தமிழ் அரங்கம்

Saturday, July 11, 2009

இரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்

எகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்
சந்ததியே சதிவலைக்குள்
சிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டு
எதிரியின் கூண்டுக்குள்
புத்தகம்காவி புள்ளிமானாய் துள்ளித்திரிந்தவர்கள்
கத்திக்குளற இழுத்தெடுத்து
பெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலே
கொண்டுபோய் வீழ்த்தியது
.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 10, 2009

புலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள்


இந்த இரு கும்பலும் தங்கள் சொந்த சுயலாபத்துக்காகவே, தமிழ்மக்கள் பெயரால் தமிழ் மக்களுக்கான போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர். மக்கள் தம் சொந்த வாழ்வு சார்ந்த எதார்த்த உண்மைகள் உணர்ந்து செயல்படுவதைத் தடுக்கும் இந்தக் கும்பல், தங்கள் சொத்து, வியாபாரம், அதிகாரம், நாட்டாமை என்ற எல்லைக்குள், தமிழ் மக்களை அடக்கி வைக்கமுனைகின்றனர்.

இவர்களுக்கு இடையில் நடக்கும் பினாமி சொத்துகள் சார்ந்த முரண்பாடு, உண்மைகளை மறுதலிக்கின்றது. இதன் மூலம் புலியின் புலத்து அதிகாரத்தை கைப்பற்றுவதும் அல்லது அதைத் தக்கவைப்பதன் மூலமும், பினாமிச் சொத்தை தம் வசப்படுத்த முனைகின்றனர்.

இப்படி புலத்தில் இரண்.......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீ சுவரனான சேரி நாய்) திரைப்படத்திற் காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடாக் அரங்கத்தின் மேடையில் விருதைக் கையில் ஏந்தியபடி, "எல்லாப் புகழும் இறைவனுக்கே!' எனத் தமிழில் உற்சாகமாக மொழிந்தார்.


அடுத்த கணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், ஒரே குரலில் "ஜெய் ஹோ#' (வெற்றி உண்டாகட்டும்!) என ஆரவாரிக்க தொடங்கினர். ஒரு வாரத்திற்கும் மேலாக ஆரவாரம் அடங்கவில்லை. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசினார், எனவே இது தமிழுக்கு, தமிழனுக்கு கிடைத்த வெற்றி என ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றொரு புறம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு மாபெரும் அங்கீகாரம், யாரும் சாதிக்காத சாதனை என ஆரவாரம்.

ஒட்டு மொத்தமாக இவ்வாண்டு ஆஸ்கர் விழாவை இத்திரைப்படம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாக மேலைநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றிய லவ்லீன் டாண்டன், ""ஏ.ஆர்.ரகுமான் போல இன்னும் பல திற....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மூக்குள்ளவரை ! - பார்த்திபன்


இந்தக் கதையும் அப்படித்தான். உருவகக் கதையை அடிப்படையாகக் கொண்ட, இந்தக் கதையின் கரு, இன்றைய சமகால அரசியல் போக்கில் உள்ள போலித்தனங்களையும், வன்முறையையும் எள்ளி நகையாடுகின்றது. அரசியல் இல்லாத மௌனம் கூட கிடையாது என்பதை, மிக நுட்பமாக இக்கதையூடாக சொல்ல முனைகின்றார்.
உங்கள் விமர்சனங்களையும், கருத்துக்களையும் பார்த்திபன் எதிர்பார்க்கின்றார்.

தமிழரங்கம்16.03.2009


மூக்குள்ளவரை !
"சுட்டும் விழிச்சுடரே.... எங்கையோ பற்றிக்கொண்டதே.." எண்டு அஸின் ஆட, ரசிச்சுப் பாத்துக் கொண்டிருக்கேக்கதான் எனக்கு வயசு போட்டுதெண்டு கவலை வந்திது. பண்டரிபாய், சௌகார்ஜானகி ரசிகரை எங்கடை காலத்திலை பாத்து சிரிச்சது இப்ப ஞாபகம் வர, ஒரு மாதிரித்தான் இருக்குது. இன்னும் ஒரு பத்து வருசத்திலை, ரஹ்மானின்ரை அல்லாட்டி யுவனின்ரை ஸ்பீற் பீற் கேட்டுக்கொண்டிருந்தா என்னைப் பாத்து சின்னனுகள் சிரிக்குமோ எண்டு ஒரு பியூச்சர் பயம் வரேக்கை...

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

இந்த நேரத்தி....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 9, 2009

இனவழிப்பு யுத்தத்தில் 350 மக்கள் தான் இறந்தனராம்;! அரசு பாசிசம் மூலம் கூறுகின்றது

அரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள்.

