தமிழ் அரங்கம்

Saturday, October 27, 2007

பாரிஸ் தலித் மாநாட்டின் தவறான போக்கை அம்பலப்படுத்துதல்

பி.இரயாகரன்
27.10.2007


பாரிஸ் தலித் மாநாடு உள்ளடக்க ரீதியாக தவறான அரசியல் வழியைக் கொண்டு இருந்தது. எமது சரியான அனுபவம் மூலம், தலித்திய உணர்வை சுட்டிக்காட்டுவதன் மூலம், இந்த தவறை உணர்த்த விரும்பினோம். அதை கொள்கை அளவில் ஏற்க வைத்தோம்.

இந்த வகையில் தலித் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் அரசியல் ரீதியாக கடைப்பிடித்த சூக்குமத்தை, உடைத்தெறிந்தோம். சந்தர்ப்பவாதமாக நழுவும் விலாங்குத்தனத்தை உடைத்துப்போடுவது அவசியமாக இருந்தது. புலியெதிர்ப்பே தலித்தியம், என்ற மாயையை, அது சார்ந்த ஒருங்கிணைவை உடைத்துப் போட வேண்டியிருந்தது. எமக்கு கிடைத்ததோ 5 நிமிடங்கள் தான். நான்கு பிரதானமான விடையங்களைக் கவனத்தில் கொண்டோம்.

1. தலித் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், தாம் எந்த அரசியலும் அற்றவர்கள் என்றனர். இதையே அவர் ரீ.பீ.சி.யிக்கு வழங்கிய பேட்டியிலும் சொல்லியிருந்தார். அதையே அன்றைய கூட்டத்திலும் சொன்னார். இந்த விடையம் கூட்டத்தில் மற்றவர்களால் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவர் தாம் எந்த இயக்கத்துடனும் இல்லை என்பதைத் தான், இப்படி சொன்னதாக கூறினார்.

இந்த இரண்டு வாதத்திலும் உள்ள சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக கொண்ட தெளிவின்மையையும், நழுவும் சூக்குமத்தையும் உடைத்தோம். இந்த வாதமே சந்தர்ப்பவாதம் மட்டுமின்றி, சுற்றிவளைத்து சில புலியெதிர்ப்பு பிரிவை சமாளிக்கின்ற உத்தி என்பதை அம்பலப்படுத்தினோம்.

மாறாக நேரடியாக இதை அம்பலப்படுத்தி, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினோம். இன்றுள்ள எந்த இயக்கமும், எந்த அரசியல் கட்சியும், எந்த அரசும் தலித் மக்களுக்கு எதிரானது. அது சாதிய ஒழிப்பைச் செய்யாது. தலித் மக்களின் பிரச்சனையை தீர்க்காது. மாறாக அதை பாதுகாப்பவை தான். இதை தெளிவாக அறிவிக்கத் தவறின் தலித் மாநாடு கொள்கை ரீதியான சந்தர்ப்பவாதமாகும். தலித் மாநாடு அரசியல் ரீதியாக தன்னை அறிவிக்க வேண்டியிருந்தும், சந்தர்ப்பவாதத்தால் மூடிமறைத்ததை சுட்டிக் காட்டினோம்.

எனது இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, தலித் ஏற்பாட்டாளர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த எல்லைக்குள் தலித் மக்கள் தமது முதல் வெற்றியை, தலித் ஏற்பாட்டாளர்களிடம் இருந்து கொள்கையளவில் பெற்றனர்.

2. தலித் மக்களின் இரண்டாவது வெற்றி என்பது, புலியெதிர்ப்பு ஜனநாயகம் பேசுபவர்கள் சாதியை ஓழிக்க முன்வரமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டது தான். எமது இரண்டாவது தெளிவுபடுத்தல் இதுதான். புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, ஆதிக்க சாதியினரின் ஜனநாயகம் தான். அவர்கள் கூட தலித் மக்களின் பிரச்சனையை தீர்க்கமாட்டார்கள். சாதியை ஒழிக்க முன் வரமாட்டார்கள். சாராம்சத்தில் தலித்திய ஒடுக்குமுறையை மேலிருந்து பாதுகாப்பவர்கள். இதனால் தான், தலித் மாநாடு தனியாக நடக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினேன். பலத்த கரகோசத்துடன், இந்தக் கருத்தை இம் மாநாடு ஏற்றுக்கொண்டது. தலித் ஏற்பாட்டாளர்களும் எனது இந்தக் கருத்தை அங்கீகரித்தன் மூலம், தலித் மக்களின் இரண்டாவது வெற்றி கொள்கை ரீதியாக உறுதி செய்யப்பட்டது.

3. தலித்தியம் எதிர் தேசியம் என்ற மையவாதம், அங்கு தீர்மானகரமாக தகர்க்கப்பட்டது. பலரும் இதுவே தமது தலித் மற்றும் பாசிச ஒழிப்பு நிலையாக கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இதை சுக்கு நூறாக்கிய எமது வாதம், கேள்விக்குள்ளாகவில்லை.

புலியெதிர்ப்பு சமன் தலித் என்ற அடிப்படையில் தான், எல்லா இயக்க புல்லுருவிகளும் அங்கு குழுமினர். அங்கு அதை நிறுவத் தான் முனைந்தனர். தலித் மக்களை ஒடுக்குகின்ற புலியெதிர்ப்பு ஆதிக்க சாதிகள், தமக்கு ஜனநாயகத்தை மூகமூடியாக்கிக் கொண்டனர்.

இந்த அரசியல் மோசடியை நாம் உடைத்துப் போட்டோம். தலித்தியம் எதிர் தேசியம் என்ற அடிப்படையில், தேசியத்தை வரையறுக்கின்ற அளவுகோல் பொய்யானது போலித்தனமானதும் என்பதும், அது அரசியல் கபடத்தை அடிப்படையாக கொண்டது என்பதை சுட்டிக்காட்டினோம்.

தேசியம் என்பது பிரபாகரனும் புலிகளும் கட்டமைத்த தேசியம் என்ற கேள்வியூடாகவே, இந்த வரையறையை உடைத்தோம். அவர்கள் வரையறுத்து நடத்துவதே தேசியம் என்றால், புலியிசத்தை தேசியமாக காட்டும் புதுக்கோட்பாட்டை எழுதி முதலில் வையுங்கள் என்று சவால் விடுத்தோம்.

தேசியம் என்றால் புலியிசம் என்ற வரைவிலக்கணத்தை முன்னிறுத்தி, அதற்கு எதிராக தலித்தியதை நிறுவுவது என்பது தவறு என்றோம். இது அப்பட்டமான ஆதிக்க சாதிகளின் மற்றொரு சதியே என்பதை சுட்டிக்காட்டி, அதை உடைத்தோம். தேசியம் சமன் புலியிசம் என நிறுவ, முன்னாள் புலியாக இருந்த ராகவன் அதே புலியாகவே தேசியத்தை சித்தரித்து ஒரு கட்டுரையை முன்வைத்தார். அதன் போலியான புலியெதிர்ப்பு, புலியிசத்தை அம்பலப்படுத்தினோம். அதை தனியாக பின்னால் பார்ப்போம். இப்படி மூன்றாவது தளத்தில், தலித் மக்களின் நலனை அடையாளப்படுத்தினோம்.

4. தலித்மாநாடு புறக்கணித்த, உண்மையான தலித் போராளிகள் நினைவுகளை, அவர்களின் தியாகத்தை அங்கு நாம் முன்னிறுத்தினோhம். 1970க்கு முந்தைய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தியாகத்தை அடையளப்படுத்தி தலித் மாநாடு, பிந்தைய வரலாற்றை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தது. இதற்கு பிந்தைய தலித்தியப் போராட்டத்தை மறுத்தது, தலித்திய உணர்வுக்கு எதிரானது என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். 1970க்கு பிந்தைய பத்தாண்டுகளின் இறுதியிலும், 1980 க்கு பிந்தைய பத்தாண்டுகளின் முற்பகுதியிலும், தலித்திய அடிப்படையாக கொண்ட கூர்மையான ஒரு போராட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் நாட்டை விட்டு தப்பி ஒடினர். பலர் அரசியல் ரீதியாகவே ஒதுங்கினர். சிலர் மாற்று வழிகளைத் தேடினர். உண்மையில் தலித்திய விடுதலைக்கான பாதை தோற்கடிக்கப்பட்டது.

இதன் மூலம் தான் வலதுசாரிய பாசியம் தேசியமாகியது. அனைத்து பெரிய இயக்கமும் வலதுசாரியத்தை தமது அரசியலாக கொண்டது. பாசிசம் படிப்படியாக, அதன் அரசியலாகியது. அழிக்கப்பட்ட இந்த தலித்திய போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்த, அதை நினைவு கூர மறுத்த, அதை தனது போராட்ட பாதையாக ஏற்க மறுத்த, பிற்போக்குத்தனத்தை அம்பலப்படுத்தினோம். இதை மூடிமறைப்பது, பாதுகாப்பது படுபிற்போக்கானது என்பதை சுட்டிகாட்டினோம். உண்மையான தலித்தியவாதிகளாக, நாம் நிமிர்ந்து நின்று இதைச் செய்தோம்.

இப்படி நான்கு பிரதானமான விடையத்தை 5 நிமிடத்தில் தெளிவுறுத்தியதன் மூலம், தலித்திய மக்களின் நலனை முன்வைத்தோம். இதன் அடிப்படையில் தலித்திய மக்களின் எதிர்கால நலன்களை முன்நிறுத்த கோரி, தலித்திய ஏற்பாட்டாளர்களை சிந்திக்கத் தூண்டினோம். கொள்கையளவிலான இந்த வெற்றி, தலித் மக்களின் முதல் வெற்றி. இதைத் தலித் மாநாடு எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், எமது தலித்திய நிலைப்பாடு தலித் மக்களின் மத்தியிலான முதல் வெற்றியாகும்.


தொடரும் (தேசியம் எதிர் தலித்தியமா?)

Friday, October 26, 2007

பாரிஸ் தலித் மாநாடு, தலித் மக்களை உணர்வுபூர்வமாக பிரதிநித்துவப் படுத்துகின்றதா?

பி.இரயாகரன்
26.10.207


ந்தக் கேள்வி எம்முன் தொடருகின்றது. மூடி மறைக்கப்பட்ட செயற்பாடுகள், குழுவாதங்கள், இயக்க நலன்கள் என்று எண்ணற்றவர்களின் நலன்களுடன் கூடியிருந்த கூட்டம். பிறப்பால் தலித்துகள் மற்றும் தலித் ஆதரவு போலிகள் கூடியிருக்கவே, தலித் மாநாடு நடந்தது. உண்மையாக தலித் மக்களுடன் ஒன்றியதாக தம்மை அடையாளப்படுத்துவதில் தடுமாற்றமே மேவிநின்றது. எல்லாம் மூடு மந்திரமாகவே காணப்பட்டது. நிகழ்ச்சிகள் கூட அறிவியல் பூர்வமானவையாக, ஆளுமை கொண்டதாகவோ நடத்தப்படவில்லை. தெரிந்த பழைய சரக்கை அவித்து அரைத்துக்கொட்டுவதாகவே அமைந்தது. அனைத்தையும் தெளிவுபடுத்தும் அளவுக்கு கேள்விகள் தவிர்க்கப்பட்டன. கருத்துச் சுதந்திரத்தை, கேள்விச் சுதந்திரம் மட்டுப்படுத்த, உருப்படியற்ற நிகழச்சியால் மாநாட்டை மூழ்கடித்தனர். கருத்துச் சுதந்திரத்தை நபர்களுக்கு ஒரு சில நிமிடம் மூலம் வழங்கியவர்கள், கருத்துக்கு அதை மறுத்தனர்.


