தமிழ் அரங்கம்

Saturday, August 16, 2008

மிதக்கும் சிறைச்சாலைகள்: அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய முகம்

இன்றுவரை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாத 26 ஆயிரம் பேர் இரகசியச் சிறையில் இருப்பதாய் அமெரிக்க அரசு சொல்லி இருப்பினும், 2001 முதல் கைது செய்யப்பட்டவர்கள் 80 ஆயிரம் என்கிறது மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை. அந்த 80 ஆயிரம் பேரும் எங்கே உள்ளனர்? அவர்களின் கதி என்ன? என்பதை அமெரிக்கா முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் எனும் குரல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி யுள்ளது. உலகின் கொடூரமான பயங்கரவாதி அமெரிக்காதான் எனும் உண்மையும் பலருக்குப் புரியத் தொடங்கி யுள்ளது.
வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்களை அந்தமான், மலேயா போன்ற கண்காணாத தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள், அன்றைய காலனியாதிக்க வாதிகள். அவ்வீரர்களை தாய்நாட்டில் இருந்து நிரந்தரமாய்ப் பெயர வைப்பதன் மூலம் எதிர்ப்புணர்வைக் கருகச் செய்து விடலாம் என்று கணக்குப் போட்டனர். அன்று மட்டுமல்ல, இன்றும் ஆளும் வர்க்கங்கள் உலகெங்கிலும் இதே போன்ற பல ஒடுக்குமுறைகளைத்தான் ஏவி வருகின்றன.

Friday, August 15, 2008

தரகு வேலையே தேசிய அரசியல் : அணுசக்தி ஒப்பந்ததின் பின்னே இந்தியத் தரகு முதலாளிகளின் நலனும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புட்டு வைத்துவிட்டார், அமர்சிங்.

டெல்லியில் அமெரிக்கத் தூதர் அளித்த விருந்தில் அமர்சிங் கலந்து கொண்டதும் அவரை தூதர் பாராட்டியதும் பத்திரிகையில் வெளிவந்த உண்மைச் செய்திகள். அனில் அம்பானியின் விருப்பத்திற்காக, ஒரு அரசியல் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டை திடீரென்று மாற்றிக் கொள்ள முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். மக்களிடம் அரசியல் பேசி, அணிதிரட்டி, வசூல் செய்து கட்சி நடத்துவது எல்லாம் அந்தக்காலம். இப்போது பெரும் நிறுவனங்கள் விளம்பரம் செய்து தமது முத்திரைப் பொருட்களை விற்பது போல, அரசியல் கட்சிகளும் "கார்ப்பரேட்'' நிறுவனங்களைப் போலச் செயல்பட்டு அரசியலை விற்பனை செய்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் கட்டமைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம்......
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற உடனேயே மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் பலர் கைகுலுக்கிப் பாராட்டித் தள்ளினார்கள். ""டைம்ஸ் நவ்'' ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ""சிங் இஸ் கிங்'' என்ற தலைப்புப் பாடலை ஆரவாரத்துடன் ஒளிபரப்பியது. சூழ்நிலையின் தாக்கத்தால், தானே ஒரு மிகப்பெரும் தலைவர் என்ற மாயை கூட மன்மோகன் சிங்கிற்குத் தோன்றியிருக்கலாம். ஆனாலும் அனல் பறக்கும் விவாதம் நடந்த இந்த நாடாளுமன்றக் கூத்துக்களுக்குப் பின்னால், அதன் முக்கியமான சூத்திரதாரிகள் இருவர் புன்னகைத்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங்கிற்கும், ஏன் எதிர்க்கட்சிகளுக்கும் கூடத் தெரியும்.

