தமிழ் அரங்கம்

Sunday, December 25, 2005

அரசியல் என்பது

அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது.

தமிழ்மக்களின் தலைவீதி ஒரு சிலரால், தமது சொந்த குறுகிய நோக்கில் கையாளப்படுகின்றது. அரசியல் கொலைகள் தொடருகின்றன. இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரறாஜசிங்கம் நேற்று (இன்று) படுகொலை செய்பப்பட்டார். இப்படியான ஒவ்வொரு கொலையும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அறைந்து சொல்லும் செய்தியென்ன.

வாயை மூடு என்பது தான். அடிமையாய் இரு என்பதைத் தான் சொல்லுகின்றது. இதைத் தாண்டி எதுவுமல்ல. இது தேசியத்தை பெற்றுத் தரப்போவதுமில்லை. கைக்கூலிகளை ஒழித்துவிடப் போவதுமில்லை. புலியின் அராஜகத்தை ஒழித்துவிடப் போவதுமில்லை.

அடிமை மக்கள் கைகட்டி, வாய் பொத்தி, மௌனமாக இரு என்று ஒவ்வொரு கொலையும் எமக்கு உரைக்கின்றது. உண்பதற்காக வாயை திற, அதற்காக மாடுமாதிரி உழை, கொலைகாரர்களை உருவாக்க புணர்ந்த பிள்ளையைப் பெறு. இது தான் கொலைகாரர்கள் மக்களுக்கு சொல்லும் ஒருயொரு செய்தி. கொலையை கண்டிக்காதே. அதை விமர்சனம் செய்யாதே. நாம் சொன்னால் கர்த்தால் செய், ஊர்வலம் போ. இது கொலைகாரனின் அதிகாரத்துடன் கூடிய செய்தி.

அமைதி சமாதனம் வேஷம் போட்டு மீண்டும் கொலைகளை தொடங்கியவர்கள் புலிகள். அதே பாணியில் அண்மைக்காலத்தில் எதிர்தரப்பும் மீண்டும் கொலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். ஜோசப் பரறாஜசிங்கம் இந்த வகையில் கொலப்பட்டுள்ளார். இதற்கு முன் நிகழ்ந்த பல படுகொலைகளை இவர் கண்டித்தவர் அல்ல, ஆதாதரித்தவர் கூட. அந்த அரசிலுக்கு இவர் பலியாகியுள்ளார். கொல்லப்படும் பலரின் சோகம் இப்படி உள்ளது. இதை எப்படி நாம் புரிந்து எதிர்கொள்வது.

கொலை செய்யப்படுவர்கள் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்து சமூகத்தின் கீழ் மட்டம் வரை உள்ளடங்குகின்றனர். மிக மோசமான மக்கள் விரோதிகள் முதல் அன்றாடம் கஞ்சிக்கே வழி இல்லாது எதிர்வினையாற்றுபவர்கள் கூட கொல்லப்படுகின்றனர்.

நடக்கின்ற தொடாச்சியான நிகழ்வுகள், எந்தக் கொலையையும் நாம் மௌனமாக ஏற்றுக் கொண்டு இருக்க முடியாத நிலையை உருவாக்கின்றது. நடப்பவை எல்லாம் தமிழ் மக்களை மேலும் அழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. தமிழ் மக்கள் என்ற அடையாளம் சிதைந்து, சிராழிந்து போகும் அளவுக்கு இவை மாறிவிட்டது. கொலைகளை இன்று கண்டிப்போர் பலவிதமாக செயலாற்றுகின்றனர். புலிகள் தாம் செய்யும் கொலைகளை கண்டிப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியினர் தாம் செய்யும் கொலைகளைக் கண்டிப்பதில்லை. பரஸ்பரம் இதில் ஒரு இனம் காணமடியாத ஒற்றுமை. கொலை செய்தவர்கள், அதை கொலை செய்யப்பட்ட தரப்பே செய்தாக புணாந்து செய்தி வெளியிடுகின்றனர்.

உண்மை, நீதி, மனிதத்துவம் என என எதுவுமற்ற அராஜகத்தில் அரசியல், தேசியம், மனித உரிமை எல்லாம் சிதைந்து சின்னபின்னமாகின்றது. கொலையைக் கண்டிப்பது கூட சிலருக்கு (ரி.பி.சி புலியெதிர்ப்பு அணிக்கு) உள்நோக்கம் கொண்ட அரசியலாகிவிட்டது. கொலைக்கான சமூகக் காரணங்களை கேள்விக்குள்ளாக்காத கண்டிப்பது போலித்தனமானவை.

