தமிழ் அரங்கம்

Saturday, June 23, 2007

குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!

குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!

குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்தபொழுது, போலீசாரோடு நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு துறையைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் அறிவித்தனர்.

""சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும்; அவரது மனைவி கவுசர்பீ காணாமல் போனது பற்றியும் மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்'' எனக் கோரி, சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், உச்சநீதி மன்றத்திற்குக் கடிதமொன்று எழுதினார். அக்கடிதத்தைப் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையைப் பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இம்மோதலைப் புலனாய்வு செய்த கீதா ஜோஹ்ரி என்ற அதிகாரி, ""இது போலி மோதல் கொலையாக இருக்கலாம்'' என அறிக்கை அளித்தார். இப்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ""சோராபுதீன் போலி மோதலில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மனைவி கவுசர்பீயும் கொல்லப்பட்டு, அவரது சடலம் இரகசியமாக எரிக்கப்பட்டு விட்டதாக'' குஜராத் அரசே உச்சநீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என். தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்; ஆய்வாளர் என்.ஹெச்.தாபி, காவலர் சாந்தாராம் ஷர்மா; போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியனின் தனி உதவியாளர் அஜய் பர்மர் உள்ளிட்டு ஆறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
""ஹைதராபாத் நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்குத் தனது மனைவி கவுசர்பீ, தனது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரோடு பயணம் செய்து கொண்டிருந்த சோராபுதீன் வழி மறிக்கப்பட்டு, நவம்பர் 22, 2005 அன்று நள்ளிரவில் போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் சென்ற குஜராத் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் கடத்தப்பட்டது தொடங்கி, நவம்பர் 26, 2005 அன்று அகமதாபாத் நகரில் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையால் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது வரை அனைத்தையும்'' போலி மோதல் கொலையில் பங்கு கொண்ட காவலர் அஜர் பர்மர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

சோராபுதீன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மனைவி கவுசர்பீ, பா.ஜ.க.வின் அகமதாபாத் நகர கவுன்சிலர் சுரேந்திரா ஜிராவாலாவுக்குச் சொந்தமான பங்களாவில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, நவ. 28, 2005 அன்று அதே பங்களாவில் கொல்லப்பட்டு, பிறகு அவரது சடலம், (இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி) வன்சாராவின் சொந்த கிராமமான இலோலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இரகசியமாக எரிக்கப்பட்டதை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு போலீசு படையைச் சேர்ந்த ஓட்டுநர் நாதுசிங் ஜடேஜா வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

மேலும், கடத்தி வரப்பட்ட சோராபுதீன் கவுசர்பீ தம்பதியினரைத் தனியார் பண்ணை வீட்டில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதற்கு உதவிய சதீஷ்பாய் ராம்ஜிபாய் ஷர்மா; கவுசர்பீயின் சடலத்தை எரிப்பதற்குத் தேவையான விறகினை போலீசுக்கு விற்ற பகவதி டிம்பர் மார்ட் என்ற நிறுவனத்தின் அதிபர்; கவுசர்பீயின் சடலம் எரிப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டபொழுது, சகதியில் சிக்கிக் கொண்ட வாகனத்தை மீட்பதற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட கிரேன் இயக்குநர் ஆகியோரும் கவுசர்பீயின் கொலை தொடர்பாகச் சாட்சியம் அளித்துள்ளனர்.
சோராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கு, கவுசர்பீ வலுவான சாட்சியமாக இருந்திருக்கிறார். குஜராத் போலீசார், இந்த வலுவான சாட்சியத்தைக் கலைப்பதற்காகவே, ""பணம் தருகிறோம்; பாகிஸ்தானுக்கு ஓடி விடு'' என கவுசர்பீயிடம் பேரம் நடத்தியுள்ளனர். அதற்கு கவுசர்பீ ஒத்துக் கொள்ளாததால்தான், அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, அதற்குப் பின் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இம்மோதல் கொலையின் மற்றொரு சாட்சியான துளசிராம் பிரஜாபதி, இராசஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ரோந்து போலீசாரால், டிச.26, 2006 அன்று குஜராத் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான பனசகந்தாவில் உள்ள அம்பாஜி நகரில் நடந்த ""மோதலில்'' சுட்டுக் கொல்லப்பட்டார்.

சோராபுதீனைச் சுட்டுக் கொன்ற போலீசு படைக்குத் தலைமை தாங்கிய வன்சாரா, குஜராத் மாநில எல்லைப்புற போலீசு பிரிவின் போலீசு இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது வாரத்திலேயே, பிரஜாபதி அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியில் நடந்த "மோதலில்' சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும்; இம்மோதல் சோராபுதீன் கொலை பற்றிய விசாரணை ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சோராபுதீன் கொலையின் மற்றொரு சாட்சியான சில்வஸ்டர் டானியல் கிறிஸ்டியன், பிரஜாபதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ""காணாமல்'' போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
சோராபுதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா ஒருபுறம் அழித்துக் கொண்டிருந்த பொழுது, இன்னொரு புறம் குஜராத் அரசின் உள்துறை அமைச்சகம் கொலை தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது.

உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையை விசாரிக்குமாறு சனவரி 21,2006 அன்று குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசு உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்திய உள்துறை துணை அமைச்சர் அமித் ஷா, ""கவுசர்பீ, சோராபுதீனின் சட்டபூர்வ மனைவி கிடையாது; கவுசர்பீ பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தானுக்குத் தப்பியோடியிருக்கலாம்'' என அண்டப்புளுகை அவிழ்த்து விட்டார். உச்சநீதி மன்ற உத்தரவு வந்து ஆறு மாதங்கள் கழித்துதான், இம்மோதல் கொலை பற்றிய விசாரணை அதிகாரியாக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார்.
""இது போலி மோதல் படுகொலை'' என அவர் அளித்த முதல் அறிக்கையை, உச்சநீதி மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்காமல், குஜராத் அரசு காலதாமதப்படுத்தியது. விசாரணை தொடர்பாக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த கீதா ஜோஹ்ரிக்கு, அந்நகருக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் குற்றவாளிகளென கீதா ஜோஹ்ரி முடிவு செய்து அறிக்கை கொடுத்த பிறகு, அக்குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது என கீதா ஜோஹ்ரிக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டது.

இறுதியாக, விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன், கீதா ஜோஹ்ரிக்குப் பதிலாக அவரின் ""எதிரி'' ரஜ்னிஷ் ராய் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ரஜ்னிஷ் ராய் அம்மூன்று அதிகாரிகளைக் கைது செய்ததோடு, அவர்களை உண்மை அறியும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்தார். இதே சமயத்தில், ""கீதா ஜோஹ்ரி ஏன் மாற்றப்பட்டார்?'' என உச்சநீதி மன்றம் கேட்டதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குஜராத் அரசு, ரஜ்னிஷ் ராயைத் தூக்கியடித்துவிட்டு, கீதா ஜோஹ்ரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்தது. எனினும், கீதா ஜோஹ்ரி தன்னிச்சையாகப் செயல்படுவதைத் தடுப்பதற்காக, அவருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, குஜராத் அரசு.

குஜராத் மாநில காங்கிரசு கமிட்டியின் தலைவர் பரத்சிங் சோலங்கி, ""ராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்பில் கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலாளிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்த சோராபுதீனைப் போட்டுத் தள்ள அவர்கள் விரும்பியதாகவும்; அதற்கான பேரம், பா.ஜ.க. தலைவர்கள் மூலம் வன்சாராவிடம் நடந்ததாகவும்; இதற்காக 60 இலட்ச ரூபாய் பணம் கைமாறியதாகவும்'' குற்றஞ் சுமத்தியிருக்கிறார். குஜராத் மாநில போலீசு இந்தப் பின்னணி பற்றி விசாரணை நடத்தவேயில்லை.

···

இது போன்ற மர்மம் நிறைந்த ""தேச பக்த கொலைகள்'' இந்து ராஷ்டிரமான குஜராத்தில் இரண்டு மாதத்திற்கு ஒன்று நடப்பதாகவும்; நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான போலீசு அதிகாரியான வன்சாரா 9 மோதல் கொலைகளை நடத்தி, 15 பேரைக் கொன்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், அக். 22, 2002 அன்று சமீர்கான் என்ற முசுலீம் இளைஞர் குஜராத் மாநில குற்றப் பிரிவு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாரா தலைமையில் நடந்த இம்மோதல் படுகொலை, மோடியின் அரசியல் பயணத்தில் முக்கியமான ஒன்று.

""சமீர்கான் ஜெய்ஷ்இமுகம்மது என்ற பாக். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்; பாக்.இல் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவன்; நரேந்திர மோடியைக் கொல்லவே குஜராத்திற்குள் நுழைந்திருக்கிறான்'' என வன்சாரா சமீர்கானைச் சுட்டுக் கொன்ற பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. நரேந்திர மோடி, ""குஜராத் பெருமையைக் காப்பாற்ற உழைக்கும் என்னை முசுலீம் ஜிஹாதிகள் குறி வைக்கிறார்கள்'' எனக் கூறி, இம்மோதலைத் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார்.

இம்மோதல் படுகொலையை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம், ""சமீர்கான் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரோ, பாக்.இல் தீவிரவாதப் பயிற்சி பெற்றவரோ கிடையாது'' எனத் தீர்ப்பளித்தது. இப்படுகொலையை மோதலாகக் காட்ட முதலமைச்சர் அலுவலகமும், போலீசு அதிகாரிகளும் இணைந்து பல மோசடிகள் நடத்தியிருப்பதை, ஐ.கே.யாதவ், தீர்த் ராஜ் என்ற இரு உயர் போலீசு அதிகாரிகளே தங்களின் விசாரணையில் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் நகரின் நுழைவாயில் பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன் உள்ளிட்டு நான்கு முசுலீம்கள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவும், மோடியின் உயிரை ""தீவிரவாதிகளிடமிருந்து'' காப்பாற்ற, வன்சாரா நடத்திய மோதல்தான். இம்மோதல் கொலை பற்றி தேசிய மனித உரிமைக் கமிசன் குஜராத் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், ""இம்மோதல் பற்றி போலீசார் விவரித்துள்ளதில் கடுகளவுகூட அடிப்படை ஆதாரம் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது.

பி.ஜி. வர்கீஸ் என்ற பத்திரிகையாளர், ""குஜராத்தில் 2003க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த 21 மோதல் படுகொலை பற்றி முறையாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ""இந்த 21 மோதல் படுகொலைகளில் ஒன்றில் கூடப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூடக் கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை'' என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

···

சோராபுதீன் கொலையை இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு நியாயப்படுத்தி வரும் இந்து மதவெறிக் கும்பல், இன்னொருபுறம், ""மற்ற மாநிலங்களில் போலி மோதல் கொலைகளே நடப்பதில்லையா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து விட்டது.
""மோதல்'' கொலைகளின் மூலம்தான் தீவிரவாதிகளை ஒழிக்க முடியும் என்ற பொதுக் கருத்தை, ஓட்டுக் கட்சிகளும், போலீசு அதிகாரிகளும், பத்திரிக்கைகளும் இணைந்து உருவாக்கி வருகின்றன. மேலும், ""தீவிரவாதி யார்?'' என்ற கேள்விக்கு, வலதுசாரி பா.ஜ.க. தொடங்கி இடதுசாரி போலி கம்யூனிஸ்டுகள் வரை, அனைத்து ஓட்டுக் கட்சிகளின் பதிலும் ஒன்றுதான்.
அதனால்தான், காங்கிரசாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் சோராபுதீன் கொலையை நியாயப்படுத்தும் மோடியின் ""தேச பக்த'' அரசியலை எதிர்த்து நிற்க முடியவில்லை. ""சோராபுதீன் கொலையை சி.பி.ஐ. விசாரிக்கத் தேவையில்லை'' என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டதால், காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் மூக்கறுந்து போய் நிற்கிறார்கள் என்பதே உண்மை.

மோதல் கொலைகள், தடா, பொடா போன்ற அரசு பயங்கரவாதத்தையும், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால், ""நக்சல்பாரிகள், தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள், முசுலீம்கள் இவர்கள்தான் தீவிரவாதிகள்'' என இந்திய ஆளும் கும்பல் உருவாக்கி வைத்துள்ள கருத்தை முதலில் அடியோடு புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால், மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதையும், வன்சாரா போன்ற காக்கிச் சட்டை கொலைகாரர்கள் ""ஹீரோ''க்களாக வலம் வருவதையும் தடுக்க முடியாது.· குப்பன்

வெனிசூலாவின் போர்ப்பிரகடனம்!

வெனிசூலாவின் போர்ப்பிரகடனம்!