அவர்கள்தான் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்பானிகள்! அண்ணன் முகேஷ் அம்பானியும், தம்பி அனில் அம்பானியும்தான். செத்துப்போன பெரிய அம்பானியின் சுவடுகளில் அரசியலைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். திருபாய் அம்பானி சட்டங்களை ஏமாற்றித் தொழிலை விரிவு படுத்தினார். இந்திரா, ராஜீவ் முதலான தலைவர்களுக்குத் தேர்தல் நிதியை அள்ளிக் கொடுத்து ஆதாயம் அடைந்தார். பத்திரிகைகள் மற்றும் அதிகார வர்க்கத்தை ஊழல்படுத்திக் காரியங்களைச் சாதித்துக் கொண்டார். அன்றாவது திருபாயின் மோச டிகளை ""மோசடிகள்'' என்று கூற முடிந்தது. இன்று அப்படி யாரும் அழைப்பதில்லை என்பதால், இளைய அம்பானிகளின் தொழில் துறை அயோக்கியத்தனங்களுக்கு அளவில்லை....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, August 14, 2008

அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் விரும்புவது என்ன?

அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் விரும்புவது என்ன? தமது சொந்த பொருளாதார -இராணுவ மேலாண்மையைத் தான். இதுதான் நெருக்கடியின் மையம். தாம் அல்லாத எந்த நாடும், சுதந்திரமாக செயற்படக் கூடாது என்பதே, இவர்களின் உலக சர்வாதிகாரமாகும்.

தம்மை விட மற்றைய ஏகாதிபத்தியங்கள், செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கக் கூடாது என்பது தான், இவர்களின் உலக ஒழுங்காகும். இந்த வகையில் தான் அணுவாயுதத்திலும், தமது மேலாண்மையை பாதுகாக்க விரும்புகின்றது. இந்தியா போன்ற நாடுகள் மேலான அணு மேலாதிக்கத்தை பெறுவதைத் தடுக்க, இவர்கள் திணிப்பது அடிமை ஒப்பந்தங்களையே.

இப்படி தமது இராணுவ மேலாண்மை மூலமும், பொருளாதார மேலாண்மை மூலமும் உலகை அடிமைப்படுத்தி ஆள முனைகின்றது ஏகாதிபத்தியங்கள். தமக்கு ஏற்ற பொம்மை ஆட்சிகளை நிறுவுகின்றன. இதற்கேற்ப இலஞ்சம் கொடுத்தும், கவிழ்ப்புகளைச் செய்தும், உள்நாட்டு முரண்பாடுகளை உருவாக்கியும், தமது பொம்மை ஆட்சிகளை நிறுவுகின்றனர். இதன் மூலம் உலகம் தழுவிய அடிமை ஒப்பந்தங்களைச் செய்கின்றனர்.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, August 13, 2008

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பனிப்போர், வெளிப்படையான ஏகாதிபத்திய யுத்தங்களாகின்றது

ஏகாதிபத்திய யுத்தங்கள் வெளிப்படையாகவே வெடித்துக் கிளம்புகின்றது. அன்று யூக்கோசிலோவோக்கியாவை அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் உடைத்து அதைச் சிதைத்த போது, அது வெளிப்படையற்ற ஏகாதிபத்திய பனிப்போராகத் தான் அம்பலமாகாது அரங்கேறியது.

இந்த யுத்தங்களுக்கு காரணங்கள் என ஏகாதிபத்தியங்கள் எதைக் கூறினாலும், இந்த யுத்தத்தின் அடிப்படையான நோக்கம் உலகை தமக்கு இடையில் மீளப் பங்கிடுவதுதான். ஏகாதிபத்திய பொருளாதார நலன்கள் தான், இந்த யுத்தங்களுக்கு அடிப்படையான காரணமாகும். அதாவது உலகை சூறையாடி மூலதனத்தை குவித்து வைத்திருக்கின்ற கொள்ளைக்காரக் கும்பலின் நலன்கள் தான், இங்கு யுத்தமாகின்றது. செல்வத்தை பறிகொடுத்த மக்கள், மீளப் பலியிடப்படுகின்றனர்.

