமைப்பு ஆழமான எற்றத் தாழ்வான சமூகப் பிளவை உருவாக்கிவிட்டது. இது ஒரு சமூக அரசியல் வழியால் தீர்க்கப்பட முடியாத சூழல் உள்ள நிலையில், அராஜகமும், தற்கொலையும் பல்வேறு சமூக வக்கிரங்களும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் இயல்பான அன்றாட நடத்தையாகிவிட்டது.

வறுமை தேசிய கொள்கையாகின்றது. நாட்டில் அடிப்படை உணவான நெல் உற்பத்தி பெருகிய போதும், மக்கள் அதை நுகரமுடியவில்லை. 2002 இல் பெரும் போக நெல் உற்பத்தி 17 லட்சம் மெற்றிக் தொனனாக இருந்தது. இது 2003 இல் 19.3 லட்சம் மெற்றிக் தொன்னாக மாறியது. அமைதிக்கு பின்பான நெற் செய்கை நிலம் 20 சதவீத்தால் உயர்ந்துள்ளது. 6.6 லட்சம் வயல்கள் புதிதாக உற்பத்தி செய்தன. ஆனால் வறுமை அதிகரித்துச் செல்லுகின்றது. எங்கும் மக்களின் வாழ்வியல் சுமை, உற்பத்தி அதிகரிப்பால் தீர்க்க முடியாதாகியுள்ளது. அவை அன்னியனுக்கு மிகக் குறைந்த விலையில் அன்னியனுக்கு எற்றுமதியாகின்றது.

இதை முடிமறைக்க, அந்த உணவில் ஒரு பகுதியை உதவி என்ற பெயரில் சர்வதேச நிறுவனங்கள் திட்டமிட்ட அரசியல் நோக்குடன் களமிறங்குகின்றன. ஐ.நாவுக்கான சர்வதேச உணவு நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில், வடக்கு கிழக்கில் 20 சதவீதமான குழந்தைகள் பாடசாலையில் பசியுடன் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர் என அறிவித்துள்ளது. இதனடிப்படையில் யுத்த பிரதேசத்தில் 33000 குழந்தைக்கு உணவு வழங்கப்படுகின்றது. மேலும் அவ் அறிக்கையில் 100000 குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை கைவிட்டுள்ளதை அறிவிக்கின்றது. வறுமை நாலுகால் பாய்சலில் முன்னேறுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் உலக உணவுத் திட்டத்தின் கீழ், நடைமுறையில் உள்ள உணவு கொடுத்தல்; செயல்திட்டம் விரிவாக்கப்பட்டு வருகின்றது. 2004ம் ஆண்டு இரண்டாம் தவணை முதல்; 107363 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் புதிய திட்ட அமுழுக்கு வரவுள்ளது. மலையகத்தை எடுத்தால் 18 வயதுக்கு குறைந்த 3.4 லட்சம் குழந்தைகளில் 15 ஆயிரம் போ அங்கவீனர். 64 ஆயிரம் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்கள்;. 80 அயிரம் பேர் 5 வயதுக்கு குறைந்தவர்களாக உள்ள அந்த சமூகத்தின் எதிர்காலம் என்பது சூனியமாகவே உள்ளது. சமூகத்தின் பல படித்தான வடிவங்களில் வெட்டு முகத் தோற்றங்கள் இவை. அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் 80 சதவீதமான பெண்கள் மிக மோசமான கூலியைப் பெறுவதை கண்டறிந்து அதை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆணாதிக்க அமைப்பை ஏகாதிபத்திய நலனுக்கு இசைவாக பயன்படுத்துவதையும், வறுமையை இதனுடாக நிறுவன மயப்படுத்துவதையும் இது காட்டுகின்றது. இன்று இலங்கையில் 45 சதவீதமான உழைப்பாளிகளிள் நாள் வருமானம் 200 ரூபாவுக்கு குறைவாக உள்ளது. இந்த உழைப்பாளியின் வருமானத்தைக் கொண்டு ஒரு குடும்பத்தையே வாழக் கோரும் நிலையில், இதன் சமூக வெடிப்பு அகலமானது. ஒய்வூதியமோ மாதம் 4500 ரூபாவாக உள்ளது. எங்கும் வறுமை விரிவாகியுள்ளது. வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக அரசு அறிக்கையே உறுதி செய்கின்றது. கொழும்பையும் கொழுப்பைச் சுற்றி வாழும் மக்களில், 40 சதவீதமானவர்கள் சேரிகளில் வாழ்வதுடன்; பரம எழைகளாக இருப்பதை அரசு புள்ளிவிபரங்களே உறுதி செய்கின்றது. திருகோணமலையில் 75 சதவீதத்துக்கு அதிகமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்த திருகோணமலை வறுமையில் வாழப் போராடும் மீனவர்களிடம், மாதம் புலிகள் 1000 ரூபா வரியை அறவிடுகின்றனர். இது மக்கள் பற்றி அக்கறை கொண்ட தமிழ் தேசியம். இலங்கை முழுக்க வாழ்க்கையின் அவலம் நிரந்தரமான விதியாகிவிட்டது. ஒருபுறம் இந்த சமூக அவலம் அடிபாதளத்தில் சிக்கிவிட, மறுதளத்தில் நுகர்வு வெறி உச்சத்தில் தலைவிரித்தாடுகின்றது.

வக்கிரமான சமூக நுகர்வை பூர்த்தி செய்ய, எழைகளின் உணவை எற்றுமதி செய்வது அவசியமாகின்றது. அதாவது வறுமையும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையும் பெருகிவரும் நிலையில், 2003 இல் இலங்கை ஒரு லட்சம் தொன் அரிசை ஏற்றுமதி செய்தது. கிராமப் புறங்களில் எழை எளிய மக்களின் அடிப்படையாக கிடைத்த இறுதி உணவாக எங்சியிருந்த 26000 மெற்றிக் தொன் பழங்கள், மரக்கரிகளையம் கூட ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் கிடைத்த 318 கோடி ரூபாவை பணக்காரர்களின் அற்ப நுகர்வுக்கும், வட்டி கொடுக்கவும் பயன்படுத்தினர்.

இதை விரிவாக பார்த்தால் 2003 ஆண்டு இலங்கை ஏற்றுமதி 10 சதவீதத்தால் அதிகாரித்தது. இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்கும் ஒரு அங்கமாக இலங்கை இந்தியாவிற்கு இடையில் நடக்கும் பேரங்கள,; பொருளாதார தளத்தில் பாரிய விளைவுகளை உருவாக்கின்றது. இலங்கை இந்திய சுதந்திரவர்த்தக ஒப்பந்ததின் பின் இலங்கையின் எற்றுமதி 142 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2800 பொருட்களுக்கு வரிச் சலுகையை வழங்குகின்றது. 2002 இல் 16 கோடி டொலர் (அண்ணளவாக 1600 கோடி ரூபா) ஏற்றுமதியை இலங்கை செய்தது. சீனாவுக்கும் கொங்கொங்குமான இலங்கை ஏற்றுமதி 2002 இல் 2001 உடன் ஒப்பிடும் போது 27.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதாவது 130 கோடி ரூபாவால் இது அதிகரித்துள்ளது. இலங்கை இறக்குமதி 2002 இல் 730 கோடி ரூபாவாக இருந்தது.

