தமிழ் அரங்கம்

Sunday, March 18, 2007

எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது

எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது

மது முற்போக்குவாதிகளும் மார்க்சியர்களும் இப்படியொரு சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது 1918 யூலை 17இல் இடம்பெற்ற சம்பவம். ஆன்று சோவியத் யூனியனில் உள்ள எக்காரெறின்பெரி என்னும் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு வேளையில், பதினொருபேர் லெனினது உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடுங்கோலனாக கருதப்பட்ட சார்மன்னன் இரண்டாம் நிக்களஸ், அவரது மனைவி அலெக்சாந்திரா, பிள்ளைகளான அலெக்சேய்தாத்யானா, ஓல்கா, அனஸ்தாசியா, மரியர் அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு மருத்துவர், ஒரு சமையற்காரர், ஒரு வேலைக்காரன், ஒரு தாதி, ஆகியோரே அவ்வாறு கொல்லப்பட்டவர்கள். இதன்போது சாரின் வீட்டு நாயும் கொல்லப்பட்டது.


இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் நிக்ளஸ் என்று ஒரு திரைப்படமும் இருக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பான அந்த திரைப்படம் சார் மன்னனுக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளையாட்டுத்தனமானவர்களாக சித்தரிக்கப்படும் அவனது, அழகான பெண் பிள்ளைகளுக்காக பார்க்கும் எவரும் கண்ணீர் சிந்துவர். மார்க்சியர்கள் குறிப்பாக ரஸ்ய போல்ஷவிக் அமைப்பினர் மிகக் கொடுரமானவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் என்பதாக ஒரு பார்வையாளர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த திரைப்பட இயக்குனரின் அரசியலும் கூட.


ஆனால் இந்த சம்பவம் ஒரு வரலாற்று பின்புலத்தில் வைத்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. அந்த நேரத்தில் ரஸ்ய அரசியல் சூழலில் முக்கிய விடயமாக உரையாடப்பட்ட மேற்படி கொலைகள் ஒரு புரட்சிகர அரசியல், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் பின்னனியிலேயே மார்க்சியர்களால் விளக்கப்பட்டது. உண்மையில் மனித உரிமை, ஜனநாயகம் என்ற சொல்கொண்டு மேற்படி சம்பவத்தை நாம் அளவிட்டால் லெனின் ஒரு மோசமான கொலைகாரராகத்தான் தெரிவார்.


ஆனால் ஒரு போராட்டச் சூழலில் அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில் பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும். நமது சூழலில் உள்ள சிலருக்கு இன்றும் விளங்காமல் இருக்கும் விடயமும் இதுதான். மனிதநேயம் பற்றி மாவோ கூறியிருப்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்கின்றேன். “மனித நேயம் பற்றி மக்கள் என்னதான் பேசிக் கொண்டாலும் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமூதாயத்தில் உண்மையில் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது யாராலும் இயலாத காரியம்” (வர்க்கம் என்ற இடத்தில் நமது இனத்துவ அடையாளத்தை குறித்துக் கொள்ளுங்கள்) இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மாவோவை ஈவிரக்கமற்றவர், கொலைகளை ஆதரிப்பவர் என்று சொல்லிவிட முடியுமா?


மார்க்ஸ் முன்னிறுத்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தின் நீட்சிதான் லெனின், மாவோ போன்றவர்களின் அனுகுமுறையும் கருத்துக்களும். பாட்டாளிகள் புரட்சியின்போது எதிரிகளான முதலாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்பதன் உள்ளடக்கம்தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். உண்மையில் மனிதநேய நோக்கில் எதிரியான சாருக்கு பதிலாக சாரின் மனைவி பிள்ளைகள் மீதான கொலை வேதனைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஓர் அரசியல் பின்புலத்தில் அதற்கான வலுவான நியாயமுண்டு.


எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது. என்னைப் பொருத்தவரையில் லெனின் செய்தது சரி நான் அதனுடன் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்காக எல்லாவற்றுக்கும் வன்முறைதான் ஒரேயொரு தீர்வு என நான் விவாதிக்க வரவில்லை வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகளுடாவும் சாதிக்கக் கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இங்கு முன்னிறுத்தும் வாதமோ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது இடம்பெறும் சில சம்பவங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்ல முற்படும்போதும் நமது புலமைச் செருக்கை விடுதலைப் போராட்டத்துடன் உரசிப்பார்க்கும் போதுமே நாம் தவறுகளை நோக்கி பயணிக்கின்றோம். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களின் அக்கறை கொள்வோமாயின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஆதரிப்பதை தவிர வேறு ஒன்றையும் எம்மால் பெரிதாக செய்துவிட முடியுமென நான் நம்பவில்லை.


கடந்த பத்துவருடங்களாக சில நிலைமைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பிழை பிடிப்பதில் தமது பண்டிததனங்களை செலவிட்ட எந்தவொரு மாற்றுக் கருத்தாளரும் தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் எதையும் சாதித்ததாக நான் கருதவில்லை. சில அரை வேக்காட்டு கூட்டத்தினரை உருவாக்கியதும் எதிரிகளுக்கு இடைவெளிகளை இனங்காட்டியதையும் தவிர. ஏதாவது சாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் என்னை நான் திருத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.


- யதீந்திரா

7 comments:

said...

//ஒரு போராட்டச் சூழலில் அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில் பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும்.//

நல்ல கருத்து தோழர், சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயம் குறித்து தோழர் லெனின் சிறப்பாகவே பகுப்பாய்வு செய்திருக்கிறார். வர்க்கமாக பிளவுபட்டிருக்கும் சமூகத்தில், வர்க்கமே சமூகத்தின் போக்கினை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கும் போது எதனையுமே வர்க்க கண்கொன்டுதான் அனுக முடியும்..

"ஜனநாயகம் என்று சொன்னால், ஒரு மார்க்சியவாதி எந்த வர்க்கத்துக்கானது என்று கேட்பான்.."
-லெனின்

"ஜனநாயகத்தையும் சரவாதிகாரத்தையும் ஒருவர் தனிதனியாக பிரித்து பார்பாரேயானால் அவருக்கு சர்வாதிகாரம் குறித்த வரலாறு தெரியவில்லை என்றே சொல்வேன்"

-லெனின்

வாழ்த்துக்கள் தோழர். யதீந்திரா.

தோழமையுடன்
ஸ்டாலின்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

One is reminded of Orwell and Animal Farm.Some are more equal
than others.In sum and substance
these 'marxists' have the least respect for human rights or dissent.Using class as a pretext in the name of proletarian dictatorship they will justify dictatorship that supresses the very working class.In other words
they will deny labor and others even the minimum rights that are
available in capitalistic societies. Of course few quotes from Lenin and Mao and others can always be used to justify any supression or mass murder or atrocity or genocide, all in the
name of creating a socialistic society.Marxist utopia has turned
out to be dystopia for millions.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஒரு போராட்டச் சூழலில் அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில் பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும்
good point that can be used by CPI(M) to justify police firing and other atrocities.

அசுரன் said...

//ஆனால் நான் இங்கு முன்னிறுத்தும் வாதமோ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது இடம்பெறும் சில சம்பவங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்ல முற்படும்போதும் நமது புலமைச் செருக்கை விடுதலைப் போராட்டத்துடன் உரசிப்பார்க்கும் போதுமே நாம் தவறுகளை நோக்கி பயணிக்கின்றோம். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களின் அக்கறை கொள்வோமாயின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஆதரிப்பதை தவிர வேறு ஒன்றையும் எம்மால் பெரிதாக செய்துவிட முடியுமென நான் நம்பவில்லை.
///


இதே அளவு கோல்தான் பெரியார் சிலை உடைப்பை ஒட்டி நடந்த வன்முறைகளை புரிந்து கொள்ள உதவுகிறது.

நல்ல கட்டுரை. இந்த மேலேயுள்ள வரிகள்தான் குட்டி முதலாளித்துவ ஊசலாட்டத்திற்க்கு அடி கொடுத்து சொரனையூட்டும் வரிகள்.



