தமிழ் அரங்கம்

Saturday, August 19, 2006

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அடிமைச் சாசனம்!

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!

ந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் "இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் உண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது. தானாக அம்பலமாகவில்லை. 27 ஜூலை 2006 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்காக நிறைவேற்றியுள்ள திருத்தங்கள் இவற்றை அம்பலமாக்கியிருக்கின்றன. அவை பின்வரும் நிபந்தனைகளை விதிக்கின்றன:

""1. இந்தியா இனி அணுஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது; கைவசம் இருக்கின்ற அணுஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் இறுதியில் அணுஆயுதங்களே இல்லாமல் செய்வதையும் உத்திரவாதப்டுத்த வேண்டும். இது எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

2. அணுஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். இந்தியா குறிப்பிட்ட கால இலக்கிற்குள் இந்த உற்பத்தியை நிறுத்துவதை அமெரிக்க அதிபர் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆண்டுதோறும் அதிபர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமானால் அதற்கு முன் இந்தியாவின் அணு உலைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.

4. இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள், அவற்றின் உற்பத்தித் திறன், கையிலுள்ள அணு ஆயுதங்கள், அணுஆயுதம் தயாரிக்க உதவும் மூலக்கூறுகளின் கையிருப்பு, இந்தியாவில் ஆண்டுதோறும் வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தின் அளவு ஆகிய எல்லா இரகசியங்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

5. அணு ஆயுதப் பரவல் தடுப்புக்காக அமெரிக்கா உருவாக்கியுள்ள (கட்டைப் பஞ்சாயத்து) அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும். 6. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.''

இவை மட்டுமின்றி, இந்த ஆண்டின் இறுதியில் கூடவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நிறைவேற்றப்படுவதற்காகப் பின்வரும் திருத்தங்களும் தயாராக உள்ளன.

""1. இந்திய அணு உலைகள் அனைத்தையும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வராதவரை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.

2. 14 அணுசக்தி நிலையங்களை மட்டும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கு அனுமதிப்பதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்கவியலாது; மீதமுள்ள 8 அணுசக்தி நிலையங்களையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்.

3. இரான் போன்ற அணுஆயுதமில்லாத நாடுகள் எத்தகைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவோ, அதே விதமான கண்காணிப்புக்கு இந்தியாவும் உட்படவேண்டும்; இந்தியாவுக்கு அணுஆயுத நாடு என்ற சிறப்புத் தகுதியோ, விதிவிலக்கோ தரவியலாது.

4. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனை மட்டுமின்றி அமெரிக்க அதிகாரிகளின் நேரடி சோதனைக்கும் இந்தியா உட்படவேண்டும்.

5. இந்தியாவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கலாமென அமெரிக்கா திருப்தியடையாத பட்சத்தில், யுரேனியம் விற்கும் பிற நாடுகளும் இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யாமல் தடுக்க அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.''

சென்ற ஆண்டு ஜூன் 18ஆம் தேதி புஷ்ஷýம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புஷ் மன்மோகன் சிங் உடன்பாட்டிலும் பூடகமாக மறைக்கப்பட்டிருந்த அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை இந்தத் "திருத்தங்கள்' வெளிக் கொண்டு வந்திருக்கின்றன. ""இந்தியாவின் இறையாண்மையையும் அணுசக்தி சுயசார்பையும் பாதிக்கின்ற எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படமாட்டோம்'' என கடந்த மார்ச் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி அளித்த மன்மோகன் சிங், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாட்களாக இந்த திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது வாய் திறக்கவில்லை. ரசியாவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாட்டிற்குச் சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் தங்களது நிருபர் நிர்ப்பந்தித்துக் கேட்டபிறகுதான், திருத்தங்களின் சில அம்சங்கள் கவலையளிப்பதாக மன்மோகன் சிங் பதிலளித்தாரென்று தனது தலையங்கத்தில் (ஜூலை20) குறிப்பிடுகிறது. ""தி இந்து'' நாளேடு. அதன் பிறகு புஷ்ஷை சந்தித்த மன்மோகன் சிங், ""போட்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ஏன் மீறுகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பவில்லை. ""நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன'' (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம்! ""அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் குறித்து நானும் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம்சரணும் ஜூலை 10ம் தேதியன்று பாரிசில் 5 மணிநேரம் பேசியிருக்கிறோம்'' என்று கூறி மன்மோகன் சிங் கும்பலின் குட்டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் நிகோலஸ் பர்ன்ஸ். "ஆவன செய்வதாக'க் கூறிய புஷ்ஷின் வெள்ளை மாளிகையோ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள திருத்தங்களை வரவேற்றிருக்கிறது. திரைமறைவு பேரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் மன்மோகன் வெளியிடும் அறிக்கைகள் என்ற உண்மையை மன்மோகன் சிங்கே நிரூபிக்கிறார்.

