தமிழ் அரங்கம்

Tuesday, November 29, 2005

பெண் கோருவது

வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல!
பெண் கோருவது வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!


பெண்ணுரிமை, பாலியல் என இலக்கியங்கள் திடீரென புலம்பத் தொடங்கியுள்ளது. தங்கள் சொந்த வக்கிரங்களையும், அரிப்புகளையும் படைப்பாக்கத் தொடங்கியவர்கள் இன்று உலகமயமாதலில் பெண்ணுரிமை, பாலியல் எதுவோ அதையே எடுத்துப் பாதுகாக்கவும், முன்வைக்கவும் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்திய கலாச்சாரம், பண்பாடு என எதுவும் இல்லை என மார்தட்டுமளவுக்கு இவர்களின் படைப்புகள் புற்றீசல் போல் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளது.

இந்த வகையில் ஏங்கெல்ஸ்சை திரித்தும், மறுத்தும் ஆணாதிக்க எழுத்தாக காட்டியும் தங்கள் ஏகாதிபத்திய உலகமயமாதல் பெண்ணியத்தை, ஏங்கெல்ஸ் பெயரால் ஏகாதிபத்திய பாலியலை நியாயப்படுத்த பின்நிற்கவில்லை. ஏங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மார்க்சியத்தை நிறுவும் தொடர்ச்சியில், பெண்கள் எப்படி வாழ்ந்தனர் என்பது முதல் சமூகம் எப்படி இருந்தது என நிறுவிய ஆய்வுகளின் தொடர்ச்சியில், கம்யூனிச சமூகத்தில், சமூகம் எப்படி இருக்கும் எனக் கோடிட்டுக் காட்டிய விடயத்தை திரித்தும், மறுத்தும் தனது ஆணாதிக்க நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றனர். உலகமயமாதல் இன்று இரு தளத்தில் நடைபெறுகின்றது. ஏகாதிபத்தியம் தமது சுரண்டலிலும் பாட்டாளி வர்க்கம் சுரண்டலுக்கு எதிரான தளத்திலும் உலகமயமாதலை வேகப் படுத்தியுள்ளது. இந்த தளத்தில் கலாச்சாரம் பண்பாடு என அனைத்தும் நேர் எதிர் திசையிலானது. ஆனால் சமூகச் சீரழிவாளர்கள் இன்று பாட்டாளிவர்க்கம் அல்லாத பாதையில் தமது காலை எடுத்து வைத்துள்ளனர்.

ஏங்கெல்ஸ்சை திரித்து தனது நோக்கத்துக்கு பயன்படுத்தும் போதும் சரி, அதற்கு முன்னமும் சரி பின்னாலும் சரி ஒருக்காலும் ஏங்கெல்ஸ்சயோ, மார்க்சியத்தை ஏற்றது கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைக்கு என எந்த தீர்வையும் கொண்டு இராத நிலையில் மக்களின் பிரச்சனைகளில் வம்பளந்து தமது அரிப்புகளுக்கு தீனிதேடி திரிகின்றனர். மக்கள் சந்தித்து வரும் துயரத்துக்கு என்ன தீர்வு எனக் கேட்டால் அதுபற்றி அக்கறை கிடையாது கேள்விகள் என்பர்.

ஆனால் பெண்ணுரிமையிலும், பாலியலிலும் தீவிர அக்கறை தீடீரென முளைத்துள்ளது. பாலியல் வக்கிரத்தை புறஉலகம் ஏற்படுத்த, அதற்கு தீனி தேடியதின் தொடர்ச்சியில் இன்று பலர் காமக் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் எழுதத் தொடங்கியுள்ளனர். உதாரணமாக ஐரோப்பாவில் உள்ள தமிழ் ஆண்கள் தொகைக்கு ஏற்ப தமிழ்ப் பெண்கள் இன்மையிலும், தமிழ் விபச்சாரிகள் இன்மையிலும், தொடரும் பொது மகளிர் முறையை தேடி பெண்களை வீதியிலும், வீடுகளை நோக்கி ரெலிபோன் எடுத்தும் அரிப்புகளை கொட்டித் தீர்க்கின்றனர். இதன் மூலம் விபச்சார சமூகத்தை பொதுமகளிர் முறையில் உருவாக்க முடியும் என்ற நப்பாசையில் அலைகின்றனர். இதில் இருந்து வேறுபட்டு, இன்று எழுத்தாளர்களின் பெயரில் அதை எழுத்தில் அதே வக்கிரத்துடன் கையாள்கின்றனர்

பெண்ணுரிமை என்றால் என்ன? புணர்ச்சியின் நிலை என்ன? என்ற விடயத்தை ஆராய்ந்;து கொண்டு ஏங்கெஸ்சை எப்படி தனது நோக்கத்துக்குப் பயன்படுத்துகின்றனர் என ஆராய்வோம்.
பெண்ணுரிமை என்றால் வரைமுறையற்ற பாலியல் உரிமை என இன்று விளக்கம் கொடுக்கவும், அதை விமர்சித்தால் மார்க்சிய வாதிகளை முத்திரை குத்தி தாக்கவும் பின் நிற்கவில்லை. பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் பாலியல் சுதந்திரம் கோரியா? அலைகின்றனர். இல்லை மாறாக ஆணாதிக்க ஆண்கள் தான் அதை பெண்ணுரிமையின் பின்னால் தமது செக்ஸ் வேட்கையை தீர்த்துக் கொள்ள, எப்படி பொது மகளிர் விபச்சாரிகளை உருவாக்கி பாதுகாத்தனரோ, அதே பாணியில் பெண்களை ஒட்டு மொத்தமாக மாற்றிவிட முனைகின்றனர்.

இன்று உள்ள ஒருதார குடும்ப அமைப்பில் பெண் மீதான ஆணின் பாலியல் மேலாதிக்கத்தை முழுப் பெண்கள் மீதும் திணித்து, அதை ஆண்கள் அனுபவிக்க கோருவதே இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் என்ற காட்டுமிராண்டித்தனம்;;. பெண்ணாதிக்கம் நிலவிய காட்டுமிராண்டி சமூகத்தின் தொடர்ச்சியில் தனிச் சொத்துரிமை ஆணாதிக்கத்தை நிறுவிய தொடர்ச்சியில், கட்டுப்பாடற்ற வரையறையின்றி பெண்கள், ஆண்கள் உறவு கொண்ட சமுதாயத்தில், ஆணாதிக்கம் பெண்களின் புணர்ச்சி மீது சூறையாடி துன்புறுத்திய போக்கில் பெண்கள் ஒரு ஆணை தெரிந்தெடுத்து, ஆணாதிக்க சொத்துரிமை ஆண்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள எடுத்த தற்காப்பு நிலையை, சொத்துரிமை கொண்ட ஆண்கள் தமக்கு உரிமையாக்கிய தொடர்ச்சியில் தான் ஒருதார மணம் உருவானது. இங்கும் ஆணாதிக்கம் பெண்களின் தற்காப்பு தெரிவை பறித்தெடுத்து தனக்கு பெண்களை சொத்துரிமையாக்கியது. தனிச் சொத்துரிமை சமூகத்துக்கு வெளியில் சிலரிடம் குவிவது வேகம் பெற்ற போது, பெண்ணின் தற்காப்புரிமை பறிக்கப்பட்டு அடிமைப்படுத்துவது தீவிரமாகியது. இது பெண்களின் மீது ஆண்களின் ஆணாதிக்கம் திணித்த நிகழ்ச்சியில், அதே ஆணாதிக்கம் புதிய சிறைக்குள் பெண்ணை நகர்த்தியது. இந்த வரலாற்று உண்மையை ஏகாதிபத்திய உலகமயமாதல் மறுத்து, பெண்களின் தேர்வை திரித்து கொச்சைப்படுத்தி, பெண்ணுரிமையின் பெயரில் மீளவும் வரைமுறையற்ற புணர்ச்சிக்கு, அதே ஆணாதிக்கத்திடம் பெண்ணின் கழுத்தைப் பிடித்து தள்ளிச் செல்கின்றது.
பாட்டாளி வர்க்கம் வரைமுறையற்ற ஆணாதிக்க விபச்சார புணர்ச்சியையும், ஒருதாரமணத்தில் உள்ள காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கத்தையும் மறுத்து மாறாக பரஸ்பரம் தெரிவைக் கோரும் இருதாரமணமுறைக்குள் சுயாதீனமான வகையில் வாழவும், பிரியவும் உள்ள உரிமைக்குள் பெண்ணுரிமையிலான புணர்ச்சியை முன்வைக்கின்றது. இங்கு ஒருதாரமணம் என கூறுவது ஆணினால் மட்டும் தீர்மானிக்கப்படும் திருமணம், புணர்ச்சியைத்தான்;. இருதாரமணம் என்பது ஆண், பெண் என இருவரும் திருமணம் மற்றும் புணர்ச்சியில் ஆணாதிக்கத்துக்கு வெளியில் இணைவதையும் பிரிவதையும் குறிக்கும்;.
அடுத்து ஒருதாரமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் ஆயுள் பூராவும் வாழக் கோரும் சமூக அமைப்பில் இது ஆணாதிக்கம் சார்ந்தது மட்டுமின்றி, அங்கு பெண் ஒருதார மணத்தில் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் மட்டும்தான் வாழ்கின்றாள்.

இதனால் இந்த சமூக அமைப்பு தகரும் போது ஒரு ஆணும் பெண்ணும் நீடித்து வாழும் இன்றைய குடும்பங்கள் இல்லாது போய்விடுமா? போய்விடும் என்கின்றனர் ஏகாதிபத்திய பெண்நிலைவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும். ஆகவே அதை இன்றே ஏகாதிபத்திய உலகமயமாதல் வழியில்; வரைமுறையற்ற புணர்ச்சில் தொடங்குவோம் என, எச்சில் வழிய எழுதுகின்றனர்.

இதையே தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போர் தொடங்கிய காலத்தில் புhளாட் (Pடுழுவு) இயக்கத்தில் மார்க்சிய சாயம் பூசியவர்கள் ஏங்கெல்ஸ்சின் பெயரிலும், பெண்ணுரிமையின் பெயரிலும் ஆண், பெண் என ஒன்றாக வைத்து நடத்திய பாசறையில் வரைமுறையற்ற புணர்ச்சி பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் நிலவும் என்று ஏமாற்றி, அன்றே பெண்களை தமது ஆணாதிக்க வக்கிரத்துக்குப் பயன்படுத்தியவர்கள், அதே ஆணாதிக்கத்துடன் ஆய்வாளார்களகவும் ராஜதந்திரிகளாகவும் இன்று உயிருடன் நடமாடுகின்றனர்.

கடந்த பத்து வருடத்துக்கு மேலாக ஐரோப்பாவில் இலக்கியம், அரசியல் பேசும் இலக்கியச் சந்திப்பு வாரிசுகள் பெண் விடுதலையை ஒருதாரமணத்துக்கு எதிராக பலதாரமணத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். சமூக அக்கறை கொண்ட பெண்களை இக்கோட்பாட்டுக்குள் வழி நடத்தி தமது ஆணாதிக்க பாலியலுக்கு பயன்படுத்தி விட்டு முரண்பாடு வருகின்ற போது அப்பெண்களை "வேசை" என பலர் முன்னிலையில் கூறவும் தயங்காத இலக்கிய வாரிசுகளையும், இன்றும் பெண்ணுரிமை பேசும் வாயடிப்புகளையும் இதன் பின் தெளிவாக காணமுடியும். அ.மார்க்ஸ் "வெள்ளைத் திமிர்" என்ற நூலில் தமிழ்ப்பெண் "லெக்ஸ்பியன்" என வாய் கூசாது தனது நோக்கத்துக்கு பொய் எழுதியதையும் இதன் பின்னணியில் காணமுடியும்.

ஒரு ஆணும் பெண்ணும் நீடித்து வாழமுடியாதா? அல்லது தனித்தனியாக வாழவும்; திடீர்திடீரென கூடும் வரைமுறையற்ற புணர்ச்சியா? மனித சமுதாயத்தின் இலக்காக இருக்கும். இது இன்று அடிப்படையான முக்கியமான கேள்வியாக எம் முன் உள்ளது. கடந்து சென்ற சமுதாய நடைமுறையும் நிகழ்கால வாழ்வும் எதிர்காலத்தை வழிகாட்டுவதில் இவை தீர்க்கமானவை.

இது சமுதாயம் தனக்கு தேவையான பொருளாதாரத்தை எப்படி எதன் ஊடாக நிவர்த்தி செய்தது என்பதன் ஊடாக மட்டும்தான், ஆண் பெண் உறவுமுறை தீர்மானிக்கப்படுகின்றது.
காட்டுமிராண்டி சமூகமாக மனிதன் இருந்த போது இயற்கை மீது மட்டும் உணவைச் சார்ந்து இருந்த போது, உணவுக்கான போராட்டத்தில் மிருகத்துடன் மனிதன் போராட வேண்டியிருந்தது. இதன் போது அவன் கூட்டமாக வாழ்வதும் போராடுவதுமே வாழ்க்கையாக கொண்ட நிலையில், ஆண் பெண் உறவும் எந்தக் கட்டுப்பாடுமின்றி கூட்டத்துக்குள் நீடித்தன. இந்தப் போக்குதான் மனித தோற்றத்தின் மிக நீண்டகாலம் நீடித்த ஆண் பெண் உறவுமுறையாக இருந்தது.

இங்கு உணவுப் போராட்டம் என்பது மற்றொரு மனிதக் குழுவுக்கிடையிலானதாகவும், மிருகத்துடனானதாகவும் இருந்த காலம் முழுக்க் குழுவைத் தாண்டிய ஆண் பெண் உறவு நிகழவில்லை. இக் காலம் பெண்களை அடிப்படையாக கொண்டு மட்டும் குழந்தையை அடையாளம் காணக் கூடியதாக இருந்ததுடன் பெண்களே குடும்பத்துக்கு தலைமை தாங்கவும் செய்தனர். அத்துடன் முதல் விவசாயியாக பெண் இருந்ததுடன், உயிருடன் பிடிபட்ட மிருகங்களை பெண் வளர்;க்கவும் கற்றுக் கொண்டாள்;. பெண்ணின் இக் கண்டுபிடிப்பு மனித குலத்தின் முக்கியமான பாய்ச்சலுக்குரிய ஒன்றாக இருந்தது. இதனால் உணவு கிடைக்காத நிலையிலும் பெண் உணவு கொடுக்கும் ஒரு பொருளாதார அடிப்படையை கொண்டு இருந்ததால் பெண்ணின் மதிப்பு மேலும் உயர்ந்தது. இதுவே பின்னால் பெண்ணை அடிமைப்படுத்த நெம்புகோலாகவும் மாறியது.

பின்னால் கால்நடை வளர்ப்புடன் விரிவுபடத் தொடங்கிய முதல் வேலைப் பிரிவினையும், நிலத்தில் நடந்த உற்பத்தியும் உபரியை (மேலதிகத்தை) உருவாக்கியதால் மனிதன் மேலதிக உற்பத்திக்கான வழிவகைகளை காணத் தொடங்கினான். இதில் இருந்தே முதல்; வர்க்க பிளவு உருவானதுடன், இதுவே பெண்ணை அடிமையாக்கியது.

இதன் தொடர்ச்சியில் மற்றைய குழுக்களுக்கிடையிலான யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டவரை கொன்று விடும் மரபில் இருந்து அவனை வைத்திருப்பதன் மூலம் மேலதிக உபரியை சேகரிக்க முடியும் என கண்டு கொண்ட நிலையில் உபரி ஆணைச் சார்ந்ததால், பெண் தனது அதிகாரத்தை சொத்துரிமையின் பின்னால் மேலும் இழந்தாள். யுத்தத்தில் கூடுதலாக ஆண்கள் ஈடுபட்டதால் கைதான மனித அடிமைகள் அவனின் சொத்தாக மாறவும், அதன் மூலம் மேலதிக உபரியை ஆண் பெறத்தொடங்கிய நிகழ்ச்சிப் போக்கில்தான், ஆண் பெண்ணிடம் இருந்து அதிகாரத்தை நீண்ட பல போராட்டத்தினூடாக பொருளாதார ஆதிக்கத்தின் ஊடாக கைப்பற்றிக் கொண்டான்.

இக்காலத்தின் முன் நீடித்து வந்த வரைமுறையற்ற குழுவுக்கிடையிலான புணர்ச்சியில் அன்பு, காதல் என எதுவும் இருந்தது கிடையாது. இங்கு ஜனநாயகம் என எதுவும் இருந்ததில்லை. ஆண் பெண் இனவிருத்தி வேறுபாட்டுக்கு அப்பால் யாரும் அடிமையாக வேறுபட்டு இருக்கவில்லை.

