தமிழ் அரங்கம்

Saturday, June 17, 2006

எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு புரட்சிகர தத்துவ முலாம்

எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு புரட்சிகர தத்துவ முலாம் பூசமுடியாது.

பி.இரயாகரன்

17.06.2006



யாழ்ப்பாணியம் என்பதாலோ, அதிகாரவாதிகள் என்பதாலோ, தலித்தியம் என்பதாலோ எதிர்புரட்சி அரசியல் புரட்சிகரமாகிவிடாது. புலி ஆதரவு போல், புலியெதிர்ப்பின் எதிர்புரட்சிகர செயற்பாடுகளும், உலகெங்கும் அம்மணமாகி வருகின்றது. இவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாகவே மக்களின் எதிரிகள் தான் என்பதையும், எதிர்புரட்சிகர சக்திகள் தான் என்பதையும், அவர்களின் செயற்பாடுகள் கோட்பாடுகளும் எதார்த்தத்தில் உறுதி செய்து வருகின்றது. இந்த மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்துவதை தடுத்து நிறுத்தவும், தம்மை புரட்சிகரமானதாக காட்டி கொள்ளவும், புரட்சிகரமான பிரிவுக்கு எதிராக தீவிரமாக எதிர்வினையாற்றுகின்றனர். அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதமோ பலவிதமானதும் மட்டுமின்றி விசித்திரமானது. இவர்களை அம்பலப்படுத்தி எழுதுபவர்களை புலிகள் பாணியில் தூற்றுவது, அவதூறுகளை புனைந்து எழுதுவது போன்ற, பலவகையான இழிவாடல்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அது மட்டுமல்ல மக்கள் விரோத எதிர்புரட்சிகர பாத்திரத்தை விமர்சிப்பதை, யாழ்ப்பாணியமாகவும் அதிகாரத்துவத்தின் குரலாகவும் தலித்திய எதிர்ப்பாகவும் காட்டி, தம்மை புரட்சிகரமான பிரிவாக நிலைநிறுத்த கோட்பாட்டு ரீதியாகவும் கூட முனைகின்றனர்.


இப்படி யாழ்ப்பாணியம், அதிகாரத்துவம், தலித்தியம் என்ற சொற்களை உச்சரித்து, புரட்சிகர முகமூடியணிந்து தலைகீழாகவே நிற்கின்றனர். இதையே அண்மையில், ரீ.பீ.சீயில் குறித்த அசுராவின் தேனீ கட்டுரையை சுட்டிக்காட்டி சிவலிங்கமும் புலம்பினார். அன்று மற்றொரு நேயர் தன் கருத்தில் தேசியத்தையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்றார். அதையும் சிவலிங்கம், மிக அருமையான சரியான கோட்பாடு என்று ஒத்தூதினார். இப்படி அரசியல் விபச்சாரத்தையே புரட்சிகரமான தத்துவ விளக்கமாக்கி, புலியெதிர்ப்பு தனக்கென ஒரு அரசியல் மூகமுடியை தேடத் தொடங்கியுள்ளது.


இந்த வகையில் தேனீயில், புலியெதிர்ப்பு அரசியலுக்கு கொள்கை விளக்கம் ஒன்றை வேடிக்கையுடன் அசுரா வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தேவதாஸ் பக்கவாத்தியத்துடன் வந்து புலம்புகின்றார். அடிப்படையான விடையமே தாம் அதிகாரத்தின் எதிர்ப்பாளராகவும் யாழ்ப்பாணிய எதிர்ப்பாளராகவும் கூறிக்கொள்ளும் அசுரா, ரீ.பீ.சீ கும்பலின் அதிகாரத்துக்கும் யாழ்ப்பாணிய வலதுசாரிய வக்கிரத்துக்கும் ஆராத்தி எடுத்து போற்றுகின்றார். அந்த இழிந்த எதிர்புரட்சிகர ஏகாதிபத்திய கைக்கூலிக் கும்பலுக்கு நிதி உதவி வேறு வழங்குகின்றார். தனிமனிதர்களான எங்களை, மக்கள் பற்றி சிந்திக்க கோரும் எங்களை, கடுமையாக கோட்பாட்டு ரீதியாக எதிர்க்கும் இவர், எதிர்ப்புரட்சிகர ஏகாதிபத்திய கைக்கூலிக் கும்பலை எந்த விமர்சனமும் செய்யாது ஆதரிப்பது தான் இதில் வேடிக்கை. தேவதாஸ் தலித்தியம் பற்றி பேசி, ரீ.பீ.சீ க்கு கால் தூசு துடைத்து விடுகின்றார். தலித்துகளின் வேலையே அது தான் என்று வேறு சொல்லுகின்றார்.


இப்படி ரீ.பீ.சீக்கு என்ற எதிர்புரட்சிகர நிறுவனத்தைச் சுற்றி உருவாகும் ஏகாதிபத்திய சார்பு கட்சி அரசியலுக்கு, யாழ்ப்பாணியம் அதிகாரத்துவம் பற்றி பேசியபடி உதவுவதே வேடிக்கையானது. புலியெதிர்ப்பின் அதிகாரத்துவ எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகவும், எதிர்புரட்சிகர சக்திகளுக்கு துணையானதாகவும், நடைமுறையில் தனது அரசியல் கொள்கையாகவே ரீ.பீ.சீ கொள்கின்றது.


அசுரா கூறகின்றார் '.... இன்று புகலிடத்தில் ரீ.பீ.சீ வானொலியின் அவசியம் என்ன? அதன் சாதனைகள் என்ன என்பதையும், ரீ.பீ.சீ க்கு முகம் சுழிக்கும் பிரான்சிலுள்ள புலி எதிர்ப்பின் மனக்குகை இரகசியமென்ன!!! என்பதையும் நான் அம்பலப் படுத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். தோழர்களே (ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் வரலாற்றுக் குற்றம் காண்பவர்கள்) நண்பர்களே (ரீ.பீ.சீயை கட்சி கட்டும்படி கட்டளையிடுபவர்கள்). உங்கள் மன ஆழத்தில் இருக்கும் அதிகார உணர்வுகளை புத்திக்கு செலுத்தாது கண்களால் சொரிந்து புத்தியை கழுவுங்கள்...முடிந்ததா? நிதானத்துடன் மானிட வரலாற்றின் பக்கங்களை புரட்டுங்கள். நீங்கள் பேசும் ஏகாதிபத்தியமும், சமூக நீதியும், மக்கள் சக்தி என்பவைகள் யாவும் வெறும் அரசில் வார்த்தைகள். ஏகாதிபத்தியமானது நேற்றோ இன்றோ முளைத்த கொம்பல்ல எழுதப்பட்ட, அறியப்பட்ட, வரலாற்றின் அனைத்துப் பக்கங்களும் ஏகபோக ஆளுமைக்கான எத்தனங்களாகவே நிரப்பப்பட்டுள்ளதைக் காணலாம். அவ்வாறு விளிக்கப்பட்ட ஏகபோகமே இன்று ஏகாதிபத்தியமாக மருவி நிற்கிறது. இது நாளை பிறிதொரு பெயராய் மருவியும் போகலாம்." என்று கூறகின்றார்.


இதன் மூலம் எதைத்தான் கூறுகின்றார். 'நீங்கள் பேசும் ஏகாதிபத்தியமும், சமூக நீதியும், மக்கள் சக்தி என்பவைகள் யாவும் வெறும் அரசில் வார்த்தைகள்" என்கின்றார். ஆகவே ஏகாதிபத்தியம் என்பது என்னெறைக்கும் நிரந்தமானது என்கின்றார். மனித வரலாறு முழுக்க அது நீடிக்கும். இதை 'சாதுரியத்தால்" அனுசரித்து வாழக் கற்றுக் கொள்வதைத் தான், உங்களுக்கு ரி.பி.சி கும்பல் சார்பாக அவர் கூற முனைகின்றார். ஏகாதிபத்தியம் என்பது நாளை இன்னொன்றாக மாறிவிடும், ஆகவே நாம் அதை பற்றி எதுவும் பேசாது எதிர்புரட்சிகர செயலில் இறங்க வேண்டும் என்கின்றார்.


நாம் கூறுவது 'வெறும் அரசியல் வார்த்தை" என்றால் வெறுமையற்ற உங்கள் அரசியல் வார்த்தைகள் தான் என்ன? அந்த நேர்மையான உங்கள் வழிகாட்டுதல் தான் என்ன? புலியெதிர்ப்பின் பின்னால் நின்று, ஏகாதிபத்தியத்தின் கால்களை படுத்துக் கிடந்து நக்க வேண்டும் என்கின்றீர்கள். அதையே தேவதாஸ் ஏகாதிபத்தியத்துக்கு பாதபூசை செய்வேன் என்கின்றார். அதைத்தான் ரீ.பீ.சீ மான வெட்கமின்றி செய்கின்றது. விபச்சார தரகனுக்குரிய வகையில் செயல்படுகின்றது. இதை பிழைகாணக் கூடாது என்கின்றார் அசுரா. அருமையான வாதம். மக்களின் முதுகில் குத்தும் கைக் கூலித்தனத்தை, அந்த எதிர்புரட்சிகர இழிசெயலை வரலாற்று குற்றம் காணக்கூடாது என்கின்றார். வேடிக்கையான நகைக்சுவையான காரியவாத சந்தர்ப்பவாத அரசியல் புலம்பல்கள்.


நாம் அவர்களை கட்சி கட்ட சொல்லுகின்றோமாம். நல்ல வேடிக்கை. எதிர்புரட்சிகர கட்சியைக் கட்டும்படி, அவர்களிடம் நாங்கள் கூறவில்லை. அவர்களே கட்டிவைத்துள்ளனர். அது தான் 'தமிழ் ஜனநாயகக் காங்கிரஸ்". அதை ரீ.பீ.சீ முதல் அனைத்து முதிர் முட்டாள்களும்" ஒப்புக்கு தமது எதிர்புரட்சிகர பின்னனி பாடலுடன் கூடிப் பாடுகின்றனர். நாங்கள் கட்சி கட்டச் சொன்னதாக கூறியபடி, ஏகாதிபத்திய கட்சிகளுக்கு பின்னால் வால்பிடித்து நிற்பது நாங்கள் அல்ல நீங்கள் தான். உலக கொள்ளைக்கார கொலைகார பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுகளுடன் நாங்கள் கூடிக் குலாவவில்லை. நீங்கள் தான், உங்கள் எடுபிடிகள் தான் கூடிக்குலாவுகின்றனர். இப்படி கூடிக்குலாவி, தலித் விடுதலை பெற்றுத் தரப் போவதாக தேவதாஸ் கூறுகின்றார். ஆகவே தலித்துகளாகிய நாம் பணம் கொடுப்போம், கைகொடுப்போம் என்கின்றார். அரசியல் சினிமாவை நன்றாகவே நடிக்கின்றனர்.


இப்படி ஏகாதிபத்திய அதிகாரத்துக்காக எதார்த்தத்தில் வாழ்ந்தபடி எம்மைப் பார்த்து 'உங்கள் மன ஆழத்தில் இருக்கும் அதிகார உணர்வுகளை" என்று கூறுகின்றனர். ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர அதிகாரத்துவம் பற்றி பெருமை கொண்டு, அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு, அதற்காக விழுந்துகட்டிக் கொண்டு இப்படி தலித்தியம் அது இது என்ற எழுத முடிகின்றது. நாங்கள் என்ன சொல்லுகின்றோம். யாழப்பாணிய பிரதேசவாதத்துக்கு எதிராக, சாதி ஒழுக்குமுறைக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு எதிராக, தேசங்களை அழித்து சூறையாடும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக, இனவொடுக்கு முறைக்கு எதிராக, இது போன்ற சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்சி அதிகாரத்தை முன்னிலைப்படுத்துகின்றோம். அவர்கள் மட்டும் தான், அதாவது அந்த மக்கள் மட்டும் தான், தம் மீதான சொந்த ஒழுக்குமுறையை அகற்ற முடியும். இதுவல்லாத எவையும், அந்த மக்களின் மீதான ஒடுக்குமுறையை பாதுகாக்குமே ஒழிய ஒழிக்காது. இந்த வகையில், இதனடிப்படையில் புலிகளை விமர்சிப்பது போல், ரீ.பீ.சீ என்ற புலியெதிர்ப்புக் கும்பலையும் நாங்கள் அம்பலப்படுத்துகின்றோம்.


ஒடுக்கபட்ட மக்கள் தம் மீதான ஒழுக்குமுறையை எதிர்த்து அதை வேருடன் அகற்றுவதை அதிகாரத்துவம் என்றால், நிச்சயமாக அதைத் தான் நாங்கள் கோருகின்றோம். இதை எதிர்த்து நிற்கும் உங்களுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான எமது குரலும் எமது போராட்டம் ஒயாது. இதை மறுத்து 'நீங்கள் பேசும் ஏகாதிபத்தியமும், சமூக நீதியும், மக்கள் சக்தி என்பவைகள் யாவும் வெறும் அரசில் வார்த்தைகள்" என்றால், ஏன் நீங்கள் இப்படி அழுது புலம்பவேண்டும். நாங்கள் வெற்று வார்த்தையைத் தான் கூறுகின்றோம் என்றால் நல்லது, வெற்று வார்த்தையல்லாத வழியில், நேர்மையாக எடுத்துக்காட்டாகவே போராடுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் வருகின்றோம். முதலில் நேர்மையான அரசியல் நடைமுறை வேண்டும். இதற்கும் ரீ.பீ.சீ என்ற புலியெதிர்ப்பு எதிர்புரட்சிகர கும்பலுக்கும் என்ன தொடர்பு. அவர்களின் கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, மக்கள் விரோத கூலித் தொழிலே அவர்களின் உயிர் மூச்சாக உள்ளது. சொந்தமாக மக்கள் அரசியல் என்று எதுவும் கிடையாது. இந்த எதிர்புரட்சிகர கும்பல் நடத்தும் 'ரீ.பீ.சீ வானொலியின் அவசியம் என்ன? அதன் சாதனைகள் என்ன என்பதை" யாரும் மக்கள் நலனில் நின்று விளக்கிவிட முடியாது. புலிக்கு எதிராக புலம்பி சப்புக் கட்டமுடியும். உண்மையில் 'முதிர் முட்டாள்களின்" எதிர்புரட்சிகர அரசியல் புலம்பலுக்கே, இது போக்கிடமாகவுள்ளது.