இலங்கை வைர மற்றும் தங்க ஏற்றுமதி 2002 இல் 202 கோடி டொலராக (அண்ணளவாக 20200 கோடி ரூபாவாகும்.) இருந்தது. 2002 இல் இலங்கையின் மொத்த தொழில்துறை எற்றுமதித் தொகை 242 கோடி டொலராகும் (அண்ணளவாக 24200 கோடி ரூபாவாகும்.) இது வெளிநாட்டு ஏற்றுமதி வரவில் 53 சதவீதமாகும்;. இதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கான ஏற்றுமதி மட்டும் 195.2 கோடி டொலராக (அண்ணளவாக 19520 கோடி ரூபா) இருநந்து. இதில் கடைசி ஆறு மாதத்தில் 109.5 கோடி டொலராக (அண்ணளவாக 10950 கோடி ரூபா) யாக இருந்தது. 2003 முதல் மூன்று மாதத்தில் தொழில்துறை எற்றுமதி 141 கோடி டொலராக (அண்ணளவாக 14100 கோடி ரூபா) அதிகரித்துள்ளது.

எற்றுமதி என்பது தேசிய இலட்சியமாகிவிட்டது. அனைத்தையும் எற்றுமதி செய்வது என்ற கொள்கை தேசிய பொருளாதார கொள்கையாகிவிட்டது. மக்களின் சமூகத் தேவை மறுப்பது அரசியலாகிவிட்டது. ஏற்றுமதியின் அடிப்படையான நோக்கம் என்ன? ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு நேரடியாக சேவை செய்வதே. எற்றுமதி பொருளாதாரத்தால் தேசத்தில் வாழும் மக்களுக்கு எந்த நலனும் கிடைப்பதில்லை. ஏற்றுமதி மூலம் கிடைக்கும் செல்வம் கடனின் ஒரு பகுதியை மீள கொடுக்கவும், வட்டியைக் கட்டவும் பயன்படுகின்றது. அதாவது அது இன்னுமொரு விதத்தில், அப்பணமே புதிய கடனாக மீள வழங்கபடுகின்றது. இதற்கு வெளியில் எற்றுமதி பொருளாதாரம் ஏகாதிபத்தியம் உற்பத்தி செய்யும் கவர்ச்சிகரமான ஆடம்பர இன்ப நுகர்ச்சிப் பொருட்களை அதிக விலையில் இறக்குமதி செய்யப் பயன்படுகின்றது. இதில் முக்கியமான மற்றொரு உண்மை ஒன்று உண்டு. அதாவது கடனாக வருபவை கூட ஏகாதிபத்திய உற்பத்தி துறைக்கும் அதன் நலனுக்கு இசைவாக முதலிடக் கோரும் நிபந்தனையின் அடிப்படையில் தரப்படுகின்றது. கடன்கள் எகாதிபத்திய தேசங்கடந்த பன்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி துறைக்குள் திருப்பிவிடப்படுகின்றது. இவற்றை எல்லாம் மூடிமறைக்க மக்கள் நலத் திட்டங்களை அரசும், தன்னார்வக் குழுக்கள் உடாகவும் செய்கின்றனர். அதாவது அதையும் எகாதிபத்தியம் தனக்கு சார்பான சிந்தனையை உருவாக்கும் தளத்தில் மட்டுமே செலவு செய்ய நிர்ப்பந்திக்கின்றது. ஏற்றுமதி பொருளாதாரம் கடனை தலைகால் தெரியாத எல்லைக்குள் பெருகிச் செல்லுகின்றது.

மொத்த தேசிய வருவாயை விட கடன் 2001 இல் 103 சதவீதமாகியுள்ளது. இன்று அதிகரித்த செல்லும் கடனை தேசிய வருவாயில் 100 சதவீதமாக இது உள்ளதாக பொய்யான புள்ளி விபரம் ஒன்றின் மூலம் அரசு அண்மையில் மக்களின் காதுக்கு பூ வைக்க முனைந்தது. 2002 இல்; இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் 77 ஆயிரம் ரூபா கடனே இருந்தது. இது 2003 இல் 99 ஆயிரம் ரூபாவாகியுள்ளது. கடனின் தொகை பெருகிச் செல்லுகின்றது. நாட்டை விற்றாலும் கடனைக் கட்டமுடியாது. "சுதந்திர" கொத்தடிமைகளாக வாழவே முடியும

Wednesday, October 19, 2005

சில்லறை வியாபாரத்தில்

அந்திய முதலீடுசிறு வியாபாரிகளைஒழிக்கும் சிலந்தி வலை

உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளையின்படி, சிறுநடுத்தர வியாபாரிகள் மீது மதிப்புக் கூடுதல் வரி என்ற தாக்குதலைத் தொடுத்துள்ள மைய அரசு, இப்பொழுது, சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கத் திட்டம் போட்டு வருகிறது. ''சூப்பர் மார்க்கெட்'' கடைகளைத் திறந்து நடத்தி வரும் டாடா போன்ற தரகு முதலாளிகள், இதற்கான அனுமதியை உடனே அளிக்குமாறு அரசை நிர்பந்தித்து வருகிறார்கள். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்டு உலகின் 12 நாடுகளில் 4,806 ''சூப்பர் மார்க்கெட்'' கடைகளை நடத்திவரும் அமெரிக்காவின் தேசங்கடந்த நிறுவனமான ''வால்மார்ட்'' இன் அதிபர், இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற பொழுது, இது தொடர்பாகப் பேச்சு வார்த்தையும் நடந்திருக்கிறது.

இச்சில்லறை வியாபார பன்னாட்டு நிறுவனங்களுக்கு, 49 சதவீத மூலதனம் போட அனுமதியளிப்பதா அல்லது 26 சதவீத மூலதனம் போட அனுமதியளிப்பதா என்ற ''பிரச்சினை'' முடிவுக்கு வந்துவிட்டால், அமெரிக்காவின் ''வால் மார்ட்'', இங்கிலாந்தின் ''டெஸ்கோ'', ஜெர்மனியின் ''மெட்ரோ'' போன்ற அந்நிய நிறுவனங்கள், டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவிலும் தங்கள் ''பல சரக்கு''க் கடைகளைத் திறந்து விடுவார்கள்.

சில்லறை வியாபாரத்தில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு அனுமதியளித்தால், ''முதலீடு பெருகும்; வேலைவாய்ப்பு பெருகும்'' எனப் பழைய பல்லவியைப் பாடி, இச்சீர்திருத்தத்தை நியாயப்படுத்துகிறார், பிரதமர் மன்மோகன் சிங்.

சில்லறை வியாபாரத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைந்தால், பொருட்கள் தரமாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும். இதனால் நுகர்வோர் இலாபம் அடைவார்கள் எனத் தாராளமயத்தின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
நிதியமைச்சர் ப.சிதம்பரமோ இன்னும் ஒருபடி மேலே போய், ''உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதில், பன்னாட்டு நிறுவனங்கள் திறமையாகச் செயல்படும்'' என்கிறார்.அணுகுண்டு வெடிக்கும் அளவிற்குத் திறமை வாய்ந்த நாடு; வல்லரசாகும் அளவிற்குத் தகுதி வாய்ந்த நாடு என இந்திய 'தேச'பக்தியை ஊட்டும் இவர்கள், ஒரு சாதாரண கடை நடத்தும் திறமை இந்தியாவிடம் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அளவிற்கு, நம்ம ஊர் ''அண்ணாச்சிகள்'' வியாபாரத் திறமையும், நுணுக்கமும் தெரியாதவர்களா என்ன?

