தமிழ் அரங்கம்

Saturday, April 25, 2009

குண்டு வீசி கொன்றவர்கள் போக, தப்பிவந்தவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்க உதவி கோருகின்றது பேரினவாதம்

ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை 'மீட்பின்" பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.

இதற்குள் நடக்கும் இனச்சுத்திகரிப்பு, களையெடுப்பு, வெளிவர முடியாத கொடுமைகள் பல. இதை இந்த பேரினவாத பாசிச அரசு, திட்டமிட்ட தமிழ்மக்களுக்கு எதிராக செய்கின்றது. இதற்கு அவர்கள் இட்ட பெயர் 'மீட்பு" 'மனிதாபிமான நடிவடிக்கை" என்று பல. இதை தொடர்ந்து செய்ய, அவர்கள் உதவி கோருகின்றனர்.

புலம்பெயர் மண்ணில் தன் சொந்த கைக்கூலிகளாக உள்ள அரச எடுபிடிகள் மூலமும், பேரினவாத அரசின் துணையுடன் இயங்கும் 'டான்" தொலைகாட்சி மூலம், தம் சொந்த அரசியல் பித்தலாட்டங்களை முன்வைத்து கோருகின்றது. வணங்கா முடிக் கப்பலைச் சொல்லி புலம்பெயர் நாட்டில் திரட்டியது போல், உள் நாட்டில் மக்களை காட்டி இந்த கொலைகார பாசிச அரசு திரட்டுகின்றது.

இப்படி செய்திக........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்கு திருவோடு

ஜனவரி 26, 2009 அன்று மட்டும் ஏறத்தாழ 85,000 இந்தியத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் கருக்கப்பட்ட அதேநேரத்தில்தான், இந்திய அரசு தனது 60ஆவது ""குடியரசு'' தினத்தை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

இச் சம்பவம் நடந்து பத்துபதினைந்து நாட்கள் கழித்து நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்; பிரணாப் முகர்ஜி, ""உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையிலும் இந்தியா ஏழு சதவீதப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதாக''த் தனது உரையில் பீற்றிக் கொண்டார். இதைக் காணும்பொழுது, ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைதான் நம் நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்புகள் பற்றி கவலைப்படும் மைய அரச, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக வேலையிழப்பு ஒரு சுனாமி போல இந்திய உழைக்கும் மக்களைத் தாக்குவது பற்றி அக்கறை கொள்ள மறுக்கிறது.
...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, April 24, 2009

புலம்பெயர் போராட்டங்களும், அதன் தோல்விகளும்

புலியின் தோல்வி போல் தான், புலம்பெயர் போராட்டங்களும் தோற்கின்றது. இரண்டுக்கும், ஒரே அரசியல் காரணம்தான். இளம்தோழர் ஒருவர் எம்மிடம் இதையொட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர்

"பேரினவாத ஒடுக்குமுறையின் உச்சக்கட்டம் தலைவிரித்தாடும் ஈழப்பிரச்சினையில் அவ்வொடுக்குமுறைக்குள்ளாகும் இனமொன்றின் தேசிய உணர்வென்பது, அதன் தேசியப்போராட்டம் என்பது இயல்பாகவே முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதுதான்.
புலிக்கொடி, தலைவர் வழிபாடு, அப்படங்களையும் கொடிகளையும் வருகிற மக்களின் கையில் திணிக்கும் சிறு கும்பல் போன்றவற்றை விலக்கிப்பார்த்தால், அச்சமின்றியும், கண்ணீரோடும், எதிர்ப்புணர்வோடும் கோபத்தோடும் திரளும் இலட்சக்கணக்கான மக்களின் எதிர்ப்புணர்வென்பது அவ்வளவு இலகுவாக கண்டும் காணாமல் விடப்படக்கூடியதல்ல என்பதுதான்.
புலிகளின் துரோக அரசியலையோ, மக்களுக்கெதிரான அரசியலையோ அறிந்திராத, புதிய புலம்பெயர் தலைமுறை நண்பர்களுடன் தொலை பேசியதில் தம்மை ஒடுக்குமுகமாக, தமது இயக்கமொன்றைத் தடை செய்து, தமது இயக்கத்தின் சின்னங்க...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

திரவியம் தேடிப் போனவர்களின் துயரக் கதை

கொளுத்தியெடுக்கும் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர். சாப்பாட்டுக்குக் கூடப் போதாத தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தாங்கள் அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப்படுவதை எதிர்த்தும் அவர்களது போராட்டம் தொடங்குகிறது.