இங்கு அடுத்த கூத்தாக எம்மைப்பற்றி கூறும் போது 'யாவும் வெறும் அரசில் வார்த்தைகள்" என்கின்றனர். சரி அப்படியே எடுப்போம், இது எப்படி ரீ.பீ.சீ கும்பலுக்கு பாதகமாக உள்ளது. இந்த 'வெறும் அரசில் வார்த்தைக்காக" ஏன் விழுந்தடித்து பதறுகின்றீர்கள். ஏன் அவதூறுகளை புலியெதிர்ப்பு இணையங்களில் (உங்களை அல்ல உங்கள் அரசியல் கூட்டாளிகளை கூறுகின்றோம்) புனைபெயரால் போடுகின்றீர்கள். புனைபெயர் என்பது ரீ.பீ.சீ என்ற எதிர்புரட்சிகர கும்பலில் கட்டமைக்கும், அவதூறுகளுக்கே பயன்படுகின்றது. அவ்வளவுக்கு இழிவான சமூக பாத்திரத்தையே, எதிர்புரட்சிகர கும்பலால் கையாள முடிகின்றது. ரீ.பீ.சீயின் அவசியம் என்ன என்பதையே, மக்கள் நலன் சார்ந்து விளக்க முடியாது நீங்கள் எல்லாம், எம்மை ஏன் திட்டுகின்றீர்கள். அவதூறுகளை புனைகின்றீர்கள். எம்மை மாற்றுக் கருத்தாக கூட அங்கீகரிக்காது, புலியை விட எம்மையே எதிரியாக காண்பதே புலியெதிர்ப்பு எதிர்ப்புரட்சிகர அரசிலாகிவிட்டதே. ஏன்? உங்கள் விபச்சார புலியெதிர்ப்பு அரசியல் எல்லைக்குள் கூட, எம்மை உள்ளடக்க முடியாத எதிரியாக கருதும் உங்கள் அரசியல் தான் என்ன? 'ரீ.பீ.சீ வானொலியின் அவசியம் என்ன?" அவசியம் என்பது உண்மையானால், எம்மை பற்றி எழுதாது அதை மக்களுக்கு சுயாதீனமாக கூறிவிடமுடியும். அதை மட்டும், அதாவது தமது எதிர்ப்புரட்சிகர செயலை அவர்களால் கூறிவிட முடியாது.


புலியை எதிர்ப்பதற்கும், புலியின் பாசிச வெறியாட்டங்களை புலம்பவும், ஏகாதிபத்தியத்துக்கு பின்னால் வாலாட்டி நிற்பது அவசியம் என்று மக்களுக்கு நேரடியாக கூறுங்கள். ஏன் மாயாமந்திரம். யாழப்பாணியம், அதிகாரத்துவம், தலித்தியம் என்று ஒப்பாரி வைத்து புலம்பவேண்டும். உங்களின் இன்றைய எதிர்ப்புரட்சிகர அரசியல் இழிநிலையை ஒத்துக் கொண்டு, அதை தெளிவாக முன்வையுங்கள். மூடுமந்திரம் தேவையற்றது.


இந்த எதிர்புரட்சிகர செயலை நியாயப்படுத்த 'இவ்வாறான ஊடகங்களினூடாக நாம் பெறும் அறிவானது, வெறும் அரசியல் பின்புலம் கொண்ட அறிவாக மட்டுமே நிலைத்திருக்கிறது. ஊடக அறிவியல் தனமே எம்மை ஓர் அரசியல் அதிகார சார்பு நிலை நின்றுதான் உலககெங்கும் நடைபெறும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை மதிப்பிடவும் தூண்டுகிறது. மாறாக தேசிய இன விடுதலை கோரும் சமூகங்களுக்குள் நிலவுகின்ற பண்பாட்டுக்கலாச்சார ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்துவதில் மேற்படி வெகுஜன ஊடகங்கள் அக்கறை கொள்வதில்லை. இவைதான் அரசியல் மனப்பாங்கென்பதற்கும் கலைத்துவ மனப்பாங்கென்பதற்குமான வேறுபாட்டை இனம்காண தூண்டுகிறது.


இலக்கிய வாதிகளாகவும், கலைஞர்களாகவும், தலித் அனுதாபிகளாகவும் தம்மை இனம் காட்டும் ரீ.பீ.சீக்கு முகம் சுழிப்பவர்களின் ஆழ்மனதில் நீறு பூத்துக் கிடப்பது யாழ்ப்பாணியமும், தமிழ்த் தேசியப் பற்றுறுதியும்." என்கின்றீர்கள்.


இப்படி எதிர்புரட்சிகர காவடியை சரிகட்டி, எமக்கு ஆடிக்காட்ட முனைகின்றனர். அரசியல் எதிராக பண்பாட்டு கலாச்சார என்று பிரித்து, அதை கலைத்துவம் என்ற கூறி எம்மை சுற்றிக்காட்ட முனைகின்றனர். ஊடகம் என்பதே அரசியல் துறை சார்ந்தது என்கின்றார். பண்பாட்டு கலாச்சார துறையை பற்றி பேசாது இருப்பதே ஊடகம் என்கின்றார். இதனால் ஊடகத்தை விமர்சிக்க கூடாது என்கின்றார். இப்படி விமர்சிப்பதே யார்ழ்பாணியம் தமிழ் தேசியம் என்கின்றார். நோபல் பரிசு கொடுக்கக் கூடிய அருமையான கண்டுபிடிப்பு. எதிர்புரட்சிகர மூகமுடியை முடிமறைக்கும் அருமையான விளக்கம்.


அரசியல் என்பது பண்பாட்டு கலச்சாரத்துறை சாராது கற்பனையில், ஏன் வெற்றிடத்தில் சுயாதீனமாக இயங்குவதில்லை. பண்பாட்டு கலச்சார துறையின் வெளிப்பாடு என்பது, சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறையின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகவே உள்ளது. இதற்கு வெளியில் இவை எதுவுமற்ற கலாச்சாரம் பண்பாடு என எதுவும் கிடையாது. சமூகத்தின் ஒடுக்குமுறை என்பது பண்பாடு கலச்சாரத்துறையின் ஊடாகவும், அது ஊடகத்தின் ஊடாகவும் வெளிப்படுகின்றது. இது சார்ந்து தான் அரசியல் செயற்தளம் உள்ளது.


பண்பாடும் கலாச்சார வெளிப்பாடு ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் இடையில் சார்புத் தன்மை கொண்டவை. ரீ.பீ.சீ போன்ற எதிர்புரட்சிகர கும்பல் எதை, எந்தப் பண்பாட்டை எந்தக் கலச்சாரத்தை சார்ந்த அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். யாழ் மேலாதிக்கத்ததை ஆணாதிக்கத்தை, சாதிய மேலாண்மையை, இனவொடுக்குமுறையை, சுரண்டலை, காலனித்துவ மேலாதிகத்தை இது போன்ற சமூக அவலங்களை ஆதாரிர்த்து, அது சார்ந்த பண்பாட்டு கலச்சார உள்ளடகத்தில் தான் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். இதைத் தான் புலிகளும் செய்கின்றனர். இந்த அளவுகோலை எதிர்புரட்சிகர புலியெதிர்ப்பு கும்பலுக்கு மறுத்தால், இதுவே புலிக்கும் மாறுப்பாகிவிடும். இரண்டும் ஒரேவிதமானது. இவை மக்களின் இரண்டு காதுகளிலும், பூசாரிகளால் செருகப்பட்ட பூக்கள் தான்.


தேசியம் என்பது யாழ்ப்பாணியமல்ல


யாழ்ப்பாணியம் சமன் தேசியம் என்பது, உயிர் ஆற்றலேயற்ற இவர்களின் மலட்டுத்தனத்தின் கண்டுபிடிப்பாகின்றது. தேசியம் என்பது யாழப்பாணியமல்ல. யாழ்ப்பாணியம் என்றும் தேசியமாக இருக்க முடியாது. யாழ்ப்பாணியம் தமிழ் தேசிய கோரிக்கை உருவாக முன்னமே நிலவுகின்றது. அது சாதியமாக, ஆணாதிக்கமாக, பிரதேச வாதமாக, சுரண்டலாக பல வடிவில் ஒருங்கிணைந்துள்ளது. இது ஓரு நாளும் தேசியமாக முடியாது. தேசியம் என்பதே வேறு. யாழப்பாணியம் தேசியத்தை எதிர்த்து அதை அழிக்கின்றது. அது சாராம்சத்தில் புலிக் குறுந் தேசியமாக, அதுவே மாபியாத்தனம் கொண்ட பாசிசமாகி கூனிக்குறுகி ஏகாதிபத்தியத்துக்கு மண்டியிட்டு, கால்தூசு தட்டி யாழ்ப்பாணியமாகவே நிற்கின்றது. இது உருவாக்கும் பண்பாடு கலாச்சாரம் அனைத்தும் ஏகாதிபத்திய மயமானவை. இதற்கும் தேசியத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தேசியம் என்பதை புலித் தேசியத்தில் இருந்து அளக்கும் அளவுகோலே, எதிர்புரட்சிகர அரசியல் சாரமாகும். தேசியம் என்பது குறைந்த பட்சம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் முரணற்ற தன்மையை கோருவதாகும். சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்றால், இது போன்ற சமூக முரண்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால், நிச்சயமாக நாம் தேசியத்தை முன்னிறுத்தி யாழ்ப்பாணியத்துக்கு எதிராக போராடவேண்டும். அதாவது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக, தேசிய திரிபுக்கு (புலிக்கு) எதிராக, அது சார்ந்த அனைத்து எதிர்புரட்சிகர கும்பலுக்கும் எதிராக, அனைத்து எதிர்ப்புரட்சிகர கோட்பாடுகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. தேசியத்தை அழிக்கும் உலகமயமாதலை ஆதரித்து, மக்களின் அவலங்களின் மேல் சவாரிவிடும் பாசிசம் என்பது எதிர்புரட்சிகர கைக்கூலித்தனத்தைத் தவிர வேறு எதுவுமல்ல. புலிகள் ஒரு ஏகாதிபத்திய கூலிக் குழு என்பதையே இவர்கள் முதலில் அரசியல் ரீதியாக மறுக்கின்றனர். தாம் அப்படி உள்ள போது எப்படி புலிகள் இருக்க முடியும் என்பது இவர்களின் உள்ளார்ந்த அரசியல் வாதம். எதிரியும் நாங்களும் ஒன்றாக பாதத்துக்கு பூ போட்டு கும்பிடவே முடியாது என்பது அவர்களின் எதிர்புரட்சிக் கோட்பாடு கூனிக்குறுகி வருகின்றது. .


இதை மூடிமறைக்க முன்வைக்கும் கைக்கூலி வாதம் 'ரீ.பீ.சீ க்கு முகம் சுழிக்கும் இவர்கள் புலிக் கோட்பாட்டை சிரமதானம்(ஏகாதிபத்திய எதிர்ப்பையும், சமூக நீதியையும் போதித்து) செய்து கழுவித் தோயவார்த்து பசுத்தோலையும் போர்த்தி யாழப்பாணியக் கூட்டுக்குள் விட்டுக் கொஞ்சித் தடவி அழகு பார்க்கும் ஆவலுள்ளவர்கள். அதுவே இவர்கள் ஆழ்மனத்தில் பூத்துக் கிடக்கும் கனல்." என்கின்றார். எம்மைப் பார்த்து கூறும் இவர்கள் தான், அதை செய்தவர்கள், அதற்காக சதா முனைபவர்கள். ரீ.பீ.சீ புலிகளின் பின்னால் ஒடியதும், கெஞ்சியதும், பாலூட்டி வளர்த்ததும், வரலாற்றால் மறைக்க முடியாது. தமிழ்செல்வனுடன் நேரடியாக சோரம் போன ரீ.பீ.சீயின் தேசிய உறவும், பிரிவையும் நாங்கள் செய்தவர்கள் அல்ல. அன்னக்காவடி ஜெயதேவன் வன்னி வரை பாதயாத்திரை சென்று வந்த விபச்சாரம் எதையும் நாங்கள் செய்தவர்களல்ல. இப்படி இந்தியா முதல் பலருடன் நாங்கள் விபச்சாரம் செய்தவர்கள் அல்ல. ஏகாதிபத்திய தயவு வேண்டி கோட்டும் சூட்டும் போட்டு ரையும் கட்டி, தம்மையே அழகுபடுத்தி பல்லைக்காட்டி அன்னக்காவடி எடுக்கும் புலிகளுடன், எமக்கும் மூகமுடிபோட்டு அழகுபடுத்த நினைப்பது தான் கோமாளித்தனமாகும். ஏகாதிபத்திய தொட்டிலை இரண்டு பக்கமும் நின்று மாறிமாறி ஆட்டும் நீங்கள் தான், எம்மை அழகு பார்க்க பூச்சுட்டுவதாக கூறி குழந்தைக் கதையாய் சொல்லுகின்றீர்கள்.


