தமிழ் அரங்கம்

Saturday, February 28, 2009

நான் உன்னோடு பேச வேண்டும்…

தலைவனே…!
இல்லை
நண்பனே…!
இல்லை
அண்ணணே...!


ஆம் அப்படிக் கூப்பிடத் தான் பிடித்திருக்கு
நான் உன்னோடு பேச வேண்டும்
அவசரமாக பேச வேண்டும்
இப்போதே பேச வேண்டும்
இப்போது பேசாவிட்டால்
எப்போதும் பேசமுடியாது…


அன்று…
உன்னை பேசியவன் தான்
நேற்று...


உன்னை பேசியவன் ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்யாது எடுக்கும் எந்த முடிவும், தமிழ் மக்களுக்கு எதிரானதே

புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக் கையளித்த சமாதானம்! எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் இதை ஆராய முனைகின்றோம். இடைவிடாத அரசியல் கொந்தளிப்புகள், நிலைமைகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் குழப்புகின்றன. எமது மாறாத கண்ணோட்டத்தையும், பார்வையையும் அதிரடியாகவே திகைப்பூட்டி திணற வைக்கின்ன்றது. ஒரு புரட்சி அல்லது அழிவில், இவை அதிரடியாக நிகழக் கூடியதுதான்.


அதனடிப்படையில், எம்மை நோக்கி ஒரு தோழர் எழுப்பிய கேள்விகளைப் பார்ப்போம்.

'புலிகள் ஆயுதத்தைக் கீழே வைப்பது தொடர்பான உங்கள் கருத்துக்களைப் படித்தேன். இதில் எனக்குக் குழப்பமான விடயம் ஒன்று உண்டு. புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது ஒன்றே சாகும் மக்களைக் காக்க இருக்கும் ஒரே வழி என்று நான் சிந்தித்து வருகிறேன். இந்த முடிவுக்கு நான் வரக் காரணங்களாக அமைவன,

அர்த்தமற்றுப் போன போராட்டமும் இழப்புகளும்…!

எம்மின மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து புலிகள் நடத்துவதோ சதி அரசியல். இதன் மூலமான அரசியல் பேரங்கள், இதை அடிப்படையாக கொண்ட போராட்டங்கள் எல்லாம், விழலுக்கு இறைத்த நீராகின்றது.

புலிகள் தம் தற்காப்பை, தம் இருப்பை தம் சொந்தப் போராட்டம் மூலம் அணுக வேண்டும். அவர்கள் தம் சொந்த வழியில் இதற்கு விடை காணவேண்டும். அதைச் செய்ய வக்கின்றி, மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து, இதன் மூலம் அரசியல் பேரம் பேச முனைவது, அடிமுட்டாள் தனமான பயங்கரவாதத் தற்கொலையாகும்.

இதன் பின்னணியில் புலிகள் நடத்தும், நடத்தவிருக்கும் போராட்டங்கள் புலிப் போராட்டம் போல் ஒரு அடி கூட முன்னேறுவதில்லை. அடிசறுக்கி வீழ்கின்றது. கடந்தகாலத்தில் அரசியல் பேச்சுவார்த்ததையை எப்படி தோற்கடித்து தாம் தோற்றனரோ, அப்படி இந்த போராட்டங்களும் நடக்கின்றது.

மக்களை கொன்று குவிக்கும் காட்சிப் படங்களை காட்டி, தமிழ் மக்களை அணி திரட்டியது போல், உலகத்தை அணி திரட்ட முடிவதில்லை. இதற்கு உலகின் ஆளும் வர்க்கங்கள், புலியின் பாணியில் அவை தம் தீர்வை வைக்கின்றது. இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, ஆயுதத்தை கீழே வைக்கக் கோருகின்றது. இதன் மூலம் இந்த மனித அவலத்தை தவிர்க்க வேண்டுகோள் விடுகின்றது. இப்படி புலிகள் நடத்திய அரசியல் பாணியில், பதிலடி தருகின்றது. அதற்கு அமைய புலிகள் ஊடாக ஏகாதிபத்தியங்கள் வைத்த கோசங்கள், புலிகளை முடக்க உதவுகின்றது.

உண்மையில் ஏகாதிபத்தியத்தையும், சர்வதேச சமூகத்தையும் நோக்கி எதை வைத்திருக்க வேண்டும்.

1. இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!

2. புலிகளே! மக்களை விடுவி!

3. சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!

4. புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!
இப்படி போராட்டங்கள் அதன் உண்மைத் தன்மையுடன் மக்கள் போராட்டமாக மாறியிருந்தால், உலகம் உங்களை திரும்பி பார்த்திருக்கும். உலகம் ஆயுதத்தை கீழே வை என்று கூறியிருக்க முடியாது. உங்கள் கோரிக்கையை நடைமுறைப்படுத்த கோரியிருக்கும். இதற்கு அமைய யுத்த நிறுத்தத்தை அது முன்வைத்திருக்கும்.

இதற்கு மாறாக ஏகாதிபத்திய சதிக்கு அமைய, போராட்டத்தை புலிக்கு சார்பாக இசைவாக மாற்றி, எம்மை நாமே அழித்துக்கொள்ளும் போராட்டமாக சீரழிந்து போனது. எம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம்.

இலக்கற்றும், களைத்தும் போகின்ற கோசங்கள். விளைவு இரந்து வேண்டுவதும், உதவி கோரும் பிச்சைக்கார ஓப்பாரிப் போராட்டமாக மாறிவிடுகின்றது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்த, உணவை அனுப்பி போராட்டத்தை இழிவாடியது போல்தான் இதுவும்.

இதன் பின்னணியில் இதை வழிநடத்துபவர்கள் வெறும் புலிகளல்ல. ஏகாதிபத்திய நோக்குக்கு, இசைவான எல்லைக்குள் போராட்டத்ததை மட்டுப்படுத்தி வழிநடத்தப்படுகின்றது. அந்த வகையில் ஏகாதிபத்தியத்துடன் தொடர்புடைய நபர்கள், அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப போராட்டங்களை வழிநடத்தி முடக்குகின்றனர்.

இவர்கள் நடத்தும் போராட்டங்களில் மேடையேறும் மேற்கு அரசியல்வாதிகள் அனைவரும், ஏகாதிபத்திய நாட்டை ஆளும் அல்லது எதிர் கட்சியில் உள்ள ஏகாதிபத்திய பிரமுகர்கள்தான். அவர்கள் மனம் புண்படாத வண்ணம், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கைக்குள், எந்த நிர்ப்பந்தத்தையும் தராத போராட்டமாக எம் மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படுகின்றது.

இப்படி மக்கள் அவலம் மேல் மக்களை திரட்டும் போராட்டங்கள், ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானதாக மாறிவிடுகின்றது. பரந்துபட்ட வகையில் சர்வதேச சமூகத்தை, அணி திரட்ட முடியாத கோரிக்கைக்குள் அரசியல்வாதிகளின் தயவை இரந்து பெறும் எல்லைக்குள் முடங்கிவிடுகின்றது. ஓப்பாரி போராட்டமாக, இரந்துவேண்டும் போராட்டமாக, பிச்சைச்காரர் போராட்டமாக கூனிக்குறுகி விடுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இதையே எம் வரலாறு, மீண்டும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

பி.இரயாகரன்
06.02.2008

Friday, February 27, 2009

புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியல் என்பது மாமா அரசியலாகிவிட்டது

நாம் புலியெதிர்ப்பு என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகம் செய்து பயன்படுத்திய போது, அதற்கென்று ஒரு அரசியல் அர்த்தம் இருந்தது. இதை பலரும் எம்மிடமிருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கிய போது, நாம் பயன்படுத்திய அரசியல் அர்த்தத்தில் இருந்தும் அது திரிந்து போனது.

மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அரசியல் பேசியவர்கள் நிலைப்பாடு மாறிவந்தது. அன்று நாம் கொடுத்த அரசியல் அர்த்தத்தையே அது இழந்துள்ளது. இனி நாம் அவர்களை புலியெதிர்ப்பு அணி என்று கவுரமாக கூட அழைக்க முடியாது. மாறாக புலியெதிர்ப்பு பேசும் மாமாக்கள் என்று அழைத்தலே பொருந்தும்.

நாம் புலியெதிர்ப்பை வரையறுத்த அரசியல் அடிப்படை என்ன? அவர்கள் புலியை முதலாம் எதிரியாகவும், அரசை இரண்டாம் எதிரியாகவும் கூறி, இரண்டையும் தம் எதிரியாகவே காட்டினர். புலியை ஒழித்தலே முதன்மையானது என்றனர். இதனால் அவர்க................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஏகாதிபத்தியத்திடம் தமிழரின் தலைவிதியை ஒப்படைத்தல்!