தலித்துக்கே உரிய, உண்மையான உணர்வுபூர்வமான செயற்பாட்டைத் தான், தலித் மாநாடு கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. யார் எதிரி என்பதை தெளிவுபடுத்துவதும், நண்பனை அடையாளம் காண்பதும் அவசியமாக இருந்தது. அதை இந்த மாநாடு செய்யவில்லை. சூக்குமாகவே அதை வைத்திருப்பது மூலம், இது எதிர் புரட்சிக்கான கூறுகளை, உள்ளடகத்தில் பாதுகாத்துக்கொண்டது. தலித் மக்களின் விடுதலைக்குரிய அரசியலை முன்வைப்பது அவசியமானதாக இருந்தது. அதையும் இது நாசூக்காக செய்யவில்லை. தலித் மக்களின் விடுதலையை உள்ளடக்கியது தான், அனைத்து விடுதலையும். இதையும் தலித்மாநாடு வலியுறுத்த முனையவில்லை. எந்த இடைக்கால தீர்வும் முன்மொழிவும், நீண்டகால தீர்வின் மேலானதாக அமைவது அவசியமானது. இந்த உண்மையை தலித் மாநாடு மறுதலித்தது. இது அனைத்தும் படுபிற்போக்கான எல்லைக்குள், தலித் மக்களை ஒரு கத்திவிளிம்பில் நிறுத்தி தலித் மாநாட்டை ஒப்புவித்தனர்.


இதனால் போலிகளும், தலித் விரோத இயக்க மையவாதமும் மேலோங்க, தலித்மாநாடு சலசலத்தது. கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் ஒப்புக்கு தலித் ஒப்புபாடப்பட்டது. தலித் மக்களின் வாழ்வையே நசுக்குகின்ற, அவர்களை ஒடுக்குகின்ற எதிரிகளை சரியாக இனம் காண்பதே, இந்த முயற்சிக்கும் முன்நிபந்தனையானது. தலித் மக்களின் நியாயமான அடிப்படையான ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு பூர்வமான செயற்பாட்டை, சிதைக்க விரும்புகின்ற எதிரிகளோ பல வேஷத்தில் இன்று பலவாகி இதில் சலசலத்தனர்.


தலித் மாநாட்டையொட்டி சதிகள், சூழ்ச்சிகள், இழிவாடல்கள், தமதானதாக காட்டும் முயற்சிகள், தலைமறைவு நடவடிக்கைகள் எல்லாம் ஒருங்கே முனனும் பின்னுமாக அரங்கேறின. வெளிப்படையாக


1.மிக கடுமையான அவதூறுகளை, புலிகளின் சில தளத்தில் செய்தனர்.


2. தலித் மாநாட்டை புலியெதிர்ப்பு மாநாடாக காட்ட, புலியெதிர்ப்புக் கும்பல் முனைப்பு பெற்றது. ரீ.பீ.சீ வானொலி உட்பட, ஈ.பி.ஆர்.எல்.எப் தனதாக காட்டவும் கூட முயன்றது.


இதன் பின்னனியில் தலித் உணர்வு, தலித் மக்களின் விடுதலை என்ற அம்சம் மேலோங்கி இருக்கவில்லை. நான் தலித் என் ஒர்மம், உறுதி இருக்கவில்லை. கண்ட கண்ட நாய்கள் எல்லாம், எப்படியும் பேளலாம் என்று விடப்பட்டு இருந்தது. இதற்குள் இயக்க மையவாதமும், குறுகிய உள்நோக்கத்தையும் அடிப்படையாக கொண்ட செயல்பாடுகள். வேடிக்கை என்னவென்றால் இந்த இயக்க மையவாதம், உள்ளடகத்தில் தலித்துக்கு எதிரானது என்பது தான். அவர்கள் இதற்கு ஆதரவு என்று கூறும் போலித்தனத்தின் மேல் தான், தலித்மாநாடு களைகட்டியது. தலித் ஒழுங்கமைப்பாளர் கடந்தகாலத்தில் இருந்த இயக்கம், எந்தவிதத்திலும் தலித்தியத்துக்கு உதவாது என்ற சுயவிமர்சனத்தைக் கூட அவர்கள் செய்யவில்லை. இன்று இதனாலும், அதனுடன் இல்லை என்பதை தெளிவாக்கவில்லை. ஒரு சூக்குமம், பலர் மத்தியில் சந்தேகமாகவே தொடருகின்றது. உண்மையில் தலித்திய விடுதலைக்காக உணர்வு ப+ர்வமாக இயங்கின், இந்த தெளிவுபடுத்தல் இன்மை என்பது தலித்தியத்தில் உண்மையான விடுதலைக்கு பாதகமானது.


இந்த பிரதான போக்கை, சரியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை, எம்முன்னுள்ள கடமையாக இருந்தது, இருக்கின்றது. இந்த நிலையில், இதை நடத்திவர்களின் கடந்தகால நிகழ்கால அரசியல் நிலை காரணமாக, நாம் எச்சரிக்கை கலந்த உணர்வுடன் அணுகினோம், அணுகுவோம். தலித் மக்களின் உண்மையான உணர்வுடன் செயற்படத் தூண்டும் அரசியல் உணர்வை உருவாக்க வேண்டிய, பொறுப்புணர்புடன் நாம் அணுகினோம், அணுகுகின்றோம்.


எமது அனுபவமும், கடந்த கால வரலாறு என்பவற்றின் ஊடாகவும், இணக்கமாக இணங்கி நின்று அணுக முற்பட்டோம், முற்படுகின்றோம் தலித் மக்களுடன் உண்மை உணர்வுடன் இணைந்து நிற்கக் கூடிய வகையில், அவர்களின் முன்முயற்சி ஊக்குவிக்க வேண்டியிருந்தது. அதை நோக்கியும், நாம் எமது கருத்தை முன்வைத்தோம், வைக்கின்றோம். சந்தர்பவாதமும் வழுவழுப்பும் கொண்ட, கறாரற்ற தன்மைக்கு ஊடாக நகருகின்ற போக்கை, உடைக்க வேண்டியிருந்தது, வேண்டியிருக்கின்றது.


தலித் மக்களுடன் இணைந்து நிற்கின்ற உணர்வு பூர்வமான செயற்பாட்டையே, தமது அரசியல் பாதையாக தெரிவு செய்யவேண்டிய வரலாற்றுத் தேவையை அங்கும், நாம் சுட்டிக்காட்ட முற்பட்டோம்.


இதற்காக எமக்கு கிடைத்த அல்லது தரப்பட்ட நேரம் 5 நிமிடங்கள் தான். முற்றாகவே மாற்றுக் கருத்தைக் கொண்ட எனக்கு வழங்கிய நேரம் இது. கருத்துச் சுதந்திரத்தின் மகிமை இது. மிகக் குறுகிய நேரத்தில், அதைக்கொண்டு இந்த பொது தளத்தின் பிழையான பிற்போக்கு சக்திகளின் நாடகத்தை அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. கிடைத்த நேரத்தில் ஒரு சில பகுதியை சுக்குநூறாக உடைத்துப் போட்டோம். இதை நாம் துல்லியமாக செய்ததன் மூலம், இந்த மாநாட்டை புலியெதிர்ப்பு மாநாடாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் மாநாடாகவும் கூட்டி அள்ளிச்செல்ல முயன்ற முயற்சிகளை முறியடித்தோம். தலித் மக்களின் விடுதலையை, புலியெதிர்ப்பு என்ற பொதுக் கோசத்தில் இயங்கும் எந்தக் குழுவாலும் பெற்றுத்தர முடியாது என்பதையும், அவர்கள் தலித் மக்களின் முதன்மையான எதிரிகள் தான் என்பதை தோலுரித்துக் காட்டினோம். தலித் மக்களைச் சார்ந்து நின்ற நாங்கள், மற்றவர்களும் தலித் மக்களை சார்ந்து நிற்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தினோம்.


எப்படி என்பது தொடரும்.


Thursday, October 25, 2007

உயிர்நிழல் ஆசிரியரின், புலியெதிர்ப்போ வக்கிரமாகி கொட்டுகின்றது

பி.இரயாகரன்
24.10.2007


தைத்தான் உயிர்நிழல் 26 இல் அதன் ஆசிரியர் தனது கருத்தின் ஊடாகச் செய்கின்றார். மக்கள் போராட்டத்தை இழிவாடும் அவரின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு அம்சமாக, என்னை அதில் கட்டுடைக்கின்றாராம். நல்ல வேடிக்கை. ஒரு விடையத்தைக் கூட விவாதிக்க அறிவில்லை. இதனால் இசங்களில் சொற்களை வைத்து, புலம்பி ஒப்பாரி வைப்பதன் மூலம் கட்டுடைக்கின்றாராம்.

புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு ஏகாதிபத்தித்துக்காக காவடியாடும் சிவலிங்கத்துக்கு, மக்கள் விரோதிகள் எடுபிடியாவது இயல்பு. எந்த பிசாசுடனுடமுவாவது சேர்ந்து புலியை அழிக்கும் சிவலிங்கத்தின் பாசிசக் கோட்பாடு, பாரிசில் எம்மால் அம்பலமானதை பொறுக்கமுடியாமல், லட்சமி அக்கா துள்ளிக் குதித்ததன் வெளிப்பாடுதான் இந்த புலம்பல். இப்படி அந்த கடவுள் சிவலிங்கத்தின் சடைமுடிக்குள் அமர்ந்து இருந்தபடி, சீண்டுகின்றார். கருத்தைக் கருத்தால் மறுத்துரைக்கும் திராணி கிடையாது. அதைச் செய்ய வக்கு கிடையாது. ஏகாதிபத்தியத்தை நக்கும் சிவலிங்கத்தின் கோட்பாட்டை காக்க முனைகின்றார். 'பி.இரயாகரனோ வி.சிவலிங்கத்தின் எந்த அரசியல் கட்டுரைகளையும் வாசித்திருப்பதில்லை என்று தான் படுகின்றது" இப்படி கூறி, இதன் மூலம் எந்தக் கருத்தை கட்டுடைத்து மறுக்க முனைகின்றார். எப்படிப்பட்ட யோக்கியதை. பிசாசுடன் சேர்ந்து புலியை அழிப்போம் என்று பாரிசில் அறிவித்த சிவலிங்கத்தின் மக்கள் விரோதத் தன்மையோ வெளிப்படையானது. இப்படி தொடர்ச்சியாக அம்பலமாவதைப் பாதுகாக்க, எடுபிடிகள் அம்மணமாக நின்று குலைப்பது தான் அரசியல் வேடிக்கை.

அரசியல் ரீதியாக சடைப் பாம்பாகி, மக்கள் விரோதத்தையே ஆன்மாவாக கொண்டவர், அதையே இசமாக்கியவர் தான் உயிர்நிழல் ஆசிரியர். இவரோ எடுப்பார் கைப்பிள்ளையாக, காலத்துக்காலம் வேஷம் போட்டவர். எந்த மக்கள் அரசியலும் கிடையாது. இப்படி எந்த சமூக அரசியல் அடிப்படைகள் எதுவுமற்றவர். காலத்துக்கு காலம், முகம் பார்த்து, கொசித்து, வம்பளந்து, விஸ்கி அடிப்பதன் மூலம், கூடி கும்மாளம் அடிப்பதையே, அரசியலாக கருதி அதை வளர்த்தவர்கள், வளர்ந்தவர்கள்.