புலிக் கோட்பாடு என்பது வலதுசாரிய பாசிச மாபியா கோட்பாட்டாலானது. இதையே ரீ.பீ.சீ என்ற எதிர்ப்புரட்சி கும்பலும் கொண்டுள்ளது. மார்க்கிச பாரம்பரியத்தை உடைய எமக்கு, இது பொருத்திக் காட்டுவது இவர்களின் 'முதிர் முட்டாள்" தனத்தைத் தவிர வேறு எதுவுமல்ல. ஏகாதிபத்தியத்துக்கு பசுத் தோலை போர்த்தி, அவர்களை மக்களின் நண்பனாக, ஏன் அவனை உதவியாளனாக காட்டி நடிக்கும் யாழ்ப்பாணிய வழியை அப்படியே தலைகீழாக்கி எமக்கு கூறுவது தான் வேடிக்கை. நாங்கள் மூகமுடி எதையும் அணிவதில்லை. நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர யாரையும் நேசிப்பதில்லை. நாங்கள் அன்று முதல் இன்று வரை, மக்கள் விரோதம் அனைத்தையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி வருகின்றோம். இதை கடந்த வரலாறு முழுக்க எம்மைத் தவிர யாரும் செய்தது கிடையாது. இதில் சமரசம் கண்டது கிடையாது. சாந்தர்ப்பம் கிடைத்தால், உங்களைப் போல் பல்லிளிக்கும் கூட்டமல்ல நாம். மக்களின் சுயமரியாதைக்காகவும், அவர்களின் சமூக வாழ்வியல் பொருளாதார வாழ்வுக்காகவும் போராடுபவர்கள் நாங்கள். நாங்கள் என்றால், இன்று நாங்கள் மட்டும் தான் உள்ளோம். இந்த அடிப்படையில் எல்லாவிதமான எதிர்ப்புரட்சிகர கும்பலையும் ஈவிரக்கம் காட்டாது அம்பலம் செய்பவர்கள் நாங்கள்.


புலியைப் போல் புலியெதிர்ப்பு குதர்க்கத்துக்கும் பஞ்சமில்லை. 'மேற்குலகு யாவுமே ஜனநாயக முகமூடி தரித்ததெனில் இவர்களின் மேற்குலக இருப்பின் அர்த்தம்தான் என்ன? நீங்கள் வெள்ளியிலையோ, செவ்வாயிலையோ, அல்லது சந்திர மண்டலத்திலையோ போய் குந்த வேண்டியதுதானே!! இல்லை உங்களுக்கு உசிர் ஒரு மசிரெண்டா பம்பலப்பிட்டியிலையோ, கொள்ளுப்பிட்டியிலையோ, அல்லைப்பிட்டியிலையோ போய்க் குந்த வேண்டியதுதானே." கருத்துச் சுதந்திரத்தை, விமர்சனத்தை முடக்க வைக்கும் அருமையான வாதம். எதிர்புரட்சிகர ஏகாதிபத்திய அருவடித்தனம் அம்பலமாவதைத் தடுக்க 'முதிர் முட்டாள்களின்" புலம்பலே இப்படி வெளிப்படுகின்றது. நாம் புலிகளை விமர்சித்தால், மக்களை, போராட்டத்தை பேசினால் இங்கு நின்று ஏன் பேசுகின்றீர்கள், வன்னிக்கு சென்ற பேசுங்கள் என்கின்றனர் புலிகள். இந்த எதிர்ப்புரட்சிகர ரீ.பீ.சீக் கும்பலும் அதையே எமக்கு சொல்லுகின்றது.


{முதிர் முட்டாள்களே"! ஜனநாயகம் என்பதை ஏகாதிபத்தியத்திடம் நாம் தேடுவதில்லை. அந்த ஏகாதிபத்திய அரசை எதிர்த்து போராடும் மக்களிடத்தில் மட்டும் தான் நாம் காண்கின்றோம். மேற்கில் நாம் வாழ்கின்றோம் என்றால், அந்த மக்களை நம்பியே வாழ்கிறோம். எமக்கு பாதுகாப்பை அல்லது வாழ்வதற்கான அடித்தளத்தை அந்த மக்கள் போராடிப் பெற்றுத் தந்தவையே ஒழிய இந்த அரசுகள் ஜனநாயக மனப்பாங்கு கொண்டு வழங்கவில்லை. அதை சதா பறித்தெடுக்கவே முனைகின்றது. சொந்த மக்களையும், உலகையே கொள்iயிட்டு கொழுக்கும் ஏகாதிபத்திய அரசுகளை நம்பி, உலகில் உழைத்து வாழும் எந்த மக்களும் வாழ்வதில்லை. உங்களைப் போன்ற அரசியல் 'முதிர் முட்டாள்களைத்" தவிர. செவ்வாய்க்கு போகச் சொல்லியும், வன்னிக்குச் செல்லக் கோரும் இவர்கள், எதைத்தான் எமக்கு சொல்ல முனைகின்றார்கள். நீங்கள் எம்மை பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் என்பதைத் தான். இதைத் தாண்டி எதையும் அவர்கள் இதன் மூலம் எமக்கு கூறவில்லை. இது புலியென்ன, புலியெதிர்ப்பென்ன எல்லாம் ஒன்றாக கொப்பளிக்கின்றது. இவர்களின் கருத்துச் சுதந்திரத்தின் அரசியல் எல்லை இது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களும் தாங்கள் மேற்கில் இருந்து கூறுவது தான்.


இப்படி அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்ற, தர்க்கமற்ற அறிவியலுக்கு புறம்பானவை. உள்ளடகத்தில் மக்களுக்கே எதிரானதாக உள்ளது. ஒருவன் தனது நிலைப்பாட்டை உண்மையாக வைக்க விரும்பினால், மக்களின் வாழ்வியல் சமூக உறவுகளை உள்ளடக்கிய வகையில், அந்த மக்களின் சொந்த விடுதலையை முன்னிறுத்தவேண்டும்.


அதைவிடத்து '.. வட-கிழக்கில் வாழும் பிற இன மக்களுக்கும் ஏகாதிபத்தியம் என்பது யாழ்ப்பாணியமே. காலனித்துவ காலத்திற்கு முன்னைய காலத்திலிருந்து இன்றுவரையான யாழ்ப்பாணிய சமூக மேலாதிக்கத்தை அறிவு பூர்வமாக மட்டுமல்லாது, உணர்வு பூர்வமாகவும் சிந்தியுங்கள் எது சமூக அக்கறை? எவருக்கான தமிழ்த் தேசிய விடுதலை? தமிழ் பேசும் மக்கள் என்பதன் பொருளென்ன? யுத்த நெருக்கடி காலகட்டத்திலும் இடம் பெயர்ந்து கோவில்களில் தஞ்சமடைந்துள்ளபோதும் கோவில் கிணற்றில் தண்ணி அள்ளுதுகள்(!!!) என்று கிணற்றில் பூனையை போட்டு கொன்றது எதற்கு?.." என்கின்றீர்கள். நல்லது 'எது சமூக அக்கறை?" என்று கேட்கின்றீர்கள். இந்த அரசியல் உள்ளடக்கமே சுயாதீனமான தனது சொந்தக் கருத்தை இழந்து, ரீ.பீ.சீயை எல்லாமாக்கியதன் விளைவு இது. புலியின் நடைமுறையைத்தான் அனைத்துமாக மாற்றுகின்ற மாலைக்கண் நோயின் விளைவு இது.


சமூக அக்கறை என்பது ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் விடுதலையும் குறிப்பதாகும். ஆணாதிக்கத்துக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக, இன ஒடுக்குமுறைக்கு எதிராக, சாதியத்துக்கு எதிராக, பிரதேச வேறுபாட்டுக்கு எதிராக, அனைத்தும் தழுவிய வகையில் போராடுவது தான் சமூக அக்கறை. இதை கிண்டல் செய்து யாழ்ப்பாணியம் என்பதும், அதிகார வர்க்க குரல் என்பதும், உண்மையில் இந்த மனித அவலங்களை பாதுகாப்பது தான்.


உண்மையில் யாழ்ப்பாணியத்தின் அனைத்து சமூக இழிவையும், அதனை முழுமையாக பேணிப்பாதுகாப்பது தான். இன்று இதற்கு எதிராக போராடுவது, குரல் கொடுப்பதும் சமூக அக்கறை கொண்ட நாங்கள் மட்டும் தான். புலியெதிர்ப்போ, புலிசார்போ அல்ல. இதை அவர்கள் கிண்டல் செய்கின்றனர். புலியெதிர்ப்பும், புலி சார்பும் தமிழ் பேசும் மக்களின் தீர்வை அல்லது விடுதலையை யாழ்ப்பாணியமாகவே முன்வைக்கின்றது. யாழ்ப்பாணியத்தையே வன்னியமாக திரிக்கும் இந்தக் கும்பல், புலியை ஒரங்கட்டிவிட்டு வைக்கப்படும் தீர்வு கூட யாழ்ப்பாணியமாகவே இருக்கும். யாழ்ப்பாணியமல்லாத தீர்வு என்பது, நாங்கள் கோரும் ஒடுக்கப்பட்ட அரசியல் வழியில் மட்டும் தான் சாத்தியமானது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு 20 ஈரோசும் யாழ்ப்பாணியத்தைப் பலப்படுத்தவும், அதன் பிற்போக்கான எதிர்புரட்சிகர ஆளுமையை, அந்த அரசியல் விபச்சாரத்துக்கு மேலும் ஊக்கத்தை ஊட்டுகின்றது.


நாங்கள் மட்டும் தான் யாழ்ப்பாணியத்தை எதிர்கின்றோம்


சாதியம், பிரதேசவாதம், ஆணாதிக்கம், சுரண்டல் போன்ற பல சமூக ஒடுக்குமுறைகளை பாதுகாப்பதே, புலித் தேசியம் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு தேசிய அழிப்பிலும் கூட அதன் சாரமாக அதன் அரசியலாக உள்ளது. இதை நாங்கள் மட்டும் தான் எதிர்க்கின்றோம் நீங்கள் அதைக் குறிப்பிட்டபடி, எம்மை எதிர்ப்பது தான் புதிரானதாக உள்ளது. இவை மனித சமூகத்துக்கு எதிரானதாக கூறும் நீஙகள், அதை எதிர்த்து போராடுபவர்களை எதிர்ப்பது தான் வேடிக்கையானது. அந்தப் பிற்போக்கையே அரசியலாகக் கொண்டு நாய்வேஷம் கொண்டு குலைக்கும் ரீ.பீ.சீ க்கு பின்னால், நீங்கள் வக்காலத்து வாங்குவது தான் உங்கள் சொந்த முரண்பாடு கூட.


உண்மையான சமூக அக்கறை என்பது ரீ.பீ.சீக்கு பின்னால் அலட்டுவதல்ல. அதை எதிர்த்து அரசியல் ரீதியாக சமூக ரீதியாக நிற்போருடன் கைகோர்ப்பது தான். எதிர்ப்புரட்சிகர சக்தியுடன் கைகோர்ப்பதல்ல. நீங்களே திரும்பிக் கேட்டுப்பாருங்களேன். ரீ.பீ.சீ க்கும் அந்தக் கும்பலுக்கும் எது சமூக அக்கறை என்று? ஆணாதிக்கம், யாழ்ப்பாணியம், உயர்சாதியமும், சுரண்டல், ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் இதுபோன்றவை இன்றி, அவர்கள் எந்த அரசியலும் செய்வதில்லை. இதன் அங்கமாக, அதன் உறுப்பாக அவர்கள் உள்ளனர்.


'மக்கள் நலனை முன்னெடுக்க எனக்கு யாழ்ப்பாணியம் தான் புலி, புலிதான் யாழ்ப்பாணியம். இவையே எனக்கு ஏகாதிபத்தியம். இதுதான் எனது அரசியல் பொருளாதார நிறுவல்." என்கின்றீர்களே. இதுவே அடிப்படையில் தவறானது. யாழ்ப்பாணியம் என்பது ஏகாதிபத்திய அருவடித்தனம் மட்டுமே ஒழிய, அதுவே ஏகாதிபத்தியமல்ல. அருவடித்தனம் இருப்பதால் தான், புலியெதிர்ப்புக் கும்பல் அதன் பின்னால் வாலாட்டிக் கொண்டு தலைகால் தெரியாது சிலர் ஒடுகின்றனர். உண்மையில் புலி அல்லாத யாழ்ப்பாணியமும் எதார்த்ததில் நிலவுகின்றது. புலி இல்லாத போதும் யாழ்ப்பாணியம் நீடிக்கும். சரி ஈ.பிடி.பி முதல் ரீ.பீ.சீ வரை யாழ்ப்பாணியமல்லாது வேறு என்ன? யாழ்ப்பாணியம் என்பது கோட்பாட்டு ரீதியானது. யாழ்ப்பாணியம் என்பது நபர்கள் அல்லது ஒரு குழு சார்ந்ததல்ல. யாழ்ப்பாணியம் வாழ்வுமுறை சார்ந்தது.


கோட்பாட்டு ரீதியாக யாழ்ப்பாணிய சித்தாந்த்ததை எதிர்த்துப் போராடாத அனைவரும் யாழப்பாணியத்தையே தமது கோட்பாடாக்குகின்றனர். அதில் புலிகளும் ஒரு பிரதிநிதிகள் அவ்வளவே. புலிகள் யாழ்ப்பாணியமல்ல. யாழ்ப்பாணியத்தை புலிகள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். அது போல் ரீ.பீ.சீ முதல் ஈ.பி.டி.பி வரை யாழ்ப்பாணியமாகவே உள்ளனர். புலிக்கு எந்த வித்திலும் குறைந்தவர்களல்ல இவர்கள்.


இங்கு உண்மைகளை கண்டறிய கூறும் வழியே தவறானது. 'ஒரு சம்பவத்தை தீர்வாகவோ சரியானதாகவோ என அணுகுவதற்கு அப்பால், நியாயபூர்வமாக அணுகுவதற்கு நாம் பார்ப்பவைகளுக்கும் அப்பால் இருக்கும் உண்மைகளை தேடிக்காண்பதில்தான் எமது சாதுரியம் அடங்கியுள்ளது." உங்கள் கோட்பாடே இங்கு தவறானதாக இருந்த போதும், இதை நீங்கள் உங்கள் கருத்தின் மீது மறந்து போனது ஏன்? நீங்கள் ரீ.பீ.சீ யை ஏன் அப்படி உங்களால் பார்க்கமுடியவில்லை. சாதுரியம், உண்மையும் சரியான தீர்வையும் சரியான அணுகுமுறையைத் தருவதில்லை. சாதுரியம் பிழைக்கவும், சுயநலத்தை நியாயப்படுத்தவும், மோசடி செய்யவும், அது தன்னை தனக்காக தகவமைக்கின்றது. உண்மை, நேர்மை, சரியான தீர்வு மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் நேரடியாக அடங்கியுள்ளது. மக்கள் மேலான ஒவ்வொரு ஒடுக்குமுறையையும் இனம்கண்டு, அதற்கு எதிராக போரடுவதன் மூலம் தான் இவற்றைக் கண்டறிய முடியும். சாதுரியம் மூலம் ராஜபக்சவும், பிரபாகரனும், ஏகாதிபத்தியம், டக்கிளஸ்சும், ரீ.பீ.சீ என, எல்லா மக்கள் விரோதிகளும் மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களுக்காக போராடுவதும், அவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்து நிற்பதன் மூலமே உண்மைகளை கண்டறிய முடியும்.