-------------

இந்தியாவெங்கும் ஏறத்தாழ ஒரு கோடியே பத்து இலட்சம் வர்த்தக நிறுவனங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 2 சதவீத வியாபாரிகள்தான் ''சரவணா ஸ்டோர்ஸ்'' போன்று மிகப் பெரும் வர்த்தக நிறுவனங்களை நடத்துகிறார்கள். டாடா நடத்தும் ''வெஸ்ட் சைட்'', பேண்டலூன் நடத்தும் ''பிக் பஜார்'', மற்றும் ஃபுட் வேர்ல்ட், சுபிக்ஷா போன்ற ''சூப்பர் மார்க்கெட்'' கடைகளும் இந்த 2 சதவீதத்துக்குள்தான் அடங்குகின்றன.
இந்தியாவிலுள்ள 4 சதவீதக் கடைகள்தான் 500 சதுர அடி பரப்பளவில் வியாபாரம் நடத்தும் பெரிய கடைகள். மீதமுள்ளவை அனைத்தும் பெட்டிக்கடை அளவில் இருக்கும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ், புரோட்டா ஸ்டால், தேநீர் விடுதிகள், மருந்துக் கடைகள், தள்ளுவண்டி அல்லது தரைக்கடைகள் போன்ற பல தரப்பட்ட ''வணிக நிறுவனங்கள்'' தான். இந்திய அரசின் மதிப்பீட்டின்படியே, இந்தியாவில் உள்ள 98 சதவீதக் கடைகள், விற்பனை வரி, வருமான வரிச் சட்டங்களின் கீழ் வராதவை.

தரகு முதலாளிகள் சங்கம் (எஃப். ஐ.சி.சி.ஐ.) 2003ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சில்லறை வியாபாரத்தின் மதிப்பு ஏறத்தாழ 11 இலட்சம் கோடி ரூபாய். இதில் சூப்பர் மார்க்கெட்டுகள், மிகப் பெரும் வர்த்தக நிறுவனங்களின் பங்கு ஏறத்தாழ 35,000 கோடி ரூபாய். சில்லறை வியாபாரம் ஏறத்தாழ 4 கோடி பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதில் சூப்பர் மார்க்கெட்டுகளின் பங்கு ஐந்து இலட்சம் தான்.

---------------

1999ஆம் ஆண்டு வாக்கில் சில்லறை வியாபாரத்தில் ஒரு சதவீதமாக இருந்த சூப்பர் மார்கெட்டுகளின் பங்கு, 2005இல் 6 சதவீதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இது, 2010இல் 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடையலாம் எனக் கூறப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரிய வணிக நிறுவனங்களிலும் பொருளை வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் என்றும், மீதி 65 சதவீதம் பேர்தான் (அடித்தட்டு மக்கள்) தங்களின் வீட்டுக்கு அருகிலுள்ள ''அண்ணாச்சி'' கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள் என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த 35 சதவீத மேல்தட்டு வாடிக்கையாளர்களை வளைத்துப் பிடிப்பதுதான் ''வால் மார்ட்'' போன்ற அந்நிய பகாசுர நிறுவனங்களின் நோக்கமாக இருக்கும் என்றாலும், இதனால் சிறிய கடைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்காது என்று கூறி விட முடியாது. ஏனென்றால், இந்தியாவில் சூப்பர் மார்க்கெட் கலாச்சாரம் நுழைந்த பிறகு, பழமையான, சாதாரண கடைகளில் சோப்பு, ஷாம்பு போன்ற நுகர்பொருட்களின் விற்பனை 20 சதவீதம் சரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் வால் மார்ட்டுக்குச் சொந்தமான ஒரு ''சூப்பர் மார்க்கெட்டின்'' சராசரி பரப்பளவு 85,000 சதுர அடி. குண்டூசி தொடங்கி நவீனமான கார்கள் வரை எந்தவிதமான நுகர் பொருளையும், எந்த நாட்டுப் பொருளையும் அந்நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட்டில் வாங்க முடியும். அந்நிறுவனத்தின் ஒரு கடையின் ஆண்டு சராசரி விற்பனை 230 கோடி ரூபாய். நம் நாட்டு சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் கூட, வால் மார்டோடு போட்டி போட முடியாது எனும் பொழுது, சிறிய வியாபாரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா? பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், யானையோடு பூனையை மோதச் சொல்கிறது, காங்கிரசு கும்பல்.

''10 இலட்சம் மக்கள் தொகை கொண்ட 35 இந்திய நகரங்களில், வால் மார்ட் ஒரேயொரு சூப்பர் மார்க்கெட்டைத் திறந்தாலே, 4,32,000 சிறிய கடைகளை இழுத்து மூட வேண்டியிருக்கும்; பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்து 20 சதவீத வியாபாரத்தைக் கைப்பற்றினால், சிறிய கடைகளில் வேலை பார்க்கும் 80 இலட்சம் சிப்பந்திகளுக்கு வேலை பறிபோகும்'' என இச்சீர்திருத்தத்தின் பின்னுள்ள அபாயகரமான விளைவுகளை வெளியிட்டிருக்கிறது, ''எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில இதழ்.

பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்கள் நமது நாட்டில் சில்லறை வியாபாரத்தில்தான் தற்பொழுது நுழைய முடியாதே தவிர, சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் மொத்த வியாபாரத்தில் நுழைய முடியும். இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு பெங்களூர் நகரில் கடையைத் திறந்த ஜெர்மன் நாட்டு நிறுவனமான ''மெட்ரோ'', சட்ட விரோதமான முறையில் சில்லறை வியாபாரத்தையும் நடத்தத் தொடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பெங்களூர் நகர வியாபாரிகள் ''மெட்ரோ''வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த பிறகுதான், சில்லறை வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது, மெட்ரோ. ''சென்னையில், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை ஒழிப்பதற்கு ஒரேயொரு மெட்ரோ நிறுவனம் போதும்'' என்கிறார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர், வெள்ளையன்.

-----------

இந்தியாவில் சில்லறை வியாபாரம் நாடெங்கும் பரந்து விரிந்த அளவில் சிதறுண்டு கிடப்பதால், பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்களின் வருகையால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று சிலர் வாதாடுகிறார்கள்.

கோக், பெப்சி என்ற இரு அமெரிக்காவின் தேசங் கடந்த குளிர்பான நிறுவனங்கள். ''காளிமார்க்'', வின்சென்ட் போன்ற பெரிய குளிர்பான நிறுவனங்களை மட்டுமின்றி, உள்ளூர் கோலி சோடா கம்பெனிகளையும் போண்டியாக்கவில்லையா?

அரசாங்கத்தின் தாராள இறக்குமதிக் கொள்கை, நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்களை இழுத்து மூட வைக்கவில்லையா?

கிராமச் சந்தையைக் கைப்பற்றி குடிசைத் தொழில்களை அழித்துவிடும் நோக்கில் இந்துஸ்தான் லீவர், கோத்ரெஜ் போன்ற பெரிய நிறுவனங்கள் வியாபார உத்தியை மாற்றிக் கொள்ளவில்லையா?சிறிய, நடுத்தர விவசாயிகளை, அவர்களது நிலத்தை வாங்காமலேயே, அவர்களைத் தங்களின் ஒப்பந்த விவசாயிகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றவில்லையா?

இந்த சமீபத்திய வரலாற்றை நினைவில் வைத்துக் கொண்டால், உள்ளூர் சில்லறை வியாபாரிகள் எத்தகைய அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ''டெஸ்கோ'' என்ற சில்லறை வியாபார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பால் எட்கர்ட், ''உங்கள் நாட்டு வியாபாரக் கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், அதையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் சமாளித்து விடும். அதனால், உங்கள் அரசாங்கத்தை அந்நிய முதலீடு தொடர்பான விதிகளைத் தளர்த்தாமல் இருக்குமாறு நிர்ப்பந்தம் கொடுங்கள்'' என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறார்.

