"குஜராத் வன்முறைகள் சம்பந்தபட்ட வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். அதுவும் குஜராத்திற்கு வெளியே விசாரிக்கக் கொண்டுச் செல்லபட வேண்டும்" என்று தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இன்னும் சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் தாக்கல் செய்த மனு கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. குற்றவாளிகள் பிணையில் வெளியே இருக்கிறார்கள். நரேந்திர மோடி மிகப் பெரும்பான்மையாக தேர்தலில் வெற்றி பெற்றான். இன்னொரு தேர்தலுக்கு தயாராகியும் வருகிறான்(அதிலும் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளான்). கலவரத்தின் போது உயிர் தப்பியவர்களில் அதிகமானோர் அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள சேரி பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிய சிலரோ, ஒடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதோடு, பொருளாதரத்தில் கீழ்நிலையிலும் பக்கத்தில் வாழும் ஹிந்துக்களால் சமூக புறக்கணிப்பும் செய்யப்படுகின்றனர்.
நரோடா: அமைப்பும் மக்கள் தொகை புள்ளிவிபரமும்
அஹ்மதாபாத் நகர மையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா, பெரும்பாலும் கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இடங்களிலிருந்து வந்து குடியேறியக் கிட்டத்தட்ட 2000 தினக்கூலிகளான முஸ்லிம்களுடைய வசிப்பிடமாக இருந்தது. இந்த பகுதியானது நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலையின் ஓரமாக அமையப்பட்ட இடமாகும். இந்த இடத்திலிருந்து சாலையின் மறுபக்கத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பண்டகசாலையும், பக்கத்திலேயே ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கோபினாத் மற்றும் கங்கோத்ரி சமூக குடியிருப்புகளும் உள்ளன.
70 வருடங்களுக்கு மேலாக இருக்கும் நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா நகர்புறத்தில் இருக்கும் சேரிகளாகும். இவ்விரண்டும் அஹ்மதாபாத் மாநாகராட்சியின் கீழ் உள்ளன. நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியாவுக்கு இடைபட்ட தூரம் 1 கிமீ கூட இருக்காது. நரோடா காவ்ன் சற்றே சிறியதாகும். குறுகலான சந்துகள் அமைந்த சிக்கலான நெருக்கடியான, அசுத்தமான கட்டிடங்கள்; அவைகளில் சில கட்டிடங்கள் தான் இரண்டடுக்கு மாடிகளை விட சற்று உயரமானவைகள். இத்தகைய அமைப்பிலுள்ள முஸ்லிமகள் வசிக்கும் பகுதி தான் நரோடா பாட்டியாவாகும்.
நரோடா பாட்டியாவோவிலிருந்து சாலையின் மறுபக்கத்தில் ச்சாரா இனத்தவர்கள் வசிக்கும் மிகப் பெரிய ச்சாராநகர் உள்ளது. வெளியில் அதிகமாக அறியப்படாதது இந்த ச்சாரா இனம்; இம்மக்களோ பொதுவாக குற்றம் செய்கின்றவர்களாகக் கருதபடுகிறவர்கள்; அதிலும் முக்கியமாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது, சூதாடுவது போன்ற குற்றங்களில் அதிக அளவில் ஈடுபடுகிறவர்களாவர். இவர்கள் ஹிந்துக்களாக இருந்தாலும், ஹிந்து மதத்திலுள்ள ஜாதிகள் அடிப்படையில், இம் மக்கள் மிக தாழ்த்தப்பட்ட இனத்தவராகவே கருதபடுகிறார்கள்.
குற்றவாளிகள் யார்?
நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா சம்பவங்கள் தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டது. நரோடா காவ்னில் 8 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக பதிவு செய்யபட்டுள்ளது. நரோடா பாட்டியாவில் நேரில் பார்த்த சாட்சிகள், சில நூறுகளாவது இருக்கும் என்று ஊர்ஜிதப்படுத்துகிறது. இருப்பினும், சரியாக எத்தனை முஸ்லிம்கள் அன்றைய தினம் நரோடாவில் கொல்லப்பட்டனர் என்பதை ஒருவரும் அறிந்திருக்கவில்லை. கொலைகும்பல் மட்டுமே ஒரு வேளை அறிந்திருக்கக் கூடும்.
கலவரத்தின் போது உயிர்ழைத்தவர்கள் தங்களைத் தாக்கியக் கும்பல்களில் பல டஜன் எண்ணிக்கையில் சங்பரிவாரகாரர்களை அடையாளம் காட்டியதோடு, பாஜக சட்டமன்ற உறுப்பினரான மாயபென் கோட்னானி மற்றும் பஜரங்தள் தலைவனான பாபு பஜ்ரங்கி ஆகியோரே வன்முறை கும்பலை முன்னின்று வழிநடத்திய மாபாதகர்கள் என திரும்பத் திரும்ப பலமுறை கூறினார்கள். இருப்பினும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபடும் போது, கோட்னானி மீது போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்துவிட்டது. மிகக் குறைவான எண்ணிக்கையில் சில பாஜக மற்றும் விஹெச்பி ஆட்களுடன், சில டஜன்கள் எண்ணிக்கையிலான ச்சாரா இனத்தவரையும் சேர்த்து பாபு பஜ்ரங்கி மட்டுமே குற்றம் சாட்டப்பட்டான்.