இதைவிடுத்து பேரினவாத எதிர்ப்பு என்றும், புலியெதிர்ப்பு என்றும் கூனிக்குறுகி அதற்குள் சாதுரியத்தை தேடினால் மக்களின் முதுகில் ஓங்கி குத்தத்தான் முடியும். உண்மை என்பது இதற்கு வெளியில் மக்களின் சமூக பொருளாதார வாழ்வில், அதன் அவலத்தில் எதார்த்தமாக உறைந்துள்ளது. தனித்து பேரினவாத எதிர்ப்பிலோ, தனித்து புலிப் பாசிச எதிர்ப்பிலோ உண்மை என்பது திட்டமிட்டு மூடிமறைக்கப்படுகின்றது.


புலியெதிர்ப்பில் புலம்பும் போது 'எத்தனை இனக்கலவரம் நிகழ்ந்து தமிழர்கள் கொல்லப்பட்டும் சொத்துக்கள் சூறையாடப்பட்டபோதும் இன்றும் மிக அதிகமாக, குறிப்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் கொழும்பிலும் பிற சிங்களப் பகுதிகளிலும் தொடர்ந்தும் வாழ்வதற்கான நம்பிக்கை எப்படி ஏற்பட்டது. இன்றும் அங்கு குடியேறவும் சொத்துக்கள் வாங்கி குவிப்பதற்குமான அடிப்படைக்காரணமும் அதற்கான துணிவும் எப்படி நிகழ்கிறது. எந்த அரசாங்கமானது (இடதோ வலதோ) உத்தரவாதமளித்ததா? எப்படி இவை சாத்தியமானது!!!தமிழர்கள் சிங்களப் பகுதிகளில் தொடர்ந்தும் குடியேறுவதற்கான காரணம் அவர்கள் அயலில் வாழ்ந்த காமினியும், பியசேனாவும, மெனிக்காவுமே என்கிற உண்மையை நாம் உணர வேண்டும். ஒரு சிங்களக் குடும்பமாவது யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு ஒரு இராமலிங்க முதலியோ ஒரு வேலுப்பிள்ளையோ(!!!) உத்தரவாதம் கொடுக்க முடிந்ததா இன்றுவரை?." இதற்கு காரணமும் யாழ்ப்பாணியத்தின் சுயநலம் தான் காரணமே ஒழிய, 'அவர்கள் அயலில் வாழ்ந்த காமினியும், பியசேனாவும, மெனிக்காவுமே என்கிற"தல்ல. யாழ்ப்பாணியத்தின் மேலாண்மை சிங்களப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பணத்தை கொண்டு, அதை அண்டிவாழும் சமூகத்தை உருவாக்கி வைத்திருப்பது யாழ்ப்பாணியம் தான். இதில் சிங்கள மக்கள் தமிழ் மக்களைப் போல் சக மனிதனை வெறுப்பவர்கள் அல்ல. மக்கள் இனவாதிகளாகவோ, குறுந்தேசியவாதிகளாகவோ இயல்பில் இருப்பதில்லை. மக்கள் என்ற வகையில் மற்றைய இன மக்களுடன் இணங்கி நெருங்கியே மக்கள் வாழ்கின்றனர். யாழ்ப்பாணத்திலும் மற்றய இன மக்கள் வாழும் சாத்தியம் என்பது, மக்களின் உணர்வியல் ரீதியான மறுப்பாக இருப்பதில்லை. மாறாக குறுகிய கண்ணோட்டம் கொண்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களுமே வாழ்வின் மீதான அச்சத்தையும் வன்முறையையும் ஏவிவிடுகின்றனர்.


இதனால் தான் யாழ்ப்பாணத்தில் மற்றய இனமக்கள் வாழமுடிவதில்லை. முஸ்லீம் மக்களின் நிலையைக் கூட எடுத்துக் கொள்ளலாம். மக்கள் விரோத உணர்வு கொண்ட அரசியல், குறுகிய கண்ணோட்டத்தில் வக்கரிக்கும் போது, மொத்த சூழலையும் மாற்றி அமைக்கின்றது. இதுவே இன்று சொந்த தமிழ் மக்களைக் கூட அந்த மண்ணில் வாழவிடவில்லை. குடாவை ஏன் வடக்கு கிழக்கை விட்டே மக்கள் அன்றாடம் ஒடுகின்றனர். சொந்த மக்களுக்கே இந்தக் கதியென்றால், மற்றைய இனமக்களின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க முடியாதல்லவா!


ரீ.பீ.சீக்கு ஒட்டைக் கோமணத்தை போட்டு அசைக்கின்றனர்


'மாற்றிலக்கியம், விளிம்பு நிலை இலக்கியம் தலித்திலக்கியம் என புகலிடத்தில் தோன்றிய கலக இலக்கியங்கள் பலவும் அசைக்காதுபோன மலைக்கு(புலி) ரீ.பீ.சீ இடுப்பளவு எடுத்தது மட்டுமல்லாது. யானைக்கு (புலியின் பலம்) கோமணத்தையும் கட்டி விட்டிருக்கிறது என்பது எமது புகலிட வரலாற்றுச் சாதனைதான. ரீ.பீ.சீ இன் வெகுஜன ஊடக அதிகாரமானது புலிகளின் ஐரோப்பிய தடைகளைவிட மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதை ரீ.பீ.சீ இல் கலந்துகொள்ளும் புதிய புதிய நேயர்களின் வருகையானது ஊர்ஜிதப் படுத்தியும் வருகிறது. இவ்வாறு பெருகிவரும் ரீ.பீ.சீ நேயர்களின் துணிவான புலி எதிர்ப்பை முன்வைக்கும் சூழலானது யாழ்ப்பாணிய தமிழ் தேசிய ஆழ்மன விரும்பிகளாலும் சகித்துக் கொள்ளமுடியாதென்பதை இக் கட்டுரைக் கடதாசியில் கையொப்பமிட்டு உறுதிப் படுத்திக் கொள்கிறேன்." அருமையான கண்டுபிடிப்பு. தனக்குரிய கோமணத்தை தனக்கு அளவாக கட்டிக் கொண்டு, இப்படி தனது சாதனை பற்றி புலம்ப முடிகின்றது.


எந்த கலக இலக்கியமும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையதாக இருக்காத வரை, அது புரட்சிகரமாக மாறிவிடாது. அது உண்மையை வெளிப்படுத்துவதில்லை. சுத்த சுத்துமாத்து தான் அது. ரீ.பீ.சீ தலித் விடுதலைக்காக தனது ஓட்டைக் கோமணத்தை அவிழ்த்து விட்டு ஏகாதிபத்தியத்துடன் விபச்சாரம் செய்யாதபடி போராடுவதாக காட்டும் தேவதாஸ் உள்ளிட்ட கருத்துகளை கலக இலக்கியம் என்றால், அது அதன் புதைகுழியில் இருந்து மீளவே முடியாது.


மாற்றங்கள் என்பது சர்வதேச நிலைமை முதல் பலவற்றுடன் தொடர்புடையது. எதையும் திடீரென முன்னுக்கு கொண்டு வந்துவிடாது. மாற்றங்கள் மெதுவானதாகவும், இதற்கு மேல் திடீரென நிகழ்பவை தான். இது உலகம் முழுக்க காணமுடியும். ரீ.பீ.சீயும் தேனீயும் அவர்கள் சார்பு எடுபிடிகளும் வந்து தான், புலியை அசைத்தார்கள் என்பது அதைவிட குருட்டுத்தனம். இப்படி காண்பது, பினாற்றுவது அடிப்படையில் புலம்பலாகின்றது.


இன்றைய நிலைமை ரீ.பீ.சீயாலும், அது சார்ந்த சதிகாரக் கும்பலாலும் உருவாக்கப்படவில்லை. மாறாக பேச்சுவார்த்தை என்ற வலையில் கொள்கை கோட்பாடின்றி தாமகவே புலிகள் சிக்கியது, சர்வதேச தலையீடுகள், புலிகளின் பலவீனமான குருட்டுத்தனமான மட்டரகமான மக்கள் விரோத இழிவான அரசியல், பேரினவாதத்தின் திட்டமிட்ட மிக நுட்பமான பேரினவாத அரசியல் சூழ்ச்சிகள், செப்டெம்பா 11 தாக்குதல், இணையத்தின் விரிவான வருகை, செய்திதொடர்பு தொழில் நுட்பம், சர்வதேச ரீதியான தீவிர மாற்றங்கள், சர்வதேச தலையீட்டுக்குரிய அழுத்தங்கள் என பலவேறு காரணங்கள் தான், புலியை இந்த அவல நிலைக்கு கொண்டு வந்தது. இதில் ரீ.பீ.சீ, தேனீ முதல் பலரும் இதற்குள் அரசியல் செய்து, மக்களை மீண்டும் புதிய புலியெதிர்ப்பு வலதுசாரிய வழியில் ஏமாற்றக் கற்றுக் கொண்டனர். புலியின் நடவடிக்கை சிலவற்றை மட்டும் அம்பலப்படுத்துவதன் மூலம், அரசியல் ரீதியாக புலி அரசியலை மாற்றாக வைத்தனர்.


ரீ.பீ.சீ ஒன்றும் மாற்று ஊடகமல்ல. அது மாற்றுக் கருத்தைக் கொண்டு வருவதில்லை. புலியெதிர்ப்பு கருத்தையும் அவதூறையும் கொண்டுவரும் ஒரு சதிகார ஏகாதிபத்திய கைக்கூலிக் கும்பல் தான். ஊடகம் என்ற நிலைக்கு அப்பால் எதிர்ப்புரட்சிகர அரசியல் கட்சி ஒன்றையும், அதற்குரிய மக்கள் விரோத அரசியலையும், கூலிக்குழுக்களின் பின்னாலான எடுபிடி அரசியலையும் சார்ந்து நிற்கின்றது. மாற்றாக வெகுஜனங்களை சார்ந்து, அவர்களின் சமூக வாழ்வியல் ஊடாக தன்னை நிறுத்தவில்லை. புலியால் பாதிக்கப்பட்ட அல்லது புலிக்கு எதிரான ஒரு பிரிவினைச் சார்ந்து, ஏகாதிபத்திய அரசியலூடாக புலியின் அதே மக்கள் விரோத அரசியலுடன் மாற்றாக அரங்கில் குலைக்கின்றனர்.


புலிகளின் சமாதான நாடகங்கள் ஒருபுறம் அம்பலமாகின்ற போதே, ரி.பி.சி போன்றவை தன்னையும் தனது அரசியல் விபச்சாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது. இது தற்செயலான சம்பவம் தான். புலியெதிர்ப்பு அரசியல், புலிகளின் பேரினவாத எதிர்ப்பு அரசியலுக்கு உவப்பானது. ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றது. புலிகள் எப்படி ஏன் தோன்றினார்கள், அவர்களின் அரசியல் என்ன, அதற்கும் அவர்களின் பாசிச போக்குக்கும் உள்ள உறவு என்ன? என்று எதையும் ஆராய்ந்து அதை விமர்சித்து ரீ.பீ.சீ கும்பல் உருவாகவில்லை, அந்த கருத்தை அவர்கள் முன்வைக்கவுமில்லை.


யாழ்ப்பாணியம் என்றால், அந்த யாழ்ப்பாணியம் என்ன? அதன் சமூக பொருளாதார அரசியல் கூறு, என்ன? ரீ.பீ.சீ கும்பலும் யாழப்பாணிய எதிர்ப்பு கும்பலும் இதை ஆராய்ந்து அதன் அடிப்படையிலா புலியெதிர்ப்பு அரசியல் செய்கின்றனர்? இல்லை மாறாக அதே யாழ்ப்பாணியமாக ரீ.பீ.சீ கும்பல் உள்ளது. இன்று அதே யாழப்பாணிய அரசியலுடன் தான் ஈ.பி.டி.பி என்ற புலியெதிர்ப்பு கும்பல் அரங்கில் உள்ளது. ஈ.பி.டி.பிக்கும், ரீ.பீ.சீ கும்பலுக்கும் அரசியல் ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ எந்த வேறுபாடும் கிடையாது.


டக்கிளஸ் கும்பல் எப்படி இயங்குகின்றதோ, அப்படித் தான் புலம்பெயர் நாட்டில் ரீ.பீ.சீ கும்பல் அரசியல் செய்கின்றது. எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது. யாருடன் கூட்டுச் சேருவது என்பதில் தான், நிலைமைக்கு சூழலுக்கும் உட்பட்டு வேறுபடுகின்றனர்.


