தமிழ் அரங்கம்

Saturday, January 30, 2010

வேதாளம் முருங்கையில் எறியது : மேயர் சிவகீதா மட்டுநகரில் இருந்து தலைமறைவு.


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள் வெளியாகிய மறுகணமே பிள்ளையானின் காட்டுமிராண்டித்தனம் மட்டுநகரில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. மட்டு மேயர் சிவகீதா இலக்கு வைக்கப்பட்டுள்ளார். மட்டுநகர் மாநகர சபை அலுவலகம், மேயரின் வீடு என்பன பிள்ளையானின் குழுவினரால் பெற்றோல் குண்டுகள் , கிரனேட்டுக்கள் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாக அவர் தனது முழுக்குடும்பத்துடனும் மட்டக்களப்பு நகரிலிருந்து தலைமறைவாகி பிறமாவட்டம் ஒன்றில் ஒழிந்துவாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேற்படி தாக்குதல் சம்பவங்களானது பிள்ளையானின் நேரடி வழிநடத்தலிலே இடம்பெற்றுள்ளது. மட்டுநகர் மாநகர சபை அலுவலகமும் அவரது வீடும் மட்டக்களப்பு நகரின் மிகவும் பாதுகாப்பான பிரதேசங்களில், சுற்றிவர பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைச் சாவடி அமைந்துள்ள பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. அத்துடன் தாக்குதலுக்குள்ளான மேயர் இல்லத்திற்கு பாதுகாப்பாக பொலிஸ் காவல்தடை போடப்பட்டுள்ளதுடன் 24 மணிநேரமும் அங்கு பொலிஸார் கடமையில் இருப்பர். அங்குவரும் வாகனங்கள் , ஆட்கள் சோதனையிடப்பட்டே உள்ளே அனுமதிப்படுவது வழமை.

தாக்குதல் நடாத்தப்பட்ட வித.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இலங்கை அரசு எதிர் கட்சிகளையும் ஊடகங்களையும் ஓடுக்கி, தேர்தல் மோசடிகளை பாசிசமயமாக்குகிறது

முறைகேடாகவே ஒரு தேர்தலை நடத்தி, தாமே அதில் வென்றவர்களாக இந்த அரசு தம்மைத்தாம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரின் "மனச்சாட்சிக்கு விரோதமாக" மோசடியை தமது வெற்றியாக தமது பாசிசம் மூலம் அறிவிக்க வைத்துள்ளது.


இந்த அரசு. தமது வெற்றியை மோசடி செய்ய தெரிவு செய்த இடம், மக்கள் அளித்த வாக்கினை தமக்கு ஏற்ப எண்ணிக்கையில் திருத்தியது தான். தேர்தலை எண்ணுவதையும், அதை அறிவிப்பதையும் தமது சொந்த பாசிசக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதை மோசடி செய்தனர். இங்கு என்ன நடந்தது என்பது, இன்னும் மர்மமாக உள்ளது. எதிர்க் கட்சியினரும், ஊடகவியலும் இதைச் சுயாதீனமாக சரிபார்க்கும் அனைத்து சுதந்திரத்தையும், தொடர்ந்தும் அரசு பாசிசம் மூலம் ஒடுக்கி வருகின்றது. தேர்தல் வாக்களிப்பை பொதுவாக அமைதியாக நடந்ததாக கூறுகின்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கைகள், வாக்கு எண்ணுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு எப்படி நடந்தது என்பதுபற்றி, இது வரை எதையும் அது முன்வைக்கவில்லை. தேர்தல் ஆணையாளர் முதல் தேர்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டனர். தேர்தல் எண்ணுவதை கண்காணித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரட்டப்பட்டனர். தேர்தலின் பின் எதிர்க்கட்சியினர், அவர்களின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றனர். சொத்துகள் சூறையாடப்படுகின்றது.

இந்தத் தேர்தலை சட்டத்தின் எல்லைக்குள்,......... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


விலைவாசி உயர்வை ரசிக்கும் கோமாளிகளின் வக்கிர ஆட்சி!

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் மும்பய் நகரில் நடந்த கூட்டமொன்றில், ""நமது கஷ்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டதாக'' அருள்வாக்கு செõன்னார். அவர் எந்த நேரத்தில் திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நாடெங்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து, பாமர மக்களை மயக்கம் போடவைத்தது.


கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போகிறது. இது, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத விலை உயர்வு என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே அச்சப்படுமளவிற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

ஒரு ரூபாய் அரிசியையும், 50 ரூபாய்க்கு அஞ்சறைப் பெட்டிச் சாமான்களையும் ரேஷனில் தருவதைக்காட்டி, விலைவாசி உயர்வுக்கு எதிராக மாபெரும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டதைப் போல தி.மு.க.அரசு காட்டிக் கொள்கிறது. அதே சமயம், அவரது கூட்டாளிகளோ இந்த விலை உயர்வை நியாயப்படுத்தும் திமிரோடு நடந்து வருகின்றனர். ""விலைவாசி உயர்ந்தால் அதன் பலன் விவசாயிகளுக்குத்தான் போய்ச் சேருகிறது'' எனத் திட்ட கமிசனின் துணைத் தலைவரும்............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, January 29, 2010

"ஜனநாயக" விரோத முறைகளில் வென்ற தேர்தலும், பாசிசமயமாக்கலும்

தேர்தலில் மகிந்தா வென்று விட்டார் என்பதும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக கூறுவதும், தேர்தல் என்றால் பலதும் பத்தும் இருக்கும் தான் என்று கூறி அதை நியாயப்படுத்துவதுமான போக்கு இன்று அதிகரிக்கின்றது. வென்றவர்களை ஆதரித்தும், அதைச் சார்ந்தும் நிற்கின்ற போக்கு, மக்களுக்கு எதிரான பாசிச மயமாக்கலை ஆதரிக்கின்ற ஒரு புதிய போக்கு தமிழ் சமூகத்தில் உருவாகி வருகின்றது.


கடந்தகாலத்தில் புலிகள் செய்ததை எல்லாம் நியாயப்படுத்தி, அதன் பாசிசமயமாக்கலை நிறுவனப்படுத்தியதும் இப்படித்தான். அன்று குதர்க்கமான நியாயப்படுத்தல் மூலம் தமிழ் சமூகத்தை பாசிச சமூகமாக மாற்றி, மனித இனத்தையே படுகுழியில் தள்ளினர். அதே பாணியில் இன்று மகிந்தாவுக்கு பின் பலர். புலியெதிர்ப்பு அணிகள் மட்டுமல்ல, நடுவில் நின்றவர்கள், அன்று புலியுடன் நின்றவர்கள் என்று மகிந்தா கட்டமைக்கும் பாசிசத்தை நியாயப்படுத்தும், ஒரு புதிய பாசிசக் கும்பல் உருவாகி வருகின்றது. காத்தடிக்கும் பக்கம் சாய்ந்து வாழும் சிந்தாந்தம், பாசிசத்தை நியாயப்படுத்துகின்றது.

இது புலம்பெயர் சமூகத்தில், மிக வேகமாக புரையோடி வருகின்றது. அன்று புலி இணையங்கள் புலியை நியாயப்படுத்தி, புலிப் பாசிசப் பிரச்சாரத்தை கட்டமைத்ததுடன் தமிழ்மக்களின் தலைவிதியை படுகுழியில் தள்ளினார்கள். இதேபோல்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தலித் முரசின் “வர்க்காஸ்ரம” வெறி!

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஆளும்வர்க்க விசுவாசத்தோடு கம்யூனிச எதிர்ப்புக்குக் கரசேவை செய்துவரும் ""தலித்முரசு'' இதழ், தனது நவம்பர் 2009 இதழில், ""அதிகாரம்+நக்சலைட்டுகள்= வர்ணாஸ்ரமம்'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, தனது வர்க்காஸ்ரம வெறியைக் காட்டியுள்ளது.


தலைமறைவாகச் செயல்பட்டுவரும் மாவோயிஸ்டு கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், இந்திய அரசால் தேடப்படும் "மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் பட்டியலில்' இரண்டாம் இடத்தில் இருப்பவரும், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் கிஷன்ஜி எனப்படும் கோடீஸ்வரராவ், ""தெகல்கா'' ஆங்கில வார இதழுக்கு (நவம். 21,2009) அளித்த நேர்காணலில், தனது கல்லூரி வாழ்க்கை, தனித் தெலுங்கானா மாநிலம் கோரி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டது, பின்னர் முற்போக்கு மாணவர் சங்கத்தைக் கட்டியமைத்தது, அன்றைய அரசியல் சூழ்நிலை, முற்போக்கான குடும்பப் பின்னணி, அவரது தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு காங்கிரசுக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருந்தது, பார்ப்பனர்களாக இருந்த போதிலும் தமது குடும்பத்தினர் சாதியத்தில் நம்பிக்கையின்றி நடந்து கொண்டது, தனது தந்தையாருக்கு சோசலிசத்தின் மீது நம்பிக்கை இருந்த போதிலும், ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இல்லாதது முதலானவற்றைப் பற்றிச் சுருக்கமாக விவரித்திருக்கிறார்.

இதில், தமது பெற்றோர்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, January 28, 2010

புலம்பெயர்ந்த தமிழ் தேசியம்


1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். “என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில் இருந்து பேச வந்திருக்கிறேன். எமது தேசத்தில் சிறி லங்கா சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது….” (இந்த இடத்தில் ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியே வீசுகின்றனர்.)

உலகமெங்கும் தமிழீழம் என்ற சொல்லை ஒலிக்க வைத்த அந்த குரலுக்கு சொந்தமானவர் கிருஷ்ணா வைகுந்தவாசன். பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து ...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


சிறுபான்மை மக்களின் எதிர்ப்பு அரசியலும், பிற்போக்கு சக்திகளும்

புலம்பெயர் நாட்டில் புலி – புலியெதிர்ப்பு அரசியலாக, அது சரத் - மகிந்தாவுக்கு பின் செல்லும் அரசியலாக, ஆய்வாக, சிந்தனையாக மாறுகின்றது. மகிந்தா வெற்றி பெற்ற நிலையில், அதுவே சரணடைவு அரசியலாக மாறுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்க செயலாற்ற, எந்த மாற்று சிந்தனையும், அரசியலும் கிடையாது. மாறாக மக்களின் எதார்த்தத்தை நிராகரிக்கின்றதும், தங்கள் குறுக்கிய குதர்க்க விளக்கங்களுடன் அரசியல் பச்சோந்தித்தனத்தையே விதைக்கின்றது.


சிறுபான்மை இனங்கள் எதற்காக இந்த அரசை எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் தமிழ் தேசியத்தை கோரியல்ல. புலிகளை ஆதரித்தல்ல. மாறாக தங்கள் மீதான இன ஒடுக்குமுறையை எதிர்த்து வாக்களித்தனர். இதுதானே இன்றைய எதார்த்தம்.

சிறுபான்மையான தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்து இந்த, அரசு இயங்குகின்றது. பெரும்பான்மை மக்களின்; அரசாக தன்னைக் காட்டி, பெரும்பான்மை மக்களையும் ஒடுக்குகின்றது.

இப்படி சிங்கள இனவாதத்தை சார்ந்த நின்று, சிறுபான்மை மக்கள் மேல் கட்டமைக்கும் பிளவுவாத இனவாத அரசியலை எதிர்த்துதான், சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர். இது தானே உண்மை.

சிறுபான்மை ...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!

அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், ""ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு'' எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.


ஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் ""நேடோ'' கூட்டாளி நாடுகளும், தமது சபதங்களை நிறைவேற்றவும் வழியின்றி, அதே சமயம், ஆப்கானில் இருந்து கௌரவமாக வெளியேறவும் விருப்பமின்றி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றன.

இப்படிபட்ட தருணத்தில், ஆப்கானுக்கு மேலும் 30,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அதனுடன், ""இன்றிலிருந்து 18 மாதங்கள் கழித்து, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப் போவதாகவும்'' ஒபாமா அறிவித்திருக்கிறார். இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, January 27, 2010

புலம்பெயர்வும்-இடம்பெயர்வும்


அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். நான் சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர் நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப் படுகிறேன். எனக்குத் தரப்பட்ட தலைப்பு இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு. அன்பர்களே முதலில் இடம்பெயர்வு என்ற பதத்தை எடுப்போமாக இருந்தால் இலங்கையில் தமிழர்களாக இருந்த தமிழர்களோடு இருந்த ஒருசாரார் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முதன் முதலில் இடம்பெயர்வுக்கு உள்ளானார்கள். நண்பர்களுக்கு நான் இதை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன். முற்றுமுழுதாக தமிழர்கள் வாழுகின்ற யாழ்ப்பாண மண்ணிலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை மக்கள் உயர்சாதி என்று சொல்லப்படுபவர்களால் பலதடவை இடம்பெயர்வுக்கு வற்புறுத்தப்பட்டார்கள். பலர் மனபங்கப்படுத்தப்பட்டார்கள். பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டார்கள். விசேடமாகப் பெண்கள்.