இந்த பேட்டி, அரச "ஜனநாயகம்;" எப்படிப்பட்டது என்பதையும், அது கையாளும் பாசிச வக்கிரத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. குற்றவாளிக் கும்பல்கள், நாட்டை ஆளும் விதமும், ஆள விரும்புகின்ற விதமும் இது. இப்படி இலங்கையில் மகிந்த சிந்தனை எவ்வளவு அகோரமானது என்பதையும், கொடூரமானது என்பதையும், இது எடுத்துக் காட்டுகின்றது. புலிகள் பகுதியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் மிரண்ட படி, விழுங்கியும், திணறியும், சமாளித்தளித்த பேட்டி, பாசிசத்தின் முகத்தை எடுத்துக்காட்டுகின்றது. இந்த மருத்துவர்களை அரசு தன் வதைமுகாமில் வைத்து....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து ஜ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக் கூத்து - புதிய ஜனநாயகம்

முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர்.

இப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதை தணிப்பதற்கு மேலைநாடுகள் முயன்றபோது கை கொடுத்ததுதான் ஐ.நா.சபை தீர்மானம்.

சுவிட்சர்லாந்து தலைநகர...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 8, 2009

புலித்தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும் - புதிய ஜனநாயகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையானவிசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

ஆனால், ஈழத்தின் வன்னிமுள்ளிவாய்க்கால் களப்பிரதேசத்தில் உண்மையில் நடந்தது என்னவென்று இதுவரை நமக்குக் கிட்டியுள்ள தகவல்களைத் தர்க்கரீதியில் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுக்கு வர முடிகிறது:

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ""இறுதிப் போர்'' அறிவிப்பு செய்து, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய சிங்கள இராணுவம், பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திப் புலிகளின் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியைக் கைப்பற்றியது.

அடுத்து, புலிகள் பின் நகர்ந்து சென்ற முல்லைத் தீவை முற்றுகையிட்டு, புலிகள் நிலை கொண்டிருந்த புதுக்குடியிருப்பையும்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, July 7, 2009

நோர்வே இலக்கிய சந்திப்பில், ஆறு பாசிச முகமெடுத்தாடிய மகிந்தா

புலத்து இலக்கியச்சந்திப்பு இம்முறை மகிந்தா அரசின் "ஜனநாயகத்" தூண்களின் துணையுடன், அதன் பாசிசப் பல்லவியுடன் தான் அரங்கேறியது. "ஜனநாயகத்தை" புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறும் கூட்டத்தின் கும்மியடிப்புடன் தான், இம்முறை இலக்கியச் சந்திப்பு என்னும் "ஜனநாயகம்" புழுத்தது. மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் "ஜனநாயக பேர்வழிகள்", ஜனநாயகத்தின் பெயரில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் தமக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரி, அதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தையே மறுத்தவர்கள்.

இவை எல்லாவற்றையும் மூடிமறைக்க, அனைத்துக்கும் "ஜனநாயகம்" என்று சொந்த மூகமுடியை முன்னிறுத்துகின்றனர். எல்லாவிதமான மனித விரோதங்களையும் கூட, நாம் ஒன்றாக கூடிப்பேசுவது தான் "ஜனநாயகம்" என்ற நிலைக்குள், ஜனநாயகத்தை தரம் தாழ்த்திவிடுகின்றனர், "ஜனநாயகம்" பற்றி பிரமை பிடித்தவர்கள்.

வர்க்க சமூக அமைப்பில் அதாவது ஆளும் வர்க்கமும் ஆளப்படும் வர்க்கமும் ஒன்றாக கூடி அமர்ந்து ஒன்றாக பேசுவது தான், "ஜனநாயகம்"...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்

மாமரத்து நிழலில்
அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை
கிளையில் கட்டிய ஊஞ்சல்
கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்
வரப்பு வடலியில் கட்டியகுருவிக்கூடு
குண்டகற்று நிபணர்குளாம் துருவி ஆய்கிறது


கொத்திச்சாறி நாற்றுநட்டு களைபிடுங்கி
அருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்புறக்கி
கஞ்சியாக்கியவ............
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, July 5, 2009

ஆதவன் தீட்சண்யா என்ற ஒரு மானுடவிரோதி, அதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றான்

இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.
தங்கள் பிழைப்புவாத எழுத்துக்கு ஏற்ப, சமகால நிகழ்வுகள் பச்சோந்திகளாக வாழ்வதுதான், எழுத்தாளர்களின் தார்மீகமான நிலையென்று நிலைநிறுத்த முனைகின்றனர்.

இப்படிப்பட்டவர் தான் ஆதவன் தீட்சண்யா. இவர் மனு விரோதியல்ல, மானுட விரோதி. இவர் போர்த்தியுள்ள துண்டுக்கு ஏற்ப, "புதுவிசை" இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருப்பவர். இதற்கமைய அவரின் மானுடத்துக்கு எதிரான கோட்பாடு, நடுவீதிக்கு வந்துள்ளது.

இதற்கு தமிழ்நதி எழுப்பிய கேள்வி உதவியது. அவர் கேள்வி "சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன......
..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்