போராட்டத்தை ஒடுக்கக் கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இராணுவம் வரவழைக்கப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ஹெலிகாப்டரிலிருந்து கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசப்படுகின்றன. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை. முன்னணியாளர்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுகின்றனர்.

பல்லாயிரம் தமிழர்களின் கனவு தேசமாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில்தான் இவையனைத்தும் நடைபெற்றன.............
......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 23, 2009

மாறும் அரசியல் சூழலை உள்வாங்கி எதிர்வினையாற்றுவதே, எமது உடனடியான அரசியல் இலக்காகும்

கடந்தகாலத்தில் கடுமையாகப் புலிகளை விமர்சித்து வந்த நாம், இன்று அதை அரசுக்கு எதிராக செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த அரசியல் நிலைப்பாடு என்பது, உடனடியான அரசியல் இலக்கை இனம் கண்டு கையாளப்படுகின்றது. இந்த வகையில் எமது விமர்சன முறைக்கான அரசியல் அடிப்படை மிகவும் துல்லியமானதும், தெளிவானதுமாகும்.

சமூகத்தை எந்தப் போக்கு ஆதிக்கம் வகித்துக் கொண்டிருந்ததோ, அதற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி நடத்தினோம், நடத்தி வருகின்றோம்.

கடந்தகாலத்தில் புலிகள் தமிழ்மக்களை தம் வலதுசாரிய பாசிசப் பிடிக்குள் கட்டிவைத்திருந்தனர். இந்த நிலையில் மக்கள் முன் அவர்களை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திப் போராடினோம். இது அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, மிகச் ச..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 22, 2009

கத்தி விளிம்பில் நடந்தபடி போராட வேண்டியுள்ளது

மிக நெருக்கடியான சூழலில், தமிழினத்தின் உரிமைக்கான குரலை முன்வைப்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமமாகி வருகின்றது. எம்மைச் சுற்றி பல முனைத் தாக்குதல்கள். எதிர்ப்புரட்சி அரசியல் வீறு கொண்டு நிற்கின்றது. பேரினவாதத்தின் பின் வா என்று, சுற்றி சுற்றி மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

புலியல்லாத அரசியல் தளம் பேரினவாதத்தின் பிரச்சார அமைப்பாகிவிட்டது. மக்களுக்காக யாருமில்லை. பேரினவாதம் தான் மக்களை காப்பாற்றுவதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

இதற்கு எதிரான போராட்டம் என்பது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எம்மைச் சுற்றியுள்ள அரசியல் ரீதியான நண்பர்களுடன் கடுமையான முரண்பாட்டைக் கடக்காமல், இந்த அரசியல் பணியை நாம் முன்னெடுக்கவில்லை. 30 வருட அரசியல் நட்புகள் கூட, இன்று எம்மைச்சுற்றிய அரசியல் நிகழ்வுகளால் அதிருகின்றது. கோபம், பகை, முரண்பாடு, நட்பு என்று எம் உணர்வுகளும், உணர்ச்சிகளும் இன்றி நாம் பயணிக்கவில்லை.

அன்றாட நிகழ்........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தமிழ் மக்களுக்கு எதிரான ஊடக வன்முறையும், மொழி வன்முறையும்

பேரினவாதம் தன் இனவழிப்பை குண்டுகள் மட்டும் போட்டுச் செய்யவில்லை. மொழி மூலமும் அதைச் செய்கின்றது. தமிழினத்தை அழிக்கும் வண்ணம் நடத்துகின்ற யுத்தத்தை, ஏதோ மனித விரோத கும்பலுக்கு எதிராக தாம் நடத்துவதாக காட்டமுனைகின்றது. இதற்கூடாக தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றது. இதற்கு மொழியையும் அது தேர்ந்தெடுத்துள்ளது.

புலிகளை மட்டும் கொடுமையான கொடூரமான ஒன்றாகவும், அதை ஒழிக்க தான் புறப்பட்டுள்ளதாகவும் இது சித்தரிக்கின்றது. இதை தமிழ் இடதுசாரியம் வரை, அது ஏற்க வைத்துள்ளது. இப்படி பேரினவாத ஊடகவியல், தன் இனவொழிப்பு அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இதை தமிழ் ஊடகவியல் அப்படியே வாந்தியெடுக்கின்றது.

நடப்பது இனவொழிப்பு யுத்தம் என்பதை ஏற்றுக் கொள்ளாத தமிழ் ஊடகவியல். புலியெதிர்ப்பு, பேரினவாதத்தை நிலைநாட்டுவதுதான் இன்று.......
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

வங்கதேசத் துணை இராணுவக் கலகமும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள பேரபாயமும்

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று துணை இராணுவப் படையினர் நடத்திய கலகமும், இராணுவ உயரதிகாரிகள் - அவர்களது குடும்பத்தாரோடு சேர்த்து கொல்லப்பட்டிருப்பதும் இந்திய துணைக் கண்டத்து நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதித் திட்டத்தோடு நடந்துள்ள இக்கலகமும் படுகொலைகளும் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அது மீண்டும் நடப்பதற்கான அபாயம் அந்நாட்டைக் கவ்வியுள்ளது.

வங்கதேசத் தலைநகரான டாக்காவில் உள்ள பில்கானா பகுதியில் பங்களாதேஷ் ரைபிள்ஸ் (ஆஈகீ) எனும் துணை இராணுவப் படையின் தலைமையகம் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று அங்கு அப்படையின் ஆண்டு விழாக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அந்த அரங்கைச் சுற்றி வளைத்த சிப்பாய்கள், அப்படையின் தலைமை இயக்குனரான ஷகீல்.............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 21, 2009

இனவழிப்பு யுத்தமா அல்லது அரசு-புலி யுத்தமா நடக்கின்றது!?

அரசியலை துறந்தோடிய எம் சமூகத்தில், புலி-புலியெதிர்ப்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைக்குள் ஒரு இனவழிப்பு அழகாக நியாயப்படுத்தப்படுகின்றது. இதுவொரு இனவழிப்பல்ல, அரசு-புலி என்ற தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த அழிவு யுத்தம் என்று எம்மை அரசியல் ரீதியாக திருத்த முனைகின்றனர். வெட்கக்கேடானதும், மானம் கெட்ட அரசியலாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைக் கண்டுகொள்ளக் கூடாது. இந்த அழிவை மௌனமாக அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர். சிங்களப் பேரினவாதத்தின் தமிழினம் மீதான ஒடுக்குமுறையின் தொடர்ச்சியில் ஒரு அங்கம் தான் இது என்பதை, மறுக்கின்றனர். எல்லா புலியெதிர்ப்பு அரசியலும் போல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை விடுதலைப் புலிகளின் அழிவின் ஊடாக பார்க்கின்றனர்.

விடுதலைப்புலிகள் அழிந்தால் நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்கின்றனர். இதற்காக அவர்கள் வைக்கும் காரணங்கள் வேறுபட்ட போதும், விடுதலைப்புலிகளின் அரசியல் அழிவை தம் சொந்த அரசியல் முன்னெடுப்புகள் ஊடாக முன்னெடுக்கவில்லை. இன்று பேரினவாதம் தன் இனவழிப்பின் ஒரு அங்கமாக, அதற்கு தடையாக இருந்த புலிகளை அழிக்கின்றனர். இப்படி தம் சொந்த அரசியல் நெருக்கடியில் சிக்கிய புலிகளிடம், ஆயுதத்தை கையளிக்கவும் சரணடையவும் கோருகின்ற அரசியல் முன்வைக்கப்படுகின்றது. இதன் மறுபக்கத்தில் புலிகளே இந்தத் ஒரு துரோகத்துக்கான அரசியல் பேரங்களை ஏகாதிபத்தியங்கள் ஊடாக நடத்துகின்றனர்.

மொத்தத்தில் ஒ......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இனப்படுகொலையை...

காலாகாலமாக ஒரு இனத்தை ஒடுக்கி, உரிமைகளை மறுத்த அரசு, இன்று ஒரு இனப்படுகொலையை நடத்துகின்றது. காலகாலமாக எந்தனையோ இனவழிப்புக்களை நடத்தியவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்கின்றனர்.

அந்த மக்களின் மண்ணில் வைத்து, அதுவும் அரசு தானாக அறிவித்த யுத்த சூனிய பிரதேசத்தில் வைத்து, இவை அனைத்தும் அரங்கேறுகின்றது. தமிழினம் மீது நடத்திய இன ஆக்கிரமிப்பு யுத்தம் மூலம், தமிழினம் மீதான மனித அவலத்தை அரங்கேறுகின்றனர். இவை அனைத்தும் புலிகளின் பெயரில் நியாயப்படுத்தப்படுகின்றது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 20, 2009

பேரினவாதம் நடத்திய இனவழிப்பு, இன்று பாரிய மனிதப் படுகொலையாகி வருகின்றது

காலாகாலமாக ஒரு இனத்தை ஒடுக்கி, உரிமைகளை மறுத்த அரசு, இன்று ஒரு இனப்படுகொலையை நடத்துகின்றது. காலகாலமாக எந்தனையோ இனவழிப்புக்களை நடத்தியவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்கின்றனர்.