இப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.

1987 இல் தமிழ் மக்களின் தலைவிதியை இந்தியாவை நம்பி ஓப்படைப்பதாக கூறிய புலிகள், ஒருபகுதி ஆயுதத்தை மட்டும் இந்தியாவிடம் ஒப்படைத்தனர். பின்னால் இந்தியாவுக்கு எதிராகவே, புலிகள் ஒரு யுத்தத்தையே நடத்தினர். இந்தியாவின் சதிகளையும், ஆக்கிரமிப்பையும் கூட இதன் மூலம் முறியடிக்க முனைந்த புலிகள், அதற்கு ஈடாக மேலும் பாசிசத்தை தம் தலைக்கேற்றினர். இதன் மூலம் மேலும் மக்களில் இருந்து அன்னியமாகினர். இது எம் வரலாறு.

இப்படி அன்று செய்தது போல் அல்ல, இன்று மாறாக ஏகாதிபத்தியத்திடம் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்து விட்டு சரணடையும் வாய்ப்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

குத்தாட்டமே டைஃபியின் 'கலாச்சாரப் புர்ர்ரட்ச்ச்சி"

Thursday, February 26, 2009

இந்திரா பெத்த புள்ள

இந்திரா பெத்த புள்ள

அன்றைய வரலாற்றுத் தவறுகள்: இன்றைய வரலாற்றுத் தேவைகளாக, ஆக்கப்படுகிறது!

இருந்தாப் போல், ''தேடகம்'' ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது( -மாசி 20 -2009 ''தேசம் நெற்''- ). 1989ல் இருந்து இயங்கி வந்த ''தேடகம்''(நூலகம்), ''தேடல்''(சஞ்சிகை), சமூக சேவைகள், தேடல் பதிப்பகம், கலை இலக்கிய மன்றம் போன்ற உப பிரிவுகளைக் கொண்டு இயங்கி வந்த ''தமிழர் வகைத்துறை வள நிலையம்'' (கனடா), புலிகள் தீயிட்டதன் பின், பத்தோடு பதினொன்றாக யாழ் வீழ்ச்சியுடன் காணமற் போனது.

இன்று புலிகள் மீதான நெருக்கடி, இவர்களை மாம்பழத்துப் புளுவாக துடிக்க வைத்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல! புற்றீசலாக இவர்கள் இன்று வெளிட்டிருக்கும் அறிக்கை, இவர்களின் தொட்டில் கொள்கையின் தொடர்ச்சியே! ''தேடல்'' சஞ்சிகையில் வெளிவந்த கருத்துக்கள் இவர்களின் கருத்துமல்ல. "தேடலில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் எழுத்தாளர்களின் பொறுப்பு என்னும் சம்பிரதாயத்தை தாங்கி வருகிறது" என்ற பரவலான தமிழ் சஞ்சிகைகளின் ''நடு நிலைமை''க்கான தாரகை மந்திரத்தைத்தான் தேடலும் வரிந்து கொண்டிருந்தது. (அன்று புலிகளுக்கும், புலிகள் மீதான கடும் விமர்சனத்துக்கும் இடையே, இவர்கள் தம்மை ''நடு நிலைமை'' ஆளர்களாக இருத்தி வைப்பதற்கே...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, February 25, 2009

காங்கிரஸ் என்றொரு கட்சி

காங்கிரஸ் என்றொரு கட்சி

புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே

எம் மக்கள் போராட்டம் தவறான போராட்டமாகி, பாரிய மக்கள் அழிவை ஏற்படுத்தும் போராட்டமாகி, குறுகிய வட்டத்துக்குள் குறுகிய நலன்களுடன் நடந்த புலிப் போராட்டம் இன்று சிதைகின்றது. இது தன் மீட்சிக்கான எந்த வழியுமின்றி, ஏகாதிபத்தியம் வரை இரந்து வேண்டுகின்றது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அது எதையும் செய்யத் தயாரான நிலையில் உள்ளது. வேறுவழியின்றி தவிக்கின்றது. தவித்த முயலை அடித்துண்ண இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை வலை வீசுகின்றது. அதில் சிக்கி விடுவார்களா என்ற கேள்வி, எம்முன் எழுகின்றது.

மனித உரிமை கமிசனா? போலீசு உரிமை கமிசனா?