அணுசக்திக் கமிசனின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியுமான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.ஆர். கோபாலகிருஷ்ணன் என விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் எதற்கும் மன்மோகன் கும்பல் பதிலளிக்கவில்லை. ""அனாவசியமாகப் பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். செனட்டிலும் விவாதம் முடிந்து அமெரிக்க சட்டத்தின் இறுதி வடிவம் வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கிறேன்'' என்பதுதான் மன்மோகன் சிங் கூறியுள்ள பதில்.

""அணு ஆயுதம் தயாரிக்கும் உரிமையைப் பறிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்து'' என்று கூச்சலிட்டது பாரதிய ஜனதா. ""சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை வகுக்க முடியாமல் செய்து இந்தியாவை அமெரிக்காவின் உலக யுத்த தந்திரத் திட்டத்தில் பிணைக்கிறது; அணுசக்தி சுயசார்பை அழிக்கிறது'' என்று கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக "நாடாளுமன்றத்தின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை'க் கொண்டுவரப் போவதாக "எச்சரித்தது' சி.பி.எம். கட்சி. ""அத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் இந்த அரசில் இருக்க மாட்டேன், இந்த அரசாங்கமும் இருக்காது'' என்று பதிலுக்கு சி.பி.எம்.மை எச்சரித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உடனே, தாங்கள் சி.பி.எம்.மின் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று நழுவியது பா.ஜ.க. ""அரசாங்கத்தை மிரட்டுவது எங்கள் நோக்கமல்ல, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சட்டகத்தை முன்மொழிவதுதான் எங்கள் நோக்கம்'' என்று விளக்கமளித்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.

புஷ் மன்மோகன் ஒப்பந்தம் என்பது சொக்கத்தங்கம் போலவும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்தான் பிரச்சினை என்பது போலவும் ஒரு பொய்ச்சித்திரம் ஓட்டுக்கட்சிகளாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மாறாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு, கன்டலிசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற பல அதிகாரிகளும் மார்ச் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பேசியுள்ளனர். இவை தொடர்பாக மன்மோகன் சிங் கூறிய பொய்களும் அப்போதே அம்பலமாகி இருக்கின்றன. (பு.ஜ. மார்ச், ஏப்ரல் 2006) நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரியாமல் ஜூன், 18, 2005 அன்று மன்மோகன் சிங் புஷ்ஷடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், ஜூன் 28,2005இல் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தமும்தான் மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படையில்தான் இரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இந்தியா வாக்களித்தது. இரானுடனான எரிவாயுக் குழாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை. இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகள் இந்த அடிப்படையிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.

ஆட்சியே போனாலும் ஒப்பந்தத்தை விடமுடியாது என்ற பிரணாப் முகர்ஜியின் மிரட்டலுக்கும், தேசிய கவுரவத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான பார்ப்பன பாசிஸ்டுகளின் "பல்டி'க்கும், அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலோசனை வழங்குவதாக "மார்க்சிஸ்டுகள்' அடக்கி வாசிப்பதற்கும் வேறென்ன விளக்கம் இருக்கிறது? ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு "இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. ""நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா?'' என்பதுதான் இப்போது நாடாளுமன்றத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவாதம். இந்தக் கேலிக்கூத்தின் முரண்நகையாக பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அமெரிக்க உளவாளிகள் என்ற பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் "தேசபக்தர்' ஜஸ்வந்த் சிங். இப்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே ஒரு அமெரிக்க உளவாளிதானே!

7 comments:

லொடுக்கு said...

ஆஹா!! இதுல சிந்திக்கவும், பயப்படவும் நெறைய செய்தி இருக்குற மாதிரி தெரியுது... நாதாரி பயலுவ நம்மல (இந்தியாவை) கவுத்திட்டாய்ங்களே!!!

Unknown said...

மன்மோகன் பதவியேற்றபோது இவர் அறிவாளிதான் ஆனால் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த முடியுமா? என்று பலர் சந்தேகப்பட்டனர்.இவரும் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை சமீபகாலமாக நிரூபித்து வருகிறார்.

:-((((

அசுரன் said...

இந்தியாவில் உளவாளிகள், இந்தியாவை சிதைக்கும் தீவிரவாதிகள்னு இந்த கோஸ்டிகள் அடிக்கடி கத்தி மக்களை திசை திருப்புவது, திருடன் திருடிக்கொண்டு ஓடும் பொழுது திருடன் ஓடுரான் பிடின்னு சொல்லிகிட்டே ஓடி மக்களை திசை திருப்புவது போலத்தான் உள்ளது.

