தமிழ் அரங்கம்

Showing posts with label ஏகாதிபத்தியம். Show all posts
Showing posts with label ஏகாதிபத்தியம். Show all posts

Tuesday, March 24, 2009

அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப்புலிதான்

கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான். இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியா நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின் கவனத்துக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப் போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப் படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. இதன் காரணமாக பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டை நாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.

Thursday, August 14, 2008

அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் விரும்புவது என்ன?

அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் விரும்புவது என்ன? தமது சொந்த பொருளாதார -இராணுவ மேலாண்மையைத் தான். இதுதான் நெருக்கடியின் மையம். தாம் அல்லாத எந்த நாடும், சுதந்திரமாக செயற்படக் கூடாது என்பதே, இவர்களின் உலக சர்வாதிகாரமாகும்.

தம்மை விட மற்றைய ஏகாதிபத்தியங்கள், செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கக் கூடாது என்பது தான், இவர்களின் உலக ஒழுங்காகும். இந்த வகையில் தான் அணுவாயுதத்திலும், தமது மேலாண்மையை பாதுகாக்க விரும்புகின்றது. இந்தியா போன்ற நாடுகள் மேலான அணு மேலாதிக்கத்தை பெறுவதைத் தடுக்க, இவர்கள் திணிப்பது அடிமை ஒப்பந்தங்களையே.

இப்படி தமது இராணுவ மேலாண்மை மூலமும், பொருளாதார மேலாண்மை மூலமும் உலகை அடிமைப்படுத்தி ஆள முனைகின்றது ஏகாதிபத்தியங்கள். தமக்கு ஏற்ற பொம்மை ஆட்சிகளை நிறுவுகின்றன. இதற்கேற்ப இலஞ்சம் கொடுத்தும், கவிழ்ப்புகளைச் செய்தும், உள்நாட்டு முரண்பாடுகளை உருவாக்கியும், தமது பொம்மை ஆட்சிகளை நிறுவுகின்றனர். இதன் மூலம் உலகம் தழுவிய அடிமை ஒப்பந்தங்களைச் செய்கின்றனர்.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, August 13, 2008

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பனிப்போர், வெளிப்படையான ஏகாதிபத்திய யுத்தங்களாகின்றது

ஏகாதிபத்திய யுத்தங்கள் வெளிப்படையாகவே வெடித்துக் கிளம்புகின்றது. அன்று யூக்கோசிலோவோக்கியாவை அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் உடைத்து அதைச் சிதைத்த போது, அது வெளிப்படையற்ற ஏகாதிபத்திய பனிப்போராகத் தான் அம்பலமாகாது அரங்கேறியது.

இந்த யுத்தங்களுக்கு காரணங்கள் என ஏகாதிபத்தியங்கள் எதைக் கூறினாலும், இந்த யுத்தத்தின் அடிப்படையான நோக்கம் உலகை தமக்கு இடையில் மீளப் பங்கிடுவதுதான். ஏகாதிபத்திய பொருளாதார நலன்கள் தான், இந்த யுத்தங்களுக்கு அடிப்படையான காரணமாகும். அதாவது உலகை சூறையாடி மூலதனத்தை குவித்து வைத்திருக்கின்ற கொள்ளைக்காரக் கும்பலின் நலன்கள் தான், இங்கு யுத்தமாகின்றது. செல்வத்தை பறிகொடுத்த மக்கள், மீளப் பலியிடப்படுகின்றனர்.

தேசபக்தி, ஜனநாயகம், சுதந்திரம் என எல்லாம், மூலதனத்தின் தேவைக்கும் நலனுக்கும் அப்பாற்பட்டதல்ல. இதற்கு ஏற்ப நாடுகளைப் பகிர்வதும், கவிழ்ப்பதும், தான் ஏகாதிபத்திய யுத்த தந்திரம். இந்த யுத்த தந்திரம் தான், அமைதி சமாதானம் பற்றி அனைத்து பீற்றல்களின் பின்னுள்ள நலனாகும். உலக மக்களைத் தமது சந்தைக்கு அடிமைப்படுத்த, சந்தைகளை கைப்பற்றுவதும் இதற்கு ஏற்ப இராணுவ மண்டலங்களை உருவாக்குவதும் தானே, ஏகாதிபத்தியத்தின் நலன்களாகும். ஜனநாயகம், சுதந்திரம் எல்லாம் ...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, August 8, 2008

அமெரிக்க சேவையில் அனைத்து கட்சிக் கூட்டணி

முதலாளிய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் வாக்காளப் பெருமக்களின் ஞாபக மறதி. வரலாற்று அனுபவங்களைத் தொகுத்து நினைவில் வைத்துக் கொள்வதுதான் அதற்கு மிகப் பெரிய ஆபத்து. அதனால்தான் அப்படி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பெருங்கதையாடலுக்கு எதிராகப் ''பின் நவீனத்துவம்'' என்ற அரசியல் தத்துவத்தையே முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள். 1980களின் இறுதியில் ஒருநாள் கூடியிருந்த நாடாளுமன்றமே திகைத்துப் போகும் வகையில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராசு ஒரு காரியம் செய்தார். திடீரென்று ஒரு பெட்டியைத் திறந்து நான்கு கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கொட்டினார். எம்.ஜி.ஆர். சாவுக்குப் பிறகு பிளவுபட்டுப் போன அ.இ.அ.தி.மு.க.வின் ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதா அணிக்குத் தாவுவதற்காக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மூலமாக ஜெயலலிதா தனக்குக் கொடுத்த இலஞ்சமென்று புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.

நாடாளுமன்றமும் அவைத்தலைவரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தனர். இலஞ்சப் பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. விசாரணை நடத்தி, குற்றவாளி சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று அவைக்கும் மக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது. இதோ, சுமார் 20 ஆண்டுகளாகி விட்டன. தங்கராசு இறந்து போய்விட்டார். ஜெயலலிதா இரண்டுமுறை முதலமைச்சராகி, பல ஆயிரம் கோடி சொத்துடனும், ''இசட் பிரிவு'' பாதுகாப்புடனும் பவனி வருகிறார். திருநாவுக்கரசு, ''நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்குவதற்கு எதிரான யோக்கியர்''களின்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்