ரீ.பீ.சீ கூறும் புலியெதிர்ப்பு சம்பவங்கள் அனைத்தும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்தவை தான். மக்களுக்கு புலியை இட்டு எந்த குழப்பமும் கிடையாது. இதை மையப்படுத்தி அதை பரவலாக்கி, செய்தியாக தகவலாக ரீ.பீ.சீ வெளிக்கொண்டு வந்தது. ரீ.பீ.சீ செய்தி ஒரு தலைப்பட்சமானதாக மாறியதுடன், அவதூறுகளும் பொய்களும் இணைக்கப்பட்டன. உண்மைகள் பொய்களுடன் கலந்து விதைக்கப்பட்டன. தமிழ் மக்களின் எதிரியை வெறும் புலியாக காட்டியதன் மூலம், அவர்கள் அரசியல் ரீதியாக எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை ஆரத் தளுவிக்கொண்டனர். புலிகள் எதிரியை பேரினவாதமாக காட்டி, அதையும் அரசியல் ரீதியாக அல்லாது, இராணுவ ரீதியாக வெறும் சிங்களவனாக காட்டிய அதே மோசடியை, ரீ.பீ.சீ என்ற எதிர்ப்புரட்சிகர புலியெதிர்ப்புக் கும்பலும் புலியை எதிரியாக காட்டியது. இங்கு புலி அரசியலை அல்ல. அரசையும் விட புலியை பிரதான எதிரியாக காட்டியது. அரசை நட்பு சக்தியாகவும் கூட காட்டியது. புலிக்கு எதிரான அனைவரும் நட்பு சக்திகள் என்ற அடிப்படையில் செயல்படும் ரீ.பீ.சீ கும்பல், கம்யூனிஸ்ட்டுகளை, முரணற்ற ஜனநாயக வாதிகளை மட்டும் விதிவிலக்காக காண்கின்றது. புலிகளைப் போல், கம்யூனிஸ்ட்டுகளை எதிரியாகவே காண்கின்றது. மறுபக்கத்தில் புலிகள் அரசை விடவும், புலி அல்லாத அனைவரையும் எதிரியாக காட்டியது. இப்படி எமது அரசியலே சோரம் போகின்றது.


ரீ.பீ.சீ ஒரு ஊடகம் என்ற வகையில், அது ஊடுருவிய அளவு பண்பும் வெளிப்படையானது. மாற்று செய்திகள் இல்லாத நிலையில், இது இயல்பானதாகவும் கவர்சிகரமானதாகவும் மாறியது. இதனால் மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படையவில்லை. அரசியல் அறிவைப் பெறவில்லை. இன்றைய இந்த நிலைமைக்கான காரணகாரியத்தையும், அந்த அரசியல் சூழலையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏகாதிபத்தியம் தீர்க்கும், தலையிடும், புலிகளை அழிக்கும் என்ற அரசியல் மாயைக்குள் அழுத்தி, தமது எதிர்ப்புரட்சிகர ஏகாதிபத்திய எடுபிடி அரசியலை செய்யவே ரீ.பீ.சீ கோருகின்றது.


எதிர்ப்புரட்சிகர நடத்தைகளால் மாயை என்ற திரை, உலகெங்கும் கிழிகின்றது.


எதிர்ப்புரட்சிகர அரசியலை ஆணையில் வைக்கின்றது. இந்த அரசியல் எதிர்புரட்சிகர பாத்திரம், புரட்சிகரமான பிரிவுக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது. மாயை என்ற திரை உலகெங்கும் கிழிகின்றது. முன்பு புலியெதிர்ப்பு ஒரு கும்பலாக, எல்லோரும் ஒன்றாக இருந்தகாலம் மலையேறிவிட்டது. அதற்குள் ஏற்பட்ட அரசியல் பிளவு உலகம் தளுவியது. இந்த நிலைமையை ரீ.பீ.சீ கும்பலின் எதிர்புரட்சிகர பாத்திரம் உருவாக்கியது. எதிர்புரட்சிகர பாத்திரத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பிற்போக்குடன் கடைப்பிடிக்கின்றார்களோ, அந்தளவுக்கு மக்கள் நலனை விரும்புவோர் அதை விட்டு வெளியேவருகின்றனர்.. உண்மையில் இந்த எதிர்புரட்சிகர நடத்தை, புரட்சிகர மக்கள் நலன் சார்ந்த பிரிவுகளை தம்மைத்தாம் இனம் கண்பதை துரிதமாக்கின்றது.


இங்கு கோட்பாட்டு மயக்கம், சமூக முரண்பாடுகள் எற்படுத்தும் மயக்கம் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகிவிடுகின்றது. இலங்கை அரசுக்கு எதிரான போரட்டத்தை புலிகள் என்ற எதிர்புரட்சிகர பாசிச கும்பல் சிதைக்கின்ற அதே தளத்தில், புலியெதிர்ப்பு கும்பல் எதிர்புரட்சிகர பாத்திரத்தை எகாதிபத்தியம் முதல் சகல பிற்போக்குகளுடன் கூடி சிதைக்கின்றது. இந்த இரு பிரதான அரசியல் போக்கில் இருந்து, புரட்சிகரமான அரசியல் போக்கு தன்னை மீட்டு எடுப்பதலில் ஒருபடி முன்னேறியுள்ளது. இந்த புரட்சிகரமான பிரிவு புலி சார்பு, புலியெதிர்ப்பு என்ற இரு அரசியல் போக்கில் இருந்து வேறுபட்ட, மக்கள் சார்பான நிலையை முன்னெடுக்கின்ற ஒரு மூன்றாவது அணியாக தன்னை புரட்சிகர பிரிவாக நிலை நிறுத்தி வருகின்றது. இதைத் தான் ரீ.பீ.சீயின் எதிர்புபுரட்சிகர அரசியல் பாத்திரம் மீதான அரசியல் எதிர்வினை, சமகாலத்தில் சாதிக்கின்றது.


ரீ.பீ.சீ புலியெதிர்ப்பு கும்பலுக்கு பின்னால் பல அப்பாவிகள், புலிகள் என்ற நாணல் கயிறை போட்டு அந்த வண்டியை மாடுமாதிரி இழுக்கின்றனர். இப்படி உலகத்தை விமர்சனக் கண்கொண்டு பார்க்க விடாது தடுக்கும் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியலே, புலிக்கு நிகரானது. புலியெதிர்ப்பு அணியை தக்கவைக்கவே, புரட்சிகரமான அனைத்துக் கருத்துப் போக்கையும் இருட்டடிப்பு செய்வதில் புலிக்கு நிகராகவே ரீ.பீ.சீயை சுற்றியுள்ள புலியெதிர்ப்பு கும்பல் செய்கின்றது. ஊடகவியலை வைத்து வித்தை காட்ட முனைகின்றனர். ஒரு தலைப்பட்சமான பொய்களையும், திரிபுகளையும் உள்ளடக்கிய வக்கிரம், படிப்படியாக புலிக்கு நிகராகவே அம்பலமாகி வருகின்றது. புலிகளின் கருத்தைக் கூட புலியெதிர்ப்பு கும்பல் கொண்டு வந்த போதும், மக்கள் நலன் சார்ந்த கருத்தைக் கொண்டு வருவதில் மிகக் கவனமாக தவிர்ப்பதே அவர்களின் மையமான அரசியலாகின்றது. புலியை விட புரட்சிகர அரசியலைக் கண்டே ரீ.பீ.சீ க் கும்பல் அச்சம் கொள்கின்றது, பீதி கொள்கின்றது. தமது சொந்த அரசியல் வேஷங்களையும், குள்ள நரித்தனத்தையும் புலிகளால் ஒரு நாளும் அம்பலப்படுத்த முடியாது. எனென்றால் ஓரே அரசியல் குட்டையில் ஊறியவர்கள் என்ற வகையில், அரசியல் ரீதியாக தமக்கிடையில் அனுசரித்து செல்பவர்கள். இதனால் புரட்சிகரப் பிரிவால் தாம் அம்பலமாவதைத் தடுக்கவே, புலியெதிர்ப்புக் கும்பல் அதிக பிரயத்தனம் செய்கின்றனர்.


இதனால் அவதூறுகளையும், புனைவுகளையும் கட்டமைக்கின்றனர். புனைபெயர் என்பதைக் கூட, இந்த புலியெதிர்ப்பு பெயர்வழிகள் அவதூறுக்காகவே பயன்படுத்துகின்றனர். தேனீ, நெருப்பு முதல் ர்P.பீ.சீ வரை, பயன்படுத்தும் போலிப்பெயர்கள் அவர்களின் எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு பயன்படுகின்றது. மக்களைப்பற்றி கவலைப்படாத, புலியை அழிப்பதில் ஏகாதிபத்தியத்தினதும் இலங்கை அரசினதும் கால்களை சுற்றிப் படருகின்றனர். இதற்கு வெளியில் அவர்களுக்கு என்று எந்த அரசியலும் கிடையாது. மக்களைச் சார்ந்து நிற்கும் அரசியல் என எதுவும் கிடையாது. அதை யாரும் எடுத்து வைக்கும் தகுதி கூட அவர்களிடையே கிடையாது.


அவர்கள் அரசியல் என்பது புலியெதிர்ப்பு தேவதாஸ் தேனீயில் கூறுவது போல் 'அமெரிக்கா வியட்நாமை குண்டு போட்டு அழித்தபோது பிரான்ஸ் அரசு ஆயிரம், ஆயிரம் மக்களை தனது நாட்டில் குடியமர்த்தி வாழ்க்கை கொடுத்தது. அதைப் போன்று இந்த உலகில் யாராவது தேவ தூதரைப் போல் இலங்கைக்கும் சென்று நித்தம் நித்தம் துன்பத்தால் துடித்துக் கொண்டிருக்கும் அந்த தலித் மக்களை அழைத்துச் சென்று வாழ்க்கை கொடுப்பார்களானால் அது ஏகாதிபத்தியமாக இருந்தாலென்ன எந்தப் பிசாசாக இருந்தாலென்ன நான் அவர்களின் பாதங்களுக்கு பூச் சூடித் தினம் பூசை செய்வேன்." இப்படி காலம் பூராவும் தலித் மக்களை அடிமையாக வாழ்ந்து, அன்னிய பாதங்களை பூச்சூடி பூசை செய்வதைத் தான் தலித் விடுதலை என்கின்றார். என்ன அயோகியத் தனம். தலித் என்பவன் மற்றவனின் காலுக்கு பூசை செய்து வாழ்வதே என்கின்றனர். பார்ப்பான் தலித் பிறப்பையே கடவுளின் பாதப் பிறப்பாக்கினான். அந்த பாதத்தை வழிபடக் கோரும் அரசியலே, தலித் விடுதலையின் பெயரில் நடக்கின்றது. பாதங்களை பூச்சூடி தலித்தாக இழிந்து வாழக் கோருவதே இதன் உள்ளடக்கமாகும்.


சொந்த விடுதலைக்கு என எந்தக் கோட்பாடுமற்ற, அதற்காக போராடாத இழிநிலை. அன்னியனின் காலை நக்குவதற்கு அப்பால், அதை பூசை செய்வதற்கு அப்பால், எதுவும் இவர்களிடமில்லை.


இரண்டாவது ர்P.பீ.சீ எப்படி சாதியை ஒழிக்கின்றது. யாருடைய காதுக்கு பூ வைக்க விரும்புகின்றீர்கள். ர்P.பீ.சீ சாதியை ஒழிக்கின்றது என்பதால் அதை ஆதரிக்கின்றீர்கள், அதனால் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கின்றிர்கள் என்கின்றீர்கள். நல்ல நகைச் சுவையான விபச்சார அரசியல். சாதி ஒழிப்புக்கும் ர்P.பீ.சீ க்கும் என்னதான் சம்பந்தம். சாதிக்கும் ஏகாதிபத்தியத்துக்குமான உறவு நகமும் சதையும் போன்றதே. இங்கு புலம்புவது நிகழ்கின்றது. புலிகளை ஒழித்தால் சாதி ஒழிந்து விடுமா? உலகத்தையே ரீ.பீ.சீ போன்ற 'முதிர் முட்டாள்களானது" என்று நினைக்கின்றார்கள் போலும்.


அடுத்தது அமெரிக்கா குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிரான்ஸ் புகலிடம் கொடுத்ததாம். நம்புங்கள் இந்த அப்பட்டமான முழு மூட்டைப் பொய்யை. வியட்நாமை ஆக்கிரமிப்பில் தனது காலனியாக வைத்திருந்தது பிரான்ஸ் தான். பிரான்சுக்கு எதிராக வியட்நாம் மக்களின் போராட்டத்தை அடுத்து அதை எதிர்கொள்ள முடியாத நிலை, மூலதனத்தின் காலனியை தக்கவைக்க அமெரிக்காவிடம் காலனியாகவே வழங்கியதே பிரான்ஸ் தான். அந்த மக்கள் மீது குண்டை வீசி கொல்லவும், ஆக்கிரமிக்கவும் பிரான்சே கோரியது.


பிரான்ஸ் என்ன செய்தது. தனக்கு கூலிக்கு மாரடித்த குண்டர் படைகளையும், தனது காலனிய கைக்கூலிகளின் கணிசமான பகுதியை அழைத்துவந்தனர். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்து விடுவார்கள் என்று தெரிந்த போது, அங்கிருந்த நிலப்பிரபுகளும் முதலாளிகளும், எஞ்சிய காலனிய கைக் கூலிகளும் வெளியேறிய போது, வர்க்க விசுவாசத்துடன் அவர்களை ஏற்றுக் கொண்டது. இப்படித் தான் பிரான்சில் வியாட்நாமியருக்கு புகலிடம் வழங்கப்பட்டது.


உண்மை எதுவும் மக்களுக்கு வெளியில் கிடையாது


மக்களுக்கு வெளியில் கருத்து எதுவும் கிடையாது. மக்களுக்கு வெளியில் உண்மை, நேர்மை என எதுவும் கிடையாது. மக்கள் என்று நாம் அணுகும் போது, அவை மக்களுக்கு எந்த வகையில் உதவும் என்பதை விளக்கவேண்டும். அதைவிடுத்து புலம்பக் கூடாது.