ஒரு தரப்பு கொலையைக் கண்டிப்பது அதை விடக் கேவலமானது. அரசியல் கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம் முதத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது. ஒரு பக்கம் பேரினவாதத்தால் ஊட்டிவளர்க்கப்படும் கைக்கூலி கொலைகாரக் கும்பல்கள், மறுபக்கம் குறுந்தேசியத்தின் பெயரில் அலையும் வெறிபிடித்த கொலைகாரர்கள். இதுவே எம் அரசியலாகிவி;ட்டது. அங்கு இங்கும் சமரை வீசுவதும் எமது நக்குத் தனமாகிவிட்டது.

பாவம் மக்கள். மிரண்ட விழியுடன் பரபரக்க தமக்குள் தாமே குசுகுசுக்கின்றனர். இந்த கொலைகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. கொல்லப்பட்டவர் எந்தளவு பெரிய சமூக விரோதியாக இருந்தாலும், இன்று இதுவே எமது மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த கொலைகளின் பின்னால் எந்த தர்மிக பலமும், குறைந்தபட்ச அரசியல் நேர்மையும் கிடையாது. ஒரு தலைப்பட்சமாக கொலைகளை கண்டிப்பதையும் நாம் அனுமதிக்க முடியாது. மக்கள் மட்டும் தான், தமது சொந்த தீர்வுகளை வழங்க முடியுமே ஒழிய, மக்களை அடிமைப்படுத்தும் கொலைகாரக் கும்பல்கள் அல்ல.

அனைத்து கொலைகளையும் நாம் எதிர்ப்போம்!
இதற்கான அரசியல் சமூக வேரை இனம் கண்டு, அதை அம்பலம் செய்வோம்!
மக்கள் மட்டும் தான் வரலாற்றை தீர்மாணிக்க முடியும்;. கொலைகாரர்கள் அல்ல!

15 comments:

தமிழரங்கம் said...

ப.வி.ஸ்ரீPரங்கன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது கம்யூட்டர் பழுதுபட்ட காரணத்தினால் இணையத்தில் பதிவிட முடியாது உள்ளதாக தொவித்தார். இதனால் குறிப்பிட்ட தகவலை தனது பெயரில் போடும் படி கேட்டக் கொண்டார்.

தான் ஜோசப் பரறாஜசிங்கத்தின் கொலை கண்டிப்பதுடன், அனைத்து கொலைகளையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

"ஜோசப் பரறாஜசிங்கம் இந்த வகையில் கொலப்பட்டுள்ளார். இதற்கு முன் நிகழ்ந்த பல படுகொலைகளை இவர் கண்டித்தவர் அல்ல, ஆதாதரித்தவர் கூட."

ஆயுதம் ஏந்தாத, மக்கள் விரும்பிய ஒருமனிதரின் மரணத்திகூட உங்கள் அரசியலா? மனிதம் மரித்து விட்டதா?

தமிழரங்கம் said...

எப்படி கொலையை ஒரு தரப்பு தனது குறுகிய நோக்கில் அரசியலாக்க முடியுமா, அப்படித் தான் அனைத்தும் அரசியல். இந்த அளவுகோலை நீங்கள் அனைத்து அரசியல் கொலைக்கும் நீங்கள் சொல்வதில்லை. ஆயுதம் எந்தாத எத்தனை பேர் எம்மண்ணில் கொல்லப்பட்டனர். ஆயிரம் பத்தாயிரம் எண்ணிக்கை கற்பனையானதல்ல நன்பரே. இங்கு மனிதபிமானம் இல்லையோ! இவரை மக்கள் விரும்பியல்ல, புலிகள் விரும்பி தெரிவு செய்யபட்ட ஒருவர் தான் இவர். இதற்கு விளக்கம் எதுவும் செல்லுபடியாகது. மனிதம் மரித்தது, எமது தேசிய விடுதலைப் போராட்டம் உட்படுகொலையையும், சகோதரப் படுகொலையை தொடங்கிய போதே.
பி.இரயாகரன்
25.12.2005

Anonymous said...