தேசபக்தி, ஜனநாயகம், சுதந்திரம் என எல்லாம், மூலதனத்தின் தேவைக்கும் நலனுக்கும் அப்பாற்பட்டதல்ல. இதற்கு ஏற்ப நாடுகளைப் பகிர்வதும், கவிழ்ப்பதும், தான் ஏகாதிபத்திய யுத்த தந்திரம். இந்த யுத்த தந்திரம் தான், அமைதி சமாதானம் பற்றி அனைத்து பீற்றல்களின் பின்னுள்ள நலனாகும். உலக மக்களைத் தமது சந்தைக்கு அடிமைப்படுத்த, சந்தைகளை கைப்பற்றுவதும் இதற்கு ஏற்ப இராணுவ மண்டலங்களை உருவாக்குவதும் தானே, ஏகாதிபத்தியத்தின் நலன்களாகும். ஜனநாயகம், சுதந்திரம் எல்லாம் ...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

வென்றது மாணவர் போராட்டம்! வீழ்ந்தது கல்லூரி முதல்வர் கொட்டம்!

கடலூரில், பெண்களுக்காக இயங்கும் ஒரே கல்லூரியாக, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி உள்ளது. தொன்மை வாய்ந்த இக்கல்லூரியில் தொடக்கத்தில் 400500 பேராக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, தற்போது 2000 பேராக உயர்ந்துள்ளது. இதற்கேற்ப இக்கல்லூரியில் அடிப்படை வசதி மற்றும் போதிய அளவுக்குப் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இல்லை. இதுபற்றி மாணவிகளும், ஆசிரியர்களும் கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட்டு, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவ்வப்போது போராடியும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், இக்கல்லூரியில் சேரும் மாணவிகளிடம் கட்டாய நன்கொடை பெறுவதோடு, மேசைநாற்காலி என அன்பளிப்புகளைத் தரச் சொல்லி கல்லூரி முதல்வர் வள்ளி கொட்டமடித்து வந்தார். சாதியத் திமிர் பிடித்த இவர், தாழ்த்தப்பட்ட பிற்பட்ட மாணவிகளை இழிவுபடுத்துவதோடு, தன்னை செட்டிநாட்டு ஜமீன் பரம்பரை என்றும், "அண்ணன்' மு.க. அழகிரிக்கு நெருக்கமானவர் என்றும், தன்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் கொக்கரித்துக் கொண்டிருந்தார். .... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, August 12, 2008

நேபாளம்: எதிர்ப்புரட்சி துரோகிகளின் இடைக்கால வெற்றி!

நேபாள அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக அந்நாட்டு நேபாளி காங்கிரசு, நேபாள ஐக்கியக் கம்யூனிச (மார்க்கியலெனினிய) கட்சி மற்றும் நேபாளத்தில் உள்ள தேசிய சிறுபான்மை இனமான மாதேசி மக்களதிகார அரங்கம் ஆகிய பிற்போக்கு, சமரச, இனவாதக் கட்சிகள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டு, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டன.

இச்சம்பவங்களை யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம் என்றோ, முன்னேறி வந்த நேபாளப் புரட்சிக்கு மிகப் பெரிய தோல்வி என்றோ கருத முடியாது. நேபாளப் புரட்சியின் நீண்ட பாதையில் செயல்தந்திர ரீதியிலான ஒரு பின்னடைவு என்று சொல்லலாம். புரட்சி என்பதே சமநீர்ப் பயணமோ, நெளிவு சுழிவுகளற்ற நேர்கோட்டுப் பாதையில் முன்னேறக் கூடியதோ அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மைக் கட்சியாக நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டுக் கட்சி வெற்றி பெற்றவுடன், ""உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் மேலும் பல சவால்களை எதிர் கொண்டு முறியடித்து நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது'' என்று எழுதினோம். நேபாளப் புரட்சிக்கு எதிராக இப்போது உள்ளேயிருந்து எழுந்துள்ள அரசியல் சவால்தான் இந்தப் பிற்போக்கு, சமரச மற்றும் இனவாதக் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணியும், அது அடைந்துள்ள அரசியல் வெற்றியும் ஆகும்.