ரண்டாவது முறையாக தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபராகப் பதவி யேற்ற ஹீயுகோ சாவேஸ், இவ்வாண்டு மே தினத்திற்குள் நாட்டின் முக்கியத் தொழிற் துறைகளை நாட்டுடைமையாக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் வகையில் அரசியல் சாசனத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தார்.



இந்த மே நாளன்று நடைபெற்ற தொழிலாளர்கள் பேரணியில் உரையாற்றிய சாவேஸ், ஒரினோகோ எண்ணெய்ப் படுகையில் இருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சொந்தமான முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நாட்டுடைமையாக்கும் முடிவை வெளியிட்டிருக்கிறார். இந்நிறுவனங்களில்

பன்னாட்டு முதலாளிகளின் பங்குகள் சிறுபான்மையாகக் குறைக்கப்பட்டிருக் கின்றன. விலக விரும்புகிறவர்களுக்கு பழைய மதிப்பீட்டின்படி நட்ட ஈடு வழங்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி, ஐ.எம்.எப் போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக்கொள்வதாகவும் வெனிசூலா அறிவித்திருக்கிறது. இந்நிறுவனங்களை இனிமேலும் விட்டுவைத்தால் வெனிசூலாவைச் சூறையாடி விடுவார்கள் என்றும், இதுநாள் வரை அவர்கள் வெனிசுலாவிலிருந்து சுருட்டியதை திரும்பத் தரவேண்டும் என்றும் தேசியத் தொலைக்காட்சியில் முழங்கியிருக்கிறார் சாவேஸ்.



மேலும் மின்சாரம் தொலைபேசித்துறை போன்றவையும் நாட்டுடைமையாக்கப்பட இருக்கின்றன. உள்நாட்டுத் தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்குப் பன்னாட்டு வங்கிகள் மறுத்தால், அவையும் வெளியேற வேண்டி வரும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. வெனிசூலாவின் இரும்புச் சுரங்கங்களைத் தம் பிடியில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், வெட்டி யெடுக்கும் இரும்பு அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமக்குத் தேவையான இரும்பு எஃகுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை நிலவுகிறது. உற்பத்தியாகும் இரும்பை உள் நாட்டில் விற்க மறுத்தால், இரும்புக் கம்பெனிகளும் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் சாவேஸ்.



ஒடுக்கப்பட்ட நாடுகளைக் கேட்பாரின்றிச் சுரண்டி வரும் பன்னாட்டு முதலாளி கள் வெனிசூலாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். அமெரிக்க அதிபர் புஷ்ஷும், ஏகாதிபத்திய ஊடகங்களும் சாவேஸை சர்வாதிகாரி யென்றும், வெனிசூலாவில் ஜனநாயகம் இல்லையென்றும் ஏற்கெனவே அவதூறுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இனி அத்தகைய கூச்சலும் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளும் தீவிரமடையும் என்பதில் ஐயமில்லை.



90களிலேயே புதிய தாராளவாதக் கொள்ளைக்குப் பலியாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில், அவற்றுக்கு எதிராக மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த பல போராட்டங்களின் ஒரு விளைவுதான் சாவேஸ். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை அரசுகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், திவாலான பொருளாதாரங்கள், உணவுக் கலகங்கள்.. என்பவைதான் 90களில் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தின் வரலாறு. வெனிசூலாவின் அரசு ஒரு கம்யூனிஸ்டு அரசு அல்ல என்ற போதிலும், சாவேஸின் நடவடிக்கைகள் முழு நிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்ற போதிலும் தனது நடவடிக்கைகளின் மூலம், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் உலக மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார் சாவேஸ்.



பொதுத்துறைகளையும், காடுகளையும், கனிவளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குவதன் விளைவு முன்னேற்றமல்ல, பேரழிவுதான் என்பதற்கு வெனிசூலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் கடந்த கால வரலாறு ஒரு பாடம். ""இன்றைய உலக நிலைமைகளில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் தவிர்க்கவியலாதவை'' என்று கூறி நந்திக்கிராமத்தையும் சிங்குரையும் நியாயப்படுத்தும் மார்க்சிஸ்டுகளுக்கோ, சாவேஸின் நடவடிக்கைகள் ஒரு சாட்டையடி. தனியார்மய தாராளமயக் கொள்கைகள் வெல்லப்பட முடியாதவை என்றும் அவற்றின் முன் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆளும் வர்க்கங்களும் போலி கம்யூனிஸ்டுகளும் செய்து வரும் பொய்ப்பிரச்சாரத்தைத் தனது நடவடிக்கைகளின் மூலம் பொய்ப்பித்திருக்கிறார் சாவேஸ்.



உலக முதலாளித்துவம் வெல்லப்பட முடியாதது அல்ல. இறையாண்மைக்கும் சுயசார்புக்கும் சோசலிசத்துக்குமான போராட்டங்கள் மென்மேலும் தீவிரமடையுமே யன்றித் தணிந்து விடாது என்ற உண்மையையும் வெனிசூலா நிரூபித்திருக்கிறது.











Friday, June 22, 2007

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

பி.இரயாகரன்
22.06.2007


பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.


பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே. பொதுவாக பெரும்பாலான பெண்களால் இப்படி நினைப்பதும், கூறுப்படுவதும், அன்றாட எதிர்வினையாகின்றது. இது வரையறுக்கப்பட்ட தெளிவான ஒரு சமூக அடிப்படையைக் கொண்டதல்ல. பூர்சுவா மன இயல்பில் ஏற்படும் அன்றாட தடுமாற்றங்கள் இவை. பெண்கள் தமக்குள் கொண்டுள்ள இந்த உரையாடல் சார்ந்த உணர்வே, பல குடும்பங்களின் மகிழ்ச்சியை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


மற்றைய வீட்டில் உள்ளவர்கள் போல், பரஸ்பர கற்பனைகளை கட்டிக்கொண்டு சதா புலம்புகின்றனர். அந்த மற்றைய வீட்டிலும் இதே பல்லவியும், இதேநிலையும் தான். மற்றைய வீட்டில் நகை வாங்கினால் அதைப்போல் அல்லது அதைவிட உயர்வாக வாங்குவது, மற்றைய வீட்டார் ஒன்றைச் செய்தால் அதையே செய்வது, என்ற குறுகிய மனவியல்புகள், பெரும்பாலான பெண்களின் நிலையே இதுவென்றால், சிறியளவில் ஆண்களின் நிலையும் இதுதான். இணக்கமற்ற குடும்பங்கள் இதனடிப்படையில் உருவாகின்றது. தனது கணவன் பற்றி அல்லது மனைவி பற்றி, ஒப்பிட்டு இழிவை தமக்குள் தாமே உருவாக்குகின்றனர். தாழ்வுமனப்பான்மை கொள்கின்றனர். மற்றவர் எப்படி உள்ளனரோ அப்படி இருத்தல் பற்றி பொய்யான கற்பனையும், அது சார்ந்த பிரமைகளையும் தம்மைச் சுற்றி பரிவட்டமாக கட்டிவிடுகின்றனர். இப்படி மன உழைச்சலையும், திருப்தியற்ற வாழ்க்கை சார்ந்த உணர்வையும், தம்மைச் சுற்றி உருவாக்கிவிடுன்றனர். கற்பனை வாழ்க்கை, போலியான மனப்பாங்கை சிருஸ்ட்டிகின்றது.


சினிமாவில் நடத்தும் போலி நடிப்பை, வாழ்வின் உண்மையான அம்சமாக நம்பி அதுவாக மோசம் போகின்றனர். இது இயல்பில் மற்றவருக்கும் மோசம் செய்வதாகின்றது. சினிமா சார்ந்த கதாநாயக(கி) நினைப்பில், பிரிட்டிஸ் ராணிகளின் நினைப்பில் முத்தி, அதுவாக வாழ நினைக்கின்றனர். அங்கு காணப்படுவது போலியான நடிப்பு என்பதை காண்பதில்லை. தம்மைத் தாம் இப்பாத்திரங்களாக உருவகித்துக் கொண்டு வாழமுனைந்து கிடைக்கும் வாழ்வின் தோல்விகள், மீண்டும் மனவுழைச்சலை புகைச்சலைத் தருகின்றது. உண்மையில் கிடைத்த வாழ்வை மகிழ்ச்சியாக வாழத் தெரியாது, அதை துயரத்திலாழ்த்துகின்றனர். அந்தரத்தில் அங்குமிங்குமாக பொறுக்கும் நிலையற்ற வாழ்வியல் முறைகளால். எங்கும் வீங்கி வெம்பும் தனிமனித சீரழிவுகளையே வாழ்க்கையாக கற்பிக்கின்றனர். குடும்பத்தின் இணங்கி வாழும் சமூக கூறுகளையே, நஞ்சிட்டு அழிக்கின்றனர்.


இதில் இருந்து புலம்பெயர் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள் சற்று வேறுபட்டு, மேலும் கூர்மையடைகின்றது. வலதுசாரிய தமிழ் சமூகத்தினதும், அதன் அரசியல் தலைமையினதும் மொத்த விளைவால், இது மேலும் கூர்மையாகி நிற்கின்றது. குறைந்தபட்சம் இரண்டு தலைமுறையாவது தனது வாழ்க்கையை இதற்குள் தொலைத்து நிற்கின்றது.


வாழ்வியல் பிரச்சனைகள் ஏன் ஏப்படி உருவாகின்றது என்பதைக் கூட தெரிந்துகொள்ள முடியாத விட்டில் ப+ச்சியாகி அதில் வீழ்ந்து மடிகின்றனர். இதற்கு தீர்வு அடங்கிப் போதல் அல்லது வன்முறை மூலம் விடைகாணல் என்பதே பொதுவான வழியாக உள்ளது. இதைத்தான் தமிழ் தேசிய அரசியல் வழிகாட்டுகின்றது. பொதுவாக தமிழ் சமூகத்தின் இன்றைய நிலை என்பது, வன்முறையும் அதற்கு அடங்கிப் போதலுமே தீர்வாக உள்ளது. இதுவே குடும்பத்திலும் கையாளப்படுகின்றது. ஆணாதிக்க சமூகத் தன்மைக்கு வெளியில், இதைக் கையாளுவதில் ஆண் பெண் வேறுபாடு கிடையாது. ஒரு விடையத்தை பேசித் தீர்த்தல், விவாதித்தல் என்பது அறவே கிடையாது. மொழி வன்முறை (பெருமளவில் பெண்கள்) பொதுவாக குடும்பத்தின் உச்சத்தில் உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்பால், குழந்தைகள் மேல் கையாளும் மொழியில், இதை நீங்கள் இலகுவாக உணரமுடியும். இதன் விளைவே உடல் வன்முறையாக மாறுகின்றது.


குழந்தைக்கு விடையத்தை விளங்கப்படுத்துவதற்கு பதில், வன்முறையான மொழியாடல் மூலம் எதையும் சாதிக்க நினைக்கின்ற போக்கு, பொதுவாக அநேக குடும்பத்தில் காணப்படுகின்றது. இதன் பின் இருப்பது எதுமற்ற அலட்சியம், வெறுப்பு, சீற்றம், புறுபுறுப்பும் கோபமுமே. உண்மையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற வாழ்க்கைக்கே, தம்மை அறியாது நஞ்சிடுகின்றனர். தனக்கு எதிரான வெறுப்பை, தமது இணக்கமற்ற நடத்தை மூலம் சாதிக்கின்றனர். மகிழ்ச்சியை தொலைத்தபடி தொல்லைப்டுகின்றனர். சதா மற்றவர் மீது பிழை கண்டுபிடித்தல் மூலம், எதிரியை குடும்பத்தினுள் உருவாக்கி வைத்துக்கொள்கின்றனர். இதில் விட்டுக்கொடுப்பற்ற அடாவடித்தனமான மொழி வன்முறை மூலம் தான், அனைத்து உரையாடலும் நடத்தப்படுகின்றது. இந்த மொழி வன்முறை சார்ந்த உணர்வும் உணர்ச்சியும் வெளிப்படுத்தும் எல்லையென்பது, எல்லா விடையத்துக்கும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. கடுமையானதும், மென்மையானதும் என்ற எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை. கற்றல், கற்பித்தல், உண்ணல், வீட்டை ஒழுங்குபடுத்தல், பிள்ளையின் நடத்தை என எதுவாக இருந்தாலும், மொழி வன்முறை மூலமே பதிலளிக்கப்படுகின்றது. அந்த உணர்வில் உணர்சியில் எந்த மாறுபாடும் கிடையாது. உணர்ச்சியை இழந்த அதிகாரமே வீட்டின் சொந்த மொழியாகின்றது.


