இருவரும்; “நிறைவேற்று அதிகாரம்” கொண்டதைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களால் இயன்ற சகலதையும் செய்கின்றார்கள். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதிமுறை, “ஆணைப் பெண்ணாகவு...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
Sunday, January 24, 2010
வாக்குச் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க", "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?"
புதிய ஜனநாயகக் கட்சியின் மதியுரைஞரும் தத்துவ வழிகாட்டியுமான சிவசேகரம், ஒரு பச்சோந்திக் கவிதை மூலம் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு உங்களை வழிகாட்டுகின்றார். தேர்தலை நிராகரி!, புரட்சி செய்! என்று கோசத்தின் கீழ், இவர்கள் மக்களை வழிகாட்டுவது கிடையாது. அதற்காக இவர்கள் கவிதை எழுதுவதும் கிடையாது. "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" எப்படி என்ற கவலையுடன், அதை வழிகாட்டி கவிதை எழுதுகின்றார்.
இதைச் செய்யமால் "சீட்டைச் .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, January 23, 2010
எது பயங்கரவாதம்?
Friday, January 22, 2010
“நாமல் – எமில்காந்த புகைப்படத்தை வெளியிட்டது தான் என்ற சந்தேகத்தில் என்னைக் கொலை செய்ய ஜனாதிபதி முயற்சிக்கிறார்” – டிரான் அலஸ்
![]() |
தன் வீட்டின் மீது இன்று (22) அதிகாலை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி அறிந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கோழைத்தனமானத் தாக்குதல் எனவும் அவர் கூறியுள்ளார். ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
போலி ஜனநாயக தேர்தலும் மக்கள் விரோத கட்சிகளும்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் மரண ஓலங்கள் இன்னமும் ஒலித்து கொண்டேயிருக்கின்றது யுத்தத்தினால் அங்கவீனரானோர் மற்றும் காயமடைந்தோர்களின் ரணங்கள் இன்னமும் ஆறவில்லை மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்தவர்களது மரண பயம் இன்னமும் அடங்கவில்லை முட்கம்பி வேலிகளின் முகாம்களுக்குள் லட்சக்கணக்கானோர் இன்னமும் எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விக் குறியுடன்…
1977 இல் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
அவசரமான தனது தேர்தலில் மகிந்தா தோற்றால், மகிந்தா குடும்பம் இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்யுமா!?
இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?
அடுத்த இரண்டு வருடம் பின்னான தேர்தலுக்கான அவசியம் ஏன் இன்று எழுந்தது? எதிர்காலத்தில் மக்களுக்கு எதிரான அரசியல் விளைவுகள் எது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…
Thursday, January 21, 2010
துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்
மே 2009இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகள் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப் போராட்டத்தைப் பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை பகையுணர்வு, மவுனம்.
விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில் தான் துரோகிகள் பெருகுகின்றார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில்,........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
பிரபாகரன் துப்பாக்கி முனையில் உருவாக்கிய புலித்தேசியம், இன்று துரோகத்துக்காக தனக்குள் மோதுகின்றது
புலித் தலைவர் முள்ளிவாய்க்காலில் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கே துரோகம் செய்தார். அவரின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்ந்த புலித்தேசியம், பிரபாகரனின் துரோகத்தைப் போல் போட்டிபோட்டு புளுக்கின்றது. மகிந்தா, சரத்பொன்சேகா முதல் ஏகாதிபத்தியம் வரை ஆளுக்காள் தங்கள் தலைவரின் புலித்தேசியம் இதுதான் என்ற விளக்கத்துடன், தங்கள் நக்குண்ணித்தனமான துரோகத்தை தேசியமாகக் கூறிப் பிரகடனம் செய்கின்றனர்.
அன்று பிரபாகரன் தன் துப்பாக்கி.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!
அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. ""அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!'' என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.
2006ஆம் ஆண்டு போடப்பட்ட அமைதி ஒப்பந்தப்படி, மாவோயிஸ்டுகளின் இராணுவப் படை நேபாள இராணுவத்துடன் இணைக்கப்பட்டு, புதிய நேபாள இராணுவம் கட்டியமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியத் தலைமைத் தளபதியோ, அவ்வாறு........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, January 20, 2010
இன்று நாம் செய்ய வேண்டியது என்ன?
இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப்போக்குகளும் தம் சொந்த இருப்பு சார்ந்து, அது நடத்திய யுத்தமும் களையெடுப்பும் சமூகத்தை இயல்பான சமூக ஓட்டத்தில் இருந்து அன்னியமாக்கியது. ஒரு பாசிசம் அழிந்ததன் மூலம், யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை பல முனையில், பலவாக தீவிரமாகின்றது.
மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் இடத்துக்கிடம் வேறுபட்டு நிற்கின்றது. பல முரண்கொண்ட முரண்பாடுகளுடன்,...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, January 19, 2010
யாழ் சமூகம் 20 வருடத்துக்கு முந்தைய மாதிரி ஒரு சமூக அமைப்பல்ல!?
நாடு செல்லும் புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவரும் சொல்வது இதைத்தான். 20 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகமல்ல இன்றைய யாழ் சமூகம் என்று சொல்வதன் மூலம், அதில் இருந்து அன்னியமாகின்றனர். புலம்பெயர் தமிழர் தாங்கள் அப்படியே இருக்கின்ற ஒரு மனநிலையில் இருந்து, தம்மில் இருந்த அன்னியமாகிவிட்ட யாழ் சமூகத்தைப் பார்க்கின்றனர்.
பணம் தான் வாழ்வின் விழுமியமாக, அதை உழையாது பெற்று வாழ்வதும், வரைமுறையின்றி நுகர்வதும் இலட்சியமாகின்றது. உலகமயமாதல் சந்தை முதல் நாடகத் (சீரியல்) தொடர்வரை இதற்கு அமைய, உழைப்பில் இருந்த யாழ் சமூகத்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, January 18, 2010
பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும்-எம்.ஏ. சுசீலா
வலியின் கடுமை…அதன் வீரியம் இவற்றின் நிஜமான தாக்க........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, January 17, 2010
அடிப்படை நேர்மையற்ற இலக்கிய திருட்டில் ஈடுபடும் "மே18" என்ற சதிக் கும்பல் (வியூகம் : பகுதி 04)
மே 18 வரை எதையும் மக்களுக்காக முன்வைத்து போராடதவர்கள் இவர்கள். தமிழீழக்கட்சியின் அரசியலுடன் புலிப்பினாமிக் கும்பலாக மாறி, காட்டிக்கொடுத்தபடி படுத்துக் கிடந்தவர்கள் தான் இந்த திடீர் "மே 18" இயக்கக்கரார்கள். மே 18க்கு பின், திடீரென தம்மை "முன்னினேறிய பிரிவு" என்று கூறிக்கொண்டு திடீரென அரசியல் "வியூகம்" போடுகின்றனர்.
இந்த வியூக அரசியல் எப்படிப்பட்டது? அதன் தார்மிக நேர்மை எப்படிப்பட்டது?
3. மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனைமுறையை "மார்க்சியத்தின்" பெயரில் மறுத்து சேறடிக்கின்றனர்.
"வியூகம்" இதழின் இறுதிக் கட்டுரையான "விடுதலைப் போராட்டமும் புலிகளும்" புலியை விமர்சிக்கின்றது. இந்த விமர்சனம் புலியை "........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் … செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்ஓ கெயிட்டியே!…..
Thursday, March 26, 2009
Thursday, June 19, 2008
மேற்கு வங்கப் பஞ்சாயத்துத் தேர்தல் : 'வன்முறையே வெல்லும!"; - "மார்க்கிஸ்டு"களின் தேர்தல் கொள்கை
சிங்கூர்நந்திகிராமம் பகுதியில், அன்னிய சக்திகள் ஊடுருவி மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகப் புளுகி, அடக்குமுறைகளை நியாயப்படுத்தி வந்த சி.பி.எம் கட்சி, தற்போதைய பஞ்சாயத்து தேர்தல் வெற்றி மூலம் தமது செல்வாக்கை நிரூபிக்கலாம்; பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை இத்தேர்தலைச் சாதகமாக்கிக் கொண்டு பழிவாங்கி ஒடுக்கலாம் என்று கணக்கு போட்டு, இப்பகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு குண்டர் படைகளை ஏவியது.
சி.பி.எம் குண்டர்படையின் வன்முறைகள் பற்றிய புகார்கள் குவியத் தொடங்கியதும், தேர்தல் ஆணையம் மத்திய ரிசர்வ் போலீசுப் படையை இப்பகுதிகளில் குவித்தது. ஆனாலும், உள்ளூர் போலீசின் துணையுடன் சி.பி.எம் குண்டர்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர். மத்திய ரிசர்வ் போலீசு பல இடங்களில் சி.பி.எம்.குண்டர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி, பாதுகாப்பு அளித்த பிறகே எதிர்க்கட்சியினர்.. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்