கடந்த ஏப்ரலில் நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில் தொகுதிவாரிப் பிரதிநிதி முறையில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி, வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநதிகள் நியமனத்துக்குப் பிறகு, அரசியல் நிர்ணய சபையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை; என்றபோதும் மொத்தம் 601 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த உரிமையில், தனது கட்சியின் பிரதிநிதியைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கம் அமைக்கவும், மலை மக்கள், சமவெளி மக்கள், பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் ஆகிய நான்கு பிரிவினரிடையே குடியரசுத் தலைவர், துணைத்தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய நான்கு உயர்நிலை அரசியல் சட்ட அமைப்புப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளவுமான திட்டத்தை நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி ....... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, August 11, 2008

இந்திய அணு உலைகள் பாதுகாப்பு ஒப்பந்தம் தங்க முலாம் பூசிய விலங்கு! : சர்வதேச அணுசக்தி முகாமை, இந்திய அணுசக்தித் துறையை அமெரிக்காவிற்காகக் கண்காணிக்கும

மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போயிருந்தால், இந்தியாஅமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு (123 ஒப்பந்தம்) என்ன நேர்ந்திருக்கும்? அவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் கால தாமதம் ஏற்பட்டிருக்குமேயொழிய, அவ்வொப்பந்தம் காலாவதி ஆகிப் போயிருக்காது. ஏனென்றால், பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் காங்கிரசு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

அதனால்தான், மன்மோகன் சிங், தனது ஆட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்துவிட்டதைப் பற்றிக் கூட கவலைப்படாமல், இந்தியாவிற்கும், சர்வதேச அணுசக்தி முகமைக்கும் இடையே முடிவாகியுள்ள கண்காணிப்பு ஒப்பந்தத்தை, அம்முகமையின் இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற கடந்த ஜூலை 18 அன்று அனுப்பி வைத்தார். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, இதே தேதியில்தான் (ஜýலை 18, 2005) அமெரிக்காஇந்தியா இடையே இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது; அவ்வொப்பந்தத்தின் மூன்றாமாண்டு நிறைவு நாளில், இந்தியாவிற்கான அணுஉலை கண்காணிப்பு ஒப்பந்தத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்ததன் மூலம், 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை எள்ளி.... ...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 10, 2008

இந்துமத வெறியர்களின் சதித்தனம் மண்ணைக் கவ்வியது

இந்தப் பனிலிங்கம் மற்றும் அதைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பு, பேடாகுந்த் பகுதியில் வசிக்கும் முசுலீம் குடும்பங்களிடம் தான் இருந்து வந்தது. 1990களில் காசுமீரில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வெடித்த பிறகு, அதற்கு எதிரான ஆயுதமாக, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வாய்ப்பாக, இந்த யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோடு, அரசே ஏற்பாடு செய்து நடத்தும் யாத்திரையாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, ஹஜ் யாத்திரையைப் போன்று, அமர்நாத் யாத்திரையை புனிதப்படுத்தும் தில்லு முல்லைச் செய்தது; செய்தும் வருகிறது. பார்ப்பனர்கள் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிடும் விநாயகர் ஊர்வலமாக மாற்றப்பட்டதைப் போல, அமர்நாத் யாத்திரை, காசுமீர் முசுலீம்களுக்கு எதிரானதாக உருமாற்றப்பட்டது. பக்தி, இந்து பாசிசமாகியது.

கரசேவைக்குத் தொண்டர்களைத் திரட்டி அனுப்புவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கும் "இந்துக்களை'த் திரட்டி அனுப்புவதை ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே செய்து வருகிறது. இதனால் பனிலிங்கத்தை வணங்க வரும் "பக்தர்களின்' எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே செல்லத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காரணமாகக் காட்டி, இரண்டு வாரமே நடந்து வந்த அமர்நாத் யாத்திரையின் காலஅளவு, ஒரு மாத காலமாக நீட்டிக்கப்பட்டது. யாத்திரையை நிர்வகிப்பது என்ற பெயரில் தனியாக வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக ஜம்முகாசுமீர் மாநில ஆளுநர் இருப்பார் என்றும்; அதே சமயம் ஆளுநர் இந்துவாக இருந்தால் மட்டுமே வாரியத்தின் தலைவராக முடியும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டன. முசுலீம்களின் மேற்பார்வையிலும்; உதவியோடும் நடந்து வந்த அமர்நாத் யாத்திரையை அவர்களிடமிருந்து பறித்து, இந்துமயமாக்கும் சதிகள் 1990க்குப் பிறகு ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டன.