இசங்களின் சொல்லாடலைக் கொண்ட ஒரு புலியெதிர்ப்பு. இப்படி சொந்தத்தில் எந்த ஓரு விடையம் மீது, மனித விடுதலைக்கு உதவக் கூடிய ஓரு கருத்தைக் கூட சொல்ல முடியாதவர் தான் உயிர்நிழல் ஆசிரியர். வெறும் தொகுப்பாளர். அரசியல் ரீதியாக மற்றவர்களின் எடுபிடி. காலா காலமாக ஆணாதிக்கத்துக்கு துணை போனவர். பெண்ணியம் என்ற பெயரில் ஏகாதிபத்திய கலாச்சாரத்தின் எடுபிடி. அதாவது ஏகாதிபத்திய பெண்ணின் நடவடிக்கைக்குள் நின்று, அதை தூக்கி வைத்து பெண்ணியம் என்பவர். இவர் எம்மை சீண்ட முனைவது இயல்பு.

இவர் புலியெதிர்ப்பு சிவலிங்கம் பற்றி எங்களுக்கு கற்றுத் தரமுனைகின்றார். புலியெதிர்ப்பின் மதியுரைஞரான அவரின் பிசாசுச் சித்தாந்தத்தையும், அவரின் அரசியல் வேஷத்தையும், அக்குவேறாக ஆணிவேராக நாம் நன்கு அறிவோம். அவரையும், அவரை குருவாக கொண்ட புலியெதிர்ப்பை மட்டும் அரசியலாக கொண்ட மக்கள் விரோத வேஷதாரிகள், பாரிஸ் கூட்டங்களில் எமக்கு தரும் ஒரு இரு நிமிடங்களில் அம்பலப்படுத்தப்படுவதும் அம்பலமாவதும் தொடருகின்றது. கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக காட்ட, எமக்கு தரும் மிக குறுகிய நேரத்திலேயே, இந்த வேடதாரிகள் அம்பலமாகிவிடுகின்றனார். ஒரு நிமிடம் தான் நான் பேச முடியும் என்றும், இன்னும் ஒரு நிமிடம் தான் உண்டு என்று எனக்கு மட்டும் கருத்துத் தடை வழங்கியவர்கள் தான் இவர்கள். இதற்கு எதிராக, கருத்துச் சுதந்திரத்துக்கான குரல்கள் எதுவும் எழுந்தது கிடையாது. நான் பேசவோ, கூட்டத்துக்கு வரமுடியாதென்றோ அவர்கள் அறிவிக்கும் நிலை வரை, அவர்கள் அடித்து வெளியேற்றும் வரை, இதுபோன்ற கூட்டங்களில் மக்கள் விரோத செயலை அம்பலப்படுத்துவோம். அவர்கள் இலண்டன் பாணியில் பேச்சாளர் மட்டும் அவிப்பதை கேட்கும் அளவுக்கு, கூட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழி அவர்கள் முன் கிடையாது. இருந்தும் புலியெதிர்ப்பு எப்படிப்பட்ட மக்கள் விரோதத் தன்மை கொண்டது என்பது தொடர்ச்சியாக அம்பலமாவதால், இதுவெல்லாம் மிக விரைவில் நடக்கும்.

புலியொழிப்பு அரசியல் அம்பலமான ஒரு சந்தர்ப்பத்தில் தான், பிசாசுடன் (ஏகாதிபத்தியத்துடன்) சேர்ந்து புலியை அழிப்போம் என்று கூச்சலிட்ட அந்த மனித விரோத புல்லுருவியைப் பற்றி, நாங்கள் அரசியல் ரீதியாக நன்கு அறிவோம். இலங்கை அரசின் ஒரு கூலிக் குழுவான ஈ.பி.டி.பியின் வானொலியில் அலம்புவது, இந்தியக் கூலிக் குழுவான ஈ.என்.டி.எல்.எவ். இன் ரி.பி.சி வானொலியில் ஆய்வென்ற பெயரில் ஊதுவது உட்பட, தேனீ இணையம் வரை, அவர் என்ன செய்கின்றார் என்பதை நாம் தெளிவாக அறிவோம்.

ஆட்டுக்கு குழை காட்டி, அவர்களை தொடர்ச்சியாக பலிபீடத்துக்கு அழைத்துச்செல்லும் அந்த இழிவான மலிவான மக்கள் விரோத அரசியல் தான், அவரின் மதியுரை. இந்தா வருது, அந்தா வருது, தமிழ் மக்களே வந்து இந்தா பிடியுங்கள், அதை தூக்கி நிறுத்த என்னைப் பிடியுங்கள் என்கின்றது இந்த இழிவு கெட்ட அரசியல். இப்படி ஏகாதிபத்தியத்துக்காக பேரினவாதிகளுக்காக குலைப்பது அவரின் அரசியல். இதை மூடிமறைக்க, புலி மறுக்கும் ஜனநாயகம்.

தமிழ் மக்களை பேரினவாதிகளின் காலின் கீழ் பலியிட அழைத்துச் செல்லும் இந்த பேரினவாத மதியுரைஞர், மறைமுகமாக புலியின் பலியீட்டை இதன் மூலம் ஊக்குவிக்கின்றார். இந்த இரண்டு போக்குக்கும் வெளியில், மக்களுக்கான எந்த மாற்று அரசியலும் ஏன் அதை வழிகாட்டுவதும் கூட கிடையாது. பேரினவாத அமைப்பில், அவர்களின் தயவில், தமிழ் மக்களுக்கு விடுதலையாம். இதுதான் இந்த சிந்தாந்த மதியுரைஞரின் உயர்ந்தபட்ச வழிகாட்டல். இதற்கு வெளியில், மக்கள் தமது விடுதலைக்காக சிந்திப்பது அபத்தம் என்பதே, இவர்களின் அரசியல் அறிவு கூறுகின்றது. அந்த பிசாசு எடுபிடிக்கு வாலாட்டும் உயிர்நிழலுக்கோ, மக்கள் போராட்டம் என்பது கிண்டலுக்குரிய இசமாகிவிடுகின்றது.

பேரினவாதமும், அதை அரசியலாக கொண்ட எதிர் கட்சிகளும் மக்களை ஏமாற்ற சொல்வதை அப்படியே எடுத்து, அதை வேப்பிலையாக கட்டி ஆடுபவர் இந்த அன்னகாவடிகளின் சிவலிங்கம். இப்படி அதையே ஆட்டுக்கு குழையாக காட்டி, தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில் பலிபீடத்துக்கு அழைத்துச் செல்வதே புலியெதிர்ப்பு அரசியல் சாரம்.

இப்படி தமிழ் மக்களை, புலியின் பெயரில் மோசடி செய்து ஏமாற்றுகின்ற ஒரு பொறுக்கியின் வாரிசாக தன்னை அடையாளப்படுத்தும் உயிர்நிழல், அதையே தடம் பிடித்து செல்வது ஆச்சரியமானதல்ல. அவர்களின் அரசியல் வரலாறு முழுக்க இதைத்தான் செய்தனர்.

சிங்கள பேரினவாதம் இந்தா தீர்வு என்று ஊர் உலகத்தை ஏமாற்ற வைத்த வைக்கின்ற குழைகளை, அப்புகாத்து போலே கமக்கட்டுக்குள்ளே செருகிக் கொண்டு வந்து, அதை விரித்து வைத்து அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். இந்த பேரினவாத சதிகளை, அதன் நுட்பங்களை நாம் படிக்கவில்லை என்று கூறுவதன் மூலம், இந்த சுத்த சூனியங்களை வேடிக்கை காட்ட முனைகின்றனர். நல்ல வேடிக்கை தான் போங்கள்.

இலக்கிய சந்திப்புத் தொடக்கம் இன்றுவரை, சமூகத்தை நோக்கி செயற்பட வக்கற்றுப் போனவர்கள் நாங்கள் அல்ல நீங்கள். உங்களைப் போன்றவர்களுக்கு, அரசியல் பொறுக்கிகள் அவதார புருசராக இருப்பது ஆச்சரியமல்ல. அன்று நித்தியானந்தன், ஜெயபாலன், என்று எத்தனையோ வகையறாக்களை காவித் திரிந்த உங்கள் அரசியலின் தொடர்ச்சியில், புதிய அவதாரம் தான் இந்த சிவலிங்கம். இது எத்தனை காலத்துக்கு என்பதையும், வரலாற்றில் நிச்சயமாக பார்த்துவிட முடியும்.

ஏகாதிபத்திய உலகமயமாதலான முதலாளித்துவமே உன்னதமான அமைப்பாக காட்ட முனையும் உயிர்நிழல், அதில் வாழ்வதாக காட்டி என்னைத் தாக்க முனைகின்றது. 'தான் பெறும் ஊதியம், தான் பெறும் ஆடை, தான் உண்ணும் உணவு, இன்னும் தன் வாழ்வாதாரத்திற்காகப் பெற்றுக் கொள்ளும் எந்த மயிரென்றாலும் அது மார்க்சிய வரையறைகளுக்குள் அடங்குகின்றதா என்று பரிசீலித்துத்தான் அவற்றைப் பெற்றுக்கொள்வார்" இவர்கள் பரிதாபத்துகுரியவர்கள் அல்ல. ஏகாதிபத்திய சமூக அமைப்பு போற்றுகின்ற அது பெத்துப்போட்ட பொறுக்கிகள்.

இதில் கூட, தான் எதைச் சொல்ல வருகின்றேன் என்பதைக் நேரடியாக சொல்ல முதுகெலும்பு கிடையாது. அதாவது அடிப்படை நேர்மையே கிடையாது.

எமது ஊதியம் மட்டுமல்ல, எமது வாழ்க்கை முறை முதலாளித்துவ விதிக்கு அப்பாற்பட்டதல்ல. நாங்கள் கற்பனையில் புரட்சி செய்து, சொற்களில் வாழ்வதில்லை. நிலவுகின்ற சமுதாயத்தினுள் வாழ்கின்றோம். சமூகத்தில் உள்ள அனைத்து மனிதனுக்கும் இது பொருந்தும். சமூகத்துக்கு வெளியில் யாராலும் சுயமாக சுயாதீனமாக வாழமுடியாது.

இருக்கின்ற சமூகத்துக்கு வெளியில் வாழமுடியும் என்ற வரட்டு இசங்களை கற்பித்துக் கொண்டு, அந்த இசங்களால் எம்மை கட்டுடைக்க முடியாது.

நாம் உழைத்து வாழ்கின்றோம். அங்கு முதலாளித்துவ உழைப்பு முறைக்குள் தான் வாழ்கின்றோம். இதில் எமக்கு சந்தேகமே கிடையாது. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு உட்பட்ட அனைத்துவிதமான, நெளிவுசுழிவான உட்கூறுகளையும் கொண்டதே, எமது உழைப்பு முறையும். நிலவுகின்ற இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில், இதற்கு வெளியில் யாராலும் வாழமுடியாது. முதலாளித்துவ அமைப்புமுறை மாற்றப்படாமல், கற்பனையில் நாம் மாறியதாக எம்மை கற்பிப்பது, உங்கள் இசம். உங்களைப் போல் (கற்பு என்ற சொல்லைப் பற்றிய உங்கள் பார்வை போல்) போலியாக நம்புவது, நடிப்பது என்பது எமது அரசியலில் கிடையாது. உறவு முறைகள் கூட, முதலாளி தொழிலாளி வகைப்பட்டதே. இதில் எமக்கு எந்த சந்தேகமும் கிடையாது. எமது முதலாளி உங்கள் நெருங்கிய நண்பர் என்பதால், அதை நன்கு கேட்டு தெரிந்து கொள்ளலாமே.

'என்னை சிலர் கேட்டார்கள், பி.இரயாகரனின் 'ஆணாதிக்கமும் பெண்ணியமும்" தொடரைக் கட்டுடைக்கும் படி. பி.இரயாகரன் பெண்ணியத்தைக் கட்டுடைப்பதற்கு அவருடைய கட்டுரைகளில் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வரும் மொழிப் பிரயோகங்களே போதும். சில உதாரணங்கள், மலட்டுத்தனம், தாலிஅறுப்பு, கற்பு, விபச்சாரம், கற்பழிப்பு இப்படியாக…" என்று கூறி விடுவதன் மூலம், எதைத்தான் கட்டுடைத்தீர்கள். சொற்களைக் காட்டி, அதை மொழியில் மட்டும் நீக்கிவிடுவதே புரட்சி என்று நம்புகின்ற லூசுகள் நீங்கள். சொல்லைக்காட்டி, இந்தா கட்டுடைத்துவிட்டேன் பாருங்கள் என்று புலுடா தான் விட முடியும்.

பெண்ணியம் என்றால் என்ன என்று சொல்ல தெரியாதவர்கள் இவர்கள். அதன் மேல் எந்த அறிவும் கிடையாது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்கள் அனுபவிக்கும் வாழ்க்கையை, பகிரங்கமாக மேடையில் சொல்லத் தெரிந்த பெண் என்பதால் பெண்ணியவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது. ஏகாதிபத்திய பெண்ணின் ஆணாதிக்க சாரத்தை சொல்ல முடியாது, அதையே ஆதரிப்பவர்கள். மறுபக்கத்தில் ஆணாதிக்க அமைப்பை எப்படி ஒழிக்க முடியும் என்றால், அதை கூற முடியாதவர்கள். அதற்காக எந்தத் தளத்திலும் போராடாதவர்கள். சொற்களில் வித்தை காட்ட முனைகின்றனர். ஏகாதிபத்திய கலாச்சாரம் பண்பாட்டுச் சீரழிவைப் பெண்ணியமாகக் காட்டி நிற்பவர் தான், எம்மை கட்டுடைக்கின்றாராம். பெண்ணியம் என்றால் புகைத்தல், மதுபானம் அருந்தல், அரைகுறையாக உடை அணிதல், விரும்பினால் விபச்சாரம் விரும்பாவிட்டால் ஒழுக்கமாக படுத்தல், இப்படி ஆணாதிக்கத்தைப் புரிந்து கொண்டவர்களே இந்த பெண்ணியவாதிகள்.

இவர்கள் மொழிப் புரட்சி செய்கின்றனராம். தொழில் முறையற்ற விபச்சாரத்துக்கு வெளியில் பண்பாட்டு கலாச்சாரம் நுகர்வு சார்ந்த விபச்சாரம் இல்லை என்று மறுக்கவும், ஆணாதிக்கம் கோரும் கற்புக்கு வெளியில் பெண்ணின் சுயமான கற்பை இல்லை என்பதும் தான், இந்த ஏகாதிபத்திய பெண்ணியத்தின் உள்ளடக்கம். புலிகள் இதை முதன் முதலில் உருவாக்கிய நோக்கம் வேறு, இவர்கள் அவர்களிடம் இருந்து பெற்றது, தமது சொந்த சீரழிவின் அடிப்படையில் தான்.

சமூகத்தில் உள்ளதை சொற்களில் புரட்சி செய்யும், சொற் புரட்சியாளர்கள் அல்ல நாங்கள். சொற்கள் சமூகத்தில் நடைமுறையாக உள்ளவரை, அதை மொழியில் மட்டும் மாற்றி விடும் நாடகம் என்பது அதைப் பாதுகாப்பது தான். தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனர்கள் என்றழைத்து சொற்களைக் கொண்டு காந்தி முதல் அனைத்து ஏமாற்று பேர்வழிகளும் எதைச்செய்தனரோ, அதையே இந்த ஏகாதிபத்திய பெண்ணியல்வாதிகள் செய்ய முனைகின்றனர். சொற்களை மாற்றிக் காட்டி, மக்களை ஏமாற்றும் வகையறாக்கள் அல்ல நாங்கள்.

சமூகத்தில் நிலவும் அப்பட்டமான சமூக கொடுமையை, அதை அதுவாக உள்ளவாறே சொல்லி அதற்கு சவால் விடுத்து அதை எதிர்த்துப் போராடுவோம். ஒரு விடையத்துக்கு குறைந்தது, இரண்டு பக்கங்கள் உண்டு. ஒற்றைப் பரிணாமத்தில் எதையும் காட்ட முடியாது, கட்டுடைக்கவும் முடியாது.

1. ஆணாதிக்க சமூக அமைப்பே விபச்சாரத்தை செய்கின்றது என்பது ஒன்று. இதற்கு பெண்கள் பலியிடப்படுகின்றனர்.

2. சமூக உறவை மறுத்து, பாலியலையே தனிமனித நுகர்வாக்கி விபச்சாரம் செய்வது.

இப்படி சந்தைப் பொருளாக, மறுபுறம் சந்தை நுகர்வுப் பொருளாக என்று, விபச்சாரத்துக்கு இரண்டு பக்கம் குறைந்தது உண்டு.

இது போல் தான் கற்பும்.

1. கற்பு ஆணாதிக்க வடிவில் அது வரையறுக்கப்படுகின்றது. இது எதிர்மறையில் அதை நுகரும் வடிவில், பெண்ணை சந்தைப் பொருளாக்குகின்றது. ஒன்றில்லை என்றால், மற்றையது கிடையாது.

2. இதற்கு எதிரான போராட்டத்தை கற்பு சார்ந்து பெண் நடத்துகின்றாள். இங்கு தற்காப்பு பெண்ணின் அடிப்படையாக உள்ளது.

இப்படி நாம் சொற்கள் பற்றி தெளிவு கொண்டவர்கள். சொற்களைக் கொண்டு, சமுதாயத்தை ஒற்றைப் பரிணாமத்தில் கட்டுடைக்க முடியாது. இப்படி 'ஒற்றைப் பரிமாணத்துடன் எதையுமே பார்க்கப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்" நாங்கள் அல்ல. நீங்கள் தான் என்பதை இது காட்டவில்லையா? இது பற்றி நான் எழுதிய கட்டுரையை விவாதத்துக்கு எடுத்து விவாதிக்க முடியுமா? முடிந்தால் அதை கட்டுடையுங்கள் பார்ப்போம். ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற வேண்டாம். இது தான் என் கட்டுரை ' பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க "கற்பு" என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

இந்த புலுடா பேர்வழிகளின் மொழிப் புரட்சி பற்றி, கார்ல் மார்க்ஸ் மிக அழகாகவே எள்ளி நகையாடுகின்றார்."...ஒரு தத்துவஞானி ஏதாவதொரு வகையில் விமர்சனம் செய்த உடனே அது செத்துவிட்டதாகக் கருதப்படும், வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்படும், அதோடு எல்லா செய்முறைக் காரியங்களுக்கும் கூட ஒழிக்கப்பட்டுவிடும்."என்று கருதுகின்ற, போலிகளையும் போலித்தனத்தையும் தோலுரிக்கின்றார். இதை மார்க்கிய தலைவர்கள் சொன்னதால் வரட்டுத்தனமாகி தவறாகிவிடுமா? இதை சொற்கள் மூலம் கட்டுடைக்க முடியுமா? உங்களின் இன்றைய ஆசான் குரு சிவலிங்கத்திடம் கட்டுடைக்க கோருங்கள்.

உங்களாலும், உங்கள் கூட்டத்தாலும் முடியாது. ஏனெனின் மார்க்ஸ் கூறுவது போல்'... ஒரு பொருளின் பெயரை மாற்றுவதன் மூலம் அப்பொருளையே மாற்றி விடுவதாய் நினைத்துக் கொள்ளுகின்றார்கள்... உண்மைகளை எல்லாம் பார்க்காமலே கண்களைக் கெட்டியாய் மூடிக் கொண்டு ஆவேசமாய் இச்சொல்லை எதிர்த்துப் போராடுகிறார்கள்... என்பது தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள் - அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும் , அவர்கள் பிற்போக்குக்குப் பணியாற்றுவோரே ஆவர்." நாம் வாழ்கின்ற தமிழ் சமூகத்தில் படுபிற்போக்காளர்கள் யார் என்பதை, இந்த மறுக்க முடியாத வாதம் எடுத்துக் காட்டுகின்றது. இதைச் சொன்னவர்களை உங்கள் பாணியில் வரட்டுவாதியாகவே காட்டுங்கள், ஆனால் இதை கட்டுடைக்க முடியாது. ஏகாதிபத்தியத்தின் முழு அறிவுத் துறையாலும் கூட முடியாது போனது, இனியும் கூட முடியாது. அது தான் மார்க்சியம் சமூக விஞ்ஞானமாக உள்ளது.

மார்க்சின் சமூக விஞ்ஞானத்தின் ஆளுமை, இதை மேலும் அம்பலமாக்குகின்றது. 'விஷயங்களின் பெயர்களை மாற்றிவிட்டால் விஷயங்களையே மாற்றி விட்டதாக இந்தக் கனவான்கள் நினைக்கிறார்கள். மிகவும் ஆழமான இச்சிந்தனையாளர்கள் இப்படி மொத்த உலகத்தையுமே கேலி செய்கிறார்கள்" என்னையும் உன்னையும் சேர்த்து லட்சுமி கேலிசெய்ய முனைகின்ற உண்மையை, மார்க்ஸ் வேடிக்கையாகவே எள்ளிநகையாடி விடுகின்றார். இப்படி மனிதகுலத்தையே கேலி செய்து, அதே ஒடுக்கு முறைக்குள் சமூகம் தொடர்வதை மூடிமறைக்க முனைபவர்கள் தான் இந்த பிற்போக்குவாதிகள். எப்படி போராட வேண்டும் என்ற உணர்வுகள் எதுவுமின்றி, தமது சொந்த அரசியல் மலட்டுத்தனத்தை பாதுகாத்துக் கொள்ள, சொற்புரட்சி பற்றி வாய் வீச்சுகள். மொழி பற்றி கூட பேச முனைகின்றார்.

மொழி பற்றி, மொழி மாற்றம் பற்றி, என்னிடம் 'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையுமற்றவர்" என்று கூறி, மொழி மாற்றத்தைப் பற்றியும் கூறுகின்றார். இது தொடர்பாக மார்க்ஸ் கூறுவதை பாருங்கள். ' ..., ஓர் உருவக வழக்குதான் அடித்தளம் என்றாகிறது. சமுதாயம் தன்னைப் பீடித்துள்ள கேடுகளை எல்லாம் ஒழித்துக் கட்ட விரும்புகிறதா? சரி, ஓசைக்கேடான சொற்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டியதுதான், மொழியை மாற்ற வேண்டியதுதான். சமுதாயம் இதற்காக வேண்டி அறிஞர் பேரவைக்கு விண்ணப்பம் செய்து அதன் அகராதிக்கு ஒரு புதிய பதிப்பை வெளியிடுமாறு கேட்டால் போதும்" சமூதாயப் புரட்சியை மொழிப்புரட்சி ஊடாக செய்வதை, செய்ய முடியும் என்பதை எள்ளி நகையாடுகின்றார். இதுவா வரட்டுத்தனமானது?

சமுதாயப் பிரச்சனையை மழுங்கடிக்கின்ற, பிரச்சனையை திசைதிருப்பி சொல் வித்தையை காட்டுகின்றவர்கள், சமூதாயத்தின் இழிவைப் அசலாகவே பாதுகாப்பவர்கள் தான். இப்படிப்பட்டவர்கள், சமுதாயத்தின் உண்மையான பிரச்சனை சார்ந்து போராட முனையும் எம்மை, யாராலும் கட்டுடைக்க முடியாது. கட்டுடைக்க வெளிக்கிட்டால், அவர்களே கட்டுடைந்து போவார்கள். நாங்கள் மக்களை சார்ந்து நிற்கின்றோம்.