அந்த மக்களின் மண்ணில் வைத்து, அதுவும் அரசு தானாக அறிவித்த யுத்த சூனிய பிரதேசத்தில் வைத்து, இவை அனைத்தும் அரங்கேறுகின்றது. தமிழினம் மீது நடத்திய இன ஆக்கிரமிப்பு யுத்தம் மூலம், தமிழினம் மீதான மனித அவலத்தை அரங்கேறுகின்றனர். இவை அனைத்தும் புலிகளின் பெயரில் நியாயப்படுத்தப்படுகின்றது.
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

எமது போராட்டம் தமிழ் மக்களின் எதிரிக்கு எதிரானதே ஒழிய, புலிக்கு எதிரானதல்ல

இல்லை புலிக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் தான், அரசியல் ரீதியாக திசை விலகுகின்றனர். புலியுடனான எமது போராட்டம், எதிரிக்கு எதிரான எமது போராட்டத்தை நடத்தும் அரசியல் உரிமைக்கான ஒன்றுதான். அது வர்க்க அடிப்படையில், அரசியல் ரீதியானது. நாம் எமது சொந்த வர்க்க தேசிய போராட்டத்தை நடத்தவிடாமல், புலிகள் எமக்கு தடைகளை ஏற்படுத்தினர், ஏற்படுத்துகின்றனர்.

இதற்குள் தான் எமது போராட்டமும், அரசியல் நிலைப்பாடுகளும் உள்ளடங்குகின்றது. இலங்கை மக்களின் பிரதான எதிரி அரசே ஒழிய, புலிகளல்ல. ஆனால் புலியல்லாத தரப்பில் எத்தனை பேர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்!? என்பது, இன்று அடிப்படையான அரசியல் கேள்வியாகியுள்ளது.

தமிழ்மக்களை விடுதலைப் புலிகள் கட்டிப்போட்டு நடத்திய அரசியலால், அதுவே தமிழ் மக்களின் பிரச்சனையாக பொதுவாகப் பார்க்கப்பட்டது. புலிகளுக்கு வெளியில் மாற்று அரசியல் தளம், அரசியல் ரீதியாக புலிகளால் முடக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக போராடியவர்கள் புலிகளை தமது முதன்மையான இலக்காக கொண்டது தவறல்ல.
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இனவழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இனக் களையெடுப்புக்கு உள்ளாகும் தமிழினம்

இலங்கையில் இன்று தமிழினம் எதையும் பேச முடியாது, எழுத முடியாது, எந்த உரிமையையும் கோரமுடியாது. புல்லுருவிகளும், எட்டப்பர்களும், பதவி வேட்டைக்காரர்களுக்கு மட்டும், பேசும் உரிமையும், கருத்துச் சொல்லும் உரிமையும் உண்டு.

இதுவே இன்று தமிழரின் உரிமையாகிவிட்டது. முன்பு புலிகளுக்கு மட்டுமே, புலிப் புராணம் பாடும் உரிமை இருந்தது. இன்று பேரினவாதப் புரணம் மட்டும் தான் பாடமுடியும். தமிழ் மக்களின் கதி இது. இன்று இலங்கை முழுக்க பேரினவாத பாசிசத்தின் கீழ், தமிழினம் அடங்கியொடுங்கி இருக்கும் வண்ணம், பாசிசம் மேலெழுந்து நிற்கின்றது. யாரும் இங்கு மக்களின் உரிமைபற்றி பேசமுடியாது.

ஆனால் இந்த விடையம், அரசியல் விழிப்புணர்வு இன்றி காணப்படுகின்றது. தமிழ் ஊடகவியல் புலியாக இருப்பதாலும், புலிப் பாசிசத்தை பெரும்பான்மை நியாயப்படுத்துவதாலும், புலிகள் மீதான விமர்சனமும் கவனமும் குவிவது இயற்கை. இதை முறியடிக்கும் கருத்து மையப்படுகின்றது. மறுதளத்தில் அரசுடன் நிற்கும் புலியெதிர்ப்பு கும்பலின் பிரச்சாரம், அரசின் பாசிசத்தை பாதுகாக்கும் வண்ணம் விரிவாக நிகழ்ந்து வருகின்றது. இதை முறியடிக்கும் வண்ணம், இதை அம்பலம் செய்வது, இன்று அவசரமான அவசியமான அரசியல் பணியாக எம்முன்னுள்ளது.

இந்த நிலையில் தான் இ............
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 19, 2009

இலங்கையின் முதன்மைப் பிரச்சினை புலிப் பாசிசமா?