---------

இந்தியாவில் தற்பொழுது நிலவும் வேலை வாய்ப்பற்ற சூழலில், சில்லறை வியாபாரம் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் முக்கியமான பங்காற்றி வருகிறது. கொஞ்சம் மூலதனம், கொஞ்சம் கணக்கு வழக்குப் பார்க்கும் திறமை இருந்தால், படித்தவன்ஃபடிக்காதவன் என யாராக இருந்தாலும் ஒரு சிறிய மளிகைக் கடையைத் தொடங்கி, வாழ்க்கையை ஓட்டிவிட முடியும்; 15 மணி நேரம் உழைப்பதற்கு தெம்பு இருந்தால், ஒரு புரோட்டா ஸ்டாலிலோ, டீ கடையிலோ வேலைக்குச் சேர்ந்து விட முடியும். ''சேவைத் துறையில் வேலை வாய்ப்பு'' என அரசாங்கம் பெரிதாக விளம்பரப்படுத்துகிறதே, அது இந்த மாதிரியான வேலைகள் தானே தவிர, கணினி முன் உட்காரும் ''வெள்ளை சட்டை'' வேலையல்ல!

இந்தியாவில் தற்பொழுதுள்ள மொத்த வேலை வாய்ப்பில் 7 முதல் 8 சதவீத வேலை வாய்ப்பை சில்லறை வியாபாரத் துறைதான் கொடுத்திருக்கிறது. விவசாயத்திற்கு அடுத்து, சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் மிகப் பெரும் துறையாக சில்லறை வியாபாரம் இருப்பதை அரசாங்கமே ஒத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட துறையில் பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்களை நுழைய விடுவதை, 4 கோடி குடும்பங்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, வெறும், பொருளாதாரப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.

''வால் மார்ட்'' போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், தனது போட்டியாளர்களை ஒழித்துக் கட்டுவதற்காக, பொருட்களை சிறிய வியாபாரிகளை விட மலிவாக விற்பது என்ற வியாபார தந்திரத்தில் கண்டிப்பாக இறங்குவார்கள். உள்நாட்டு சூப்பர் மார்க்öட் நிறுவனங்கள் இந்த தந்திரத்தைக் கடைப்பி டித்துத்தான், சில்லறை வியாபாரத்தில் 6 சதவீதப் பங்கைக் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த நாணயமற்ற உத்தியைத் தான் ப.சிதம்பரம் கும்பல் ''வியாபாரத் திறமை'' என மெச்சிக் கொள்கிறது.

இந்தக் கழுத்தறுப்பு போட்டியால் ஏற்படும் ''நட்டத்தை'', வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் பல ஆண்டுகளுக்குக் கூடத் தாங்கிக் கொள்ள முடியும்.

ஏற்கெனவே சூப்பர் மார்க்கெட் கடைகளை நடத்தி வரும் டாடா போன்ற பெரிய முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களோடு வியாபாரக் கூட்டணி சேர்ந்து தப்பித்துக் கொள்வார்கள். ஆனால், எத்தனை சிறிய வியாபாரிகளால் வியாபாரம் சரிந்து கொண்டே போவதைத் தாங்கிக் கொள்ள முடியும்?மாற்று வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லாத இச்சூழலில், ஒரு சிறிய கடை மூடப்பட்டால், அதை நம்பிப் பிழைக்கும் ஒரு குடும்பமோ, இரண்டு குடும்பமோ நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான். தமிழகத்தைப் பொருத்தவரையில் இப்பொருளாதாரச் சீர்திருத்தம், நாடார் சாதியைச் சேர்ந்த பெரும்பான்மையான வியாபாரிகளை, வணிக நிறுவனச் சிப்பந்திகளைத் திக்கற்றவர்களாக ஆக்கி விடும் எனக் கண்டிப்பாகச் சொல்லலாம்.
வால்மார்ட் போன்ற பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்கள், உள்நாட்டில் தயாராகும் பொருட்க ளைத் தான் வாங்கி விற்பனை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எந்த நாட்டில் பொருட்கள் மலிவாகக் கிடைக்கிறதோ, அங்கிருந்து இறக்குமதி செய்து, அவை விற்பனை செய்வதை இந்திய அரசு கூடத் தடுத்து விட முடியாது. ஏற்கெனவே, தாராள இறக்குமதியால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் உள்நாட்டு சிறுதொழில் நிறுவனங்களுக்கு, இந்தப் புதிய சீர்திருத்தம் இன்னும் ஒரு மரண அடியாகவே இருக்கும்.

இது மட்டுமின்றி, இச்சீர்திருத்தத்தின் ஆதரவாளர்கள், அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தையும் நீக்க வேண்டும் என்றும் கோருகிறார்கள். இச்சட்டம் இருக்கும் பொழுதே, அரிசி, கோதுமை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உள்நாட்டு வர்த்தகச் சூதாடிகள்தான் தீர்மானிக்கிறார்கள். இச்சட்டம் நீக்கப்பட்டால், இந்த ''அதிகாரம்'' வால்மார்ட் போன்ற பன்னாட்டு வியாபாரிகளின் கைகளுக்குப் போய்விடும்.
சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதியளித்த சீனா, மலேசியா, தாய்லாந்து போன்ற ஏழை நாடுகள், தற்பொழுது இந்நிறுவனங்களின் பேயாட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய, புதிய சட்டங்களை இயற்றி வருகின்றன் கடப்பாரையை முழுங்கிவிட்டு, அது செரிக்க சுக்குக் கசாயத்தைக் குடிக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில், ஒரு வேண்டாத விருந்தாளியை, வெற்றி லை பாக்கு வைத்து வரவேற்கத் தயாராகிறது, நயவஞ்சகக் காங்கிரசு கும்பல்!

மு செல்வம்
நன்றி புதியஜனநாயகம்

Tuesday, October 18, 2005

அமெரிக்கர்களின் மனசாட்சியை

உலுக்கும்ஒரு தாயின் போராட்டம்!

'எனக்கு அந்த உண்மை தெரியவேண்டும்; ஈராக் மீது ஏன் இந்தப் போர்?' என்று தனது அன்பு மகனைப் பறிகொடுத்த வேதனையில் கேட்கிறார் அந்த அமெரிக்கத் தாய். துயரத்தை நெஞ்சிலே சுமந்து கொண்டு, பயங்கரவாத அதிபர் புஷ்சுக்கு எதிராகத் தன்னந்தனியாக அவர் நடத்திய உறுதியான போராட்டம், அமெரிக்க மக்களின் மனசாட்சியை உலுக்கி, போர் எதிர்ப்புப் போராட்டத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் வகாவில்லி நகரைச் சேர்ந்த அந்தத் தாயின் பெயர் சின்டி ஷீஹன். அவரது அன்பு மகனாகிய கேசி ஷீஹன், அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய தனித்தேர்ச்சிமிக்க இளம் சிப்பாய். கடந்த 2004 ஏப்ரல் 4ஆம் தேதியன்று ஈராக்கில், ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இரு மாதங்களுக்குப் பிறகு சின்டி ஷீஹன் தனது குடும்பத்தோடு அதிபர் புஷ்ஷைச் சந்திக்கச் சென்றார். ஆனால், அங்கே ஆறுதலுக்குப் பதிலாக அவமரியாதைதான் கிடைத்தது.' இன்று நாம் யாரைக் கௌரவிக்க வேண்டும்? என்று அசைபோடும் தனது வாயுடன் உதவியாளர்களிடம் கேட்டுக் கொண்டே அதிபர் புஷ் வேகமாக நடந்து சென்றார். ஆறுதலாக ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வரவில்லை.

