அத் 4.34,35 இல், "ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்கு காரணம் அல்லாஹ் அவர்களின் சிலருக்குச், சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள். மேலும் ஆண்கள் இல்லாத போது (அப்பெண்கள்) அல்லாவின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு, நல்லறிவு புகட்டுங்கள்.. படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்... மேலும் அவர்களை அடியுங்கள்."
பெண்களை ஆணுக்கு கீழ்ப்படிந்து நடக்க கோரும் குர்ஆன் பெண்ணின் கீழ்ப்படிவுக்கான காரணம் ஆணின் செல்வத்தில் வாழ்பவள் என்பதை விளக்குகின்றது. இந்தச் செல்வத்தை அல்லா கொடுத்தார் என்றதன் மூலம் ஆணாதிக்க தனிச் சொத்துரிமையை இறை சட்டமாக்கினர்.
இதன் மீதான போராட்டமின்றி பெண் விடுதலை சாத்தியமில்லை. பெண் இழந்து போன சொத்துரிமையை மீளப் பெறும் சமூக மயமாக்கல் போராட்டத்தினுடாகவே, பெண்ணின் விடுதலை நிபந்தனையாகின்றது. தனிச் சொத்துரிமையே பெண் அடிமைப்பட்டதற்கு காரணம் என்பதை, நபிகள் புரிந்து, அதனால் பெண்களை அதற்குட்பட்டு வாழக் கோரிய அளவுக்கு இன்று பெண்ணிலைவாதிகள் தனிச்சொத்துரிமைக்கான காரணத்தை காண மறுக்கின்றனர்.
நபிகள் அனுபவரீதியாக யுத்தத்தில் கொள்ளையடித்த செல்வச் செழிப்பில் பெண் மேலும் மேலும் அடிமையாக சிதைந்து சென்றதை, ஒரு தத்துவவாதிக்குரிய அனுபவத்துடன் காரணத்தை சரியாகவே புரிந்த கொண்டு விளக்கினர். இதனால் பெண்களின் உரிமைகள் சிலவற்றை நிபந்தனைக்குட்படுத்தி பாதுகாக்க முற்பட்டார்.
ஆனால் ஆணாதிக்க சொத்துரிமை, யுத்த செழிப்பால் வேகமாக வளர்ந்த போது, பெண்ணின் அடிமைத்தனத்தை அங்கீகரிப்பது மட்டுமே நபிகளின் அதிகாரத்தை உறுதி செய்யும் சமூக எல்லையாகவிருந்தது.
தமிழ் அரங்கம்
Wednesday, October 5, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment