தமிழ் அரங்கம்

Saturday, October 17, 2009

குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்

இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய ""நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, ""புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

பு.ஜ. வாசகர்களும், தமிழக மக்களும் நேபாள நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையையும், அதனையொட்டி ஐக்கிய நேபாளப் பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) எடுத்திருக்கும் முடிவுகளையும், அம்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அக்கட்சியின் நடைமுறையையும், அதற்கு நேபாள உழைக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் புரிந்து கொள்ள, தோழர் பசந்தாவின் நேர்காணல் பெருமளவில் உதவும் என நம்புகிறோம்.

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 16, 2009

அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்

அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்.

இப்படி பேசுபவர்கள்...
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்

அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, October 15, 2009

ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது

தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்கால இலக்கிய விமர்சனம் குறித்த அவரது கட்டுரைகள், ""விமர்சனங்கள்'' என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. தற்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவில் வசித்து வரும் தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சியலெனினியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார்.

Wednesday, October 14, 2009

சுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் பிரிய

"இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்" என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய உரையாற்றினார்.

இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவரும், 15 வருட சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அத்துடன் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

பேரினவாதப் பாசிசம் புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கியதுடன், சிங்கள புத்திஜீவிகளையும் ஒடுக்கியது. தம்மை விமர்சிக்கும் சிங்கள....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, October 13, 2009

நம்மோடு இருக்கும் எதிரிகள் யார்...? நண்பர்கள் யார்...?

Monday, October 12, 2009

இந்திய இலங்கை அரசுகளின் தொப்புள்கொடி உறவுகள்

இரண்டு தலைமுறைகளை கண்ட முதியவர்
முகாம் கூடாரத்து மூலையில்
யாரிவர்கள் எனக்கேட்கிறார்.....

உலகத்தமிழினத் தலைவரின் தூதுவர்கள்

நேரிடை தகவல் சேர்க்கும் நீதிமான்கள்
இந்திய அரசின் மனச்சாட்சியை தட்டிக்கேட்க .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்