மக்கள் விரும்பும் தலைவருக்கும் மக்கள் வெறுக்கும் தலைவர்களுக்கும் வித்தியாசம் இருக்கும் போது அளவுகோல்கள் மாறுபடுவது இயல்புதானே, அத்தலைவர்கள் மக்கள் விரும்பியா? எதிரியா? என்று மக்கள்தானே சொல்ல வேண்டும். நானோ. நீரோ மட்டும் சொல்லமுடியாது அல்லவா?

தமிழரங்கம் said...

மக்கள் என்பதை எற்றுக்கொண்டால் என்பது மிக முக்கியமானது. ஆனால் மக்களை மந்தைகளாக பயன்படுத்துவது என்பது நிகழத்தான் செய்கின்றது. உதாரணமாக மக்களை மந்தைத்தனத்தில் கூட மட்டக்களப்பு மக்கள் பராஜசிங்கத்தை தேர்ததில் நிராகரித்தே இருந்தனர். பின் புலிகள் இருவருக்கு பதவி வழங்கினார். மக்கள் தெரிவு செய்யப்பட்டவரை வெளியேற்றினர்.
பி.இரயாகரன்
23.12.2005

ஈழநாதன்(Eelanathan) said...

இரயா நடைபெறும் கொலைகள் ஒவ்வொன்றும் மக்களது இருப்பைக் கேள்விக்குறியாக்குபவை என்ற வகையில் கண்டிக்கப்படவேண்டியவைதான்.ஆனால் பரராஜசிங்கத்தின் கொலைக்கான உங்கள் கண்டனத்துடன் கூடவே ஈழத்தில் நடைபெற்ற கொலைகள் பலவற்றை பரராஜசிங்கம் ஆதரித்தவர் என்ற கூற்றையும் சேர்த்திருப்பது ஏன்?

ஈழத்தில் வசிக்கும்/வசித்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் கொலைகளை ஆதரித்திருக்கிறோம்/மௌனமாக இருந்திருக்கிறோம்/எதிர்க்காமல் இருந்திருக்கிறோம்.ஆக கொல்லப்படும் ஒவ்வொருவரையும் சுட்டி இவர் அந்தக் கொலையை எதிர்க்கவில்லை இந்தக் கொலையைக் கண்டிக்கவில்லை அவர் கொல்லப்பட்டபோது வாய்மூடி இருந்தார் எனபிற்சேர்க்கை வழங்குவது அபத்தமாகப் படுகிறது.

இதையும் இந்த இடத்தில் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நீங்கள் நினைத்தால் ஒரு கேள்வி.

மத்திய கல்லூரி அதிபர் ராசதுரை கொல்லப்பட்டபோது ஒடுக்கப்பட்ட மக்களின் தோழர்.விடுதலை வீரர் என்றெல்லாம் எழுதினீர்கள்.அவரால் ஒடுக்கப்பட்ட மக்கள் எத்தனைபேர் இன்னமும் ஒடுக்கப்பட்டார்கள் அவரினதும் அவர் சார்ந்த அரசியற் குழுவினரதும் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்றெல்லாம் கூறவில்லை.

அவர் ஈபிடிபி செய்த எத்தனை கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார்.எத்தனையை நியாப்படுத்தினார்.எத்த்தனை வன்முறைகளை தனது சுயலாபத்திற்காக மேற்கொண்டார் என்று கூறவில்லை.

இப்படியே ஆராய்ந்துகொண்டு போவது நிச்சயம் எனக்கும் உடன்பாடில்லை.அப்படிப்பார்த்தால் எல்லோருமே ஏதோ ஒருவகையில் குற்றவாளிகள்தாம்

தமிழரங்கம் said...

நட்புடன் ஈழநாதனுக்கு

உங்கள் கருத்தை பார்த்தேன். வாதத்துக்கு நன்றிகள். கொலைகளை கண்டிப்பது என்பது என்பது, இன்று பொதுவாக சார்புத்தன்மை பெற்றுள்ள நிலையில், அவைகளை சரியாக கண்டிக்கப்படுவதில்லை. இந்;த வகையில் மக்கள் நலன் சாhந்த சமூகப் பார்வை இன்றி பொதுவாக அரசியல் செய்யப்படுகின்றது. இந்த வகையில் நாம் மொத்த வன்முறையையும் மக்கள் நலன் சார்ந்து கண்டிக்க வேண்டியுள்ளது. ஏப்படி மக்களுக்கு இது எதிரானதோ, அதே போல் கொலைகளை ஆதாரிப்பவர்ளை கண்டிக்க வேண்டியுள்ளது.