அய்யா ரவி சிரினிவாஸ்,

இது மாதிரி திரிச்சு திரிச்சு பேசுறதுக்கு ஏதாவது கயிறு திரிக்கிற கம்பேனில வேலை பாத்திருந்தா ஏகாதிபத்தியம் கொடுக்குற சம்பளத்த விட அதிகமா கிடைச்சிறுக்கும்.

போல்ஸ்விக்குகள் சுட்டது சார் மன்னனை, CPM எந்த சார் மன்னனை சுட்டது? out of contextல பேசி வார்த்தைகளை விருப்பம் போல போட்டு பொய்களை பிரச்சாரம் செய்வதில் மீமாம்ச காலத்திலிருந்தே உங்க ஆளுங்க எக்ஸ்பெர்ட்ன்னு எங்களுக்கு தெரியும். அதை இப்படி ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டாம்.

அசுரன்

சிறில் அலெக்ஸ் said...

ஜனநாயகம் ஒரு முழுமையானத் தீர்வு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை இருப்பினும் லெனினின் இந்தக் கொள்கையிலும் எனக்கு முழுதாக உடன்பாடில்லை.

வரலாற்றின் திருப்புமுனை எனவும், நடப்பது புரட்சிதான் எனவும் யார் முடிவெடுப்பது? தீவிரவாதிகள் என நாம் ஒதுக்கும் பலரும் புரட்சி செய்வதாகத்தானே நினைத்துக்கோள்கிறார்கள்.

ஆக புரட்சிகூட ஜனநாயக அடிப்படையில்தான் அமைந்திருத்தல் வேண்டும், இல்லையா? பொதுவான மக்களின் அங்கீகாரம் இல்லாத புரட்சி(ஜனநாயகமற்ற புரட்சி) வெற்றிபெறாது என்பது ஒருபக்கமிருக்க, அப்புரட்சி அநியாயமானதாக இருக்காதா?

சும்மா விவாதத்துக்குத்தான் கேட்கிறேன் உங்கள் நோக்கங்களை குறை சொல்வதற்காக அல்ல.
:)

தமிழரங்கம் said...

முடிவு எடுப்பது யார்? அது நீங்களும் தான், நானும் தான். ஆச்சரிமானது தான், ஆனால் அதுதான் உண்மை. ஒரு சாதாரமான போராட்டத்தை யாh முடிவெடுப்பது என்ற பாருங்கள். அங்கும் மக்கள் தான். அது மாதிரித்தான் புரட்சிகள்;. பரட்சி ஆக்ப் பெருhhன்iமான மக்களின் நலன்களுடன் தொடர்புடையது.
பி.இரயா

rajavanaj said...

//எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது. என்னைப் பொருத்தவரையில் லெனின் செய்தது சரி நான் அதனுடன் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்காக எல்லாவற்றுக்கும் வன்முறைதான் ஒரேயொரு தீர்வு என நான் விவாதிக்க வரவில்லை வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகளுடாவும் சாதிக்கக் கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இங்கு முன்னிறுத்தும் வாதமோ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது இடம்பெறும் சில சம்பவங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்ல முற்படும்போதும் நமது புலமைச் செருக்கை விடுதலைப் போராட்டத்துடன் உரசிப்பார்க்கும் போதுமே நாம் தவறுகளை நோக்கி பயணிக்கின்றோம். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களின் அக்கறை கொள்வோமாயின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஆதரிப்பதை தவிர வேறு ஒன்றையும் எம்மால் பெரிதாக செய்துவிட முடியுமென நான் நம்பவில்லை//

காந்திய பாணிலான போராட்டங்களால் மட்டுமே விடுதலை சாத்தியமானது என்று பள்ளி வாழ்க்கை முழுதும் படித்து விட்டு இது போன்ற உண்மைகளை நேருக்கு நேராக பார்க்கும் போது உள்வாங்கிச் சீரனிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது.
வலித்தால் கூட உண்மை என்பது தான் நிதர்சனம்.

நன்றி