தோழர் தங்கவடிவேல்

பலரது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோல ஓரிடத்தில் நிரந்தரமாக வாழுகின்ற தங்களது அடிப்படை உரிமையை இழந்து...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


மகிந்தாவை மீண்டும் ஜனாதிபதியாக்கியது எது?

இலங்கை மக்கள் அனுபவிக்கும் சுபிட்சமான வாழ்வா!? இல்லை. வேறு தெரிவு எதுவும் இல்லை என்பதாலா!? இல்லை. அப்படியாயின் எது? இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட சிங்கள இனவாதம்தான், மீண்டும் மகிந்தாவை வெல்ல வைத்துள்ளது. சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிங்கள இனவாதம் தோற்கடிக்கப்பட, சிறுபான்மை இனங்கள் அதிகமாக வாழும் சிங்களப் பகுதிகளில் விளிம்பில் வெற்றி பெற்று, முழு சிங்களப் பகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார் மகிந்தா.

குடும்ப சர்வாதிகாரம் பாசிசம் கொப்பளிக்கவே, இனவாதியாக மாறி தமிழ் பகுதிகளில் வாக்களிப்பை பல வழிகளில் தடுத்து நிறுத்திய மகிந்தா, வெற்றியை தக்க வைக்க முனைந்தார். யாழ்குடாவில் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்தி வாக்களிப்பை தடுத்தது முதல், வன்னியில் போக்குவரத்தை முடக்கியதுடன், முழுத் தமிழ் மக்களையும் தங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து தமிழ்மக்கள் வாக்களிப்பதைத் தடுத்தனர்.

இலங்கை முழுக்க இராணுவத்தை கொண்டும், அரச அதிகாரத்தைக் கொண்டும் தேர்தலை முறைகேடாக்கி, தனது வெற்றிக்குரியதாக மாற்றினார். அனைத்து ஜனநாயக விரோத வழிமுறைகளையும் கையாண்டு, தன் வெற்றியை உறுதி செய்து கொண்டார்.

புலிகள் எ.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, January 26, 2010

சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.

இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


குடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்

தேசப்பற்றோடு கீதம் பாடெனெச் சொல்கிறது…...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, January 25, 2010

செய்திக் குறிப்புகள் (தை – 2010)

யாமக்குச்சி (Tsutomu Yamaguchi) 16.03.1916ல் ஜப்பானில் பிறந்திருந்தார். ஒரு பொறியியல் வரைபட உருவாக்கக்காரனாக ‘மிக்சுபுசி’ கம்பனியில் கப்பல் கட்டுமான பகுதிப் பிரிவில் கடமையாற்றி வந்தார்.

அக்கம்பனியின் நிர்வாக வேலைகளின் நிமித்தம் அவர் நாகசாகியில் இருந்து கிரோசிமாவுக்கு வந்திருந்தார். தனது 3 மாதகால இப்பணியை முடிப்பதில் மும்முரமாக இருந்தவேளை: 1945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி சுமார் காலை 8.15 மணியளவில் அமெரிக்காவின் பி -29 விமானம் அணுக்குண்டை வீசியது. இவர் இருந்த இடத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மைல் தொலைவில் இருந்த ‘லிற்ரில் போய்’ நகரத்தின் மீது அக் குண்டுவந்து வீழ்ந்தது. 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.

அதிஷ்டவசமாக யாமக்குச்சி உயிருடன் தப்பினார். யாமக்குச்சியின் தோல் பட்டையில் ஏற்பட்ட பலத்த எரிகாயங்களுடன் அடுத்தநாள் இரவு புகைவண்டியை பிடித்து நாகசாகி ஆகிய தனது நகரத்துக்குத் திரும்பியிருந்தார். மருத்துவனையில் அவரின் அணுவீச்சு எரி காயங்களுக்கு ‘பண்டேஸ்’ போடப்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


ஜலதோஸ்ஷம் பிடித்த போனாக்கள்..

போனாக்களுக்கு ஜலதோஸ்ஷம்
'டிகிரியில்'
எகிறிக் காய்கிறது
நூற்றி எட்டில் (108 இல்).
கசாயமோ,
குடிணீரோ குடித்தும்
குலையாத குலைப்பன்.

தேர்தல் 'வைரஸ்'
பரப்பிய நோயாம்.

இன்றும் தான் பார்த்தேனே,
அடுக்கடுக்காய் கட்டில் .....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


சுயாதீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார். ஹோமாகமவில் இவரின் வீட்டுக்கு அருகில் இலக்க தகடு அற்ற வெள்ளை வான் நிறுத்தப்பட்டிருந்ததை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

ஹெக்நேலியகொட ராஜகிரியவில் உள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகத்தில் இருந்து நேற்றிரவு 9 மணியளவில் வீட்டுக்கு சென்றுக்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்



2005ம் ஆண்டு வடக்கில் தேர்தலைப் பகி~;கரிக்க மகிந்த ராஜபக்~, விடுதலைப் புலிகளுக்கு 180 மில்லியன் ரூபாவை வழங்கிய தகவல்களை டிரான் அலஸ் வெளியிட்டார்

2005ம் ஆண்டு தேர்தலைப் பகி~;கரிப்பதற்காக 180 மில்லியன் ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதுடன், அதனை பசில் ராஜபக்~ தனது அலுவலகத்தில் வைத்தே எமில்காந்தனிடம் வழங்கியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாவலயில் உள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்~ கேட்டுக்கொண்டதற்கமையே இந்தப் பணம் கொடுக்கப்பட்டது.

2002ம் ஆண்டில் தாம் முதலில் எமில் காந்தனைச் சந்தித்ததாகவும், ஜயலத் ஜயவர்தனவினால் அவர் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் எமில்காந்தன் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றி வந்ததாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார்.

அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்~, விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள ஒருவரை தேடித்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன் அவரிடம் தனது சகோதரர் பசில் ராஜபக்~வை அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டதாக அலஸ் தெரிவித்துள்ளார்.

எமில் – பசில் முதல் சந்திப்பு

இதன்பின்னர், தாம் எமில்காந்தனை பசில் ராஜபக்~விற்கு அறிமுகப்படுத்தியதுடன் அவர்கள் இருவரும் தமது அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்




தேர்தலை நிராகரி! புரட்சி செய்!

புரட்சி என்பது "ஆயுதப் போராட்டமல்ல". ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவங்களில் ஒன்று. மக்கள் தம்மைத்தாம் புரட்சிகர கருத்துகள் மூலம் திரட்டிக் கொள்வதுதான், புரட்சியின் உள்ளடக்கம்.

மக்களை அச்சுறுத்துவதற்கு மக்கள் விரோதிகள், புரட்சி என்றால் அது "ஆயுதப் போராட்டம்" என்கின்றனர். இப்படி மக்களை அச்சுறுத்தி, மக்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர்.

தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்றால், தேர்தல் பற்றிய அறிவை விருத்தி செய் என்று அர்த்தம். இங்கு புரட்சி என்பது மனிதன் தன் வாழ்வையும், தன்னைச் சுற்றிய நிகழ்வையும் புரிந்து கொள்ளும் பகுத்தறிவு சார்ந்தது. இந்த பகுத்தறிவு புரட்சிகரமான சிந்தனை முறையாக, அதுவே வாழ்வியல் நடைமுறையாக, சமூகம் சார்ந்த செயல்முறையாக மாறுவது தான், புரட்சியின் உள்ளடக்கம்.

இந்த வகையில் சிந்திப்பது, செயல்படுவது தான் சரியான ஒரு அரசியல் நடைமுறை. இன்று இலங்கையில் இதை செய்யும் வகையில்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, January 24, 2010

24.01.2010 – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

நாளை மறுநாள்…..

நாளை மறுநாள் இலங்கை மக்கள் ஓர் ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பொன்றை நடாத்தவுள்ளார்கள். இருபதுபேர் வரையில் போட்டியிடுகின்றனர். இவர்களில் சரத் – மகிந்தா இருவருமே முன்னணியில் உள்ளார்கள்.

இலங்கையில் ஜனநா(ண)யமான ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிற்கு மக்கள் வாக்களித்ததாக வரலாறு இல்லை. லஞ்சம் ஊழல் மோசடி தில்லுமுல்லுகளுக்கூடாகவே, ஜே. ஆர். முதல் மகிந்தாவரை வந்துள்ளார்கள். இம்முறைத் தேர்தல்கூட இதற்கு விதிவிலக்கல்ல. நீதியான, சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழல் அற்றுப்போயுள்ளது. தான் பதவியில் நீடிப்பதில் பயனில்லை என்கின்றார் தேர்தல் ஆணையாளர். அத்துடன் கடந்த காலங்களைப் போலல்லாது, இத்தேர்தல் தேசிய சர்வதேச ரீதியில் பெரும் பொருளாக்கப்பட்டு, இரு முகாம்களாகியுள்ளது. இருமுகாமிலும் நிற்பவர்கள் கூட மக்கள் விரோத ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கிலான ஓர் நாணயத்தின் இருபக்கங்களே.

இருவரும்; “நிறைவேற்று அதிகாரம்” கொண்டதைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களால் இயன்ற சகலதையும் செய்கின்றார்கள். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதிமுறை, “ஆணைப் பெண்ணாகவு...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


வாக்குச் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க", "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?"

புதிய ஜனநாயகக் கட்சியின் மதியுரைஞரும் தத்துவ வழிகாட்டியுமான சிவசேகரம், ஒரு பச்சோந்திக் கவிதை மூலம் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு உங்களை வழிகாட்டுகின்றார். தேர்தலை நிராகரி!, புரட்சி செய்! என்று கோசத்தின் கீழ், இவர்கள் மக்களை வழிகாட்டுவது கிடையாது. அதற்காக இவர்கள் கவிதை எழுதுவதும் கிடையாது. "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" எப்படி என்ற கவலையுடன், அதை வழிகாட்டி கவிதை எழுதுகின்றார்.


இந்தத் தேர்தல் எப்படிப்பட்டது? யாருக்கு எப்படி எந்த வகையில் சேவை செய்கின்றது என்பதை, தேர்தலை நிராகரி என்று கூறி விளக்குவது கிடையாது. இவர்கள் முன்பு தேர்தலில் நின்றவர்கள்;. இதனால் அரசியல் பச்சோந்தித்தனம் தான், இவர்களின் அரசியல் உள்ளடக்கமாகி விடுகின்றது. தேர்தல் என்னால் என்ன?, அதில் வாக்கு என்றால் என்ன?, என்பதைப் புரிந்துகொண்டு, அதை மற்றவர்களுடன் விவாதித்து, கூட்டாக தேர்தலை நிராகரிப்பது தான், புரட்சிகரமான செயல் சார்ந்த நடைமுறையாகும்.

சமூக அறியாமையில் இருந்து மீள்வதும், அதற்கு உதவுவதும், மற்றவர்களுடன் அதை பகிர்வதுதான் புரட்சிகரமான செயல். தேர்தலை நிராகரி! புரட்சி செய்! இதுதானே சரியான அரசியல் கோசமாகும்.

இதைச் செய்யமால் "சீட்டைச் .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்

"ஆபரேசன் கிரீன் ஹண்ட்' (காட்டு வேட்டை) என்ற பெயரில் மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்தும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.


சுமார் ஒரு லட்சம் போலீசு மற்றும் துணை இராணுவப் படையினருடன் சல்வாஜுடும், ஹர்மத் வாகினி, நாகிரிக் சுரக்சா சமிதி, சன்லிட் சேனை முதலான அரசு ஆதரவு பெற்ற கூலிப் படைகளும் மாவோயிஸ்டுகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிராகக் களத்தில் நிற்கின்றன. ""இராணுவம் நேரடியாகக் களத்தில் இறங்காது'' என்று கூறிக் கொண்டே சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராக ரூ. 7,300 கோடி நிதி ஒதுக்கி, இராணுவ ஹெலிகாப்டர்கள் துணையுடன், இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்தப் போர் நடத்தப்படுகிறது. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப் படைகளின் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் நசுக்குவதற்கென்றே எல்லா வகையான ஆள் தூக்கிக் கருப்புச் சட்டங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ""இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி'' என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், சட்டிஸ்கர் மாநில டி.ஜி.பி விசுவரஞ்சன்.

இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இதுதான்: தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அற்புதமான அரிய .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்