இரண்டாவது கூட்டமைப்பு உறுப்பினாகள் புலிசார்பாக இருந்த போதும், 1948 முதல் மக்கள் நலன் சார்ந்தவர்கள் அல்ல. நான் இந்த விவாவதத்தை இதற்குள் நடத்த விரும்பவில்லை. மக்களின் எதிரியாகவே இருந்தவர்கள், இருக்கினறார்கள்.

முன்றாவது இராசதுரை பற்றி நாம் எழுதிய போது, கடந்தகாலத்தை பற்றி மட்டும் தான் எழுதினோம். இதில் இராசதுரை நீங்கள் குறிப்பிட்டது போல் ஈ.பி.டி.பி உறுபினர் என்பது சரியான தகவல் அல்ல. கொன்றவர்;கள் கூட இதை சொன்னது கிடையாது. ஏன் கொன்றோம் என்று கூறியது கிடையாது.

நான்கவது கொலை ஆதாரித்தவர்கள் என்பது மக்ககளின் மெனத்தையம், பினாமிகளையும் ஒன்றாக நாம் பார்ப்பதில்லை. மக்கள் பயத்தில் மௌனிக்கின்றனர். பினாமிகள் பிழைப்பில் அதை ஆதாரிக்கின்றனர். அதுவும் இவர் தன்னை தமிழ் தலைவராக அடையாளம் காட்டியவர்கள். இலங்கையில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதும், இவர்கள் தமிழ் தலைவராக இருந்தனர். ஆனால் கொலையை கண்டிக்கவில்லை. இராணுவம் செய்ததை மட்டும் கண்டித்தவர்கள். மற்றையவறை ஆதாரித்தனால் மட்டும் இன்று தமிழ் தலைவரானார்.
பி.இரயாகரன்
25.12.2005

ஈழநாதன்(Eelanathan) said...

பதிலுக்கு நன்றி தமிழ்க்கூட்டமைப்பு,அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி இவர்களின் அரசியல் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்துத் தான் என்னுடையதும்.

நான் ராசதுரை ஈபிடிபியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடவில்லை அவர்களின் ஆதரவாளர் என்றுதான் குறிப்பிட்டேன்.தனக்குப் பிடிக்காத ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்வது ஆள்வைத்து அடிப்பது போன்று பல செயல்களில் அவர் ஈடுபட்டது எனக்கு நேரடியாகத் தெரியும் அவ்வளவே மற்றும்படி அத்னை இங்கு விவாதிக்கும் நோக்கமில்லை

Anonymous said...

கேக்கிறவன் கேனயனெண்டால்..........

தேனி இணையத்தளம் தரும் அறிக்கை???????????

ஜோசப் பரராஜசிங்கத்தின் மீதான மரணதண்டனைக்கு உரிமைகோரும் சென்னன் படை

அன்புடன் கிழக்கு வாழ் மக்களுக்கு

எமது கிழக்கு மண்ணினதும் மக்களினதும் துரோகி ஒழித்துக்கட்டப்பட்டுள்ளான்.எமது இனத்தின் துரோகியாகிய ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு சென்னன் படைப்பிரிவாகிய நாம் உரிமை கோருகிறோhம். எமது கிழக்கு மக்களுக்கும் மண்ணுக்கும் இழைத்த துரொகத்திற்கும் வன்னிப் புலிகளுடன் இணைந்து யுத்தமொன்றுக்கு வழிவகுத்து கிழக்கு மக்களை அழிப்பதற்காக வழிவகுத்தமைக்கே சென்னன் படையாகிய எம்மால் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி அரியேந்திரன் சம்பந்தன் துரைரெட்ணசிங்கம் கனகசபை பத்மநாதன் தங்கேஸ்வரி ஆகியோருக்கும் பகிரங்க எச்சரிக்கை விடுக்கிறோம். கிழக்கு மக்களுக்கு துரோகம் இகை;காமல் உடனடியாக உங்களது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு உங்கள் குடும்பங்களுடன் ஒதுங்கி வாழுங்கள். இல்லை நீங்களும் வன்னிப் புலிகளுடன் இணைந்து எம் மக்களை அழிப்பதற்கான திட்டங்களில் பங்கெடுப்பீர்களாயின் உங்களுக்கும் எம்மால் வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

வன்னிப் புலிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுப்பவர்களும் அவ் ஆர்ப்பட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தலைமை தாங்கி வழி நடாத்துபவர்களுக்கும் இச் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவில்லையாயின் அவர்களுக்கும் மரணதண்டனை நிச்சயம்.

