தமிழ் அரங்கம்

Saturday, October 24, 2009

அமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும்

மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.

அறுபது நீண்ட ஆண்டுகள், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது.........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 23, 2009

மகிந்தாவுக்கு குடைபிடிக்கும் அலுக்கோசு அரசியல்


இனவொடுக்குமுறையால் இன்று தமிழ்மக்கள் எண்ணிக்கை குறைந்து, அவர்கள் மிகச் சிறுபான்மை இனமாக மாறி வருவதை சுனந்த தேசப்பிரிய சுட்டிக் காட்டினார். இதன் போது, சுகன் மகிழ்ச்சி பொங்க கைதட்டி ஆர்ப்பரித்தான். தமிழ் மக்களை கொன்றும், அவர்களை நாட்டை விட்ட துரத்தியும் அழித்த அந்த அரசியலுக்காகத்தான், இந்த மகிழ்ச்சி. அலுக்கோசுகள் மட்டும் தான், கோமாளித்தனத்துடன் தங்களை இப்படி வெளிப்படுத்த முடியும்.

தமிழ் மக்களின்....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும் - தில்லை (சுவிஸ்)


3) இலங்கையி...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, October 21, 2009

மகிந்தாவின் கை வைத்தியத்தில் தயாராகும் புதிய தூக்க மாத்திரைகள்.


இவர்களின் மிக மோசமான வாழ்நிலை தொடர்பாக பாட்டம் பாட்டமாகக் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. கூடவே இவை வாதப் - பிரதிவாதங்களாகவும் அமைந்திருந்தன. முதற் கட்டமாக - வன்னியில் இருந்து வந்த மக்கள் பட்டினி மரணங்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் பலர் இறந்து வருவதாகவும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. பெரும் தொகையான மக்கள் வெளியேறியதால் சில நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் - வெகுவிரைவில் இவை நிவர்த்தி செய்யப்படும் எனவும் பிரதிவாதங்கள் அமைந்திருந்தன. (இவைகள் புலிகளின் தலைமை அழிவுக்கு முன்னர்)

புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின் ஒரு மவுன இடைவெளி காணப்பட்டது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டி கே.பி யின் கைதுடன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தாக மாறியது. கிட்டத்தட்ட யூலை கடைசி வாரம் வ......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, October 20, 2009

வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள்

புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

விரிந்து விசாலமுற்ற பார்வையை மக்களுக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் வகையிலான விடுதலை ஆட்சியமைப்பை உருவாக்குவதன் மூலம் வாழ்வின் சாராம்சத்தை உயர்த்துவதற்கு பதில் அதற்கு எதிரான கைங்கரியத்தையே புலிகள் தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் பாவிப்பதற்கான பண்டங்களாகவே அனைவரும் மதிக்கப்படுகின்றனர். தலைவர்கள் அங்கத்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பின் அதே பெறுமானத்தினைத் தான் அங்கத்தவன் ஒருவன் தான் சித்திரவதை செய்யும் கைதிகளிடம் காட்டுகின்றான். மனிதன் ஒருவனில் மதிக்கத்தக்க குணாம்சங்கள் அர்ப்பணிப்பு- அதாவது மற்றைய இயக்கங்களில் சேர்ந்தவர்களில் பலர் தங்களை மக்களின் நலனுக்காகவும் இலட்சியத்துக்காகவும் தியாகம் செய்ய தயாராயிருந்தமை- அனைத்தும் அர்த்தமற்றுப் போய் விட்டது. சிறுவர்களைச் சித்திரவதையாளர்களாகப் பாவிக்கும் புலிகள் அமைப்பானது சிறைச்சாலைகளும் வதைமுகாம்களும் கொண்ட வலைப்பின்னாலாக வியாபகமடைந்துள்ளது.
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பிற மாவட்ட மக்களை விடுவிப்பது என்பது, வன்னியில் இருந்து நிரந்தரமாக துரத்துவதாகும்

அரசு செய்கின்ற புதிய நுட்பமான ஒரு போர்க் குற்றம். இதுவோ மூலதனத்தின் கபட நாடகம். சுரண்டும் வர்க்க நலன்களே, இங்கு இந்த நிலையை உருவாக்கி வருகின்றது.

பேரினவாதம் உருவாக்கி வைத்துள்ள திறந்தவெளி சிறை இதன் அடிப்படையிலானது. மக்களை அடைத்து வைத்திருப்பது இதற்காகத்தான்.
ஆனால், அரசு கூறும் காரணமோ, வன்னியில் இன்னமும் கண்ணி வெடியை அகற்றவில்லை என்கின்றது. அத்துடன் முகாமில் உள்ள மக்களுடன் புலிகள் உள்ளதால், அவர்களை கைது செய்ய வேண்டியுள்ளது என்கின்றது.

புலிகளோ இதற்கு கூறும் காரணம் வன்னியில் சிங்கள குடியேற்றம் செய்யவும், இனவழிப்பு செய்யவும், இப்படி மக்களை அரசு அடைத்து வைத்துள்ளதாக கூறுகின்றது.

.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, October 19, 2009

பிரபாகரனின் சகாப்தத்தின் முடிவின் மேல், அரச பாசிசமும் புலியெதிர்ப்பு அரசியலும்

மண்ணில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின், அரசுக்கு எதிரான பொது அரசியல் என்பது படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றது. தனித்துவமான சுதந்திரமான அரசியல், அரச பாசிசத்தின் முன் சிதைந்து போகின்றது. இன்று இலங்கையில் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது, பயங்கரவாதமாகிவிட்டது. இந்த அரச பாசிசத்தைப் பற்றி பேசுவது, கைதுக்கும் படுகொலைக்குமுரிய ஒரு அரசியல் செயலாகிவிட்டது.

இன்று இலங்கையில் இதுதான் நிலைமை. புலத்திலும் இந்த நிலைமையை உருவாக்கவே, அரச பாசிசம் தீவிரமாக முனைகின்றது. அரச பாசிசத்துக்கு அஞ்சி வெளியேறிய சிங்கள ஊடகவியலாளர்கள் முதல் புலத்தில் இயங்கும் சொத்துப் புலிகளை கருவறுப்பதில் தீவிரமாக அரசு களமிறங்கியுள்ளது. இந்த வகையில் அரச உளவுப்பிரிவு, தீவிரமாக புலத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்காக பாரிய நிதியை ஓதுக்கியுள்ளது. எல்லாம் விலை பேசப்படுகின்றது.

இதன் மூலம் தமது பாசிசத்தை நிறுவ ஆள்காட்டிகள் முதல் தமக்கு ஏற்ற ஒரு அரசியல் தளத்தையும் உருவாக்க முனைகின்றது. இப்படி
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, October 18, 2009

புகலிடச் சிந்தனை மையம் சூரிச் இல் நடந்த கலந்துரையாடல்


என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார். இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரும், அதனால் சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அவர் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

சூரிச் இல் நடந்த கலந்துரையாடல்


என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார். இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரும், அதனால் சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அவர் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

பேரினவாதப் பாசிசம்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்