அநேகமான புலம்பெயர் குடும்பத்தில் இதுவே நடக்கின்றது. ஆண்களில் சிறிய பகுதியும், பெண்களில் பெரும் பகுதியும் இப்படித்தான் குடும்பத்தை நிர்வகிக்கின்றனர். ஆண் பெண் உறவிலும் கூட இந்த மொழி சார்ந்த உரையாடல்தான் பொதுவாக காணப்படுகின்றது.


இப்படி அணுகுமுறையின் விளைவு என்பது பயங்கரமானது. தான் அல்லாத மற்றைய உறவுகளுடன் சதா முரண்பட்டு, தான் தனிமையில் தனித்து வாழ்கின்ற நிலை உருவாகின்றது. உண்மையில் தனிமைவாதத்திலும், சூனியவாதத்திலும் மூழ்கிவிடுவதும், அதற்குள் தீர்வுகளை காண்பதுமாக, உலகம் மிகக் குறுகியதாக தன்னளவில் சிறுத்துவிடுகின்றது. ஆண்கள் வீதிகளிலும், பெண்கள் வீட்டிலுமாக குறுகிய எல்லைக்குள், தம்மைத்தாம் கற்பித்து புளுத்து மனநோயாளராகின்றனர்.


ஆண்கள் குடியிலும், தாம் சம்பந்தப்படாத கற்பனையான (வீர, பாலியல்) வம்புகளிலும் வடிகால் தேடுகின்றனர். உலகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது, கூனிக்குறுகி அறிவிழந்து, சுயசிந்தனை இழந்து விடுகின்றனர். இதற்கேற்ற தமிழ் வலதுசாரிய பாசிச அரசியல், இதற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளிக்கின்றது.


பெண்கள் உலகமோ குறுகிய (நாடகங்கள்) உலகமாகின்றது. தன்னைச் சுற்றி குடும்ப எதிரிகளை கற்பிக்கும் மனப்பாங்கை சிருஸ்டித்துக் கொள்கின்றனர். இதற்கு ஏற்றாற்போல், எமது வாழ்வியல் அனுபவங்கள் மறுக்கப்பட்ட அரசியல் சூழல்.


சிதைந்து செல்லும் சமூகத்தின் அற்ப உணர்வை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ் நாடகங்களின் வருகை அமைந்தது. குடும்பத்தையே எப்படி பிளப்பது என்பதே நாடகத்தின் சமூக நோக்கமாகும். இது உலகமயமாதலின் விதிக்கு உட்பட்டது. குடும்பத்தினுள் எதிரியை தேடத் தூண்டும், காணத்தூண்டும் கதை அம்சங்கள். எங்கும் எதிலும் எதிரி தன்னைச் சுற்றி உள்ளான் என்பதையே, சிந்திக்கத் தூண்டும் சுயவக்கிரத்தை உருவாக்குpன்றது. உணர்வியல் ரீதியாக, உளவியல் ரீதியாக பெண்கயே இதற்கு அடிமையாக்கப்படுகின்றனர். இயல்பற்ற குடும்பங்கள் இதனால் மொழி மற்றும் உடல் வன்முறைக்குள்ளாகின்றது. குடும்பம் தனது சொந்த நிம்மதியை மகிழ்ச்சியை இப்படியும், இதன் வழியிலும் இழந்து விடுகின்றது. நிம்மதியை இழக்க காரணமான பாத்திரமாகவே, புலம்பெயர் பெண்கள் தம்மை உருவாக்கி கொள்வது நிகழ்கின்றது. இதற்கேற்ற சூழலில் உந்தப்பட்டு நிம்மதியை அழிக்கின்ற பாத்திரங்களாக அவர்கள் மாறிவிடுகின்றனர்.


இதனால் இன்று பல ஆண்கள் வீதிகளில் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர். சிலர் நிறை குடியில் மிதப்பவராக மாற்றப்படுகின்றனர். பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றது. பல குழந்தைகள் அன்னியமாகின்றனர். வீட்டுச் சூழல் வெறுத்து, பலர் வீதிகளில் நிற்பதும் வசிப்பதுமாகி விடுகின்றனர். வீட்டில் நிம்மதியை இழந்துவிடுகின்றனர். கணவன் முதல் குழந்தைகள் வரை வீட்டை விட, வீதி நிம்மதியான இடமாக அடையாளம் காண்கின்றனர் அல்லது உணருகின்றனர். புதிய நபர்கள், வேறு வீடுகள் நிம்மதியான இடமாக கருதி நாடிச் செல்வது உருவாகின்றது. இதுவே புதிய பழக்கவழங்கங்களையும், சமூகச் சீரழிவுகளையும் வீட்டுக்கு வெளியில் தோற்றுவிக்கின்றது. சொந்த வீடு மகிழ்ச்சியாக இருக்காத போதே, இவை தவிர்க்க முடியாத பொது விளைவுகளாகின்றது.


வீடும், வீட்டு நிர்வாகமும் பொதுவாக பெண்ணின் நிர்வாகமாக இருப்பதால், பெண்ணின் ஒவ்வொரு செயலும் குடும்பத்தை வழிநடத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. பெண்ணின் காய்தல் உவத்தலுக்கு ஏற்ப, குடும்பத்தின் மகிழ்ச்சி தீர்மானிக்கின்ற விடையமாகின்றது.


இதற்குள் புலம்பெயர் பெண்கள் விடையம் மேலும் நுட்பமாகின்றது. சமூகத்துடன் தொடர்சியான நெருக்கமான சமூகத் தொடர்பை புலம்பெயர் பெண்கள் சூழல் சார்ந்து இழந்துவிடுகின்றனர். திடீரென அனைத்தையும் நிர்வகிக்க பெண்கள் தொடங்குகின்றனர். இதில் ஏற்படும் இணக்கமற்ற விளைவுகள், குடும்ப அதிர்வுக்குள்ளாகி முழுக் குடும்பத்தையும் அழிக்கின்றது. குடும்பங்கள் என்பது பெண்களைச் சுற்றி இருப்பதனால், குழந்தை வரை அதன் விளைவை முழுமையாக பாதிக்கின்ற சமூக அவலங்கள்.


எதை எப்படி மொழிகளால் உரையாடுகின்றோம் என்பது மிக முக்கிமானது. அந்த மொழி வெளிப்படுத்தும் முகப்பாவனை கூட மிக முக்கியமானது. இவை குடும்பத்துக்கு எதிராக, எதிர்வினையாக அமைவதை நாம் அன்றாட வாழ்வில், பல குடும்பங்களில் காணமுடியும். இதை பெரும்பாலான பெண்கள் வீட்டின் பொது மொழியாகவே கையாளுகின்றனர். இந்த மொழி வன்முறையையே, வீட்டின் அதிகார ஊடகமாக பயன்படுத்துகின்றனர். தனது குழந்தையுடனான உரையாடல், கணவனுடனான உரையாடல், பெற்றாருடனான உரையாடல், மிக நெருங்கி வாழ்பவர்களுடனான உரையாடல், பெரும்பாலும் மொழி வன்முறை ஊடாகவே கையாளப்படுகின்றது. குடும்பத்தில் நெருங்கி வாழ்கின்றவர் மத்தியில், வீட்டு அதிகாரம் மொழி வன்முறை மூலம் கையாளப்படுகின்றது. அதாவது பெண்ணின் மொழியே, வன்முறை கொண்டதாக இருப்பதை பெரும்பாலான குடும்பத்தில் காணமுடியும்.


இந்தப் பொதுச் சூழலில் குடும்பத்தை வன்முறைக்குள்ளாக்கும் நாடகங்கள், பெண்ணை கவருகின்றது. நாடகங்கள் குடும்ப அதிகாரத்தையும், அதற்குள் எதிரியை தேடுவது பற்றி பேசுகின்றது. சமூகத்துக்கு எதிரான எதிரியை காணவிடாது, பெண்ணைத் திசை திருப்புவதே நாடகங்கள். குடும்பத்தினுள் இது பாரிய முரண்பாட்டை உருவாக்குகின்றது. நாடகங்கள் பெண்ணை முதலில் தனக்குள் அடிமையாக்கி விடுகின்றது. வெளியில் பகட்டும், குடும்பத்தில் சிடுசிடுப்பும், இதுதான் பெண்ணின் வாழ்வு, இதைத்தான் உலகமயமாதல் விரும்புகின்றது. இப்படி மொழியில் வாழ்வில் பெண் கொண்டுள்ள இரட்டை அணுகுமுறையை, வாழ்க்கையாக எப்படி வாழ்வது என்ற நடிப்பை நாடகங்கள் சிருஸ்டிக்கின்றது. உலகத்தை அதற்குள் சுற்றிச் சுற்றி காட்ட முனைகின்றது. குடும்பத்தின் பிளவுக்கு ஏற்றதும், மனநோய்க்கு ஏற்றதுமான இந்த நாடகங்கள், பெண்களின் உலகமாகின்றது. இது இருக்கின்ற நெருக்கடியான குடும்பங்களில், குடும்ப வன்முறையை தூண்டும் ஊடகமாகவே வீட்டினுள் அத்துமீறிப் புகுந்துவிடுகின்றது. தமிழ் நாடகங்கள் பெண்களுக்கு உளவியல் சார்ந்த மனநோயை உருவாக்குகின்றது. அவர்களைச் சுற்றிய ஒரு எதிரி உலகத்தை சிருஸ்ட்டித்து, கற்பிதங்களையும் கட்டளைகளையும் இடுகின்றது.


பெண்கள் பொதுவாகவே அதன் பாத்திரங்களாகவே மூழ்கிவிடுகின்றனர். தாம் ஒரு பாத்திரமாகவே மாறுகின்றனர். அவர்களை அறியாமலே குடும்பத்தினுள் எதிரியை எதிரிகளை தீவிரமாக தேடுகின்றதும், கற்பிக்கின்றதுமான ஒரு நிலை உருவாகிவிடுகின்றது. எதற்கும் கணவனையும், குழந்தைகளையும், பெற்றோரையும் குற்றம் காண்கின்ற, குற்றம் சாட்டுகின்ற நிலை உருவாக்கப்பட்டுவிடுகின்றது. எடுத்ததற்கெல்லாம் நச்சரிக்கின்ற தனக்கென்றதும், அதற்கெனவும் ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கிவிடுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் தனக்கு எதிராக வாழ்வதாக கற்பிக்கின்ற மனப் பிரமை உருவாகிவிடுகின்றது. ஆணாதிக்க சமூக அமைப்பு சார்ந்து உருவாகும் பெண்களின் பின்தங்கிய அறிவை, நாடகங்கள் மேலும் சமூக குருடாக்கி, அதையே வாழ்வாக வாழக் கோருகின்றது. இப்படியாக குடும்பத்தின் குறைந்தபட்ச மகிழ்சியைக் கூட அது மறுதலித்து விடுகின்றது.


அசாதாரணமானதும், இனம் காண முடியாத ஆட்டம், மயக்கம், தயக்கம், அச்சம், பீதி குடும்பத்தினுள் உருவாகின்றது. குடும்பத்தினுள் ஒளித்து மறைத்து காரியமாற்றுகின்ற விடையங்கள் உருவாகின்றது. அநேகமான குடும்பங்களில் பெண்களின் மொழி சார்ந்த வன்முறை அதிகாரம், குடும்பத்தின் அதிகாரமாகிவிடுகின்றது. இந்தநிலையில் பெண்ணின் பாத்திரம் என்பது, முழுக் குடும்பத்தையும் மனக்கசப்பு கொண்டதாக, ஒருவருக்கு ஒருவரை எதிராக நிறுத்திவிடுகின்ற ஒன்றாக மாறிவிடுகின்றது. குடும்ப உறுப்பினருக்கு இடையில் நிலவுவது அசாதாரணமான வௌவேறு துருவங்கள் கொண்ட தனி உலகமாகவே இயங்குகின்றது.


பெண்களின் அதிகாரம் வெளிப்படுத்தும் போலித்தனத்தையும், அதன் பகட்டையும் எடுத்துக்காட்டுவது என்பதும், அந்த அம்சத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதும் மிகக் கடினமானது. ஒரு ஆணாக நான் இருந்து கொண்டு செய்வதே முக்கியமான காரணமாகும். இருந்தும் இதை துல்லியமாக புரிந்துகொள்ள எடுப்பான சில உதாரணம் எம்முன்னுள்ளது.


ஆம், அது தான் புலம்பெயர் சமூகத்தின் இரண்டாவது புலம்பெயர்வு. இந்த இரண்டாவது புலபுபெயர்வை கோருபவள், நடத்துபவள் பெருமளவில் பெண்ணாக இருக்கின்றாள். ஆணின் தனி உழைப்பை நம்பிய குடும்பங்களிலும், ஆணின் உழைப்பு இன்றி பெண் வாழமுடியாத நிலையிலும், பெரும்பாலான புலம்பெயர்வு ஆண்களின் விருப்பமின்றி பெண்களால் வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு பெண்கள் கையாளும் வழி என்பது பெரும்பாலும் நச்சரிப்பு கொண்ட மொழி வன்முறை தான்.


இங்கு விசா போன்ற வாழ்வியல் எல்லைக்குள்ளான நெருக்கடி சார்ந்த புலம்பெயர்வைக் குறிப்பிடவில்லை. பெருமளவுக்கு பெண்களின் முடிவுக்கு அமைய நடக்கும் இந்த விடையத்தில், அறிவியல் பூர்வமாக இந்த இரண்டாவது புலம்பெயர்வு அமைவதில்லை. ஆணே தொடர்ந்தும் உழைக்க வேண்டிய நிலையில், புதிய சூழலில் அந்த ஆண் கடுமையாக துயரங்களுடன் மேலதிகமாக உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றான். அத்துடன் புதிய சூழலில் ஆண் உழைப்பு ஆற்றலை இழப்பதும், மீண்டும் திரும்பும் சூழல் கணிசமாக நடக்கின்றது. பெண் திரும்ப மறுக்கும் போது, ஆண் மட்டும் திரும்புவதும் அல்லது அங்குமிங்குமாக ஓடி வாழ்வதும் தொடருகின்றது.


ஆணாதிக்க அமைப்பில் பெண் வீட்டு அடிமையாக ஆணுக்கு உழைப்பது அவசிமானதாக இருந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் விதி இது. இதைக் கடந்த சமூக அமைப்பில், பெண் வீட்டின் நிர்வாகியாகி, குடும்பத்தை தனது மொழி அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்துபவளாக மாறுகின்றாள். இதன் போது ஆண் என்பவன் பெண்ணின் விருப்பத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உழைக்கும் ஒரு பொருள் இயந்திரமாக பெண் கருதி அணுகுகின்றாள். உலகமயமாதலில் ஆணாதிக்கம் என்பது பாலியல் அம்சத்திலும், உடல் பலத்திலும், உலக அனுபவத்திலும் தான் ஆணிடம் காணப்படுகின்றது. விட்டின் கடமை என்பது, பெண்ணின் மொழி அதிகாரத்துக்கு உட்பட்ட ஆணாதிக எச்சமாக மாறிவிடுகின்றது.


பெண்ணின் அதிகாரம் இப்படி நெருக்கடியான வழியில் திணிக்கப்படுகின்றது. ஆண் பெண்ணுக்கு இணங்கிப் போவதன் மூலம், மௌனமாகிவிடுவதன் மூலம், மாற்று அபிப்பிராயத்தை இழப்பதன் மூலம், தனது குடும்ப நிம்மதியை காப்பாற்றமுடியும் என்ற நிலை. இதை பல குடும்பத்தில் காணமுடியும். உண்மையில் மறுபுலம்பெயர்வை தூண்டும் காரணங்கள் பெரும்பாலானவை அறிவியலுக்கு புறம்பானவை. குறுகிய குருட்டுத்தனமான வாதங்கள், வீங்கி வெம்பும் பெண்ணின் பார்வைகள், தன்னாலாகாத இயலாமை, அவநம்பிக்கைகள், பெருமை பேசும் குறுகிய வட்டம், வாழ்கின்ற சமூகத்தை தெரிந்து கொள்ள முடியாத குறுகிய கண்ணோட்டம், சமூகத்துடன் இணைந்து வாழ மறுக்கின்ற தனிமைவாதம் போன்ற பல காரணங்கள் உள்ளன. வீம்பும், பகட்டும், மோகமும் குறிப்பான தூண்டும் காரணங்களாகும். இப்படித்தான் பல முடிவுகள் தவறானதாக எடுக்கப்படுகின்றது.


இது போல் மற்றொரு உதாரணம். இன்று அநேகமாக ஓடிவாங்கும் வீடுகள் ஒருபுறம். அந்த வீட்டை அழகுபடுத்துவதில் பெண்கள் செய்யும் கூத்து ஒருபுறம். பெண்கள் வீட்டின் வண்ணத்தை மாற்றுவதில் உள்ள மனப்பாங்கில், திருப்தியற்ற நிலையற்ற அவர்களின் மனதைப் பார்க்கமுடியும். பலத்த செலவுகொண்டதும், நிறங்களை அடிக்கடி மாற்றுவதில் பெண்ணின் முடிவு எதைக்காட்டுகின்றது. வேலை செய்பவர்கள் வேலையை முடிக்க முன்னமே, மீண்டும் வீட்டின் கலரை மாற்றியடிக்கின்ற பல சம்பவங்கள். இதை அண்மைக் காலத்தில் வீடுகளை திருத்திய பல தமிழ் வீடுகளில் காணமுடியும். இந்த முடிவை பெண் எடுக்கின்றாள். இதற்கு கணவன் இணங்கிப் போவதைத்தவிர வேறு வழிகிடையாது. இது ஒரு வன்முறை மூலம் பெண்ணால் சாதிக்கப்படுகின்றது. இதுவெல்லாம் தற்செயலானதல்ல. பெண்ணின் வக்கிரமாகிவிட்ட வாழ்வியல் முறை. அடிக்கடி வண்ணத்தின் நிறம் பிடிக்காத பெண் மனநிலை என்ன? அடிக்கடி பொருட்களை புதுசாக மாற்றும், மாற்றவிரும்பும் பெண்ணின் உணர்வு என்ன? தனது கணவன் மட்டும், மாறாது எப்படி வாழ்க்கை முழுக்க பிடித்துவிடும். பொருட்களை விரும்பியவாறு தனது அதிகாரத்தின் மூலம் பொருள் உலகில் மாற்றும் பெண், கணவனை குழந்தையை அப்படிச் செய்யமுடியாது. அவர்களை ஒரு பொருளாக விரும்பியவாறு விரும்பிய இடத்தில் வைக்கவும் எடுக்கவும் முடியாது. ஆகவே அந்தக் கற்பனைப் பிரமை, அதை நோக்கி மொழி வன்முறையாகின்றது. திட்டி தீர்க்கப்படுகின்றது. ஏன், எதற்கு, எதற்காக, நாம் திட்டுகின்றோம் என்று தெரியாது, திட்டிக்கொண்டே பெண்கள் இருக்கின்றார்கள். இதை புலம்பெயர் சமூகத்தில் அநேகமான குடும்பத்தில் காணமுடியும்.


அடிக்கடி எல்லாவற்றையும் மாற்றவிரும்புகின்றவர்கள், தனது கணவனை மனைவியை மாற்றுவதையே உள்ளார விரும்புகின்றனர் என்பதே உண்மை. ஆனால் அதைச்செய்ய முடியாது சமூகத்துக்கு நடிப்பவர்கள், கணவனை அல்லது மனைவியை திட்டுகின்றனர். திட்டுவதுக்கு காரணத்தைக் கண்டுபிடிக்கின்றனர்.


இதன் பின்னணியில் ஒரு ராணி, ஒரு மெடலிஸ்ராக இருக்கும் நினைப்பு. அவர்கள் எப்படிப்பட்ட கவர்ச்சி, அழகைக் கொண்டு இந்த உலகில் போலியாக நடித்து வாழ்கின்றனரோ, அப்படிப்பட்ட வாழ்வை நிஜத்தில் வாழ நினைக்கும் சொந்த மனப்பிரமை, குடும்பத்தினுள் பல முரண்பாடுகளை தூண்டுகின்றது. ஒரு மெடலிஸ்ற் தனது போலியான நடிப்பு சார்ந்த வாழ்வை கவர்ச்சி செய்து காட்ட விரும்புகின்றாள். முகப்பவுடர் பூசுவது முதல் தனது சப்பாத்து முதல் தலை வரை அணியும் அணிகலன்கள் வரை, கலர் முதல் விதவிதமாக அழகுபடுத்தியே, மற்றவனில் அற்ப உணர்வை ஏற்படுத்தி கவரமுடிகின்றது. இது நிஜவாழ்வில் சாத்தியமற்றது. அதை எமது பெண்கள் குடும்பத்தினுள் மற்றவருக்காக கோருகின்றாள். ஆனால் அதை குடும்பத்தினுள் அல்ல. வெளிப்பார்வைக்கு அதாவது மற்றவர்களுக்காக குடும்ப உறுப்பினரிடம் அதை கோருகின்றனர். உண்மையில் குடும்பத்தினுள் அவளால் கூட, பல்லைக்காட்டி போலியான மகிழ்ச்சியான வெளிப்பகட்டை உருவாக்க முடிவதில்லை.


வெளியில் உள்ளவர்களுக்கு காட்டவே பகட்டாக தன்னை அழகுபடுத்தும் பெண், தனது கணவனுக்கு முன்னால் தான் அழகாக இருப்பதில்லை. இதுவே வாழ்க்கையாக கருதும் பெண், கணவனுக்கு முன்னும் அப்படி இருக்க வேண்டும் என்று கருதுவது கூட கிடையாது. ஒரே விதியல்லவா எங்கும் காணப்படுகின்றது. வெளிப்பகட்டுக்கும், போலித்தனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம், தனது கணவனுடனான குழந்தை உடனான வாழ்வில் பெண்ணால் கையாள முடிவதில்லை. நல்ல அழகான மொழியை கணவனுடன், குழந்தையுடன் உரையாடக் கூட பெரும்பாலான பெண்களால் முடிவதில்லை. இதை வெளியுலகுக்கு செய்கின்றனர்.


உண்மையில் விளம்பரத்தின் வெற்றி இது தான். போலியாக நடித்து வாழ்தல். நெருங்கி வாழ்வில் கவர்ச்சியையும், அழகையும் இழந்து சிடுமூஞ்சிக்காரியாக, கோபக்காரியாக, அலங்கோலமாக வாழ்வதே காணப்படுகின்றது. வாழ்வை போலியாக, மற்றவனுக்கு காட்டுகின்ற வாழ்வாக்கிய பின், உண்மையான மகிழ்ச்சி என்ன என்று தெரியாது போவதும், அதைத் தாமாகவே இழப்பதும் நிபந்தனையாகும். மற்றவனுக்கு காட்ட வாழ்வதும், தனக்காக வாழ மறுப்பதும், இதன் சாரமாக இருப்பதை அவர்களின் அறிவின் எல்லை உணர்த்துவதில்லை.


இதன் எதிர்மறையில் மனைவி என்ன நினைக்கின்றாள். கணவன் தனக்கு ஏற்றவனாக இல்லை என்று கருதுகின்ற மனப்பிரமையையும் உருவாக்கிவிடுகின்றாள். கணவனுக்கு எந்த தகுதியும், தான் நினைக்கும் எல்லையில் கிடையாது என்று பல பெண்கள் நம்புகின்றனர்.


பல ஆண்கள் வேலையின் சுமை தாங்கமுடியாது களைத்து வீழ்ந்து சோர்ந்து வருவதை, அவலட்சணமாக பார்க்கின்ற மனப்பிரம்மை பெண்களிடம் காணப்படுகின்றது. உழைப்பின் மதிப்பின் ஊடாக கணவனை மதிக்கின்ற மனப்பக்குவம் அவர்களிடம் அறவே இல்லாமல் போகின்றது. அவனின் உழைப்பு உருவாக்கும் பணத்தை நுகரவே, பெண்ணாக (பெண் உழைத்த போது கூட) குடும்பத்தில் அவள் இருக்கின்றாள். இயல்பாக தனக்கு ஏற்ற கணவன் அல்ல என்று கற்பிப்பதற்கு ஏற்ற, காரணத்தை பெண்கள் தாங்களாகவே கட்டமைக்கின்றனர். இதுவே சதா புறுபுறுப்பையும், தூற்றலையும் கொண்ட வாழ்வாக மாற்றுகின்றது.


பெண்ணின் வீட்டு வேலை தரும் அழுத்தம், அதன் சுமை, ஓரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யும் வாழ்க்கையின் சுழற்சி, கணவன் பற்றி இந்த அதிருப்தியை மேலும் பல மடங்காக்குகின்றது. இங்கு வீட்டு வேலை தவிர வெளியிலும் வேலை செய்யும் பெண்ணாக இருந்தால், அது தரும் மேலதிக சுமை வாழ்வின் மீதான சலிப்பை உருவாக்குகின்றது. இந்த நிலையில் வாழ்கின்ற ஒரு வாழ்வை, குறைந்தபட்சம் ரசிக்கத் தெரியவேண்டும். இதை புறுபுறுப்பாக, ஒரு புலம்பலாக மாற்றுவதால் என்ன பயன்? யாரையாவது திட்டித் தீர்ப்பதோ, கணவனையும் குழந்தையையும் தூற்றுவதாலோ, இதற்கு பரிகாரம் காணமுடியாது. ஆனால் பெரும்பாலான பெண்கள் இதையே செய்கின்றனர். குடும்பத்தினுள் நிலவவேண்டிய குறைந்தபட்ச மகிழ்ச்சியை இழப்பதன் மூலம், நெருக்கடியை தம்மைச் சுற்றி அதிகரிக்க வைக்கின்றனர். கணவன், குழந்தை மற்றும் தாய் தந்தை அல்லது மாமன் மாமி தமக்கு எதிராக செயல்படுவதாக கற்பித்துக்கொண்டு எதிர்வினையாற்றுகின்றனர். சதா அவர்கள் மேல் பிழை பிடிக்கின்றனர்.