கிழக்கு மக்களுக்காகவே நாம்.

சென்னன் படையணி

கிழக்கு மண்

25-12-05

Anonymous said...

"இரண்டாவது கூட்டமைப்பு உறுப்பினாகள் புலிசார்பாக இருந்த போதும், 1948 முதல் மக்கள் நலன் சார்ந்தவர்கள் அல்ல."

ஆக மொத்தத்தில் புலிக்கு ஆதரவானவர் என்பதால்தான் அவர் உங்களுக்கு எதிரி, மக்களுக்கு ஆதரவானவர் அல்ல என்பது உங்கள் போலி உச்சரிப்பு, புலிகளினால் பட்ட வடுக்கள்தான் உங்களை இப்படி பேச வைக்கிறது. தமிழ்கூட்டனியில் பலர் முதலில் புலி எதிர்ப்பாளர்தான், ஆனால் அவர்கள் இப்போது உண்மையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருகாயமும் படாதவன் புலியை ஆதரிப்பதறக்கும் காயம் பட்டவர்கள் புலியை ஆதரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, அவன் மனிதன் என்றால் இவர்கள் மாமனிதர்கள். நீங்கள் எப்போது மாமனிதர் ஆகப்போகிறீர்கள்?

தமிழரங்கம் said...

1.தேனீயில் கொலையை உரிமை கோரி வெளியாகிய செய்தி, எனது பதிவில் ஒரு அனாமதேயம் பதிவிட்;டுள்ளது. கொலையை எதிர்ப்பதாக கூறும் தேனீ, அதை விமர்சனம் இன்றி பிரசுரித்துள்ளது. மனிதவிரோத நடத்தைகளையே இந்த உரிமைகோரல் நேரடியாக செய்கின்றது. அத்துடன் தொடர் கொலைக்கு அச்சுறுத்தலை விடுகின்றது. இதன் பின் எந்த மக்கள் நலனும் கிடையாது. புலிகள் எதைச்செய்கின்றனரோ, அதையே அப்படியே பிசாகுகின்றி செய்கின்றனர். மிகக் கேவலமான மனிதவிரோத நடத்தைகள். இதன் மூலம் கிழக்கு மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. கிடைப்பது அடிமைத்தனம் தான்.

மக்களின் பெயரில் உரிமை கோரால்கள் எச்சரிக்கைகள். பல படைப்பிரிவுகளின் பெயரில் கேடுகெட்ட மனிதவிரோத நடத்தைகள். இதில் எங்கே உள்ளது மக்கள் நலன்;.

புலிகளின் மக்கள் விரோத அரசியல் சரி, பராஜசிங்கத்தின் பினாமி வாழ்கை சரி, அரசியல் ரீதியாக மக்கள் நலன் சார்ந்து அனுகப்பட வேண்டியது அவசியம்;. தனிநபர் பயங்கரவாதம் வழிகள் எப்போதும் எங்கும், நீங்கள் எந்த மக்களை பாதுகாக்க போவதாக கூறுகின்றீர்களோ அவர்களுக்கு எதிரானதாகவே அமைகின்றது. நாங்கள் 1980 களில் அரசியல் ஈடுபடத் தொடங்கிய போதே, இந்த தனிநபர் பயங்கரவாத அரசியலை விமர்சித்தவர்கள். இதன் விளைவு இப்படி தான் அமையும் என்ற கூறயவர்கள்.

2.இரண்டாவது பதிவளார் கூறுவது போல் புலிகள் என்பதால் இதை அனுகவில்லை. கூட்டணியின் அரசியலுக்கு எதிராக 1975 களிலேயே நாம் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்கள்;;. அவர்கள் மக்களின் அவலங்களில், தமது வயிறு வளர்த்தவர்கள். இது பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவர்களின் நீட்சியாகத்தான் புலிகள் உருவானவர்கள்;.

புலிகளால் பதிக்கப்பட்டவன் என்பதால் நான் புலியை விமர்சிப்பதில்லை. புலிகளில் இருந்து தப்பிய ஒரு கட்டத்தில் புலிகள் இருந்த மேடையில், அவர்களை எப்படியும் துற்றலாம் என்ற ஒரு வசதி இருந்த போதுகூட, நான் மக்களை நலனை எடுக்கும் படி பகிரங்க வேண்டுகோளை விடுத்தவன். எனக்கு தனிப்பட்ட எந்த காழ்ப்பும், பழிவாங்கும் உணர்வும் இருந்தது இல்லை. (பார்க்க இணையத்தில் எனது உரையின் ஒலி நடாவை) நான் புலிகளை விமர்சிப்பது மக்கள் நலனுக்கு எதிரான அவர்களின் அரசியலைத்தான். அவர்கள் அரசியல் ரீதியாக தம்மை சுயவிமர்சனம் செய்து மக்கள் நலனை முன்னெடுத்தால், அவர்களை நான் ஆதாரிப்பேன்.

இந்நிலையில் நாம் மாமனிதராவது என்பதை விட, ஒரு தெருப்பிணமாக ஒரு அனாதையாக சாவதையே விரும்புகின்றேன். மாமனிதன் என்றால், நான் மக்களுக்கு துரோகம் செய்யவேண்டும். இது சுயஅறிவுள்ள மனிதனால் சாத்திமற்றது. மாமனிதன், தியாகி முதல் பல போலி புகழ் உரைக்கு பின்னால், மக்களை அடிமைப்படுத்தும் நடைமுறைகள் உள்ள இன்றைய நிலையில், அனாதையாக ஒரு தெருப்பிணமாக மரணிப்பது மேலானது. மனித வரலாறு அனாதைகளை கண்டு கொள்ளும்;. 1986 க்கு முன் மக்களுக்காக போராடி அனாதைகளாக விடப்பட்டவர் வரிசையில் மரணிப்பது புரட்சிகரமானது. மனித வரலாற்றுக்கு அவற்றை விட்டுவிடலாம்.
பி.இரயாகரன்
25.12.2005

Anonymous said...

"இந்நிலையில் நாம் மாமனிதராவது என்பதை விட, ஒரு தெருப்பிணமாக ஒரு அனாதையாக சாவதையே விரும்புகின்றேன். மாமனிதன் என்றால், நான் மக்களுக்கு துரோகம் செய்யவேண்டும். இது சுயஅறிவுள்ள மனிதனால் சாத்திமற்றது."

புலிகளின் பின்னால் உள்ள ஒட்டுமொத்த மக்களும், சுயபுத்திஅற்றவர்கள் என்பதுதான் உங்கள் எண்ணமா? அல்லது அப்படி யாருமில்லை என்பது உங்கள் துனிபா?

தமிழரங்கம் said...

நட்புடன்
விவாத அடிப்படையில் உங்கள் தர்க்கம் சரியானது. வாழ்த்துகின்றேன்;. மக்கள் என்ற பேசும் புலிகள், அதை மக்களின் சமூக பொருளாதார நலன்களுடன் முன்னெடுக்காத வரை எனது வாதம் சரியானது. இங்கு சுயமான சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றது. உதாரணமாக யாழ்குடாவில் நடக்கும் தாக்குதலை எடுங்கள். இதை புரிந்து கொள்ளும் அனைவருக்கும் தெரியும் புலிகள் தான் செய்கின்றார்கள் என்று. ஏன் புலிகள் கூட மக்கள் செய்வதாக நம்புவதில்லை. உலகத்தில் யாரும் நம்புவதில்லை. ஆனால் சுய அறிவற்ற நிலையில், நாம் எதோ சொல்ல முனைகின்றோம் அல்லவா!

புலிக்குள் சுய அறிவுள்ளவர்கள் இருப்பார்கள். ஆனால் மௌனமாக இருப்பார்கள். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். இதற்கு காலம் பதில் சொல்லும். புலியில் உள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் சிந்திக்க கூடிய மனித இனத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டுக்காக தியாகம் செய்ய விரும்பியவர்கள்;. வரலாற்றில் அவர்களை முட்டளாக்க முடியாது. உண்மையை தேடும் ஒரு காலம் அவர்கள் முன்வரும்.

நாளை நான் ரி.பி.சிக்கு எதிராக போடவுள்ள கட்டுரையை படிக்கவும். அவர்கள் எப்படி மக்களை புலியின் பெயரால் முட்டளாக்கின்றனர் என்பதை பார்க்கவுள்ளேன்.
பி.இரயாகரன்
25.12.2005

Anonymous said...

"மக்கள் என்ற பேசும் புலிகள், அதை மக்களின் சமூக பொருளாதார நலன்களுடன் முன்னெடுக்காத வரை எனது வாதம் சரியானது."