இதன் பின்னான சமுதாயத்தில் பெண்ணாதிக்கம் ஆணின் பொருளாதார மேன்மையுடன் ஆணாதிக்கத்துக்கு கை மாறிய நிலையில், ஆணாதிக்கம் பெண்கள் மீது பொருளாதார மேலாதிக்கம் மூலம் பாலியல் வன்முறையைக் கையாண்டது, கையாள்கின்றது. பெண்கள் மீதான ஆணாதிக்கமும், பெண்கள் மீதான ஆணின் ஒருதலை பட்சமான பாலியல் வேட்கை பெண்களைச் சூறையாட, பெண்கள் இதிலிருந்து தப்பித்து செல்ல, குறித்த ஆணை பெண் தெரிவதன் மூலம் தற்காப்பை பெற்றாள். இந்த போக்கில் தனிச் சொத்துரிமைக்கு துணையாக பெருகிய உபரியும் சேர அங்கு காதலும், அன்பும் இணைந்து கொண்டது. அதாவது சொத்துரிமையில் மேலும், ஆணாதிக்க கொடூரத்தில் மேலும், காதல் சனநாயகம் அன்பு என்பன சமுதாயத்துக்குள் புகுந்து கொண்டது.

பெண் ஒரு தலைபட்சமாக ஒருதாரமணத்தை தெரிந்த சமூக போக்கில் ஆணின் கொடூரமே காரணமாகும். இங்கு அக்கம்பக்கமாக இணைமணங்கள் கூட இதன் தொடர்ச்சியில் தனிச்சொத்துரிமை ஆதிக்கம் பெறாத நிலைகளில் நீடித்தும் இருந்தது. பெண்கள் மீதான ஆணின் நெருக்குதல்களில் இருந்து பெண் மீள்வதுக்கு பெண் தெரிவு செய்த ஒருதாரமணம் பாதுகாப்பான வடிவமாக இருந்தது. இதற்கு எதிராக ஆணாதிக்கம் பெண் மீதான அனுபவிக்கும் ஆணாதிக்க உரிமையை கோரிநின்றது. ரிக் வேதத்தில் "ஹே குமாரி! உன்னுடைய முலைகள் பரந்திருக்கின்றன. நீ நினைப்பது போல நீ இப்போது சிறு பெண் இல்லை. உன்னுடைய முலைகள் புருஷனால் பிசையப்பட வேண்டியவையாகும்; உன் தாயார் அவரது முலைகளை புருஷர்களிடம் கொடுக்காததால் தொங்கிப் போய் விட்டது. தகராறு செய்யாமல் நீ இடத்திற்கு வருவாயோ" என்ற பார்ப்பனிய ஆணாதிக்க வேத சூத்திரங்களின் பின், பெண்களின் போராட்டத்தையும், பெண்ணின் தெரிவையும் துல்லியமாக்குகின்றது. ஒருதாரமணம் ஆணின் தெரிவல்ல பெண்ணின் தெரிவு என்ற ஏங்கெல்ஸ்சின் சரியான கண்டுபிடிப்பை இது நிறுவுகின்றது. ஆனால் ஒருதாரமணத்தை பெண்ணின் தெரிவாக திரித்து காட்டுவதன் மூலம், பெண் பல கணவன் மணத்தை போராடிப் பெற வேண்டியதாக காட்டும் வடிவங்கள் ஏகாதிபத்திய பெண்ணிய சீரழிவின் பாதையில் இணைவதாகும்;. பெண்கள் ஆணின் துன்புறுத்தலில் இருந்து ஒதுங்கியதையும், பெண்ணின் ஒரு தலைப்பட்ச தெரிவையும் காட்டுகின்றது. இதில் தாய், மகள் என்ற இரு தலைமுறையின் போராட்டத்தில் ஆணாதிக்கத்தின் இழுபறிப் போராட்டத்தையும், ஆணாதிக்க பலதாரமணத்தின் போக்கையும் வெளிப்படுத்துகின்றது. பெண்ணின் ஒருதாரமணத்தின் ஊடான தற்காப்பையும் காட்டுகின்றது. அத்துடன் பெண்ணின் விபச்சாரத்தை கோருவதில் பின் நிற்காத ஆணாதிக்க விளக்கமும் முன்வைக்கப்டுகின்றது.

இன்று உயிரியல் ஆய்வாளர்கள் தமது ஆய்வை குரங்கு இனங்களின் வளர்ச்சி பெற்ற இனங்கள் மீது நடத்திய போது பல உண்மைகளை படமாக்கியுள்ளனர். பெண் குரங்கு மீது பாலியல் வேட்கையுடன் ஆண் குரங்குகள் போட்டி போடுவதும், பெண் குரங்கு மறுத்து போராடுவதனூடாக பெண் குரங்கு தன்னை ஒரு ஆண் குரங்கிடம் ஒப்படைப்பதும் காண முடிகின்றது. ஆண் குரங்கு இந்த பாலியல் வேட்கையில் சண்டை செய்து வெல்வது அவசியமானதாக இருக்கின்றது. இது மட்டும்தான் பெண் குரங்கின் மீதான மற்றைய ஆண் குரங்கினால் ஏற்படும் பாலியல் வன்முறையில் இருந்து தடுக்கின்றது. யுத்தத்தில் வெல்லும் ஆண் குரங்கின் பலம் தான் மற்றைய ஆண்களின் வன்முறைக்கு எதிரான தற்காப்பை பெண்ணுக்கு வழங்குகின்றது. இங்கு பெண் விரும்பி அனுமதிப்பது நிபந்தனையாகின்றது. வேறு சில இனங்களில் ஆண் குரங்கு பெண் குரங்கு விரும்பும் அன்பளிப்பை வழங்குவதன் மூலம், பெண் குரங்கு ஏற்றுக் கொண்டால் மட்டுமே உறவு வரையறுக்கப்படுகின்றது. இங்கு பல ஆண் குரங்குகள் ஒரு பெண் குரங்குடன் உறவு கொள்ள போராடும் போது, பெண் குரங்கு ஒன்றை மட்டும் தெரிவு செய்கின்றது. இந்த சோடி அந்த பாலியல் தேவையின் காலத்துக்குள்ளும், சில குறித்த காலத்துக்கும், சில நீண்ட ஆயுளுக்கும் என பலவாக குரங்கு இனத்துக்குள் மாறுபடுகின்றன. இது மனித இனத்துக்குள்ளும் வேறுபாடு இன்றி பல பண்புகள் நீடிக்கின்றன.

பழைய காலத்தில் ஆண் தனது வீரத்தை பெண்ணுக்கு நிலை நாட்டிய நிலையில்தான் பெண் மாலையிடும் வடிவங்கள் இருந்தன. பல புராணக் கதைகள் இதை வெளிப்படுத்துகின்றன. இதேபோல் பல ஆண்களை நிறுத்தி, அதில் பெண் தேர்ந்து மாலையிடுவது போன்றன பெண் தனது தற்காப்பை நாடி தெரிந்த ஒருதார மணத்தின் எச்சமாகும் இதுபோல் சாமத்திய சடங்குகள் ஆரம்பத்தில் பெண் ஆணைத் தெரிவு செய்யும் ஒரு சடங்காகவேயிருந்தது. தாய்மாமனுக்கு இருக்கும் உரிமை தாய்வழி சமூகத்திலிருந்து பின்னால் மருவியதில் ஏற்பட்டவையே. இவை பெண்ணின் உரிமையாக இருந்தது. முன்பு யுத்த மூலம் அடைந்தவை வீரவிளையாட்டுகள் மூலம் பெண்ணை திருப்தி செய்ய வேண்டியிருந்தது. இவை பின்னால் ஆதிக்கம் பெற்ற தனிச்சொத்துரிமை மூலதனத்தின் பின்னால் மறுக்கப்பட்டது. குறித்த தனிச்சொத்து பலத்தை திர்மானிப்பதாக மாறிய போது பெண்ணின் தெரிவு மறுக்கப்பட்டு சொத்துத் தெரிவு ஒருதாரமணத்தின் மூலமாகியது.

இன்றுவரை கூட காதலை எடுத்தால் பெண்ணுக்கு அதே தற்காப்பு வேலியாக உள்ளதுடன், பெண் மட்டுமே ஒருதார மணத்தில் காதலிப்பவளாகவும் உள்ளாள். ஆண்கள் எப்போதும் பலதாரமணத்தின் பிரதிநிதியாக இருந்தபடி பெண்ணிடம் ஒருதாரமணத்தை திணிக்கின்றான். பெண்கள் இந்த வன்முறையை மீறவிரும்பும் போது ஒருக்காலும் பல ஆணின் ஆணாதிக்கத்தை, ஒரு ஆணுக்குப் பதில் கோரிப்போராடவில்லை. மாறாக மனமொத்து வாழும் சுயநிர்ணயத்தையே அடிப்படையாக கொண்ட, இணைமணமே கோரிக்கையாக எப்போதும் இருந்துள்ளது. ஆனால் இது ஆணாதிக்கத்தின் இருதரப்பால் எப்போதும் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்றது.

முதலாவதாக பெண்ணுரிமையின் பெயரில் ஆணாதிக்கவாதிகள் தமது பலதார பாலியல் வேட்கைக்கு பெண்களைப் பயன்படுத்த, பெண்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை கொச்சைப்படுத்தி, அவர்களின் விடுதலைக்கு எதிராக தமது ஆணாதிக்க தகவமை பாதுகாக்க பெண்ணுரிமையின் பெயரால் பெண்களை தமது விபச்சார வேட்கைக்குள் நகர்த்த வரைமுறையற்ற புணர்ச்சி கோட்ப்பாட்டை வைக்கின்றனர். இவர்கள் இதனடிப்படையில் பெண்ணுக்கு கற்பு இல்லை என்கின்றனர். கற்பு பற்றிய திரிபுக்குhடான கொடூரமான ஆணாதிக்க நடத்தையை சாதகமாக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்கம,; இதனூடாக விபச்சாரத்தை முன்மொழிகின்றனர். இது ஏகாதிபத்திய பொருளாதார வடிவமாக நீடிக்கின்றது.
இரண்டாவது தரப்பு ஒருதாரமணத்தில் பெண் மட்டும் காதலிக்கவும், ஆண் பலதார மணத்தில் நீடிக்கவும் உள்ள சலுகைகளை (வரைமுறையற்ற புணர்ச்சியை) தக்கவைக்க, பெண்ணின் சுயநிர்ணய கோரிக்கையை கொச்சைப்படுத்தி பல கணவன் வாழ்வைக் கோருவதாக சேறடிக்கின்றனர். இவர்கள் கற்பு உண்டு என்கின்றனர். இதன் மூலம் திரிவுபடுத்திய கற்பு கோட்ப்பாட்டை விபச்சாரத்துக்கு எதிராக முன்நிறுத்தி நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒருதாரமணத்தில் பெண்ணை சிறை வைக்கின்றனர். இது நிலப்பிரபுத்துவ பொருளாதார வடிவமாக நீடிக்கின்றது.

பெண்ணின் சுயநிர்ணயக் கோரிக்கையான பரஸ்பரம் காதலிக்கவும் சேர்ந்து வாழும் உரிமையை திரிபுபட கொச்சைப்படுத்தி, ஒரு தரப்பு பலகணவன் வாழ்வைக் கோருவதாக காட்டி எதிர்க்க, மறு தரப்பு பல கணவன் மணத்தை கோருவதோடு இருவரும் அச்சொட்டாக ஒரே புள்ளியில் ஒரே நோக்கத்;துக்காக இணைகின்றனர். இரண்டையும் பெண் எதிர்க்கின்றாள் என்பதை மூடிமறைப்பதன் மூலம், ஆணாதிக்க நலன்களை மூடி கலர் அடிக்கின்றனர்.
பல கணவன் முறையை கோருபவரின் கோட்பாடு ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு இசைவாக இருக்க, கோருவதாக காட்டும் (கோருவதாக கூறி எதிர்க்கும்) கோட்ப்பாடு நிலப்பிரபுத்துவ பொருளாதார பண்பாட்டுக்கு இசைவாக உள்ளது. அதனால் தான் இரு பொருளாதார அமைப்பும் ஒன்றில் இருந்து ஒன்று விலகாதவாறு உலகளவில் (ஏகாதிபத்தியத்தில் தேசிய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துவிட்டது.) ஆளும் வர்க்கமாக இன்று உள்ளனர். இது பெண்பற்றிய மதிப்பீட்டிலும் ஒன்றாக உள்ளது.
இன்று பண்பாட்டு ரீதியில், கலாச்சார ரீதியில், பொருளாதார ரீதியில் எடுத்தால் ஏகாதிபத்திய பொருளாதார அலகு பெண்ணை வெறும் கவர்ச்சிப் பண்டமாக, தன் கூலிப் பட்டாளமாக அடையாளப்படுத்திய சமூக அமைப்பை உலகின் முன் படைத்துள்ளதுடன் அதை உலகம் தழுவிய அளவில் நகர்த்துகின்றது. இன்று ஏகாதிபத்திய பொருட்களின் சந்தை ஆணாதிக்க வக்கிர கண்முன் (இங்கு ஆண் பெண் வேறுபாடின்றி) பெண் நிர்வாணக் கோலத்தில் அவளின் பெண் உறுப்புகள் மீது மட்டுமே குவிந்து சாத்தியமாக்கியுள்ளது.

ஏகாதிபத்திய நாடுகளிலும், மூன்றாம் உலகின் மத்தியதர வர்க்கத்துக்கு மேல் உள்ள பிரிவுப் பெண்கள், சர்வதேச வர்த்தக நலனுக்குள் கட்டமைக்கப்படுகின்றாள். பெண்ணின் அழகு, உடல் அங்கங்கள், அவளின் மாறுபட்ட உடைகள், அவளின் அழகு சாதனப் பொருட்கள், அவள் பயன்படுத்தும் சர்வதேச தரநிர்ணயம் பெற்ற பொருட்கள், அவள் பயன்படுத்தும் பொருட்கள், அவளின் அனுகுமுறைகள்...... என அனைத்தும் எப்படி, எங்கு, யாருக்கு என தீர்மானகரமான வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளியில் யாரும் சுதந்திரமாக இருக்கவோ, சிந்திக்கவோ, காதல் செய்யவோ முடியாது. இதற்கு எதிரான போராட்டம் கூட இதற்குள்ளானதே ஒழிய வெளியில் அல்ல.

இந்த சமுதாய அமைப்பில் பலதார மணவாழ்க்கையை ஆண்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கு ஏகாதிபத்தியம் பல கணவன் வாழ்க்கையை ஏகாதிபத்தியம் ஏன் சிபார்சு செய்கின்றது என்பதை ஆராய்வோம்.

பெண்கள் தமது தற்காப்புக்காக ஒரு ஆணைத் தேர்ந்து எடுத்த (இந்த போராட்டத்தில் பெண்களின் மீதான ஆணின் பலதாரமண வேட்கையை விட்டுக் கொடுக்காத போராட்டத்தில், ஆணாதிக்கத்தின் ஆளும் வர்க்கம் பெண்களிடம் சமரசம் செய்யும் போது தனிச் சொத்துரிமையின் வாரிசு உரிமையூடாகவும், பெண்ணின் திருமணத்துக்கு முன்னால் அப் பெண்ணை பொதுவில் அனுபவிக்கவும் அல்லது பூசாரியோ, அச்சமூகத் தலைவனோ தனியாகவும், கூட்டாகவும் திருமணத்துக்கு முன் முன்னுரிமை எடுத்து அப்பெண்ணை அனுபவிக்கும் உரிமையை மிக அண்மைக் காலம் வரை தக்கவைத்த ஆணாதிக்க, பலதாரமண முறையை பெண்ணின் ஒரு தார மணத் தெரிவுக்கு எதிராக தக்கவைத்து நீடித்தது. இதன் தொடர்ச்சியால் தான் விபச்சாரமும் பொதுவான மகளிர் பிரிவுகளும் உருவாகின. ) சனநாயக உரிமையை ஆணாதிக்கம் மறுத்து, தனது தனிச் சொத்துரிமையின் பின்னால் இறுகிய ஒருதாரமணத்தைத் திணித்து, இன்று தனது வாரிசுகளை உருவாக்க நீடித்த குடும்ப அமைப்பு ஏகாதிபத்திய உலகமயமாதலின் பின் அவசியமற்றதாகியுள்ளது.

