தமிழ் அரங்கம்

Showing posts with label படுகொலை. Show all posts
Showing posts with label படுகொலை. Show all posts

Thursday, May 21, 2009

புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.

தமிழ் மக்கள் முன் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம், இயல்பாக எம்முன் ஒரு இனந்தெரியாத சூனியத்தை உருவாக்குகின்றது. எங்கும் இனந்தெரியாத சோகம், அவலமாகின்றது. நடந்ததை நம்பாமல் இருக்க முனைகின்றது. மக்கள் நடைப்பிணமாக, அஞ்சலி கூட செலுத்த முடியாது, அவர்கள் அரசியல் அனாதையாகி நிற்கின்றனர்.

இந்த நிலையில் படுகொலையுடன் கூடிய இந்தச் சதி என்பது உண்மையானது. யுத்த முனையில் இருக்காத மூன்றாம் தரப்புகளின் கூட்டுச்சதி தான், புலித் தலைவர்களின் மொத்த மரணம். இந்த மரணத்தின் பின், எதிர்பாராதா வண்ணம் வெளிவரும் காட்சிகள்;. எப்படி இது நடந்தது, என்ற அதிர்ச்சி. இதனால் இறந்தது 'எங்கள்" தலைவரல்ல என்று கூறுமளவுக்கு, நம்ப முடியாத அதிர்ச்சிகள்.

அப்படியாயின் நடந்தது என்ன?............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, May 17, 2009

இறுதிக் காலக்கெடுவின் பின் பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

புலிகளை அழிக்கவும், இதன் தலைமையை கைது செய்யவும் என்ற பெயரில், ஒரு இனவழிப்பே அரங்கேறியுள்ளது. வெடிகுண்டுகள் மாரியென பொழிய, அதற்குள் மக்கள் சிக்கி மரணிக்கின்றனர்.

இதற்கு அமைய இறுதி இனவழிப்பாக 48 மணி நேரத்தை பிரகடனம் செய்தார் 'மாண்புமிகு” கொலைகார ஜனாதிபதி. ஆனால் அந்தக் காலம், இனவழிப்பு இயந்திரத்துக்கு போதவில்லை. அந்தளவுக்கு மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அறிவித்த 48 மணி நேரத்தை விட, அது மூன்று மடங்கு நேரத்தையும் கடந்துவிட்டது. இன்னமும் இந்த இனவழிப்பு யுத்தம் முடியவில்லை. அவசரமாக இனவழிப்பின் நற்செய்தி அறிவிக்க விமானத்தில் ஏறி ஒடோடி வந்த வேகத்தில், கால் தடுக்கி விழுந்த மண்ணை முத்தமிட்ட ஜனாதிபதியால் கூட, இந்தக் கணம் வரை கூட நற்செய்தியை வெளியிட முடியவில்லை.

பயங்கரவாதம் ஒழிந்த மண்ணுக்கு தான் செல்வதாக உலகறிய கொக்கரித்தவர், பயங்கரவாத மண்ணை மீள முத்தமிட்டவேண்டிய சோகம்.

இவை எல்லாம்............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 12, 2009

ஆயிரம் ஆயிரமாக மக்களை பலியெடுக்கவும் - பலிகொடுக்கவும் தயாராகின்றனர் பாசிட்டுக்கள்

எம் இன உறவுகள் ஒரு கூட்டமாக எந்த நேரமும், கொடூரமாகவும் கோரமாகவும் கொல்லப்படுவார்கள் என்ற நிலை. யார் கொல்வார் என்பது தான், எமக்குத் தெரியாத புதிராகவுள்ளது. ஆனால் மக்களை கொல்லும் திட்டம் என்னவோ தயாராகவே உள்ளது.

தாம் விரும்பும் இந்த படுகொலைகளை உலகறிய வைக்கவேண்டும் என்பதே, இன்று புலியின் இலட்சியம். இதை மூடிமறைக்க வேண்டும் என்பது, பேரினவாதத்தின் இலட்சியம். இந்த எல்லைக்குள் தான் இவர்களின் தர்மம், தார்மீகம், மனிதவுரிமை என்று எல்லாம். இதை மூடிமறைக்கவே, இவர்கள் மக்கள் என்கின்றனர்.
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, March 21, 2009

சிறுமி வர்ஷாவின் படுகொலைக்கான அரசியல் எது?

எம்மினத்தின் பெயரில் உருவான 'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியல் என்ன? அதன் நடைமுறைகள்தான் என்ன? இதுதான் சிறுமி வர்ஷாவின் படுகொலையை வழிகாட்டுகின்றது. இது தொடக்கமுமல்ல முடிவுமல்ல, மாறாகத் தொடரும்.

'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியலோ, முற்றிலும் மக்கள் விரோதமாகும். இதையொட்டிய நடைமுறைகள், மனித வெறுப்பை அடிப்படையாக கொண்டது. இதுவோ ஈவு ஈரக்கமற்றது. மனிதப் பண்பற்றது. லும்பன்தனமான அரசியல் வக்கிரத்தால், பூசி மெழுகப்பட்டது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Saturday, June 21, 2008

தமிழ்நாடு சி.பி.எம் பாசிசக் குண்டர்கள் (ம.க.இ.க ஆதரவு அமைப்பு தோழரைக் கொன்றதுடன், வேறு சில தோழர்கள் உயிர் ஆபத்தான் நிலையில்) நடத்திய படுகொலை

"இந்தியாவுக்கான புரட்சிப் பாதை ஆயுதம் தாங்கியதாக ஒருபோதும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவில், மக்களுக்கான ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நமது தேசத்தில் சமாதான முறையிலேயே அரசியலை வழிநடத்தி புரட்சியை வென்றெடுக்க முடியும்" என்று அடிப்படையான மார்க்சிய லெனினியத்துக்கே கொள்ளிவைத்தனர் சிபிஐ/சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகள்.

ஆயுதமேந்திய புரட்சியை வலியுறுத்துவதாலேயே நக்சல்பாரிகளை இழிவுபடுத்திப் பேசுவதோடு; அவ்வப்போது நக்சல்பாரிகளுக்கு எதிராக ஆளும்வர்க்கத்துக்கு அன்னிய/இந்திய முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கப் பட்டுள்ள 'சல்வாஜூடும்' போன்ற கூலிப்படை அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இப்போலிகள் நடந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்டால், "ஆயுத கலாச்சாரம்" இருவருக்குமே ஆபத்தானது" என்கிற உபதேசம் வேறு. இப்படிப்பட்ட 'சைவ பூணைகள்' இப்போது ஆயுதமில்லாமல் அரசியலே நடத்துவது கிடையாது. இதுபற்றிகூட நாம் விரிவாக எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. .. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்