இதுவரைக்கும் புலிகள் சமூகபொருளாதார நலன்கள் எதையும் முன்னெடுக்கவில்லையா? அல்லது வாதத்திற்காக மறுக்கிறீர்களா?

வயலிலே களைகள் பறிக்கப்படும்போது சில நல்ல நெற்கதிர்களும், சேர்ந்து பிடுங்கப்படுவது தவிர்க்கமுடியாதது, அதுவருந்தத்தக்கதுதான். அதற்காக அந்த வயலே நாசமாக வேண்டுமென்று நினைப்பது சரியா? அல்லது வயலின் காவல்காரனை அழித்துவிட்டால் அந்த வயலுக்கு பாதுகாப்பு வந்துவிடுமா?
இனி ஒரு புதிய காவல் காரணை உருவாக்க இதே அளவு உயிர்களையும், உடமைகளையும் அந்த மக்களால் மீண்டும் கொடுக்கமுடியுமா? அதற்கு காலம்தான் இடம்கொடுக்குமா?
இந்த தலைமுறை முடிந்து விட்டால் அடுத்த தலைமுறையில் இதேவீச்சோடு போராட்டம் நடைபெறுமா? எல்லாத்துக்கும் மேலாக சிங்களத்திடமிருந்து மக்களது விடுதலை முக்கியமாக உங்களுக்கு தெரியவில்லையா? இருப்பதில் நல்லதை தெரிவு செய்வதுதானே புத்திசாலித்தனம். கனிந்திருக்கும் காலத்தை அழித்துவிட்டு, முதலில் இருந்து வரவேண்டுமென்பது உங்கள் எண்ணமா? எம் மக்கள்விடுதலை அடைய அவர்கள் கொடுத்த விலைபோதாது என்பது உங்கள் துனிபா?

தமிழரங்கம் said...

நட்புடன்

மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் என்றும் புலிகள் ஒன்றியது கிடையாது. இதனால் தான் புலிகள் பொராட்டம் மக்கள் பொராட்டமாக அமையவில்லை. சதிகளை அடிப்படையாக கொண்ட பொராட்டமாக மாறிவிட்டது.

மக்களின் சமூக பொருளாதார வாழ்வு என்பது, மக்களின் அன்றாட பொருளாதார வாழ்வின் மீதான பொருளாதாரக் கொள்கைதான். இந்த தேசிய விடுதலைப் போராட்டம் அதை உள்ளடங்கிய வகையில் முன்னேறியது கிடையாது.

மக்களை எமாற்றவும், தம்மை மக்கள் நலன் சார்ந்தாக காட்ட புலிகள் பின்நிற்கவில்லை. புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை உள்ளடங்கிய கொள்கை விளக்க நூலை (இது ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்தது.) "சோசலிச தமிழீழம்" எனறே தலைப்பிடுகின்றனர். அதில் அவர்கள் அரசியல் இலட்சியம் என்ற பகுதியில் "தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு ... அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறகின்றனர் "தேசிய விடுதலை எனும் பொழுது ....ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மானத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் மேலும் விளக்கம் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வாகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடன், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்... " ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கம் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமழீழ சமூக வடிவமானது ஒரு முதிhச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. ... வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு... பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் உடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்கமுறைகளையும் ஒழித்தக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் கோராட்டம் என்கின்றனர். அனால் இந்த அரசியலை புலிகள் முன்னெடுத்து கிடையாது. மாறாக இவை ஒடுக்கப்பட்டன. வலதுசாரிய நிலைக்குள் தம்மை வக்கரித்துக் கொண்டனர். சமூகத்தில் உழைத்து வாழும் மக்கள், வாழ மடியாத நிலையை எற்படுத்தி புலிகளே சுரண்டினர்.