சொத்துரிமை என்பது பரந்துபட்ட மக்களிடம் இனி நீடிக்க முடியாது பறி போகப்போக வாரிசுரிமை என்பது பரந்துபட்ட மக்களிடம் அவசியமற்றதாகின்றது. ஆணாதிக்க ஒரு தார மணம் தனிச் சொத்துரிமையில் மொத்தமக்கள் முன் வாரிசுரிமையின் பெயரில் எப்படி வளர்ச்சி பெற்றதோ, அதே வழியில் சொத்துரிமை பரந்துபட்ட மக்களிடம் இல்லாது போக ஆணாதிக்க ஒரு தார குடும்ப அமைப்பு தகர்கின்றது. இந்த தகர்வு என்பது இரு தளங்களில் நடக்கின்றது. பாட்டாளி வர்க்க வழிகளிலும், ஏகாதிபத்திய வழிகளிலும் இது வேகம் பெற்றுள்ளது.

சொத்துரிமையில் வாரிசுக்கான குடும்ப அலகு, ஏகாதிபத்திய உலகமயமாதலால் சொத்துரிமை பரந்துபட்ட மக்களிடம் தகர்கின்ற போதும், தொடர்ந்து சமூகம் தனிச் சொத்துரிமை வடிவில் இன்று நீடிப்பதால் ஆணாதிக்கமும் அதன் எல்லைக்குள் நீடிக்கின்றது. தனிச்சொத்துரிமை விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் நகர்த்திச் செல்லும் போக்கில் சொத்துரிமை அற்றவன், தனிச் சொத்துரிமையை பெற முன்னேற முடியும் என்ற ஜனநாயக சுதந்திர வடிவத்தின் மீதான நம்பிக்கைகள் நீடிக்கின்ற போக்கில், ஆணாதிக்கம் ஏகாதிபத்திய வடிவில் நீடிக்கின்றது.

மார்க்ஸ் சொத்துரிமை பற்றிய ஆய்வுகளில் கூறும்; வரிகள் தான் இதன் அடிப்படையாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் முதற்பெரும் கடமை மூலதனம் திரட்டுதலே என விதிப்பது முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களுக்கு மிக முக்கியமானதாய் இருந்தது.16 இங்கு ஒரு கேள்வி எழலாம், அந்த சிலரிடம் உள்ள சொத்துரிமைக்குப் பின்னால் உள்ள வாரிசுரிமையில் குடும்ப நிலை என்ன?

ஏகாதிபத்திய சொத்துரிமை வாரிசுகளான பிரிவுகள் எப்போதும் இக்குடும்ப அமைப்பை பாதுகாக்க விடாப்பிடியாக நிற்க முயல்கின்றன. ஆனால் சொத்து குடும்பத்துக்கு இடையில் பிரியாத பெரும் சொத்துரவகக்த்துக்கு தேவையான தனிக் குழந்தைகளான குடும்பத்தை பெரும் சொத்துடைய வர்க்கம் விரும்புகின்றது. அத்துடன் இன்றைய திருமணங்கள் பெண்களுக்கு சொத்தில் பங்களிப்பாதல், நடைபெறும் விவாகரத்துக்கள் சொத்தை பிளந்துவிடும் என்பதால், சொத்து பிளக்காது குடும்பத்தை உருவாக்க, உயர் சொத்துடைய வர்க்கத்தாலும் குடும்பத்தை பாதுகாக்க முடியவில்லை. மாறாக பழைய குடும்பத்தை நவீனத்தில் விரும்புகின்றன. ஆனாலும் ஏகாதிபத்திய சொத்துரிமை பலம் கொண்டது என்பதால் அதன் வீச்சு பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றிலும் ஆழப் புதைந்து போயுள்ள போது, இருந்த பாரம்பரியமான குடும்ப முறை பரந்துபட்ட மக்களிடம் சொத்துரிமை என்ற பொருளாதார அடிப்படையின்றி சிதறிவிடுகின்றது. சொத்துரிமையும் வேண்டும், பழைய வாரிசுரிமையிலான குடும்ப அமைப்பும் வேண்டும் என்ற முரண்பாட்டில் இருந்து பெருமளவு சொத்துடைய வர்க்கப் பிரிவு பழைய வரைமுறையற்ற புணர்ச்சியை தன்னகத்தே எடுத்துக் கொண்டது. அதாவது சொத்துரிமையின் பின்னால் நீடித்த ஒரு தார குடும்ப அமைப்புக்கு வெளியில் பொது மகளிர் முறையான விபச்சாரம், கோயிலுக்கு விடுவது, மன்னர் மாளிகைகள், வணிகர் அந்தப்புரங்கள், பொது களியாட்ட மையங்களில் பெண்களை அனுபவித்த பணக்காரர்கள், இன்று அதை பொதுவான சமூக நடைமுறைக்குள் முரண்பாட்டுடன் நகர்த்தியுள்ளனர்.

இன்று சாதாரண சினிமாவில் படுக்கைக் காட்சி, நீலப் படத்துக்கு புறம்பாக எங்கும் புகுந்து விட்டது. சினிமா, தொலைக்காட்சி படங்கள் ஒரு கதாநாயகன் (இவன் இச் சமூக அமைப்பை பாதுகாக்கும் நேர்மையுள்ள உதாரண மனிதனாக இச் சமூகம் அங்கீகரிக்கும்) தொலை நோக்கு கண்ணாடி கொண்டு அடுக்கு மாடிகளில் பெண்களின் நிர்வாண காட்சியோ, புணர்ச்சி காட்சியைத் தேடும் சமூக முன்னுதாரணத்தை காட்டி இன்று சமூகம் அதை நடைமுறையாக கையாள்கின்றது. அண்மையில் பிரஞ்சு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காத ஒரு பெண் பிரான்சு தொலைக் காட்சியில் பக்கத்து வீட்டுக்காரன் தனது சுவரில் மெல்லிய துளையிட்டு மிக நுண்ணிய கமரா கொண்டு (உளவு அமைப்புகள் போன்று), தனது புணர்ச்சியை பார்த்த வக்கிரத்தை அம்பலப்படுத்தி நீதி கோரினாள். சினிமாவில் சிறைக்குள் ஆய்வு செய்யச் சென்ற பெண்ணை, பொலிசுக்கு தெரியாமல் கத்தி முனையில் பெண்ணின் உள்ளாடையை பறித்த காட்சி இச் சமூகத்துக்கு முன் அதை செய்யவும், இது கூட புணர்;ச்சிக்கான பாதையாக வழிகாட்டுகின்றனர். இப்படி பல. இன்று யப்பான், அமெரிக்கா எங்கும் பாடசாலையைச் சுற்றியும் வெளியிலும், பெண்கள் அணிந்த உள்ளாடைகள் வயது முதல் பெண் பற்றிய தரவுகள் உடன் படத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது கூட புணர்ச்சியை அனுபவிக்கும் விடயமாக, தனிப்பட்ட பிரச்சனையாக காட்டப்படுகின்றது. இந்த செக்ஸ் வடிவத்தை ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் அனைத்து முதலாளித்துவ கோட்பாட்டு சீரழிவாளர்கள் என்ன சொல்வார்களோ தெரியவில்லை. இன்று நீலப்படங்கள் உடன் மட்டும் நீடிக்கும் மிருகங்கள் உடனான பாலியல் உறவும், இன்பமும் நாளை சமூக நடைமுறையாக வர நீண்ட காலம் செல்லாது. ஏனெனின் இன்று ஏகாதிபத்திய நாடுகளில் மனிதனின் அன்புக்குரிய வளர்ப்பு மிருகங்கள் மூலம் பாலியல் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய தயார் நிலையில உள்ளதால்;, இதைக் கொண்டே குடும்பத்தை தகர்க்க வேகமாக பயன்படுத்தமுடியும்.

நாடுகள் வீதம்
அமெரிக்கா 60
இத்தாலி 41
பிரான்ஸ் 35
இங்கிலாந்து 29
புள்ளிவிபரம்1

இன்று வீட்டு மிருகங்களை (நாய், பூனை) மனிதனை விட அன்புக்குரியனவாக, ஏகாதிபத்திய மக்களால் வளர்க்கப்படும் விகிதத்தைத் தான் மேல் பார்க்கின்றோம். இந்த மிருகங்கள் மனிதனின் படுக்கைக் கட்டிலைப் பகிர்கின்றது. முத்தத்தை வழங்குகின்றது. உழைப்பை பகிர்கின்றது. அடிமைத்தனத்தில் அதன் மிருக எல்லைக்குள் உடலுறவுக்கு முந்திய அனைத்தையும் இம் மிருகங்கள் மனிதனுடன் பங்கிட்டுப் பெற்றுக் கொள்கின்றது. இதை தொலைக்காட்சிகள் பெருமைப்பட இந்த கேவலத்தை காட்டுகின்றன. பாலியல் உறவு மட்டும் தான் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால் நீலப்படம் மிருகப் புணர்ச்சியை உள்ளடக்கியே வெளிவருகின்றது. அண்மையில் சிறைக்கு அனுப்பிய ஒரு நிகழ்ச்சியாக, பால்குடி பேரக் குழந்தையின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய மறுத்து, தனது ஆண் உறுப்பின் வக்கிர தேவையை ஈடு செய்ததை அடுத்து, பிரஞ்சு நீதிமன்றம் வரை சென்ற இந் நிகழ்ச்சிகள் இந்த சமுதாயத்தின் அவலத்தைக் காட்டுகின்றது. நாய், பூனைகள் தமது செல்வச் சீமான், சீமாட்டிகளின் மார்புகளிலும், மடிகளின் கீழுள்ள வக்கிரங்களை பூர்த்தி செய்யும் பணியை மறுப்பதுக்கு எந்தவிதமான மறுவிளக்கமும் அவசியமற்றவை.

நாளை பெண்ணியமும், ஜனநாயக சுதந்திரமும் மிருகப் புணர்ச்சி இயற்கையென்றும், தனிப்பட்ட உடலுடன் தொடர்புடையது என்று போகிற போக்கில் வாதிடுவர் என்பது, அவர்களின் இழிவான சீரழிவுகள் காட்டுகின்றது.

இன்று ரெலிபோன் மூலம் தொடர்பு கொண்டால் பாலியல் இன்பம் அடைய முடியும், என்ற விளம்பரம், சினிமாக்கள் எல்லாம் ஏகாதிபத்திய விளை பொருளாகி நடைமுறைக்கு வந்துள்ளது.

இன்று புதிய தொழில் நுட்பமான இன்ரநெற்றில் ஆண் பெண் சந்திக்காமலே பாலியல் நுகர்வை அடைய முடியும் என்ற விளம்பரம் மட்டுமின்றி இது யதார்த்தமாக்கப்பட்டுள்ளது. இதற்கான மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இன்ரநெற்றில் நேரடியாக பெண் தோன்றி கதைத்தபடி ஆடையுரிவு முதல் அனைத்தையும் பாலியல் வக்கிரத்தில் பெறமுடியும்
ஏகாதிபத்திய சீரழிவாளர்கள் ஓரினச் சேர்க்கை, கூட்டுக் கலவி, ரெலிபோன் கலவி, இன்ரநெற் கலவி, உள்ளாடைக் கலவி, நீல்ப்படக் கலவி, மிருகக் கலவி என அனைத்தையும் நியாயப்படுத்தவும் பாதுகாக்கவும் கட்டுரையும் இலக்கியமும், கலையும் சுதந்திரத்தின் பின் உருவாக்க, இது ஊர் உலகத்தில் இல்லாததா எனக் கூறி நியாயத்தை சனநாயகத்தின் பெயரில் தனிமனித செயலாக, சுதந்திரமாகக் காட்டி இந்த ஏகாதிபத்திய விளைவுகளை நியாயம் கற்பிக்க பின்நிற்கவில்லை, அதை முன்னெடுக்கின்றனர்.

அண்மையில் பிரான்சில் ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பை பாதுகாத்து முன்னெடுக்கும் சோசலிச, போலி கம்யூனிச, பச்சைக் கட்சிகள் ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கொண்டு வந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதல்ச் சுற்றில் தோற்றுப் போனது. ஆனாலும் சனநாயகத்தின் பெயரில், தனி மனித உரிமையின் பெயரில் உலகைச் சுரண்டும் ஏகாதிபத்திய அரசு, பெண்களை இரண்டாம் தர பிரஜையாக வைத்துள்ள அரசு, சட்டமூலத்தை சமர்ப்பித்ததன் பின் சனநாயாகம் யாருடையது என்பதை துல்லியமாக்கியுள்ளது.

Sunday, November 27, 2005

பிரான்சின் வன்முறையும்,

கூர்மையாகி வரும் இனவெறிக் கூச்சலும்

பிரான்சின் எழுந்தவரும் இனவெறிக் கூச்சலையும், அது சார்ந்த நடைமுறையையும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களே இன்னமும் இதைத் தெரிந்து கொள்ளவில்லை, புரிந்து கொள்ளவில்லை. தமது குறுகிய வட்டத்தில் நின்று கிணற்றுத் தவளை போல் கத்துகின்றனர். இந்த இனவெறி நடத்தைகள் ஐரோப்பா எங்கும் பிரதிபலிக்கவுள்ளது. ஐரோப்பா எங்கும் இதையொத்த இனவாத கூச்சல்கள், இனவாத நடைமுறை சார்ந்த அனுகுமுறைகள் அரசின் கொள்கையாக மாறிவருகின்றது. புலம்பெயர் தமிழர்களை இது எதிர்காலத்தில் நேரடியாகவே பாதிக்கவுள்ளது. புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள் இந்த அபாயத்தைப் புரிந்து கொள்ளவேயில்லை. இப்படி இருக்கும் போது, உலகத்துக்கே ஆபத்தாக வளர்ந்துவரும் இந்த இனவெறி நிறவெறி ஏகாதிபத்திய போக்கை, இந்தியா மற்றும் இலங்கை வாழ் தமிழ்மக்கள் புரிந்துகொள்வது என்பது மேலும் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. இந்த நிறவெறி இனவெறி கொள்கையின் விளைவாக எழுந்த வன்முறையை ஒட்டிய எனது கட்டுரை, தமிழ் ஊடாகங்களுக்கு அனுப்பியபோது எவையும் அதை பிரசுரிக்கவில்லை. அந்தளவுக்கு தமிழ் ஊடாகவியல் எகாதிபத்திய இனவெறி நிறவெறிக் கொள்கையுடன் இணங்கிப் பாதுகாக்கின்றனர். அத்துடன் தவறாகவே தமது ஊடாகவியலுடாக, பிரஞ்சு இனவெறி நிறவெறி அரசின் நடத்தையை மூடிமறைத்து அவர்களைப்பற்றி பெருமை பேசுகின்றனர். இந்த நிலையில் இதை ஒட்டிய தகவல்களுடன், தலைவர்களின் இனவெறி உரைகள், அது சார்ந்த நடைமுறைகள் மற்றும் வன்முறையின் பின்னணியில் உள்ள சமூக அவலங்களையும் இக்கட்டுரை ஆதாரபூர்வமாக உங்களுக்கு விளக்கமுனைகின்றது.

வன்முறையின் பின்பாக இனவெறிக் கூச்சல், சமூங்களை பிளப்பதில் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக ஆழமாக்கி வருகின்றது. பிரான்சில் தொடர்ச்சியாக நடைபெற்ற, நடைபெற்று வரும் வன்முறைக்கான சமூக அடிப்படை என்ன என்பதை இக்கட்டுரை நுட்பமாக ஆராயமுனைகின்றது. வெள்ளையினத்தின் நிற ஒடுக்குமுறையும், இன ஒடுக்குமுறையும், சமூக ஒடுக்குமுறையுமே வன்முறைக்கு காரணம் என்பதை, சமூகம் சார்ந்த தரவுகள் மேலும் தெளிவாக உறுதி செய்து வருகின்றது. இதை அடிப்படையாக கொண்டு அரசியல் ரீதியாக சமூகங்களை இழிவாடி ஒடுக்கும் போது, வன்முறைகள் மேலும் மூர்க்கமானதாக மாறுகின்றது. சமூகங்களை இழிவாடி வன்முறைத் தூண்டி விடுவதில் உள்துறை அமைச்சர் மிக முக்கிய பங்குவகித்தார், வகித்துவருகின்றார். குறிப்பாக 2007 இல் நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தலில் இன்றைய உள்துறை அமைச்சரே, இன்று ஆளும் வலதுசாரிக் கட்சியின் வேட்பளராக களத்தில் நிற்கின்றார். அதில் ஜனாதிபதியாக வேண்டும் என்ற அதிகார இனநிறவெறி, எந்த இழிநிலைக்குள்ளும் அரசியலையும் செய்யும் நிலைக்கு தாழ்ந்து விடுகின்றனர். தனது அதிகாரத்துவ வெற்றியை நோக்கி தனது அரசியல் பாதையை மெருகூட்டும் வண்ணம், சமூகத்தில் புரையோடிப் போய்யுள்ள இனவாத அடிப்படைகளை உயிர்பித்து ஆணையில் வைக்கின்றார். இதை அதிகாரத்தின் மூலம், சமூகக் கொந்தளிப்புக்கள் எற்படும் வண்ணம் தீ வைத்து விடுகின்றார்.