குடும்பத்தில் இருந்து தன்னை அன்னியப்படுத்தியபடி, தனது கடமைகளாக இதை தலைவிதியாக கருதி, தனக்குள் ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டபடி சீரழிகின்ற நிலையே, பெரும்பாலான பெண்களின் உணர்வாகி விடுகின்றது. தன்னைச் சுற்றிய அதிருப்தியும், மற்றவர்கள் மேல் எரிந்து வீழ்வதும் வாழ்க்கையாகிவிடுகின்றது.


Thursday, June 21, 2007

சிங்கள இனவாதத்தின் இனச் சுத்திகரிப்பு

சிங்கள இனவாதத்தின்

இனச் சுத்திகரிப்பு

லங்கை வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள இனவாத அரசு இனவாதக் குண்டர்களை வைத்தும், ஆயுதப் படைகளை ஏவியும் தமிழர்களை இலங்கையின் தெற்கில் வாழும் உரிமையை மறுத்து இனச்சுத்திகரிப்புச் செய்துள்ளது. ஆனால் இப்போது சிங்கள இனவாத அரசே உத்தியோகபூர்வமாக தமிழர்களை இலங்கையின் தலைநகரத்தில் இருந்து எதேச்சதிகாரமாக வெளியேற்றி தனது அதி உச்சகரமான மனித உரிமை மீறலை செய்து, உலகம் முழுவதின் கண்டனத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.


இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்ளவும், அந்த அபிலாசைகளை தீர்ப்பதற்கோ சிறிய அளவிலும் முயலாத இலங்கை அரசு மாறாக தேசிய இனப்பிரச்சனையை ஆயுத முனையால் தீர்த்துவிடலாம் என்று வெறித்தனமாக செயற்படுகின்றது. இச்செயல் மூலம் இலங்கையில் தொடர்ந்துவரும் இரத்தக் களரியையும், மனித உரிமை மீறல்களையும் உக்கிரப்படுத்துவதற்கான அடித்தளத்தையே ராசஐபக்ஷவின் அரசு ஏற்படுத்தியிருக்கிறது.


சிங்கள மேலாதிக்க சக்திகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசு தமிழ் மக்கள் மீதும் அவர்களது வாழ்விடங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி உயிரிழப்புக்களையும் அவலங்களையும் உண்டாக்கி வருகிறது.


தமிழ்பேசும் மக்களின் வாரலாற்று வாழ்விடங்களில் இனவிகிதாசாரத்தை மாற்றி சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முனைந்து வருகிறது




இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் தலைநகரத்திலிருந்து "தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே" தமிழ் மக்களை வெளியேற்றியுள்ளது சிங்கள இனவாதம்.


உலகச் சமூகமே கண்டிக்கும் இச்செயலை இலங்கையில் சிங்கள இனவாதத்தையும், மேலாதிக்கத்தையும் அண்மைக்காலமாக தீனிபோட்டு தீவிரமாக வளர்த்துவருகின்ற இனவாதக் சக்திகளும் கண்டித்துள்ளன. இதில் வியப்பேதுமில்லை. "இலங்கையர்" என்ற பொதுவடையாளத்தை அனைத்து இனமக்களுக்கும் கொடுத்து, தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து சிங்கள மேலாதிக்கத்தை ஒற்றையாட்சியின் கீழ் தொடர்வதே இவர்களது திட்டமாக இருந்து வருகிறது. இந்த இனவாத சக்திகள் வடிப்பது வெறும் முதலைக் கண்ணீரே!


தனது அரசே திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்ட இனவாதச் செயலுக்கு, ராஜபக்ஷ வருந்துவதாக

தெரிவித்திருக்கிறார். இவரது வருத்தமும் மேலே குறிப்பிட்ட இனவாத சக்திகளின் முதலைக் கண்ணீரைப் போன்றதுதான். தனது அரசே உருவாக்கிய தீர்வுக்குழுவின் நியாமான தீர்வறிக்கையை கணக்கிலெடுக்காமல் குப்பையில் போட்டுவிட்டு உலகம்பூராகவும் ஆயுதக் கொள்வனவுக்கு அலைந்துதிரிகிறார் ராஜபக்ஷ.


ராஜபக்ஷ அரசின் அதியுச்சகரமான பாசிசச் செயலை கருமையம் கடுமையாகக் கண்டிக்கிறது.


இலங்கை அரசுக்கு இப்போது பொருளாதார உதவிகளை பகுதியாக நிறுத்தியிருக்கும் நாடுகள் தமது ஆயுத உதவிகளையும் முற்று முழுதாக நிறுத்தவேண்டும். தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளும் அபிலாசைகளும் மதிக்கப்பட வேண்டும். சமாதானத்துக்கும் நியாமன தீர்வுக்குமான அழுத்தத்தை சர்வதேச சமூகம் தொடர்ந்து இலங்கை அரசின்மீது செலுத்த வேண்டும்.


ஆனி 13, 2006 - கருமையம் -

சிங்கள இனவாதத்தின்

இனச் சுத்திகரிப்பு

தொடர்பு: karumaiyam@gmail.com


தாலிதான் பெண்ணுக்கு வேலி: ஒரு ஆணின் கூற்று

தாலிதான் பெண்ணுக்கு வேலி

ஒரு ஆணின் கூற்று. . .

சபேசன் கனடா

'மாங்கல்யம் தந்துதானே மமயேவனு. . ." என்கின்ற மந்திரச்சத்தமும், மணியோசையும், நாதஸ்வர இசையும், சந்தண சாம்பிராணிகளின் வாசனையும் அலங்கார சோடனைகளும் என்று எமது ஜம்புலன்களையும் ஆளுகின்ற ஒரு சூழ்நிலையில் வாழ்நாள் முழுவதும் உனக்கான உற்ற துணையுடன் வாழ்வின் ஆரம்பத்தை எட்டுகின்றோம் என்ற உணர்வலைகளின் எகத்தாழமான எதிர்பார்ப்புக்களுடனும் எனக்கு நீயே, உனக்கு நானே என்ற பரிபூரண ஆத்மதிருப்தியுடன் கழுத்தில் தாலியேறும் போது ஏற்படுகின்ற ஆனந்த உணர்வே எமது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஏற்படுகின்றது.


இந்த கருத்தியலுக்கு எதிராக ஏங்கல்ஸ் சொன்ன வாசகம் 'திருமணம்" என்பது ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு (iவெரவைழைளெ) நிர்வாகம். இங்கு இருவரில் ஒருவரின் ஆதிக்கம் இருந்தே ஆகும். இந்தத்திருமணம் என்பது எங்கே நிச்சயப்படுத்தப்படுத்தப் படுகின்றது. . .? ஜயர், திருமணப்பதிவாளர் . . இல்லை ஒரு துண்டுக் கடுதாசி (திருமணப்பதிவுப்பத்திரம்) இந்த கடுதாசியை வைத்து இரண்டு மானுடங்களின் வாழ்வியலை ஒரு துண்டுக் காகிதத்தில் தீர்மானிக்கிறார்கள்.. இவற்றின் பின்னால் இந்த இரண்டு ஆண் பெண் என்ற மனித ஜீவன்களின் உணர்வுகளையும் உணர்சிகளையும் எப்படி கொலை செய்கிறார்கள் . . ?


தமிழர் வாழ்வில் காலம் காலமாக ஆணாதிக்கத்தின் விழுதுகளாக தொடரும் பெண்ணடிமைத்தனம் ரொறன்ரோ வரையும் தொடர்கின்றது. எத்தனை சந்தேகப் படுகொலைகள். . . ? எவ்வளவு குடும்ப வன்முறைகள். . ? இவற்றின் தோற்றுவாய்கள் எவை. . ?


தாலி பெண்ணுக்கு வேலி. .! உண்மைதான் எங்களது தோட்டத்து வேலி போன்றது. பாதுகாப்புக்காக இல்லை! நான் மட்டும்தான் மேயலாம் மற்றவனை மேய விடமாட்டன் . . ? இதே யதார்த்தத்தை எதிர் மறையாக மாத்திப் போட்டுப் பாப்பம். கலியாணம் கட்டினாப்பிறகு இவள் யாருடைய சொத்து என்று நிர்ணயம் செய்யும் சமூக அந்தஸ்தைக் கொடுக்கின்ற ஒரு அடையாளத்தை அந்த தாலியான அடையாளத்தை தாங்கி வருபவள் பெண்ணாக மட்டும் இருக்கின்றாள். இது கொடுமை. .! அப்படி ஒரு அடையாளம் ஆணாகிய எனக்கும் வேண்டும்.


ஆணாகிய நான் எத்தனை பெண்களிடமும் போகலாம் பெண்ணாகிய நீ எங்கும் யாரிடமும் போகமுடியாது. . எனது சொத்து நீ என்ற ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையறாதான். அப்படியும் மீறிப் போனால் உனது கழுத்தில் தொங்கி மனச்சாட்சியான இதயத்துடன் தொட்டு உறவாடிக் கொண்டிருக்கும் 'தாலி" உன்னை மனச்சாட்சியாக நின்று கேள்வி கேட்கும். எவ்வளவு பெரிய பம்மாத்து. . ?


இதனை சமாளிக்க கூறுகின்ற சளாப்பல்தான் முந்தின காலத்தில ஆம்பிளையள் கலியாணம் கட்டினாப்பிறகு மெட்டி போட்டவையாம். உண்மையில் அப்படி ஒரு மெட்டிப்பழக்கம் இருந்ததேயில்லை. சரி இருந்தாலும் அது வந்ததும் தெரியாது போனதும் தெரியாமல் போனதெப்படி? ஏன் தாலியளவிற்கு முக்கியத்துவத்தை பெறவில்லை?


தமிழ் கலாச்சாரத்தில் அதிலும் முக்கியமாக இந்துக்கலாச்சாரத்தில் தாலிதான் ஆணாதிக்கத்தின் ஆணிவேர்.


இன்னமும் மோசமான நடைமுறை யதார்த்தம் என்னவென்றால் இந்த கேவலமான தாலியை மதிக்கவேண்டும் என்று வாதாடுவது ஆண்களிலும் பார்க்க பெண்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். ஆண் பெண் இருவகையினரின் மனங்களிலும் இது ஆழமாக பதியப்பண்ணுவதற்காக பாவித்த கருவிதான் மதம். திருமணம் என்ற மதச்சடங்கோடு இதனை இணைத்ததன் மூலம் இதனது வேர் ஆணிவேராக பாய்ந்துவிட்டது. இதனை ஆழப்பதித்ததன் காரணி இன்னுமொன்று 'தங்கம்". தங்கம் எமது வாழ்வியலில் ஒரு அழியாச்சொத்து. தாலி மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கொடியிலிருந்து ஏன் தங்கத்தை தேடிச் சென்றது? மதம், கலாச்சாரம், போன்று பொருளாதார அந்தஸ்து என்ற காத்திரத்தன்மையை ஆணாதிக்கத்துடன் இணைப்பதே அல்லாமல் வேறொன்றுமல்ல.


நடைமுறை யதார்த்தத்தில் தாலியை கட்டிய பல பெண்களிற்கு சில முற்போக்கான சூழ்நிலைகள் கிடைத்தும் அதன் பின்னர் இது ஒரு பிற்போக்கான 'ஆணாதிக்க அடையாளச்சின்னம்" என்று அறிவியல் ரீதியாக புரிந்த பின்னரும் கூட விடாப்பிடியாக தாலியை கைவிடத்தயாரக இல்லை. ஒன்று ஈகோ, தான் விட்ட பிழையை பிழையென்று ஒத்துக்கொள்ள முடியாமை. ஆல்லது அத்தின பேரும் அந்தமாதிரி புதுப்புடவை புதுநகை பெரிய தாலி என்று அடுக்கடுக்காக பெருமை காட்டும் போது நான் மட்டும் என்ன குறைந்தவளா? என்ற பொறாமையாக கூட இருக்கலாம். இதுவும் ஒரு வகையில் ஈகோதான்! அடுத்தது சுற்றம் சூழல் அப்பா அம்மா சமுதாயம் என்றவற்றிற்கான பயம்.