'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையுமற்றவர்" என்கின்றார் வேடிக்கை தான். பாரிசில் ஒரு திரைப்பட விழாவில், 'தீக் கொழுந்து" படத்தை பார்த்துக் கொண்டு இருந்த போது, திடீரென அதை பார்க்கக் கூடாத படம் என்று கருதிய நீங்கள், உங்கள் வர்க்க இசம் சார்ந்து நிறுத்தினீர்கள். பார்க்க கட்டுரையை.

http://www.tamilcircle.net/unicode/general_unicode/027_general_unicode.html

நான் பார்வைச் சுதந்திரத்தை கோரிய போது, உங்கள் கணவரும் உயிர்நிழல் ஆசிரியருமான கலைச்செல்வன், 'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையு"டன் செயல்பட்டார். உங்கள் ஆதரவுடன், அரங்கேறிய அந்த அசிங்கத்தில் 'நீ எத்தனை பெண்களைக் கற்பழித்தாய், எத்தனை வீட்டைக் கொள்ளை அடித்தாய்…." என்று பலர் முன் கூறி, என்னை வன்முறை மூலம் தாக்க முனையவில்லையா? உடல் வன்முறை, அவதூறு, மொழி வன்முறை, இறுதியாக உங்கள் புனிதமான சொல்லைக் கூட நாயைவிட கேவலமாக குதறிய போது, உங்கள் பெண்ணியம் விபச்சாரமா செய்தது. இது போல் பல நடந்துள்ளது. நிருபாவுக்கு உங்கள் ஆதரவுடன், ஒரு இலக்கியச் சந்திப்பில் கலைச்செல்வன் ஆடிய ஆணாதிக்க வசைக் கூத்து என்ன? உயிர்நிழல் முன்னாள் ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்டு, உங்கள் வீட்டில் அவருக்கு பிடித்த இறுவட்டு சிடி உடைந்த போது, சீறிய ஆணாதிக்கத்தை கட்டுடைக்க தெரியாது போனது ஏன்? எம்மிடம் 'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையுமற்றவர்" என்ற கூறுகின்ற, உங்கள் கேவலத்தை அந்த அசிங்கத்தை, முகத்தை திரும்பிப் பாருங்கள் அழகாகத் தெரியும்.

இந்த கேவலம் ஒருபுறம், இந்த நிலையில் உண்மையை அறிய விவாதம் அவசியமாம்! இதை செய்ய மறுப்பவர்கள் நாங்களா? நீங்களா? எதை விவாதிக்க உங்களால், உங்கள் கும்பலால் முடியும்? நான் தயார்? ஏகாதிபத்தியத்துக்கும், பேரினவாத அரசுக்கும் காவடி எடுக்கும் கும்பலுடன் சேர்ந்து, தாளம் போடுகின்ற உங்களால், மக்களுக்காக ஒரு நாளும் விவாதிக்க முடியாது. நடைமுறையும், அது சார்ந்த கருத்துக்களும் அதை மேலும் அம்பலமாக்குகின்றது.

கருத்துச் சுதந்திரம் பற்றி என்ன வேடிக்கையா செய்கின்றீர்கள். அதை அனுமதிக்க மறுப்பவர்கள் நீங்கள். அன்று நான் பார்வைச் சுதந்திரத்தைக் கோரிய போது வன்முறை, 1995 பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் நான் பேசுவதாக இருந்தால் ஒரு நிமிடம் என்று எனக்கு மட்டும் சிறப்பு நிபந்தனை, அண்மையில் சபாலிங்கம் கூட்டத்தில் ஒரு நிமிடம் என்று திடீர் சிறப்பு உத்தரவுகள், இப்படி கருத்து விவாதச் சுதந்திரம் நாறுகின்றது. இப்படி உங்கள் கருத்துச் சுதந்திரம் உலகம் அறிந்தது. கட்டுரையை போடக் கொடுத்தால் வெட்டித் திருத்துவது, சின்ன எழுத்தில் வாசிக்க முடியாத வகையில் எனது கட்டுரையை மட்டும் போடுவது என்று, உங்கள் நடைமுறை பிரசித்தமானவை.

நீங்கள் தான் விவாதம், கருத்து, மொழி என்கின்றீர்கள். 'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையுமற்றவர்" என்று சொல்வதில் என்ன வேடிக்கை!

சரி கற்பு என்ற சொல்லை நீக்கக் கோரியது யார்? வேறு யாருமல்ல. புலிப் பாசிசம் தான். தமிழ் பெண்களை ஏமாற்றி தமது குறுகிய நலனுக்கு ஆயுதபாணியாக்க, இதை பெண்ணியமாக முதன் முதலில் வைத்தவர்கள் புலிகள். இப்படி புலிகளின் நலனின் எடுபிடியானவர்கள் பெண்கள் மட்டுமல்ல, புலியல்லாத பெண்களும் தான். பாவம் பரிதாபத்துகுரியவர்கள். புலிகள் பெண்களை ஏமாற்றி அணிதிரட்ட, பெண்ணிய புரட்சியாக அதைக் காட்ட பயன்படுத்திய சொல்லை, கடைவிரித்தவர்கள் சரிநிகர் தான். சரிநிகரின் அரசியல் வங்குரோத்தை மூடிமறைக்க, தமது முற்போக்கை உலகெங்கும் காட்ட கடைவிரித்து பரப்பினர். பெண்ணியத்தின் பெயரில் என்ன செய்வது என்று தெரியாதவர்கள், அவல் போல் கிடைத்த இதை, தமது பெண்ணிய கோட்பாடாக்கினர். புலியின் பெண்ணிய நோக்கமும் சரி, புலியல்லாத இந்த பெண்ணிய நோக்கமும் சரி, உள்ளடக்கத்தில் ஒன்று தான்.

'மக்கள் பற்றி கதறும் கதறல் இவருடைய மக்கள் யாரினதும் காதிலும் விழவில்லையா என்பது…" மக்கள் பற்றி இவர்கள் செய்யும் கேலி இவர்கள் மக்கள் பற்றி என்ன வக்கிரம் கொண்டுள்ளார்கள் என்பதைப் புரிய வைக்கின்றது. புலிகள் கூட இதே போல், எங்கே உங்கள் மக்கள் என்கின்றனர். எத்தனை பேர் உங்களுடன் உள்ளனர் என்கின்றனர். இவர்களும் ஒருவர் இருவர் என்று கூவுகின்றனர். புலிகள் எங்கே உங்கள் மக்கள் போராட்டம் என்கின்றனர். இவர்களும் அப்படியே கேட்கின்றனர்.

உங்களைப் போன்ற மக்கள் விரோத புல்லுருவிகள் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்ற போது, மக்களைப் புரட்சி செய்ய அறிவூட்டுவது என்பது கடினமானது. நீண்ட காலம் பிடிக்க கூடியவையே. நிச்சயமாக அது நடக்கும். இல்லை, நாம் சமகாலத்தில் தோற்றாலும் கூட, எமது இந்தக் கருத்தை வரலாற்றில் பொய்யாக யாராலும் நிறுவிவிட முடியாது.

சமகாலத்தில் எனது முயற்சியையும் அதன் உண்மைத் தன்மையையும் பொய்யாக்கிவிடாது. இதை ஆதரிக்காது ஒத்துழைக்காது மறுத்து, ஒரு முழுநேர பணியாளனாக சமூகத்துக்காக இயங்கும் வகையில், உதவாத இந்த அரசியல் இலக்கிய போக்கின் இழிநிலை மீது, அதன் மக்கள் விரோதத் தன்மை மீதும், மனித வரலாறு துல்லியமாக அம்பலப்படுத்தும். இதையும் யாரும் தடுக்கமுடியாது.

மரணத்தின் பின் போலியான அஞ்சலிகள், வாரிசுத்தனங்கள் மலிவாகிப் போன இந்த பிற்போக்கான கருத்தியல் உலகில், அதையும் நாம் தற்காத்து போராடவேண்டியுள்ளது. அனாதையாகக் கூட உடலால் கருத்தால் நாம் மரணிக்கலாம், போலிகளின் புகழுக்குள் மரணிப்பதை நாம் வெறுக்கின்றோம்.

இந்த வகையில் மனித வாழ்வுக்காக, அவர்களின் விடுதலைக்காக, இந்த எளிய கடினமான நிலையில் போராடவேண்டியுள்ளது. வாழ்வுக்காக உழைத்தபடி, சமூகத்துக்காக முழு நேரமாக உழைக்கும் பணி மிகமிக கடினமானது. ஆனால் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டுள்ளோம். இதைக் கொச்சைப்படுத்தலாம், அவதூறு செய்யலாம், நாங்கள் தலைநிமிர்ந்து உண்மையின் பக்கம் உறுதியோடு நிற்கின்றோம்.

இந்த சமூக அமைப்பில் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற எமது கூற்றின், சாரம் மக்களால் எனறல்ல. மாறாக யாரெல்லாம் மாற்று கருத்துவாதிகள், கருத்துச் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டே அரசியல் விபச்சாரம் செய்கின்றனரோ, அவர்களால் என்பதை சுட்டியதாகும். எனது கருத்தை மாற்றுக் கருத்தாக அங்கீகரிக்க மறுக்கின்ற இழிவான நிலையில், அது ஏற்படுகின்றது. இந்த தடைகளைக் கடந்து, தனிமனிதனாக ஒரு சில தோழர்களின் உதவியுடன் மக்களை அடைய வேண்டி உள்ளது. மக்கள் போராட்டம் என்றால் என்ன? இது பலர் முன் புதிரான கேள்வியாகி விடுகின்றது.

ஒருபுறம் புலிகள், மறுபுறம் புலியல்லாத புல்லுருவிகளின் கோட்பாடுகள், இதை அதிசயமான பொருளாக்கி விட்டனர். இது போன்ற இழிவாட ல், கிண்டல்கள், நக்கல்கள் சமூகத்தில் ஆதிக்க மொழியாகின்றது. மக்கள் போராட்டம் என்பதே இழிவுக்குள்ளாகிவிடுகின்றது. நாங்கள் இதை எதிர்நீச்சல் ஊடாக சந்திக்கின்றோம், சந்திப்போம்.

பி.கு: மக்கள் போராட்டம் என்றால் என்ன? இதை தனியான தலைப்பாக கொண்டு விரைவில் பார்ப்போம்.


Wednesday, October 24, 2007

மறுபக்கம்

பேராசிரியர். திரு.சி.சிவசேகரம்

மிழ்த் தேசியவாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது தேசியவாதத்தைவிடப் பிரதேசவாதத்தையே முன்னிறுத்துகிற போக்குக்களுக்கு முகங்கொடுக்க முயலாத நிலையில் தேசியவாதம் தடுமாறுகிறது. எத்தனையோ இயக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்மோதல்களாலும் இயக்கங்களிடையிலான மோதல்களாலும் தமிழ்ச் சமூகம் வீணான உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கிறது. அன்று தமிழ் இடதுசாரிகளை மட்டுமன்றித் தமிழ் ஈழக் கோரிக்கைகளை நிபந்தனையின்றி ஏற்க மறுத்த எல்லாரையுமே துரோகிகள் என்று பட்டஞ் சூட்டிப் பழித்த தமிழ்த் தேசியவாத இளைஞர் குழுக்கள் இப்போது எங்கே போய் நிற்கின்றன? யாருடைய நிழலை நாடுகின்றன? யாருக்காகப் பணியாற்றுகின்றன?

எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ்மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா? தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா? இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது? அதை எவ்வாறு மாற்றுவது?

பதினெட்டாண்டுகட்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி ஒன்று, காணாமற் போன பிள்ளைகள் பற்றி எழுச்சியுடன் ஊர்வலம் போய் உரிமைக் குரல் எழுப்பியதை மனதில் இருத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் மூலம் தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கேட்டுத் தாய்மார் ஒரு தமிழ் அரசியல்வாதியின் காலில் விழுந்து கேட்டுக் கொள்ளும் காட்சியை அதனுடன் ஒப்பிடும் போது தமிழ் மக்களின் விடுதலை உணர்வு எங்கே வந்து நிற்கிறது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.



தமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்திலிருந்தே மீட்பர்களின் அரசியல் தான் இருந்து வருகிறது. அதற்கு முதல் மேட்டுக்குடி மேய்ப்பர்களின் அரசியல் இருந்து வந்தது. சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் ஆங்கிலத்தில் பேசி வென்று தருகிற தலைவர்களை நம்பி இருந்த சமூகம் பிறகு சத்தியாக்கிரகம் செய்து சமஷ்டி பெற்றுத்தர முடியும் என்கிற அரசியல் தலைமையை நம்பியது. தமிழ் பேசும் மக்கள் பற்றி நிறையவே பேசப்பட்டது. ஆனாலும், தமிழரைத் தமிழர் சாதியின் பேராலும் வம்சாவளியின் பேராலும் பிரதேசத்தின் பேராலும் ஏறி மிதிக்கிறது பற்றிக் கண்டுங் காணாமலே தமிழ்த் தேசியத் தலைமைகள் செயற்பட்டன.

முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் மலையக மக்களின் தனித்துவம் பற்றியும் எப்போதிருந்தோ சொல்லி வந்தவர்கள் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று நிந்திக்கப்பட்டனர். வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டியோ அதே அடிப்படையில் அமைந்த தமிழீழமோ எந்த வகையில் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் என்பது பற்றி எள்ளளவும் அக்கறையில்லாமலே சமஷ்டிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இவற்றை விமர்சித்தவர்கள் தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டனர்.

1976 ஆம் ஆண்டு தமிழீழத்தை வென்று தர உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது என்று ஒரு பகிரங்க விவாதத்தின் போது கம்யூனிஸ்ற்றான சண்முகதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்தை நடுவர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையிற் கேட்டபோது, தருமலிங்கம் கூறிய பதில் "அது எங்கள் இரகசியம்" என்பது தான். அந்த இரகசியமும் சிதம்பர இரகசியம் மாதிரி இல்லாத ஒரு இரகசியமே தான். தருமலிங்கத்தின் பதில் தப்பியோடப் போதுமானதாக இருந்ததே ஒழிய நேர்மையானதல்ல என்பதைப் பலரும் அறிவர். ஆனாலும், அந்தவிதமான இரகசியங்களாலேயே தமிழ் மக்கள் இன்னமும் வழிநடத்தப்படுகின்றனர்.

தமிழ் மக்கள் யார் யாரையோ எல்லாம் நம்புமாறு பல வழிகளிலும் வற்புறுத்தப்படுகின்றனர். இந்தியா பற்றிய நம்பிக்கை ஒரு வகையில் இல்லாவிட்டால் இன்னொரு வகையில், வளர்க்கப்பட்டே வருகிறது. கடைசியாக பாரதீய ஜனதா கட்சியை நம்பினால் காரியம் கைகூடும் என்கிற நம்பிக்கையை வளர்க்கிற முயற்சிகளில் வந்து நிற்கிறோம். இந்தியாவில் நாம் நம்புமாறு பரிந்துரைக்கப்படுகிற அரசியல் அமைப்புக்களதும் அரசியல் தலைவர்களதும் எண்ணிக்கை இந்து கடவுளரின் எண்ணிக்கையை எப்போது தாண்டும் என்று என்னாற் கூற இயலாது. ஆனால், என்றாவது தாண்டும் என்று தான் நினைக்கிறேன். அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய சமூகம், ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் என்று பலவேறு தெய்வங்களை வேண்டிக் கொள்ளுவதில் தான் தமிழ்த் தலைமைகளது கவனங் குவிந்திருக்கிறது.

பலஸ்தீன மக்கள் எவ்வாறு நாடகமாடி ஏய்க்கப்பட்டார்களோ அவ்வாறே தமிழ் மக்களும் நாடகமாடி ஏய்க்கப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் இயக்கம் அந்த நாடகத்தை நன்றாக அறிந்து அம்பலப்படுத்தியதால் அவர்கள் இஸ்ரேலினதும் அதன் எசமான நாட்டினதும் எசமான நாட்டின் கூட்டாளிகளாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறது. எனினும், மக்கள் ஆதரவை அவ்வாறான தண்டனைகள் வலுப்படுத்துகின்றன. ஹமாஸ் எவ்வளவு தூரம் மக்களுக்கு நெருக்கமாகிறதோ அவ்வளவுக்கு அது தோற்கடிக்க இயலாத ஒரு சக்தியாக இருக்கும். பலஸ்தீன மக்கள் இன்னமும் இன்னல்களிடையிலும் இடிபாடுகளிடையிலும் அகதி முகாம்களிலும் வாழுகின்றனர். இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டோரும் திரும்பி வருவது பற்றியும் தாயகம் பற்றியும் இன்னமும் பேசுகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் நடுத்தர வர்க்கத்தினரின் நிலையினின்று அவர்கள் ஆரோக்கியமான ஒரு வகையில் வேறுபடுகின்றனர்.

விடுதலை என்பது காலக்கெடு வைத்து சொல்லப்படுவதல்ல. விடுதலை என்பது எவரும் வந்து பெற்றுத் தருவதுமல்ல. எந்தவொரு அரசியல் போராட்டத் தலைமையும் வழிகாட்டலாமே ஒழிய ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரள் தனது தோள்கள் மீது விடுதலைப் போராட்டத்தை ஏற்றுச் சுமந்து முன்செல்லாத வரை விடுதலை வெல்லப்படக் கூடியதல்ல. ஒரு ஆயுதப் போராட்ட வெற்றியை எடுத்து அதை விடுதலையாக மாற்றுகிற பணி மக்களுடையது. எனினும், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபில், மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்கிற கருத்தாக்கங்கள் இன்று வரை வேரூன்றவில்லை. தமிழ் மக்களின் விடுதலையைக் குத்தகைக்காரர்கள் எவராலும் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறக்கவிடலாகாது.

தொண்டமான், சந்திரசேகரன் போன்றோரின் துரோகங்கள் பற்றிக் கசப்புடன் பேசப்படுகிறது. ஆனால், மலையகத் தமிழருக்கு அவர்கள் செய்து வந்துள்ள துரோகத்தைவிட அதிகமாக வடக்கு - கிழக்கின் தமிழர்கட்கு என்ன செய்துள்ளனர்? முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என்று பேசப்படுகிறது. அவர்களை முஸ்லிம் மக்களே நம்ப இயலவில்லை. அதுபோகத், தமிழ்த் தலைவர்களைத் தமிழ் மக்கள் நம்ப முடிகிறதா?

இன்று தமிழ்த் தேசிய இனம் ஒரு அபாயகரமான திருப்புமுனையை நோக்கி நிற்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் இன்று நிஜமான ஒரு சாத்தியப்பாடாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக, அகதிகள் பிரச்சினையாக, எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாக ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.

உலகில் நீதியையும் நியாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கிற எல்லாரது நட்பும் தமிழ் மக்களுக்கு தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அந்த நட்பு ஈவோருக்கும் இரப்போருக்கும் இடையிலான உறவாக இருக்கக்கூடாது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒடுக்குமுறை தொடர்பான எப்பிரச்சினையும் கருணையினால் தீர்க்கப்பட்டதில்லை.

என்.ஜி.ஓ.க்கள் கருணையின் பேரிலும் மனிதாபிமானத்தின் பேரிலும் மக்களை மேலும் மேலும் அடிமைத்தனத்திற்குள் அமிழ்த்துகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் என்.ஜி.ஓ.க்கள் மூலம் தமது கருமங்களை ஆற்றிக் கொள்ளுகின்றன. இந்த நாடு முழுவதையும் அடிமைப்படுத்த முனைப்பாக நிற்கின்றன அவையும் அவற்றின் ஏவலில் இயங்குகிற எந்த அரசாங்க நிறுவனமும் விடுதலைக்கு வழி செய்யப்போவதில்லை.

தமிழ் மக்கள் முழுமையாக அரசியல் விழிப்புப்பெறாமல் அவர்கட்கு விடுதலையும் இல்லை விமோசனமும் இல்லை. அதுவரை கருணையின் பேரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவர்.

Tuesday, October 23, 2007

தமிழர் சுயநிர்ணயம்,விடுதலை:"தமிழ்ப்பயங்கரவாதமாம்"

தமிழர் சுயநிர்ணயம்,விடுதலை:"தமிழ்ப்பயங்கரவாதமாம்" புலிசார் அரசியலுக்கு அண்மையிலுள்ள ஊடகங்களுக்கு-நிதர்சனம்.கொம்!!!

மலைய மக்கள் முன்னணி அரசியல்வாதியும்,எம்.பி.யுமான மனோ கணோசன் சிங்கள அடிப்படை வாதத்தின் காரண காரியத்தால்"தமிழ்பயங்கர வாதம்" எழுந்ததாதகச் சொல்லியிருக்கிறார்."இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பெளத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே."-நிதர்சனம்-கொம்.ஆக,தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயத்திக்கான போராட்டம்,இலங்கையில் அவர்கள் தமது பாரம்பரியப் பூமியல் சுதந்திரமாக வாழ்வதும்,தமது வாழ்வாதாரங்களைத் தம் உழைப்பால் கட்டியொழுப்புவதற்குமான சுய நிர்ணயம்,சுதந்திரம்"தமிழ்ப் பயங்கர வாதம்"எனும் திட்டமிட்ட சிங்கள அரசின் தமிழ் மக்கள்மீதான கருத்தியல் ஒடுக்குமுறையின் தொடர்ச்சி இங்கே விரிகிறது.நமது மக்களின் தார்மீகப் போராட்டம்,அவர்களது இன்னுயிர்களை ஈகை செய்தும்,கொலைகளாகவும் கொடுக்கப்பட்டு,இன்றுவரை தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து, எவரெவர் நலன்களுக்காகவோ சிதைவுற்றுப் போனதன் தொடர்ச்சியாகவின்று இந்தக் கேவலமான நிலைக்குள் வந்து தொலைகிறது.

தமிழர்களின் அடிப்படையுரிமையை இவ்வுளவு தூரம் சிதைப்பதற்குப் புலிகளைவிட வேறெவரும் முனையவில்லையென்பதை மனோகணேசன் சொல்லும் அரசியலே சாட்சியாகிறது.நமது போராட்டத்தில் புலிகளை"இந்தியா,பாகிஸ்த்தான்,சீனா"பாவிப்பதெல்லாம் என்பது புலிகள் எவ்வளவு தூரம் அடி முட்டாள்கள் என்பதையும்,அன்னிய அடிவருடிகள் என்பதையும் மனோகணேசன் நிரூபிக்கின்றார்.அதையும் நிதர்சனம்.கொம் என்ற இணையத்தளம் தனது செய்தியில் முக்கியம் கொடுத்துப் மீள் பிரசுரம் செய்வதென்றால் இவர்கள் யார்? இந்த இலட்சணத்தில் மாற்றுக் கருத்தாளர்களை இவர்கள்"துரோகிகளாம்"-கைக்கூலிகளாம் என்று பரப்புரை வேற செய்து தமது அன்னிய அடிவருடித்தனத்தை மறைக்க முனைகிறார்கள்?இன்றுவரை தமிழர்களுக்காகப் புலிகள் செய்யும் போராட்டத்தை-கொலைகளை ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள்"தேசிய விடுதலை,சுயநிர்ணய"ப் போராட்டம் என்று தொடர் கூட்டங்கள்,ஊர்வலங்கள் வைத்து உலகத்துக்குச் சொல்லும்போது, ஒரே நொடியில் மனே கணேசன் சிங்கள அரச பாணியில் பயங்கரவாதம் என்று சொல்வதை நிதர்சனம்.கொம் உலகம் பூராகப் பரப்புகிறதென்றால் இந்தவூடகம் எவரது நலன்களைப் பிரதிபலிக்கிறது?