மொத்தத்தில் 49 பேர் குற்றவாளிகளாக நரோடா பாட்டியா சம்பவங்களிலும், அதே எண்ணிக்கையிலான பேர் குற்றவாளிகளாக நரோடா பாட்டியா சம்பவங்களிலும் காவல்துறையால் அறிவிக்கப்பட்டனர். இவ்விரண்டு பட்டியல்களிலுமே வரக்கூடிய ஒரே நபர்கள் என பஜ்ரங்கி உள்பட பலர் இருந்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த பஜ்ரங்கி, மிகப் பெரும் நாடகமாடபட்ட நிலையில் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட 5 மாதங்கள் கழித்து, குஜராத் உயர் நீதிமன்றம் அவனை பிணையில் விடுதலை செய்ய அனுமதித்தது.(திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இன அழிப்பு படுகொலையில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டவனுக்கு 5 மாதங்களிலேயே ஜாமீன்; தமிழக கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அல்ல என விடுதலை செய்யப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மஹ்தனி உட்பட 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு வழக்கு முடிவடையும் வரை சுமார் 9 வருடங்களாக ஜாமீன் மறுப்பு. இந்திய நீதிபுருஷர்கள் மனுநீதியின் மறுபக்கத்தை வாழவைக்கின்றனரோ? - இறை நேசன்).
பாபு பஜ்ரங்கி
5அடி 3 அங்குலத்திற்கும் சற்றே குறைவான உயரம் கொண்ட பாபு பஜ்ரங்கி, இவனுடைய குடும்ப பெயர் பட்டேல், நரோடாவில் மிகப் பெரிய நபராக விளங்குபவன். விஹெச்பி மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங்தள் உடன் 22 வருட தொடர்புகளினால் பலரும் பயந்து நடுங்குகிற உள்ளூர் தாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். அதன் பயனால் இன்று நரோடாவிலும் இன்னும் குறிப்பாக ச்சாராநகரிலும் தன்னை ஒரு தலைவனாக பஜ்ரங்கி உருவாக்கிக் கொண்டான். ச்சாராநகரில் இவனது கட்டளைகளைப் பின்பற்றும் கணிசமான எண்ணிக்கையிலானோர் இருக்கின்றனர். ச்சாராக்களில் அதிகமானோர் இவனிடத்தில் பெரும் பக்தியுடனான மரியாதை வைத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இவனோ குற்றம் புரிவதில் அவாகளிடத்திலே (ச்சாரா மக்கள்) இருக்கும் திறமைகளை வெகுவாக புகழ்ந்துரைத்ததோடு, அவர்கள் தான் இவனுடைய "ஆயுதங்கள்" எனவும் உரிமை கொண்டாடினான். இன்னும் சம்பவங்களின் போது அவர்களிடம் இவன் கூறியதெல்லாம், "கொல்லுங்கள் அதைத் தவிர வேறு தேவையில்லை".
நெடுஞ்சாலைக்குச் சற்று அப்பாலுள்ள நரோடா புறநகர் பகுதியில் அமைந்துள்ள அஜந்தா எல்லோரா என்னும் வணிக வளாகத்தில் உள்ள இரண்டாவது மாடியில் இருக்கும் தனது அலுவலகத்தில், கட்டபஞ்சாயத்தை விசாரிக்கும் ஒரு விசாரணை மன்றமே வைத்துள்ளான். மாதத்திற்கு நிரந்தர வருமானமாக சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக ஈட்டும் இவன், தன்னை பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் வியாபாரியாகக் கூறினாலும், முஸ்லிம்களையும், கிருஸ்துவர்களையும் அடிப்பதுவே இவனது முக்கிய அலுவலாகும்.
"முஸ்லிம்களையும், கிருஸ்தவர்களையும் நான் அப்படி வெறுக்கிறேன்", என அவன் (பஜ்ரங்கி) கூறுகிறான். அவனுடைய உள்ளத்திற்கு மிக பிடித்தமானது, முஸ்லிம் பையன்களைத் திருமணம் செய்தோ அல்லது காதலித்து ஓடி போகவோ செய்யும் ஹிந்து இளம்வயது பெண்களைக் காப்பாற்றி விடுவிப்பதாகும். அவனை தினந்தோறும் வந்து சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் இத்தகையப் பெண்களின் பொற்றோர்களே. "இப்பெற்றோர்கள் காவல்துறையிடம் சென்றால், அவர்கள் புகாரைப் பதிவு செய்வதில்லை, என்னிடம் தான் அவர்களை அனுப்பி வைப்பார்கள்" என பஜ்ரங்கி தெரிவித்தான். "957 ஹிந்துச் சிறுமிகளை நான் காப்பாற்றியிருக்கிறேன். முஸ்லிமை திருமணம் செய்த இளம்பெண் சராசரியாக 5 குழந்தைகளைப் பெற்றெடுப்பாள். அப்படி பார்க்கும் போது 5000 முஸ்லிம்களை அவர்கள் பிறக்கும் முன்பே நான் கொன்றிருக்கிறேன்." - பஜ்ரங்கி.
நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html
No comments:
Post a Comment