நோர்வே போன்றவற்றின் செயற்பாட்டை ஏகாதிபத்தியம் அல்லாத தலையீடாக காட்டுவது நிகழ்கின்றது. 'இன்று உலகிலுள்ள 793 கோடீஸ்வரர்களின் நலன்களை மையமாகக் கொண்டதாகவே" காட்டி, ஏகாதிபத்திய செயற்பாடாக இருப்பதை மறுப்பது ஏன்? மைய அரசியல் அடிப்படையாக இதுவே இருக்கின்றது. அதாவது புலியெதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்தியத்தை சார்ந்து, அதன் கூலிப்பட்டாளமாக இருப்பதை மறுக்க முனைகின்றனர். இலங்கையில் ஏகாதிபத்திய தலையீடே இல்லை என்பதும், மாறாக 793 கோடிஸ்வரர்கள் பிரச்சனையாக கட்டுவது நிகழ்கின்றது. இன்று உலகில் 793 கோடீஸ்வரர்கள் தான் உலகில் இருக்கின்றார்கள எனபதே தவறான தகவல். அவர்கள் பல ஆயிரமாக உள்ளனர்.


இங்கு சர்வதேச அரசியல் பற்றிய திரிபு புகுத்தப்படுகின்றது. ஏகாதிபத்தியம் என்பதை திரித்து, அதை கோடீஸ்வரர்கள் என்று கூறுவதன் மூலம், அரசியல் ரீதியான சிதைவை புகுத்துவது நிகழ்கின்றது. பணக்காரக் கும்பலின் நலனை ஏகாதிபத்தியம் பூர்த்தி செய்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ, அதேநேரம் ஏகாதிபத்தியம் என்பது பணக்காரனின் சுயவடிவில் இருப்பதில்லை. மாறாக ஏகாதிபத்தியம் என்பது அரசியல் பொருளாதார உள்ளடகத்தில் வரையறுக்கப்பட்டது. இதுபோல் தான் புலிகள் பிரபாகரன் வடிவில் இருப்பதில்லை. (அதுவே கருணா வடிவிலும் டக்களிஸ் வடிவிலும் கூட இருக்கின்றது.) புலிகள் என்ற இயக்கத்தின் அரசியல் வடிவில் இருக்கின்றது. பிரபாகரன் ஒழிந்தால் புலிகள் ஒழிவதில்லை. புலிகள் ஒழிந்தால் யாழ்ப்பாணியம் ஒழியாது.


இங்கு இலங்கை அரசு இந்த பிரச்சனையை தீர்க்க 'அரசியல்-பொருளாதாரம் சுய-வளமின்மை அற்றுப் போயுள்ளது" என்பதே தவறானது. எப்படி அற்றுப்போயுள்ளது. சுயாதீனத்தை ஏன் இழந்துள்ளது என்று பார்த்தால், ஏகாதிபத்திய நலனைப் பூர்த்தி செய்யும் தேசிய அழிப்பில் அரசே கைக்கூலியாகவுள்ளது. இது இந்திய அரசுக்கும் கூட பொருந்தும். உலகமயமாதலை ஏற்றுக் கொண்ட, உலக வங்கியிடம் கடன் வாங்கிய அனைத்து நாட்டுக்கும் பொருந்தும். பிரச்சனையைத் தீர்க்க இலங்கைக்கு என்று, ஒரு சிறப்பான போக்கு கிடையாது. இந்த அமைப்புக்குள் கூட பிரச்சனையை தீர்க்க முடியும். சொந்த குறுகிய அரசியல் நலன்களை கைவிட்டாலே போதுமானது. இங்கு ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான மோதல் இருக்க கூடாது என்பதுமட்டும் தான், குறிப்பான நிபந்தனையாகும். இலங்கை அரசுடன் மோதும் புலிகள் கூட ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார எடுபிடிக் கொள்கையை வைத்திருப்பதால் இது எதார்த்தத்தில் சாத்தியமானதே.


சமூகம் சார்ந்த எமது கருத்துகள், யாழ் உயர் சாதிய வெள்ளார்ளருக்கு அதாவது யாழப்பாணியத்துக்கே உதவுவது என்கின்றார். யாழ் உயர் சாதியம் தான் ஏகாதிபத்தியம் என்கின்றார். யாழ்ப்பாணிய ஏகாதிபத்தியத்துக்கு வெளியில், ஏகாதிபத்தியம் என்பது கிடையாதாம். நோர்வே போன்றவற்றை ஆட்டுவிப்பவர்கள் ஏகாதிபத்தியம் அல்ல என்கின்றார். யாரோ 793 கோடிஸ்வரர்களாம். அவர்கள் நலனைத்தான் நோர்வே முன்வைக்கின்றதாம். மக்கள் நலனை பேசுபவர்கள் அதிகாரத்தை கோருபவர்களாம். இதனால் இதை எதிர்க்க வேண்டும் என்கின்றார். அதனால் மக்கள் நலனை கோருபவர்களை, புலியின் எல்லையில் வைத்து எதிர்க்கின்றனர்.


இவர்கள் யாருடன் சேர்ந்து என்றால் ரீ.பீ.சீ கும்பலுடன் சேர்ந்து. அந்த எதிர்ப்புரட்சிகரக் கும்பலுடன் சேர்ந்து நிற்கின்றனர். ரீ.பீ.சீ ஏகாதிபத்தியத்தை எதிர்க்காததால் அதை ஆதரித்து அவர்களின் எடுபிடிகளாக இருப்பதால், அசுரா போன்றவர்களுக்கு அவர்கள் மீது காதல் வருகின்றது. அவர்களை யாழ் உயர்சாதி வெள்ளாளருக்கு எதிரான தலித்துகள் என்று நினைக்கிறார் போலும். அவர்கள் அதிகாரத்தைக் கோராதவர்களாம். அவர்கள் யாழ் மேலாதிக்கம் என்ற ஏகாதிபத்தியத்தையே எதிர்ப்பவர்களாம். இதைத் தான் அசுரா, தேவதாஸ் எமக்கு அடித்துச் சொல்ல முனைகின்றனர்.


தெளிவுறுவது அரசியல் பிளவாக புலம்புவது நிகழ்கின்றது


இப்படி சமூகம் சார் மானிடவிரும்பிகளை எதிர்த்து அசுரா பல புலம்பலை செய்துள்ளார். இப்படி ஏன் புலம்புகின்றார். சமகாலத்தில் நிகழ்கின்ற அதிர்வுகளே வெடிப்புகளாகின்றன. புலிகளை எதிர்க்கும் புலியெதிர்ப்புக் கும்பல் எதிர்ப்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை தெளிவாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், புலிக்கு எதிரான அனைவரும் புலியெதிர்ப்பு அணி என்ற மயக்கம் மாயை தெளிவுறுகின்ற நிலையில் பிளவுகள் அன்றாடம் நடக்கின்றன. புலிகள் அனைவரும் ஒன்று என்று அடையாளப்படுத்தி ஒடுக்கிய போது, தாம் எல்லோரும் ஒன்று தான் என்று, அந்த எலும்பை வாயில் கவ்வி வைத்திருந்தவர்களிடையே ஏற்பட்ட மயக்கம், எதிர்புரட்சிகர ஏகாதிபத்திய அரசியலால் இன்று தெளிவுறவைக்கின்றது. மக்களின் உண்மையான நேர்மையான நண்பர்கள் யார் என்பது அன்றாடம் அம்பலமாகி வருகின்றது. இது அசுரா குறிப்பிடுவது போல் பாரிஸில் மட்டும் நடக்கவில்லை, மாறாக உலகெங்கும் நடக்கின்றது. புலியெதிர்ப்பு நண்பர்களாக ஒன்றாக அரசியலில் கூடிக் கூத்தாடி குடித்து வாழ்ந்தவர்களிடையே ஏற்படும் அரசியல் பிளவுகள், தவிர்க்க முடியாது அசுரா போன்றவர்களின் மனக்குமைச்சாலாக வெளி வருகின்றது. இந்த மாற்றம் சர்வதேச நிலைமை, மற்றும் இலங்கையில் இன்றைய சூழலின் ஏற்பட்ட மாற்றங்களையும் அடிப்படையாக கொண்டு நிகழ்கின்றது. மக்களைப் பற்றி நேசிக்கின்ற மனப் போக்குடன் இருந்தவர்கள் இடையே ஏற்பட்டுவரும் அரசியல் தெளிவுக்கு, நாங்கள் உறுதுணையாக இருந்தோம் என்பதே உண்மை.


கடந்தகால முழுவதுமான விமர்சன முறை ஒன்றை, தொடர்ச்சியாக இடைவெளியின்றி சமரசமின்றி நாங்கள் மட்டுமே நடத்தினோம். இந்த அரசியல் விமர்சனப் போக்கு, மூன்றாவது அணியாக மக்களை நலனை முன்னிலைப்படுத்தும் அரசியலாக அடையாளப்படுத்தியது. எமது அரசியல் நேர்மை, மக்களை நேசிப்பவர்ளை சிந்திக்க தூண்டியது. மக்கள் கருத்தை முன்வைக்க அவர்களையும் தூண்டியது. ஒடுக்கப்பட்ட மக்களின் பல்வேறு சமூகப் பிரிவினரின் போராட்டம், இயல்பில் இயல்பான ஜக்கியப்பட்ட அணுகுமுறையை நோக்கியே இட்டுச் செல்வது இன்றைய வரலாற்றில் அன்றாடம் நிகழ்கின்றது.


ரீ.பீ.சீ போன்ற புலியெதிர்ப்புக் கும்பலின் எதிர்புரட்சிகர பாத்திரம் தான், இந்த அரசியல் நிகழ்ச்சியை துரிதமாக்கியது. புலிகள் அல்லாத பிரிவுக்கு இடையில் இருந்த மூடுமந்திரத்தையும், சூக்குமத்தையும், ரீ.பீ.சீ கும்பலின் அப்பட்டமான எதிர்ப்புரட்சிகரமான அரசியல் பாத்திரம் தெளிவுபடுத்தியது. அவர்கள் புலிக்கு எதிராக ஆற்றிய அரசியல் விபச்சாரம், எந்த வகையிலும் மக்கள் நலனைப் பேணவில்லை. மக்கள் நலன் என்று இவர்கள் சொல்லக் கூடியது, புலி பாசிசத்திடம் இருந்து ஏகாதிபத்திய பாசிசத்திடம் தமிழ் மக்களை கையளிப்பது தான். இதைத் தாண்டி இவர்களிடம் வேறு எந்த கொள்கையும் கோட்பாடும் கிடையாது.


தாங்கள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் தான் என்பதை, அவர்கள் தெளிவாக தமது கருத்துகளில் கூறிவிடுகின்றனர். ஜெயதேவன், ஜெகநாதன், சிவலிங்கம், ராம்ராஜ் முதல் அனைவரும் அப்பட்டமாகவே ஏகாதிபத்திய ஏஜண்டுகளாக இருக்கின்றனர் அல்லது அதற்கு இசைவாக விசுவாசமாக செயற்படுவதை ஆதரித்துக் கொண்டு கருத்துகளை உளறுகின்றனர். உண்மையில் புலிப் பாசிசம் விரிக்கும் இரத்தம் தோய்ந்த செங்கம்பளத்தில், இவர்கள் ராஜநடை போடுகின்றனர்.


ஜனநாயகம், புலிப்பாசிசம் பற்றி கூறிக் கொண்டு, இவர்கள் எதிர்மறையில் செய்வது எல்லாம் மற்றொரு பாசிசத்துக்கான தயாரிப்பைத்தான். இலங்கையில் சிங்கள பேரினவாத அரசுடன் கூடிக் கும்பலாக குலாவும் ஈ.பி.டி.பி முதல் புளாட் வரையிலான குழுக்கள் எதை செய்கின்றதோ, அதைத்தான் இங்கு ரீ.பீ.சீ க் கும்பல் செய்கின்றது. அவர்கள் அங்கு பேரினவாத அரசின் கைக்கூலிகளாகி புலி ஒழிப்பில் ஈடுபட, இங்கு இவர்கள் ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தின் ஊடாக அதையே நிறைவு செய்ய முனைகின்றனர். நடைமுறை மற்றும் கோட்பாட்டில் எந்த கொள்கை வேறுபாடும் இவர்களுக்கு கிடையாது. சாமபேதம் கடந்து கொலை முதல் ஜனநாயகம் வரை புரட்டி போடுவதில், பரஸ்பரம் இவாகளுக்கு இடையில் ஐக்கியமுள்ளது. கொலைகள் செய்வதையும் அப்பாவி மக்களையே புலியாக காட்டி கொல்வதை ஊக்குவிக்கும் நெருப்பு முதல் ஜனநாயகம் பேசும் ரீ.பீ.சீ வரை ஒன்றையொன்று சார்ந்து இணங்கிச் செயற்படுகின்றன. பார்க்க அவர்களுக்கு இடையில் உள்ள இணைய இணைப்பில் உள்ளடகத்தையும், அந்த அரசியல் கோமளித்தனத்தையும். இதைத் தான் புலி நிதர்சனமும், புலி வால் ஆதரவு கருத்து இணையங்கள் வரை செய்கின்றன.


புலியெதிர்ப்பு எதிர்ப்புரட்சிகர கும்பல் புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொண்டு, செய்வதெல்லாம் மற்றொரு பாசிசத்தை வளர்ப்பது தான். இதற்கு ஏகாதிபத்திய கைக் கூலித்தனத்தை ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றனர்.


நாளை இலங்கையில் ஏகாதிபத்திய தலையீடுகள் நடக்கும் பட்சத்தில், இவர்கள் என்ன செய்வார்கள். நிச்சயமாக அதன் கைக்கூலிகளாகி புலிப்பாசிச ஒழிப்பில் செயல்வீரராக கொலைக்காரக் கும்பலாக தம்மை நிலைநாட்டுவர். அதை நிலைநாட்ட சில 'ஜனநாயக" சித்தாந்தவாதிகள் கூலிக்கு மாரடிப்பர். இது தனிப்பட்ட மனிதர்களின் சுயவிருப்பம் சார்ந்த தெரிவுக்கு உட்பட்டதல்ல. அவர்கள் கொண்டுள்ள அரசியல், அந்த இழிசெயலைத் தான் செய்யும். அந்த அரசியல், அதை தான் தீர்மானிக்கின்றது.


