கார்க்கியின் "தாய்' நாவல், ஒரு அரசியலற்ற தாயின் சமூக அக்கறையினூடாக, அவள் அரசியல்படுத்தப்படுவதை விளக்குகிறது. யாங்மோவின் "இளமையின் கீதமோ', ஒரு பிற்போக்கு நிலவுடமைச் சமூகத்தின், ஆசை நாயகி ஒருத்தியின் மகளான டாவோசிங்கின் எளிய தேசப்பற்று, அவளைக் கம்யூனிஸ்ட் கட்சி தோழராக மாற்றிய வரலாற்றுக் கட்டத்தையே விளக்குகிறது எனலாம்.
கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்து, கிராமப்புற பள்ளி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள் டாவோசிங். ஒரு நிலப்பிரபுவிற்கு ஆசை நாயகியாக அவளை மாற்றத் துடிக்கும் உறவினர்களை எதிர்த்துக் கொண்டு, அவளைக் காதலிக்கிறான் பல்கலைக் கழக மாணவனான யூ யூங்சே. அவனுடன் நகரத்திற்கு வந்த பிறகு, ஒரு புத்தாண்டு விருந்தில் அவளுக்கு கம்யூனிச அறிமுகம் கிடைக்கிறது. லூ சியாசுவான் என்ற தோழர் அவளுக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.
அதன் பிறகு கட்சிக்காக ஆசிரியராகிறாள்; கிராமங்களுக்கு செல்கிறாள்; உளவாளியாகச் செயல்படுகிறாள்; அடக்குமுறைக் காலங்களில் அஞ்சாமல் வேலை செய்கிறாள்; கைதாகி சிறைப்படுகிறாள்; இறுதியில் டிசம்பர் 16 ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டுகிறாள். ஒரு எளிமையான கிராமத்துப் பெண் படிப்படியாக போராளியாக மாற்றப்படுவதன் தருணங்களை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. கூடவே பல தோழர்களின் உயிர்த்துடிப்பான வாழ்க்கைகளையும் அறிகிறோம்........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments:
Post a Comment