இதனடிப்படையில் பொலிசாரை நடைமுறையில் இயக்குகின்றனர். பொலிஸ் கலகத்தை அடக்கும் சிறப்பு அதிரடிப் படையான CRS தலைமை அதிகாரியான Lambert வழங்கி செய்தியில் இதையே பிரதிபலிக்கின்றார். "இந்தப் பயங்கரவாதிகள வெற்றிகொள்ளுவோம்... இது வெறும் போலீஸ் படையாக மட்டும், கலகக்காரர்களுக்கு வெறுமனே ஹலோ சொல்லிக் கொண்டு இருக்காது. ரோந்துப் பணியில் ஈடுபட்டு குறித்த பகுதிகள் அனைத்திற்கும் காவலாக இருக்கும்... மிகக் கடினமான இடங்களுக்கு CRS ஐ அனுப்பவேண்டும் என்று உள்துறை மந்திரி விரும்பியுள்ளார்." என்று பொலிஸ் அடக்குமுறையினை எப்படி உள்துறை அமைச்சர் விரும்புகின்றரொ அப்படியே செயல்படும் என்று கூறுகின்றார். இந்த பிரச்சனையை ஒழுக்குமுறை ஊடாக, சட்டத்தின் ஊடாகவே கையாளப்படுகின்றது.

இந்த நிலையில் லிபரேசன் (Liberation) என்ற பிரஞ்சுப் பத்திரிகை 16ம் தேதி, "போலீஸ் அரசு?'' என்று தலைப்பில் தனது தலையங்கத்தை எழுதியது. அதில் "புறநகர்ப் பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் நிலமைக்கு அவசரகால சட்டம் திறமையான மருந்தாகும் என்று உள்துறை மந்திரி நினைப்பது உண்மையில் குருட்டுத்தனமாகும். பிரான்சின் இன்றைய நிலைமைக்கான வேர்களாக இருப்பது இனவெறி, வேலையின்மைத் திண்டாட்டம், அநீதிகள் ஆகியனவே காரணம். நோய்களை அவசரகால நிலைமை குணப்படுத்த முடியும் என்பதுடன்... அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பது பயனற்ற சொல்லப்போனால் ஆபத்தை விளைவிக்கக் கூடியது'' என்று எச்சரித்தது. இப்படி பிரஞ்வுப் பத்திரிகைளே எழுதுகின்றன. இதற்கு பின்னால் அரசு கடைப்பிக்கும் கொள்கை இனவாதமும் நிறவாதமும் தான். இதை அழுல்படுத்த கடைபிடிக்கும் வழிமுறை பொலிஸ் ஆட்சிதான். இந்த ஆட்சி எதைச் செய்கின்றது என்பதையும், எதை நோக்கிச் செயல்படுகின்ற என்பதையும் அவர்களே தெரிவித்து விடுகின்றனர்.

உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி Express வழங்கிய பேட்டியில் "இருக்கும் விஷயங்களை அப்படியே கூறுவோம். பலதார திருமணமுறையும் சில குடும்பங்களின் பண்பாட்டு இயல்புகளும் ஒரு இளைய பிராஞ்சுக்காரரை மற்றைய இடங்கள விடக் கூடுதலான முறையில் கறுப்பு ஆபிரிக்கருடன் இணைந்து வாழ்வதற்கு கடினமான காரணமாக ஆக்கியுள்ளன.'' என்றார். குறித்த குடியிருப்பு பகுதிகள் "தாடி வைத்துக் கொண்டிருப்பவர்களின்'' 'ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட போவதாக பிரகடனம் செய்துள்ளார். பொலிஸ் எதைநோக்கி எப்படி ஏவப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது. சொந்த கிரிமினல் மூளையுடன் இன நிறக் கடியிரப்பகளை நிறுவிய பின், பிற்போக்க சமூகக் கூறுகளை வளர்ப்பதற்காக பணத்தை வாரி வழங்கியவர்களும் இவர்கள் தான். அதாவது அமெரிக்காவும் இந்த எகாதிபத்தியங்களும் சதாம்குசைனையும், ஒசோமபில்லாடனையும் பணமும் ஆயுதமும் கொடுத்த வளர்த்தது போல், திட்மட்ட இன நிற குடியேற்றத்தை நிறுவி சகல சமூக பிற்போக்கு கூறுகளையும் திட்மிட்டு வளர்த்தவர்களும் இவர்கள்தான. மறுபக்கத்தில் இப்படியான சமூகங்களின் அவலங்கைளயும், சில சமூகங்களின் பண்பாட்டு கலச்சாரக் கூறுகளையும் இன நிற உள்ளடகத்தில் திரித்து துற்றுகின்றனர். அதன் மேல் வன்முறையை ஏவுகின்றனர். பிரச்சனைனை திசைதிருப்பி அரசியல் லாபம் பெறவும், ஒட்டு மொத்த மக்களை சுரண்ட விரும்புகின்றனர்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மந்திரியான Gerard Larcher "பலதார திருமணமுறை'' யே அச் சமூகத்தில் வேலை வாய்ப்பு இன்மைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றார். பலதார திருமனமுறையே சில சமயம் சமூக விரோத நடவடிக்கைகளை ஏற்படுத்துகின்றன என்றார். அத்துடன் "சில சமூகங்களில் இந்த சமூக எதிர்ப்பு நடவடிக்கை வெளிப்படுவதால், அவர்களில் சிலருக்கு வேலை இங்கு கிடைப்பதில் இடர்ப்பாடுகள் இருப்பதில் வியப்பில்லை'' என்றார். நாட்டை ஆள்பவர்களின் திமிரைத் தவிர இது வேறு எதுவுமல்ல இது. இன நிற வெறிக் கூச்சலைத் தவிர இதற்கென வேறு அhத்தம் கிடையாது. இன நிற குடியிருப்புகளை காலுக்கு கீழ் உருவாக்கி வைத்துக் கொண்டு, அன்றாடம் வேலையின்மை உருவாக்கும் மூலதனச் சட்டத்தை பொக்கற்றில் வைத்துக் கொண்டு, வேலையை விட்டே அன்றாடம் உழைத்து வாழும் மனிதர்களை வேலையில் இருந்தே துரத்தும் இவர்கள் தான், இந்த நிலைமைக்கான முழுப்பொறுப்பாகும். சொகுசகாக ஒரு கும்பல் உழைக்கும் மக்களின் உழைப்பில் இருந்த ஆடம்பரமாகவே வாழ்கின்றது. அந்த மனிதவிரோதக் கும்பலின் செல்வம் பெருக, அதன் எடுபிடிகளாக உள்ள இவர்கள் அதை மூடிமறைக்க திட்டமிட்டு இன நிற வெறியை ஊளையிட்டு அறிவிக்கின்றனர். இவர்கள் தான் உண்மையில் இந்த மனித இனத்தின் எதிரிகளாக சமூக விரோதிகளாக செயலாற்றுகின்றனர்.

இந்த மனிதவிரோதக் கும்பலின் மற்றொரு பிரதிநிதியும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல பிரெஞ்சு அரசாங்க குழுக்களில் Encausse உறுப்பினராக உள்ள ர்நடநநெ Helene Carrere வன்முறைகளுக்கான காரணம் பற்றி ரஷிய செய்தி ஊடகத்திற்கு வழங்கி இனவெறி பேட்டி பலரையும் ஆச்சரியத்துக்கு இட்டுச்சென்றது. இதை Liberation பத்திரிகை எடுத்துக் காட்டியது. "இம் மக்கள் ஆபிரிக்க கிராமங்களில் இருந்து நேரடியாக வருகின்றனர்.... ஆபிரிக்க குழந்தைகள் பள்ளியில் இல்லாமல் ஏன் தெருவில் உள்ளனர்? அவர்களுடைய பெற்றோர்கள் ஏன் அடுக்கு மாடிகளை வாங்க முடிவதில்லை? இதற்குக் காரணம் வெளிப்படையாக தெரிந்துதான். பல ஆபிரிக்கர்களும் பலதார மணம் புரிந்தவர்கள். ஒரு அடுக்கு இல்லத்தில் மூன்று அல்லது நான்கு மனவிகளும் 25 குழந்தகளும் உள்ளனர். மிகுந்த நெரிசல் வீட்டில் இருப்பதால், வீட்டிலேயே இருப்பதில்லை. இது கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ஏன் இந்தக் குழந்தகள் தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.' இனநிற வக்கிரத்தைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. 25 குழந்தைகள் எந்த ஆதாரமுமற்ற வக்கிரமான கூச்சல். இதையே அன்று யூதருக்கு எதிராக நாசிக் கிட்லரும் சொன்னான். பிரான்சில் வன்முறையில் ஈடுபடபட்டவர்களில் பெரும்பாலனோர், இங்கு பிறந்து வாழ்பவர்கள். அவர்கள் பிரஞ்சுக் குடியுர்pமையை வைத்திருப்பவர்கள். அடுக்கு மாடிக் கட்டிடத்தை வாங்க முடியவில்லை என்றால், அதை நீங்கள் கட்டிக் கொடுங்கள். கூலியை உயர்த்திக் கொடுங்கள். அவர்களுகு வேலையை வழங்குங்கள். முதலாளித்துவ அர்த்தத்தில் அரசின் அறநெறி என்பது, மக்களின் நலனை பேனுவது தான். ஆனால் மக்களை சூறையாடுவது மட்டும்தான் அறநெறியாக நடைமுறையில் கையாளப்படுகின்றது.

இப்படி அம்பலப்பட்டு போகும் இனவாதம் மற்றும் நிறவெறியால் இன்றைய பிரதமர் வில்ப்பன் பதறிப் போகின்றார். இதை தணிக்க பலதார திருமணமுறை பற்றி கூறும் போது ஷஷஇதை பொதுக் கருத்துக்களாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.... அமைதியாக இருந்து, கோபம் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.... ஒரே ஒரு காரணம் மட்டும் இந்த நிலைமைக்கான காரணம் இல்லை என்றார்.... பல காரணங்களும் உள்ளன என்றார்.... ஒழுக்கநெறி மதிப்பீட்டின் நெருக்கடி... சமூகப் பரிமாணம் போன்றவை... உள்ளன என்றார்.' எனவே பொதுக்கருத்தை இனவாதம் மூலம் சீண்டி, சமூகத்தை கொந்தளிப்பதை தவிர்க்க கோருகின்றார். முதலாளித்தவ அறிநெறிக் கோட்பாடுகள் சந்தியில் தலைவிரித்தாடுவதை தடுத்த நிறுத்த முனைகின்றார் பிரதமர். ஆனால் இனவெறி நிறவெறி கூச்சல் அவசியமாகி விடுகின்றது ஆளும் வர்க்கத்துக்கு.

1991ம் ஆண்டு ஜூன் 19 அன்று இன்றைய வலதுசாரிகளின் ஜனதிபதியாக உள்ள சிராக் ஆற்றிய உரையொன்றில் இதே இனவாதமே கொப்பளித்தது. அவர் அன்று ஷஷஎம் பிரச்சினை வெளிநாட்டவர்கள் அல்ல. ஆனால் கூடுதலான எண்ணிக்கையில் முஸ்லிம்களும், கறுப்பர்களும் உள்ளனர்... தன்னுடைய மனவியுடன் கடுமையாக உழைக்கும் பிரெஞ்சுத் தொழிலாளி 15000 பிராங்குகள் சம்பாதிக்கின்றான். தனக்கு அடுத்த கட்டிடத்தில் இருக்கும் குடியிருப்பு இல்லத்தில் பலர் குழுமியுள்ளதையும், மூன்று அல்லது நான்கு மனைவியருடன், ஏராளமான குழந்தைகளை வைத்துக் கொண்டு, உழைக்காமல், சமூக உதவியாக 50000 பிராங்குகள் வாங்குவதயும் காண்கிறான்... இத்தோடு கூச்சல், நாற்றத்தையும் சேர்த்துக் கொண்டால், பிரெஞ்சு தொழிலாளருக்கு பைத்தியமே பிடித்துவிடும். இதைச் சொன்னால் இனவெறி என்று பொருளாகிவிடாது.' இப்படி தான் இந்த வலதுசாரிய இனவாதம் கொப்பளித்தது. இன்று இது நடைமுறையாகி வருகின்றது. ஏன் பிரஞ்சு தொழிலாளி உழைக்க, அதைக் கொண்டு உங்களைப் போன்றவார்கள் மிகப் பெரிய செல்வக் குவியல்கள் மீது குந்தியிருப்பதை மூடிமறைக்கவே இது அவசியமாகின்றது. பிரஞ்சுக் குடும்பம் தனது உழைப்பில் 15000 பிராங்குடன் வாழ்வதாக கூறும் நீங்கள், உழையாது எவ்வளவு தொகையைக் கொண்டு வாழ்கின்றீர்கள். ஏன் பொதுச் சொத்தை சூறையாடியது கண்டறியப்பட்ட நிலையிலும், எந்த நீதிமன்றமும் தண்டிக்காத ஒரு நிலையில் சொகுசாக வாழ்கின்றஐர்களே எப்படி! ஒரு கறுப்பன், ஒரு அரபியன் 50000 பெறுவதாக பினாற்றுவதே அப்பட்டமான பொய். இப்படிப்பட்ட குடியிருப்புகளின் வருமானம் என்ன என்பதையும், அவர்கள் என் வீடுகளில் அடைந்து வாழ்கின்றனர் என்பதையும் கீழ் தெளிவான ஆதாரமான புள்ளி விபரங்களுடன் கட்டுரை ஆராய்கின்றது.

இன்று இந்த இனநிறவாத அரசு செய்ய விரும்புவது என்ன?

இனநிறவெறி மூலம் தான் அரசியல் வெற்றியை அடைய விரும்புகின்றார். நாசிசத்தின் கடைக்கோடியில் நின்று அண்ணந்து பார்த்து கொக்கரிப்பதன் மூலமே இதைச் சாதிக்க முனைகின்றனர். இனவாத நிறவாத அடிப்படையில் தீவிரமாக இயங்கும் நாசிக்கட்சியான லுமாரிலுபெனின் தேசிய முன்னணி கட்சி கொண்டிருந்த கொள்கைகள், சிலவற்றை முன்னெடுப்பதன் மூலம் வெற்றி நோக்கி அசைய முனைகின்றனர். இதனடிப்படையில் தீவிர இனநிறவெறி அடிப்படையில் சமூகங்களை பிளக்கும் அனுகுமுறைகள் மூலம், வெள்ளையினமல்லாத சமூகங்கள் மீது இழிவாடுவது மட்டுமின்றி வன்முறையையும் எவிவிடுகின்றார்.

குறித்த சம்பவம் (இருவர் கொல்லப்பட்டவுடன்) நடைபெற்றவுடன் உள்;துறை அமைச்சர் சார்க்கோசி ஆற்றிய இழிவான உரையொன்று, வெள்ளையினமல்லாத அந்த சமூகங்களை எப்படி வலதுசாரிகள் இழிவாடுகின்றனர் என்பதற்கு ஒரு எடுகோலகவே அமைந்தது.

உள்துறை அமைச்சர் சார்க்கோசி அந்த மக்களை குறித்து தனது வக்கிரமான வலதுசாரிய திமிருடன் "கழிவுகளையும்'', "தசை அழுகி கிடப்பவற்றயும்'' அந்த குடியிருப்புக்களில் இருந்து மணற் புழுதியால் அடித்து துரத்திவிடப் போவதாக சூழ்லுரைத்தார். இதற்காக இப்பகுதிகளுக்கு அதாவது "தொல்ல தரும்'' பகுதிக்கும் வாராவாரம் செல்லப் போவதாக கூறி அச் சமூகத்தை இழிவாடியே வம்புக்கு இழுத்தார். இப்படி வன்முறை துண்டிவிடப்பட்டது.