என்னுடன் நேரில் விவாதம் செய்யும் அளவுக்கு அசுரா தேவதாஸ் போன்றவர்களை நன்கு நான் அறிவேன். இவர்கள் எதிர்ப்புரட்சிகர அரசியலை ஆதரிப்பதும், அதற்காக சமூகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டு ஆதரிப்பது அதிர்ச்சியானதல்ல. தனிமனிதர்களான நாம், எமது உழைப்பில் வாழ்ந்தபடி கடுமையாக சமூகத்துக்காக சதா உழைக்கும் எங்களை இவர்கள் வரிந்துகட்டி எதிர்க்கின்றனர். உங்களை போன்றவர்களின் நிதி உதவியுடன், ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்கும் புலியெதிர்ப்பு கும்பலை ஆதரித்து நிற்பது, சமகாலத்தில் எதிர்புரட்சிகரமானது என்ற உண்மை அதிக காலம் அவர்களை அரசியல் ரீதியாக தக்கவைக்காது. எங்களை அதிகார வெறியர்களாகவும், யாழ் உயர்சாதிய வெள்ளாளரை அதாவது யாழ்ப்பாணித்தை ஆதரிப்பவராக காட்டும் இவர்கள், ரீ.பீ.சீ கும்பல் அப்படி அல்ல என்கின்றார். இப்படி எல்லாம் இவாகளால் சொல்ல முடிகின்றது. எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கித்தனம் இங்கு முளைவிடுகின்றது.


நாங்கள் அதிகார வெறியர்கள் என்கின்றனர். அப்படி ஒரு மக்கள் அதிகாரத்தை பெறும் எந்த நிலைமையும், அதற்குரிய அரசியல் சூழலும் சமகாலத்தில் கிடையாது. நாங்கள் இன்று தனிமனிதர்கள் தான். நாங்கள் எந்தநேரமும் தூக்கு கயிற்றை முத்தமிட்டபடி, மரணத்துக்காக கொலைகாரனின் வரவை எதிர்பார்த்து மக்களுக்காக வாழ்பவர்கள். எங்களைப் பார்த்து அதிகார வெறியர்கள் என்று கூறுவது நகைப்புக்குரியது. உண்மையில் ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர கும்பலே, அதிகாரத்தை நோக்கிய கனவுகளுடன் நடைபோடுகின்றனர். ஜெயதேவன் வார்த்தையில் சொன்னால் நிச்சயமாக மீண்டும் வன்னி செல்வேன் என்பது இந்த அதிகாரத்தின் அடிப்படையில் தான். ரீ.பீ.சீ கும்பல் பின்னால் உள்ள கட்சி, அதை நோக்கியே ஏகாதிபத்திய கும்பலுடன் கூடிக்குலாவுகின்றது.


நாங்கள் மக்களுக்கு எதிராக உள்ள புலியை எதிர்ப்பவராகவும், அதே காரணத்தினால் புலியெதிர்ப்புக் கும்பலை எதிர்ப்பவராகவும் உள்ளோம். இந்த நிலையில் இந்த இரண்டுக்கும் இடையில் அங்கும் இங்கும் பக்கசார்பான நிலைப்பாட்டுடன் உள்ளவர்கள், எம்மை நடுநிலைவாதிகளாக காட்ட முனைகின்றனர். ஒன்றுக்கு அழுத்தத்தை கொடுக்க கோருகின்றனர். இந்த வகையில் புலிசார்பு நடுநிலைவாதிகள் பற்றிய தனியான மற்றொரு கட்டுரை எழுதியபடி உள்ளேன்.


புலியெதிர்ப்பு அரசியல் புலியைப் போல், தர்க்க ரீதியாக எதிர்கொண்டு விவாதிக்க அருகதை அற்றதாக மாறிவிட்டது. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வக்கற்றுள்ளது. பொதுவன்முறைகள் மீது தாம் நேர்மையானவராக கூறிக்கொள்ளும் இந்த எதிர்புரட்சிகர நாய் வேஷக் கும்பல், மக்கள் நலன் சார்ந்த கருத்தை மட்டும் எதிர்ப்பதல்ல. மக்கள் நலனை உயர்த்துபவர்கள் தாக்கப்படும் போது கூட, அதை கண்டிக்காது அதை ஆதரிக்கும் ஜக்கிய முன்னனிக் கோட்பாட்டை புலிகளுடன் கொள்கின்றனர். இந்த அரசியல் விபச்சாரம் சமகாலத்தில் ஒருங்கே அரங்கேறுகின்றது.


நாங்கள் மக்கள் விரோதம் சார்ந்த அனைத்து வன்முறையையும் எதிர்ப்பவர்கள். ஜோசப்பராஜசிங்கம் கொல்லப்பட்ட போதும் சரி, ரீ.பீ.சீ தாக்கப்பட்ட போதும் சரி, அதை எதிர்ப்பதில் நாம் யாருக்கும் எந்த சலுகையையும் வழங்கியது கிடையாது. அண்மையில் சிறிரங்கன் விடையம் மிகச் சிறப்பான ஒரு அரசியல் உதாரணம். புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் மட்டுமல்ல, அது புலியைப் போன்ற அரசியல் பொறுக்கிகள் தான் என்பதை இவர்கள் அனைவரும் கூட்டாக நிறுவியவர்கள். புலி ஆதரவு மிதவாதிகள் அல்லது புலி எதிர்ப்பு நடுநிலைவாதிகள் கூட சிறிரங்கன் விடையத்தை கண்டித்த போது, புலியெதிர்ப்புக் கும்பல் அதைக் கண்டிக்க கூட முனையவில்லை. அந்தளவுக்கு புலியைப் போல் ஒரு தலைப்பட்சமான வன்முறை ஆதரவு வெறியர்களாக, அரசியல் வக்கிரம் பிடித்தவர்களாக உள்ளனர்.


இவர்கள் மாற்றுக் கருத்துக்காக போராடுவதாக கூறுவதே நகைப்புக்குரியது. இதில் சிறிரங்கனுடன் பலர் நட்புரீதியான உறவை முன்பு கொண்டிருந்தவர்கள். சிறிரங்கன் கொல்லப்பட்டால் கூட இவர்களுக்கு மகா சந்தோசம் தான். இதை போல் மக்களை நேசிப்பவாகள் பற்றிய இவர்களின் அரசியல் நிலைப்பாடு இது தான்.


இந்த நிலை ஏன்?


இந்த இழிநிலை ஏன்? கருத்தியல் தளத்தில் எம்மை எதிர்கொள்ள முடியாதன் விளைவு இது. இதுவே புலியின் நிலையும் கூட. மாற்றுக் கருத்து என்று போலியாக புலம்பும் இவர்கள், கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள முடியாது வக்கற்றுப் போகின்றனர். அதைத் தடுக்க, புலியின் வன்முறையைக் கூட அவர்கள் ஆதரிக்க முற்படுகின்றனர். நாங்கள் உங்களை விமர்சிக்கின்றோம் என்றால், அதை துணிவுடன் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். கருத்தால் பதிலளியுங்கள். அதற்கு அரசியல் வக்கில்லை. எதிர்ப்புரட்சிகர அரசியல் செயற்பாடு, சந்தியில் நிர்வாணமாகவே ஆடுகின்ற நிலையில், அதை அம்பலமாக்கும் எம்மீது புலியை விட கடும் எதிர்ப்பான அரசியல் நிலைப்பாட்டை எடுத்து, அவதூறாக புனைந்து வீசுகின்றனர். அவர்களுக்கு கருத்தியல் தளத்தில் சவால் விடுபவர்கள் புலிகள் அல்ல, நாங்கள் தான் என்பதே எதார்த்தம். அவர்களின் எதிர்ப்புரட்சிகர எதிர்காலத்தின் வாழ்வும் சாவும், எம் கையில் தான் உள்ளது.


புலியெதிர்ப்பு அணி சிதறி வருகின்றது. இந்த வகையில் எமது கருத்துக்கள், அவர்களிடையே செல்வதை தடுக்க அதீதமான பிரயத்தனம் செய்கின்றனர். கடும் இருட்டடிப்பை செய்கின்றனர். எம்மீதான அவதூறுக்கான பதிலைக் கூட அவர்கள் போட மறுக்கின்றனர். உப்புச்சப்பில்லாமல் அதையே நியாயப்படுத்த முனைகின்றனர். இதில் இந்த ரீ.பீ.சீ முதல் அனைத்து புலியெதிர்ப்பு கும்பலும், ஏன் ஆனந்தசங்கரியின் இணையம் வரை ஒருமித்த வகையில் இணைந்து ஏகாதிபத்திய கைக்கூலி பாசிட்டுகளாகவே நிற்கின்றனர்.


இவர்களும் புலியைப் போல் மக்களை கண்டு சதா அஞ்சுகின்றனர். எதிர்புரட்சிகர செயற்தளத்தில், மக்கள் அரசியல் என்பது இவர்களுக்கு அச்சம் தரும் ஒரு செய்தியாகவே உள்ளது. நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல. நாங்கள் மக்களுக்கு எதிரான புலிக்கும், புலியெதிப்புக்கும் இடையில் சன்னதம் எடுத்து நிற்பவர்கள் அல்ல. நாங்கள் மதில் மேல் பூனைகள் அல்ல. நாங்கள் தனியாக தனித்துவமாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களின் கருத்துகளை ஒருங்கிணைத்து அதை முன்வைப்பவர்கள். உங்கள் இரண்டு ஒருமித்த அரசியல் போக்குக்கும் வெளியில், உங்கள் இரண்டு எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு எதிராக, புரட்சிகரமான மக்கள் கருத்தை முன்வைக்கின்றோம்.


இதில் நாம் பல முரண்பாடுகளைக் கொண்ட தனிநபர்களாக இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளின் முரண்பாடான பிரிவுகளை சார்ந்ததாக இருந்த போதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் இயல்பில் இயற்கையாகவே எமக்கு இடையில் ஒருமித்த பார்வை உருவாகின்றது. மக்களின் எதிரிகள் மயக்கமும், சூக்குமமும் அற்ற வகையில் தெளிவாகவும் துல்லியமாகவும் அம்பலமாகி வரும் போது, மக்களின் நண்பர்கள் கருத்தியல் தளத்தில் இயல்பாகவே ஒருங்கிணைந்து வருகின்றனர்.


எதிர்ப்புரட்சி அரசியல் என்பது மக்களை இழிவாடுவதாகும்.


சிலர் இதை எள்ளி நகையாடுகின்றனர். எள்ளி நகையாடலை புலிகளும், புலியெதிர்ப்பாளரும் ஒரே விதமாகவே செய்கின்றனர். மக்கள் மக்கள் என்கின்றீர்களே, அதை அணிதிரட்டுங்களேன் என்கின்றனர். மண்ணில் போய் அதை செய்யுங்கள் என்கின்றனர். வேடிக்கை என்னவென்றால் இந்த இரு எதிர்ப்புரட்சிகர கும்பலும், தம்மை விமர்சிக்காமல் அதை செய்யுங்கள் என்கின்றனர். இவர்கள் ஒருமித்த குரலில், மக்கள் எப்படி போராடுவார்கள் என்கின்றனர். அதைப் போராடிக் காட்டுங்கள் என்கின்றனர். மக்களை மந்தைகளாகவே பயன்படுத்துவதையே, அவர்கள் தமது கொள்கையாக கொள்கின்றனர்.


மக்களை அணிதிரட்டுவதே முடியாது என்பதே, அவர்கள் சொல்லும் அடிப்படைச் செய்தி. இதை புலி அழிப்பின் பின் செய்வதாக புலியெதிர்ப்புக் கும்பலும், தமிழீழம் பெற்ற பின் அதைச் செய்வதாக புலிகளும் கூறுகின்றனர். இது தான் இவர்களுக்கு இடையிலான முரணான ஒரேவிதமான நகைச்சுவையாகும். எனவே தாங்கள் எதிர்புரட்சிகரமான பாத்திரத்தை மக்களுக்கு எதிராக கையாண்டு, தாம் மக்களை விடுவிக்கப் போவதாகவே கூறுகின்றனர். புலிகள் பேரினவாதத்தை ஒழிக்க எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வகிக்கின்றனர் என்றால், புலியெதிர்ப்புக் கும்பல் புலிப் பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு அவசியம் என்கின்றனர். இது தான் இவர்களிடையேயான உயாந்தபட்ச அரசியலாகும்.


மக்களை அணி திரட்டுவது எப்படி


நாங்கள் எப்படி மக்களுக்காக போராட முனைகின்றோம். மக்கள் இவர்களால், இவர்களின் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்றனர் என்பதால், இவர்களுக்கு எதிராக மக்களை சார்ந்து நிற்பதை வலியுறுத்துகின்றோம். மக்கள் தமது விடுதலையை தாமே பெறவேண்டும் என்கின்றோம். மக்களுக்கு வெளியில் யாருக்குத் தான் விடுதலை தேவை. மக்கள் தாம் போராடாத விடுதலை என்பது உண்மையானதல்ல. அது அந்த மக்களுக்கே எதிரானது. இது பேரினவாதத்தை ஒழித்தாலுல் சரி, புலி பாசிசத்தை ஒழித்தாலும் சரி, மற்றொரு பாசிசம் தான் அதனிடத்தில் வரும்.


மக்கள் பற்றி நாம் பேசும் போது சரியாகவே அசுரா அதை அடையாளம் காண்கின்றார். அதை அவர் மற்றொரு அதிகாரம் என்கின்றார். ஆம் அந்த அதிகாரம், மக்களுக்கான அதிகாரம். அது மக்கள் தம்மைத் தாம் ஆளுவதற்கல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான ஒடுக்குதலை கையாள விரும்பும், ஒடுக்குமுறைக்கு மேலான அதிகாரம். இந்த அதிகாரத்தைத் தான், அசுரா எதிர்க்கின்றார். இருக்கும் ஒடுக்கும் அதிகாரத்தை காப்பற்றவும், அதை ஜனநாயகத்தின் பெயரில் புலியெதிர்ப்பு தமக்கிடையே பங்கிட்டுக் கொள்ளவே, உலகையே தலைகீழாக்கிப் பார்க்கின்றார். மக்களுக்கு அதிகாரமில்லாத எந்தப் போராட்டமும், எந்த அமைதியும், மக்களை அடக்கியொடுக்கி ஆள்வதற்கே வக்காலத்து வாங்குவதாகும்.