அடிமுட்டாள்களால் நடாத்தப்படும் பத்திரிகைகள் புலிகளின் பெயரைச் சொல்லி நமது விடுதலையைப் பயங்கரவாதமாக்கிவிட்டார்கள்.புலிகளின் தொடர் கொலைகளும்,ஜனநாயக மறுப்பும்,அராஜகமான போராட்டச் செல் நெறியும் நமது விடுதலையைச் சாகடித்து அன்னியர் நலனுக்கு எப்படி உடந்தையாக இருப்பதென்பதை நாம் கூறும்போதெல்லாம் நிராகரித்தவர்கள்,இப்போது புலிகளின் விசுவாசிகள்-ஆதரவாளாகளாலேயே "அது"உண்மைதான் எனும்போது என்ன சொல்கிறார்கள்?இன்றுவரையும் எமது மக்களின் தார்மீகப் போராட்டத்தை மரணப்படுக்கைவரை அழைத்துச் சென்ற புலிகளை, எந்தெந்த வெளியுலகச் சக்திகள் தத்தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள்,எவர் இதற்குப் பாத்திரமானவர்,எவர் புலிகளைப் பயன் படுத்த வேண்டுமென்று மனோகணேசன் இடும் பட்டியலே நாம் சொல்வதை உதாரணப்படுத்தப் போதுமானது.எனவே,எமது மக்களின் சுயநிர்ணயத்துக்கு,சுதந்திரத்துகான போராட்டம் எவருக்கும்,எந்த நாட்டிற்கும் சேவை செய்வதற்கான போராட்டமில்லையென்பதும்,அப்போராட்டம் இதுவரை செய்த தவறுகளையெல்லம் பரிசீலித்து, மக்கள் புலிகளின் அடிவருடிகளை,அடி முட்டாள்களை,கையாலாகாத தலைமையை நிராகரித்துத் தேசத்துக்காப்போராடும் புலிகளின் அடிமட்டப் போராளிகளை புரட்சிகரப் போராட்டப் பாதைகுள் நகர்த்தியாகவேண்டும்.

இத் தேவை மிக அவசியமானதாகவே இருக்கிறது.இதை நிராகரித்துவிட்டு,புலித் தலைமையும்,அவர்களின் உலக-உள்ளுர் எஜமானர்களும் சொல்லும்,செய்விக்கும் போராட்டத்துக்காக நமது சிறார்கள் உயிர் விடுவது மிகப் பெரும் "துரோகம்"ஆகும்.இதைத் தடுத்து நிறுத்துவதற்காக நாம் உயிர்கூட இழப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்.ஏனெனில், நமது மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தைச் சொல்லியே தமது பிழைப்பையும் பண வருவாயையும் மிக வலுவாகச் செழிப்பாக்கி உறுதிப்படுத்திய தமிழ் ஆளும் வர்க்கம், இப்போது நமது போராட்டத்தைச் சிங்களப் பாசிச அரசோடிணைந்து"தமிழ்ப் பயங்கரவாதம்"என்று கொச்சைப்படுத்தி,நமது நியாயத்தன்மையையே கருத்தியல் தளத்தில் உடைத்தெறிந்து, தேசியவிடுதலைப் போராட்டத்தின் தார்மீகத் தேவையையே நிராகரிக்கிறார்கள்.இந்த அபாயமான சூழலை அனைவருக்கும் போராடுவதாகச் சொல்லும் புலிப் போராட்ட இயக்கமே மெல்ல உருவாக்கிவிட்டுள்ளது.

இதைக் கூர்ந்து கவனித்தால் புலிகளின் மக்கள் விரோதத்தன்மையை உணரமுடியும்.புலியின் தலைமைக்கும்,ஆனந்தசங்கரி,டக்ளஸ் தேவானந்தா,மற்றும் உதிரிக் குழுக்களுக்கும் எந்த வகையிலும் வித்தியாசம் கிடையவே கிடையாது!சாரம்சத்தில் இவர்கள் அனைவருமே தமிழ் பேசும் மக்களின் எதிரிகள்தான்.இவர்கள் அன்னிய கைக்கூலிகள்-அன்னிய அரசுகளால் வளர்த்துவிடப்பட்ட மக்கள் விரோதிகள்.நமது மக்களின் உயிர்கள் நாளாந்தம் பறிக்கப்படுகிறது.இதுவரை இலட்சம் பிஞ்சுகளின் இன்னுயிர்கள் பறிக்கப்பட்டு,தமிழர்களின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டும் அன்னியர்களுக்காகவொரு போராட்டம் தேவையா?எம் மக்களின் இருப்பை அழித்து,உரிமையை அழித்து,அன்னியனின் காலடியில் எம் மக்களை மண்டியிட வைப்பதற்கு நாம் மூடர்களில்லை.எமது அனைத்து வளங்களையும் இதற்காகச் செலவிட்டு இதைத் தடுப்போம்.எம் இனத்தின் பாரம்பரியப் புவிப்பரப்பை எவரும் தத்தமது நலன்களுக்காகச் சுருட்ட முடியாது.

இது உழைத்துண்ணட எமது மூதாதையரின் வாழ்வோடும்,வரலாற்றோடும் பிணைந்து உரிமையாககிறது.இந்தவுரிமைக்காகச் செய்யும் இந்தப் போராட்டத்தை எவன் கூறுவான்"தமிழ்ப் பயங்கர வாதம்"என்று?புலிகளின் தறுதலைத்தனமான அரசியில்-போராட்டச் செல் நெறிக்கொள்கையும்,அவர்களது அன்னிய நலனும்,அடியாள் பாத்திரமும் எங்கள் உரிமையை-உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கிவிட்டுள்ளது.இதைத் தடுப்பதற்குக் குரல் கொடுக்கும் எம்மைத் தம்மைப் போலவே நாம் அன்னியக் கைக்கூலிகள் என்றும்,அடிவருடிகள் என்றும் கதையளக்கும் இந்தப் புலிகளும்,அவர்களது விசுவாசிகளுமே தமிழ் பேசும் மக்களின் முழு மொத்த எதிரிகள் என்பதற்கு இந்த நிதர்சனத்தின் அரசியலே சாட்சி.இவ்வளவு மடையர்களாக இருக்கும் இவர்களே,தம்மைப் போலவே தமிழ் பேசும் மக்களும் இருந்தாக வேண்டுமென்பதற்காக நம் கல்வியாளர்கள் பலரை அழித்துவிட்டார்கள்.

இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய இடதுசாரிய அறிவாளிகளையும் கொல்வதற்காக அவர்களையும் அன்னியக் கைக்கூலியென முத்திரைகுத்தி வருகிறார்கள்.கூடவே, நமது மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும் மெல்லப் பயங்கரவாதமாக்கி நம் மக்களின் வரலாற்றையே அழிக்க முனையும் தமிழ் ஆளும் வர்க்கத்தையும், அவர்களுக்குத் தலைமைதாங்க முனையும் அனைத்துக் கயவர்களை அம்பலப்படுத்தி நாம் நமது மக்களின் விலங்கை ஒடிப்போம்.அதற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுக்கவும்,தலைமை தாங்கவும் நாம் எமக்குள் ஒருங்கிணையவேண்டிய காலவர்த்தமானம் எம்மைச் சூழ்ந்துகிடக்கிறது.நாம் மெளனிக்கும் ஒவ்வொரு நிமிடமும்,நம்மை அன்னிய சக்திகளிடம் அடைவு வைப்பதற்குப் புலிகளும்,ஆனந்த சங்கரிகளும்,டக்ளஸ் தேவானந்தாக்களும்,இன்னும் எத்தனையோ குறுங்குழுக்களுமாக இன்று முனையும்போது,இடதுசாரிய உதிரிக் குழுக்களாகக் கிடக்கும் முற்பேர்காளர்களே உங்கள் உயிரைக் கொடுத்தாவது தமிழ்பேசும் மக்களுக்குத் தலைமை கொடுங்கள்.எம்மைத் தவிர இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு எவரும் விமோசனம் செய்யப் போவதில்லை.நாமே, நமது தேசபக்தப் போராளிகளுக்கு முற்போக்குப் போராட்டப்பாதையைக் காண்பித்து நமது மக்களை முழுமையாகப் போராட்டத்தோடு இணைத்து, அவர்களால்மட்டுமே அவர்களது விலங்கை ஒடிக்க முடியுமென்பதாக வரலாற்றை மாற்றியெழுத வேண்டும்.இதற்காக உலகம் பூராகவும் இருக்கும் முற்போக்குச் சக்திகளோடு கரங்களை இன்னும் வலுவாக இணைப்போம்,புலித் தலைமையையும்,அவர்களது அரசியலையும்.வெளிநாட்டு உறவுகளையும்,நிதர்சனம்.கொம் போன்ற மக்கள் விரோதப் புலி முகவர்களையும் அம்பலப்படுத்தி,மக்கள் அரங்குக்கு இந்த விரோதிகளை இழுத்துவந்து அம்பலப்படுத்வோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
21.10.2007

நிதர்சனம்.கொம் கட்டுரையைக் கீழே படிக்கலாம்:

சிங்கள அடிப்படைவாதமே தமிழ் பயங்கரவாதத்தை உருவாக்கியதாக மனோ கணேசன் எம்.பி. தெரிவிப்பு!ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர்2007 ஸ ஜ நசார் ஸஇலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வருகின்ற ஊடக செய்திகள் எம்மை வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன. எமது மூதாதையரின் தாயகமான இந்தியா எப்போது தான் இலங்கை பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது என மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளையிட்டு மனோ எம்.பி.ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதைத் தடுப்பதற்காகவே இந்தியா இலங்கைக்கு இராணுவ தளபாட உதவி வழங்குவதாக கூறப்படுகிறது.

இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நுழைவதை தடுப்பதும், இலங்கையில் தமிழ் தேசியத்தை ஒழிப்பதும் இந்தியாவின் நலன் சார்ந்தது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள்.ஆனால், இது மீண்டும் இந்தியாவுக்கே பாதகமாக முடியும். இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெறுவது இந்தியாவுக்குப் பிடிக்காதது என்பதை விரைவில் பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். அதன் மூலம் பாகிஸ்தானிய உளவுப்பிரிவு விடுதலைப் புலிகளுக்கு இரகசிய உதவிகளை வழங்கும் எதிர்மறை நிலை ஏற்படலாம் என்பதை இந்தியத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத் தலைவர்கள் வரலாற்றை மீட்டி பார்க்க வேண்டும். இந்தியாவின் சீனா, பாகிஸ்தானிய எல்லை 1960 களில் நெருக்கடியாக இருந்தது.

அதனாலேயே தென்புல எல்லை நாடான இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்வதற்காக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களில் பெருந்தொகையினரை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா இணங்கியது. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அப்பாவி தொழிலாளர்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்டது. உண்மையில் அவ்வேளையில் இந்தியா இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் மீளப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஒருவரையும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.இதனால் அன்று பல குடும்பங்கள் சிதைந்தன. இதன் மூலம் எமது மக்கள் தொகை குறைந்து விட்டதனால் எமது அரசியல் பலமும் குறைந்து விட்டது. அத்துடன் தற்போது சிங்கள அடிப்படை வாதத்திற்கும் தமிழ் தீவிர வாதத்திற்கும் இடையில் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் சிக்கியுள்ளனர். மறுபக்கத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எமது மக்கள் அங்கே பரிதாப வாழ்க்கை வாழுகின்றனர். ஆனால், இத்தனைக்கு பிறகும் இலங்கையை உண்மையான நட்பு நாடாக இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அதேபோல் தமிழ் போராளிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தது. 1980 களில் அன்றைய ஜே.ஆரின் அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கை தனக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இவைகளை இந்தியா செய்தது. பிறகு என்ன நடந்தது? இந்தியா ராஜீவ் காந்தியையும் சுமார் 1,500 இந்திய வீரர்களையும் இழந்தது. அதேபோல் இந்திய படையினரால் சுமார் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இவை கடந்த காலங்களிலே தவறான ஆலோசகர்களின் பேச்சுகளை கேட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களாகும். தூரப்பார்வை இல்லாத முடிவுகள் ஒருபோதும் தீர்வுகளை தராது. இந்தியாவின் தவறான முடிவுகள் இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் ஆகிய எந்தத் தரப்பினருக்கும் நன்மை தரவில்லை. வரலாறு முழுக்க தவறான முடிவுகள் பெரும் துன்பங்களையே தந்துள்ளன. இன்று நாங்கள் இதையிட்டு வெட்கமும் வேதனையும் அடைகின்றோம். இலங்கையில் இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதை இந்திய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் மலர்வதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாகும். இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது.

சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே. இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா ஆயிரம் முறை சொல்லியிருக்கின்றது.இன்னும் ஒரு ஆயிரம் முறை அதே இந்தியா சொல்லட்டும். அது எங்களின் நிலைப்பாடு ஆகும். ஆனால், ஐக்கியம் என்பது சமத்துவத்துடன் சேர்ந்து வரவேண்டும். இனிமேல் இந்தியா இலங்கையின் ஐக்கியத்தையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் சமாந்தரமாக கணித்துப் பார்த்து செயற்பட வேண்டிய வேளை வந்துவிட்டது என எண்ணுகிறேன். இந்தியாவின் மொழிவாரி மாநில கொள்கைகளை பற்றி இலங்கை அரசிற்கு இந்தியா உறுதியாக எடுத்துக்கூற வேண்டும். இதுவே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுதரும் மருந்தாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டியது உடனடி தேவையாகும். இந்தியாவிலிருந்து எவரோ ஒரு சிலர் எடுக்கும் தவறான முடிவுகள் காரணமாக எமது மக்கள் யுத்தம், கடத்தல், சட்டவிரோத படுகொலைகள் ஆகியவற்றால் தொடர்ந்தும் உயிர் இழப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் புதுடில்லிக்கு எதையும் எடுத்துக்கூறும் நிலைமையில் இல்லை. ஏனென்றால் தமிழகத்து அரசியல்வாதிகள் முழுமையான புலி ஆதரவு, முழுமையான புலி எதிர்ப்பு ஆகிய இரண்டு தீவிர நிலைப்பாடுகளில் இருக்கின்றார்கள். உண்மையில் பிரச்சினை என்பது இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் தான் இருக்கின்றது. இலங்கை தொடர்பிலான கொள்கையில் இந்தியா அடிப்படை மாற்றங்களை செய்யவேண்டும். காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியை இது தொடர்பில் சந்தித்து உரையாட நான் விரும்புகின்றேன். இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Monday, October 22, 2007

மதவாதி மனிவுரிமைவாதியாக இருக்கமுடியாது.

தலித் மாநாட்டில் பசிர் என்ற முஸ்லிம் மதவாதி, முஸ்லீம் இடையே சாதி இல்லையென்றார். ஒரு பகுத்தறிவாளனாக அல்லாது, முஸ்லீம் என்ற மத அடையாளத்துடன் சாதிய அவலத்தையே மூடிமறைக்க முனைந்தார். இவர்கள் மனித உரிமைவாதிகளாம். ஒரு மதவாதி எப்படி மனித உரிமைவாதியாக இருக்கமுடியும். பக்தன் இருக்க முடியும், மதவாதியோ தத்துவஞானியோ (புலியெதிரிப்பு ஆய்வாளர்) அல்ல.

தமிழ் மணத்தில், எமது தமிழ் அரங்கம் தளத்தில் வாசகர் ஒருவர், ஆதாரத்துடன் முஸ்லீம் மதத்தில் சாதியம் பற்றி கூறுவதை பாருங்கள்.

பி.இரயாகரன்
22.10.2007

நீங்கள் பதிந்துள்ள விஷயம் வெகுவாக உண்மையென்று நினைக்கின்றேன். இது உண்மை தான். குர்-ஆனும், முகம்மது நபியின் இறுதி சொற்பொழிவும் சாதி, நிற, மொழி வேற்றுமைகளுக்கு சவுக்கடி கொடுக்கிறது. ஆனால் நடைமுறையில் உலக முஸ்லீம்களிடையே குறிப்பாக உர்தூ பேசும் முஸ்லீம்களிடையே நீங்கள் கூறியுள்ள சாதி வேறுபாடு இருப்பது உண்மைதான். சமீபத்தில் "India Untouched" எனும் திரைப்படம் கண்டேன்.

அதனை இயக்கியவர் ஸ்டாலின் எனும் ஒரு மலையாளி ஆவார். அந்த திரைப்படம் ஒரு இடதுசாரி சிந்தனையாளர்களால் திரையிடப்பட்டது. இயக்குனரும் அங்கே இருந்தார். அத்திரைப் படம் அனைத்து மதங்களிலும் சாதியிருப்பதைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது. இஸ்லாத்தில் உள்ள சாதி பழக்கங்களைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். ஏனெனில் நான் அறிந்த இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை. நடைமுறையிலும் ( நான் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன்) நான் காணவில்லை. படம் முடிந்ததும் சேக்குகளும் செய்யத்களும் செய்யும் சாதி வேறுபாடுகளைப் பற்றி, உர்தூவினை தாய் மொழியாகக் கொண்ட நண்பனிடம் கேட்ட போது அவன் அதை அமோதித்தான்.

நடைமுறையில் உள்ள இஸ்லாத்தில் தமிழகத்தில் கூட முஸ்லீம்களிடையே இராவுத்தர், மரைகாயர் என்று பல்வீனமான பிரிவுகள் உள்ளன. ஆனால் திருமணம் போன்றவற்றில் இப்பிரிவுகள் பெரிய தடையாக இருப்பதில்லை. ஆனால் உர்தூ மக்களிடையே, செய்யத் - ஷேக் பிரிவு ஒருவருகொருவர் ஆகாத பிரிவுகள். இவர்கள் இருவரும் தங்களை அரபு நாட்டின் வாரிசுகள் எனக் கருதுகின்றனவாம். அந்த படத்திலும் அதைத்தான் கூறினார்கள். எனது நண்பனும் அதைத்தான் கூறினான்.

ஒரு காஷ்மீரத்து நண்பரிடம் இது பற்றிக் கேட்ட போது அவரும் அது உண்மை யென்றார். அதன் பிறகுதான் நான் பாக்கிஸ்தானில் நிகழும் கெளரவ கொலைகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.அந்த திரைப் படத்தை நான் அனைவருக்கும் பரிந்துரைக்கின்றேன். அதிர்ச்சித் தகவல்கள் அதில் உள்ளன. இந்த சாதி சண்டைகளால் தனியே கட்டப்பட்ட பள்ளிவாசலையும் பற்றி கூட காணலாம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ளதை போல இது பீகாரில் அதிகம் எனக் கருதுகிறேன். அப்படத்திலும் அப்படித் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. (ஆனால் ஷேக் - செய்யது சண்டை இந்தியா முழுவதும் உள்ளது என நினைக்கிறேன்)(அந்த படம் இந்திய கிறிஸ்தவத்தில் உள்ள சாதியையும், சீக்கியர்கள் மத்தியில் உள்ள சாதியையும் பற்றிக் கூட பல அதிர்ச்சித் தரும் ஆனால் நடை முறையில் உள்ள உண்மைகளைக் கூறுகிறது.)உங்கள் பதிவிற்கு நன்றி. அப்படத்தினைப் பார்த்ததும் அதைப் பற்றி ஒரு பதிவு போட நினைத்தேன். ஆனால் அப்போது இணையப் பக்கம் அவ்வளவாக வர முடியவில்லை.

மு மாலிக்

http://vilambi.blogspot.com/

Sunday, October 21, 2007

தலித் மாநாட்டில் ஒரு முஸ்லிம் மதவாதி

தலித் மாநாட்டில் பசிர் என்ற முஸ்லீம் மதவாதி, முஸ்லிம் மக்கள் மத்தியில் சாதியில்லை என்றார். பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட ஒரு கூட்டத்தில், ஒரு மதவாதி ஒரு பேச்சாளராக வந்ததுடன் முஸ்லீம் மதத்துக்காக, முஸ்லீம் சாதிய வரலாற்றையே மறுத்துரைத்தார். இந்தியாவில் முஸ்லிம் மக்கள் மத்தியில் சாதியம் எப்படி உள்ளது. படித்துப் பாருங்கள்.

பி.இரயாகரன்
21.10.2007

இஸ்லாத்தில் மனுவாதிகள்
(பதிப்புரை)

இஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.

தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார்.

கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ""ஃபிராண்டியர்'' (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு"தர்ம' அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.

இஸ்லாத்தில் மனுவாதிகள்

(இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)

கேள்வி: இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?

பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.

1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, ""குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்'' என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.

ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ் இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, ""இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?'' என்று கேட்டார்.

அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.

இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.

இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.
சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?
இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?

பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்தலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.

மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.

இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே ""இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்'' என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ""ஜிந்தகிஇநவ்'' என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.

கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?

பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.

மறுபுறம், இந்திய வரலாற்றில் "இஸ்லாமிய ஆட்சி' என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் "உயர்சாதியினர்' என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் "கீழ் சாதியினர்' என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.
இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் ""முன்டாகாப் அல்தாவாரிக்'', மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் ""தாரிக்இஃபிரோஸ் ஷாஹி'', குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் ""இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்'' ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.

இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.

இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் "கீழ்' சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

""குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!'' இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது ""சிராஜுல் ஹேதயா'' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.

மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை ""மனுவாதிகள்'' என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.

"மாபெரும்' மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது ""முன்டகாப்அல்தாவாரிஹ்'' நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட ""ஃபடாவாஇஆலம்கிரி'' என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் "கீழ்' சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.
பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட ""டெல்லி உருது அக்பர்''இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; "கீழ்' சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் "இஸ்லாமிய' ஆட்சிக் காலத்தின் "பொற்காலம்' என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்"பொற்கால' ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த "கீழ்' சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.

பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் ""ராஜா'' என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.

சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட "மேல்' சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் "கீழ்' சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.

கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த ""மனுவாதி உலேமாக்கள்'' என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?

பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் "புனித' மற்றவர்களாக "அசுத்த'மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது ""இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்'' நூலில் குறிப்பிடுகிறார்.

கேள்வி: "இஸ்லாமிய' ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த "மேல்' சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?

பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். ""ஜிந்தகிஇநவ்'' இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.

சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற் றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.

ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், ""சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது'' என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது ""ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா'', ""ஃபிக்இஉமர்'' ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ் க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.

தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். ""தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்'' என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!

தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட ""ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்'' என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு "கீழ்' சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே "மேல்' சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். ""மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்'' என்ற தமது நூலில் அவர், ""முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது'' என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் ("மேல்' சாதி) என்றும் அர்ஸல் ("கீழ்' சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, ""நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்'' என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், "கீழ்' சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!

இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது ""அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்'' நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் ""நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்'' என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி ""வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்'' என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் ""ஜுலாஹா'' என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (""உதவி செய்பவர்கள்'') என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.

இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.

ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் ""மசாவத்இ பகார்இ ஷாரியத்'' என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி ""பாஹிஸ்டி ஜேவார்'' என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் "மரியாதைக்குரிய மேல்குடி' (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் "கீழ்' சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் ""இம்தாத் உல்ஃபடாவா'' என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.

இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை ""நவ்முஸ்லிம்கள்'' என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார்.

— இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்.
*