எங்களை நோக்கிய அவரது கண்களில் கருணை இல்லை. எதைப் பற்றியும் கவலைப்படாதவராக அவரது தோற்றம் காட்டியது. யதார்த்தத்திற்கும் மனிதத் தன்மைக்கும் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதப் பிறவிதான் அவர். அவரது கண்கள் வெறுமையாகவும், உள்ளே ஒன்றுமில்லாத வேர்க்கடலை ஓடு போலவும் காட்சியளித்தது'' என்று அந்தச் சந்திப்பை நினைவு கூர்கிறார், ஷீஹன். ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவச் சிப்பாயின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக் கூட அதிபர் தயாராக இல்லை எனில், ஈராக் மீதான இந்தப் போர் எதற்காக? யாருக்காக? என்னைப் போல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் மகனையும் குடும்பத் தலைவனையும் உற்றாரையும் ஏன் இப்படி பறிகொடுக்க வேண்டும்? கூடாது; இந்தப் போர் இனியும் தொடரக் கூடாது என்று அவர் தீர்மானித்தார். ''இராணுவக் குடும்பங்களின் உரத்தகுரல்'' (உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படையாகக் கூறும் அரங்கம்) எனும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு, போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஊக்கமாகச் செயல்பட்டு வருகிறார். பேரழிவுக்கான ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயங்கரவாதத்தை ஊட்டி வளர்ப்பதாகக் குற்றம் சாட்டி ஈராக் மீது நடத்தப்பட்டுள்ள இந்தப் போர் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிட்டதை அம்பலப்படுத்தும் இவ்வியக்கத்தினர், உடனடியாக ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஈராக்கில், அமெரிக்கப்படை வீரர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு, விமானங்களில் வந்திறங்கும் சவப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், அமெரிக்க மக்களிடம் இந்தக் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே பரவத் தொடங்கியுள்ளன. அமெரிக்க மக்களிடம் அதிருப்தி பெருகி வருவதைக் கண்டஞ்சும் அதிபர் புஷ், அதிலிருந்து தப்பிக்க விடுமுறையில் ஓய்வெடுக்கச் செல்வதாகக் கூறி நழுவிச் செல்வது வழக்கம். இப்படித்தான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கிராஃபோர்டிலுள்ள தனது கால்நடைப் பண்ணையில் ஓய்வெடுக்க ஓடினார். அங்கே பொதுமக்கள் தமது கோரிக்கைகளுடன் எப்போதும் தன்னை சந்திக்கலாம் என்றார். புஷ் பதவிக்கு வந்து அவர் இப்படி ஓய்வெடுக்க ஓடுவது ஐந்தாவது தடவையாகும். கடந்த 36 ஆண்டுகளில் எந்த அதிபரும் தொடர்ந்து ஐந்து வாரங்களாக இப்படி ஓய்வெடுத்துக் கொண்டு முடங்கிக் கிடந்ததில்லை என்ற வரலாற்றுச் 'சாதனை'யையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று சின்டி ஷீஹன் அதிபர் புஷ்ஷைச் சந்திக்க அவரது கால்நடைப் பண்ணைக்குச் சென்றார். ஆனால், அதிபர் புஷ் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார்.ஷீஹன் தன்னந்தனியாக இருந்த போதிலும், அதிபரின் இந்தத் திமிர்த்தனத்துக்கும் அவமானப்படுத்துதலுக்கும் எதிராக அவரது பண்ணையின் முன்பாகவே போராட்டத்தில் இறங்கினார். ''ஈராக் மீது ஏன் இந்த ஆக்கிரமிப்புப் போர்? எனக்கு அந்த உண்மை தெரியவேண்டும்'' என்று எழுதப்பட்ட முழக்கத் தாளுடன் அவர் இரவு பகலாக விடாப்பிடியாக அங்கேயே நின்றார். இதைக் கண்டு பொதுமக்கள் திரளத் தொடங்கியதும், பீதியடைந்த புஷ் தனது உதவியாளர்களை அனுப்பி அவரைச் சாந்தப்படுத்த முயற்சித்தார். ஆனால், ஷீஹன் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

நன்கொடை அளிக்கும் ஒரு பெருமுதலாளியுடன் நீண்ட நேரம் அளவளாவிவிட்டு, அவரை வழியனுப்ப புஷ் வெளியே வந்தபோது, ''பணக்காரர்களுக்காக நேரம் ஒதுக்க முடிந்த உங்களுக்கு, என்னுடன் பேசுவதற்கு மட்டும் நேரம் இல்லையா?'' என்ற முழக்கத்தை எழுதிப் பிடித்துக் கொண்டு ஷீஹன் நிற்பதைக் கண்டு மிரண்டு, உள்ளே ஓடிப் போய் பதுங்கிக் கொண்டார். அதிபர் புஷ்ஷûக்கு எதிராகவும், ஈராக் மீதான போருக்கு எதிராகவும் இரவு பகலாக ஷீஹன் விடாப்பிடியாகப் போராடிய இடம், மாண்டுபோன அவரது மகன் கேசியின் பெயரால் நினைவுத் திடலாக போர் எதிர்ப்பு இயக்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே அடிக்கடி போர் எதிர்ப்புக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன. பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், மாண்டுபோன அமெரிக்கச் சிப்பாய்களின் பெயர் புகைப்படங்களையும் வெண்சிலுவைக் குறி பொறித்த அட்டைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். ''ஈராக் மீதான போரை நிறுத்து! அமெரிக்கப் படைகளை உடனே திரும்பப் பெறு!'' என்ற முழக்கம் புஷ்ஷின் பண்ணையில் மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஈராக்கில் அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்படும் போதெல்லாம், அத்திடலில் பாதிக்கப்பட்ட இராணுவக் குடும்பங்கள் திரண்டு நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்துவதும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தொடர்கிறது.ஈராக்கில் போராளிகளின் குண்டு வீச்சினால் கொல்லப்பட்ட அமெரிக்கச் சிப்பாய் எட்வர்ட் ஷெரோடர் என்ற இளைஞனது சடலத்தை அடக்கம் செய்த பிறகு, ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கேசி ஷீஹன் திடலில் போர் எதிர்ப்பு இயக்கத்தினர் ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தினர்.

அதில் உரையாற்றிய எட்வர்ட் ஷெரோடரின் தந்தையான பவுல் ஷெரோடர், 'நாங்கள் எங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே வரவில்லை. எங்களது குமுறல்கள் அதிபர் புஷ் மீது நாங்கள் கொண்டுள்ள கோபத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கோபம், உருக்குலைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் நேர்மையான வெளிப்பாடு'' என்று குறிப்பிட்டதோடு, 'சின்டி ஷீஹன் அம்மையார், போர் எதிர்ப்பு இயக்கத்தின் ரோசாபார்க்ஸ் ஆவார்' என்று பெருமையுடன் கூறுகிறார். 1955இல் ரோசாபார்க்ஸ் அம்மையார், இன ஒதுக்கல் கொள்கைப்படி பிரிக்கப்பட்ட பேருந்தின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு, எழ மறுத்துப் போராடினார். ஏனெனில், அவர் ஆப்பிரிக்க அமெரிக்க கலப்பினத்தவர். கருப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் பேருந்தின் பின்பகுதி இருக்கைகள் என இடஒதுக்கீடு செய்யப் பட்டு, அமெரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை பின்பற்றப்பட்ட காலம் அது.

தன்னந்தனியே ரோசாபார்க்ஸ் அன்று நடத்திய போராட்டம், வெள்ளை நிற வெறியர்களின் புதிய வகை தீண்டாமைக்கு எதிரான மனித உரிமைப் போராட்டத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. அவர் தொடங்கி வைத்த போராட்டம், அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயாகப் பற்றிப் படர்ந்தது.