மக்களின் நலனை முன்னிறுத்தும் போக்கு அரும்பத் தொடங்குகின்ற நிலையில், அதற்கு எதிரானவர்கள் கொதிநிலையை அடைகின்றனர். அதை அதிகாரம் என்கின்றனர். உயர் சாதிய வெள்ளாளர் யாழ் மேலாதிக்கம் என்கின்றனர். இப்படி பலவாக திட்டித் தீர்க்கின்றனர். வரலாற்றை கவனமாக பார்த்தால், 1984க்கும் 1986க்கு உட்பட்ட காலத்தில் இயக்கத்தின் உள்ளே மக்களை நலனை முன்னிலைப்படுத்திய போக்கு எழுச்சியுற்றது. பிற்போக்கு தலைமைக்கு எதிரான கருத்துப் போராட்டத்தை தொடங்கிய போது, சில நூற்றுகணக்கானவர்கள் இயக்க தலைமைகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். இன்றுவரை இந்த படுகொலையை புலியெதிர்ப்புப் கும்பல் கொலையாகக் கூட கருதுவதில்லை. அதற்கு நிகராக இன்றும் அந்தக் கும்பல் தனிமனித அவதூறுகளையும் தாக்குதலையும் அந்த கருத்து சார்ந்தவர்கள் மீது நடத்துகின்றனர். இன்று புலியெதிர்ப்பு, புலியாதரவு பிரிவினர் மக்கள் சார்பானவர்களை மார்க்சியவாதிகள் என்று கூறி, ஒரே விதமான அவதூறையும் தாக்குதலையும் நடத்துகின்றனர்.


கேள்வி எப்படி மக்கள் போராடுவது என்பதே


புலியின் பாசிச சூழலில் இருந்து மக்களின் உணர்வு பூர்வமான பங்களிப்பு கூடிய நிலைமைக்கு எப்படி மாற்றுவது? இன்று புலிகளோ அல்லது புலியெதிர்ப்பு கும்பலையோ கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது இலகுவானது. அதை நாங்கள் தனித்துவமாகவே வெற்றிகரமாக எதிர்கொள்கின்றோம். மக்கள் விரோதத்தின் எல்லாவிதமான ஒட்டுமொத்த வடிவமாக அவர்கள் இருப்பதால், அது சாத்தியமானதாக உள்ளது. ஆனால் மக்கள் புரட்சி அப்படியல்ல. அதற்கு மக்களை அணிதிரட்டக் கூடிய, உண்மையை சமரசமின்றி எடுத்துச் செல்லக் கூடிய, தியாக உணர்வும் உறுதியும் கொண்ட முன்னணியாளர்கள் தேவை. அதை நோக்கிய கருத்துத் தளத்தில் நாம் போராடுகின்றோம்.


நாம் சமரசமின்றி கருத்துத் தளத்தில் போராடுவது போல் போராடுவது முதல் பணி. அதாவது மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி, அவர்களின் வாழ்வியல் மீது உணர்வுபூர்வமாக செயற்படுவது உடனடிப்பணியாகும். இதுதான் முதல் பணி. இது இன்னமும் மிக தொலைவில் உள்ளது. அதன் பின் இவர்களிடையேயான பார்வையை ஒருங்கிணைப்பது இரண்டாவது பணி. ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகப்பிரிவுகளும் ஒன்றுபடுவதற்கு தடைகள் எதுவும் கிடையாது.


ஏன் தடைகள் இருப்பதில்லை


ஒரு ஒடுக்குமுறைக்கு எதிராக உண்மையாக போராடுபவன், மற்றைய ஒடுக்கமுறையை அங்கீகரிப்பவன் அல்ல. இந்த வகையில் ஒன்றுபடுவதும், அனைத்து ஒடுக்குமுறையையும் ஒழிக்க ஒன்றுபட்ட முயற்சிக்கு தடைகள் எதுவும் இருப்பதில்லை. மொத்த சமூக ஒடுக்குமுறையை இனம் காணவும், அதை ஒழித்துக்கட்டும் அரசியல் வழியைக் காண்பதும், உண்மையான ஒவ்வொருவருக்கும் முன்னால் தடையாக எதுவும் இருப்பதில்லை.


ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்ணிய போராட்டம், சாதிய ஒழுக்குமுறையை எதிர்க்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் போராட்டம், சுரண்டலை எதிர்க்கும் சுரண்டப்படும் மக்களின் போராட்டமும் சரி, இப்படி சமூகத்தின் நிறவாதம், பிரதேசவாதம், இனவாதம் என்று நீண்டு கிடக்கும் ஒடுக்குமுறையை எதிர்ப்பவர்கள், மற்றைய ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்கள் அல்ல. அந்த வகையில் ஒருமித்த ஒன்றிணைந்த போராட்டமும், அதற்கான அரசியல் கோட்பாட்டையும் இனம் காண்பது சாத்தியமானதே.


இங்கு ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் தம் மீதான ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்ட, ஒடுக்குபவன் மீது அதிகாரத்தை செலுத்துவது அவசியமானதாக்குகின்றது ஒடுக்குபவனை ஒடுக்குபவன் என்ற பிரிவு இல்லாதநிலை ஏற்படும் போதும், ஒடுக்குபவன் மீதான அதிகாரமும் இல்லாது போய்விடுகின்றது. இது அதிகாரம் பற்றிய ஒடுக்கப்பட்டவனின் கோட்பாடாகும்.


ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூகப் பிரிவும் தனது சொந்த விடுதலைக்காக போராடுவதும், ஒடுக்குபவன் மீதான தனது அதிகாரத்தை செலுத்தி ஒடுக்குதலை இல்லாது ஒழிக்க ஒருங்கிணைவது இயல்பானதும் இயற்கையானதுமே. இதை யாரும் எந்த வரலாற்றாலும் தடுத்து நிறுத்திவிடமுடியாது.


யார் எப்படி இருட்டடிப்பு செய்தாலும், யார் எப்படி தூற்றினாலும், யார் எப்படி திரித்தாலும், வரலாறு என்பது மக்களின் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டத்தினால் நிர்ணயமாகின்றது. இது காலத்தினால் சூழலால் பலவீனமான குரலாகவும், எதிரியின் கருத்து பலமானதாகவும் கூட இருக்கலாம். பிற்போக்கு வாதமும், எதிர்புரட்சிகர பாத்திரமும் சூழச்சி கொண்டதாக, பணம் பலம் பெற்று ஆயுதமேந்தி அதிகாரம் பெற்றதாக கூட இருக்கலாம். ஆனால் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் தகமை அதற்கு கிடையாது.


அன்று அதாவது 1980களில் ஆயுதம் இல்லாது எப்படி போராடுவது? இந்தியா உதவி இன்றி எப்படி போராடுவது? அடுத்த சித்திரை புத்தாண்டில் தமிழீழம் என்றனர். இவர்களால் மக்களைப் பற்றி கதைத்தவர் கிண்டல் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து மக்களைப்பற்றி கதைப்பவர்களை படுகொலை செய்தனர். அன்று மக்கள் விரோத தேசிய அலைக்கு பின்னால், மக்களில் நம்பிக்கை இழந்து கும்பலாக ஒடியபோது எது நிகழ்ந்ததோ, அதுவே இன்று புலியெதிர்ப்பு கும்பலின் பின்னால் நிகழ்கின்றது.


புலியின் பாசிச சூழலை மாற்ற நாம் முனைகின்றோம். ஏகாதிபத்திய துணையின்றி இது முடியாது. ஏகாதிபத்தியத்தை நாம் இதற்காக பயன்படுத்த வேண்டும். இப்படி பல வண்ணமான அரசியல் விளக்கங்கள் விதண்டா வாதங்களுடன் ஒடுகின்றனர். எங்கே என்று தெரியாது, பலபேர் இந்த அலையில் பின்னால் அவசரம் அவசரமாக கோவணத்தை இழுத்துச் செருகியபடி தான் ஒடுகின்றனர். ஏன் ஒடுகின்றோம் என்ற பதில் கூட தெரியாது ஒடுகின்றனர்.


புலி பாசிசத்துக்கு பதிலாக மற்றொரு பாசிசத்தை உருவாக்கவே ஒடுகின்றனர். இன்றைய நிலைமையை கடப்பது என்பது, தனித்த எம் கையில் மட்டும் கிடையாது. நிலைமை தனிமனிதர்களான எமக்கு வெளியில் மிக வேகமாகவே மாறுகின்றது. இது புலிக்குள்ளும் நிகழ்கின்றது. இலங்கை அரச ஏகாதிபத்தியம் வரை எங்கும் நிகழ்கின்றது. சர்வதேச ரீதியாக மக்கள் மத்தியிலும் நிகழ்கின்றது.


இந்த நிலையில் நாம் தனித்து வரலாற்றையும், வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளையும் தீர்மானிப்பவாகளாக எப்போதும் எங்கும் இருப்பதில்லை. ஆனால் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கில் நாம் செயற்பட முடியும். இதுதான் பெரும் காட்டுத் தீயாக மாறுகின்றது. வரலாற்றை மக்கள் தாம் விரும்பியபடி மாற்றுகின்றனர். இங்கும் தலைவர்கள் அல்ல, மக்கள் தான் வரலாற்றைத் தீர்மானிக்கின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உண்டு.


1917 சோவியத் புரட்சிக்கு போல்ஷவிக்குகள் தலைமை தாங்குவார்கள் என்று, அதற்கு முந்திய காலத்தில் யாரும் எதிர்வு கூறமுடியாத, வெளித் தெரியாத மக்களுடன் தொடர்புடைய ஒரு கட்சியாக இருந்தது. சீனாக் கம்யூனிஸ்ட் கட்சி 1936 களுக்கு முன்னம் ஒரு சக்தியாக கூட யாரும் கருதவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால் பெரும் மக்கள் திரளை வீதியில் நடத்திக்காட்ட கூடிய ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு போராட்டத்தை, நேபாள மக்களோ அல்லது சர்வதேச சமூகமோ உணர்ந்ததா? இப்படி உலகம் பூராவும் உள்ள சிறிய குழுவாக உள்ள கருத்துகளின் பலம், எப்படி பெரும் காட்டுத் தீயாக மாறுகின்றது. மக்களை மட்டும் நம்பி, அவர்களை போராட வைக்கும் எதார்த்தம் இதை சாதிக்கின்றது. இதற்கு பல சான்றுகள் வரலாறு முழுக்க நீண்டு கிடக்கின்றது.


அவை அழிந்து பட்டுப்போனதும் உண்டு தான். வரலாற்றின் மாற்றங்களை சரியாக கிரகித்து போராட முடியாதபோதே இது நிகழ்கின்றது. மக்கள் மீதான ஒடுக்குமுறை மாறாத வரை, மக்கள் நலன்சார்ந்த போராட்டம் மீண்டும் மீண்டும் எழுச்சி பெறுகின்றது. வரலாற்றின் ஒட்டத்தில் அந்த மக்களுடன் மக்களாக நின்று, முன்முயற்சி எடுத்து போராடுவதே எமது இன்றைய வரலாற்றுக் கடமையாகும். மக்களை நேசிக்கும் ஒவ்வொருவனும், அவர்களின் ஒருவனாக உணரும் ஒவ்வொருவரும், நேர்மையாக செயற்படும் போது அதுவே மாபெரும் சக்தியாக மாறுகின்றது. வரலாற்றின் போக்கை மக்களின் வரலாற்றுப் போக்காக மாற்றி அமைக்க முடியும். கடந்தகாலம் முழுக்க இந்த பிற்போக்கான எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை, தனித்து நான் மட்டுமே எதிர்த்தும் எழுதியும் போராடியும் வந்தவன். இன்று சிலர் அந்தப் பாதையில் தாமாகவே முன் வந்துள்ளனர்.


வரலாற்றைத் திருப்பினால் இது தௌளத் தெளிவாக இருக்கின்றது. எனது பகுதி நேர தனிமனித அரசியல் முயற்சிகள், அது சென்றடைந்த சிறிய குறுகிய பரப்புகளில் அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. ஆனால் அந்தக் காலத்தின் முழு நிகழ்ச்சிகள் மீதும், பொதுவான கருத்தை வழங்கியுள்ளேன். இன்று அப்படி அல்ல. தனிமனித முயற்சிகளில் தாங்களாகவே சுயாதீனமாக போராடும் போக்கு அதிகரிக்கின்றது. பரஸ்பரம் இது இனம் காணப்படுகின்றது. முன்பு எதிரியாக தமது கருத்து நிலைசார்ந்து கருதியவர்கள், சுயவிமர்சனத்துடன் அணுகும் தெளிந்த பார்வை உருவாகின்றது. கருத்துச் சென்று அடையும் தளம், திட்டமிட்ட சதிகார இருட்டடிப்புக்கு மத்தியிலும் விரிவடைகின்றது. இந்த படிமுறை வளர்ச்சி வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் அல்லது தீர்மானிக்காமலும் போகலாம். ஆனால் இந்த உண்மை வரலாற்றால் சரியாக இனம் காணப்பட்டு, இந்த சரியான அரசியல் வழி எற்றுக் கொள்ளப்படும். கடந்தகால வரலாற்றுப் போக்கு, நிகழ்கால வரலாற்றின் மீது பொருத்தும் எமது போராட்டம், வராலாற்றில் தொடாச்சியாக இருப்பதை யாரும் தடுக்க முடியாது. மக்கள் மட்டும் தான் வரலாற்றை மாற்றமுடியும். கூலிப்படைகளும், குண்டா படைகளும், ஏகாதிபத்திய எடுபிடிகளுமல்ல. மக்கள் தாம் போராடி பெறும் சொந்த விடுதலை மட்டும் தான், அவர்களுக்கு உண்மையானது. அதுவே மனிட இனத்தின் உண்மையும் கூட.

No comments: