தமிழ் அரங்கம்

Saturday, August 30, 2008

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே. பொதுவாக பெரும்பாலான பெண்களால் இப்படி நினைப்பதும், கூறுப்படுவதும், அன்றாட எதிர்வினையாகின்றது. இது வரையறுக்கப்பட்ட தெளிவான ஒரு சமூக அடிப்படையைக் கொண்டதல்ல. பூர்சுவா மன இயல்பில் ஏற்படும் அன்றாட தடுமாற்றங்கள் இவை. பெண்கள் தமக்குள் கொண்டுள்ள இந்த உரையாடல் சார்ந்த உணர்வே, பல குடும்பங்களின் மகிழ்ச்சியை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மற்றைய வீட்டில் உள்ளவர்கள் போல், பரஸ்பர கற்பனைகளை கட்டிக்கொண்டு சதா புலம்புகின்றனர். அந்த மற்றைய வீட்டிலும் இதே பல்லவியும், இதேநிலையும் தான். மற்றைய வீட்டில் நகை வாங்கினால் அதைப்போல் அல்லது அதைவிட உயர்வாக வாங்குவது, மற்றைய வீட்டார் ஒன்றைச் செய்தால்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, August 29, 2008

அனுராதாவின் மரணம் சொல்லும் செய்தி

புற்று நோய்யின் கோரத்தை,
அதையே தன் வாழ்வாக எதிர்கொண்டு,
அதை வாழ்வின் பக்குவத்துடன்,
ஒரு தீவிர முயற்சியுள்ள பெண்ணாக,
தான் எதிர்கொண்டு போராடிய வாழ்வியலை,
அதன் அனுபவத்தை,
மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் வண்ணம்,
சீரிய சமூக நோகத்துடன்,
எம்முன் அதை துணிவுடன் எடுத்து வந்த,
ஒரு சமூக ஜீவியின் மரணம்,
தன் மரணத்தின் ஊடாக,
பலவற்றை கற்கத் துண்டியுள்ளார்,
கற்றுக்கொடுக்கத் துண்டியுள்ளார்,
இதை புரிந்து கொண்டு,
செயல்படுவது தான்,
அவர்களுக்கான எமது அஞ்சலிகளாகும்.

எதிரியின் கைக்கூலிகளால் ஒருநாளும் ஜனநாயகத்தை உருவாக்க முடியாது.

மக்களின் எதிரிகளாக யார் உள்ளனரோ, அவர்களின் கைக்கூலிகள் தான் புலியெதிர்ப்புக் கும்பல். இதற்கு வெளியில் சுயாதீனமான மக்கள் அரசியல் எதுவும் இந்தக் கும்பலிடம் கிடையாது. இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயகவாதிகள்" மக்களின் எதிரிகளிடம் பணத்தில் அரசியல் செய்வதுடன், அவர்களின் பாதுகாப்பில் நின்று அதற்கு விசுவாசமாக குலைக்கின்ற ஓட்டுண்ணிக் கும்பல். இதை யாரும் இல்லை என்று நிறுவமுடியாது.

இந்தக் கும்பல் கைக்கூலிக்குரிய விசுவாசத்துடன், புலியொழிப்பு என்று வித்தை காட்ட முனைகின்றனர். புலியை எதிரியாக காட்டி, தனக்கு பணம் தருபவனை எதிரியற்றதாக காட்டி எதிரிக்கு வாலாட்டி நக்குகின்றனர்.

எதிரி பற்றிய வரையறை என்ன? மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப்பிணையாத அனைத்தும், மக்களுக்கு எதிரி தான். மக்களைச் சார்ந்தே நிற்காத புலிகள், புலியெதிர்ப்புக் கும்பல் கூட, மக்களின் எதிரிதான். மக்களை எதிரியாகி செயல்படும் அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை மக்களின் எதிரிதான். மக்களுக்காக இவர்கள் சிந்திப்பதுமில்லை, செயல்படுவதுமில்லை. மக்களை வேட்டையாடி தமக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும் சேவை செய்கின்றவர்கள் மக்களின் எதிரிதான்.

இந்த எதிரி புலியாக இருந்தாலும் சரி, புலியெதிர்ப்பு புலியொழிப்புக் கும்பலாக இருந்தாலும் சரி,......... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, August 28, 2008

தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொள்வது, இன்றைய சமகால நிகழ்ச்சிப் போக்கில் முக்கியமான அடிப்படையான விடையமாகும். தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்ற கேள்விக்கு, போராடும் புலிகள் உட்பட யாரும் பதிலளிக்க முடியாத வகையில் அரசியலில் சூனியம் நிலவுகின்றது. தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்று உணர்பவர்கள், அவை என்ன என்று விளக்க முடியாத அவலம் நிலவுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனையை, யுத்தத்தின் பின்னான நடைமுறை விளைவுகளில் இருந்து புரிந்து கொள்வதும் விளக்குவதும் நிகழ்கின்றது. புலிகள் வன்முறை மூலம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி, ஒரு தலைப்பட்சமாக தம்மைத் தாம் தமிழ் மக்களின் தலைமையாக நிலைநிறுத்திய தனிமனித வழிபாட்டுடன் கூடிய கோரிக்கையில் இருந்தும், தமிழ் மக்களின் பிரச்சனையை விளக்கும் அளவுக்கு தமிழ் மக்களின் தேசிய போராட்டம் பலவீனமடைந்து காணப்படுகின்றது....... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கேளிக்கைப் பூங்காக்களாகும் ஏரிகள் தனியார்மயத்தின் மகிமை

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராகக் கருதப்படும் பெங்களூருவின் சிறப்பே அதன் ஏரிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்நகரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் அந்நிய தரகு முதலாளிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த நகரை மொய்க்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, இந்த ஏரிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்குச் சுருங்கி விட்டது.

ஏரிகளை ஆக்கிரமித்து, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிகவளாகங்கள், ""கோல்ப்'' மைதானங்கள், மேட்டுக்குடி குடியிருப்புகள் போன்றவை ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டு, பெரும்பாலான ஏரிகள் காணாமல் போய்விட்டன. எஞ்சிய ஏரிகளோ தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி குப்பைக் கூளங்களாய்க் கிடக்கின்றன. இவை கர்நாடக அரசின் கண்களை உறுத்தியவுடன், அவற்றைச் சுத்தம் செய்து பராமரிக்கத் தன்னால் முடியாது என நொண்டிச்சாக்கு சொல்லி, தற்போது அவற்றைத் தனியாருக்கு விற்க ஆரம்பத்துள்ளது.

இவ்வாறு விற்கப்பட்ட ஏரிகளில் ஒன்றுதான் நாகவரா ஏரி. பெங்களூரு நகரின் முக்கியமான ஏரிகளில் ஒன்றான இந்த ஏரி தற்போது ""லும்பனி கார்டன்'' என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏரி தங்கள் வசம் வந்தவுடன் அந்நிறுவனத்தினர் ஏரியைச் சுற்றித் தடுப்புச்சுவர் எழுப்பி யாரும் ஏரிக்குள் நுழையா வண்ணம் தடுத்துவிட் டதோடு, ஏரிக்குள் நுழைய 30 ரூபாய் நுழைவுக்கட்டணமும் வசூலிக்க ஆரம்பத்துள்ளனர். அது மட்டுமன்றி, ஏரிக்குள் வெளிநாடுகளில் உள்ளதைப்போல நீர் மேல் ஓடும் ஸ்கூட்டர்கள், அதிவேகப் படகுகள், ""காபி டே'' போன்ற நட்சத்திர உணவகங்கள், மிதக்கும் உணவகங்கள், நவீன சிறுவர் விளையாட்டுக்கள் எனப் பல அம்சங்கள், அவற்றிற்கெனத் தனித்தனியே கட்டணங்கள் என்று மக்களின் பொதுப் பயன்பாட்டிலிருந்த அந்த ஏரி முழுவதையும் லாபம் தரும் பொழுது போக்குப் பூங்காவாக (""தீம் பார்க்'') மாற்றிவிட்டனர்.

Wednesday, August 27, 2008

மருத்துவம்


உங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.

உங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.

'ஊழலை அம்பலப்படுத்தினால் உயிர் இருக்காது!" அதிகார கும்பல் விடக்கும் பகிரங்க எச்சரிக்கை!

லலித் மேத்தா — 36 வயதான பொறியாளர்; சமூக சேவகர். விகாஸ் சாயோக் கேந்திரா (ஙகுஓ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர். கடந்த பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவரது தன்னார்வக் குழு, ஜார்கந்த் மாநிலத்தின் பாலமாவ் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (Nகீஉஎகு) நடக்கும் ஊழல்மோசடிகளைத் தடுக்க, உண்மை விவரங்களைச் சேகரித்தும் கள ஆய்வுகளை மேற்கொண்டும் அம்பலப்படுத்த முற்பட்டது. இதற்காக டெல்லி மற்றும் வடமாநிலங்களிலிருந்து வந்த இத்தன்னார்வக் குழு ஊழியர்களும் நண்பர்களும் பாலமாவ் மாவட்டத்தின் செயின்பூர், சத்திரப்பூர் வட்டங்களில் கடந்த மே 13ஆம் தேதியன்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். மறுநாள், மே 14ஆம் தேதியன்று இப்பகுதியிலுள்ள கந்தரா எனும் காட்டுப் பகுதியில் லலித்மேத்தா கோரமாகக் கொல்லப்பட்டுப் பிணமாகக் கிடந்தார்.

அரசுத் திட்டங்களில் நடக்கும் ஊழல்மோசடி, வீண்விரயங்களை அரசு அதிகாரிகள் கண்டறிந்து தணிக்கை செய்யும் முறைக்கு மாற்றாக, மக்களிடம் கருத்து கேட்டு தாங்களே தணிக்கை செய்யும் நடைமுறையை அண்மைக்காலமாகத் தன்னார்வக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனைச் ''சமூகத் தணிக்கை முறை'' என்று அவை குறிப்பிடுகின்றன. பிரபல பொருளாதார நிபுணரான ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, August 26, 2008

வானவியல்


உங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.