ரோசாபார்க்ஸ், இறுதிவரை மனித உரிமை இயக்கத்தின் முன்னணி ஊழியராகச் செயல்பட்டார். ரோசாபார்க்ஸ் போலவே சின்டி ஷீஹனும் இன்று அமெரிக்க மக்களால் போற்றப்படுகிறார். தன்னந்தனியே அவர் நடத்திய போராட்டத்தால் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமை, அடக்குமுறையை எதிர்க்கும் உறுதி ஆகியவற்றின் அடையாளச் சின்னமாக அவர் கருதப்படுகிறார். தன்னந்தனியே ரோசாபார்க்சைப் போலவே சின்டிஷீஹன் போராடியிருந்த போதிலும், அவர் தனியானவர் அல்ல. போர் எதிர்ப்பு இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம். வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் பிரபலமான நாட்டுப்புறப் பாடகர் ஜோன் பெய்ஸ் அம்மையார், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று இரவு புஷ் பண்ணையின் எதிரே பெருந்திரளான மக்கள் முன் இசை நிகழ்ச்சியை நடத்தி ஈராக் போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுவூட்டியுள்ளார். தனது மகனுக்காக மட்டுமல்ல் தனது மகனையொத்த இன்னும் பல இளைஞர்கள் அமெரிக்க வல்லரசின் ஒரு பொய்க்காக கொல்லப்படுவதைக் கண்டு குமுறும் ஷீஹனின் கோபம் உண்மையானது.

இந்தப் போர் அநீதியானது; அது தடுக்கப்பட்டாக வேண்டும் என்ற உணர்வோடு அவர் நடத்திய போராட்டமும் உண்மையானது. அது, அமெரிக்க மக்களின் உள்ளார்ந்த கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தி, போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுவூட்டி வருகிறது. அமெரிக்க மக்களிடமிருந்து மட்டுமின்றி, இராணுவக் குடும்பங்களிடமிருந்தும் புஷ் கும்பல் முற்றாகத் தனிமைப்பட்டுப் போய் கிடக்கிறது. அமெரிக்கா, உலக மேலாதிக்க வல்லரசாக ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி ஆணவத்தோடு கொக்கரிக்கலாம். ஆனால், அமெரிக்க மக்களிடம் இன்னமும் எஞ்சியிருக்கிறது மனசாட்சி. ஷீஹன் மூட்டிய போராட்டச் சிறு பொறி பெருங்காட்டுத் தீயாகப் பரவவே செய்யும். அன்று வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடியதைப் போல, ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்க மக்களின் போராட்டம் உள்நாட்டிலேயே எரிமலையாக வெடித்தெழப் போவது நிச்சயம்.

மு குமார்
நன்றி புதியஜனநாயகம்

Sunday, October 16, 2005

தொடர் கொலைகளால்

யார் உண்மையான இலாபம் அடைகின்றனர்

மனித இனத்தில் உயிர்வாழும் ஆற்றல் என்பது, உயிர் வாழ்வதற்கான போராட்டத்துடன் ஆரம்பமாகின்றது. தமிழ் மக்களின் போராட்டம் கூட அப்படித் தான் தொடங்கியது. ஆனால் எமது போராட்டத்தின் இன்றைய நிலை என்ன? தனிமனித அதிகாரத்துக்காகவும், சமூக ஆதிக்கத்துக்காகவும் தொடங்கி இன்று தமிழ் மக்களிடம் பணத்தை சூறையாடல் என்ற எல்லைக்குள் எமது போராட்டமே சீரழிந்து கிடக்கின்றது. தமிழீழமே எமது இலட்சியம் என்று தொடங்கிய போராட்டம் தனது ஆன்மாவையே தொலைத்து, இன்று போராட்டம் என்பது பணம் திரட்டும் போராட்டமாக மாறிவிட்டது. எந்த அசைவும் இயக்கமும் பணம் திரட்டலை அடிப்படையாக கொண்டே இயக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் போராட்டம் திசை மாறிய வரலாற்றின் ஒவ்வொரு கணமும், அது தனது சொந்த இலட்சியங்களை கைவிடுவதில் இருந்தே தொடங்கியது. இன்று தமிழ் மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டம் என்பதே, தமிழ்தேசியம் பேசும் தேசியவாதிகளின் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பிப்பிழைக்கும் போராட்டமாக சீரழிந்து விட்டது. இரண்டு தனிமனிதர் சுதந்திரமாக நடக்கும் சமூக நிகழ்வுகளையிட்டு உரையாடவே முடியாது. அது கண்காணிக்கப்படுகின்றது. கதைப்பதை தடுக்கும் வகையில் மிரட்டப்படுகின்றது. இது மரண தண்டனைக்குரிய குற்றமாகவும் உள்ளது. இது எமது தேசத்தின் எதார்த்தம்;. இதற்காகவா நாம் போராடப் புறப்பட்டோம். இதற்காக மிகப் பெரிய தியாகங்கள் செய்யப்பட்டன.

இன்று மக்கள் உயிர்வாழும் போராட்டத்தில் தப்பிப்ழைப்பதற்காக, தமிழ் தேசியவாதிகளின் நெற்றிக் கண்ணில் இருந்து மறைந்து வாழவேண்டிய சமூக அவலம். இந்த சமூக அவலத்துக்கு வெளியில் யாரும் உயிர் வாழவில்லை. இதுவே தமிழ் தேசியம் மக்களுக்கு வழங்கும் சுதந்திரம். நக்கிப் பிழைக்கத் தெரிந்தவர்கள், சமூகத்தை மோசடி செய்யத் தெரிந்தவர்கள், சமூகத்தின் அவலத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அனைவரும், பணத்தை சூறையாடும் தமிழ் தேசியத்துடன் வலிந்து ஒட்டிக் கொண்ட ஒட்டுண்ணியாக மாறி அதை பாதுகாக்க முனைகின்றனர். போராட்டத்தின் சிதைவு ஒட்டுண்ணிகளின் வாழ்வாகிவிட்டது.

இந்த சமூக விரோத ஒட்டுண்ணிகளிடமும், ஒட்டுண்ணிகளை தாங்கி அதன் வேரில் நிலைத்து வாழ கணவு காணும் புலிகளும், யாரைத்தான் சூறையாடுகின்றனர். தமிழ் மக்களைத் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. எதிர்நிலையில் இங்கு இழப்பவர்கள் யார் என்றால், தமிழ் மக்கள் தான். எந்தப் பாவமும் அறியாத எழை எளியதுகளையும். கைகட்டி வாய் பொத்தி நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைத்தையும் இழக்கின்றனர். தமது குழந்தைகளை, தமது சொந்த உழைப்பை, பாரம்பரிய சொத்துகளை எல்லாம் புலிகளிடம் அன்றாடம் இழப்பது தமிழ் பேசும் மக்கள் தான். புலியின் செல்வங்கள் அனைத்தும், தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டவை தான். புலியின் ஒட்டுண்ணிகளிடம் குவிந்து கிடக்கும் செல்வங்களும் கூட மறைமுகவழிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்டவைதான். இன்று புலிகளை சார்ந்து வாழும் குடும்பங்கள் முதல் பல வழிகளில் உழையாது வாழும் அனைத்து செல்வங்களும் கூட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டவைதான்.

புலிகள் ஏழைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. எங்கும் சூறையாடலே தாரக மந்திரமாக அரங்கேறுகின்றது. இதை மீறுபவர்கள் அனைவரும் தேசத் துரோகியாக காட்டப்பட்டு கொல்லப்படுகின்றனர் அல்லது சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். கொன்றவனைக் கூட உரிமை கோர வக்கற்ற தேசிய வக்கிரம் இன்று கொலுவேற்றுள்ளது. முதுகெலும்பற்ற அரசியல் பேடைத்தனம்;, எங்கும் எதிலும் பணத்தைச் சூறையாடும் மாபியாப் போராட்டமாகிவிட்டது.

பணத்தைக் கொடுத்தவன் வாழ்க்கை பூராவும் சித்திரவதையை அனுபவிக்கத் தொடங்குகின்றான். கடன், குடும்ப வறுமை என்று தொடங்கும் உளவியல் சிக்கல் ஒரு பகுதினரை சிக்கி உருக்குலைகின்றது. இருப்பவன் கொடுக்கும் போது, கொடுத்த பணத்துக்காக புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு தாழ்ந்து போகின்றான். கொடுத்த பணத்தை ஏதோ ஒரு வழியில் மக்களிடம் இருந்து மீளப் பெறும் வழியில், தனக்கு துணையாக புலியை ஆதரித்து நிற்பது இயல்பாகிவிடுகின்றது.

மறுபக்கம் இந்த ஆதரவு பணம் திரட்ட தொடரும் கொலைகளுக்கு உடைந்தையாகி, மனித நாகரீகத்தையே அழிவுக்கும் நிலைக்கு கைகொடுக்கின்றது. இது பணம் கொடுத்தவனின் மற்றொரு உளவியல் சிக்கலுக்குள் சிக்கி விடுகின்றது. உளவியல் சித்திரவதை சமூகத்தின் போக்கில் நிரந்தரமான தலைவிதியாகி விடுகின்றது. உளவியல் பாதிப்பு கூடிய ஒரு பிரதேசமாக வடக்குகிழக்கு இன்று மாறி நிற்பதில் என்னதான் ஆச்சரியம் தான் இருக்க முடியும். இதை மேலும் ஆழமாக்கும் சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு, தமிழ் மக்களை வாழமுடியாத மன உளைச்சல் இன்றி உயிர்வாழ முடியாத நிலையை உருவாக்கி விடுகின்றது. அடிமைவாழ்வும், மனித உளவியல் நோய்க்குள் சிக்கிக் கிடப்பதும் தான் பிரபானிசம் தரும் விடுதலையாகிவிட்டது. மனிதனை ஆறுதல்படுத்தக் கூடிய எந்த ஆற்றலும் இந்த பிரபானிசத்துக்கு கிடையாது. பொலிஸ்காரன் நடேசன் அறிமுகப்படுத்திக்காட்டிய பிரபானிசம், பொலிஸ் பாணியிலானதே. அதற்கு மனித முகம் கிடையாது. மனிதாபிமானம் கிடையாது. கொல் கொன்று ஒழி. இதைவிட்டால் சிறையும் நீதிமன்றங்களும். இதற்கு வெளியில் சமூகம் பொது சிறைக் கூடாரமாகவே சுற்றி வளைத்து கழுத்தில் கைவைத்து நெரிக்கப்படுகின்றது. மூச்சு திணறும் சமூகத்தில் இருந்து ஆக்கத்துக்கான எந்த சமூக விடுதலையும் இன்று கிடையாது.

அதுவே தமக்கு சேவை செய்யத் தயாரற்ற அனைவரையும் கொன்று போடுதல் என்பது, தமிழ் தேசிய அகராதியில் உன்னதமான ஒழுக்கமாக செதுக்கப்படுகின்றது. ஆனால் அந்த ஒழுக்கத்தையே உரிமை கோரமுடியாத கோழைத்தனமான வசைபாடல்கள் மூலம் அனைத்தையும் விதாண்டவாதம் செய்கின்றனர்.

செய்த கொலையை நியாயப்படுத்த முடியாது கொலை செய்ய பல பெயர்களில் பல படையணிகள். சங்கிலியன் படை, வன்னியன் படை, எல்லாளன் படை என்று பற்பல படைகள். இதை மறுக்க அவர்களே கற்பனை செய்து கூறும் பல பெயர் கொண்ட பல குழுக்கள். ஒட்டுக் குழு, துணைப்படை என பல. அனைத்தும் அவர்களின் சொந்தக் கற்பனையே. அதாவது கொலையாளியே அனைத்தையும் கற்பனை செய்கின்றான்.

நாகரிக சமூக அமைப்பில் பொதுவாக தூக்கில் இடுபவனை தூக்கில் இட ஒரு கொலையாளி தேவை எப்படியோ, அதேபோல் ஒரு பாதிரியாரும் அங்கு பிரசன்னமாகின்றான். இங்கு தூக்கில் இடுபவன் பணியும், அதுபோல் பாதிரியார் பணி;யும் மக்களை அடக்கியாளத் தேவைப்படுகின்றது. அதாவது மக்களை அடக்கியாள தூக்கில் ஒரு கொலையாளி எப்படி தேவைப்படுகின்றானோ, அதே போல் மக்களின் சமூகக் கொந்தளிப்பை தணிக்க ஒரு பாதிரியாரும் தேவைப்படுகின்றான்.

இதுபோல் தான் இன்று கொலையும், கொலையை மறுக்க அல்லது நியாயப்படுத்த பல வண்ணக் கதைகளும் தேவைப்படுகின்றன. மக்களை அடிமைப்படுத்தி அடக்கியாள இரண்டும் புலிக்கு தேவையாக உள்ளது. இங்கு கொலை செய்ய கொலையாளியும், கொன்றதை நியாயப்படுத்த அல்லது திரிக்க பல வண்ண தூய்மைவாதிகளும் அரங்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். இரண்டையும் ஒரே இடத்தில் இருந்து தெளிவாகவே நாம் இனம் காணமுடியும். கொல்வதாக மிரட்டுவதையும், அதை மறுப்பதையும் நாம் இன்று, தமிழ் மக்கள் மத்தியில் தெளிவாக இனம் காணமுடியும். எதையும் புரட்டி திரித்து அராஜகம் செய்யும் அதிகாரத்தை துப்பாக்கி முனையில் செய்து காட்டுகின்றனர்.

ஒரு மனிதனை கொன்று விட்டு வந்து அதை நியாயப்படுத்தும் அர்த்தமற்ற வாதங்கள் செய்வது இல்லையென்றால் அதை மறுக்கும் வாதங்கள். கொன்றவனே அதை எதிர்த்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடுமளவுக்கு எங்கும் சிறு கும்பலே, மக்களின் பெயரில் தேசத்தையே எரிக்கின்றனர்.

மறுபுறம் முன்னைநாள் கொலைகார இயக்கங்கள், இன்று இலங்கை அரசின் கைக்கூலிகளாகி அரங்கில் நிற்கின்றனர். இன்று நடக்கும் 90 சதவீதமான கொலைகளை புலிகள் செய்யும் போது, அதற்கு பின்னால் ஒளிந்து நின்று 10 சதவீதமான கொலைகள் இவர்கள் நாசுக்காக செய்து விட்டு வந்து நியாயவாதம் பேசும் வக்கிரமும் அரங்கேறத்தான் செய்கின்றது. கொலையைக் கண்டிக்கும் போது இரு தரப்பும் பரஸ்பரம் தமது தரப்பு கொலையை பாதுகாக்கும் உரிமையை முகமூடி போட்டுக் கொண்டு, தமிழ் மக்களின் கழுத்தையே வெட்டியெதிய பின் நிற்பதில்லை.

இந்த நிலையில் நாட்டை ஆக்கிரமிக்கவும், தமிழ் மக்களின் தேசிய கோரிக்கைகளை புதைக்கவும் காத்திருக்கும் வல்லூறுக்கள் தேசத்தின் மேல் வட்டமிடுகின்றன. இதற்கு துணைபோகும் புலியெதிர்ப்புக் கும்பல் வல்லூறுக்களின் பின்னால் மறைந்து நின்று ஏதாவது எச்சம் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் அலைகின்றன.

இதற்கு துணைபோகும் உதிரிகளான ஒநாய்களும் புலிகளும் சேர்ந்து காட்டையே அழிக்கின்றன. எங்கும் அராஜகம். சமுதாயத்தின் அமைதியான இயல்பான வாழ்வு அன்றாடம் சிதைவுறுகின்றது. மனப்பயம், மன உளைச்சல் என்று உளவியல் நெருக்கடியில் தமிழ் இனம் அன்றாடம் மரணப் போராட்டத்தை நடத்துகின்றது.

இதை எல்லாம் எதற்காக செய்கின்றார்கள் என்று கேட்டால், பாய்ந்து குதறுகின்றன. தமிழீழம் எமது இலட்சியம் என்றவர்கள், அதை மறந்து பணம் திரட்டுவதே இலட்சியமாகிவிட்டது. இந்த நிலையில் இதற்காகவே ஏகபிரதிநிதித்துவம் வேண்டியும் தனித் தலைமை என்றும் கூறி, தமிழ் இனத்தின் அடிமைத்தனத்தை ஏற்று அங்கீகரிக்க உலகம் முன்வர வேண்டும் என்று கோருகின்றனர்.

இந்த நிலையில் தாம் எதற்காக கொல்லுகின்றோம் என்று கூற முடியாத வகையில் நியாயமற்ற கொலைகள். அதை மூடிமறைக்க, திசை திருப்ப விதவிதமான படைகளின் பெயராலும் எச்சரிக்கை. கொன்று விட்டு அதை மற்றவனின் பெயரில் சொல்ல பல பெயர்களில் படைகள். இந்த அரசியலை நியாயப்படுத்த நிதர்சனம் டொட் கொம் என்று பல. எல்லாம் அவனே. கொல்வதும் அவனே, அதை நியாயப்படுத்துவதும் அவனே. கொலையை மற்றவன் பெயரில் சொல்வதும் அவனே. பல பெயர்களை உற்பத்தி செய்து, அதை உண்மையானதாக நடமாடவிடுவதும் அவனே.

கொலையை நியாயப்படுத்தும் விதங்கள் கூட வக்கிரமானவை. இதற்கு அது பழிவாங்கல்கள், அது உட்கொலை என்று பல வண்ணக் கதையாடல்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிந்து இருப்பதை இவர்கள் காண்பதில்லை. உலகத்துக்கும் கூட இந்த உண்மை பளிச்சென்று தெளிவாக இருப்பதை காண்பதில்லை. அடுப்படியில் பூனை களவாக கண்ணை மூடி பால்குடித்த கதை போல், புலிகள் பால் குடிக்க முனைகின்றனர். குடித்த பாலை மற்றவர்களுக்கு கொடுக்க முனைகின்றனர்.

இந்தக் கொலைகளினால் லாபம் பெறுவர்கள் யார். தமிழ் மக்களும் அல்ல. புலிகளும் அல்ல. நீண்டகால நோக்கிலும், குறுகிய கால நோக்கிலும் லாபம் பெறுபவர்கள் ஏகாதிபத்தியமும் ஏகாதிபத்திய தமிழ் கைக்கூலிகளுமே. அத்துடன் பேரினவாதமும், பேரினவாத தமிழ் கைக் கூலிக் குழுக்களும் தான்.

பிழைப்பு வாதிகளும், பொறுக்கித்தின்னிகளும், ஒட்டுண்ணிகளும், நக்கிபிழைப்போரும் இந்த கொலைகளை நியாயப்படுத்த அவர் அவர் இடத்தில் இருந்தபடி செய்யும் கருத்துக்கு அப்பால், அவர்களுக்கு என்ற ஒரு தனி அபிப்பிராயம் உண்டு. யார் உண்மையான கொலையாளி என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு, மக்களை முட்டாளாக்க முடியும் என்ற அவாவுடன் பினாற்றுகின்றனர். ஆனால் இவர்களால் தான் புலியின் அழிவு என்பதை, வரலாறு தெளிவாக அறைந்து சொல்லும். புலிகளின் அழிவு உறுதி என்று தெரிந்தவுடன் இந்தக் கும்பல் தான், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாகவும், பேரினவாதிகளின் எடுபிடிகளாகவும் களத்தில் முன்னணி வரிசையில் அணிவகுத்து நிற்பர். இவர்கள் சந்தர்ப்பத்துக்கும், நிலைமைக்கு ஏற்ப பிழைப்பவர்கள். இது புலிக்கு எதிராகவும் நிச்சயமாக மாறும். இதை உலக வரலாறு எங்கேயும் பொய்யாக்கியது கிடையாது. உண்மையான தியாகங்கள் அனைத்தையும் இவர்களே முன்னணியில் நின்று புதைகுழியில் இட்டு நிரப்புவர்.

உண்மையான சமூக விரோதிகள்

நட்புடன் வசந்தன் மற்றும் டோண்டுக்கு

உங்கள் ஆதாரவக்கும் ஒத்துலைப்புக்கு மனமார்ந்த நன்றிகள். எந்தக் கருத்தையும் நன்றியுடன் தனது சொந்தப் பெயரில் அல்லது புனை பெயரில் போடுவது இட்டு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது எந்தளவுக்கு எவ்வளவு மாறுபட்ட கருத்தாக இருந்தாலும், அது மதிப்புக்குரியதே. முரண்பாடுகள் இன்றி பூமியும் சரி, பூமியின் இயற்கையும் சரி இயங்காது. அதாவது அது உயிர்வாழ முடியாது. இந்த இயற்கையில் உள்ள மனிதர்கள் எந்த மட்டில்.

குறிப்பாக வசந்தன் போட்ட கருத்தினை எனது பெயரில் போட்டபோது, அதில் உள்ள ஒரு தியாகத்தையே கேவலப்படுத்துவது தான். இந்த தியாகம் எதற்காக எப்படி செய்யப்படுகின்றது என்பது பற்றி எனக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்த போதும் கூட, தியாகம் செய்ய முன்வந்த உணர்வு மதிப்புக்குரியதாக உள்ளது. அதாவது தனிப்பட்ட அந்த மனிதன் தியாகம் செய்ய முன்வரும் போது, சுயநலன் சார்ந்த தனிமனித அரசியலையே கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது. தனிமனிதர்கள் தம்மை தியாகம் செய்யும் போது, அது உண்மையான சமூக விடுதலையை அடையாத வரை, அந்த தியாகம் அர்த்தமற்றதாக இருந்த போதும் கூட, இந்த தியாகத்துக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக போராடி தியாகத்தை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இந்த தியாகத்தை கொச்சைப்படுத்தி வருபவர்கள், தமது சுயநல அரசியல் பயன்படுத்தும் போது, தியாகங்களை மற்றவர் பெயரால் ஒட்டிக் கேவலப்படுத்துவது நிகழ்கின்றது.

இது சமூகத்தின் எல்லா துறைக்கும் பொருந்தும். கருத்தால் கருத்துக்கு பதிலளியுங்கள். மக்கள் மேல் நம்பிக்கை இருந்தால், மக்களை நேசித்தால், உங்கள் சரியான கருத்து வெற்றிபெறும். அதைவிடுத்து கருத்தைச் சொல்பவனை கொல்வது அல்லது இது போன்ற மற்றவன் பெயரால் ஆள் மாறட்டம் செய்பவர்கள சுத்த அயோக்கியர்கள். இங்கு எந்த நேர்மையும் கிடையாது. எந்த மனிதப் பண்பும் கிடையாது. ஒளித்து நின்று கல்லெறியும் கும்பலாகவேயுள்ளது.

இவர்கள் சமூகத்தில் இழிந்துபோன எந்தச் செயலையும் செய்யும் வகையாறுகள். சமூகத்தில் தம்மை அடையாளம் காட்டின் மதிபற்றவர்கள். சமூகத்தில் ஒளித்து நின்ற கொண்டு, சமூத்தையே பிறண்டித் திண்பவர்கள். சமூக பண்பாடுகள், சமூக கலச்சாரங்கள் எதுவுமற்ற உண்மையான சமூக விரோகள் இவர்கள்.

பி.இரயாகரன்16.10.2005