இந்த அவதூறான இனநிற வெறி சார்ந்த சமூகத்துற்றலை தீவிர வலதுசாரி பத்திரிகையான பிகரோ (Le Figaro) கூட அதீர்த்தியுடன் அனுகியது. சொந்த ஜனநாயக (நாய்) வேஷம் களைவதையிட்டு கவலை கொண்டு, இப்படி கூறுவது இன்று பொருத்தமற்றது என்று கண்டித்தது. ஐப்பசி 31 தனது தலையங்கச் செய்தியில் "புறநகர்ப்பகுதிகளில் 'அழுகிக்கிடப்பவற்றை அகற்றுதல் தேவை', 'நகர் குடியிருப்புக்களை மணல் புழுதியால் தூய்மைப்படுத்துவேன்' போன்ற நிக்கோலா சார்க்கோசியின் அறிவிப்புக்கள் வடிவத்தில் பொருத்தமற்றவை. ஆனால் திருப்தியானவ?" என்றே எழுதியது. தனது வலது அரசியல் வங்குரோத்தின் மீது அங்குமிங்குமாக கருத்துரைத்தது. காலகாலமாக வலதுசாரிய தீவிர இனநிற வெறியுடன் சமூகங்களை பிரித்தாண்டு, அவர்களை சமூக ரீதியாகவே இழிவுபடுத்தி ஒடுக்கிய வரலாற்று பராம்பரியத்தை, தமது சொந்த ஜனநாயக வேஷங்கள் மூலமே களையாது பாதுகாத்து வந்தனர். முதலாளித்துவத்தின் அப்பளுக்கற்ற கனவான்களாகவும், முரனற்ற ஜனநாயகவாதிகளாகவும் போட்ட கோமாளி வேஷம் நிக்கோலா சார்க்கோசியின் இனநிறவாத உரையுடன் சிதறிப்போனது.

வழமையாக இச்சமூங்களை பற்றி அருவறுப்பூட்டும் வகையில் அவர்கள் மட்டும் பேசி கழிப்புறம் சமூக மதிப்பீட்டை, பகிரங்கமாக அறிவித்து அச்சமூகங்கைள சண்டைக்கு இழுத்த போது, இந்த பிராஞ்சு ஜனநாயகம் பற்றிய மதிப்பீடுகளும் சமூகங்களிடையே தகர்ந்து போனது. ஜனநாயக வேஷம் போட்டு, மக்களை சுரண்டுவதற்காக மிகவும் பாடுபட்டு கட்டிவந்த ஜனநாயக வேஷசங்கள் ஒரு கணத்திலேயே சிதறிப் போனது. இதனால் தான் வலதுசாரி பத்திரிகையான பிகரோ எல்லாம் சரி, ஆனால் இப்படி சொல்லியிருக்க கூடாது என்று புலம்புகின்றது. அவரை ஜனதிபதி வேட்பளராக தெரிவு செய்த சொந்தக் கட்சி உறுப்பினரிடையே கூட, தமது சொந்த ஜனநாயக வேஷம் கலைந்த போகும் போது அதுவே அரசியல் அதீர்த்தியாக வெளிப்பட்டது. தூய்மையின் பேரால், சமூகங்களை சுரண்டி வந்த ஏமாற்று மோசடிகள் நாறுவதைக் கண்டு, பொறுத்துக்கொள்ள முடியாத அங்கலாய்த்தனர். இதை அவர்கள் நிக்கோலா சார்க்கோசிக்கு கூறுமளவுக்குச் சென்றனர்.

ஏன் அரசாங்கத்தில் சம உரிமகளுக்கான சமூக அமைச்சராக இருக்கும் Azouz Begag சார்க்கோசிக்கு எதிராக பகிரங்கமாகவே கருத்துரைத்தார். அவர் "புறநகர் இளைஞர்களை 'கழிவுகள்' என்று கூறக்கூடாது என்றார். அவர்களை துரத்துவேன் என்று கூறுதலோ, அவர்களை அடிக்க போலீசாரை அனுப்புதலோ கூடாது." என்றார். இப்படி வலதுசாரிய அரசியலுக்குள் முரண்பாடுகளுடன் தான் இந்த இனநிற வன்முறை துண்டிவிடப்பட்டது. அனைத்து அதீர்த்தியையும் அவர் தூசக மதித்து, தனது வன்முறை சார்ந்த பொலிஸ் அடக்குமுறையை எவிவிட்டார். வலதுசாரிய சொந்த கட்சி அதீர்த்தியளருக்கு அவர் பதிலளிக்கவும் தயங்கவில்லை.

நிக்கோலா சார்க்கோசியின தனது எதிர்வினையான தனது கருத்தில் "சொற்களின் மீது முழுக் கவணத்தயும் காட்டுகின்றனரே ஒழிய உண்மைகளின் மீது இல்லை என்றார். இது வியப்பைத் தருகிறது என்றார். ... இந்த பகுதிகளில் தீயகுழுக்கள், கறுப்புப் பண பொருளாதாரம், போதைவஸ்து கடத்தல்காரர்கள் ஆகியோரிடமிருந்து இந்தப் பகுதியை விடுவிக்காவிட்டால், நம்முடைய பகுதிகளுக்கு எதிர்காலம் இல்லாமற் போய்விடும்... உறுதியாக இருத்தல், நீதியைக் காத்தல் என்பவை தான் இரு முக்கியமான சொற்கள்." என்றார். இக் கலகங்கள் ஒன்றும் "தன்னெழுச்சியாக தோன்றிவிடவில்லை" என்றார். "நன்கு திட்டமிட்டு நடக்கின்றன" என்றார். இப்படி தனது வலதுசாரிய அரசியலுக்குள் நின்று பொய்யாகவும், நேர்மையற்ற வகையிலும் சமூக நெருக்கடிகளை திரித்துக் காட்டினார். நிக்கோலா சார்க்கோசியின் இது போன்ற அனுகுமுறை அவசியமற்றதாக வலதுசாரிகள் சிலர் கருதுகின்றனர்.

தமது சுரண்டலை இது போன்ற வன்முறைகள் இன்றியே அமைதியாக சுரண்டக் கூடியதும், எமாற்றக் கூடியது என்று அவர்கள் நம்புகின்றனர். இருக்கும் ஜனநாயக வேஷசமே போதுமானது என்று நம்புகின்றனர். ஆனால் உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசியோ, இல்லையென்று ஒற்றைக் காலில் நின்று பொலிஸ் ஆட்சியை திணிக்கின்றார். சமூகங்களை மொழிகளால் இழிவாடி, அவர்களை வன்முறையைக் கொண்டு ஒடுக்கி, அவர்களை சிறைகளில் தள்ளி, நாடு கடத்தி வெறியாட்டம் போடுவதன் மூலமே, அதாவது சமூகத்தை பீதியில் உறையவைத்து சுரண்டுவதே மிகச் சிறந்த அனுகுமுறை என்று கொக்கரிக்கின்றார். இதனடிப்படையில் தான் நிகழ்சிகள், சம்பவங்கள் நடந்தன, நடக்கின்றன.

இதற்கு எற்ப அதிகாரத்தை கையில் எடுத்து, இச் சமூகங்கள் மீது பொலிஸ் வன்மறையை எவிவிடுகின்றனர். எதிர் வன்முறையை திட்மிட்டதாக ஆதாரம் எதுவுமின்றி சோடித்துக் காட்டினார். அரசியல் ரீதியாக எந்த சமூக அடிப்படையுமற்ற லும்பன்தனமான தன்னெழுச்சியான வன்முறையை, திட்டமிட்ட இன ரீதியான ஒன்றானதாக காட்டி ஒடுக்குமுறையை ஏவிவிட்டார். பொலிசாருக்கு வழங்கிய உத்தரவுகளின் மக்களுடன் கதைப்பது, சமூகங்களுடன் இணங்கிப் போவது பொலிசாரின் வேலையல்ல என்றார். விசாரனை, கைது, கண்கணிப்பு தான் பொலிசாரின் பணி என்று கூறி, பொலிஸ்சாருக்கும் மக்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை நீண்ட இடைவெளியில் பேனும் படி கடுமையான உத்தரவு இடப்பட்டது.

பொலிஸ் சேர்ந்த தொழிச்சங்கங்கள் நிக்கோலா சார்க்கோசியின் இந்த மக்கள் விரோத அனுகுமுறையை விமர்சித்து வருகின்றன. இந்த அரசியல் தான், வன்முறையைத் துண்டுகின்றன என்று கண்டிக்கின்றனர். மக்களுடன் பொலிசார் நெருங்கிப் பழகுவதை வெறுக்கும் அனுகுமுறை சார்ந்த அரசியலை, பொலிசாரின் தொழிச்சங்கங்கள் விமர்சிக்கின்றன. பொலிசாரை வன்முறை துண்டும் ஒரு அரசியல் கருவியாக, மிகவும் திட்டமிட்ட அரசியல் அனுகுமுறை மூலம் துண்டப்பட்டது.

இதை வன்முறையை துண்டிய வடிவத்தை களத்தில் இருந்தே ஒரு செய்தியாளர் அழகாக வெளியிட்டுள்ளார். பிரான்சின் France Inter radio க்கு தகவல் சேகரிக்கச் சென்ற செய்தியாளரும், புவியியல் மற்றும் வரலாற்று துறை சார்ந்த கட்டுரை ஆசிரியருமான அந்வான் ஜேர்மா "சனிக்கிழமை காலையில் இருந்து France Inter radio செய்தியாளருடன் தொடர் நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்காக அப்பகுதிக்கு தொடாச்சியாக சென்றிருந்தேன். அவர் அக்டோபர் 27 வியாழன் முதல் இந்த சிறுநகரம் கொந்தளிப்பில் இருந்தது.... இதைத் தான் நான் பார்த்தேன், கேள்விப்பட்டேன், உணர்ந்தேன், உரைக்கப்பட்டேன்." என்கின்றார். அவர் தனது கட்டுரையில் "சனிக்கிழமை இரவு ரமிழான் நோன்பு முடிகின்ற அந்த மாலை, 6.30 அளவில் 400 CRS படயினரும் காவல்துறையினரும் இணைந்து ரோமானியப் படைகள் போல் விரைந்து வந்தனர். முகத்தடுப்பை இழுத்து விட்டுக் கொண்டும், தற்காப்பு கேடயத்தை கொண்டிருந்ததோடு, கைகளில் ரப்பர் பிளாஸ்டிக் தோட்டா செலுத்தும் துப்பாக்கிகள ஏந்திய வண்ணம் கட்சியளித்தனர். புலப்படாத விரோதியைத் தேடி ஒவ்வொரு தெருவழியேயும் அவர்கள் சென்றனர். உண்மையில் அந்தநேரத்தில் ஒவ்வொருவரும் தமது வீடுகளில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதேநேரம் வீதியில் ஒருவரும் இல்லை. தெருக்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைதியாக இருந்தபோது ஏன் இந்த படயினரின் அணிவகுப்பு நடந்தது? உள்ளூர் மக்கள் இதைத்தான் 'போலீசாரின் வெளிப்படுத்திய ஆத்திரமூட்டல்' எனக் கூறுகின்றனர்." என்ற தனது கட்டுரையில் எழுதுகின்றார்.

தான் நேரில் பார்த்ததை கட்டுரையில் தொடர்ந்து எழுதுகின்றார். பொலிசாhர் ஆத்திரமூட்டிக் கொண்டிருந்த ஒரு நிலையிலும் ஷஷஒரு மணி நேரம் கழித்து, ஒரு சில இளைஞர்கள் வீடுகளைவிட்டு வெளிவந்து போலீசாரை எதிர்கொண்டனர். அனைவரும் மோதல் தொடங்குவதற்காக காத்திருக்கின்றனர். இத்தகைய போலீஸ் அனுகுமுறைக்கு,... என்ன பொருளைத் தான் கொடுக்க முடியும். அதாவது தமது மிருகத்தனமான வலிமையைக் காட்டியா ஷஷகுடியரசு ஒழுங்கு' நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற கேட்க வைப்பதைத் தவிர?' வேறு என்ன இது என்றே எழுதுகின்றார்.

அவர் தனது கட்டுரையில் சம்பவம் நடந்த Clichy-sous குடியிருப்புக்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் ரப்பர் பிளாஸ்டிக் தோட்டாக்களை வெகு அருகில் இருந்து சுட்டுக் கொண்டு, ஷஷஇழிமகன்களே கிட்டே வாருங்கள்' என்று கூக்கூறல் ஈடுகின்றனர். இதை தான் தொலைபேசியால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் காணக்கூடியதாகவே இருந்தது என்கின்றார். வன்முறை வலிந்து துண்டப்பட்டுக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் வன்முறையை தூண்டி, தொடர்ச்சியான வன்முறையை தொடக்கி வைத்தது பொலிசார் தான். ஞாயிறு இரவு 9 மணியாளவில் அச்சுற்றுப்புறங்களில் இருந்த கண்ணீர்ப் புகைக் குண்டை திட்டமிட்ட வகையில் தொழுது கொண்டிருந்த பள்ளிவாசலில் பெண்கள் மீது எவிவிட்டனர். இப்படி இனவாதம் மதவாதம் நிறம் வாதம் சாhந்த வகையில், பொலிசாரால் வன்முறையைச் அச்சமூகங்கள் மீது துண்டப்பட்டது.

இதன் எதிர்வினையாக பிரான்ஸ் முழுக்க வன்முறை பரவிப்படர்ந்தது. இந்த வன்முறை எப்படி திணிக்கப்பட்டது, பரவவிடப்பட்டது என்பதை, வன்முறையின் விளைவுகளே எடுத்துக் காட்டுகின்றது. எரிக்கப்பட்ட கார் எண்ணிக்கை

27.10.2005 23 (வியாழன் - இரு இளைஞர்கள் கொல்லப்பட்ட அன்று)
28.10.2005 29
29.10.2005 20 (சனி - ரமிழான் நோன்பு அன்று பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில்)
30.10.2005 8 (பள்ளிவாசல் மீது திட்டமிட்டு கண்ணீர்புகைக் குண்டை பொலிசார் விசீய அன்று)
31.10.2005 68
01.11.2005 228
02.11.2005 315
03.11.2005 596
04.11.2005 897
05.11.2005 1295
06.11.2005 1408
07.11.2005 1173
08.11.2005 617
09.11.2005 482
10.11.2005 463
11.11.2005 502
12.11.2005 374
இதன் பின்னான தரவுகள் தெரியது.

வன்முறை தொடங்கிய போது குறித்த சம்பவத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட ஒரு எதிர்வினையாகவே வன்முறை இருந்தது. சட்டம், நீதி ஒரு தலைபட்டசமானதாக செயல்பட்ட நிலையில், இனங்கள் மீதான பொலிசாரின் ஒடுக்குமுறையின் விளைவாகவே இவ் வன்முறை அமைந்தது. ஆனால் தொடர்ச்சியான இனவாத உரைகள், அச் சமூகம் பற்றி இழிவாடல்கள், பொலிஸ் திட்டமிட்டு வன்முறையை துண்டிய நிகழ்வுகள், வன்முறையை மேலும் ஆழமாக பரவச்செய்தது.

குறித்த 17 நாளில் 8400 மேற்பட்ட தனியார் கார்கள் எரிக்கப்பட்டன. 2652 பேருக்கு மேல் கைது செய்பட்டு இருந்தனர். வன்முறை போக்குவரத்து பஸ் மீதும், பாடசலைகள் மீதும், தனியார் கடைகள் மீதும், பல அரசு கட்டிடங்கள் மீதுமாக பரவியது. வன்முறையினால் எற்பட்ட காப்புறுதி தொகை 20 கோடி ஈரோவாகியது. இதில் 2 கோடி தனியார் காருக்கானதாக அமைந்தது. 12000 பொலிசார் வன்முறையைக் கட்டுபடுத்த அனுப்பப்பட்டனர். அவசரகாலச் சட்டம் அழுல் செயப்பட்டது. உராடங்குச் சட்டம் அழுல் செய்யப்பட்டது. கைதுகள் பெருமளவில் தொடருகின்றது. ஆனால் வன்முறை குறைந்து வந்த போது, தொடர்ந்த வண்ணமிருந்தது.

மொத்தத்தில் அரசு இதை அனுகிய அடிப்படையில் இருந்தே, இதற்கு எதிர்வினை தெரிவிக்கும் வண்ணம் பிரான்ஸ் முழுக்க வன்முறை பரவி தீவிரம் கொண்டாதாக மாறியது. உண்மையில் இதைத்தான் இன்றைய உள்துறை அமைச்சர் விரும்பினர். இதை அடக்குமுறைகள் மூலம் கட்டுப்படுத்துவதன் மூலம், தனது அதிகாரத்தின் பலத்தைக் காட்ட விரும்பினார். சட்டஒழுங்கை தான் உறுதியாக நிலைநாட்டிக் காட்டுவதன் மூலம், தேர்தல் வெற்றி என்ற இலக்கை கொண்டு செயல்படுகின்றார். இதற்கு எற்ப இனவாத வன்மறையைத் தூண்டி, அதை தனது அடக்குமுறை இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தி, வெள்ளையின நிற வெறியை எரிய விடுவதன் மூலம் அடுத்த ஜனதிபதியாக வரும் கனவுகளே இந்த வன்முறையின் அரசியல் அடிப்படையாகும்.