மற்றது முக்கியமானது பெண்களின் மனங்களில் இவர்களையும் அறியாமல் ஒட்டியிருக்கும் ஆணாதிக்கமே. உதாரணம், மாமியும் அம்மாவும் தங்கள் மகளுக்கும் மருமகளுக்கும் போதிக்கும் போதனை 'உன்ரை கணவனுக்காக வாழ்வதே உனது வாழ்க்கை"


எங்களது வாழ்வியலில் ஆணிலும் பார்க்க பெண்கள்தான் தாலியை காப்பாற்ற வேண்டும் என்ற பிற்போக்குத்தனத்pல் வாழ்வதற்கான காரணமே பெண்களின் மனங்களில் கூட ஆழமாக பதியவைக்கப்பட்ட ஆணாதிகம்தான். இது இவர்களையும் அறியாமல் எம்மைச் சுற்றிவர இருக்கும் 'சமூக ஒழுக்கங்கள்" ஏற்படுத்திய பாதிப்புகளே! இப்போது பெண்ணியவாதிகள் ஆத்திரமடையலாம் 'ஆண்கள் சுலபமாகக் கூறிவிடலாம் ஆனால் இங்கே கூறிய ஒழுக்கங்களை உடைப்பதற்கு முற்படும் போது ஆண்கள் சுலபமாக தப்பிவிட முடியும் ஆனால் சமூகத்தின் அழுத்தங்களும் பாதிப்புகளும் பெண்ணுக்குத்தானே அதிகம்" நிச்சயமாக மறுக்கவில்லை. . ! ஆனால் போராட்டத்தை ஏற்படுத்த . . மாற்றத்தை கொண்டுவர . . யாராவது முன்வந்தேயாக வேண்டும். முன்வருபவர்கள் பலவிதமான சவால்களையும் துன்பங்களையும் சந்திக்கவேண்டியும் நேரலாம்.


இது, எனது தோட்டம், . தான் மட்டும் மேயலாம் என்ற உரிமையை கொண்டதே 'தாலி" என்ற வேலியே அல்லாமல் பெண்ணுக்கு பாதுகாப்பிற்காக தோன்றியதல்ல தாலி.


சபேசன்


Tuesday, June 19, 2007

இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது

இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது!



ந்து சேர்ந்தது வீட்டுக்கு

வண்ணத் தொலைக்காட்சி

வைத்துப் பார்ப்பதற்கேற்ற

வாட்டமான இடம்

விவாதத்துக்கிடையில்

ஒருவழியாக முடிவானது.

கூடத்து மூலையில் கிடந்த

கிழவியின் படுக்கை

திண்ணைக்குப் போனது

கேட்க ஆளின்றி

பாட்டியின் கதைகளும், அனுபவமும்

பேச்சு மறந்து வீணாய்ப் போனது.



ஆட்டிவிடும்போது

தொலைக்காட்சிக்கு

அடிபட்டுவிடும் என்று

குழந்தையின் தொட்டிலும்

கழட்டப்பட்டது.

முன்வாசலில்,

கேபிள் கொடி படர்வதற்கு

இணங்காத

முருங்கையின் கிளை

முறிக்கப்பட்டது.



ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு

ஊறு நேராதவாறு

ஐந்து மணிக்கெல்லாம்

கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது.

தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த

சினையாடு

கண்டு கொள்ள ஆளில்லாமல்

வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.



படாத இடத்தில்

தொலைக்காட்சிக்குப்

பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து

பையனின் "ஒளிந்து பிடித்து'

விளையாட்டும்

வீட்டை விட்டு விரட்டப்பட்டது.



விளம்பர இடைவேளைக்கிடையே

கொஞ்சம் விசாரிப்பு பின்பு

வெடுக்கென்று முகத்தை திருப்பி

"கோலங்கள்'.

குடும்பத்தின் "கவனிப்பு' தாங்காமல்

சொல்லாமலே ஓடிப்போனான்

சொந்தக்காரன்.

தொலைக்காட்சிப் பூவில்

தேனெடுக்கத் தவித்து

சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து

பரிதாபத்தோடு

"இச்சு' கொட்டியது பல்லி.



மனிதக்குரலற்று வெறிச்சோடிய

வீதியைப் பார்த்து

பீதியுற்று அலறியது தெருநாய்.

கதவைத் திறந்து கொண்டு

வந்தவனின்

மனிதக்குரைப்பைக் கேட்டு

நடுங்கிப் போனது நாய்.

""ச்சீ... நல்ல நாடகம் ஓடுறப்ப

இங்க வந்தா கத்துற நாயே...!'' என

அடிக்கப் பாய்ந்து வந்த

குடும்பத்தலைவனின் விழிகளில்

இதற்கு முன் இப்படியொரு

வெறித்தனத்தைப்

பார்த்திராத தெருநாய்

உயிர்ப்பிழைத்தால் போதுமென்று ஊரை விட்டே ஓடியது.



· துரை. சண்முகம்

Monday, June 18, 2007

தில்லை போராட்டம்: வெற்றியை நோக்கி ஒரு படி!

தில்லை போராட்டம் :

வெற்றியை நோக்கி ஒரு படி!


தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகவும் வடலூரில் வள்ளலார் வழிபாட்டு முறையைப் பார்ப்பனமயமாக்கிய சதிக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருக்கின்றன. தில்லைக் கோயில் கருவறையின் எதிரில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தேவாரம்திருவாசகம் பாடலாம் என்று இந்து அறநிலையத்துறையின் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல, மதங்களையும் உருவ வழிபாட்டையும் எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் மறுத்து வள்ளலார் ஏற்படுத்திய வடலூர் சத்திய ஞான சபையில், சிவலிங்க வழிபாடும் பார்ப்பனச் சடங்குகளும் தடை செய்யப்பட வேண்டுமென்றும் வள்ளலார் உருவாக்கிய சோதி வழிபாடு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.



""தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடக்கூடாது'' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் விதித்திருக்கும் தடைக்கு எதிராக சிவனடியார் ஆறுமுகசாமி மேற்கொண்டு வரும் போராட்டம் நெடியது. ஆதீனங்கள், மடங்கள், சைவப் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள் என்று பல பேரையும் பல ஆண்டுகளாகச் சந்தித்து இந்த அநீதியைத் தட்டிக் கேட்குமாறு மன்றாடியிருக்கிறார் ஆறுமுகசாமி. தனியொரு மனிதனாக கையில் துண்டறிக்கைகளை அச்சிட்டு வைத்துக் கொண்டு, சிதம்பரம் மக்கள் மத்தியிலெல்லாம் விநியோகித்திருக்கிறார். கோரிக்கையின் நியாயத்தை மக்கள் ஆதரித்தனரெனினும், "எல்லாம் வல்ல' தீட்சிதர்களை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த அமைப்பும் முன்வரவில்லை.



எனினும், மனம் தளராமல் 8.5.2000 அன்று தனியொரு மனிதனாகச் சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடினார் ஆறுமுகசாமி. அந்தக் கணமே தீட்சிதக் காலிகளால் அடித்து தூக்கியெறியப்பட்டார். கையொடிந்த நிலையிலும் அந்தக் காலிகளுக்கு எதிராகக் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். ஆனால், தீட்சிதர்களின் கூலிப்படையாகவே இயங்கும் போலீசு, திட்டமிட்டே வழக்கை பலவீனமாக்கி தீட்சிதக் காலிகளின் விடுதலைக்கு உதவியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜு மூலம், தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. ""தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம். தில்லைக் கோயிலில் தமிழில் பாட வைப்போம்'' என்று விழா மேடையிலேயே அறிவித்தோம்.



2004இல் இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று போராட்டத்தையும் தொடங்கியவுடன் தங்களுடைய நிலையை நியாயப்படுத்திக் கொள்ள இந்து அறநிலையத் துறையையே பயன்படுத்திக் கொண்டது தீட்சிதர் கும்பல். இணை ஆணையர் மூலம் ""தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடுவது மரபுக்கு விரோதமானது'' என்று ஒரு உத்தரவைப் பெற்றது. பிறகு, ""தமிழில் பாடினால் கோயிலின் புனிதம் கெட்டு விடும். சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்'' என்று முன்சீப் கோர்ட்டில் ஒரு தடையாணையையும் வாங்கி வைத்துக் கொண்டது.



இந்தத் தடையாணைகளைத் தகர்ப்பதற்காக, கடந்த 4 ஆண்டுகளாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து எமது தோழர்கள் பல்வேறு முனைகளிலும் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிதம்பரம் நகரெங்கும் பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாகத் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம், தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றங்களில் வழக்குகள், கோயிலுக்குள் நடந்த கொலைகள், திருட்டுகள் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கும் போலீசுக்கு எதிரான வழக்குகள், இப்பிரச்சினையை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்... இறுதியாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு மேல்முறையீட்டு மனு! இம்முயற்சிகளில் பா.ம.க.வைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.எம்.எஸ்., முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.எஸ்., திரு.சக்திவேல் முருகனார் போன்றவர்கள் துணை நின்றிருக்கின்றனர். இந்த நீண்ட போராட்டத்தின் இறுதியில்தான் அறநிலையத்துறை ஆணையரின் தற்போதைய உத்தரவு வெளி வந்துள்ளது.



""தில்லைக் கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல; திருச்சிற்றம்பல மேடையிலிருந்து தமிழ்த் திருமுறைகளை தீட்சிதர்கள் மட்டுமே "தொன்று தொட்டு' ஓதி வருகின்றனர் என்பது உண்மையல்ல; பக்தர்கள் வழிபடலாம், ஆனால் தமிழை உச்சரிக்கக் கூடாது என்பதும் அது கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் என்பதும் தமிழுக்கு இழைக்கப்படும் பேரிழுக்காகும். கோயில் நிர்வாகத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற உள்நோக்கத்தில் தீட்சிதர்களே உருவாக்கிய கட்டுப்பாடாகத்தான் இது தோன்றுகிறது'' என்று கூறுகிறது ஆணையரின் உத்தரவு.



எனினும், ""கால பூசைகளின்போது திருக்கோயிலால் நியமிக்கப்படும் ஓதுவார்களைத் தவிர வேறு யாரும் திருமுறைகளைப் பாடக்கூடாது; பக்தர்கள் பூசை முடிந்தபிறகுதான் பாடலாம்'' என்று கூறுகிறது இந்த உத்தரவு. "பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்' தி.மு.க. அரசின் மழுங்கத்தனத்துக்குப் பொருத்தமான வகையிலும், தீட்சிதர்களின் சாதி உரிமையில் தலையிடாத வகையிலும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதிலும், தீட்சிதப் பார்ப்பனக் கும்பல் இதை ஏற்பதற்குக் கூடத் தயாராக இல்லை.



இந்த உத்தரவு கையில் கிடைத்தவுடனே, ""மே 17ஆம் தேதியன்று சிற்றம்பல மேடையேறி ஆறுமுகசாமி தேவாரம் பாடுவார்'' என்ற அறிவிப்பை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்டது. ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்கள் செங்கொடிகளுடன் திரண்டனர். விடுதலைச் சிறுத்தைகள், தி.க. ஆகியோருடன் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் பலரும் அணிதிரண்டனர். பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டவுடன் அங்கேயே வழிமறித்தது போலீசு. ""அறநிலையத்துறையின் ஆணை இருக்கிறது, வழிபாட்டு உரிமையை மறுக்க போலீசுக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்ற வாதங்கள் எதையும் போலீசு காதில் வாங்கவில்லை. தீட்சிதர்கள் முன்சீப்பு கோர்ட்டில் ஏற்கெனவே தடை வாங்கியிருப்பதாகவும், எனவே எல்லோரும் கலைந்து செல்லவேண்டும் என்றும் கூறியது போலீசு. கலைந்து செல்ல மறுத்து கொளுத்தும் வெயிலில் 4 மணிநேரம் சாலையை மறித்தனர் தோழர்கள். அனைவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தது போலீசு.



பக்தர்களின் வழிபாட்டு உரிமையைத் தடை செய்வது சட்டவிரோதமானது என்று வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்கள் எதுவும் போலீசின் காதுகளில் ஏறவில்லை. ஏறாததில் வியப்புமில்லை. ஏனென்றால், தீட்சிதர்களின் கேவலமான எடுபிடிகளாகவே உடம்பை வளர்த்திருப்பவர்கள் சிதம்பரம் காவல்துறை அதிகாரிகள். கோயிலுக்குள்ளேயே நடைபெற்ற 3 கொலைகள், நகைத்திருட்டுகள், இரவு நேரத்தில் கோயிலே விபச்சார விடுதியாகவும் மதுபான கேளிக்கை விடுதியாகவும் மாற்றப்படுவது ஆகியவை பற்றிக் கொடுக்கப்பட்ட எந்தப் புகார் மீதும் எந்தக் காலத்திலும் சிதம்பரம் போலீசு வழக்கு பதிவு செய்ததில்லை. இவை பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீசு அனுப்பியிருக்கிறது. இதுதான் போலீசின் யோக்கியதை.



தங்களுக்கு அரணாக போலீசு நிற்கிறது என்ற போதிலும், இந்தப் போராட்டம் தீட்சிதர் கும்பலுக்குப் பீதியை ஏற்படுத்திவிட்டது. ""நாங்களே ஆறுமுகசாமியை உரிய மரியாதையுடன் அழைத்துச் சென்று பாட வைக்கிறோம். பிரச்சினையை இத்தோடு விட்டுவிடச் சொல்லுங்கள்'' என்று தூது விட்டது தீட்சிதர் கும்பல். "நந்தனை உரிய மரியாதையுடன் அழைத்துச் சென்ற' இந்தக் கிரிமினல் கும்பல், அடுத்த சதிக்கு அவகாசம் வாங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டோம். ஆணையரின் உத்தரவுக்கு எதிராக காதும் காதும் வைத்தாற்போல உயர்நீதி மன்றத்தில் தடையுத்தரவு வாங்கி விடுவதற்கான வாய்ப்பு உள்ளதென்பதால் விழிப்புடன் இருந்தோம். எதிர்பார்த்தபடியே தமிழுக்கு இடைக்காலத் தடை கேட்டு உயர்நீதி மன்றம் வந்தார்கள். அதனையும் கடுமையாக எதிர்த்து முறியடித்தோம். இறுதியாக ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் ஆறுமுகசாமியை மிரட்டியிருக்கிறார்கள் தீட்சிதக் காலிகள். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகார் மீது இந்தக் கணம் வரை போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை.



எத்தனை தடைகள் வந்தாலும் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலித்தே தீரும். அதனை எந்த தீட்சிதனாலும் தடுக்க முடியாது. திருவரங்கம் கருவறைக்குள் பெரியாரையும் அம்பேத்கரையும் கொண்டு சென்ற எமது தோழர்கள் இதையும் செய்தே தீருவார்கள். ஆனால், வெறும் 250 தீட்சிதர்கள் ஒரு லட்சம் மக்கட் தொகை கொண்ட சிதம்பரத்தை எப்படி ஆட்டி வைக்க முடிகிறது? ஆறு கோடித் தமிழ் மக்களை எப்படி இழிவுபடுத்த முடிகிறது? இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலாக நீடிக்க இன்னமும் அரசு ஏன் அனுமதித்திருக்கிறது? — என்ற கேள்விகளுக்குத்தான் நமக்கு விடை வேண்டும்.



···



ஓட்டுக்கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு, ஆதீனங்கள், மடங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பார்ப்பன எடுபிடிகளான "சூத்திரர்களின்' ஆதரவும், பார்ப்பனரல்லாத பக்தர்களின் சொரணையற்ற நிலையும்தான் தீட்சிதர்களின் திமிரைச் சாத்தியமாக்கியிருக்கிறது. சைவத்தையும் தமிழையும் சொல்லி சொத்து சேர்த்திருக்கும் கோடீசுவரர்களான ஆதீனங்கள் ஆறுமுகசாமியைத் தம் பக்கம் அண்டவிடுவதேயில்லை. தமிழில் பாடத் தடை விதிக்கும் தீட்சிதர்களுக்கெதிராக ஒரு இலட்சம் சிதம்பரம் மக்களிடமும் கையெழுத்து வாங்கியிருக்கிறோம். ஆனால், அந்த மனுவை வாங்கிக் கொள்வதற்குக் கூட அறிவாலயம் என்ற அரசியல் ஆதீனத்துக்கு நேரமில்லை.



சிதம்பரம் நகர தி.மு.க.வினர் தீட்சிதர் குடும்பங்கள் நடத்தும் பால்ய விவாகத்துக்குத் துணை நிற்கிறார்கள். போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சித் தலைவர்களின் மனைவிமார்கள் தீட்சிதர்களிடம் பிரசாதம் வாங்கக் கையேந்தி நிற்கிறார்கள். தீட்சிதர்களைப் "பார்ப்பான்' என்று நாங்கள் கூறுவதைக் கண்டிக்கிறது "மார்க்சிஸ்டு' கட்சி. அதன் நகரத் தலைவரான மூசாவைக் (பிறப்பால் இசுலாமியர்) கோயிலுக்குள் வரவேற்று பரிவட்டம் கட்டி மரியாதை செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள் என்பது அப்புறம் நமக்குத் தெரியவந்த சேதி.



ஆறுமுகசாமி எனும் தனி மனிதர் சிற்றம்பல மேடையேறிப் பாடியிருக்கிறார். தாக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் தளராமல் போராடுகிறார். ஆனால், மேடைதோறும் தமிழ் கூறி வயிறு வளர்க்கும் அறிஞர்களோ, தொலைக்காட்சி மேடைகளில் தம்முடைய தமிழ்ப்பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ளும் சான்றோர்களோ இந்தச் சிற்றம்பல மேடையேறும் கவுரவத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்து விடுகிறார்கள்.



இந்திய தேசியம் என்றாலே பார்ப்பனியம், ம.க.இ.க. மறைமுகப் பார்ப்பனியம் என்று எழுதித் தள்ளும் தமிழ்ப் "போராளி'கள் இந்த நேரடிப் பார்ப்பனியத்தின் சிண்டைப் பிடித்து உலுக்கியிருக்கலாம். தமிழகத்துக்குள்ளேயே தமிழனை மிரட்டும் இந்த ஆபத்தை அடித்து நொறுக்கியிருக்கலாம்.



எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்சி தடையின்றி நடக்கிறது. "நாங்கள்தான் செய்தோம்' என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்காக இவற்றையெல்லாம் கூறவில்லை. இந்தப் "பெருமை வேண்டாமென்று ஒதுங்கியிருக்கும் கட்சிகளின் "பெருந்தன்மையையும்', எமது அமைப்புகளின் முயற்சியைக் கவனமாக இருட்டடிப்பு செய்யும் அவர்களுடைய கீழ்மையையும் வாசகர்களுக்குப் புரிய வைப்பதற்காகக் கூறுகிறோம். அவ்வளவே.



கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்பவர்கள். தில்லையில் தீட்சிதர்கள் ஆக்கிரமிப்பாகட்டும், வடலூரில் பார்ப்பனமயமாகட்டும், தமிழிசையில் பார்ப்பனத் திருட்டாகட்டும், சிறுவணிகத்தை ரிலையன்ஸ் ஆக்கிரமிப்பதாகட்டும் — இவை ஒவ்வொன்றுக்கும் எதிராக எம்மைப் பேச வைப்பது வர்க்கப் பார்வை. போராடத் தூண்டுவது வர்க்க உணர்வு.



""பல்வேறு அமைப்புகள் இருக்க, தேவாரம்திருவாசகத்துக்காக நாத்திகர்களாகிய நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோமே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஐயா?'' என்று ஆறுமுகசாமியிடம் கேட்டார் ஒரு தோழர். ""அந்தச் சிவபெருமான் உங்களை அனுப்பி வைத்திருக்கிறான்'' என்று பதிலளித்தார் அந்தச் சிவனடியார்.



எங்களை "உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சிவபெருமான்', பாட்டாளி வர்க்க உணர்வுதான் என்ற உண்மையை அந்தப் பெரியவர் ஒருநாள் புரிந்து கொள்வார். சிவபெருமானும் விரைவில் புரிந்து கொள்வார்.

— ம.க.இ.க., வி.வி.மு.,

பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.

போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

பி.இரயாகரன்

17.06.2007


போலியான வாழ்வு உருவாக்கும் உணர்வும் உணர்ச்சியும் எங்கும் எதிலும் இரட்டை வாழ்க்கை முறையை உருவாக்குகின்றது. உலகச் சந்தை தனது பொருளை விற்க எப்படி பகட்டாக நடிக்கின்றதோ, அப்படி மனித வாழ்வே நடிப்பாகிவிடுகின்றது. நம்ப முடியாத வகையில், இதுவே மனித வாழ்வியல் உறவுகளின் அங்கமாகிவிட்டது.


நடிப்பே வாழ்வாகிவிட முடியாது. ஆனால் முரண்பட்டபடி அப்படித்தான் இருக்க முனைகின்றனர், வாழமுனைகின்றனர். தனது சொந்த மகிழ்ச்சியை இழந்து துன்பத்துடன் வாழ முனைகின்றனர். வெளிவுலகில் மகிழ்ச்சியாக இருப்பதாக நடிப்பதும், குடும்பத்தில் துன்பமாகவும் வாழ்கின்றனர். இது கணவன் மனைவி என்ற எல்லைக்குள்ளானதல்ல. குடும்ப உறுப்புக்குள்ளாக எங்கும் நடக்கின்றது. தனக்குள்ளான இந்த நடிப்பு சார்ந்த முரண்பாடு, மற்றைய மனிதனுடனான முரண்பாடாக கற்பிக்கின்றது.


பற்பல வகையில் அநேக குடும்பங்களில் இவை முரண்பாட்டுக்குரிய காரணமாக அமைகின்றது. இவை என்றுமில்லாத வகையில், தீவிரமாக வெளிப்படுகின்றது. கணவன் மனைவிக்கு இடையிலான முரண்பாடுகள், பெற்றோர் குழந்தைகள் முரண்பாடுகள் முதல் பல தளத்தில் இது தீவிரமாகின்றது. இவை தத்தம் போக்கில் பிளவாகின்றது. எங்கும் ஒரு அசாதாரணமான சூழல். இரு துருவங்களாக கற்பிக்கப்பட்டு, அந்த பிளவே வாழ்வாகிவிடுகின்றது. குடும்பத்தின் உள்ளே சதா நச்சரிப்பும் தொணதொணப்பும், புறுபுறுப்பும், சினப்பும், குடிபோதையும், அலட்சியமும், மௌனமும் கொண்ட இருண்ட குடும்பங்களாகின்றது. இதனடிப்படையில் மொழி மற்றும் உடல் சார்ந்த வன்முறைகள். மகிழ்ச்சியை தாமாகவே தொலைத்து விட்டு, துன்பத்தையே வாழ்வாக தேர்ந்தெடுக்கும், அற்பமான குறுகிய சிந்தனைகள். குடும்பத்தில் உள்ள முரண்பாடுகள் இப்படி முன்னிலைக்கு வருகின்றது.


மறுபக்கத்தில் வெளியுலகுடன் அற்புதமான நடிப்பு. வெளியுலகுக்கு அன்பும் அழகும் கவர்ச்சியுமாக வெளிப்படுத்தும் போலியான உணர்ச்சியும் உணர்வும். மறுபக்கத்தில் குடும்பத்தில் புறுபுறுப்பு, கோபமும், முறைப்பும் கொண்ட உணர்வும் உணர்ச்சியும் கொண்ட அவலட்சனம். ஒரு மனிதனுக்குள்ளான போலியான இரட்டைத் தன்மை, சுயத்தையே இழக்கவைக்கின்றது. சமூக ஆக்கமற்ற மலட்டுத்தனத்தை உருவாக்கின்றது.


புறச்சூழல்களே இதற்கு காரணமாக இருக்கின்றது. இன்றைய சூழலில் தீவிரமாகும் பொருள் சார்ந்த தனிமைவாதம். பொருட்களுடனான உலகத்துடன் தனிமையில் உரையாடுவதால் ஏற்படும் தனிமைவாத அங்கலாய்ப்பு. சந்தை உருவாக்கும் பொருளின் அழகு, அதன் கவர்ச்சி, அதன் ஆபாசம் மனித உறவுகளை குறுக்கி சின்னாபின்னப்படுத்துகின்றது. பொருள் உலகுபோல் தான், மனித உறவு இருக்க வேண்டும் என்பது, அப்படி இருக்க முடியாத முரண்பாடுகள்.


இதை உருவாக்கும் இன்றைய உலகமயமாதலின் விளைவுகளை எதிர்கொள்ள முடியாத சமூகங்கள். சமூக ரீதியான போராட்டங்களின்மையால், அம் முரண்பாடுகள் குடும்பத்தினுள் பிரதிபலிக்கின்றது. முரண்பாட்டை சமூகத்தில் இருந்து காணமுடியாத வகையில், சமூகம் அறிவை இழந்து நிற்கின்றது.


சமூகத்தின் சமூக அறிவியல் மட்டம் தாழ்ந்து வருகின்றது. பொருள் பற்றிய தொழில் நுட்ப அறிவே, மனித அறிவாக சிறுத்து குறுகிவிடுகின்றது. இவை முரண்பாடுகளை இயந்திரத்தன்மை கொண்ட பொருள் முரண்பாடாகவே மாற்றிவிடுகின்றது. உயிர்தன்மை வாய்ந்த இயங்கியல் முரண்பாட்டை மறுத்து, பொருள் சார்ந்த இயக்கமற்ற முரண்பாடாக்குகின்றது.