இரும்புத்தாது கனிம வளமிக்க சத்தீஸ்கர் மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களான கோண்டு பழங்குடியின மக்களை அம்மாநிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, எஃகு ஆலை நிறுவிச் சூறையாட டாடா, மித்தல், எஸ்ஸார் முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இம்மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு எதிராகப் பழங்குடியின மக்களைத் திரட்டிப் போராடி வரும் நக்சல்பாரி புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகளை முறியடிக்க, பழங்குடியின மக்களில் ஒருசிலரைக் கொண்டே எதிர்ப்புரட்சி குண்டர்படையை ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும் கட்டியமைத்துள்ளனர். இக்குண்டர்படையின் பெயர்தான் சல்வாஜுடும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டேவாடா, பிஜாபூர் மாவட்டங்களில் நக்சல் வேட்டை என்ற பெயரில் இந்தக் குண்டர் படை பழங்குடியின மக்களைக் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கிவருகிறது. பழங்குடியினரின் பல கிராமங்கள் முழுவதுமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான அப்பாவிப் பழங்குடியினர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் அகதிகளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, February 24, 2009

உண்மையான மனித அவலத்துக்கு எதிராக யாரும் போராடவில்லை!?


இதைப் பற்றி பேசுபவர்களின் அரசியலோ வலதுசாரியம் முதல் இடதுசாரிய பிழைப்புவாதம் வரை உள்ளது. இவர்கள் என்றும் மனிதனாக மனிதனுக்கு என சிந்தித்தவர்களல்ல. மனிதன் தன் விடுதலையை, தான் போராடிப் பெறுவதை, இவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மக்கள் தம் விடுதலைக்காக தாம் போராடுவதை முன்னிறுத்தி, மனித அவலத்தை முன்மொழிபவர்களல்ல.

இந்த கயவாளிப் பயல்கள் என்ன செய்கின்றனர். சிங்கள பேரினவாத அரசிடம் எம் மக்களை கொல்லாதே என்று கோருகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க கூடாது என்பது புலிகளின் பாசிசக் கட்டளை. இதற்குள் மனிதாபிமானம் பற்றி உணர்ச்சிகரமான வித்தைகள். இதன் மூலம், சிங்கள பேரினவாத அரசு கொல்லுவதை நிறுத்திவிடுமா!? எம் மக்களின் எதிரியான இந்தியாவும்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

நேபாளப் பார்ப்பனர்களின் கோரிக்கை,...

நேபாள மன்னரால் நியமிக்கப்படும் தலைமைக்குருவுக்கு அளவு கடந்த அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது. அவர் நினைக்கும் ஆட்களையே கோவிலின் இதர அர்ச்சகர்களாக அவரே நியமித்துக்கொள்ளலாம். மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகுதான், அதுவரை கோடிக்கணக்கில் கோவிலின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது வெளியே தெரியவந்தது. பசுபதி பகுதி வளர்ச்சி அறக்கட்டளையின் பொறுப்பிலிருந்து மன்னர் ஞானேந்திராவும், ராணி கோமலும் துரத்தப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் கொண்டுவரப்பட்டது. புரோகிதர்கள் வக்கிரமான பாலியல் வேட்டை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டு அவர்கள் மக்களால் நையப் புடைக்கப்பட்டிருக்கின்றனர். பசுபதிநாதருக்கு பூசை செய்யும் பிஷ்ணுதாஸ் எனும் 30 வயது புரோகிதன், சென்ற ஜூன் மாதத்தில் கோவிலுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை சாக்லேட் தருவதாகச் சொல்லி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்தான். மக்களால் பிடிபட்டு உதைவாங்கிய பிறகும், "இறைவன் இதனைச் செய்யவே தன்னைப் பூமிக்கு அனுப்பியதாக'' நியாயமும் பேசினான். அப்பூசாரி மூன்று முறை இதே போன்ற .....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பசுபதி நாதர் ஆலயப் பிரச்சினை : பாரம்பரியமா? பிராந்திய ஆதிக்கமா?