இதை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது. சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் தேனீ மற்றும் ரீ.பீ.சீயில் சிவப்பு கம்பளம் விரித்து, புலியெதிர்ப்பு அரசியலை விபச்சாரம் செய்தவர்கள் தான் இவர்கள். திடீரென்று அதில் இருந்து பிரிந்து, புதிய புலியெதிர்ப்பு அணியாகவே மறுபடியும் வந்துள்ளனர்.

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விபச்சாரத்தை கைவிட்டு ஓடவெளிக்கிட்டவர்கள், கையில் கிடைத்த சிவப்பு துணியை போர்த்திய படி ஓடி வந்தனர். மறுபடியும் மிக மோசமான அப்பட்டமான பேரினவாதிகள் தான் நாங்கள் என்பதை அடித்துக் கூறுகின்றனர். இதை சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளனர். வெட்கக்கேடான ஆபாசமாக சிவப்பு சாயம் அடித்த இவர்களின் அரசியல் படி, தமிழ் மக்களுக்கு என்று தனித்துவமான அரசியல் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என்பதே இவர்களின் அரசியலாகும். பேரினவாதம் என்பது கற்பனையானது. அ..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ராஜபக்சவுக்கு மாமா வேலை பார்க்கும் 'ஊடகவியலாளர்கள்"

வல்லவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள், முன் கை எடுக்கும் திறமைசாலிகள் என்று, பேரினவாத பாசிச அரசு இயந்திரத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர் 'ஊடகவியலாளர்கள்" வேடம் போட்ட புலியெதிர்ப்பு புதுக் கும்பல். தமிழினத்தை இனப்படுகொலையாகவே அரங்கேற்றும் கொலைகார இராணுவ இயந்திரத்திற்கு, மனித முகம் கொடுக்க முனைகின்றனர் புலம்பெயர் மாமாக்கள்.

தங்களைத் தாம் 'நடுநிலைவாதிகளாக", 'அரசியலற்றவர்களாக" 'மனிதாபிமானிகளாக" 'ஊடகவியலாளர்களாக" என்ற பல மூகமுடிகளைப் போட்டுக்கொண்டு தான், இந்த பாசிசக் கூத்தை ஊடகவியலாளர்கள் ஊடாக அரங்கேற்றுகின்றனர். இப்படி மகிந்தாவின் பிசாசுகள், இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் வெளிப்படையாக உலாவத் தொடங்கியுள்ளனர்.

மகிந்தாவின் 'மனிதமுகப்" பாசிசம் உருவாக்கியுள்ள நவீனமாக வதைக்கும் அகதி முகாங்களை காட்டி, குறைபாடுகள் இருந்தாலும் அவை மனிதத்தன்மை கொண்டவை என்கின்றனர். அகதி முகாங்களில் சிக்கியுள்ள மக்களைக் காட்டி, ஓப்புக்கு ஐயோ மக்கள் என்கின்றனர். புலம்பெயர் தமிழர்களே, உதவுகள் என்கின்றனர். புலி எடுபிடிகள் நடத்தும் 'வணங்காமுடி" மோ
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

சி.பி.எம்.க்குள் ஒளிந்திருக்கும் மோடியின் ரசிகர்கள்

இந்துவெறி பாசிச பயங்கரவாத மோடிக்கு புதிய ஆதரவாளர் கிடைத்திருக்கிறார். தொழில் வளர்ச்சியைச் சாதிக்க, மோடியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உபதேசித்திருக்கிறார். இவர் இந்துவெறி பா.ஜ.க.வைச் சேர்ந்தவரல்ல; மோடியின் தாராள சலுகைகளால் ஆதாயமடைந்த தரகுப் பெருமுதலாளியுமல்ல.


மதச்சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்பு என்றெல்லாம் வாய்ச்சவடால் அடிக்கும் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்தான் இவர். கேரளாவின் கண்ணனூர் தொகுதியிலிருந்து சி.பி.எம்.கட்சி சார்பில் தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் அப்துல்லா குட்டி என்பவர்தான், மோடிக்குக் கிடைத்துள்ள இப்புதிய ஆதரவாளர்.

கடந்த ஜனவரியில் துபாயில், இந்தியா ஊடக அரங்கம் என்ற அமைப்பின் சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய அப்துல்லா குட்டி, ""தொழில் வளர்ச்சியைச் சாதித்து வரும் குஜராத் முதல்வர் மோடிக்கு முழு மதிப்பெண் தரவேண்டும். தொழில் வளர்ச்சிக்குத் தலைமை தாங்குவதில் அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பகமான ந..............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்