இதை கற்பித்து திணிப்பதில் ஊடகவியலின் பங்கு மிக முக்கியமானது. பெரும் ஊடகவியலே சமூகத்தின் கருத்தை தீர்மானிக்கும் வகையில் இயங்குகின்றது. அதாவது மனித வாழ்வல்ல என்று சொல்லும் அளவுக்கு இது வீங்கி வெம்புகின்றது. அதன் மொழியும், அதன் உடலும், கவர்ச்சி சார்ந்து ஆபாசமாகிவிட்டது. இதை கொண்டு தனிமனிதர்கள், தாம் மட்டும் கற்பனையில் தனித்து வாழ்வதே, உலகம் என்றாகிவிட்டது. மற்றவனுடன் இணங்கிப் போக முடியாத முரண்பாடுகளை, சதா தன்னைச் சுற்றி கற்பிக்கின்றது.


வெளியுலகு பகட்டுத்தனமாக, மற்றவனுக்கு பகட்டாக காட்டி வாழ்வதே மனிதனின் பொது பண்பாகிவிட்டது. அதாவது மற்றவனுக்காக போலியாக வாழ்தலே, சொந்த வாழ்வாகிவிட்டது. இதற்குள் தான் அழகு கவர்ச்சி ஆபாசம் என அனைத்தும் இயங்குகின்றது. சொந்த வாழ்வே பொது நடிப்பாகின்றது. வெளி உலகுக்கு சதா நடிப்பது என்பது வாழ்வாகிவிட்டது. தன்னுள்ளும், நெருங்கி சொந்த வாழ்வியலில் உறவுகளிலும் இதுவே பாரிய முரண்பாடாகின்றது. எங்கும் எதிலும் நடிப்பு. அதுவே உணர்வும் உணர்ச்சியுமாகின்றது.


உதாரணமாக ஒரு விளம்பர நடிகை (மொடலிஸ்ற்) வெளிப்படுத்தும் அழகு, கவர்ச்சி, ஆபாசமும் இணைந்து உருவாக்கும் வெளியுலக அற்ப மகிழ்ச்சி, வெளியுலகின் வாயைப் பிளக்கவைக்கின்றது. அவளின் நடிப்பு உலகு சார்ந்து அப்படிப்பட்டது. ஆனால் அவளின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை அப்படி இருப்பதில்லை. அது உண்மையில் நேர்மாறானதாக, தாறுமாறானதாக, கோணல் புத்திகொண்டதாகவே இருக்கின்றது. அதுவே குசுகுசுப்பாக அலங்கோலமாக அம்பலமாகின்றது. அதையும் கூட ரசிக்க வைக்கப்படுகின்றது. ரசனையின் தன்மை, மகிழ்ச்சியின் தன்மை அப்படிப்பட்டதாகவே சீரழிக்கப்பட்டுள்ளது. ஊடகவியல் சார்ந்து உருவாக்கப்படும் இந்தக் உலக கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொருவரும் தனக்குள் சொந்த முரண்பாட்டுடன் இப்படி இதுவாக வாழ முனைகின்றனர்.


மனித உள்மனமானது வெளி உலகத்துடன் பகட்டுத்தனமாக இருப்பதுடன், மற்றவனுக்காக சதா வாழ்க்கையை நடிக்க முனைகின்றது. இதை தனக்குள், தனது நெருங்கிய உறவுகளில் சதா நடிக்க முடிவதில்லை. அது வேறு ஒன்றாக வெளிப்படுகின்றது. இதற்கு பின்னால் நம்ப முடியாத வகையில், அலங்கோலமான வடிவில் மனநோயை உருவாகின்றது. வெளி உலகத்துடன் கொண்டுள்ள வாழ்வுக்கு நேர்மாறாகவே, குடும்பத்தினுள் வாழ்வது என்ற இரட்டை வாழ்க்கை சார்ந்த உணர்வும் உணர்ச்சியும் உருவாகின்றது. இந்த நடிப்பு உருவாக்கும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற திருத்தியற்ற வாழ்க்கை, ஏன் எதற்கு இப்படி வாழ்கின்றோம் என்பதற்கு அவர்களுக்கே பொருள் தெரிவதில்லை.


மற்றவனுக்காக வெளி உலகத்துடன் நடிக்கின்ற உறவும், அது சார்ந்த போலி உணர்ச்சியும், உணர்வும், தன்னை மீறி அதை உண்மையானதாக நம்பிவிடுகின்ற சொந்த மனம். அதை மற்றவர் தன் மீது உண்மையாக செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தான் போலியாக நடிப்பது தெரியாது, மற்றவர் உண்மையாக இருக்கவேண்டும் என்பது இதன் முரண்பாடு. உணர்விலும் உணர்ச்சியிலும் கூட, எங்கும் ஒரு பொருள் சார்ந்த பண்பு சார்ந்த திருப்தியற்ற கொடுக்கல் வாங்கல். இப்படி பொருள் சார்ந்த உணர்ச்சியும், உணர்வு சார்ந்த பண்பாடுகளும்.


உதாரணமாக பொதுவான கொண்டாட்டங்கள் என்பது, பொருளை கொடுக்கவும் வாங்கவும் நடத்தப்படுகின்றது. இந்த எல்லைக்குள் அந்த உணர்ச்சியும், உணர்வும் எப்படி சீரழிக்கப்பட்டதோ, அதே எல்லைக்குள் வாழ்க்கை முறைகள். இதில் உள்ள அற்பமான போலித்தனமான கவுரவங்கள். மற்றவனுக்காக செய்யும் போலி பாசாங்குத்தனமே. எங்கும் எதிலும் அற்பமான உணர்வுகளையே உருவாக்குகின்றது.


மனித வாழ்வு சார்ந்த அவசியமான உழைப்பு, முதலாளித்துவ உறவுக்கு உட்பட்டது. இந்த உறவு எப்படிப்பட்ட போலித்தனமானது என்பதை, ஒரு முதலாளி தொழிலாளி உறவில் காணமுடியும். ஒரு முதலாளி எப்படி அதிகமாக சுரண்ட முடியும் என்ற உணர்வும் உறவும், தொழிலாளி எப்படி தனது உழைப்பின் பயனை அடைய முடியும் என்ற அடிப்படையில் உணர்வும் உறவும் உள்ளது. இந்த முரண்பாடும் எல்லா நேரமும் வெளித்தெரிவது கிடையாது. உள்மனத்தில், அதாவது ஆழ் மனதில் அது சதா புகைந்து கொண்டும், அதுவே இவர்களுக்கு இடையில் உண்மையான உறவாக இருக்கின்றது. ஆனால் வெளிப்பார்வையில் ஒரு பகட்டான நட்பான உறவே, நடிப்பாக மேலோங்கி நிற்கின்றது. இது மிக நுட்பமானது, ஆனால் வாழ்வில் இந்த இரட்டை உறவுமுறையே, சதா அன்றாட உழைப்பில் உறவாக இயங்குகின்றது.


இந்த உறவு முறை தான் தனிப்பட்ட மனிதனின் முழுமையான வாழ்வு முறையாகின்ற போது, குடும்ப உறுப்பில் கூட இப்படி வாழ்வது என்பது என்றுமில்லாத வகையில் தீவிரமாகின்றது. ஆனால் அப்படியே நடித்தபடி போலியாக சிரிப்புடன் மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை. இது குடும்ப முரண்பாடாக வெடிக்கின்றது.


வாழ்வாக கற்பித்த பகட்டுத்தனத்தை வெளியுலகுக்கு தொடர்ச்சியாக நடிக்கலாம். ஆனால் அதை தனது வாழ்வின் முழு அங்கத்துக்கும் திணிக்க முடியாது. அது பொருளாலான உலகமல்ல, உயிர்வுள்ள உலகம். இதன் விளைவு படிப்படியாக தனக்கு நெருங்கிய உயிருள்ள உலகத்தை எதிரியாக பார்ப்பது, அப்படி கற்பித்து வாழ்வதும் உருவாகின்றது. பொருட்கள் மட்டுமே தனது நடிப்புக்கு ஏற்ப இருப்பதை மனம் காண்கின்றது. இத உயிர் உள்ளதை வெறுப்பதும், சடப்பொருளை நேசிக்கின்ற எதிர்நிலை உறவும் முரண்பாடும் உருவாகின்றது.


எங்கும் எதிலும், ஒரு இடைவெளியில் இரண்டு விதமான இரட்டை வாழ்க்கையாகின்றது. உதாரணமாக ஒரு வீட்டில் பெண்களின் தொலைபேசி உரையாடலை எடுங்கள். வெளி உலகுடன் பகட்டாக கவர்ச்சியாக அழகாக அன்பாக உரையாடும் அதே பெண், அதே உரையாடலின் இடையில் அல்லது மறுகணத்தில் குடும்ப உறுப்புடன், கோபமாக தாறுமாறாக கீழ்நிலை உரையாடலாக இருப்பதை அன்றாடம் பார்க்க முடியும். உணர்வையும் உணர்ச்சியையும் மாற்றுவதில் உள்ள வேகம், நடிப்புக்கும் வாழ்வுக்கும் உள்ள சொந்த முரண்பாட்டைக் காட்டுகின்றது.


இதை வாழ்வின் பலதளத்தில் நாம் காணமுடியும். இதுதான் வாழ்க்கை என்று, சுத்தம் சுகாதாரத்துக்கு வெளியில் பலர் வாழ முனைகின்றனர். வெளியுலகுக்கு காட்டவே கவர்ச்சியாக அழகாக உடையணிபவர்கள் உலகமிது. அந்த உடை விடையத்தில் கணவன் மனைவிக்கு இடையில், அலங்கோலமாக வாழ்கின்ற அழகுணர்ச்சியற்ற இரட்டை வாழ்க்கை. இப்படி வெளியுலக்கு வாழ்தலை இலட்சியமாக கொண்டே போலியாக நடிக்கின்றனர். ஏன் எதற்கு இவை, என்பதைக் கூட சிந்திப்பது கிடையாது. அதற்கு சமூக அறிவு கிடையாது.


நடிப்புக்கேற்ற சொந்த போலி வாழ்க்கையை, ஒரு வாழ்வாக யாராலும் எட்டமுடியாது. இது திருப்தியற்ற வாழ்வுக்குரிய சொந்த மனதை கற்பிக்கின்றது. திருப்தியற்ற வாழ்வுக்கு, தன்னை சுற்றி நெருங்கி இருப்பவர்களே காரணம் என்று கற்பிக்கின்றது. அவர்களை எதிரியாக காண்பது, சித்தரிப்பது, கற்பிப்பதுமாக சிரழிகின்றது. வாழ்வின் இரண்டாவது நடிப்பு உருவாகிவிடுகின்றது. இப்படி இரட்டை வாழ்க்கை முறை, குடும்ப உறவுகளையே நம்பமுடியாத வகையில் சிதைக்கின்றது.


உதாரணமாக இதை அடிப்படையாக கொண்ட ஊடகவியல் சார்ந்த நாடகங்கள். குடும்பத்தின் உள் வன்முறையை தூண்டுபனவாகி சதா எதிரியைக் கற்பிக்கின்றது. எதிரியற்ற தகவலை ஊடகவியலால் தரமுடிவதில்லை. ஒரு சினிமா, ஒரு நாடகம், ஒரு செய்தி, ஒரு கருத்து எதிலும் எதிரியின்றி கருத்தைத் தரமுடிவதில்லை. எதிரியற்ற வாழ்வா, இதை மனிதனால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. தனிமனிதன் சதா தனது எதிரியைத் தேடி அலைகின்றான். இப்படி எதிரிகள் கொண்ட உலகம், சில கதாநாயகர்கள் பற்றி விம்பங்களை கட்டமைக்கின்றது. இது சமூகத்திலும் குடும்பதிலும் கூட உருவாகின்றது.


எதார்த்தத்தில் யாரை ஊடகவியல் கதாநாயக(கியா)னாக காட்டுகிறதோ, அவர்கள் தான் மனிதனின் பொது எதிரியாக இருப்பதும், மனித வாழ்வை அழிப்பவர்களாகவும் உள்ளனர். மனித வாழ்வை அழிப்பதால், அவர்கள் கதாநாயக(கிய)னாகின்றான்(ள்). ஊடகவியல் என்ன செய்கின்றது. மனித உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் இந்த போலியான கதாநாயக(கி) உலகைச் சுற்றி, போலியாக அவர்களையும் வாழத் தூண்டுகின்றது. இப்படி மனிதன் போலியாக நடித்தபடி மற்றவனுக்காக வாழ்கின்ற பகட்டு வாழ்க்கை, சொந்த முரண்பாட்டுடன் குடும்ப அலகையே மொழி மற்றும் உடல் வன்முறைக்குள் சீரழிக்கின்றது.