மக்களின் பேராதரவுடன் ஆயுதப்போராட்டம் நடத்தி, மன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்த நேபாள மாவோயிஸ்ட் கட்சியை அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேற வைத்து, மீண்டும் ஆயுதப் போராட்ட பாதைக்குத் திருப்பித் தனிமைப்படுத்துவது எனும் செயல் உத்தியை நேபாளத்தில் இருக்கும் எதிர்ப்புரட்சி கும்பல்கள் ஒன்றுபட்டு செயல்படுத்தி வருகின்றன. நேபாளத்தில் அன்றாடம் நடக்கும் அற்ப விசயங்களைக் கூடப் பூதாகரமாக்கி மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி எரிச்சலூட்டுவதில் அங்கிருக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசு கட்சியும் கை கோர்த்துச் செயல்படுகின்றன. இதற்கு இந்திய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அன்னிய சக்திகளும், கிரீடத்தை இழந்த மன்னரும் துணை நிற்கின்றனர். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட காத்மண்டு பசுபதிநாதர் கோவில் விவகாரம் இதைத்தான் உணர்த்துகிறது.

நீண்ட காலமாக தென்னிந்திய பார்ப்பனர்களைத்தான் பசுபதிநாதர் சிவாலயத்தின் தலைமை அர்ச்சகர்களாக நேபாள மன்னராட்சி நியமித்து வந்தது. தனக்கு ஏற்பட்டிருக்கும் தீராத முதுகுவலியின் காரணமாக செப்டம்பர் 2008இல் தலைமைக் குருவான மகாபலீஸ்வர பட் வேலையை விட்டு விலகினார். மேலும் இரண்டு பட்டர்களும் அடுத்தடுத்து விலகினர். பல நூற்றாண்டுகளாக பசுபதி நாதருக்கு தென்கன்னடத்தைச் சேர்ந்த பட்டர்களையும், மராட்டி, தெலுங்குப் பார்ப்பனர்களையும் நியமிப்ப..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, February 23, 2009

 புலிகளின் நடத்தைகளே, அவர்களுக்கு எதிரான சர்வதேச தலையீடாக மாறுகின்றது!

யாரும் தனக்குத் தானே புதைகுழியை வெட்டுவார்களா! ஆம் வெட்டுவார்கள். புலிகள் அதையே இன்று செய்துள்ளனர். அதையும் பல கோணத்தில் வெட்டுகின்றனர். 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில், புலிக்கு எதிரான ஒரு சர்வதேச தலையீடு. இதைக் கோரியே எமது போராட்டங்கள் நடந்தது என்பதுதான், எமது மக்களின் சொந்த அவலம். புலியைக் கொல்ல, புலிகள் போராடியுள்ளனர். இலங்கை அரசு மட்டுமல்ல, அமெரிக்கா தலைமையில் இணைத்தலைமை நாடுகளும் சேர்ந்து புலியை கொல்லக் கோரும் போராட்டமாக நடத்தியிருக்கின்றனர் புலிகள்.

புலியெதிர்ப்பு கூட்டத்தின் மெளனம்..? தமிழச்சி


குருரத்தின் எச்சத்தில் உலகத்தமிழர்கள் பதைப்புடன் கதற புலியெதிர்ப்பு கூலிக்கூட்டம் மௌனமாக அங்கீகரதித்துக் கொண்டிருக்கிறது. தலீத்தியம், பெரியாரியம், பெண்ணீயம் பேசும் தறுதலைக் கூட்டம் இந்திய, இலங்கை அரசுக்களின் இனஅழிப்பைக் கண்டும், "உண்மையான விசுவாசிகளாக நாங்கள் இருப்போம்" என மௌனங்களால் அரசியல் மொழி பேசுகிறார்கள் தரம்கெட்டவர்கள்.

ஈழத்தமிழர்களுக்காக.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈ.பி.டி.பிக்கு மனித முகம் உண்டா?!

இல்லை. மாறாக அது மகிந்த சிந்தனையிலான நவீன பாசிசம். புலியின் பாசிசத்தைச் சொல்லி, மகிந்தாவின் வாலாக ஈ.பி.டி.பியின் பாசிசம் ஆட்டம் போடுகின்றது. இதுவோ மற்றொரு புலியிசம் தான். புலி அரசியலில் இருந்து, எந்த வேறுபாடும் இதற்கு கிடையாது. இதற்கு அப்பால் புலி எப்படி தன் பாசிசத்தை நிறுவியதோ, அதையே தான் சிங்கள பேரினவாத துணையுடன் ஈ.பி.டி.பியும் செய்கின்றது.

இதற்கு வெளியில் அது மக்களைச் சார்ந்து நிற்கும் சுயாதீனமான இயக்கமல்ல. 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி சென்ற டக்ளஸ் தேவானந்தா"வின் கூலிக்குழுவோ, ஒரு பாசிச சாக்கடை.

புலிகளின் பாசிசத்தின் முன் ஈ.பி.டி.பி நிற்க முடியாது, பேரினவாத பாசிச சேற்றில் புதைந்தவர்கள். அதற்கு முன்னம் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக இருந்தபோது, இந்தியாவின் கைக்கூலி அமைப்பாகவே இந்தியாவால் வளர்க்கப்பட்டவர்கள். இப்படி ஈழதேச விடுதலை என்ற பெயரில், கைக்கூலி அமைப்பாகத் தான் அவர்களின் வரலாறு அறியக்கிடக்கின்றது. இவர்கள் புலிக்கு மாற்று, மக்கள் சேவை என்ற கூறிவருவது எல்லாம், 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி"யது என்று கூறுவது, தமது இந்தத் கைக்கூலித்தனத்தைத் தான்.

அண்மையில் நாவலன் எழுதிய 'மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்" என்ற .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, February 22, 2009

உண்மைக்குள் உள்ள பொய்மைகள்

புலியெதிர்ப்பும், புலியிசமும் பேசும் உண்மைக்குள் உள்ள பொய்மைகள் அனைத்தும், மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையின் பாலான எந்த அக்கறையுமற்றதும், குறுகிய நோக்கத்துக்குட்பட்டதுமாகும். மனிதம் சந்திக்கின்ற அவலங்கள் உண்மையானது, எதார்த்தமானது. அதை கண்டு கொள்ளாத கூத்துகள் கோமாளித்தனமானது. இதற்குள் றீல்விட்டு எழுதும் புத்திஜீவிகள். உண்மையை ஒருபக்கம் அடமானம் வைத்துவிட்டு, நடிக்கும் நேர்மையீனம்.

இப்படி புலியெதிர்ப்பு பேசும் அரசியல் புலிகளின் தவறுகளை அடிப்படையாக ஆதாரமாக கொண்டு இயங்குகின்றது. இது தமிழ்மக்களின் எதிரியான அரசை ஆதரித்து, அதன் மனித விரோத செயல்களை நியாயப்படுத்தி, தமிழ் மக்களுக்கு முற்றும் எதிராக நிற்கின்றது. தமிழ் மக்களை புலியிடமிருந்து அரசுதான் மீட்க முடியும் என்கின்றது.

புலியிசம் பேசும் அரசியல், தமிழ்மக்களுக்கு எதிரான அரசின் மக்கள் விரோத செயலை அடிப்படையாகக் கொண்டது. அதே நேரம் புலிகளின் மக்கள் விரோ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுதந்திரமாக மக்களைப் பேச விடு!

புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை, மீண்டும் சிறை வைத்துள்ள பேரினவாத அரசு. அங்கு தெருநாயைப்போல் கல்லெறி வாங்கி ஒடியவர்கள், இங்கு மிருகக்காட்சி சாலையில் போல் நேரத்துக்கு பேரினவாத மணியடித்தால் உணவு. மற்றும்படி எங்கும் ஒரே சிறை தான். சுதந்திரமான நடமாட்டம் முதல் சுதந்திரமாக வாய் திறந்து கதைக்க கூட முடியாத மனித அவலநிலை.

இந்த மக்களின் வாழ்வையிட்டு எழும் கூச்சல்கள் கூட போலியானவை. இந்த மக்களின் பெயரில் புலிகளும் அவர்களின் பினாமிகளும் விரும்புவது என்ன? சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதித்து, இதன் மூலம் தமக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் நாலு குண்டு வெடிக்காதா என்பது அவர்கள் கவலை. இப்படி தமது ஆட்கள் மக்களின் பெயரில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்ற விருப்பம், கவலை.

மறுபக்கத்தில் இந்த திறந்தவெளி சிறையைக் காட்டி, வன்னியில் தாம் தடுத்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்காமல் இருக்க, நியாயம் கற்பிக்க உதவும் என்ற நம்பிக்கை. இதற்கு வெளியில் மக்களையிட்டு எந்த கவலையும் புலிக்கு கிடையாது.

மறுபக்கத்தில் அரசு புலிகளின் ஊடுருவலைக் காட்டி, திறந்தவெளி சிறைக்கூடத்தில் மக்களை அடைத்து வைத்து வடிகட்ட முனைகின்றது. இதற்கு அப்பா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.