இதைப்பற்றி விடுதலை என்ற நூலில் எம்.ஜி.ஆர்க்கு கூறும்போது "விடுதலைப் புலிகள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தயாகமான தமழீழத்தின் சுதந்திரத்திகாகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம்.... எழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்" என்கின்றார். கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்றால் எப்படி "சோசலிச தமிழீழம்" வரும். புலிகள் வர்க்கமற்ற சழுதாயத்தை படைக்கப் போவதாக கூறிய இயக்கம். ஆனால் தாம் கம்யூனிஸ்ட்டுகள் அல்லை என்றகிறார். ஒன்றுக்கு பின் ஒன்றாக முரணாகவே மக்களையும் சமூகத்தை எமாற்றும் ஒரு அரசியல் மோசடியைத் தவிர, வேறு எதையும் இது கூற முனையவில்லை. ஏன் நான்கு அமைப்புகளும் ஒன்றினைந்து விடுத்த கூட்டு அறிக்கையில "தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிச புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்பதல்" தமது இலட்சியம் என்று கூறியே பிரபாகரன் கைnழுத்திட்டார். இதே சமகாலத்தில் தான் பாலசிங்கம் தங்கள் சோசலிச இலட்சித்தை முன்னெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். சாதி ஒழிப்பு, உழைககு மக்களின் சுபீட்சம் என்று எதுதையும் பெற்றுத்தர புலிகள் போராடப் போவதில்லை என்பதையே மூடிமறைத்து கூறுகின்றார். அவை மக்களையும், உலகத்தையும் எமாற்றும் மோசடியான வார்த்தைப் பிரயோகங்களே என்பதைத் தான், முன்னைய தமது சொந்த அறிக்கையை மறுத்து கூறமுனைகின்றார். இப்படி நூற்றுக்கானக்கான எடுத்துக் காட்டுகளை புலிகளின் முன்னையதுக்கு பிந்தியதுக்கு இடையிலும், சமகாலத்திலும் எடுத்துக் காட்டமுடியும். மக்களை கண்டு அஞ்சும் புலிகள், மக்களின் வாழ்வை சூறையாடுகின்றனர். சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல், நிலப்பிரத்துவ என சமூக பிற்போக்க எதிராக எதையும் முற்போக்காக முன்னெடுத்தது கிடையாது. மாறாக இப்படி கோரியவர்கள் கொல்லப்பட்டனர்.

இங்கு சில நல்ல களைகள் அல்ல. பயிர்தான் புடுங்கப்பட்டது என்பதே உண்மை. ஒன்று இரண்ட இல்லையே பல ஆயிரம் பேர் களையெடுக்கப்பட்டனர். முஸ்லிம் கிராமங்கள் பல புலிகாளல் கூட்டு படுகொலைக்கு உள்ளானது. பல சிங்கள கிராமங்கள் கூட்டுப்படுகொலைக்கு உள்ளனது. அதற்காக தமிழ் மக்களுக்கு மேல் இது நடக்கவில்லை என்று இது சொல்வதாகது. சிங்கள பேரினவாத இராணுவம் அப்படிதான் செய்யும். புலிகள் செய்ய மடியாது. வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் ஒரே நாளில் எல்லாவற்றையும் பறித்தபின் துரத்தப்பட்டனர். இப்படி மன்னாரில். எங்கும் எதிலும் மனித உரிமை மீறல்கள். எந்த மக்களுக்காக போராடினரோ, அவர்கள் மேல் கொலைகள், கைதுகள், சித்திரவதைகள் தொடருகின்றன. ஒரு அறிக்கை கூட உண்மைத்தன்மையைக் கொண்டிருப்பதில்லை. அதில் எந்த நோமை கிடையாது.

தியாகங்கள் என்பது அhத்தமற்ற போகின்றது. இரண்டு பத்தாயிரம புலி; இளைஞர்களின் தியாகம் எதை பெற்றுத் தரப் போகின்றது. தமிழீழத்தை என்றால் எப்படி? குறிப்பாக யாழ்ப்hணத்தை பிடித்தாலும், எப்படி ஒரு தமழீழம் ஆகும். அப்படி அதுவே தமிழீழம் என்றால் எப்படி உயிர் வாழும்;. இன்னும் இரண்டு பத்தாயிரம் புலி இளைஞர்களை எமது தேசம் இழந்தாலும் கூட, இதில் இருந்து மீட்சி என்பது கிடையாது. நம்பிக்கைகள், கற்பனைகள், எமது விசுவாசங்கள், தனிப்பட்ட எங்கள் விரும்பங்கம் சார்ந்தாக மட்டும்தான் அவை உள்ளது. இவை அனைத்தும் பல கேள்விக்கு விடை தெரியாத சூனியத்தில் உள்ளது. மக்களை எதிரியாக, கண்காணிப்புக்கு உட்பட்ட அடிமைகளாக, சமூக கொருளாதார மீட்சியை முன்வைக்காத வரை எமது தேசத்தில் மீட்சி கிடையாது.
பி.இரயாகரன்
26.12.2005