வன்முறை மேலும் ஆழமாக துண்டப்பட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை அறிவிக்கும் நடைமுறை உத்திகையாளப்பட்டது. அதாவது சட்டபூர்வமாகவே பொலிசாரின் திட்டமிட்ட வன்முறை சார்ந்த அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில், இச்சட்டத்தை தனது சொந்த இனவாத வரலாற்றில் இருந்து தோண்டியெடுத்தனர். இதை கையாளும் உரிமையை பொலிஸ் அதிகாரிகளின் கையில் வழங்கினர். ஊராடங்குச் சட்டத்தை விரும்பியவாற அவர்கள் பயன்படுத்தம் உரிமையைப் பெற்றனர். இராணுவ ஆட்சி போன்று, பொலிஸ் ஆட்சி நிறுவப்பட்டது. இப்படி கண்மூடித்தனமான கைது, அடக்குமுறை பெருமளவில் நடத்தப்பட்டது, நடத்தப்படுகின்றது.

ஒடுக்குமுறைக்குள்ளான இந்த சமூகங்கள் மீது மேலும் அடக்குமுறையை கையாளவே அவசரகாலச்சட்டம் அழுல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லுமொன்ட் (Le Monde) பத்திரிகை தனது தனது கடும் கண்டனத்தை வெளியிட்டது. அதில் அவர்கள் "1955ல் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சட்டத்தை அந்த இளஞர்களுக்கு எதிராக பயன்படுத்துவது ஆச்சரியமானது. மிருகத்தனமான ஒரு அடக்குமுறைச் செய்தியைத் தான் அந்த புறநகர் இளைஞர்களுக்குக் கொடுக்கும். 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்களை அவர்களுடைய தாத்தாக்களை நடத்தியது போல் தான் நடத்தவோம் என இது மீண்டும் கூறுதல் போல் உள்ளதாக எழுதியது.'' இந்தச் சட்டம் முன்பு இவர்களின் தாத்தாமருக்கு எதிரிராகவே பயன்படுத்தப்பட்டது. அன்று இச்சட்டத்தின் மூலம் லரைக் கொன்றனர். இன்று அதே சட்டம் பேரன்மாருக்கு எதிராக பயன்படுத்துவதை கண்டித்தே, பத்திரிகை தனது செய்தியாக வெளியிட்டது. அத்துடன் அவர்களை நடத்தியது போன்று நடத்த முனைவதாக குற்றம் சாட்டுவதன் மூலம், பிராஞ்சு வெள்ளையின நிற ஆட்சியாளர்களின் குற்றத்தின் தொடர்ச்சியான அதே அனுகுமுறையை தெளிவாக சுட்டிக் காட்டியது. இப்படி இந்தச் சட்டம் அன்று யாருக்கு எதிராக ஏன் பயன்படுத்தப்பட்டதோ, அதே உள்ளடகத்தில் அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு எதிhhக மீண்டும் பயன்படுத்தப் படுகின்றது என்ற உண்மையை தெளிவாக அரசியல் ரீதியாகவே எடுத்துக் காட்டியது.

லிபரேசன் (Liberatio) பத்திரிகை இது தொடர்பாக தனது செய்தியில் "சோகமான கேலிக்கூத்து'' என்று இந்த அடக்குமுறை கேலிசெய்தது. அத்துடன் இந்த நடத்தையை "அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்தல்" என்று கிண்டல் செய்தது. இதற்கென ஒரு முன்னுரை இருந்த போதும், எந்த விலையையும் கொடுக்கலாம் என்பதை ஏற்கவே முடியாது என்றது. சமூகங்களை ஒடுக்கி, அவர்கள் மேல் வன்முறை துண்டி, தமது சொந்த அதிகாரத்தை நிலைநிறுத்தும் அரசியல் வக்கிரத்தையே இந்த செய்தி உடாக பிரஞ்சு பத்திரிகையான லிபரேசன் எடுத்துக் காட்டியது. இப்பத்திரிகை இந்த சூழலை பற்றி எழுதும் போது "வன்முறயான அநீதி, சமூக ரீதியான புறக்கணிப்பு மற்றும் வறுமை ஆகியவற்றின் வினைவு தான் இது என்றது...." இப்படி தனது கருத்தை அத தெரிவித்தது. இந்தளவுக்கு இப்பத்திரிகைகள் புரட்சிகரமான பத்திரிகை அல்ல. இந்த முதலாளித்துவ அமைப்பு சார்பான பத்திரிகைகள் தான்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து மனித உரிமைக்கான குழு இது "பேரழிவு தரக் கூடியது' என்றது. அத்துடன் "இது ஒரு சமூக நெருக்கடியே ஒழிய, போர் அல்ல'' என்று கடுமையாக கண்டித்து, இந்த சட்டத்துக்கு எதிரான தனது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டது. சோசலிஸ்ட் கட்சி (PS) இது தொடர்பாக, மந்திரி சார்க்கோசி சட்டத்தின் பெயரிலான அவரின் வன்முறை சார்ந்த நடத்தையை கடுமையாக விமர்சித்தது. அதேநேரம் தமது சொந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு எற்ப நடந்து கொண்டது. சோசலிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் Jean-Marc Ayrault "ஊரடங்கு உத்தரவிற்கு கொள்கையளவில் நாங்கள் எதிர்க்கவில்லை'' என்று குறிப்பிட்டு "நாட்டில் அவசரகால நிலை என்பது முதலில் சமூகம் சார்ந்த அவசரகால நிலையாக'' இருக்கும் பட்சத்தில் இதை ஆதரிப்போம் என்றனர். அதாவது சார்க்கோசி சட்டத்தை மட்டும் பயன்படுத்துவதை எதிர்க்கும் இவர்கள், அதை அழுல்படுத்தும் போது அச் சமூக அவலங்களுகான தீர்வை ஒருங்கு சேர தீர்க்கும் வகையில் இச்சட்டத்தை பயன்படுத்தக் கோரினர். இதுவே இவர்களுக்கு இடையிலான அடிப்படை முரண்பாடு. இந்த சமூகங்களின் இழிநிலைக்கு இந்த இரு கட்சிகளுமே பொறுப்பேற்பதை இவர்கள் நிராகரித்து விடுகின்றனர். மாறாக பொலிஸ் அடக்குமுறை மூலம் சமூகங்களை அடிமைப்படுத்த முனையும் இன்றைய வலதுசாரி அரசங்கத்தின் கொள்கைக்கும், இச் சமூகங்களை சீர்திருத்தங்கள் செய்தபடி அடக்க கோரும் முடிவுக்கு இடையில் தான் இந்த நாடு அடக்குமுறைகளை எவிவிட்டனர்.

போலிக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஊரடங்கு உத்தரவை எதிர்த்த அதேநேரம், "ஏதோ நாம் போரில் ஈடுபட்டுள்ளோமா'' என்று கேட்குமளவுக்கு நிலைமை மிகைப்படுத்தப்பட்டு வன்முறை துண்டப்பட்டதாக குற்றம்சாட்டியது. அக் கட்சியின் தலைவி Marie-George Buffe தனது கருத்தில் இளைஞர்களிடம் இந்த அரசாங்கம் வன்முறையைத் தூண்டிவிடுகிறது என்றார். அத்துடன் ஷஷஇன்னும் கூடுதலான வன்முறையில் ஈடுபடுவதற்கான அறைகூவலை அரசு தொடர்ச்சியாக புதுப்பிக்கிறது என்று குற்றம் சாட்டினர்.'' குற்றத்தின் தன்மை அரசு தரப்பினால் துண்டப்பட்டது. அத்துடன் அவர் தனது கருத்தில் "நாம் ஒன்றும் உள்நாட்டுப் போரில் இல்லை'' என்றார். வன்முறையின் மூலமோ அரசு தரப்பாக இருப்பதையே இது கோடிட்டுக் காட்டியது. இது போன்ற ஓத்த கருத்துகளையே தான் பச்சைக் (பசுமைக்) கட்சியினரும் முன்வைத்து அரசை குற்றம் சாட்டினர்.

வன்முறை அரசினால் திட்டமிட்டு தூண்டப்பட்டது. சமூக ரீதியான இன நிற புறக்கணிப்பு சார்ந்த சமூக ஒடுக்கமுறைக்கு மேல், பொலிஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் சமூக வன்முறையை மேலும் ஆழமாக தூண்டப்பட்டது. சமூக அமைதியின்மையை கண்துடைப்புக்கு மட்டும் காட்டிக் கொள்ளும் அரசு, திட்டமிட்ட ஒழுக்குமுறையில் பொலிஸ் வன்முறையை ஏவுவதில் நடைமுறைவாதிகளாக செயல்படுகின்றனர். இந்த இழிந்து போன சமூகத்தில் வாழும் இளையர்களின் எதிர்கால வாழ்க்கை எதுவும் இன்றி, ஒடுக்கப்படும் நிலையில் தான் எதிர்வினையான வன்முறைகள் கண்மூடித்தனமானதாக அமைந்து விடுகின்றது. இதைவே தீவிர வலதுசாரி பத்திரிகையான பிகரோ (Le Figaro) அக்டோபர் 29 ஷஷஅங்கு வசிப்பவர்கள் பலர் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று போலீசாரின் நடவடிக்கை பற்றி பெரும் கோபத்துடன் காணப்பட்டனர். போலீசார் எங்கள துன்புறுத்துகின்றனர். எம்மீது Cowboys போல் விளயாடுகின்றனர். ஆனால் எங்களுக்கு உதவி தேவப்படும்போது அவர்கள் வருவதே இல்லை என்கின்றனர்.'' என்று சமூகத்தின் எதிர்நிலையான சீற்றத்தில் இருந்து தமது செய்தித் தகவலைத் தருகின்றனர். வழமையாக அங்கு என்ன நடக்கின்றது என்பதையும், பொலிசாரின் இனநிற நடத்தை நெறியையும் இது அம்பலமாக்கி விடுன்றது.

இந்த பிராஞ்சு அரசின் அதிகாரத்தை பாதுகாக்கும் பொலிசாரின் நடத்தைகள், இனவாதம் சார்ந்தாகவும், நிறவாதம் சார்ந்தாகவும் அமைகின்றது. இவர்களின் அனுகுமுறை எப்போதும் இழிவுபடுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும், கோபப்படுத்துவதாகவும், வன்முறையைத் துண்டுவதாகவும் அமைகின்றது. இந்த விடையங்கள் பொதுவாக பிராஞ்சு சமூகங்கள் முன் தெரியவாரத ஒரு விடையமாகவே அமைந்து விடுகின்றது. சம்பவங்கள் பெரியளவில் நிகழும் போது மட்டும் தான், அவை வெறும் செய்திகளாகவும், அரசாங்கத்தினதும்; பொலிசாரினதும் கண்துடைப்பு அனுதபங்களாக வெளிவருகின்றது. குறித்த சம்பங்களைத் தொடர்ந்து அக்டோபர் 31 லுமொன்ட் (Le Monde) தனது ஆசிரியர் தலையங்கத்தில் "2004ம் ஆண்டு சட்டவிரோதமான பொலீஸ் வன்முறை பற்றிய குற்றச்சாட்டுகள் 18.5 சதவீகித்தால் அதிகமாகியுள்ள செய்தியையும் அம்பலமாக்கியது.' எப்படி வன்முறை சட்டவிரோதமாக அரச இயந்திரங்களால் துண்டப்பட்டு, பின் அதை சட்டத்துக்கு உட்பட்டதாக அடக்கியொடுக்கின்றனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. பொலிஸ் துப்பாக்கிச் சூடுகள் அன்றாட செய்தியாகி வருகின்றன.
பொசிசார்pன் குற்றங்கள் பெருகி வருகின்றன. அதுவும் இவை பெருமளவில் வெளிநாட்டவருக்கு எதிரானதாகவே அமைகின்றது. பொலிசார்ருக்கு எதிரான மனஅழுத்தங்கள் பொதுவில் பதிவு செய்ய பலரும் முன்வருவதேயில்லை. பயம், பீதி விதைக்கப்பட்ட நிலையில் சமூங்கள் ஒடுங்கி ஒழுகி வாழ்கின்றன. பொலிசாருக்கு எதிரான மனக்குமைச்சல், எதிர்புணர்வுகள் இச் சமூகத்தில் புரையோடிக் காணப்படுகின்றது.

குறிப்பாக இரு இளைஞர்கள் உயர்யழுத்த மின் தாங்கியில் எதோ ஒரு வகையில் சிக்கி இறந்த நிகழ்வையொட்டி, பொலிசாரின் வாக்குமூலங்களே முரண்பாடாகவே உளறிக் கொட்டப்படுகின்றது. குறித்த பகுதியில் அன்று பொலிசாரே இருக்கவே இலலை என்கின்றது பொலிசும் உள்துறை அமைச்சும். ஆனால் அந்த சம்பவம் நடந்த நேரத்தில் நான்கு வாகனத்தில் பொலிசார் குறித்த இடத்தில் இருந்துள்ளதை, அதைந் சுற்றி வாழ்ந்த சமூகங்கள் கண்டுள்ளன. இதில் பிராஞ்சு சமூகத்தைச் சொந்தோரும் பொலிசார் இருந்ததையும், பொலிஸ் வாகனங்கள் வேகமாக அங்கும் இங்கும் வேட்டைக்காக ஒடித்திரிந்தையும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு முன் தகவல் கொடுத்துள்ளனர்.

குறித்த இளைஞர்களுடன் இருந்த வேறு பல இளைஞர்கள், நடந்த சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த பற்றைக்குள் ஒடிச் சென்று ஒளித்திருந்;த பலரும் கூட, பொலிசாரின் நடத்தையை உறுதி செய்யும் வகையில் செய்திகளை தொலைக்காட்சி செய்தியாளர் முன் தமது கருத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் பொலிசாhர் தாம் அங்கு பிரசனமாகவே இல்லை என்கின்றனர். இந்த நிலையில் இது பற்றிய விசாரனை தொடங்கியுள்ளது. சட்ட அமைப்பு பொலிசாருக்கு எதிராக பிரதானமாக மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளடங்கிய வகையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1.இருவர் மரணம் மற்றும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான் மின் அதிர்ச்சிக்கு உட்பட்ட நிகழ்வில் குற்றம் இழைத்தாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2.சம்பவம் நடந்த முடிந்த பின்பு அதை தெரிந்தும், அவர்களை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்க முற்படவில்லை என்ற குற்றச்சாட்டு. (குறித்த காயமடைந்த மூன்றவது இளைஞனைக் கூட, சுற்றி உள்ள சமூகம் தான் மீட்டு எடுத்து மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பற்றியது.)
3.மசூதி மீது திட்மிட்டு நடத்தி தாக்குதல்

முன்று பிரதான குற்றங்களையும் இழைத்தாக பொலிசார்ருக்கு எதிராகவே, நீதிமன்ற விசாரனைகள் தொடங்கியுள்ளது. அரசாங்க வழக்கு தொடுனர் இந்த நீதி விசாரனை தொடர்பாக செய்தியாளருக்கு வழங்கிய பேட்டியில் "அவர்கள் (கொல்லப்பட்ட இரு இளைஞர்கள்) தவறு செய்த இளஞர்கள் அல்ல, அவர்கள் எந்தவிதமான பிழையையும் செய்யவில்லை என்பதை தெரிந்த கொள்ளும் போது குறித்த சம்பவம் இன்னும் கூடுதலான சோகத்தையே கொடுக்கிறது.'' என்றார். இக் கூற்று அரசாங்கம் சார்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சார் கூற்றையே முற்றாகவே மறுதலிக்கின்றது. இவர்களை திருடர்கள், சொத்து நாசம் செய்பவர்கள் என்று, பொலிஸ் அடவாடித்தனங்களை நியாயப்படுத்த பிராஞ்சு அரசு மக்களுக்கு பொய்யுரைத்த செய்தியையே கேலி செய்கின்றது. கொல்லபட்ட பெற்றோருக்கு சார்பாக வாதிடும் வக்கீல் Jean-Pierre Mignard தனது பேட்டியில் "எந்தத் தவறும் செய்யாத இளஞர்கள் பெரும் அச்சுறுத்தல் அபாயத்தால் உந்தப்பெற்று, இத்தகைய ஆபத்தான இடத்திற்கு ஏன் தப்பிச் செல்ல முற்பட்டனர்?'' என்று கேட்கின்றார். இதன் மூலம் பொலிசாரின் அன்றாடம் நடத்தும் கண்மூடித்தனமான வன்முறை நடத்தையே இதற்கு காரணம் என்பதையே சொல்லாமல் சொல்லிவிடுகின்றனர்.

இனம், நிறம், மதம், குறித்த குடியிருப்பு என்ற உள்ளடகத்தில் குறித்த சமூக இளைஞர்கள் நிம்மதியாகவும் இயல்பாகவும் வாழமுடியாத அவலத்தையே, இந்தச் சம்பவம் உருக்கமாகவே பிரஞ்சு சமூகத்துக்கு எடுத்துக் காட்டிய ஒரு நிகழ்வாகும். பொலிசார் எதையும் எப்படியும் செய்யும் ஒடுக்குமுறை, இயல்பாகவே பொலிசார்ரைக் கண்டு பீதியில் ஒடவைக்கின்றது. இதன் எதிர்வினைதான், அராஜகமான எதிரான வன்முறைகளாக பரிணாமிக்கின்றன. இப்படி வன்முறை கொண்ட அராஜகவாதக் குழுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 12 வயதுடை இளைஞன் ஒருவனிடம், இப்படி இரவில் திரிவது தொடர்பாகவும், தொலைக்காட்சி செய்திக்காக ஒரு செய்தியாளர் கேள்வியை கேட்டார். அதாவது கைது செய்யப்பட்டால் சிறையில் அல்லவா அடைக்கப்படுவாய் என்று கேட்டபோது, அவன் தாம் வாழும் இடத்தில் இருப்பதும் சிறையில் இருப்பதும் ஒன்றே என்றான். ஒரு எதார்த்த உண்மை, இப்படி இயல்பாகவே வெளிப்படுகின்றது. இது அவசரகாலச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துவிடும் மொத்தத் திட்டத்தையும் கேலி செய்கின்றது. சிறை மேலும் வன்முறையை நிறுவனப்படுத்திவிடும்.

அடக்குமுறையாளர்கள் எப்போதும் தண்டனை, சிறை என்று அதில் மூழ்கி சரணடைந்து விடுகின்றனர். சமூகத்தின் இழிநிலையை உருவாக்கிவிட்டு, குற்றத்தை அந்த சமூகத்தின் எதிர்வினைகள் மீது குற்றம் சாட்டுவதே கிரிமினல் நடவடிக்கையாகும்;. சட்டம் சிறை என்று தொடரும் வன்முறைக்கு பதிலடியாக, எதிர்வன்முறை மிக நுட்பமானதாக மாறுகின்றது. இரகசியமான திட்டமிட்ட சதியாக மாறுகின்றது. மிகவும் ஆபத்தானதும், அதிக அழிவைத் தரவல்லதாகவும் மாறிவிடுகின்றது. பிரான்ஸ் வன்முறைகள் படிப்படியாக அதை நோக்கியே நகருகின்றது. பொலிசாரின் கைது மற்றும் சிறை என்ற வடிவதை எதிர்கொண்டு, திட்டமிட்ட தீடிர் தாக்குதலாக மாறி வருகின்றது. தற்செயலாக தன்னெழுச்சியாக தொடங்கிய வன்முறை, பொலிசாரின் திட்டமிட்ட வன்முறைக்கு பதிலடியாக படிப்படியாக திட்மிட்டதாக மாறுகின்றது. வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாது பொலிசாரையே திணறடிக்கின்றது. இது நீடித்த ஆயுள் கொண்டதாக, அராஜக வன்முறையை சமூகத்தினுள் விட்டுச் செல்லுகின்றது.

சம்பவத்தின் பின் பொலிசாரின் எதிர்வன்முறை அதிகரிக்க அதிகரிக்க, உண்மையில் வன்முறை மேலும் கூர்மையாகி அதிகரிக்கத் தொடங்கியது. இதை நாம் மேலுள்ள வன்முறை தொடர்பான புள்ளிவிபரங்களில் இருந்து தெளிவாக காணமுடியம். இதைக் கட்டுப்படுத்த வரைமுறையற்ற எதிர் வன்முறையையும் கைதையும் நடத்தினர்.

இதன் பொது பல அப்பாவி இளைஞர்களை கண்மூடித்தனமானமாக கைது செய்யும் நிகழ்வு, எதிர்காலத்தில் நிலைமை மேலும் வன்முறையாக்கின்றது. கைதுகள் தொடருகின்றன. இது பெருமெடுப்பில் நடக்கின்றது. கைது செய்யப்பட்ட பெருமளவிலான இளைஞர்கள் முன்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றங்களுக்காக கைது செய்யப்படவர்கள் அல்ல என்ற நீதித்துறையே ஒத்துக் கொள்கின்றது. தோலின் நிறம், இனத்தின் அடையாளம், வாழும் இடம், குறித்த வயது, சில நடையுடை பாவனைகள் உடையோர் குறிப்பாக கைது செய்வதற்கான ஒரு அடிப்படையாகி விடுகின்றது.

அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கெரிலாப்பணியினான ஒரு தீடிர் தாக்குதலாக மாறிவிட்டது. 12000 மேற்பட்ட பொலிசாரை ஈடுபடு;தியுள்ள அரசு, அந்த மக்களைக் கண்கணிக்க அவர்களுக்கு மேலாக பல ஆயிரம் கமாரக்களை பூட்டியும் கூட, இதைக் கட்டுப்படுத்த முடியாது திணறுகின்றது. அவசரகாலச் சட்டத்தை மூன்று மாதத்துக்கு மேலானதாக நீடித்துள்ள அரசு, ஊரங்டங்குச் சட்டத்தை விரும்பியவாறு விரும்பிய இடத்தில் அழுலாக்கியுள்ளது. வயது குறைந்தவர்கள் குறித்த நேரத்தின் பின் பெற்றோர் இன்றி தனியாக நடமாடமுடியாது என்ற சட்டம் அழுலுக்கு வந்தது. குற்றம் இழைத்தால் பெற்றோருக்கு தண்டனை என்ற சட்டம் அழுலுக்கு வந்துள்ளது. இஸ்ரேலிய காட்டுமிராண்டிகள் குண்டு வைப்போரின் பெற்றோரின் குடியிருப்பை தகர்ப்பது போல், இச் சட்டம் பிரான்சில் குழந்தைக்கு பதிலாக பெற்றோரையே தண்டிக்கின்றது. இந்த அரசு குற்றத்தின் பொறுப்பாளியாக இருந்த போதும், இதை தண்டிப்போர் யாரும் கிடையாது.

இது ஒரு சமூகப் பிரச்சனையாக இருப்பதையே, இந்த இனவாத நிறவாத அரசு மறுக்கின்றது. பொலிஸ் அடக்குமுறை மூலம் அடக்கிவைக்கவே முனைகின்றது. இந்த சமூகப் பிரச்சனை உலகமயமாதலுடன் நேரடியாக தொடர்புடையது. உலகமயமாதல் சமூக அமைப்பில் மனித உழைப்பு அவசியமில்லாத போது, உழைப்பில் இருந்து தூக்கியேறியப்பட்ட மக்கள் கூட்டம் வாழ்வதற்கு எற்ற சேரிகளையே உற்பத்தி செய்கின்றது. உயிர் வாழ்வதற்கு முடியாத அந்த சமூகங்களிடையே எழும் சமூக கொந்தளிப்புகளை, வன்முறைகளையும் காட்டுமிராண்டித்தனமானதாக விளக்கி அதை ஒடுக்க முனைகின்றனர். சொந்தக் கிரிமினல் புத்தியைக் கொண்டு, அதை இனம் நிறம் என்ற வகையில் பிரித்தாளுக்கின்றனர். இது தான் அந்தப் பகுதிகளில் நடக்கின்றது. சமூக கொந்தளிப்புக்கு அரசியல் ரீதியான தீர்வை நிராகரிக்கும் இவர்கள், அடக்குமுறை ஏவி கொக்கரிக்கின்றனர். இதற்காக கண்கணிப்பு இயந்திரங்களையும், காமரக்களையும், பொலிசாரின் எண்ணிக்கையும் பெருக்குகின்றனர்.
சமூகங்களை கண்கணிக்க பொலிசாரின் எண்ணிக்கை எப்படி பெருகியது எனப் பார்ப்போம்.

பொலிஸ் எண்ணிக்கை
1974 99144
1980 108903
1990 125061
2000 142703
2003 143836

ஒரு புறம் பொலிஸ் ஆட்சி. மறபுறம் உலகமயமாதல் கட்டமைப்புகள் சமூகங்களை சீரழிக்கத் தொடங்கிய போது, செல்வங்கள் சில தனிநபர்களை நோக்கி குவியத் தொடங்கியது. இதை இழந்துவரும் உழைக்கும் மக்களின் வாழ்வு படுபயங்கரமாகவே சீராழிகின்றது. இதுவே ஒழுங்குபடுத்தப்படாத அராஜகவாத கும்பல் நடவடிக்கையை உற்பத்தி செய்கின்றது. இதன் விளைவுகளே பிரான்சின் நகர்புறச் சேரிகளில் தெளிவாக பிரதிபலிக்கின்றது.

இதன் ஒரு அங்கமாகவே பிரான்சின் நகர்புற வன்முறையைப் நாம் புரிந்துகொள்ளமுடியும்;. வேலையின்மை அதிகரிக்க வன்முறை எப்படி அதிகரித்து, அதுவே இன்று உச்சத்தை அடைகின்றது என்பதற்கு பிரான்சின் நகர்புற வன்முறை பற்றி புள்ளிவிபரங்களே சாட்சி கூறி நிற்கின்றது.

பிரான்சின் நகர்புற வன்முறைகள்
1993 3462
1994 4665
1995 6818
1996 11049
1997 16404
1998 26131
1999 28858
2000 28500
2001 50000 விடவும் அதிகம்
2005 100000 விடவும் அதிகம்

10 வருடத்துக் முந்திய வன்முறையின் அளவைவிட, இன்று, அண்ளவாக 15 மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது. வன்முறை மேலும் அதிகரிக்கும்;. சமூக கொந்தளிப்புகள் அதை கட்டியம் கூறி நிற்கின்றது. சர்வதேச நிலைமைகள் மக்கள் கூட்டத்தை எதுவுமற்ற கூட்டமாகவே மாற்றிவருகின்றது. வாழ்வதற்கு தனது சொத்த உழைப்பைக் கூட செலுத்த முடியாத வகையில், சமூகமே சூறையாடப்பட்டு வருகின்றது. சர்வதேச ரீதியாகவே மூலதனத்தில் மீதான ஆதிக்கம் சமூகங்களிடம் இருந்து அன்னியமாகின்ற போது, வன்முறைகள் பெருமளவில் அதிகரிக்கின்றது. இது லும்பன் தனமானதாகவும், அராஜகத் தன்மை கொண்டதாகவும் மாறிவிடுகின்றது. சமூகம் ரீதியான இந்த அவலம் மீது, பொலிஸ் வன்முறையும் சிறைக்கூடங்களும் இதைத் தணித்துவிடாது. இதை மேலும் கொழுந்து விட்டெறியும் ஒரு சமூகப் பிரச்சனையாக மாற்றிவிடும்;. இந்த சமூகங்கள் மீதான கண்கணிப்பு பொலிஸ் வன்முறையும் அதிகரிக்க, இயல்பாகவே வன்முறை அளவும் வன்மறையின் பண்பும் மேலும் வக்கிரமடையும்;. இதுவே படிப்டியாக சமூகங்களின் மேலானதாக மாறிவிடும்;. கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு இந்த நகர்ப்புறங்கள் அமைதியானதும், வன்முறையற்ற சமூகங்களாகவே உறைந்து கிடந்தது.

சமூக நெருக்கடியுடன் குற்றங்கள் பெருகிவருகின்றன. 1000 பேரில் குற்றம் இழைப்போர் எண்ணிக்கையே இதை மறுபடியும் எடுத்துக் காட்டுகின்றது.

1974 1000 பேருக்கு அண்ணளவாக குற்றம் இழைப்போர் 35 பேர்
1984 1000 பேருக்கு அண்ணளவாக குற்றம் இழைப்போர் 65 பேர்
1994 1000 பேருக்கு அண்ணளவாக குற்றம் இழைப்போர் 68 பேர்
2004 1000 பேருக்கு அண்ணளவாக குற்றம் இழைப்போர் 63 பேர்

இன்று சமூகங்கள் கொந்தளிப்பான நிலைக்கு வந்தடைந்தற்கான முழுக் காரணமும், சமூகத்தில் எற்பட்ட வரும் மாற்றங்ளே காரணமாகும்;. வேலையின்மை, வறுமை அத்துடன் இனவாதம், நிறவாதம், நுகர்வுவெறி என பல காரணங்கள் இதற்கு அடப்படையாகும்.

உண்மையில் பிரான்சின் குற்றங்களை எடுத்தால், இந்த வெளிநாட்டவர்களின் பங்கு ஒன்று மிகையானவையல்ல. 2003 இல் இழைக்கப்பட்ட மொத்த குற்றங்கள் 956423 ஆகும்.

குற்றங்கள் யார் இழைத்தனர் என்ற பகுத்துப் பார்த்தால்
குற்றங்கள் இழைத்தோரில் ஆண்கள் 84.78 சதவீகிதமாகும்.
குற்றங்கள் இழைத்தோரில் வெளிநாட்டவர்கள் 19.81 சதவீகிதமாகும்.
குற்றங்கள் இழைத்தோரில் 16 வயதுக்கு குறைந்த குழந்தைகளின் குற்றங்கள் 18.80 சதவீகிதமாகும்.

ஆணின் குற்றம் அதிகமாக இருப்பதால், பெண் பெருமைப்பட்ட ஆண்களையே தூற்றமுடியுமா? ஆணைப் பெண் குற்றம்சாட்ட பெண்ணால் முடியுமா? இப்படித் தான் அரசு இனவாத நிறவாத நோக்கில் செய்கின்றது. இங்க பிரான்சில் குற்றத்தினை யார் இழைத்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதில் வெளிநாட்டவர்களின் குற்றங்கள், குழந்தைகளின் குற்றங்கள் மற்றயை குற்றங்களை விடவும் பெருமளவில் திட்டமிடப்படாதவை. இது உதிரித்தனமானதாகவும், பெருமளவில் அராஜகத் தன்மை கொண்டவை. பொதுவாக பொருட்களின் மீதான நுகர்வு வெறி சாhந்த வன்மறையாகும். இவை பெருமளவில் இந்த சமூகத்தில் வாழமுடியாது சிதைந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின், எதிர்வினைக் குற்றங்களாகவே உள்ளது. இங்கு இந்த வன்முறையை துண்டும் வகையில் பொலிசாரின் எதிர்வன்முறையும், அரசின் திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பும் காரணமாக அமைகின்றது. இதற்கு அப்பால் மிக மோசமான குற்றங்கள் மிகவும் திட்டமிடப்பட்டவையாக, பிராஞ்ச சமூகத்தால் செய்யப்படுகின்றது. இதை இந்த சமூக அமைப்பில், இன்றைய அரசியல் வாதிகள், ஒரு பிரச்சனையாகவே காட்டுவதில்லை.

அரச தனது இனவாத நிறவாத ஆட்சியைத் தக்கவைக்க, பெருமளவில் நகர்புறச் சேரிகளில் நிகழ்வதைத்தான் முன்னிறுத்தி அரசியலையே கட்டமைக்கின்றனர். சொந்த இனநிற அடிப்படைக்குள் நின்று குரைக்கின்றனர். சமூகம் தமது தேவையை பூர்த்திசெய்து, வாழமுடியாத நிலையில் உள்ள வெளிநாட்டவர்களின் வன்முறையோ சமூக ரீதியானது. இங்கு வாழ்வததற்குரிய அனுமதிப்பத்திரம் இன்றி வேலை செய்யமுடியாது நிலையில் சில லட்சம் வெளிநாட்டவர்கள் வாழ்கின்றனர். விசாயின்றி வாழ்வதற்காக சட்டவிரோதமாக வேலை செய்வது கூட, குற்றமாக கண்டறியப்படுகின்றது. இதைவிட இனநிற ஒதுக்கள் கொள்கை, வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்பையே மறுக்கின்றது. வேலை வழங்கினாலும் மிகத் தாழ்ந்த நிலையில் வைத்து இழிவாகச் சுரண்டுகின்றது. இந்த நகர்புறச் சேரிகள் இனநிற குடியிருப்பகளாகவே உள்ளன. அதாவது இலங்கை மற்றும் இந்தியாவில் தாழ்ந்த சாதிகள் எப்படி கிராமச்சேரிகளில் ஒடுங்கி வாழ்கின்றரோ, அதேயொத்த இனநிற ஒதுக்கல் கொள்கையே சமூகப் பொருளாததார கொள்கைகளில் வெளிபப்படையாகவே கடைப்பிடிக்கப்படுகின்றது. எங்கும் இதனால் அமைதியின்மை, பதற்றம் அச்சமூகத்தின் சொத்தாக விடப்படுகின்றது. இந்த அரசு உலகமயாதல் என்ற உள்ளடகத்தில் உழைக்கும் மக்களின் வயதெல்லை அதிகரிக்கின்றது. இதனால் வேலையின்மை இளம் வயதினருக்கே இல்லாதாக்கின்றது. இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது வெளிநாட்டுக் குழந்தைகளே. ஆனால் அரசு தனது அதிகாரத்தின் மூலம் இதை மூடிபோட முனைகின்றது. ஆனால் அதுவே அதையும் மீறி புகைகின்றது. அத்துடன் ஆண்பெண் குழந்தைகளை லட்சக் கணக்கில் கல்வியின் பெயரில் கூலியற்ற ஒரு நிலையில் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது நடைமுறை ரீதியாக தீவிரமாகப்படுகின்றது. வன்முறையைக் கட்டுபடுத்த இந்த அரசு எடுக்கும் தீர்வில், கூலியற்ற உழைப்ழைபின் வயதை 14 வயதாக்க அரசு முனைகின்றது. இப்படி பல ஆயிரம் கோடி ஈரோ உழைப்பை, மூலதனத்தின் பொக்கற்றுக்குள் செல்லும் வகையில் குழந்தைகளின் உழைப்பை சட்டபூர்வமாகவே சுரண்டப்படுகின்றது.

வெளிநாட்டவர்களின் வன்முறை மற்றும் சிறுவர்களின் வன்முறைக்கு, அந்தச் சமூகத்தில் காணப்படும் வேலையின்மையே மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்;. குறித்த வன்முறைக்குரிய நகர்புற குடியேற்றத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 1990 க்கும் 1999 க்கும் இடையில் 18.9 சதவிகீதத்தில்; இருந்து 25.4 சதவீகிதமாக அதிகரித்தது. ஆனால் பிரான்சின் வேலையின்மை 10.8 சதவீகிதத்தில் இருந்து 12.8 சதவீகிதமாகவே அதிகரித்தது. வேலையின்மை அதிகரிப்பு கூட, பெருமளவில் வெளிநாட்டவராகவே இருக்கின்றனர். அத்துடன் பொதுவான வேலையில்லாத் திண்டத்தில் காணப்படும் அளவில் கூட, மிகப் பெருமளவிலான வேலையின்மை, வெளிநாட்டவர்களாகவே உள்ளனர். இந்த வேலையின்மை எப்படி குறித்த சமூகத்துக்கும், குறித்த சமூகத்தின் இளைஞர்களையும் எப்படி பாதிகின்றது எனப் பார்ப்போம்.

25 வயதுக்கு குறைந்தவர்களின் வேலையில்லாத் திண்டாட்டம்
ஆண் பெண் மொத்தம்
பிரான்ஸ் முழுக்க 21.6 24.6 9.9
குறிபிட்ட பிரதேசங்கள் 36.2 40.8 20.7

குற்றங்களுக்கும் வேலையின்மைக்குமான தொடர்பினையே இது எடுத்துக் காட்டுகின்றது. அதிலும் இளைய சமூகத்தின் குறிப்பான வன்முறைக்கும் இதுவே துண்டுதலாக உள்ளது. பெருமளவில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. கிடைக்கு வேலையும் பிரஞ்சு சமூகம் செய்ய மறுக்கும், மிகவும் இழிவானதாக கருதப்படுபவைதான் பொதுவாக இவர்களுக்கு கிடைக்கின்றது. அதே நேரம் வேலையில் இருந்து ஒய்வு பெறும் வயதை அதிகரித்து வரும் அரசு, சிறுவர்களின் கூலியற்ற உழைப்பை தீவிரமாக்கும் அரசு, இளையர்களின் வேலை இன்மையை உருவாக்கி சமூக லும்பன்களை சமூகத்தில் நிரந்தரமானதாக்கின்றனர். 26 வயது வரை, எந்தவொரு சமூக உதவியையும் கூட வேலையற்றவர்கள் பெறமுடியாது. பெற்றோரையே தங்கி இருக்க முடியாத வகையில், சமூகப் போக்கு அவர்களை சமூகத்துக்கு வெளியில் உந்தித் தள்ளுகின்றது. இந்த சமூகத்தில் பெற்றோரே வேலை இழந்த நிக்கின்ற நிலையில், இந்த இளைஞர்கள் என்னதான் செய்யமுடியும் என்று, எந்த அரசியல்வாதியும் பொறுப்பாக பதிலளிப்பதில்லை. அவர்கள் சமூகத்தக்கு எதிராக வன்முறையாளராக மாறுவதில் என்ன தான் ஆச்சரியம் உள்ளது. இளைமையின் துடிப்பு சீராழியும் அதேநேரம், இளைமை கோரும் நுகர்வுவெறியை அழிக்கும் போது, லும்பன்வாத அராஜகத்தைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. இவர்களை சமூகம் சார்ந்து வழிகாட்டக் கூடிய வகையில், எதுவும் இச் சமூகத்தில் கிடையாது.

இந்த சமூக அவலம் பற்றி கண்ணைத் திறந்து பார்க்கும் வகையில் மற்றொரு தகவலைப் பாhப்போம். பாரிசையும், பரிசைச் சுற்றி பிரதேசங்களிலும் 1982 க்கும் 1992 க்கும் இடையில் வருடாந்தம் சராசரியாக 24600 பேர் வேலை இழந்து வந்தனர். இப்படி வேலை இழந்தவர்கள் பெருமளவில் தொழிலாளி வாக்கமாகும். இது 1993 க்கும் 1995 க்கும் இடையில் 27800 யாக அதிகரித்தது. அதாவது 1982 க்கும் 1995 க்கம் இடையில் 3.3 லட்சம் பேர் பாரிசையும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் தொழிலாளி வர்க்கம் தனது வேலையை இழந்துள்ளது. வேலையை இழந்தோர் பெருமளவில் வெளிநாட்டுத் தொழிலாளராகும். அத்துடன் இதில் பெரும்பகுதி குறித்த பகுதியைச் சேர்ந்தவராகும். இதனால் வேலை தேடி தொழலாளர்கள் நாட்டின் மற்றயை பகுதிகளை நோக்கி நகர்வது அதிகரித்தது. அங்கும் இதே நெருக்கடி. குறித்த பகுதியில் 2004 இல் 15-59 க்கும் இடையில் வேலையில்லாதத் திண்டட்ம் குறைந்தது 20.7 சதவீகிதமாக மாறியது. இது பிரான்சின் பொது சாரசரியை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகும். உண்மையில் பிரான்சின் வேலையில்லாத் திண்டாட்டம் வெளிநாட்டவரிடையேயானதாக மாற்றப்பட்டுவிட்டது. ஆச்சரியமானது ஆனால் இதுவே உண்மை.

இப்பகுதிகளில் வேலை தேடுவோரில் 43.6 சதவீகிதம் பேர் உயர்கல்வி (டிப்பிளம்) எதுவமற்வராகவே உள்ளனர். வேலையற்றோரில் உயர் கல்வி (டிப்பிளம்) உள்ளவர்கள் 30.1 சதவீதமாக இருக்க, குறித்த பகுதியில் 18.8 சதவீகிதமாக உள்ளது. இங்கு உயர்கல்விக்கு செல்லும் தகுதியைப் பெற்றோர் 73.5 சதவீகிதமாக உள்ள அதேநேரம், பிரான்சில் இது 82.5 சதவீகிதமாக உள்ளது. உயர்கல்விக்கச் செல்வோர் இடையில் கல்வியை கற்;க முடியாத வகையில் பொருளாதார நெருக்கடியால் கற்பதையே கைவிடுகின்றனர்.

இப்பகுதியில் 26 வயதுக்கு மேற்பட்ட 47925 போ நீண்ட காலமாக வேலை செய்யமைக்கான அரசு உதவியை பெறுபவராக உள்ளனர். குறித்த பகுதியில் நிரந்தரமாக வேலை இல்லாத நிலையில், அதிகுறைந்த சமூக உதவியைக் (RMI) கோரி உள்ளோர் (26 வயதுக்கு மேற்பட்டோர்) 15.1 சதவீகிதமாகும். இது பொது வேலையில்லாத் திண்டமான 10.9 சதவீகிதத்தை விட அதிகமாகும்;. நிரந்தரமாகவே வேலையற்ற ஒரு சமூகப் பிரிவு வாழ்தல், இப்பகுதியில் அடுப்படிப் பூனையாகிவிட்டது. பற்றக்குறையுடன் கூடிய வறுமை இங்கு நிரந்தரமான ஒன்றாகிவிட்டது.

குறித்த பிரதேசத்தில் வாழ்பவர்களின் சராசரி வருமானம் வருடம் தனிநபருக்கு 10540 ஈரோவாக இருக்க, இது பிரான்சில் 17184 ஈரோவாக உள்ளது. இதையும் நுனுங்கிப் பார்த்தால் பகிரப்படும் வீகிதம் பாரிய மேடுபள்ளம் கொண்டது. பிரதேச ரீதியாகவே பணம் பகிரப்படு வீகிதம் மிகவும் தாழ்வானதாகவே உள்ளது. எங்கும் வறுமையும், எற்றத் தாழ்வும் எதிரொலிக்கின்றது.

வருடாந்தம் குடும்பங்களுக்கு (தனியாக ஒரு அலகாக வாழ்தல்) பணம் பகிரப்படும் விதம்

0 ஈரோ முதல் 500 ஈரோவரை பெறுவோர் 5434000
500 ஈரோ முதல் 10000 ஈரோவரை பெறுவோர் 7842000
10000 ஈரோ முதல் 15000 ஈரோவரை பெறுவோர் 8479000
15000 ஈரோ முதல் 20000 ஈரோவரை பெறுவோர் 5808000
20000 ஈரோ முதல் 25000 ஈரோவரை பெறுவோர் 2943000
25000 ஈரோ முதல் 30000 ஈரோவரை பெறுவோர் 1650000
30000 ஈரோ முதல் 35000 ஈரோவரை பெறுவோர் 898000
35000 ஈரோ முதல் 40000 ஈரோவரை பெறுவோர் 519000
40000 ஈரோ முதல் 42000 ஈரோவரை பெறுவோர் 151000
42000 ஈரோ முதல் 45000 ஈரோவரை பெறுவோர் 176000
45000 ஈரோ முதல் 50000 ஈரோவரை பெறுவோர் 217000
50000 ஈரோ முதல் 60000 ஈரோவரை பெறுவோர் 258000
60000 ஈரோ முதல் 70000 ஈரோவரை பெறுவோர் 142000
70000 ஈரோ முதல் 80000 ஈரோவரை பெறுவோர் 80000
80000 ஈரோ முதல் 90000 ஈரோவரை பெறுவோர் 53000
90000 ஈரோ முதல் 100000 ஈரோவரை பெறுவோர் 34000
100000 ஈரோவை விட அதிகம் பெறுவோர் 130000

3.44 கோடி தனியலாக கொண்ட வாழ்தல் முறையில் (குடும்பமாக அல்லத தனியாக), அவர்களின் ஏற்றத் தாழ்வான வருமானத்தையே இங்கு நாம் காண்கின்றோம். சமூகத்தின் ஏற்றத் தாழ்வான இழிநிலையில், வெளிநாட்டு மக்களின் வாழ்வு மிகவும் மோசமானது. எப்போதும் பற்றக்குறையும், வாழ்வதற்கு உழைப்பை செலுத்த முடியாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் என்ன நடக்கின்றது. மிகவும் பதற்றத்துக்கும் வறுமைக்குள்ள பிரதேச குடியேற்றங்கள் மிகவும் திட்டமிட்ட இனநிற அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மலையக மக்களை அன்று எப்படி வெள்ளைக்காரன் கொண்டு வந்த குடியேற்றி அவாகளின் வாழ்வைச் சுரண்டினானோ, அப்படித் தான் இந்த குடியேற்றங்கள் நிகழ்ந்தன. இப்படி 1970 இல் 3.1 லட்சம் தொழிலாளிகள் அரபு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, திட்மிட்ட இன குடியேற்றங்களில் குடியேற்றப்பட்டனர். இதன் மூலம் பிரான்சின் நாகரிகத்தை எடுத்துக் காட்டும் நவீன கட்டித் தொகுதிகளை உருவாக்கினார். இப்படி பிரான்சில் 1973 இல் 5.56 லட்சம் கட்டிடத் தொகுதிகள் கட்டி முடிக்கப்பட்டன. இதுவே பிரான்சின் வரலாற்றின் மிகப்பெரிய நவீன மயமாக்கல் சார்ந்த ஒரு திட்டமிடலாகும்;. இதை காட்டியவர்கள் பிராஞ்சு அல்லாத வெளிநாட்டுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அரையடிமைக் கூலிகள். இவர்களும் அவர்களின் குழந்தைகளுமே இன்று இழிந்து நசிந்து இக் குடியிருப்புகளின் வாழ்கின்றனர்.

இக் குடியேற்றங்கள் உட்பட மனிதர்கள் வாழமுடியாத நிலையில், பல லட்சம் வீடுகள் இழிந்து சிதைந்து உள்ளது. இப்படி 35 லட்சம் வீடுகள் மனிதர்கள் வாழமுடியாத நிலையிலும் அங்கு மனிதர்கள் வாழ்கின்றனர். அரசு வீடமைப்புத் திட்டத்தில் நான்கிலொன்று மிகவும் இழிவாக்கப்பட்ட நிலையில் நகர கட்டமைப்புகளில் காணப்படுகின்றது. அத்துடன் இதுபோன்ற சமூகங்கள் 62 சதவீகிதமானோர் திட்மிட்ட இன நிற அரசு குடியிருப்புகளில் வாழ்கின்றனர். 751 மிகவும் பதற்றமான நகர்புற குடியேற்றத்தில் மட்டும் 80 நாட்டைச் சோந்த 14 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இது மொத்த நகர்புறக் குடியேற்றங்களில் 30 சதவீகிதமாகும். இங்கு வாழும் எந்த குழந்தையும் பிரஞ்சு சமூகத்தில் இருந்து வேறுபாட்டே வளருகின்றது. சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்ட நிலையில், வாழ்கின்றனர். அதேநேரம் வாழ வசதியற்ற நிலையில் இருந்து மீள, மக்கள் வீடு தேடி அலைகின்றனர். பாரிசில் ஒரு லட்சம் குடும்பங்கள் அரசு வீட்டைக் கோரி வருகின்றனர். நிலைமை மிக மோசமானதாக உள்ளது.

உதவிக்கான கிறிஸ்துவ நிறுவனம் விடுத்த அறிக்கையில், சொந்த வீடு இல்லாத மக்கள் எப்படியான குடியிருப்பில் என்ன நிலையில் வாழ்கின்றனர் என்று ஒரு அறிக்கையை விடுத்தது.
அரசு வீடு தனியார் வீடு திகள், சுற்றலா விடுதிகள் நண்பர்கள் வீதியில்
2000 42.5 28.7 1.8 8.4 4.7
2002 39.1 24.7 2.3 11 4.9
2004 36.8 27.1 2.7 10.9 5.3
மக்கள் வாழும் குடியேற்றதின் இழிநிலை பெருகி வருகின்றது. வீதியில் வசிப்போர் எண்ணிக்கை பெருகிவருகின்றது. மற்றவர்களைச் சார்ந்த வாழ்தல் அதிகரிக்கின்றது. விடுதிகளை நோக்கிச் செல்லுதல் பெருகின்றது. அரசு குடியிருப்புகளை வழங்குவது குறைந்து வருகின்றது. சமூகம் வாழமுடியாத நிலைக்கு தரம்தாழ்ந்து வருகின்றது. இதில் வெளிநாட்டவர் வாழ்க்கையே மிகவும் மோசமானது.

சமூக நெருகடி அதிகரித்த வரும் நிலையில் இப்பகுதிகள் சரியாக வழிகாட்டப்படமையால் அராஜகமாகி விடுகின்றது. தனிமனிதர்கள் சகிக்க முடியாத வகையில், வன்முறை கொண்ட அராஜகம் பொதுவாக நிலவுகின்றது. அதேநேரம் பரிஸ்சைச் சுற்றியுள்ள 50 க்கு மேற்பட்ட பகுதிகளின் கிராம நிர்வாகங்கள் போலிக் கம்யூனிஸ்ட கட்சியின் அதிகாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். அவர்களின் போலித்தனத்தால் இந்த சமூகத்தை அணிதிரட்டி அரசுக்கு எதிராக போராட முடியாத ஒரு நிலையில் தான், இப்பகுதிகளில் அராஜகம் நிலவுகின்றது. அரசியல் ரீதியில் மக்களின் அதிகாரத்துகாக போராடாத நிலையில், சமூக அராஜகம் தனிமனித நோக்கில் மேலும் அதிகரித்துச் செல்வதை தடுக்கமுடியாது.

இக்கட்டுரைகான தரவுகள் தந்தவை

1.உலக சோசலிச இணையதளம்
2.பிகரோ பத்திரிகை
3.பாரிசின் பத்திரிகை
4.லிபரேசன் பத்திரிகை