உங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.

விவசாயக் கடன் தள்ளுபடி : காகித கவர்ச்சித் திட்டம் : விவாசயக் கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கும் நிபந்தனைகள் நயவஞ்சகமானவை

வங்கிக்கடனில் 71 ஆயிரம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். தள்ளுபடி நடைமுறைக்கு வரும் முன்பே பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தி ''விவசாயிகளுக்காக நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்'' என்றும் ''தவறான கணக்கை எழுதிய பள்ளிக்கூடச் சிறுவனின் சிலேட்டைத் துடைத்து விட்டு, புதுக்கணக்கை எழுத வைத்திருக்கிறோம்'' என்றும் சிதம்பரம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.

பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான நெறிமுறைகளை வகுத்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. இதன்படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகையை அடகு வைத்துக் கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது. இரண்டரை ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, August 25, 2008

பெரியார் உரைகள்


உங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.

உங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.

பாரதிதாசன் பாடல்கள்


உங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.

உங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.

சீரழிந்து விட்ட விடுதலைப் போராட்டம்: எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்கு என்ன நடக்கும்?

இது எம்மை நோக்கி எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வியும் கூட. வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய தமிழ் தேசியம், தனது சுயநிர்ணயத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த தவறியதால், அது சிதைந்து சீரழிந்து விட்டது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய அனைத்துப் பெரிய குழுக்களும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடவில்லை. பின்னால் இதை முன்னிறுத்தி புலிக்கு எதிராக அவாகள் போராடவில்லை. நான் நாம் மட்டும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தினோம்.

இப்படி புலி அழிப்புக்கு முன்னும் பின்னும், அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தான் இயங்கின. இன்று பலரும் கருதுவது போல், புலிகள் மட்டும் இதைச் செய்யவில்லை. தமிழ் இனத்தின் அடிப்படை உரிமைக்கான போராட்டம், அனைவராலும் சிதைக்கப்பட்டது. இந்த நிலையில் இதை மொத்தமாக செய்து முடிக்கும் வகையில், புலிகளின் பாசிச சர்வாதிகாரம் அனைத்தையும் தன்வசப்படுத்தி அழித்தது.

அது தமிழ் மக்களின் பெருமூச்சுகளுக்குக் கூட, தனது படுகொலை அரசியல் மூலம் பதிலளித்தது. தமிழ் இனத்தில் எஞ்சி இருந்த சமூகக் கூறுகள் அனைத்தையும் நலமடித்தது. தமிழ் இனம் சொல்லி அழக் கூட நாதியற்ற நிலைக்கு, அவர்களை அரசியல் அனாதையாக்கி விட்டுள்ளளர்.

மாபியாத்தனமும், பாசிசமும் தேசியமாக, தமிழ் இனம் வரைமுறையின்றி எல்லா வடிவங்களிலும் சுரண்டப்பட்டது. சொத்து முதல் கருத்து வரை, தமிழ்........ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 24, 2008

ஆப்கான்: அஞ்சி நடுங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் பலிகடாவாகும் இந்தியர்கள்

காரிருள் சூழ்ந்தாற்போல எங்கும் புகை மூட்டம்; இந்தியத் தூதரகக் கட்டிடம் சுக்கலாக நொறுங்கியது; தாலிபான்களின் மனிதவெடிகுண்டுத் தாக்குதலால் காபூல் நகரமே அதிர்ந்தது. தெருவெங்கும் சதைக் கோளங்களாக மனித உடல்கள் சிதறிக் கிடந்தன். வாகனங்கள் அப்பளமாக நொறுங்கிச் சிதறின. இதுவரை கண்டிராத மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் என்று அலறியது இந்திய அரசு. அமெரிக்காவில் செப்.11., 2001இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று பத்திரிகைகள் வர்ணித்தன.

கடந்த ஜூலை 7ஆம் நாளன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாலிபான் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டு 170 பேர் படுகாயமடைந்துள்ளனர். முதன்மைச் செயலர் உள்ளிட்டு நான்கு இந்தியத் தூதரக உயரதிகாரிகளும், 6 ஆப்கான் போலீசு உயரதிகாரிகளும், இந்தியாவுக்கு வருவதற்காகக் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த ஆப்கானியர்களும் இக்கோரத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இக்கொடிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ள தாலிபான் தீவிரவாதிகள், இதற்குமுன் 2005ஆம் ஆண்டின் இறுதியில், ஆப்கானில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியரான, கேரளத்தைச் சேர்ந்த ராமன்குட்டி மணியப்பன் என்பவரைக் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். அதன்பிறகு சில இந்தியப் பொறியாளர்களும் தொழிலாளிகளும் தாலிபான்களால் கடத்திச் செல்லப்பட்டு எச்சரித்து விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்தியர்கள் அனைவரும் ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியத் தூதரகத்தின் மீதான தாலிபான்களின் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதலுக்கும்...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்