அதுவும் இந்த புரோக்கர் பசங்க ரொம்ப டேஞ்சர் ஆனவங்க....

சீக்கிரம் இவிங்களூக்கு ஆப்பு வைக்கனும்

நன்றி,
அசுரன்

அசுரன் said...

//மன்மோகன் பதவியேற்றபோது இவர் அறிவாளிதான் //

அதுவும் இவர் எப்படிப்பட்ட அறிவாளின்றது கொஞ்ச நாளைக்கு முன்னால மெக்காலே தன்னோட கல்லறைல ரொம்ப சந்தோசமா புரண்டு படுத்தாரே அப்பத்தான் தெரிஞ்சது.

ஏன் மெக்காலே புரண்டாறு?

நம்மாளு மாமா(இப்பல்லாம், மன்மோகன் சிங்க அப்படித்தான் நாங்க கூப்பிடுறோம்) இருக்காறே அவர் இங்கிலாந்துல ஆக்ஸ்போர்டு உனிவர்சிட்டில அவார்டு கொடுக்கிறாங்கன்ன, உடனே போய் வாங்கிட்டு அப்ப்டியே பிரிட்டிஸ் அரசின் காலனியாதிக்கத்துக்கு நன்றி சொல்லிட்டு வந்த பேமானிப்பயன்னு தெரிஞ்ச உடனே மேக்காலேக்கு ஐம்பது வருடம் கழித்தும் வெற்றீக்ரமாக செயல்படும் தன்னோட கல்விமுறை குறித்த சந்தோசத்தில் புரண்டு படுக்கலாம்னு தோனிச்சு...

இதே அளவு பேமானித்தனத்தோட கேப்மாரித்தனமும், மொள்ளமாறித்தனமும், விபச்சாரத்தனமும் செர்ந்த ஆளுதான் ப. சிதம்பரம். இவன் வேதாந்த கம்பேனி போர்ட் அப்ஃ டைரக்டர்ஸ்ல மெம்பரா இருந்தான்.

'இந்தியா'வ, 'இழிச்சவாயா'வா மாத்தின என்ரான் டுபாக்கூர் வழக்குல என்ரானுக்கு சட்ட ஆலோசனை வழங்கினான். அப்புறம் நிதியமைச்சராகி என்ரான வாங்குறதுக்கு 7000 கோடி ரூபா இழிச்சவாயா அரசு.. ஸாரி இந்திய அரசு பணத்த கொடுக்கறதுக்கு ஒப்புதல் கொடுத்த பெரிய மாமா பய இவன்.

இப்படி படிச்ச நாதாரிக சூதானமா இந்தியாவ கொள்ளையடிக்க ரொம்ப டெக்னிக்கலா வேலை செய்யும் போதுதான் திரைப்பட டைரக்டர்களும் படிச்சவன் அரசியலுக்கு வந்தா இழிச்சவாய... ஸாரி இந்தியா உருப்புட்டுறும்னு நம்ம துட்டையே வாங்கிட்டு நம்ம காதுலயே DTS எப்டெக்டுல ரீல் சுத்துறாங்க....

இது தெரியாம சில முட்டாப்பசங்களும் அது உண்மைன்னு நம்பிக்கிட்டிருக்காங்க....

அவிங்கல்லாம் இந்த அணு ஒப்பந்தத்த பாத்த பொறவாவது திருந்தனா சரிதான்....

நன்றி,
அசுரன்.

லொடுக்கு said...

இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறுத்த வழியே இல்லையா? அது நிறைவேறி விட்டதா?

மு. மயூரன் said...

//இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறுத்த வழியே இல்லையா? அது நிறைவேறி விட்டதா?//

:-))

செல்வன், வஜ்ரா என்று இரு வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு வழி தெரியும்.

மாசிலா said...

இந்திய வரலாற்றில் முன்னொரு காலத்தில் மகாராஜாக்கள் ஆண்ட போது, அந்தப்புரத்தில் பெண்களை பாதுகாப்பதற்காக ஆணுறுப்பு அறுக்கப்பட்ட பொட்டைகள் காவலுக்கு வைக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் பெண்களை நன்கு பாதுகாக்கவும் செய்தார்கள், அதே சமயம் பெண்களை அவர்களால் எதுவும் செய்யமுடியாமலும் இருந்தது.
அதேபோல்தான் இன்று அமெரிக்காவின் அந்தப்புரம் என்றாகிவிட்ட ஆசியாவில் பலமிக்க இந்திய ஆணின் உறுப்புகளை (அணுசக்தி) அறுத்து பொட்டை ஆக்கி காவலுக்கு வைக்க முடிவு செய்துவிட்டது அமெரிக்கா!
வாழ்க நமது "பொட்டைகளின்" சனநாயகம்.